• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. Sanchu Suga

  Sanchu Suga

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   13

  • Content Count

   44


 2. உடையார்

  உடையார்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   13

  • Content Count

   11,261


 3. tulpen

  tulpen

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   9

  • Content Count

   2,748


 4. ஈழப்பிரியன்

  ஈழப்பிரியன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7

  • Content Count

   9,081Popular Content

Showing content with the highest reputation on சனி 13 ஜூன் 2020 in all areas

 1. 8 points
 2. 4 points
  இந்து மதத்தின் நச்சு கருத்தான வர்ணாசிரமத்தை ஏற்றுக்கொண்ட காந்தி இனவெறிக்கு ஆதரவாக தான் இருப்பார் என்பது புரிந்து கொள்ளக்கூடியதே. இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன்பு இந்திய அரசியலமைப்பை எழுதிய அம்பேத்கார் பிரிட்டிஷ் ஆட்சியாளர் நடத்திய முக்கிய ஆலோசனை மகாநாட்டில் கலந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுகான் சில உரிமைகள் தொடர்பாக பேசி அதை சட்டமாக முற்படுகையில் அந்த மக்களின் உரிமைகளை வழங்கும் சட்ட ஷரத்ததுகளை தடுப்பதற்காக சாகும் வரை உண்ணாவிரதமிருக்க புறப்பட்டு அம்பேத்காரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி அந்த ஷரத்துகளை தடுத்து நிறுத்தியவர் காந்தி. இப்படியான எண்ணக்கரு சுமக்கும் காந்தி ஆபிரிக்கர்கள்க்கு எதிராக இன வெறிக் கருத்து சொல்லியிருப்பார் என்பது விளங்கி கொள்ளக்கூடியதே. அதனால் அவருகெதிரான ஆபிரிக்க மாணவர்களின் கோபம் நியாயமானதே. இருந்தாலும், மறுபுறத்தில் சுதந்திரப்போராட்ட பாதையான் அகிம்சை, அவரது அர்பணிப்பு, சமுதாய பணி ஆகியவற்றால் இன்றும் உலகத் தலைவர்களால், மக்களால் கெளரவமாக பார்க்கபடும் உலக தலைவர்களில் ஒருவராகவே அவர் இருக்கிறார். பொதுவாக தெற்காசிய நாடுகளில் தேசபக்தி, தேசியம் என்பவற்றை முன்னிறுத்தி அவர்கள் விரும்பும் தலைவர்களை அவர்களின் இயல்பிற்கு மீறி மிகைப்படுத்தி புகழ்வது மிக அதிகம். அதுவே இந்தியர்கள் காந்தியை புகழ்வதற்கு காரணம். எமது ஈழத்தில் இருந்து காந்தியின் சிலைகளை அகற்றுவதானால் அத்துடன் காந்தி விரும்பும் இந்து மத வருணாசிரம நச்சு மரத்தையும் காந்தியோடு தூக்கி வீசுவதே எமக்கு நன்மை தரும். இந்து மத வருணாசிரமத்தை எம்முடன் வைத்து கொண்டு காந்தி சிலையை மட்டும் தூக்கி வீசுவது தனியே காழ்புணர்ச்சியை தீ்ர்க்க மட்டுமே உதவும்.
 3. 3 points
  பெரும் போரை நோக்கிய ஐரோப்பிய அரசியல் நகர்வுகள் – உலகப்போர் 2 முதல் உலகப்போர் நடைபெற்ற வருடங்கள் என்றால் 1914 முதல் 1918 வரை என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும். ஆனால் இரண்டாம் உலகப் போரை இப்படி ஒரு காலகட்டத்திற்குள் அடக்கி விட முடியாது. வரலாற்று ஆசிரியர்களும் ஆய்வாளர்களும் போரின் காலகட்டம் குறித்து மாறுபடுகிறார்கள். பொதுவாக ஏற்றுக்கொள்ளபட்ட கணக்கு 1939 முதல் 1945 வரை என்றாலும், சிலருடைய கூற்றுப்படி, இரண்டாம் உலகப் போரின் தொடக்கம் 1939 அல்ல 1931. சீனா மீது ஜப்பான் தாக்குதல் தொடுத்த ஆண்டு அது. 1931 தொடங்கி 1939 வரை ஐரோப்பாவில் நடைபெற்ற உள்நாட்டு போர்கள், கலகங்கள், யுத்தங்கள், ஆக்கிரமிப்புக்கள், அத்துமீறல்கள் அனைத்தும் இரண்டாம் உலகப்போருடன் நேரடியாக தொடர்பு கொண்டிருகின்றன. ஆகவே இந்த கொந்தளிப்பான காலகட்டம் சரித்திரத்த்தில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது, ஹிட்லர் ஜெர்மனியின் பலத்தைப் பெருக்கிக் கொண்டதும் இந்தக் காலகட்டத்தில் தான். ஒரு ஆட்டம் ஆடிப் பார்த்து விடலாம் என்னும் நம்பிக்கையை அவர் ஏற்படுத்திக் கொண்டதும் அப்போது தான். ஹிட்லரின் திட்டம் தெளிவானது. அகண்ட ஜேர்மனியை உருவாக்க வேண்டுமானல் ஐரோப்பாவுடன் போரிட்டு வெல்ல வேண்டும். ஐரோப்பாவின் பலம் பொருந்திய சக்திகளான பிரிட்டன்,பிரான்ஸ,சோவியத்யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் நேருக்கு நேர் நின்று மோதி விழுத்த வேண்டும். எப்போது வேண்டுமானாலும் தொடங்கி விடலாம். அதற்கு முன்பாக செய்ய வேண்டியது ஜேர்மனியின் ராணுவ பலதைப் பெருக்குவது. இன்னொரு தோல்வியை ஜேர்மனி சந்திக்க் கூடாது. இனி எப்போதும். முதல் கட்டமாக ஆஸ்திரியா, போலந்து, செக்கோஸ்லாவாக்கியா போன்ற அக்கம் பக்க நாடுகளை முதலில் தாக்கி கையகப்படுத்த வேண்டும். தெளிவாக திட்டமிட்டு வீழ்த்தவேண்டும். இபோதைக்கு பெரிய சக்திகளைப் பகைத்துக்கொள்ளக்கூடாது. பலம் கூடியதும் அவர்களைத் தாக்கலாம். ராணுவத்தை மட்டுமல்ல ராஜதந்திரத்தையும் பயன் படுத்தினால் தான் இது சாத்தியமாகும். சீனா மீதான ஜப்பானின் தாக்குதல் ஐரோப்பாவில் ஹிட்லர் அதிகாரத்தை நோக்கிய தனது நகர்வினை மேற் கொண்டிருந்த வேளே ஆசியா கண்டத்தில் வேறு சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன. சீனாவின், ஸன் யாட் சென் (Sun Yat-Sen) மறைவிற்கு பிறகு, சியாங் கை ஷெக் (Chiang Kai-Shek) கோமிண்டாங் கட்சியின்(Kuomintang Party) (மன்னராட்சியை ஒழிப்பதை குறிக்கோளாக்க் கொண்டு தொடங்கப்பட்ட புரட்சிகரக் கட்சி) தலைமைபீடத்தைக் கைப்பற்றியிருந்தார். ஒட்டுமொத்த சீனாவையும் சுவீகரித்துக் கொள்ளும் கனவு அவரிடம் இருந்தது. மன்னர்களாலும் பின்னர் பல்வேறு அந்நிய தேசங்களின் மேலாதிக்கதாலும் தொடர்ந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த சீனா, அரசியல் ரீதியிலும் ராணுவ ரீதியிலும் மிகவும் பின்தங்கியிருந்தது. இந்த நிலைமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் சியாங். இந்தக் கனவுக்கு அசுசுறுத்தலாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராடிக்கொண்டிருந்தனர். எனவே சீனா முழுவதும் இருந்த்து கம்யூனிஸ்ட்டுக்கள் விரட்டியடிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கடைசி கம்யூனிஸ்ட் எஞ்சியிருக்கும்வரை இந்தப் போர் தொடரும் என்று சியாங் வெறுப்புடன் கறுவியிருந்தார். ஹிட்லருக்கு ஏற்பட்ட அதே வெறுப்பு. நான்கிங் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரதேசங்களை கோமிட்ணாங் கைப்பற்றியிருந்தது. மாவோ தலைமுயில் செம்படை தனது நெடும்பயணத்தை அக்ரோபர் 1935ல் நிறைவு செய்திருந்தது. கிட்டத்தட்ட ஆறாயிரம் மைல்களைக் கடந்து முன்னேறிய செம்படை, வழி நெடுகிலும் உள்ள நகரங்களையும் கிராமங்களையும் சியாங்கின் பிடியில் இருந்து விடுவித்துக்கொண்டே சென்றது. *சோவியத்தின் செம்படையின் வெற்றியால் உந்தப்பட்டு அதே பெயரில் உருவாக்கப்பட்டிருந்தது சீனாவின் செம்படை சியாங் ஒரு பக்கம். மற்றொருபக்கம் ஜப்பான். ஜப்பானின் முக்கிய அரசாங்க கடமைகளில் ஒன்று சீனாவைக் கண்காணிப்பது. ஒவ்வொரு சிறிய வியடத்தையும் கண்காணித்தார்கள். எந்ந பிரதேசத்தை யார் ஆள்கிறார்கள்? ராணுவம் என்ன செய்கிறது. அரசாங்கம் என்ன செய்கிறது? யார் புரட்சி செய்கிறார்கள்? சீனாவில் அரிசி கிலோ எவ்வளவு ? மக்காச்சோள மகசூல் இந்த மாதம் எவ்வளவு? ஒவ்வொன்றும் தெரிந்தாக வேண்டும். ஏன்? ஜப்பானைப் பொறுத்தவரை சீனா என்பது தனிபெரும் தேசம் அல்ல. ஜப்பானின் மற்றொறு மாநிலம். சீனாவி்ன் மூலை முடுக்குகளில் எல்லாம் ஜப்பானிய அதிகாரிகள் நின்று கொண்டிருப்பார்கள். கடை போட்டு உட்கார்ந்திருப்பார்கள். டாங்கிகளில் மீதேறி உட்கார்ந்து வேடிக்கை பார்பார்கள். சீனாவில் உள்ள ஆனால் ஜப்பானுக்கு உட்பட்ட பிரதேசம் என்று ஒரு பட்டியல் எடுத்தால் தலை சுற்றும். ஜப்பான் இயற்கை வளங்கள் அற்ற நாடு என்பதால் அது பெரும்பாலும் ஏற்றுமதியை நம்பியிருந்தது. குறிப்பாக அமெரிக்காவிடம் இருந்து. சர்வ வளங்களும் பொருந்திய ஒரு காலனி இருந்தால் மட்டுமே பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப முடியும் என்னும் நிலையில் சீனா உறுஞ்சிக்கொள்ள முடிவு செய்தது ஜப்பான். ஜப்பானின் அந்நிய முதலீடுகளில் ஐந்தில் நான்கு பங்கு சீனாவுக்குப் போய் சேர்ந்தது. அமெரி்க்கா, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகளுடன் ஜப்பான் போட்டி போட்டது. அவர்களுக்கு சமமான நிலையை அடையவிரும்பியது. ஜப்பான், பிரிட்டன், ஜேர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி என்று ஐரோப்பாவின் சக்திகள் அனைத்தும் ராணுவத்தில் தன்னிறைவு அடைந்துவிட்டன. ஜப்பான் எப்போது வல்லரசாவது? பதினெட்டாம் நூற்றாண்டு அமெரிக்கவாவுயும் இப்போதைய அமெரிக்காவையும் ஒப்பிட முடியுமா? எப்படிச் சாத்தியமானது இந்த வளர்ச்சி? தீவிரமாகச் சிந்தித்துக்க கொண்டிருந்தது ஜப்பான். ஜப்பானின் அப்போதைய எரிச்சல் சீனாவின் செம்படை. இதென்ன புற்றீசல் போல் இப்படிக் கிளம்பியிருக்கிறதே. புற்று வளரும் வரையா விட்டு வைப்பார்கள்? இந்ந சியாங் கை ஷேக் தம் படை வீர்ர்களுடன் பல்லாங்குழியா ஆடிக்கொண்டிருகிறான்? முதல் சிவப்பு கொடியை உயர்த்திப் பிடிப்பவனின் கையை, காலை உடைத்துப் போட்டிருந்தால் இந்த அளவுக்கு விஷம் பரவியிருக்குமா? நெடும் பயணம் போகிறார்களாம். வழியில் தென்படும் ராணுவப் பிராந்தியங்களை அழித்துக் கொண்டே வருகிறார்களாம். கோமண்டாங்கை விட அதிக பலம் பொருந்தியவர்களாம். இப்படியே போனால் ஒட்டுமொத்த சீனாவையும் செம்படை வளைத்துப் பிடித்துக்கொள்ளுமாம். இப்படியான சிந்தனையில் ஈடுபட்டது ஜப்பான். செப்ரெம்பர் 18 1931ம் ஆண்டு சீனா மீது படையெடுத்தது ஜப்பான். முதலில் மஞ்சூரியா, பிறகு ஷாங்காய். ஒரு சில மாதங்ககளில் இரண்டும் ஜப்பானால் கைப்பற்றப்பட்டன. அவர்ளுக்கு அங்கே அதிகம் வேலை இல்லை. கதவு திறந்தே கிடந்தது. ஒப்புக்கு சில சீனர்கள் துப்பாக்கியை வைத்துக் கொண்டு பம்மாத்து செய்து கொண்டிருந்தார்கள். இடது கை சுண்டுவிரலால் அவர்களை நசுக்கிப்போட்டது ஜப்பானியப் படை. அதிர்ந்து நின்றார்கள் சீனர்கள். இதெல்லாம ஒரு தேசமா? அரசாங்கத்தின் யோக்கிதை இது தானா? தமக்கு ஒரு சம்பந்தமும் இல்லாத பக்கது நாடு நம் மீது படையெடுத்து வந்து நம்மையே கொன்று நம் பகுதிகளைக் கைப்பற்றிக் கொள்கிறது. ஒப்புக்கு நான்கு பேரை அனுப்பிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது அரசாங்கம். நம் நாடு, நம் மக்கள், நம் பகுதிகள் என்று கொஞ்சமாவது அக்கறை இருகிறதா? பஞ்சத்தால் அடிபட்ட ஒரு விவசாயி கூட என் தேசம் என்கிறானே. கேட்டால் சர்வதேச சங்கங்களுக்கு மனு போட்டிருக்கிறோம் என்று ஒரு பதில். ஏன்? அவர்களை ஏன் அழைக்க வேண்டும்? ராணுவம் என்று எதற்கு வைத்திருக்கிறாய்? கவாத்து செய்வதற்கும் சல்யூட் அடிப்பதற்குமா? பளபளக்கும் தொப்பிகளும் துப்பாக்கிகளும் எதற்கு? இங்கே சியாங்கை ஷேக். அங்கே வேறு யாரோ? ஷாங்காய்க்கு என்ன வந்தால் என்ன என்று மஞ்சூரியா நினைக்கிறது. தெற்கில் ஜப்பான் வந்தால் என்ன என்று வடக்கு தூங்குகிறது. சீனர்கள் தெருவில் இறங்கினார்கள். தெருவில் இறங்கி நடந்தால் சீனா போல் இல்லை. எதிரே வரும் பத்து பேரில் இரண்டு ஜப்பானியர்கள். இப்படியே போனால் சீனர்களின் கலாச்சாரம், மொழி, வரலாறு அனைத்தும் அழிந்து போய்விடும். ஜப்பான் சீனாவை மொத்தமாக சாப்பிட்டுவிடும். சீனாவில் நடக்கும் மாற்றங்களை பிரிட்டனும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தது. வேறெந்த தேசங்களை விட சீனா மீது அக்கறை செலுத்துவதில் தனக்கே முன்னுரிமை அதிகம் இருப்பதாக பிரிட்டன் நம்பியது. காரணம் அமெரிக்காவைக் காட்டிலும் பிரிட்டன் சீனாவில் அதிக பணத்தைக் கொட்டியிருந்தது. பிரிட்டனும் ஜப்பானும் 72 சதசவீத முதலீட்டைச் சீனாவில் செய்திருந்தன. அமெரிக்கா ஜப்பானை விட அதிக அறவி்ல் முதலீடு செய்திருந்தது. சீனாவை அபகரித்துக் கொள்வதில் ஜப்பான் காட்டிய அவசரத்துக்கு காரணம் மேற்படி போட்டியாளர்கள் தான். நான் தான் அதிகம் முதலீடு செய்துள்ளேன். சீனா எனக்கு தான் சொந்தம் என்று ஆளாளுக்கு வரிந்து கட்டிக்கொண்டு போர் தொடுக்க ஆரம்பித்தால் விவகாரம் சிக்கலாகி விடும். ஆகவே உடனுக்குடன் சீனப்பிராந்தியத்தைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட வேண்டும் என்று ஜப்பான் துடித்தது. ஜனவரி 1932ல் ஜப்பான் ஷாங்காய் மீது போர் தொடுத்த போது, ஐரோப்பா நிமிர்ந்து உட்கார்ந்தது. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி என்று ஒவ்வொரு நாடும் இந்தப்போரை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தன. ஐரோப்பிய மக்களையும் இந்த போர் உலுக்கியது. எதிர்ப்புக்கள் அதிகம் காட்டமுடியாத சீனாவை ஜப்பானிய விமானங்கள் பறந்து பறந்து தாக்கியதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதற்காக இந்த போர்? சீனா ஜப்பானை என்ன செய்தது? அப்பாவி சீனர்கள் எதற்காக குண்டடிபட்டு சாகவேண்டும்? இது அநியாயம் இல்லையா? சீனா மீது அக்கறையும் கரிசனமும் குவிய ஆரம்பித்த அதே சமயம் ஜப்பானை மேலாதிக்கம் செலுத்தும் ஒரு தீய சக்தியாகவும் ஐரோப்பா பார்க்க ஆரம்பித்தது. மஞ்சூரியா மீது ஜப்பான் அடுத்த தாக்குதலை நிகழ்த்திய போது சீனா லீக் ஒஃப் நேஷன்ஸிடம் (League of Nations) முறையிட்டது. சரி, இவர்கள் தலையிட்டு ஏதாவது செய்வார்கள் என்று மக்கள் காத்திருந்தனர். ஆனால், லீக் அலட்டிக்கொள்ளவில்லை. ஜப்பானின் பெரும் படையை எதிர்த்து நிற்கும் அளவுக்கு சக்தி தன்னிடம் இல்லை என்று புலம்பியது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பிற நாடுகள் எதுவும் இதில் தலையிடவில்லை. லீக் மட்டுமல்ல எந்த சர்வதேச அமைப்பாலும் போரைத் தடுத்து நிறுத்த முடியாது என்னும் உண்மை இந்த போரினால் அம்பலமானது. அமெரிக்கா இந்தப் போரைக் கண்டித்தது. பிரிட்டன் நிலை கொள்ள முடியாமல் தவித்தது. சீனாவுக்கு ஆதரவாகப் போரில் குதித்தால் ஜப்பானைப் போலவே தானும் எதிர்க்கப்படுவோம் என்று அதற்குத் தெரிந்து போனது. தவிரவும், கோம்ண்டாங் படைமீது மேற்கு நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. கோமிண்டாங்குக்கு உதவுவதன் மூலம் சீனாவைக் காப்பாற்றிவிட முடியாது என்று அவர்கள் நம்பினார்கள். கூடுதலாக, தேவையில்லாமல் ஜப்பானை பகைத்துக்கொள்ள நேரிடும். எதற்கு அநாவசிய வம்பு.? சமகாலத்தில் ஐரோப்பாவில் ஜேர்மனியின் பலப்படுத்தல் இவ்வாறாக ஆசியாக் கண்டத்தில் சீனா மீதான ஜப்பானின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போது ஐரோப்பாவில் ஹிட்லர் மையின் காம்ஃப் நூலில் தான் எழுதிய தனது கனவான தூயஜேர்மனியை உருவாக்கும் திட்டங்களின் முன்னெடுப்புகளை நனவாக்கும் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த தொடங்கி இருந்தார். ஹிட்லரை பிரிட்டன் அறிந்திருந்தது.. பெருகிக்கொண்டிருக்கும் நாசி இராணுவபலம், யூத வதை முகாம்கள், யூத இன அழிப்பு. ஜேர்மனியில் இருந்து தப்பி ஓடி வந்த யூத அகதிகள் ஜேர்மனியில் நடந்து வரும் கொலைபாதகச் செயல்களை ஊர்ஜிதப்படுத்தினர். என்றாலும் பிரிட்டன் கண்டு கொள்ளாமல் இருந்தது. பிரிட்டனை விட பிரான்ஸ் ஜேர்மனியை நன்கறிந்திருந்தது. இது அபாயகரமான போக்கு என்று அதற்கு நன்கு தெரிந்திருந்தது. அன்றைய ஃபிரஞ்சு ராணுவம், ஜேர்மன் ராணுவத்தை விட வலுவாகத்தான் அன்று இருந்தது. ஆனால் யுத்தம் என்று வந்துவிட்டால் ஜேர்மனியை எதிர்கொள்ள முடியுமா என்னும் தயக்கம் பிரான்ஸிடம் இருந்தது. இந்த தயக்கம், பிரான்ஸை வெறும் பார்வையாளராக மாற்றியது. நவம்பர் 1933ல் பிரிட்டிஷ் அம்பாஸிடர் எரிக் பைப்ஸ் (Sir Eric Phipps) என்பவரை ஹிட்லர் சந்தித்து பேசினார். உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஆங்கிலேயருக்கும் ஜேர்மனியர்களுக்கும் இடையில் இணைப்பு ஏற்படவேண்டும் என்பது தான் என் விருப்பம். எங்கள் தேச நலனிற்காக நீங்கள் ஓர் உபகாரம் செய்ய வேண்டும். எங்கள் ராணுவத்தின் பலம் பெருகவேண்டும். மூன்று லட்சம் பேராவது இருந்தால் தான் நல்லது. உங்கள் ஆதரவு கிடைக்குமா? பொறுத்திருங்கள் ஹிட்லர் குறைந்தது பத்து ஆண்டுகளாவது நீங்கள் காத்திருக்கத் தான் வேண்டும். சரி அது ஒரு பக்கம் கிடைக்கட்டும் என்று போலந்து பக்கம் திரும்பினார் ஹிட்லர். ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஜனவரி 1934ல் ஒப்பந்தம் ஒன்றையும் போட்டுக்கொண்டார் ஹிட்லர். எக்காரணத்தைக் கொண்டும் ஜேர்மனி போலந்தைத் தாக்காது என்பது தான் அந்த ஒப்பந்ததின் ஷரத்து. ஹிட்லர் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறிக்கொண்டிருந்தார். 1935 தொடக்கத்தில் ஜேர்மனியின் ஒரு மாகாணமான சார்லாண்ட்(Saarland) சட்டபூர்வமாக அதனுடன் ஒன்றிணைக்கப்ட்ட போது பிரான்ஸும் பிரிட்டனும் அதிர்ந்து போயின. காரணம், வெர்ஸைல்ஸ் ஒப்பந்தப்படி இந்த பிரதேசம் ஜேர்மனியின் கைவிட்டு போய்விட்டது. பிரிட்டனும் பிரான்ஸும் மட்டுமே இந்த பிரதேசத்துக்கு சொந்தம் கொண்டாட முடியும். நிர்வகிக்கும் உரிமை பிரானஸிடம் இருந்தது. 1933 ல் நாசிகளுக்கு எதிரானவர்கள் பலர் சார்லாண்டுக்கு ஓடிப்போனார்கள். ஜேர்மனியின் ஆட்சிக்கு உட்படாத பிரதேசமாக சார்லாண்ட் இருந்ததால் அங்கே பாதுகாப்பு கிடைக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. சார்லாண்ட் எக்காலத்திலும் ஜேர்மனிக்கு போய்விடக்கூடாது, அது பிரான்ஸின் ஆளுகைக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். நாசிகளுக்கு எதிரான ஒரு ஜேர்மனிய குழு அங்கே உருப்பெற்றது. அதே சமயம், சார்லாண்டில் இருந்த ஜேர்மனியப் பிரஜைகள் பிரான்ஸின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். நாசி ஜேர்மனியில் ஆயிரம் குற்றம், குறைகள் இருந்தாலும் நாங்கள் ஜேர்மனியோடு தான் இணைவோம் என்றனர். நாசி எதிர்ப்புக் குழுவினரால் இவர்களை ஈர்க்க முடியவில்லை. சார்லாண்ட் ஜேர்மனியர்கள் பேர்லினுடன் இணையும் நாளை எதி்ர்நோக்கியிருந்தனர். 1920 ம் ஆண்டு லீக் ஓஃப்் நேஷன்ஆஇன் தீர்மானத்தின்படி, பிரான்ஸ் பதினைந்து ஆண்டுகள் மட்டுமே மேலாதிக்கம் செலுத்த முடியும். அதற்குப் பிறகு அங்கே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஜனவரி 15, 1935 ல் வாக்கெடுப்பு நடந்த போது 90.30 சதவீத மக்கள் ஜேர்மனிக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆகவே சட்டப்படி சார்லாண்ட ஜேர்மனியுடன் சேர்ந்து கொண்டது. சந்தேகமில்லாமல் ஜேர்மனியின் பலம் பெருகிக் கொண்டிருந்தது. ராணுவத்தைக் கட்டமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார் ஹிட்லர். ஜேர்மனியால் நேரக்கூடிய ஆபத்தை பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி மூன்றும் உடனே புரிந்து கொண்டு விட்டன. இனி எழுந்திருக்காது என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே முந்தைய போரை முடிவுக்குக் கொண்டுவந்தோம். ஆனால், இன்று ஜேர்மனி தட்டிவிட்டு கொண்டு எழுந்து நிற்கிறது. அதோடு நில்லாமல், ஆயுதங்களையும் குவித்து வைத்து கொண்டு மல்லுக்கட்டி நிற்கிறது. இது சரியல்ல. ஜேர்மனியால் இன்னொரு போர் மூளக்கூடிய அபாயத்தை மறுக்க முடியாது. மேலும் மேலும் ஹிட்லர் ஆயுதங்களைக் குவித்துக் கொண்டே போகிறார். முந்தைய போரில் நாம் இழந்த பிரதேசங்களை மீண்டும் பிடிப்போம் என்று உணர்ச்சி பொங்க உரையாற்றுகிறார். உளவுத்தகவல்கள் ஜேர்மனியின் போர் விருப்பத்தை ஊர்ஜிதப்படுத்துகின்றன. முந்தைய யுத்தத்தில் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தைத் தொடர்வது என்று இந்த நாடுகள் முடிவு செய்தன. நாம் நேச நாடுகளாகவே நீடிப்போம். இந்த அணி அப்படியே தொடரட்டும். நமக்குள்ளே எந்தப் பிரச்சனையும் இருக்கக்கூடாது. ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வோம். ஆபத்து என்றால் ஓரணியில் திரள்வோம். பிரான்ஸ் இத்தாலி உடன்படிக்கை – Franco- Italian Agreement ஜனவரி 1935 ல் பிரான்ஸும் இத்தாலியும் கைகுலுக்கிக் கொண்டன.Franco-Italian Agreement) ஜனவரி 5, 1935 ல் ரோமுக்கு சென்று முஸோலினியைச் சந்தித்தார் பிரான்ஸின் அயல்துறை அமைச்சர் பியரெ லவால்(Pierre Laval). பிரான்ஸுக்கு சொந்தமான சோமாலிலாந்தில் இருந்து (தற்போது Djibouti) சில பகுதிகளை உங்களுக்குத் தந்து விடுகிறோம். எதியோப்பியாவில் உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ளலாம். பதிலுக்கு நீங்கள் எங்களுடன் கூட்டு சேர்ந்து கொள்ளவேண்டும். ஜேர்மன் ஆக்கிரமிப்பு நிகழ்ந்தால் நீங்கள் கைகொடுக்க வேண்டும். மே 2 1935 ல் சோவியத்தும் பிரான்ஸும் ஒர் ஒப்பந்தம் செய்து கொண்டன. (Franco- Soviet Treaty of Mutual Assistance) சோவியத்துடன் சேர்வதற்கு முதல் நிறைய சிந்தித்தது பிரான்ஸ். ஆனாலும், அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. சோவியத்தின் கம்யூனிச சித்தாந்தத்தை பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் ஹிட்லரின் ராணுவ விரிவாக்கத்துக்கு ஈடு கொடுக்க வேண்டுமானால் சோவியத்தின் உதவி அவசியம் என்பதை உணர்ந்திருந்தது. பிரிட்டன் - ஜேர்மனி ஒப்பந்தம் - Anglo- German Naval Agreement ஜுன்19, 1935 ல் பேரதிசயமாக, பிரிட்டனும் ஜேர்மனியும் ஒர் உடன்படிக்கையை உருவாக்கி கையெழுத்திட்டன. (Anglo- German Naval Agreement) 1919 வெர்ஸைல்ஸ் ஒப்பந்தத்தின்படி, ஜேர்மனி தன் கடற்படையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். நீர்மூழ்கி கப்பல்கள், போர்க்கப்பல்கள் போன்றவற்றை ஜேர்மனி வாங்க முடியாது. பயன்படுத்த முடியாது. ஆறு கனமான க்ரூஸர்கள், ஆறு மிதமான க்ரூசர்கள்,12 டெஸ்ட்ராயர் போர்க்கப்பல்கள், 12 டார்பிடோ படகுகள் இவை மட்டுமே தற்பாதுகாப்பக்காக அனுமதிக்கப்பட்டிருந்தன. ஜேர்மனி பல்வேறு சமயங்களில் தன் எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. இதென்ன அநியாயம்? தோற்றுப்போன ஒரே காரணத்திற்காக எங்கள் பலத்தை நாங்கள் குறைத்துக் கொள்ளவேண்டுமா? ஒன்று ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் தங்கள் பலத்தை எங்களோடு சேர்ந்து குறைத்துக்கொள்ள வேண்டும். அல்லது எங்களையும் உங்களுக்கு சமமாக வளர அனுமதிக்கவேண்டும். 1919ம் ஆண்டுக்கு பிறகு, பிரிட்டனில் ஜேர்மனிக்கு ஆதரவான அலை அங்குமிங்குமாக வீச ஆரம்பித்தது. ஆயிரம் சொன்னாலும் ஜேர்மனியை இப்படி அழுத்திப்பிடிப்பது சரியல்ல என்று விமர்சனங்கள் எழுந்தன. எப்போதோ போட்ட ஒப்பந்தத்தை எதற்கு உடும்பு போல் பிடித்துக் கொள்ளவேண்டும். கொஞ்சம் தளர்த்தலாமே என்று வெளிப்படையாக பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஐரோப்பாவின் சக்திவாய்ந்த தேசம், ஜேர்மனி. அங்கே அமைதி நிலவவேண்டுமானால், அவர்களால் ஐரோப்பாவில் அமைதி நிலவ வேண்டுமானால் நாம் கொஞ்சம் விட்டுக் கொடுத்து தான் ஆக வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தார்கள். ஹிட்லரின் வருகைக்குப் பிறகு பிரிட்டன் அரசாங்கத்திடம் இந்த தடுமாற்றம் இருக்கவே செய்தது. என்ன செய்வது ஜேர்மனியை? கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் என்ன ஆகும்? என்ன செய்வார் ஹிட்லர்? மீண்டும் ஒரு போர் மூளுமா? அல்லது தன்னிறைவு பெற்ற ஜேர்மனியில் அமைதி நிலவுமா? ஆகஸ்ட் 1933ல் பாதுகாப்புதுறையைச் சேர்ந்த ஜெனரல் சர் மௌரிஸ் ஹாங்கே என்பவர் ஜேர்மனிக்கு சென்று வந்தார். தான் தரிசித்த நவ ஜேர்மனியைப்பற்றி அக்ரோபர் மாதம் அவர் ஒரு குறிப்பு எழுதினார். என்ன செய்யப்போகிறது பிரிட்டன்? மைய்ன் காம்ஃப் எழுதிய ஹிட்லரோடு உறவு வைத்துக்கொள்ள போகிறோமா? தான் சொன்னது போல் அவர் போலந்தை அபகரித்துக் கொள்வார் என்று நம்பப்போகிறோமா? அல்லது, ஜேர்மனியின் சங்கடங்களை, சவால்களை, தேவைகளை உணர்ந்த புதிய தலைவராக ஹிட்லரை அங்கீகரிகப்போகிறோமா? இந்த புதிருக்கு உடனே நாம் விடை கண்டு பிடித்தாக வேண்டும். ஹிட்லரோடு கைகோர்த்துக் கொள்ள முடிவு செய்தது பிரிட்டன். மார்ச் 1935 ல் ஹிட்லர், ஜோவாசிம் ஃவொன் ரிப்பன்ட்ராப் (Joachim von Ribbentrop) என்பவரை ஜேர்மனியின் அயல்துறை அமைச்சராக நியமனம் செய்தார். ஜுன் 2, 1935 ல் ரிப்பன்ராப் லண்டன் சென்றார். தன் வாதத்தை அவர் அழுத்தமாக எடுத்து வைத்தார். எங்கள் கோரிக்கையை ஏற்று ஜேர்மன் கடற்படையை பிரிட்டன் பலப்படுத்தவேண்டும். நூற்றுக்கு முப்பதைந்து என்ற விகிதத்தில் பலத்தை கூட்டிலாலே போதுமானது. இதை நீங்கள் மறுப்பதாக இருந்தால் பாதகமில்லை, எங்கள் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் எங்கள் பலத்தை நாங்களே அதிகப்படுத்திக் கொள்வோம். ரிப்பன்ராபின் குரலில் தொனித்த உறுதியையும் அலட்சியத்தையும் ஆணவத்தையும் கண்டு திகைத்தது பிரிட்டன். நிச்சயம் இது போன்ற ஒரு தொனியில் பேபசி எந்ந உடன்படிக்கையையும் நிறைவு செய்ய முடியாது. அதிலும் ஜேர்மனி வந்திருப்பது பிரிட்டனிடம் உதவி வேண்டி. இப்படியா உதவி கேட்பார்கள்? மறுத்துவிட தான் முடிவு செய்ய நினைத்தது பிரிட்டன். ஆனால் யோசித்துப் பார்த்த போது, உடன்படிக்கை போட்டுக்கொள்வது தான் சரி என்று தோன்றியது.. ஹிட்லர் சொன்னதை செய்து முடிக்கக்கூடியவர், செய்து முடிக்க முடியும் என்னும் நம்பிக்கை இருப்பதால் தான் இந்த வித மிரட்டல் தொனியுடன் பேச்சுவார்த்தை நடத்தமுடிகிறது. உடன்படிக்கை போடாவிட்டால், ஜேர்மனி தன் கப்பற்படை பலத்தை கணக்கிலடங்கா விதத்தில் கூட்டிவிடும். ஜேர்மனியின் தொட்ழ்நுட்ப திறனையும் கட்டுமான திறனையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. விவேகத்துடன் நடந்து கொள்வது தான் சிறந்த வழி. தன் வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்ககளில் இதுவும் ஒன்று என்று ஹிட்லர் இந்தச் சம்பவத்தை பின்னர் கொண்டாடிக் கொண்டார். எதியோப்பிய ஆக்கிரமிப்பு – Italien Occupation in Ethiopia அக்ரோபர் 1935 ல் இத்தாலி எதியோப்பியாவை(அபிசீனியா என்றும் அழைப்பார்கள்) ஆக்கிரமித்தது. இத்தாலியப் படைகளை எதிர்கொள்ளும் அளவுக்கு எதியோப்பியாவிடம் படை வலிமை கிடையாது. ஆகவே எதியோப்பியா இத்தாலியின் ராணுவப்பலத்தில் சுருண்டு ஒடுங்கிபோனது. இத்தாலிய கிழக்கு ஆபிரிக்கா என்னும் பெயரில் தனக்கான காலனிகளை இத்தாலி உருவாக்கிக் கொண்டது. ஜப்பானின் சீன ஆக்கிரமிப்பை எப்படி லீக் ஒஃப் நேஷன்ஸால் தடுத்து நிறுத்த முடியவில்லையோ அப்படியே இத்தாலிய ஆக்கிரமிப்பையும் லீக்கால் தடுத்து நிறுத்த முடியவில்லை. வேடிக்கை மட்டுமே பாத்துக்கொண்டிருந்தது. இத்தாலி, எதியோப்பியா இரண்டுமே லீக்னி உறுப்பு நாடுகள் என்ற போதிலும். இந்த ஆக்கிரமிப்பு முசோலினியை பிரபலப்படுத்தியது. ஐரோப்பிய நாடுகள் இந்த ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜேர்மனி இத்தாலிக்கு கைகொடுக்க முன்வந்தது. எதியோப்பியாவை இத்தாலி ஆக்கிரமித்ததில் தவறேதுமில்லை. இத்தாலியை நாம் ஆதரிக்கிறோம் என்று அறிவித்தது ஜேர்மனி. அடுத்ததாக ரைன்லாந்து பக்கம் பார்வையை திருப்பினர் ஹிட்லர். வெர்சைலஸ் ஒப்பந்தத்தால் நிராயுதபாணியாக மாற்றப்ட்ட மற்றொரு பிரதேசம். ராணுவ சீருடைகளை இங்கு பார்க்க முடியாது. ஜேர்மனி ஒரு பக்கம் பலம் பெற்றுக்கொண்டிருக்கும் போது, ஜேர்மனியின் ஒரு பாகமான ரைன்லாந்து பலவீனமாக இருப்பது தேச அவமானம் அல்லவா? மார்ச் 1936 ல் ஹிட்லர் உத்தரவு பிறப்பித்தார். பொட்டல் காடாக ரைன்லாந்து இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. நாசிகள் இங்கே சென்று தழைத்துப் பரவட்டும். வெர்சைல்ஸ் வாத்தியார் காலாவதியாகிவிட்டார். நாம் அவருக்கு கீழ் படிய வேண்டிய அவசியம் இல்லை. உத்தரவின் படி 32000 ராணுவ வீர்ர்களும் ஆயுதம் தரித்த காவல்வீரர்களும் ரைன்லாந்துக்குள் புகுந்தனர். ஹிட்லர் எதிர்பார்த்தபடியே எந்த எதிர்ப்பும் யாரிடம் இருந்தும் கிளம்பவில்லை. அப்படியே கேட்டாலும் பதில் தயாராகவே இருந்தது. ரைன்லாந்து என் நாட்டின் ஒரு பகுதி. தேவைக்கேற்ப ராணுவத்தை அங்கே கொஞ்சம் நகர்த்திக் கொண்டதில் உங்களுக்கு என்ன ஆட்சேபனை? பிரிட்டனிடம் ஹிட்லருக்கு எந்ந பயமும் இல்லை. ஆனால் பிரான்ஸிடம் கொஞ்சம் பயம் இருந்தது. ராணுவத்திடமும் அவர் சொல்லியிருந்தார். ஒருவேளை பிரான் தரப்பில் ஏதாவது எதிர்ப்பு வந்தால் சட்டென்று பின்வாங்கி விடுங்கள். ஆனால் பிரான்ஸ் அமைதியாகவே இருந்தது. ஹிட்லர் இதை ஒரு வெற்றியாக கருதினார். இனி பிரான்ஸ் குறித்து அச்சப்படதேவையில்லை. ஸ்பானிய உள்நாட்டு யுத்தம் – Spanish civil war – Spanicher Bürgerkrieg ஜுலை 17, 1936 தொடங்கி ஏப்ரல் 1 1939 வரை நீடித்த ஸ்பானிஷ் உள்நாட்டு யுத்தம் ஸ்பெயினை கிழித்து கந்தலாக்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுவதும் ஸ்பெயின் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்திருகிறது. கன்சர்வேடிவ், ரிஃபோர்மிஸ்ட் இரு குழுக்களும் மாற்றி மாற்றி போரிட்டு ஆட்சியைக் கைப்பற்றின. இந்த உள்நாட்டு யுத்தத்தைத் தொடங்கிவைத்தவர்கள் சில ராணுவ ஜெனரல்கள். இவர்களுக்கு கன்சர்வேடிவ் குழு (Conferderation de Derechas Autonomas – CEDA), கார்லிஸ்ட் குழுக்கள் மற்றும் Falange Espanola delas JONS என்னும் பாசிஸ குழுக்ககளுக்கு ஆதரவு தந்தன. ரிபப்ளிக்கன் கட்சி அதிபராக இருந்த Manuel Azana என்பவருக்கு எதிராக இவர்கள் கலகத்தில் இறங்கினார்கள். போரின் முடிவில் அதிபர் தூக்கியடிக்கபட்டார். ஜெனரல் ஃபிரான்சிகோ ஃப்பிராங்கோ பதவியைக் கைப்பறினார். இந்த உள்நாட்டு யுத்தத்தில் ஸ்பெயினுக்கு சோவியத்யூனியன் ஆதரித்தது. எர்னெஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ச் ஆர்வெல் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் இந்ந போரின் நிகழ்வுகளை எழுதி உலக மக்களின் கவனத்தை, குறிப்பாக ஐரோப்பாவின் கவனத்தை ஈர்த்தனர். இந்த போரின் ஆரம்பக்கட்டத்திலேயே, சுமார் 50000 பொதுமக்கள் துப்பாக்கிச்சூட்டில் மாட்டிக்கொண்டும், கைதிகளாகப் பிடிபட்டும் உயிரிழந்தனர். நவம்பர் 1936ல் ஜேர்மனியும் இத்தாலியும் ஃபிராங்கோவின் கைப்பற்றபட்ட ஆட்சியை ஆதரித்தனர். டிசம்பரில் இத்தாலி தன் ராணுவத்தை ஸ்பெயினுக்கு அனுப்பிவைத்தது. ஃபிராங்கோவோடு சேர்ந்து ஸ்பெயினை முறியடிப்பதற்காக. இரண்டாம் உலகப்போரின் முன்னோட்டமாக இதைக் கொள்ள முடியும். ஒரு பக்கம், ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் கூட்டணி, மற்றொரு பக்கம் பிரிட்டன், பிரான்ஸ் கூட்டணி. பிறகு சோவியத் யூனியன். நவம்பர் 1936ல் ஜேர்மனியும் ஜப்பானும் கைகுலுக்கிக் கொண்டன. இரண்டையும் அருகருகே கொண்டுவந்த சக்தி., சோவியத் எதிர்ப்பு. கம்யூனிஸ்ட் இண்டரநஷனல் (மொஸ்கோவில் தொடங்கப்பட்ட சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு. Communist International என்பதன் முன்னெழுத்து சுருக்கமாக Comintern- கோமிண்டர்ன் என்றழைக்கப்பட்டது) பிற நாடுகளில் குழப்பங்களை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாளர்களை ஊக்குவிக்கிறது. கலகம் செய்ய தூண்டுகிறது. ஜார் மன்னரை மக்கள் தூக்கியெறிந்ததைப் போல் ஏகாதிபத்திய நாடுகளின் அரசாங்கத்தை அந்தந்த தேசத்து மக்கள் தூக்கியெறிய வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறது. இது ஆபத்து. சோவியத்யூனியன் என்னும் தீயசக்தியிடம் இருந்து நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ளவேண்டியது அவசியம். சோவியத் முதலில் என்னை தாக்கினால் நீ கைகொடு. உன்னைத்தாக்கினால் நான் உன் பக்கம் நிற்பேன். நாம் சோவித்தின் பக்கம் தலைவைத்தும் படுக்க வேண்டாம். இது தான் ஒப்பந்தத்தின் சாரம். Ant-Comintern Pact என்று இந்ந ஒப்பந்தம் அழைக்கப்பட்டது. இத்தாலியும் ஜேர்மனியுடன் - Germany and Fascist Italy நவம்பர் 1937 ல் இத்தாலி இந்த ஒப்பந்தத்தில் இணைந்து கொண்டது. ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி மூன்றும் ஒன்றிணைந்து அச்சு நாடுகளாக (Axis Powers) மாறின. · இத்தாலி இந்த கூட்டணியி்ல் இணைந்ததற்கு என்ன காரணம்? · ஏற்கனவே பிரிட்டனோடும் பிரான்ஸோடும் இத்தாலி தனித்தனியே போட்டுக்கொண்ட ஒப்பந்தகள் என்ன ஆயிற்று? · ஜேர்மனிக்கு எதிராக ஒன்று சேர்வோம் என்று சொன்ன இத்தாலி அதே ஜேர்மனியிடம் அடைக்கலம் பகுந்தது ஏன்? காரணம் ஏமாற்றம். ஏப்ரல் 14, 1935 ல் இத்தாலியில் உள்ள Stressa என்னும் பகுதியில் பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி மூன்றும் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுக்கொண்டன. ஒஸ்ரியாவின் இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும், ஜேர்மனியின் எதிர்கால அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்னும் கோரிக்கைகளை இந்த மூன்று நாடுகளும் ஏற்றுக்கொண்டன. ஆனால் இந்த ஒப்பந்தத்தால் பயன் ஏதும் இல்லை என்பதை முசோலினி விரைவில் உணர்ந்து கொண்டார். ஜேர்மனியின் ராணுவமயலாக்கலை பிரிட்டனோ பிரான்ஸோ எதிர்பதாக தெரியவில்லை. ஒப்புக்கு கூட ஜேர்மனியை மிரட்ட அவர்கள் தயாராக இல்லை. ஆக, பிரிட்டன், பிரான்ஸ் இரண்டையும் நம்ப முடியாது என்று முஸோலினியின் உள்மனம் எச்சரித்தது. இந்த இரு தேசங்களாலும் ஜேர்மனியின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியவில்லை. பலம் பொருந்திய சக்தியாக ஹிட்லர் மாறிக்கொண்டிருக்கிறார். அபிசீனியாவை அள்ளிக்கொண்ட போது ஜேர்மனி தான் என்னை ஆதரித்தது. என்ன செய்தன பிரான்ஸும் பிரிட்டனும்? முசோலினியின் மனமுறிவுக்கு மற்றொரு காரணம், Hoare-Laval ஒப்பந்தப்படி, மூன்றில் ஒரு பகுதி அபினீசியவை இத்தாலிக்கு அளிப்பதாக பிரிட்டனும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டன. மிகவும் ரகசியமக இத்தாலியுடன் இரு நாடுகளும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் இது. எப்படியோ இந்த ஒப்பந்தம் பற்றிய விவரம் வெளியே கசிந்துவிட்டது. பிரிட்டன், பிரான்ஸ் இரு நாடுகளிலும் குழப்பம் ஆரம்பித்து விட்டது. அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பித்து விட்டார்கள். பிரிட்டன் அயலுறவுத்துறை அமைச்சர்(Samuel Hoare) ராஜிநாமா செய்தார். ஒப்பந்தம் முறிவுக்கு வந்தது. அதற்கு பிறகு, பிரிட்டனும் பிரான்ஸும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. எப்படி நம்ப முடியும் இவர்களை? ஹிட்லர் எவ்வளவோ மேல். அவர் செய்வது அக்கிரமம் என்றால், நான் செய்ய விரும்புவதும் அதையே தான். ஜேர்மனியை போலவே இத்தாலிக்கும் கொலனிகள் தேவைப்படுகின்றன. ஆக்கிரமிப்புகள் தேவைப்படுகின்றன. அள்ள அள்ள குறையாத செல்வம் தேவைப்படுகிறது. ஒத்த சிந்தனை உள்ள ஹிட்லருடன் கைகுலுக்கிக் கொள்வது தான் உகந்தது. தவிரவும், இவர்களுடன் இணைந்தால் சோவியத்யூனியனுடன் இருந்தும் தப்பித்துக் கொள்ள முடியும். சோவியத்யூனியனுக்கு எதிரான அணியில் சேர போலந்துக்கும் அழைப்பு விடுத்தார் ஹிட்லர். ஆனால், போலந்து அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ஹிட்லரிடம் சிக்கிக் கொண்டால், அவர் உள்ளங்கைக்குள் வைத்து நொறுக்கி விடுவார் என்று போலந்து அஞ்சியது. ஹிட்லரோடு இணைவதில் ஜப்பானுக்கும் ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. சோவியத்துக்கு எதிரான அணியை ஹிட்லர் அமைப்பது நிச்சயம் வரவேற்கத்தக்கது தான். ஆனால், சோவியத்தின் கூட்டாளியான பிரிட்டனுடன் ஏன் ஜேர்மனி ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டும்? இது முரண்பாடு அல்லவா? நாளை பிரச்சனை என்று வந்தால் பிரிட்டன் ஹிட்லருக்கா கைகொடுக்கும்? இது ஏன் இந்த ஹிட்லருக்கு புரியவில்லை? ஜப்பான் ராணுவத்துக்குப் பிறகு தான் விஷயம் தெரிந்தது. ஹிட்லர் செய்து கொண்டது ஒப்பந்தம் அல்ல. அது ஒரு சூழ்ச்சி. பிரிட்டனின் கடற்படைக்குச் சமானமாக தன் கடற்படையை வளர்த்துக் கொள்வதற்காக வாங்கப்பட்ட அவகாசம். ஐரோப்பாவை ஆட்டிப் படைக்கப் போகும் கூட்டணி உருவானது ஹிட்லர் தலைமையில். (தொடரும்) நூல் இரண்டாம் உலகப்போர். எழுதியவர் மருதன். வெளியீடு கிழக்கு பதிப்பகம். பதிப்பு 2009 மே
 4. 3 points
  கருணாவையும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் கூட ஒரு துரோகியை எப்படி ஆதரிக்க முடியும்? பிரபாகரனின் வழிமுறைகள் ஒரு காலகட்டத்தில் ஒத்துவராவிட்டாலும், பாரதத்தில் கர்ணனைப் போல் கருணா நின்றிருந்தால் பாராட்டலாம். குறைந்தபட்சம் ஈழப்போரிலிருந்து விலகி இருந்திருக்கலாம் (களத்தில் புலிகள், சிங்கள நரிகள் இருதரப்பிலிருந்தும் கருணாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், இது நடைமுறைச் சாத்தியமற்றது; எனினும் கொள்கையளவில் ஏற்கலாம்). ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகியை, அறம் சார்ந்து சிந்திக்கும் யாரும் எவ்வாறு ஏற்க முடியும் ?
 5. 3 points
 6. 3 points
  திலீபன் போகேக்கை அனுப்பியிருக்க வேண்டும் விட்டுட்டம்.
 7. 2 points
  இது ஒரு தவறான முறை என்று சொல்ல முடியாது. வாழைப்பழகுலைகளை கல்யாணவீடு, அவசர தேவைகளுக்கு மிகநேர்த்தியாக பழுக்கவைக்க இன்றுவரை நடைமுறையிலுள்ள ஒரு முறைமைதான். இது ஒரு சேதனமுறையும் கூட. கதியால்கள் நிறையவே இருக்கின்றன. இலவசமாக பெற்று கொள்ளலாம். சிவப்பு மண் விவசாயத்துக்கு நல்லம்தாம். ஆனால் வீட்டை பராமரிப்பது என்பது சற்று கடினம்.ஒவ்வொரு தடவையும் வீடு கழுவிறது என்றது மிகப்பெரிய போராட்டம் தான்.
 8. 2 points
  இப்போது இரண்டு காணொளிகள்தான் வெளியிட்டு இருக்கிறேன். வரும் வாரம் ஒரு காணொளி வெளியிடவுள்ளேன். காணொளி நீண்டுவிடக்கூடாது என்பதால்தான் வேறு எந்த உணவையும் சமைக்கவில்லை. இனி வரும் காணொளிகளில் தயாரிக்கவிருக்கிறேன். சுட்டிக்குழந்தைகளுடன் காணொளியை படமாக்குவது சிறிது கடினம்தான்.இனிவரும் காணொளிகளை இன்னும் தரமாக காட்ச்சிப்படுத்தவிருக்கிறோம்
 9. 2 points
 10. 2 points
  மலரே மௌனமா ... என்ன குரல் வாவ்.... நீங்களும் கேட்டுப் பாருங்கள்.
 11. 2 points
  தங்கச்சி! முந்தி கொஞ்சநாள் இஞ்சை ஒராள் தேங்காய் எண்ணை கூடாது எண்டு குத்தி முறிஞ்சவர். ஞாபகமிருக்கோ?
 12. 1 point
  பிள்ளையை தத்தெடுத்தல் நான் இங்குள்ள நிறுவனத்திற்கு வருடத்தில் இருமுறை உதவிசெய்வேன் (https://www.cbm.org.au/). அவர்கள் அதை மூன்றாம் உலக நாடுகளில் உள்ள வறிய மக்களுக்கு உதவி செய்வார்கள், இன்றைக்கு எனக்கு வந்த கடிதத்தை பார்த்துவிட்டு, தான் வைத்திருந்த AUD20/- தந்தார் அவர்களுக்கு சேர்த்து அனுப்ப சொல்லி. நான் கேட்கவில்லை, அவராக தந் து மிகவும் சந்தோஷமாக இருந்திச்சு (மூன்று பிள்ளைகளுக்கும் உதவி செய்ய விருப்பம், ஊருக்கு போகும் போது வொள்ளவத்தை யாழ்பாணத்தில் நிற்கும் வறியவர்களுக்கு பணம் அவர்களை கொண்டுதான் கொடுப்பேன்). வந்த கடித்ததில் இருந்த படம் : பிறகு கேட்டார் தான் ஒரு பிள்ளையை தத்தெடுத்து படிப்பிக்கப் போகின்றேன் என்று, அந்த பிள்ளை சின்ன பிள்ளையாக இருக்கனும் என்பது அவாவின் வேண்டுகோள். அப்ப நில்மினி தந்த மகளிர் இல்லத்தில் (https://mahalirillam.org/au/sponsorship/) ஒருவரை தேர்ந்து எடுக்க சொல்லியுள்ளேன், அவர் அவர்களை இன்று தொடர்பு கொண்டுள்ளார், பார்ப்போம். அவரின் கனவு ஊரில் ஒரு வைத்தியசாலை கட்டி ஏழைகளுக்கு வைத்தியம் பார்ப்பது தான். பார்ப்போம் காலம் பதில் சொல்லும். மனைவியிடம் கர்நாடக சங்கீத படிக்க வந்த சின்ன பிள்ளைகளில் சிலர் மகளிடம்தான் படிக்கனுமென்று விரும்பினார்கள், அதனால் அவருக்கும் வருமானம் வருகின்றது, இப்ப ஆண்டு 11. அத்துடன் வரைதல் பாடமும் எடுக்கின்றவா சிலருக்கு, அவர் வரைந்த படம், போனகிழமை தன் நண்பிக்கு கொடுக்க வரைந்த படத்தை, நாங்கள் சுட்டு வீட்டில் மாட்டிவிட்டோம், இப்ப வேற வரைகின்றா
 13. 1 point
  கிராமத்து வீடு சாய்வு நாற்காலியில் சரிந்து உட்க்கார் ந்து கொண்டு இருந்தாள் ராசம்மா டீச்சர் , மாலை மங்குவதற்கு சூரியன் தன கதிர்களை மெல்ல இறக்கி கொண்டிருந்தான் . துணைக்கு இருந்த சிறுமியிடம் கோழிகள் கூடு அடைந்துவி ட டால் , கதவை மூடி விடாம்மா . இன்று மின்சாரம் தடைப்படடாலும் , உதவியாக இருக்கும் .நான் விளக்கு வைக்க போகிறேன் என்றாள். அரிக்கன் லாந்தர் விளக்கின் கண்ணடியை துடைத்து அளவாக எண்ணெய் விட்டு, தயார் படுத்தினாள். பின் மேசை விள க்கினையும் . கண்ணடியை துடைத்து மேசையின் ந டுப்பகுதியில் வைத்தாள். துணைக்கு இருக்கும் சிறுமி குமுதா ...அப்பாவின் காரோட்டி தியாகு வின் மகள் எடடாம் வகுப்பு படிக்கிறாள் வீட்டுப் பாடம் செய்ய உதவி கேட்டு படித்து இரவு துணையாக இருந்து காலையில் செல்வாள். இவள் வீடு வாயில் படலையில் நின்று கூப்பிடடால் .கேட்க்கும் தூரம் தான் . தியாகு மிகவும் விசுவாசமானவன் அவன் . மனைவியும் சமையல் முடித்து பிள்ளைகள் இருவரும் பாடசாலைக்கு சென்ற பின் ராசம்மா டீச்சர் வீட்டில் வந்து சமையல் பாத்திரம் தொட க்கம் , துணி துவைப்பது வரை செய்து கொடுப்பாள் . ராசம்மா டீச்சர் இளைப்பாறிய பின் . இரண்டு வருடங்களுக்கு முன் கணவன் இறந்து விட படடனத்தில் இருக்கும் மகன் தன்னிடம் வரும்படி எத்தனையோ முறை கேட்டுக் கொண்டாலும் ராசம்மா மறுத்து வி ட டாள் . வருடமொருமுறையாவது பிள்ளைகளையு ம் கூட்டி வந்து என்னைப் பார்த்துக் கொண்டு போனால் காணும் என்பாள் . கிராமத்து சூழ் நிலையிலே பிறந்து வளர்ந்து வாழ்க்கை படடவள். மகன் பிறந்த பின் சில வருடங்கள் படிப்பிக்க போகாமல் விட்டு அவன் வளர்த்தும் தன மாமியாரிடம் விட்டு கல்வி ஒரு கொடை அதை சிறார்களுக்கு கற்பிப்பது பெரும் புண்ணியம் எனும் கணவனின் விருப்புக்கேற்ப பாடசாலை அருகாமையில் இருந்ததால் சென்று படிப்பித்து வந்தாள் . எல்லாம் கனவு போலாகியாது அவளுக்கு அவளும் ஓய்வு பெற்று பல வருடங்களாகி விட்ட்து வயதும் ஆகி விட்ட்து . சில தடவை மகனின் வீட்டுக்கு சென்ற போதும அங்கு மனம் நிலை கொள்ள வில்லை . வாகன இரைச்சலும் காலையில் எழுந்து கணவன் மனைவி வேலைக்கு ஓடுவதும் , குழந்தைகளை ஆட்டொவில் பள்ளிக்கு அனுப்புவதும் ஒரு எந்திர த்தனமான வாழ்க்கை . தனியாக இருக்க மகனும் விரு ம்ப வில்லை .. அம்மாவின் விருப்பின் படியே இருக்கட்டும் என விட்டு விடடான் . காலம் தன் வழியே பயணித்துக் கொண்டு இருந்தது .சிறுமி குமுதாவும் உயர்கல்வி கற்று பல்கலைக்கு சென்றுவிடடாள் . ராசம்மா பல வாறு யோசிக்க தொடங்கினாள் . மீண்டும் தனக்கு உதவியாக சிறு குழந்தையுடன் கைவிடட தனித்து நின்ற தேவகியை வேலைக்கு அமர்த்தி பொருட்கள் களஞ்சிய படுத்தும் அறையை சகல வசதிகளுடன் ஒதுக்கி கொடுத்து வீட்டொடு வைத்துக் கொண்டாள் . மீண்டும் மகன் தன்னிடம் வரும் படி அவற்புறுத்தவே , காலையில் குயிலின் கூவ லோடு எழும் இன்ப மும் சுற்றிவர மாமரங்களும் தோடை பலா என பயன் தரும் மரங்களும் காலப்போக்கில் கவனிப்பாரற்று அழிந்து விடும் . காலையில் தரிசிக்கும் முருகன் கோவில் , செவ்வாய் வெள்ளி விரதநாட்களில் காக்கைக்கு உணவளித்து உண்ணும் மன நிறைவு இவற்றை அவள் இழந்து மகனுடன் செல்ல தயாரில்லை . என மறுத்து விடடாள். தற்போது அவளுக்கு சற்று எதிர்காலத்தின் முதுமையை நோக்கிய ஒரு பய உணர்வு ....அன்று வழக்கம் போல் எழுந்து காலை க் கடன் முடித்து உணவுண்டு முடித்தவள் , தேவகியை கடைத்தெருவுக்கு மீன் வகை வாங்கி வர அனுப்பினாள். பின் மணிச் சத்தம் கேட்டு வாயிற் கதவை நோக்கியவள் .தபாற்காரன் வந்திருந்தான். அவளது கணவனின் அக்காவின் கடைசி மகளுக்கு ..பெண் குழந்தை பிறந்த சேதி யோடு .கூடிய கடித மொன்றுடன் . மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள் . மதிய உணவு முடித்து ...சற்று ஓய்வெடுக்க எண்ணிய அவள் மேசை மீது கடிதமெழுதும் நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு மகனுக்கு ஒரு மடல் வரைந்தாள் . அன்புள்ள மாதவன் , ஜீவிதா மற்றும் பேரப்பிள்ளைகள் அறிவது ... முருகன் துணையால் நான் நலமே உள்ளேன் நீங்களும் அவ்வாறே இருக்க எல்லாம் வல்ல முருகன் துணை புரிவார் . . தேவகி வீட்டு வேளைகளில் ஒத்தா சையாக இருப்பதால் நிம்மதியாய் இருக்கிறேன் பெரிய மாமியின் மகள் கெளசல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக மாமி கடி தம் போட்டிருந்தார் . என் பேரப்பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்களா ? அங்கு வெயில் எப்படி இங்கு மரங்கள் சூழ இருப்பதால் நல்ல குளிர்ச்சியாக இருக்கிறது . இம்முறை பள்ளி விடுமுறைக்கு என்னைப்பார்க்க வருவீர்களா ? வெள்ளைச்சியும்,கொம்பாளும் ஒரே நேரத்தில் கன்று போட்டிருக் கு . இரண்டு நாகு கன் றுகளும் வீட்டு முற்றத்தில்துள்ளித் திரிந்து ...விளையாடுவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம் வீட்டில் தாராளமாக பால் கிடைக்கிறது . என் பேரப்பிள்ளைகளைத் தான் நினைப்பேன் . வீட்டுத்தேவைக்கு எடுத்து போக மீதியை வறிய பள்ளிப்பிள்ளைகள் மூவர் வந்து மாலை வேளைகளில் எடுத்து செல்வார்கள். அயலில் எல்லோரிடமும் பால் மாடுகள் இருக்கின்றன . அதனால் ஒருவருக்கும் கொடுக்க முடியவில்லை . வறிய பிள்ளைகள் பசியாறட்டும் போகும் வழிக்கு புண்ணியமாகும் என எண்ணிக் கொள்வேன். அடுத்து மகனே உனக்கு நான் உங்களுடன் வந்து தங்கவில்லை என குறையாக இருக்கலாம் யோசித்து பார் பரபரப்பான இந்த காலத்தில் குழந்தைகளின் படிப்பு உன் வேலை வீடு செலவு என்று உனக்கே நேரம் இல்லாத போது என்னை கவனிக்க கஷ்டமாய் இருக்கும் . நான் நடமாடித்திரியும் வரை என சுய தேவைகளை நிறைவேற்றக் கூடிய நிலையில் இருக்கும் வரை நீ பிறந்து வாழ்ந்த இந்த வீட்டிலிருக்கவே விரும்புகிறேன் . நான் உயிருடன் இருக்கும் வரை இதை விற்கவோ ..வேறு தேவைக்கோ எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம். என் சுயம் இழந்து ... மறதி கண்டு ...என்னை இன்னொருவர் துணையோடு தான் வாழ வேண்டிய நிலைமை வந்தால் ...எனது இளைப்பாற்றுச் சம்பள பணம் சேமிப்பில் இருக்கிறது . அது உனதும் எனதுமான இணைந்த வைப்புக் கணக்கில் இருக்கிறது அதை எடுத்து உன் தேவைகளை செய் . என்னை ஒரு கண்ணியமாக நடத்தும் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடு ...இதை என் கடைசி ஆசையாக நிறை வேற்றுவாய் என்பதில் நம்பிக்கை உண்டு . ஒன்று சொல்ல மறந்து விடடேன் . கார் கார தியாகுவின் பெண்ணுக்கு நகரத்தில் ஒரு வேலை கிடைக்க உதவி செய்வாயா? நன்றாக படித்து இரண்டு டிகிரி ..வாங்கி உள்ளாள் .அதுகள் உன்னை குழந்தையாக வீட்டுக்கு கொண்டு வந்த காலத்தில் இருந்து கைக்குள்ள இருந்து சேவை செய்ததுகள் அந்த பெண் தலை நிமிர்ந்தால் அதுகளின் சீவியம் மேம் படும் ...மீண்டும் குடும்பத்தையும் உன்னையும் பாது காக்க .முருக கடவுளை வேண்டி நிற்கிறேன் .இப்படிக்கு .. பாசமுள்ள அம்மா ...கண்கள் பனித்தன வாரங்கள் மாதங்களாகி பள்ளிக்கு கூட விடுமுறையும் வந்தது . ஒரு ஞாயிறு காலை வாயிலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்ட்து ...மகன் மருமகள் பேர ப் பிள்ளைகளோடு வந்திருந்தான் .ராசம்மாவுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி .. பேத்தி நன்றாக வளர்ந்து ரடடை ஜ டை போட்டு இருந்தாள். பார்க்க மிகவும் ஆசையாக இருந்தது . பேரன் தேவகி பையனோடு கிளி பார்க்க மாமரத் தடிக்கு சென்று விடடான் . .அவர்கள் குளித்து முடிந்ததும் காலை ஆகாரத்தை நிறைவு செய்தார்கள் . ராசம்மா மதிய உணவுக்கு என்ன செய்வது என்று ..எண்ணிக் கொண்டு இருக்கையில் .". மாமி எங்களுக்கு கடையில் வாங்கும் கோழி சலித்து விட்ட்து . ஊர் கோழி சமைப்போமா என மருமகள் ஜீவிதா ..கேட்டுக் கொண்டே குசினிக்குள் நுழைத்தாள். அவளும் கூட மாட உதவி செய்து சமையலை ஒப்பேற்றறினார்கள். பல கதைகளும் கதைத்த பின் ..... மத்திய உணவு சுடச் சுட கோழிக் கறியும் தோடடத்து பிஞ்சு வெள்ளைக்கத்தரிக் கறியும் மற்றும் பல உணவுகளுடன் நிறைந்தது . நாட்கள் ஓடி வாரங்களானது ராசம்மா மிகவும் யோசனையுடன் காணப்படடாள் . ..மறு நாள் பயணம் . இரவு உணவு முடித்துக் கொண்டு ...படுக்கைக்கு சென்றார்கள். எல்லோரும் ஆழ்ந்த நித்திரை அதிகாலை மூன்று மணி யளவில் அம்மாவின் அறையில் ...விளக்கு எரிந்து கொண்டிருந்ததை பார்த்த மகன் .. உள் சென்று பார்த்த போது ஒரு வகை விக்கல் ..எடுத்துக் கொண்டிருந்தார் ராசம்மா ...அருகில் சென்று கையை பற்றியவர் ....கை துவண்டு போவதைக் கண்டு ...அதிர்ச்சி அடைந்தார் . தேவகி ஓடிச்சென்று ....கார் கார தியாகுவை அழைத்து வந்து ..வைத்திய சாலை சென்ற போது அவர் ஏற்கனவே மாரடைப்பில் இறந்து விடடார் . தன் கடைசிக் கால ஆசைகளை விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்ட திருப்தியில் ராசம்மா ஆழ்ந்த நித்திரையில் .... .முதியவர்களை அவர்கள் விருப்ப படி ...ஓய்வாக அமைதியான சூழலில் வாழ விடுங்கள் . பணத்தைக் கட்டி முதியோர் இல்லங்களில் தள்ளி விட்டு கடமை முடித்தேன் என வாழாதீ ர்கள் .மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் ஆடு மாடு தோட்ட்ம் வயல் வெளி என ...வாழ்ந்த வாழ்க்கை ஒரு நாலு சுவர் கொண்ட கூட்டுக்குள் வாழ்வது வீட்டுச் சிறை போல தனித்து விடப்பட்டது போல உணர்வார்கள். தனிமையம் ஏக்கமும் அவ்ர்களைக் கொல்லாமல் கொள்ளும் . யார் வருவார்கள் தன்னைப் பார்க்க என்று மனம் எங்கும். முடிந்த வரை முதியோர் இல்லம் தவிர்த்து எஞ்சிய காலத்தை வாழ வையுங்கள். தாய் /தந்தை மனசு தங்கம் நான் அறிந்த சொந்தம் நன்றி சொல்ல போதாதையா ஏழேழு ஜென்மம்
 14. 1 point
  - Abu Zainab - ஜேர்மன் நாட்டின் University of Cologne யினால் ஏற்பாடு செய்யப்பட்ட Tilbury House World Schools Debate Championship எனும் சர்வதேச பாடசாலை மட்ட விவாத மேடையில் இலங்கை அணி வெற்றி பெற்று உலகளாவிய Champion பட்டத்தை வசப்படுத்தியிருக்கிறது. இத்தகைய வெற்றியைப் பெற உழைத்த அந்த மாணவர் அணியினையும் பயிற்றுவித்த ஊக்கப்படுத்திய அக்கறைக் குழுக்கள் அனைவருக்கும் முதற்கண் வாழ்த்துக்கள். இவ்வெற்றி 1996 உலகக் கிண்ண வெற்றிக்கு சமாந்தரமான ஒரு வெற்றியகும். குறித்த விவாத அணிக்கு தலைவராக செயற்பட்டதோடு மட்டுமல்லாமல் குறித்த தொடரில் உலகளாவிய ரீதியில் சிறந்த விவாதப் பேச்சாளருக்கான முதலாம் நிலையையும் றோயல் கல்லூரியின் மாணவன் Shalem Sumanthiran (ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் புதல்வன்) பெற்று தேசத்திற்கு மகுடம் சூட்டியுள்ளார். இதில் தொடரில் உலகளாவிய ரீதியில் 8ஆம் நிலையை றோயல் கல்லூரியின் மாணவன் Janul De Silva பெற்று இம்மகுடத்திற்கு வலுச் சேர்த்துள்ளார். இந்த நிகழ்வு நமக்கும் தேச நல்லிணக்கத்திற்கும் ஏராளமான செய்திகளை முன்மொழிகிறது. ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் சிறுபான்மை இனத்தில் உதித்த ஒரு தேசத்தை நேசிக்கும் நல்ல பிரஜை ஆவார். அவரும் றோயல் கல்லூரியின் பழைய மாணவர். Physics பட்டப்படிப்பை பூர்த்தி செய்ததன் பின்னர் சட்டக் கற்கையைக் கற்றுக் கொண்டவர். Methodist Church in Sri Lanka வின் Vice-President. சட்ட நுணுக்கத்திலுள்ள வல்லமையினால் இலங்கையின் முன்னணி சட்டத்தரணிகளுள் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார். இலங்கை நாட்டை குழறுபடிக்குட்படுத்த முனைபவர் என்ற குற்றச்சாட்டு சுமந்திரன் ஐயாவுக்கு வேண்டுமென்றே பல தடவைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது மிகவும் தவறான எந்த அடிப்படையுமற்ற விமர்சனமுமாகும். ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் சட்ட ஆட்சியை (Rule of Law) நிறுவுவதில் எப்போதும் முன் நின்று பாடுபடுபவர். நாட்டை நேசிக்கும் எந்த ஒரு பிரஜையாக இருந்தாலும் சட்ட ஆட்சியை நிலைநாட்டுவதில் முன் நின்று உழைக்க வேண்டும். அதைத்தான் சுமந்திரன் ஐயா செய்கிறார். அவரது நேர்மையான அணுகுமுறைக்கு தவறான வியாக்கியானமும் விமர்சனமும் வழங்கப்படுவது அவர் சிறுபான்மை உரிமைக்காக பாடுபடுபவர் என்பதனாலோ என்னவோ. எது எப்படி இருப்பினும், அவரது மகன் உலகளாவிய ரீதியில் சாம்பியனாகி பெருமை சேர்த்திருப்பது இலங்கை நாட்டிற்கேயாகும். ஏனைய சட்ட வல்லுனர்களைப் போல் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் சட்டத்துறைக்கான பங்களிப்பின் மூலமும் நாட்டின் சட்டவாட்சியில் ஏற்படும் மேம்பாடு சர்வதேச அரங்கில் இலங்கைக்கு நற்பெயரையே ஏற்படுத்தும். முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்தில் அடிப்படை மனித உரிமைகள் வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் இலவசமாக உதவ முன் வந்திருப்பதும் அவரின் இன மத பேதமற்ற மனித மாண்பிற்கு சான்றாகும். ஆக, சுமந்திரன் எனப்படும் ஆளுமை இலங்கை தேசிய அரங்கில் முக்கிய வகிபாகமுள்ள தேசப்பற்றுள்ள கற்ற சிறந்த ஆளுமையாகும். அவரை, இன மத பேதங்கள் அற்ற, நாட்டை நேசிக்கின்ற, நாட்டிற்கு பெருமை சேர்க்கும் புத்திரனை உருவாக்கிய ஒரு நாட்டுப்பற்றாளனாகப் பார்ப்பதே பொருத்தமானதாகும் http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_204.html
 15. 1 point
  சமத் பல்லபிட்டியா : வெற்றிகரமான முதலீட்டாளர், சமத்துவத்திற்காக போராடும் சிங்கள கனேடிய அமெரிக்கர் 1976ல் கொழும்பில் பிறந்தவர் ஓட்டாவா, கனடாவில் குடும்பத்துடன் வாழ்ந்தவர் அப்பா தூதுவராலயத்தில் வேலை செய்தவர் இலங்கையில் நடந்த யுத்தம் காரணமாக, தகப்பனாரின் உயிருக்கு ஆபத்து அகதி கோரிக்கை ஏற்கப்பட்டது வெற்றிகரமாக வாடர்லூ படிப்பை முடித்தார் ... அமெரிக்க சென்றார் இன்று உலகத்திற்கு சம உரிமை பற்றி அதிகம் பேசுகிறார்
 16. 1 point
  வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வயசிலையா ஐயா தாங்கள் இருக்கிறீர்கள்
 17. 1 point
  எமது மண்ணின் இறுதி மன்னனான சங்கிலியனை நினைவு கூரும் போது சங்கிலியனுடன் தொடர்பான வரலாற்று ஆதாரங்களை தேடி அவற்றை காட்சிபடுத்தி புதிய சந்ததிக்கு எமது வரலாற்றை கூறும் நிகழ்வே இஙு்கு முக்கியம். இதை ஒரு சமய நிகழ்வு போல் திவசம் செய்வது வெறும் கேலி கூத்து மட்டுமல்ல நீங்கள் கூறியது போல் சமய பிரச்சனையை உண்டு பண்ணும் சதி நிகழ்வாகவே இருப்பதாகவே தெரிகிறது. சங்கிலியன் எமது வரலாற்று அடையாளம். அதற்காக அவரது ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை எல்லாம் நியாயப்படுத்த முடியாது. ஆனால் நிச்சயம் சங்கிலியனின் வரலாற்று ஆதாரங்கள் தேடி எடுக்கபட்டு நினைவு சின்னமாக பராமரிக்கப்படல் வேண்டும்.
 18. 1 point
  Jeff Thompson ஐயும் Graeme Swann ஐயும் என்னால் அடையாளம் காணமுடியவில்லை. Jeff Thompson ஐ முன்னர் ரிவியில் பார்த்த நினைவும் இல்லை! இந்தப் புதிரை முடித்து வைத்ததற்கு நன்றி வாலி
 19. 1 point
  மேல் வரிசையில் நான்காவதாக இருப்பவர் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மேவ் ஹியூஸ் ஆறாவதாக இருப்பவர் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜெவ் தோம்ப்ஸன் கீழ் வரிசையில் முதலாவதாக இருப்பவர் இங்கிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்ஸ்ன் மூன்றாவதாக இருப்பவர் பாகிஸ்தானின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சொகைப் அக்தார் ஐந்தாவதாக இருப்பவர் இங்லிலாந்தின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் கிறேம் ஸ்வான் மேவ் ஹியூஸ் ஜெவ் தோம்ப்ஸன் ஜேம்ஸ் அன்டர்ஸ்ன் சொகைப் அக்தார் கிறேம் ஸ்வான்
 20. 1 point
  விரைவில் பதில் தருகிறேன் சிறி தம்பிக்கு மூன்றாம் நம்பர். நித்திரை பிரச்சனைக்கும் அக்குபஞ்சர் பிரச்சனைக்கும் பிறகுதான். ஊர் மட்டுமில்ல உறவும் தான். எண்டாலும் விதிமுறையின் படி போய்ட்டா பிரச்னை இல்லைதானே . சரியாத்தான் எண்ணி இருக்கிறீர் சிறி. நடுவுக்குள்ள ஒருஆள் அடையாளமே தெரியாமல் இருட்டோடு இருட்டா நிக்குது. எதுக்கும் லைன விட்டுட்டு போகேக்க சொல்லிட்டு போயிருந்தால் பிரச்னை இல்லாமல் இருந்திருக்கும்
 21. 1 point
  கருணாவை ஆதரிக்கும் கிழக்கு வாழ் மக்கள் விடுததலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் என்பதல்ல அர்த்தம். இறுதிவரை களத்தில் நின்ற புகழ்பெற்ற ஜெயந்தன் படையணி கிழக்கைச் சேர்ந்ததுதான். ஆனால் தற்போதைய கிழக்கின் சூழல், ஒப்பீட்டளவில் முரளீதரனை விட்டால் வேறு நல்ல தெரிவுகள் அவர்களுக்கு இல்லை என்பதாகிறது. கிழக்கின் தற்போதைய மிகப் பெரிய பிரச்சனை முசல்மான்களின் காணிபிடித்தல் (?). கிழக்கின் நிலை சட்டியில் இருந்து அடுப்பில் வீழ்ந்த கதைதான். (கிழக்கைச் சேர்ந்த வேறு யாராவது தெளிவான விளக்கம் தந்தால் நன்று)
 22. 1 point
  ஆஸ்பத்திரிக்கு, “இலவச விளம்பரம்” தேட.... செய்திருப்பார்கள். ஆஸ்பத்திரியை... நடத்துற ஆட்கள், “ஊரை அடித்து, உலையிலை” போடுற ஆக்கள் எல்லோ.
 23. 1 point
  உலக ஒழுங்கின் மீது பெரும் தாக்குதலாக மாறும் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை ஜார்ஜ் ஃபிளாய்டின் கொலை ஒரு பெரும் காட்டுத் தீயாய் உலகமெங்கும் பற்றிப் பரவி வருகின்றது. உலகெங்கும் 2000க்கும் மேற்பட்ட நகரங்கள், சிறு நகரங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. இலண்டன், பெர்லின், ரோம், வியன்னா, பாரீஸ் போன்ற இடங்களில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், துனிசியா, மெக்சிகோ, நியூசிலாந்து போன்றவற்றிலும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதே கொலை நான்கு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்திருந்தால் நிச்சயம் இவ்வளவு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்காது. காரணம் அமெரிக்காவில் போலீசாரால் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படுவது ஒன்றும் புதிய செய்தியல்ல. இந்த ஆண்டு காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட 429 பேரில் 170க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளையர்கள் என்றும், 88 பேர் கருப்பர்கள் என்றும் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இனி சகிக்கவே முடியாது என்ற நெருக்கடிக்கு உள்ளாகும் போதும், இனி தம்மால் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பவே முடியாது என்ற நிலை ஏற்படும் போதுதான் மக்கள் போராட்டத்தில், புரட்சியில் இறங்குகின்றார்கள். இன்று உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக லட்சக்கணக்கான உயிரிழப்புகளும், வேலையிழப்புகளும் ஏற்பட்டு, முதலாளித்துவ அரசுகளால் மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு உணவு கொடுக்கக்கூட துப்பற்ற நிலையில் உலக முதலாளித்துவ அரசுகள் உள்ளன. இதற்காக அரசிடம் பணம் இல்லை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. நாட்டின் வளங்கள் எல்லாம் விரல் விட்டு எண்ணக்கூடிய கார்ப்ரேட்டுகளின் கைகளில் குவிந்து கிடக்கின்றது. ஆனால் அதைக் கைப்பற்றி மக்களுக்கு வழங்கும் இடத்தில் அரசுகள் இல்லை என்பதுதான் நிலை. இதுதான் உலகம் முழுவதும் சாமானிய உழைக்கும் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தைத் தூண்டி விட்டிருக்கின்றது. அந்தக் கோபம் தன்னை ஏதாவது ஒரு வழியில் வெளிப்படுத்திக் கொள்ள வழியைத் தேடிக் கொண்டு இருந்தது. ஜார்ஜ் ஃபிளாய்டின் கொலை அதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. இப்படியான ஒரு நிலை தனக்கு நிச்சயம் ஏற்படும் என அமெரிக்க முதலாளித்துவம் அஞ்சித்தான் கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்த குறிப்பாக பெரும் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் ஆப்ரிக்க அமெரிக்க மக்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை சமூக அடுக்கில் மேல்நிலைக்குக் கொண்டு வந்திருந்தது. ஒபாமாவை அதிபராக்கியதோடு, கருப்பினத்தைச் சேர்ந்தவர்களை பெரு நிறுவனங்களில் உயர் பதவிகளிலும், அமெரிக்க காவல்துறை, இராணுவம், கல்வி நிலையங்கள் போன்றவற்றில் உயர் பொறுப்புகளிலும் அமர்த்தியது. தற்போது இந்த வர்க்கம் தான் கருப்பின மக்களின் போராட்டங்களை சீர்குலைக்கும் உள்ளடி வேலைகளைஒ பார்த்து வருகின்றது. நாம் நினைப்பது போல அனைத்து கறுப்பின மக்களும் இன்று வெள்ளையின மக்களுடனோ, இல்லை அனைத்து வெள்ளையின மக்களும் கறுப்பின மக்களுடனோ இணைந்து, தோல்வியடைந்த அமெரிக்க அரசிற்கு எதிரான போராட்டத்தை இன்று முன்னெடுக்கவில்லை. இரண்டு தரப்பிலும் உள்ள சாமானிய உழைக்கும் மக்கள்தான் இந்தப் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றார்கள். ஆப்ரிக்க அமெரிக்க மக்களுக்கிடையில் வர்க்க வேறுபாடானது மிகப் பெரிய அளவிற்கு உள்ளது. 2017 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின்படி, ஆப்ரிக்க அமெரிக்க மக்கள் தொகையில் மேல்மட்ட 10 சதவிகிதத்தினர் அனைத்து செல்வங்களிலும் 75 சதவிகிதத்திற்கும் அதிகமானதைக் கட்டுப்படுத்துகின்றனர். அதே நேரத்தில் ஆப்ரிக்க அமெரிக்கர்களில் கீழ்மட்ட 50 சதவிகிதத்தினர் எதிர்மறையான அல்லது எவ்வித செல்வத்தையும் கொண்டிருக்கவில்லை. கறுப்பினத்தைச் சேர்ந்த பராக் ஒபாமாவின் காலத்தில்தான் இந்தச் சமத்துவமின்மை மிகவும் விரைவாக உயர்ந்து, ஆப்ரிக்க அமெரிக்கர்களில் மேல்மட்ட 1 சதவிகிதத்தினர் தங்கள் செல்வத்தின் பங்கை 19.4 இருந்து 40.5 விகிதமாக இரட்டிப்பாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். உலகம் முழுவதும் தொழிலாளி வர்க்கம் ஒன்றுபட்டு விடக்கூடாது என்பதுதான் முதலாளி வர்க்கத்தின் முதன்மையான செயல்திட்டமாகும். அதற்காக அவை பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றன. சாதி, மத, இன வேறுபாடுகளைத் தூண்டி விடுவதோடு, ஒடுக்கப்படும் சமூக அடுக்கில் இருந்து சில குறிப்பிட்ட நபர்களுக்கு உயர்பதவிகளைத் தருவதன் மூலம் அந்த ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும், கருத்தியல் மேலாதிக்கம் செய்வதோடு கீழ்நிலையில் இருந்து உயர் அடுக்கிற்கு நகர்த்தப்பட்ட வர்க்கத்தின் மூலம் ஒடுக்குமுறையின் கொடூரத் தன்மையை மறைக்கவும் அது முயன்று வருகின்றது. ஆனால் நிலைமை எப்போதும் அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை. பூசி மொழுக முடியாத நெருக்கடியை தற்போது முதலாளித்துவம் தொழிலாளர் வர்க்கத்திற்குத் தந்திருக்கின்றது. தாங்கள் வேலையின்றி உணவின்றி அல்லல்படும்போதுகூட அமெரிக்க முதலாளி வர்க்கம் இன்னும் கொடூரமாக சொத்து சேர்ப்பதை சாமானிய மக்கள் பார்த்துக் கொண்டுதான் வருகின்றார்கள். கடந்த மார்ச் மாத மத்தியில் இருந்து, அமெரிக்காவில் பில்லியனர்கள், அவர்களின் மொத்த சொத்து மதிப்பில் 434 பில்லியன் டாலரை சேர்த்துக் கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக, 630 செல்வந்த அமெரிக்கர்கள் இப்போது 3.4 ட்ரில்லியன் டாலர் செல்வ வளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். இது இரண்டு மாதங்களில் 15 சதவீத அதிகரிப்பாகும். அதே போல மார்ச் 23க்குப் பின்னர் டோவ் குறியீடு 48 சதவீதம் அதிகரித்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த நாஸ்டாக் குறியீடு 45 சதவீதம் உயர்ந்துள்ளது. அது இப்போது இந்தாண்டு தொடக்கத்தில் இருந்ததை விட 1000 புள்ளிகள் அதிகமாக உள்ளது.(நன்றி: WSWS). உண்மைப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்க பொருளாதாரத்தில் எந்தப் பங்களிப்பையும் செலுத்தாத பங்குச் சந்தை சார்ந்த சூதாட்டப் பொருளாதாரம் பெரும் ஏற்ற நிலையில் உள்ளது. ஆனால் பங்குச் சந்தை உயர்வும் அதன் மூலம் வர்த்தக சூதாடிகள் தங்களின் சொத்து மதிப்பை உயர்த்திக் கொள்வதும் எந்த வகையிலும் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவாது என்பதைத்தான் இன்று உலகம் முழுவதும் நடைபெற்று வரும் அரசு எதிர்ப்புப் போராட்டங்கள் காட்டுகின்றன. இன்னும் வரும் காலங்கள் மிக மோசமான போராட்டத்தை நோக்கி உலக மக்களை தள்ளப் போகின்றன என்பதுதான் உண்மை. ஐந்து மிகப் பெரிய ஐரோப்பிய பொருளாதாரங்களான பிரிட்டன் 14 சதவீதம், ஸ்பெயின் 11.6 சதவீதம், பிரான்ஸ் 10.3 சதவீதம், இத்தாலி 9.2 சதவீதம் மற்றும் ஜெர்மனி 6.1 சதவீத சுருக்கத்தை சந்திக்கும் என மதிப்பிடப்படுகின்றன. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இந்தாண்டு 5.2 சதவீதம் சுருங்குமென உலக வங்கி முன்கணித்திருக்கின்றது. இதனால் இப்போது நடக்கும் போராட்டங்கள் என்பது மிகப் பெரிய பனிப்பாறையின் நுனி மட்டுமே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையாய் தொழிலாளி வர்க்கம் உலகம் முழுவதும் தயார் நிலையில் உள்ளது. உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் அதன் சொந்த நாடுகளிலேயே கருக்கொண்டுள்ளது. ஏகாதிபத்திய நாடுகளால் சுரண்டப் பெற்ற நாடுகளில் தங்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மயான அமைதி நிலவும் சூழ்நிலையில், அமெரிக்க, ஐரோப்பா போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் பெரும் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. பிற நாடுகளைக் கொள்ளையிடவும், சூறையாடவும் தன்னுடைய நாட்டு மக்களிடம் ஒப்புதல் பெற, தான் சுரண்டும் நாடுகளின் மக்களின் வாழ்க்கைத் தரத்தைவிட ஒரு மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை தன் சொந்த நாட்டு மக்களுக்கு வழக்கமாக ஏகாதிபத்திய நாடுகள் வழங்கி வந்தன. ஆனால் அடுத்தவன் ரத்தத்தில் ஒட்டுண்ணியாக வளரும் முதலாளித்துவம் இன்று தன் சொந்த நாட்டு மக்களைக் கூட காப்பாற்ற முடியாத மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்துள்ளது. அது நினைத்தால் ஒரே நாளில் இதை எல்லாம் மாற்றி அமைக்க முடியும். பெரும் செல்வந்தர்களின் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அனைத்து மக்களையும் காப்பாற்ற முடியும். ஆனால் அது ஒரு போதும் செய்யாது. அரசு என்பது முதலாளிகளால் முதலாளிகளுக்காக ஆளப்படும் வரை இந்த நிலையில் ஒரு போதும் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. அதே போல இன்று பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் மக்களும் தங்களின் போராட்டத்தை கைவிடுவதற்கான எந்தச் சூழ்நிலையும் தற்போதைக்கு இல்லை. ஏகாதிபத்திய நாடுகளின் மக்கள் இன்று அரசியல் விழிப்புணர்வு பெற்று தங்களின் பொது எதிரிக்கு எதிராக ஓரணியில் திரண்டிருக்கின்றார்கள். ஆனால் இந்தப் போராட்டங்கள் எல்லாம் பெரும்பாலும் தன்னெழுச்சியாக நடைபெறும் போராட்டங்களாகவே இருக்கின்றன என்பதுதான் அதன் மிகப்பெரிய பலவீனமாகும். மிகப் பெரும் இராணுவ பலம் பொருந்திய ஏகாதிபத்திய நாடுகளை எதிர்த்து நிற்க வேண்டும் என்றால் நிச்சயம் அந்தப் போராட்டங்கள் அனைத்தும் முதலாளித்துவத்திற்கு எதிரான சித்தாந்தத்தைக் கொண்ட பொதுவுடைமைக் கட்சிகளால் தலைமை அளிக்கப்பட வேண்டும். சித்தாந்த ரீதியான தலைமை இல்லாத, ஒருங்கிணைக்கப்படாத போராட்டங்கள் எல்லாம் நிச்சயம் தோற்றுப் போகும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஏகாதிபத்திய நாடுகளில் மையம் கொண்டுள்ள இந்தப் போராட்டங்கள் நிச்சயம் வளர்த்தெடுக்கப்பட்டு முதலாளித்துவத்தை சவக் குழிக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் இது ஏகாதிபத்திய நாடுகளில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகக் கட்டமைப்பையே மாற்றி அமைக்கும், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாக நிச்சயம் பரிணாம வளர்ச்சி அடையும். பழைய படி உலகை ஆட்சி செய்ய முடியாது என்ற நிலையை உலகம் முழுவதும் முதலாளித்துவமும் அதன் அரசுகளும் வந்தடைந்திருக்கின்றன. இதில் முதலில் முந்திக் கொள்ளும் வர்க்கம் நிச்சயம் தன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும். முதலாளித்துவம் ஏற்கெனவே மக்களின் போராட்டங்களைக் கண்டு மரண பீதியில் உறைந்திருப்பதால் அதைத் தாக்கி வீழ்த்துவதற்கான சரியான நேரம் இதுவே ஆகும். http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/40334-2020-06-13-04-49-07
 24. 1 point
  மடியினுள் சுமத்திரன் எனும் பெருச்சாளியை வைத்துக்கொண்டு கூத்தமைப்பை உடைக்க அரசு புதுசா ஆளை அனுப்புதாம் அறிவென்பதே இல்லையா இவர்களுக்கு ? ஒரு சுமத்திரனை வைத்து கூத்தமைப்பை துவம்சம் பண்ணியாச்சு தமிழ்மக்களின் இனவழிப்பு கதையை அப்படியே அமுக்கி விட்டார்கள் காணமல் போனோர் அப்படி எண்டால் என்ன என்று கேட்க்க வைத்தார்கள் கருணா கருணா என்கிறார்கள் அவரைவிட 100 மடங்கு வேகத்தில் செல்கிறார் சுமத்திரன் . முடிந்தால் என்னை தமிழ் தேசிய கூத்தமைப்பில் இருந்து நீக்கி காட்டுங்கள் என்று ஓப்பனா அந்தாள் கேட்க்கிறார் உங்களால் முடியவில்லை சுமத்திரன் போகமாட்டார் ஏனென்றால் கூட்டமைப்பு முழுமையா உடையாமல் அவர் வெளியில் போகமாட்டார் .
 25. 1 point
  ஒழித்து ஒழித்து செய்வதை விட இது மேல். கலாச்சரம் அது என்றைக்கும் பாதிக்காது, கலாச்சாரத்தை விரும்புவர்கள் அதை நன்றாக பேனி பாதுகாக்கட்டும். ஊருக்கு ஊர் களவாக எத்தனை பிரச்சனைகள் நடக்கின்றது. இதுவும் ஒரு உடல் பசி வியாபாரம், மும்பை / சிங்கபூரின் கலாச்சாரம் பாதிக்கப்பட்டுவிட்டதா? எத்தனை சிறுவர் சிறுமிகளை களவாக கொழும்பில் பலி கொடுக்கின்றார்கள். கல்கிசையில் இரவு நின்று பார்த்தால் தொரியும், எப்படி கொடி கட்டி பறக்கின்றது என்று.
 26. 1 point
  தமிழ் சிறி இது எனது கணவனாரால் எடுக்கப்பட்ட காணொளி. அவருக்கு குறும்படங்கள் தயாரிப்பதில் பலகாலமாக அனுபவம் உண்டு. விவசாய குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ இயல்பாகவே பாரங்களை தூக்க பழகி கொண்டேன்.இதைவிட பாரமான வெங்காய மூட்டையை கூட தூக்கி இருக்கிறேன். அதனால் வாழைக்குலையின் பாரம் பெரிதாக தெரியவில்லை. போன மாதம் வீசிய கடும் காற்றில் முறிக்கப்பட்ட பிஞ்சு வாழைக்குலைகளெல்லாம் இப்போது சந்தைக்கு வந்திருக்கும். இப்போது யாழ்ப்பாணத்தி இரசாயனக்கலவை முறையிலும் பழுக்க வைக்கிறார்கள்.
 27. 1 point
  கற்பகம் ஏன் பாட்டை இடையில் நிறுத்தி விட்டாய் உன் கருத்துக் கடலில் நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே கற்பகம் பாடு கற்பகம் பாடு மார்வாடி கடைகளும் திறந்து எமது கோமணத்தையும் உருவுவார்கள் என பாடு கற்பகம் பாடு......
 28. 1 point
  சிறப்புற நடைபெற்ற அந்தோனியார் பெருவிழா அந்தோனியார் பெருநாளை முன்னிட்டு இன்று (13) வவுனியா – இறம்பைக்குளம், அந்தோனியார் ஆலயத்தில் விசேட திருப்பலி பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றன. மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளில், மட்டுப்படுத்தப்பட்ட கத்தோலிக்கர்களே அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதன்போது ஆயரினால் விசேட நற்கருத்துக்கள் வழங்கப்பட்டதுடன் தற்போதைய சூழல் நீங்கி, மக்கள் சமாதானமானதும் சுதந்திரமானதுமான வாழ்க்கை வாழ பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொண்டார். https://newuthayan.com/சிறப்புற-நடைபெற்ற-அந்தோ/
 29. 1 point
  பொன்மகளும், சில திரைப்பெண்களும்! மின்னம்பலம் நிவேதிதா லூயிஸ் கொரோனா காலத்திலும் மக்களிடம் ஓடிடி பிளாட்ஃபார்ம் மூலம் முதலில் வந்து சேர்ந்திருக்கிறாள் ‘பொன்மகள் வந்தாள்’. பெண் மனத்தை, அவள் போராட்டங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய படங்கள் மிகக் குறைவே. பெண் மனது எப்படி இயங்குகிறது என்பதையும் ஆண்களே இங்கே எழுதி இயக்கியிருக்கிறார்கள்.’பொன்மகள் வந்தாள்’ அப்படியான ஒரு படம் என்றே பரவலாகப் பேசிக்கொள்ளப்படுகிறது. ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் சக்தி ஜோதியின் ‘தாய்’ ஒருகட்டத்தில் நமக்கு அறிமுகம் செய்யப்படுகிறார். மகள் காதல் திருமணம் செய்துகொண்டு போனபின் அவளைப் பற்றிய எல்லா ஆவணங்களையும் ஆத்திரத்தில் ‘எரித்து’ விட்டதாகக் கூறி, தன் மகள் வயிற்றுப் பேத்தி உயிருடன் இருப்பதுகூட அறியாத அப்பாவியாக அழுது அரற்றுகிறார். இது போன்ற ‘தாய்மை’யைத்தான் நம் சமூகம் கொண்டாடித் தீர்க்கிறது. ஆண் கிழித்த கோட்டின் வரையறைக்குள் வாழ்வதுதான் பெருமை என்று கற்பிக்கப்பட்ட பெண்கள் இவர்கள். ‘ஐடியல்’ அம்மாக்கள்! ஆனால், இந்த அம்மா பாத்திரத்துக்கு சவால் விடும் பெண்ணிய அம்மா கதாபாத்திரம் ஒன்றை 40 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமா பார்த்திருக்கிறது, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில்! கங்கா என்ற கல்லூரி மாணவி மழை நாள் ஒன்றில் முகமறியாத ஆண் ஒருவனால் கெடுக்கப்பட்டு வீட்டுக்கு வர, அவரது தாய் நிஜத்தில் குழம்பி, புலம்பி, ஊரைக் கூட்டி, மகள் மேல் தான் தவறு இருப்பது போல நடந்து கொள்கிறாள். இதனால் அப்பாவியான கங்கா வீட்டை விட்டு அவளது அண்ணன் குடும்பத்தால் விரட்டப்பட்டு, மாமா ஒருவரிடம் அம்மாவின் அறிவுரைப்படி தஞ்சமடைகிறாள். படிப்பை எந்தச் சூழலிலும் கைவிடாத கங்காவைப் படிப்பு காப்பாற்றுகிறது. படித்த உடன் அலுவலகம் ஒன்றில் நல்ல வேலையும் கிடைக்க, தாயை தன்னுடன் அழைத்துக் கொள்கிறாள். அலுவலகத்திலிருந்து டாக்ஸியில் ஒரு நாள் மாலை வீடு திரும்பும் வழியில் பத்திரிகை ஒன்றில் ‘அக்கினிப் பிரவேசம்’ என்ற கதையைப் படிக்கிறாள். அப்படியே அவள் வாழ்க்கையில் நடந்த கதை தான் அது. ஆனால், ஒரு சின்ன திருப்பம். அதில் தாயாய் வரும் பெண் பாத்திரம், தனக்கு நேர்ந்ததை மகள் தனிமையில் சொன்னதும், கதவைச் சாத்திவிட்டு அவளை நெஞ்சோடு அணைத்துத் தேற்றுகிறது. மகளை அமரவைத்து தலைக்கு நீரூற்றி, தலை துவட்டி, “நீ சுத்தமாய்ட்டடி குழந்தை, தலைல நான் கொட்டினேனே, அது ஜலமில்லடி குழந்தை, நெருப்புன்னு நினைச்சிக்கோ. வாழை ஆடினாலும் வாழைக்குத்தான் சேதம், முள் ஆடினாலும் வாழைக்குத்தான் சேதம். நான் சொல்றதை நம்பு குழந்தே… உனக்கு ஒண்ணும் நடக்கல, இது சத்தியம். தெருவுல நடந்து போறோம். கால்ல அசிங்கம் பட்டுடறது, காலையா வெட்டிப் போட்டுடறோம்? அதே காலைக் கழுவிண்டு பூஜையறைக்கும் போறோமே? சாமி வேண்டாம்னா விரட்டறார்? எல்லாம் மனசு தாண்டியம்மா காரணம்” என்று தேற்றி, அவளது நெற்றியில் விபூதியிட்டு துணிவு சொல்கிறாள் அந்தத் தாய். முத்தாய்ப்பாக, “இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணிக்குடுடி” என்று மகளிடம் சத்தியமும் கேட்டுப் பெறுகிறாள் அந்தத் தாய். கங்காவை அரவணைக்கும் தாய், சில நேரங்களில் சில மனிதர்கள் இன்று எத்தனை தாய்மார்களால் இப்படி ஒரு சூழலை இத்தனை லகுவாகக் கையாள முடியும்? 40 வருடங்களுக்கு முன் இப்படி ஒரு கதாபாத்திரத்தைப் படைத்ததாக ஜெயகாந்தன் தன் கதையில் அறிமுகம் செய்யும் லைப்ரரியனாக வருகிறார் நடிகர் நாகேஷ். கங்காவுக்கு நேர்வதை நேரில் கண்டும் காப்பாற்ற வழியற்றுப் போகும் அவரது கல்லூரி லைப்ரரியன் மற்றும் எழுத்தாளரான ஆர்.கே. விஸ்வநாத சர்மா (நாகேஷ்), அவரை அதன்பின் காணாமல் தேடியலைகிறார். வீட்டை விட்டு விரட்டப்பட்ட கங்காவை நினைத்து மனம் வருந்தும் ஆர்.கே.வி, அவரைப் பற்றி ‘அக்கினிப் பிரவேசம்’ கதையை எழுதி பதிப்பிக்கிறார். மிக எளிய வாழ்க்கை வாழும் ஆர்.கே. விஸ்வநாதன், தன் மனைவியை எழுதத்தூண்டும் முற்போக்குவாதி. உரத்த சிந்தனையாளர். கங்காவுக்கு நேர்ந்ததை வெளிக்கொணர்கிறார். கங்காவின் வயதொத்த பெண் குழந்தைகளுக்கு நம்பிக்கை விதைக்கிறார். மகளிர் கல்லூரி ஒன்றில் மாணவிகள் மத்தியில் ஆர்.கே.வி முன்வைக்கும் கருத்துகளை இன்றையப் பெண்ணியவாதிகள்கூட சொல்ல சற்றே தயங்குவார்கள். “தவறு செய்த பெண்களை தாய்மார்கள் மறைத்துப் பாதுகாப்பது என்பது ஒழுக்கக்கேட்டை பிரச்சாரம் செய்வதல்லவா?” என்று கூட்டத்தில் ஒரு கல்லூரி மாணவி கேள்வியெழுப்ப, அதற்கு ஆர்.கே.வியிடமிருந்து சுருக்கெனப் பதில் வருகிறது. “ஒரு வேசியை ஊர் மக்கள் கல்லால் அடித்தார்கள். உங்களில் யார் பாவம் செய்யாதவரோ, அவர் இவள் மீது முதல் கல்லை எறியட்டும் என்று சொன்ன தேவதூதன், ஒழுக்கக்கேட்டையா பிரச்சாரம் செய்தான்? வகுப்புக் கலவரங்களின் போது பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண்களை மணந்து கொள்ளுங்கள் என்று இளைஞர்களுக்குக் கட்டளையிட்டார் ஒரு தேசத்தின் பிதா. அதுவும் அப்படிப்பட்ட பிரச்சாரம் தானோ?” “அகலிகை எங்கே, இந்த அசடு எங்கே என்று கேட்கிறீர்களா? அகலிகை ஒரு ரிஷிபத்தினி. வேதகாலத்து ரிஷிபத்தினியே ஒரு இந்திரனின் மாயத்துக்கு மயங்கிவிட முடியுமென்றால், எனது ‘அவள்’ இந்தக் கலிகாலத்தில் சோரமே ஒரு தொழிலாகிப் போன சூழ்நிலையில், கலை, இலக்கியம், சினிமா, நாடகம், சங்கீதம், பத்திரிகை என்ற பெயரால் சகல அழுக்குகளும் விலை போகுமளவுக்கு நமது இனமே வீழ்ந்து கிடக்கும் இந்த இருபதாம் நூற்றாண்டில், எனது ‘அவள்’ மயங்கிவிட்டது மன்னிக்க முடியாத குற்றமோ? அந்த அகலிகைக்கே சாப விமோசனம் உண்டென்றால், எனது ‘அவளுக்குக் கிடையாதோ?... வாழ்க்கை இலக்கியம் போலவே நமது வசதிக்காக, நமக்குப் பிடித்தது போலவே நின்றுவிடுவதில்லை” என்று தாயுமானவனாகி விசுவரூபம் எடுக்கிறார். சில நேரங்களில் சில மனிதர்கள்- எழுத்தாளர் ஆர்.கே.வி. உண்மையில் கங்காவின் தாய் அவள் தாயல்ல. ஆர்.கே.வி தான் அவளது தாயாக நம் முன் நியாயம் கேட்கிறார். இந்த இடத்தில் தான் தவறிப் போகிறார் ‘பொன்மகள் வந்தாள்’ ஜோதியின் தாய். மகளைக் காத்து அரவணைக்க வேண்டிய தாய், ஆணவக் கொலையில் ஈடுபடும் குடும்பத்தின் சொல்லுக்கேற்ப மகளின் கடைசிச் சுவட்டைக்கூட அழித்தொழிப்பது என்ன வகை பாசம்? பத்து மாதம் சுமந்து ஈன்றெடுத்த மகளை தாயே உடைமையாகவும், அவளது பெண்மையை சாதியின் சின்னமாகவும் பார்ப்பது எவ்வளவு பெரிய அவலம்? ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ ஆர்.கே.வி. போல கணவனை இழந்த ஜோதிக்கு ஆதரவாக வந்து நிற்கிறார் ‘பெட்டிஷன்’ பெத்துராஜ் (இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ்). பாக்யராஜ் இது போன்ற பெண்ணிய சிந்தனை கொண்ட கதாபாத்திரத்தை ஏற்கனவே ‘விதி’ படத்தில் அருமையாகச் செய்திருப்பார். 1980களில் ‘விதி’ திரைப்படம் ஒரு பெரிய ‘கல்ட் கிளாசிக்’. சிற்றூர்களின் தேநீர்க்கடைகளில் அப்போது பாடல்களை விட, விதி படத்தின் கோர்ட் சீன்கள் தான் மீண்டும் மீண்டும் ‘ஒன்ஸ் மோர்’ கேட்டு ஒலிபரப்பப்படும். அந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரமான வக்கீல் ‘சகுந்தலாதேவி’ (சுஜாதாவின் அட்டகாச பர்ஃபார்மன்ஸ் இந்தப் படத்தில் உண்டு) ஒரு தலைமுறைப் பெண்களுக்கு வழக்கறிஞர் படிப்பைத் தேர்ந்தெடுக்க பெரும் இன்ஸ்பிரேஷன். சிறு கதாபாத்திரம் என்றாலும் ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் போஸ்ட்மேனாக நடித்து இயக்கிக்கொண்டே ‘விதி’ நாயகி ராதா (பூர்ணிமா) பற்றி பெண் நிருபர் ஒருவருக்குப் பேட்டி தருவார் டைரக்டர் பாக்யராஜாக நடிக்கும் பாக்யராஜ். இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் கேட்காத கேள்வியாக ஆலமரத்தடிப் பஞ்சாயத்து ஒன்றில் “யாராவது ஒரு பத்தினி பெயர் சொல்லுங்க, நம்ம நாட்டுல நிறைய பத்தினி இருக்காங்கல்ல? அவங்க பேரைச் சொல்லுங்க?” என்று அவர் கேட்க, “கண்ணகி, சீதை, நளாயினி, சாவித்திரி, சதி அனுசுயா, மீராபாய்” என்று அத்தனை கற்பனைக் கதாபாத்திரங்களின் பெயர்களையும் ‘ஊர்ப் பெருசுகள்’ சொல்வார்கள். “பத்தினின்னு சொன்னதும் இத்தனை பேரைச் சொன்னீங்கல்ல? யாராவது ஒருத்தராவது உங்கம்மா பேரு, இல்ல உங்க சம்சாரத்துப் பேரைச் சொன்னீங்களா?” என்று நச்சென்று கேட்பார். “உங்கம்மா பத்தினி இல்லையா, இல்ல உங்க சம்சாரம் பத்தினி இல்லையா? உங்கம்மா மேல, உங்க சம்சாரத்து மேலேயே உங்களுக்கு நம்பிக்கை இல்ல, தான் எந்த தப்பும் செய்யலைன்னு இந்தப் பொண்ணு சொல்றதை எப்படி நம்பப் போறீங்க?” என்று விளாசுவார். இதுதான் உண்மை, எங்கோ புராணங்களில் கேட்ட பெண்களை கற்புக்கரசியாக, தெய்வமாகப் பார்க்கும் ஆண், தன்னை ஈன்றெடுத்து, ரத்தத்தைப் பாலாக்கி ஊட்டி வளர்த்த அன்னையையோ, தன் உயிர், உடல் மூச்சு என்று அனைத்திலும் பாதியாகிய மனைவியையோ, தான் தோளிலும் மார்பிலும் போட்டு வளர்த்தெடுத்த மகளையோ ஒரு நொடிகூட நம்புவதில்லை, அவளது ‘கற்பை’ கேள்விக்குட்படுத்தும் முதல் ஆண் - வீட்டிலுள்ள ஆண்தான். மகனோ, கணவனோ, தந்தையோ, ஆண் யாராக இருப்பினும், கற்பு என்று வந்துவிட்டால் சொந்த ரத்தத்தையும் சந்தேகிக்கிறான். ஆனால் இந்த ‘கற்பு’ என்ற வரையறைக்குள் ஆண் வருவதேயில்லை!பாக்யராஜ் நடித்த காட்சி- விதி இப்படி ஒரு காட்சியில் நடிகராகவும் இயக்குநராகவும் கலக்கும் பாக்யராஜ், அடுத்த காட்சியிலேயே, வேஷம் கலைத்த பாக்யராஜாகப் பேட்டி எடுக்கும் பெண்ணிடம், “ராதாவுக்கு வெற்றிங்கறது இந்த கேஸோட தீர்ப்பை மட்டும் வெச்சு கிடச்சுறப் போறதில்ல, என்னிக்காவது ஒரு நாள் அந்த ராஜா திருந்தி, இவகிட்ட மன்னிப்பு கேட்டு மனைவியா ஏத்துக்கணும். அன்னிக்குத் தான் உண்மையிலேயே அவ ஜெயிச்ச மாதிரி. பூட்டும், சாவியும் தனித்தனியா இருந்தா யாருக்கு என்ன புண்ணியம்? அது ரெண்டும் ஒண்ணா சேர்ந்தாத்தானே வீட்டுக்குப் பாதுகாப்பு? ராதாவுக்காக இல்லைன்னாலும் அவ வயித்துல ஒரு குழந்தை இருக்கு, நாளைக்கு ஒரு அப்பா பேரு அதுக்கு அவசியமா தேவைப்படுது. அதுக்காகத்தான் அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேரணும்னு ஆசைப்படுறேன்” என்று ஆலமரத்தடி பஞ்சாயத்தில் வாங்கிய நல்ல பெயரை எல்லாம் நம்மிடம் கோட்டை விடுகிறார். இந்த ‘கெடுத்தவன் தான் கெட்டவளைக் கட்டிக்கணும்’ என்பதை தமிழ் சினிமா ஆதிகாலம் முதலாக வலியுறுத்தி வந்திருக்கிறது. விதி படத்தில் பாக்யராஜ் பாக்யராஜும் அதற்கு விதிவிலக்கல்ல. சம்பந்தப்பட்ட பெண் இந்தத் தாக்குதலால் எந்தவிதமான உளவியல் மற்றும் உடல் சார்ந்த சிக்கல்களை அனுபவித்துக் கொண்டிருப்பாள் என்பதை ஆணாதிக்க மனங்கள் ஒரு நொடி கூட சிந்திப்பதில்லை. தேவையற்ற கர்ப்பம் தொடங்கி, மனச்சிதைவு வரை வாழ்க்கை முழுக்க பெண்களுக்கு இந்த பாலியல் துன்புறுத்தல்கள் பெரும் ரணம். அதைக் கொஞ்சமும் உணராதது தமிழ்ச் சமூகச் சூழல். இந்த ஒரே ‘கெட்டவளை கெடுத்தவன் கட்டிக்கும்’ சென்டிமென்ட் கொண்டு தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஹிட் படமான ‘புதிய பாதை’யைக் கொடுத்த இயக்குநர் ஆர். பார்த்திபனும் ‘முற்போக்கு’ சிந்தனையாளர் என்று அறியப்படுவதுதான் வேடிக்கை. இவரும் பாக்யராஜின் சீடர் என்பது கூடுதல் தகவல். ஆச்சரியம் என்னவென்றால், விதி படத்தின் டைகர் தயாநிதி (ஜெய்சங்கரின் மெமரபிள் ரோல் இது!) வழக்கறிஞர் பாத்திரத்தை ஒத்த பாத்திரம் பொன்மகள் வந்தாள் படத்தில் பார்த்திபனுக்கு உண்டு. அவர் கதையை அடுத்து பார்க்கலாம். “கட்டிப் பிடிக்கும்போது ஆம்பளையும் பொம்பளையும் ஒண்ணா சேந்துதான் கட்டிப்பிடிக்கிறோம், ஆனா கற்புன்னு வரும்போது ஆம்பளை மட்டும் காணாமப் போய்டுறான். என்னிக்கு அந்தக் கட்டுப்பாட்டுக்குள்ள அவனும் வர்றானோ அன்னிக்குத்தான் இந்த (பாலியல் வன்முறை) பிரச்சினை தீரும்” என்று விதி படத்தில் பிரச்சாரம் செய்கிறார் பாக்யராஜ். அதே எதிர்பார்ப்புடன் 40 ஆண்டுகளுக்குப் பிந்தைய பாக்யராஜ் கேரக்டர், துணிவுடன் ஜோதியையும், அவள் மகள் வெண்பாவையும் தூக்கி நிறுத்தும் என்று எதிர்பார்த்தால்… பெரும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. டீக்குள் விழுந்த ஈக்காக டீக்கடைக்காரனுக்கு சட்டப்படி தண்டனை வாங்கித்தரும் ‘போராளி’ பெத்துராஜ் (பாக்யராஜ்) தன் கண்முன் அழிந்துபோன ஜோதி குடும்பத்துக்கு உடனடியாக நியாயம் வாங்கித்தராமல் 15 ஆண்டுகள் ஹாயாக வெண்பா படித்து முடித்து வக்கீல் கோட் மாட்டும் வரை சும்மா இருக்கிறார். கோர்ட்டில் நீதிபதியை ‘மாமி’ என்று அழைப்பதிலும், பொய் சாட்சி சொல்ல வருபவனுக்கு ரூபாய் நோட்டைத் தூக்கிக் காண்பிக்கும் அறமற்ற செயலிலும் நம்மை நொந்து போக வைக்கிறார். ‘விதி’ பாக்யராஜை விட நூறு ஆண்டுகள் பின் தங்கிவிட்டிருக்கிறார். சோ சேட்! படத்தில் பிராசிக்யூஷன் தரப்பு வக்கீலாகப் பணமும், செல்வாக்கும் படைத்த தியாகராஜனால் ‘கொண்டுவரப்படுகிறார்’ பார்த்திபன். என்னவோ செய்யப்போகிறார் போல என்று பார்த்தால், கொஞ்சம்கூட மூச்சிரைக்காமல் ஷட்டில் ஆடுகிறார். கோர்ட்டில் வாதிடுவதிலாவது ஆர்வத்தைத் தக்கவைப்பார் என்று பார்த்தால் ம்ம்ஹூம்ம்ம்… ஒன்றுமில்லை. படத்தின் இறுதிக் காட்சியில் வெள்ளைப் பேப்பரில் “றெக்கை” வரைந்து ஏஞ்சலை அடையாளம் கண்டுகொள்கிறார். பெண்ணுக்கு இப்படி பறக்கச் சுதந்திரம் தருவதாகச் சொல்லிக்கொள்ளும் பலர் வெற்றுப் பேப்பரில் பெண்ணைப் பறக்கவிடுபவர்கள்தான் போல. படத்தில் 80களின் ஃபீலுக்காக பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என்று ஓய்வு பெற்ற நடிகர், இயக்குநர் கூட்டமே உண்டு. பாண்டியராஜன் பாவம். பிரதாப்புக்கு எடுபிடியாகவே படத்தில் ஒட்டிக்கொண்டு வருகிறார். படத்தின் மிகப்பெரிய அபத்தம் கோர்ட் காட்சிகள். நீதிபதி முன்பே நின்றுகொண்டு உள்ளாடைகளைப் பற்றி நையாண்டி செய்யும் வழக்கறிஞர் தோன்றும் காட்சி எல்லாம் சொதப்பல். படத்தின் பெரும் பலமும் பலவீனமும் ஜோ. பலம் - அவரது நடிப்பு. பலவீனம் - அவரை ‘தமிழ்’ப்படுத்த வேண்டிய கட்டாயம் + அவரது துன்பத்தில் உழலும் கதாபாத்திரம். இரண்டாவது இன்னிங்க்ஸில் ஜோ நடிக்கும் படங்கள் எல்லாமே அவரை ஒரு ‘சூப்பர் ஹீரோ’ பெட்டிக்குள் அடைக்கப்பார்க்கும் இயந்திரங்கள் தான். 36 வயதினிலே தொடங்கி ராட்சசி வரை இந்த டிரெண்டு தொடர்கிறது. ஒன்பது கோடி ரூபாய் செலவு செய்து ஜோ (சக்திஜோதி) மதுரைப்பெண் என்று ‘ரிஜிஸ்டர்’ செய்யும் அரசியல் நமக்குப் புரியாமல் இல்லை. அரசியல் காய்களை அழகாக நகர்த்திக்கொண்டிருக்கிறார் சூர்யா. ஆனால் ரசிகன் தான் பாவம். வட இந்தியப் பெண் ஜோதி என்று கதையில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. பெத்துராஜின் வீட்டருகில் வசிக்கும் ஜோதி அழகாகத் தமிழ் பேசுகிறார், கடைக்குச் செல்கையில், அக்கம்பக்கத்தினருடன் என்று யாரிடமும் அவர் பேசாமல் இருந்திருக்கப் போவதில்லை என்பதால், அவர் சிறுமிகளைக் கொலை செய்த வட இந்தியப் பெண் என்று அக்கம்பக்கத்தினர் அனைவரும் ஒன்று போல சொல்வது எப்படி சாத்தியம்? ஜோதியின் டைரி ஒன்றை மட்டுமே கையில் வைத்துக்கொண்டு ஆதாரம் என்று பாதிப்படம் வரை நகர்த்துகிறார் வெண்பா (ஜோ). அதை வாசிக்கிறார், அதில் என்ன இருக்கிறது, என்ன உள்வாங்கிக் கொள்கிறார் என்பது உண்மையில் நமக்குப் புரியவில்லை. “15 ஆண்டுகளாக இதற்குத்தான் காத்திருந்தேன்” என்று சொல்லி, தன் தாயைக் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வருகிறார் வெண்பா. ஆனால், அதற்கான ஆயத்தப் பணிகள் எதையுமே செய்யாமல் நேரடியாக பெத்துராஜுடன் ஆட்டோவில் வந்து முதல் கேஸை எடுத்து ‘படுவிவரமாக’ வாதாடுவது நம்பும்படி இல்லை. தாய்க்காக இவ்வளவு சீறும் வெண்பா கதாபாத்திரம், இதுபோன்று அன்றாடம் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை எப்படி எளிதாகக் கடந்து வந்தார்? பணபலமும், அரசியல் பலமும், செல்வாக்கும் கொண்ட பிரமாண்ட வில்லன்கள்தான் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் இது போன்ற கதைகளில் சித்திரிக்கப்படுகிறார்கள். பாலியல் குற்றமிழைப்பது இதுபோன்ற பின்புலம் கொண்ட ‘பெரிய’ ஆள்கள், அவர்களது மகன்கள் என்று காலங்காலமாக இங்கு கற்பிக்கப்படுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை? கதையில் சொல்லப்படுவது போல சின்னஞ்சிறு பிஞ்சுகளை இப்படிக்கையாள்வது உண்மையில் யாரென்றே தெரியாத அயல் மனிதர்களா? அவர்களது சதவிகிதம் அதிகமா அல்லது வீடுகளுக்குள் பசுத்தோல் போர்த்திய புலிகள் போல வலம் வரும் மாமன், சிற்றப்பன், பெரியப்பன், தாத்தன், நண்பன், ஆசிரியர் என்று சிறுமிகள் அன்றாடம் அறிந்து, தெரிந்து பழகிக்கொண்டிருக்கும் முகங்களா? உங்கள் வீட்டுப் பெண்களிடம் பொறுமையாக அணுகிக்கேட்டுப் பாருங்கள் - இது போன்ற பாலியல் சீண்டல்களை எந்த வயதில் முதன்முறையாக எதிர்கொண்டார்கள், எப்படி எதிர்கொண்டார்கள், அவர்கள் குற்றவாளிகளை வீடுகளில் அம்பலப்படுத்தினார்களா, ஆம் என்றால் வீடும் குடும்பமும் அதை எவ்வாறு எதிர்கொண்டது என்று கேளுங்கள். பெண்கள் இக்கட்டுரையை வாசித்துக்கொண்டிருந்தால், உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். பாலியல் சீண்டலை உறவுக்கார அல்லது அறிந்த ஆணிடம் சந்திக்கவில்லை என்று சொன்னால், நீங்கள் உண்மையைச் சொல்லவில்லை அல்லது சொல்ல விரும்பவில்லை, அந்தக் கொடூர பிற்காலத்தை திரும்பிக்கூடப் பார்க்க விரும்பவில்லை என்றே பொருள்! இப்படியான காமக் கிறுக்குகளை எப்படிக் கையாள்கிறார்கள் பெண்கள்? மீண்டும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்துக்கே போவோம். ‘கெட்டுப் போன’ கங்காவைப் படிக்க வைக்கும் உறவுக்கார மாமா - பல்போன கிழவன் (ஓய்.ஜி. பார்த்தசாரதி), கிடைக்கும் சந்தர்ப்பத்திலெல்லாம் அவளிடம் தன் வேலையைக் காட்டுகிறான். வீட்டில் மனைவி இருக்கும்போதே, மகள் வயதையொத்த கங்காவை, அவள் பார்வை படும்போதே சீண்டிக்கொண்டிருக்கிறான். “நீ கெட்டுப்போனவள். யூ கேன் ஒன்லி பி அ கான்குபைன். நீ ஏன் என்னுடைய வைப்பாட்டியாக வாழக்கூடாது?” என்று நிர்பந்திக்கிறான். ஆட்டுக்குட்டியை ஆசையாய் வளர்த்து அதன் கழுத்தில் மாலையிட்டு கழுத்தில் கத்தி வைப்பவனுக்கும், இந்த மாமாவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. கூடவே “முடிந்தால் அவளைக் கெடுத்தவனைக் கொண்டுவந்து நம் கண்முன் நிறுத்தி வாழட்டும், பார்ப்போம்” என்று அவன் சவால்விட, கங்காவின் வாழ்க்கை தடம் மாறிப்போகிறது. ஆனால் மீண்டும் மீண்டும் சீண்டும் மாமாவை, கையில் பெல்ட்டை எடுத்து ஒரு நாள் கங்கா விளாச, பம்மிக்கொண்டுவிடுகிறான். மாமாவை சமாளிக்கும் கங்கா- சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படி பெல்ட்டையும், கத்தியையும், செருப்பையும் கையில் சிறுவயதில் எடுத்த சிறுமிகளை உலகம் அறியவில்லை என்பதே நிஜம். குடும்பம் இந்தச் சீண்டல்களை, “மாமா பத்தி அப்படில்லாம் பேசாத... சே சே, பெரியப்பா அப்படி எல்லாம் இல்லை... நீ பெரியவங்ககிட்ட மரியாதையா நடந்துக்க” என்று சொல்லி குழந்தைகளின் வாயை எத்தனை முறை அடைக்கிறது? “வேன் டிரைவர் அங்கிள் கிட்ட ஜாக்கிரதையா இரு, வாட்ச் மேன் பக்கம் போகாதே” என்று தெளிவாக சொல்லித்தரும் எத்தனை அம்மாக்கள், “மாமாவோ, சித்தப்பாவோ, பெரியப்பாவோ, அண்ணனோ, யாரோ… யாராக இருந்தாலும் உன்னை தேவையில்லாத இடத்தில் தொடவிடாதே” என்று சொல்கிறோமா? இதிலும் வர்க்க பேதம் எப்படி சாமர்த்தியமாக நுழைந்து கொள்கிறது? இப்படி சிறுவயதில் பாதிப்புக்குள்ளாகும் குழந்தை வளர்ந்து எப்படியான வாழ்க்கையை வாழ்கிறது என்பதற்கு மோசமான உதாரணம், 80களின் இன்னொரு ஹிட் படமான ‘அவள் அப்படித்தான்’ கதாநாயகி மஞ்சு (ஸ்ரீப்ரியா). சிறு வயதில் தாய் தகாத உறவு கொள்வதைப் பார்ப்பது, மாமாவால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவது என்று சிதைக்கப்பட்ட பால்யம் ஒரு பெண்ணை ‘உணர்வு ஊனமாக்கி’ விடுகிறது. அவளால் பிறிதொரு காதல் வயப்பட முடிவதேயில்லை. அவளால் யாரையும் எளிதில் நம்ப முடிவதில்லை. ரத்தமும் சதையுமாய் துள்ளத் துடிக்கக் கொல்வது மட்டும் கொலையல்ல. சக மனிதன் மேலான நம்பிக்கை என்ற பெரும் உணர்வைக் கொல்வதும் கொலைதான். பெண்ணுக்கு அந்த நம்பிக்கை சிதையும்போது அவள் தனி மரமாக நிற்கிறாள் அல்லது உள்ளுக்குள் ஊனமாகிப் போகிறாள். அவள் அப்படித்தான்- மஞ்சு, அருண் ‘அவள் அப்படித்தான்’ படத்தில் மஞ்சுவின் மேல் தீராக்காதல் கொண்டு அவளைத் தாங்கிப்பிடிக்கும் அருண் (கமல்ஹாசன்) கதாபாத்திரம் அருமையான படைப்பு. படத்தில் பெண்களைக் கருணையுடன், உள்ளார்ந்த அன்புடன் அணுகும் குறும்பட இயக்குநர் கதாபாத்திரம் அருண். உண்மையில் புரட்சிகரமானவன் அருண். “வாட் டு யூ திங்க் அபவுட் பிரீமரைட்டல் செக்ஸ் அண்டு லீகலைஸ்ட் அபார்ஷன்?” என்ற கேள்வியைக் கையில் கேமரா, மைக் சகிதமாக இளம்பெண்கள் சிலரிடம் கேட்கிறான் அருண். (இது உண்மையில் இயக்குநர் சி. ருத்ரையாவால், பொது மக்களிடம் கேட்டு பதில் பெறும் டாகுமென்டரி போல இயல்பாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும்!) 1978ஆம் ஆண்டு வெளிவந்த படம் இது என்பது நமக்கு கொஞ்சம் திக் தான்! அந்தக் கூட்டத்தில் ஒரு பெண் துணிச்சலாக கேமராவில் முகம் காட்டி, “ஐ அக்ரீ வித் லீகலைஸ்ட் அபார்ஷன்” என்று சொல்கிறாள். இன்னொரு பெண், “ப்ரீ மரைட்டல் செக்ஸ் டிப்பெண்ட்ஸ் வேர் யு ஆர், இன் இண்டியா இட் இஸ் நாட் அக்செப்டட்” என்று பட்டென உடைத்துப் பேசுகிறார். அங்கு யாராவது அரசியல் கட்சியைச் சேர்ந்த பெண்கள் இருக்கிறார்களா என்று கேட்கிறான் அருண். ஒருமித்த குரலில் நோ என்று பதில் வருகிறது. அரசியலில் யாருக்கும் நம்பிக்கை இல்லையா அல்லது அதில் ஈடுபாடு இல்லையா என்று கேட்கிறான். “அதைப்பத்தி இந்த வயசுல நமக்கு எதுவும் தெரியாதே, இந்த வயசில வீ ஆர் நாட் பாதர்ட் அபவுட் தட்” என்று ஒரு பெண் பதில் சொல்கிறார். இந்தப் பெண்கள் அரசியல் பற்றி தெரியாதே என்று சொல்லிக்கொண்டிருந்த வேளையில், இந்தியாவையே எமர்ஜென்சியில் ஆட்டிப்படைத்துவிட்டு, பிரதமர் பதவிக்கு வியூகம் வகுத்துக் கொண்டிருந்தார் இந்திரா காந்தி. அடுத்த காட்சியில் மிகச் சாதாரணத் தோற்றமளிக்கும் நடுத்தர வயதுப் பெண்களுடன் அருணின் கேமரா உரையாடல் தொடர்கிறது. “உங்க கொள்ளுப் பாட்டி, பாட்டி காலத்தில்தான் அவங்களுக்கு ஓட்டுப் போட உரிமை வந்திருக்கு, இப்ப தான் பொம்பளைங்களுக்கு சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமா கிடைச்சிருக்கு. வேலைக்குப் போறாங்க. அதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க, நல்லதா கெட்டதா?” என்ற அருணின் கேள்விக்கு, “நல்லது தான்” என்று பதில் வருகிறது. “நீங்கல்லாம் அடிமைகளாகவே இருந்திருக்கீங்க... உங்க தொழிலையும் எதையும் சொல்லல, ஆம்பளைங்க தான் பெருசா இருந்திருக்காங்க. நீங்க அவங்களுக்கு குழந்தைங்க பெத்துக்குடுக்குற மெஷினாத்தான் இருந்திருக்கீங்க. அதைப்பத்தி உங்களுக்கு என்ன தோணுது?” வெகு அழகாக இந்தக் கேள்வியை முன்வைக்கிறது அருண் கதாபாத்திரம். “பொம்பளைங்க கார் ஓட்றாங்க, ப்ளேன் ஓட்றாங்க. ஆபீஸ் போறாங்க. கைநிறைய சம்பாதிக்கிறாங்க...” என்று ஒரு பெண் சொல்லிக்கொண்டிருக்கும்போதே இன்னொரு பெண் இடைவெட்டுகிறார். “பேன்ட் போடுறாங்க, சர்ட் போடுறாங்க, ரோட்ல சுதந்திரமா போறாங்க” என்று விமர்சிக்கிறார். அது நல்லதா கெட்டதா என்ற அருணின் கேள்விக்கு அங்கு சண்டை மூள்கிறது. “பொம்பளைன்னா புடவை கட்டிக்கணும்” என்று ஒருவர் சொல்ல, அடுத்தவர், “அப்ப பொம்பளைன்னா வேலைக்குப் போவாத, சம்பாதிக்காத அடுப்பூதிட்டே இருக்கணுமா? ஒண்ணுமே தெரியாத இருப்பியா? உத்தியோகத்துக்கு போனா நல்ல பழக்கவழக்கங்களை கத்துக்கலாம்” என்று சீறுகிறார். ஆண்கள் மது அருந்துவதையும், பலதார மணம் புரிவதையும் பற்றிய கருத்தை அருண் கேட்கிறார். இதையெல்லாம் ஆண்கள் செய்யும்போது, இதை பெண்களாகிய தாங்கள் ஏன் செய்யக் கூடாது என்று அவர்களுக்குத் தோன்றியதுண்டா என்று கேட்கிறார். இதற்கு ஒருமித்த குரலில், “ஆமாம் தோணும், கண்டிப்பா தோணும், அப்பல்லாம் தலையெழுத்தேன்னு அடக்கிட்டு இருப்போம்” என்று சொல்கிறார்கள். குடும்பக்கட்டுப்பாடு பற்றிய கேள்விக்கு, நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால், அவர்களை வளர்த்தெடுப்பது சிரமம் என்பதால், அது தேவை என்று சொல்கிறார்கள். “பர்தா பற்றி என்ன நினைக்கிறீர்கள்? செல்லஃபன் போட்டு பெண்ணை மூடிவைப்பது போல இல்லையா?” என்ற கேள்விக்கு, “நோ, இட் இஸ் நாட் கன்டின்யூயிங் ஐ சப்போஸ்” என்று ஒரு சேலை கட்டிய, பொட்டிட்ட பெண் பதில் சொல்கிறார். கேமரா நகர்ந்து இஸ்லாமிய ஆண் ஒருவரது முதுகுக்குப் பின் ஒளிந்து கொள்ளும் பர்தா அணிந்த பெண்ணை எட்டிப் பார்க்க முயன்று தோற்கிறது. அந்தப் பெண்ணிடமிருந்து வெறும் மௌனம் மட்டுமே பதிலாகக் கிடைக்கிறது. அவள் அப்படித்தான் கிளைமாக்ஸ் காட்சி “பன்னீர்ப் புஷ்பங்களே… பாஞ்சாலி வாழ்ந்த பரிதாப வாழ்வை பாராட்ட யாருமில்லை நிஜ வாழ்க்கையிலே” என்று அந்தப் படத்தில் பாடும் முற்போக்குவாதி அருண், அப்பாவிடமிருந்து வரும் ஒரே கடிதத்துக்குக் கட்டுப்பட்டு, மஞ்சு தனக்கு இல்லை என்று தனக்குத் தானே முடிவு கட்டிக்கொள்கிறான். அப்பா பார்த்து வைத்த கட்டுப்பெட்டி பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்கிறான். படத்தின் இறுதிக் காட்சியில், அருணின் மனைவியான சரிதாவிடம் மஞ்சு (ஸ்ரீப்ரியா), “வாட் டு யூ திங்க் அபவுட் விமென்ஸ் லிபரேஷன்?” என்று கேட்கிறார். கேள்வி புரியாத சரிதாவுக்கு அதை தமிழில் மொழிபெயர்த்துச் சொல்கிறான் அருண். “அதப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது” என்று அவர் பதில் சொல்கிறார். “அதான் நீங்க சந்தோஷமா இருக்கீங்க” என்று பதில் சொல்லிவிட்டு செல்கிறார் மஞ்சு. “எரிந்து போன வீடு, முறிந்து போன உறவுகள், கலைந்து போனக் கனவுகள், சுமக்க முடியாத சோகங்கள், மீண்டும் ஒருமுறை மஞ்சு இறந்துபோனாள். இந்தச் சாவை சகித்துக்கொள்ள மஞ்சுவால்தான் முடியும். அவள் பிறப்பாள், இறப்பாள்; இறப்பாள், பிறப்பாள்; அவள் அப்படித்தான்” என்ற விவரணையுடன் படம் முடியும்! இப்படியான காதல் எதுவுமே இல்லாத ‘புனித’ பிம்பம் தான் பொன்மகள் வந்தாள் வெண்பாவுடையதும். தனக்கு எதிரான பாலியல் வன்முறையை 15 ஆண்டுகளாக இன்னும் நினைவில் வைத்திருந்து துன்பத்தில் உழன்று கொண்டிருப்பவளாக வெண்பாவைப் படம் சித்திரிக்கிறது. இது இளம் பெண் ஒருவருக்கு நடக்கும் அநியாயம். வாழ்வின் மிகச் சிறந்த இளம் பருவத்தில் சிறுவயதின் வடுவை சீழ்ப்பிடிக்க வைத்துக்கொண்டு சுற்றித்திரிவது பெரும் கொடுமை. இறந்து போன தாய்க்கு நீதி கேட்டுப் போராடும் வெண்பா, தனக்கான நீதியை யாரிடமிருந்து பெறப்போகிறார்? வெண்பாவின் வலது புருவத்தில் பாலியல் துன்புறுத்தலின்போது ஏற்பட்ட தழும்பையும், சிறுவயதில் எப்போதோ அவளது அனுமதியின்றி நடந்த, அவளது கட்டுப்பாட்டுக்கு மீறிய பாலியல் வன்கொடுமையையும் ஆண்டுக்கணக்காக சுமந்து திரிவது, வருந்திக்கொண்டிருப்பது ஓர் ஆளுமையாகக் காட்டப்படும் வெண்பா கதாபாத்திரத்துக்கு அழகா என்ன? ‘அவள் அப்படித்தான்’ மஞ்சுவாகவா வாழ்க்கை முழுக்க தனியே நின்றுகொண்டிருக்கப் போகிறாள் அல்லது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ கங்காவாக அத்துமீறியவனையே நினைத்துக்கொண்டு வாழ்க்கையை வீணாக்கிக்கொள்ளப் போகிறாளா... 40 ஆண்டுகளாக தமிழ் சினிமா தன் ‘புரட்சிகர’ப் பெண் கதாபாத்திரத்தை இப்படியே தான் ஆராதித்துக் கொண்டிருக்கப்போகிறதா... பெண்களின் இயற்கை உணர்வுகளான காதல், காமம் இவைகள் மரத்துப்போன, உணர்வு ஊனமுற்றவர்களாகவே தான் இந்த மூன்று கதாநாயகிகளையும் தமிழ் சினிமா சித்திரிக்கிறது. சிறுவயதில் நேரும் பாலியல் வன்கொடுமையை வாழ்க்கை முழுக்க மூட்டை கட்டி, முள்ளாக மனத்தில் சுமந்துகொண்டிருப்பதா பெண்மையின் அடையாளம்? பெண்மை என்றாலே மீண்டெழுதல் இல்லையா? சிறுவயதில் விபத்தொன்று நிகழ்ந்தால், நினைவடுக்குகளில் அது பற்றிய சிந்தனை எங்கோ மறைந்து தானே போயிருக்கும்? ஏதோ ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டால், நம்மைச் சுற்றியுள்ள குடும்பம் அதை எப்படிக் கையாள்கிறது? அதற்கான சிகிச்சை எடுக்கும்போது முழுக்குடும்பமும் நம்மை அருகிருந்து தாங்கிப் பிடித்துக்கொள்வதில்லையா? இந்தத் தெளிவு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண் எனில் குடும்பங்களுக்கு இருக்கிறதா? விபத்து நடந்தால்கூட அதற்கான நீதியைத் தேடி குடும்பம் நீதிமன்ற வாசல் நாடுகிறது. ஆனால் குடும்பத்துக்குள்ளோ, வெளியிலோ சிறார் மேல் நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு நீதி கிடைக்க போக்சோ சட்டம் இருந்தாலும், எத்தனை குடும்பங்கள் சட்டத்தின் உதவியை நாடுகின்றன? ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் கதை சொல்லப்பட்ட விதத்திலும், படமாக்கப்பட்ட விதத்திலும் பல குறைகள் இருக்கின்றன. ஆனால் சிறார் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, ஆணவக்கொலை போன்ற பிறர் தொடத் தயங்கும் களங்களைப் படம் சொல்வதற்காக படக்குழுவினரைப் பாராட்டியே ஆக வேண்டும்! ((கட்டுரையாளர் குறிப்பு)) நிவேதிதா லூயிஸ், சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், வாழ்விடங்கள், பண்பாட்டுத் தளங்களில் ஆர்வத்துடன் இயங்குபவர். காலத்தில் கரைந்தும் மறைந்தும் போன சாதனைப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும், அவள் விகடனில் தொடராக வந்த "முதல் பெண்கள்" என்னும் நூலையும், நம் நீண்ட தமிழ்ப் பண்பாட்டு மரபைச் சொல்லும் "ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை" என்ற தொல்லியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் நூலையும் எழுதியுள்ளார். சென்னை வரலாற்றின் சொல்லப்படாத பக்கங்களை மரபு நடைகள் மூலமும், தன் எழுத்து மூலமும் தொடர்ந்து ஆவணப்படுத்திக்கொண்டு வருகிறார். இவரின் பூட்டான் பயணக் கட்டுரைத் தொடரும், சென்னை பற்றிய காணொளிகளும் மின்னம்பலத்தில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழிசையில் கிறிஸ்துவம் என்ற செயல் சொற்பொழிவை தொடர்ந்து ஆற்றிவருகிறார். https://minnambalam.com/entertainment/2020/06/11/53/ponmagal-vandhal-review
 30. 1 point
  அண்ணை, keyboard இல் shift+7 = $, அந்த shift keyயை சரியாக அமத்தாத காரணத்தால் 71.7 billion என்று வந்து விட்டது என நினைக்கிறேன்!
 31. 1 point
  இரும்பு பெண், வாழை குலையை அனாயசமாக துக்கி கிட்டு போகின்றீகள், வாழ்த்துக்கள், அடிகடி பகிருங்கள் உங்கள் சமையல் கலையை. புகை அடிப்பதைவிட, ஒன்று இரண்டு பழங்கள் மரத்தில் பழுத்தபின் வெட்டினால் நல்லது, நான் அப்படிதான் வெட்டுகின்றனான், வாழை தண்டை கறி வைக்கவில்லையா, முழுவதுமாக வெட்டாமல் தேவைக்கு ஏற்றமாதிரி வெட்டி கறி வைக்கலாம், வாழைப்பணியாரம் பார்க்க சூப்பராக இருக்கு, மேலும் உங்கள் பிள்ளைகள் சுட்டி, அவர்களின் விளையாட்டு வீடியோவுடன் பார்க்க நன்றாக இருக்கு Like, Subscribe, Bell பண்ணியாச்சு
 32. 1 point
  மிக வன்மையாக கண்டிக்கறன் .. இவ்வளவு நாளா சும்மா இருந்திருக்கினம்..
 33. 1 point
  வேற மாமா தாத்தாக்கள் சிலைகளும் இருந்தா தேடிப்பிடிச்சு கடலுக்க ஏறிய வேணும்
 34. 1 point
  குத்தி முறிஞ்சவர் பாடு இப்ப எப்படி? ஓம் ஓம் இன்னும் சுகமாக இருக்கிறேன்.
 35. 1 point
  யார் செய்கிறார்கள் என்பது முக்கியமல்ல என்ன செய்கிறார்கள் என்பதே முக்கியம்.
 36. 1 point
  தேசிய தலைவரை அன்று காப்பாற்றி ஜாமீன் எடுத்து உபசரித்தவர்களும் இப்ப நம்ம ஆட்கள் பார்வையில் துரோகிகள் தான்.
 37. 1 point
  என்னோட வேலை செய்யும் ஐரோப்பிய நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் அண்மையில் என்னிடம் நல்ல தேங்காய் எண்ணெய் எங்கே வாங்கலாம் என்று கேட்டார் ...ஏன் என்று கேட்டதிற்கு உடம்பிற்கும்,முகத்திற்கும் பூசுவதற்கும் அத்தோடு டயட்டிற்கும் நல்லது என்று சொன்னார் ...பூசினால் உடம்பு மிணுங்குமாம் ...இந்த காணொளியையும் பாருங்கள்
 38. 1 point
 39. 1 point
  சீனா வேண்டாம் என வெளியேறும் கம்பெனிகள் இந்தியாவுக்கு ஏன் வரவில்லை.? 1950-களில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் கிடையாது. இரண்டுமே, வளரும் நாடுகள் தான்.அதிக மக்கள் தொகை கொண்ட, தன் தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ள முடியாத நாடுகள். வேலை வாய்ப்புகள் எல்லாம் கிடைத்தால் மாரியாத்தா மகிமை. இல்லை என்றால் கிடைக்கும் வேலைகளைச் செய்து பிழைக்க வேண்டியது தான். ஆனால் சீனா தன்னை ஒரு கம்யூனிஸ கேப்பிட்டலிஸ்டாக மாற்றிக் கொண்டது. 1979-ல் அமெரிக்க பயணம் அதென்ன கம்யூனிஸ கேப்பிட்டலிஸ்ட்? சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு. இன்று வரை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி தான் சீனாவில் எல்லாமே. அவர்கள் சொல்வதை மறுப்பதற்கோ, மறிப்பதற்கோ யாருக்கும் அதிகாரம் கிடையாது. அப்படிப்பட்ட கம்யூனிஸ்ட் தேசத்தின் உச்சபட்ச தலைவர் (அப்போது அதிபர் பதவி கிடையாது என்கிறது விக்கிபீடியா) 1979-ல் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கோண்டார். அவர் பெயர் டெங் சவ்பிங் (Deng Xiaoping). முதல் முறை அவ்வளவு ஏன், ஒரு சீன தலைவர், அமெரிக்காவுக்கு விஜயம் செய்வது அதுவே முதல் முறையாம். அப்போது தான் சீனா, தன் சீனப் பெருஞ்சுவரைத் தாண்டி உலகத்தையும், முதலாளித்துவத்தையும், முதலாளித்துவத்தினால் கிடைக்கும் பணத்தையும் பார்த்தது. மெல்ல மேற்கத்திய நாடுகளுக்கு சீன பெருஞ்சுவரின் கதவுகளைத் திறந்தது. சிறப்புப் பொருளாதாரம் மண்டலங்கள் (SEZ) அந்த காலகட்டத்தில் தான் வெளிநாட்டு முதலீடுகளை சீனா ஈர்க்கத் தொடங்கியது. அதோடு SEZ மண்டலங்களையும் அறிவித்து தொழிற்சாலைகள், வர்த்தகங்கள், வியாபாரங்கள் என தன் பொருளாதாரத்தை கவனிக்கத் தொடங்கியது. அடுத்தடுத்து பங்குச் சந்தைகளை எல்லாம் திறந்து தன்னை ஒரு தினுசான கம்யூனிஸ கேப்பிட்டலிஸ்ட் நாடாக மாற்றிக் கொண்டது. விளைவு என்ன.? சீனாவின் கம்யூனிஸ கேப்பிட்டலிஸ்ட் முயற்சி பிரம்மாண்ட பலன்களைக் கொடுத்தது. 1960-ல் வெறும் 59 பில்லியன் டாலராக இருந்தது சீனாவின் ஜிடிபி. அதே காலகட்டத்தில் அமெரிக்காவின் ஜிடிபியோ 543 பில்லியன் டாலர். சீனாவை விட அமெரிக்கா சுமாராக 10 மடங்கு பெரிய பொருளாதாரம். ஆனால் இன்று சீனாவின் ஜிடிபி சுமாராக 13 ட்ரில்லியன் டாலருக்கு வளர்ந்து இருக்கிறது. அமெரிக்காவின் ஜிடிபி சுமார் 21 ட்ரில்லியன் டாலராக வளர்ந்து இருக்கிறது. சீனாவை விட 1 மடங்கு கூட அமெரிக்கா பெரிய பொருளாதாரம் இல்லை. சீனா முந்திவிடுவான் 2025-ல் சீனா பொருளாதாரம், ஜிடிபி அடிப்படையில் உலகின் நம்பர் 1 பொருளாதாரமாக வலம் வரலாம், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளப்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் இப்போதே ஆரூடம் சொல்கிறார்கள். சீனாவும் அதற்கு சளைக்காமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. எப்படியும் ஒரு நாள் அமெரிக்காவை முந்த நிறையவே வாய்ப்பு இருக்கிறது. வெளியேறும் கம்பெனிகள் அப்படி என்றால் சீனாவின் அசுரத் தனமான தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி கடந்த 60 ஆண்டுகளில் எப்படி இருந்து இருக்கும் எனப் நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட, சீனாவை அம்போ என விட்டு விட்டுத் தான், இன்று பல கம்பெனிகள், தங்கள் ஆலைகளை வேறு நாடுகளுக்கு மாற்றிக் கொள்ள துடித்துக் கொண்டு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஏன் சீனா வேண்டாம்.? சீனா உலகத்தின் உற்பத்தி கேந்திரங்களில் ஒன்றாக இருக்கிறது. பல கம்பெனிகளின் அத்தியாவசியப் பொருட்கள், சீனாவில் இருந்து வந்தால் தான் அடுத்த வேலையைப் பார்க்க முடியும் என்கிற ரீதியில், சீனாவின் சப்ளை செயின் முக்கியத்துவம் பெறுகிறது. உதாரணமாக சென்னையில் இருக்கும் டிவிஎஸ் கம்பெனி கூட கடந்த பிப்ரவரியிலேயே தன் உற்பத்தி 10% குறையும், காரணம் சீனாவில் இருந்து வர வேண்டிய சரக்குகள் வரவில்லை என்றார்கள். அதிகம் நம்ப வேண்டாம் கம்பெனிகள் ஒரே நாட்டை, தங்கள் வியாபாரத்துக்கு அதிகம் நம்ப வேண்டாம் என்கிற நோக்கில், சீனாவில் இருந்து வெளியேற விரும்புகிறார்களாம். அதோடு கொரோனா பரவல், மற்ற உலக நாடுகளோடு இருக்கும் உறவுகள், அமெரிக்கா சீனாவுக்கு இடையில் இருக்கும் அனையாத வர்த்தகப் போர் போன்றவைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு தங்கள் ஆலைகளை வேறு நாடுகளுக்கு மாற்றுகிறார்களாம். வெளியேறுவது சரி... அதன் பின் எந்த நாட்டுக்குப் போகிறார்கள்..? எந்த நாட்டுக்கு மாற்றுகிறார்கள் நோமுரா என்கிற ஜப்பான் கம்பெனியின் கணக்குப் படி, கடந்த 2018 - 19 நிதி ஆண்டில், சீனாவில் இருந்து சுமாராக 56 கம்பெனிகள் வெளியேறினார்களாம். அதில் 26 கம்பெனிகள் யாரும் எதிர்பார்க்காத வியட்நாமில் கடை விரித்து இருக்கிறார்களாம். தைவானில் 11 கம்பெனிகளும், தாய்லாந்தில் 08 கம்பெனிகளும், இந்தியாவில் வெறும் 03 கம்பெனிகள் மட்டுமே தங்கள் ஆலைகளைத் தொடங்கி இருக்கிறார்களாம். ஏன் வியட்நாமில்.? 2018 - 19 நிதி ஆண்டில் தானே போனார்கள். இப்போதும் கம்பெனிகள் வியட்நாமில் ஆர்வம் காட்டுகிறார்களா என்ன..? என கேள்வி கேட்டால் 'ஆம்' என்கிறது க்விமா (Qima) என்கிற சப்ளை செயின் ஆய்வுக் கம்பெனி. தற்போது கம்பெனிகள் பாதுகாப்பான இடங்களைத் தேடுகிறார்களாம். குறிப்பாக கொரோனாவை சிறப்பாக சமாளித்த நாடுகளை கவனிக்கிறார்களாம். வியட்நாமில் என்ன வியப்பு.? ஒட்டு மொத்த வியட்நாமில் சுமாராக 10 கோடி மக்கள் வாழ்கிறார்களாம். அந்த நாட்டில் இதுவரை 350-க்கும் குறைவான மக்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம். அதே போல ஒருவர் கூட வியட்நாமில் கொரோனாவால் உயிரிழக்கவில்லையாம். இந்த ஒரு காரணமே கம்பெனிகளை சுண்டி இழுக்கிறதாம். வியட்நாமுக்கு வரவேற்பு இருக்கா? ஐரோப்பிய யூனியனுக்கு, வியட்நாமில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 85 % குறைத்து இருக்கிறார்களாம். அதே போல, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து, வியட்நாமுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான விஷயங்களையும் தளர்த்திக் கொண்டு இருக்கிறார்களாம். இதை விட என்ன பெரிய வரவேற்பு வேண்டும்? நோ.. இந்தியா.! கொரோனா வைரஸை இந்தியா சரியாக கையாளவில்லை என்பதைத் தான், கம்பெனிகள் இந்தியாவுக்கு வராத முக்கிய காரணங்களில் ஒன்றாக தெரிகிறது. இந்தியா மிகப் பெரிய சந்தையைக் கொண்ட நாடாக இருந்தும், லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்களை தொழிற்சாலைகளுக்கு தர தயார் நிலையில் வைத்திருப்பதாக அரசே சொல்லியும், கம்பெனிகளுக்கு சாதகமான பல சலுகைகளுக் கொடுக்கின்ற போதிலும், இந்தியாவால், சீனாவில் இருந்து வெளியேறும் கம்பெனிகளை இந்தியாவுக்குள் அழைத்து வர முடியவில்லை. தம்மா துண்டு நாடு வியட்நாமோ கொரோனாவை சூப்பராக சமாளித்து கம்பெனிகளை அள்ளிக் கொண்டு போகிறார்கள். https://tamil.goodreturns.in/world/why-china-leaving-companies-are-not-coming-to-india-019302.html டிஸ்கி : பொருளாதார நிபுணர் ..தோழர் அம்பனை தனி திரி திறந்து போட்டு ஆள் அட்ரஸை காணோம்....
 40. 1 point
 41. 1 point
  தென்றல் உறங்கிடும் போது
 42. 1 point
  அவகாடோ மிகவும் நல்லது, வீட்டில் எல்லோரும் விரும்பி சப்பிடுவார்கள், இலகுவான முறை பிரபா, நன்றி பகிர்வுக்கு ஈழப்பிரியன் இந்த இணைப்பை தந்தபின் தான் நான் யாழில் படங்காட்ட தொடங்கினான். நீங்களும் இதை பாவிக்கலாம் https://postimg.cc/K4jgBbyr
 43. 1 point
  பரிமாறும் போ து மேலே பொன்னிறமாக பொரித்த வெங்காயம் மல்லித் தழை கொண்டு அலங்கரித்து உடன் அவித்த முடடை, பெரிய வெங்காயச்சாம்பல் ( வெங்கயம் மி தூள் வினிகர் சீனி அரை தேக்கரண்டி உப்பு அளவாக ) ( Plate ) கோப்பையில் வைத்து சேர்த்து உண்டால் சுவையே தனி நான் இவா வின் முறையில் செய் வதுண்டு
 44. 1 point
  தமிழ் சிறி, நீங்கள் நீலத்தில் பிலிம் என்னும் வார்த்தையை அடையாளப்படுத்தியதால் ஏதெனும் சூதனமாக சொல்ல வருகின்றீர்களா?
 45. 1 point
  இணைப்பிற்கு நன்றி துல்பன் ...இப்பத் தான் வாசித்து முடித்தேன். ஹிட்லரின் பெண்கள் தொடர்பான நிலைப்பாட்டை அறிந்து அதிர்ச்சியாகிட்டேன். வரலாற்று நூல்களை அந்தந்த மொழிகளில் தான் வாசிக்க வேண்டும் என்று சொல்பவர்களிடம் ஒரு கேள்வி...ஹிட்லரைப் பற்றி டொச்சில் வரும் ஆக்கங்களை மட்டும் தான் படிக்க வேண்டும்...ஆங்கில மொழியில் வருவது எப்படி உண்மையாய் இருக்க முடியும்
 46. 1 point
 47. 1 point
  நம்ம ஊர் ஆட்டிறைச்சி குழம்பு, அதுவல்ல விடயம்..... இதன் செய்முறையின் அழகைப் பாருங்கள்.....முடிவில் அந்தக் கறியின் உறைப்பும் வாசமும் மூக்கில் வந்து மோதுவதை உணர்வீர்கள்......!
 48. 1 point
  தலைவனை காட்டிக் கொடுப்பதும் தாயைக் கூட்டிக் கொடுப்பதும் ஒன்று தான். இதுக்குப் பிறகு அவன் எப்படி இருந்தால் என்ன?
 49. 1 point
  கீழடி - விலங்குகள் எலும்பு கூடுகள் கண்டெடுப்பு..
 50. 1 point
  என‌க்கு யாழ்ப்பாண‌ம் என்றால் என் நினைவுக்கு அதிகம் ‌ வ‌ருவ‌து இந்த‌ மூன்று க‌ரும்புலி க‌ண்ம‌ணிக‌ளின் ப‌ட‌ம் தான் , யாழ்ப்பாண‌ ஆரிய‌குள‌ ச‌ந்தியில் இந்த‌ மூன்று க‌ரும்புலிக‌ண்ம‌ணிக‌ளின் ப‌ட‌ம் சிறு க‌ட‌ல்ப‌ட‌கு செய்து அதில் வைக்க‌ ப‌ட்டு இருந்த‌து , அந்த‌ இட‌த்தை க‌ட‌க்கும் போதெல்லாம் இவ‌ர்க‌ளின் ப‌ட‌ங்க‌ளை பார்த்து விட்டுத் தான் செல்வேன் , இப்ப‌ அந்த‌ இட‌ங்க‌ளை பார்த்தா உண்மையில் வெறிசோடிப்போய் கிட‌க்கு , எம்ம‌வ‌ர்க‌ளுக்கு வைத்து இருந்த‌ சிறு சிறு நினைவிட‌ங்க‌ள் எல்லாம் இருந்த‌ இட‌ம் தெரியாம‌ல் இருக்கு / சிறித‌ர் திரைய‌ர‌ங்கு இன்னொரு மாவீர‌ர் ம‌ண்ட‌வ‌ம் மாதிரி , 1992ம் ஆண்டில் இருந்து 1995ம் ஆண்டு க‌ட‌சி வ‌ரை எம்ம‌வ‌ர்க‌ள் இய‌க்கிய‌ அனைத்து ப‌ட‌ங்க‌ளும் சிறித‌ர் நிரைய‌ர‌ங்கில் ம‌க்க‌ள் சென்று பார்த்த‌வை , இப்ப‌ அந்த‌ திரைய‌ர‌ங்கு ட‌க்ள‌ஸ்தேவான‌ந்தாவின் ஒவ்பிசா இருக்கு , எங்க‌ட‌ இந்த‌ த‌லைமுறையில் எல்லாரும் ஒற்றுமையாய் இருந்து எம‌து இல‌க்கை அடைந்தா ப‌ழைய‌ யாழ்ப்பாண‌த்தை ப‌ழைய‌ முல்லைதீவை ப‌ழைய‌ திருகோன‌ம‌லையை ப‌ழைய‌ ம‌ட்ட‌க்க‌ள‌ப்பை குறுகிய‌ கால‌த்தில் உருவாக்க‌லாம் , உருவாக்கி க‌ண் க‌ண்ட‌ தெய்வ‌ங்க‌ளி ப‌ட‌ங்க‌ள் இருந்த‌ இட‌ங்க‌ளில் மீண்டும் வைக்க‌லாம்