• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard


Popular Content

Showing content with the highest reputation on ஞாயிறு 14 ஜூன் 2020 in all areas

 1. 6 points
  வ‌ண‌க்க‌(ம்) உற‌வுக‌ளே நாம் எல்லாம் த‌மிழீழ‌ ம‌ண்ணில் பிற‌ந்து புல‌ம் பெய‌ர் நாட்டில் வாழுகிறோம் , இப்ப‌டி ஒரு திரி யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் இத‌ற்கு முத‌ல் திற‌ந்தின‌ம்மோ தெரியாது , நேர‌ம் இருக்கும் போதெல்லாம் யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் எழுதும் ஆக்க‌ங்க‌ளை வாசிப்பேன் , 12வ‌ருட‌த்துக்கு முத‌ல் ப‌ழைய‌ யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் எழுதின‌துக‌ளையும் வாசிப்பேன் சின்ன‌னில் எம் முன்னோர்கள் எம‌க்கு சொல்லி த‌ந்த‌ ப‌ல‌ நூறு ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ளை ம‌ற்றும் எம் க‌ண்ணால் க‌ண்ட‌ ந‌ல்ல‌ நிக‌ழ்வுக‌ளை நாம் ஒரு போதும் ம‌ற‌க்க‌ப் போர‌தும் இல்ல‌ , த‌மிழீழ‌த்தில் திரும‌ண‌ நிக‌ழ்வில் இருந்து சாம‌த்திய‌ வீடு பிற‌ந்த‌ நாள் நிக‌ழ்வுக‌ளில் நாம் க‌ல‌ந்து கொண்டு இருப்போம் , சிறு வ‌ய‌தில் நான் க‌ண்ட‌ திரும‌ண‌ நிக‌ழ்வு , தமிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌முறையில் நட‌ந்த‌ திருமண‌ங்க‌ள் , மாப்பிளைக்கு பால த‌லைக்கு வைத்து குளிப்பாட்டி ம‌ன‌வ‌ரையில் உக்கார‌ வைத்து திரும‌ண‌ பெண்ண‌ அமைதியாய் கூட்டி வ‌ந்து மாப்பிளைக்கு ப‌க்க‌த்தில் உக்கார‌ வைத்து ஆலாத்தி எடுத்து பிற‌க்கு கோயிலில் வைத்து தாலி க‌ட்டுவ‌து தான் ஊர் திரும‌ண‌ முறை , புல‌ம்பெயர் நாட்டு திரும‌ண‌ம் மாப்பிளை ம‌ன‌வ‌ரையில் இருப்பார் , திரும‌ண‌ பெண்ண‌ பார்த்தா அவாவின் தோழிக‌ளுட‌ன் ஆட்ட‌த்துட‌ன் வ‌ருவா மாப்பிளையிட‌ம் , ஏன் இந்த திடிர் மாற்ற‌ங்க‌ள் குறுகிய‌ காலங்க‌ளில் , என‌க்கு இப்ப‌டியான‌ கொண்டாட்ட‌ங்க‌ள் சுத்த‌மாய் பிடிக்காது , ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு அது பிடித்தா அதில் நாம் த‌லையிட‌ முடியாது அது அவ‌ர்க‌ளின் த‌னிப்ப‌ட்ட‌ விருப்ப‌ம் என்று க‌ட‌ந்து செல்வ‌து தான் புத்திசாலித் த‌ன‌ம் , என‌து சொந்த‌ங்க‌ள் கொண்டாட்ட‌த்துக்கு என்னை அழைப்பின‌ம் , ஆவ‌த்துக்கு பாவ‌ம் இல்லை என்று ஏதாவ‌து பொய்யை சொல்லி கொண்டாட்ட‌த்தில் நான் க‌ல‌ந்து கொள்வ‌தில்லை , க‌ட‌சியில் உற‌வுக‌ளுக்கே தெரிந்து விட்ட‌து இவ‌ன் கூப்பிட்டா வ‌ர‌ மாட்டான் அழைப்பித‌ல் குடுப்ப‌த‌ விட‌ குடுக்காம‌ விட‌லாம் என்று , இப்ப‌ என்னை கொண்டாட்ட‌த்துக்கு அழைப்ப‌து இல்ல‌ என்ர‌ சொந்த‌மும் மேல‌ நான் எழுதின‌த‌ போல‌ ஊர் திரும‌ண‌ முறைய‌ ம‌ற‌ந்து அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளுக்கு ஆட்ட‌ம் பாட்ட‌முட‌ன் திரும‌ண‌த்த‌ செய்து வைக்கின‌ம் , கால‌ங்க‌ள் போக‌ போக‌ வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வை போல‌ த‌மிழ‌ர்க‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வுக‌ளும் புல‌ம்பெய‌ர் நாட்டில் ந‌ட‌க்கும் இந்த‌ திரி எம் இன‌த்த‌ கேவ‌ல‌ப் ப‌டுத்த‌ திற‌க்க‌ வில்லை , சிறு வ‌ய‌தில் நான் க‌ண்ட‌ திரும‌ண‌மும் புல‌ம்பெய‌ர் நாட்டு திரும‌ண‌மும் ப‌ற்றிய‌து ,நான் என்ன‌ சொல்ல‌ வ‌ந்தேன் என்ற‌த‌ புரிந்து கொள்ளுவிங்க‌ள் என்று நினைக்கிறேன் யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் உங்க‌ள் ப‌தில‌ தாரால‌மாய் எழுத‌லாம் , இத‌ ப‌ற்றி கொஞ்ச‌ம் விவாதிப்போம் உற‌வுக‌ளே பைய‌ன்26
 2. 3 points
 3. 3 points
  இருவர் வருவதும் நல்லதிற்கில்லை...ஆனால் இருவரிலும் சும் சிறந்தவர் என்பது எனது அபிப்பிராயம் [கவனிக்க விக்கியை விட சும் திறம் ...அதற்காக சும் சிறந்தவர் என்றோ அவரது அரசியலை ஆதரிக்கிறேன் என்றோ அர்த்தம் இல்லை.]. ஒரு மாகாண சபையே வழி நடத்த முடியாதவர் பாராளுமன்றம் போய் என்னத்தை கிழிப்பார் என்று எதிர் பார்க்கிறீர்கள் சும் வெளிப்படையாய் கதைப்பதால் எல்லாவற்றையும் தூக்கி அவர் தலையில் போடுகிறீர்கள்...ஏன் மாவையாலோ அல்லது மற்றவர்களாலோ ஒன்றும் செய்ய முடியாது உள்ளது ...ஏன் அவர்களை நோக்கி உங்கள் கேள்விகள் எழவில்லை ..சும் கூட்டமைப்பை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்றால் அவருக்கு திறமையும் இருக்குது என்று தானே அர்த்தம்...அதை ஏன் தமிழர்கள் தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்த கூடாது? சும் ஒரு 5% மக்களுக்கு ஏதோ செய்ய வேணும் என்று நினைப்பார் ...செய்வார் ...ஆனால் விக்கி சிங்கலவரோடு சேர்ந்து நின்று கொண்டு மெளனமாய் தமிழர்கள் அழிவதை பார்த்துக் கொண்டு நிற்பார் இருவருமே கொழும்பு மேட்டுக்குடிகள், இருவருக்கும் தமிழர்களது வலி புரியாது . கிழக்கை ,கிழக்கில் போட்டி இடுபவர்கள் பார்த்துக் கொள்வார்கள் ...கருணா வெல்லாட்டிலும் பிள்ளையான், அதை விட நிறைய புது முகங்கள் போட்டி இடுகின்றனர்...முஸ்லீம் கட்சிகள் மூன்றாக பிரிந்து தான் போட்டி இடுகின்றனர் .[தேர்தலுக்கு பின்னர் சேருவீனமோ தெரியாது]...மட்டுவில் 5 இடங்களில் 4 இடங்களை தமிழர்கள் பிடித்து விட்டினம் என்றால் பின்னர் பிரச்சனை இல்லை . கூட்டமைப்பு போன தடவை அம்பாறையை முஸ்லீம் எம்பிக்கு வீட்டுக் கொடுத்த மாதிரி இந்த தடவை விட கூடாது. அங்கிருக்கும் மக்கள் இன்னும் கூட்டமைப்பில் நம்பிக்கை வைத்துள்ளனர். மட்டு,அம்பாறையில் கூட்டமைப்பில்,மற்றைய கட்சிகளில் நிறைய இள வயது புதுமுகங்கள் போட்டி இடுகின்றனர். பிள்ளையான் போன்றோர் வெற்றி பெற்றால் சிறப்பு. பி;கு ; இன்று அம்பாறையில் நடந்த கூட்டமைப்பு வேட்பாளர் சந்திப்பில் சும்மிடம் என்ர அண்ணரை பற்றி கேட்ட போது "கருணா யார் என்று எல்லோருக்கும் தெரியும் குறிப்பாய் கிழக்கு மக்களுக்கு தெரியும்" என்று சொன்னார் ...அம்பாறையில் போய் நின்று கொண்டு என்ர அண்ணரை பற்றிக் கதைக்க எவ்வளவு துணிவு வேண்டும்
 4. 3 points
  இத்தனை அழிவுகளையும் ஏற்படுத்தியவர்கள் யார்? ஆயுதம் தூக்குவதற்கு முன் இனக்கலவரங்களை ஏற்படுத்தி, தமிழரை அகதிகளாக்கி, கப்பல்களில் ஏற்றி அனுப்பி வைத்து ஆயுதம் தூக்க நிர்பந்தித்தவர்கள் யார்? இவர்கள் சரியாய் பிரச்சனையை கையாண்டிருந்தால் ஏன் ஆயுதம் தூக்க வேண்டிய கட்டாயம் வந்தது?இளைஞரை உசுப்ப முன், இப்போ கூறும் ராஜதந்திரத்தை அப்போ கையாண்டிருக்கலாமே? இனவழிப்போர் பேச்சு கேட்டு உலகம் அழிப்பிற்கு உதவியது என்றால், ஏன் தமிழரின் நியாயமான போராட்டத்தை இவர்கள் சர்வதேசத்துக்கு கொண்டு போகவில்லை, விளக்கவில்லை? இது யார் தவறு? இப்பவும் சர்வதேசம் எங்கே சிங்களவனை கட்டிபோடுமோ என்று தமிழ் போராட்டத்தை குறை கூறி சிங்களவனுக்கு தாளம் போடுகிறார்கள். சிங்களம் விரும்பியதை பேசியும், விரும்பாததை பேசாமலும் அவர்களை குளிர்வித்து எப்படி உதவப்போகிறார்? சிங்களவன் என் இனத்தை அழித்தபோது, என்குடும்பம். என்று சுயநலமாய் ஒதுங்கி இருந்தவர்கள், தன் உயிர் வெறுத்து, குடும்பத்தையே ஆகுதி ஆக்கி போராடியோர்களுடன் என்குடும்பமும் அழிந்ததற்காக போராடியவர்கள் இறந்த பின்னும், அழிவை ஏற்படுத்தியவன் கையை ஓங்க வைப்பேன் என்று சபதம் எடுப்பவர்கள் சுயநலவாதிகள். எதை யாரிடம் பெற்று மக்களை காப்பாற்ற போகிறார்கள்? மக்களே வேண்டாம் என்று ஒதுக்கும் இவர்கள் ஏன் ஒதுங்காமல் இருக்கிறார்கள். கொழும்பில் இருந்து சிங்களவனை மகிழ்விக்கட்டும்.
 5. 3 points
  இவரது சமையல் சட்டியை பாருங்கள். இது சீனச்சட்டி என்று சொல்லப்படும். அம்மா சொல்லுவா. மண்சட்டிக்கு அடுத்ததாக, கறி இந்த சட்டியில் தான் சுவையாக வரும் என்று. இது இலங்கையில் பொதுவாக எல்லா வீடுகளிலும் இருக்கும். 'இயத்து' என்று ஊரில் சொல்வார்கள். அடுப்பில இயத்தினை எடுத்து வை, என்பார்கள்... கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழ் சொல்லோ தெரியவில்லை. நம்ம, புரட்சி, என்னப்பா, இந்த ஊர்ல, தேங்காய்ப்பால், அதுவும் முதலாம், இரண்டாம், மூன்றாம் பால் என்று ரொம்ப அலம்பறை பண்ணுதே என்று தலையினை சொறிந்து கொள்வார்..
 6. 2 points
  தங்கச்சி நீங்கள் நம்புறியளோ இல்லையோ .. எனக்கு ஒரு டாக்குத்தர் சொன்னதை சொல்லுறன். என்ரை மூட்டு வலிகளுக்கு பாலும் அது சம்பந்தப்பட்ட பால் தயாரிப்புகளையும் பாவிக்க வேண்டாம் எண்டு சொன்னவர். நானும் ஒருமாதம் எடுக்காமல் விட்டுப்பாத்தன் அரைப்பங்கு வலிகள் குறைஞ்சிட்டுது. பாலில் கெட்டுப்போகமல் இருக்க பாவிக்கப்படும் இரசாயனப்பொருள் தான் வலிகளுக்கு முக்கிய காரணமாம். அது போலதான் பன்றி இறைச்சியும். தோல் வெடிப்புகளுக்கு வெள்ளையள் இப்ப தேங்காய் எண்னை பூச வெளிக்கிட்டினம். இப்ப புதினம் என்னெண்டால் வெள்ளையள் எங்களை விட உறைப்பு சாப்பிட வெளிக்கிட்டினம். உறைப்பு புது எனர்ஜியை தருதாம்.
 7. 2 points
  இதில ஆத்திரப்படுறத்திற்கோ ,கோபப்படுறத்திற்கோ எதுவும் இல்லை யஸ்டின் ..முந்தி இங்கு தேங்காய் பாலோ ,தேங்காயோ சுப்ப மாக்கெட்டில் காண கிடைக்காது. பாவிக்கவே கூடாது என்று சொல்லிச்சினம் ...ஆனால் இப்ப சான்விச் ,ஸ்நாக்ஸ் இருக்கும் பக்கம் தேங்காய் சொட்டு பக் பண்ணி விக்கிறான் ...கோப்பி கடைகளுக்கு போனால் தே. பாலில் கோப்பி கேட்க்கினம் ...எதை விற்பது/கூடாது என்று தீர்மானிப்பது காப்பிரேட் கொம்பனிகள் தான் ...அதைத் தான் என்ர அண்ணரும் சொல்கிறார் என்று நினைக்கிறேன். பசுப்பால் கூட எல்லோருக்கும் ஒத்துக்க கொள்ளாது...அதுக்காக பொதுவாய் பாலே கூடாது என்ற முடிவுக்கு வர கூடாது அல்லவா
 8. 2 points
  சீனி போடாமல் செய்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். இந்த வாழைப்பழங்கள் அந்த அளவுக்கு இனிப்பு சுவையாகவும் இருக்கவில்லை. அதுதான். நானும் கணவனும் யாழ்தளத்தின் நீண்டகால வாசகர்கள். என்னுடைய முதல்பதிவுக்கு கிடைத்த வரவேற்பு என்னை திக்கு முக்காட வைத்துவிட்டது. அடுத்த காணொளியை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பும் இணைந்து விட்டது.
 9. 2 points
  திரு சுமந்திரன் அவர்களது மகன் சர்வதேச ரீதியில் பேச்சுப்போட்ட்டியில் வென்றதால் இங்கு எதுவும் நடந்துவிடப்போவதில்லை. ஐந்துவயதில் கொழும்பில் சிங்களவர்களுடன் ஒன்றாக வாழ்வதையொட்டி பெருமையும், வாழ்நாள்பேறாகவும் கருதும் ஒருவரது மகன் எதிர்காலத்தில் தனது கல்விப்புலமையால் சிறீலங்காவின் அதிஉயர் பதவிகளுக்குத் தெரிவுசெய்யப்பட்டு, அதன்மூலம் பெறப்படும் செல்வாக்கால் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராகவோ அன்றில் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைதொடர்பான விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பான பதவியிலோ, அதுவும் இல்லாதுவிட்டால் ஐ நா மனித உரிமைக்கவுன்சிலின் சிங்களத்துக்கான பொறுப்புப்பதவியிலோ அமர்ந்து சுமந்திரன் இப்போது செய்யும் தமிழர்களுக்கெதிரான தகிடுதித்தங்களை எதிர்காலத்தில் செய்யக்கூடிய, "கோடரிக் கம்பு" தயாராகின்றது என எதிர்வுகூறல் மட்டுமே இச்செய்தியின் சாரம்சம். என்னைப்பொறுத்தமட்டில் சுமந்திரன் தமிழர் விரோத தேசமாம் இந்தியாவினதும், சிறிலங்காவினதும், அப்பப்போ மேற்குலக நாடுகளதும் நிகழ்சித்திட்டங்களுக்கு இசைவாக தமிழர் இருப்புமீதாக அரசியல் செய்யும் சிங்களவர்களுடன் வாழ்வதில் பெருமையாகவும் கொடுப்பினையாகவும் கருதும் ஒரு ஜந்து, நாளை நான் இல்லாதுபோய்விடலாம் இச்செய்தி வாசிக்கும் அனேககரில் பலர் இல்லாதுபோய்விடலாம் எதுக்கும் உங்கள் பிள்ளைகளிடம் இப்படி ஒருவர் யாழ் களத்தில் கருத்தெழுதியிருக்கிறார் எதுக்கும் சுமந்திரனது மகனை இப்போதிருந்தே நினைவில் வைத்திருங்கள் எனக் கூறி வையுங்கள். அப்படி நான் எதிர்வுகூறியது எதுவும் நடைபெறாதுவிடின், சொர்க்கம் நரகம் என்பது இருந்தால் எழுஞாயிறு தப்பித்தவறி சொர்க்கத்துக்கு அனுப்பப்பட்டிருந்தால் அவரை நரகத்தின் நரகத்துக்கு மாற்றிவிடும்வண்ணமும் அல்லது மறுபிறவி என்று ஏதாவது இருந்தால் பலபேரிடம் கல்லெறி வாங்கும் சொறிபிடித்த தெருநாயாக அவரைப்படைக்கும்படியும் எல்லாம் வல்ல கர்த்தரை, இறையை, சிவனை, விஸ்ணுவை மன்றாடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
 10. 2 points
  முப்பது வருடம் எத்தனை அழிவு? எத்தனை ஆயிரம் பிள்ளைகளையும் எத்தனை கோடி சொத்துக்களையும் அழித்து முடித்தீர்கள் ? இவ்வளவும் அழித்து நீங்கள் சாதித்தது என்ன? ஆயுதம் இன்றி தனக்கு தெரிந்த சட்டத்தை பயன்படுத்தி மக்களை நிம்மதியாக வாழ வழி தேடும் சுமந்திரனை பற்றி மட்டும் இவ்வளவு விஷம் கக்க முடிகிறது. உங்களை போன்றவர்கள் தான் எம் மக்களை அபலைகளாக்கியவர்கள், சுமந்திரன் அரசியலுக்கு வந்ததே நீங்கள் இத்தனை ஆயிரம் மக்களை அபலைகளாக்கியதை பார்த்து மனம் பொறுக்காமல் தான். அழித்தது காணும் - ஒதுங்கி போங்கள். சுமந்திரன் போன்றவர்களாவது மக்களுக்கு உதவ வழி விடுங்கள். உங்களுக்கு முப்பது வருடங்களும் பல ஆயிரம் உயிர்ப்பலிகளும், பல கோடி சொத்துகளும் தந்து நீங்கள் சாதித்ததை அபலை மக்கள் அனுபவிப்பது காணும். இனி நீங்கள் வேண்டாம்.
 11. 2 points
  சம்பந்தன்... வாயாலை வடை வடை சுட்டே, தமிழர்களின் பிரச்சினைகளை நீர்த்துப் போகச் செய்த கயவன். அடுத்த தேர்தலில் ஆவது... மக்கள், திருந்த வில்லை என்றால்.... குற்றம்.... சம்பந்தன் மீது அல்ல. வாக்குப் போடும் மக்களில் தான்... பிழை உள்ளது.
 12. 2 points
  விக்கி வருவது நல்லதா ? சுமத்திரன் வருவது நல்லதா ? என்றால் விக்கி வெல்வதே மேல் மற்றபடி சுமத்திரன் எனும் ஆள் பின்வீட்டுக்குள்ளால் அரசியலுக்கு வந்து இலங்கைத்தமிழரின் அனைத்து அபிலாசைகளுக்கும் உரிமைகளுக்கும் ஏன் தமிழ் தேசிய கூத்தமைப்பு உடைவுக்கு ஒத்தை ஆளா நின்று அனைத்தையும் இல்லாமல் பண்ணியுள்ளார் வெறும் சொறிலங்கா இனவாத அரசு எறியும் எலும்புத்துண்டுகளுக்கா ஒன் மான் சோ காட்டுறார் .அவரை எதிர்ப்பது என்றால் இவரை கொண்டுவருவதை தவிர வேறு வழியில்லை. சுமத்திரன் வெற்றி பெற்றால் கிழக்கில் எஞ்சி இருக்கும் எல்லைப்புறத்தமிழரின் நிலங்களை முஸ்லீம் காடையர் உரிமையுடன் பறித்து கொள்வார்கள் உங்கடை அண்ணர் ரெமி மார்ட்டிலை கவுட்டு ஊத்தி போட்டு கவலையின்றி திரிவார் இப்பவும் ஊடகங்கள் அவரை கருணா அம்மான் என்றே விழிக்குது அந்த பெயரை கேட்டாவது மனுஷனை பழையமாதிரி இருக்க சொல்லுங்கோ .கிழக்கில் உள்ள தமிழர்கள் வாழ்வில் நிம்மதியாவது இருக்கணும் .
 13. 2 points
  இதில ஆகச் சிறந்த பகிடி என்னவென்றால், வெள்ளையடிக்கப்பட்ட யாழ் நூலகத்தினை உத்தியோகப் பூர்வமாக திறந்து வைக்க இருந்தவர் ஆனந்த சங்கரி, செல்வன் கந்தையன் அல்ல. ஆனால் புலிகள் அதை விரும்பாமல் தடுத்தமையால் அதை அப்படியே மாற்றி புலிகள் செல்வன் கந்தையனை திறக்க விடவில்லை என்று பூச்சுத்துகின்றார்கள் ஷோபா சக்தியும் அவரது போலித் தலித் போராளிகளும். ஆனந்த சங்கரி ஏன் செல்வன் கந்தையனை திறக்க விடாது தான் திறக்க முனைந்தவர் என்ற கேள்வி எல்லாம் இந்த போலிப் போரளிகளுக்கு எழாது, ஏனென்றால் ஆனந்த சங்கரி புலி எதிர்ப்பாளர் என்பதால் அவர் இவர்களுக்கெல்லாம் செல்லம்.
 14. 1 point
  அப்படி செய்தால் சட்டி அப்பம் எண்டு சொல்வார்கள்.மீதமுள்ள அப்ப மாவுக்கு பனங்கட்டி சேர்த்து நல்லெண்ணெயை சட்டியில் தடவி சுட்டு எடுப்பார்கள். தடிமனான அப்பம் போல இதுக்கும் அது. அதுதான் தமிழரின் பான்கேக்.
 15. 1 point
  இனக்கலவரத்துக்கும் தமிழர்தான் காரணம் எண்டு சொல்லக்கூடிய ஆள் அவர்.
 16. 1 point
  உங்கடை எழுத்துக்களை பாக்கேக்கை நீங்கள் யாழ்தள வாசகர் மாதிரி தெரியேல்லையே....!!! பெரிய கருத்துக்கள பிலாப்பழங்கள் மாதிரியெல்லே தெரியுது. எங்கை உங்கடை அவரை ஒருக்கால் இந்த திரியிலை எழுதச்சொல்லுங்கோ பாப்பம்...
 17. 1 point
  இந்தத் திரியில பதில் எழுதுற கனபேர், ஏதோ சுமந்திரனின் குடும்பத்தை வாழ்த்தவில்லையென்றால் தங்களுக்கு பகையாளர்களின் எண்ணிக்கை கூடலாம் எனக் கவலைப்படுவதுபோலத் தெரிகிறது. பத்தில ஒன்றாக இந்த முயற்சியையும் பாராட்டலாம். ஆகா ஓகோ எண்டு புகழுறளவுக்கு இதில ஒண்டுமில்லை. முன்னாள் போராளிகள் உட்பட இருபதுவரையான குடும்பத் தலைவர்கள் இன்று சிறையில் இருப்பதற்கு இந்த சுமந்திரனும் ஒருவகையில் காரணம் தான். இவர் நினைச்சிருந்தால் அந்த இருபதுபேரை மட்டுமல்ல இன்னும் நிறைய பேரை வெளியிலை எடுத்திருக்கலாம்.
 18. 1 point
  நியாமான கருத்து.ஏனோ தெரியாது எமக்கு எதிரிகளை அதிகமாக்குவதில் அலாதிப் பிரியம்.
 19. 1 point
  எல்லாரும் ஒரு நாளைக்கு சாகத் தான் வேண்டும்யாயினி ...அம்மாவை நினைத்து வருந்தாமல் யாழில் வந்து பழையபடி எழுதுங்கோ ...அதன் மூலம் உங்கள் துயரம் குறையும்
 20. 1 point
  அண்ணை, அனுபவம் என்றால் எத்தனை பேரின் அனுபவம் உங்களுக்கு சரியான ஆலோசனையைத் தரும் என நினைக்கிறீர்கள்? 3, 30, 300? ஏனெனில் ஒவ்வொருவருக்கும் அவரது உடல் வாசி என்கிற genotype ஐப் பொறுத்து ஒவ்வொரு மாதிரியான அனுபவம் இருக்கும்! இதை சமன் செய்து ஒரு முடிவை அணுகத் தான் ஆயிரக் கணக்கானோரின் மருத்துவத் தகவல்களை திரட்டி ஆய்வுகள் செய்வது. அந்த ஆய்வுகளின் படி நீங்கள் குறிப்பிடும் இந்த நாடுகளில் மக்கள் இதய ஆரோக்கியத்தோடு வாழ்வதாக ஒரு ஆய்வு முடிவும் இல்லை! இதைப் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக நான் எழுதிய நாட்களில் , ஒவ்வொரு பகுதியையும் எழுதி முடிக்க ஒரு மணிநேரம் பிடிக்கும். தகவல்களைச் சரிபார்க்க இன்னுமொரு மணிநேரம் எடுக்கும்! மற்றவர்களின் உடல் நலத்திற்கு நிறுவப் பட்ட விஞ்ஞானத் தகவல்களை மட்டுமே வழங்க வேண்டுமென்று எடுத்துக் கொண்ட என் முயற்சி இங்கே மூன்று பேர் கெக்கலி கொட்டிச் சிரிக்கும் ஜோக்காக இருந்திருக்கிறது என்பது எனக்கு ஒரு eye-opener ! இதை வெளிக்கொணர்ந்த உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்!
 21. 1 point
  மீண்டும்.... கொலை யுதிர் காலம்... இம்முறை சிங்கள பகுதிகளில் மட்டும்.... சிலவேளைகளில் முஸ்லீம் பகுதிகளிலும் நடக்கும்... நமக்குத்தான் இழப்பதற்கு எதுவும் இல்லை... கோவணத்தை கழட்டி கொடுத்து விட்டு போய் கிட்டே இருப்பமில்ல.
 22. 1 point
  நாமல் உண்மையில் இப்படியான அலுவல் செய்ய உகந்தவர். அவருக்கு தமிழ் மக்களிடம் குறிப்பாக இளையோரிடம் நன்மதிப்பு உள்ளது. ராஜபக்சவும் ஒரு ராஜதந்திரி குடும்பத்திற்குள் ஒப்பிடும்போது நல்லவர். இவர்களால் தான் சித்தப்பா பதவிக்கு வந்தவர். சித்தப்பா போனை தூக்கி வைத்துவிட்டு இரவு இரவா கொலை செய்யும் ஒரு சைக்கோ! அதுவும் சின்ன சித்தப்பாவின் கூட்டாளிகள் சுத்தமாக சரியில்லை. பெரியப்பா கூட்டம் அவரை முடக்க பார்க்கிறார்கள். இன்னும் நிறைய சூப்பர் சுட சுட பூராயம் வரப்போகிறது.
 23. 1 point
  தலித் என்ற சொல் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட தீண்டத் தகாதவர்கள் என இநதியாவில் அடயாளப்படுத்தப்படுகின்றவர்களை அழைக்கும் சொல. இந்தியாவின் சாதீய கட்டமைப்புக்குள்ளும் வராதவர்கள் தலித் எனப்படுவார்கள். பிரம்மாவின் தலை தோழ் தொடை பாதத்தில் இருந்து பிறக்காமல் புறம்பாக பிறந்தவர்கள். பிராமணர்களால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு பின் அவர்கள் இந்திய அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியதும் சாதிச் சான்றிதழ்களாக FC forward cast , OBC other backward cast SC ST Scheduled Castes and Scheduled Tribes என்று அடுத்த நிலைக்கு கொண்டுவந்தார்கள். ஈழத்தில் சாதிய ஒடுக்குமுறைகள் பாகுபாடுகள் இருப்பது எல்லோரும் அறிந்தது ஆனால் இவ்வாறான இந்திய கட்டமைப்பு போல் அவை வரையறுக்கப்பட்டவை அல்ல. இந்திய மத்திய அதிகாரம் ஒரு போதும் சாதிய ஒழிப்பை நடமுறைப்படுத்தாது. இந்தியா பல நாடுகளை இணைத்து பார்பனர்களும் பானியாக்களும் ஆழும் ஒரு தேசம். தேசீய இனங்களை சாதிவாரியாக பிரித்து சிதைத்து தான் இந்த அதிகாரம் சாத்தியமாகின்றது. ஒரு கால கட்டத்தில் புலிகள் இயக்கம் சாதியத்தை கடந்து இனமாக எழுச்சிபெற்றிருந்தது. அக்காலத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதுதான் தலித் என்ற புதிய வடிவம். இதற்கு தலித் அல்லாதவர்கள் தலமை தாங்கி அதாவது யாரால் ஒடுக்கப்ட்ட சாதிகள் பாதிக்கப் படுகின்றார்களோ அவர்களே ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக சத்தம் போட முற்பட்டார்கள். புலிகளுக்குள் சாதியப் பிரிவினைகள் என புரளிகளை கிழப்பினார்கள். எல்லாம் நவீன எலக்கியங்கள்.
 24. 1 point
  கொழும்பான்.. நீங்கள் என்ன முஸ்லீமா..?! இப்ப முஸ்லீம்கள் தான் சுமந்திரனை தலையில் தூக்கி வைச்சு ஆடுகிறார்கள். காரணம்.. அவர்கள் பக்கம் அவ்வளவு சட்டாம்பிகளுக்கு பிரச்சனை. இவற்ற மகன் மட்டுமா.. ஆண்டு தோறும்.. எங்கள் யாழ் இந்து மாணவர்கள் சர்வதேச போட்டிகளில்.. தங்கம்.. வெள்ளி.. வெண்கலம் என்று குவிப்பதை எல்லாம்.. நீங்கள் செல்லும் தளங்கள் செய்தி ஆக்குவதில்லைப் போலும். இதெல்லாம்.. பெரிய சாதனை கிடையாது. நல்ல முயற்சி அவ்வளவே. முயற்சிக்கு பாரட்டலாம். அண்மையில் கூட கூகிள் நிறுவனத்தில் சர்வதேச விருதொன்றை யாழ் இந்து மாணவன் பெற்றிருந்தார் அவரின் கண்டுபிடிப்புக்காக. அதை எல்லாம்.. இப்படி தேசத்தின் கீர்த்தி.. மண்ணாங்கட்டின்னு ஒரு முஸ்லீம் தளமும் இணைக்கவில்லையே. எதுக்கு இந்த காக்கா புத்தி.
 25. 1 point
  நன்றி உடையார். கட்டாயமாக தேங்காய் எண்ணெயை பாவியுங்கோ. virgin coconut oil தான் நல்லது. refined சரியில்லை. வெள்ளயல் சிலருக்கு தேங்காய் எண்ணெய் மணம் பிடிக்காததால் refined எண்ணெய் பாவிக்கிறார்கள். அத்துடன் தேங்காய் எண்ணெயின் நல்ல பலன்கள் (தோல் மினுக்கம் உற்பட) Virgin Coconut oil இல் தான் இருக்கு
 26. 1 point
  நேட்டோ காணாமல் போகும்.
 27. 1 point
  அண்ணர் குறிப்பிட்டது என்னைத் தான் என்று நினைக்கிறேன்! தேங்காய் எண்ணை இதய நலனுக்கு நல்லது என்று நிறுவும் எந்த நம்பகமான ஆய்வுகளும் இது வரை வரவில்லை! உடலின் மேற்பரப்பான தோலுக்கு தேங்காய் எண்ணை நல்லது. ஏனெனில் அதில் இருக்கும் saturated fat தோலில் இலகுவாகத் தங்கி மினு மினுப்பூட்டும்! இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தேங்காயெண்ணையில் இருக்கும் saturated fat கொலஸ்திரோலை அதிகரிக்கும் என்பதே இது வரையில் கண்டறியப் பட்ட தகவல். ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் அபிப்பிராயம் கீழே: https://www.health.harvard.edu/heart-disease-overview/coconut-oil-heart-healthy-or-just-hype#:~:text=It is said that coconut,attack and other cardiovascular events.
 28. 1 point
 29. 1 point
  மரியாதை கேட்டு பெறுவதல்ல அப்படி பெற்றால் பிச்சை .
 30. 1 point
  வறுமை - அநேகமான பெற்றோர்கள் வறுமை காரணமாக பிள்ளைகளை வேலைக்கு அனுப்பி வைக்கிறார்கள் கல்வி - அரசால் போதிய கல்வி வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என சட்டம் இருக்கலாம். ஆனால், யதார்த்தம் அதுவாக இல்லை சுரண்டல் - இவ்வாறான சிறுவர்களை வேலைக்கு வைத்து பணம் உள்ளவர்கள் மேலும் பணக்கார்கள் ஆகின்றனர். அவர்களை அரசு தண்டிப்பது ... குறைவு.
 31. 1 point
  எமது மண்ணின் இறுதி மன்னனான சங்கிலியனை நினைவு கூரும் போது சங்கிலியனுடன் தொடர்பான வரலாற்று ஆதாரங்களை தேடி அவற்றை காட்சிபடுத்தி புதிய சந்ததிக்கு எமது வரலாற்றை கூறும் நிகழ்வே இஙு்கு முக்கியம். இதை ஒரு சமய நிகழ்வு போல் திவசம் செய்வது வெறும் கேலி கூத்து மட்டுமல்ல நீங்கள் கூறியது போல் சமய பிரச்சனையை உண்டு பண்ணும் சதி நிகழ்வாகவே இருப்பதாகவே தெரிகிறது. சங்கிலியன் எமது வரலாற்று அடையாளம். அதற்காக அவரது ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை எல்லாம் நியாயப்படுத்த முடியாது. ஆனால் நிச்சயம் சங்கிலியனின் வரலாற்று ஆதாரங்கள் தேடி எடுக்கபட்டு நினைவு சின்னமாக பராமரிக்கப்படல் வேண்டும்.
 32. 1 point
  இப்ப என்ன தான் சொல்ல வருகிறீர்கள் சிறி என்ன சட்டி கறுப்பா?
 33. 1 point
  வாழைக்குலைக்கு புகையடிப்பது தவறான செயல் அல்லவே. கூடுதலான கமக்காரர்கள் இதனைத்தானே பின்பற்றுகிறார்கள்.குலை தண்டில் ஒரு அஸ்பிறின் குளிசையை ஏற்றி விட்டாலும் பழுக்கும். செம்பியன்பற்று ஆள் இஞ்சையும் இருக்கிறார்.
 34. 1 point
  a to z மிகவும் அழகாக இருக்கின்றது....தொடர்ந்து உங்களின் காணொளிகளை பதிவிடுங்கள்.......!
 35. 1 point
  இலங்கையில் சாதி ரீதியான ஒடுக்குதல்கள், தீண்டாமை என்பன இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கின்றன. அதிலும் யாழ்ப்பாணத்தில் இன்னும் அதிகமாகவே இருக்கிறது.இவ்வளவும் ஏன் "யாழ்" என்ற சொல்லுக்கூட ஒருவித மேட்டிமைத்தனம் தான். தலித் ஒரு இந்திய சொல்தான். ஒடுக்கப்படும் மக்களின் அடையாளமாக அந்தச்சொல்லை பாவிக்கிறார்கள். பஞ்சமர் என்ற சொல்லை பலரும் பாவிப்பதும் உண்டு. சொல்லில் என்ன இருக்கிறது ஆயிரம் தமிழ் சொல் இப்படி வந்திருக்கிறது. அப்படிப் பார்த்தால் சேலைக்கூட எங்கள் அடையாளம் இல்லையே. தாலி தமிழர் மரபில் இல்லை. இன்று பலரும் புலி உருவ தாலி போடுவதை ஏற்றுக்கொள்கிறோம் தானே. அப்படி இந்த சொல்லை குறியீடாக பாவிப்பதில் என்ன குறைந்துவிடப்போகிறது. மாற்றங்களை உள்வாங்காதவரை எதுவும் சாத்தியமில்லை. பிழையானவர்கள் கையில் சாதிய முரண்பாடுகள் போய் விடாமல் தடுக்கவேண்டியது மிக முக்கியம். பிழையானவர்கள் பிழையாகவே வழிநடத்துவர். சரியானவர்கள் அதனை எடுத்து சரி செய்துவிடவேண்டும். விலகிப்போக கூடாது. புதுவை, சேரன் எப்படி முக்கியமான கவிஞரோ, நிலாந்தன் எப்படி முக்கியமான கருத்துருவாக்கியோ , ஜெயபாலன் எப்படி ஒரு முக்கியமான நடிகர் கவிஞர் சமூக செயற்பாட்டாளரோ அதேபோல சோபா சக்தியும் ஒரு எழுத்தாளர்தான். சும்மா குடிகாரன் என்றோ அழுக்கான ஆடை அணிபவர் என்றோ ஒருமனிததை அடையாளப்படுத்துவதை வெறுக்கிறேன். உங்கள் உறவுகள் கூட இப்படி நிறையபேர் இருக்கக்கூடும். அவர்களையெல்லாமா வெறுப்பீர்கள். நீங்கள் பிரான்சில் இருப்பதாக பதிவு செய்திருக்கிறீர்கள். எத்தனை தமிழர்கள் அங்கு தெருவில் இருப்பதாக வீடியோ எல்லாம் போட்டார்கள். அவர்களையெல்லாம் ஒதுக்குவீர்களா என்ன
 36. 1 point
  யார் செய்கிறார்கள் என்பது முக்கியமல்ல என்ன செய்கிறார்கள் என்பதே முக்கியம்.
 37. 1 point
  தேசிய தலைவரை அன்று காப்பாற்றி ஜாமீன் எடுத்து உபசரித்தவர்களும் இப்ப நம்ம ஆட்கள் பார்வையில் துரோகிகள் தான்.
 38. 1 point
  எல்லாளன் ,சங்கிலியன் ஈறாக பிரபாகரன் போன்ற வீரர்கள் வரைக்கும் துரோகத்தால் வீழ்த்தப்பட்டனர். ஆனால் வாய் வீரர் சம்பந்தனை யாரும் துரோகத்தால் வீழ்த்த முடியாது.
 39. 1 point
 40. 1 point
  இதன் வேர்களைப் புரிந்துகொள்ளாமல் இந்த பிரச்னையை அணுகமுடியாது. 1) சந்திரிக்கா முதலில் தானே நூலகத்தை திறக்க விரும்பியிருந்தார். அதற்காக மன்னிப்பு எல்லாம் கேட்டு ஐ.தே கட்சியை பழிவேண்டும் அரசியல் அதற்கு ஆனந்தசங்கரி துணைபோனார். (அனந்தசங்கரிக்கு சமாதான தூதுவர் விருதெல்லாம் வெளிநாட்டில் வழங்கப்பட்டது. பிரான்ஸ் அரசு சந்திரிகா பிரான்சில் கல்வி கற்றவர் ) 2) அக்காலப்பகுதி சமாதான உடன்படிக்கை உருவாகி ஒருவருடம் நிறைவு பெறவில்லை. புலிகள் சர்வதேசத்தால் கண்கொத்திப் பாம்பு போல கண்காணிக்கப்பட்டார்கள். 3) புலிகள் சாதி தொடர்பில் தம்மால் இயன்றவற்றை செய்தார்கள். தண்டனைகள் கூட வழங்கி இருக்கிறார்கள். சட்டங்கள் கூட இயற்றி இருக்கிறார்கள். அதில் அவர்கள் பூரணமாக தொழிற்படவில்லை என்பவர்கள், அவர்கள் ஒரு போராளிகள் குழு என்பதை மறந்துவிடுகிறார்கள். இவர்கள் என்ன சாதி ரீதியாக தொடுக்குபவரை சுட வேண்டும் என்று சொல்கிறார்களா ?அப்படி சுடடால் அதற்கு மனிதஉரிமை என்று வருவார்கள். புலிகளைபபொறுத்தவரை அவர்கள் 18 வயதுகளில் ஆயுதம் ஏந்துகிறார்கள். அமைப்புக்குள் சாதி இல்லை. அவர்கள் அந்த அமைப்பின் வளர்ச்சியுடன் உருவாகுகிறார்கள்.தீண்டாமை பற்றிய எதுவுமே அவர்களிடம் இல்லை. மக்களும் அவர்களிடம் காட்டவில்லை. அன்கொன்றும் இன்கொன்றுமாக .. இருந்ததை அவர்கள் தமிழீழத்தில பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்கள். பின் காலத்தில் தான் சமூகநீதி பற்றிய கல்விகள் நடைமுறைப்படுத்தகிறது. போராளிகள் குழுவாக இருந்து அரசாக மாறும்போது அது இயல்பாகவே உள்வாங்கப்படுகிறது 4) இலங்கை அரசு கூட 57 களில் சாதி ஒடுக்குமுறைக்கு சட்டம் கொண்டுவந்திருக்கிறது. நீதிமன்றங்களில் வழக்கு தானே செய்ய முடிந்தது. 5)சாதி ரீதியாக புலிகளை தீண்டாதவர்களாக்கும் ஒரு பொறிமுறை புலம்பெயர்ந்த புலி எதிர்ப்பாளர்களால் உருவாக்கப்பட்டது. அது புலிவிரோத அரசியல். தமிழ் நாட்டின் சில அறிவுஜீவிகள் உடன்போனர்கள். 2009 புலிகள் அழிவின் பின் அவர்கள் தங்களுக்குள் சண்டை பிடித்து பலவேறுகுழுக்களாகி விட்டார்கள். இலக்கிய இருப்புக்காக சிலர் இன்னும் புலி எதிர்ப்பை பேசுகிறார்கள். 6) மேயர் செல்லன் கந்தையா அவர்கள் ஒரு துணைமேயர். ரவிராஜ் mp ஆகியபின் மேயர் ஆக்கப்பட்டார். அவர் கூடடணிக்குள் எவ்வாறான ஒடுக்குதலுக்கு எல்லாம் ஆளாக்கப்பட்டார் என்று பேசுவரில்லை. இன்றுவரை சாதியாக இயங்கும் கூட்டமைபை இன்னும் ஆதரிக்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் செய்யும் புலி நீக்க அரசியல். (புலிகளின் காலத்தில் தாழ்த்தப்பட்ட இந்த வார்த்தைக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இனத்தவர் சிலர் பாராளுமன்றம் போயிருந்தனர். அதையும் பேசுவாரில்லை ) 7)ஆனந்தசங்கரி புலிகளை விரோதிக்கிறார் சந்திரிக்கா ஏற்படுத்திய சாணக்கியம் அது. பேச்சு மேடையில் தானும் இருக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். அதன் மூலம் புலிகளை பலவீனமான ஒரு தரப்பாக்க சந்திரிக்கா விரும்புகிறார். (ரணிலும் அதைத்தான் செய்தர். சந்திரிக்காவை விட ரணில் எவ்வளவு புத்திசாலி பாருங்கள்) 8 ) பல்கலைக்கழ மாணவர் தலைவர் அழைக்கப்பட்டு விளக்கமளிக்கப்படுகிறார். (அவர் தங்களை ஒரு ஹீரோ நிலையில் வைத்துதான் அன்று இருந்தனர். 40 ஆயிரம் சவப்பெட்டிகள் கதைக்கு அப்பாடியோரு கிழி வேண்டியிருந்தார் தலைமையிடம் ) பல்கலைக்கழ மாணவர்கள் ஒன்றியம் சங்கரியுடன் பேச்சு நடத்துகிறது, சங்கரியார் உடன்படவில்லை. மாவை சம்மந்தன் உற்பட்ட முக்கிய தமிழரசுக் கடசியினர் நூலகத்தை நினைவுச் சின்னமாக வைத்திருக்கவே விரும்பினார். ஏனென்றால் அது அவர்கள் கால அடையாளம். 9 ) ஆனந்த சங்கரி செல்லன் கந்தையாவை பயன்படுத்துகிறார். ஆனந்தசனகிரியின் வலதுகை வடமராட்சி உறுப்பினர் மேயரை தாக்குகிறார். அதற்க்கு வேறு காரணம் சொல்லபப்டுகிறது. 10 ) புலிகள் வெளியில் நின்று ஆலோசனை சொல்கிறார்கள். அவர்களுக்கு நூலகம் பொருட்டாக இல்லை. ஆனால் சமாதானகாலத்தில் நடைபெறும் புனரமைப்புகளின் நிகழும் அரசியலுக்கு தலையீடு கடுமையாக செய்கிறார்கள். தமிழீழம் என்ற கோரிக்கையில் நூலகம் ஒரு துரும்பு. ஆனால் அன்றைய புனரமைப்பை புலிகள் விரும்பவில்லை என்பதும் உண்மைதான். காரணம் சர்வதேச தூதுவர்களை அதனை ஒரு அடையாள சின்னமாக வைத்திருக்க விரும்பினார்கள். (உண்மையும் தானே ) 11) இப்ப புலி எதிர்பாளர்கள் தங்கள் இருப்புக்காக தமக்கு ஏற்றவாறு வளைத்து பேசுகின்றனர். அவர்களின் சந்தர்ப்பாவாத உரைகளை கேளுங்கள். தமிழ் நாட்டிலிருந்து விடுதலைப்புலிகளின் தலைவர் ஒரு தலித் தான் என்பார்கள். வெளிநாட்டு செய்திகளில் புலிகளை போற்றியே பேசுவதாக சொல்வார்கள். நேர் எதிராக இங்கு பேசுவார்கள். புலிகளின் அதனை கொலை கொள்ளைகளுக்கு ஆதரவாக ஆரம்பகாலத்தில் இருந்துவிட்டு இப்ப அதற்கு வியாக்கியானம் கூறுவார்கள். இதுதான் அசல் வெள்ளாள ஆதிக்க புத்தி.
 41. 1 point
  லீசிங் மாபியாக்களால் கொல்லப்படும் முன், சுனில் இறுதியாக கூறியது என்ன..? - ஹரிணி செல்வராஜ் - இலங்கையிலுள்ள அப்பாவி மக்களை மாபியா அல்லது பாதாள உலக கோஷ்டிகளிடமிருந்து காப்பாற்றுமாறு இலங்கை சுயதொழிலாளர்களின் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன இறுதியாக முகநூல் நேரடி ஒளிபரப்பு ஊடாக ஜனாதிபதியிடம் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். அதேநேரம், இந்த முகநூல் ஊடாக சுனில் ஜயவர்தன என்ன கூறினார்? இதோ விபரம்.. 'கொரோனா பிரச்சினையிலிருந்து நாடு விடுபட்டு , முச்சக்கரவண்டியொன்றை பயன்படுத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. பிக் மீ, ஊபர் போன்றவற்றிற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்கமும் பிக் மீ, ஊபர் ஆகியவற்றில் செல்லுமாறு கூறுகின்றது. ஜனாதிபதி அவர்களுக்கு இது தெரியவில்லையா? கௌரவத்திற்குரிய ஜனாதிபதி அவர்களே!... நீங்கள் மக்களுக்கு லீசிங் நிவாரணமொன்றை வழங்குவதாக ஏமாற்றி, அந்த ஏமாற்றத்திற்கு மக்கள் சிக்குண்டுள்ளனர். மிரிஹான பகுதியில் உங்கள் வீட்டிற்கு முன்பாக இந்த நிறுவனம் உள்ளது. முச்சக்கரவண்டியை செலுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டு ஒரு வார காலம் கூட கிடையாது. சிறு தொகையை கூட உழைக்க முடியாத நிலையில் இவர்கள் உள்ளனர். 50 அல்லது 100 ரூபா என உழைத்து தமது குடும்பத்தை நடத்தி செல்லும் இந்த சந்தர்ப்பத்தில் இந்த இடத்தில் அப்பாவி ஒருவரின் வாகனம் சூறையாடப்பட்டுள்ளது. பாதாள உலக கோஷ்டி உறுப்பினர்களை பயன்படுத்தி, அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வாகனங்களை சூறையாடிச் செல்கின்றனர். அந்த நடைமுறையொன்று தற்போது செயற்பட்டு வருகின்றது. நீங்கள் பாதாள உலக நடவடிக்கைகளை இல்லாது செய்ய முயற்சிக்கின்றீர்கள். பாதாள உலக செயற்பாடுகள் லீசிங் நிறுவனத்திற்குள்ளேயே செயற்படுகின்றன. லீசிங் செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களே பாதாள உலக கோஷ்டித் தலைவர்கள். சிறு அளவில் செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து போதுமானதாக இருக்காது. இவ்வாறானவர்கள் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறானவர்களை கொலை செய்து, தொங்க விட வேண்டும். பாதாள உலக நடவடிக்கைகளே அப்பாவி மக்களை சூறையாடுகின்றது. கௌரவத்திற்குரிய ஜனாதிபதி அவர்களே! போதைப்பொருள் பாதாள நடவடிக்கைகளை விடவும், அப்பாவி மக்களை சூறையாடும் பாதாள உலக செயற்பாடுகளே மோசமானது. இந்த நபருக்கு குடும்பத்தை கொண்டு செல்ல முடியாதுள்ளது. பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாதுள்ளது. இவர்களுக்கு உணவு உட்கொள்ள முடியாதுள்ளது. இந்த நாட்டிற்குள் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. உங்களின் லீசிங் நிவாரணத்திற்கும், அவர்களுக்கும் தொடர்பு கிடையாதாம். இவர்களுக்கு பல்வேறு கட்டளைகள் இருக்கின்றனவாம். அவற்றையே இவர்கள் செயற்படுத்துகின்றார்களாம். ஜனாதிபதி அவர்களே. நாம் தற்போது ஜனாதிபதி செயலகத்துடன் கதைத்தோம். அங்குள்ள விடயத்திற்கு பொறுப்பான அதிகாரியை தெளிவூட்டினோம். அவர் மீண்டும் எனக்கு அழைப்பை மேற்கொண்டு, ஜனாதிபதி செயற்பாடுகளை முன்னெடுக்கும் குழுவிற்கு இந்த விடயத்தை தெளிவூட்டுவதாக அவர் உறுதியளித்தார். இவ்வாறான முறையற்ற விடயங்கள் இந்த நாட்டிற்குள் செயற்படுத்தப்படுகின்றன. நாடு தற்போதே திறக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பாதாள உலக செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. வாகனங்களை சூறையாடப்படும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களே, இந்த விடயம் தொடர்பில் உடனடியாக தலையீடு செய்யுங்கள். அப்பாவி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உடனடியாக தலையீடு செய்யுங்கள். இல்லையென்றால், இந்த நாட்டிலுள்ள எட்டு லட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் உள்ளன. அவற்றில் 99 வீதமானவை லீசிங் மூலம் பெற்றுகொள்ளப்பட்டுள்ளன. இந்த லீசிங் செய்த அனைவரும் இந்த பிரச்சினையை தற்போது எதிர்நோக்கி வருகின்றனர். இந்த மூன்று மாத காலத்தில் இலங்கையிலுள்ள அனைவருக்கும் லீசிங் கொடுப்பனவு செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பணம் செலுத்த முடியாத நிலையிலுள்ள வாகனங்களே இன்று இலங்கையில் உள்ளன. இந்த அனைத்து வாகனங்களையும் லீசிங் நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் பிரச்சினை முடிவடையும். தயவு செய்து ஜனாதிபதி இந்த விடயத்தில் தலையீடு செய்யுங்கள். இந்த மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்துங்கள். செல்வந்தர்களின் வாகனங்களின் மீது இவர்கள் கை வைக்க மாட்டார்கள். முச்சக்கரவண்டி போன்ற சிறு வாகனங்களின் மீதே கை வைக்க ஆரம்பித்துள்ளார்கள். மக்கள் மீது தாக்குதல் நடத்தி, திட்டி, வாகனங்களை கையகப்படுத்துகின்றனர். இந்த விடயம் தொடர்பில் உங்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். இன்று அல்லது நாளை இந்த பிரச்சினைக்கு தீர்வை காணுங்கள். இந்த தகவலை நாம் எடுத்துகொண்டு நாளை ஜனாதிபதி, உங்களின் வீட்டு முற்றத்திற்கு வர போகின்றோம். இந்த நிறுவனம் உங்களின் வீட்டுக்கு அருகிலேயே உள்ளது. உங்களின் வீட்டு முற்றத்திற்கு குழுவாக நாம் நாளை வருகைத் தந்து எதிர்ப்பை வெளியிடவுள்ளோம். மிக்க நன்றி. - என்று கூறியிருந்தார் சுனில் தமிழன் http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_639.html
 42. 1 point
  நன்றி பையா, என்னால் முடிந்ததை செய்கிறேன், கடமைப்பட்டவன் பலருக்கு. பிள்ளைகளையும் பழக்கி எடுக்கனும், மற்றவர்களுக்கு உதவினால் அது ஒரு தனி மகிழ்ச்சி, அவர்களுக்கும் விருப்பம், இதுதான் முதல் தொடக்கம்
 43. 1 point
 44. 1 point
  நம்ம ஊர் ஆட்டிறைச்சி குழம்பு, அதுவல்ல விடயம்..... இதன் செய்முறையின் அழகைப் பாருங்கள்.....முடிவில் அந்தக் கறியின் உறைப்பும் வாசமும் மூக்கில் வந்து மோதுவதை உணர்வீர்கள்......!
 45. 1 point
  வாழ்த்துக்கள் உடையார், சிறப்பாக வளர்த்துளீர்கள்
 46. 1 point
  வாழ்த்துக்கள் உடையார், சிறப்பாக வளர்த்துளீர்கள்
 47. 1 point
  150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “AMPHAN” (உச்சரிப்பு UM-PUN) என்ற மிகப் பாரிய சூறாவளியானது மிக மிகப் பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து நேற்று (2020 மே 18ஆம் திகதி) காலை 05.30 மணிக்கு மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 765 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 13.20 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 86.30 E இற்கும் இடையில் தென்வங்காள விரிகுடா மத்திய பகுதி கடற்பரப்புகளுக்கும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளுக்கும்மேலாக மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு மிக மிகப் பாரிய மீயுயர் சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது மே 20ஆம் திகதி வடக்கு – வடகிழக்கு திசையில் பிற்பகலளவில் மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தென்,மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்மாகாணங்களில்அடுத்த 12 மணித்தியாலங்களில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மழை நிலைமை: கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை காணப்படும். புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக்காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/150-மில்லிமீற்றர்-மழைவீழ்ச/
 48. 1 point
  ஸ்ரீலங்காவில் சீரற்ற காலநிலை; இதுவரை இருவர் உயிரிழப்பு ஸ்ரீலங்காவில் பெய்துவரும் கனமழையால் தற்போதுவரை இருவர் பலியாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கேகாலை, வத்தாராமஹெல பகுதியில் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாகவும், கேகாலை வல்தெனிய பகுதியில் மண் திட்டு இடிந்து வீழ்ந்ததில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/143394 தாழமுக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களில் சூறாவளியாகக்கூடும்! சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாற்றமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இது தற்போது திருகோணமலையில் இருந்து வடகிழக்கு திசையில் சுமார் 670 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்த நிலையில், நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையினால் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. கேகாலை மாவட்டமே மழையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கேகாலை – இம்புல்கஸ்தெனிய பகுதியில் வௌ்ளத்தில் சிக்குண்ட 48 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, கேகாலை வல்தெனிய பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 65 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பலத்த மழை காரணமாக கேகாலை மாவட்டத்தில் இதுவரை 530 குடும்பங்களை சேர்ந்த 1830 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். மூன்றாம் கட்ட சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் பகுதிகளில் மண்சரிவு, மண்மேடு சரிந்து வீழ்தல், கற்பாறை சரிதல் மற்றும் நிலம் தாழிறங்கல் அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கு மக்கள் பாதுகாக்கான இடங்களை நாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, கொழும்பு, கேகாலை, குருணாகல் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இதனால் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிற்கு செல்வதை மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/143392
 49. 1 point
  இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் போகலே தனது சான்றுகளை இன்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்விடம் கையளித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தனது கடைமைகளை பொறுப்பேற்றார். கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை தொலைபேசியில் தொடர்புகொண்ட உயர்ஸ்தானிகர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு தான் தயாராக உள்ளதாக தெரிவித்தார். இரண்டு நாடுகளும் பல காலங்களாக இணைந்து செயற்பட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலான நடவடிக்கைகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என இரா. சம்பந்தன் உயர்ஸ்தானிகருக்கு உறுதியளித்தார். https://www.ibctamil.com/srilanka/80/143241
 50. 1 point
  பாடசாலைகள் எப்போது திறக்கப்படும் ?முக்கிய செய்திகள் பாடசாலைகளை திறப்பது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாணவரினதும் பாதுகாப்பினை உறுதி செய்யும் வரையில் பாடசாலைகளை திறக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பாடசாலைகளில் நீர் வசதிகள் துளியளவும் இல்லை எனவும் அவ்வாறான பாடசாலைகளில் மாணவர்கள் கை கழுவுவது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாணவ மாணவியரின் பாதுகாப்பே மிகவும் முதன்மையானது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.உடல் வெப்பநிலையை அளவீடு செய்யும் கருவிகள் கொள்வனவு செய்யபய்பட உள்ளதாகவும் சுமார் 20ஆயிரம் கருவிகள் இவ்வாறு பாடசாலைகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற மேலும் பல செய்திகளுடன் இன்றைய முக்கிய செய்திகள் https://www.ibctamil.com/srilanka/80/143235