• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard


Popular Content

Showing content with the highest reputation on திங்கள் 15 ஜூன் 2020 in all areas

 1. 3 points
  வ‌ண‌க்க‌(ம்) உற‌வுக‌ளே நாம் எல்லாம் த‌மிழீழ‌ ம‌ண்ணில் பிற‌ந்து புல‌ம் பெய‌ர் நாட்டில் வாழுகிறோம் , இப்ப‌டி ஒரு திரி யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் இத‌ற்கு முத‌ல் திற‌ந்தின‌ம்மோ தெரியாது , நேர‌ம் இருக்கும் போதெல்லாம் யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் எழுதும் ஆக்க‌ங்க‌ளை வாசிப்பேன் , 12வ‌ருட‌த்துக்கு முத‌ல் ப‌ழைய‌ யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் எழுதின‌துக‌ளையும் வாசிப்பேன் சின்ன‌னில் எம் முன்னோர்கள் எம‌க்கு சொல்லி த‌ந்த‌ ப‌ல‌ நூறு ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ளை ம‌ற்றும் எம் க‌ண்ணால் க‌ண்ட‌ ந‌ல்ல‌ நிக‌ழ்வுக‌ளை நாம் ஒரு போதும் ம‌ற‌க்க‌ப் போர‌தும் இல்ல‌ , த‌மிழீழ‌த்தில் திரும‌ண‌ நிக‌ழ்வில் இருந்து சாம‌த்திய‌ வீடு பிற‌ந்த‌ நாள் நிக‌ழ்வுக‌ளில் நாம் க‌ல‌ந்து கொண்டு இருப்போம் , சிறு வ‌ய‌தில் நான் க‌ண்ட‌ திரும‌ண‌ நிக‌ழ்வு , தமிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌முறையில் நட‌ந்த‌ திருமண‌ங்க‌ள் , மாப்பிளைக்கு பால த‌லைக்கு வைத்து குளிப்பாட்டி ம‌ன‌வ‌ரையில் உக்கார‌ வைத்து திரும‌ண‌ பெண்ண‌ அமைதியாய் கூட்டி வ‌ந்து மாப்பிளைக்கு ப‌க்க‌த்தில் உக்கார‌ வைத்து ஆலாத்தி எடுத்து பிற‌க்கு கோயிலில் வைத்து தாலி க‌ட்டுவ‌து தான் ஊர் திரும‌ண‌ முறை , புல‌ம்பெயர் நாட்டு திரும‌ண‌ம் மாப்பிளை ம‌ன‌வ‌ரையில் இருப்பார் , திரும‌ண‌ பெண்ண‌ பார்த்தா அவாவின் தோழிக‌ளுட‌ன் ஆட்ட‌த்துட‌ன் வ‌ருவா மாப்பிளையிட‌ம் , ஏன் இந்த திடிர் மாற்ற‌ங்க‌ள் குறுகிய‌ காலங்க‌ளில் , என‌க்கு இப்ப‌டியான‌ கொண்டாட்ட‌ங்க‌ள் சுத்த‌மாய் பிடிக்காது , ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு அது பிடித்தா அதில் நாம் த‌லையிட‌ முடியாது அது அவ‌ர்க‌ளின் த‌னிப்ப‌ட்ட‌ விருப்ப‌ம் என்று க‌ட‌ந்து செல்வ‌து தான் புத்திசாலித் த‌ன‌ம் , என‌து சொந்த‌ங்க‌ள் கொண்டாட்ட‌த்துக்கு என்னை அழைப்பின‌ம் , ஆவ‌த்துக்கு பாவ‌ம் இல்லை என்று ஏதாவ‌து பொய்யை சொல்லி கொண்டாட்ட‌த்தில் நான் க‌ல‌ந்து கொள்வ‌தில்லை , க‌ட‌சியில் உற‌வுக‌ளுக்கே தெரிந்து விட்ட‌து இவ‌ன் கூப்பிட்டா வ‌ர‌ மாட்டான் அழைப்பித‌ல் குடுப்ப‌த‌ விட‌ குடுக்காம‌ விட‌லாம் என்று , இப்ப‌ என்னை கொண்டாட்ட‌த்துக்கு அழைப்ப‌து இல்ல‌ என்ர‌ சொந்த‌மும் மேல‌ நான் எழுதின‌த‌ போல‌ ஊர் திரும‌ண‌ முறைய‌ ம‌ற‌ந்து அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளுக்கு ஆட்ட‌ம் பாட்ட‌முட‌ன் திரும‌ண‌த்த‌ செய்து வைக்கின‌ம் , கால‌ங்க‌ள் போக‌ போக‌ வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வை போல‌ த‌மிழ‌ர்க‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வுக‌ளும் புல‌ம்பெய‌ர் நாட்டில் ந‌ட‌க்கும் இந்த‌ திரி எம் இன‌த்த‌ கேவ‌ல‌ப் ப‌டுத்த‌ திற‌க்க‌ வில்லை , சிறு வ‌ய‌தில் நான் க‌ண்ட‌ திரும‌ண‌மும் புல‌ம்பெய‌ர் நாட்டு திரும‌ண‌மும் ப‌ற்றிய‌து ,நான் என்ன‌ சொல்ல‌ வ‌ந்தேன் என்ற‌த‌ புரிந்து கொள்ளுவிங்க‌ள் என்று நினைக்கிறேன் யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் உங்க‌ள் ப‌தில‌ தாரால‌மாய் எழுத‌லாம் , இத‌ ப‌ற்றி கொஞ்ச‌ம் விவாதிப்போம் உற‌வுக‌ளே பைய‌ன்26
 2. 3 points
  சில திருமணங்கள்... அவர்களின் வருமானத்துக்கு மிஞ்சிய செலவுகளுடன்... மற்றவர்களுக்கு... "பவர்" காட்டுவதற்காக செய்வதைப் பார்க்கும் போது... அவர்கள்... மற்றவர்களின் பார்வையில், தாழ்ந்து விடுகின்றார்கள் என்பதை, அவர்கள் சிந்திப்பது இல்லை.
 3. 2 points
  கலட்டியில் பெண்களுடன் சேட்டைவிட்ட நால்வர் நையப்புடைப்பு யாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் வீதியால் செல்லும் பெண் பிள்ளைகளுடன் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் நால்வர் நையப்புடைக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (14) மாலை இடம்பெற்றுள்ளளது. கலட்டி வீதியால் செல்லும் பெண்களுடன் தொடர்ச்சியாக சேட்டையில் ஈடுபட்டுவந்த இளைஞர்களின் தொல்லை தாங்காமல், குறித்த பெண்கள் தமது உறவினர்களிடம் விடயத்தை தெரிவித்ததை அடுத்து குறித்த பெண்களின் உறவுக்காரர்களால் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் நையப்புடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் காயமடைந்த நால்வரும் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://newuthayan.com/கலட்டியில்-பெண்களுடன்-சே/
 4. 2 points
  வீட்ட இரூங்கோ காசு தாறம் எண்டு அரசாங்கமே சொல்லும் போது நீங்கள் நேர்முக தேர்வொடு வாறீங்கள்..
 5. 2 points
  யாயினி தங்கையை மீண்டும் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி. யாயினியை பொறுத்த வரை அவாட அம்மா.. மற்றையவர்களிடம் உணரப்படும்.. அம்மா என்பதையும் தாண்டி.. அவாவின் பலம். நிறைய தடவைகள் அம்மாவின் உடல்நலக் குறைவு குறித்து யாழில் விளக்கம் கேட்பார். அந்தளவுக்கு அவாவுக்கு அம்மா வாழ்க்கையின் இன்னொரு படிநிலை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. நினைவுவில் அம்மாவை இருத்தி.. காலத்தால்.. இந்த நிலையையும் கடந்து வெல்வீர்கள். அந்த துணிச்சல் தான் முக்கியம். யாழ் உறவுகள் அந்த மன பலத்துக்கு உறுதுணையாவர் என்பதை நம்பலாம்.
 6. 2 points
  மக்கள் எதையெல்லாம் கண்டு பயந்தார்களோ, அதையெல்லாம் தெய்வமாக்குவர். பேய்ச்சி, முண்டக்கண்ணி இவையெல்லாம் அப்படித்தான் வந்தன. சின்னம்மை, பெரியம்மை நோய்கள் பெரியளவில் தாக்கியபோது, அம்மன் என்று வழிபட்டார்கள். அந்நோய் தாக்கிய வீட்டிலிருந்து யாரும் பிறர் வீட்டிற்குச் செல்வதில்லை; பிறரும் நோய்கண்ட வீட்டிற்கு வருவதில்லை. தெய்வ குற்றம் ஆகிவிடும் என்ற (மூட) நம்பிக்கையைப் பரப்பியதால், அத்தொற்றுக்கு அக்காலத்திலேயே சமூக விலகல் சாத்தியமாயிற்று. இப்போது அறிவியல் பூர்வமாக கொரோனா தொற்று பற்றி விளக்கினால், அதெல்லாம் நமக்கு வராது என்ற தொனியில் நடந்து கொள்கிறார்கள் பெருவாரியான மக்கள். முகக் கவசம் அணிந்தால் உறுதியாக தொற்று ஏற்படாது என்றெல்லாம் நம்புகிறார்கள். எனவே மக்களிடம் பகுத்தறிவும் பொறுப்புணர்வும் ஏற்படும் வரை (ஏற்படும் என நம்புவோம்), கொரோனாவைக் கடவுளாக்கி மக்களை மிரட்டிப் பணிய வைப்பது சிறந்த வழிதானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நம் முன்னோர் இப்படித்தான் தெரிந்தே மூட நம்பிக்கைகளைப் பரப்பிய புத்திசாலிகளோ என்னவோ !
 7. 2 points
  இன்றைய திருமண நிகழ்வுகள் பற்றிய உங்கள் ஆதங்கத்தில் உள்ள நியாயம் எனக்குப் புரிகிறது. உங்கள் தரப்பு நியாயத்தைப் பிரதிபலிக்கும் வகையில், எனது மகள் சோம.அழகு வேறு இணையத்தில் எப்போதோ அங்கத நடையில் (sarcastic) வரைந்த கட்டுரையின் இணைப்பு : http://puthu.thinnai.com/?p=34480 அந்த இணையத்தில் இன்னும் (வேண்டுமென்றே) பழைய எழுத்துக்களையே பயன்படுத்துகிறார்கள். மன்னிக்கவும்.
 8. 2 points
  MLA Friend. சிரிக்காமல் படிக்க வேண்டும். ரபேல் விமானம் பற்றி ஞாபகம் வரக் கூடாது.
 9. 2 points
  புலப்பெயரிகளில் தங்கள் பிள்ளை அந்நியமொழியில் கதைப்பதை பார்த்து கிளுகிளுப்பு ஆனந்தம் அடைவதில் எம்மினத்தை போல் வேறு ஒருவரும் இல்லை இதுதான் அடிப்படை கலாசார உடைவுக்கு காரணம் .
 10. 2 points
  தங்கச்சி நீங்கள் நம்புறியளோ இல்லையோ .. எனக்கு ஒரு டாக்குத்தர் சொன்னதை சொல்லுறன். என்ரை மூட்டு வலிகளுக்கு பாலும் அது சம்பந்தப்பட்ட பால் தயாரிப்புகளையும் பாவிக்க வேண்டாம் எண்டு சொன்னவர். நானும் ஒருமாதம் எடுக்காமல் விட்டுப்பாத்தன் அரைப்பங்கு வலிகள் குறைஞ்சிட்டுது. பாலில் கெட்டுப்போகமல் இருக்க பாவிக்கப்படும் இரசாயனப்பொருள் தான் வலிகளுக்கு முக்கிய காரணமாம். அது போலதான் பன்றி இறைச்சியும். தோல் வெடிப்புகளுக்கு வெள்ளையள் இப்ப தேங்காய் எண்னை பூச வெளிக்கிட்டினம். இப்ப புதினம் என்னெண்டால் வெள்ளையள் எங்களை விட உறைப்பு சாப்பிட வெளிக்கிட்டினம். உறைப்பு புது எனர்ஜியை தருதாம்.
 11. 2 points
  இதில ஆத்திரப்படுறத்திற்கோ ,கோபப்படுறத்திற்கோ எதுவும் இல்லை யஸ்டின் ..முந்தி இங்கு தேங்காய் பாலோ ,தேங்காயோ சுப்ப மாக்கெட்டில் காண கிடைக்காது. பாவிக்கவே கூடாது என்று சொல்லிச்சினம் ...ஆனால் இப்ப சான்விச் ,ஸ்நாக்ஸ் இருக்கும் பக்கம் தேங்காய் சொட்டு பக் பண்ணி விக்கிறான் ...கோப்பி கடைகளுக்கு போனால் தே. பாலில் கோப்பி கேட்க்கினம் ...எதை விற்பது/கூடாது என்று தீர்மானிப்பது காப்பிரேட் கொம்பனிகள் தான் ...அதைத் தான் என்ர அண்ணரும் சொல்கிறார் என்று நினைக்கிறேன். பசுப்பால் கூட எல்லோருக்கும் ஒத்துக்க கொள்ளாது...அதுக்காக பொதுவாய் பாலே கூடாது என்ற முடிவுக்கு வர கூடாது அல்லவா
 12. 2 points
 13. 1 point
 14. 1 point
  பூஞ்சிறகு ரிஷபன் திரையரங்கின் சுவர் ஒட்டிய கடைசி இருக்கையில் நான். பக்கத்தில் புஷ்பா. வரிசையாய் இரு தம்பிகள். மணமான அவள் அக்கா, அவள் கணவன். "பாபு.. நீயும் வா" அழைப்பை ஏற்று உடன் வந்தவனுக்கு புஷ்பா பக்கத்தில் அமர்வாள் என்ற எதிர்பார்ப்பு இல்லை. எல்லோரும் திரையில் பிம்பங்களின் பொய் சோகத்தில் ஆழ்ந்திருந்தபோது என் மீது மெத்தென்ற விரல்கள் படிந்தன. திடுக்கிட்டு திரும்பினேன். புஷ்பாவின் கவனமும் திரையில்தான். விரல்கள் மட்டும் சுதந்திரம் பெற்று என் கை விரல்களுடன் கூட்டணி தேடின. ஜுரம் வந்தபோது கூட இத்தனை நடுக்கம் வந்ததில்லை. தயக்கம், பயம், ஆசை என்று உணர்ச்சிக் கலவையின் மத்தியில் சுத்தமாய் படம் என்ன என்பதே புரிபடாமல் போனது. இடைவேளை வெளிச்சத்தில் என்னைப் பார்த்துச் சிரித்தாள். இது முதல் பூஞ்சிறகு ! கைவிரல்களை மெல்ல நிதானித்துப் பிரித்து காற்றில் பறக்காமல் நோட்டமிடும் சிறுவனாய் நினைவுகளைப் பிரிக்கும் நான். ரயிலின் தடக்..தடக்கில் கூடவே மனசும். ஆறு வருட இடைவெளிக்குப்பின் இதோ புஷ்பாவைத் தேடிப் போகிறேன். இன்னொரு பூஞ்சிறகு ! "டிபன் சாப்பிடறியா..பாபு" "எதுக்கு.. வேணாம்" "சும்மா பிகு பண்ணாதே" தட்டில் கேசரி,பஜ்ஜி. நெய் விரல்களில் ஈஷிக் கொள்கிறது. "இந்தா சீயக்காய். தேய்ச்சுக் கழுவு" கைநீட்டி வாங்க முயன்றவனை விரல் பற்றி தேய்த்துக் கழுவி.. பளிச்சென்ற முத்தம் உள்ளங்கையில். "எ..ன்ன" "புஷ்பா.." குரல் கேட்டுத் திரும்பிப் போகிறாள். போகுமுன் என்னிடம் கள்ளச் சிரிப்பு வீசி. ரயில் நின்று சிக்னலுக்காகக் கூவுகிறது. 'ழே..' மனசும்.. 'புஷ்பா..' அடுத்த பூஞ்சிறகின் ஸ்பரிசம் ! புதுப் புடவை. முகத்தில் பளிச். இன்று என்ன விசேஷம்? சாக்லேட் எதற்கு? "பிரிச்சு வாயிலதான் போடேன்" 'ஆ' காட்டினாள்.பின்பக்க வராண்டாவின் தனிமையா.. அது தந்த துணிச்சலா.. போட்டதைப் பாதி கடித்துத் திருப்பித் தந்தவளை ஆச்சர்யமாய் பார்க்க.. சாக்லேட் இத்தனை தித்திக்குமா! "சொல்லு. மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ்" ஓ. பிறந்த நாளா. விறுவிறுவென்று பேப்பர் எடுத்து எழுதினேன். சூரியக் கதிர்களில்ஏன் இத்தனை மென்மை? மரங்களில் ஏன் இன்றுமலர்க்கூட்டம்? வண்ணத்துப்பூச்சிகள்கூடபுத்தம்புது நிறங்களில்! வானவில்லும் தரையிலா? இன்று புஷ்பித்தது யார்,நீயா.. இல்லை..என் மனசா?! எழுதிய கையைப் பற்றி இன்னொரு முறை உதடுகளின் ஒற்றல். நழுவி விடப் போகிறது என்று இன்னும் இறுக்கமாய் விரல்களை மூடிக் கொண்டு நான். தடக்.. தடக்.ஆறு வருஷம். அலைச்சல். கால்கள் தரையில் பதிய எனக்கொரு அடையாளம், அங்கீகாரம் கிடைக்க. இன்று தலை நிமிர்ந்து பதில் சொல்ல முடிகிறது. புஷ்பாவைப் பெண் கேட்க இயலும். எதிராளியை பணத்தால் புரட்டிப் போட முடியும். பூஞ்சிறகுகளின் பலத்தில் நான்.. படியேறும் போது முரளி எதிரில் வருகிறான். அவள் தம்பி. "வா. ரொம்ப நாளாச்சு பார்த்து" புஷ்பாவின் அம்மா முகம் சுளித்து.. இனம் புரிந்து லேசாய் புன்னகையின் தீற்றல். அவள் எங்கே.. பார்வை துழாவிக் கொண்டே இருக்கிறது. "லெட்டரே போடலை. எங்கே இருக்கேன்னே தெரியலே. அப்படி என்ன அழுத்தம்? உங்கம்மா தினம் அழுகைதான்" மழுப்பலாய் சிரித்தேன். "நீ வரப் போறேன்னு லெட்டர் வந்த பிறகுதான் அவ கண்ணுல உயிர் வந்தது" "சாதிச்சுட்டானே.. அதைச் சொல்லு" முரளியின் கைக்குள் என் கை சிறைப்பட்டு மீண்டது. "வா. உட்கார். ஏன் நின்னுண்டே இருக்கே. காப்பி கொண்டு வரேன்" சோபாவில் சாய்ந்து உள்ளுக்குள் தவித்தேன். கேட்டு விடலாமா? புஷ்பா எங்கே?பார்வை அலைபாய்ந்தது. எதிர்ச்சுவரில்.. என்ன.. யாரது.. விலகிய பார்வை மீண்டும் புகைப்படத்தில் பதிய.. உறைந்த புன்னகையுடன் புஷ்பா. கைக்குள் பூஞ்சிறகுகள் அதிர்ந்தன. "என்னமோ ஜுரம். பத்து நாள் போராடி.. ஆச்சு. ஒரு வருஷம். தேத்திக்கவே முடியலே. உனக்குத் தகவல் கூட சொல்ல முடியலே" புஷ்பாவின் அம்மா புத்தம் புதிதாய் அழுதாள். படத்தில் அசைவில்லை. இழப்பு நிஜம்தான்.விஷயம் பாதித்த திகைப்பில் வெறித்தேன். யாரோ வலுக்கட்டாயமாய் என் விரல்களைப் பிரித்து.. ஒவ்வொன்றாய்.. பூஞ்சிறகுகள்.. காற்றில் பறக்க ஆரம்பித்ததை என்னால் தடுக்க முடியவே இல்லை அந்த நிமிஷம். (கல்கி பிரசுரம்)
 15. 1 point
  சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்புக்கான எச்சரிக்கை அறிகுறிகள் என்ன தெரியுமா?, அறிகுறிகளைக் கண்டறிவது, சிறுவர்கள், குழந்தைகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை எவ்வாறு செய்வது என்பதை அறிய முயற்சிப்போம். சிறுவர் துஷ்பிரயோகம் என்பது வெறும் கண்களைசுற்றியுள்ள காயத்தை மட்டும் பற்றியது அல்ல. உடல் ரீதியான துஷ்பிரயோகமும் அது விட்டுச்செல்லும் காயங்களை பார்க்கும் போது அதிர்ச்சியளிக்கும் அதே வேளையில், அனைத்து சிறுவர் துஷ்பிரயோக அறிகுறிகளும் வெளிப்படையாக தெரிவதில்லை. குழந்தைகளின் தேவைகளைப் புறக்கணிப்பது, மேற்பார்வை செய்யப்படாத, ஆபத்தான சூழ்நிலைகளில் வைப்பது, பாலியல் சூழ்நிலைகளுக்கு அவர்களை அம்பலப்படுத்துவது அல்லது பயனற்றதாக அல்லது முட்டாள்தனமாக உணர வைப்பது ஆகியவை குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பின் வடிவங்களாகும் - மேலும் இவை குழந்தைகள் மீது ஆழமான, நீடித்த வடுக்களை விடக்கூடும். துஷ்பிரயோகத்தின் வகையைப் பொருட்படுத்தாமல் விடுவதன் விளைவாக மனநலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுகிறது. ஒரு குழந்தை துஷ்பிரயோகம் அல்லது புறக்கணிப்பால் பாதிக்கப்படுவதாக நீங்கள் சந்தேகித்தால், பேசுவது முக்கியம். பிரச்சினையை சீக்கிரம் கண்டுபிடிப்பதன் மூலம், குழந்தை மற்றும் துஷ்பிரயோகம் செய்பவர் இருவரும் அவர்களுக்கு தேவையான உதவியைப் பெறலாம். சிறுவர் துஷ்பிரயோகம், புறக்கணிப்பு பற்றி தெரிந்துகொள்ளதொடங்குவதற்கு முன், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு பற்றிய உண்மைகளிலிருந்து கட்டுக்கதைகளை பிரிப்பது முக்கியம்: சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்: கட்டுக்கதை - 1: வன்முறையை பிரயோகித்தால் மட்டுமே துஷ்பிரயோகம் உண்மை: உடல் ரீதியான துஷ்பிரயோகம் என்பது ஒரு வகை குழந்தை துஷ்பிரயோகம் மட்டுமே. குழந்தை புறக்கணிப்பு, பாலியல் மற்றும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகமும் சேதத்தை ஏற்படுத்தும், மேலும் அவை எப்போதும் வெளிப்படையாக இல்லாததால், மற்றவர்கள் தலையிடுவது குறைவு. கட்டுக்கதை - 2: கெட்டவர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். உண்மை: துஷ்பிரயோகம் செய்யும் அனைத்து பெற்றோர்களும் அல்லது பாதுகாவலர்களும் வேண்டுமென்றே தங்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. பலர் தங்களது வாழ்க்கையில் கூட துஷ்பிரயோகத்தை அனுபவதிருந்திருப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில் வளர்ந்தவர்களுக்கு சரியான குழந்தைவளர்ப்பைபற்றி தெரிந்திருக்க/அறிந்திருக்க வழியிருந்திருக்காது. மேலும் சிலர் மனநல பிரச்சினைகள் அல்லது போதைப் பொருள் துஷ்பிரயோக சிக்கல்களுடன் போராடிக்கொண்டிருப்பவர்களாக இருக்கும் போது, தாங்கள் என்ன செய்கிறோம் என்ற நிலைமையை அறியாதவகையில் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகிறார்கள். கட்டுக்கதை -3: “நல்ல/பண்பான” குடும்பங்களில் துஷ்பிரயோகம் நடக்காது. உண்மை: துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு ஏழைக் குடும்பங்களில் அல்லது மோசமான சுற்றுப்புறங்களில் மட்டும் நடக்காது. இந்த நடத்தைகள் அனைத்து இன, பொருளாதார மற்றும் கலாச்சார எல்லைகளையும் கடந்து செல்கின்றன. சில நேரங்களில், எல்லாவற்றையும் வெளியில் இருந்து பார்க்கும் போது எதுவித பிரச்சனைகளும் இல்லாதது போலதோன்றும் குடும்பங்களின் மூடிய கதவுகளுக்குப் பின்னால் வேறு கதையைக்கூடகூறலாம். கட்டுக்கதை -4: அந்நியர்கள் மூலமே பெரும்பாலான குழந்தைகள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். உண்மை: சிறுவர்களை அந்நியர்களாலும் துஷ்பிரயோகம் செய்யப்படும் அதேவேளை, பெரும்பாலான துஷ்பிரயோகம் செய்பவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது குடும்பத்திற்கு நெருக்கமானவர்களாகவும் இருக்கின்றனர். கட்டுக்கதை -5: துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகள் எப்போதும் துஷ்பிரயோகம் செய்பவர்களாக வளர்கிறார்கள். உண்மை: துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகள் பெரியவர்களாகியவுடன் மீண்டும் அதே பாதையில் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம், அவர்கள் குழந்தைகளாக அனுபவித்ததை அறியாமலே மீண்டும் செய்கிறார்கள். மறுபுறம், சிறுவர் துஷ்பிரயோகத்தில் தப்பிப்பிழைத்த பல வயதுவந்தோர் தங்கள் குழந்தைகளை அவர்கள் கடந்து வந்தவற்றிலிருந்து பாதுகாக்க மற்றும் சிறந்த பெற்றோர்களாக மாறுவதற்கு ஒரு வலுவான உந்துதலைக் கொண்டுள்ளனர். சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பின் விளைவுகள்: எல்லா வகையான துஷ்பிரயோகங்களும் புறக்கணிப்பும் நீடித்த வடுக்களை விட்டு விடுகின்றன. இந்த வடுக்கள் சில உடல் ரீதியானதாக இருக்கலாம், ஆனால் மனதில் ஏற்படும் வடு வாழ்நாள் முழுவதும் நீடித்த விளைவுகளை ஏற்படுத்துகிறது, இது குழந்தையின் சுய உணர்வு, அவர்களின் எதிர்கால உறவுகள் மற்றும் வீடு, வேலை மற்றும் பள்ளியில் செயல்படும் திறனை சேதப்படுத்தும். அந்த விளைவுகள் பின்வருமாறு: 1- நம்பிக்கை இல்லாமை மற்றும் உறவுச்சிக்கல்கள். உங்கள் பெற்றோரை நம்ப முடியாவிட்டால், நீங்கள் யாரை நம்பலாம்? இந்த அடிப்படையில்லாமல், மற்றவர்களை நம்ப கற்றுக்கொள்வது அல்லது நம்பகமானவர் யார் என்பதை அறிந்து கொள்வது மிகவும் கடினம். இது இளமை பருவத்தில் உறவுகளைப் பேணுவதில் சிரமத்திற்கு வழிவகுக்கும். ஆரோக்கியமற்ற உறவுகளுக்கும் வழிவகுக்கும். 2- “பயனற்ற/மதிப்பற்ற(Worthless)” என்ற உணர்வு. நீங்கள் சிறுவராக இருக்கும் போது முட்டாள் அல்லது நல்லவர் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டால், இந்த தாழ்வுமனப்பான்மை உணர்வுகளை வெல்வது சில சமயங்களில் மிகவும் கடினம். துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகள் வளர்ந்து வருகையில் தங்கள் கல்வியை புறக்கணிக்கலாம் அல்லது குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் குடியேறலாம், ஏனென்றால் அவர்கள் தாங்கள் அதிக மதிப்புடையவர்கள் என்று அவர்களால் நம்பமுடியாமல் போய்விடும் மேலும், பாலியல் துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பியவர்கள், துஷ்பிரயோகத்தால் ஏற்ப்பட்ட களங்கம் மற்றும் அவமானத்துடன், பெரும்பாலும் சேதமடைந்த உணர்வுடன் போராடுகிறார்கள். 3- உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல். துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகள் உணர்ச்சிகளை பாதுகாப்பாக வெளிப்படுத்த முடியாது. இதன் விளைவாக, அடக்கிவைக்கப்பட்ட உணர்ச்சிகள் , எதிர்பாராத வழிகளில் வெளிவருகின்றன. சிறுவர் துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் விவரிக்க முடியாத கவலை, மனச்சோர்வு அல்லது கோபத்துடன் போராடலாம். வலிமிகுந்த உணர்வுகளைத் தணிக்க அவர்கள் மது அல்லது போதைப்பொருட்களை நோக்கித் திரும்பலாம். பல்வேறு வகையான சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிந்துகொள்ளல்: தவறான நடத்தை பல வடிவங்களில் வருகிறது, ஆனால் பொதுவான ஒரு நடத்தை, சிறுவர்களின் உளரீதியான விளைவு/தாக்கம் ஆகும். உடலில் விழும் ஒரு அறை, கடுமையான கருத்துபரிமாற்றம், இறுகிய மெளனம் (stony silence)அல்லது மேஜையில் இரவு உணவு இருக்குமா என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலை, இப்படியான காரணங்களால் ஒரு குழந்தை/சிறார் பாதுகாப்பற்ற, அக்கறையற்ற, தனிமையை உணர்கிறது. உளரீதியான/ உணர்வுகளின மீதான துஷ்பிரயோகம்:- சிலரின் நம்பிக்கைகளுக்கு மாறாக, வார்த்தைகள் புண்படுத்தும் மற்றும் மன உணர்ச்சிகளை பாதிக்கும் துஷ்பிரயோகம் குழந்தையின் மன ஆரோக்கியம் அல்லது சமூக வளர்ச்சியை கடுமையாக சேதப்படுத்தும். உணர்ச்சி துஷ்பிரயோகத்தின் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு: - தொடர்ந்து குறை கூறுவது, வெட்கப்படுவது, அவமானப்படுத்துவது. - பெயர்களை மரியாதையின்றி அழைப்பது மற்றும் மற்றவர்களுடன் எதிர்மறையான ஒப்பீடுகள் செய்வது. - ஒரு குழந்தைக்கு அவர்கள் “நல்லவர்கள் இல்லை,” “பயனற்றவர்கள்,” “கெட்டவர்கள்” அல்லது “ஒரு தவறு” என்று சொல்வது. - அடிக்கடி கத்துவது, அச்சுறுத்துவது அல்லது கொடுமைப்படுத்துதல். - ஒரு குழந்தைக்கான தண்டனையாக புறக்கணித்தல் அல்லது நிராகரித்தல். - ஒரு குழந்தையுடன் உடல் ரீதியான தொடர்பைக் கட்டுப்படுத்துதல்-கட்டிப்பிடிப்புகள், முத்தங்கள் அல்லது பாசத்தின் அறிகுறிகள் எதையும் காட்டாமல்விடுதல். - ஒரு குழந்தையை மற்றவர்களுக்கு எதிரான வன்முறைக்கு உட்படுத்துவது, அது மற்ற பெற்றோருக்கு எதிரானதாக இருந்தாலும், ஒரு உடன்பிறப்பு அல்லது செல்லப்பிராணியாக இருந்தாலும் சரி குழந்தையின் தேவைபற்றிய புறக்கணிப்பு: - மிகவும் பொதுவான குழந்தை துஷ்பிரயோகம் - ஒரு குழந்தையின் அடிப்படை தேவைகளை வழங்காமல் விடுவது, இதில் போதுமான உணவு, உடை, சுகாதாரம் அல்லது மேற்பார்வை ஆகியவை அடங்கும். குழந்தை புறக்கணிப்பு எப்போதும் கண்டுபிடிக்க எளிதானது அல்ல. சில சமயங்களில், பெற்றவர்களால், கடுமையான நோய் அல்லது காயம், அல்லது சிகிச்சை அளிக்கப்படாத மனச்சோர்வு அல்லது பதட்டம் போன்ற காரணங்களால் ஒரு குழந்தையை பராமரிக்க உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ முடியாமல் போகலாம். சில நேரங்களில்,மது அல்லது போதைப்பொருள் பாவனையால் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்கும் திறனையும் இழந்திருக்கலாம். உடல் ரீதியான துஷ்பிரயோகம்:- குழந்தைக்கு உடல் ரீதியான தீங்கு அல்லது காயம். இது குழந்தையை காயப்படுத்த வேண்டுமென்றே முயற்சித்ததன் விளைவாகவோ அல்லது அதிக உடல் ரீதியான தண்டனையாகவோ இருக்கலாம். உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யும் பல பெற்றோர்கள் தங்கள் செயல்கள் வெறுமனே ஒழுக்கத்தின் வடிவங்கள்-குழந்தைகள் நடந்து கொள்ளக் கற்றுக்கொள்வதற்கான வழிகள் என்று வலியுறுத்துகின்றனர். ஆனால் உடல் ரீதியான தண்டனையை ஒழுக்கத்திற்கும் உடல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கும் பயன்படுத்துவதில் பெரிய வித்தியாசம் உள்ளது. உடல் ரீதியான துஷ்பிரயோகத்துடன் தொடர்பான பின்வரும் கூறுகள் உள்ளன: கணிக்க முடியாத தன்மை-குழந்தைக்கு பெற்றோரின் எண்ணங்களை விளங்கிக்கொள்ளும் முதிர்ச்சி உடனே வந்துவிடாது, அத்துடன் தெளிவான எல்லைகள் அல்லது விதிகள் எதுவும் இல்லாமை, எந்த நடத்தை உடல் ரீதியான தாக்குதலைத் தூண்டும் என்று ஒருபோதும் உறுதியாக தெரிந்துகொள்ளமுடியாதமையால் குழந்தை கத்தியின் மேல்/ முள்ளின் மேல் நடப்பதைப்போலவே உணரும். கோபத்தில் அடித்துக்கொள்வது- துஷ்பிரயோகம் செய்யும் பெற்றோர் கோபத்திலிருந்தும், கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் விருப்பத்திலிருந்தும் செயல்படுகிறார்களேயன்றி, குழந்தைக்கு அன்பாக கற்பிப்பதற்கான உந்துதலால் அல்ல. பெற்றோருக்கு கோபம் கூடக்கூட துஷ்பிரயோகம் மிகவும் தீவிரமாகமாறுகிறது. பயத்தைப் பயன்படுத்துதல்-துஷ்பிரயோகம் செய்யும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஒழுங்காக நடந்துகொள்வதற்கு பயத்தைபயன்படுத்த வேண்டும் என்று நம்பலாம், எனவே அவர்கள் “தங்கள் குழந்தையை ஓருங்காக வைத்திருக்க” உடல் ரீதியான துஷ்பிரயோகத்தைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், குழந்தைகள் உண்மையிலேயே கற்றுக்கொள்வது என்னவென்றால், தாக்கப்படுவதைத் தவிர்ப்பது எப்படி என்பதை மட்டுமே, தனிநபர்களாக எப்படி நடந்துகொள்வது அல்லது வளர்வது என்பதல்ல. பாலியல் துஷ்பிரயோகம்- சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் குறிப்பாக சிக்கலான துஷ்பிரயோகமாகும், ஏனெனில் அதன் குற்ற உணர்ச்சி மற்றும் அவமானம். பாலியல் துஷ்பிரயோகம் எப்போதும் உடல் தொடர்புடன் இருக்காது என்பதை அங்கீகரிப்பது முக்கியம். ஒரு குழந்தையை பாலியல் சூழ்நிலைகள் அல்லது பொருள்களுக்கு வெளிப்படுத்துவது பாலியல் துஷ்பிரயோகம், தொடுவது சம்பந்தப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட. பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் அவமானம் மற்றும் குற்ற உணர்ச்சியால் துன்புறுத்தப்படுகிறார்கள். துஷ்பிரயோகத்திற்கு அவர்கள் தான் காரணம் என்று அவர்கள் தங்களுக்குள் ஒரு முடிவை எடுத்துவிடுகிறஈர்கள். இது வயதாகும்போது சுய வெறுப்பு மற்றும் பாலியல் மற்றும் உறவு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பாலியல் துஷ்பிரயோகத்தினால் ஏற்பட்ட அவமானத்தினால் குழந்தைகள் இதனை கூறமுன் வருவது மிகவும் கடினம். மற்றவர்கள் தங்களை நம்பமாட்டார்கள், அவர்களிடம் கோபப்படுவார்கள், அல்லது அது அவர்களின் குடும்பத்தைப் பிரிக்கும் என்று அவர்கள் கவலைப்படலாம். இந்த சிரமங்களின் காரணமாக, பாலியல் துஷ்பிரயோகம் குறித்த தவறான குற்றச்சாட்டுகள் பொதுவானவை அல்ல, எனவே ஒரு குழந்தை உங்களிடம் நம்பிக்கை வைத்தால், அவற்றை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்புக்கான எச்சரிக்கை அறிகுறிகள்: 1- உணர்ச்சி துஷ்பிரயோகத்தின் எச்சரிக்கை அறிகுறிகள்: - அதிகப்படியான தவறு, பயம் அல்லது ஏதாவது தவறு செய்வதில் ஆர்வம் - நடத்தையில் வித்தியாசமான உச்சநிலையைக் காட்டுதல் (மிகவும்செயலற்ற, ஆக்ரோஷமான, அதிகபடி உரிமையை எடுத்தல், பயமுறுத்துதல்) - பெற்றோர் அல்லது பராமரிப்பாளருடன் இணைந்து நடக்காமை. - பொருத்தமற்ற வயதுவந்தோர் மாதிரி நடத்தல். வயதுக்குமீறிய செயல்களை செய்தல் (உதாரனமாக மற்ற குழந்தைகளை கவனித்துக்கொள்வது) அல்லது பொருத்தமற்ற முறையில் குழந்தைமாதிரி நடத்தல் (கட்டைவிரலை உறிஞ்சுவது, முரண்டுபிடிப்பது) 2- உடல் ரீதியான துஷ்பிரயோகத்தின் எச்சரிக்கை அறிகுறிகள்: - அடிக்கடி காயங்கள் காணப்படுதல் அல்லது விவரிக்கப்படாத காயங்கள் - மோசமான ஒன்று நடக்கக் காத்திருப்பதைப் போல எப்போதும் கவனமாகவும்,”எச்சரிக்கையாகவும்” இருத்தல் - காயங்கள் ஒரு கை அல்லது பெல்ட்டினால் அடித்த காயங்கள் போன்ற வடுக்களை உடலில் காணப்படுதல் - தொடுதலில் இருந்து விலகி, திடீர் அசைவுகளைக் கண்டு, அல்லது வீட்டிற்குச் செல்ல பயப்படுவதாகத் தெரிகிறது - சூடான நாட்களில் கூட நீண்ட கை சட்டை போன்ற காயங்களை மறைக்க பொருத்தமற்ற ஆடைகளை அணிந்துகொள்ளுதல் 3- குழந்தையின் தேவையை பற்றிய புறக்கணிப்பின் எச்சரிக்கை அறிகுறிகள்: - ஆடைகள் பொருத்தமற்றவை, இழிந்தவை அல்லது வானிலைக்கு பொருத்தமற்றவை - மோசமான உடல் சுகாதாரத்தை கொண்டிருத்தல் (அவிழ்க்கப்படாத, பொருந்திய மற்றும் கழுவப்படாத முடி, குறிப்பிடத்தக்க உடல் வாசனை) - சிகிச்சை அளிக்கப்படாத நோய்கள் மற்றும் உடல் காயங்கள் - அடிக்கடி மேற்பார்வை செய்யப்படாமல் அல்லது தனியாக விடப்படுகிறது அல்லது பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் விளையாட அனுமதிக்கப்படுகிறது - அடிக்கடி தாமதமாக வருதல் அல்லது பள்ளியில் இருந்து விடுபட்டிருத்தல் 4- குழந்தைகளில் பாலியல் துஷ்பிரயோகத்தின் எச்சரிக்கை அறிகுறிகள்: - நடக்க அல்லது உட்கார்ந்திருக்க சிரமப்படல் - பாலியல் செயல்களைப் பற்றிய அறிவை அவர்களின் வயதுக்கு பொருத்தமற்றது, அல்லது கவர்ச்சியான நடத்தை ஆகியவற்றைக் காட்டுதல் - வெளிப்படையான காரணமின்றி, ஒரு குறிப்பிட்ட நபரைத் தவிர்ப்பதற்கு வலுவான முயற்சிகளை மேற்கொள்ளுதல் - மற்றவர்களுக்கு முன்னால் ஆடைகளை மாற்றவோ அல்லது உடற்பயிற்சிகளிலோ செயல்பாடுகளில் பங்கேற்கவோ விருப்பம் காட்டாதிருத்தல் - ஒரு எஸ்டிடி அல்லது கர்ப்பம், குறிப்பாக 14 வயதிற்குட்பட்டவர்கள் - வீட்டை விட்டு ஓடுதல் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்புக்கான ஆபத்து காரணிகள்: எல்லா வகையான குடும்பங்களிலும் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு நிகழ்கிறது, சில சூழ்நிலைகளில் குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளனர். வீடுகளில் ஏற்படும் வன்முறை: துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தாலும், வீட்டு வன்முறை இன்னும் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த மாதிரியான சூழ்நிலையிலிருந்து வெளியேறுவது உங்கள் குழந்தைகளுக்கு உதவ சிறந்த வழியாகும். மது மற்றும் போதைப்பொருள்: குடிபோதையில் அல்லது போதை அதிகமாக இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பராமரிக்கவோ, நல்ல பெற்றோருக்குரிய முடிவுகளை எடுக்கவோ அல்லது பெரும்பாலும் ஆபத்தான தூண்டுதல்களைக் கட்டுப்படுத்தவோ முடியாமல் போகலாம். இது உடல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கும் வழிவகுக்கும். சிகிச்சை அளிக்கப்படாத மன நோய்: மனச்சோர்வு, கவலைக் கோளாறு, இருமுனைக் கோளாறு அல்லது மற்றொரு மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர்கள் சிறுவர்களை கவனித்துக்கொள்வதில் மட்டுமல்ல தங்களைக் கவனித்துக் கொள்வதில்கூட சிக்கல் இருக்கலாம் மனநலம் பாதிக்கப்பட்ட அல்லது அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளிடமிருந்து தொலைவில் இருக்கக்கூடும், அல்லது ஏன் என்று புரியாமல் கோபத்திற்கு விரைவாக இருக்கலாம். இப்படியானவர்களுக்கு(பெற்றவர்/பராமரிப்பாளர்)சிகிச்சையளிப்பதன் மூலமே குழந்தைகளுக்கு சிறந்த பராமரிப்பபை வழங்கமுடியும். பெற்றோரின் குழந்தைவளர்க்கும் திறன் இல்லாமை: சில பராமரிப்பாளர்கள்/பெற்றவர்கள் நல்ல பெற்றோருக்குத் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்ளவில்லை. எடுத்துக்காட்டாக, டீன் ஏஜ் பெற்றோர்கள் குழந்தைகளுக்கும் சிறு குழந்தைகளுக்கும் எவ்வளவு கவனிப்பு தேவை என்பது குறித்து நம்பத்தகாத எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கலாம். அல்லது சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு ஆளான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவர்கள் வளர்த்த விதத்தில் எவ்வாறு வளர்ப்பது என்பது மட்டுமே தெரிந்திருக்கலாம். பெற்றோருக்குரிய வகுப்புகள், சிகிச்சை மற்றும் பராமரிப்பாளர் ஆதரவு குழுக்கள் சிறந்த பெற்றோருக்குரிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கான வழிகள். மன அழுத்தம் மற்றும் ஆதரவு இல்லாமை: குறிப்பாக நீங்கள் குடும்பத்தினரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் ஆதரவில்லாமல் குழந்தைகளை வளர்க்கிறீர்கள் அல்லது உறவு பிரச்சினைகள் அல்லது நிதி சிக்கல்களைச் சமாளிக்கிறீர்கள் என்றால் குழந்தைவளர்ப்பு மிகவும் நேரத்தைச் செலவழிக்கும், மன அழுத்தத்துடன் கூடிய வேலையாக இருக்கலாம். இயலாமை, சிறப்புத் தேவைகள் அல்லது கடினமான நடத்தைகள் உள்ள குழந்தையைப் பராமரிப்பதும் ஒரு சவாலாகும். உங்களுக்கு தேவையான ஆதரவைப் பெறுவது முக்கியம், அதன்மூலமே நீங்கள் உங்கள் குழந்தையை உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆதரிக்க முடியும். உங்களுக்குள்ளும் உள்ள தவறான நடத்தையை அறிந்துகொள்ளல்: குழந்தைகளை வளர்ப்பது வாழ்க்கையின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும், மேலும் இது பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் கோபத்தையும் விரக்தியையும் தூண்டும். அலறல், கூச்சல் அல்லது வன்முறை ஆகியவை வழக்கமாக இருந்த ஒரு வீட்டில் நீங்கள் வளர்ந்திருந்தால், சில சமயம் உங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கு வேறு வழிதெரிந்திருக்காது உங்களுக்கு இப்படி ஒரு சிக்கல் இருப்பதை அங்கீகரிப்பது உதவியைப் பெறுவதற்கான மிகப்பெரிய படியாகும். பின்வருவது நீங்கள் துஷ்பிரயோகம் செய்யக்கூடும் என்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகள்: - உங்கள் கோபத்தை நிறுத்த முடியாது. பின்புறத்தில் ஒரு சிறு தடியால் தட்டுவது/அடிப்பது எனத் தொடங்கி பல கடினமான அடிகளாக மாறும். நீங்கள் உங்கள் குழந்தையை மேலும் மேலும் அசைத்து, இறுதியாக அவர்களை கீழே எறியலாம். நீங்கள் சத்தமாகவும் கத்துவீர்கள், உங்களைத் தடுக்க முடியாது போய்விடும். - உங்கள் குழந்தையிலிருந்து உணர்ச்சி ரீதியாக துண்டிக்கப்படுவதை உணர்கிறீர்கள். உங்கள் குழந்தையுடன் எதையும் செய்ய விரும்பாத அளவுக்கு நீங்கள் அதிகமாக உணரலாம். நீங்கள் தனியாக இருக்க வேண்டும், உங்கள் குழந்தை அமைதியாக இருக்க வேண்டும். - உங்கள் குழந்தையின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வது சாத்தியமற்றதாகத் தெரிகிறது. ஆடை அணிதல், உணவளித்தல் மற்றும் குழந்தைகளை பள்ளி அல்லது பிற செயல்களுக்குச் சேர்ப்பதில் எல்லோரும் சிரமப்படுகையில், நீங்கள் தொடர்ந்து அதைச் செய்ய முடியாவிட்டால், ஏதோ தவறாக இருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகும். - மற்றவர்கள் கவலையை வெளிப்படுத்தியிருத்தல். கவலையை வெளிப்படுத்தும் மற்றவர்களிடம் முறுக்குவது எளிதாக இருக்கலாம். இருப்பினும், அவர்கள் சொல்வதை கவனமாகக் கவனியுங்கள். நீங்கள் பொதுவாக மதிக்கும் மற்றும் நம்பும் ஒருவரிடமிருந்து வார்த்தைகள் வருகிறதா? துஷ்பிரயோகத்தின் சுழற்சியை உடைத்தல்: நீங்கள் சிறுவர் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்ட வரலாறு உங்களிடம் இருந்தால், உங்கள் சொந்த குழந்தைகளை வைத்திருக்கும் போது நீங்கள் அடக்கிவைத்திருக்கும் வலுவான நினைவுகளையும் உணர்வுகளையும் தூண்டக்கூடும். உங்கள் கோபத்தால் நீங்கள் அதிர்ச்சியடைந்து, அதிருப்தி அடையலாம், அதை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது என நினைக்கலாம். ஆனால் உங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்கவும், உங்கள் பழைய வடிவங்களை உடைக்கவும் புதிய வழிகளைக் கற்றுக்கொள்ளலாம். உங்கள் குழந்தையின் உலகில் மிக முக்கியமான நபர் நீங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் - நீங்கள் இதற்கான பாதையில் தனியாக செல்ல வேண்டியதில்லை. உதவி மற்றும் ஆதரவு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வயதுக்கு எது பொருத்தமானது, எது இல்லாதது என்பதை அறிக:- குழந்தைகளை, அவர்களது வயதிற்கேற்ப, அவர்களால் என்ன கையாள முடியும் என்ற யதார்த்தமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பது சாதாரண குழந்தை நடத்தையில் விரக்தியையும் கோபத்தையும் தவிர்க்க உதவும். உதாரணமாக, புதிதாகப் பிறந்தவர்கள் இரவில் ஒரு தரம் அல்லது இரண்டு தரம் எழும்பாது தூங்கப் போவதில்லை, மேலும் குழந்தைகளால் நீண்ட நேரம் அமைதியாக உட்கார முடியாது. புதிய பெற்றோருக்குரிய திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்:-பொருத்தமான ஒழுக்க நுட்பங்களையும், உங்கள் குழந்தைகளுக்கு தெளிவான எல்லைகளை எவ்வாறு அமைப்பது என்பதையும் கற்றுக்கொள்வதன் மூலம் தொடங்கவும். பெற்றோர் வகுப்புகள், புத்தகங்கள் மற்றும் கருத்தரங்குகள் இந்த தகவலை வழங்குகின்றன. உதவிக்குறிப்புகள் மற்றும் ஆலோசனைகளுக்காக நீங்கள் மற்ற பெற்றோர்களிடமும் திரும்பலாம். ஆரோக்கியமாக இருத்தல்:- உங்களுக்கு போதுமான ஓய்வு மற்றும் ஆதரவு கிடைக்கவில்லை என்றால் அல்லது நீங்கள் அதிகபளுவை உணர்கிறீர்கள் என்றால், நீங்கள் கோபத்திற்கு ஆளாக நேரிடும். சிறு குழந்தைகளின் பெற்றோருக்கு பொதுவான தூக்கமின்மை, மனநிலையையும் எரிச்சலையும் சேர்க்கிறது. தொழில்முறை உதவியைப் பெறுங்கள்:-முறைகேடுகளின் சுழற்சியை உடைப்பது மிகவும் கடினமாக இருக்கும். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் உங்களைத் தடுக்க முடியாவிட்டால், சிகிச்சை, பெற்றோருக்குரிய வகுப்புகள் அல்லது பிற தலையீடுகள் போன்றவற்றில் உதவி பெற வேண்டிய நேரம் இது. அதற்கு உங்கள் குழந்தைகள் நன்றி கூறுவார்கள். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்: நீங்கள் ஒரு குழந்தையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் அல்லது புறக்கணிக்கப்பட்டிருந்தால், உங்கள் உணர்ச்சிகளுடன் இணைந்துபோக உங்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கலாம். துஷ்பிரயோகம் செய்யப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட குழந்தைக்கு எப்படி உதவுவது: ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக நீங்கள் சந்தேகித்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அல்லது ஒரு குழந்தை உங்களிடம் நம்பிக்கை வைத்தால்? கொஞ்சம் அதிகமாகவும் குழப்பமாகவும் இருப்பது இயல்பு. சிறுவர் துஷ்பிரயோகம் என்பது ஒரு கடினமான விஷயமாகும், இது ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கும், மேலும் உங்களுக்கும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கும் பேசுவதற்கு கூட கடினமாக இருக்கும். துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தையுடன் பேசும்போது, அவர்களை ஊக்குவிப்பதற்கான சிறந்த வழி அமைதியான உறுதியையும் நிபந்தனையற்ற ஆதரவையும் காட்டுவதாகும். சொற்களைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருந்தால், உங்கள் செயல்கள் உங்களுக்காக பேசட்டும். மறுப்பதைத் தவிர்த்து அமைதியாக இருங்கள்:- சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற விரும்பத்தகாத மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகளுக்கு பொதுவான எதிர்வினை மறுப்பு. இருப்பினும், நீங்கள் ஒரு குழந்தைக்கு மறுப்பைக் காட்டினால், அல்லது அவர்கள் சொல்வதில் அதிர்ச்சி அல்லது வெறுப்பைக் காட்டினால், குழந்தை தொடர பயப்படலாம், மேலும் தன் உணர்வுகளை/பயங்களை சொல்லாது மெளனமாகிவிடலாம். எவ்வளவு கடினமாக இருந்தாலும், உங்களால் முடிந்தவரை அமைதியாகவும் உறுதியுடனும் இருங்கள். விசாரிக்க வேண்டாம்:- என்ன நடந்தது என்பதை குழந்தை அவர்களின் சொந்த வார்த்தைகளில் உங்களுக்கு விளக்கட்டும், ஆனால் குழந்தையை விசாரிக்க வேண்டாம் அல்லது முன்னணி கேள்விகளைக் கேட்க வேண்டாம். இது குழந்தையை குழப்பமடையச் செய்யலாம் மற்றும் அவர்களின் கதையைத் தொடர கடினமாக இருக்கும். அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று குழந்தைக்கு உறுதியளிக்கவும்:-ஒரு குழந்தை துஷ்பிரயோகம் பற்றி கூற முன்வர நிறைய தைரியம் தேவைப்படுகிறது. அவர்கள் சொன்னதை நீங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறீர்கள் எனவும், அது அவர்களின் தவறு அல்ல என்பதை அவர்களுக்கு உறுதியளிக்கவும். பாதுகாப்பு முக்கியம்:- நீங்கள் தலையிட முயன்றால் உங்கள் பாதுகாப்பு அல்லது குழந்தையின் பாதுகாப்பு அச்சுறுத்தப்படும் என்று நீங்கள் நினைத்தால், அதை நிபுணர்களிடம் விட்டு விடுங்கள். நீங்கள் பின்னர் கூடுதல் ஆதரவை வழங்க முடியும். சிறுவர் துஷ்பிரயோகம் அல்லது புறக்கணிப்பைப் புகாரளித்தல்: ஒரு குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், அதைப் புகாரளிப்பது மிக முக்கியமானதாகும் - மேலும் இது தொடர்ந்து நிகழ்ந்தால் ஒவ்வொரு தனி நிகழ்வுகளையும் தொடர்ந்து புகாரளிக்கவும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு அறிக்கையும் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பதற்கான சாட்சி ஆகும். நீங்கள் வழங்கக்கூடிய கூடுதல் தகவல்கள், குழந்தைக்கு அவர்கள் பெற வேண்டிய உதவியைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பு. நிச்சயமாக, சிறுவர் துஷ்பிரயோகத்தைப் புகாரளிப்பதில் சில மனகசப்புகள், அசெளகரியங்கள் அல்லது கவலைகள் இருப்பது இயல்பு. வேறொருவரின் குடும்பவிஷயத்ழில் நான் தலையிட விரும்பவில்லை:- சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு என்பது ஒரு குடும்ப விஷயமல்ல, அமைதியாக இருப்பதன் விளைவுகள் குழந்தைக்கு பேரழிவை ஏற்படுத்தும். நான் ஒருவரின் குடும்பகட்டுக்கோப்பை, அவர்களது இருப்பை கேள்விக்குறியாக்கினால் என்ன செய்வது? சிறுவர் துஷ்பிரயோக அறிக்கை என்பது ஒரு குழந்தையை வீட்டிலிருந்து அகற்றப்படும் என்று அர்த்தமல்ல அவர்கள் ஆபத்தில் இல்லாவிட்டால் என்பது தெளிவாக இருந்தால், அவர்கள் வீட்டிலிருந்து அகற்றப்படமாட்டார்கள். இவ்வாறான நிலைமைகளில் பெற்றோருக்கு முதலில் வகுப்புகள் அல்லது கோப மேலாண்மை ஆலோசனை போன்ற ஆதரவை வழங்கப்படும். நான் தான் அழைத்தேன் என்பது அவர்களுக்குத் தெரிந்தால்?:- புகாரளித்தல் அநாமதேயமானது. பெரும்பாலான இடங்களில், நீங்கள் சிறுவர் துஷ்பிரயோகத்தைப் புகாரளிக்கும்போது உங்கள் பெயரைக் கொடுக்க வேண்டியதில்லை. நான் சொல்வது வித்தியாசத்தை ஏற்படுத்தாது:- ஏதோ தவறு இருப்பதாக உங்களுடைய உள்ளுணர்வுவிற்கு தெரிந்திருந்தால், அதை உரிய இடத்தில் தெரிவித்தால் பின்னாளில் வருத்தப்படதேவையில்லை. முழு விஷயத்தையும் உங்களால் பார்க்க முடியாதிருக்கலாம், சில சமயம் மற்றவர்களும் அறிகுறிகளை கவனித்திருக்கலாம், இவை எல்லாம் சேர்ந்து கவனிக்கப்படாத குழந்தை துஷ்பிரயோகத்தை அடையாளம் காண ஒரு முறை உதவும். பின்குறிப்பு:- இதை நான் மொழிபெயர்த்து இங்கே இணைத்தமைக்கு காரணம், சில நேரங்களில் இயலுமானவரையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் ஒன்றிரண்டு குழந்தையாவது இந்த துன்புறுத்தல்களிலிருந்து தப்பும் என்ற எண்ணத்தினால் மட்டுமே. மொழிபெயர்ப்பு என்பதால் சில சமயம் சில கருத்துகள் மாறுப்பட்டு இருந்தாலும் கட்டுரையின் மூலக்கருத்திலிருந்து மாறுபடவில்லை. நன்றி பிரபா சிதம்பரநாதன் ஆங்கில மூலம்:- https://www.helpguide.org/articles/abuse/child-abuse-and-neglect.htm Authors: Melinda Smith, M.A., Lawrence Robinson, and Jeanne Segal, Ph.D. Last updated: June 2019.
 16. 1 point
  உண்மையான தேங்காய் எண்ணையெண்டால் குளிர் காலத்தில் கட்டியாகி வெள்ளை நிறமாக இருக்கும். உருகின தேங்காய் எண்ணெய் நிறமற்று இருக்கவேண்டும். மஞ்சள் கலர் அடித்தால் கலப்பட எண்ணெயென்று அர்த்தம். Cold pressed Virgin coconut எண்ணெய் மிகவு நல்லது. வாசமும் கூட. Refined எண்ணெய் வாங்கவேண்டாம். தமிழ் கடைகளில் விக்கும் எண்ணையில் இப்படி ஒன்றும் போட்டிருக்காது . ஆனால் அவை virgin oil தான். இந்தியன் கடைகளில் விக்கும் எண்ணெய்களில் லேபிலில் விபரம் இருக்கும் எண்டு நினைக்கிறன். இங்கு Costco எண்ணெய் சுலபமாக கிடைப்பதால் ( அமெரிக்கர்களிடையே மிகவு பிரபலம்) நான் மற்ற எண்ணெய்களை கவனிக்கவில்லை . 60, 70 களில் வெள்ளவத்தை உருத்திரா மாவத்தை எண்ணெய் கடையில் தான் தேங்காய் எண்ணெய் வேண்டுகிறது. கடைக்கு பின்னாலேயே கொப்பரா போட்டு எண்ணெய் எடுப்பார்கள். அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் நல்லெண்ணெய் சரியான விலை. அதனால் தேங்காய் எண்ணெய் தான் சமையலுக்கு அதிகம் பாவித்தோம். 80 களில் வெளிநாட்டில் இருந்து மரக்கறி எண்ணெய் வரத்தொடங்கியதும் தேங்காய் எண்ணெய் உடலுக்கு கூடாது என்று வதந்திகளை பரப்பி சனம் எல்லாம் தேங்காய் எண்ணையை விட்டிட்டு மரக்கறி எண்ணெய் வாங்கத்துடங்கிட்டுது . பேப்பர்களில் வெளி நாட்டு ஆய்வாளர்களின் கட்டுரைகள் தேங்காய் எண்ணெய்தான் இலங்கை மக்களை கொல்லுகிறது என்று கூறியது. எமது அப்பா இவற்றையெல்லாம் நம்பவேண்டாம் , நாங்கள் தேங்காய் எண்ணெயே பாவிப்போம் என்று சொன்னார். அந்த நேரங்களில் தேங்காய் எண்ணெய் தான் மலிந்த எண்ணெய் ஆகவும் இருந்ததால் எமக்கு சாதகமாக இருந்தது. இப்ப மேலை தேசங்களில் தேங்காய் எண்ணெய்தான் விலை கூடிய எண்ணெய் .
 17. 1 point
  அந்தப் பிள்ளை இப்ப தான் வீட்டுக்கை வரவா என்று காலடியெடுத்து வைக்குது வழியெல்லாம் எண்ணெயை ஊற்றிப் போட்டு நிற்கிறீர்கள்.
 18. 1 point
  மனிசனை குழப்பிறதுக்கும் ஒரு அளவு இருக்குது.அப்புறம் அழுதுடுவன்.
 19. 1 point
  வித்தியாசமாய் இருக்க வேண்டும் என்பதற்காக சகட்டுமேனிக்கு ஏதேதோ செய்கிறார்கள் தோழர்......!
 20. 1 point
 21. 1 point
  படித்து படித்து ஆன்மீக இன்பம் பெற்றேன் தகவலுக்கு நன்றி.
 22. 1 point
 23. 1 point
  கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் 12 ஆம் ஆண்டு நினைவு! ஈழத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு வாழும் தெய்வமாக இருந்த சிவத்தமிழ் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 12 வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். ஈழத்தமிழர்களால் வாழும் தெய்வமாக கணிக்கப்பட்டு எல்லோராலும் அன்புடன் அம்மா என்று அழைக்கப்பட்ட பொதுச்சேவைக்கு இலக்கணமாக திகழ்ந்து தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து காட்டியவர். தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றுவதுதான் தன் பணி என்று நின்று விடாது, அதற்கு அப்பால் தான் வாழும் சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்தார். அதுதான் இறைவனுக்கு செய்யும் பணி என்று எடுத்துக்காட்டினார். 1925 ஆம் ஆண்டு பிறந்த அவர் அக்காலத்தில் அமெரிக்க மிசனறிமார் நடத்தி வந்த மல்லாகம் அமெரிக்க மிசன் பாடசாலையில் தனது ஆரம்ப கல்வியை ஆரம்பித்தார். 1946ஆம் ஆண்டு ஆசிரிய பணியில் இணைந்து கொண்டார். அதன் பின்னர் தமிழையும் சைவ சமயத்தையும் கற்று 1952 ஆம் ஆண்டு பாலபண்டிதராகத் தேர்வடைந்த இவர், 1958 இல் தமிழகத்தில் சைவப்புலவர் பட்டத்தையும் பெற்றார். இவரது 31 ஆண்டுகள் ஆசிரியைப் பணியில் கடைசி 12 ஆண்டுகள் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றி 1976 இல் ஓய்வு பெற்றார். யாழ் பகுதியில் இறைவழிபாட்டை மேம்படுத்தும் வழியில் யாழ்ப்பாணத்தில் ஒரு சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதில் தங்கம்மா அப்பாக்குட்டிக்கு முதன்மையான பங்குண்டு. 1970களில் சிறிய கோயிலாக இருந்த தெல்லிப்பழை துர்க்கை அம்மன் திருத்தலத்தைக் கட்டியெழுப்பி ஆலயப் பணியுடன் மக்கள் தொண்டும் ஆற்றி வந்தார். பிற்காலத்தில் இவர் ‘சிவத்தமிழ்ச் செல்வி’, மற்றும் ‘துர்க்கா புரந்தரி’ என அழைக்கப்பட்டார். தங்கம்மா அப்பாக்குட்டியின் கந்தபுராண சொற்பொழிவு நூலுக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்ததுடன், இவரின் முயற்சியில் பல அறநெறி நூல்களும் வெளியிடப்பட்டன. ஆலய வளாகத்தில் அனாதைச் சிறுமிகளுக்கென துர்க்கா மகளிர் இல்லம் என்ற பெயரில் ஆதரவு நிலையம் ஒன்றை நிறுவி சேவையாற்றி வந்தார். அத்துடன், ஈழப்போரில் அகதிகளாக்கப்பட்ட பல வயோதிபர்களுக்கு கோயிலில் அடைக்கலம் கொடுத்தார். சிவத்தமிழ்ச் செல்வி அன்னையர் இல்லம், நல்லூரில் துர்க்கா தேவி மணிமண்டபம் என்பனவற்றை ஆரம்பித்து தொண்டாற்றினார். ஈழத்தில் வாழ்ந்த ஒரு நடமாடும் தெய்வம் இறையடி சேர்ந்து இன்று 12 ஆண்டுகள் கடந்து விட்டன. அவரின் வாழ்வும் பணியும் தமிழ் இளையோருக்கு வழிகாட்டியாக அமையட்டும். https://newuthayan.com/கலாநிதி-தங்கம்மா-அப்பாக்/
 24. 1 point
  அழகான அந்த பனைமரம் அடிக்கடி நினைவில் வரும் வரும்! பனைக்குக்கீழ் வீடுகட்டி வாழ்ந்தும்... பனைபற்றி அறியாமல் போனோமோ?
 25. 1 point
 26. 1 point
  தாராவியில் நோய் தொற்று ஏட்பட்ட பின் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளார்கள் அவர்களே சென்னையில் இருந்து மதுரைக்கு வந்துள்ளார்கள் இதுவும் ஒரு முள்ளிவாய்க்காலாகும் . டெல்லியை சேர்ந்த கிந்திய இனவெறியர்களின் தமிழ் இன அழிப்பு .
 27. 1 point
  2015 ஆம் ஆண்டுதான் மக்களிடம் காணிகள் கையளிக்கப்பட்டது. வளலாயில் கடற்கரை பூமியும், செம்மண் விவசாய பூமியும் இருக்கு. பல ஆண்டுகளாக இராணுவத்தின் பிடியில் இருந்ததால் கையளிக்கும்போது ஏறத்தாள காடுகள் போல இருந்ததாம். நான் பதில்களை பதிவிட முதல் எழுத்துப்பிழைகளை சரிபார்ப்பதுண்டு. அதனால்தான் பிழைகள் மிகக்குறைவாக இருக்கிறது. சிறுவயதில் தமிழில் ஆர்வமான பெண்தான். மென்பொறியியல் துறைக்கு போனதால் தமிழை உச்சரிக்கவோ, எழுதவோ வாய்ப்பே கிடைக்கவில்லை. முகப்புத்தக கருத்துரைகளில் தமிழ் வளர்த்த சராசரிப்பெண்தான்.
 28. 1 point
 29. 1 point
  இப்ப நடக்கிறதெல்லாம் திருமண நிகழ்வு இல்லை அப்பன்! பாக்கவே எரிச்சலாய் இருக்கும்.
 30. 1 point
 31. 1 point
  நான் என்றால் எனக்கு முன்பு உதவியவரிடம் காரைக் கொடுத்து அந்த அம்மாவை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்க்க சொல்லி விட்டு அந்த அழகனுடன் எங்கேயோ போவன்
 32. 1 point
  இத்தனை அழிவுகளையும் ஏற்படுத்தியவர்கள் யார்? முப்பது வருட ஆயுதப் போராட்டத்தாலேயே பெரும் அழிவுகள் ஏற்பட்டன. ஆயுதப் போராட்டத்துக்கு தலைமை தாங்கி அதை ஊக்குவித்து முன்னின்று நடத்தியவர்களே இவ்வளவு அழிவுகளையும் ஏற்படுத்தியவர்கள். அவர்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் முக்கியமானவர். ஆயுதம் தூக்குவதற்கு முன் இனக்கலவரங்களை ஏற்படுத்தி, தமிழரை அகதிகளாக்கி, கப்பல்களில் ஏற்றி அனுப்பி வைத்து ஆயுதம் தூக்க நிர்பந்தித்தவர்கள் யார்? அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, மலேசியா உட்பட உலகின் பல நாடுகளில் இனக்கலவரங்கள் திரும்ப திரும்ப இடம்பெறுகின்றன. இங்கெல்லாம் ஆயுதக்குழுக்கள் உருவாகி, இலங்கையில் அழிவு ஏற்படுத்தியது போல் மக்களை அழித்தொழிக்கவில்லை. இலங்கையில் இந்திய RAW வின் ஆதரவுடன் இனக்கலவரங்களின் பாதிப்பு ஆயுதப் போராக மாற்றப்பட்டது. ஆயுத அமைப்புகளின் தலைவர்களே இதற்கு பொறுப்பு. இவர்கள் சரியாய் பிரச்சனையை கையாண்டிருந்தால் ஏன் ஆயுதம் தூக்க வேண்டிய கட்டாயம் வந்தது? ஆனந்தசங்கரி, மாவை சேனாதிராஜா, சம்பந்தன் ஆகியோரிடம் நீங்கள் இந்த கேள்வியை கேட்டு எழுதவில்லையே? அவர்கள்தானே அன்றிருந்து இன்றுவரை அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள்? சுமந்திரன் ஆயுதப்போரட்டம் தோற்றபின்பே அரசியல்வாதியானார். இளைஞரை உசுப்ப முன், இப்போ கூறும் ராஜதந்திரத்தை அப்போ கையாண்டிருக்கலாமே? ஆனந்தசங்கரி, மாவை சேனாதிராஜா, சம்பந்தன் ஆகியோரிடம் நீங்கள் இந்த கேள்வியை கேட்டு எழுதவில்லையே? அவர்கள்தானே அன்றிருந்து இன்றுவரை அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள்? சுமந்திரன் ஆயுதப்போரட்டம் தோற்றபின்பே அரசியல்வாதியானார். இனவழிப்போர் பேச்சு கேட்டு உலகம் அழிப்பிற்கு உதவியது என்றால், ஏன் தமிழரின் நியாயமான போராட்டத்தை இவர்கள் கொண்டு போகவில்லை, விளக்கவில்லை? தமிழரின் போராட்டம் நியாயமானது என்று அமிர்தலிங்கம் முதல் அன்ரன் பாலசிங்கம், சுமந்திரன் ஆகியோர் உட்பட பலர் உலகநாடுகளுக்கு நாற்பது வருடங்களாக விளக்கி சொல்லி இருக்கிறார்கள். அதன் விளைவான உலகநாடுகளின் நிலைப்பாடு இதுதான்: தமிழ்மக்களின் மனித உரிமைகளும் அரசியல் சமுகவியல் உரிமைகளும் இலங்கையில் தொடர்ச்சியாக மீறப்படுவதை உலக நாடுகள் கண்டித்து வருகின்றன. அதற்கு தீர்வாக தமிழ்மக்கள் தேர்ந்துகொண்ட ஆயுதப்போராட்டத்தை உலகநாடுகள் ஆதரிக்கவில்லை. இலங்கையில் தனியாக தமிழருக்கென்று ஒரு நாடு அமைக்கப்பட இலங்கையும் இந்தியாவும் ஆதரவளித்தாலே ஏனைய உலகநாடுகளும் ஆதரவளிக்கும். இது யார் தவறு? வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றிய அரசியல் தலைவர்கள். இந்திய RAWவிடம் ஆயுதமும் பயிற்சிகளும் பெற்று மற்றவர்களுக்கும் அவற்றை ஏற்பாடு செய்துகொடுத்த போராளி தலைவர்கள். இந்திய அரசியல்வாதிகளின் ஆதரவுடனும் உசுப்பேத்தலுடனும் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்கள். இவற்றை அரசியல்ரீதியில் தூரதரிசனத்துடன் கையாண்டு ஆரம்பத்திலேயே தீர்த்துவைக்காத இலங்கை அரச தலைவர்கள்.
 33. 1 point
 34. 1 point
  "ஹாப்பி பேர்த்டே.... ஸ்வாதி" என்று எழுதுங்கண்ணா.
 35. 1 point
 36. 1 point
  Today's recipe is Homemade Choco bar Ice cream - eggless, without cream and without ice cream maker. chocolate icecream recipe by tiffin box. Ingredients: Powdered milk - 1 cup Water - 3/4 cup Condensed milk - 1/3 cup Cornflower - 2 tablespoons Water - 2-3 tblsp vanilla essence - 1/2 tsp Milk chocolate - 200 g Roasted peanut - 1 tblsp
 37. 1 point
  சாலெம் சுமந்திரன்! கொழும்பான் அவர்களின் இந்தத் திரியில் உங்களைப் பாராட்டவோ, வாழ்த்தவோ மனம்வரவில்லை காரணம், உங்கள் திறமையை சிறீலங்காவின் கேடுகெட்ட அரசியலோடு சம்பந்தப்படுத்தி, தமிழரோடு இருந்துகொண்டே தமிழினத்தை அழிக்க ஒரு கருவியாக சிங்களத்துக்குத் துணைபோகும் சில முசுலீம்களால் நடாத்தப்படும் பத்திரிகையின் செய்தியைக் கொண்டு இந்தத்திரியை அவர் உருவாக்கியிருப்பதால்.
 38. 1 point
  அண்ணர் குறிப்பிட்டது என்னைத் தான் என்று நினைக்கிறேன்! தேங்காய் எண்ணை இதய நலனுக்கு நல்லது என்று நிறுவும் எந்த நம்பகமான ஆய்வுகளும் இது வரை வரவில்லை! உடலின் மேற்பரப்பான தோலுக்கு தேங்காய் எண்ணை நல்லது. ஏனெனில் அதில் இருக்கும் saturated fat தோலில் இலகுவாகத் தங்கி மினு மினுப்பூட்டும்! இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தேங்காயெண்ணையில் இருக்கும் saturated fat கொலஸ்திரோலை அதிகரிக்கும் என்பதே இது வரையில் கண்டறியப் பட்ட தகவல். ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் அபிப்பிராயம் கீழே: https://www.health.harvard.edu/heart-disease-overview/coconut-oil-heart-healthy-or-just-hype#:~:text=It is said that coconut,attack and other cardiovascular events.
 39. 1 point
  பெரும் போரை நோக்கிய ஐரோப்பிய அரசியல் நகர்வுகள் – உலகப்போர் 2 முதல் உலகப்போர் நடைபெற்ற வருடங்கள் என்றால் 1914 முதல் 1918 வரை என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும். ஆனால் இரண்டாம் உலகப் போரை இப்படி ஒரு காலகட்டத்திற்குள் அடக்கி விட முடியாது. வரலாற்று ஆசிரியர்களும் ஆய்வாளர்களும் போரின் காலகட்டம் குறித்து மாறுபடுகிறார்கள். பொதுவாக ஏற்றுக்கொள்ளபட்ட கணக்கு 1939 முதல் 1945 வரை என்றாலும், சிலருடைய கூற்றுப்படி, இரண்டாம் உலகப் போரின் தொடக்கம் 1939 அல்ல 1931. சீனா மீது ஜப்பான் தாக்குதல் தொடுத்த ஆண்டு அது. 1931 தொடங்கி 1939 வரை ஐரோப்பாவில் நடைபெற்ற உள்நாட்டு போர்கள், கலகங்கள், யுத்தங்கள், ஆக்கிரமிப்புக்கள், அத்துமீறல்கள் அனைத்தும் இரண்டாம் உலகப்போருடன் நேரடியாக தொடர்பு கொண்டிருகின்றன. ஆகவே இந்த கொந்தளிப்பான காலகட்டம் சரித்திரத்த்தில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது, ஹிட்லர் ஜெர்மனியின் பலத்தைப் பெருக்கிக் கொண்டதும் இந்தக் காலகட்டத்தில் தான். ஒரு ஆட்டம் ஆடிப் பார்த்து விடலாம் என்னும் நம்பிக்கையை அவர் ஏற்படுத்திக் கொண்டதும் அப்போது தான். ஹிட்லரின் திட்டம் தெளிவானது. அகண்ட ஜேர்மனியை உருவாக்க வேண்டுமானல் ஐரோப்பாவுடன் போரிட்டு வெல்ல வேண்டும். ஐரோப்பாவின் பலம் பொருந்திய சக்திகளான பிரிட்டன்,பிரான்ஸ,சோவியத்யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் நேருக்கு நேர் நின்று மோதி விழுத்த வேண்டும். எப்போது வேண்டுமானாலும் தொடங்கி விடலாம். அதற்கு முன்பாக செய்ய வேண்டியது ஜேர்மனியின் ராணுவ பலதைப் பெருக்குவது. இன்னொரு தோல்வியை ஜேர்மனி சந்திக்க் கூடாது. இனி எப்போதும். முதல் கட்டமாக ஆஸ்திரியா, போலந்து, செக்கோஸ்லாவாக்கியா போன்ற அக்கம் பக்க நாடுகளை முதலில் தாக்கி கையகப்படுத்த வேண்டும். தெளிவாக திட்டமிட்டு வீழ்த்தவேண்டும். இபோதைக்கு பெரிய சக்திகளைப் பகைத்துக்கொள்ளக்கூடாது. பலம் கூடியதும் அவர்களைத் தாக்கலாம். ராணுவத்தை மட்டுமல்ல ராஜதந்திரத்தையும் பயன் படுத்தினால் தான் இது சாத்தியமாகும். சீனா மீதான ஜப்பானின் தாக்குதல் ஐரோப்பாவில் ஹிட்லர் அதிகாரத்தை நோக்கிய தனது நகர்வினை மேற் கொண்டிருந்த வேளே ஆசியா கண்டத்தில் வேறு சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன. சீனாவின், ஸன் யாட் சென் (Sun Yat-Sen) மறைவிற்கு பிறகு, சியாங் கை ஷெக் (Chiang Kai-Shek) கோமிண்டாங் கட்சியின்(Kuomintang Party) (மன்னராட்சியை ஒழிப்பதை குறிக்கோளாக்க் கொண்டு தொடங்கப்பட்ட புரட்சிகரக் கட்சி) தலைமைபீடத்தைக் கைப்பற்றியிருந்தார். ஒட்டுமொத்த சீனாவையும் சுவீகரித்துக் கொள்ளும் கனவு அவரிடம் இருந்தது. மன்னர்களாலும் பின்னர் பல்வேறு அந்நிய தேசங்களின் மேலாதிக்கதாலும் தொடர்ந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த சீனா, அரசியல் ரீதியிலும் ராணுவ ரீதியிலும் மிகவும் பின்தங்கியிருந்தது. இந்த நிலைமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் சியாங். இந்தக் கனவுக்கு அசுசுறுத்தலாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராடிக்கொண்டிருந்தனர். எனவே சீனா முழுவதும் இருந்த்து கம்யூனிஸ்ட்டுக்கள் விரட்டியடிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கடைசி கம்யூனிஸ்ட் எஞ்சியிருக்கும்வரை இந்தப் போர் தொடரும் என்று சியாங் வெறுப்புடன் கறுவியிருந்தார். ஹிட்லருக்கு ஏற்பட்ட அதே வெறுப்பு. நான்கிங் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரதேசங்களை கோமிட்ணாங் கைப்பற்றியிருந்தது. மாவோ தலைமுயில் செம்படை தனது நெடும்பயணத்தை அக்ரோபர் 1935ல் நிறைவு செய்திருந்தது. கிட்டத்தட்ட ஆறாயிரம் மைல்களைக் கடந்து முன்னேறிய செம்படை, வழி நெடுகிலும் உள்ள நகரங்களையும் கிராமங்களையும் சியாங்கின் பிடியில் இருந்து விடுவித்துக்கொண்டே சென்றது. *சோவியத்தின் செம்படையின் வெற்றியால் உந்தப்பட்டு அதே பெயரில் உருவாக்கப்பட்டிருந்தது சீனாவின் செம்படை சியாங் ஒரு பக்கம். மற்றொருபக்கம் ஜப்பான். ஜப்பானின் முக்கிய அரசாங்க கடமைகளில் ஒன்று சீனாவைக் கண்காணிப்பது. ஒவ்வொரு சிறிய வியடத்தையும் கண்காணித்தார்கள். எந்ந பிரதேசத்தை யார் ஆள்கிறார்கள்? ராணுவம் என்ன செய்கிறது. அரசாங்கம் என்ன செய்கிறது? யார் புரட்சி செய்கிறார்கள்? சீனாவில் அரிசி கிலோ எவ்வளவு ? மக்காச்சோள மகசூல் இந்த மாதம் எவ்வளவு? ஒவ்வொன்றும் தெரிந்தாக வேண்டும். ஏன்? ஜப்பானைப் பொறுத்தவரை சீனா என்பது தனிபெரும் தேசம் அல்ல. ஜப்பானின் மற்றொறு மாநிலம். சீனாவி்ன் மூலை முடுக்குகளில் எல்லாம் ஜப்பானிய அதிகாரிகள் நின்று கொண்டிருப்பார்கள். கடை போட்டு உட்கார்ந்திருப்பார்கள். டாங்கிகளில் மீதேறி உட்கார்ந்து வேடிக்கை பார்பார்கள். சீனாவில் உள்ள ஆனால் ஜப்பானுக்கு உட்பட்ட பிரதேசம் என்று ஒரு பட்டியல் எடுத்தால் தலை சுற்றும். ஜப்பான் இயற்கை வளங்கள் அற்ற நாடு என்பதால் அது பெரும்பாலும் ஏற்றுமதியை நம்பியிருந்தது. குறிப்பாக அமெரிக்காவிடம் இருந்து. சர்வ வளங்களும் பொருந்திய ஒரு காலனி இருந்தால் மட்டுமே பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப முடியும் என்னும் நிலையில் சீனா உறுஞ்சிக்கொள்ள முடிவு செய்தது ஜப்பான். ஜப்பானின் அந்நிய முதலீடுகளில் ஐந்தில் நான்கு பங்கு சீனாவுக்குப் போய் சேர்ந்தது. அமெரி்க்கா, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகளுடன் ஜப்பான் போட்டி போட்டது. அவர்களுக்கு சமமான நிலையை அடையவிரும்பியது. ஜப்பான், பிரிட்டன், ஜேர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி என்று ஐரோப்பாவின் சக்திகள் அனைத்தும் ராணுவத்தில் தன்னிறைவு அடைந்துவிட்டன. ஜப்பான் எப்போது வல்லரசாவது? பதினெட்டாம் நூற்றாண்டு அமெரிக்கவாவுயும் இப்போதைய அமெரிக்காவையும் ஒப்பிட முடியுமா? எப்படிச் சாத்தியமானது இந்த வளர்ச்சி? தீவிரமாகச் சிந்தித்துக்க கொண்டிருந்தது ஜப்பான். ஜப்பானின் அப்போதைய எரிச்சல் சீனாவின் செம்படை. இதென்ன புற்றீசல் போல் இப்படிக் கிளம்பியிருக்கிறதே. புற்று வளரும் வரையா விட்டு வைப்பார்கள்? இந்ந சியாங் கை ஷேக் தம் படை வீர்ர்களுடன் பல்லாங்குழியா ஆடிக்கொண்டிருகிறான்? முதல் சிவப்பு கொடியை உயர்த்திப் பிடிப்பவனின் கையை, காலை உடைத்துப் போட்டிருந்தால் இந்த அளவுக்கு விஷம் பரவியிருக்குமா? நெடும் பயணம் போகிறார்களாம். வழியில் தென்படும் ராணுவப் பிராந்தியங்களை அழித்துக் கொண்டே வருகிறார்களாம். கோமண்டாங்கை விட அதிக பலம் பொருந்தியவர்களாம். இப்படியே போனால் ஒட்டுமொத்த சீனாவையும் செம்படை வளைத்துப் பிடித்துக்கொள்ளுமாம். இப்படியான சிந்தனையில் ஈடுபட்டது ஜப்பான். செப்ரெம்பர் 18 1931ம் ஆண்டு சீனா மீது படையெடுத்தது ஜப்பான். முதலில் மஞ்சூரியா, பிறகு ஷாங்காய். ஒரு சில மாதங்ககளில் இரண்டும் ஜப்பானால் கைப்பற்றப்பட்டன. அவர்ளுக்கு அங்கே அதிகம் வேலை இல்லை. கதவு திறந்தே கிடந்தது. ஒப்புக்கு சில சீனர்கள் துப்பாக்கியை வைத்துக் கொண்டு பம்மாத்து செய்து கொண்டிருந்தார்கள். இடது கை சுண்டுவிரலால் அவர்களை நசுக்கிப்போட்டது ஜப்பானியப் படை. அதிர்ந்து நின்றார்கள் சீனர்கள். இதெல்லாம ஒரு தேசமா? அரசாங்கத்தின் யோக்கிதை இது தானா? தமக்கு ஒரு சம்பந்தமும் இல்லாத பக்கது நாடு நம் மீது படையெடுத்து வந்து நம்மையே கொன்று நம் பகுதிகளைக் கைப்பற்றிக் கொள்கிறது. ஒப்புக்கு நான்கு பேரை அனுப்பிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது அரசாங்கம். நம் நாடு, நம் மக்கள், நம் பகுதிகள் என்று கொஞ்சமாவது அக்கறை இருகிறதா? பஞ்சத்தால் அடிபட்ட ஒரு விவசாயி கூட என் தேசம் என்கிறானே. கேட்டால் சர்வதேச சங்கங்களுக்கு மனு போட்டிருக்கிறோம் என்று ஒரு பதில். ஏன்? அவர்களை ஏன் அழைக்க வேண்டும்? ராணுவம் என்று எதற்கு வைத்திருக்கிறாய்? கவாத்து செய்வதற்கும் சல்யூட் அடிப்பதற்குமா? பளபளக்கும் தொப்பிகளும் துப்பாக்கிகளும் எதற்கு? இங்கே சியாங்கை ஷேக். அங்கே வேறு யாரோ? ஷாங்காய்க்கு என்ன வந்தால் என்ன என்று மஞ்சூரியா நினைக்கிறது. தெற்கில் ஜப்பான் வந்தால் என்ன என்று வடக்கு தூங்குகிறது. சீனர்கள் தெருவில் இறங்கினார்கள். தெருவில் இறங்கி நடந்தால் சீனா போல் இல்லை. எதிரே வரும் பத்து பேரில் இரண்டு ஜப்பானியர்கள். இப்படியே போனால் சீனர்களின் கலாச்சாரம், மொழி, வரலாறு அனைத்தும் அழிந்து போய்விடும். ஜப்பான் சீனாவை மொத்தமாக சாப்பிட்டுவிடும். சீனாவில் நடக்கும் மாற்றங்களை பிரிட்டனும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தது. வேறெந்த தேசங்களை விட சீனா மீது அக்கறை செலுத்துவதில் தனக்கே முன்னுரிமை அதிகம் இருப்பதாக பிரிட்டன் நம்பியது. காரணம் அமெரிக்காவைக் காட்டிலும் பிரிட்டன் சீனாவில் அதிக பணத்தைக் கொட்டியிருந்தது. பிரிட்டனும் ஜப்பானும் 72 சதசவீத முதலீட்டைச் சீனாவில் செய்திருந்தன. அமெரிக்கா ஜப்பானை விட அதிக அறவி்ல் முதலீடு செய்திருந்தது. சீனாவை அபகரித்துக் கொள்வதில் ஜப்பான் காட்டிய அவசரத்துக்கு காரணம் மேற்படி போட்டியாளர்கள் தான். நான் தான் அதிகம் முதலீடு செய்துள்ளேன். சீனா எனக்கு தான் சொந்தம் என்று ஆளாளுக்கு வரிந்து கட்டிக்கொண்டு போர் தொடுக்க ஆரம்பித்தால் விவகாரம் சிக்கலாகி விடும். ஆகவே உடனுக்குடன் சீனப்பிராந்தியத்தைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட வேண்டும் என்று ஜப்பான் துடித்தது. ஜனவரி 1932ல் ஜப்பான் ஷாங்காய் மீது போர் தொடுத்த போது, ஐரோப்பா நிமிர்ந்து உட்கார்ந்தது. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி என்று ஒவ்வொரு நாடும் இந்தப்போரை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தன. ஐரோப்பிய மக்களையும் இந்த போர் உலுக்கியது. எதிர்ப்புக்கள் அதிகம் காட்டமுடியாத சீனாவை ஜப்பானிய விமானங்கள் பறந்து பறந்து தாக்கியதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதற்காக இந்த போர்? சீனா ஜப்பானை என்ன செய்தது? அப்பாவி சீனர்கள் எதற்காக குண்டடிபட்டு சாகவேண்டும்? இது அநியாயம் இல்லையா? சீனா மீது அக்கறையும் கரிசனமும் குவிய ஆரம்பித்த அதே சமயம் ஜப்பானை மேலாதிக்கம் செலுத்தும் ஒரு தீய சக்தியாகவும் ஐரோப்பா பார்க்க ஆரம்பித்தது. மஞ்சூரியா மீது ஜப்பான் அடுத்த தாக்குதலை நிகழ்த்திய போது சீனா லீக் ஒஃப் நேஷன்ஸிடம் (League of Nations) முறையிட்டது. சரி, இவர்கள் தலையிட்டு ஏதாவது செய்வார்கள் என்று மக்கள் காத்திருந்தனர். ஆனால், லீக் அலட்டிக்கொள்ளவில்லை. ஜப்பானின் பெரும் படையை எதிர்த்து நிற்கும் அளவுக்கு சக்தி தன்னிடம் இல்லை என்று புலம்பியது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பிற நாடுகள் எதுவும் இதில் தலையிடவில்லை. லீக் மட்டுமல்ல எந்த சர்வதேச அமைப்பாலும் போரைத் தடுத்து நிறுத்த முடியாது என்னும் உண்மை இந்த போரினால் அம்பலமானது. அமெரிக்கா இந்தப் போரைக் கண்டித்தது. பிரிட்டன் நிலை கொள்ள முடியாமல் தவித்தது. சீனாவுக்கு ஆதரவாகப் போரில் குதித்தால் ஜப்பானைப் போலவே தானும் எதிர்க்கப்படுவோம் என்று அதற்குத் தெரிந்து போனது. தவிரவும், கோம்ண்டாங் படைமீது மேற்கு நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. கோமிண்டாங்குக்கு உதவுவதன் மூலம் சீனாவைக் காப்பாற்றிவிட முடியாது என்று அவர்கள் நம்பினார்கள். கூடுதலாக, தேவையில்லாமல் ஜப்பானை பகைத்துக்கொள்ள நேரிடும். எதற்கு அநாவசிய வம்பு.? சமகாலத்தில் ஐரோப்பாவில் ஜேர்மனியின் பலப்படுத்தல் இவ்வாறாக ஆசியாக் கண்டத்தில் சீனா மீதான ஜப்பானின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போது ஐரோப்பாவில் ஹிட்லர் மையின் காம்ஃப் நூலில் தான் எழுதிய தனது கனவான தூயஜேர்மனியை உருவாக்கும் திட்டங்களின் முன்னெடுப்புகளை நனவாக்கும் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த தொடங்கி இருந்தார். ஹிட்லரை பிரிட்டன் அறிந்திருந்தது.. பெருகிக்கொண்டிருக்கும் நாசி இராணுவபலம், யூத வதை முகாம்கள், யூத இன அழிப்பு. ஜேர்மனியில் இருந்து தப்பி ஓடி வந்த யூத அகதிகள் ஜேர்மனியில் நடந்து வரும் கொலைபாதகச் செயல்களை ஊர்ஜிதப்படுத்தினர். என்றாலும் பிரிட்டன் கண்டு கொள்ளாமல் இருந்தது. பிரிட்டனை விட பிரான்ஸ் ஜேர்மனியை நன்கறிந்திருந்தது. இது அபாயகரமான போக்கு என்று அதற்கு நன்கு தெரிந்திருந்தது. அன்றைய ஃபிரஞ்சு ராணுவம், ஜேர்மன் ராணுவத்தை விட வலுவாகத்தான் அன்று இருந்தது. ஆனால் யுத்தம் என்று வந்துவிட்டால் ஜேர்மனியை எதிர்கொள்ள முடியுமா என்னும் தயக்கம் பிரான்ஸிடம் இருந்தது. இந்த தயக்கம், பிரான்ஸை வெறும் பார்வையாளராக மாற்றியது. நவம்பர் 1933ல் பிரிட்டிஷ் அம்பாஸிடர் எரிக் பைப்ஸ் (Sir Eric Phipps) என்பவரை ஹிட்லர் சந்தித்து பேசினார். உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஆங்கிலேயருக்கும் ஜேர்மனியர்களுக்கும் இடையில் இணைப்பு ஏற்படவேண்டும் என்பது தான் என் விருப்பம். எங்கள் தேச நலனிற்காக நீங்கள் ஓர் உபகாரம் செய்ய வேண்டும். எங்கள் ராணுவத்தின் பலம் பெருகவேண்டும். மூன்று லட்சம் பேராவது இருந்தால் தான் நல்லது. உங்கள் ஆதரவு கிடைக்குமா? பொறுத்திருங்கள் ஹிட்லர் குறைந்தது பத்து ஆண்டுகளாவது நீங்கள் காத்திருக்கத் தான் வேண்டும். சரி அது ஒரு பக்கம் கிடைக்கட்டும் என்று போலந்து பக்கம் திரும்பினார் ஹிட்லர். ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஜனவரி 1934ல் ஒப்பந்தம் ஒன்றையும் போட்டுக்கொண்டார் ஹிட்லர். எக்காரணத்தைக் கொண்டும் ஜேர்மனி போலந்தைத் தாக்காது என்பது தான் அந்த ஒப்பந்ததின் ஷரத்து. ஹிட்லர் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறிக்கொண்டிருந்தார். 1935 தொடக்கத்தில் ஜேர்மனியின் ஒரு மாகாணமான சார்லாண்ட்(Saarland) சட்டபூர்வமாக அதனுடன் ஒன்றிணைக்கப்ட்ட போது பிரான்ஸும் பிரிட்டனும் அதிர்ந்து போயின. காரணம், வெர்ஸைல்ஸ் ஒப்பந்தப்படி இந்த பிரதேசம் ஜேர்மனியின் கைவிட்டு போய்விட்டது. பிரிட்டனும் பிரான்ஸும் மட்டுமே இந்த பிரதேசத்துக்கு சொந்தம் கொண்டாட முடியும். நிர்வகிக்கும் உரிமை பிரானஸிடம் இருந்தது. 1933 ல் நாசிகளுக்கு எதிரானவர்கள் பலர் சார்லாண்டுக்கு ஓடிப்போனார்கள். ஜேர்மனியின் ஆட்சிக்கு உட்படாத பிரதேசமாக சார்லாண்ட் இருந்ததால் அங்கே பாதுகாப்பு கிடைக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. சார்லாண்ட் எக்காலத்திலும் ஜேர்மனிக்கு போய்விடக்கூடாது, அது பிரான்ஸின் ஆளுகைக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். நாசிகளுக்கு எதிரான ஒரு ஜேர்மனிய குழு அங்கே உருப்பெற்றது. அதே சமயம், சார்லாண்டில் இருந்த ஜேர்மனியப் பிரஜைகள் பிரான்ஸின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். நாசி ஜேர்மனியில் ஆயிரம் குற்றம், குறைகள் இருந்தாலும் நாங்கள் ஜேர்மனியோடு தான் இணைவோம் என்றனர். நாசி எதிர்ப்புக் குழுவினரால் இவர்களை ஈர்க்க முடியவில்லை. சார்லாண்ட் ஜேர்மனியர்கள் பேர்லினுடன் இணையும் நாளை எதி்ர்நோக்கியிருந்தனர். 1920 ம் ஆண்டு லீக் ஓஃப்் நேஷன்ஆஇன் தீர்மானத்தின்படி, பிரான்ஸ் பதினைந்து ஆண்டுகள் மட்டுமே மேலாதிக்கம் செலுத்த முடியும். அதற்குப் பிறகு அங்கே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஜனவரி 15, 1935 ல் வாக்கெடுப்பு நடந்த போது 90.30 சதவீத மக்கள் ஜேர்மனிக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆகவே சட்டப்படி சார்லாண்ட ஜேர்மனியுடன் சேர்ந்து கொண்டது. சந்தேகமில்லாமல் ஜேர்மனியின் பலம் பெருகிக் கொண்டிருந்தது. ராணுவத்தைக் கட்டமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார் ஹிட்லர். ஜேர்மனியால் நேரக்கூடிய ஆபத்தை பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி மூன்றும் உடனே புரிந்து கொண்டு விட்டன. இனி எழுந்திருக்காது என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே முந்தைய போரை முடிவுக்குக் கொண்டுவந்தோம். ஆனால், இன்று ஜேர்மனி தட்டிவிட்டு கொண்டு எழுந்து நிற்கிறது. அதோடு நில்லாமல், ஆயுதங்களையும் குவித்து வைத்து கொண்டு மல்லுக்கட்டி நிற்கிறது. இது சரியல்ல. ஜேர்மனியால் இன்னொரு போர் மூளக்கூடிய அபாயத்தை மறுக்க முடியாது. மேலும் மேலும் ஹிட்லர் ஆயுதங்களைக் குவித்துக் கொண்டே போகிறார். முந்தைய போரில் நாம் இழந்த பிரதேசங்களை மீண்டும் பிடிப்போம் என்று உணர்ச்சி பொங்க உரையாற்றுகிறார். உளவுத்தகவல்கள் ஜேர்மனியின் போர் விருப்பத்தை ஊர்ஜிதப்படுத்துகின்றன. முந்தைய யுத்தத்தில் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தைத் தொடர்வது என்று இந்த நாடுகள் முடிவு செய்தன. நாம் நேச நாடுகளாகவே நீடிப்போம். இந்த அணி அப்படியே தொடரட்டும். நமக்குள்ளே எந்தப் பிரச்சனையும் இருக்கக்கூடாது. ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வோம். ஆபத்து என்றால் ஓரணியில் திரள்வோம். பிரான்ஸ் இத்தாலி உடன்படிக்கை – Franco- Italian Agreement ஜனவரி 1935 ல் பிரான்ஸும் இத்தாலியும் கைகுலுக்கிக் கொண்டன.Franco-Italian Agreement) ஜனவரி 5, 1935 ல் ரோமுக்கு சென்று முஸோலினியைச் சந்தித்தார் பிரான்ஸின் அயல்துறை அமைச்சர் பியரெ லவால்(Pierre Laval). பிரான்ஸுக்கு சொந்தமான சோமாலிலாந்தில் இருந்து (தற்போது Djibouti) சில பகுதிகளை உங்களுக்குத் தந்து விடுகிறோம். எதியோப்பியாவில் உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ளலாம். பதிலுக்கு நீங்கள் எங்களுடன் கூட்டு சேர்ந்து கொள்ளவேண்டும். ஜேர்மன் ஆக்கிரமிப்பு நிகழ்ந்தால் நீங்கள் கைகொடுக்க வேண்டும். மே 2 1935 ல் சோவியத்தும் பிரான்ஸும் ஒர் ஒப்பந்தம் செய்து கொண்டன. (Franco- Soviet Treaty of Mutual Assistance) சோவியத்துடன் சேர்வதற்கு முதல் நிறைய சிந்தித்தது பிரான்ஸ். ஆனாலும், அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. சோவியத்தின் கம்யூனிச சித்தாந்தத்தை பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் ஹிட்லரின் ராணுவ விரிவாக்கத்துக்கு ஈடு கொடுக்க வேண்டுமானால் சோவியத்தின் உதவி அவசியம் என்பதை உணர்ந்திருந்தது. பிரிட்டன் - ஜேர்மனி ஒப்பந்தம் - Anglo- German Naval Agreement ஜுன்19, 1935 ல் பேரதிசயமாக, பிரிட்டனும் ஜேர்மனியும் ஒர் உடன்படிக்கையை உருவாக்கி கையெழுத்திட்டன. (Anglo- German Naval Agreement) 1919 வெர்ஸைல்ஸ் ஒப்பந்தத்தின்படி, ஜேர்மனி தன் கடற்படையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். நீர்மூழ்கி கப்பல்கள், போர்க்கப்பல்கள் போன்றவற்றை ஜேர்மனி வாங்க முடியாது. பயன்படுத்த முடியாது. ஆறு கனமான க்ரூஸர்கள், ஆறு மிதமான க்ரூசர்கள்,12 டெஸ்ட்ராயர் போர்க்கப்பல்கள், 12 டார்பிடோ படகுகள் இவை மட்டுமே தற்பாதுகாப்பக்காக அனுமதிக்கப்பட்டிருந்தன. ஜேர்மனி பல்வேறு சமயங்களில் தன் எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. இதென்ன அநியாயம்? தோற்றுப்போன ஒரே காரணத்திற்காக எங்கள் பலத்தை நாங்கள் குறைத்துக் கொள்ளவேண்டுமா? ஒன்று ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் தங்கள் பலத்தை எங்களோடு சேர்ந்து குறைத்துக்கொள்ள வேண்டும். அல்லது எங்களையும் உங்களுக்கு சமமாக வளர அனுமதிக்கவேண்டும். 1919ம் ஆண்டுக்கு பிறகு, பிரிட்டனில் ஜேர்மனிக்கு ஆதரவான அலை அங்குமிங்குமாக வீச ஆரம்பித்தது. ஆயிரம் சொன்னாலும் ஜேர்மனியை இப்படி அழுத்திப்பிடிப்பது சரியல்ல என்று விமர்சனங்கள் எழுந்தன. எப்போதோ போட்ட ஒப்பந்தத்தை எதற்கு உடும்பு போல் பிடித்துக் கொள்ளவேண்டும். கொஞ்சம் தளர்த்தலாமே என்று வெளிப்படையாக பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஐரோப்பாவின் சக்திவாய்ந்த தேசம், ஜேர்மனி. அங்கே அமைதி நிலவவேண்டுமானால், அவர்களால் ஐரோப்பாவில் அமைதி நிலவ வேண்டுமானால் நாம் கொஞ்சம் விட்டுக் கொடுத்து தான் ஆக வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தார்கள். ஹிட்லரின் வருகைக்குப் பிறகு பிரிட்டன் அரசாங்கத்திடம் இந்த தடுமாற்றம் இருக்கவே செய்தது. என்ன செய்வது ஜேர்மனியை? கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் என்ன ஆகும்? என்ன செய்வார் ஹிட்லர்? மீண்டும் ஒரு போர் மூளுமா? அல்லது தன்னிறைவு பெற்ற ஜேர்மனியில் அமைதி நிலவுமா? ஆகஸ்ட் 1933ல் பாதுகாப்புதுறையைச் சேர்ந்த ஜெனரல் சர் மௌரிஸ் ஹாங்கே என்பவர் ஜேர்மனிக்கு சென்று வந்தார். தான் தரிசித்த நவ ஜேர்மனியைப்பற்றி அக்ரோபர் மாதம் அவர் ஒரு குறிப்பு எழுதினார். என்ன செய்யப்போகிறது பிரிட்டன்? மைய்ன் காம்ஃப் எழுதிய ஹிட்லரோடு உறவு வைத்துக்கொள்ள போகிறோமா? தான் சொன்னது போல் அவர் போலந்தை அபகரித்துக் கொள்வார் என்று நம்பப்போகிறோமா? அல்லது, ஜேர்மனியின் சங்கடங்களை, சவால்களை, தேவைகளை உணர்ந்த புதிய தலைவராக ஹிட்லரை அங்கீகரிகப்போகிறோமா? இந்த புதிருக்கு உடனே நாம் விடை கண்டு பிடித்தாக வேண்டும். ஹிட்லரோடு கைகோர்த்துக் கொள்ள முடிவு செய்தது பிரிட்டன். மார்ச் 1935 ல் ஹிட்லர், ஜோவாசிம் ஃவொன் ரிப்பன்ட்ராப் (Joachim von Ribbentrop) என்பவரை ஜேர்மனியின் அயல்துறை அமைச்சராக நியமனம் செய்தார். ஜுன் 2, 1935 ல் ரிப்பன்ராப் லண்டன் சென்றார். தன் வாதத்தை அவர் அழுத்தமாக எடுத்து வைத்தார். எங்கள் கோரிக்கையை ஏற்று ஜேர்மன் கடற்படையை பிரிட்டன் பலப்படுத்தவேண்டும். நூற்றுக்கு முப்பதைந்து என்ற விகிதத்தில் பலத்தை கூட்டிலாலே போதுமானது. இதை நீங்கள் மறுப்பதாக இருந்தால் பாதகமில்லை, எங்கள் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் எங்கள் பலத்தை நாங்களே அதிகப்படுத்திக் கொள்வோம். ரிப்பன்ராபின் குரலில் தொனித்த உறுதியையும் அலட்சியத்தையும் ஆணவத்தையும் கண்டு திகைத்தது பிரிட்டன். நிச்சயம் இது போன்ற ஒரு தொனியில் பேபசி எந்ந உடன்படிக்கையையும் நிறைவு செய்ய முடியாது. அதிலும் ஜேர்மனி வந்திருப்பது பிரிட்டனிடம் உதவி வேண்டி. இப்படியா உதவி கேட்பார்கள்? மறுத்துவிட தான் முடிவு செய்ய நினைத்தது பிரிட்டன். ஆனால் யோசித்துப் பார்த்த போது, உடன்படிக்கை போட்டுக்கொள்வது தான் சரி என்று தோன்றியது.. ஹிட்லர் சொன்னதை செய்து முடிக்கக்கூடியவர், செய்து முடிக்க முடியும் என்னும் நம்பிக்கை இருப்பதால் தான் இந்த வித மிரட்டல் தொனியுடன் பேச்சுவார்த்தை நடத்தமுடிகிறது. உடன்படிக்கை போடாவிட்டால், ஜேர்மனி தன் கப்பற்படை பலத்தை கணக்கிலடங்கா விதத்தில் கூட்டிவிடும். ஜேர்மனியின் தொட்ழ்நுட்ப திறனையும் கட்டுமான திறனையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. விவேகத்துடன் நடந்து கொள்வது தான் சிறந்த வழி. தன் வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்ககளில் இதுவும் ஒன்று என்று ஹிட்லர் இந்தச் சம்பவத்தை பின்னர் கொண்டாடிக் கொண்டார். எதியோப்பிய ஆக்கிரமிப்பு – Italien Occupation in Ethiopia அக்ரோபர் 1935 ல் இத்தாலி எதியோப்பியாவை(அபிசீனியா என்றும் அழைப்பார்கள்) ஆக்கிரமித்தது. இத்தாலியப் படைகளை எதிர்கொள்ளும் அளவுக்கு எதியோப்பியாவிடம் படை வலிமை கிடையாது. ஆகவே எதியோப்பியா இத்தாலியின் ராணுவப்பலத்தில் சுருண்டு ஒடுங்கிபோனது. இத்தாலிய கிழக்கு ஆபிரிக்கா என்னும் பெயரில் தனக்கான காலனிகளை இத்தாலி உருவாக்கிக் கொண்டது. ஜப்பானின் சீன ஆக்கிரமிப்பை எப்படி லீக் ஒஃப் நேஷன்ஸால் தடுத்து நிறுத்த முடியவில்லையோ அப்படியே இத்தாலிய ஆக்கிரமிப்பையும் லீக்கால் தடுத்து நிறுத்த முடியவில்லை. வேடிக்கை மட்டுமே பாத்துக்கொண்டிருந்தது. இத்தாலி, எதியோப்பியா இரண்டுமே லீக்னி உறுப்பு நாடுகள் என்ற போதிலும். இந்த ஆக்கிரமிப்பு முசோலினியை பிரபலப்படுத்தியது. ஐரோப்பிய நாடுகள் இந்த ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜேர்மனி இத்தாலிக்கு கைகொடுக்க முன்வந்தது. எதியோப்பியாவை இத்தாலி ஆக்கிரமித்ததில் தவறேதுமில்லை. இத்தாலியை நாம் ஆதரிக்கிறோம் என்று அறிவித்தது ஜேர்மனி. அடுத்ததாக ரைன்லாந்து பக்கம் பார்வையை திருப்பினர் ஹிட்லர். வெர்சைலஸ் ஒப்பந்தத்தால் நிராயுதபாணியாக மாற்றப்ட்ட மற்றொரு பிரதேசம். ராணுவ சீருடைகளை இங்கு பார்க்க முடியாது. ஜேர்மனி ஒரு பக்கம் பலம் பெற்றுக்கொண்டிருக்கும் போது, ஜேர்மனியின் ஒரு பாகமான ரைன்லாந்து பலவீனமாக இருப்பது தேச அவமானம் அல்லவா? மார்ச் 1936 ல் ஹிட்லர் உத்தரவு பிறப்பித்தார். பொட்டல் காடாக ரைன்லாந்து இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. நாசிகள் இங்கே சென்று தழைத்துப் பரவட்டும். வெர்சைல்ஸ் வாத்தியார் காலாவதியாகிவிட்டார். நாம் அவருக்கு கீழ் படிய வேண்டிய அவசியம் இல்லை. உத்தரவின் படி 32000 ராணுவ வீர்ர்களும் ஆயுதம் தரித்த காவல்வீரர்களும் ரைன்லாந்துக்குள் புகுந்தனர். ஹிட்லர் எதிர்பார்த்தபடியே எந்த எதிர்ப்பும் யாரிடம் இருந்தும் கிளம்பவில்லை. அப்படியே கேட்டாலும் பதில் தயாராகவே இருந்தது. ரைன்லாந்து என் நாட்டின் ஒரு பகுதி. தேவைக்கேற்ப ராணுவத்தை அங்கே கொஞ்சம் நகர்த்திக் கொண்டதில் உங்களுக்கு என்ன ஆட்சேபனை? பிரிட்டனிடம் ஹிட்லருக்கு எந்ந பயமும் இல்லை. ஆனால் பிரான்ஸிடம் கொஞ்சம் பயம் இருந்தது. ராணுவத்திடமும் அவர் சொல்லியிருந்தார். ஒருவேளை பிரான் தரப்பில் ஏதாவது எதிர்ப்பு வந்தால் சட்டென்று பின்வாங்கி விடுங்கள். ஆனால் பிரான்ஸ் அமைதியாகவே இருந்தது. ஹிட்லர் இதை ஒரு வெற்றியாக கருதினார். இனி பிரான்ஸ் குறித்து அச்சப்படதேவையில்லை. ஸ்பானிய உள்நாட்டு யுத்தம் – Spanish civil war – Spanicher Bürgerkrieg ஜுலை 17, 1936 தொடங்கி ஏப்ரல் 1 1939 வரை நீடித்த ஸ்பானிஷ் உள்நாட்டு யுத்தம் ஸ்பெயினை கிழித்து கந்தலாக்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுவதும் ஸ்பெயின் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்திருகிறது. கன்சர்வேடிவ், ரிஃபோர்மிஸ்ட் இரு குழுக்களும் மாற்றி மாற்றி போரிட்டு ஆட்சியைக் கைப்பற்றின. இந்த உள்நாட்டு யுத்தத்தைத் தொடங்கிவைத்தவர்கள் சில ராணுவ ஜெனரல்கள். இவர்களுக்கு கன்சர்வேடிவ் குழு (Conferderation de Derechas Autonomas – CEDA), கார்லிஸ்ட் குழுக்கள் மற்றும் Falange Espanola delas JONS என்னும் பாசிஸ குழுக்ககளுக்கு ஆதரவு தந்தன. ரிபப்ளிக்கன் கட்சி அதிபராக இருந்த Manuel Azana என்பவருக்கு எதிராக இவர்கள் கலகத்தில் இறங்கினார்கள். போரின் முடிவில் அதிபர் தூக்கியடிக்கபட்டார். ஜெனரல் ஃபிரான்சிகோ ஃப்பிராங்கோ பதவியைக் கைப்பறினார். இந்த உள்நாட்டு யுத்தத்தில் ஸ்பெயினுக்கு சோவியத்யூனியன் ஆதரித்தது. எர்னெஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ச் ஆர்வெல் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் இந்ந போரின் நிகழ்வுகளை எழுதி உலக மக்களின் கவனத்தை, குறிப்பாக ஐரோப்பாவின் கவனத்தை ஈர்த்தனர். இந்த போரின் ஆரம்பக்கட்டத்திலேயே, சுமார் 50000 பொதுமக்கள் துப்பாக்கிச்சூட்டில் மாட்டிக்கொண்டும், கைதிகளாகப் பிடிபட்டும் உயிரிழந்தனர். நவம்பர் 1936ல் ஜேர்மனியும் இத்தாலியும் ஃபிராங்கோவின் கைப்பற்றபட்ட ஆட்சியை ஆதரித்தனர். டிசம்பரில் இத்தாலி தன் ராணுவத்தை ஸ்பெயினுக்கு அனுப்பிவைத்தது. ஃபிராங்கோவோடு சேர்ந்து ஸ்பெயினை முறியடிப்பதற்காக. இரண்டாம் உலகப்போரின் முன்னோட்டமாக இதைக் கொள்ள முடியும். ஒரு பக்கம், ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் கூட்டணி, மற்றொரு பக்கம் பிரிட்டன், பிரான்ஸ் கூட்டணி. பிறகு சோவியத் யூனியன். நவம்பர் 1936ல் ஜேர்மனியும் ஜப்பானும் கைகுலுக்கிக் கொண்டன. இரண்டையும் அருகருகே கொண்டுவந்த சக்தி., சோவியத் எதிர்ப்பு. கம்யூனிஸ்ட் இண்டரநஷனல் (மொஸ்கோவில் தொடங்கப்பட்ட சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு. Communist International என்பதன் முன்னெழுத்து சுருக்கமாக Comintern- கோமிண்டர்ன் என்றழைக்கப்பட்டது) பிற நாடுகளில் குழப்பங்களை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாளர்களை ஊக்குவிக்கிறது. கலகம் செய்ய தூண்டுகிறது. ஜார் மன்னரை மக்கள் தூக்கியெறிந்ததைப் போல் ஏகாதிபத்திய நாடுகளின் அரசாங்கத்தை அந்தந்த தேசத்து மக்கள் தூக்கியெறிய வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறது. இது ஆபத்து. சோவியத்யூனியன் என்னும் தீயசக்தியிடம் இருந்து நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ளவேண்டியது அவசியம். சோவியத் முதலில் என்னை தாக்கினால் நீ கைகொடு. உன்னைத்தாக்கினால் நான் உன் பக்கம் நிற்பேன். நாம் சோவித்தின் பக்கம் தலைவைத்தும் படுக்க வேண்டாம். இது தான் ஒப்பந்தத்தின் சாரம். Ant-Comintern Pact என்று இந்ந ஒப்பந்தம் அழைக்கப்பட்டது. இத்தாலியும் ஜேர்மனியுடன் - Germany and Fascist Italy நவம்பர் 1937 ல் இத்தாலி இந்த ஒப்பந்தத்தில் இணைந்து கொண்டது. ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி மூன்றும் ஒன்றிணைந்து அச்சு நாடுகளாக (Axis Powers) மாறின. · இத்தாலி இந்த கூட்டணியி்ல் இணைந்ததற்கு என்ன காரணம்? · ஏற்கனவே பிரிட்டனோடும் பிரான்ஸோடும் இத்தாலி தனித்தனியே போட்டுக்கொண்ட ஒப்பந்தகள் என்ன ஆயிற்று? · ஜேர்மனிக்கு எதிராக ஒன்று சேர்வோம் என்று சொன்ன இத்தாலி அதே ஜேர்மனியிடம் அடைக்கலம் பகுந்தது ஏன்? காரணம் ஏமாற்றம். ஏப்ரல் 14, 1935 ல் இத்தாலியில் உள்ள Stressa என்னும் பகுதியில் பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி மூன்றும் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுக்கொண்டன. ஒஸ்ரியாவின் இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும், ஜேர்மனியின் எதிர்கால அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்னும் கோரிக்கைகளை இந்த மூன்று நாடுகளும் ஏற்றுக்கொண்டன. ஆனால் இந்த ஒப்பந்தத்தால் பயன் ஏதும் இல்லை என்பதை முசோலினி விரைவில் உணர்ந்து கொண்டார். ஜேர்மனியின் ராணுவமயலாக்கலை பிரிட்டனோ பிரான்ஸோ எதிர்பதாக தெரியவில்லை. ஒப்புக்கு கூட ஜேர்மனியை மிரட்ட அவர்கள் தயாராக இல்லை. ஆக, பிரிட்டன், பிரான்ஸ் இரண்டையும் நம்ப முடியாது என்று முஸோலினியின் உள்மனம் எச்சரித்தது. இந்த இரு தேசங்களாலும் ஜேர்மனியின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியவில்லை. பலம் பொருந்திய சக்தியாக ஹிட்லர் மாறிக்கொண்டிருக்கிறார். அபிசீனியாவை அள்ளிக்கொண்ட போது ஜேர்மனி தான் என்னை ஆதரித்தது. என்ன செய்தன பிரான்ஸும் பிரிட்டனும்? முசோலினியின் மனமுறிவுக்கு மற்றொரு காரணம், Hoare-Laval ஒப்பந்தப்படி, மூன்றில் ஒரு பகுதி அபினீசியவை இத்தாலிக்கு அளிப்பதாக பிரிட்டனும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டன. மிகவும் ரகசியமக இத்தாலியுடன் இரு நாடுகளும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் இது. எப்படியோ இந்த ஒப்பந்தம் பற்றிய விவரம் வெளியே கசிந்துவிட்டது. பிரிட்டன், பிரான்ஸ் இரு நாடுகளிலும் குழப்பம் ஆரம்பித்து விட்டது. அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பித்து விட்டார்கள். பிரிட்டன் அயலுறவுத்துறை அமைச்சர்(Samuel Hoare) ராஜிநாமா செய்தார். ஒப்பந்தம் முறிவுக்கு வந்தது. அதற்கு பிறகு, பிரிட்டனும் பிரான்ஸும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. எப்படி நம்ப முடியும் இவர்களை? ஹிட்லர் எவ்வளவோ மேல். அவர் செய்வது அக்கிரமம் என்றால், நான் செய்ய விரும்புவதும் அதையே தான். ஜேர்மனியை போலவே இத்தாலிக்கும் கொலனிகள் தேவைப்படுகின்றன. ஆக்கிரமிப்புகள் தேவைப்படுகின்றன. அள்ள அள்ள குறையாத செல்வம் தேவைப்படுகிறது. ஒத்த சிந்தனை உள்ள ஹிட்லருடன் கைகுலுக்கிக் கொள்வது தான் உகந்தது. தவிரவும், இவர்களுடன் இணைந்தால் சோவியத்யூனியனுடன் இருந்தும் தப்பித்துக் கொள்ள முடியும். சோவியத்யூனியனுக்கு எதிரான அணியில் சேர போலந்துக்கும் அழைப்பு விடுத்தார் ஹிட்லர். ஆனால், போலந்து அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ஹிட்லரிடம் சிக்கிக் கொண்டால், அவர் உள்ளங்கைக்குள் வைத்து நொறுக்கி விடுவார் என்று போலந்து அஞ்சியது. ஹிட்லரோடு இணைவதில் ஜப்பானுக்கும் ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. சோவியத்துக்கு எதிரான அணியை ஹிட்லர் அமைப்பது நிச்சயம் வரவேற்கத்தக்கது தான். ஆனால், சோவியத்தின் கூட்டாளியான பிரிட்டனுடன் ஏன் ஜேர்மனி ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டும்? இது முரண்பாடு அல்லவா? நாளை பிரச்சனை என்று வந்தால் பிரிட்டன் ஹிட்லருக்கா கைகொடுக்கும்? இது ஏன் இந்த ஹிட்லருக்கு புரியவில்லை? ஜப்பான் ராணுவத்துக்குப் பிறகு தான் விஷயம் தெரிந்தது. ஹிட்லர் செய்து கொண்டது ஒப்பந்தம் அல்ல. அது ஒரு சூழ்ச்சி. பிரிட்டனின் கடற்படைக்குச் சமானமாக தன் கடற்படையை வளர்த்துக் கொள்வதற்காக வாங்கப்பட்ட அவகாசம். ஐரோப்பாவை ஆட்டிப் படைக்கப் போகும் கூட்டணி உருவானது ஹிட்லர் தலைமையில். (தொடரும்) நூல் இரண்டாம் உலகப்போர். எழுதியவர் மருதன். வெளியீடு கிழக்கு பதிப்பகம். பதிப்பு 2009 மே
 40. 1 point
  சுமந்திரன் மகனின் இந்த சிறந்த விவாதப் பேச்சால் தமிழினத்துக்கு என்ன விடிவு வந்து விட்டது? இப்போது முத்தையா முரளிதரனின் பந்து வீச்சு யாவராலும் புகழ்ந்து பேசப்படடாலும், இலங்கைக்கு வெற்றிகளை குவித்திருந்தாலும், அணியின் தலைவராக முடியவில்லை திறமை இருந்தும். கதிர்காமர் கூவி கூவி சிங்களத்துக்கு முண்டு கொடுத்திருந்தாலும், ஜனாதிபதியாக முடியவில்லை. சேர் பொன் இராமநாதன் முண்டு கொடுத்து சிங்களத்தை காப்பாற்றியிருந்தாலும், தமிழருக்கு ஒரு சமநிலையை பேண முடியவில்லை இலங்கையில். தூக்கி வீசப்படும்போது, நான் தமிழன் என புலம்பும்போது, இவர்களால் நலிந்த சக தமிழன் தான் கொதித்தெழுவான்.
 41. 1 point
  சுவி, நாங்கள் வெளிநாட்டுக்கு வந்தபின் ஆட்டிறைச்சி சமையல் முறை மாறிவிட்டது. ஊரில் முன்பு இப்படி நாங்கள் எல்லாம் சமைத்து சாப்பிட்டதுதான். நீண்ட காலத்துக்கு பிறகு இன்று வித்தியாசமாக இப்பிடி சமைத்து பார்த்தேன், உண்மையிலேயே நன்றாக இருந்தது, பழைய நினைவுகளும் அத்தோடு வந்தது. காணொளிக்கு நன்றி
 42. 1 point
  வீடு புகுந்து அடிப்பேன் என்று கூறியதற்கு விசிலடிக்கவில்லை. தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ள அங்கேயும் நல்ல மனிதர்கள் உண்டு என்கின்ற காரணமே மகிழ்ச்சிக்குக் காரணம். கருவாட்டுக் கடைக்குள் நிற்கும்போது கடையில் ஏற்றி வைத்திருக்கும் ஊதுபத்தியின் வாசனையை உணர முடியாது என்பது உண்மைதானே.
 43. 1 point
  கண்ணத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறிகொள்ளுதெடி ...
 44. 1 point
 45. 1 point
  நில்மினி... நீங்கள் சொல்லும் கடையின் பெயர் "சரஸ்வதி விலாஸ்" என்ற ஒரு நினைவு.
 46. 1 point
  ராஜன் ஹூல் முக்கிய பங்காற்றிய யாழ் பல்கலைக்கழக மனிதவுரிமைகளுக்கான அமைப்பின் (மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்) அறிக்கை எல்லாமே நேர்மையற்றதாகவே இருந்தன. அந்த அறிக்கைகள் எப்படி இருந்தனவென்றால் பத்து பக்க அறிக்கையில் ஒன்பதரைப் பக்கங்கள் புலிகளின் மனிதவுரிமை மீறல்கள் என்று பட்டியலிட்டுவிட்டு இலங்கை அரசினதும், இலங்கைப் படையினரதும் அட்டூழியங்களை அரைப்பக்கத்தில் எழுதியிருப்பர். அவற்றில் விமானப்படையின் குண்டு வீச்சில் அகப்பட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வுகளில் இருந்து பாலியல் வல்லுறவுகள் வரைக்கும் இருந்ததில்லை. யாழ் பல்கழகம் என்று போட்டது கூட நேர்மையற்ற செயல்; ஏனெனில் ராஜன் ஜூலும் சரி, அவரது பரிவாரங்களும் சரி யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கவில்லை. விட்டு விலகி வேறு இடங்களுக்கு பெயர்ந்த பின்னும் அதே பெயரை தொடர்ந்து பணியாற்றிக் கொண்டு இருந்தனர். இலங்கையில் தென்னிலங்கையில் சுனந்த தேசப்பிரிய, சுனிலா, சார்ள்ஸ் அபேசேகர போன்ற உண்மையான மனிதவுரிமை வாதிகள் புலிகள் /அரசு என்று இருபக்கமும் செய்த மனிதவுரிமை மீறல்களை நேர்மையாக வெளிப்படுத்திக் கொண்டு இருந்தனர். இவர்கள் தான் மனசாட்சியை கொள்கைகளால் நசுக்கி விடாதவர்களாக இருந்தனர். அவர்களும் ராஜன் ஹூல் போன்றவர்களும் ஒன்றல்ல. இவரை மனிதவுரிமைவாதி என்று குறிப்பிடுவதே மிகப்பெரும் அவலம்.
 47. 1 point
 48. 1 point
  தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார கால பகுதியில் மக்களை ஒன்று கூட்டி நிகழ்வுகளை மேற்கொண்டமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட குற்றசாட்டுகளை முன்வைத்து கடந்த 17ஆம் திகதி பொலிஸார் யாழ்.நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். அதன்போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உட்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாட்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு யாழ்ப்பாண நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் அன்றைய தினம் கட்டளையிட்டிருந்தார். மறுநாள் குறித்த கட்டளைக்கு எதிராக நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து, அந்த கட்டளையை மீள பெற வேண்டும் என மன்றிடம் கோரினார்கள். அன்றைய தினம் இரு தரப்பின் வாதங்களை அடுத்து, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு கோரப்பட்டுள்ள 11 சந்தேகநபர்களுக்கும் நோய் அறிகுறிகள் உள்ளதாக மருத்துவ அறிக்கையை பொலிஸார் சமர்ப்பிக்கவில்லை. அதனால் நோய் அறிகுறி இல்லாதவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தினால் அவர்கள் மன உலைச்சலுக்கும் வேறு பல நோய்களுக்கும் உள்ளாகக் கூடும். அதனால் 11 பேரையும் தனிமைப்படுத்தும் கட்டளை, மன்றினால் மீளப்பெறப்படுகிறது என்று நீதவான் ஏ.பீற்றர் போல், மீளாய்வு விண்ணப்பம் மீது கட்டளை வழங்கினார். அதேவேளை வழக்கினை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார். இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் அழைக்கப்பட்ட போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மன்றில் முன்னிலையானர்கள். அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, குறித்த வழக்கினை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல ஏதுவான காரணிகள் இல்லாதமையால் வழக்கினை தள்ளுபடி செய்து, வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள 11 பேரினையும் வழக்கில் இருந்து முற்றாக விடுவித்து விடுதலை செய்தார். http://athavannews.com/தமிழ்-தேசிய-மக்கள்-முன்ன-3/
 49. 1 point
 50. 1 point
  மத்திய மாகாணத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக இருவர் பலியாகியுள்ளதாக கண்டி வைத்தியசாலையின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டபிள்யூ.கே.எஸ். குலரத்ன தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு மத்தியில் மீண்டும் எலிக்காய்ச்சலும் தலைதூக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டி வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்ட 20 மற்றும் 30 வயதுடைய இளைஞர்கள் இருவரே எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். தொடர்ந்தும் 12 பேர் வரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 24 நோயாளர்கள் மத்திய மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/143977