• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard


Popular Content

Showing content with the highest reputation on வியாழன் 18 ஜூன் 2020 in all areas

 1. 3 points
  தமிழ் பாடசாலைக்கு அனுப்புங்கள், எவ்வளவு சிறிதாயினும், நிர்வாகத்தில் உள்ளுக்குள்ளே நாய் கடி உறுமல்கள் இருந்தாலும். ஆக குறைந்தது, நீங்கள் இருக்கும் நாடுகளில் gce ordinary level அளவில் உள்ள தமிழ் பரீட்சை வரைக்கும் கொண்டு வந்து விடுங்கள். கோயிலுக்கு முடிந்தவரையில் ஒழுங்காக போய்வாருங்கள். இதை ஒழுங்காக செய்வதற்கு (தமிழ் பாடசாலைக்கு, கோயிகளுக்கு செல்வது) ஓர் கட்டுப்பாடும், அர்ப்பணிப்பும் தேவை. வெளிநாட்டுக்கு வந்த எல்லோரும் இது ஓர் கடமையாக (தமிழ் பாடசாலைக்கு, கோயிகளுக்கு செல்வது) கடமையாக செய்வது, அங்கு அழிந்த எமது சந்ததிகளுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி, குறிப்பிட்ட தினத்தை நினைவு கூராவிட்டாலும். இது எல்லா நாடுகளிலும், போகக்கூடிய வசதியாக இருக்குமோ தெரியவில்லை. ஆனால், jews தம்மவர்கள் பொதுவாக தமக்குளே, தமது காரசாரத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு நான் அறிந்ததை சொல்கிறேன். 1990 களின் ஆரம்பத்தில், jews இன் சமூக ஆர்வலர்கள், தமது சந்ததி வெளியாருடன், பெரும்பாலும் வெள்ளைகளுடன் திருமணம் செய்வது jews ஐ திருமணம் செய்வதை விட விஞ்சியும், போக்காகவும் வந்ததை அவதானிதார்கள். இதன் காரணம், அவர்களின் இளவயதினர் ஒருவரை ஒருவர் நட்பாக சந்திப்பது வெகுவாக குறைந்தது என்பதும் அவர்களின் அவதானம். 1991 - 1992 இல் jews இன் சமூக ஆர்வலர்கள், அவர்களின் இளவயதினர் எந்தவொரு வேறு வயது கண்ணும் இல்லாமல் ஓவ்வொரு கிழமையும் சந்திப்பதற்கான நிகழ்வுகளை, அவர்கள் இருந்த ஓவ்வொரு நாட்டிலும் உருவாக்கி, jews பெரும்பாலும் வெளியாருடன் திருமணம் செய்யும் போக்கை மறுவளமாக, அதாவது jews தமக்குள்ளே திருமணம் செய்யும் போக்கை காலப்போக்கில் ஆக்கினார்கள். இந்த இளவயது jews சந்திப்பதை ஒழுங்கு செய்வது, இப்பொது ஓர் நிறுவனமயமாகி விட்டது. இது தமிழரில் சாத்தியம் இல்லை என்றே நினைக்கிறன். வெள்ளைகளிலும் வேறு இனத்தவர்களும் சாதி இருந்தும், வெள்ளையை அல்லது வேறு இனத்தவரை சாதி பார்க்காத எம்மவர்கள், தமிழர்கள் என்றால் சாதியை குடைந்து பார்ப்பார்கள். ஏன், மிகவும் சமீபத்தில் நன்னீர் மீன் பற்றியும், அதன் மணம் சுவை பற்றியும் வந்த போது, தளத்தில் ஒருவர் எழுதி இருந்தார் குறிப்பிட்ட சாதியினர் குளத்து மீன்களை சாப்பிடமாட்டார்கள் என்று. ஆனால், குளத்து மீன்களை பாவிப்பதை தீர்மானிப்பது பொருளாதார வசதி. இந்த சாதியை எல்லாத்திலும் தூக்கி பிடித்ததே, எமது சனத்தொகை ஒப்பீட்டளவில் குறைந்தததற்கான ஓர் காரணம். சிங்கள பகுதிக்கு காலனித்துவதில் வந்த மலையாளிகள், தமிழர்கள் மற்றும் தெலுங்கர்கள் சிங்களவருக்குள் சீரழிந்தற்கான காரணம் இந்த சாதியை சிங்களவரிலும் மூர்க்கமாக தமிழர்கள் தூக்கி பிடித்தது. காலனித்துவத்துக்கு முன் (போர்த்துக்கேயர் வருகை) சிங்கள, தமிழ் சனத்தொகை ஏறத்தாழ ஒரேயளவு.
 2. 3 points
  அதென்ன .. கர்நாடகாவில் நானும் உதை வாங்கி இருக்கேன் தோழர்.. 2009 க்கு பிறகு தமிழ் நாட்டிலே ஒரு தினுசாத்தான் இளைஞர்கள் திரியினம்.. டிஸ்கி இவ்வளவு தான் பூமி பாரம் தாங்குவது.? இயற்கை.. குறைக்கட்டும் என்ட மனநிலைக் கு வந்துட்டேன் தோழர்..
 3. 2 points
  நல்ல தலைப்பு.. எம்மவர் திருமணங்கள்... இப்போ அதன் பண்பாட்டு விழுமியத்தை தொலைத்துவிட்டது என்றால் மிகையில்லை. குறிப்பாக புலம்பெயர்நாடுகளில்.. வட ஹிந்திய கலாசாரத்தை எமது என்றாக்கி வைத்திருக்கிறார்கள். அத்தோடு சினிமாத்தனத்தை உள்ளிளுத்து வைத்திருக்கிறார்கள். உண்மையில்.. சைவத் - தமிழ் முறை திருமணத்துக்குள்.. சினிமாவை புகுத்தியத்து.. சிங்கப்பூர் மலேசியா வாழ் தமிழர்கள் தான். பின் அதற்குள்.. வட ஹிந்திய கலாசாரத்தை புகுத்தினது நம்ம புலம்பெயர் தமிழர்கள். எங்கள்.. திருமணத்தை தாங்கள் சொல்லியது போல் சைவத் தமிழ் முறைப்படி.. கோவிலில் தான் நடத்தினோம். நீண்ட கியூக்களில் வாழ்த்தவருபவர்கள் கால்கடுக்க நிற்க வைக்கும் எண்ணமில்லை. அந்த வகையில்.. மிகவும் நெருங்கிய உறவுகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள்.. அவர் தம் குடும்பம் என்று தான் அழைப்பு விடுத்தோம். குறிப்பாக தமிழரல்லாத நண்பர்கள்.. எமது கலாசாரத்தை ரசிக்கவே பல நாடுகள் தாண்டி வந்து பங்கேற்றார்கள். முடிவில் வந்த எல்லோருமே இதுதான் தமிழ் கல்யாணம் என்பதை அடையாளம் கண்டுகொள்ள வாய்ப்பளித்தோம். அதிலும் ஒரு கிறீஸ் நாட்டு நண்பர்.. தான் பார்த்த முதல் தமிழ் திருமணம் இது தான்.. இதற்கு முன்னர் சில தமிழர்களின் திருமணத்திற்கு போயிருந்தாலும்.. அது கோவிலில் நடக்கவில்லை.. கோலில் தான் நடந்தது என்றார். அங்கு வேடிக்கை வினோதம் இருந்த அளவுக்கு கலாசார விழுமிய வெளிப்பாடில்லை என்றார். அழைப்பிதழை நானே வடிவமைத்து.. நெதர்லாந்தில் பிரின்ட் செய்து எடுப்பித்தேன். ஆடம்பரமான அழைப்பிதழ் அல்ல.. அவசியமான விடயங்களோடு.. எமது நிழற்படம் பொறித்து.. நன்றி பகிர்வுடன். தமிழில் திருமண மந்திரம் சொன்னார்கள். இடையில் திருமணத்தை நடத்திய புரோகிதர்களின் ரசிக்கக் கூடிய மேடைக்கேற்ற பகிடிகள்.. சிரிப்புகள்.. ஆகக் கூடியது 3 மணித்தியாலத்துக்குள் நிகழ்வை முடிக்க வேண்டும் என்பதே எமது விருப்பம். அதிக நேரம் இழுப்பது சோர்வும் சலிப்பும் தரும் என்பதால். அதேபோல் நிகழ்வுகள் ஒழுங்கமைத்தப்படி நிகழ்ந்தது. நேரலை எம்மை விட்டு தூர உள்ள உறவுகளுக்காக செய்யப்பட்டது. முகநூல் போன்ற எல்லோரும் பாவிக்கும் சமூக ஊடகங்களை பாவிக்கவில்லை. எங்களின் தனித்துவம் பாதுகாக்கப்படுவது அவசியம் என்பதால். இத்தனைக்கு வழமையாக எம்மவர்கள் செய்யும் திருமணத்தோடு ஒப்பிடும் போது செலவும் ஓரளவு குறைவு. மிஞ்சிய உணவையும் கோவிலுக்கு வருபவர்களுக்கு பரிமாறக் கூடியதாக அனுமதி தந்திருந்தார்கள். அநாவசிய செலவீனங்களை தவிர்த்து நல்ல சைவ உணவை வயிராற வழங்க வேண்டும் என்பதை நிறைவு செய்யக் கூடியதாக இருந்தது. இத்தனைக்கும் என் திருமணத்தை என் சொந்த சேமிப்பில் தான் நடத்தினேன். கடனும் வாங்கவில்லை.. கடனட்டையும் பாவிக்கவில்லை. பெண் வீட்டாரிடம்.. நன்கொடை என்றும்.. வாங்கவில்லை. இதனை பெருமைக்காகச் சொல்லவில்லை.. எமது கலாசார பின்னணியோடு.. வாழும் நாடுகளின் செளகரிகங்களுக்கு உட்பட்டு.. செலவையும் கட்டுப்படுத்தி.. எங்கள் திருமணங்களை செய்ய எம்மவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இளைய சமூகத்துக்கும் பொறுப்புணர்த்த வேண்டும். இன்றேல்.. வீண் செலவுகளால் சீரழிவு தான். பெரும் ஆடம்பர திருமணங்களை தங்கள் வசதிக்கு மிஞ்சி செய்து துன்பப்படும் பலரை நாம் புலம்பெயர் மண்ணிலும் சரி தாயகத்திலும் இப்போ சர்வ சாதாரணமாக காண முடிகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். எமது சேமிப்புக்குள் எமது கலாசார பண்பாட்டு விழுமியங்களோடு.. சோர்வு சலிப்பு.. கால் கடுப்புக்கு இடமளிக்காமல்.. சுவராசியம் வைச்சு செய்யப்படும் ஒரு சிறிய நிகழ்வாக எமது திருமணங்கள் அமைவதே சிறப்பு.
 4. 2 points
  திரு யோகேஸ்வரன் அவர்களே அப்போ வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணசபையைப் பிரிக்கும்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்ன செய்தது? இப்போ தமிழர் பகுதிகளெங்கும் புத்தர் கோவில்கள் கட்டி சிங்களமயாமாக்கும்போது அதைத் தடுத்ததாக ஒரு உதாரணம் தரமுடியுமா? மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு கிராமத்தையே முஸ்லீம்கள் அப்கரித்து அங்கு எஞ்சியிருந்த ஒரு தமிழரை இஸ்லாமுக்கு மாறு இல்லையேல் ஊரைக்காலிபண்ணு என அவரது வீட்டையும் ஆட்டோவையும் எரித்தபோது சுமந்திரன் சம்பந்தன் மாவை ஏன் நீங்கள் எங்குபோயிரிந்தீர்கள். ************************************************************
 5. 2 points
  கோழி இறைச்சிக் கறி 1 - Chicken Curry 1
 6. 1 point
 7. 1 point
  தெரிந்து, புரிந்து...நடப்போம். 1,தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் போனில் அழைக்காதீர்கள்.அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம்,அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம். 2,திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம், மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்.இது திரும்ப வருமா வராதா என.இது உங்கள் கேரக்டரை அவர் உணரச் செய்யும். இதே போல் இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம்,லஞ்ச் பாக்ஸ்,குடை போன்றவைக்கும். 3,ஹோட்டலில் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், மெனுகார்டில் காஸ்ட்லியாக உள்ள எதையும் ஆர்டர் செய்யாதீர்கள்.அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி ஆர்டர் சொல்லுங்கள் என வேண்டலாம். 4,தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம். "இன்னும் கல்யாணம் ஆகலயா?" "குழந்தைகள் இல்லையா?" "இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?" "ஏன் இன்னும் கார் வாங்கவில்லை?" இது நமது பிரச்சினை இல்லைதானே!" 5,தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ,பெண்ணோ,சிறியவரோ,பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாகமாறச்செய்யும்! 6,நண்பருடன் டாக்ஸியில் சென்றால் பெண் தோழியாக இருந்தாலும்..இம்முறை இயலாவிட்டால் மறுமுறை நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள். 7,மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள்.மோசமாக இருந்தாலும், சாய்ஸில் வைத்திருக்கலாம். 8,அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள்.அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும். 9,நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால்,மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள்.அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும், 10,யார் உதவினாலும் பாரபட்சமின்றி நன்றி சொல்லுங்கள்! 11,பொதுவில் புகழுங்கள். தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம். 12,உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள். "நீங்கள் பார்க்க ஸ்மார்ட்டாக, கியூட்டாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது. 13,யாராவது அவர்கள் போட்டோவைக் காட்ட போனைக் கொடுத்தால் காலரியில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள்.அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. 14,யாரும் தனக்கு டாக்டர் அப்பாயின்ட்மென்ட் இருக்கிறது. போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள்.அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம்,"விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறலாம். 15,நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது போனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள். 16,கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள். 17,நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால்,அவர்களின் சம்பளம்,வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள்.அவர்களாகவே சொன்னால் தவிர. 18,தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால்,ஸ்டைலுக்காக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள்,கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது! 19,யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக வலிய போய் தலையிடாதீர்கள். Dinesh Thiruchelvan
 8. 1 point
  நீங்கள் ஈச்சம் குருத்து ஊரில் சாப்பிட்டுள்ளீர்களா ? அடுத்த முறை போனால் சாப்பிட்டு பாருங்கள், அதனை சுவை வாழ்கையில் மறக்க மாட்டீர்கள், கன பேர் போனால் ஆளுக்கு ஒரு ஈச்ச மரத்தை வெட்டவும், ஒன்றில் சிறிதளவுதான் வரும் , ஆனா சுவை தேவாமிர்தம். எங்க ஊரில் இந்த ஈச்சப்பத்தைகளும் பணை மரங்களும் தான் அதிகம், விதம் விதமான் ஈச்சம் பழங்கள் மரத்திலிருந்து பறித்து தேன் ஒழுக ஒழுக சப்பிட்டால், ஆகா .... அடுத்த முறை ஊருக்கு போகும் போது பொன்னாலை திருவடி நிலை காடு என தேடிப்போய் இந்த ஈச்ச மரங்களை ஒரு கை பாருங்கள், கவனம் பச்சை பாம்பிருக்கும்
 9. 1 point
 10. 1 point
 11. 1 point
  நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. எம்மவர் வாழும் புலம்பெயர் நாடுகளில் நான் அவதானித்த வரையில் சைவ கோவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் தமிழ் பாடசாலைகள் என கவனத்தை செலுத்தும் பெற்றோர்களின் பிள்ளைகள் நூற்றுக்கு எழுபது வீதமாவது தமிழர் கலாச்சாரத்துடனும் பண்பாட்டுடனும் வாழ்கின்றார்கள். சில பிள்ளைகள் சில இடங்களில் கிர்தா விளையாட்டுக்கள் விட்டாலும் தமிழர் எனும் குடையில் பண்பாட்டுடனேயே இருக்கின்றார்கள். ※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※ "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே பின்பு நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே" எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்தில் பிறக்க கடவுள் தேர்ந்தெடுத்த கருவிகள் தான் பெற்றோர்.
 12. 1 point
 13. 1 point
  இந்த‌ உல‌க‌ கோப்பை க‌ட‌சி போட்டியில் ப‌ல‌ குழ‌ப்ப‌ங்க‌ள் ந‌ட‌ந்த‌து , இவ‌ர் சொல்லுவ‌த‌ ஏற்க்க‌ முடியாது , Tossரில் டோனி வெல்ல‌ , இல‌ங்கை அணி த‌லைவ‌ர் ச‌ங்க‌க்காரா‌ நான‌ய‌த்தில் த‌வ‌று இருப்பாத‌ ந‌டுவ‌ர்க‌ளுட‌ன் விவாத‌த்தில் ஈடு ப‌ட்டார் , பிற‌க்கு இர‌ண்டாம் த‌ரம் Toss ‌போட்டு இல‌ங்கை அணி துடுப்பெடுத்தாடியாது , இல‌ங்கை தோல்வி அடைய‌ முத‌ல் கார‌ம் இர‌வு நேர‌ பனிப்பொழிவு , மைதான‌ம் ஈர‌ம் , சுழ‌ல் ப‌ந்தில் இருந்து வேக‌ ப‌ந்து வ‌ர‌ ஒன்றும் எடுப‌ட‌ வில்லை , இல‌ங்கை கூடுத‌லா 30 ஓட்ட‌ம் எடுத்து இருந்தா வெற்றி வாய்ப்பு இருந்து இருக்கும் இல‌ங்கை அணிக்கு , க‌வுத‌ம் க‌ம்பிர் தான் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த‌வ‌ர் , அவ‌ரையும் அவுட் ஆக்கி இருந்தா இந்தியா திண‌றி இருப்பின‌ம் , அந்த‌ கோப்பையை இல‌ங்கை வென்று இருந்தா ச‌ங்க‌க்காராவை ப‌ற்றி ப‌டு கேவ‌ல‌மாய் இந்தியா ஊட‌க‌ங்க‌ள் எழுதி இருப்பாங்க‌ள் , நாண‌ய‌த்தில் முத‌ல் டோனி வென்ற‌தாய் தான் ந‌டுவ‌ர் அறிவிச்ச‌வ‌ர் , ச‌ங்க‌க் காரா தானும் அதை தான் சொன்னேன் என்று முர‌ன் ப‌ட‌ நாண‌ய‌ம் மீண்டும் போட‌ ப‌ட்ட‌து
 14. 1 point
 15. 1 point
  இப்ப சுகமாய் எழுதக்கூடியதாய் இருக்கு. அந்த தருணங்களில் மனைவி பிள்ளைகள் எவ்வளவு கலங்கியிருப்பார்கள்.அதிலும் பிள்ளைகள் சிறு வயதில் இருந்திருப்பார்கள்.மனைவி எவ்வளவத்தை யோசித்திருப்பார்.நீங்கள் எதையெல்லாம் யோசித்து உருகியிருப்பீர்கள். ஏனெனில் நானும் அந்த நெருக்கடியை சந்தித்தவன் என்ற முறையில் உணர முடிகின்றது.
 16. 1 point
 17. 1 point
  ஐம்பது நூறுபேர் அசால்டா சமைசுப்போட்டு போகினம், இஞ்ச நாங்கள் நாலைந்துபேர் ஒரேயொரு பொம்பிளைப்பிள்ளைக்கு ட்ரெயினிங் குடுத்து .........ஸ்....சப்பா .....!
 18. 1 point
  அதுவல்ல விசயம்... இங்கே ஒட்ஸ் ஜாப்ஸ் செய்ய சிறுபான்மையினர் தான் அடிபடுகின்றனர். சரி இந்த வெள்ள இனமக்கள், நகரத்தில் இருந்து வெளியேறி, கிராமப்புறமாக போகின்றனரே. வேலைக்கு என்ன செய்வார்கள் என்று பார்த்தால் அவர்கள் ஒன்லைன் வியாபாரத்தில் மும்மரமாகி, கிராமப்புறங்களில் செட்டில் பண்ணியவாறே, சந்தோசமாக இருக்கின்றனர். அவர்கள் பூட்டிச்செல்லும் கடைகளை எடுத்து விட நம்மவர்கள் போட்டா போட்டி.
 19. 1 point
  எனக்கு கலைஞரை பிடிக்காது ஆனால் அவரின் காலை ஆளுமை மிக பெரியது என்பதை என்னால் மறுக்க முடியாது ...... எப்படி வசனம் எழுதியிருக்கின்றார் ...... கலைஞர் மறைந்து போனாலும் என்னும் வாழுகின்றது சிவாஜி அவரும் இல்லை அவருடைய அபார நடிப்பும் என்னும் வாழுகின்றது கலைஞர்களுக்கு அஸ்தமனமே கிடையாது
 20. 1 point
 21. 1 point
  முதலில் இந்தியன் தனது கையில் வைத்திருக்கும் போனையும் அதிலிருக்கும் tic tok app ஐயும் தூக்கித் தூர எறிவதில் தொடங்கலாம்
 22. 1 point
  வித்தியாசமாக இருக்கு, பாண், அரிசி மா, இதெல்லாம் சேர்க்கின்றார், எதுக்கும் ஒருக்கா இப்படியும் செய்து பார்ப்போம்
 23. 1 point
  அதிரடி கெமிக்கல் மருந்துகளாலையே கொரோனாவை கட்டுப்படுத்த முடியேல்லையாம். ஆமை வேக சித்தமருத்துவம் வேலை செய்ய வெளிக்கிட உலகம் அழிஞ்சு போயிடும்.
 24. 1 point
  இந்தியா, தனது பக்கத்தில் உள்ள நாடுகள் எதனுடனும் நல்ல உறவில் இல்லை. இலங்கையில் முழு தீவு மக்களும் ஒரே ஒரு விசயத்தில் ஒற்றுமையாக நம்புவது, எக்காலத்திலும், இந்தியாவை நம்ப முடியாது என்பதனை. நேபால் அதேநிலை. பங்களாதேஷ் அப்படி தான் நிலைமை. பாகிஸ்தான் சொல்ல வேண்டியதில்லை. பூட்டான் மதில் மேல் பூனை. மாலைதீவு, இந்திய ஆதரவு என்று சொன்னாலும், அளவில் மிக சிறியதுடன், அண்மைக்காலம் வரை சீன ஆதரவு நாடாக இருந்தது.
 25. 1 point
 26. 1 point
  இந்திய சீன மோதலைத் தடுக்கும் ஆற்றல்...சிறீலங்கா என்ற அழகிக்கு மட்டுமே உள்ளது. ஈழத்தமிழரை அழிக்கும்போது இந்திய, சீன, பாக்கி நாடுகளை தனது மடியில் கிடத்தி, ஒன்றிணைத்து நண்பர்களாக்கிய வரலாற்றுப் பெருமை அதற்கு உள்ளது.
 27. 1 point
  இரண்டு படத்தையும்... ஒப்பிட்டு பார்க்கும் போது, நன்றாக உள்ளது. அமெரிக்காவிலும், மாத்தளையிலும்.... ஒரே மாதிரியான மண்வெட்டிதான் பாவிக்கிறார்கள். இங்கே.... கீழே உள்ள பொருளால்தான்(Spaten) மண்ணை, பதப் படுத்துவார்கள்.
 28. 1 point
 29. 1 point
  எமது வீட்டிலும் கொஞ்சம் வித்தியாசமாக செய்வோம். கத்தரிகாய் உருளைக்கிழங்கு இறால் முட்டை வெண்காயம் பொரித்து புட்டு அவித்து அதனுள் போட்டு பிரட்டி சாப்பிடுவோம்.நிறைய தூளும் போடுவதால் உறைப்பாகவும் இருக்கும்.
 30. 1 point
  இலங்கையர்கள் இந்தியாவை மிகவும் வெறுக்கிறார்கள் ஆனால் நீங்கள் சொல்வதை தான் என்னால் விளங்கி கொள்ள முடியவில்லை ஈழத்தமிழர்களே தாங்கள் வசிக்கும் நாடுகளுக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறார்கள் அந்த நாடுகள் தவறு செய்தால் கூட சரி என்று இலவசமாக பிரசாரம் செய்கிறார்கள்.
 31. 1 point
  இந்திய ஊடகங்கள், காலம் காலமாகவே... சினிமாவுக்கும், கிரிக்கெட்டுக்கும் தானே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அது இப்போ தான்... தமிழ் பொக்கிஷத்துக்கு தெரிந்ததா.
 32. 1 point
  நன்றி சிறி. அப்பா தோட்டம் செய்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். மாத்தளையில் தான் அவரது Dream house ஐ கட்டி வீட்டை சுற்றிவர அழகான தோட்டம் அமைத்திருந்தார். நான்தான் அவருக்கு assistant . அப்ப பழகியதுதான். அப்பா மாத்தளை வீட்டில் தோட்டம் செய்யும் படத்தை இத்துடன் இணைக்கிறேன் (1974) . பல நேரங்களில் மாத்தளையை விட்டு நாங்கள் கொழும்பு போயிருக்கக்கூடாதோ என்று யோசிப்பேன். முன் தோட்டத்தில் Fountain குளம் கட்டி அல்லி பூக்கள், மீன்கள் எல்லாம் இருந்தன. Grapes பந்தல், Apple , தோடை , மா , கொய்யா என்று இல்லாத பழங்களே இல்லை. மரக்கறி எல்லாம் season இக்கு தகுந்தமாதிரி போடுவார். மாத்தளை இந்து மகா வித்தியாலய அதிபராக இருந்ததால் நிறய மாணவர்கள் வீட்டுக்கு வந்து உதவி செய்வார்கள். அப்பா மலையக மக்கள் கல்வி, நலன் மீது மிகவும் அர்வம் கொண்டிருந்தார். அந்தப்படத்தையும் இணைக்கிறேன்) . ரோஸ் செடிகள் எல்லா நிறமும் வளர்த்து கடைசியில் யாரோ பச்சை ரோஸும் இருக்கென்று சொல்லி அதயும் கொண்டுவந்து சேர்த்துவிட்டார். அண்மையில் எனது அமெரிக்க நண்பர்கள் Green rose என்று கதைக்கும்போது நான் பெருமையாக நாங்கள் 1970 களிலேயே Green rose வைத்திருந்தோம் என்று சொன்னேன். அப்பாவுக்கு அவ்வளவு ஒரு ஆர்வம் . எல்லாம் கனவு மாதிரி இப்ப இருக்கு. அப்பாவை பற்றி நிறய விடயங்கள் பகிர இருக்கு. நீர் அறியாதவற்றை அறிவதோடு எனது மற்ற யாழ் கள உறுப்பினர்களும் வாசிப்பார்களே என்றுதான் இந்த பதிவில் அப்பாவை பற்றி சிறிது எழுதினேன். அப்பாவிடம் மிகப்பெரிய ஆளுமை இருந்தது. இன்னும் எழுதுகிறேன். மூன்றவது படத்தில் அமுதன் அண்ணாமலை இருக்கிறார் (அப்பாவின் மாணவன்) (
 33. 1 point
  எனக்கு நல்லவடிவாய் தெரியும்....நீங்கள் நாளைக்கு கடையிலை வாங்கி சாப்பிடுறீங்கள்🍽
 34. 1 point
  நல்ல முன்னேற்றம் தெரியுது. வாழ்த்துக்கள். எண்டாலும் 7.20 நிமிசத்திலயிருந்து மற்றவனை வெறுப்பேத்துற கட்டம் தொடங்குது.அப்பத்தை பிச்சுக்காட்டி.......அதுக்கை முறுமொறுப்பு சத்தம் வேறை......
 35. 1 point
  சுவாமியர்... சாரி, டூலேட்... அம்பந்தோட்டாயில சீனாகாரன் முன்னமே போட்டுவிட்டான்.
 36. 1 point
  உலகத்திலேயே சுற்றிவர பகைவர்களை சேர்த்து வைத்திருக்கும் நாடு என்றால் அது இந்தியாவாகத்தானிருக்கும். அது மட்டுமல்லாது பார்ப்பனிய ஆதிக்கத்தால் சொந்த நாட்டுக்குள்ளேயே பல முரண்பாடுகள். வாழ்க வளர்க.
 37. 1 point
  புரட்சி, உங்களால் எப்படி முடிகிறது? நீங்கள் இந்தியாவில் வாழும் தமிழர். ஒரு சிறு அளவிலாவது உங்களுக்கு உங்கள் ராணுவம் மீது அபிமானம் இருக்கலாம். அப்படியிருக்க, நீங்களும் எங்களைப்போல இந்திய ராணுவத்திற்கு ஏற்படும் அழிவினை எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறது? எங்களைப்பொறுத்தவரை அது மகிழ்ச்சியான விடயம். ஏனென்றால், இந்தியாவினால் நாம் அழிக்கப்பட்டிருக்கிறோம். அவர்களின் ராணுவம் நேரடியாகவே எம்மக்களில் குறைந்தது 20,000 பேரை 1987 இலிருந்து 1990 இற்கிடையில் கொன்றது. ஆகவே, எம்மை அழித்தவர்கள் ஆகவே எம்மை அழித்தவர்கள் அழிக்கப்படும்போது எமக்கு அது மகிழ்ச்சியைத் தருகிறது. உங்களுக்குமா?
 38. 1 point
  கிந்தியனுக்கு அடி அகோரமாம் தோழர்.! இங்க மிலிட்டரிமார் கதைக்கினம் ..
 39. 1 point
 40. 1 point
  அப்ப எலும்பு பிரச்சனை இவருக்கு இல்லை. தயிர் சாதத்தைச் சாப்பிட்டு விட்டு தூங்க வேண்டியது தான்.
 41. 1 point
  தமிழரசு வித்தியாசமான முறையாக இருக்கு, நன்றி பகிர்வுக்கு, செய்து பார்க்கனும், இவர் தமிழ் ஈழத்தை சேர்ந்தவரா? குரல் என் அத்தானின் குரல் மாதிரி இருக்கு
 42. 1 point
  நல்ல ஒரு பொரித்தமீன் குழம்பு.......பகிர்வுக்கு நன்றி தமிழரசு.......!
 43. 1 point
  எல்லாம் த‌க‌ப்ப‌ன் செய்த‌ த‌ப்பு , பிள்ளையின் காத‌ல் பிடிக்காட்டி அத‌ அவ‌ர் வேறு வித‌மாய் கையாண்டு இருக்க‌லாம் , அத‌ விட்டுட்டு பெத்த‌ பிள்ளைக்கு முர‌ட்டு த‌ன‌மாய் அடிச்சா அதுங்க‌ள் ம‌ன‌ம் குழ‌ம்பி போயிடுங்க‌ள் அக்கா , என‌க்கு க‌வ‌லை என்ன‌ என்றால் அந்த‌ பிள்ளைக‌ள் இப்ப‌ ம‌து அருந்தின‌ம் , வெள்ளைக் கார‌னை திரும‌ண‌ம் செய்தா அவ‌ன் அவ‌னின் க‌லாச்சார‌த்த‌ தான் ம‌னைவி பிள்ளைக‌ளுக்கு சொல்லி குடுப்பான் , த‌ப்பு த‌வ‌றி உங்க‌ட‌ பிள்ளைக‌ளை வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ள் கூட‌ அதிக‌ம் ப‌ழ‌க‌ விட‌ வேண்டாம் அக்கா , முடிந்த‌வ‌ரை உங்க‌ளின் க‌ட்டு பாட்டுக்குள் அன்பை காட்டி வைத்து இருந்து விட்டு பிள்ளைக‌ளுக்கு க‌லியாண‌ வ‌ய‌து வ‌ர‌ ந‌ல்ல‌ த‌மிழ் பிள்ளைக‌ளை ஊரில் அல்ல‌து அவுஸ்ரேலியாவில் பார்த்து செய்து வையுங்கோ ,
 44. 1 point
  இவைதான் எனது கருத்துக்கள் தம்பி புலம் பெயர்ந்து செல்வதென்பது சொந்த இடங்களை விட்டு போவது மட்டும் அல்லாமல் எமது கலாச்சாரங்கள், வாழ்க்கை முறைகள், மற்றும் பலவற்றையும் விட்டு செல்ல வேண்டியுள்ளது. பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகமுதல் வீட்டில் இருக்கும்வரை எம்மைப்போலவே எல்லாவற்றயும் செய்து, சாப்பிட்டு, தமிழும் கதைத்துக்கொண்டு இருப்பார்கள். பள்ளிக்கூடம் போக துடங்க நிலைமை மாறத்துடங்கும் . அதற்கு நடுவில் நாங்கள் வேலையில் பிஸியாகிவிட நிலைமை இன்னும் மாறும். தாய் வீட்டில் இருந்து மற்றும் தாத்தா பாட்டி யாரும் இருந்து , தமிழ், சமயம் என்று சொல்லிக்குடுத்தால் ஓரளவு பலன் கிடைக்கும். ஆனால் இது நிறைய பேருக்கு சரிவராது. வெளிநாட்டில் பிறந்து வளரும் பிள்ளைகளை ஊரில் நாங்கள் வளர்வது போல் வளர நினைப்பது பிழை. அத்துடன் இப்ப ஊர் பிள்ளைகள் எம்மை மாதிரி இல்லை.அங்கும் நிறைய மாற்றங்கள். நாங்கள் இரண்டு மகன்மாரையும் அடிக்கடி இலங்கை, இந்தியா என்று கூட்டிப்போய் சொந்தம், கோயில் என்று காட்டி வந்தோம். சரஸ்வதி பூசை என்றால் , மச்சம் சாப்பிடாமல், பின்னேரம்தேவாரம் பாடி சாமி கும்பிட வேண்டும். முடிந்த நேரங்களில் எல்லாம் கோயிலுக்கு போவது. சிறு வயதில் நாங்கள் இருக்கும் இடத்தில பகவத் கீதை வகுப்புகளுக்கு போய் பஜனைகளும் படித்ததனால் இப்பவும் கிழமையில் இரு நாட்கள் பகவத் கீதை , பஜனை படிப்பார்கள். அடிக்கடி இருவருடனும் எமது கலாச்சாரம், சமயம் பற்றி கதைப்பேன். இருவரும் மிகவும் ஆர்வமாக கேட்பார்கள். சில தமிழ் படங்களும் பாப்போம். இப்படி ஒவ்வொரு குடும்பமும் தமக்கு முடிந்ததை பிள்ளைகளுக்கு செய்து காட்டி வந்தால் அவர்கள் பெரியவர்களாகி நாம் இல்லாத காலத்தில் அதனை பெரிதாக எண்ணி மதிப்பார்கள். நாம் அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிட்டால் ஒரு காலத்தில் தமக்கென்று ஒரு அடையாளம் இல்லாமல் தடுமாறுவார்கள். எனது சகோதரர்களும், மற்ற உறவினர்களும் தமது பிள்ளைகளுக்கு அப்படிதான் செய்கிறார்கள். அத்துடன் அவர்களுக்கு எமது சமையல் முறைகளையும் சொல்லிகொடுக்கிறேன் . மிகவும் ஆர்வமாக சமைக்கிறார்கள். நாங்கள் எல்லா அம்மாமாரும் சேர்ந்து இப்போது Google document இல் ரெசிபிக்களை எழுதிவருகிறோம். அந்த google document ஐ எமது பிள்ளைகள் எல்லோரும் பார்த்து தமக்கு விருப்பமான ரெசிபிக்களை ஒருகாலத்தில் சமைக்கலாம். எமது உணவை அவர்கள் உண்ணுவது மட்டும் அன்றி அவர்களுக்கு சமைக்க தெரிவதும் கலாச்சாரத்தை பேணுவத்துக்கு மிகவும் முக்கியம். இதை விட அதிகமாக செய்ய எம்மால் முடியவில்லை. எனக்கு அவர்கள் எம்மை மாதிரி வாழவேண்டும் என்று தேவை இல்லை. எமது மொழி, கலாச்சாரம், சமயம் எல்லாவற்றையும் அவர்கள் வேற்று மொழிகளை காட்டிலும் பெரிதாக மதிக்க வேண்டும் என்பதில் தான் எனக்கு ஆர்வம். அது அவர்களுக்கும் தெரியும். சில குடும்பங்கள் தமது ஊர் ஒன்றுகூடல்கள் வைக்கிறார்கள். எமது அம்மாவின் அப்பாவின் ( ஐயா) ஊர் எழுதுமட்டுவாள் என்றபடியால் நாமும் போவதுண்டு. ஆனால் அங்கு பெரியவர்களே ஜீன்ஸை போட்டுகொண்டு ஆங்கிலம் கதைப்பார்கள். சாப்பாடு மட்டும் ஊர் சாப்பாடு. எனது தங்கையின் மகள் (14 வயது) மிகவும் தமிழ் ஆர்வம் மிக்கவர். போனகிழமை சந்தித்தபோது இந்த ஒன்றுகூடல் பற்றி என்னிடம் கதைத்தா . சின்னப்பிள்ளைகளுக்கு விளையாட்டுப்போட்டி வைக்கும்போது எமது பாரம்பரிய விளையாட்டுகளை தமக்கு சொல்லித்தந்து அவற்றை விளையாட வைக்கலாமே என்று அவ சொன்னது எனக்கு மிகவும் பிடித்தது. அம்மா, சித்திமார், மாமி எல்லோரிடமும் கேட்டு பழைய விளையாட்டுகளை அவவுக்கு விளங்கப்படுத்தினேன். மிகவும் ஆர்வமாக கேட்டா. எமது பரந்து வாழும் பெரிய குடும்பத்தில் (extended family) எவரும் இப்படி கூத்து மாதிரி சாமத்திய வீடோ, கல்யாண வீடோ வைக்கவில்லை. நாம் எல்லோரும் குடும்பகொண்டாட்டங்களில் சந்திக்கும் போது பொழுது போக்குக்கு இந்தமாதிரி விசித்திரமான கலியாண , சாமர்த்தியவீடு விடீயோக்களை YouTube இல் பார்த்து சிரிப்போம். பிள்ளைகளும் சேர்ந்து பார்த்துவிட்டு தமது அதிருப்தியை சொல்வார்கள்.அக்காவின் மகள் பஞ்சாபி/ராஜஸ்தான் ஆனால் கனடாவில் பிறந்து வளர்ந்த பெடியனை இரு வருடங்களுக்கு முன் கலியாணம் முடித்தபோது. எமது யாழ் முறையிலும், பஞ்சாபி முறையிலும் தான் வைத்தது. ஆனால் மணமக்களின் விருப்பப்படி மணவறை மற்றும் அலங்காரங்களை வித்தியாசமாக தான் செய்தது. மற்றம்படி கூத்துக்கள் ஒன்றும் இல்லை. Reception வெள்ளைக்காரர் மாதிரி வைத்தார்கள். அதற்கு மட்டும் எல்லோரும் ஆடிப்பாடினார்கள். சில எனக்கு தெரிந்த அமைதியான பெற்றோரே தமது பிள்ளைகளின் கலியாணத்துக்கு அளவுக்கு அதிகமாக ஆடுவது, பாடுவது ஒருவரை ஒருவர் தூக்குவது என்று பார்க்கும் போது நம்ப முடியாமல் இருக்கும். எனவே கலாசார சீரழிவுக்கு தனிப்பட்ட மனிதர்கள், குடும்பங்களின் பிழையான தெரிவுகளே காரணம்.
 45. 1 point
  கொரோனாவாலேயே வீழ்த்த முடியல்ல.. நீங்க என்னடான்னா.. !
 46. 1 point
  மன்னார் கத்தோலிக்கரிடையே "மரித்த விசுவாசிகள்" என்ற பதம் இன்றும் புழங்கும் ஒன்று. சங்கிலிய மன்னன் ஒரு தமிழ் அரசனாக நினைவுகூரப்படுவது பொருத்தமானது. ஆனால் மதம்மாறிய தமிழ் மக்களை கொன்ற வரலாற்றை மறைக்க முடியாதபடி அது பதியப் பட்டிருக்கிறது. இந்த தரவை மட்டும் ஒரு judgement உம் இன்றி ஒரு தடவை நான் குறிப்பிட்ட போது களத்தில் வந்த எதிர்ப்பு பலமாக இருந்தது! இது போன்ற புராதன நவீன கால வரலாற்று மறுப்பே எங்களைப் பிரித்து வைத்திருக்கப் போகிறது என்று அஞ்சுகிறேன்!
 47. 1 point
  அதுதானேபார்த்தன், சும்மா அக்ரிங்குடுக்கிறவையால இப்பிடிச்செய்யேலாது மிகவும் நல்லா இருக்கு உங்கள் காணொளி, இசையும் நல்லாயிருக்கு, வாழ்த்துக்கள், தொடருங்கள்
 48. 1 point
  தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்புக்களை புரிந்து கொள்ளாத ஒருவரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக பணியாற்றுவதாக அரசியல் கைதிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். ஆயுதப் போராட்டம் குறித்த சுமந்திரனின் கருத்திற்கு கண்டனம் வெளியிடும் வகையில் அரசியல் கைதிகள் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையில், சுமந்திரனின் கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை வெளியிட்டிருந்தனர். இருப்பினும், தனது கருத்தானது திருவுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக சுமந்திரன் விளக்கமளித்திருந்தார். ஆயுதப் போராட்டத்தின் தியாகங்களை புரிந்து கொள்ளாத ஒருவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி வழங்கபட்டுள்ளதாகவும் இது தொடர்பில் கூட்டமைப்பு சிந்திக்க வேண்டும் எனவும் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என சுமந்திரன் எந்த அடிப்படையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழர்களின் தியாகங்களை சுமந்திரன் தொடர்ந்தும் கொச்சைப்படுத்துவதை நிறுத்த, கட்சிகள் நடவடிக்கை எடுக்காதுவிட்டால் அவர்களும் அதற்கு துணை புரிவதாகவே எண்ணத் தோன்றும் என அரசியல் கைதிகள் தெரிவிக்கின்றனர். https://www.ibctamil.com/srilanka/80/143288
 49. 1 point
  கடற்படையினரின் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து அனைத்து கடற்படையினரதும் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. கடற்படடைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பும் வரை விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்துடன், அனைத்து கடற்படை வீரர்களும் தமது முகாமிலிருந்து வௌியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள படையினருடன் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பிலான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படடைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா கூறியுள்ளார். குறித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://athavannews.com/கடற்படையினரின்-விடுமுறை/
 50. 1 point
  அப்பாவி மக்களை படுகொலை செய்த சிங்கள-பௌத்த படுகொலைகாரர்களுக்கு மன்னிப்பளிக்கும் சிங்கள-பௌத்த போர்க்குற்றவாளி கோட்டாபய கள்ளச்சாராய பௌத்த தேரருக்கு மன்னிப்பு கொடுப்பது விரைவில் நடக்கலாம்.