• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard


Popular Content

Showing content with the highest reputation on வெள்ளி 19 ஜூன் 2020 in all areas

 1. 6 points
  கருவேற்பிள்ளை வளருதே இல்லை எண்டு புலம்பிக்கொண்டிருந்தார் எங்கண்ட பெருமாள். இங்க ஒரு வெள்ளயம்மாவை திருத்தி பிடித்து கொண்டுவந்திருக்கிறேன். எல்லாம் விலாவாரியா புட்டு, புட்டு வைக்கிறா. மிக அதிகமாக தண்ணீர் விடுவதே, வளராமல் போவதற்கு காரணம் என்கிறார். அக்டோபர் முதல், பிப்ரவரி வரை ஒரு சொட்டு தண்ணீர் காட்டப்படாதாம். வீட்டுக்குள்ள, பொட்ல தான் வளர்க்க வேண்டுமாம். குறைந்தது 10 டிகிரி வெக்கை வேணுமாம். தேவையான ஆக்கள், இவோவிண்ட கம்பெனில ஆர்டர் பண்ணலாம் போலை கிடக்குது. (https://plants4presents.co.uk/curry-leaf-plant) - இப்ப Out of Stock நீங்கள் ஆச்சு, கருவேற்பிள்ளை ஆச்சு, வெள்ளயம்மா ஆச்சு. பின்ன வாறன் போட்டு...
 2. 4 points
  தமிழின இனவழிப்பாளர்களால் வட, கிழக்கு சுவீகரிப்புகள் தடையின்றி தொடர்வதற்கு தேவையான முண்டுகொடுப்புக்களை கொடுப்பதற்கு வல்லமை த.தே.கூவுக்கே உள்ளது, என்பது தான் உண்மை, 11 வருட வரலாறு.
 3. 3 points
  கிராமத்து வீடு சாய்வு நாற்காலியில் சரிந்து உட்க்கார் ந்து கொண்டு இருந்தாள் ராசம்மா டீச்சர் , மாலை மங்குவதற்கு சூரியன் தன கதிர்களை மெல்ல இறக்கி கொண்டிருந்தான் . துணைக்கு இருந்த சிறுமியிடம் கோழிகள் கூடு அடைந்துவி ட டால் , கதவை மூடி விடாம்மா . இன்று மின்சாரம் தடைப்படடாலும் , உதவியாக இருக்கும் .நான் விளக்கு வைக்க போகிறேன் என்றாள். அரிக்கன் லாந்தர் விளக்கின் கண்ணடியை துடைத்து அளவாக எண்ணெய் விட்டு, தயார் படுத்தினாள். பின் மேசை விள க்கினையும் . கண்ணடியை துடைத்து மேசையின் ந டுப்பகுதியில் வைத்தாள். துணைக்கு இருக்கும் சிறுமி குமுதா ...அப்பாவின் காரோட்டி தியாகு வின் மகள் எடடாம் வகுப்பு படிக்கிறாள் வீட்டுப் பாடம் செய்ய உதவி கேட்டு படித்து இரவு துணையாக இருந்து காலையில் செல்வாள். இவள் வீடு வாயில் படலையில் நின்று கூப்பிடடால் .கேட்க்கும் தூரம் தான் . தியாகு மிகவும் விசுவாசமானவன் அவன் . மனைவியும் சமையல் முடித்து பிள்ளைகள் இருவரும் பாடசாலைக்கு சென்ற பின் ராசம்மா டீச்சர் வீட்டில் வந்து சமையல் பாத்திரம் தொட க்கம் , துணி துவைப்பது வரை செய்து கொடுப்பாள் . ராசம்மா டீச்சர் இளைப்பாறிய பின் . இரண்டு வருடங்களுக்கு முன் கணவன் இறந்து விட படடனத்தில் இருக்கும் மகன் தன்னிடம் வரும்படி எத்தனையோ முறை கேட்டுக் கொண்டாலும் ராசம்மா மறுத்து வி ட டாள் . வருடமொருமுறையாவது பிள்ளைகளையு ம் கூட்டி வந்து என்னைப் பார்த்துக் கொண்டு போனால் காணும் என்பாள் . கிராமத்து சூழ் நிலையிலே பிறந்து வளர்ந்து வாழ்க்கை படடவள். மகன் பிறந்த பின் சில வருடங்கள் படிப்பிக்க போகாமல் விட்டு அவன் வளர்த்தும் தன மாமியாரிடம் விட்டு கல்வி ஒரு கொடை அதை சிறார்களுக்கு கற்பிப்பது பெரும் புண்ணியம் எனும் கணவனின் விருப்புக்கேற்ப பாடசாலை அருகாமையில் இருந்ததால் சென்று படிப்பித்து வந்தாள் . எல்லாம் கனவு போலாகியாது அவளுக்கு அவளும் ஓய்வு பெற்று பல வருடங்களாகி விட்ட்து வயதும் ஆகி விட்ட்து . சில தடவை மகனின் வீட்டுக்கு சென்ற போதும அங்கு மனம் நிலை கொள்ள வில்லை . வாகன இரைச்சலும் காலையில் எழுந்து கணவன் மனைவி வேலைக்கு ஓடுவதும் , குழந்தைகளை ஆட்டொவில் பள்ளிக்கு அனுப்புவதும் ஒரு எந்திர த்தனமான வாழ்க்கை . தனியாக இருக்க மகனும் விரு ம்ப வில்லை .. அம்மாவின் விருப்பின் படியே இருக்கட்டும் என விட்டு விடடான் . காலம் தன் வழியே பயணித்துக் கொண்டு இருந்தது .சிறுமி குமுதாவும் உயர்கல்வி கற்று பல்கலைக்கு சென்றுவிடடாள் . ராசம்மா பல வாறு யோசிக்க தொடங்கினாள் . மீண்டும் தனக்கு உதவியாக சிறு குழந்தையுடன் கைவிடட தனித்து நின்ற தேவகியை வேலைக்கு அமர்த்தி பொருட்கள் களஞ்சிய படுத்தும் அறையை சகல வசதிகளுடன் ஒதுக்கி கொடுத்து வீட்டொடு வைத்துக் கொண்டாள் . மீண்டும் மகன் தன்னிடம் வரும் படி அவற்புறுத்தவே , காலையில் குயிலின் கூவ லோடு எழும் இன்ப மும் சுற்றிவர மாமரங்களும் தோடை பலா என பயன் தரும் மரங்களும் காலப்போக்கில் கவனிப்பாரற்று அழிந்து விடும் . காலையில் தரிசிக்கும் முருகன் கோவில் , செவ்வாய் வெள்ளி விரதநாட்களில் காக்கைக்கு உணவளித்து உண்ணும் மன நிறைவு இவற்றை அவள் இழந்து மகனுடன் செல்ல தயாரில்லை . என மறுத்து விடடாள். தற்போது அவளுக்கு சற்று எதிர்காலத்தின் முதுமையை நோக்கிய ஒரு பய உணர்வு ....அன்று வழக்கம் போல் எழுந்து காலை க் கடன் முடித்து உணவுண்டு முடித்தவள் , தேவகியை கடைத்தெருவுக்கு மீன் வகை வாங்கி வர அனுப்பினாள். பின் மணிச் சத்தம் கேட்டு வாயிற் கதவை நோக்கியவள் .தபாற்காரன் வந்திருந்தான். அவளது கணவனின் அக்காவின் கடைசி மகளுக்கு ..பெண் குழந்தை பிறந்த சேதி யோடு .கூடிய கடித மொன்றுடன் . மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள் . மதிய உணவு முடித்து ...சற்று ஓய்வெடுக்க எண்ணிய அவள் மேசை மீது கடிதமெழுதும் நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு மகனுக்கு ஒரு மடல் வரைந்தாள் . அன்புள்ள மாதவன் , ஜீவிதா மற்றும் பேரப்பிள்ளைகள் அறிவது ... முருகன் துணையால் நான் நலமே உள்ளேன் நீங்களும் அவ்வாறே இருக்க எல்லாம் வல்ல முருகன் துணை புரிவார் . . தேவகி வீட்டு வேளைகளில் ஒத்தா சையாக இருப்பதால் நிம்மதியாய் இருக்கிறேன் பெரிய மாமியின் மகள் கெளசல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக மாமி கடி தம் போட்டிருந்தார் . என் பேரப்பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்களா ? அங்கு வெயில் எப்படி இங்கு மரங்கள் சூழ இருப்பதால் நல்ல குளிர்ச்சியாக இருக்கிறது . இம்முறை பள்ளி விடுமுறைக்கு என்னைப்பார்க்க வருவீர்களா ? வெள்ளைச்சியும்,கொம்பாளும் ஒரே நேரத்தில் கன்று போட்டிருக் கு . இரண்டு நாகு கன் றுகளும் வீட்டு முற்றத்தில்துள்ளித் திரிந்து ...விளையாடுவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம் வீட்டில் தாராளமாக பால் கிடைக்கிறது . என் பேரப்பிள்ளைகளைத் தான் நினைப்பேன் . வீட்டுத்தேவைக்கு எடுத்து போக மீதியை வறிய பள்ளிப்பிள்ளைகள் மூவர் வந்து மாலை வேளைகளில் எடுத்து செல்வார்கள். அயலில் எல்லோரிடமும் பால் மாடுகள் இருக்கின்றன . அதனால் ஒருவருக்கும் கொடுக்க முடியவில்லை . வறிய பிள்ளைகள் பசியாறட்டும் போகும் வழிக்கு புண்ணியமாகும் என எண்ணிக் கொள்வேன். அடுத்து மகனே உனக்கு நான் உங்களுடன் வந்து தங்கவில்லை என குறையாக இருக்கலாம் யோசித்து பார் பரபரப்பான இந்த காலத்தில் குழந்தைகளின் படிப்பு உன் வேலை வீடு செலவு என்று உனக்கே நேரம் இல்லாத போது என்னை கவனிக்க கஷ்டமாய் இருக்கும் . நான் நடமாடித்திரியும் வரை என சுய தேவைகளை நிறைவேற்றக் கூடிய நிலையில் இருக்கும் வரை நீ பிறந்து வாழ்ந்த இந்த வீட்டிலிருக்கவே விரும்புகிறேன் . நான் உயிருடன் இருக்கும் வரை இதை விற்கவோ ..வேறு தேவைக்கோ எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம். என் சுயம் இழந்து ... மறதி கண்டு ...என்னை இன்னொருவர் துணையோடு தான் வாழ வேண்டிய நிலைமை வந்தால் ...எனது இளைப்பாற்றுச் சம்பள பணம் சேமிப்பில் இருக்கிறது . அது உனதும் எனதுமான இணைந்த வைப்புக் கணக்கில் இருக்கிறது அதை எடுத்து உன் தேவைகளை செய் . என்னை ஒரு கண்ணியமாக நடத்தும் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடு ...இதை என் கடைசி ஆசையாக நிறை வேற்றுவாய் என்பதில் நம்பிக்கை உண்டு . ஒன்று சொல்ல மறந்து விடடேன் . கார் கார தியாகுவின் பெண்ணுக்கு நகரத்தில் ஒரு வேலை கிடைக்க உதவி செய்வாயா? நன்றாக படித்து இரண்டு டிகிரி ..வாங்கி உள்ளாள் .அதுகள் உன்னை குழந்தையாக வீட்டுக்கு கொண்டு வந்த காலத்தில் இருந்து கைக்குள்ள இருந்து சேவை செய்ததுகள் அந்த பெண் தலை நிமிர்ந்தால் அதுகளின் சீவியம் மேம் படும் ...மீண்டும் குடும்பத்தையும் உன்னையும் பாது காக்க .முருக கடவுளை வேண்டி நிற்கிறேன் .இப்படிக்கு .. பாசமுள்ள அம்மா ...கண்கள் பனித்தன வாரங்கள் மாதங்களாகி பள்ளிக்கு கூட விடுமுறையும் வந்தது . ஒரு ஞாயிறு காலை வாயிலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்ட்து ...மகன் மருமகள் பேர ப் பிள்ளைகளோடு வந்திருந்தான் .ராசம்மாவுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி .. பேத்தி நன்றாக வளர்ந்து ரடடை ஜ டை போட்டு இருந்தாள். பார்க்க மிகவும் ஆசையாக இருந்தது . பேரன் தேவகி பையனோடு கிளி பார்க்க மாமரத் தடிக்கு சென்று விடடான் . .அவர்கள் குளித்து முடிந்ததும் காலை ஆகாரத்தை நிறைவு செய்தார்கள் . ராசம்மா மதிய உணவுக்கு என்ன செய்வது என்று ..எண்ணிக் கொண்டு இருக்கையில் .". மாமி எங்களுக்கு கடையில் வாங்கும் கோழி சலித்து விட்ட்து . ஊர் கோழி சமைப்போமா என மருமகள் ஜீவிதா ..கேட்டுக் கொண்டே குசினிக்குள் நுழைத்தாள். அவளும் கூட மாட உதவி செய்து சமையலை ஒப்பேற்றறினார்கள். பல கதைகளும் கதைத்த பின் ..... மத்திய உணவு சுடச் சுட கோழிக் கறியும் தோடடத்து பிஞ்சு வெள்ளைக்கத்தரிக் கறியும் மற்றும் பல உணவுகளுடன் நிறைந்தது . நாட்கள் ஓடி வாரங்களானது ராசம்மா மிகவும் யோசனையுடன் காணப்படடாள் . ..மறு நாள் பயணம் . இரவு உணவு முடித்துக் கொண்டு ...படுக்கைக்கு சென்றார்கள். எல்லோரும் ஆழ்ந்த நித்திரை அதிகாலை மூன்று மணி யளவில் அம்மாவின் அறையில் ...விளக்கு எரிந்து கொண்டிருந்ததை பார்த்த மகன் .. உள் சென்று பார்த்த போது ஒரு வகை விக்கல் ..எடுத்துக் கொண்டிருந்தார் ராசம்மா ...அருகில் சென்று கையை பற்றியவர் ....கை துவண்டு போவதைக் கண்டு ...அதிர்ச்சி அடைந்தார் . தேவகி ஓடிச்சென்று ....கார் கார தியாகுவை அழைத்து வந்து ..வைத்திய சாலை சென்ற போது அவர் ஏற்கனவே மாரடைப்பில் இறந்து விடடார் . தன் கடைசிக் கால ஆசைகளை விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்ட திருப்தியில் ராசம்மா ஆழ்ந்த நித்திரையில் .... .முதியவர்களை அவர்கள் விருப்ப படி ...ஓய்வாக அமைதியான சூழலில் வாழ விடுங்கள் . பணத்தைக் கட்டி முதியோர் இல்லங்களில் தள்ளி விட்டு கடமை முடித்தேன் என வாழாதீ ர்கள் .மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் ஆடு மாடு தோட்ட்ம் வயல் வெளி என ...வாழ்ந்த வாழ்க்கை ஒரு நாலு சுவர் கொண்ட கூட்டுக்குள் வாழ்வது வீட்டுச் சிறை போல தனித்து விடப்பட்டது போல உணர்வார்கள். தனிமையம் ஏக்கமும் அவ்ர்களைக் கொல்லாமல் கொள்ளும் . யார் வருவார்கள் தன்னைப் பார்க்க என்று மனம் எங்கும். முடிந்த வரை முதியோர் இல்லம் தவிர்த்து எஞ்சிய காலத்தை வாழ வையுங்கள். தாய் /தந்தை மனசு தங்கம் நான் அறிந்த சொந்தம் நன்றி சொல்ல போதாதையா ஏழேழு ஜென்மம்
 4. 3 points
  மிகச் சரியாக சொன்னீர்கள், அதனால் நான் வீட்டை படசாலைக்குமுன்னால் வாங்கி, அவர்களின் நண்பர்கள் அனைவரையும் வீட்டுக்கு கூட்டிகிட்டு வாருங்கள், வந்து எவ்வளவு நேரமானலும் இருந்து கதையுங்கள் படியுங்கள் என சொல்லியுள்ளேன். அவர்களின் நண்பர்களுக்கும் சமைத்து கொடுப்போம்( - 5stars தருவார்கள் வடை, தக்காளி சாதம், முறுக்கு...) , அதனால் அவர்களின் நண்பர்களை பற்றி எம்மால் அறிய முடியும், அத்துடன் பிள்ளைகளுக்கும் ஒரு சுதந்திரம், அவர்கள் தங்கள் நண்பர்களுடன் கடைக்கு சினிமாக்கு போகிறோம் என சொன்னால் யாருடன் போகின்றீர்கள் என கேட்டுதான் விடுவோம், எங்களுக்கு அவர்களின் நண்பர்கள் எல்லோரையும் தெரிந்து வைத்திருப்பதால் பயப்படுவதில்லை, என்றாலும் வெளியில் போய் வரும் நேரமெல்லாம் கேட்டுதான் அனுப்புவோம், அத்துடன் போனவுடன் & வெளிக்கிடும் போது whatsapp இல் செய்தியும் அனுப்பிவிடுவார்கள் FAMILY Group க்கு, இது ஒரு பாதுகாப்பிற்கே. கட்டி வைத்திருக்க முடியா இங்கு, ஆனா கவனமாக வளர்க்கலாம், நல்ல அறிவுரைகளை சொல்லி. ஒவ்வொரு நாளும் வீடு திருவிழா மாதிரிதான் , ஒன்று மனைவியிடம் படிக்க பல பிள்ளைகள் வருவார்கள், அவர்களுடன் எங்கள் பிள்ளைகளும் நட்பாக பழகுவார்கள், அதனால் பல தமிழ், தெலுங்கு, மலையாள பெற்றோர் & பிள்ளைகளுடன் பழகும் வாய்ப்பு அதிகம், அதனால் வெளியில் சேட்டை விட முடியாது, தகவல் உடன் வரும் . நமது கலாச்சாரத்துடன் போய்கிட்டிருக்கின்றார்கள், கடந்த 10 வருடங்களாக சாய்பாபா SSE வகுப்புகளிற்கு போய்கிட்டு இருக்கின்றார்கள், அதனால பல நல்ல விடயங்களை கற்றுள்ளார்கள். நீங்கள் சாய்பாபா பக்தராக இருக்கவேண்டுமென்றில்லை (எனக்கு நம்பிக்கை இல்லை இவரில்) SSE வகுப்பிற்கு விடுங்கள், நல்ல பழக்க வழக்கம் வரும், பலருடன் சேர்ந்து பழகும் வாய்ப்பும் கிட்டும். அத்துடன் மனித நேயம், தொண்டு, இப்படி பல அங்கு கற்கலாம். உங்கள் விருப்பம். (துல்பன் - வந்து கேட்கப்படாது மூட நம்பிக்கையை வளர்கின்றேன் என) நான் என் நண்பர்களையும் ஊக்கப்படுத்தி அவர்களும் அங்கு அனுப்பினவர்கள். சிலர் முழுநேர பக்தர்கள் ஆகிவிட்டார்கள்
 5. 3 points
 6. 2 points
  நீங்கள் ஈச்சம் குருத்து ஊரில் சாப்பிட்டுள்ளீர்களா ? அடுத்த முறை போனால் சாப்பிட்டு பாருங்கள், அதனை சுவை வாழ்கையில் மறக்க மாட்டீர்கள், கன பேர் போனால் ஆளுக்கு ஒரு ஈச்ச மரத்தை வெட்டவும், ஒன்றில் சிறிதளவுதான் வரும் , ஆனா சுவை தேவாமிர்தம். எங்க ஊரில் இந்த ஈச்சப்பத்தைகளும் பணை மரங்களும் தான் அதிகம், விதம் விதமான் ஈச்சம் பழங்கள் மரத்திலிருந்து பறித்து தேன் ஒழுக ஒழுக சப்பிட்டால், ஆகா .... அடுத்த முறை ஊருக்கு போகும் போது பொன்னாலை திருவடி நிலை காடு என தேடிப்போய் இந்த ஈச்ச மரங்களை ஒரு கை பாருங்கள், கவனம் பச்சை பாம்பிருக்கும்
 7. 2 points
  பூக்கோவாச் சம்பல் - Cauliflower sambal
 8. 2 points
  இங்கும் இப்ப வெள்ளையல் வளர்க்க தொடங்கிவிட்டினம், வல்லாரை, கருவேப்பிலை... இங்கும் இப்ப வெள்ளையல் வளர்க்க தொடங்கிவிட்டினம், வல்லாரை, கருவேப்பிலை... விதைகள் வேணுமென்றால் சொல்லுங்கள் அடுத்தமுறை பழுத்ததும் பதப்படுத்தி தேவையான அளவு அனுப்பிவிடுகின்றேன்
 9. 2 points
  வணக்கம் மிண்டர்! இப்பவெல்லாம் நாயை மாதிரித்தான் எங்கடை ஒரு சில இளம் சமுதாயத்தினர் வாழுனம்.நேர காலம் தெரியாது.எது எங்கை எப்பிடி இருக்கோணும் எண்டு தெரியாது. ஆரை எப்ப மடக்கலாம். எண்ட ஒரே நாய்ச்சிந்தனை தான்.சபை நாகரீகம் தெரியாது.கண்ட இடத்திலை கையை வைக்கிறது.நோண்டுறது.நடு ரோட்டிலை நிண்டு கிஸ் அடிக்கிறது. நடு ரோட்டிலை நிண்டு தேய்படுறது. நாய் நன்றியுள்ள மிருகம். அதைப்பற்றி சொல்ல ஆயிரம் விடயங்கள். இருக்க. சொறி நாய்கள் செய்யும் கேடுகெட்ட செயலை வெட்டி ஒட்டி அதை ஒரு உதாரணமாக அழகு பார்க்கின்றீர்கள்.
 10. 2 points
  அது உண்மையானால் அந்த நடவடிக்கையில் முதலில் ஆட்சியிலுள்ள இவர்கள் அனைவரும் ஒழிக்கப்படுவார்கள்!
 11. 2 points
 12. 2 points
  நல்ல தலைப்பு.. எம்மவர் திருமணங்கள்... இப்போ அதன் பண்பாட்டு விழுமியத்தை தொலைத்துவிட்டது என்றால் மிகையில்லை. குறிப்பாக புலம்பெயர்நாடுகளில்.. வட ஹிந்திய கலாசாரத்தை எமது என்றாக்கி வைத்திருக்கிறார்கள். அத்தோடு சினிமாத்தனத்தை உள்ளிளுத்து வைத்திருக்கிறார்கள். உண்மையில்.. சைவத் - தமிழ் முறை திருமணத்துக்குள்.. சினிமாவை புகுத்தியத்து.. சிங்கப்பூர் மலேசியா வாழ் தமிழர்கள் தான். பின் அதற்குள்.. வட ஹிந்திய கலாசாரத்தை புகுத்தினது நம்ம புலம்பெயர் தமிழர்கள். எங்கள்.. திருமணத்தை தாங்கள் சொல்லியது போல் சைவத் தமிழ் முறைப்படி.. கோவிலில் தான் நடத்தினோம். நீண்ட கியூக்களில் வாழ்த்தவருபவர்கள் கால்கடுக்க நிற்க வைக்கும் எண்ணமில்லை. அந்த வகையில்.. மிகவும் நெருங்கிய உறவுகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள்.. அவர் தம் குடும்பம் என்று தான் அழைப்பு விடுத்தோம். குறிப்பாக தமிழரல்லாத நண்பர்கள்.. எமது கலாசாரத்தை ரசிக்கவே பல நாடுகள் தாண்டி வந்து பங்கேற்றார்கள். முடிவில் வந்த எல்லோருமே இதுதான் தமிழ் கல்யாணம் என்பதை அடையாளம் கண்டுகொள்ள வாய்ப்பளித்தோம். அதிலும் ஒரு கிறீஸ் நாட்டு நண்பர்.. தான் பார்த்த முதல் தமிழ் திருமணம் இது தான்.. இதற்கு முன்னர் சில தமிழர்களின் திருமணத்திற்கு போயிருந்தாலும்.. அது கோவிலில் நடக்கவில்லை.. கோலில் தான் நடந்தது என்றார். அங்கு வேடிக்கை வினோதம் இருந்த அளவுக்கு கலாசார விழுமிய வெளிப்பாடில்லை என்றார். அழைப்பிதழை நானே வடிவமைத்து.. நெதர்லாந்தில் பிரின்ட் செய்து எடுப்பித்தேன். ஆடம்பரமான அழைப்பிதழ் அல்ல.. அவசியமான விடயங்களோடு.. எமது நிழற்படம் பொறித்து.. நன்றி பகிர்வுடன். தமிழில் திருமண மந்திரம் சொன்னார்கள். இடையில் திருமணத்தை நடத்திய புரோகிதர்களின் ரசிக்கக் கூடிய மேடைக்கேற்ற பகிடிகள்.. சிரிப்புகள்.. ஆகக் கூடியது 3 மணித்தியாலத்துக்குள் நிகழ்வை முடிக்க வேண்டும் என்பதே எமது விருப்பம். அதிக நேரம் இழுப்பது சோர்வும் சலிப்பும் தரும் என்பதால். அதேபோல் நிகழ்வுகள் ஒழுங்கமைத்தப்படி நிகழ்ந்தது. நேரலை எம்மை விட்டு தூர உள்ள உறவுகளுக்காக செய்யப்பட்டது. முகநூல் போன்ற எல்லோரும் பாவிக்கும் சமூக ஊடகங்களை பாவிக்கவில்லை. எங்களின் தனித்துவம் பாதுகாக்கப்படுவது அவசியம் என்பதால். இத்தனைக்கு வழமையாக எம்மவர்கள் செய்யும் திருமணத்தோடு ஒப்பிடும் போது செலவும் ஓரளவு குறைவு. மிஞ்சிய உணவையும் கோவிலுக்கு வருபவர்களுக்கு பரிமாறக் கூடியதாக அனுமதி தந்திருந்தார்கள். அநாவசிய செலவீனங்களை தவிர்த்து நல்ல சைவ உணவை வயிராற வழங்க வேண்டும் என்பதை நிறைவு செய்யக் கூடியதாக இருந்தது. இத்தனைக்கும் என் திருமணத்தை என் சொந்த சேமிப்பில் தான் நடத்தினேன். கடனும் வாங்கவில்லை.. கடனட்டையும் பாவிக்கவில்லை. பெண் வீட்டாரிடம்.. நன்கொடை என்றும்.. வாங்கவில்லை. இதனை பெருமைக்காகச் சொல்லவில்லை.. எமது கலாசார பின்னணியோடு.. வாழும் நாடுகளின் செளகரிகங்களுக்கு உட்பட்டு.. செலவையும் கட்டுப்படுத்தி.. எங்கள் திருமணங்களை செய்ய எம்மவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இளைய சமூகத்துக்கும் பொறுப்புணர்த்த வேண்டும். இன்றேல்.. வீண் செலவுகளால் சீரழிவு தான். பெரும் ஆடம்பர திருமணங்களை தங்கள் வசதிக்கு மிஞ்சி செய்து துன்பப்படும் பலரை நாம் புலம்பெயர் மண்ணிலும் சரி தாயகத்திலும் இப்போ சர்வ சாதாரணமாக காண முடிகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். எமது சேமிப்புக்குள் எமது கலாசார பண்பாட்டு விழுமியங்களோடு.. சோர்வு சலிப்பு.. கால் கடுப்புக்கு இடமளிக்காமல்.. சுவராசியம் வைச்சு செய்யப்படும் ஒரு சிறிய நிகழ்வாக எமது திருமணங்கள் அமைவதே சிறப்பு.
 13. 2 points
  சொதப்பல் சம்பந்தனின் ஊரிலேயே கன்னியா வெந்நீரூற்றை காப்பாற்ற வக்கில்லாத கூத்தமைப்பை இன்னமும் நம்பினா கதை கந்தல் தான்.
 14. 2 points
 15. 1 point
 16. 1 point
  உங்களின் அத்தனை வீடியோவிலும் அப்பப்பவே லைக் இட்டாச்சுது.கொஞ்சம் சைலண்டா இருப்பம் எண்டால் விட மாட்டிடீங்களே........!
 17. 1 point
  பிறரைப் போல வாய்ப்பந்தல் போடாமல் பாரம்பரியத்தையும், தொன்மங்களையும் கடைப்பிடித்து திருமணம் செய்த நெடுக்ஸுக்குப் பாராட்டுக்கள். திருமணம் எளிமையாகவும், பண்பாட்டையும் தொன்மங்களையும் வெளிப்படுத்துவதுமாக இருக்கவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பெரும்பாலான திருமணங்கள் ஆடம்பரமாகவும், மானாட மயிலாட ஷோ போலவும், போதாக்குறைக்கு கூறை மாத்த பெண்போகும் இடைவெளியில் சீக்கியரின் பாங்கரா மேளமடித்து ஒரு கூத்துமடித்தும் இருக்கும். இந்தக் கூத்துகளைப் பார்க்கப் பிடிக்காமல் வெளியே போய் நண்பர்களிடன் இரண்டு பியர் அடித்துவிட்டு (சம்மரில்தானே கலியாணங்கள்), சாப்பாட்டு வரிசை தொடங்க வந்து நாலு விழல்க்கதைகளும் பேசி, குடிச்ச பியருக்கு தோதாக மூன்று நாலு பொரிச்ச உறைப்பான மிளகாயையும் கடித்து, மரக்கறியையும் சாப்பிட்டுவிட்டு மேடையில் கூட்டம் குறைய மாப்பிள்ளை, பொம்பிளைக்கு ஒரு “ஹலோ”, “கொங்கிராயுலேஷன்ஸ்” சொல்லி, கார்ட்டையும் கொடுத்துவிட்டு, பொண்ணுக்கு கையைக் கொடுக்கிறதா, கொடுக்காமல் விடுகிறதா என்று குழம்பி, அறுகரிசி மேலிருந்து போடுகிறதா, கீழிருந்து போடுகிறதா என்று முளுசி, ஏதோ ஒரு வழத்தால் போட்டுவிட்டு, படம் எடுக்க விறைப்பாக மூஞ்சையை வைத்துக்கொண்டு நின்றுவிட்டு, மேடையை விட்டு இறங்கும்போது கிடைக்கும் பலகார/பரிசுப் பொதியையும் பிரிச்சுப் பார்த்து நல்ல பருத்துறை வடை இருந்தால் ஒரே கடியில் அதையும் விழுங்கி கார் பார்க்குக்கு வந்தால் நிதானம் வந்துவிடும்
 18. 1 point
  நான் வாழும் நாட்டிலும் என்னுடன் நட்புவட்டத்திலுள்ள பலருடனும் நான் கேட்டேன் ஒரு கிறீன் கவுஸ் வாடகைக்கோ சொந்தமாகவோ வாங்கி கீரை கறிவேப்பிலை இவைகளை உற்பத்திசெய்யலாம் என ஒருத்தருக்கும் அக்கறை இல்லை என்னால் தனியாகத் தொடங்கமுடியாது காரணம் பொருளாதாரம் அடுத்தது முழுமையாக இதே வேலையாய் இருந்தால் வருமானம் பிழைச்சால் வீட்டை கடந்தந்தவன் புடுங்கிக்கொண்டு போயிடுவான்.அதுக்குப்பிறகு பொஞ்ச்சதிக்காரி இந்தாளுக்கு ஒரு அறுப்பும் தெரியாது பிழைக்கத்தெரியாத மனிசன் எனப் புறுபுறுத்து பிரசரை ஏத்திவிடும் அதுக்குப்பிறகு மல்லாக்காப் படுக்கவேண்டியதுதான். இப்போதைய எனது நோக்கம் குடாநாட்டிலோ அல்லது வேறெங்கேயாவதோ ஒரு நூறுபரப்புக்காணி வாங்கி ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணை அமைப்பது தவிர நீண்டகாலத்தில் பயன்தரக்கூடிய காட்டு மரங்கள் வளர்ப்பது. கூடிய விரைவில் இங்குள்ள பிக்கல் பிடுங்கல்கள் முடியட்டும் கெலிம யாழ்ப்பாணய தான். வெள்ளை வானில ஏத்திக்கொண்டுபோய் மண்டையில போட்டாலும் பறுவாயில்லை. ஆனால் அப்படி மண்டையில போடுற அளவுக்கு நான் ஒன்றும் முன்னாள் பின்னாள் போராளியோ அல்லது புலம்பெயர் புலி வாலோ இல்லை என்ன விடையம் கண்ட இடங்களில தேவையில்லாமல் கண்டபடி கதைக்கிறது அவ்வளவுதான். ஒர் ஒருங்கிணைந்த விவசாயக் கூட்டுப்பண்ணையை அமைத்த்ச்சுப்போட்டு சாவதே என ஆசை. அதைவிட இன்னுமொறு விடையம் ஸ்பெயின் நாட்டில் உள்பகுதியில் ஸ்பெயின்மக்களால் காலப்போக்கில் கைவிடப்பட்ட கிராமங்கள் நிறைய விற்பனைக்கு வந்திருக்கு அக்கிராமங்களில் இப்போதும் நல்லநிலையில் ஓரிரண்டு வீடுகள் சிலவற்றில் பாடசாலை கீர்நிலை மற்றும் கைவிடப்பட்ட பண்ணைவீடுகள் ஆகியனவும் உள்ளடக்கம் அந்தப்பிரதேசத்தின் நகரபிதா வாங்கோ மீண்டும் யாராவது வந்து இந்த இடங்களை வளப்படுத்துங்கோ எங்களால் செய்யக்கூடுய எல்லா உதவியும் செய்கிறம் என கூறும் ஒரு காணொளியப் பார்த்தேன் பிசாசுக் கிராமங்கள் (கோஸ்ற் கவுஸ்) என பெயரிடபட்ட காணொளிகள் இப்போதும் யூ ரியூப்பில் இருக்கு. நல்ல காலநிலை என்ன விடையம் போய் மினக்கடவேணும். சரிப்பண்ணி எடுத்தைட்டால் புலம்பெயர் தேச உறவுகள் வந்து தங்கி விடுமுறையக் களிக்கும் ஒரு இடமாக மாற்றினால் சீசனுக்குச் சிறீ லங்கா போகும் பலரை அங்கு திருப்பிவிடலாம்
 19. 1 point
  தமிழ், இலக்கணம் இழந்து போவதில் நீங்களும் பங்காளியாகலாமா? சிறிலங்கா அரசின் கொச்சைத்தமிழும், இந்திய அரசின் ஹிந்தி, ஆங்கிலம் கலந்த தமிழும் அர்த்தம் புரியக்கூடியதாக இருப்பதால், நாளடைவில், அடுத்த தலைமுறைக்கு அவையே தமிழாகி விடலாமா? தமிழ் தன் இலக்கணமும் இலக்கியமும் சிறந்து வாழத்தானே நமது பங்களிப்பு அமைய வேண்டும்? நான் முப்பது வருடங்களுக்கு முன் இணையத்தில் எழுதியவற்றை இன்றைக்கும் வாசகர்கள் பலர் படிக்கிறார்களே? நூறு வருடங்களின் பின் உங்கள் இன்றைய இணையத் தமிழே அடுத்த தலைமுறை அறியும் தமிழ். தமிழை வாழ வைப்போம். வாழ்க தமிழ்!
 20. 1 point
  பல்தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் நாடுகளில் கலாச்சார பரம்பல் ஏற்படுவது இயற்கை. இந்த உலகில் வாழும் மற்றய மனிதர்களைபோல சாதாரண மனிதர்களான தமிழர்களிலும் அந்த பரம்பல் ஏற்பட தான் செய்யும். இந்த இயல்பு என்ற ஜதாரத்தத்தை மறுத்து எனது கலாச்சாரம் தான் உயர்ந்தது மற்றதெல்லாம் தாழ்ந்ந்து என்று கூறும் அறிவிலிகள் எல்லா சமூகத்திலும் உள்ளார்கள் தான். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் சிலர் எமது கலாச்சாரம் தான் உசத்தி என்று கூறி மற்றயவர்களை தாழ்த்துவதும் அதை வாசித்தது மற்றவர்கள் புளகாங்கிதம் அடைவதும் அதையே எல்லோரும் கூறவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் இந்த பாடலை ஞாபகப்படுத்தகிறது "ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர்வாழ்வேன்". இப்படியே எனது கலாச்சாரம் தான் உலகில் உயர்ந்தது என்ற பொய்யை கேட்டு மாயையில் வாழவேண்டியது தான்.
 21. 1 point
  எமது கலாசாரத்தை எல்லா திரிகளிலும் கேவலமாக சித்தரிக்கும் உங்களை போன்றவர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. இனிமேலாவது கொஞ்சம் மூடிக்கொண்டிருக்க பழகுங்கள்.
 22. 1 point
  மிகச் சிறிய வயதில் எனது பாட்டனாருடன் காட்டுக்குச் சென்று ஈச்சங்குருத்து சப்பிட்டுள்ளேன். கோடாலிப் பிடி போன்ற நீளமான பிடி போட்ட கத்தியால் ஈச்சை மரத்தை வெட்டுவார்கள். அதன் சுவை சரியாக ஞாபகம் இல்லை. பின்னர் வளர்ந்த பின்னர் இவ்வளவு சிறிய ஈச்சங்குருத்துக்காக ஒரு மரத்தையே வெட்ட வேண்டுமா என்று கிடைத்த இன்னொரு சந்தர்ப்பத்தை விட்டுடிட்டேன். தென்னங்குருத்து பல தடவை சாப்பிட்டுள்ளேன். பலத்த காற்று வீசினால் சில வேளைகளில் தென்னை சரிந்து விழுவதுண்டு.
 23. 1 point
  சரியான ரெக்னிக்கை பிடிச்சிட்டீங்கள்.
 24. 1 point
  என்ரை கலாச்சாரம் என்ரை மொழிய நான் உசத்தியா சொல்லாமல் வேறை ஆர் சொல்லவேணும்?
 25. 1 point
  அந்நிய ஆக்கிரமிப்பின் உத்தியே உணவு பழக்க வழக்கங்களை மாற்றுதல் அந்த உத்தியில் தமிழரசும் சிக்கி சின்னா பின்னமாகிவிட்டார் ...... தயிருக்கு பதிலாக புளித்த கள்ளை பாவிக்கலாம் எனது கருத்து. நாதமுனி உங்களின் கருத்தை நானும் ஏற்று கொள்கின்றேன்.
 26. 1 point
 27. 1 point
  “சிங்கப்பெண்ணே” சிறுகதைப் போட்டியில் ஜெயஸ்ரீ சதானந்தன் முதலிடம்.! தமிழகத்தில் தமிழ் பட்டறை இலக்கிய பேரவை நடாத்திய “சிங்கப்பெண்ணே” சிறுகதைப் போட்டியில் பிரித்தானியாவில் வாழும் இலங்கை பெண் எழுத்தாளர் ஜெயஸ்ரீ சதானந்தனுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. இவர் பிரித்தானியாவில் இயங்கும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் முன்னணி செயல்பாட்டாளர் ஆவார். கடந்த 07.06.2020 அன்று நடைபெற்ற “சிங்கப்பெண்ணே” சிறுகதைப் போட்டியின் முடிவுகள். #முதல் இடம் எழு. Jeyasree sathananthan #இரண்டாம் இடம் எழு. Viji mahesh எழு. Raisa farwin #மூன்றாம் இடம் எழு. Ssm Rafeek எழு. Raghunath Krishnaswamy வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். https://www.vanakkamlondon.com/sinkapenne/
 28. 1 point
  தமிழின உரிமைகளை அடையும் நோக்கில் ஏற்பட்ட அனுபவம், வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்டவர்கள் தவறுகளை திருத்தி, களைகளை/தடைகளை அகற்றி இலக்கு நோக்கி பயணிப்பர். அப்படிப்பட்டவர்கள் வெருளிகளும், எடுபிடிகளும் காட்டும் பூச்சாண்டிகளுக்கு பயப்படமாட்டார்கள்.
 29. 1 point
  மிகச்சரியான கருத்து - 70 வருட குதிரைகள்: இந்தியக்குதிரை தமிழரசுக்கட்சி குதிரை சுயநிர்ணய உரிமை குதிரை - அடங்காத்தமிழர் சுந்தரலிங்கத்தின் ஈழத்துடன் ஆரம்பமானது. மாற்றுக்குதிரைகள் களத்தில்: சீனக்குதிரை சிங்களக்கட்சி குதிரை பொருளாதார அபிவிருத்தி உரிமை குதிரை வேறு குதிரைகள் உண்டா?
 30. 1 point
 31. 1 point
  செங்கம்பளம் விரித்தது நாங்க தானே? எமது மக்களின் பலவீனத்தால் பாராளுமன்று போனவர்களுக்கு எங்கே அடித்தால் எங்கே வலிக்கும் என்று நன்றாகவே கற்றறிந்துள்ளனர்.
 32. 1 point
 33. 1 point
  இது என்ன கோதாரி சுமந்திரன் வரப் போகிறார் என்றால் ஏதோ புயல் சூறாவளி வாற மாதிரி வெருட்டுறாங்கள்.
 34. 1 point
  சுமே வாத்தியார் பின்னாலை கலைத்து கலைத்து சொல்லித்தாறார். இருந்தும் இன்னும் முன்னேற இடமுண்டு. முதல்ல நகைக்கடையில வைத்திருக்கிற மாதிரி சின்னனா ஒரு தராசு வாங்குங்க.என்னத்தைப் போட்டாலும்(ஆத்தில போட்டாலும் அளந்து போடணும்)அதன் அளவைக் குறிப்பிடுங்கள். கோழியை போடுங்கோ வெங்காயத்தைப் போடுங்கோ கடுகு சீரகம் போடுங்கோ போடுங்கோ என்றால் எவ்வளவு போடுவது? எதிலுமே கஸ்டப்படாமல் முன்னுக்கு வர முடியாது. யாரும் விருந்துக்கு வரும்போதே கோழி குருடென்றாலும் குழம்பு ருசியாக இருந்தா சரி. இதில அது சரி வராது. லைக்கு போடுறன் போடுறன் மீற்றர் ஏறுதில்லையே?
 35. 1 point
 36. 1 point
  இப்ப தான் கண்ணில பட்டுது! மிக மிக அருமையான முயற்சி! அற்புதமான படைப்பு! நடப்புகளை இயல்பாக படமாக்கியது சிறப்பு! தமிழர்களின் விதம் விதமான பாரம்பரிய சமையல்களை வீடியோ காட்சிகளாக்கி வெளிவிடுவது பாராட்டுகளுக்கு உரியது. தொடர்ந்து 100க் கணக்கான காணொளிகளை நீங்க படைக்க வேணும்.
 37. 1 point
 38. 1 point
  கோழி இறைச்சிக் கறி 1 - Chicken Curry 1
 39. 1 point
 40. 1 point
  நல்ல முன்னேற்றம் தெரியுது. வாழ்த்துக்கள். எண்டாலும் 7.20 நிமிசத்திலயிருந்து மற்றவனை வெறுப்பேத்துற கட்டம் தொடங்குது.அப்பத்தை பிச்சுக்காட்டி.......அதுக்கை முறுமொறுப்பு சத்தம் வேறை......
 41. 1 point
  சமூக வலைத்தளங்களில் சிங்கள சிறிலங்காவும் சீனாவின் ஒரு முகவர் என்றும் சிங்கள சிறிலங்கா இந்தியாவிற்கு எதிரானது என்ற உண்மையை ஆங்கில மற்றும் முடிந்த ஹிந்திய ஊடகங்களிலும் பதியவேண்டும். Sri Lanka too a close ally of China The leaders of Sri Lanka too like Pakistani leaders China has a strong presence in Sri Lanka. Should India worry there too? In the south, in Sri Lanka and Maldives, China has built ports to convert as military installations
 42. 1 point
  இவோ அதிகார மாமி அவோ அரசியல் மாமி ஏதோ ஒரு வகையில் அதிகார மாமிக்கள் தான் Gowin. நன்றி நிலாமதி அக்கா.
 43. 1 point
  பணக்காரர்கள் நினைக்கும் போது சாப்பிடுகிறார்கள் ஏழைகள் கிடைக்கும் போது சாப்பிடுகிறார்கள் ...
 44. 1 point
  அமெரிக்கர்களும் வைரசுக்களே!
 45. 1 point
  ஒரு சக தமிழனாக சாலேம் சுமந்திரனுக்கு வாழ்த்துக்கள். ஆனாலும் இந்த திறமை அவரது தகப்பனாரின் செயல்கள்போல ஆளும்வர்க்கத்தை தூக்கிநிறுத்தவும் பாதுகாக்கவுமே பயன்படப்போகிறது என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை. நான் நினைப்பது பொய்க்குமானால் மிகவும் சந்தோஷமடைவேன்.
 46. 1 point
 47. 1 point
 48. 1 point
 49. 1 point
 50. 1 point
  எங்களை ஏமாத்திப்புட்டீங்களே மைத்திரி மாமா!