• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Leaderboard

  1. nilmini

    nilmini

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      11

    • Content Count

      521


  2. போல்

    போல்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Content Count

      6,134


  3. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Content Count

      18,458


  4. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Content Count

      30,424



Popular Content

Showing content with the highest reputation on ஞாயிறு 21 ஜூன் 2020 in all areas

  1. 6 points
    ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்து அலபாமாவுக்கு கேட்டுது. நான் நினைக்கிறேன் உங்கள் மூட்டு வலிக்கும் தசை வலிக்கும் சம்மதம் இருக்குது எண்டு. உதாரணத்துக்கு Hamstring, Calf muscles போன்ற தசைகள் இறுகுவது முழங்கால் மூட்டு நோகும். நிறைய வாசித்துப்பார்த்தேன். அக்குபஞ்சரினால் பக்க விளைவுகள் இருப்பதாக தெரியவில்லை. மிகவும் வீரியம் கூடிய மருந்துகளை எடுப்பவர்களுக்கு மட்டும் கூடாது. Vitamin C, D, E, கல்சியம் உள்ள உணவுகள் (இவை நாம் அன்றாடம் சாப்பிடும் மீன், பழங்கள், நட்ஸ், மரக்கறி போன்றவற்றில் இருக்கு. வெண்டிக்காய் , பொட்டுக்கடலை நிறைய சாப்பிடுங்கள், சின்ன மீன்கள் நல்லம்) வல்லாரை கிடைத்தால் நல்லம் . Fish oils, Evening Primrose oil. சீனாவில் Tripterygium என்ற மூலிகை மூட்டு வலிகளுக்கு பாவிக்கப்படுகிறது. மூட்டு வலி உடல் நிறை கூடுதல், கல்சியம் குறைபாடு, உடற்பயிற்சி இன்மை, நரம்பு தசை பிடிப்பு, ஹோமோன் மாற்றங்கள், செமிபாடு, வாய்வு இவற்றாலும் வரும் மூட்டுகள் தேய்ந்து போவது என்று அலோபதி வைத்தியம் சொல்ல அக்குபஞ்சர் வைத்தியம் சொல்வது மூட்டுகளுக்கு தேவையான சத்துக்கள் அங்கு போய் சேருவதில்லை என்று. முழங்கால் மூட்டு தான் முதல் தொடக்கம். எது எப்பதோ தொடங்கி பல வருடங்களுக்கு பிறகுதான் வெளிப்படும். சத்துக்கள் போய் சேர ரத்த ஓட்டம் கூட வேண்டும் . மூட்டுகளை அதிகமாக பாவிக்காததால் தான் அதிகம் வருகிறது. சப்பாணி கட்டி இருந்தால் நல்லம். ஒரு காலை கொஞ்சம் உயரத்தில் இருந்தால் நல்லம். இந்தப்படத்தில் இருக்கும் Sciatic nerve போகும் பாதை முன்புறம் பின்புறம் நீடிக்கும் தசைகளை மசாஜ் செய்யவேணும் (விரல்களால் நீவ வேணும்). குப்புற படுத்துக் கொண்டு கால்களை மடித்து நிமிர்த்த வேண்டும். அதேமாதிரி நின்றுகொண்டு முழங்கால் முடியை கையால் பிடித்துக்கொண்டு முழங்காலுக்கு கீழ் காலை மடித்து நிமிர்த்தவேணும். நடு விரலின் நடுவில் இருக்கும் ரேகை பகுதியில் மற்ற கையின் பெருவிரல் மற்றும் நடு விரலால் சுற்றிவர ஒரு நிமிடம் வரை அமுக்கி விடவும். இப்படி இரண்டு ஒருநாளைக்கு முறை செய்யவும். Type 2 Collagen என்ற குளுசையை 6 மாதத்துக்கு எடுத்துப்பார்க்கவும். இது தசை பிடிப்பு மூட்டு நோ இரண்டுக்கும் நன்றாக வேலை செய்வதாக வாசித்தேன் இந்தியாவுக்கு போய் ஒரு மாதம் இருந்து சிகிச்சை செய்ய முடிந்தால் கேரள வைத்தியம் நல்லா வேலை செய்யும். எனது மச்சாள் கேரளா தான். அவவின் அப்பாவை கொண்டு உண்மையான பரம்பரை வைத்தியர் ஒருவரை பார்க்கலாம். இந்த தமிழ் நாட்டு வைத்தியர்களும் நல்லம். Yogam health . செந்தில்ராஜன், இயற்கை மருத்துவமனை, சேலம். அக்குபஞ்சர் பற்றி ஒரு கேள்வி பதில் வாசித்தேன். நிறய விடயங்களை தெரிந்துகொண்டேன். அதனால் அதையும் இந்த பதிவுடன் இணைக்கிறேன். அகுபங்சர் சித்தாந்தம் கூறுகிறது, நமது உடலானது, பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பாகும். இக்கூட்டமைப்பிலான 12 உள் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் தோல் மூலமாக தத்தம் சக்தி நாளங்கள் வழியாக புறச் சூழலில் உள்ள பஞ்ச பூதங்களின் சக்தியை நிலையை சமன்படுத்துகின்றன. ஒவ்வொரு சக்தி நாளத்திலும் உள்ள அகுபங்சர் புள்ளிகள்தாம் இந்த வேலையைச் செய்கின்றன. அந்தப் புள்ளிகளின் வேலை சீர்கெடும்போதுதான் நோய்கள் உருவாகின்றன. உடலில் ஏதேனும் ஒரு பாகத்தில் நோய் தோன்றினாலும், அது உடல் முழுமையையும் தாக்குகிறது. ஒருவர் ஒரு சமயத்தில் எத்தனை கஷ்டங்களைக் கூறினாலும், அதற்குக் காரணம், உடல் உறுப்புக்கள் அனைத்தையும் பிரதிபலிக்கும் 12 அகுபங்சர் சக்தி நாளங்களில் உள்ள அகுபங்சர் புள்ளிகளில் ஒன்றே ஒன்றின் இயக்கக் குறைபாடுதான். அகுபங்சர் நாடிப் பரிசோதனையைப் பற்றி அறியாத பட்சத்தில் தான் குறிப்பிட்ட அகுபங்சர் புள்ளியைத் தேர்ந்தெடுக்க முடியாமல், பத்து கல்லில் ஒரு மாங்காய் அடிக்கும் கதையாக, ஒரே சமயத்தில் பத்து ஊசிகள், பதினைந்து ஊசிகள் என்று போடுகிறார்கள். நாடிப் பரிசோதனை தெரியாததால் அரை மணி நேரம் அல்லது அதற்கு மேலாக ஒவ்வொரு வைத்தியத்தின் போதும் படுக்க வைத்து விடுகின்றனர். வியாதியின் போக்கைக் கணிக்கத் தெரியாமல் போவதால் தொடர்ந்து 7 நாட்கள், 10 நாட்கள், 15 நாட்கள் கொண்டது ஒரு கோர்ஸ் என்று கண்மூடித்தனமாக வைத்தியம் அளிக்கிறார்கள். நமது உடலிலுள்ள 12 சக்தி நாளங்களும்தான் எந்த நோயையும் குணப்படுத்துவதற்கான இரகசியங்களைத் தன்னகத்தே அடக்கியுள்ளன. Dr wu wei-ping “ஒரு நோயாளி ஒரு சமயத்தில் கூறக்கூடிய அனைத்துக் கஷ்டங்களுக்கும் காரணமான ஒரே ஒரு புள்ளியைத் தேர்ந்தெடுத்து, அதன் மூலம் சுகமளிக்க முற்படுபவர் மட்டுமே உண்மையான அகுபங்சர் நிபுணர் ஆவார்.” “அது மட்டுமல்லஅந்தப் புள்ளியின் ரகசியத்தை அறிந்து, ஊசியை அதனுள் செலுத்தும் முறையையும், பின்னர் ஒரு சில நிமிடங்களில் எடுக்கும் முறையையும் கற்றுணர்ந்து தேறாத வரையில் அகுபங்சர் முழுமையான பயனை அளிக்காது. கற்றுத் தேர்ந்து விட்டால் மனித சமுதாயத்திற்கு இதைவிடச் சிறந்த மருத்துவம் என்று ஒன்று இருக்க முடியாது.” சீன மருத்துவத்தில் அகுபங்சர் பெரும்புகழ் வாய்ந்ததாக இருக்கிறது. மற்ற சீன மருத்துவங்கள் நமது இந்திய மருத்துவங்களான சித்தா, யுனானி, ஆயுர்வேதம், வர்மம், இயற்யை வைத்தியம் போன்றவைகளைக் காட்டிலும் சிறந்தது என்று கூற முடியாது. சீன மருந்துகளைக் காட்டிலும் இந்திய மருந்துகள் உலகப் புகழ் பெற்றவையாக விளங்குகிறது. மனிதக் கடிகாரம், ஒரு நாளைக்கு 24 மணி 11 நிமிடங்கள் என்ற அளவுச் சுற்றுப்படி இயங்குகிறது என்று, தற்போதைய அலோபதி ஆராய்ச்சி கூறுகிறது. ஆனால், ஐயாயிரம் ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் அகுபங்சர் வைத்திய சித்தாந்தம், உடலின் உள்ளுறுப்புக்கள் எந்தெந்த நேரத்தில் இயங்கி, ஒரு நாளின் சுற்றை முடிக்கின்றன என வரையறுத்துக் கூறியுள்ளது. பன்னிரெண்டு உள்ளுறுப்புக்களான வயிறு, மண்ணீரல், இருதயம், சிறுகுடல், சிறுநீர்ப்பை, பெருங்குடல், பெரிகார்டியம், உடல் உஷ்ணக் கட்டுப்பாட்டு உறுப்பு, கல்லீரல், நுரையீரல், பித்தநீர்ப்பை, சிறுநீரகங்கள் ஆகிய உறுப்புக்கள் பூரணமாக இயங்கும் நேரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அகுபங்சர் கடிகாரமும் உள்ளுறுப்புக்களின் இயக்கங்களும்! காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை - வயிறு, காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை - மண்ணீரல், காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை - இருதயம், மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை - சிறுகுடல், மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை - சிறுநீர்ப்பை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை - சிறுநீரகம், இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை - பெரிகார்டியம், இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரை ஸ்ரீ உடல் உஷ்ணக் கட்டுப்பாட்டு உறுப்பு இரவு 11 மணி முதல் இரவு 1 மணி வரை - பித்தநீர்ப்பை, இரவு 1 மணி முதல் அதிகாலை 3 மணி வரை - கல்லீரல், அதிகாலை 3 மணி முதல் அதிகாலை 5 மணி வரை - நுரையீரல், அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை - பெருங்குடல். அகுபங்சர் என்றால் என்ன? அகுபங்சர் என்பது மயிரிழையைக் காட்டிலும் மிக மெல்லிய ஓரிரு ஊசிகளைக் கொண்டு உடலில் ஏற்பட்டுள்ள நோய்களைக் களையக் கூடிய மருத்துவ முறையாகும். ஊசிகள் மூலமாக மருந்துகள் எதுவும் செலுத்தப்படுவதில்லை. இந்த மருத்துவத்தில் மருந்துகளுக்கோ, மாத்திரைகளுக்கோ வேலையே கிடையாது. மேலும் நோய் என்ன என்பதைக் கண்டறிய செய்யப்படும் மலம், சிறுநீர், இரத்தப் பரிசோதனை, எக்ஸ்-ரே, பரிசோதனைகளுக்கும் இம்முறையில் அவசியம் இல்லை. அகுபங்சர் வைத்தியத்தில் நோய் இன்னதென்று எவ்வாறு கண்டுபிடிக்கப் படுகிறது? “அகுபங்சர் நாடிப் பரிசோதனை”யின் மூலம் நோயின் தன்மையை ஓரிரு நிமிடங்களில் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். அகுபங்சர் நாடிப் பரிசோதனை எப்போது செய்வீர்கள்? அகுபங்சர் நாடிப் பரிசோதனை விடியற்காலை 8 மணிக்கு முன்பாகப் பார்ப்பது நல்லது. நாடிப் பரிசோதனையின் போது நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஏதேனும் உண்டா? ஆம். நோயாளிகள் முந்திய இரவு வரை எது வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் காலையில் எழுந்தபிறகு எதுவும் சாப்பிடாமல் நாடி பார்ப்பது நல்லது. காலை கடன்களை முடித்துக் கொண்டு, வெறுமனே முகத்தைக் கழுவிக் கொண்டால் போதுமானது. குளிப்பதையும் நாடிப் பரிசோதனைக்குப் பிறகே வைத்துக் கொள்ள வேண்டும். உங்களிடம் வருவதற்கு முன்பாக ஆங்கில வைத்திய முறையில் நிறைய டெஸ்ட்டுகள் அதன் ரிப்போர்ட்டுகள் வைத்திருக்கிறோம். அது உங்களுக்கு உபயோகப்படுமா? கண்டிப்பாக உபயோகப்படாது. அது தேவையுமில்லை. நாடிப் பரிசோதனை செய்த பிறகு எப்போது வைத்தியம் செய்ய ஆரம்பிப்பீர்கள்? நாடிப் பரிசோதனைக்குப் பிறகு வைத்தியம் ஆரம்பிப்பதற்கு முன் ஏதேனும் இலேசான டிபன் எடுத்துக் கொண்ட பிறகு உடனே வைத்தியம் செய்ய ஆரம்பித்து விடலாம். ஒரு சமயத்தில் எத்தனை ஊசி போடுவீர்கள்? ஒன்று அல்லது இரண்டு ஊசிகள்தான் போடப்படும். வலிக்குமா? நிச்சயமாக வலியே இருக்காது. ஊசி போட்ட பிறகு கூட இன்னமும் ஏன் போடவில்லை என்ற எண்ணத்தில்தான் இருப்பீர்கள். அவ்வளவு மென்மையாக இருக்கும். ஊசி போடும்போது தோலில் ஏதோ ஒன்று வைக்கப்படுவது போலத்தான் உணருவீர்கள். ஊசி வைத்ததும் எவ்வளவு நேரம் படுத்திருக்க வேண்டும்? ஊசியைத் தோலில் செருகியதும் அதே இடத்தில் சிறிது நேரம் கழித்து ஏதோ ஒன்று இருப்பது போன்று உணர்ச்சி ஏற்படும். ஓரிரு நிமிடங்களில் வைத்தியம் முடிந்துவிடும். வைத்தியத்தின்போது படுத்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. படுத்திருந்தால் வசதியாக இருக்கும். அவ்வளவுதான். பொதுவாக ஒரு நோய்க்கு வைத்தியம் முடிய எத்தனை நாட்களாகும்? ஓரிரு முறை வைத்தியத்திற்குப் பிறகு நோயின் தீவிரத்திலிருந்து நீங்கள் விடுபடுவதை உணருவீர்கள். 60 சதவீதம் 70 சதவீதம் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்வரை வைத்தியம் மேற்கொண்டாலே போதுமானது. மீதமுள்ள நோயின் தீவிரம் தானே மறைந்துவிடும். எனவே முழுமையாகத் தீரும் வரை வைத்தியம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நோயிலிருந்து குணமடைவது நிச்சயம். எத்தனை நாளில் குணமாகும் என்பதை இன்றைக்கே நிச்சயிக்க முடியாது. தினம், தினம் வைத்தியம் செய்வீர்களா? 15 நாளைக்கு ஒருமுறை வைத்தியம் செய்வது தினமும் வைத்தியம் செய்வதைவிட நல்ல பலனளிக்கும். கண்டிப்பாக 15 நாளைக்கு ஒருமுறை அவசியம் தவறாமல் வைத்தியம் எடுத்துக் கொள்ள வேண்டுமா? ஏதேனும் சந்தர்ப்பத்தால் ஒருமுறை அல்லது இருமுறை வைத்தியம் எடுத்துக் கொள்ளத் தவறிவிட்டால் நோயிலிருந்து குணம் பெற முடியாமல் போய்விடுமா? ஒவ்வொரு முறை செய்யப்படும் வைத்தியமும் நீங்கள் நோயிலிருந்து விடுபட வழிவகுக்கிறது. ஓரிரு முறை சந்தர்ப்ப சூழ்நிலையால், வைத்தியம் தவறி விடுவதால் ஏற்கனவே பார்த்த வைத்தியத்தின் பலன் குறைந்துவிடாது. விடுபட்டுவிட்ட வைத்தியத்திலிருந்து இரண்டு, மூன்று மாதங்கள் கழித்துக்கூட தொடர்ந்து செய்து கொள்ளலாம்.இன்னும் சொல்லப் போனால் ஒரு வைத்தியத்திற்கும், அடுத்த வைத்தியத்திற்கும் நிறைய நாட்கள் இடைவெளி இருப்பது நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். டெஸ்ட்டுகள், பரிசோதனைகள் எதுவும் அவசியம் இல்லை என்கிறீர்கள். இந்த நிலையில் நோய் குணமாகிவிட்டது என்பதை எப்படி அறிந்து கொள்வது? ரொம்பவும் சுலபம். நோயாளி சில கஷ்டங்களைக் கூறுகிறார். கஷ்டங்களும், தொந்தரவுகளும் குறையும்பொழுது, “இப்போது தேவலாம்” என்று அவரே கூறப்போகிறார். இதற்கு மேல் டெஸ்ட்டுகளுக்கும், பரிசோதனைகளுக்கும் அவசியமே இல்லை. ஒரு நோயாளியின் மூளையை மட்டுமே நூற்றுக்கு நூறு நம்ப முடியும். அது என்ன கூறுகிறதோ அதுதான் உண்மை. பரிசோதனைக் கருவிகளையும், டெஸ்ட்டுகளையும் ஒரு நோயாளியின் மூளைக்கு ஈடாகக் கருத முடியாது. சுமார் எத்தனை நாட்களில் குணம் தெரியும்? சிலருக்கு ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே குணம் தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து திடீரென மாறுதல்கள் தெரிய ஆரம்பிக்கும். ஒருமுறை வைத்தியம் செய்தால் அது எத்தனை நாட்களுக்கு வேலை செய்யும்? உடலில் உள்ள நோய்களுக்கு ஏற்றவாறு ஒருமுறை வைத்தியம் செய்வதன் மூலம் பூரண குணம் அடைபவர்களும் உண்டு. ஒரு சிலருக்கு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அத்துடன் நின்றுவிடும். மேலும் முன்னேற்றம் இல்லாத நிலையில் அடுத்த வைத்தியத்தைத் தொடர்வது நல்லது. சில வைத்தியங்களில் நோய் அதிகமாகிப் பிறகு குறையும் என்கிறார்களே? இந்த வைத்தியத்திலும் அப்படி ஏதாவது உண்டா? நூற்றுக்கு 2 அல்லது 3 பேருக்கு ஏற்கனவே இருக்கும் தொந்தரவுகள் சற்று அதிகமாகலாம். இது கவலைக்குரிய விஷயமல்ல. ஆம், ஒரு சிலரின் உடல்வாகுக்கு ஏற்ப முதலில் தொந்தரவுகள் தற்காலிகமாக அதிகமாகி, சீக்கிரமாகவே தொந்தரவுகள் வெகுவாக குணமடைய ஆரம்பிக்கும். ஏற்கனவே இருக்கும் தொந்தரவுகள் அதிகமாகுதல் ஒரு நல்ல அறிகுறியே. உங்களிடம் வருவதற்கு முன் எல்லோரும் மாத்திரை, மருந்துகள் சாப்பிட்டு வருபவர்கள்தாம். அகுபங்சர் வைத்தியம் தொடங்கிய பிறகும் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாமா? மருந்து, மாத்திரைகள் நிறுத்திவிடுவது நல்லது. ஆனால் நீண்ட காலம் மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டுப் பழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்குப் படிப்படியாக, சிறிது சிறிதாக, வைத்தியம் ஆரம்பித்த ஒரு மாதத்திற்குள் நிறுத்திவிடலாம். மருந்து, மாத்திரைகள் நோயின் தொந்தரவுகள் நம் மூளையையும், நரம்பு மண்டலத்தையும் எட்டாதவாறு செய்கின்றன. மற்றபடி நோயைக் குறைப்பதில்லை. நோயானது அதன் போக்கில் வளர்ந்து கொண்டேதான் போகிறது. எனவே மாத்திரைகளை நிறுத்தி விடுவதனால் எந்தப் பாதககும் இல்லை. நன்மையே. உண்மையான நோயின் தன்மையையாவது உணர்ந்து கொள்ள முடியும். சில சமயங்களில் நோயின் தொந்தரவுகள் அதிகமானால் தேவையான மாத்திரைகள் சாப்பிட்டுக் கொள்ளலாமா? தாராளமாக. ஆவசியம் ஏற்பட்டால் தற்காலிகமாக எடுத்துக் கொள்ளலாம். கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை. முன்பு போல மாத்திரைகளை வேளா வேளைக்குக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அகுபங்சர் வைத்தியத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய பத்தியங்கள் ஏதேனும் உண்டா? பத்தியங்கள் என்று எதுவும் கிடையாது. அகுபங்சர் வைத்தியத்தால் பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா? ஒரே ஒரு விளைவுதான் ஏற்படும். அது நோயிலிருந்து குணமாகும் நல்ல விளைவு ஒன்றுதான். பக்க விளைவுகள் ஏற்பட சாத்தியமே கிடையாது. 6 அல்லது 8 முறைக்கு மேல் வைத்தியம் மேற்கொண்ட பிறகும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை என்று கூறுபவர்களுக்கு இந்த முறை வேலை செய்யவில்லை அல்லது வேலை செய்கிறது என்று கருதலாமா? மிகச் சிலருக்கே இந்த நிலை ஏற்படுகிறது. உடலில் சக்தி நிலை (நோய் எதிர்ப்புச் சக்தி) மிகக் குறைவாக இருப்பவர்களுக்கு வைத்தியம் பிடிபட சில மாதங்கள் ஆகி விடுகின்றன. நிச்சயமாக அகுபங்சர் இவர்களுக்கு வேலை செய்யும். அவர்களை அறியாமலேயே திடீரென்று நோய்களிலிருந்து விடுதலை பெறுவார்கள். அகுபங்சர் வைத்தியம் மேற்கொண்டிருக்கும் போது திடீரென்று காய்ச்சல், பேதி என்று ஏதேனும் வந்தால் மாத்திரை, மருந்துகள் எடுத்துக் கொள்ளலாமா? கவலைப்படாமல் எடுத்துக் கொள்ளுங்கள். சரியானதும் நிறுத்தி விடுங்கள். ஒரு கோர்ஸ் மாத்திரைகளை சாப்பிட்டே ஆகவேண்டும் என்று கட்டாயமில்லை. மறுமுறை அகுபங்சர் வைத்தியத்தின் போது சாப்பிட்ட மருந்துகளினால் ஏற்படும் பாதிப்புக்களை நீக்கி விடலாம். எந்தவிதமான நோய்களை அகுபங்சர் முறையில் குணப்படுத்தலாம்? அகுபங்சர் சித்தாந்தப்படி குணப்படுத்த முடியாத நோய் என்று ஒன்று கிடையாது. அகுபங்சர் வைத்தியத்தில் அதற்கான சாத்தியக் கூறுகள் முழுமையாக உள்ளன. கண்கள் சம்பந்தமான நோய்கள், இருதயம் சம்பந்தமான நோய்கள், தலைவலி, சிறுநீரகக் கோளாறுகள், சளி, சைனஸ், நுரையீரல் சம்பந்தமான நோய்கள், வாய்வு, வயிற்றில் புண், குடல் பூச்சிகள் போன்ற வியாதிகள் இன்னும் என்ன என்ன வியாதிகள் உண்டோ அத்தனைக்கும் அகுபங்சர் மருத்துவத்தில் குணப்படுத்துவதற்கு வழி இருக்கிறது. குறிப்பாக எந்த வயதினர் இந்த சிகிச்சையினால் பலன் பெற முடியும்? பிறந்த குழந்தை முதல், முதியோர் வரையில் எந்த வயதினருக்கும் இந்த சிகிச்சை பலனளிக்கும். குழந்தைகளுக்குப் பொதுவாக மஸாஜ் செய்வது ஒன்றே போதுமானது. அவர்களுக்கு ஊசி வைக்கவேண்டிய அவசியமில்லை. அகுபங்சர் வைத்தியத்தில் அழகுபடுத்தக் கூடிய வைத்தியமும் செய்வதாக கூறுகிறீர்களே? அழகுபடுத்துதல் முறையில் என்னென்ன செய்கிறீர்கள்? முகத்தில் அதிகமாக சுருக்கங்கள் விழுவது, சிறு வயதினருக்கு அதிகமாக முடி கொட்டுதல், அதிகமான வியர்வை வெளியேறுதல், உடல் பருமனாதல், வியர்வையில் துர்நாற்றம் உண்டாகுதல், பருக்கள் அதிகமாக ஏற்படுதல், தோல் நோய்கள், வியர்க்குரு ஏற்படுதல், வெய்யிலில் சென்றால் தோல் கறுத்துப் போதல், முகத்தில் திட்டு திட்டாக கருமை படர்தல், படர்தாமரை, தேமல், கன்னங்கள் ஒட்டிப்போய் இருத்தல், அக்குள் பகுதியில் அதிகமாக வியர்த்தல், உள்ளங்கை, உள்ளங்கால் அதிகமாக வியர்த்தல், தலைப்பொடுகு, வெள்ளைப்படுதல் ஆகியவைகளும் மேலும் இதில் விட்டுப் போனவைகளும் இதில் அடங்கும். நோயாளி ஒருவருக்கு 10 குறைகள் உள்ளன. ஆனால் அவர் 5ஐ மட்டுமே கூறுகிறார். அவர் சொல்ல மறந்த உபாதைகளும் குணமாகுமா? அகுபங்சர் நாடிப் பரிசோதனையின் சிறப்பம்சமே இதுதான். நீங்கள் சொன்ன கஷ்டங்கள் மட்டுமல்லாமல் மறந்த கஷ்டங்களும் சேர்ந்தே குணமாகின்றன. அது மட்டுமல்லாமல் நீங்கள் உணர முடியாத, வரப்போகும் நோய்களும் இன்றே தவிர்க்கப்படுகின்றன. உதாரணமாக குடும்பத்தில் இரத்த அழுத்தம், கண்ணாடி அணிதல், ஒற்றைத் தலைவலி போன்றவைகள் குடும்ப நோயாக இருக்கும். இதை வரவிடாமல் முளையிலேயே கிள்ளி எறிந்துவிட முடியும். இந்த வைத்தியத்தின் சிறப்பம்சம் என்ன? ஒருவர் கூறும் கஷ்டங்களை வைத்தே நோயின் தன்மையை ஓரளவு அறிந்து கொள்ள முடியும்.சிறிய தொந்தரவோ, பெரிய கஷ்டங்களோ அவ்வளவுக்கும் அகுபங்சர் முறையில் தெளிவான அர்த்தம் உண்டு. உதாரணமாக ஒருவனைப் பார்த்து, “அவன் படு சோம்பேறி” என்று யாரேனும் கூறினால் அதற்கு அர்த்தம், யார் திட்டினாலும், அடித்தாலும் அவன் சோம்பேறியாகத்தான் இருக்க விரும்புகிறான் என்பதல்ல. அவன் உழைக்க ஆசைப்பட்டாலும் அவன் உடம்பில் உள்ள சக்தியின்மை அவனை உழைக்க விடாமல் செய்கிறது. அகுபங்சர், சக்தியை அடிப்படையாகக் கொண்டிருக்கும் ஒரு வைத்திய முறை உடலில் சக்தி நிலையில் மாற்றங்கள் ஏற்படும்போது தான் நோய் உருவாக ஆரம்பிக்கிறது. நோயில் இந்த ஆரம்ப நிலையில் ஏற்படும் தொந்தரவுகளை இங்கே பார்ப்போம். 1. அதிகப்படியான தூக்கம். 2. தூக்கத்தின்போது அடிக்கடி கனவுகள். 3. தூங்கி எழும்போது சுறுசுறுப்பின்மை. 4. அசதி, தூங்கவேண்டும்போல் இருக்கும். ஆனால் படுத்தால் தூக்கம் வராது. 5. சிறு சத்தமும் தூக்கத்தைக் கலைத்துவிடும். 6. தூக்கத்தின் நடுவில் விழித்துவிட்டால் திரும்ப தூக்கம் வராது. 7. தூங்கி எழுந்ததும் தலைவலி. 8. பசியில்லாமை. 9. கொஞ்சம், கொஞ்சமாக அடிக்கடி பசி எடுத்துக்கொண்டே இருக்கும். 10. சாப்பிட்டதும் வயிறு அடைத்தது போன்றிருத்தல். 11. சாப்பிட்டதும் வயிற்றில் கல்லைப் போட்டது போன்ற உணர்வு. 12. சாப்பிட்டதும் மலஜலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு. 13. சாப்பிட்டதும் தூக்கம் வருதல். -போன்ற இவை ஆரம்ப கால நோயின் அறிகுறிகள். இவை இன்றே தீர்க்கப்பட வேண்டும். இல்லையெனில் 5 அல்லது 10 வருடங்களில் குறிப்பிட்ட உறுப்பில் நோயானது வளர்ந்துவிடக் கூடும். அகுபங்சர் முறையின் சிறப்பம்சம் என்னவெனில் நோயின் ஆரம்ப நிலையிலேயே அதனைக் களைந்துவிட முடியும். நோய் முற்றிவிட்ட நிலையிலும் வேரோடு குணப்படுத்த முடியும். இது ஒரு முழுமையான வைத்திய முறை. மனநோய்களைக் குணப்படுத்த முடியுமா? மனநோய்கள் மூளை சம்பந்தப்பட்டதல்ல. நன்றாக பசித்திருக்கும் ஒருவருக்கு சாப்பிடுவதற்கு முன் துயரமான செய்தி ஒன்று சொல்லப்படுகிறது. உடனே பசி அடங்கி விடுகிறது. மற்ற உறுப்புக்களான நுரையீரல், இருதயம், சிறுநீரகம் போன்ற அனைத்து உறுப்புக்களும் வேலை செய்தவண்ணம் இருக்கும்போது வயிற்றின் இயக்கம் மட்டும் முழுமையாக அடங்கி விடுகிறது. அதாவது துக்கம், கவலை போன்ற மனக்கஷ்டம் வயிற்றின் இயக்கக் குறைவினால் ஏற்படுகிறது. இவ்வாறு ஒருவரின் மனநிலையை வைத்தே அவருடைய நோயின் இருப்பிடத்தை அறிய முடியும். அந்த உறுப்புக்குத் தேவையான சக்தியை அளித்து மீண்டும் பாதிப்புக்குள்ளான உறுப்பை பழைய நிலையில் இயங்க வைப்பதன் மூலம் மனக் கஷ்டங்களைக் குணப்படுத்த முடியும். மன நோய்கள் மூளை சம்பந்தப்பட்டதல்ல.உடல் உறுப்புக்களில் சக்தி குறையும்போது மன நிலையில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. இதுவே ஒரு நோயின் ஆரம்ப நிலை. இந்த நிலையிலேயே பிற்காலத்தில் ஒரு உறுப்பில் ஏற்படக் கூடிய நோயை இன்றே தவிர்த்துவிட முடியும். இது அகுபங்சர் மருத்துவத்தின் இன்னுமொரு சிறப்பம்சம். முதன்முதலாக உங்களுக்கு எப்போது ஆங்கில மருத்துவத்தில் அதிருப்தி ஏற்பட்டது? எம்.பி.பி.எஸ். மூன்றாவது ஆண்டில் “பார்மகாலஜி” அதாவது அனைத்து மருந்து, மாத்திரைகள் சம்பந்தப்பட்ட படிப்பு. அதில் முதலாவது பாடம், ~மருத்துவத் துறையின் தந்தை| என்றழைக்கப்படும் ஹிப்போக்ரேட்டிஸ்-ஐப் பற்றியதாகும். அவர் நமக்குக் கூறும் அறிவுரைகளில் மிகவும் முக்கியமானது – “நீங்கள் வைத்தியம் பார்க்கும்போது வைத்தியம் பலனளிக்காமல் போனாலும் பரவாயில்லை@ நோயாளியின் கஷ்டத்தை அதிகமாக்கி விடாதீர்கள்” என்பதே. ஆனால் நாங்கள் படித்ததோ அதற்கு நேர் மாற்றமானது. பக்க விளைவுகள் இல்லாத மருந்தே கிடையாது. ஒவ்வொரு மருந்தும் பலவிதமான கஷ்டங்களைக் கொடுக்கக் கூடியதாக உள்ளது. ஆங்கில மருத்துவத்தின் உண்மையான இந்த நிலையைக் கண்கூடாகப் பார்த்த பின்பே அதன்மீது அதிருப்தி ஏற்படத் துவங்கியது. துவங்கியது என்றால்? ஆம், இது அதிருப்தியின் ஆரம்பம்தான். ஆங்கில மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகும். இவை மேலும் மேலும் அதிருப்தியை அதிகமாக்கியது. கொஞ்சம் விளக்கமாகக் கூறமுடியுமா? முதலாவது (தத்துவம்) நமது உடம்பில் பாக்டீரியாக்கள் (கிருமிகள்) எப்போதும் இருக்கின்றன. அவை நமது உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அளித்து நமக்கு நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது என்பதாகும். இரண்டாவது (தத்துவம்) கிருமிகள் (பாக்டீரியாக்கள்) தான் நோய்களுக்குக் காரணம். நோய்களிலிருந்து நிவாரணம் பெற பாக்டீரியாக் கொல்லி மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கும் மேலே சொன்ன முதலாவது, இரண்டாவது தத்துவங்களை மீண்டும் படித்துப் பாருங்கள். மருத்துவப் படிப்பு இறுதி ஆண்டில்தான் எப்படி ஒரு நோயைக் கண்டுபிடிப்பது என்பதைச் சொல்லிக் கொடுப்பார்கள். எப்படி என்றால் ஒரு நோயாளி தான் அனுபவிக்கும் கஷ்டங்களைக் கூறுகிறார். அந்தக் கூற்றை வைத்து அவருடைய நோயை அறிவுப+ர்வமாக உணரக்கூடாது. மாறாக நோயைப் பார்த்த பிறகே நோயாளியின் கூற்றை நம்ப வேண்டும். அதுதான் விஞ்ஞான பூர்வமானது என்று கூறுகிறது ஆங்கில மருத்துவ முறை. அதாவது “நோய் உருவாவதைத் தவிர்ப்பது, நோய் உருவானபின் குணப்படுத்த முயலுவதைக் காட்டிலும் சிறந்தது” என்பது உலகறிந்த உண்மை. நோயின் ஆரம்பம் தெரியாமல் ஒரு நோயினைத் தவிர்க்கவும் முடியாது@ குணமாக்கவும் முடியாது. நோயின் ஆரம்பத்தை ஒருவர் தன் அறிவாற்றலைக் கொண்டு ஊகித்து உணரத்தான் முடியுமே தவிர, பரிசோதனைக் கருவிகளின் உதவியைக் கொண்டு பார்க்கவும் முடியாது@ கண்டுபிடிக்கவும் முடியாது. ஆங்கில மருத்துவம் நோயைக் கண்கூடாகப் பார்த்த பின்பு தான் நம்ப வேண்டும் என்கிறது. ஆனால் அகுபங்சர் மருத்துவ முறை கூறுகிறது, பரிசோதனைக் கருவிகளின் உதவியைக் கொண்டு நீங்கள் பார்ப்பது, கண்டுபிடிப்பது அனைத்தும் நோயின் விளைவுகளைத்தான். காரணம், நோயைப் பார்க்க முடியாது. உதாரணமாக முழங்கால் வலிக்கிறது என்று சொன்னால் உடலில் வேறொரு இடத்தில் உள்ள நோயின் விளைவுதான் முழங்காலில் வலியாகத் தெரிகிறதே தவிர, முழங்காலிலேயேதான் நோயும் இருக்கிறது என்பது தவறு. ஆனால், ஆங்கில மருத்துவம், தவறான இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகிறது. இதன் காரணமாகத்தான் எந்த ஒரு விளைவையும், அது உடலில் எந்தப் பாகத்திலுள்ள வலியாகட்டும்@ தலைவலியாகட்டும், சைனஸ் வலியாகட்டும், அல்லது உடல் உறுப்புக்கள் சம்பந்தமான விளைவுகளாகட்டும் (உதாரணமாக இரத்தக் கொதிப்பு, டயாபடீஸ், சிறுநீரகக் கோளாறு, வயிற்றுத் தொந்தரவுகள்) எதனையுமே ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடிவதில்லை. ஆக, மொத்தத்தில் நோயைப் பார்ப்பதாக எண்ணிக் கொண்டு அதன் விளைவுகளைத்தான் பரிசோதனைக் கருவிகள் மூலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதிலேயே தன் முழு நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறது, ஆங்கில மருத்துவம். நோயானது அதன் தீவிரத்தில் வளர்ந்துகொண்டு போகும்போது அதன் விளைவுகளும் தீவிரமடைகிறது. இதனால்தான் மருந்துகள் மூலமாக நோயின் விளைவுகளைக் கட்டுப்படுத்தவோ, குணப்படுத்தவோ முடிவதில்லை. ஆங்கில மருத்துவம் விஞ்ஞான ரீதியாக வெகுவேகமாக முன்னேறி வருவதாகக் கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன? இதற்குப் பதிலாக ஒரு சிறிய உதாரணத்தை மட்டும் கூறினால் போதுமானது. நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். ஒரு குறிப்பிட்ட நோயைக் குணப்படுத்த முன்பு 10 நாட்கள் தேவைப்பட்டன. இன்று இரண்டு நாட்களில் குணப்படுத்த முடிகிறதென்றால் அது முன்னேற்றம். இப்போது முன்பைக் காட்டிலும் குறைவான அளவே மருந்து, மாத்திரைகள் தேவைப்படுகின்றன என்றால் அது முன்னேற்றம். முன்பெல்லாம் ஒரு நோயைக் கண்டுபிடிக்க நிறைய டெஸ்ட்டுகள், பரிசோதனைகள் எல்லாம் தேவைப்பட்டன. இப்போது இந்தத் தேவைகள் எல்லாம் குறைந்துவிட்டன என்றால் அது அறிவுபூர்வமான முன்னேற்றம்@ முன்பு மருந்து மாத்திரைகளுக்குப் பக்க விளைவுகள் ஏற்பட்டன. இன்று அந்தக் குறைகள் நீக்கப்பட்டு விட்டன என்றால், அது விஞ்ஞான பூர்வமான முன்னேற்றம் என நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கண்கூடாக நாம் பார்க்கும் இன்றுள்ள நிலை நேர் மாற்றமானது. நோய் என்றால் என்ன? நோயின் விளைவுகள் என்றால் என்ன? கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா? உடல் உழைப்புக்குத் தேவை சக்தி என்பது எல்லோருக்கும் தெரியும். சக்தியின் அளவு உடலில் குறையும்போது உறுப்புக்கள் சோர்வடைகின்றன. இது நோயின் முதல் நிலை. உடலில் பல்வேறு உறுப்புக்களின் இயங்கும் திறன் குறையும்போது, உடலும் சோர்வடைகிறது. சோம்பேறித்தனம் தோன்ற ஆரம்பிக்கிறது. இதுவே நோயின் ஆரம்பநிலை. நோயின் தன்மை இவ்வாறு உடல் முழுமையையும் வியாபிக்கிறது. இந்நிலையில் நோயை ஒட்டுமொத்தமாக முழுமையாகத்தான் உணர முடியும். பரிசோதனைக் கருவிகளைக் கொண்டு பார்த்து கண்டுபிடிக்க முடியாது. உடலில் ஏற்பட்டுள்ள சோர்வின் காரணமாக உடலில் உள்ள உறுப்புக்கள் தத்தம் வேலைகளைச் சீராகச் செய்ய முடிவதில்லை. வயிறு மற்றும் ஜீரண உறுப்புக்களின் வேலைகளில் குறைபாடு ஏற்படும்போது, உணவிலிருந்து ஜீரணித்து கிரகிக்கப்படும் சக்தியிலும் குறைபாடு ஏற்படுகிறது. இதனை உடல் உழைப்புக் “கேடான சக்தி”யாகவும் கொள்ளலாம். இந்தக் கெட்ட சக்தி (னுளைநயளந குழசஉந) உடல் முழுமையிலும் பரவுகிறது. இது நோயின் இரண்டாம் நிலை. ஒவ்வொரு மனிதனிடத்திலும் பிறவியிலேயே பலவீனமான உறுப்புக்கள் சில இருக்கும். நல்ல சக்தியானது கிடைத்துக் கொண்டிருக்கும் வரையில் இவ்வுறுப்புக்கள் ஓரளவுக்குக் கெட்டுப் போகாமல் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் ~கெட்ட சக்தி|யானது இவ்வுறுப்புக்களை அடையும்போது இவ்வுறுப்புக்கள் சேதமடையத் துவங்குகின்றன. இந்த நிலைதான் “நோயின் விளைவுகளை”த் தோற்றுவிக்கும் கடைசி நிலையாகும். இந்த கடைசி நிலையில்தான் ஒரு நோயாளி ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக் காட்டுகிறார். அங்கு ஏதோ தொந்தரவு இருப்பதாகக் கூறுகிறார். உடனே, ஆங்கில மருத்துவம் அந்த இடத்தில் பரிசோதனைக் கருவிகள் மூலமாக சேதமடைந்த உறுப்புக்களைப் பார்த்துவிட்டு “நோயை” கண்டுபிடித்து விட்டோம் என்கிறது. உண்மையில் அவர்கள் பார்ப்பது நோயின் விளைவுகளைத்தான். நோயின் விளைவுகளுக்குக் காரணமான, உடலில் வியாபித்து நிற்கும் ~கெட்ட சக்தி|யின் தன்மையினை உணர்ந்தறிந்து, அதை நீக்கும் வழியறியாத வரையில் நோயாளியின் எந்த ஒரு கஷ்டத்தையும் தீர்க்க முடியாது. இதுதான் ஆங்கில மருத்துவத்தின் உண்மையான இன்றைய நிலை. அறுவை சிகிச்சையைப் பற்றி உங்கள் கருத்து என்ன? இந்தப் பிரிவின் வளர்ச்சி பாராட்டுக்குரியது அல்லவா? ஒரு உறுப்பில் நோயின் விளைவுகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. நோய் இன்னதென்று புரியாத நிலையில், அவ்வுறுப்பில் நோயின் விளைவுகள் தீவிரமடைந்து அவ்வுறுப்பை நாளடைவில் சேதப்படுத்துகிறது. இந்த நிலையில்தான் பரிசோதனைக் கருவிகளும் ~ஸ்கேனர்| போன்ற ~டெஸ்ட்டுகளும்| சேதமடைந்த பகுதிகளை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இப்போது சேதமடைந்து விட்ட பகுதியை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடுகிறார்கள். ஒரு உறுப்பில் ஏற்பட்டுள்ள நோயை நீக்க டாக்டரிடம் சென்றால் அந்த உறுப்பையே அகற்றி விடுவார்கள். உதாரணமாக, ஒரு சிறுவனுக்கு தொண்டையில் சளியும், ~டான்ஸில்ஸ்| வலியும் ஏற்படுகிறது. ~டான்ஸில்|ஸை நீக்கிவிடலாம் என்கிறார்கள். முழங்காலில் வலி என்று போனால் பல வருடங்கள் வைத்தியம் பார்த்த பிறகு “உங்களுக்கு மூட்டு தேய்ந்து விட்டது. அந்த மூட்டை நீக்கி வேறு மூட்டு பொருத்த வேண்டும்” என்று கூறி விடுகிறார்கள். சாதாரண வாய்வுத் தொல்லையைக் கூட குணப்படுத்த முடிவதில்லை. வயிற்றில் புண்ணாக (ரடஉநச) மாறிய பிறகு வெட்டியெடுத்து விடுகிறார்கள். ~அப்பென்டிஸைட்டிஸ்| என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அது திடீரென ஏற்படுவதில்லை. பல வருடங்கள் லேசான வலி அடி வயிற்றில் வந்து வந்து போகும். அது முற்றிய பிறகு ~எமர்ஜன்சி ஆபரேஷன்| செய்து விடுகிறார்கள். பெண்களுக்கு கர்ப்பப்பைக் கோளாற்றை சீர்செய்ய வழி தெரியாமல் கர்ப்பப் பையையே ஆபரேஷன் மூலமாக அகற்றி விடுகிறார்கள். இவ்வளவுக்குப் பிறகு நோயைக் குணப்படுத்தி விட்டோம் என்று கூறுகிறார்கள். ஒரு உறுப்பையே உடலைவிட்டு நீக்கிய பிறகு, உறுப்பிலுள்ள நோயைக் குணமாக்கி விட்டோம் (நோயாளியை குணப்படுத்தி விட்டோம்) என்ற பேச்சுக்கே இடமில்லை. மாறாக, நோயின் தீவிரம் உடலிலேயே தங்கி விடுகிறது. இன்னும் உடலிலுள்ள பிற உறுப்புக்களையும் வெகுவேகமாக பாதிக்க ஆரம்பிக்கிறது. ஒரு நோயின் விளைவுகளுக்குக் காரணம் தெரியவில்லை என்றால் அதைத் தவிர்க்கவும் முடியாதல்லவா? கண்டிப்பாக முடியாது. அப்படியானால் முத்தடுப்பு ஊசி, போலியோ, டிஃப்தீரியா, டெட்டனஸ் போன்ற வியாதிகளுக்குச் சொட்டு மருந்து போடுகிறார்களே? அது இளம்பிள்ளை வாதம், தொண்டையடைப்பான் நோய் போன்றவை வராமல் நம்மைக் காப்பாற்றத்தானே செய்கிறது? சொட்டு மருந்து, முத்தடுப்பு ஊசி போன்றவை ஹோமியோபதி மருத்துவ சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. மற்றபடி இது ஆங்கில மருத்துவ தத்துவத்தின் அணுகுமுறையல்ல. எய்ட்ஸ் போன்ற வியாதிகளுக்கு நிறைய ஆராய்ச்சிகள் செய்து வருகிறார்களே? ஆராய்ச்சிகள் செய்யட்டும். வரவேற்க வேண்டும். ~வைரஸ்| என்ற நுண்ணிய கிருமிதான் இதற்குக் காரணம் என்று சொல்கிறார்கள். அதுபோன்றே, ரொம்பவும் பலவீனமான வேறொரு சாதாரண ~வைரஸ்|தான் ஜலதோஷம், தும்மல், சளி போன்றவற்றையும் ஏற்படுத்துகிறது. இந்த சாதாரண, பலவீனமான வைரஸ் நோய்க்கே மருந்து, மாத்திரைகள் கண்டுபிடித்த பாடில்லை. ஆங்கில மருத்துவ ஆராய்ச்சிகள் பாதை மாறிச் சென்று கொண்டிருக்கிறது. மற்ற மருத்துவங்கள் உதாரணமாக சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவம் போன்றவை ~எய்ட்ஸ்| நோயைக் குணப்படுத்த முடியும் என்று தைரியமாகக் கூறும்போது, ஆங்கில மருத்துவம் இத்தனை வருடங்களில் இறந்து விடுவார் என்று ஆரூடம் கூறுகிறது. ஆங்கில மருத்துவத்தின் திசை மாறிப் போய்விட்ட ஆராய்ச்சிகள், எய்ட்ஸ் நோயாளியைக் குணமாக்க முடியும் என்ற நம்பிக்கையை இவர்களுக்குத் துளியளவும் அளிக்கவில்லை. மற்ற மருத்துவங்கள் இந்நோயைக் குணமாக்க முடியும் என்று தைரியமாகக் கூறுகின்றன. இம்மருத்துவங்கள் எந்த முறையில் ~எய்ட்ஸ்| நோயை அணுகுகிறது? பாக்டீரியாக்கள் தாம் நமது உடலில் ~நோய் எதிர்ப்புச் சக்தி|யை உருவாக்குகிறது, வளர்க்கிறது, உறுதிப்படுத்துகிறது. ~பாக்டீரியாக் கொல்லி|கள் உடலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து விடுகிறது. இதன் காரணமாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறது. நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போது எந்த நோய் வேண்டுமானாலும் உருவாகலாம். இதுதான் ஒரு நோய்க்கு அடிப்படை. அது கான்ஸர் ஆகட்டும், எய்ட்ஸ் ஆகட்டும். நோய்க்குப் பெயர் முக்கியமல்ல. காரணம்தான் முக்கியம். இதே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும்போது அல்லது உறுதிப்படுத்தும்போது, உடலில் எந்த நோயாகட்டும், அது எங்கிருந்தாலும் குணமாகத்தான் வேண்டும் என்பது நியதி. “நோய் எதிர்ப்பு சக்தி”யை உருவாக்குவதிலும், புதுப்பிப்பதிலும், உறுதிப்படுத்துவதிலும்தான் மற்ற மருத்துவங்கள் பலவாறாகச் செயல்பட்டு வருகின்றன. எனவேதான் இம் மருத்துவங்கள் குணமாக்க முடியும் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றன. தைராய்டு, டயாபிடீஸ் (நீரிழிவு நோய்) போன்றவற்றை ஆங்கில மருத்துவ முறையில் மட்டும்தானே கவனிக்க முடிகிறது? கவனிக்க மட்டும் தானே முடிகிறது? ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்திவிட்டதாக சரித்திரமே கிடையாதே. காரணம் என்ன? தைராய்டு, ~பான்க்கிரியாஸ்| போன்றவை உடலிலுள்ள சில உறுப்புக்கள். எந்த ஒரு உறுப்பும் வேலை செய்யவில்லை என்றால் அதற்குத் தேவையான சக்தி அவ்வுறுப்பினுள் இல்லை என்பதுதான் பொருள். டாக்டர் என்ற முறையில் நாம் செய்ய வேண்டியது அவ்வுறுப்புக்களுக்கு தேவையான சக்தியை அளித்து அதன் வேலையைப் புதுப்பிப்பது ஒன்றுதான். அத்துடன் தைராய்டு சம்பந்தமான நோயாகட்டும், அல்லது வேறு எந்தவிதமான நோயாகட்டும் நோய் நீங்குவது நிச்சயம். சக்தியை அடிப்படையாகக் கொண்ட மருத்துவங்களில் ஹோமியோபதியும், அகுபங்சரும் மிகச் சிறந்தவையாகும். சக்தியை அடிப்படையாகக் கொண்ட மருத்துவம் ஹோமியோபதியும், அகுபங்சரும் என்றால் நீங்கள் ஏன் இரண்டையும் கற்கவில்லை? இரண்டையும் தான் கற்றிருக்கிறோம். இன்னும் இவை இரண்டும் ஒரு நோயைத் தீர்ப்பதில் ஒன்றுக்கொன்று இணக்கமாகச் செயல்படுகிறது. இவை இரண்டில் ஏதேனும் ஒன்றைக் கற்பதைக் காட்டிலும், இரண்டையும் சேர்ந்தே கற்பதே சிறந்தது. பிறகு ஏன் நீங்கள் அகுபங்சர் வைத்தியத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து வைத்தியம் புரிகிறீர்கள்? ஹோமியோபதிக்கும், அகுபங்சர் வைத்தியத்திற்குமுள்ள ஒரே ஒரு வித்தியாசம் இதுதான். ஹோமியோபதி வைத்தியம் செய்ய வேண்டுமென்றால் நோயாளிக்குத் தெரிந்த தொந்தரவுகள் இருக்க வேண்டும். ஆனால் அகுபங்சர் வைத்தியத்தில் இந்த தொந்தரவுகள் ஏற்படும் முன்னமேயே, அகுபங்சர் நாடிப் பரிசோதனையின் மூலம் அறிந்து தொந்தரவுகள் உருவாவதற்கு முன் அவற்றை நீக்கிவிட முடியும். ஹோமியோபதியைக் காட்டிலும், அகுபங்சர் ஒரு படி மேல். அவ்வளவுதான். நோயாளிகள் அனைவருக்கும் ஹோமியோபதி மருந்தையும் சேர்த்துக் கொடுப்பது அவசியம்தானே? ஆறு, அல்லது 12 வைத்தியத்திற்குப் பிறகும் ஓரிருவருக்கு உடல் நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியாது. அப்படிப்பட்ட நோயாளிக்கு மட்டும் ஹோமியோபதி மருந்தைச் சேர்த்துக் கொடுப்பதன் மூலம் நல்ல முன்னேற்றத்தைக் காணமுடியும். முன்னேற்றம் ஏற்பட்டவுடன் மருந்தை முற்றிலும் நிறுத்தி விடலாம். நூற்றில் ஓரிருவருக்கே இந்த நிலை ஏற்படுகிறது. அதற்குக் காரணம் பலமுறை மருந்துகளை (அல்) யுவெiடிழைவiஉள பல வருடங்களாக தொடர்ந்து சாப்பிட்ட நிலையில் இருந்தாலும், பிறவியிலேயே மிகவும் சக்தி குறைந்த நிலையில் இருப்பவர்களுக்கும் அளவுக்கு அதிகமாக சக்தியை விரயம் செய்தவர்களுக்கும் இந்த நிலை ஏற்படலாம். மற்றபடி யாருக்கும் ஹோமியோபதி மருந்துகள் கொடுப்பது கிடையாது@ தேவையுமில்லை. அகுபங்சர் வைத்தியம் ஒன்றே போதுமானது. அகுபங்சர் நாடிப் பரிசோதனையில் நீங்கள் நோயின் தன்மையினை எப்படி அறிந்து கொள்கிறீர்கள்? நமது உடலில் மிக மிக முக்கியமான உறுப்புகள் 12 உள்ளன. அவையாவன: வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, பித்தநீர்ப்பை, சிறுகுடல், நுரையீரல், பெருங்குடல், பெரிகார்டியம் , இருதயம் போன்றவை. இவை ஒவ்வொன்றிலும் அவற்றின் இயக்கத்திற்குத் தேவையான சக்தி (நுநெசபல) இருக்கிறதா? எந்த உறுப்பில் சக்தியானது அதிகமாகத் தேங்கி நிற்கிறது? இதன் காரணமாக எந்த உறுப்புக்குச் சக்தியானது குறைவாகச் செல்கிறது? அதைச் சீர்செய்ய என்ன செய்ய வேண்டும் என்ற முழு விவரத்தையும் அறிந்து கொள்ள முடியும். அதுவும் ஓரிரு நிமிடங்களில்! இந்த நாடிப் பரிசோதனையின் அடிப்படையில்தான் உடலில் “சக்தி ஓட்டத்தை” சீர்படுத்தி நோயின் தன்மைகளைக் களைகிறது அகுபங்சர் வைத்திய முறை. பரம்பரை வியாதிகள் என்கிற சில நோய்களான ஒற்றைத் தலைவலி, ஆஸ்துமா, பி.பி, சர்க்கரை நோய், சரும நோய்கள் போன்றவைகளைக் கண்டுபிடிக்கவோ அவற்றை நீக்கவோ சாத்தியக் கூறுகள் அகுபங்சர் வைத்தியத்தில் உள்ளதா? ஜனன உறுப்புக்களின் வளர்ச்சிக்கும் இனவிருத்தி நல்ல முறையில் ஏற்படுவதற்கும் சிறுநீரகம் என்னும் உறுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரகத்தின் சக்தி குறைவினால் இந்த நோய் ஏற்பட்டால் அது பரம்பரை நோயாக மாற வழிவகுக்கிறது. எனவே சிறுநீரகத்திற்கு சக்தி அளிப்பதன் மூலமாக ஆணுக்கோ, பெண்ணுக்கோ, குழந்தைகளுக்கோ எந்த நோயானாலும் நாடி மூலமாக கண்டுபிடித்து அதை நிவர்த்தி செய்துவிட முடியும். கர்ப்பமுற்ற நிலையில் 6-ம் மாதத்திலும் 9-ம் மாதத்திலும் தோலில் உள்ள சிறுநீரகத்தை உறுதிப்படுத்தக் கூடிய சில முக்கியமான அகுபங்சர் புள்ளிகளை வெறும் விரல்களால் மசாஜ் செய்வதன் மூலம் பரம்பரை நோய்களைக் குழந்தைகளுக்குப் பரவாமல் தடுத்து நிறுத்திவிட முடியும். மேலும் திடகாத்திரமான, ஆரோக்கியமான, நோய்களை எதிர்க்கும் சக்தியுடன் கூடிய குழந்தைகள் பிறக்கவும் அகுபங்சர் வைத்தியம் உதவி செய்கிறது. பி.பி.யை (இரத்தக் கொதிப்பு) அகுபங்சரால் குணப்படுத்த முடியுமா? பி.பி.யை மிகவும் சுலபமாகக் குணப்படுத்தி விடலாம். காரணம் பி.பி. என்பது ஒரு நோயே அல்ல. மேற்சொன்ன உடல் உறுப்புக்களில் ஏதேனும் ஒரு உறுப்பில் சேதம் ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்ய அந்த உறுப்புக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ~இருதய இயக்கமும்| (ர்நயசவ சுயவந)இ இரத்த அழுத்தமும் அதிகரிக்காமல் இது சாத்தியமில்லை. அதிக இரத்த அழுத்தம் (இரத்தக் கொதிப்பு) என்பது உடல் உறுப்புக்களில் ஏதோ ஒன்றில் சேதம் ஏற்பட்டிருக்கிறது என்பதைத்தான் நமக்கு அறிவுறுத்துகிறது. அந்த உறுப்பை நாடிப் பரிசோதனையின் மூலம் துல்லியமாக அறிய முடியும். அதற்குத் தேவையான சக்தியை அளிப்பதன் மூலம் அதிக இரத்த ஓட்டத்திற்கு அவசியமில்லாமல் செய்து செய்து விடலாம். இருதய இயக்கமும், இரத்த அழுத்தமும் தானாகவே சீரான நிலைக்கு வந்துவிடும். உதாரணமாக, சிறுநீரகத்தில் ஒரு பாதிப்பு ஏற்பட்டால் கை, கால்கள், முகம் வீங்குகிறது. இரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது. வயிற்றில் வாய்வுத் தொல்லைகள் மிகுதியாகும்போது பி.பி.யும் ஏற்படுகிறது. அளவுக்கதிகமான குடியினால் கல்லீரல் கெடும்போது கோபமும், பி.பி.யும் தலைதூக்குகிறது. ஆக, பி.பி. என்பது “இருதய நோய்” அல்ல. உடலில் ஏதோ ஒரு உறுப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு நீங்கும் வரையில் அதிக இரத்த ஓட்டம் (இரத்தக் கொதிப்பு) அந்த உறுப்பினுள் நடைபெற்றாக வேண்டும். இது அவசியம். இதற்கு நேர்மாறாக, ஆங்கில மருத்துவம் பி.பி.யை ஒரு இருதயம் சம்பந்தமான நோயாகவே கருதுகிறது. இயற்கையான போக்குக்கு மாறாக இரத்த ஓட்டத்தைக் குறைக்கவும், இருதய இயக்கத்தைக் குறைக்கவும் படாதபாடு படுகிறது. இதன் காரணமாக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே இரத்த அழுத்தம் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆங்கில மருத்துவத்தின் இந்தச் செயல் பழுதடைந்து வரும் ஒரு உறுப்பில் மேலும் பாதிப்பினை அதிகப்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அதிகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இருதயமும் சோர்வடைய வழிவகுக்கிறது. “ஒரு நோயைக் குணப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை@ வைத்தியத்தின் மூலம் மேலும் மேலும் மோசமாக்கி விடாதீர்கள்..” என்பது “நவீன மருத்துவத்தின் தந்தை” என்றழைக்கப்படும் ஹிப்போக்ரேட்டிஸ் (ர்ippழஉசயவநள) நமக்குக் கூறும் அறிவுரைகளில் மிக முக்கியமானதாகும். ஆங்கில மருத்துவம் செயல் முறையில் அறியாமலேயே பெருந் தவறிழைத்துக் கொண்டிருக்கிறது. அகுபங்சர் வைத்தியத்தில் டயாக்னோஸிஸ் என்பதற்கு விளக்கம் உண்டா? அகுபங்சர் வைத்தியத்தில் பி.பி. இருக்கிறது. சுகர் தொந்தரவு உள்ளது. தைராய்டு கஷ்டங்கள் இருக்கின்றன என்பன அர்த்தமற்றவையாகும். இந்த ஆங்கில டயாக்னோஸிஸ்க்கு எந்த மதிப்பும் கிடையாது. ஆனால் பி.பி. உள்ளவர் தன் உடலில் உள்ள உபாதைகளைக் கூறுவதன் மூலமும், சர்க்கரை நோய் உள்ளவர் தன் கஷ்டங்களைக் கூறுவதன் மூலமும், தைராய்டு தொந்தரவு உள்ளவர்கள் தன் உடலில் உள்ள நோய்களைக் கூறுவதன் மூலமும் நாடிப் பரிசோதனையினையும் அடிப்படையாகக் கொண்டு நோய்க் கூறுகளின் தன்மையும் இணைத்து வைத்தியம் செய்வதன் மூலம் டயக்னோஸிஸ் என்ற ஒன்றே தேவையில்லாமல் செய்துவிடலாம். எல்லா பி.பி.யும் ஒரே மாதிரியில்லை. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கோணங்களில் அவரவர் நாடித் துடிப்புக்கு ஏற்றவாறு வைத்தியம் செய்தாக வேண்டும். நாளடைவில் நோயாளிகளே ஆங்கிலப் பரிசோதனைகள் டயக்னோஸிஸ் எல்லாம் தேவையற்ற பெயர்கள் என்பதைப் புரிந்து கொள்வார்கள். வைத்தியம் மேற்கொள்ளும் போது மாத்திரைகளின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு, நோய்களின் கஷ்டங்கள் இயற்கையாகக் குறையும்போது, பி.பி., சுகர், தைராய்டு போன்ற நோய்களும் உடலிலிருந்து படிப்படியாக வெளியேறுகின்றன. இவ்வாறு நோயாளிகள் கூறும் தொந்தரவுகளும், உபாதைகளும் மட்டுமே டயாக்னோஸிஸ் ஆகக் கருதப்படுகிறது. ழுசுபுயுN வுசுயுNளுPடுயுNவு ஒரு உறுப்பு பழுதடைந்து விட்டால் வேறொருவருடைய உறுப்பை மாற்றி சிகிச்சை அளிக்கிறார்களே? நோயின் காரணமாக ஏற்படும் விளைவுதான் ஒரு உறுப்பில் ஏற்படும் சேதம். அந்த உறுப்பை நீக்குவதென்பது, நோயின் ஒரு விளைவை நீக்குவதாகத்தான் பொருள்! நோயின் தன்மை உடலினுள் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதைச் சீர்செய்யாத வரையில் எத்தனை முறை உறுப்பு மாற்றம் செய்தாலும் அவையும் பழுதடையத்தான் செய்யும். இப்போது அவசர “சிகிச்சைப் பிரிவு” என்று ஒன்று இருக்கிறது. அடிபட்டு கை, கால் முறிந்து விடுகிறது. உடனடியாக சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றுகிறார்கள். அகுபங்சர் மருத்துவத்திலோ அல்லது மாற்று மருத்துவத்திலோ உயிரைக் காப்பாற்றக் கூடிய அளவுக்கு ஆங்கில மருத்துவத்திற்கு ஈடாக செய்ய முடியுமா? அடிபட்டு கை, கால் முறிவு, ஆக்ஸிடென்ட் போன்ற சமயங்களில் தற்காலிகமாக உயிரைக் காக்கக் கூடிய அவசர சிகிச்சைக்கு ஆங்கில மருத்துவத்திற்கு ஈடாக எதுவும் இல்லை. ஆனால் அவசர நிலையைத் தாண்டிய பிறகு, காயமடைந்த பகுதிகளை, ரணங்களை ஆற்றுவதற்கு மாற்று மருத்துவத்திற்கு இணையாக ஆங்கில மருத்துவம் நிற்க முடியாது. காயமடைந்த பகுதிகள் ஆறுவதற்குத் தேவையான சக்தியை மாற்று மருத்துவம் அளிக்கிறது. ஆங்கில மருத்துவத்திற்கு இம்முறை தெரியாததால் காயமடைந்த பகுதிகள் ஆற நீண்ட நாட்களாகிறது. உதாரணமாக, அடிபட்டு கை எலும்பு முறிந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். முறிந்த எலும்பை ஒன்று சேர்த்து மாவு கட்டு போடுகிறார்கள். எலும்புகள் ஒன்று சேர குறைந்தது 6 அல்லது 8 வாரங்கள் ஆகும். ஆனால் அகுபங்சர் முறையில் 3 வாரங்களுக்குள்ளாகவே குணமாக்கிவிட முடியும். மூட்டு வலியால் நிறையப் பேர் அவதிப்படுகிறார்கள். ஆங்கில மருத்துவப் பரிசோதனைகள் மூட்டு தேய்ந்து விட்டதாகக் கூறுகிறது. இந்நிலையில் அகுபங்சர் இந்த நோயைத் தீர்க்க முடியுமா? கண்டிப்பாக, மூட்டுக்கள் தேய்ந்து விட்ட நிலையிலும், தேய்ந்து போன மூட்டுக்களுக்குத் தேவையான சக்தியை அளிப்பதன் மூலம் அவற்றைப் புதுப்பிக்க முடியும். அகுபங்சர் சிகிச்சையின் அணுகுமுறை எந்த விதத்தில் ஆங்கில மருத்துவத்திலிருந்து வித்தியாசப்படுகிறது? ஒரு நோயாளி ஒரு இடத்தில் வலி இருப்பதாகக் கூறினால், நோய் அங்குதான் இருக்கிறது என்று கூறுகிறது ஆங்கில மருத்துவம். ஆனால் அகுபங்சர் மருத்துவம் நோயாளி காட்டும் இடத்தில் நோயின் தோற்றம் கிடையாது என்கிறது. உணவிலிருந்து சக்தியை கிரகிக்கும் பொறுப்பு ஜீரண உறுப்புக்களுடையது. இவ்வாறு பெறும் சக்தி உடல் உழைப்பிற்குப் பயன்படுத்தப்படுகிறது. உடல் உழைப்புக்குப் பயன்படுபவை தசைகளும், எலும்புகளும், மூட்டுக்களும்தான். ஜீரண உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு உணவிலுள்ள சக்தியைக் கிரகித்து அளிக்கிறது. எந்த ஜீரண உறுப்பு எந்தப் பாகத்திற்கு சக்தியளிக்கிறது என்பதைப் பார்ப்போம். 1. வயிறு, மண்ணீரல் - இடுப்பு, விலாப் பகுதி ஆகியவற்றின் அசைவுகளுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது. வயிறும், மண்ணீரலும் அவற்றின் வேலையில் சோர்வுறும் போது இடுப்பு, விலாப் பகுதியில் அசைவுக்குத் தேவையான சக்தியை உணவிலிருந்து கிரகிக்க முடிவதில்லை. இதன் காரணமாக இடுப்பு விலாப் பகுதியில் வலி எடுக்க ஆரம்பிக்கிறது. அங்கு அளவுக்கு மீறிய ஊளைச் சதையும் போட ஆரம்பிக்கிறது. 2. சிறுநீரகம் - முழங்காலுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது. ஒருவருக்கு முழங்காலில் ~ஆர்த்ரைட்டிஸ்| இருக்கிறதென்றால், அவர் சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பித்துள்ளது என்பதுதான் அர்த்தம். முழங்கால் மூட்டு வலி முழங்காலில் அல்ல. சிறுநீரகத்தின் செயலை உறுதிப்படுத்தாத வரையில் முழங்கால் மூட்டு வலியைக் குணப்படுத்த முடியாது. நாளடைவில் சிறுநீரகக் கோளாறு தலைதூக்கும். 3. சிறுநீர்ப்பை – கழுத்து முதல் அடி முதுகுத் தண்டு வரை உள்ள மூட்டுக்களுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது. எனவே, கழுத்து, பிடரி வலி (ஊநசஎiஉயட ளுpழனெலடழளளை)இ அடிமுதுகுத் தண்டில் வலி (டுரஅடியச ளுpழனெலடழளளை)இ அடிமுதுகில் வலி ஆரம்பித்து பின் தொடை வழியாக, கால் வரை வலி பரவுதல் (ளுஉயைவiஉய) போன்றவை முதுகுத் தண்டில் ஏற்படும் கோளாறினால் அல்ல. நரம்பு மண்டலத்துடன் சம்பந்தப்பட்டதும் அல்ல. சிறுநீர்ப்பைக்குத் தேவையான சக்தியைக் கொடுப்பதன் மூலம் மட்டுமே இந்த அனைத்துத் தொந்தரவுகளையும் குணப்படுத்த முடியும். 4. கல்லீரல் - உடல் தசைகள் அனைத்திற்கும் வேண்டிய சக்தியை அளிக்கிறது. தலைவலி, உடல்வலி போன்றவற்றை குணப்படுத்த கல்லீரலுக்கு சக்தி அளிக்க வேண்டும். 5. இருதயம் - முழங்கைக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது. முழங்கை வலி இருதயம் பழுதடைந்து வருவதை அறிவிக்கிறது. 6. தோள்பட்டையில் வலி ஏற்படுதல் நுரையீரல் பலவீனத்தைக் காட்டுகிறது. அகுபங்சர் வைத்தியம் மேற்கொண்ட பிறகு உடல் நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கணிப்பது எப்படி? உதாரணத்திற்கு ஒருவர் பத்து விதமான உடல் தொந்தரவால் வைத்தியம் எடுத்துக் கொள்கிறார் என வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு முறையும் வைத்தியம் செய்யும் பொழுதும் சில கஷ்டங்கள் குறையாமல் இருக்கலாம். ஒரு சிலருக்கு சில நாட்கள் குறைந்து மீண்டும் சில நாட்கள் கழித்து மீண்டும் ஆரம்பிக்கலாம். இதனால் நோய்கள் திரும்பி விட்டன என அர்த்தம் கிடையாது. தொடர்ந்து சிகிச்சை அளிக்க அவை நல்ல முறையில், நிரந்தரமாக மறையத் தொடங்கும். திரும்பத் திரும்ப வருவதன் மூலம் நாடியின் மாறுதலுக்கு ஏற்ப அந்த நோய்களை நல்ல முறையில் வேருடன் களைய முடியும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த சிகிச்சை முறை ஏன் இன்னும் பிரபலமாகவில்லை? அகுபங்சர் டாக்டர்களின் திறமைக் குறைவுதான் இதற்குக் காரணம். அகுபங்சர் சித்தாந்தம் கூறுகிறது, உண்மையான திறமை என்னவென்றால், ஒரே ஒரு ஊசியைக் கொண்டு 10,000 உடல் குறைபாடுகளை நீக்க வேண்டும் என்பதாகும்.
  2. 3 points
    எனது தூரத்து உறவினர்கள் கூட ஒருவரும் இந்தமாதிரி கோமாளிக்கூத்து ஆடக்கூடாது என்று நினைத்திருந்தேன். இரு வருடங்களுக்கு முன் ஒரு உறவினர் ஒருவரின் இறுதி ஊர்வலம் இப்படித்தான் கனடாவில் செய்தார்கள். இறந்த மனுசி மிகவும் சாதாரணமான ஒரு பெண். மகன் ஆடம்பரம் அதிகம். மருமகள் மாமி சண்டையால் முதியோர் இல்லத்தில் தான் 7 வருடம் இருந்து அதுவும் Alzheimer's வருத்ததுடன். அம்மா சாகவும் மகன் ஒரு ஆடம்பர செத்தவீடு வைத்து கொண்டாடினார். மருமகள் அழுத்தமாதிரி மகள்மார் அழவில்லை . சிலபேர் செய்யிற வேலைகளை பார்த்தால் ஓரில இந்த ஆசைகள் எண்ணங்கள் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டுதான் பேசாமல் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கத்தோன்றும். பிரச்சனை கூடிய காலங்களிலேயே ஊருக்கோ போய் ஹெலிகொப்டரில் ஏறி இறங்கி கொண்டாட்டங்கள் வைத்து ஊரில் உள்ளவர்களுக்கு புதினம் காட்டுவது என்று எத்தனை கோமாளித்தனம். எம் மக்களுக்கு இப்படி ஒரு கேவலமான ரசனையா என்று நினைத்து வெட்கப்பட வேண்டி இருக்குது. சில வீடியோக்களை பார்க்க நம்ப முடியாமல் இருக்கும். 30 ஆவது வருட கலியாண தினம் என்று 55 , 60 வயசு கணவனும் மனைவியும் துள்ளி ஆடி ஓடி பிடித்து விளையாடி ஒரு வீடியோ பார்த்தேன். என்னத்த சொல்லுறது
  3. 3 points
    அமெரிக்காவின் CNN, MSNBC, FOX ஆகிய செய்தி நிறுவனங்கள் இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் அமெரிக்க கிராமங்களில் இருந்து இந்த செய்திகளை ஒளிபரப்புகின்றன. உலக மக்கள், நீங்கள் உட்பட, இந்த செய்திகளை கேட்கிறீர்கள், படிக்கிறீர்கள். ஆகவே அது உலக செய்தி. கிளிநொச்சி, முகமாலையில் இருந்து ஈழத்தமிழர் கொல்லப்பட்டதை வெளியிட்ட ஈழத்து செய்தி நிறுவனங்கள் எவை, ஐ.பி.சி. மட்டுமே மேற்படி செய்தியில் உள்ளது? அவற்றின் (ஐ.பி.சி. உட்பட) செய்திகளை ஆர்வத்துடன் படிக்கும்/கேட்கும் மக்கள் எத்தனை நாடுகளில் வாழ்கிறார்கள்? ஒவ்வொரு நாட்டிலும் அண்ணளவாக, எத்தனை ஆயிரம் மக்கள் மேற்படி ஈழத்து செய்தி நிறுவனங்களின் செய்திகளை ஆர்வத்துடன் கேட்கிறார்கள்? இந்த எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்யலாம்? மேற்படி அமெரிக்க செய்தி நிறுவனங்கள், தமது செய்திகளை கேட்கும்/படிக்கும் மக்களின் தொகையை அதிகரிக்க பெரும் முதலீடு செய்து, கடும் உழைப்பால் அதை சாதித்துள்ளன. ஈழத்து செய்தி நிறுவனங்களும் அவ்வாறு செய்தால், ஈழத்து செய்திகளும் உலக செய்திகளாகும். தமிழ்நெற் ஆரம்பிக்கப்ட்ட காலத்தில் இவ்வாறான கருத்தை வழங்கி இருந்தேன். ஆனால், அவர்களின் நோக்கம் வேறாக இருந்தது.
  4. 3 points
    பனங்கிழங்கு பாத்தியில் இருந்து எடுத்தல்,பக்குவமாய் அவித்தல்,உரலில் இட்டு இஞ்சி சேர்த்து இடித்தல் பின் அரித்தல் பிடிக்கொழுக்கடையாய் பிடித்துப் பரிமாறல் பாருங்கள்......!
  5. 2 points
  6. 2 points
    இது ஒன்று தான் இது வரை missing in Canada. எனக்கு வாட்ஸ் அப்பிலை வந்தது. பழசோ புதிசோ தெரியாது.
  7. 2 points
    ஆனால் மனித வாழ்வுக்கு எது மேம்பானது? எது கேடுகள் ஆனது? என்று ஒரு புள்ளி இருக்கிறது அல்லவா? "மேலை நாட்டு கலாச்சாரம்" இதுவே என்னை பொறுத்தவரை கேள்விக்கு உள்ளளனது கலாச்சாரமே இல்லாததுதான் மேலைநாடு ஜனநாயக அரசில் என்றாலும் ஒரு பழம்பெரும் கலாச்சாரம் என்றாலும் அதை தன்னகத்தே கொண்டவர்கள் கீழை நாடவர்கள்தான் அமெரிக்க என்றே நாடே 17ஆம் நூற்றாண்டு பின்னானது ஐரோப்பா அமெரிக்க சினிமா ஊடாக உட்புகுவதை உள்வாங்கியது ரோம ராஜ்ஜியம் கத்தோலிக்க மதம் சார்ந்து பழமை பட்டு இருந்ததே தவிர குறிப்பிட்டு ஒரு கலாச்சார பின்னணியை கொண்டிருக்கவில்லை. தமிழர்கள் இப்போ குழப்பவாதிகளாக இருப்பதுதான் பிரச்சனை தவிர கலாச்சாரத்தில் மேன்மை கொண்டவர்கள் என்பது என் தனிப்பட்ட எண்ணம் மாற்று கருத்து இருப்பின் அது ஆக்கபூர்வன்மைத்தாக இருந்தால் ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. எம்மை பொறுத்தவரை எமக்கு தமிழே தெரியாது இப்படியான ஒரு நிலையில் நாம் வாதிடுவதுதான் தவறு ஆனால் மொழிகளில் தமிழுக்கு நிகராக வேறு மொழி இல்லை என்பது தற்பெருமை இல்லை ..........இது உலக மெய். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் முன்பு சங்கம் வைத்து வளர்ந்த மொழி தமிழ் .....ஒவ்வரு வார்த்தையும் இலக்கணம் உடையது நாம் படிக்கவில்லை என்பதால் அதை மறுக்க முடியாது. மற்ற மொழிகளை நாம் தளத்துவதுதான் மடமை ........ ஆனாலும் தமிழ் உறவானது என்று கற்று அறிவதில் தவறு இல்லையே?
  8. 2 points
    பொடி வைத்திருந்த இடமும் அதை தகனம் / தாக்கும் செய்யும் இடமும் ஒரே வளாகத்தில் இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்......!
  9. 2 points
    பையா தமிழ்பொக்கிசம் காணொளிகளை இங்கு இணைக்க முதலே பலரும் ஆதரவு தந்தனர்.இவர் இந்தியாவை புகழும் போது அரச ஊதுகுழலாகவே தெரியும். ஆனாலும் பல்வேறு நாட்டு நடப்புகள் இணைய சங்கதிகள் உலகில் எங்கெங்கு என்னென்ன நடக்கிறது என்று நாங்கள் எல்லா நாட்டு பத்திரிகைகளையும் புரட்டி பார்ப்பதில்லை.இவர்கள் அமைப்பாக வியாபாரத்துக்காக செய்கிறபடியால் அந்த செய்திகள் எமக்கு புதிதாக தெரிகிறது. ஆரம்பத்தில் நாமமுனியே சொல்லியிருந்தார் இவர் ஒரு மலையாளி சீமானையே வறுக்கப் பார்த்தவர்.தம்பிகள் உசாராக இருந்தபடியால் அடங்கிவிட்டார் என்று.
  10. 2 points
    என்னதான் திறமையானவரா இருந்தாலும் ஒழுக்கக்கேடான நபரால் நன்மைகள் ஏற்படாது என்கிறதுக்கு கருணா தான் நல்ல எடுத்துக்காட்டு. கருணா தனது ஒழுக்கக்கேடுகளின் வழியில் செல்ல முடிவெடுத்தால் கொலைகாரர்களுக்கு தான் வாய்ப்பு.
  11. 2 points
    இப்படியாவனவர்களின் பேச்சை என்னைப் போன்ற இலங்கை சைவர்கள் கேட்பதில்லை, ஆனால் நீங்கள் பொறுமையாக கேட்டது சந்தோசம்...
  12. 1 point
    எமது முன்னோர் காட்டிய சாஸ்திர சம்பிரதாயங்கள் புனிதமானவை என்று புலம்பித்திரிபவர்கள் இந்த வீடியோவை பாரக்கவும். பெண்களின் காதல் உணர்வை மதிக்காது அவர்களை வளர்தது தமது ஜாதி கோத்திர பெருமைக்காக சடப் பொருள் போல கல்யாணம் என்ற பெயரில் தானம் செய்யவேண்டும் என்றும், பெண் குழந்தைகளுக்கு அவர்களின் சிறு வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் மனித கலாச்சாரத்துக்கு எதிரான கிறிமினல் காட்டுமிராண்டி இந்து கலாச்சாரத்தை வலியுறுத்தும் இந்து மத குருவின் பிரசங்கம். கேட்டால் நாம் சைவம் இதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்று புலுடா விடுவார்கள். ஆனால் சைவம் என்பது இன்று நடைமுறையில் எல்லா இந்து பத்தாம் பசலித்தனங்களை ஏற்றுக்கொண்டு அதை வலியுறுத்தும் நிலையில் தான் உள்ளது அதை விட பெண்கள் சுதந்திரமாக இருக்க விடக்கூடாது என்று வேறு புலம்பல் வேறு. இதற்கும் ஆமாம் சாமி போடும் மூடர்களும் இருப்பார்கள்.
  13. 1 point
    உரக்கச் சொல்கிறோம் நாங்கள் அமெரிக்கர்கள்! இரண்டு கொடிய வைரஸ்கள் இப்போது அமெரிக்கர்களைக் கொல்கின்றன. ஒன்று கோவிட் 19, மற்றையது இனவாதம். இங்கே அனைத்துத் துப்பாக்கிகளும் சொர்க்கத்தை நோக்கி மட்டுமே சுடுகின்றன. எச்சரிக்கைக் காட்சிகளால் சிறகுகள் வெட்டப்படும் கறுப்பு பறவைகள் நசுக்கப்படும் மனிதத் தலைகள்... இங்கே, சட்ட உலகம் இருளில் ஆழ்த்தியத்தைத் தவிர வேறெதுவும் பேசாது இங்கே - யாரும் வரவேற்கப்படுவதில்லை. ஆட்சியாளர்களால் “வீட்டிற்கு செல்” என்ற சொல் தவிர “நீதி” என்ற சொல் உச்சரிக்கப்படுவதில்லை. மரணத்தால் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் குற்றமேதுமின்றிப் பலர் சொர்க்கவாசலை நிறைத்துக்கொண்டிருக்கிறார்கள்! இறுக்கப்பட்ட எங்கள் முகத்துக்கு எதிராக அவர்கள் கதவுகள் என்றும் மூடப்பட்டே இருக்கிறது. அவர்கள் சட்டத்தின் வரிகளில் எங்களுக்காகவே வரையப்பட்ட வெறுப்பின் வரிகள் எங்களைப் பிடிக்கவென்றே வரையப்பட்ட வெள்ளை மேலாதிக்க விஷ வன்மங்கள் ஆங்காங்கே கொட்டிக் கிடக்கின்றன. நண்பர்களே மூச்சை அடக்க பயிற்சி செய்யுங்கள் எந்தவேளையிலும் உங்கள் குரல்வளைகள் நசுக்கப்படலாம். எங்கள் நேசிப்புக்குரிய நகரம் சிவப்பு பிழம்பாகத் தீப்பிடித்து எரிகிறது. வானத்தை நோக்கி கரும்புகை திரண்டு உரக்கச் சொல்கிறது எங்கள் குரல்வளை நெரிக்கப்படுகிறது என்று. என்னைச் சுற்றி எல்லா இடங்களிலும் இனவெறி நிரம்பிப்போயுள்ளது. சருமத்தின் நிறம் கொண்டு முகஸ்துதி செய்யும் கருப்பு, வெள்ளை, பழுப்பு, மஞ்சள் பிரிப்புவாதம் வேண்டாம். சொற்கள் கத்திகள் போல் கூர்மையாய் - இன்னும் முட்கள் நிறைந்த ஊசிகளாய் வலியுடன் குத்தும். வெறுப்பை மட்டும் விதைக்கும் சொற்கள் இனவெறியின் இன்னொரு முகம். அமெரிக்காவின் காயங்கள் புதியவை அல்லவே ஆதிக்கம், இடைவெளி, இரத்தக்களரி அது போகாது. ஒரு மரணத்தால் சொர்க்கத்தை சம்பாதித்துக் கொண்டவர்களே! காயங்களைப் பற்றி எனக்குத் தெரியும்: அவை நீங்காது. இங்கு நியாயமான பயணம் என்பது பொய்யான வார்த்தைகளால் நிரம்பிப் போயுள்ளது. இன்னும் நம்புங்கள் உறவுகளே... மக்களை, மக்களால், மக்களுக்காக ஆளும் சமத்துவமும் மரியாதையும் வெல்ல இயலாத ஒரு போலி ஜனநாயக நாட்டில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று. -தியா-
  14. 1 point
    தமிழரை கொன்ற சிங்கள இராணுவத்திற்கு பால் தரமாட்டோம்: தமிழக அரசு அதிரடி தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் ஆவின் பால் திட்டத்தின் மூலம், இலங்கை இராணுவத்திற்கு நாளாந்தம் பால் வழங்கும் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துள்ளது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இதனை தெரிவித்துள்ளார். ஆவின் பால் திட்டத்தின் மூலம் இலங்கை இராணுவம் நாளாந்தம் ஆயிரம் லீற்றர் பால் வழங்கும் திட்ட முன்மொழிவை தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் எமக்கு அனுப்பியது. ஆனால், தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இராணுவத்திற்கு பால் வழங்கமாட்டோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அந்த திட்டத்தை நிராகரித்து விட்டார் என அவர் தெரிவித்துள்ளார். “நேற்று இலங்கை அரசு, தமிழக முதல்வரைத் தொடர்பு கொண்டு ராணுவத்திற்கு ஒரு லட்சம் லிட்டர் பால் கேட்டது. ராணுவத்திற்குப் பால் தர மறுத்து அங்குள்ள மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்கு ஆவின் பால் தர சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் தெரிவித்தார். https://www.vanakkamlondon.com/eps-21-06-2020/
  15. 1 point
    தந்தையர் தின வாழ்த்துக்கள் சுயத்தை விற்று உழைப்பை இரைத்து உதிரம் வறண்டு குடும்பத்தை கரையேற்றும் கட்டு மரம் ! தன்னம்பிக்கை தைரியம் தெளிவு- இவை தோய்ந்த மூன்றெழுத்து மந்திரம் தந்தை ! கண்டிப்பு காட்டிடும் கண்கள் - முள்ளாய் அன்பு வழிய அக்கறை கொஞ்சும் அழகு மனம் - மலராய் ! அப்பா ! உந்தன் வியர்வை நாற்றத்தில் உழைப்பு மணக்குது ! நேர்மை மணக்குது ! புகழும் மணக்குது ! ரேகைகள் தேய்ந்து மரத்துப் போன விரல்களின் ஸ்பரிசத்தில் வாழ்வின் சோதனைகளை சொல்லாமல் உணரவைத்தாய் !
  16. 1 point
    பொய்களின் இடிமுழக்கம் - அகரமுதல்வன் ஈழத்தமிழ் அறிவுலகத்தினருக்குள் நிகழும் இணைய விவாதமாக அண்மைய நாட்களில் ஒரு விவகாரம் பேசப்பட்டு வருகிறது.அதாவது 2003ம் ஆண்டில் நிகழவிருந்த யாழ்ப்பாண நூலகத் திறப்பு விழா பற்றிய உண்மைகளுக்கும் பொய்களுக்கும் -சர்ச்சைகளுக்கும் இடையே நடக்கும் விவாதமாக அது உருப்பெற்று இருக்கிறது. அதன் மையமாக சாதியம் பேசுபொருளாகியிருக்கிறது. யாழ்ப்பாணத்தின் சமூக அடுக்குகளில் ஒடுக்கும் சாதியாகவிருக்கும் “வெள்ளாள” சமூக ஆதிக்கமும் - இந்நிலை தொடர்பாக புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் நிறையப் பதிவுகளும் -கட்டுரைகளும் - கட்டுரைகள் என்ற பேரில் எழுதப்படும் சலம்பல்களும் குவிந்தவண்ணமிருக்கின்றன. எழுத்தாளர்களான ஷோபாசக்தி- சயந்தன் மற்றும் ஆவணப்பட இயக்குநரான சோமிதரன் ஆகிய மூவரின் பெயரும் இந்த விவாதங்களில் முக்கிய இடம்பிடித்துள்ளன. ஈழப்பிரச்சனையின் உள்ளக சிடுக்குகளும் -மோதல்களும் - வரலாறுகளும் தெரியாதவொருவரால் இந்த விவாதங்களின் மொத்த பேருருவத்தையும் கண்டுணரமுடியாது என்றே கருதுகிறேன். ஒரு புனைவை படிப்பது போல இந்தப்பிரச்சனை தொடர்பாக எழுதப்படும் பதிவுகளை படித்துவிட்டு “அபாரம் தோழர்”,”அற்புதம் ” என்றெல்லாம் கருத்து இடமுடியாது. எழுத்தாளர் ஷோபாசக்தியினதும் சயந்தனினதும் புனைவுலகத்திற்கான வாசகர்களைக் கடந்த -ரசிக சபையினராலும் இதனை விளங்க முடியாது. இப்போது நடந்துவருவது ஒரு இரத்த சாட்சிக்கு முன்னால் கருகிப்போகும் பொய்களின் மூச்சிழுப்பு. அந்தப் பொய்களின் சீவன் சேடம் இழுக்கும் காட்சிகளே இப்போது நடப்பது யாவும். "இதுதான் நடந்த கதை". எழுத்தாளர் ஷோபாசக்தி எழுத்தாளர் சயந்தன் ஆவணப்பட இயக்குநர் சோமீதரன் யாழ்ப்பாண பொதுநூலகம் சிங்கள இனவெறிக் காடையர்களால் எரிக்கப்பட்ட வரலாற்றுத் துயரத்தை அறியாதார் எவர்?இருபதாம் நூற்றாண்டில் இவ்வுலகில் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பின் முக்கிய சாட்சியது. இன்றைக்கு முப்பத்தொன்பது ஆண்டுகள் கடந்தாலும் அன்று எரிக்கப்பட்ட பல இலட்சம் நூல்கள் கொண்ட தமிழ் நூலகத்தின் சாம்பலில் தீ கனன்று கொண்டேயிருக்கிறது. யாழ் பொதுநூலகம் எரிக்கப்பட்டதன் விளைவு ஈழத்தவரின் விடுதலைப் போராட்ட அவசியத்தையும் அடிப்படைத் தேவையையும் தமிழ்மக்களுக்கு உணர்த்திற்று. அந்தக் கொடுந்துயரைத் தமிழ்த்தரப்பிற்கு செய்தமைக்காக இன்றுவரை சிங்கள அதிகாரத் தரப்பு ஒரு மன்னிப்பைக் கூட உதிர்த்ததில்லை என்பதையும் சுட்டுகிறேன். அதேவேளை நூலக எரிப்பு வடுவை கலை இலக்கியப் படைப்புக்களில் பலர் பதிவு செய்துள்ளனர். கவிஞர் நுஹ்மானின் கவிதை,எழுத்தாளர் சுஜாதாவின் “ஒரு லட்சம் புத்தகங்கள்”,அமெரிக்க அறிஞர் நெவே எழுதிய “நம்பிக்கையென்ன நமக்கு” என்ற கவிதையை சோ.பத்மநாதன் மொழிபெயர்த்திருந்தார். “The Jaffna Public Library rises from its ashes” என்ற ஆவணநூலினை வி.எஸ்.துரைரராஜா அவர்களும், “எரியும் நினைவுகள்” என்ற பேரில் மிகமுக்கியதொரு ஆவணப்படத்தினை சோமிதரன் அவர்களும் உருவாக்கி இருக்கின்றனர். இந்த வடு இனிவரும் இலக்கியப் படைப்புக்களிலும் ஒரு முக்கிய பேசுபொருளாக தொடரும் என்பது எனது துணிபு. எரியும் நினைவுகள் ஆவணப்படம் 1981ம் ஆண்டில் எரியூட்டப்பட்ட நூலகத்தை “புனரமைக்கப்பட்ட யாழ் பொதுசன நூலகம்” என்ற பெயர் சூட்டலோடு திறப்புவிழா செய்வதற்கு எண்ணியது சந்திரிக்காவின் ஆட்சிக்காலம். ”சமாதானத்தின் தேவதை” என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு சர்வதேச சமூகத்தையும் தமிழர்களையும் ஒரே நேரத்தில் ஏமாற்றும் வல்லமை பெற்ற ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியில் 14.02.2003ம் ஆண்டில் நடக்கவிருந்த நூலகத் திறப்பு விழா தொடர்பாக ஈழத்தமிழ் அரசியலில் நிகழ்ந்த குழப்பங்கள் ஏராளமானவை. அப்போது நிலவிவந்த அமைதிச்சூழலில் அரசுக்கும்- புலிகளுக்கும் இடையே நிகழ்ந்துவந்த புகைமூட்டமான பகைமூர்க்கத்தில் அப்பாவி பொதுசனங்கள் நெருக்கடியினை எதிர்கொண்டனர். சமாதான காலமென அறிவிக்கப்பட்டிருந்த நாட்களில் இந்த திறப்புவிழா அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது யாழ்ப்பாண நகர பிதாவாக இருந்த பெருமதிப்பிற்குரிய செல்லன் கந்தையன் அவர்களின் அழைப்பின் பேரில் அப்போது இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தமிழ் அரசியல்வாதியான திரு. வீ.ஆனந்தசங்கரி அவர்கள் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தை திறந்துவைக்க இருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு முறுகல் போக்கையும்,எப்போதும் இலங்கை ஆட்சியாளர்களோடு நெருக்கத்தையும் பேணிவரும் குறித்த அரசியல்வாதி எரிக்கப்பட்டவர்களாலேயே புனரமைக்கப்பட்ட் யாழ்ப்பாண நூலகத்தை திறந்துவைப்பதை புலிகள் இயக்கம் விரும்பவில்லை. மேலும் சிங்கள இனவெறி அரசின்/சிங்கள மக்களின் இனவெறிக்கும் சாட்சியாக இருந்த எரியூட்டப்பட்ட தமிழர் நூலகத்தை சுண்ணாம்பினால் வெள்ளைபூசி தடயம் அழிக்கும் செயற்பாட்டையும் யாரும் விரும்பவில்லை. யாழ்ப்பாண நூலக எரிப்பு என்பது தமிழர்களின் அறிவுலக மரபின் மீது நிகழ்த்தப்பட்ட ஒரு பண்பாட்டழிப்பு என்பதில் தமிழர்கள் அனைவரும் தீர்மானமாய் இருந்தனர்.அந்தப்புள்ளியில் புலிகளும் நின்றனர். ஆக புலிகள்,இந்தத்திறப்பு விழாவில் ஆனந்தசங்கரி பங்கெடுப்பதை விரும்பவில்லை என்பதைபோலவே ஒரு இனஅழிப்பின் சாட்சியாக இருந்த நூலகத்தை புதுப்பிக்கவும் விரும்பவில்லை. வெகுஜன அமைப்புக்கள் பலவும் - அறிவுப்புலத்தினர் பலரும் இந்த நிகழ்வுக்கு எதிராக ஒன்றுதிரண்டு நின்றனர். இப்பின்னணியில் அந்தநிகழ்வு தடுத்துநிறுத்தப்பட்டது. இதுவொரு பாதிக்கப்பட்ட தரப்பின் குரல் பொதிந்த அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழிமுறையாக கருதலாம். அதாவது ஒருஅறிவுலகச் சொத்தாக இருந்த யாழ்ப்பாண நூலகத்தை சிங்கள இனவாதம் எரியூட்டியதை தமிழர்கள் அழித்தொழிப்பின் நினைவாகவே அடையாளப்படுத்த விரும்பினர். அதுவே இந்நிகழ்வு தடைப்பட்டு போனதற்கு காரணம். யாழ் நூலகத்திறப்பு விழாவின் (2003) வரவேற்புக்குழுவின் தலைமையாகவும் யாழ்ப்பாண நகரபிதாவாகவும் இருந்த பெருமதிப்பிற்குரிய செல்லன் கந்தையன் அவர்கள் ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதனாலும்,அவர் இந்த நூலகத்தை திறந்து வைத்தால் ஒரு ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயர் வரலாற்றில் நிலைத்துவிடுமென எண்ணிய யாழ்ப்பாண வெள்ளாளச்சாதி ஆதிக்கவாதிகள் கூட்டுச்சேர்ந்து புலிகள் இயக்கத்தினருக்கு அழுத்தம் தருவித்ததன் விளைவாக புலிகள் இயக்கம் அந்த நிகழ்வை தடுத்து நிறுத்தியது என புலியெதிர்ப்பு நிலைப்பாடுடைய பலர் எழுதினர். மேலும் தமது புலியெதிர்ப்புக் கத்தியை கூர்மைப்படுத்தும் நோக்கில் ஒடுக்கப்படும் சாதியினரின் வாழ்க்கையை சாணைக்கல்லாக பயன்படுத்தினர். அதாவது புலிகள் இயக்கமென்பது ஒடுக்கப்படும் சாதியினருக்கு எதிரானது -ஆகவே தாம் புலிகளை எதிர்க்கிறோமென வாய்நீட்டி முழங்கினர். இங்கே இவர்களின் புலியெதிர்ப்பு அரசியல் என்பது மாபெரும் வலைப்பின்னல் கொண்டது. அது ஈழம் தொடங்கி - தமிழகம் என தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் வரை கண்ணுக்குத்தெரியாத பல கண்ணிகளோடு தொடர்பு கொண்டவை. இவர்களின் புலியெதிர்ப்பு பிரச்சாரம் - தமிழக அறிவுப்புலத்தில் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அ.மார்க்ஸ் போன்றவர்கள் ஈழமெனும் யானையை இவர்கள் வழியாகவே கண்டனர். புலிகள் ஒரு வெள்ளாள சாதி அமைப்பு என்று தமிழகத்தின் சி.பி.எம் இடதுசாரிகளுக்கு இவர்களே வகுப்புக்கள் வழங்கினர். இப்படியான வலைப்பின்னல்களின் பின்னால் ஒளிந்திருக்கும் குற்றங்களின் வரைபடத்தை காலம் என்றோ ஒருநாள் வரலாற்றின் முன்னால் வைத்து தீரவிசாரிக்குமென்று நான் சொல்லுவதுண்டு. அந்தக்கூற்றின் அளவு சமுத்திரமெனில் இப்போது நிகழ்ந்திருப்பது அங்கே சிறிய நீர் வளையம் மட்டுமே. அதாவது திறப்புவிழாவில் நடந்த பல்வேறு குழப்பகரமான சம்பவங்கள் குறித்து இற்றைக்கு பதினேழு வருடங்களாக நிறையக்கட்டுரைகளும்,பதிவுகளும் எழுதப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகின்றன. அதில் முக்கியமான/பொருட்படுத்தக்கூடிய கட்டுரை எழுத்தாளர் ஷோபாசக்தியினுடையது. அந்தக் கட்டுரையில் தகவற்பிழைகளும் இட்டுக்கட்டிய கதைகளும் நிறைய இருப்பினும் “வசந்தத்தின் இடிமுழக்கம்” கட்டுரையில் உண்மைகளும் அதிசயமாக உண்டு. இணைப்பு http://www.shobasakthi.com/shobasakthi/2007/02/23/81/ இந்தத் திறப்புவிழா விவகாரத்தை முன்வைத்து அப்போதைய யாழ் தினக்குரலில் வெளியான கேலிச்சித்திரம் அவமானத்திற்குரியது.சமூக நீதிக்கு எதிரானது. சாதிவெறியின் கோடுகள். மானுடத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் எக்காலத்திற்கும் வெட்கி தலைகுனியவேண்டிய ஒன்று. அதனை ஷோபாசக்தி திகதியின் சாட்சியோடு குறிப்பிட்டிருப்பார். அந்த வகையில் அவருடைய இந்தத் தகவலில் இப்போதும் மறுப்புச் சொல்வோர் இருப்பின் அவர்களே சாதியவாதிகள் என்பது எனது தரப்பு. இந்தச் சம்பவத்தை அடியொற்றி "யாழ் நூலகத்திறப்பு விழாவும் சாதி வெறியர்களும்" என எழுதப்பட்ட அதே பகுதியில் எத்தனையோ தகவற்பிழைகளும் பொய்களின் இடிமுழக்கமும் . அந்த பிழைகளும் பொய்களுமே இப்போது நிரூபணமாகி இருக்கின்றன. அதாவது ஷோபாசக்தி தனது கட்டுரையில் குறிப்பிடுவதைப் போன்று நகரபிதா செல்லன் கந்தையன் புலிகளால் மிரட்டப்பட்டு பூட்டிய அறையில் கடுமையாக எச்சரிக்கப்பட்டாரா? உண்மையில் வெள்ளாள ஆதிக்கவாதிகள் இந்த நிகழ்வை வேண்டாமென மறுத்தார்களா? அவர்கள் மறுத்ததன் பேரில்தான் இந்த திறப்புவிழா தடைப்பட்டு போனதா? என கேள்விகள் எழும். எழுவதே நன்று. கேட்கப்படாத கேள்விகள் மட்டுமே முட்டாள் தனமானவை என்ற மால்கம் எக்சை இங்கே நினைவு கூர்கிறேன். அப்படி கேள்வி எழுந்ததன் விளைவாகவே எழுத்தாளர் சயந்தனும் ஆவணப்பட இயக்குநருமான சோமிதரன் ஆகியோர் இந்த அறிவுப்புல அரசியல் வரலாற்றின் பிரதான பேசுபொருளாக இருந்த நகரபிதா செல்லன் கந்தையன் அவர்களை ஆவணப்படம் செய்வதற்காக பதியப்பட்ட காணொலியின் பகுதியிலிருந்து மூன்று நிமிட காணொலியை ஒரு செய்திக் காணொலியாக இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். அந்தக் காணொலியில் “யாழ் நூலகத்திறப்பு விழா" பற்றிய சர்ச்சைகள் தொடர்பாக எழுத்தாளர் ஷோபாசக்தி உள்ளிட்ட புலியெதிர்ப்புவாதிகள் முன்வைத்த சம்பவங்கள் கேள்வியாக தொடுக்கப்படுகின்றன. பெருமதிப்பிற்குரிய செல்லன் கந்தையன் அதனை அடியோடு மறுத்து அப்படியான எந்தச்சம்பவங்களும் மிரட்டல்களும் புலிகளால் தனக்கு வழங்கப்படவில்லை என கூறுகிறார். மேலும் புலிகளுக்கும் அவர்களுடைய நடவடிக்கைகளுக்கும் எதிராக முறுகல் போக்கோடு இருந்த ஆனந்தசங்கரி நூலகத்தை திறந்து வைப்பதையே புலிகள் விரும்பவில்லை,அதனை தன்னிடமே கூறினார்கள் எனவும் மிக விளக்கமாக கூறுகிறார். அப்படியாயின் ஷோபாசக்தி எழுதிய சம்பவங்கள் பொய்யானவை மட்டுமல்ல அதன்பின்னால் ஒரு சதிவலையும் - புலியெதிர்ப்பு அணியின் தந்திரங்களும் நிறைந்திருக்கிறது. நகரபிதா செல்லன் கந்தையன் அவர்களை சாதிய ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் கையாண்டனர். புலிகள் ஒடுக்கப்படும் சாதியினருக்கு எதிரானவர்கள் என்ற பொய்யான கருத்தியலை உருவாக்கும் ஒரு செயற்திட்டம் மறைந்திருந்திருக்கிறது. சாதிய ரீதியாக ஒடுக்கப்படும் சனங்களின் மீட்சிக்குரல்களுக்கு ஆதரவாளர்களாக தம்மைக்காட்டி நிற்கும் இவர்களின் போலி முற்போக்குத்தனங்கள் புலியெதிர்ப்புவாத சந்தையில் பண்டமாகி நாட்கள் ஆகிவிட்டன. இவர்களின் போலிச் சாதி எதிர்ப்புக் கோஷங்களுக்கு பின்னால் எத்தனை எத்தனை சூதுகள் - எத்தனை எத்தனை லாபங்கள். இன்னும் எத்தனை எத்தனையோ. யான் அறியேன் பராபரமே. இனிவரும் பகுதிகளை செவியுள்ளோர் கேட்கக்கடவர். யாழ்ப்பாண நூலகத்தினை 2003 ஆம் ஆண்டில் திறந்து வைக்கவிருந்தவர் அன்றைய நகரபிதாவான பெருமதிப்பிற்குரிய செல்லன் கந்தையன் இல்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்தசங்கரி அவர்களே. அவரொரு ஈழத்தமிழ் மிதவாத அரசியல்வாதி. அவர் சமூக அடுக்கில் ஒடுக்கும் சாதியான வெள்ளாளர். ஆக யாழ்ப்பாண நூலகத்தினை 2003ல் திறந்துவைக்க இருந்தது வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியே தவிர,ஒடுக்குமுறைக்குள்ளான சமூகத்தைச் சேர்ந்த யாழ்ப்பாண நகரபிதாவாக இருந்த திரு.செல்லன் கந்தையன் அவர்கள் இல்லை என்பதே பேருண்மை. அதற்கு சான்றாக அந்த நிகழ்வின் அழைப்பிதழை இணைக்கிறேன். அதேநேரத்தில் நகரபிதா செல்லன் கந்தையன் அவர்கள் இருந்த அரசியல் கட்சியின் தலைவராகவும் இருந்தவர் வீ.ஆனந்தசங்கரி. அவரை அழைத்துவந்து இந்த நூலகத்தை திறந்துவைக்க நகரபிதா செல்லன் கந்தையன் விரும்பியிருக்கலாம். அல்லது அப்போது ஆனந்தசங்கரியின் நெருக்குதலின் பேரில் கூட அவரை அழைத்திருக்கலாமல்லவா? உண்மையில் இந்த நூலகத்தை இதற்கு முன்னைய காலங்களில் ஒரு அரசியல்வாதி திறந்து வைத்தது கிடையாது. பதவியில் இருந்த நகரபிதாக்களே திறந்தனர். அப்படியெனில் இந்த மரபு மீறப்பட்டதன் பின்னால் எந்த நெருக்கடிகளும் இருந்திருக்காதா?இந்தப் பிரச்சினையில் குரலுயர்த்தும் இந்தப் போலிச்சாதிய ஒழிப்பாளர்கள் ஒரு சொல் வீசி ஆனந்தசங்கரியை கேள்வி எழுப்ப விரும்பார். ஏனெனில் புலியெதிர்ப்பும் -அவர்களின் சுயசாதியக் கூட்டும் அவர்களிடம் இருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக தம்மை அடையாளப்படுத்தும் இந்தப் போலிக் கருத்தியல்வாதிகள் தமக்குள்ளும் தமது குருதிக்குள்ளும் ஒடுக்கும் -ஆதிக்கம் செலுத்தும் மரபையே கொண்டிருக்கின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் இற்றைக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாக விவாதித்து வருவதோடு இந்தப் பொய்களை இன்று இரத்தச் சாட்சியோடு அடையாளப்படுத்திய எழுத்தாளர் சயந்தனும் - சோமிதரனும் புலியெதிர்ப்புவாத - போலிச் சாதியொழிப்புவாதிகளால் சீண்டப்படுகின்றனர். அத்தோடு அவர்கள் எழுத்தாளர் சயந்தனையும் - ஆவணப்பட இயக்குநர் சோமிதரனையும் நோக்கி எழுப்பும் கேள்விகள் பரிதாபகரமானவை. ஏன் இந்தத் தள்ளாத வயதில் இருக்கும் முன்னாள் நகரபிதாவை போய் நேர்காணல் கண்டீர்கள்? ஏன் நேர்காணல் செய்பவரின் முகத்தைக் காட்டவில்லை? நேர்காணல் செய்தவருக்கு சம்பளம் கொடுத்தீர்களா? ஆவணப்படம் எப்படி எடுப்பதென சோமிதரனுக்கு தெரியாதா? ஏய் யாழ்ப்பாணத்து சாதி வெறியர்களே,இன்னும் எத்தனை எத்தனை வீடியோக்களை எடுப்பீர்கள் என கேட்கும் பலரும் அந்த மூன்று நிமிட காணொலிச் சாட்சியைப் பற்றியே பேசுகிறார்கள். அதில் செல்லன் கந்தையன் இன்று சொல்லுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அன்று சொன்னது தான் உண்மை என மல்லுக்கு நிற்கும் கல்விமான்களும் - எழுத்தாளர்களும் - எதிர்புரட்சியாளர்களும் -ஒத்தோடிகளும் மாறி மாறி எழுதும் பதிவுகளைக் கண்டால் உண்மைக்கு எத்தனை வீரியம்,அது அநீதியாளர்களையும் இட்டுக்கட்டுபவர்களையும் குலைநடுக்குவிக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது. அப்படியென்ன? செல்லன் கந்தையன் கடந்த காலத்தில் சொன்னார். நகரபிதா அவர்களின் இந்தக்கூற்று ஆனந்தசங்கரியின் அழுத்தத்தின் பேரில் புலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டிருக்கலாம். பழுத்த மிதவாத அரசியலாளரின் திட்டமிட்ட புலியெதிர்ப்பு சூழ்ச்சி அரசியலுக்கு நகரபிதா செல்லன் கந்தையன் அழுத்தங்களை எதிர்கொண்டு இப்படியாக கூறியிருக்கலாம். ஒடுக்கப்படும் சமூகத்திற்கு புலிகள் அநீதி இழைத்துவிட்டதாக ஒரு சித்திரத்தை உருவாக்க யாழ்ப்பாண வெள்ளாள மிதவாத அரசியல் வெட்டிய அகழியாகவும் கருதலாம். இவற்றைக்கடந்து கடந்தகாலங்களைப்போல எந்த அரசியல் நெருக்கடியும் இல்லாதவொரு காலத்தில் அரசியல்களத்தில் சம்பந்தப்பட்ட புலிகளுமில்லை - ஆனந்தசங்கரி இப்போதுவரை அதிகாரத்திலுமில்லாத இன்றைய நாட்களில் முன்னாள் நகரபிதா இதுகுறித்து கூறியிருக்கும் கருத்தினை நாம் பொருட்படுத்தவேண்டும். அவர் அப்போது பேசியதை மட்டுமே தமது பொய்பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய சாராருக்கு இந்தக் கூற்றின் மூலம் நகரபிதா செல்லன் கந்தையன் கொஞ்சம் கசப்புமிக்க ஒருவராக ஆகியிருக்கிறார். ஆனால் எழுத்தாளர் சயந்தனும் - ஆவணப்பட இயக்குநர் சோமிதரனும் இந்தக் காணொலியின் மூலம் ஏற்படுத்திய அதிர்வுகள் கொஞ்சமல்ல. எழுத்தாளர் ஷோபாசக்தி அவர்கள் இந்தச் சர்ச்சைக்குரிய கட்டுரையில் ஏற்பட்டிருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தகவற் பிழைகளை ஒப்புக்கொண்டு அதனை இப்போது தனது இணையத்தளத்தில் மாற்றம் செய்துமிருக்கிறார். ஆனால் ஒருவர் யாரென்று தெரியாமல்,அவர் ஒருவரா இருவரா என்று தெரியாமல் கூட ஒரு திரில்லர் வகையான புனைவாக ஷோபா இவ்வாறு எழுதியிருப்பார். இப்போது இதில் இருக்கும் பிழைகளும் -கருத்தியல் மோசடிகளும் எவ்வளவு பாரதூரமானவை என்று பார்த்தால் விடயம் விளங்கிவிடும். வன்னியில் இருந்து வந்தவர்களாக சொல்லப்படும் “சொலமன், சிறில்” முதலில் புலிகள் இயக்க உறுப்பினர் அல்லர். அவர்கள் இரண்டுபேர் அல்ல. சொலமன் சிறில் என்ற பேர்கொண்ட ஒருவரை இருவராக்கி அவரை புலியாக்கி எழுதப்பட்டிருக்கும் இந்த விநோதமான தகவற்பிழையை ஷோபா ஒப்புக்கொண்டு இப்போது மாற்றம் செய்திருக்கிறார். அதாவது ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்குவது போல எழுதப்பட்ட இந்தக் கட்டுக்கதையில் இப்படி எத்தனையோ தகவற்பிழைகளும் -கண்மூடித்தனமான புலியெதிர்ப்பு பிரச்சாரங்களும் தான் எஞ்சி நின்றன. நகரபிதா செல்லன் கந்தையன் அவர்களை விடுத்து -இந்த விவாதத்தின் பிரதான இடம்வகிப்பவருமான ஊடகவியலாளர்,ஆவணப்பட இயக்குநர் சோமிதரன் யாழ் நூலக திறப்புச் சர்ச்சையில் நேரடிச்சாட்சியாக இருப்பவர். அந்தக் காலகட்டத்தில் அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையொன்று இதற்கு இன்னுமொரு ஆவண சாட்சி. அதுமட்டுமல்லாது கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக புலிகள் செல்லன் கந்தையன் அவர்களை மிரட்டவில்லை என்பதை தொடர்ச்சியாக முகநூல் -மற்றும் இதர சமூக வலைத்தள விவாதங்களில் ஸ்தல சாட்சியாக நின்ற சோமிதரன் கூறிவந்த போதிலும் புலியெதிர்ப்புவாத - போலிச்சாதி ஒழிப்பாளர்கள் இல்லையில்லை புலிகள் மிரட்டினர் - அடித்தனர் என மல்லுக்கு நின்றதன் நீட்சியாக இப்போது அந்த மூன்று நிமிடச் சாட்சிக் காணொலி வெளியாகி இருக்கிறது. இப்போது என்ன தான் பிரச்சினை? பிரச்சனையானது எழுத்தாளர் ஷோபாசக்தியின் கட்டுரையில் நிகழ்ந்திருக்கும் தகவற்பிழையை அடிப்படையாக கொண்டது. புலிகள் இயக்கத்தின் மீது கொண்டிருக்கும் காழ்ப்பையும் அவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் ஒடுக்கப்படுவோரின் அரசியலை ஊறுகாய் போல தொட்டுக்கொள்வது. இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட நகரபிதா செல்லன் கந்தையன் அவர்களே அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொன்னதற்கு பிறகு -இவர்கள் கொள்ளும் பதைபதைப்பும் இவர்கள் எழுதும் பதிவுகளும் எத்தனை எத்தனை வேஷங்களை தோலுரித்து விட்டது காணீர்!. இந்த மூன்றுநிமிட காணொலிச்சாட்சியம் இப்போது புலியெதிர்ப்புவாத அரச ஆதரவு தமிழ் பாசிஸ்டுகளுக்கும் ஒத்தோடிகளுக்கும் கடுமையான கொதிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஷோபாசக்தியின் இப்படியான தகவல் பிழைகளும் திட்டமிடப்பட்ட நோக்கங்களும் - பொய்களும் இப்போது விழிபிதுங்கி நிற்கின்றன. சாதியொழிப்புச் செயற்பாட்டாளர்கள் என்று தம்மை சொல்லிக்கொண்டு அதனை தமது புலியெதிர்ப்பு வாத சந்தர்ப்பவாத அரசியல்களுக்கு மட்டுமே பயன்படுத்தும் அனைத்து யாழ்ப்பாண மேட்டுக்குடி வெள்ளாள சாதிய நோய்மை கொண்ட அறிவுஜீவிகளும் இப்போது அடைந்திருக்கும் பதற்றத்தை பார்க்கையில் உண்மைக்கு எத்தனை வல்லபம் என்று மகிழ முடிகிறது. இவர்களில் பெரும்பாலானோருக்குள் “நிலவிலே பேசுவோம்” மனநிலை இருப்பதை நம்மால் உணரமுடியும். ஒடுக்கப்படும் சமூகத்திற்கான குரல்களாக தம்மை வெளிப்படுத்தும் இவர்களுக்குள் சுருண்டுகிடக்கும் சாதிவெறி அரவத்தின் கோரப்பற்களை யாம் அறிவோம். இந்த விவாதமொரு எடுத்துக்காட்டு -தனிமனித தாக்குதல்கள் -வசைகள் ஏதுமற்று நிகழ்த்தப்படும் ஒரு அரசியல் -சமூக -விமர்சன விவாதமாக உருக்கொண்டு நிற்கிறது. ஆகையால் இந்த விவாதம் எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு. இங்கே யாரும் யாரையும் காழ்ப்போடும் வசவுகளோடும் சீண்டவில்லை. அப்படி அவதூறுகளால் எழுதப்படும் வசைச்சொற்களை இந்த விவாதம் தூக்கி வீசுகிறது. இங்கே இனியொரு அந்தப் வசைப்பண்பாட்டிற்கு இடமில்லை. அவரவர் தரப்பில் நின்றுகொண்டு மிகப்பிடிவாதமாக கதைத்துக்கொண்டிருக்கின்றனர். இங்கே நிகழ்வது விவாதம். காழ்ப்பின் வேட்டை அல்ல. இந்தச் சம்பவத்தை முன்வைத்து எழுத்தாளர் ஷோபாசக்தி மீது தொடுக்கப்படும் காழ்ப்பையும் -வசவுகளையும் அடியோடு மறுக்கிறேன். நமது உரையாடல் பண்பாட்டின் மீது கறைபடியும் செயல். இதனை எந்தத் தரப்பிலிருந்து யார் நிகழ்த்தினாலும் அதனை கண்டிக்கவேண்டிய பொறுப்பு நாகரீக சக்திகளுக்கு இருக்கிறது. இந்தக் கட்டுரைக்கு எதிர்வினையாக என் மீதும் வசவுகளும் -காழ்ப்புகளும் எழுதிக்குவிக்கப்படும் என்பதை அறிந்தும் நான் இதனைச் சுட்டுகிறேன். இந்த விவாதத்தில் எங்கும்போல இங்கும் இரண்டு தரப்புதான். உண்மை - பொய். நான் திரு.செல்லன் கந்தையன் தரப்பு. அதாவது உண்மையின் தரப்பு.. புலிகள் சாதியவாதத்திற்கு ஆதரவாக எப்போதும் நின்றதில்லை. புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால அபிமானிகள் பலர் அமைப்பிலிருந்து பிளவுண்டு போனதற்கான காரணங்களில் புலிகளின் சாதிக்கு எதிரான நிலைப்பாடே காரணம். வெள்ளாளத் தலைமையற்ற ஒரு விடுதலை இயக்கமாக புலிகளே இருந்தனர். அந்தத் தலைமையின் கீழ் ஓரினமாய் அணிதிரண்டனர் ஈழச்சனங்கள் என்பதே விடுதலைப் போராட்ட வரலாறு. மேற்கொண்டு இந்தக்கட்டுரையை நீட்டாமல் இறுவாய் ஒரு கருத்து. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் “இடக்கை” நாவலில் ஒரு காட்சியுண்டு. தனது மரணத்தைப் பற்றி தெரிந்து கொள்ள மன்னர் ஒளரங்கசீப் பாலைவனத்தில் உள்ள ஞானி முகைதீன் அவர்களைச் சந்திப்பார். மன்னரின் பல வேண்டுதல்களுக்கும் இறைஞ்சுதல்களுக்கும் பிறகு அதுவரை அதனைச் சொல்ல மறுத்துவந்த ஞானி முகைதீன் சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால் அதற்கொரு கைமாற்றாக பாலைவனத்தில் இருக்கும் கிணற்றில் இருந்து உள்ளங்கையில் நீர் எடுத்துவரவேண்டுமென ஞானி முகைதீன் கூறுவார். மாபெரும் பேரரசின் மன்னன் அதனை மிக சாதாரணமாக எடுத்துக்கொண்டு நான் அதனை செய்வதாக உத்தரவாதம் தருகிறார்.அதன்பிறகு நாவலில் நிகழும் காட்சி. ஒரு புரிதலுக்காக, இந்த உரையாடலில் வருகிற கிணற்று நீர் - புலியெதிர்ப்பு வாதிகளின் பொய்யூற்றாகவும் - இதில் வருகிற மன்னரை புலியெதிர்ப்புவாதிகளாகவும் பொருள் கொண்டால் ஞானி முகைதீனாக உண்மை உருவகம் கொள்கிறது. உண்மைக்கு முன்னால் இவர்களின் பொய்களைக்கூட இவர்களால் காப்பாற்றமுடியவில்லை. ஏனெனில் இவர்களின் கைகளில் கறைகள் ஏராளம். பொய்கள் ஒழிக ! புரட்டுக்கள் ஒழிக ! போலிகள் ஒழிக! சாதிகள் ஒழிக! என்றபடிக்கு இந்தக் கட்டுரை தன்னை நிறைவு செய்து கொள்கிறது. 20.06.2020 நன்றி - நெடுநிலம் https://www.namathumalayagam.com/2020/06/Jaffnalibrary.html
  17. 1 point
    எம் போராட்ட‌த்தில் இருந்த‌ போது ச‌மாதான‌ கால‌த்தில் ( த‌லைவ‌ரின் அம்மா அப்பாவின் காலில் விழுந்து ஆசிர்வாத‌ம் பெறுவாராம் , அதே த‌லைவ‌ரின் அப்பா அம்மா இற‌ந்த‌ போது எட்டியும் பார்க்காத‌ ஈன‌ பிற‌வி இவ‌ன் ) எம் போராட்ட‌த்தில் த‌லைவ‌ர் பொட்டு அம்மான் , ம‌ற்றும் ப‌ல‌ த‌ள‌ப‌திக‌ள் அவ‌ர்க‌ளின் ம‌னைவிக‌ளை த‌விற‌ வேறு பெண்க‌ளை தொட்ட‌து இல்லை , எம் போராட்ட‌ விதிமுறைக‌ள் ம‌து அருந்த‌க் கூடாது புகை பிடிக்க‌ கூடாது கும்மான் போராட்ட‌த்தில் இருந்த‌ கால‌த்தில் ஒழுங்காய் இருந்து இருப்பானோ என்று நினைக்கும் போது ப‌ல‌ ச‌ந்தேக‌ங்க‌ள் வ‌ருது / கும்மான் என்ற‌ கோமாளியை ப‌ற்றி ர‌திய‌க்கா யாழில் எழுதி த‌னுக்கு இருக்கும் ம‌ரியாதைய‌ தானே தாழ்த்தி கொள்ளுகிறா , எவ‌ள‌வு அசிங்க‌ங்க‌ள் க‌ருணாவை ப‌ற்றி ப‌ல‌ர் எழுதியும் க‌ருணாவை காரி துப்பியும் , ர‌திய‌க்கா போன்ற‌ ஒரு சில‌ர் அண்ண‌ன் என்று எழுதும் போது பார்க்கிற‌வை நினைப்பின‌ம் சாடிக்கு ஏற்ற‌ மூடி போல‌ , இசைக்க‌லைஞ‌ன் அண்ணா போன்ற‌ ஒழுக்க‌மான‌வ‌ர்க‌ளை ம‌ச்சான் என்று அழைத்து விட்டு அதே வாயால் , ஒரு கோமாளிய‌ போய் அண்ண‌ன் என்று சொல்லுவ‌து வேடிக்கையாய் இருக்கு , க‌ருணா எம் போராட்ட‌த்தில் ஒரு ஆணியும் புடுங்க‌ல‌ , த‌லைவ‌ர் க‌ருணாவை த‌லைக்கு மேல‌ தூக்கி வைத்து அழ‌கு பார்த்த‌து தான் த‌லைவ‌ர் செய்த‌ மிக‌ப் பெரிய‌ த‌வ‌று , பொட்டு அம்மானின் சொல்லை த‌லைவ‌ர் கேட்டு இருந்தா 2004 க‌ருணாவுக்கு ச‌ங்கு ஊதி இருக்க‌லாம் , அவ‌ன் துரோக‌த்தின் உச்சிக்கு போன‌ பிற‌க்கு த‌லைவ‌ர் வ‌ன்னிக்கு வ‌ர‌ சொல்லி அழைக்கிறார் , க‌வுசெல்லிய‌ன் அண்ணா இன்னும் ப‌ல‌ருட‌ன் தான் இவ‌ன் த‌ப்பிக்க‌ பார்த்த‌வ‌ன் , க‌வுசெல்லிய‌ன் அண்ணா எம் போராட்ட‌த்த‌ நேசித்த‌ ப‌டியால் க‌ருணாவுக்கு ஆமாம் போட்டு விட்டு வ‌ன்னியில் வ‌ந்து சொன்ன‌வ‌ர் க‌ருணா இப்ப‌டி ச‌தி செய‌லில் இற‌ங்கி விட்டான் ஏதாவ‌து சீக்கிர‌ம் செய்து ஆக‌னும் என்று , க‌ட‌சியில் சொர்ன‌ம் அண்ணா ர‌மேஸ் அண்ணா ர‌ம‌ண‌ன் அண்ணா க‌ருணாவை ம‌ட‌க்கி பிடிக்கும் ந‌ட‌வ‌டிக்கையில் இற‌ங்கின‌வை , க‌ம‌வெறிய‌ன் த‌ப்பிச்சிட்டான் , 2004ம் ஆண்டுக்கு பிற‌க்கு க‌ருணாவின் வாழ்க்கை ஆபாச‌ பெண்க‌ளுட‌ன் , தூ தூ தூ , இவ‌ன் எம் போராட்ட‌ ர‌க‌சிய‌ங்க‌ள எல்லாம் சிங்க‌ள‌வ‌னுக்கு சொல்லிக் கொடுத்த‌ ப‌டியால் தான் சிங்க‌ள‌மும் இந்திய‌மும் எம்ம‌வ‌ர்க‌ளை ஈசியா அழிக்க‌ முடிந்த‌து , பாம்பை க‌ண்டால் ப‌டையே ந‌டுங்கும் , ( க‌ரும்புலிக‌ளைக் க‌ண்டால் இந்திய‌ன் சிங்க‌ள‌ம் இர‌ண்டுமே ந‌டுங்கும் ) எம்ம‌வ‌ர்க‌ளுக்கு வ‌ந்த‌ அனைத்து ஆயுத‌ க‌ப்ப‌லும் வ‌ன்னிக்கு வ‌ந்து இருக்க‌னும் , சிங்க‌ள‌வ‌னுக்கு இன்னும் பேர் இழ‌ப்பை குடுத்து இருக்க‌லாம் ) த‌டை செய்யப் ப‌ட்ட‌ குண்டுக‌ள் தேவைப் ப‌ட்டு இருக்கு எம்ம‌வ‌ர்க‌ளை அழிக்க‌ , அதே த‌டை செய்ய‌ப் ப‌ட்ட‌ ஆயுத‌ம் எம்ம‌வ‌ர் கையில் இருந்து இருக்க‌னும் , வ‌ன்னியில் சின்ன‌ அங்குல‌த்த‌ கூட‌ பிடித்து இருக்க‌ மாட்டார்க‌ள் சொறில‌ங்கா ப‌டையும் குண்டியா ப‌டையும்
  18. 1 point
    அவர் மகிந்தவுக்கு பாடவில்லை தேவாவின் கானங்கள் என்று டக்லஸுக்கு பாடினார்....... என்று கூற முடியாது அவர்களை அவமானம் செய்ய இப்படியான கேவலம் எல்லாம் தமிழ் துரோகிகள் செய்து சுய இன்பம் கண்டு மகிழ்ந்தனர்.
  19. 1 point
    உங்களின் இந்த கொம்மானின் புடுங்குப்பாடுகளில் நான் பொதுவாகவே கருத்து எழுத விருப்பம் இல்லை முன்பும் ஒரு திரியில் நீங்கள் திருப்ப திரும்ப சீண்ட பதில் எழுதினேன் ... உங்களிடம் இருந்து பதில் இல்லை மாறாக எதோ அலம்பி கொண்டு இருந்தீர்கள்......... "தனிப்பட்ட விடயம்" மக்கள் பணத்தை களவெடுத்து கொண்டுபோய் விலைமாதர் போன்ற பெண்களுடன் படுப்பது தனிப்பட்ட விடயமா?
  20. 1 point
    கருணா மகிந்தவின் கட்சியில் இருக்கலாம். சசிகமலன் தீவிர கூட்டமைப்பாக இருக்கக் கூடாதா? பஞ்சத்தில் காவவில்லை. தேவை கருதி இணைக்கப்பட்டுள்ளது. கருணா முதலில் மட்டக்களப்பில் தோல்வி. அப்பாறையிலும் தோல்வி தான். தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்கு அவர் கறிவேப்பிலையாக பாவிக்கப்படுகிறார் என்பது வெளிப்படை. பின் கதவால் மகிந்த ஏதாவது பதவி கொடுப்பார். அதை வைத்து சீவியத்தை நடாத்துவார் என நினைக்கிறேன். 90 ஆயிரம் வாக்குகள் பெற்றால் இரு ஆசனங்கள் கூட்டமைப்புக்கு இரு ஆசனம் கிடைக்கும் என்பதை நீங்களோ யாருமோ பதியவில்லை. அதற்காக தான் அவரின் கருத்தை இணைத்தேன். கருத்து வறட்சி என்பது அவரின் கருத்துக்கு உங்களால் உருப்படியான கருத்தை வைக்க முடியாமல் போனது என்பது தான்.
  21. 1 point
    நில்மினி, பிரான்சில் பல வருடங்களுக்கு முன்.... அறுபதாம் கலியாணத்துக்கு, அறுபது பவுணில் தாலிக்கொடி செய்து, கட்டினார் ஒருவர். மற்றொருவர் தனது பிள்ளையின் பிறந்த நாளுக்கு, கேக் வெட்ட... 22 காரட்டில் உள்ள தங்கக் கத்தியை பாவித்தார்.
  22. 1 point
    வலு கூடிய உந்துருளியில் கண்மண் தெரியாமல் ஓடி மோதுண்டு இறப்பதற்கு பொறுப்பற்ற அவர்களது பெற்றோர்கள் /அதற்கு பண உதவி செய்தவர்கள் தான் காரணம்.
  23. 1 point
  24. 1 point
    நன்றி நில்மினி, நேரமிடுத்து இவ்வளவு தகவல்களை தந்ததிற்கு. பலருக்கும் பயன்படும், அங்குபஞ்சர் & யுனானி இரண்டும் நல்ல மருத்துவ முறைகள், மெட்ராஸ் ஐ நோய்க்கு எதிலும் மருந்தில்லை என நினைக்கின்றேன் ஆனா யுனானி மருத்துவத்திலிருக்கு. என் மச்சான் இதுதான் படித்தவர் கொழும்பில், அவர் எனக்கு கண் நோய் வந்த போது தந்தார் 2-3 மணித்தியாலத்தில் போன இடம் தெரியவில்லை . தீர்க்க முடியா பல வியதிகளை யுனானி, ஆயுர்வேதம், ஆங்கில மருத்துவ முறை மூலம் இயன்றவரை தீர்கின்றார்கள் (கொரோணா விதிவிலக்கு). நல்ல பொதுநாலம் உள்ளவர் யார் என்ன உதவி கேட்டாலும் நேரம் பாராது உதவி செய்வார். அவரைப்பற்றி கனக்க எழுதலாம், அப்படி உதவி வாற போற எல்லோருக்கும், யாரென்றில்லை. இப்ப கைதடியில் தான் வேலை - யாரவது கள உறவுகளுக்கு அவரின் மருத்துவ உதவி ஊரில் தேவையென்றால் கூறுங்கள், அவரை அறிமுகப்படுத்தி விடுகின்றேன் கைதடியில் ஒரு வயது போன வன்னி ஆச்சிக்கு வைத்தியம் பார்த்திகிட்டு இருந்தவர், அவரும் பேரனும் மட்டும்தான், மகள் மருமகன் கடைசி சண்டையில் இறந்துவிட்டார்கள், உறவினர்களும் குறைவு, பாட்டி இறந்துவிட யாரும் பொறுப்பேற்க்கவில்லை, இப்ப தானே த த்து எடுத்து தன் மகன்களுடன் வளர்க்கின்றார்.
  25. 1 point
    இதயத்தில்(அறுவை) ஒருவன்..
  26. 1 point
  27. 1 point
  28. 1 point
    சத்தியம் உங்கள் பலம். சத்திய போராட்டம் வெல்வது வரலாறு.
  29. 1 point
  30. 1 point
    இது ஏமாந்த தமிழர்ற்றை வாக்குகளை அபகரிக்கும் மகிந்த-கருணா கோஷ்டியின் திட்டமிட்ட பிரச்சாரம். கயவனாக மாறிய கருணா சொன்னதும் பொய். சோ எந்த நடவடிக்கையும் எடுக்க முடியா. அதன்பின் மகிந்த கருணாவை புகழ்ந்து விட்ட அறிக்கையும் இது திட்டமிட்ட தேர்தல் பிரச்சார தந்திரம் என்டு சொல்லுது.
  31. 1 point
    சுட்டு கொலை செய்வதும் தவறு, தொடர்ந்து மண் கடத்துவதும் தவறு. இந்த பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலரும் மணல் கடத்தலுக்கு சென்றிகளாக பயன்படுத்த படுகின்றனர்.
  32. 1 point
    இவர்களை கெளரவமாக வைத்திருக்க வேண்டியது எமது கடமை என நம்புகிறேன்.
  33. 1 point
    யாழில் தந்தையர்களாக இருக்கும், அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.
  34. 1 point
    https://www.globalfirepower.com/countries-comparison-detail.asp?form=form&country1=india&country2=china&Submit=COMPARE இந்தத் தமிழ்ப் பொக்கித்தார் இதையும் பார்த்து ஒரு பதிவைப் போடலாமே.
  35. 1 point
    ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இந்த‌ காணொளி பார்த்த‌ பிற‌க்கு சிரிப்பை அட‌க்க‌ முடிய‌ வில்லை , இவ‌ர் சொல்லுவ‌தில் ப‌ல‌ க‌ட்டுக் க‌தை இருக்கு , இவ‌ரின் இந்த‌ காணொளிக‌ளை பார்த்து இந்திய‌ர்க‌ள் வேனும் என்றால் ம‌கிழ‌லாம் , சீனாவின் ப‌ல‌த்தை ப‌ற்றி தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு இவ‌ரின் இந்த‌ காணொளி சிரிப்பை வ‌ர‌ வைக்கும் , இந்தியாவின் ஆள் இல்ல‌ விமான‌ங்க‌ள் சீனா இராணுவ‌ம் இருக்கும் இட‌ங்க‌ளை க‌ண்டு பிடிக்குதாம் , என்ன‌ ஒரு ந‌கைச்சுவை , இவ‌னை இன்னுமா ந‌ம்புகிறீங்க‌ள் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , இந்தியாவுக்கு ப‌ல‌ ந‌ட்பு நாடுக‌ள் இருக்காம் , அந்த‌ ந‌ட்பு நாடுக‌ளின் பெய‌ரை இவ‌ர் தான் சொல்ல‌னும் , ஆசியாவில் சீன‌னின் ஆதிக்க‌ம் ப‌ல‌ நாட்டில் , இந்த‌ சுண்ட‌க்காய் இந்தியாவுட‌ன் சீன‌ன் போர் செய்து வெல்வ‌து அவ‌னுக்கு வாய்க்க‌ த‌ண்ணீர‌ விட்டு கொப்ப‌ளித்து விட்டு துப்புவ‌துக்கு ச‌ம‌ம் , க‌ஸ்மீரில் சீன‌ன் மெதுவாய் கிள்ளி விட்டாலே க‌ஸ்மீர் ப‌த்தி எரியும் , இந்தியா பொல்லை கொடுத்து அடி வாங்கித் தான் ப‌ழ‌க்க‌ம் , இந்த‌ பொக்கிஸ்ச‌ம் அவ‌னுக்கு கொடுத்த‌ ப‌ணிய‌ ச‌ரியாய் செய்கிறார்
  36. 1 point
    யாழ்ப்பாண சமையல் என்று தலைப்பு போட்டது பிழை தான் ..."வெளிநாட்டு கோழிக்கறி" என்று தலைப்பில் போட்டு இருக்கலாம்
  37. 1 point
  38. 1 point
  39. 1 point
    ஒக்ஸ்போர்டில் பட்டம் பெற்றார் மலாலா பெண்களின் கல்விக்கான செயற்பாட்டாளரான பாகிஸ்தானிய பெண் மலாலா யூசுப்ஸாய், பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். 22 வயதுடைய மலாலா, அரசியல், தத்துவம் மற்றும் பொருளியல் துறைகளில் பயின்று பட்டம் பெற்றுள்ளார். பெண்­களின் கல்­விக்­காக குரல்­கொ­டுத்த மலாலா யூசுப்ஸாய், 2012ம் ஆண்டு பாகிஸ்­தானில் தீவி­ர­வா­தி­களால் தலையில் சுடப்­பட்டு படு­கா­ய­ம­டைந்தார். பின்னர் லண்­டனில் தீவி­ர­சி­கிச்சை அளிக்­கப்­பட்டு அவர் குண­ம­டைந்தார். 2014ம் ஆண்டு அவருக்கு சமா­தானப் பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/ஒக்ஸ்போர்டில்-பட்டம்-பெற/
  40. 1 point
    உடையார்... நான்கைந்து வருடங்களுக்கு முன்பே... நந்தன், நான்... மற்றைய நாட்களை விட, சனிக்கிழமை யாழ். களத்திற்கு, குறைவாக வருவதை... எப்படியோ மோப்பம் பிடித்து, தமிழ் சிறி... இன்று, வெட்கத்தில்... வரமாட்டார் என்று ஒரு கருத்தை பதிந்திருந்தார். அவர், அன்று உண்மையை... சொன்னதால், நான் பதில் சொல்லாமல்... கமுக்கமாக, நல்ல பிள்ளையாக இருந்து விட்டேன். இன்று... நீங்கள், இந்தக் கருத்தை எழுதிய போது... எனக்கும்... கூட்டாளி கிடைத்து விட்டார் என்ற துணிவில், உண்மையை சொல்ல வேண்டி வந்திட்டுது. டிஸ்கி: நாளைக்கு விடிய வெள்ளன, எழும்பினால்... மேலே உள்ள கருத்துக்களை, சில வேளை... நான் "எடிற்" பண்ணி விடுவேன் என்பதால்... உடனே வாசிக்கவும்.
  41. 1 point
    நான் வாழும் நாட்டிலும் என்னுடன் நட்புவட்டத்திலுள்ள பலருடனும் நான் கேட்டேன் ஒரு கிறீன் கவுஸ் வாடகைக்கோ சொந்தமாகவோ வாங்கி கீரை கறிவேப்பிலை இவைகளை உற்பத்திசெய்யலாம் என ஒருத்தருக்கும் அக்கறை இல்லை என்னால் தனியாகத் தொடங்கமுடியாது காரணம் பொருளாதாரம் அடுத்தது முழுமையாக இதே வேலையாய் இருந்தால் வருமானம் பிழைச்சால் வீட்டை கடந்தந்தவன் புடுங்கிக்கொண்டு போயிடுவான்.அதுக்குப்பிறகு பொஞ்ச்சதிக்காரி இந்தாளுக்கு ஒரு அறுப்பும் தெரியாது பிழைக்கத்தெரியாத மனிசன் எனப் புறுபுறுத்து பிரசரை ஏத்திவிடும் அதுக்குப்பிறகு மல்லாக்காப் படுக்கவேண்டியதுதான். இப்போதைய எனது நோக்கம் குடாநாட்டிலோ அல்லது வேறெங்கேயாவதோ ஒரு நூறுபரப்புக்காணி வாங்கி ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணை அமைப்பது தவிர நீண்டகாலத்தில் பயன்தரக்கூடிய காட்டு மரங்கள் வளர்ப்பது. கூடிய விரைவில் இங்குள்ள பிக்கல் பிடுங்கல்கள் முடியட்டும் கெலிம யாழ்ப்பாணய தான். வெள்ளை வானில ஏத்திக்கொண்டுபோய் மண்டையில போட்டாலும் பறுவாயில்லை. ஆனால் அப்படி மண்டையில போடுற அளவுக்கு நான் ஒன்றும் முன்னாள் பின்னாள் போராளியோ அல்லது புலம்பெயர் புலி வாலோ இல்லை என்ன விடையம் கண்ட இடங்களில தேவையில்லாமல் கண்டபடி கதைக்கிறது அவ்வளவுதான். ஒர் ஒருங்கிணைந்த விவசாயக் கூட்டுப்பண்ணையை அமைத்த்ச்சுப்போட்டு சாவதே என ஆசை. அதைவிட இன்னுமொறு விடையம் ஸ்பெயின் நாட்டில் உள்பகுதியில் ஸ்பெயின்மக்களால் காலப்போக்கில் கைவிடப்பட்ட கிராமங்கள் நிறைய விற்பனைக்கு வந்திருக்கு அக்கிராமங்களில் இப்போதும் நல்லநிலையில் ஓரிரண்டு வீடுகள் சிலவற்றில் பாடசாலை கீர்நிலை மற்றும் கைவிடப்பட்ட பண்ணைவீடுகள் ஆகியனவும் உள்ளடக்கம் அந்தப்பிரதேசத்தின் நகரபிதா வாங்கோ மீண்டும் யாராவது வந்து இந்த இடங்களை வளப்படுத்துங்கோ எங்களால் செய்யக்கூடுய எல்லா உதவியும் செய்கிறம் என கூறும் ஒரு காணொளியப் பார்த்தேன் பிசாசுக் கிராமங்கள் (கோஸ்ற் கவுஸ்) என பெயரிடபட்ட காணொளிகள் இப்போதும் யூ ரியூப்பில் இருக்கு. நல்ல காலநிலை என்ன விடையம் போய் மினக்கடவேணும். சரிப்பண்ணி எடுத்தைட்டால் புலம்பெயர் தேச உறவுகள் வந்து தங்கி விடுமுறையக் களிக்கும் ஒரு இடமாக மாற்றினால் சீசனுக்குச் சிறீ லங்கா போகும் பலரை அங்கு திருப்பிவிடலாம்
  42. 1 point
    சென்னை ரத்னா கபே இட்டலி சாம்பார்..
  43. 1 point
  44. 1 point
    அடிப்படை தமிழ் விளக்கம் உள்ளவர்ளுக்கு ஒரு சொல் பயன்படுத்தப்படும் இடத்தை பொறுத்து புத்தியை தீட்டியவர் எனவும் அர்த்தப்படும் என புரியும்.
  45. 1 point
    தமிழின உரிமைகளை அடையும் நோக்கில் ஏற்பட்ட அனுபவம், வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்டவர்கள் தவறுகளை திருத்தி, களைகளை/தடைகளை அகற்றி இலக்கு நோக்கி பயணிப்பர். அப்படிப்பட்டவர்கள் வெருளிகளும், எடுபிடிகளும் காட்டும் பூச்சாண்டிகளுக்கு பயப்படமாட்டார்கள்.
  46. 1 point
    கொலைகாரர்களுடன் இணைந்து தமிழின அழிப்புக்கு முண்டு கொடுக்க மட்டுமே உங்களைப் போன்ற போக்கற்ற அரசியல் கோமாளிகளால் முடியும். வரும் தேர்தலில் தமிழின படுகொலைகளுக்கு பல்வேறு விதங்களில் பங்களித்த சகல சிங்கள கட்சிகளின் எடுபிடிகளாக தமிழர் பகுதிகளில் களம் இறங்கியுள்ள சகல வேட்பாளர்களுக்கும் வாக்களிக்காமல் விடுவதன் மூலம் தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்டங்களுக்கு பலம் சேர்க்க முடியும். தமிழரிடம் கொள்ளையடித்த செல்வத்தில் சிறு பகுதி தேர்தல் காலத்தில் இந்த எடுபிடிகளால் கொடுக்கப்படும். அவற்றையெல்லாம் பெற்றுக்கொண்டு விஜயகலா மகேஸ்வரன் உட்பட சகலரும் தோற்கடிக்கப்பட வேண்டியவர்களே!
  47. 1 point
  48. 1 point
    அதற்காக வீணாக்கமுடியுமா? ஊரில் என்றால் ஆட்டுக்குக் கொடுக்கலாம். இங்கே நாமதான் ஆடு
  49. 1 point
    உங்களது கருத்தோடு எனக்கு முரண்பாடில்லை அதேபோல் எனக்கிருக்கும் நிலைப்பாட்டில் நான் தெளிவாக இருக்கின்றேன் உன்னை திருத்து சமூகம் தானாக திருந்தும் தன்னில் மாற்றத்தை கொண்டு வரமுடியாதவனால் மற்றவர்களில் மாற்றத்தை கொண்டு வர முடியாது கூடாது
  50. 1 point
    யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் இறங்குதுறையில் இந்திய பிரஜைகள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீசா நிபந்தனைகளை மீறிய மற்றும் வீசா அனுமதிப்பத்திரம் இல்லாமை ஆகிய குற்றச்சாட்டுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடற்படையினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இறங்குதுறையில் தங்கியிருந்த சந்தேகத்திற்கிடமான இந்நபர்களிடம் சோதனை மேற்கொண்டனர். அவ் வேளையில், அவர்கள் இந்திய பிரஜைகள் என்று உறுதி செய்யப்பட்டதோடு, அவர்கள் நெடுந்தீவில் முன்னெடுக்கப்படும் கட்டுமானத் தொழிலுக்காக இவ்வாறு குறிகட்டுவான் இறங்குதுறையில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களின் கடவுச்சீட்டுகளை பரிசோதித்தபோது, அவை காலாவதியாகியிருந்த தோடு, அவர்களில் சிலர் சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து, இவ்வாறு வேலைவாய்ப்பில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது. இந்நிலையில், இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வீசா அனுமதிப்பத்திரம் காலாவதியானமை, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறியமை காரணமாக கைது செய்யப்பட்ட இச்சந்தேகநபர்கள், மேலதிக விசாரணைகளுக்காக குறிகட்டுவான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/144901