• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard


Popular Content

Showing content with the highest reputation on திங்கள் 22 ஜூன் 2020 in all areas

 1. 4 points
  துல்பென் உங்களுடைய கருத்துக்கள் எல்லாவற்றோடும் நான் ஏற்றுக்கொண்டும் ஒத்துப்போகாமலும் இருந்தாலும் உங்களை ஒரு "Reasonable person" ஞாயமான கருத்தாளர் இப்படித்தான் பார்க்கிறேன். ஆனாலும் மேலே நீங்கள் இணைத்த வீடியோவும் அது சார்ந்த உங்கள் கருத்துக்களும் உங்கள் மீதான பார்வையை சற்றே ஆட்டம் காணச்செய்கிறது. எனக்கு தெரிந்து.... திரும்பவும் சொல்கிறேன் "எனக்கு தெரிந்து" இலங்கையில் எந்த ஒரு பிராமண குருக்களும் இப்படியான பேச்சுக்களில் , கதா பிரசங்கத்தில் ஈடு பட்டது கிடையாது. அதையும் தவிர அவர்கள் தாங்கள் தான் உசத்தி என்று எந்த ஒரு செயலிலும் காட்டியதும் கிடையாது. என்னுடைய நண்பன், எங்கள் ஊரில் வசிக்கும் ஐயரின் மகளை தான் காதலித்தான். அவர்கள் காதல் மிகவும் ரம்மியமானது. நிறைய வெண்பொங்கல், பஞ்சாமிர்தம், அடை, சீடை , முறுக்கு, இப்படி நிறைய திண் பண்டங்கள் எங்களை தேடி வந்த காலம் அது. இந்திய பார்ப்பனிய குப்பைகளை எங்கள் மீது கொட்டி, எங்களையும் அவர்கள் போல் காட்ட முட்படும் உங்கள் செயல் ஞாயம் அற்றது. கண்டிக்கத்தக்கதும் கூட. எம்மவர் மத்தியில் இந்திய பார்ப்பனர்கள் சார்ந்து ஒரு பாரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வரும் நேரத்தில் இது சீண்டிப்பார்க்கும் ஒரு பதிவு மட்டுமே.
 2. 4 points
  தந்தையர் தின வாழ்த்துக்கள் சுயத்தை விற்று உழைப்பை இரைத்து உதிரம் வறண்டு குடும்பத்தை கரையேற்றும் கட்டு மரம் ! தன்னம்பிக்கை தைரியம் தெளிவு- இவை தோய்ந்த மூன்றெழுத்து மந்திரம் தந்தை ! கண்டிப்பு காட்டிடும் கண்கள் - முள்ளாய் அன்பு வழிய அக்கறை கொஞ்சும் அழகு மனம் - மலராய் ! அப்பா ! உந்தன் வியர்வை நாற்றத்தில் உழைப்பு மணக்குது ! நேர்மை மணக்குது ! புகழும் மணக்குது ! ரேகைகள் தேய்ந்து மரத்துப் போன விரல்களின் ஸ்பரிசத்தில் வாழ்வின் சோதனைகளை சொல்லாமல் உணரவைத்தாய் !
 3. 3 points
  தேர்தல் காலம் தெளிவாகவே சிங்களம் தமிழர் பலத்தை(?) சிதைக்க எத்தனிக்கிறது ஒரு வீர வரலாறு காணாமல் ஆக்கப்பட்டு நிகழ்காலத்தில் அங்கலாய்த்துக் கிடப்பதிலேயே கழிகிறது. கலங்கரைகள் தெரியாத இடத்தில் கரை ஏறும் சாத்தியம் இல்லை உறுதியான வழி காட்டிகளை உருவாக்க கூடிய நிலையிலோ அல்லது உருவாகக் கூடிய நிலையிலோ நாம் இருக்கிறோமா என்பது கேள்விக் குறி இங்குநாம் விவாதிக்கும் பாணி எனக்கு கருணாாவைப் பற்றி அதிகம் தெரியும். துரோகி , ஒழுக்கம் கெட்டவன் மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவன் என்ற கருத்துகளுக்கு அப்பால் நகர முடியாத சுழிக்குள் சிக்கி இன்னும் மீளமுடியாத பலவீனத்தை வெளிப்படுத்துவதைத் தவிர நம்மால் வேறெதனையும் செய்ய முடியாது. புதிய வரலாற்றை கட்டி எழுப்ப எந்த கல்லை எவர் சுமக்கலாம்? மன்னிக்கவும் எந்த கல்லை நான் சுமக்கிறேன் என்று வழிகாட்டக் கூடாதா?
 4. 3 points
 5. 2 points
 6. 2 points
  ஆனால் மனித வாழ்வுக்கு எது மேம்பானது? எது கேடுகள் ஆனது? என்று ஒரு புள்ளி இருக்கிறது அல்லவா? "மேலை நாட்டு கலாச்சாரம்" இதுவே என்னை பொறுத்தவரை கேள்விக்கு உள்ளளனது கலாச்சாரமே இல்லாததுதான் மேலைநாடு ஜனநாயக அரசில் என்றாலும் ஒரு பழம்பெரும் கலாச்சாரம் என்றாலும் அதை தன்னகத்தே கொண்டவர்கள் கீழை நாடவர்கள்தான் அமெரிக்க என்றே நாடே 17ஆம் நூற்றாண்டு பின்னானது ஐரோப்பா அமெரிக்க சினிமா ஊடாக உட்புகுவதை உள்வாங்கியது ரோம ராஜ்ஜியம் கத்தோலிக்க மதம் சார்ந்து பழமை பட்டு இருந்ததே தவிர குறிப்பிட்டு ஒரு கலாச்சார பின்னணியை கொண்டிருக்கவில்லை. தமிழர்கள் இப்போ குழப்பவாதிகளாக இருப்பதுதான் பிரச்சனை தவிர கலாச்சாரத்தில் மேன்மை கொண்டவர்கள் என்பது என் தனிப்பட்ட எண்ணம் மாற்று கருத்து இருப்பின் அது ஆக்கபூர்வன்மைத்தாக இருந்தால் ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. எம்மை பொறுத்தவரை எமக்கு தமிழே தெரியாது இப்படியான ஒரு நிலையில் நாம் வாதிடுவதுதான் தவறு ஆனால் மொழிகளில் தமிழுக்கு நிகராக வேறு மொழி இல்லை என்பது தற்பெருமை இல்லை ..........இது உலக மெய். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் முன்பு சங்கம் வைத்து வளர்ந்த மொழி தமிழ் .....ஒவ்வரு வார்த்தையும் இலக்கணம் உடையது நாம் படிக்கவில்லை என்பதால் அதை மறுக்க முடியாது. மற்ற மொழிகளை நாம் தளத்துவதுதான் மடமை ........ ஆனாலும் தமிழ் உறவானது என்று கற்று அறிவதில் தவறு இல்லையே?
 7. 2 points
  அவர் மகிந்தவுக்கு பாடவில்லை தேவாவின் கானங்கள் என்று டக்லஸுக்கு பாடினார்....... என்று கூற முடியாது அவர்களை அவமானம் செய்ய இப்படியான கேவலம் எல்லாம் தமிழ் துரோகிகள் செய்து சுய இன்பம் கண்டு மகிழ்ந்தனர்.
 8. 2 points
  தகவலுக்கு நன்றி உடையார். எனக்கு சில Allergy issues இருக்கு. மகனுக்கும் சில பிரச்சனைகள். கைத்தடி வைத்தியரின் விலாசம் தொலைபேசி இலக்கம் இருந்தால் பகிரவும். கோரோனோ பிரச்சனை தீர்ந்தால் வருட இறுதியில் போகலாம் என்று இருக்கிறேன் . 2018 இல் இந்த சித்த வைத்தியசாலையை பார்க்க போயிருந்தேன். அரசு நடத்தும் இலவச மருத்துவமனை. ஆனால் எமது மக்களுக்கு இதில் ஆர்வம் இல்லை. எல்லோரும் ஆங்கில மருத்துவதையே விரும்புதாக அங்கு வேலை செய்வோர் சொன்னார்கள். மூலிகை செடி எல்லாம் வளர்த்து நல்ல சுத்தமாக வைத்திருக்கிறார்கள். நான் போகும்போது இருவர் மட்டுமே சிகிச்சைக்காக தங்கி இருந்தார்கள். 25 பேர்வரை தங்கி இருக்கக்கூடிய நல்ல வசதியான மருத்துவமனை. இப்படியே போனால் விரைவில் மூடி விடுவார்கள்.
 9. 2 points
  இலங்கையில் உள்ள சைவர்கள் இவர்களைப் போன்றவர்களை கணக்கெடுப்பதும் இல்லை.இவர்கள் பற்றி சிந்திப்பதும் இல்லை. புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் இதில் ஈடுபாடு உள்ளதாகவும் தெரியவில்லை.அது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ளது போல் இலங்கையில் பார்ப்பனியம் என்ற கெடுபிடிகளும் இல்லை. மக்களும் அவர்களை கணக்கெடுப்பதும் இல்லை. எனது பார்வையில் சொல்லப்போனால் இலங்கையில் ஐய்யர்மார் கிட்டத்தட்ட கூலித்தொழிலாளர் போன்றே வாழ்கின்றார்கள்.இந்தியாவில் இருப்பது போல் பார்ப்பனிய திமிரும் அவர்களிடம் அறவேயில்லை.
 10. 2 points
  இப்படியாவனவர்களின் பேச்சை என்னைப் போன்ற இலங்கை சைவர்கள் கேட்பதில்லை, ஆனால் நீங்கள் பொறுமையாக கேட்டது சந்தோசம்...
 11. 1 point
  இரண்டாம் உலகப்போரின் முன்னோடியாக ஹிட்லர் எவ்வாறு ஒஸ்ரியாவையும் செக்கோஸ்லாவாக்கியாவையும் யுத்தமின்றி அரசியல் நகர்வுகள் மூலம் தன் பிடிக்குகள் கொண்டு வந்தார் என்பது பற்றியும், மூனிச் உடன்படிக்கை பற்றியும், ஹிட்லரை பற்றிய சோவியத் யூனியனின் எச்சரிக்கையையும் மீறி பிரித்தானிய பிரதமராக அன்று இருந்த, நெவில் சாம்பர்லைன் போட்ட தப்புக்கணக்குகள் பற்றியும், பிரிட்டனையும் பிரான்சையும் ஏமாற்றி ஹிட்லர் தனது பலத்தை எவ்வாறு பெருக்கிக்கொண்டார் என்பதையும் இந்த பகுதி விளக்குகிறது. ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட போதிலும் சீனாவுடனும் உறவை வளர்த்துக்கொண்டு தான் இருந்தார் ஹிட்லர். ஆட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் அணியை முடிந்தவரை பலப்படுத்த வேண்டும் என்பதால். ஜேர்மனிக்கும் சீனாவுக்கும்மான உறவு 1911 ல் இருந்து தொடங்குகிறது. சீனாவின் தொழில் முன்னேற்றத்திற்கு ஜேர்மனி உதவியும் ஊக்கமும் அளிக்க ஆரம்பித்தது. அப்போது தான் 1920 ம் ஆ்ண்டு இறுதியில் இருந்து 1930 ம் ஆண்டு இறுதிவரை இரு நாடுகளும் இந்த நட்பினால் பயனடைந்தன. தமக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிடம் இருந்து ஜேர்மனி பெற்றுக்கொண்டது. பதிலுக்கு, சீனாவுக்கு ராணுவ உதவிகளைச் செய்து வந்தது ஜேர்மனி. 1934-36 ஆண்டுகளில் ஜேர்மனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பலனாக சீனாவில் ரயில்வே தொழிற்சாலை பலம் பெற்றது. குறிப்பாக, Nanchang. Zhejiang, Guizhou ஆகிய பகுதிகளில் ரயில்வே பாதைகள் அமைக்கப்பட்டன. இதனால் சீனா மட்டுமல்ல ஜேர்மனியும் பலனடைந்தது. ஜேர்மனிக்கு தேவையான மூலப்பொருட்கள், கனிமப்பொருட்களை விரைவாகக் கொண்டு செல்வதற்கு இந்தப் பாதைகள் பயன்பட்டன. இது தவிர, ராணுவ ரீதியிலும் ஜேர்மனி சீனாவுக்கு உதவியது. சியாங்கின் ராணுவத்திற்கு ஜேர்மானிய அதிகாரிகள் பயிற்சியளித்தனர். தளபாடங்களையும் அளித்தனர். சீன ராணுவம் பயன்படுத்திய ஆயுதங்களில் எண்பது சதவிகிதம் பயன்படுத்தலாயக்கற்றவை என்று ஜேர்மனி கருதியது. அவற்றை நவீனப்படுத்தவும் ஜேர்மனி முன் வந்தது சீனாவின் அயலுறவுத்துறை அமைச்சரும் கோமிண்டாங் கட்சியினருமான ஹெச்.ஹெச்.குங் 1937 ல் ஜேர்மனி சென்றிருந்த போது ஹிட்லர் அவரை வரவேற்று உரையாடினார். ஜுலை 7, 1937 ல் இரண்டாவது ஜப்பான் – சீனா போர் மூண்ட போது, ஜேர்மனி சீனாவுடனான தனது உறவை முறித்துக்கொண்டது. அதற்கு காரணம் சோவியத்யூனியன். ஆகஸ்ட் 21,1937 ல் சோவியத்தும் சீனாவும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டன. ஜப்பானின் ஆதிக்கத்ததில் இருந்து சீனாவை மீட்டெடுப்பதற்காக சோவியத் உதவி செய்வதாக ஒப்புக்கொண்டது. பொருளாதார ரீதியிலும் ராணுவ ரீதியிலும் சீனாவுக்கு கைகொடுக்க சோவியத் தயாரானது. ஜேர்மனி சீனாவின் மீது செலுத்தி வந்த ஆதிக்கத்தை முறியடிப்பதே சோவியத்தின் நோக்கமான இருந்தது. ஒஸ்ரியா மீதான ஹிட்லரின் ஆதிக்கம் – இணைப்பு. ஒஸ்ரியாவை ஜேர்மனியுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஹிட்லரின் நீண்ட கால கனவு. ஓஸ்ரியா ஹிட்லரின் பிறந்த மண். எனவே என்னுடையது என்றார் ஹிட்லர். ஓஸ்ரியாவில் பிறந்திருந்தாலும், ஹிட்லர் தன்னை ஒரு போதும் ஓஸ்ரியப் பிரஜையாக எக்காலத்திலும் எண்ணிக்கொண்டதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜேர்மனியைப் பலப்படுத்த ஓஸ்ரியா வேண்டும் என்ற அளவில் தான் அவர் அதை இணைக்க விரும்பினார். நீண்ட நெடிய பிரதேசம் ஒன்று ஜேர்மனியுடன் இணையப்போகிறது. அவ்வளவு தான். 1933 முதல் 1935 வரையில் ஓஸ்ரியா இத்தாலியின் அரவணைப்பில் இருந்தது. ஜேர்மனியை அருகே அண்ட விடாமல் செய்வது தான் இத்தாலியின் பணி. 1934 ல் ஒஸ்ரிய சான்சிலர் டோல்ஃபுஸ் (Engelbert Dollfuss) படுகொலை செய்யப்பட்ட போது இத்தாலி எச்சரிக்கையடைந்தது. இந்த குழப்பத்தை ஜேர்மனி தனக்குச் சாதகமாக திருப்பிக் கொள்ளக்கூடும். கவனம் தேவை. ஃப்ரென்னர் பாஸ் (Brennerpass) என்னும் இடத்தில் இத்தாலி துருப்பகளை குவித்தது. இத்தாலியும் ஜேர்மனியும் நட்பு பேண ஆரம்பித்து விட்ட பின்னர் முசோலினி ஒஸ்ரியாவில் இருந்து தன் பார்வையை திருப்பிக்கொண்டார். 1937ல் ஒஸ்ரிய சான்சிலரான ஸ்லுஷ்னிக் (Schuschnigg) இனி தடையேதும் இல்லை ஹிட்லருக்கு. பிப்ரவரி 1938ல் ஹிட்லர் ஒஸ்ரிய சான்சிலருக்கு பத்து நிபந்தனைகளை அனுப்பி வைத்தார்.. அதில் ஒன்று ஒஸ்ரியாவைச் சேர்ந்த Seyss-Inquart என்னும் நாசி வீரரை ஒஸ்ரியாவின் உள்துறை அமைச்சராக நியமனம் செய்வது. உள்துறை அமைச்சர் என்றால் காவல்துறையும் இவர் கட்டுப்பாட்டில் வரும். ஒஸ்ரியாவை அபகரிப்பதற்கு இது முன்னோடியாக இருக்கும் என்பதால் இந்த நிபந்தனை. எதிர்பார்த்தபடியே, ஓஸ்ரியா இதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆனால் வெளிப்படையாக மறுப்பதென்பது ஹிட்லர் என்னும் காளையின் கொம்பு சீவி விடுவதற்கு சமம் என்று அவருக்கு தெரியும். ஒரு மாற்று ஏற்பாட்டை அவர் முன் வைத்தார். ஓஸ்ரியாவில் ஒரு வாக்கெடுப்பை நடத்துகிறோம். ஒஸ்ரியா தனித்து இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். ஹிட்லர் இதற்கு தயாராக இல்லை. ஓஸ்ரிய மக்களை நம்புவதற்கில்லை. ஜேர்மனி வேண்டாம். தனியாகவே இருக்கிறோம் என்று அவர்கள் வாக்களிக்கலாம். ஜேர்மனியோடு சேர்வதாக அவர்கள் வாக்களிப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம். ஓஸ்ரியா வேண்டும் என்றால் கொடுத்துவிடுவது தானே! ஏன் இதற்கு இப்படி பிகு செய்து கொள்ளவேண்டும்? மறுத்தார் ஹிட்லர். எனக்கு வாக்கெடுப்பில் நம்பிக்கை இல்லை நண்பரே. எனக்கு ஒஸ்ரியா வேண்டும். நீங்கள் ராஜினாமா செய்துவிட்டு எங்காவது சென்று மகிழ்ச்சியுடன் இருந்து கொள்ளுங்கள். உங்கள் மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை. ஒரு வேளை நீங்கள் முரண்டு பிடித்தால் ராணுவத்தை செலுத்தவேண்டிவரும். வேறு வழி தெரியவில்லை ஒஸ்ரிய சான்சிலருக்கு. தன் காபினெட் அமைச்சர்களோடு சேர்ந்து கும்பலாக ராஜினாமா செய்தார். Seyss-Inquart எந்த விதமான இடைஞ்சலும் இல்லாமல் அரசாங்கத்தைக் கைப்பற்றினார். மார்ச் 1938 ல் அவர் ஜேர்மன் ராணுவத்தை அரச மரியாதையுடன் வரவேற்றார். மார்ச் 15 ம் திகதி ஹிட்லர் பெரும் ஆரவாரத்துக்கிடையே வியன்னாவில் நுழைந்தார். வீதிகளில் ஓஸ்ரிய மக்கள் திரண்டு வந்து ஹிட்லரை வாழ்த்தி ஆரவாரம் செய்தனர். தனக்கு இத்தனை பெரிய ஆதரவு கிடைக்கும் என்று ஹிட்லரே எதிர்பார்த்திருக்கவில்லை ஒஸ்ரியா, ஜேர்மனியுடன் ஒட்டிக்கொண்டது. இந்த இணைப்பின் Anschluss ன் பின்னர் Schluschnigg சிறைப்பிடிக்கப்படுகிறார். ஒஸ்ரிய யூதர்கள் தேடிப்பிடித்து சிறையில் அடைக்கபட்டனர். தாக்கபட்டனர். யூதர்கள் தங்கள் உரிமைகள் அனைத்தையும் அந்த கணமே இழந்தனர். கை, கால்களில் விலங்கு பூட்டி யூதர்கள் தெருகளில் இழுத்துச் செல்லப்பட்டதை நாசிகளும் ஒஸ்ரியப் பிரஜைகளும் பார்த்துக் கொண்டு நின்றனர். முசோலினி சும்மா இருந்தார். பிரிட்டனும் பிரான்ஸும் வழக்கம் போல் எதிர்க்குரல் எழுப்பின. இது அநீதி, ஒஸ்ரியாவின் இறையாண்மை பாதிக்கபட்டுவிட்டது. ஹிட்லர் ஒப்பந்தத்தை மீறுகிறார் என்று தொண்டு கிழிய இரு நாடுகளும் கத்தின. பிறகு வழக்கம் போல அடங்கிவிட்டன. செக்கோஸ்லாவாக்கியா மீது குறி ஹிட்லரின் அடுத்த குறி செக்கோஸ்லாவாக்கியா என்று அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஓஸ்ரியாவை சுருட்டிக் கொண்டவர் அடுத்து இங்கே தான் வரவேண்டும். ஏப்ரல் 1938 ல் இருந்தே ஹிட்லர் போர்த்திட்டங்கள் தீட்ட ஆரம்பித்திருந்தார்.. ஒஸ்ரியா ஜேர்மனியுடன் ஒட்டிக்கொண்ட மகிழ்ச்சியில் இருந்தார் அவர். ஒரு வெற்றி இன்னொரு வெற்றிக்குத்தான் இட்டுச்செல்லும். சென்றாக வேண்டும். எந்தவொரு திட்டமும் தோல்வியடையக்கூடாது.. ஹிட்லருக்கு. அல்லது தோல்வியடையும் எந்த திட்டத்தையும் தீட்டக்கூடாது. ஒஸ்ரியா வேண்டும் என்றால் அது வந்தாக வேண்டும். செக்கோஸ்லாவியா வேண்டும் என்றால் அது கிடைத்தாக வேண்டும். மே மாத இறுதியில் ராணுவத்திற்கு ஹிட்லர் உத்தரவிட்டார். செக்கோஸ்லாவாக்கியா என்ற பெயரில் இனி ஒரு நாடு உலக வரைப்படத்தில் இருக்கக்கூடாது. இந்த வெறிக்கு காரணம் அவருக்கு கிடைத்த உளவுத்தகவல்கள். ஓஸ்ரியாவைப் போல் செக் அடிபணியாது. காரணங்கள் எனக்கு வேண்டாம் என்றார் ஹிட்லர் சிடுசிடுப்புடன். எனக்கு வேண்டியது செக்கோஸ்லாவாக்கியா மட்டுமே. மேற்குலக நாடுகளுடன் செக் நல்லுறவு கொண்டிருப்பது ஹிட்லருக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக, லீக் ஒஃப் நேஷனஸுடன் கொண்டிருந்த உறவு சுத்தமாக பிடிக்கவில்லை. செக்கோஸ்லாவாக்கியாவில் அப்போது 7.1 மில்லியன் செக் மக்களும் 3.3 மில்லியன் ஜேர்மானியர்களும், 2.6 மில்லியன் ஸ்லாவாக்கியர்களும், 720.00 ஹங்கேரியர்களும், ஒரு லட்சம் போலந்து மக்களும் பிற ரோமானியர்களும் யூகோஸ்லாவியர்களும் ருதேனியர்களும் இருந்தனர். ஹிட்லர் குறிப்பாக கவனித்தது 3.3 மில்லியன் ஜேர்மனியர்களை. சூடெடன்லாந்து (Sudetenland) ஜேர்மனியர்களை. ஜேர்மனியையும் செக்கை இணைத்துக்கொள்ள இந்த ஒரு காரணம் போதாதா? செக் பெரும்பான்மை மக்கள் வசிக்கும் ஒரிடத்தில் ஜேர்மனியர்களால் எப்படி சுதந்திரமாக வாழ முடியும்.? 1930 களில் செக்கோஸ்லாவாக்கியா பொருளாதார சிக்கலில் சிக்கித்தவிக்க ஆரம்பித்தது. அதுவரை ஒன்றிணைந்து வாழ்ந்து வந்த கதம்ப மக்கள் நெருக்கத்திற்கு உள்ளானார்கள். ஸ்லாவாக்கியர்களும் ஜேர்மனியர்களும் செக் மக்கள் மீது குற்றம் சாட்டினர். எங்கள் வாழ்க்கை நிலை தேய்ந்து போனதற்கு காரணம் பெரும்பான்மையினரான செக் இனம் தான். எங்களுக்கு இங்கே போதுமான சுதந்திரம் இல்லை. வேலை வாய்ப்புக்கள் இல்லை. சமத்துவமாக நாங்கள் நடத்தப்படுவதில்லை. ஹிட்லர் காத்திருந்தது இதற்காக தான். எனதருமை ஜேர்மானியர்களே, கவலை வேண்டாம். நான் இருக்கும் போது உங்களுக்கு என்ன கவலை_ சுண்டைக்காய் தேசம் தான் என்றாலும் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. செக், சோவியத்துக்கு இணக்கமான நாடு. பிரான்ஸுடன் ஒப்பந்தம். போட்டுக்கொண்டுள்ள நாடு. ஆக்கிரமிப்பு என்று ஆரம்பித்தால், சோவியத்தும் பிரான்ஸும் மட்டுமல்ல, பிரிட்டனும் கூட்டாக வந்து எதிர்க்கும். ஹிட்லருக்கும் இது தெரியும். ஆனால் அவர் பெரிதாக கவலைப்படவில்லை. ஹிட்லர் கவலைப்படவில்லை என்றாலும் அவர் ராணுவத்தில் உள்ள சில முக்கிய தலைகள் கவலைப்பட்டன. பிரான்ஸை பகைத்துக் கொண்டு எதற்காக இந்த ஹிட்லர் செக்கை ஆக்கிரமிக்க விரும்புகிறார்? இது வீண் வேலை அல்லவா? இங்கிருக்கும் ஜேர்மானியர்களுக்காக மாத்திரம் கவலைப்பட்டால் போதாதா? சூடடென்லாந்து எக்கேடு கெட்டால் நமக்கென்ன? எதிர்ப்பு தெரிவுக்கும் வகையில் ராணுவ தலைவராக இருந்த கேர்ணல் லுட்விக் பெக் ஓகஸ்ட் 1938 ல் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவர் இடத்திற்கு, ஜெனரர் ஹால்டர் என்பவர் நியமிக்கப்ட்டார். அவருகும் ஹிட்லரின் திட்டத்தில் உடன்பாடில்லை. கல்லானாலும் ஹிட்லர் என்று இருந்துவிட வேண்டியதுதானே? குழம்பித் தவித்த ஹால்டரைத் தொடர்பு கொண்டார் லுட்விக்பெக். இருவரும் பேசினார்கள். ஒரு கட்டத்தில், இருவரும் இணைந்து சுவார்ஸியமான ஒரு திட்டத்தை வகுத்தார்கள். நாம் ஏன் ஹிட்லரை தூக்கியெறியக்கூடாது? திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பிரிட்டன் பிரதமர் நெவில் சாம்பர்லைனைத் (Neville Chamberline) தொடர்பு கொண்டனர். ஹிட்லரை கவிழ்க்க எங்களுக்கு உதவுவீர்களா? சாம்பர்லைன் சிரித்துக்கொண்டார். ஹிட்லரையாவது கவிழ்ப்பதாவது? மூனிச் உடன்படிக்கை - Munich Agreement சாம்பர்லைன் வேறு திட்டம் வைத்திருந்தார். செப்ரெம்பர் 15 ம் திகதி விமானம் மூலம் ஜேர்மனி வந்து ஹிட்லரைச் சந்தித்தார். பேசினார். ஹிட்லர் உங்களுக்கு சூடெடன்லாந்து தானே வேண்டும். அது உங்களுடையது. போர் வேண்டாம். பிரான்ஸ் உங்கள் மீது கை வைக்காமல் நான் பார்த்துக் கொள்ளுகிறேன். போதுமா? ஆனால், ஹிட்லருக்கு ஏனோ திருப்தி ஏற்படவில்லை. ஜேர்மனியில் கவலை அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. ஹிட்லர் பிரான்ஸையும் பிரிட்டனையும் சீண்டுகிறார். விரைவில் அவர்கள் நம்மைத் தாக்கப்போகிறார்கள் என்னும் செய்தி பரவ ஆரம்பித்திருந்தது. சரி, ஒப்பந்தம் மூலமாகவே முடித்துக் கொண்டுவிடலாம்., செக்கை இப்போதைக்கு விட்டுவிடலாம் என்று முடிவு செய்தார் ஹிட்லர். அமைதி உடன்படிக்கையை உருவாக்கும் பணியை தன் நண்பர் முசோலினியிடம் வழங்கினார். செப்ரெம்பர் 29, 1938 ல் மூனிச் நகரில் (München) கூடினார்கள். ஹிட்லர், முசோலினி, சாம்பர்லைன் மற்றும் பிரான்ஸ் பிரதமர் டிலாடியர் (Edouard Daladier). எல்லாம் தீர்ந்தது என்னும் நம்பிக்கையில் பிரிந்தார்கள். சாம்பர்லைன், பிரிட்டன் வந்த இறங்கியதுமே தன் கையில் இருந்த ஒப்பந்தத்தை உயரே தூக்கிப் பிடித்து அசைத்துக் காட்டினார். பார்த்தீர்களா? ஹிட்லருக்கு போய் பயப்பட்டுக்கொண்டிருந்தீர்களே! கையெழுத்து போட்டிருக்கிறார் பாருங்கள். இந்தப் பிரச்சனை மட்டுமல்ல, இனி ஐரோப்பாவில் அவர் மூலமாக எந்த பிரச்சனை வந்தாலும் உட்கார்ந்து பேசி முடிவு கட்டிவிடலாம். மோதல், போர் எதுவும் இனி இங்கே இருக்காது. திருப்திதானே? ஆனால் பின்னர் நடந்தது வேறு. சம்பர்லைன் எதிர்பாரத்தபடி ஹிட்லர் திருப்திப்படவில்லை. அமைதியாக இருக்கவில்லை. திரும்பவும் ஆரம்பித்தார். மார்ச் 1939 ல் செக் அதிபரை ஹச்சா ( Emil Hacha) என்பவரை அழைத்து நச்சரிக்க ஆர்ம்பித்தார். சூடெடன்லாந்து எங்களுடையது தான். மிச்சமிருப்பதையும் அப்படியே கொடுத்துவிட்டால், நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். செக் அடிபணிய மறுத்தது. மார் 15 1939 அன்று செக்கோஸ்லாவாக்கியாவில் தலைநகரம் பிராக் (Prag) கைப்பற்றப்பட்டது. ஹிட்லரின் வாழ்க்கையில் இது மிக முக்கிமான கட்டம். எதுவும் செய்யலாம், தட்டிக்கேட்க யாருமில்லை என்று அவர் திருப்த்தியடைந்தது அப்போது தான். செக்கோஸ்லாவாக்கியாவை ஹிட்லர் ஆக்கிரமித்தபோது அமைதியாக இருந்ததன் மூலம் ஹிட்லரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார் சாம்பர்லைன். அதெப்படி நீ ஒப்பந்தத்தை மீறலாம் என்று அவர் மிரட்டவில்லை. மீறினால் படை கொண்டு வருவேன் என்று மிரட்டவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் எதையெல்லாம் ஜேர்மனிக்கு பிரிட்டன் மறுத்ததோ அனைத்தையும் பிரிட்டனே இப்போது வழங்கியது. ரைன்லாந்தை ராணுவமயமாக்குகுதல், ஆயுதங்கள் தருவித்தல் போன்ற விடயங்களில் பிரிட்டன் அமைதி காத்தது. அங்காங்கே வதை முகாம்களை அமைத்து யூதர்களை கொல்லுதலும் போது அது பற்றி அறிந்திருந்தும் அது உள்நாட்டு பிரச்சனை என்று சமாதானம் சொல்லி அமைதியாக இருந்தது. சூட்டன்லாந்து என்று முழுவதுமாக உச்சரித்து முடிப்பதற்குள் பிரிட்டன் அளித்துவிட்டது. அடிபணிய மாட்டோம் முடிந்தவரை எதிர்க்கப்போகிறோம் என்று செக் உறுதி பூண்ட போது பிரான்ஸும் பிரிட்டனும் செக்கை மிரட்டியது. அநாவசியாமாக எதிர்ப்பு காட்டி செத்துப்போகாதீர்கள். செக் பிரதேசங்களை ஜேர்மனி கைப்பற்றுவதற்கு சில வாரங்களுக்கு முன்பே லண்டன் தொழிலதிபர்களும் ஜேர்மன் தொழிலதிபர்களும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு விட்டார்கள். செக்கில் தொழிற்சாலைகளை நிர்மாணிக்கவும் புனரமைக்கவும் செக்கை விட்டுத்தர மட்டுமல்ல, ஐரோப்பாவின் மிகப் பிரபல்யமான ஆயுதத் தொழிற்சாலையான ஸ்கொடாவை (Skoda) ஜேர்மனிக்கு அள்ளிக்கொடுக்கவும் சாம்பர்லைனும் டலாயரும் தயங்கவில்லை. ஒரே காரணம் சோவியத் எதிர்ப்பு. சோவியத்யூனியனை எதிர்த்து அழிக்க ஹிட்லரை விட அடாவடியான வேறு ஆள் கிடைப்பார்களா? சோவியத் கோரிக்கை – பிரிட்டனின் அலட்சியம் பிரிட்டனையும் பிரான்ஸையும் எரிச்சலடையச் செய்யும் வகையில், செக் ஆக்கிரமிப்பிலும் குறுக்கிட்டது சோவியத்யூனியன். செக் நிலப்பரப்புகளை ஜேர்மனி ஆக்கிரமித்தது செல்லாது. இது அத்துமீறல் என்று கண்டனம் செய்தது சோவியத். உடனடியாக பிரிட்டனை தொடர்பு கொண்ட சோவியத், ஹிட்லரை தட்டிவைக்க ஒரு அவசர மகாநாடு கூட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. பிரிட்டன் பிரான்ஸ் , போலந்து, ரூமேனிய, துருக்கி, சோவியத் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஹிட்லர் அடுத்தடுத்து கெடுதல் செய்யாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். ஜேர்மனியின் அத்துமீறல் ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும். சாம்பர்லைன் மறுத்து விட்டார். இப்போது என்ன அவசரம். ஹிட்லரால் பெரிய அபாயம் வரும் என்று எனக்குத் தோன்றவில்லை. சாம்பர்லைனுக்கும் டலாடியருக்கும் தான் அப்படித்தோன்றவில்லையே தவிர பிரிட்டன், பிரான்ஸ் மக்களுக்கு ஹிட்லரைப் பற்றி தெரிந்திருந்தது. ஹிட்லரை இப்போதே அடக்கிவிட வேண்டும் என்னும் சோவியத்தின் குரலை அவர்கள் ஆமோதித்தனர். சோவியத்துடன் இணைந்து போரிடுவது அமைதியைக் கொண்டுவரும் என்றார் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் லோயிட் ஜோர்ஜ்.( Lloyd George) பிரான்ஸின் முன்னாள் விமான மார்ஷல், பியரி காட் சோவியத்தை ஆதரித்தார். ஜனநாயக நாடுகளுக்கு சோவியத்தின் கூட்டு நன்மையே கொண்டு வரும் என்றார் அவர். நியூயோர்க் ஹெரால்ட் ட்ரிபியூன் (மே 4, 1939) வெளியிட்ட செய்தியின் படி 98 சதவீத பிரிட்டிஷ் வாக்காளர்கள் சோவியத்தின் அழைப்பை ஏற்று, சோவியத்துடன் இணைந்து போரிட விருப்பம் தெரிவித்தார்கள். சோவியத் பல்வேறு அழைப்புக்களை பிரிட்டனுக்கும் பிரான்ஸிற்கும் விடுத்தது. மூவரும் இணைவோம். நாசிகளுக்கு எதிராக போராடுவோம். ஐரோப்பாவைக் காப்போம். ஒவ்வொரு முறை அழைப்பு வரும் போதும் அதை ஒத்திவைத்தார் சாம்பர்லைன். பார்க்கிறேன் என்றார். பரிசீலிக்கிறேன் என்றார். மாறாக ஹிட்லருடன் கூட்டுச் சேர்வதில் அவர் மேலதிக ஆர்வம் காட்டினார். ஹிட்லருடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்வதில், ஹிட்லரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதில். ஹிட்லரிடம் இருந்து அமைதியைக் கேட்டுப் பெறுவதில். ஹிட்லரின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதில். கன்சர்வேடிவ் கட்சியில் இருந்து சாம்பர்லைனுக்கு எதிர்ப்புகள் வலுத்தன. மே 7 ம் திகதி ஹவுஸ் ஒஃவ் காமன்ஸில் உரையாற்றிய சேர்ச்சில், சோவியத்துடன் இணைவது தான் நமக்கு நல்லது என்று குறிப்பிட்டார். முடிந்தவரை எதிர்ப்பைத் துரிதப்படுத்த வேண்டும் என்று சோவியத் விரும்பியது. முடிந்தவரை தள்ளிப் போடலாம் என்று பிரிட்டன் விரும்பியது. செக் கபளீகரம் செய்யப்பட்டு பத்து வாரங்கள் கழிந்திருந்தன. அலட்டிக்கொள்ளவேயில்லை பிரிட்டன். ஆகவே பிரான்ஸும். இனி பிரிட்டனையும் பிரான்ஸையும் நம்பிக் கொண்டிருக்க முடியாது என்னும் முடிவுக்கு சோவியத் வந்து சேர்ந்தது. பிரிட்டன் அரசாங்கத்தின் ஒரு பிரிவு (British Parliamentary Secretary of Overseas Trade) ஜேர்மனியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்த சமயம் அது. அரை பில்லியன் அல்லது ஒரு பில்லியன் பவுண்ட் வரை அளிக்கத்தயாராக இருப்பதாக பிரிட்டன் அவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தது. பிரிட்டன் ஹிட்லரை மறைமுகமாக ஆதரித்துக் கொண்டிருக்கிறது. ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. கண்டு கொள்ளாமல் இருக்கிறது. பிரிட்டன் மட்டுமல்ல எந்தவொரு ஐரோப்பிய நாடும் ஜேர்மனியின் செயல்களைத் தட்டிக்கேட்பதாக தெரியவில்லை. சோவியத் அயல் விவகார கமிட்டியின் தலைவர், Anderei Zhdanov பிராவ்தா இதழில் (ஜுலை 29, 1939) தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார். பிரிட்டனுடனும் பிரான்ஸுடனும் சோவியத் மேற் கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளுக்கு எந்த வித உருப்படியான பலனும் கிடைக்கவில்லை. சோவியத்துடன் கூட்டுச்சேர இந்த இரு நாடுகளுக்கும் விருப்பமில்லை. ஹிட்லரைக் கண்டிக்கும் எண்ணமும் இவர்களுக்கு இல்லை. இவ்வாறு ஐரோப்பிய நாடுகள் அரசியல் நகர்வுகளில் ஈடுபட்டிருக்க ஹிட்லர் தனது கனவை நோக்கிய அடுத்த கட்ட செயற்பாடுகளில் அமைதியாக ஈடுபட தொடங்கி இருந்தார். ஆம் ஹிட்லரின் அடுத்த இலக்கு போலந்து. இன்னும் ஒரு மாதத்திற்குள் தாக்கப்போகிறார். ஐரோப்பா முழுவதும் செய்தி பரவிவிட்டது. கடைசியாக ஒருமுறை பேசிப்பார்த்தது சோவியத். இப்போதும் கெட்டுப் போய்விடவில்லை. பிரிட்டனும் பிரான்ஸும் தங்கள் ராணுவக் குழுக்களை மொஸ்கோவுக்கு அனுப்பிவைத்தால் ஒன்றிணைக்கப்பட்ட திட்டம் ஒன்றை உருவாக்கமுடியும். ஹிட்லர் போலந்தை தாக்குவதை தடுத்து நிறுத்தவும் முடியும். இந்த முறை, சோவியத்தின் அழைப்பை உதாசீனப்படுத்த முடியவில்லை. செய்தால் எதிர்ப்புக்கள் கிளம்பக்கூடும். ஆகவே பெயருக்கு இரண்டு குழுக்களை அனுப்பி வைத்தன பிரிட்டனும் பிரான்ஸும். இரண்டும் ஆடி அசைந்து மொஸ்கோவுக்கு வந்து சேர்ந்தன. சோவியத் முன்வைத்த திட்டம் இதுதான். ஹிட்லர் போலந்தை தாக்கினால் ஒன்று சோவியத் துருப்புகளை அனுப்பலாம். இரண்டு, கிழக்கு ப்ரெஷ்யாவை எதிர்த்து போலந்து ஊடாக மத்திய ஜேர்மனியை எதிர்த்துச்செல்ல வேண்டும் போலந்தை கேட்டுவிட்டு சொல்கிறோம் என்று நேரம் வாங்கிக்கொண்ட பிரிட்டனும் பிரான்ஸும், இது சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டன. போலந்து கேட்கவில்லையாம். சோவியத் உதவிக்கு வருவதை போலந்து விரும்பவில்லையாம். ஹிட்லருக்கு அடிபணிந்து போ என்று செக்கை மிரட்ட முடியும். ஆனால் சோவியத்தின் உதவியை ஏற்றுக்கொள் என்று போலந்திடம் சொல்ல முடியாது. (தொடரும்) நூல் - இரண்டம் உலகப்போர் எழுதியவர் - மருதன் வெளியீடு - கிழக்கு பதிப்பகம் , மே 2009
 12. 1 point
  பிற சமய குருக்கள் துறவிகளுடன் ஒப்பிடும் போது சவ சமயக் குருக்களுக்கு போதிய வருமானமும், மரியாதையும் ஈழத்தில் வழங்கப்படுவதில்லை. கோவிற் காணிக்கையில் போதிய வருமானமின்றி குடும்பம் நடாத்தும் குருக்கள் ஈழத்தில் அனேகர் உள்ளனர். பிற சமய முதல்வர்களுக்கு வழங்கப்படும் கெளரவம் சைவ சமயக் குருக்களுக்கும் வழங்கப்பட வெண்டும். பிராமணர்கள் என்கின்ற சாதீய அடிப்படையில் இதனை நான் குறிப்பிடவில்லை. பிராமணர்கள் அல்லாதோரும் குருக்களாக இருக்கும் பட்சத்தில் எனது நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்கும்.
 13. 1 point
  ஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம் எனும் திரியில் கள உறுப்பினரை சீண்டும் வகையில் அமைந்த கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன. கள உறுப்பினர்கள் கருத்தாடற்பண்பைக் கடைப்பிடித்து கருத்துக்கள் வைக்கப்படவேண்டும்.
 14. 1 point
  அவர் வெல்லுவார் என்று எங்கும் நான் சொல்லவில்லை ....வென்றால் சந்தோசம் ஆனால் காலம் முழுக்க அடிமையாய் இருக்க வேண்டும் என்பது அந்த மக்களது விதி என்றால் யாரால் மாத்தேழும்
 15. 1 point
  வலது இடது என்று பிரிந்து நின்று கொல்லுப்பட்டாலும் சிங்கள நாட்டின் நன்மை கருதி தமக்கு பிடிக்கவில்லை என்றாலும் ஒத்து போவது சிங்களவன் குணம் உதாரணம் சிங்கள ராணுவத்தை 3000 பேரை ஒத்தை இரவில் கொன்றேன் என்று சொல்லியும் கருணாவை தங்கள் இனத்தின் நன்மைக்கு விட்டு வைத்திருக்கிறார்கள் .ஆனால் நாங்கள் எல்லாத்துக்கும் உணர்ச்சி வசப்பட்ட அரசியல் செய்கிறம் விளைவு பத்துவருடமாகியும் புலித்தடை என்பது தொடர்கதையாகுது . சீமானை எதிர்ப்பவர்கள் இரண்டு வகையாக பார்க்கலாம் ஒரு பகுதி ஆரம்பத்தில் அவர் செய்த கத்துக்குட்டி வேலைகளில் பேச்சுக்களில் அவநம்பிக்கையடைந்து திட்ட தொடங்கியவர்கள் இன்னும் நிறுத்தவில்லை இன்னும் குழுசேர்ந்து கல்யாண வீடுகளிலும் கருமாரி வீடுகளிலும் சீமான் எதிர்பார்ட்டி என்று சொல்லி கொண்டு இருக்கினம் அதில் என்ன பெருமை என்று தெரியவில்லை ? இரண்டாவது கூட்டம் புலி இனி மீளாது என்று தெரிந்து கொண்டு கடைசி கட்ட யுத்தத்தில் புலம்பெயர் மக்களிடம் லோன் எடுத்து தாங்கோ என்று பலவிதமாய் காசை அடித்த கூட்டம் இவர்கள்தான் சீமான் எதிர்ப்பில் மும்முரமாய் இருப்பவர்கள் காரணம் இனி ஒரு தலைமை உருவாகுவதை அது தமிழ்நாடோ அல்லது ஈழத்திலோ இருக்க கூடாது .அப்படி வந்தால் தாங்கள் ஆண்டு அனுபவித்துக்கொண்டு இருக்கும் சொத்துக்கள் திருப்பி கொடுக்கவேண்டி வந்திடும் என்ற பயம் . இங்கு பகிடி என்னவென்றால் ஒருகதைக்கு ஐநாவில் வாக்கெடுப்பு மூலம் ஈழம் கிடைத்தாலும் அது சீமானால் வந்தது என்றால் அப்படி ஒரு தீர்வே வேண்டாம் என்று ஐநா முன்றலில் போய் போராட்டம் நடத்தும் அளவுக்கு சீமானில் வெறுப்பு மண்டி போயுள்ளது இரண்டு பகுதிக்கும்
 16. 1 point
 17. 1 point
  இதே கேள்வியை பலமுறை நானும் கேட்டுவிட்டேன் சகோதரி பதில் உங்களிடமிருந்தும் இல்லை அவ்வாறு வந்தாலும் அதுவும் மற்றவர்களை வழிகாட்டுங்கள் என்பதாகத்தானே இருக்கிறது????? இந்த திரிக்குள்ளும் உங்களுக்கிருக்கும் ஆர்வத்தையும் விரக்தியையும் பார்க்கும் போது இது சம்பந்தமான உங்களின் வழி காட்டுதலினூடான வேறு ஒரு திரியை எதிர்பார்க்கின்றேன்???
 18. 1 point
  வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு ஆலய வருடாந்த உற்சவம் நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் யாழின் பல பிரதேசங்களிலிருந்தும் பக்தர்கள் ஆலயத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழலில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆலய வளாகத்திற்குள் குவியும் பக்தர்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரும் முப்படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் சிலரும் முப்படையினரும் பாதணிகளை கழற்றாது ஆலயத்திற்குள் பிரவேசித்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இவர்களின் இந்த செயற்பாட்டை அவதானித்த பக்கதர்கள் ஆலயத்தின் தொன்மையையும் மதிப்பையும் சீர்குலைக்கும் வகையில் செயற்படுகின்றனர் என கடும் விசனம் தெரிவித்துள்ளதுடன், அதிருப்தியும் வெளியிட்டுள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/145555?ref=home-imp-parsely
 19. 1 point
  கு சா அண்ணை திருமண நிகழ்வுகள், சடங்குகள் என்பன அன்றிலிருந்து இன்றுவரை மாற்றம் பெற்று வருகின்றன. ஆடல்கள், பாடல்கள் அன்றும் இருந்தது இனியும் இருக்கும்.உணவு, உடை என்பனவற்றில் மாற்றம் ஏற்படுவது புலம்பெயர்ந்தவர்களிடம் இயல்பாகவே இருக்கும். காலனித்துவத்திற்கு முன்னர் தமிழ் மக்கள் இலங்கையில் எப்படியான கலாச்சாரத்துடன் வாழ்ந்தார்கள். காலனித்துவத்திற்கு பின்னர் அதே மக்கள் எப்படி எதற்காக வேறு கலாச்சாரத்திற்கு மாற ஆரம்பித்தார்கள் அதே நிலையில் தான் நாம் இன்றும் நிற்கின்றோம் அன்று மேலைத்தேயக் கலாச்சாரம் எங்கள் மக்கள் மீது திணிக்கப்பட்டது . இன்று மேலைத்தேயங்களில் வாழும் நாங்கள் அவர்களின் கலாச்சார மாயைக்குள் சிக்கியுள்ளோம் . எங்கள் தலைமுறையினருக்கு தமிழ் மொழியை கற்பிக்க வேண்டும் அந்த மொழி ஒன்றினால் மட்டுமே நாம் எம் கலாச்சாரத்தை சிதைக்காமல் காக்க முடியும் . பெண்கள் உடன்கட்டை ஏறுதல் பெண்களுக்கு மறுமண மறுப்பு தீண்டாமை குலம் கோத்திரம் இவையும் நமது முன்னோர்கள் எமக்கு விட்டுச் சென்ற கலாச்சாரம் தானே..... அன்று.... முதியோர் இல்லம் என்றால் அது எங்கள் பரம்பரையின் மூத்தவர்கள் வாழ்ந்த வீடாக இருந்தது. அது அவர்களுடைய சொத்தாகவே இருந்தது. இன்று.... முதியோர் இல்லம் என்றால் என்ன என்பது யாவர்க்கும் தெரியும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் வாழுமிடம் தம் உடலை வருத்தி இரத்தத்தை வியர்வையாக்கி உழைத்த தந்தையும் தனது இரத்தத்தை பாலாக்கி ஊட்டிய தாயும் யாரோ ஒருவரின் பார்வையில் இருக்க பிள்ளைகள் அந்தப் பெற்றோரின் உழைப்பின் மீது ஆட்சி செலுத்துகின்றனர். ஒரு சமூகம் சிறந்து விளங்க வேண்டுமெனில், துறை தோறும் வளர்ச்சி ஏற்பட வேண்டும். சமுதாயம் பொருளாதாரம், கல்வி, கலை முதலிய அனைத்துத் துறைகளிலும் காலத்தின் தேவைக்கேற்ப மாற்றங்கள் ஏற்பட்டு வளர்ச்சி அடையவேண்டும். சமுதாயத்தில் ஏற்படும் மாற்றமும் வளர்ச்சியும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும். மக்களின் வாழ்க்கைத்தரத்நை உயர்த்தாத வளர்ச்சியினால் என்ன பயன்? ஒன்றே குலம் ஒருவனே தேவன் அன்பே மனிதம் கல்வியே கண்கள் உயர்வே வாழ்வு பிறரையும் மதி உண்டு கொடு தர்மம் செய் பெரியோரை தொடர் நம்பியவரைக் கைவிடேல் தீண்டாமை ஒழி பசியாற்றல் இவை போன்ற விடயங்கள்தான் தமிழர்களின் கலாச்சாரத்தை வேற்று இனக்கலாச்சாரத்திலிருந்து மாறுபடுத்திக் காட்டுகின்றன. இப்படியான பல நல்ல விடயங்களை பின்பற்றினாலே போதும் எமது பண்பாடு கலாச்சாரம் காக்கப்படும் அதைவிடுத்து போகும் இடமெல்லாம் ஆலயங்கள் கட்டி சாதி பார்த்து பெண் எடுத்து....
 20. 1 point
  ஓமோம்.... குமாரசாமியார் மதில் பாயுறதிலை, ஒலிம்பிக்கிலை தங்கப் பதக்கம் எடுத்தவர்.
 21. 1 point
  அருமையாக எடுத்துள்ளார்கள் குமாரசாமியிடம் பயிற்சி எடுத்திருக்கும்
 22. 1 point
 23. 1 point
  யாழ்பாணத்துக்குள்ள சிங்களவரை குடியேத்த போகினம் போல் உள்ளது . தென்னிலங்கையில் வாழும் சாதாரண சிங்கள குடும்பம் வாழமுடியாத அளவுக்கு வெக்கையும் விலைவாசியும் கண்டு பின்னம்கால் பிடரியில் பட திரும்பி ஓடுவினம்.
 24. 1 point
 25. 1 point
  பெலிக்ஸ் ராஜ்1 week ago தமிழீழ ஆதரவில், நெடுமாறன் ஐயா இன்னும் அப்படியே, அதே உறுதியுடன் இருக்கிறார். சீமானின் பேச்சால், நாங்கள் பல லட்சம் தமிழ் இளைஞர்கள் உணர்வுடன் கைகோர்த்து ஒன்றாய் உறுதியுடன் நிற்கிறோம், தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக... தமிழகத்தில் நம் (நாம் தமிழர்) ஆட்சி அமையட்டும், விரைவில்...!
 26. 1 point
 27. 1 point
  இவர் ஆற்றை முதுகில் குத்தவில்லை என்று சொன்னால்தான் அதிசயம்...
 28. 1 point
  இது யாழ்ப்பாண முறையல்ல...எங்கள் குழல்பிட்டு தனித்துவமிக்கது...அதை சம்பலுடனும் சாப்பிடலாம்..சீனி ,சக்கரையுடனும் சாப்பிடலாம்..இது அவிப்பு முறையே வித்தியாசம்...இது தென்பகுதி பெருமினப் பிட்டு...பிட்டில் நான் பேதம் பார்ப்பதில்லை....எனினும் நம்ம பிட்டு தனித்துவம்
 29. 1 point
  ரத்த மகுடம்-103 ‘‘மன்னா....’’ கரிகாலன் குரல் கொடுத்தான். ‘‘சரியான நேரத்துக்கு வந்திருக்கிறீர்கள்...’’அரிகேசரி மாறவர்மர் நிதானமாக அந்த பாதாளச் சிறை அறைக்குள் நுழைந்தார். பின்னாலேயே சிறைக் காவலன். ‘‘காஞ்சி சிறையில் எந்தப் பொருளைக் கைப்பற்ற சிவகாமி முயன்றாளோ... எந்தப் பொருள் அங்கு கிடைக்காததால் மதுரை சிறைக்கு அவள் வந்திருக்கிறாளோ... அந்தப் பொருளை அவள் எடுத்துவிட்டாள்...’’ சொன்னபடியே, தான் அவிழ்த்திருந்த சிவகாமியின் கச்சை முடிச்சை கரிகாலன் பழையபடி இறுகக் கட்டினான். ‘‘ம்... எழுந்திரு சிவகாமி... பாண்டிய மன்னர் முன் நாம் அமர்ந்திருப்பது தவறு...’’ கட்டளையிடும் தொனியில் வார்த்தைகளை உச்சரித்த கரிகாலன், அவளை முன்புறமாகத் தள்ளிவிட்டு எழுந்தான். குனிந்து, தரையில் உருண்ட பொருளை எடுத்து அரிகேசரி மாறவர்மரிடம் கொடுத்தான். அதைப் பெற்றுக் கொண்ட பாண்டிய மன்னர், அது என்ன என்று ஆராயவில்லை. மாறாக தன் இடுப்பில் அதை முடிந்து கொண்டார்.‘‘ஆராயவில்லையா மன்னா..?’’ கேட்ட கரிகாலனை ஏறிடாமல், அவனுக்கு அருகில் நின்றபடி தன் உடைகளைச் சரிசெய்து கொண்டிருந்த சிவகாமியை பார்வையால் சலித்தார். ‘‘அறைக்கு சென்று ஆராய்கிறேன்... அதுதான் பொருள் எங்கும் செல்லாதபடி கைப்பற்றி என்னிடமே கொடுத்துவிட்டாயே..!’’ ‘‘இதற்காகத்தான் மன்னா இந்த நள்ளிரவில் இங்கு வந்தேன்... பாண்டிய இளவரசரிடம் நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கலாம்... ஆனால், எங்கே அவர் கேட்க மாட்டாரோ என்று நினைத்து தான்...’’‘‘... சாம்பிராணியில் மயக்கப் பொடியைத் தூவினாய்...’’ சிவ காமியின் வதனத்தை ஆராய்ந்தபடியே அரிகேசரி மாறவர்மர்பதிலளித்தார். ‘‘உள்ளதை உள்ளபடி ஊகிக்கும் திறன் தங்களிடம் இருப்பதால்தான் பாண்டிய நாடு நிம்மதியாக இந்த அகால வேளையில் உறங்குகிறது...’’ ‘‘அந்த உறக்கத்தைக் கெடுக்கத்தான் புலி வந்திருக்கிறதே..?’’‘‘இல்லை மன்னா... மீனின் வாழ்விடத்துக்குள் என்றும் புலி நுழைவதில்லை... சமுத்திரத்தை தொந்தரவு செய்த வனம் என்ற சொற்றொடர் அகராதியிலேயே இல்லை...’’‘‘ஒருவேளை அகராதியில் புதிய சொற்கள் சேரலாம்...’’‘‘இக்காலத்தில் வாய்ப்பில்லை மன்னா...’’‘‘எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்..?’’ கேட்டபடி முதல் முறையாக கரிகாலனை ஏறிட்டார் பாண்டிய மன்னர்.‘‘வனத்துக்கான போராட்டத்தில்தான் புலி தற்சமயம் கவனம் செலுத்துகிறது... ரிஷபத்தை தாக்க முற்படும் வராகத்தை வீழ்த்தவே தன் உடல் பொருள் ஆன்மா... என சகலத்தையும் அர்ப்பணித்திருக்கிறது...’’கணத்துக்கும் குறைவான நேரத்தில் தன் இமைகளை மூடித் திறந்தார் பாண்டிய மன்னர். ‘‘அதன் பொருட்டுதான் இந்த பாதாளச் சிறைக்கும் வந்தாயா..?’’‘‘ஆம் மன்னா...’’‘‘வேட்டையாடவா..?’’ அரிகேசரி மாறவர்மரின் புருவங்கள் முடிச்சிட்டன.‘‘ஆம் மன்னா... வராகத்தை...’’ சிவகாமியைப் பார்த்தபடியே அழுத்திச் சொன்னான் கரிகாலன்.எரித்து விடுவதுபோல் அவனை ஓரக் கண்ணால் பார்த்தாள் சிவகாமி.பாண்டிய மன்னரின் உதடுகளில் புன்னகை பூத்தது. ‘‘வராக அவதாரத்தை என்று சொல்லலாமே கரிகாலா...’’சிவகாமி சட்டென நிமிர்ந்தாள்.கரிகாலனின் நயனங்களில் அதிர்ச்சி. ‘‘என்ன சொல்கிறீர்கள் மன்னா..?’’‘‘வராக போர் அமைச்சர் சந்தேகிப்பதை சொன்னேன்...’’‘‘மன்னா...’’‘‘சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர், இவளை பல்லவ இளவரசி என சந்தேகிக்கிறாரே..?’’‘‘அப்படி நினைப்பவர் எதற்காக சாளுக்கிய இளவரசருடன் தனித்து இங்கு வந்து இவளைச் சந்திக்க வேண்டும்..?’’‘‘சந்தேகத்தைத் தீர்க்க...’’‘‘அதற்காகத்தான் நீயும் இங்கு வந்தாயா..?’’‘‘அப்படி வந்திருந்தால் தன் கச்சைக்குள் இவள் மறைத்து வைத்திருந்த பொருளை எடுத்து தங்களிடம் கொடுத்திருப்பேனா..?’’‘‘நான் வந்ததால் கொடுத்தாய்...’’‘‘வரவில்லை என்றால் தங்கள் அறைக்கு வந்து கொடுத்திருப்பேன்...’’‘‘சாம்பிராணியில் மயக்கப் பொடியைத் தூவியா..?’’‘‘மன்னா...’’தன் கரங்களை உயர்த்தி கரிகாலன் பேசுவதைத் தடுத்தார். ‘‘நாளை விசாரணை மண்டபத்துக்கு நீங்கள் இருவரும் வரவேண்டும்... எது சொல்வதாக இருந்தாலும் அங்கு சொல்... அதுவரை நீங்கள் இருவரும்...’’ தனக்குப் பின்னால் கைகட்டி நின்றிருந்த காவலனைப் பார்த்தார்.புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக அவன் தலையசைத்தான்.கரிகாலனையும் சிவகாமியையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு சிறையை விட்டு அரிகேசரி மாறவர்மர் வெளியில் வந்தார்.பின்னால் வந்த காவலன் கவனமாக சிறைக்கதவைப் பூட்டினான்.படிக்கெட்டில் ஏறி வெளியில் வந்ததும் காவலனையும் அவன் இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்த சாவியையும் பார்த்தார். பின்னர் விடுவிடுவென தன் மாளிகையை நோக்கி நடந்தார்.அவர் முகம் மலர்ந்திருந்தது!மல்லைத் துறைமுகம் விழித்துக் கொண்டது. மலங்க மலங்க விழித்தது!இந்த நள்ளிரவில் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் அரவமின்றி வருகை தருவார் என ஒருவரும் எதிர்பார்க்காததால் எட்டு திசைகளிலும் குழப்பம் தாண்டவமாடியது.‘‘சுங்கத் தலைவர் எங்கே..?’’ விக்கிரமாதித்தர் புரவியில் இருந்து இறங்கியதுமே கேட்டார்.‘‘மன்னா...’’ என்றபடி சுங்கத் தலைவர் முன்னால் வந்து வணங்கினார்.‘‘எந்தெந்த மரக்கலங்கள் எந்தெந்த தேசத்திலிருந்து கடந்த ஒரு வாரத்தில் இங்கு வந்திருக்கின்றன... என்னென்ன பொருட்கள் வந்து இறங்கியிருக்கின்றன... எந்தெந்த வணிகர்களுக்கு சொந்தமான மரக்கலங்கள் அவை... என்ற விவரங்கள் எல்லாம் எனக்கு வேண்டும்... அதுவும் உடனடியாக!’’ உத்தரவிட்ட மன்னர், கடற்கரையில் இருந்த பாறையின் மீது அமர்ந்தார். ‘‘எடுத்து வாருங்கள்...’’‘‘உத்தரவு மன்னா...’’ என்றபடி தலைதெறிக்க சுங்கச் சாவடியை நோக்கி சுங்கத் தலைவர் விரைந்தார்.சாளுக்கிய வீரர்கள் மன்னருக்கு அருகில் கம்புகளை ஊன்றி அதில் பந்தங்களைக் கட்டினார்கள்.கைகொள்ளா சுவடிகளுடன் சுங்கத் தலைவர் திரும்பியபோது சாளுக்கிய மன்னர் ஜெகஜோதியாக ஜொலித்துக் கொண்டிருந்தார்.அவர் முன்பு, தான் கொண்டு வந்திருந்த சுவடிகளை சுங்கத் தலைவர் நீட்டினார். பெற்றுக் கொண்ட விக்கிரமாதித்தர், பந்த ஒளியில் நிதானமாக ஒவ்வொரு சுவடியாகப் புரட்டினார்... அதிலிருந்த விவரங்களைப் படிக்கத் தொடங்கினார். ‘‘மன்னா...’’குரல் கேட்டு திரும்பினார் அரிகேசரி மாறவர்மர்.கோச்சடையன் இரணதீரன் அவரை வணங்கியபடி அங்கு நின்றிருந்தான். ‘‘சொல்லுங்கள் பாண்டிய இளவரசே... உறங்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..?’’தன் தந்தையை ஆச்சர்யத்துடன் ஏறிட்டான் இரணதீரன். உற்சாகமாக இருக்கும் பொழுதுகளில் மட்டுமே அவர் தன்னை ‘இளவரசே...’ என்றழைப்பார் என்பது அவனுக்குத் தெரியும். எனில், இது குதூகலத்துக்கான காலமா..? ‘‘தங்களைக் காண காத்திருக்கிறேன் மன்னா...’’ ‘‘என்ன விஷயம்..?’’ ‘‘அதங்கோட்டாசானை கைது செய்திருக்கிறோம்... அவருடன் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் சிறைப்பட்டிருக்கிறார்கள்... நிலவறையில் இந்த அகாலவேளையில் அவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள்...’’அவன் அருகில் வந்து வாஞ்சையுடன் அணைத்தார். ‘‘வா... மாளிகையின் உச்சிக்கு செல்லலாம்...’’எதுவும் பேசாமல் தன் தந்தையுடன் படிக்கட்டு ஏறினான் பாண்டிய இளவரசன். புதர் மறைவிலிருந்து சீனன் வெளியே வந்தான். வைகையின் ஓட்டத்தை தன் கையில் இருந்த மூங்கிலால் அளந்தான்.திருப்தியுடன் தொலைவில் இருந்த சுங்கச் சாவடியைப் பார்த்தான்.எந்த மாற்றமும் இல்லாமல் அங்கு வேலைகள் நடந்து கொண்டிருந்தன. தன்னிரு கரங்களையும் உயர்த்தி சோம்பல் முறித்த சீனன், வானை ஏறிட்டு நட்சத்திரக் கூட்டங்களைக் கணக்கிட்டான். பின்னர் குனிந்து தன் கால்களுக்கு அடியில் இருந்த ஓர் ஆள்உயரமுள்ள மூங்கில் கூடையின் மூடியைத் திறந்தான்.அதனுள் இருந்த புறாக்களை ஒவ்வொன்றாக எடுத்து அவற்றை முத்தமிட்டு அதன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தான். மதுரை திசையைக் காட்டினான். பின்னர் பறக்க விட்டான்!‘‘சொல்...’’ சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன் அதட்டினான். ‘‘யார் அந்த பதினைந்து பேர்..? எதற்காக ஒரே செய்தியை ஒரே மாதிரி எழுதியிருக்கிறாய்..?’’‘‘இதற்கு மேலும் நீ மவுனமாக இருந்தால்..?’’ ராமபுண்ய வல்லபரின் நயனங்கள் நெருப்பைக் கக்கின. ‘‘வளைத்த மூங்கிலில் உன் கால்களைக் கட்டி உடலையே கிழித்து விடுவோம்...’’கடிகை பாலகன் அலட்சியமாகச் சிரித்தான்.‘‘செய்ய மாட்டோம் என நினைக்கிறாயா..?’’ கர்ஜித்த ராமபுண்ய வல்லபர் கோபத்துடன் அவனை நெருங்கினார்.கடிகை பாலகன் குருதி வடிய சிரிக்கத் தொடங்கினான். அவன் பார்வை சாளரத்தை நோக்கிக் கொண்டிருந்தது.அப்படி எதைப் பார்த்து நகைக்கிறான் என்றறிய விநயாதித்தனும் ஸ்ரீராமபுண்ய வல்லபரும் சாளரத்தை நோக்கித் திரும்பினார்கள். திகைத்தார்கள். ‘‘பார் இரணதீரா... அதங்கோட்டாசான் ஓடிக் கொண்டிருக்கிறான்..!’’அரிகேசரி மாறவர்மர் சுட்டிக் காட்டிய திசையை நோக்கிய இரணதீரன் அதிர்ந்தான். மதுரை வீதியில் கரிகாலன் ஓடிக்கொண்டிருக்க... பாண்டிய வீரர்கள் அவனைத் துரத்திக் கொண்டிருந்தார்கள்.‘‘மன்னா...’’‘‘கரிகாலனின் இன்னொரு பெயர் அதங்கோட்டாசான்!’’ இடி இடியென நகைத்த அரிகேசரி மாறவர்மர் குதிரையின் குளம்பொலியைக் கேட்டு சட்டென அமைதியானார். அவர்கள் இருவரும் நின்றிருந்த மாளிகைக்கு எதிர்த் திசையில் வரிசையாக இருந்த மாளிகையின் மேல் கைப்பிடிச் சுவரில் புரவி ஒன்று நிதானமாக நடந்துகொண்டிருந்தது!அதன் மேல் கம்பீரமாக அமர்ந்திருந்த சிவகாமி, குனிந்து கரிகாலன் ஓடும் திசையைப் பார்த்தாள்! http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16952&id1=6&issue=20200619
 30. 1 point
 31. 1 point
  நன்றி பகிர்வுக்கு பையா, எத்தனை வரலாற்றை படைத்துவிட்டு சென்றுவிட்டார்கள். தியாகம் தூரோகத்திற்கு பலியானாலும், அவர்கள் லட்சிய கனவு ஒருநாள் மெய்ப்படும் மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
 32. 1 point
  வெளிநாட்டுக்கு வந்த பின்பே அலுமினிய குழலைப் பார்க்கிறேன். அதற்கு முதல் இதே மாதிரியான குழலில்த் தான் புட்டு அவித்து சாப்பிட்டோம். முன்னர் பொண்ணுக்கு பாட்டுபாட தெரியுமா?டான்ஸ் தெரியுமா?சமைக்க தெரியுமா? என்ற காலம் போய் மாப்பிள்ளைகளுக்கு இது எல்லாம் தெரியுமா என்று கேட்கிற காலம் வருகுதோ?
 33. 1 point
  நில்மினி தனிமடலில் அனுப்பிவிடுகின்றேன் விபரங்களை , அவர்கள் ஆயுர்வேத முறையில் மசாஜும் செய்கின்றார்கள். நல்ல இடம் எம்மவர்கள்தான் பாவிப்பதில்லை
 34. 1 point
  உங்களை மாதிரி பிரச்சனை எனக்கும் இருக்கிறது வாய்க்கு பிளாஸ்ரர் ஒட்டி கொண்டிருக்க முயற்சிப்பேன்.
 35. 1 point
  1) இலங்கையில் ஏன் பாடையில் கட்டுகிறார்கள். கனடாவில் பாடையில் கட்டி காவுவதற்கான தேவை என்ன இருக்கிறது ? 2) இதே நண்பர்களும் உறவினர்களும் ஊருக்குப் போன இடத்தி இப்படியொரு சம்பவம் இடம்பெற்றால் பறை அறிவிப்பார்களா ? 3) கனேடியத் தமிழர்கள் எண்ணிக்கையில் கூடுதலாக இருந்தும் அவர்களிடையே ஒற்றுமை இல்லை என்கின்ற கோபமாக இருக்கலாம். 4) தவறு அல்ல, பாடையில் கொண்டுபோவதற்கான தேவை இருக்கிறதா என்பதுதான் கேள்வி. அதற்கான தேவை இல்லையென்றால் ஏன் அவ்வாறு செய்கின்றனர். 5) மூப்படைந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகளை ஆரவாரமாகச் செய்யும் வழக்கு என்பது எமது சமூகத்தில் இருக்கிறதா ? இல்லை என்றே நம்புகிறேன்.
 36. 1 point
  நல்ல சுகமான வேலை. நான் சிவப்பும் வெள்ளையும் வாங்கினேன். சிவப்பு அவ்வளவு soft ஆக வரவில்லை. Chinese grocery இல் இந்த வெள்ளை அரிசிமாவை வேண்டி வறுத்து MDK சிவப்பு அரிசிமாவுடன் கலந்து இடியப்பம் புட்டு அவித்துப்பார்த்தோம் . மிகவும் நல்லாக வந்தது (இந்த கலவைக்கு கொதிநீர் ஊற்றித்தான் குழைக்கவேணும்) மற்றும்படி MDK வெள்ளை அரிசிமாவுக்கு பச்சைத்தண்ணியை விட்டு கையாலேயே குழைத்து புட்டு இடியப்பம் சுலபமாக வைக்கலாம். அவித்த பிறகு மூடி வைக்க வேணும் . அல்லது காய்ந்து போயிரும். எப்படியும் microwave பண்ணினால் திரும்ப soft ஆகி விடும். இந்த படத்தில் இருப்பவை எல்லாம் MDK இடியப்பம் தான் புட்டு china அரிசிமாவுடன் கலந்து சுடுதணியில் குழைத்தது நிச்சயம் எல்லோருக்கும் சமையல் மட்டுமல்ல வீடு வேலை எல்லாமே செய்ய தெரிந்திருக்க வேணும். எனக்கு ரெண்டும் மகன்மார். வீட்டில் சமையல் உட்பட எல்லாம் பழக்கி வச்சிருக்கு . நாம் இல்லாத காலத்தில் அவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தேவைப்பட்டால் உதவும்
 37. 1 point
  மக்களுக்கு உண்மையான ஆன்மீகத்தை பரப்பும் உண்மையான ஆன்மீக வாதிகளாக இருந்தால் நிச்சயமாக கெளரவமாக வைத்திருக்கவேண்டும். ஆனால் மக்களிடையே காலத்துக்கு ஒவ்வாத மூடப்பழக்கங்களை புகுத்தி அதில் பணம் உழைக்கும் இவ்வாறானவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கபடவேண்டியவர்கள்.
 38. 1 point
  தேர்தல் முடிய இந்த உண்மைகள் உங்களுக்கு மறந்து போவது நீண்ட வரலாறு! எடுபிடியா வாழ்ந்து பழகிவிட்டீர்கள்.
 39. 1 point
  பொடி வைத்திருந்த இடமும் அதை தகனம் / தாக்கும் செய்யும் இடமும் ஒரே வளாகத்தில் இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்......!
 40. 1 point
  தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரச பயங்கரவாதிகளின் அல்லது முஸ்லீம் காடையர்களின் சதி முயற்சியாக இருக்கலாம்.
 41. 1 point
  தான் கடத்தல் கும்பலின் உறுப்பினர், சிங்கள அரச பயங்கரவாதிகளின் எடுபிடி மட்டுமல்ல தான் ஒரு முட்டாள் என்பதையும் தவராசா இதன் மூலம் தெரிவித்துள்ளார். இந்த தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்கு மாகாணசபைக்கு ஏதோ அதிகாரம் இருப்பது போல அப்பட்டமான பொய்களை கூறுகிறார் ஒட்டுண்ணி அரசியல்வாதி தவராசா. கள்ளக்காணி ரிஷாட் பதியுதீனிடம் காசை வாங்கி சத்தியலிங்கத்துடன் இணைந்து வட மாகாணசபையை குழப்பிய கைக்கூலி தவராசாவை யாரும் மறந்துவிடவில்லை.
 42. 1 point
  வலு கூடிய உந்துருளியில் கண்மண் தெரியாமல் ஓடி மோதுண்டு இறப்பதற்கு பொறுப்பற்ற அவர்களது பெற்றோர்கள் /அதற்கு பண உதவி செய்தவர்கள் தான் காரணம்.
 43. 1 point
  புலிகள் பெண்களின் ஆளுமைகளை ஊக்குவித்து பெண்களையும் ஆண்களுக்கு நிகராக பல சாதனைகளைச் செய்ய ஊக்குவித்தவர்கள் தனியே போர்க்களத்தில் மட்டும் இல்லாமல் எல்லா துறைகளிலும் பெண்கள் புலிகள் காலத்தில் மிளிர்ந்தார்கள். எனவே புலிகளையும், பெண்கள் படிப்பதையே தடுத்து, வீட்டுக்குள் அடைத்துவைத்து பிள்ளைபெறும் இயந்திரங்களாக மாத்திரம் பார்க்கும் தலிபான்களையும் குழப்பிக்கொள்ளவேண்டாம். 30 - 40 வருடங்களாக மேற்கத்தைய நாடுகளில் இருந்து, மேற்கத்தைய நாடுகளின் கலாச்சாரம், வரலாறு எல்லாம் தெரியும் என்று நினைத்துக்கொண்டு, பெண்களை ஆண்களுக்கு அடங்கி ஒடுங்கவும், பெண்களை ஆளுமையற்றவர்களாக நினைக்கும் சிந்தனைகொண்டவர்களும்தான் தமிழ் தலிபான்கள். ஆனால் இப்படி நினைப்பவர்களின் சகோதரிகள், பெண்குழந்தைகளே தமது ஆளுமையைக் கண்டுகொள்வார்கள். தமிழ் தலிபான்களிடம் இருந்து தம்மை விடுவித்துக்கொள்வார்கள். தாயகத்தில் போனாலும் அங்கு 80களுக்கு முன்னைய கட்டுப்பெட்டிக் கலாச்சாரம் காணாமல்போய்விட்டதை அறிந்துகொள்ளலாம். ஆனால் தமிழ்த் தலிபான்கள் அங்கு போனாலும் புறுபுறுக்க மட்டுமே முடியும். அதனால்தான் இந்த தமிழ்த் தலிபான்கள் காலவோட்டத்தில் கரைந்துபோவார்கள் என்று சொன்னேன்.
 44. 1 point
  வெள்ளைக்காரர்களுக்கு நான் சைவம் என்றால் அதுபற்றி ஏன் எப்படி என விளக்கம் கேட்பார்கள். அந்த சுகத்துக்காக இந்து என்று விட்டால் பிரச்சனை முடிஞ்சுது. வெள்ளையளோடை தேவையில்லாமல் அலட்டத் தேவையில்லை. சும்மா விண்ணாண விளக்கம் குடுக்க நாங்கள் மதம் மாத்துற கோஷ்டியள் இல்லையெல்லோ.
 45. 1 point
 46. 1 point
  மிகச் சரியாக சொன்னீர்கள், அதனால் நான் வீட்டை படசாலைக்குமுன்னால் வாங்கி, அவர்களின் நண்பர்கள் அனைவரையும் வீட்டுக்கு கூட்டிகிட்டு வாருங்கள், வந்து எவ்வளவு நேரமானலும் இருந்து கதையுங்கள் படியுங்கள் என சொல்லியுள்ளேன். அவர்களின் நண்பர்களுக்கும் சமைத்து கொடுப்போம்( - 5stars தருவார்கள் வடை, தக்காளி சாதம், முறுக்கு...) , அதனால் அவர்களின் நண்பர்களை பற்றி எம்மால் அறிய முடியும், அத்துடன் பிள்ளைகளுக்கும் ஒரு சுதந்திரம், அவர்கள் தங்கள் நண்பர்களுடன் கடைக்கு சினிமாக்கு போகிறோம் என சொன்னால் யாருடன் போகின்றீர்கள் என கேட்டுதான் விடுவோம், எங்களுக்கு அவர்களின் நண்பர்கள் எல்லோரையும் தெரிந்து வைத்திருப்பதால் பயப்படுவதில்லை, என்றாலும் வெளியில் போய் வரும் நேரமெல்லாம் கேட்டுதான் அனுப்புவோம், அத்துடன் போனவுடன் & வெளிக்கிடும் போது whatsapp இல் செய்தியும் அனுப்பிவிடுவார்கள் FAMILY Group க்கு, இது ஒரு பாதுகாப்பிற்கே. கட்டி வைத்திருக்க முடியா இங்கு, ஆனா கவனமாக வளர்க்கலாம், நல்ல அறிவுரைகளை சொல்லி. ஒவ்வொரு நாளும் வீடு திருவிழா மாதிரிதான் , ஒன்று மனைவியிடம் படிக்க பல பிள்ளைகள் வருவார்கள், அவர்களுடன் எங்கள் பிள்ளைகளும் நட்பாக பழகுவார்கள், அதனால் பல தமிழ், தெலுங்கு, மலையாள பெற்றோர் & பிள்ளைகளுடன் பழகும் வாய்ப்பு அதிகம், அதனால் வெளியில் சேட்டை விட முடியாது, தகவல் உடன் வரும் . நமது கலாச்சாரத்துடன் போய்கிட்டிருக்கின்றார்கள், கடந்த 10 வருடங்களாக சாய்பாபா SSE வகுப்புகளிற்கு போய்கிட்டு இருக்கின்றார்கள், அதனால பல நல்ல விடயங்களை கற்றுள்ளார்கள். நீங்கள் சாய்பாபா பக்தராக இருக்கவேண்டுமென்றில்லை (எனக்கு நம்பிக்கை இல்லை இவரில்) SSE வகுப்பிற்கு விடுங்கள், நல்ல பழக்க வழக்கம் வரும், பலருடன் சேர்ந்து பழகும் வாய்ப்பும் கிட்டும். அத்துடன் மனித நேயம், தொண்டு, இப்படி பல அங்கு கற்கலாம். உங்கள் விருப்பம். (துல்பன் - வந்து கேட்கப்படாது மூட நம்பிக்கையை வளர்கின்றேன் என) நான் என் நண்பர்களையும் ஊக்கப்படுத்தி அவர்களும் அங்கு அனுப்பினவர்கள். சிலர் முழுநேர பக்தர்கள் ஆகிவிட்டார்கள்
 47. 1 point
  பிட்டு பிரட்டல்... அது டேஸ்ட் சொல்லி வேலை இல்லை. பிட்டும், முட்டைப்பொரியலும், பிட்டும் இடிச்ச சம்பலும், இடியாப்பமும் சொதியும், இடியாப்பமும் சம்பலும்.... யாழ்ப்பாணத்தின் புகழ்மிக்க காலை உணவு.
 48. 1 point
 49. 1 point
  " இரவு என்னத்த தின்னேன்னு தெரியல. அடிக்கடி வுழுஐடுநுனுவுக்கு போக வேண்டியதா இருக்கு. போறது கூட கஸ்டம் இல்ல. எங்க போறேன்னு சொல்றதுக்கிடையில வாயால வந்திரும் போல இருக்கு "
 50. 1 point
  ரத்த மகுடம்-101 நகரம் என்பது மண் அல்ல. நகரம் என்பது மனிதர்களும் அல்ல. நகரம் என்பது நினைவுகள். நகரம் அல்லாத பிராந்தியங்களில் வசிப்பவர்களுக்கு மண்ணும் மனிதர்களும் முக்கியமாகத் தெரிவார்கள். நகரவாசிகளுக்கு நினைவுகள் மட்டுமே நெடுந்துணை. ஏனெனில் நகரங்களுக்கு வந்து போகிறவர்கள் மிகுதி. நிலைத்திருப்போர் ஒப்பீட்டளவில் குறைவானவர்கள். அதனால்தான் காலங்கள் உருண்டோடினாலும் நகரமே அழிந்தாலும் நகர நினைவுகள் மட்டும் தலைமுறைதோறும் தொடர்கிறது. நினைவுகளின் தொகுப்புதானே தொன்மங்களின் அடித்தளம்? இல்லாத நகரத்துக்கே இது பொருந்தும் என்னும்போது மூத்த குடியின் மூத்த நகரான மதுரைக்கு இது உச்சமாக அல்லவா பொருந்தும்? அதுவும் காலங்களைக் கடந்தும் தன் கம்பீரத்தையும் ஜொலிப்பையும் இருப்பையும் நடமாட்டத்தையும் இழக்காமல் இருக்கும் நகரமல்லவா மதுரை..? அதனால்தானே மதுரை குறித்த நினைவுகளின் தொகுப்பு பரிபாடல்களுக்கு முன்பே தோன்றி சிலப்பதிகாரம், மணிமேகலை, மதுரைக் காஞ்சியில் நிலைபெற்று அரிகேசரி மாறவர்மரின் ஆட்சிக் காலத்திலும் தன் தடங்களைப் பதித்து வருகிறது...இதனால்தானே ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் இமயத்தை விட உயர்ந்ததாக மதுரை நினைவுகள் வீற்றிருக்கின்றன?!இதை மெய்ப்பிப்பது போலவும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அதைக் கடத்தவும் தங்கள் பங்களிப்பைச் செய்வது போல்அன்றைய இரவுக் காவல் பணிக்கு நியமிக்கப்பட்ட பாண்டிய வீரர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இமயம் கொலுவீற்றிருந்தது! அது அவர்களது நடை உடை பாவனைகளிலும் பிரதிபலித்தது! உறங்கா நகரத்தை உறங்க வைக்க அவர்கள் முயற்சிக்கவேயில்லை. மாறாக, உறங்காதவர்களுக்கும் உறங்குபவர்களுக்கும் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்தார்கள்!குறிப்பாக, மதுரைக்கே அழகு சேர்க்கும் வைகை நதிக்கரையில்!இரவின் இரண்டாம் ஜாமம் முடிந்து மூன்றாம் ஜாமம் தொடங்கப் போவதற்கான அறிகுறிகளை நட்சத்திரங்கள் அறிவித்துக் கொண்டிருந்தன. அதைக் குறித்து சிறிதும் கவலைப்படாமல் நதிக்கரையில் இருந்த சுங்கச் சாவடி பகலைப் போலவே பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.ஆங்காங்கே தூண்களில் பொருத்தப்பட்ட வளையங்களில் செருகப்பட்ட தீப்பந்தங்களின் ஒளி, இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தது. கணக்கர்கள் ஓய்வில்லாமல் சுவடிகளில் சரக்குப் போக்குவரத்தின் விவரங்களை எழுதிக் கொண்டிருந்தார்கள். அருகிலேயே எடை போடும் கருவி இருக்க... எடைக்குத் தகுந்தபடி நாணயங்களின் எண்ணிக்கையை அளவிட்டு வசூலிக்கும் பணியில் மும்முரமாக இருந்தார் வருவாய் அலுவலர்.உள்நாட்டுச் சந்தைகளுக்கான பொருட்கள் கொற்கை துறைமுகத்தில் இருந்து சிறு படகுகள், தோணிகள் வழியே வைகைநதியில் பயணித்து மதுரைக்கு வந்தன. அப்படி வந்த படகுகளும் தோணிகளும் சுங்கச் சாவடிக்குள் ஒன்றன்பின் ஒன்றாக நுழைய வரிசைகட்டி நின்றன.மற்ற தேசங்களுக்கு ஏற்றுமதியாக வேண்டிய பொருட்கள் மாட்டு வண்டியில் சுங்கச் சாவடிக்குக் கொண்டுவரப்பட்டு சாவடியின் மறுபுறத்தில் இறக்கப்பட்டன.இறங்கிய பொருட்கள் அடங்கிய மூட்டையைப் பிரித்துப் பார்த்து சோதனையிட்ட அரசாங்க ஊழியர்கள் பின்பு அவற்றை எடை போட்டனர். எந்த தேசத்துக்கு அப்பொருட்கள் செல்லப் போகிறதோ அதற்கேற்ப சுங்கத் தொகையை கணக்கர் கணக்கிட்டு அறிவித்துக் கொண்டிருந்தார். அதற்கேற்ப உரிய நாணயங்களைப் பெற்றுக்கொண்ட வருவாய் அலுவலர், தன் உதவியாளர்களால் எழுதப்பட்டு தயார் நிலையில் இருந்த அத்தாட்சி ஓலையை ஒருமுறைக்கு இருமுறை படித்து சரிபார்த்துவிட்டு அரசாங்க முத்திரையைப் பொறித்துக் கொண்டிருந்தார்.எடைபோடப்பட்டு அத்தாட்சி ஓலை வழங்கப்பட்ட சரக்கு மூட்டைகளை அந்தந்த வணிகர்களின் பணியாளர்கள் பாண்டிய வீரர்களின் மேற்பார்வையில் படகுகளிலும் தோணிகளிலும் வரிசையாக அடுக்கினர். ஒவ்வொரு மூட்டையிலும் அரக்கினால் முத்திரை பதிக்கும் பணியை இருவர் சளைக்காமல் செய்தனர்.மொத்தத்தில் படகுகளும் தோணிகளும் வைகைக் கரையை விட்டு நகர்வதும் கரைக்கு வருவதுமாக இருந்தன. பகலிலாவது உச்சிப் பொழுதில் சில நாழிகைகள் ஓய்வு கிடைக்கும். இரவில் இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கூட நகர முடியாதபடிக்கு பணிச்சுமை அழுத்தும். அதுவும் துறைமுகங்களில் நங்கூரமிட்ட பிற தேசத்து பெரும் மரக்கலங்கள் கருக்கல் சமயத்தில் தம் பயணத்தைத் தொடர தயாராகும் என்பதால் அதற்குள் சரக்குகளைச் சேர்க்கவேண்டுமே என வணிகர்கள் பதற்றத்துடன் கூச்சலிட்டு தங்கள் பணியாளர்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தனர்.இப்படி அனைவருமே தத்தம் பணிகளில் மும்முரமாக இருந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்ததால் எழுந்த நானாவித ஓசைகளை அனுபவித்துக் கொண்டிருந்த வைகை, ‘பார்த்தாயா எனது முக்கியத்துவத்தை’ என இரு கரைகளிடமும் மாறி மாறி கேட்டுக் கொண்டிருந்தது!‘நாங்கள் மட்டும் சளைத்தவர்களா... எங்களை மிதித்துவிட்டுத்தானே பொருட்களை உன் மீது ஏற்றுகிறார்கள்...’ என இரு கரைகளும் தங்கள் மீது மோதிய வினாக்களுக்கு விடையளித்துக் கொண்டிருந்தன.இவற்றையெல்லாம் கேட்டபடி தனக்குள் சிரித்துக் கொண்டான் அந்த சீனன். யார் கண்ணிலும் படாதவாறு சுங்கச் சாவடிக்கு ஒரு காத தொலைவில் இருந்த புதருக்குள் அமர்ந்திருந்த அவன், வைகையில் தன் கால்களை நனைத்தபடி வானத்தை ஏறிட்டான். தனக்குள் நேரத்தைக் கணக்கிட்டான்.பிறகு சுங்கச் சாவடி பக்கம் தன் பார்வையைச் செலுத்தினான். இமைக்காமல் அங்குள்ள நடமாட்டத்தையே ஆராய ஆரம்பித்தான்.‘‘யார் அந்த 15 பேர்..?’’ கர்ஜித்தார் ராமபுண்ய வல்லபர்.‘‘எதற்காக ஒரே செய்தியை ஒரே மாதிரி எழுதியிருக்கிறாய்..?’’ குரலை உயர்த்தாமல், அதே நேரம் அழுத்தத்தைக் குறைக்காமல் வினவினான் விநயாதித்தன்.அலட்சியமாக அவர்கள் இருவரையும் நோக்கினான் கடிகை பாலகன்.‘‘நாங்கள் இருவரும் கேட்டது காதில் விழவில்லையா..?’’ அவன் சிகையைப் பிடித்து உலுக்கினார் ராமபுண்ய வல்லபர்.‘‘விழுந்தது...’’ கண்களால் சிரித்தான் கடிகை பாலகன்.விநயாதித்தன் அவனை உற்றுப் பார்த்தான். ‘‘பிறகு ஏன் பதில் சொல்லாமல் இருக்கிறாய்..?’’‘‘கேள்வி தவறாக இருப்பதால்..!’’‘‘என்ன தவறைக் கண்டுவிட்டாய்..?’’‘‘15 என்றார் சாளுக்கிய போர் அமைச்சர்...’’‘‘ம்...’’‘‘ஆனால், 16 அல்லவா இளவரசே..? சிவகாமி வழியாக உங்களிடம் வந்து சேர்ந்ததையும் கணக்கில் சேர்க்க வேண்டுமல்லவா..?’’ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.‘‘சிவகாமிக்கு..?’’‘‘அனுப்பியது நான்தான் ராமபுண்ய வல்லபரே...’’ அவர் கண்களை நேருக்கு நேர் பார்த்தபடி சொன்னான் கடிகை பாலகன்.‘‘அவளுக்கு ஏன் அனுப்பினாய்..?’’ விநயாதித்தன் படபடத்தான்.‘‘சாளுக்கிய மன்னர்தான் அனுப்பச் சொன்னார்...’’‘‘என் தந்தையேதான் அதே செய்தியை அதேபோல் 15 பட்டுத் துணிகளில் தனித்தனியாக எழுதச் சொன்னாரா..?’’‘‘ஆம் இளவரசே! அவரது கட்டளைப்படிதான் நடக்கிறேன்!’’‘‘எதற்காக ஒரே செய்தியை 16 துணிகளில் எழுதச் சொன்னார்..?’’‘‘பாண்டியர்களையும் கரிகாலனையும் ஏமாற்றி திசைதிருப்ப...’’‘‘இதை நாங்கள் நம்புவோம் என நினைக்கிறாயா..?’’ ராமபுண்ய வல்லபரின் நயனங்கள் தீயைக் கக்கின.‘‘நம்பாவிட்டால் இதைக் காண்பிக்கச் சொன்னார்...’’ என்றபடி வராக உருவம் பொறித்த மோதிரம் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தான்.அதைப் பெற்றுக்கொண்டு, எரிந்துகொண்டிருந்த விளக்கின் அருகில் சென்றவர், எண்ணெய்க்கசடை எடுத்து மோதிரத்தின் மீது தடவினார். பின்னர் தன் அங்கவஸ்திரத்தால் அதை பளபளவென்று தேய்த்தார். அவர் முகத்தில் குழப்பத்தின் ரேகைகள் படர்ந்தன. ‘‘மன்னரின் அந்தரங்க முத்திரைதான்... குழப்பமாக இருக்கிறது...’’ முணுமுணுத்தபடி விநயாதித்தனிடம் அந்த மோதிரத்தைக் கொடுத்தார்.தன் சிகையைச் சரிசெய்தபடி இமையோரம் புன்னகைத்தான் கடிகை பாலகன்.அதைக் கவனித்த விநயாதித்தனின் புருவங்கள் முடிச்சிட்டன. ராமபுண்ய வல்லபரிடம் இருந்து பெற்ற மோதிரத்தை தீப்பந்தத்தின் அருகில் உயர்த்திப் பிடித்து ஆராய்ந்தான்.பின்னர் நிதானமாக நடந்து கடிகை பாலகனின் அருகில் வந்தான்.இமைக்கும் பொழுதில் ஓங்கி அவனை அறைந்தான்.வலி தாங்காமல் சுருண்டு விழுந்தான் கடிகை பாலகன்.‘‘இவனை நிற்க வைத்து முகத்தில் தண்ணீர் தெளியுங்கள்...’’தங்கள் இளவரசரின் கட்டளையை அங்கிருந்த வீரர்கள் கணத்தில் நிறைவேற்றினார்கள்.உதட்டோரம் குருதி வழிய மயக்கம் முழுமையாகத் தெளியாத நிலையில் விநயாதித்தனை ஏறிட்டான் கடிகை பாலகன்.‘‘உண்மையைச் சொல்...’’ அடிக்குரலில் சீறிய விநயாதித்தன், கடிகை பாலகன் சுதாரிப்பதற்குள் அவன் நாசியில் ஒரு குத்துவிட்டான்.உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த அரிகேசரி மாறவர்மர், மெல்ல படுக்கையை விட்டு எழுந்தார். அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பாண்டிமாதேவியைக் கண்டதும் தனக்குள் புன்னகைத்தார். ‘கொடுத்து வைத்தவள்... கட்டியவனை நம்பி நிம்மதியாக உறங்குகிறாள்...’ஓசை எழுப்பாமல் கட்டிலை விட்டு இறங்கியவர் சாளரத்தின் அருகில் வந்தார். வானத்தை ஏறிட்டார். மதுரை மாநகரத்தை ஆராய்ந்தார். ‘மக்களில் பலர் உறங்குகிறார்கள்... சிலர் இரவிலும் தங்கள் தொழிலை கவனிக்கிறார்கள். எல்லோர் மனதிலும், நம் நலத்தை கவனிக்க மன்னன் இருக்கிறான் என்ற நம்பிக்கை இருக்கிறது... அந்த நம்பிக்கைக்கு நான் பாத்திரமானவன்தானா..? நம்பிக்கையைக் காப்பாற்றும் சக்தி எனக்கு இருக்கிறதா..?’ பெருமூச்சுடன் மீனாட்சியம்மன் கோபுரத்தைப் பார்த்தார்.‘அன்னையே... உன் மகனின் நிலையைப் பார்த்தாயா..? இக்கணம் வரை பாண்டியர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை... ஆனால், அடுத்த கணத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாமே..? பல்லவ சாளுக்கிய பிரச்னையில் இதுவரை பாண்டியர்கள் சம்பந்தப்படாமல் இருக்கிறார்கள். ஆனால், விதி தொடர்புபடுத்திவிடும் போல் இருக்கிறதே..?விருந்தினராக வந்திருக்கும் சாளுக்கிய இளவரசனும் நிம்மதியாக உறங்குகிறான்... தன் அத்தை வீட்டுக்கு வந்திருக்கும் பல்லவ உபசேனாதிபதியான சோழ இளவரசனும் எவ்வித கவலையும் இன்றி நித்திரையில் இருக்கிறான். ஆனால், அவ்விருவர் பிரச்னையிலும் சம்பந்தப்படாத பாண்டிய மன்னனான நான் மட்டும் உறக்கம் வராமல் தவிக்கிறேன்... இதென்ன சோதனை..? இன்றிரவு ஏதோ நடக்கப் போகிறது என உள்ளுணர்வு சொல்கிறது... அப்படி நடப்பது பாண்டி யர்களின் எதிர்காலத்துக்கு நன்மையைச் செய்யுமா, அல்லது...’நினைத்துப் பார்க்க முடியாமல் அரிகேசரி மாறவர்மர் ஆலய கோபுரத்தை நோக்கி கையெடுத்து கும்பிட்டார். ‘அன்னையே... இந்த தேசத்தைக் காப்பாற்று...’சில கணங்கள் வரை இமைகளை மூடி தியானத்தில் ஆழ்ந்தவர் ஏதோ முடிவுடன் கண்களைத் திறந்தார். திரும்பி அடிமேல் அடியெடுத்து வைத்து அறைக்கதவின் அருகில் வந்தார். ஓசை எழுப்பாமல் தாழ்ப்பாளை அகற்றி வெளியே வந்தார்.சட்டென காவலுக்கு நின்றிருந்த வீரன் வணங்கினான்.கண்களால் அவனை எச்சரித்துவிட்டு விடுவிடுவென பாதாளச் சிறையை நோக்கி நடந்தார்.‘‘சும்மா இருங்கள்...’’ சிணுங்கியபடி, தன் கொங்கைகளை நோக்கி நகர்ந்த கரிகாலனின் கைகளைப் பிடித்து தடுத்தாள் சிவகாமி.‘‘சும்மா இருந்தால் சுதந்திரம் எப்படி கிடைக்கும்..?’’ கேட்டபடி அவளது நாபிக்கமலத்தில் முத்தமிட்டான்.பாதாளச் சிறையின் கல்தரையும் பட்டு மெத்தையாக சிவகாமிக்கு இனித்தது! http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16905&id1=6&issue=20200605