• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. உடையார்

  உடையார்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   15

  • Content Count

   11,261


 2. போல்

  போல்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   10

  • Content Count

   6,134


 3. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   9

  • Content Count

   54,295


 4. Rajesh

  Rajesh

  வரையறுக்கப்பட்ட அனுமதி


  • Points

   9

  • Content Count

   3,105Popular Content

Showing content with the highest reputation on செவ்வாய் 23 ஜூன் 2020 in all areas

 1. 4 points
  எந்த நேரமும் காசு அது இது என்று கொல்லுப்பட்ட நம்ம புலம்பெயர் தமிழரையும் இந்த கொரனோ வந்து மாத்தி போட்டுது .குடும்ப உறுப்பினரை காணும் நேரம் குறைவாக காலில் சில்லுக்கட்டினவர்களை உறவு என்றால் என்னவென்று புரிய வைத்துள்ளது . ஒன்றாய் இருந்து உணவருந்துவதில் உள்ள இன்பம் சொர்க்கத்தில் கூட கிடைக்காது என்று அடித்து சொல்லியுள்ளது .மாடிப்படி ஏறினால் தஸ்புஸ் என்று மூச்சை விட்டு எடுத்தவர்கள் பாய்ந்து ஏறி இறங்க வைத்துள்ளது தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்ய வைத்துள்ளது . மக்கும் kfc யும் தான் சாப்பாடு என்றிருந்தவர்களை வீட்டு சாப்பாடு அதிலும் சத்து மிகுந்த உணவுகளை தேடி உண்ண சொல்லிக்கொடுத்துள்ளது .சூரிய வெயிலை கண்டால் நிழலில் ஒதுக்கியவர்களை வெயிலை நாடி உடலை உறுதிபட செய்துள்ளது .தூங்குவதை கடமையாக கொண்டவர்களை ஆழ்ந்த தூக்கம் என்றால் என்னவென்று புரிய வைத்துள்ளது . இனி கொரனோ இப்படியானவர்களின் உடம்பில் இறங்குவதுக்கு அஞ்சும் .
 2. 3 points
  தனிமை கூட இனிமையே… உன்னையே நினைத்துக் கொண்டிருப்பதால் என் தனிமை கூட இனிமையே நான் தனிமையாய் இருப்பதாய் பிறர் நினைக்கலாம் என் இல்லம் முழுவதும் நீ நிறைந்திருக்க என் உள்ளம் முழுவதும் நீ குடியிருக்க என் நிழலாக நீயும் உன் நினைவாக நானும் வாழும் இவ் வாழ்வில் என் தனிமைக்கேது கொடுமை உன் நினைவு மட்டுமே இனிமை. நூன் அழகாக உடுத்துகையில் நீ அருகிருந்து ரசிப்பதாய் நான் மகிழ்வாகச் சிரிக்கையில் நீ மன நிறைவாய்ப் பார்ப்பதாய் நான் தனிமையில் இருக்கையில் என் தலை வருடி நெகிழ்வதாய் நான் மனம் சோரும் வேளையில் நீ கனிவாக அணைப்பதாய் என் அழுகையில் என் சிரிப்பில் என் உணர்வினில் என் உயிரில் அத்தனையிலும் நீ துணையிருக்க என் தனிமைக்கேது கொடுமை உன் நினைவு மட்டுமே இனிமை என் சமையலறை மேடையில் நீ குடித்த தேநீர்க் கோப்பை என் ஆடை அலுமாரியிலோ நீ அணிந்த கைக்கடிகாரம் என் படு;க்கை அருகினிலே நீ பார்த்தபடி உன் நிழற்படம் எப் பக்கம் திரும்பினும் உன் நினைவாக ஞாபகங்கள் என் கூட நிழலாக எம் பிள்ளைகள் நால்வர் அத்தனையிலும் நீ துணையிருக்க என் தனிமைக்கேது கொடுமை உன் நினைவு மட்டுமே இனிமை என் கழுத்திலே தொங்குவதோ நீ கட்டி விட்ட மாங்கல்யம் என் கை விரலில் தழுவுவதோ நீ அணுவித்த கணையாழி மனம் முழுதும் மலருவதோ உன் இனிய நினைவலைகள் உன் மடியில் தவழாத நீ பார்த்து மகிழாத எம் பேரக் குழந்தைகள் என் மடியில் தவழுகையில் என் தனிமைக்கேது கொடுமை உன் நினைவு மட்டுமே இனிமை.
 3. 3 points
 4. 2 points
  அப்பா தின குட்டிக் கதை முன்னைய காலங்களில் சில கிராமதுக்கு கிராமம் வழக்கங்கள் நடை முறைகள் வேறுபட்டிருக்கும். இருக்கும் இப்படியான ஒரு கிராமத்தில் குடும்பத்திலுள்ள ஆண் பிள்ளைகள் பதினாறு வயதை அடைந்ததும் ஒரு இரவு காட்டில் தங்க வேண்டும். அங்கு பல வகை கொடிய மிருகங்கள் இருக்கும் . அவர்களது பதினைந்தாவது வயதில் வில் பயிற்சி ஈட்டி எறிதல் விலங்குகளை தாக்கி தப்பித்தல் முதலிய தற்காப்பு கலைகள் யாவும் சொல்லி கொடுக்கப்படும் . இப்படியாக ஒரு குடியானவன் மகனுக்கு பதினாறாவது பிறந்த நாள் வந்தது மறு நாள் அவன் காட்டுக்கு செல்ல வேண்டும். முதல் நாள் குடியானவன் சகல புத்திமதி கள் யுக்திகளை மீண்டும் மீண்டும் ஞாபக படுத்தினான் மறு நாள் மாலையானதும் தந்தை காட்டுக்குள் அழைத்து சென்றார் . மகன் கண் கலங்கிய வாறே தந்தையுடன் சென்றான். அங்கே ஒரு நிழல் மரத்தின் கீழே இருக்க விட்டு தந்தை வீட்டுக்கு செல்வதாக கூறி வந்து விட் டார். மாலை இரவா னது. வா னத்தில் நட்ஷத்திரங்கள் மின்ன தொடங்கி விட்ட்ன எங்கும் ஒரே இருட்டு . மகனோ தூக்கமின்றி விழித்துக் கொண்டிருந்தான் பயத்தாலும் தனிமையாலும் ..நேரம் ஓடிக் கொண்டு இருந்தது .ஒரு வாறு பொழுது புலரத்தொடங்கிவிட்ட்து ...தூரத்தே ஒரு வேடன் வில்லும் அம்புக ளும் கொண்டு வருவதைக் கண்டான். இவனுக்கு பயமாக இருந்தது ...அந்த உருவம் கிட் வந்த போ து அது ..அப்பாவின் நடை போன்று இருந்தது. மிக அண்மித்தும் அது அப்பாவே தான் வேடன் வேஷத்தில் வந்திருந்தார் ..இவன் காட்டித் தழுவி அழுதான். " நன்றாக தூங்கினாயா என்று கேடடார் . இல்லையப்பா எப்படி தூங்க முடியும் ? என்றான் . மகனே நான் இரவு முழுதும் தூங்காமல் சற்று தூர உள்ள மரத்தைக் காட்டி "அங்கு தான் நான் உனக்கு காவல் இருந்தேன். " என்கிறார். இதை நேற்றைக்கே சொல்லியிருக்கலாமே நான் நன்றாக தூங்கி இருப்பேனே என்றான் மகன். எல்லா அப்பாக்களும் இப்படித்தான் . குழந்தைகளை நெஞ்சிலே சுமப்பார் . கவனிக்காமல் இருப்பது போலெ தெரியும் ஆனால் அத்தனையும் கூர்ந்தது கவனித்து கொண்டே இருப்பார். அப்பாவுக்கு ஈடு இணை யாருமே இல்லை முன்பு நாம் சைக்கிள் பழக ஆசைப்படும் போ து ...அப்பா பின்னால் பிடித்துக்கொண்டு இருப்பா ர் ..அப்பா பிடிக்கிறார் என்ற துணிவில் தைரியத்தில் நாம் ஓட முயற்சிப்போம். ஓடிக் கொண்டு இருக்கும் போ து இடை இடையே வி ட்டு விட்டு பிடிப்பார் . நாமாகவே ஓடடுவோம். "நான் ஓடுவேனா ? அப்பா என்றால் இது வரை நான் பிடிக்காமல் நீ தானே தனியாக ஓட டினாய் என்பார். அப்போது நமக்கு தைரியம் வந்து விடும். இன்னும் துணிவாக சற்று வேகமாக ஓட டிட தைரியம் வரும் . அப்பாக்கள் என்றும் நிழல் போல எம்மோடு தான் இருப்பா ர்கள். அப்பாக்கள் என்றும் அப்பாக்கள் தான்.
 5. 2 points
  இரண்டாம் உலகப்போரின் முன்னோடியாக ஹிட்லர் எவ்வாறு ஒஸ்ரியாவையும் செக்கோஸ்லாவாக்கியாவையும் யுத்தமின்றி அரசியல் நகர்வுகள் மூலம் தன் பிடிக்குகள் கொண்டு வந்தார் என்பது பற்றியும், மூனிச் உடன்படிக்கை பற்றியும், ஹிட்லரை பற்றிய சோவியத் யூனியனின் எச்சரிக்கையையும் மீறி பிரித்தானிய பிரதமராக அன்று இருந்த, நெவில் சாம்பர்லைன் போட்ட தப்புக்கணக்குகள் பற்றியும், பிரிட்டனையும் பிரான்சையும் ஏமாற்றி ஹிட்லர் தனது பலத்தை எவ்வாறு பெருக்கிக்கொண்டார் என்பதையும் இந்த பகுதி விளக்குகிறது. ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட போதிலும் சீனாவுடனும் உறவை வளர்த்துக்கொண்டு தான் இருந்தார் ஹிட்லர். ஆட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் அணியை முடிந்தவரை பலப்படுத்த வேண்டும் என்பதால். ஜேர்மனிக்கும் சீனாவுக்கும்மான உறவு 1911 ல் இருந்து தொடங்குகிறது. சீனாவின் தொழில் முன்னேற்றத்திற்கு ஜேர்மனி உதவியும் ஊக்கமும் அளிக்க ஆரம்பித்தது. அப்போது தான் 1920 ம் ஆ்ண்டு இறுதியில் இருந்து 1930 ம் ஆண்டு இறுதிவரை இரு நாடுகளும் இந்த நட்பினால் பயனடைந்தன. தமக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிடம் இருந்து ஜேர்மனி பெற்றுக்கொண்டது. பதிலுக்கு, சீனாவுக்கு ராணுவ உதவிகளைச் செய்து வந்தது ஜேர்மனி. 1934-36 ஆண்டுகளில் ஜேர்மனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பலனாக சீனாவில் ரயில்வே தொழிற்சாலை பலம் பெற்றது. குறிப்பாக, Nanchang. Zhejiang, Guizhou ஆகிய பகுதிகளில் ரயில்வே பாதைகள் அமைக்கப்பட்டன. இதனால் சீனா மட்டுமல்ல ஜேர்மனியும் பலனடைந்தது. ஜேர்மனிக்கு தேவையான மூலப்பொருட்கள், கனிமப்பொருட்களை விரைவாகக் கொண்டு செல்வதற்கு இந்தப் பாதைகள் பயன்பட்டன. இது தவிர, ராணுவ ரீதியிலும் ஜேர்மனி சீனாவுக்கு உதவியது. சியாங்கின் ராணுவத்திற்கு ஜேர்மானிய அதிகாரிகள் பயிற்சியளித்தனர். தளபாடங்களையும் அளித்தனர். சீன ராணுவம் பயன்படுத்திய ஆயுதங்களில் எண்பது சதவிகிதம் பயன்படுத்தலாயக்கற்றவை என்று ஜேர்மனி கருதியது. அவற்றை நவீனப்படுத்தவும் ஜேர்மனி முன் வந்தது சீனாவின் அயலுறவுத்துறை அமைச்சரும் கோமிண்டாங் கட்சியினருமான ஹெச்.ஹெச்.குங் 1937 ல் ஜேர்மனி சென்றிருந்த போது ஹிட்லர் அவரை வரவேற்று உரையாடினார். ஜுலை 7, 1937 ல் இரண்டாவது ஜப்பான் – சீனா போர் மூண்ட போது, ஜேர்மனி சீனாவுடனான தனது உறவை முறித்துக்கொண்டது. அதற்கு காரணம் சோவியத்யூனியன். ஆகஸ்ட் 21,1937 ல் சோவியத்தும் சீனாவும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டன. ஜப்பானின் ஆதிக்கத்ததில் இருந்து சீனாவை மீட்டெடுப்பதற்காக சோவியத் உதவி செய்வதாக ஒப்புக்கொண்டது. பொருளாதார ரீதியிலும் ராணுவ ரீதியிலும் சீனாவுக்கு கைகொடுக்க சோவியத் தயாரானது. ஜேர்மனி சீனாவின் மீது செலுத்தி வந்த ஆதிக்கத்தை முறியடிப்பதே சோவியத்தின் நோக்கமான இருந்தது. ஒஸ்ரியா மீதான ஹிட்லரின் ஆதிக்கம் – இணைப்பு. ஒஸ்ரியாவை ஜேர்மனியுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஹிட்லரின் நீண்ட கால கனவு. ஓஸ்ரியா ஹிட்லரின் பிறந்த மண். எனவே என்னுடையது என்றார் ஹிட்லர். ஓஸ்ரியாவில் பிறந்திருந்தாலும், ஹிட்லர் தன்னை ஒரு போதும் ஓஸ்ரியப் பிரஜையாக எக்காலத்திலும் எண்ணிக்கொண்டதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜேர்மனியைப் பலப்படுத்த ஓஸ்ரியா வேண்டும் என்ற அளவில் தான் அவர் அதை இணைக்க விரும்பினார். நீண்ட நெடிய பிரதேசம் ஒன்று ஜேர்மனியுடன் இணையப்போகிறது. அவ்வளவு தான். 1933 முதல் 1935 வரையில் ஓஸ்ரியா இத்தாலியின் அரவணைப்பில் இருந்தது. ஜேர்மனியை அருகே அண்ட விடாமல் செய்வது தான் இத்தாலியின் பணி. 1934 ல் ஒஸ்ரிய சான்சிலர் டோல்ஃபுஸ் (Engelbert Dollfuss) படுகொலை செய்யப்பட்ட போது இத்தாலி எச்சரிக்கையடைந்தது. இந்த குழப்பத்தை ஜேர்மனி தனக்குச் சாதகமாக திருப்பிக் கொள்ளக்கூடும். கவனம் தேவை. ஃப்ரென்னர் பாஸ் (Brennerpass) என்னும் இடத்தில் இத்தாலி துருப்பகளை குவித்தது. இத்தாலியும் ஜேர்மனியும் நட்பு பேண ஆரம்பித்து விட்ட பின்னர் முசோலினி ஒஸ்ரியாவில் இருந்து தன் பார்வையை திருப்பிக்கொண்டார். 1937ல் ஒஸ்ரிய சான்சிலரான ஸ்லுஷ்னிக் (Schuschnigg) இனி தடையேதும் இல்லை ஹிட்லருக்கு. பிப்ரவரி 1938ல் ஹிட்லர் ஒஸ்ரிய சான்சிலருக்கு பத்து நிபந்தனைகளை அனுப்பி வைத்தார்.. அதில் ஒன்று ஒஸ்ரியாவைச் சேர்ந்த Seyss-Inquart என்னும் நாசி வீரரை ஒஸ்ரியாவின் உள்துறை அமைச்சராக நியமனம் செய்வது. உள்துறை அமைச்சர் என்றால் காவல்துறையும் இவர் கட்டுப்பாட்டில் வரும். ஒஸ்ரியாவை அபகரிப்பதற்கு இது முன்னோடியாக இருக்கும் என்பதால் இந்த நிபந்தனை. எதிர்பார்த்தபடியே, ஓஸ்ரியா இதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆனால் வெளிப்படையாக மறுப்பதென்பது ஹிட்லர் என்னும் காளையின் கொம்பு சீவி விடுவதற்கு சமம் என்று அவருக்கு தெரியும். ஒரு மாற்று ஏற்பாட்டை அவர் முன் வைத்தார். ஓஸ்ரியாவில் ஒரு வாக்கெடுப்பை நடத்துகிறோம். ஒஸ்ரியா தனித்து இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். ஹிட்லர் இதற்கு தயாராக இல்லை. ஓஸ்ரிய மக்களை நம்புவதற்கில்லை. ஜேர்மனி வேண்டாம். தனியாகவே இருக்கிறோம் என்று அவர்கள் வாக்களிக்கலாம். ஜேர்மனியோடு சேர்வதாக அவர்கள் வாக்களிப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம். ஓஸ்ரியா வேண்டும் என்றால் கொடுத்துவிடுவது தானே! ஏன் இதற்கு இப்படி பிகு செய்து கொள்ளவேண்டும்? மறுத்தார் ஹிட்லர். எனக்கு வாக்கெடுப்பில் நம்பிக்கை இல்லை நண்பரே. எனக்கு ஒஸ்ரியா வேண்டும். நீங்கள் ராஜினாமா செய்துவிட்டு எங்காவது சென்று மகிழ்ச்சியுடன் இருந்து கொள்ளுங்கள். உங்கள் மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை. ஒரு வேளை நீங்கள் முரண்டு பிடித்தால் ராணுவத்தை செலுத்தவேண்டிவரும். வேறு வழி தெரியவில்லை ஒஸ்ரிய சான்சிலருக்கு. தன் காபினெட் அமைச்சர்களோடு சேர்ந்து கும்பலாக ராஜினாமா செய்தார். Seyss-Inquart எந்த விதமான இடைஞ்சலும் இல்லாமல் அரசாங்கத்தைக் கைப்பற்றினார். மார்ச் 1938 ல் அவர் ஜேர்மன் ராணுவத்தை அரச மரியாதையுடன் வரவேற்றார். மார்ச் 15 ம் திகதி ஹிட்லர் பெரும் ஆரவாரத்துக்கிடையே வியன்னாவில் நுழைந்தார். வீதிகளில் ஓஸ்ரிய மக்கள் திரண்டு வந்து ஹிட்லரை வாழ்த்தி ஆரவாரம் செய்தனர். தனக்கு இத்தனை பெரிய ஆதரவு கிடைக்கும் என்று ஹிட்லரே எதிர்பார்த்திருக்கவில்லை ஒஸ்ரியா, ஜேர்மனியுடன் ஒட்டிக்கொண்டது. இந்த இணைப்பின் Anschluss ன் பின்னர் Schluschnigg சிறைப்பிடிக்கப்படுகிறார். ஒஸ்ரிய யூதர்கள் தேடிப்பிடித்து சிறையில் அடைக்கபட்டனர். தாக்கபட்டனர். யூதர்கள் தங்கள் உரிமைகள் அனைத்தையும் அந்த கணமே இழந்தனர். கை, கால்களில் விலங்கு பூட்டி யூதர்கள் தெருகளில் இழுத்துச் செல்லப்பட்டதை நாசிகளும் ஒஸ்ரியப் பிரஜைகளும் பார்த்துக் கொண்டு நின்றனர். முசோலினி சும்மா இருந்தார். பிரிட்டனும் பிரான்ஸும் வழக்கம் போல் எதிர்க்குரல் எழுப்பின. இது அநீதி, ஒஸ்ரியாவின் இறையாண்மை பாதிக்கபட்டுவிட்டது. ஹிட்லர் ஒப்பந்தத்தை மீறுகிறார் என்று தொண்டு கிழிய இரு நாடுகளும் கத்தின. பிறகு வழக்கம் போல அடங்கிவிட்டன. செக்கோஸ்லாவாக்கியா மீது குறி ஹிட்லரின் அடுத்த குறி செக்கோஸ்லாவாக்கியா என்று அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஓஸ்ரியாவை சுருட்டிக் கொண்டவர் அடுத்து இங்கே தான் வரவேண்டும். ஏப்ரல் 1938 ல் இருந்தே ஹிட்லர் போர்த்திட்டங்கள் தீட்ட ஆரம்பித்திருந்தார்.. ஒஸ்ரியா ஜேர்மனியுடன் ஒட்டிக்கொண்ட மகிழ்ச்சியில் இருந்தார் அவர். ஒரு வெற்றி இன்னொரு வெற்றிக்குத்தான் இட்டுச்செல்லும். சென்றாக வேண்டும். எந்தவொரு திட்டமும் தோல்வியடையக்கூடாது.. ஹிட்லருக்கு. அல்லது தோல்வியடையும் எந்த திட்டத்தையும் தீட்டக்கூடாது. ஒஸ்ரியா வேண்டும் என்றால் அது வந்தாக வேண்டும். செக்கோஸ்லாவியா வேண்டும் என்றால் அது கிடைத்தாக வேண்டும். மே மாத இறுதியில் ராணுவத்திற்கு ஹிட்லர் உத்தரவிட்டார். செக்கோஸ்லாவாக்கியா என்ற பெயரில் இனி ஒரு நாடு உலக வரைப்படத்தில் இருக்கக்கூடாது. இந்த வெறிக்கு காரணம் அவருக்கு கிடைத்த உளவுத்தகவல்கள். ஓஸ்ரியாவைப் போல் செக் அடிபணியாது. காரணங்கள் எனக்கு வேண்டாம் என்றார் ஹிட்லர் சிடுசிடுப்புடன். எனக்கு வேண்டியது செக்கோஸ்லாவாக்கியா மட்டுமே. மேற்குலக நாடுகளுடன் செக் நல்லுறவு கொண்டிருப்பது ஹிட்லருக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக, லீக் ஒஃப் நேஷனஸுடன் கொண்டிருந்த உறவு சுத்தமாக பிடிக்கவில்லை. செக்கோஸ்லாவாக்கியாவில் அப்போது 7.1 மில்லியன் செக் மக்களும் 3.3 மில்லியன் ஜேர்மானியர்களும், 2.6 மில்லியன் ஸ்லாவாக்கியர்களும், 720.00 ஹங்கேரியர்களும், ஒரு லட்சம் போலந்து மக்களும் பிற ரோமானியர்களும் யூகோஸ்லாவியர்களும் ருதேனியர்களும் இருந்தனர். ஹிட்லர் குறிப்பாக கவனித்தது 3.3 மில்லியன் ஜேர்மனியர்களை. சூடெடன்லாந்து (Sudetenland) ஜேர்மனியர்களை. ஜேர்மனியையும் செக்கை இணைத்துக்கொள்ள இந்த ஒரு காரணம் போதாதா? செக் பெரும்பான்மை மக்கள் வசிக்கும் ஒரிடத்தில் ஜேர்மனியர்களால் எப்படி சுதந்திரமாக வாழ முடியும்.? 1930 களில் செக்கோஸ்லாவாக்கியா பொருளாதார சிக்கலில் சிக்கித்தவிக்க ஆரம்பித்தது. அதுவரை ஒன்றிணைந்து வாழ்ந்து வந்த கதம்ப மக்கள் நெருக்கத்திற்கு உள்ளானார்கள். ஸ்லாவாக்கியர்களும் ஜேர்மனியர்களும் செக் மக்கள் மீது குற்றம் சாட்டினர். எங்கள் வாழ்க்கை நிலை தேய்ந்து போனதற்கு காரணம் பெரும்பான்மையினரான செக் இனம் தான். எங்களுக்கு இங்கே போதுமான சுதந்திரம் இல்லை. வேலை வாய்ப்புக்கள் இல்லை. சமத்துவமாக நாங்கள் நடத்தப்படுவதில்லை. ஹிட்லர் காத்திருந்தது இதற்காக தான். எனதருமை ஜேர்மானியர்களே, கவலை வேண்டாம். நான் இருக்கும் போது உங்களுக்கு என்ன கவலை_ சுண்டைக்காய் தேசம் தான் என்றாலும் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. செக், சோவியத்துக்கு இணக்கமான நாடு. பிரான்ஸுடன் ஒப்பந்தம். போட்டுக்கொண்டுள்ள நாடு. ஆக்கிரமிப்பு என்று ஆரம்பித்தால், சோவியத்தும் பிரான்ஸும் மட்டுமல்ல, பிரிட்டனும் கூட்டாக வந்து எதிர்க்கும். ஹிட்லருக்கும் இது தெரியும். ஆனால் அவர் பெரிதாக கவலைப்படவில்லை. ஹிட்லர் கவலைப்படவில்லை என்றாலும் அவர் ராணுவத்தில் உள்ள சில முக்கிய தலைகள் கவலைப்பட்டன. பிரான்ஸை பகைத்துக் கொண்டு எதற்காக இந்த ஹிட்லர் செக்கை ஆக்கிரமிக்க விரும்புகிறார்? இது வீண் வேலை அல்லவா? இங்கிருக்கும் ஜேர்மானியர்களுக்காக மாத்திரம் கவலைப்பட்டால் போதாதா? சூடடென்லாந்து எக்கேடு கெட்டால் நமக்கென்ன? எதிர்ப்பு தெரிவுக்கும் வகையில் ராணுவ தலைவராக இருந்த கேர்ணல் லுட்விக் பெக் ஓகஸ்ட் 1938 ல் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவர் இடத்திற்கு, ஜெனரர் ஹால்டர் என்பவர் நியமிக்கப்ட்டார். அவருகும் ஹிட்லரின் திட்டத்தில் உடன்பாடில்லை. கல்லானாலும் ஹிட்லர் என்று இருந்துவிட வேண்டியதுதானே? குழம்பித் தவித்த ஹால்டரைத் தொடர்பு கொண்டார் லுட்விக்பெக். இருவரும் பேசினார்கள். ஒரு கட்டத்தில், இருவரும் இணைந்து சுவார்ஸியமான ஒரு திட்டத்தை வகுத்தார்கள். நாம் ஏன் ஹிட்லரை தூக்கியெறியக்கூடாது? திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பிரிட்டன் பிரதமர் நெவில் சாம்பர்லைனைத் (Neville Chamberline) தொடர்பு கொண்டனர். ஹிட்லரை கவிழ்க்க எங்களுக்கு உதவுவீர்களா? சாம்பர்லைன் சிரித்துக்கொண்டார். ஹிட்லரையாவது கவிழ்ப்பதாவது? மூனிச் உடன்படிக்கை - Munich Agreement சாம்பர்லைன் வேறு திட்டம் வைத்திருந்தார். செப்ரெம்பர் 15 ம் திகதி விமானம் மூலம் ஜேர்மனி வந்து ஹிட்லரைச் சந்தித்தார். பேசினார். ஹிட்லர் உங்களுக்கு சூடெடன்லாந்து தானே வேண்டும். அது உங்களுடையது. போர் வேண்டாம். பிரான்ஸ் உங்கள் மீது கை வைக்காமல் நான் பார்த்துக் கொள்ளுகிறேன். போதுமா? ஆனால், ஹிட்லருக்கு ஏனோ திருப்தி ஏற்படவில்லை. ஜேர்மனியில் கவலை அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. ஹிட்லர் பிரான்ஸையும் பிரிட்டனையும் சீண்டுகிறார். விரைவில் அவர்கள் நம்மைத் தாக்கப்போகிறார்கள் என்னும் செய்தி பரவ ஆரம்பித்திருந்தது. சரி, ஒப்பந்தம் மூலமாகவே முடித்துக் கொண்டுவிடலாம்., செக்கை இப்போதைக்கு விட்டுவிடலாம் என்று முடிவு செய்தார் ஹிட்லர். அமைதி உடன்படிக்கையை உருவாக்கும் பணியை தன் நண்பர் முசோலினியிடம் வழங்கினார். செப்ரெம்பர் 29, 1938 ல் மூனிச் நகரில் (München) கூடினார்கள். ஹிட்லர், முசோலினி, சாம்பர்லைன் மற்றும் பிரான்ஸ் பிரதமர் டிலாடியர் (Edouard Daladier). எல்லாம் தீர்ந்தது என்னும் நம்பிக்கையில் பிரிந்தார்கள். சாம்பர்லைன், பிரிட்டன் வந்த இறங்கியதுமே தன் கையில் இருந்த ஒப்பந்தத்தை உயரே தூக்கிப் பிடித்து அசைத்துக் காட்டினார். பார்த்தீர்களா? ஹிட்லருக்கு போய் பயப்பட்டுக்கொண்டிருந்தீர்களே! கையெழுத்து போட்டிருக்கிறார் பாருங்கள். இந்தப் பிரச்சனை மட்டுமல்ல, இனி ஐரோப்பாவில் அவர் மூலமாக எந்த பிரச்சனை வந்தாலும் உட்கார்ந்து பேசி முடிவு கட்டிவிடலாம். மோதல், போர் எதுவும் இனி இங்கே இருக்காது. திருப்திதானே? ஆனால் பின்னர் நடந்தது வேறு. சம்பர்லைன் எதிர்பாரத்தபடி ஹிட்லர் திருப்திப்படவில்லை. அமைதியாக இருக்கவில்லை. திரும்பவும் ஆரம்பித்தார். மார்ச் 1939 ல் செக் அதிபரை ஹச்சா ( Emil Hacha) என்பவரை அழைத்து நச்சரிக்க ஆர்ம்பித்தார். சூடெடன்லாந்து எங்களுடையது தான். மிச்சமிருப்பதையும் அப்படியே கொடுத்துவிட்டால், நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். செக் அடிபணிய மறுத்தது. மார் 15 1939 அன்று செக்கோஸ்லாவாக்கியாவில் தலைநகரம் பிராக் (Prag) கைப்பற்றப்பட்டது. ஹிட்லரின் வாழ்க்கையில் இது மிக முக்கிமான கட்டம். எதுவும் செய்யலாம், தட்டிக்கேட்க யாருமில்லை என்று அவர் திருப்த்தியடைந்தது அப்போது தான். செக்கோஸ்லாவாக்கியாவை ஹிட்லர் ஆக்கிரமித்தபோது அமைதியாக இருந்ததன் மூலம் ஹிட்லரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார் சாம்பர்லைன். அதெப்படி நீ ஒப்பந்தத்தை மீறலாம் என்று அவர் மிரட்டவில்லை. மீறினால் படை கொண்டு வருவேன் என்று மிரட்டவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் எதையெல்லாம் ஜேர்மனிக்கு பிரிட்டன் மறுத்ததோ அனைத்தையும் பிரிட்டனே இப்போது வழங்கியது. ரைன்லாந்தை ராணுவமயமாக்குகுதல், ஆயுதங்கள் தருவித்தல் போன்ற விடயங்களில் பிரிட்டன் அமைதி காத்தது. அங்காங்கே வதை முகாம்களை அமைத்து யூதர்களை கொல்லுதலும் போது அது பற்றி அறிந்திருந்தும் அது உள்நாட்டு பிரச்சனை என்று சமாதானம் சொல்லி அமைதியாக இருந்தது. சூட்டன்லாந்து என்று முழுவதுமாக உச்சரித்து முடிப்பதற்குள் பிரிட்டன் அளித்துவிட்டது. அடிபணிய மாட்டோம் முடிந்தவரை எதிர்க்கப்போகிறோம் என்று செக் உறுதி பூண்ட போது பிரான்ஸும் பிரிட்டனும் செக்கை மிரட்டியது. அநாவசியாமாக எதிர்ப்பு காட்டி செத்துப்போகாதீர்கள். செக் பிரதேசங்களை ஜேர்மனி கைப்பற்றுவதற்கு சில வாரங்களுக்கு முன்பே லண்டன் தொழிலதிபர்களும் ஜேர்மன் தொழிலதிபர்களும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு விட்டார்கள். செக்கில் தொழிற்சாலைகளை நிர்மாணிக்கவும் புனரமைக்கவும் செக்கை விட்டுத்தர மட்டுமல்ல, ஐரோப்பாவின் மிகப் பிரபல்யமான ஆயுதத் தொழிற்சாலையான ஸ்கொடாவை (Skoda) ஜேர்மனிக்கு அள்ளிக்கொடுக்கவும் சாம்பர்லைனும் டலாயரும் தயங்கவில்லை. ஒரே காரணம் சோவியத் எதிர்ப்பு. சோவியத்யூனியனை எதிர்த்து அழிக்க ஹிட்லரை விட அடாவடியான வேறு ஆள் கிடைப்பார்களா? சோவியத் கோரிக்கை – பிரிட்டனின் அலட்சியம் பிரிட்டனையும் பிரான்ஸையும் எரிச்சலடையச் செய்யும் வகையில், செக் ஆக்கிரமிப்பிலும் குறுக்கிட்டது சோவியத்யூனியன். செக் நிலப்பரப்புகளை ஜேர்மனி ஆக்கிரமித்தது செல்லாது. இது அத்துமீறல் என்று கண்டனம் செய்தது சோவியத். உடனடியாக பிரிட்டனை தொடர்பு கொண்ட சோவியத், ஹிட்லரை தட்டிவைக்க ஒரு அவசர மகாநாடு கூட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. பிரிட்டன் பிரான்ஸ் , போலந்து, ரூமேனிய, துருக்கி, சோவியத் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஹிட்லர் அடுத்தடுத்து கெடுதல் செய்யாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். ஜேர்மனியின் அத்துமீறல் ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும். சாம்பர்லைன் மறுத்து விட்டார். இப்போது என்ன அவசரம். ஹிட்லரால் பெரிய அபாயம் வரும் என்று எனக்குத் தோன்றவில்லை. சாம்பர்லைனுக்கும் டலாடியருக்கும் தான் அப்படித்தோன்றவில்லையே தவிர பிரிட்டன், பிரான்ஸ் மக்களுக்கு ஹிட்லரைப் பற்றி தெரிந்திருந்தது. ஹிட்லரை இப்போதே அடக்கிவிட வேண்டும் என்னும் சோவியத்தின் குரலை அவர்கள் ஆமோதித்தனர். சோவியத்துடன் இணைந்து போரிடுவது அமைதியைக் கொண்டுவரும் என்றார் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் லோயிட் ஜோர்ஜ்.( Lloyd George) பிரான்ஸின் முன்னாள் விமான மார்ஷல், பியரி காட் சோவியத்தை ஆதரித்தார். ஜனநாயக நாடுகளுக்கு சோவியத்தின் கூட்டு நன்மையே கொண்டு வரும் என்றார் அவர். நியூயோர்க் ஹெரால்ட் ட்ரிபியூன் (மே 4, 1939) வெளியிட்ட செய்தியின் படி 98 சதவீத பிரிட்டிஷ் வாக்காளர்கள் சோவியத்தின் அழைப்பை ஏற்று, சோவியத்துடன் இணைந்து போரிட விருப்பம் தெரிவித்தார்கள். சோவியத் பல்வேறு அழைப்புக்களை பிரிட்டனுக்கும் பிரான்ஸிற்கும் விடுத்தது. மூவரும் இணைவோம். நாசிகளுக்கு எதிராக போராடுவோம். ஐரோப்பாவைக் காப்போம். ஒவ்வொரு முறை அழைப்பு வரும் போதும் அதை ஒத்திவைத்தார் சாம்பர்லைன். பார்க்கிறேன் என்றார். பரிசீலிக்கிறேன் என்றார். மாறாக ஹிட்லருடன் கூட்டுச் சேர்வதில் அவர் மேலதிக ஆர்வம் காட்டினார். ஹிட்லருடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்வதில், ஹிட்லரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதில். ஹிட்லரிடம் இருந்து அமைதியைக் கேட்டுப் பெறுவதில். ஹிட்லரின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதில். கன்சர்வேடிவ் கட்சியில் இருந்து சாம்பர்லைனுக்கு எதிர்ப்புகள் வலுத்தன. மே 7 ம் திகதி ஹவுஸ் ஒஃவ் காமன்ஸில் உரையாற்றிய சேர்ச்சில், சோவியத்துடன் இணைவது தான் நமக்கு நல்லது என்று குறிப்பிட்டார். முடிந்தவரை எதிர்ப்பைத் துரிதப்படுத்த வேண்டும் என்று சோவியத் விரும்பியது. முடிந்தவரை தள்ளிப் போடலாம் என்று பிரிட்டன் விரும்பியது. செக் கபளீகரம் செய்யப்பட்டு பத்து வாரங்கள் கழிந்திருந்தன. அலட்டிக்கொள்ளவேயில்லை பிரிட்டன். ஆகவே பிரான்ஸும். இனி பிரிட்டனையும் பிரான்ஸையும் நம்பிக் கொண்டிருக்க முடியாது என்னும் முடிவுக்கு சோவியத் வந்து சேர்ந்தது. பிரிட்டன் அரசாங்கத்தின் ஒரு பிரிவு (British Parliamentary Secretary of Overseas Trade) ஜேர்மனியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்த சமயம் அது. அரை பில்லியன் அல்லது ஒரு பில்லியன் பவுண்ட் வரை அளிக்கத்தயாராக இருப்பதாக பிரிட்டன் அவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தது. பிரிட்டன் ஹிட்லரை மறைமுகமாக ஆதரித்துக் கொண்டிருக்கிறது. ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. கண்டு கொள்ளாமல் இருக்கிறது. பிரிட்டன் மட்டுமல்ல எந்தவொரு ஐரோப்பிய நாடும் ஜேர்மனியின் செயல்களைத் தட்டிக்கேட்பதாக தெரியவில்லை. சோவியத் அயல் விவகார கமிட்டியின் தலைவர், Anderei Zhdanov பிராவ்தா இதழில் (ஜுலை 29, 1939) தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார். பிரிட்டனுடனும் பிரான்ஸுடனும் சோவியத் மேற் கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளுக்கு எந்த வித உருப்படியான பலனும் கிடைக்கவில்லை. சோவியத்துடன் கூட்டுச்சேர இந்த இரு நாடுகளுக்கும் விருப்பமில்லை. ஹிட்லரைக் கண்டிக்கும் எண்ணமும் இவர்களுக்கு இல்லை. இவ்வாறு ஐரோப்பிய நாடுகள் அரசியல் நகர்வுகளில் ஈடுபட்டிருக்க ஹிட்லர் தனது கனவை நோக்கிய அடுத்த கட்ட செயற்பாடுகளில் அமைதியாக ஈடுபட தொடங்கி இருந்தார். ஆம் ஹிட்லரின் அடுத்த இலக்கு போலந்து. இன்னும் ஒரு மாதத்திற்குள் தாக்கப்போகிறார். ஐரோப்பா முழுவதும் செய்தி பரவிவிட்டது. கடைசியாக ஒருமுறை பேசிப்பார்த்தது சோவியத். இப்போதும் கெட்டுப் போய்விடவில்லை. பிரிட்டனும் பிரான்ஸும் தங்கள் ராணுவக் குழுக்களை மொஸ்கோவுக்கு அனுப்பிவைத்தால் ஒன்றிணைக்கப்பட்ட திட்டம் ஒன்றை உருவாக்கமுடியும். ஹிட்லர் போலந்தை தாக்குவதை தடுத்து நிறுத்தவும் முடியும். இந்த முறை, சோவியத்தின் அழைப்பை உதாசீனப்படுத்த முடியவில்லை. செய்தால் எதிர்ப்புக்கள் கிளம்பக்கூடும். ஆகவே பெயருக்கு இரண்டு குழுக்களை அனுப்பி வைத்தன பிரிட்டனும் பிரான்ஸும். இரண்டும் ஆடி அசைந்து மொஸ்கோவுக்கு வந்து சேர்ந்தன. சோவியத் முன்வைத்த திட்டம் இதுதான். ஹிட்லர் போலந்தை தாக்கினால் ஒன்று சோவியத் துருப்புகளை அனுப்பலாம். இரண்டு, கிழக்கு ப்ரெஷ்யாவை எதிர்த்து போலந்து ஊடாக மத்திய ஜேர்மனியை எதிர்த்துச்செல்ல வேண்டும் போலந்தை கேட்டுவிட்டு சொல்கிறோம் என்று நேரம் வாங்கிக்கொண்ட பிரிட்டனும் பிரான்ஸும், இது சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டன. போலந்து கேட்கவில்லையாம். சோவியத் உதவிக்கு வருவதை போலந்து விரும்பவில்லையாம். ஹிட்லருக்கு அடிபணிந்து போ என்று செக்கை மிரட்ட முடியும். ஆனால் சோவியத்தின் உதவியை ஏற்றுக்கொள் என்று போலந்திடம் சொல்ல முடியாது. (தொடரும்) நூல் - இரண்டம் உலகப்போர் எழுதியவர் - மருதன் வெளியீடு - கிழக்கு பதிப்பகம் , மே 2009
 6. 2 points
  நவீன கொரனாவைரஸ் பலமிழந்து வருவதாகக் காட்டும் எந்த விஞ்ஞான ஆதாரங்களும் இது வரை வரவில்லை. இந்த இத்தாலிய மருத்துவர் ஒரு மாதத்திற்கு முன்னர் இப்படியான ஒரு அவதானிப்பைச் செய்திருந்தார் ஆனால் இது அவதானிப்பு மட்டுமே! நவீன கொரானாவைரசின் பரம்பரை அலகுகள் மாறுகின்றனவா என்று தொடர்ந்து அவதானித்து வருகிறார்கள், இது வரை மாற்றங்கள் இல்லை!. நான் ஏற்கனவே எனது கொரானா வைரஸ் தடுப்பு மருந்து பற்றிய கட்டுரையில் சொன்னது போல, எல்லா வைரசுகளும் மாறும், ஆனால் அது மாறும் போது நமக்கு ஆப்பாகவும் முடியலாம் வாய்ப்பாகவும் அமையலாம்! இது இந்த வைரசில் இது வரையில் நடக்கவில்லை என்பது தான் உண்மை! எனவே தொடர்ந்து அவதானமாக இருக்க வேண்டியது எமது கடமை.
 7. 2 points
 8. 2 points
 9. 2 points
  அத்தானுக்கு கொஞ்சம் எண்டவுடனை மூக்குக்கு மேலை கோள்வம் வந்துடும். அவருக்கு ஒண்டும் சொல்லக்கூகூடாது.
 10. 2 points
 11. 2 points
 12. 2 points
  துல்பென் உங்களுடைய கருத்துக்கள் எல்லாவற்றோடும் நான் ஏற்றுக்கொண்டும் ஒத்துப்போகாமலும் இருந்தாலும் உங்களை ஒரு "Reasonable person" ஞாயமான கருத்தாளர் இப்படித்தான் பார்க்கிறேன். ஆனாலும் மேலே நீங்கள் இணைத்த வீடியோவும் அது சார்ந்த உங்கள் கருத்துக்களும் உங்கள் மீதான பார்வையை சற்றே ஆட்டம் காணச்செய்கிறது. எனக்கு தெரிந்து.... திரும்பவும் சொல்கிறேன் "எனக்கு தெரிந்து" இலங்கையில் எந்த ஒரு பிராமண குருக்களும் இப்படியான பேச்சுக்களில் , கதா பிரசங்கத்தில் ஈடு பட்டது கிடையாது. அதையும் தவிர அவர்கள் தாங்கள் தான் உசத்தி என்று எந்த ஒரு செயலிலும் காட்டியதும் கிடையாது. என்னுடைய நண்பன், எங்கள் ஊரில் வசிக்கும் ஐயரின் மகளை தான் காதலித்தான். அவர்கள் காதல் மிகவும் ரம்மியமானது. நிறைய வெண்பொங்கல், பஞ்சாமிர்தம், அடை, சீடை , முறுக்கு, இப்படி நிறைய திண் பண்டங்கள் எங்களை தேடி வந்த காலம் அது. இந்திய பார்ப்பனிய குப்பைகளை எங்கள் மீது கொட்டி, எங்களையும் அவர்கள் போல் காட்ட முட்படும் உங்கள் செயல் ஞாயம் அற்றது. கண்டிக்கத்தக்கதும் கூட. எம்மவர் மத்தியில் இந்திய பார்ப்பனர்கள் சார்ந்து ஒரு பாரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வரும் நேரத்தில் இது சீண்டிப்பார்க்கும் ஒரு பதிவு மட்டுமே.
 13. 2 points
  மரத்தின் அருமை ஐந்தறிவு அறியும்.!
 14. 2 points
 15. 1 point
  ரயில்களுக்குப் பின்னால் ஓடி பயணிகளின் உயிர்களை காக்கும் ‘சின்னப்பொண்ணு’
 16. 1 point
  பிள்ளையை தத்தெடுத்தல் நான் இங்குள்ள நிறுவனத்திற்கு வருடத்தில் இருமுறை உதவிசெய்வேன் (https://www.cbm.org.au/). அவர்கள் அதை மூன்றாம் உலக நாடுகளில் உள்ள வறிய மக்களுக்கு உதவி செய்வார்கள், இன்றைக்கு எனக்கு வந்த கடிதத்தை பார்த்துவிட்டு, தான் வைத்திருந்த AUD20/- தந்தார் அவர்களுக்கு சேர்த்து அனுப்ப சொல்லி. நான் கேட்கவில்லை, அவராக தந் து மிகவும் சந்தோஷமாக இருந்திச்சு (மூன்று பிள்ளைகளுக்கும் உதவி செய்ய விருப்பம், ஊருக்கு போகும் போது வொள்ளவத்தை யாழ்பாணத்தில் நிற்கும் வறியவர்களுக்கு பணம் அவர்களை கொண்டுதான் கொடுப்பேன்). வந்த கடித்ததில் இருந்த படம் : பிறகு கேட்டார் தான் ஒரு பிள்ளையை தத்தெடுத்து படிப்பிக்கப் போகின்றேன் என்று, அந்த பிள்ளை சின்ன பிள்ளையாக இருக்கனும் என்பது அவாவின் வேண்டுகோள். அப்ப நில்மினி தந்த மகளிர் இல்லத்தில் (https://mahalirillam.org/au/sponsorship/) ஒருவரை தேர்ந்து எடுக்க சொல்லியுள்ளேன், அவர் அவர்களை இன்று தொடர்பு கொண்டுள்ளார், பார்ப்போம். அவரின் கனவு ஊரில் ஒரு வைத்தியசாலை கட்டி ஏழைகளுக்கு வைத்தியம் பார்ப்பது தான். பார்ப்போம் காலம் பதில் சொல்லும். மனைவியிடம் கர்நாடக சங்கீத படிக்க வந்த சின்ன பிள்ளைகளில் சிலர் மகளிடம்தான் படிக்கனுமென்று விரும்பினார்கள், அதனால் அவருக்கும் வருமானம் வருகின்றது, இப்ப ஆண்டு 11. அத்துடன் வரைதல் பாடமும் எடுக்கின்றவா சிலருக்கு, அவர் வரைந்த படம், போனகிழமை தன் நண்பிக்கு கொடுக்க வரைந்த படத்தை, நாங்கள் சுட்டு வீட்டில் மாட்டிவிட்டோம், இப்ப வேற வரைகின்றா
 17. 1 point
  நாதம்ஸ் நான் உங்களை சொல்லவில்லை. சிங்களவர்கள் எல்லாரும் திட்டம் போட்டு நடக்கிறார்கள். கடைசியில் கோட்டையில் சண்டை பிடித்ததும் கும்மான் என்பார்கள். யாழில் உள்ள, தாங்கள் முன்னாள் புலிகள் என்று வெளிப்படையாக எழுதுபவர்கள் தூங்குகிறார்களா....?
 18. 1 point
  non-stick எவ்வளவு நுண்ணிய உற்பத்தி முறை ஆயினும் (விலை கூடும் உற்பத்தி முறை நுண்ணிய தன்மை கூடும் போது), ஏலவே சொன்னது போல துவாரங்கள், இடைவெளிகள், மற்றும் தவலிப்புகள் இருக்கும். பாவனையின் போது இவை பெரிதாகும், metal-safe என்று metal utensils பாவித்தால் இன்னும் அது துரிதமாகும். சமைக்கும் உணவு ஒட்டுதல் தன்மை அதிகரிக்கும். அதை உரசி அகற்றும் போது மிகவும் non-stick ஐ மிக மிக நுண்ணிய அளவில் பாதிக்கும் அல்லது உரசி அகற்றப்படும். இது பௌதிக இராசாயனத்தோடு தொடர்பு பட்ட விடயம். மற்றது, நீங்கள் இந்த pans ஐ பாவிக்காமல் வைத்து இருந்ததாக சொன்னீர்கள். 2015 இற்கு முதல் என்றால், இவற்றில் PFOA and PTFE இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. இவை நோய்களை, குறிப்பாக புற்று நோய்களை தூண்டுவதாக ஓர் consensus வளர்ந்துள்ளது. இதை பற்றி தேடிப்பாருங்கள். https://www.cancer.org/cancer/cancer-causes/teflon-and-perfluorooctanoic-acid-pfoa.html இப்பொது ceramic, stone, marble coating பிரபல்யம் அடைவதற்கு இதுவும் ஓர் காரணம். ரெஸ்ட்ராரென்ட் தலைமை chef சொன்னது, ரெஸ்ட்ராரென்ட் இல் இருக்கும் நடைமுறை, ஏனெனில் ரெஸ்ட்ராரென்ட் இல் பாவிப்பது carbon steel, cast iron அல்லது ஸ்டெயின்லெஸ் steel. எதுவும் உங்கள் விருப்பம்.
 19. 1 point
  சேர்ந்து தமிழ் மக்களை கொலை செய்தவர்கள் என்ட வகையில தானே?
 20. 1 point
  எனக்கும் இதுபற்றி விளங்கவில்லை. இந்தியாவில் இருந்து வந்த சத்ய சாயி பாபா ஆஞ்சநேயர் பக்தி எல்லாம் இலங்கை தமிழர்களிடம் கரைபுரண்டு ஓடுகிறது இந்த வீடியோவுக்கு என்ன பிரச்சனை
 21. 1 point
  மிகச் சரியான பார்வை.. நேரம் இல்லாதவர்கள் 31:00 நிமிடத்தில் இருந்து கேளுங்கள். நாடுகள் இயங்கும் தன்மைகள் குறித்து விளக்கியுள்ளார்.
 22. 1 point
  நல்லா தான் கதை அளக்கிறார்! ஏன் இதுவரை மக்களின் கருத்தை கேட்டு செய்ய முடியாம போச்சு? இனி எப்பிடி மக்களின் கருத்தை கேட்டு செய்ய முடியும்? ஒரு விளக்கமும் இல்லாம ஊரை ஏமாத்துறார். இப்பிடி ஊரை ஏமாத்தினா தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையோ?
 23. 1 point
  தலைவர் எப்படி கண்ணை மூடி ரசிக்கின்றார் குழந்தையின் பரிசத்தை, இப்படியொரு தலைவர் வாழ்ந்த காலத்தில்; நானும் தமிழனத்தில் வாழ்ந்தேன் என சந்தோஷமாக இருக்கு
 24. 1 point
  கருணா மகிந்த அன்ட் கோ வுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம். கருணாவைப் பிரித்தெடுத்து ரணில் தொடக்கிவைத்த நரி வேலையின் தொடர்ச்சியாகத் தற்போது கிழக்கிலே அரசியல்ரீதியாகச் செய்யக் களமிறக்கப்பட்டவரே கருணா. ராயபக்சர்களோ தாமரைமொட்டோ தமிழர்களிடம் எடுபடாதென்பதால் புலிப்புராணத்தோடு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்றபோர்வையில் களமிறக்கப்பட்டுள்ள ஒரு கூலிதான் கருணா. தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தைத் தமிழரை வைத்தே சிதைக்க எடுக்கும் முயற்சியைத் தமிழர்கள் சரியாக இனங்கண்டு தமது வாக்குப்பலத்தை தமிழ் தேசியத்தை வலுப்படுத்தும் வகையிலே பயன்படுத்த வேண்டும்.குறைந்தபட்சம் தமிழரது பிரதிநிதித்துவத்தைக் காத்தல் என்ற வகையில் மட்டுமே. சிங்களத்தை பெரும்பான்மையாகக்கொண்ட நாடாளுமன்று தமிழருக்கெதிரான சட்டங்களை நிறைவேற்றும் சபை. வெறும் அடையாளக் குரலெழுப்புதல் மட்டுமே தமிழ் அரசியல்வாதிகள் செய்யக்கூடியது. கடந்த தேர்தற்காலங்களைப் போன்று இந்தக் காலத்திலும் புலிகளைத் தமது தேவைக்கேற்ப தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் பயன்படுத்தும் ஒரு கீழ்மையான அரசியல் வங்குரோத்துத்தனம் குறித்துத் தமிழர்கள் இனங்கான வேண்டியது அவசியமானது.புலிகள்தானே மௌனிப்பதாகச் சொல்லியதோடு அவர்கள் ஒதுங்கிவிட்ட சூழலில் அவர்களை தங்களது பரப்புரைக்கும் வெற்றிக்கும் பயன்படுத்தும் சிங்கள தமிழ் அரசியல்வியாதிகள் ஈழத்தீவின் சாபக்கேடாகும். இதனை எப்போது தமிழினமும் சிங்கள இனமும் புரிந்துகொள்கிறதோ அன்றுதான் ஒரு நியாயமான அரசியல் மாற்றம் நிகழ வாய்ப்பு ஏற்படலாம். கருணா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது சரியானபோதும் இலங்கையில் பக்கச்சார்பற்ற இனவாத மனோநிலையற்ற நீதிபரிபாலனம் இருக்கிறதா? இலங்கையில் நீதியென்பதே சிங்களவருக்கா நீதி மட்டுமே. சவேந்திர சில்வா கோத்தபாய உட்பட இனக்கொலையாளர்களின் நிலை என்ன? கடத்திக் கொலை செய்த கொலையாளிகளான படையினரின் நிலை என்ன?
 25. 1 point
 26. 1 point
  இப்ப இந்தியாவின் பாதுகாப்பில் மியூசியத்திலிருக்கு
 27. 1 point
  என்னைப் பொறுத்தவரை சமயங்கள் என்பன மனிதரை வழி நடாத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. சமயங்கள் மனிதர்களிடையே வேறுபாடு பார்ப்பதில்லை. அதனைப் பின்பற்றும் மனிதர்கள்தான் எனது சமயம்தான் உயர்ந்தது உனது சமயம் தாழ்ந்தது என உயர்வு தாழ்வை செயற்கையாக உருவாக்குகின்றனர். நான் ஒரு கிறீத்துவன் எனத் தெரிந்தும், இதுவரை எந்த ஒரு சைவக் கோவில்களிலிருந்தும் என்னை நோக்கி ""நீ ஒரு கிறீத்துவன். நீங்கள் இங்கே வரக் கூடாது """ எனச் சொல்லப்படவில்லை. அந்த அளவில் இலங்கையில் சைவசமயம் பிற சமயங்களை மதிக்கும் தன்மையுள்ளதாக நான் உணர்கிறேன். ஆனால் தற்போது நாட்டில் இருந்து வரும் செய்திகள் நம்பிக்கை தருவனவாக இல்லை.
 28. 1 point
 29. 1 point
  உங்கள் மகளின் ஓவியம் அவவின் மனம் போலவே மிகவும் அழகாக இருக்கின்றது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்களுக்கும் வாழ்த்துக்கள் உடையார் அண்ணா
 30. 1 point
 31. 1 point
  ரில்லில கொண்டு வந்து வச்சபிறகு, அவர் ஸ்கான் பண்ண எடுக்கும் போது, கொஞ்சம் பொறுங்க, எண்டு வாங்கி முன்பக்கம், பின்பக்கம் திருப்பி பார்த்து, வேணாம்... விடுங்க , எண்டு சொன்னா, அவரும் ஒருக்கா பார்த்து, டேற் ஓகே தானே எண்ட.... இல்லை.... தமிழில் இல்லை... அதால வேண்டாம்.... எண்ட... பின்னால நிற்பவரும்... சரிதான் என்று சொல்ல... கடைக்காரர் புரிந்து கொள்வார்... உங்கள் நண்பர்களுக்கும் சொல்லிவிடுங்கள். அடுத்த முறை தமிழில் இருக்கும். பெருமையாக வாங்கி செல்வீர்கள்.
 32. 1 point
  இது ரகசியமல்ல போரில் நடக்கும் விடயங்களே: கருணாவுக்கு தென்னிலங்கையில் வலுக்கும் ஆதரவு இராணுவத்தினரை கொலை செய்ய நேரிடுவது சாதாரணமான விடயம் அதனாலேயே கருணா பயங்கரவாதியாக செயற்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான இராணுவத்தை கொலை செய்தார் என்பது முழு நாடும் அறியுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட வேட்பாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பத்தரமுல்லையில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்த விடயம் சம்பந்தமாகவே கருணா இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார் என நினைக்கின்றேன். கருணா கொரோனாவை விட பயங்கரமானவர் என கூறியிருந்தனர். இதனால் போர் காலத்தில் அவர் பயங்கரவாத அமைப்பின் தலைவர் என்ற வகையில் இத்தனை இராணுவத்தினரை கொலை செய்ததாக அவர் கூறினார். அது இரகசியமல்ல. கிழக்கு மாகாணத்தில் தாக்குதல்கள் தொடர்பாக நாட்டு மக்கள் மிகவும் புரிந்துணர்வுடன் பயங்கரவாத தலைவராக அவர் செய்ததை நாங்கள் தனிப்பட்ட ரீதியில் ஏற்காவிட்டாலும் பயங்கரவாத அமைப்புக்கும், இராணுவத்திற்கும் இடையில் போர் நடக்கும் போது இப்படியான நிலைமைகள் ஏற்படும். கருணா தலைமை வகித்து அவரது பயங்கரவாத அமைப்பை வெற்றி பெற செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். நாங்கள் இராணுவம் என்ற வகையில் பயங்கரவாதத்தை தோற்கடிக்க இதற்கு சமமான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இவை போரில் நடக்கும் விடயங்கள். எனினும் சாதாரண நிலைமைக்கு மாறிய பின்னர் தான் கடந்த காலங்களில் செய்த தவறுகளை பல சந்தர்ப்பங்களில் மறந்து விடுகின்றனர். மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சிக் காலத்திலும் ஒரு பக்கத்தை சேர்ந்த பெருந்தொகையான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். மறுபுறம் மக்கள் விடுதலை முன்னணியினர் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றனர். இவர்கள் அனைவரும் தற்போது ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளனர். கருணாவும் நாடாளுமன்றத்திற்கு வந்தார். தற்போதும் அந்த பிரதேச மக்கள் விரும்பினால் அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பார்கள் அதன் மூலம் அவரது அரசியல் வாழ்க்கையும் தொடருமென அவர் தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/145629?ref=ibctamil-recommendation
 33. 1 point
  அருமையான கவிதை. யாழ்கள தந்தையா் அனைவருக்கும் எம் மனமாா்ந்த தந்தையா்தின வாழ்த்துக்கள்
 34. 1 point
  தந்தையர் தின வாழ்த்துக்கள் சுயத்தை விற்று உழைப்பை இரைத்து உதிரம் வறண்டு குடும்பத்தை கரையேற்றும் கட்டு மரம் ! தன்னம்பிக்கை தைரியம் தெளிவு- இவை தோய்ந்த மூன்றெழுத்து மந்திரம் தந்தை ! கண்டிப்பு காட்டிடும் கண்கள் - முள்ளாய் அன்பு வழிய அக்கறை கொஞ்சும் அழகு மனம் - மலராய் ! அப்பா ! உந்தன் வியர்வை நாற்றத்தில் உழைப்பு மணக்குது ! நேர்மை மணக்குது ! புகழும் மணக்குது ! ரேகைகள் தேய்ந்து மரத்துப் போன விரல்களின் ஸ்பரிசத்தில் வாழ்வின் சோதனைகளை சொல்லாமல் உணரவைத்தாய் !
 35. 1 point
  அருமையாக எடுத்துள்ளார்கள் குமாரசாமியிடம் பயிற்சி எடுத்திருக்கும்
 36. 1 point
 37. 1 point
  இந்தியாவில் இருந்து பெட்டிகள் வந்திறங்கினால் திட்டத்தையே கையைவிடலாம்.
 38. 1 point
  மூவாயிரம் இராணுவத்தைக் கொன்றால்தான் 'மொட்டு'வில் தேசியப் பட்டியல் கிடைக்குமா? ஆனையிறவில் ஒரே இரவில் மூவாயிரம் வரையிலான இராணுவத்தினரைக் கொலை செய்தோம் என்று கருணா வெளியிட்டுள்ள கருத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுவதற்கான தகுதி இதுதானா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசில் பிரதி அமைச்சராகப் பதவி வகித்தவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா , நாவிதன்வெளி பிரதேசத்தில் மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றும்போது, "நாம் ஆனையிறவில் ஒரே இரவில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரைக் கொலை செய்தோம்" என்று வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ள சஜித் பிரேமதாஸ, "ஆனையிறவில் ஒரே இரவில் 3 ஆயிரம் இராணுவத்தினரைக் கொலை செய்ததாக கருணா உரையாற்றியுள்ளார். அதே உரையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனக்குத் தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்க முன்வந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 'தாமரை மொட்டு' சின்னத்தில் தேசியப் பட்டியல் கிடைப்பதற்கு இதுவா அவசியமான தகுதி?" - என்று கேள்வி எழுப்பியுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/145537
 39. 1 point
  பனங்கிழங்கு பாத்தியில் இருந்து எடுத்தல்,பக்குவமாய் அவித்தல்,உரலில் இட்டு இஞ்சி சேர்த்து இடித்தல் பின் அரித்தல் பிடிக்கொழுக்கடையாய் பிடித்துப் பரிமாறல் பாருங்கள்......!
 40. 1 point
  எங்க இருந்து எல்லோரும் புறப்படுகிறீர்கள்??? எம்மை அழித்தபோது நாம் வீதிகளில் கிடந்து அழுதபோது அமெரிக்க ஐனாதிபதியே கறுப்பன் தானே????
 41. 1 point
  மிகச் சரியாக சொன்னீர்கள், அதனால் நான் வீட்டை படசாலைக்குமுன்னால் வாங்கி, அவர்களின் நண்பர்கள் அனைவரையும் வீட்டுக்கு கூட்டிகிட்டு வாருங்கள், வந்து எவ்வளவு நேரமானலும் இருந்து கதையுங்கள் படியுங்கள் என சொல்லியுள்ளேன். அவர்களின் நண்பர்களுக்கும் சமைத்து கொடுப்போம்( - 5stars தருவார்கள் வடை, தக்காளி சாதம், முறுக்கு...) , அதனால் அவர்களின் நண்பர்களை பற்றி எம்மால் அறிய முடியும், அத்துடன் பிள்ளைகளுக்கும் ஒரு சுதந்திரம், அவர்கள் தங்கள் நண்பர்களுடன் கடைக்கு சினிமாக்கு போகிறோம் என சொன்னால் யாருடன் போகின்றீர்கள் என கேட்டுதான் விடுவோம், எங்களுக்கு அவர்களின் நண்பர்கள் எல்லோரையும் தெரிந்து வைத்திருப்பதால் பயப்படுவதில்லை, என்றாலும் வெளியில் போய் வரும் நேரமெல்லாம் கேட்டுதான் அனுப்புவோம், அத்துடன் போனவுடன் & வெளிக்கிடும் போது whatsapp இல் செய்தியும் அனுப்பிவிடுவார்கள் FAMILY Group க்கு, இது ஒரு பாதுகாப்பிற்கே. கட்டி வைத்திருக்க முடியா இங்கு, ஆனா கவனமாக வளர்க்கலாம், நல்ல அறிவுரைகளை சொல்லி. ஒவ்வொரு நாளும் வீடு திருவிழா மாதிரிதான் , ஒன்று மனைவியிடம் படிக்க பல பிள்ளைகள் வருவார்கள், அவர்களுடன் எங்கள் பிள்ளைகளும் நட்பாக பழகுவார்கள், அதனால் பல தமிழ், தெலுங்கு, மலையாள பெற்றோர் & பிள்ளைகளுடன் பழகும் வாய்ப்பு அதிகம், அதனால் வெளியில் சேட்டை விட முடியாது, தகவல் உடன் வரும் . நமது கலாச்சாரத்துடன் போய்கிட்டிருக்கின்றார்கள், கடந்த 10 வருடங்களாக சாய்பாபா SSE வகுப்புகளிற்கு போய்கிட்டு இருக்கின்றார்கள், அதனால பல நல்ல விடயங்களை கற்றுள்ளார்கள். நீங்கள் சாய்பாபா பக்தராக இருக்கவேண்டுமென்றில்லை (எனக்கு நம்பிக்கை இல்லை இவரில்) SSE வகுப்பிற்கு விடுங்கள், நல்ல பழக்க வழக்கம் வரும், பலருடன் சேர்ந்து பழகும் வாய்ப்பும் கிட்டும். அத்துடன் மனித நேயம், தொண்டு, இப்படி பல அங்கு கற்கலாம். உங்கள் விருப்பம். (துல்பன் - வந்து கேட்கப்படாது மூட நம்பிக்கையை வளர்கின்றேன் என) நான் என் நண்பர்களையும் ஊக்கப்படுத்தி அவர்களும் அங்கு அனுப்பினவர்கள். சிலர் முழுநேர பக்தர்கள் ஆகிவிட்டார்கள்
 42. 1 point
  இந்த சிங்கள-பௌத்த போர்க்குற்றவாளியின் கணக்குப்படி இன்னமும் 90,000 ஏக்கர் ஆக்கிரமிப்புக்கள் தமிழரால் மீட்கப்பட வேண்டியிருக்கு.
 43. 1 point
  இப்ப தான் கண்ணில பட்டுது! மிக மிக அருமையான முயற்சி! அற்புதமான படைப்பு! நடப்புகளை இயல்பாக படமாக்கியது சிறப்பு! தமிழர்களின் விதம் விதமான பாரம்பரிய சமையல்களை வீடியோ காட்சிகளாக்கி வெளிவிடுவது பாராட்டுகளுக்கு உரியது. தொடர்ந்து 100க் கணக்கான காணொளிகளை நீங்க படைக்க வேணும்.
 44. 1 point
  கொலைகாரர்களுடன் இணைந்து தமிழின அழிப்புக்கு முண்டு கொடுக்க மட்டுமே உங்களைப் போன்ற போக்கற்ற அரசியல் கோமாளிகளால் முடியும். வரும் தேர்தலில் தமிழின படுகொலைகளுக்கு பல்வேறு விதங்களில் பங்களித்த சகல சிங்கள கட்சிகளின் எடுபிடிகளாக தமிழர் பகுதிகளில் களம் இறங்கியுள்ள சகல வேட்பாளர்களுக்கும் வாக்களிக்காமல் விடுவதன் மூலம் தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்டங்களுக்கு பலம் சேர்க்க முடியும். தமிழரிடம் கொள்ளையடித்த செல்வத்தில் சிறு பகுதி தேர்தல் காலத்தில் இந்த எடுபிடிகளால் கொடுக்கப்படும். அவற்றையெல்லாம் பெற்றுக்கொண்டு விஜயகலா மகேஸ்வரன் உட்பட சகலரும் தோற்கடிக்கப்பட வேண்டியவர்களே!
 45. 1 point
  சுரேஷ் பிரேமச்சந்திரன் குப்பை அரசியலை முன்னெடுப்பதன் மூலம் தமிழினத்துக்கு உதவும் வாழிமுறைகள் தெரியாதவர் என்பதை நிரூபித்து வருகிறார்.
 46. 1 point
  அதற்காக நீங்கள் உருப்படியான செயற்பாடுகளில் ஈடுபடுவதை காண முடியவில்லை. வெறும் அரைவேக்காட்டு கேள்விபதில் அறிக்கைகளோடு மட்டுமே காலத்தை இனிதே கடத்தி செல்வதாக தெரிகிறது. தமிழர்கள் சம்மந்தனுக்கு மாற்றாக இன்னொரு சம்மந்தனை தேடவில்லை.
 47. 1 point
  உங்களுடைய தமிழ் இனிமையானது. அதை நான் விரும்பி வாசிக்கிறேன். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் “பஸ்சங்க” என்ற சொல் மட்டும் நாம் வாழ்ந்த பிரதேசத்தில் பயன்படுத்தப்படாத சொல். கலாச்சாரம் பற்றிய உங்கள் விருப்பமே எனதும். ஸகொட்லண்ட் முதல் ஆபிரிக்கா வரை திருமணங்கள் பாரம்பரிய உடை, உணவு. பண்பாட்டின்படியே தான் இடம்பெறுகின்றன. இவை பழைமையானவை. காலம் மாறி போக, பாரம்பரியத்தை நினைவிற்கொள்ள இந்த சடங்குகள் என்றும் மாறாத பாரம்பரிய முறைப்படி செய்யப்படுகின்றன. நாமும் இந்த பாரம்பரியத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
 48. 1 point
  சீனி போடாமல் செய்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். இந்த வாழைப்பழங்கள் அந்த அளவுக்கு இனிப்பு சுவையாகவும் இருக்கவில்லை. அதுதான். நானும் கணவனும் யாழ்தளத்தின் நீண்டகால வாசகர்கள். என்னுடைய முதல்பதிவுக்கு கிடைத்த வரவேற்பு என்னை திக்கு முக்காட வைத்துவிட்டது. அடுத்த காணொளியை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பும் இணைந்து விட்டது.
 49. 1 point
 50. 1 point
  வடக்கிலுள்ள தொழில் முயற்சியாளர்கள் தற்போதுள்ள சூழ்நிலைக்கமைய தமது தொழில் முயற்சிகளை மாற்றியமைக்க முன்வர வேண்டுமென யாழ்ப்பாணம் தொழில்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “தற்போது உள்ள அசாதாரண சூழ்நிலையானது இலங்கையில் மட்டுமல்லாது ஏனைய நாடுகளிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாட்டின் வடக்கைப் பொறுத்தவரைக்கும் புதியதொழில் முயற்சியாளர்கள் தற்பொழுது உருவாகிக்கொண்டு வருகின்ற நிலையில் குறித்த அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு அதன்காரணமாக அவர்களின் முயற்சிகளுக்குத் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறான முயற்சியாளர்கள் தற்போதைய சூழ்நிலையில் எவ்வாறான உற்பத்திகளை மேற்கொள்வதன் மூலம் தமது உற்பத்திகளை மக்கள் மத்தியில் சேர்ப்பிக்க முடியும் என்பதை ஆராய்ந்து செயற்பட வேண்டும். அத்தோடு, ஜனாதிபதியால் தொழில் முயற்சிகளுக்காக பெறப்பட்ட கடன்களை செலுத்த வேண்டிய காலப் பகுதியையும் நீடிப்பு செய்திருப்பது நாங்கள் அறிந்ததே. அதேபோல் யாழ்ப்பாணத்திலுள்ள முயற்சியாளர்கள் தமது பதிவுகளை எமது மன்றத்தின் ஊடாகப் பதிவுசெய்து கொள்ளவும். ஏனெனில் அரசாங்கத்தினால் நஷ்ட ஈடு வழங்கப்படுமேயானால் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்று குறிப்பிட்டார். http://athavannews.com/வடக்கிலுள்ள-தொழில்-முயற்/