• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. tulpen

  tulpen

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7

  • Content Count

   2,748


 2. போல்

  போல்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   5

  • Content Count

   6,134


 3. நிலாமதி

  நிலாமதி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   4

  • Content Count

   9,299


 4. உடையார்

  உடையார்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   4

  • Content Count

   11,261Popular Content

Showing content with the highest reputation on புதன் 24 ஜூன் 2020 in all areas

 1. 4 points
  இரண்டாம் உலகப்போரின் முன்னோடியாக ஹிட்லர் எவ்வாறு ஒஸ்ரியாவையும் செக்கோஸ்லாவாக்கியாவையும் யுத்தமின்றி அரசியல் நகர்வுகள் மூலம் தன் பிடிக்குகள் கொண்டு வந்தார் என்பது பற்றியும், மூனிச் உடன்படிக்கை பற்றியும், ஹிட்லரை பற்றிய சோவியத் யூனியனின் எச்சரிக்கையையும் மீறி பிரித்தானிய பிரதமராக அன்று இருந்த, நெவில் சாம்பர்லைன் போட்ட தப்புக்கணக்குகள் பற்றியும், பிரிட்டனையும் பிரான்சையும் ஏமாற்றி ஹிட்லர் தனது பலத்தை எவ்வாறு பெருக்கிக்கொண்டார் என்பதையும் இந்த பகுதி விளக்குகிறது. ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட போதிலும் சீனாவுடனும் உறவை வளர்த்துக்கொண்டு தான் இருந்தார் ஹிட்லர். ஆட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் அணியை முடிந்தவரை பலப்படுத்த வேண்டும் என்பதால். ஜேர்மனிக்கும் சீனாவுக்கும்மான உறவு 1911 ல் இருந்து தொடங்குகிறது. சீனாவின் தொழில் முன்னேற்றத்திற்கு ஜேர்மனி உதவியும் ஊக்கமும் அளிக்க ஆரம்பித்தது. அப்போது தான் 1920 ம் ஆ்ண்டு இறுதியில் இருந்து 1930 ம் ஆண்டு இறுதிவரை இரு நாடுகளும் இந்த நட்பினால் பயனடைந்தன. தமக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிடம் இருந்து ஜேர்மனி பெற்றுக்கொண்டது. பதிலுக்கு, சீனாவுக்கு ராணுவ உதவிகளைச் செய்து வந்தது ஜேர்மனி. 1934-36 ஆண்டுகளில் ஜேர்மனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பலனாக சீனாவில் ரயில்வே தொழிற்சாலை பலம் பெற்றது. குறிப்பாக, Nanchang. Zhejiang, Guizhou ஆகிய பகுதிகளில் ரயில்வே பாதைகள் அமைக்கப்பட்டன. இதனால் சீனா மட்டுமல்ல ஜேர்மனியும் பலனடைந்தது. ஜேர்மனிக்கு தேவையான மூலப்பொருட்கள், கனிமப்பொருட்களை விரைவாகக் கொண்டு செல்வதற்கு இந்தப் பாதைகள் பயன்பட்டன. இது தவிர, ராணுவ ரீதியிலும் ஜேர்மனி சீனாவுக்கு உதவியது. சியாங்கின் ராணுவத்திற்கு ஜேர்மானிய அதிகாரிகள் பயிற்சியளித்தனர். தளபாடங்களையும் அளித்தனர். சீன ராணுவம் பயன்படுத்திய ஆயுதங்களில் எண்பது சதவிகிதம் பயன்படுத்தலாயக்கற்றவை என்று ஜேர்மனி கருதியது. அவற்றை நவீனப்படுத்தவும் ஜேர்மனி முன் வந்தது சீனாவின் அயலுறவுத்துறை அமைச்சரும் கோமிண்டாங் கட்சியினருமான ஹெச்.ஹெச்.குங் 1937 ல் ஜேர்மனி சென்றிருந்த போது ஹிட்லர் அவரை வரவேற்று உரையாடினார். ஜுலை 7, 1937 ல் இரண்டாவது ஜப்பான் – சீனா போர் மூண்ட போது, ஜேர்மனி சீனாவுடனான தனது உறவை முறித்துக்கொண்டது. அதற்கு காரணம் சோவியத்யூனியன். ஆகஸ்ட் 21,1937 ல் சோவியத்தும் சீனாவும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டன. ஜப்பானின் ஆதிக்கத்ததில் இருந்து சீனாவை மீட்டெடுப்பதற்காக சோவியத் உதவி செய்வதாக ஒப்புக்கொண்டது. பொருளாதார ரீதியிலும் ராணுவ ரீதியிலும் சீனாவுக்கு கைகொடுக்க சோவியத் தயாரானது. ஜேர்மனி சீனாவின் மீது செலுத்தி வந்த ஆதிக்கத்தை முறியடிப்பதே சோவியத்தின் நோக்கமான இருந்தது. ஒஸ்ரியா மீதான ஹிட்லரின் ஆதிக்கம் – இணைப்பு. ஒஸ்ரியாவை ஜேர்மனியுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஹிட்லரின் நீண்ட கால கனவு. ஓஸ்ரியா ஹிட்லரின் பிறந்த மண். எனவே என்னுடையது என்றார் ஹிட்லர். ஓஸ்ரியாவில் பிறந்திருந்தாலும், ஹிட்லர் தன்னை ஒரு போதும் ஓஸ்ரியப் பிரஜையாக எக்காலத்திலும் எண்ணிக்கொண்டதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜேர்மனியைப் பலப்படுத்த ஓஸ்ரியா வேண்டும் என்ற அளவில் தான் அவர் அதை இணைக்க விரும்பினார். நீண்ட நெடிய பிரதேசம் ஒன்று ஜேர்மனியுடன் இணையப்போகிறது. அவ்வளவு தான். 1933 முதல் 1935 வரையில் ஓஸ்ரியா இத்தாலியின் அரவணைப்பில் இருந்தது. ஜேர்மனியை அருகே அண்ட விடாமல் செய்வது தான் இத்தாலியின் பணி. 1934 ல் ஒஸ்ரிய சான்சிலர் டோல்ஃபுஸ் (Engelbert Dollfuss) படுகொலை செய்யப்பட்ட போது இத்தாலி எச்சரிக்கையடைந்தது. இந்த குழப்பத்தை ஜேர்மனி தனக்குச் சாதகமாக திருப்பிக் கொள்ளக்கூடும். கவனம் தேவை. ஃப்ரென்னர் பாஸ் (Brennerpass) என்னும் இடத்தில் இத்தாலி துருப்பகளை குவித்தது. இத்தாலியும் ஜேர்மனியும் நட்பு பேண ஆரம்பித்து விட்ட பின்னர் முசோலினி ஒஸ்ரியாவில் இருந்து தன் பார்வையை திருப்பிக்கொண்டார். 1937ல் ஒஸ்ரிய சான்சிலரான ஸ்லுஷ்னிக் (Schuschnigg) இனி தடையேதும் இல்லை ஹிட்லருக்கு. பிப்ரவரி 1938ல் ஹிட்லர் ஒஸ்ரிய சான்சிலருக்கு பத்து நிபந்தனைகளை அனுப்பி வைத்தார்.. அதில் ஒன்று ஒஸ்ரியாவைச் சேர்ந்த Seyss-Inquart என்னும் நாசி வீரரை ஒஸ்ரியாவின் உள்துறை அமைச்சராக நியமனம் செய்வது. உள்துறை அமைச்சர் என்றால் காவல்துறையும் இவர் கட்டுப்பாட்டில் வரும். ஒஸ்ரியாவை அபகரிப்பதற்கு இது முன்னோடியாக இருக்கும் என்பதால் இந்த நிபந்தனை. எதிர்பார்த்தபடியே, ஓஸ்ரியா இதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆனால் வெளிப்படையாக மறுப்பதென்பது ஹிட்லர் என்னும் காளையின் கொம்பு சீவி விடுவதற்கு சமம் என்று அவருக்கு தெரியும். ஒரு மாற்று ஏற்பாட்டை அவர் முன் வைத்தார். ஓஸ்ரியாவில் ஒரு வாக்கெடுப்பை நடத்துகிறோம். ஒஸ்ரியா தனித்து இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். ஹிட்லர் இதற்கு தயாராக இல்லை. ஓஸ்ரிய மக்களை நம்புவதற்கில்லை. ஜேர்மனி வேண்டாம். தனியாகவே இருக்கிறோம் என்று அவர்கள் வாக்களிக்கலாம். ஜேர்மனியோடு சேர்வதாக அவர்கள் வாக்களிப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம். ஓஸ்ரியா வேண்டும் என்றால் கொடுத்துவிடுவது தானே! ஏன் இதற்கு இப்படி பிகு செய்து கொள்ளவேண்டும்? மறுத்தார் ஹிட்லர். எனக்கு வாக்கெடுப்பில் நம்பிக்கை இல்லை நண்பரே. எனக்கு ஒஸ்ரியா வேண்டும். நீங்கள் ராஜினாமா செய்துவிட்டு எங்காவது சென்று மகிழ்ச்சியுடன் இருந்து கொள்ளுங்கள். உங்கள் மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை. ஒரு வேளை நீங்கள் முரண்டு பிடித்தால் ராணுவத்தை செலுத்தவேண்டிவரும். வேறு வழி தெரியவில்லை ஒஸ்ரிய சான்சிலருக்கு. தன் காபினெட் அமைச்சர்களோடு சேர்ந்து கும்பலாக ராஜினாமா செய்தார். Seyss-Inquart எந்த விதமான இடைஞ்சலும் இல்லாமல் அரசாங்கத்தைக் கைப்பற்றினார். மார்ச் 1938 ல் அவர் ஜேர்மன் ராணுவத்தை அரச மரியாதையுடன் வரவேற்றார். மார்ச் 15 ம் திகதி ஹிட்லர் பெரும் ஆரவாரத்துக்கிடையே வியன்னாவில் நுழைந்தார். வீதிகளில் ஓஸ்ரிய மக்கள் திரண்டு வந்து ஹிட்லரை வாழ்த்தி ஆரவாரம் செய்தனர். தனக்கு இத்தனை பெரிய ஆதரவு கிடைக்கும் என்று ஹிட்லரே எதிர்பார்த்திருக்கவில்லை ஒஸ்ரியா, ஜேர்மனியுடன் ஒட்டிக்கொண்டது. இந்த இணைப்பின் Anschluss ன் பின்னர் Schluschnigg சிறைப்பிடிக்கப்படுகிறார். ஒஸ்ரிய யூதர்கள் தேடிப்பிடித்து சிறையில் அடைக்கபட்டனர். தாக்கபட்டனர். யூதர்கள் தங்கள் உரிமைகள் அனைத்தையும் அந்த கணமே இழந்தனர். கை, கால்களில் விலங்கு பூட்டி யூதர்கள் தெருகளில் இழுத்துச் செல்லப்பட்டதை நாசிகளும் ஒஸ்ரியப் பிரஜைகளும் பார்த்துக் கொண்டு நின்றனர். முசோலினி சும்மா இருந்தார். பிரிட்டனும் பிரான்ஸும் வழக்கம் போல் எதிர்க்குரல் எழுப்பின. இது அநீதி, ஒஸ்ரியாவின் இறையாண்மை பாதிக்கபட்டுவிட்டது. ஹிட்லர் ஒப்பந்தத்தை மீறுகிறார் என்று தொண்டு கிழிய இரு நாடுகளும் கத்தின. பிறகு வழக்கம் போல அடங்கிவிட்டன. செக்கோஸ்லாவாக்கியா மீது குறி ஹிட்லரின் அடுத்த குறி செக்கோஸ்லாவாக்கியா என்று அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஓஸ்ரியாவை சுருட்டிக் கொண்டவர் அடுத்து இங்கே தான் வரவேண்டும். ஏப்ரல் 1938 ல் இருந்தே ஹிட்லர் போர்த்திட்டங்கள் தீட்ட ஆரம்பித்திருந்தார்.. ஒஸ்ரியா ஜேர்மனியுடன் ஒட்டிக்கொண்ட மகிழ்ச்சியில் இருந்தார் அவர். ஒரு வெற்றி இன்னொரு வெற்றிக்குத்தான் இட்டுச்செல்லும். சென்றாக வேண்டும். எந்தவொரு திட்டமும் தோல்வியடையக்கூடாது.. ஹிட்லருக்கு. அல்லது தோல்வியடையும் எந்த திட்டத்தையும் தீட்டக்கூடாது. ஒஸ்ரியா வேண்டும் என்றால் அது வந்தாக வேண்டும். செக்கோஸ்லாவியா வேண்டும் என்றால் அது கிடைத்தாக வேண்டும். மே மாத இறுதியில் ராணுவத்திற்கு ஹிட்லர் உத்தரவிட்டார். செக்கோஸ்லாவாக்கியா என்ற பெயரில் இனி ஒரு நாடு உலக வரைப்படத்தில் இருக்கக்கூடாது. இந்த வெறிக்கு காரணம் அவருக்கு கிடைத்த உளவுத்தகவல்கள். ஓஸ்ரியாவைப் போல் செக் அடிபணியாது. காரணங்கள் எனக்கு வேண்டாம் என்றார் ஹிட்லர் சிடுசிடுப்புடன். எனக்கு வேண்டியது செக்கோஸ்லாவாக்கியா மட்டுமே. மேற்குலக நாடுகளுடன் செக் நல்லுறவு கொண்டிருப்பது ஹிட்லருக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக, லீக் ஒஃப் நேஷனஸுடன் கொண்டிருந்த உறவு சுத்தமாக பிடிக்கவில்லை. செக்கோஸ்லாவாக்கியாவில் அப்போது 7.1 மில்லியன் செக் மக்களும் 3.3 மில்லியன் ஜேர்மானியர்களும், 2.6 மில்லியன் ஸ்லாவாக்கியர்களும், 720.00 ஹங்கேரியர்களும், ஒரு லட்சம் போலந்து மக்களும் பிற ரோமானியர்களும் யூகோஸ்லாவியர்களும் ருதேனியர்களும் இருந்தனர். ஹிட்லர் குறிப்பாக கவனித்தது 3.3 மில்லியன் ஜேர்மனியர்களை. சூடெடன்லாந்து (Sudetenland) ஜேர்மனியர்களை. ஜேர்மனியையும் செக்கை இணைத்துக்கொள்ள இந்த ஒரு காரணம் போதாதா? செக் பெரும்பான்மை மக்கள் வசிக்கும் ஒரிடத்தில் ஜேர்மனியர்களால் எப்படி சுதந்திரமாக வாழ முடியும்.? 1930 களில் செக்கோஸ்லாவாக்கியா பொருளாதார சிக்கலில் சிக்கித்தவிக்க ஆரம்பித்தது. அதுவரை ஒன்றிணைந்து வாழ்ந்து வந்த கதம்ப மக்கள் நெருக்கத்திற்கு உள்ளானார்கள். ஸ்லாவாக்கியர்களும் ஜேர்மனியர்களும் செக் மக்கள் மீது குற்றம் சாட்டினர். எங்கள் வாழ்க்கை நிலை தேய்ந்து போனதற்கு காரணம் பெரும்பான்மையினரான செக் இனம் தான். எங்களுக்கு இங்கே போதுமான சுதந்திரம் இல்லை. வேலை வாய்ப்புக்கள் இல்லை. சமத்துவமாக நாங்கள் நடத்தப்படுவதில்லை. ஹிட்லர் காத்திருந்தது இதற்காக தான். எனதருமை ஜேர்மானியர்களே, கவலை வேண்டாம். நான் இருக்கும் போது உங்களுக்கு என்ன கவலை_ சுண்டைக்காய் தேசம் தான் என்றாலும் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. செக், சோவியத்துக்கு இணக்கமான நாடு. பிரான்ஸுடன் ஒப்பந்தம். போட்டுக்கொண்டுள்ள நாடு. ஆக்கிரமிப்பு என்று ஆரம்பித்தால், சோவியத்தும் பிரான்ஸும் மட்டுமல்ல, பிரிட்டனும் கூட்டாக வந்து எதிர்க்கும். ஹிட்லருக்கும் இது தெரியும். ஆனால் அவர் பெரிதாக கவலைப்படவில்லை. ஹிட்லர் கவலைப்படவில்லை என்றாலும் அவர் ராணுவத்தில் உள்ள சில முக்கிய தலைகள் கவலைப்பட்டன. பிரான்ஸை பகைத்துக் கொண்டு எதற்காக இந்த ஹிட்லர் செக்கை ஆக்கிரமிக்க விரும்புகிறார்? இது வீண் வேலை அல்லவா? இங்கிருக்கும் ஜேர்மானியர்களுக்காக மாத்திரம் கவலைப்பட்டால் போதாதா? சூடடென்லாந்து எக்கேடு கெட்டால் நமக்கென்ன? எதிர்ப்பு தெரிவுக்கும் வகையில் ராணுவ தலைவராக இருந்த கேர்ணல் லுட்விக் பெக் ஓகஸ்ட் 1938 ல் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவர் இடத்திற்கு, ஜெனரர் ஹால்டர் என்பவர் நியமிக்கப்ட்டார். அவருகும் ஹிட்லரின் திட்டத்தில் உடன்பாடில்லை. கல்லானாலும் ஹிட்லர் என்று இருந்துவிட வேண்டியதுதானே? குழம்பித் தவித்த ஹால்டரைத் தொடர்பு கொண்டார் லுட்விக்பெக். இருவரும் பேசினார்கள். ஒரு கட்டத்தில், இருவரும் இணைந்து சுவார்ஸியமான ஒரு திட்டத்தை வகுத்தார்கள். நாம் ஏன் ஹிட்லரை தூக்கியெறியக்கூடாது? திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பிரிட்டன் பிரதமர் நெவில் சாம்பர்லைனைத் (Neville Chamberline) தொடர்பு கொண்டனர். ஹிட்லரை கவிழ்க்க எங்களுக்கு உதவுவீர்களா? சாம்பர்லைன் சிரித்துக்கொண்டார். ஹிட்லரையாவது கவிழ்ப்பதாவது? மூனிச் உடன்படிக்கை - Munich Agreement சாம்பர்லைன் வேறு திட்டம் வைத்திருந்தார். செப்ரெம்பர் 15 ம் திகதி விமானம் மூலம் ஜேர்மனி வந்து ஹிட்லரைச் சந்தித்தார். பேசினார். ஹிட்லர் உங்களுக்கு சூடெடன்லாந்து தானே வேண்டும். அது உங்களுடையது. போர் வேண்டாம். பிரான்ஸ் உங்கள் மீது கை வைக்காமல் நான் பார்த்துக் கொள்ளுகிறேன். போதுமா? ஆனால், ஹிட்லருக்கு ஏனோ திருப்தி ஏற்படவில்லை. ஜேர்மனியில் கவலை அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. ஹிட்லர் பிரான்ஸையும் பிரிட்டனையும் சீண்டுகிறார். விரைவில் அவர்கள் நம்மைத் தாக்கப்போகிறார்கள் என்னும் செய்தி பரவ ஆரம்பித்திருந்தது. சரி, ஒப்பந்தம் மூலமாகவே முடித்துக் கொண்டுவிடலாம்., செக்கை இப்போதைக்கு விட்டுவிடலாம் என்று முடிவு செய்தார் ஹிட்லர். அமைதி உடன்படிக்கையை உருவாக்கும் பணியை தன் நண்பர் முசோலினியிடம் வழங்கினார். செப்ரெம்பர் 29, 1938 ல் மூனிச் நகரில் (München) கூடினார்கள். ஹிட்லர், முசோலினி, சாம்பர்லைன் மற்றும் பிரான்ஸ் பிரதமர் டிலாடியர் (Edouard Daladier). எல்லாம் தீர்ந்தது என்னும் நம்பிக்கையில் பிரிந்தார்கள். சாம்பர்லைன், பிரிட்டன் வந்த இறங்கியதுமே தன் கையில் இருந்த ஒப்பந்தத்தை உயரே தூக்கிப் பிடித்து அசைத்துக் காட்டினார். பார்த்தீர்களா? ஹிட்லருக்கு போய் பயப்பட்டுக்கொண்டிருந்தீர்களே! கையெழுத்து போட்டிருக்கிறார் பாருங்கள். இந்தப் பிரச்சனை மட்டுமல்ல, இனி ஐரோப்பாவில் அவர் மூலமாக எந்த பிரச்சனை வந்தாலும் உட்கார்ந்து பேசி முடிவு கட்டிவிடலாம். மோதல், போர் எதுவும் இனி இங்கே இருக்காது. திருப்திதானே? ஆனால் பின்னர் நடந்தது வேறு. சம்பர்லைன் எதிர்பாரத்தபடி ஹிட்லர் திருப்திப்படவில்லை. அமைதியாக இருக்கவில்லை. திரும்பவும் ஆரம்பித்தார். மார்ச் 1939 ல் செக் அதிபரை ஹச்சா ( Emil Hacha) என்பவரை அழைத்து நச்சரிக்க ஆர்ம்பித்தார். சூடெடன்லாந்து எங்களுடையது தான். மிச்சமிருப்பதையும் அப்படியே கொடுத்துவிட்டால், நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். செக் அடிபணிய மறுத்தது. மார் 15 1939 அன்று செக்கோஸ்லாவாக்கியாவில் தலைநகரம் பிராக் (Prag) கைப்பற்றப்பட்டது. ஹிட்லரின் வாழ்க்கையில் இது மிக முக்கிமான கட்டம். எதுவும் செய்யலாம், தட்டிக்கேட்க யாருமில்லை என்று அவர் திருப்த்தியடைந்தது அப்போது தான். செக்கோஸ்லாவாக்கியாவை ஹிட்லர் ஆக்கிரமித்தபோது அமைதியாக இருந்ததன் மூலம் ஹிட்லரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார் சாம்பர்லைன். அதெப்படி நீ ஒப்பந்தத்தை மீறலாம் என்று அவர் மிரட்டவில்லை. மீறினால் படை கொண்டு வருவேன் என்று மிரட்டவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் எதையெல்லாம் ஜேர்மனிக்கு பிரிட்டன் மறுத்ததோ அனைத்தையும் பிரிட்டனே இப்போது வழங்கியது. ரைன்லாந்தை ராணுவமயமாக்குகுதல், ஆயுதங்கள் தருவித்தல் போன்ற விடயங்களில் பிரிட்டன் அமைதி காத்தது. அங்காங்கே வதை முகாம்களை அமைத்து யூதர்களை கொல்லுதலும் போது அது பற்றி அறிந்திருந்தும் அது உள்நாட்டு பிரச்சனை என்று சமாதானம் சொல்லி அமைதியாக இருந்தது. சூட்டன்லாந்து என்று முழுவதுமாக உச்சரித்து முடிப்பதற்குள் பிரிட்டன் அளித்துவிட்டது. அடிபணிய மாட்டோம் முடிந்தவரை எதிர்க்கப்போகிறோம் என்று செக் உறுதி பூண்ட போது பிரான்ஸும் பிரிட்டனும் செக்கை மிரட்டியது. அநாவசியாமாக எதிர்ப்பு காட்டி செத்துப்போகாதீர்கள். செக் பிரதேசங்களை ஜேர்மனி கைப்பற்றுவதற்கு சில வாரங்களுக்கு முன்பே லண்டன் தொழிலதிபர்களும் ஜேர்மன் தொழிலதிபர்களும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு விட்டார்கள். செக்கில் தொழிற்சாலைகளை நிர்மாணிக்கவும் புனரமைக்கவும் செக்கை விட்டுத்தர மட்டுமல்ல, ஐரோப்பாவின் மிகப் பிரபல்யமான ஆயுதத் தொழிற்சாலையான ஸ்கொடாவை (Skoda) ஜேர்மனிக்கு அள்ளிக்கொடுக்கவும் சாம்பர்லைனும் டலாயரும் தயங்கவில்லை. ஒரே காரணம் சோவியத் எதிர்ப்பு. சோவியத்யூனியனை எதிர்த்து அழிக்க ஹிட்லரை விட அடாவடியான வேறு ஆள் கிடைப்பார்களா? சோவியத் கோரிக்கை – பிரிட்டனின் அலட்சியம் பிரிட்டனையும் பிரான்ஸையும் எரிச்சலடையச் செய்யும் வகையில், செக் ஆக்கிரமிப்பிலும் குறுக்கிட்டது சோவியத்யூனியன். செக் நிலப்பரப்புகளை ஜேர்மனி ஆக்கிரமித்தது செல்லாது. இது அத்துமீறல் என்று கண்டனம் செய்தது சோவியத். உடனடியாக பிரிட்டனை தொடர்பு கொண்ட சோவியத், ஹிட்லரை தட்டிவைக்க ஒரு அவசர மகாநாடு கூட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. பிரிட்டன் பிரான்ஸ் , போலந்து, ரூமேனிய, துருக்கி, சோவியத் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஹிட்லர் அடுத்தடுத்து கெடுதல் செய்யாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். ஜேர்மனியின் அத்துமீறல் ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும். சாம்பர்லைன் மறுத்து விட்டார். இப்போது என்ன அவசரம். ஹிட்லரால் பெரிய அபாயம் வரும் என்று எனக்குத் தோன்றவில்லை. சாம்பர்லைனுக்கும் டலாடியருக்கும் தான் அப்படித்தோன்றவில்லையே தவிர பிரிட்டன், பிரான்ஸ் மக்களுக்கு ஹிட்லரைப் பற்றி தெரிந்திருந்தது. ஹிட்லரை இப்போதே அடக்கிவிட வேண்டும் என்னும் சோவியத்தின் குரலை அவர்கள் ஆமோதித்தனர். சோவியத்துடன் இணைந்து போரிடுவது அமைதியைக் கொண்டுவரும் என்றார் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் லோயிட் ஜோர்ஜ்.( Lloyd George) பிரான்ஸின் முன்னாள் விமான மார்ஷல், பியரி காட் சோவியத்தை ஆதரித்தார். ஜனநாயக நாடுகளுக்கு சோவியத்தின் கூட்டு நன்மையே கொண்டு வரும் என்றார் அவர். நியூயோர்க் ஹெரால்ட் ட்ரிபியூன் (மே 4, 1939) வெளியிட்ட செய்தியின் படி 98 சதவீத பிரிட்டிஷ் வாக்காளர்கள் சோவியத்தின் அழைப்பை ஏற்று, சோவியத்துடன் இணைந்து போரிட விருப்பம் தெரிவித்தார்கள். சோவியத் பல்வேறு அழைப்புக்களை பிரிட்டனுக்கும் பிரான்ஸிற்கும் விடுத்தது. மூவரும் இணைவோம். நாசிகளுக்கு எதிராக போராடுவோம். ஐரோப்பாவைக் காப்போம். ஒவ்வொரு முறை அழைப்பு வரும் போதும் அதை ஒத்திவைத்தார் சாம்பர்லைன். பார்க்கிறேன் என்றார். பரிசீலிக்கிறேன் என்றார். மாறாக ஹிட்லருடன் கூட்டுச் சேர்வதில் அவர் மேலதிக ஆர்வம் காட்டினார். ஹிட்லருடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்வதில், ஹிட்லரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதில். ஹிட்லரிடம் இருந்து அமைதியைக் கேட்டுப் பெறுவதில். ஹிட்லரின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதில். கன்சர்வேடிவ் கட்சியில் இருந்து சாம்பர்லைனுக்கு எதிர்ப்புகள் வலுத்தன. மே 7 ம் திகதி ஹவுஸ் ஒஃவ் காமன்ஸில் உரையாற்றிய சேர்ச்சில், சோவியத்துடன் இணைவது தான் நமக்கு நல்லது என்று குறிப்பிட்டார். முடிந்தவரை எதிர்ப்பைத் துரிதப்படுத்த வேண்டும் என்று சோவியத் விரும்பியது. முடிந்தவரை தள்ளிப் போடலாம் என்று பிரிட்டன் விரும்பியது. செக் கபளீகரம் செய்யப்பட்டு பத்து வாரங்கள் கழிந்திருந்தன. அலட்டிக்கொள்ளவேயில்லை பிரிட்டன். ஆகவே பிரான்ஸும். இனி பிரிட்டனையும் பிரான்ஸையும் நம்பிக் கொண்டிருக்க முடியாது என்னும் முடிவுக்கு சோவியத் வந்து சேர்ந்தது. பிரிட்டன் அரசாங்கத்தின் ஒரு பிரிவு (British Parliamentary Secretary of Overseas Trade) ஜேர்மனியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்த சமயம் அது. அரை பில்லியன் அல்லது ஒரு பில்லியன் பவுண்ட் வரை அளிக்கத்தயாராக இருப்பதாக பிரிட்டன் அவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தது. பிரிட்டன் ஹிட்லரை மறைமுகமாக ஆதரித்துக் கொண்டிருக்கிறது. ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. கண்டு கொள்ளாமல் இருக்கிறது. பிரிட்டன் மட்டுமல்ல எந்தவொரு ஐரோப்பிய நாடும் ஜேர்மனியின் செயல்களைத் தட்டிக்கேட்பதாக தெரியவில்லை. சோவியத் அயல் விவகார கமிட்டியின் தலைவர், Anderei Zhdanov பிராவ்தா இதழில் (ஜுலை 29, 1939) தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார். பிரிட்டனுடனும் பிரான்ஸுடனும் சோவியத் மேற் கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளுக்கு எந்த வித உருப்படியான பலனும் கிடைக்கவில்லை. சோவியத்துடன் கூட்டுச்சேர இந்த இரு நாடுகளுக்கும் விருப்பமில்லை. ஹிட்லரைக் கண்டிக்கும் எண்ணமும் இவர்களுக்கு இல்லை. இவ்வாறு ஐரோப்பிய நாடுகள் அரசியல் நகர்வுகளில் ஈடுபட்டிருக்க ஹிட்லர் தனது கனவை நோக்கிய அடுத்த கட்ட செயற்பாடுகளில் அமைதியாக ஈடுபட தொடங்கி இருந்தார். ஆம் ஹிட்லரின் அடுத்த இலக்கு போலந்து. இன்னும் ஒரு மாதத்திற்குள் தாக்கப்போகிறார். ஐரோப்பா முழுவதும் செய்தி பரவிவிட்டது. கடைசியாக ஒருமுறை பேசிப்பார்த்தது சோவியத். இப்போதும் கெட்டுப் போய்விடவில்லை. பிரிட்டனும் பிரான்ஸும் தங்கள் ராணுவக் குழுக்களை மொஸ்கோவுக்கு அனுப்பிவைத்தால் ஒன்றிணைக்கப்பட்ட திட்டம் ஒன்றை உருவாக்கமுடியும். ஹிட்லர் போலந்தை தாக்குவதை தடுத்து நிறுத்தவும் முடியும். இந்த முறை, சோவியத்தின் அழைப்பை உதாசீனப்படுத்த முடியவில்லை. செய்தால் எதிர்ப்புக்கள் கிளம்பக்கூடும். ஆகவே பெயருக்கு இரண்டு குழுக்களை அனுப்பி வைத்தன பிரிட்டனும் பிரான்ஸும். இரண்டும் ஆடி அசைந்து மொஸ்கோவுக்கு வந்து சேர்ந்தன. சோவியத் முன்வைத்த திட்டம் இதுதான். ஹிட்லர் போலந்தை தாக்கினால் ஒன்று சோவியத் துருப்புகளை அனுப்பலாம். இரண்டு, கிழக்கு ப்ரெஷ்யாவை எதிர்த்து போலந்து ஊடாக மத்திய ஜேர்மனியை எதிர்த்துச்செல்ல வேண்டும் போலந்தை கேட்டுவிட்டு சொல்கிறோம் என்று நேரம் வாங்கிக்கொண்ட பிரிட்டனும் பிரான்ஸும், இது சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டன. போலந்து கேட்கவில்லையாம். சோவியத் உதவிக்கு வருவதை போலந்து விரும்பவில்லையாம். ஹிட்லருக்கு அடிபணிந்து போ என்று செக்கை மிரட்ட முடியும். ஆனால் சோவியத்தின் உதவியை ஏற்றுக்கொள் என்று போலந்திடம் சொல்ல முடியாது. (தொடரும்) நூல் - இரண்டம் உலகப்போர் எழுதியவர் - மருதன் வெளியீடு - கிழக்கு பதிப்பகம் , மே 2009
 2. 3 points
  அப்பா தின குட்டிக் கதை முன்னைய காலங்களில் சில கிராமதுக்கு கிராமம் வழக்கங்கள் நடை முறைகள் வேறுபட்டிருக்கும். இருக்கும் இப்படியான ஒரு கிராமத்தில் குடும்பத்திலுள்ள ஆண் பிள்ளைகள் பதினாறு வயதை அடைந்ததும் ஒரு இரவு காட்டில் தங்க வேண்டும். அங்கு பல வகை கொடிய மிருகங்கள் இருக்கும் . அவர்களது பதினைந்தாவது வயதில் வில் பயிற்சி ஈட்டி எறிதல் விலங்குகளை தாக்கி தப்பித்தல் முதலிய தற்காப்பு கலைகள் யாவும் சொல்லி கொடுக்கப்படும் . இப்படியாக ஒரு குடியானவன் மகனுக்கு பதினாறாவது பிறந்த நாள் வந்தது மறு நாள் அவன் காட்டுக்கு செல்ல வேண்டும். முதல் நாள் குடியானவன் சகல புத்திமதி கள் யுக்திகளை மீண்டும் மீண்டும் ஞாபக படுத்தினான் மறு நாள் மாலையானதும் தந்தை காட்டுக்குள் அழைத்து சென்றார் . மகன் கண் கலங்கிய வாறே தந்தையுடன் சென்றான். அங்கே ஒரு நிழல் மரத்தின் கீழே இருக்க விட்டு தந்தை வீட்டுக்கு செல்வதாக கூறி வந்து விட் டார். மாலை இரவா னது. வா னத்தில் நட்ஷத்திரங்கள் மின்ன தொடங்கி விட்ட்ன எங்கும் ஒரே இருட்டு . மகனோ தூக்கமின்றி விழித்துக் கொண்டிருந்தான் பயத்தாலும் தனிமையாலும் ..நேரம் ஓடிக் கொண்டு இருந்தது .ஒரு வாறு பொழுது புலரத்தொடங்கிவிட்ட்து ...தூரத்தே ஒரு வேடன் வில்லும் அம்புக ளும் கொண்டு வருவதைக் கண்டான். இவனுக்கு பயமாக இருந்தது ...அந்த உருவம் கிட் வந்த போ து அது ..அப்பாவின் நடை போன்று இருந்தது. மிக அண்மித்தும் அது அப்பாவே தான் வேடன் வேஷத்தில் வந்திருந்தார் ..இவன் காட்டித் தழுவி அழுதான். " நன்றாக தூங்கினாயா என்று கேடடார் . இல்லையப்பா எப்படி தூங்க முடியும் ? என்றான் . மகனே நான் இரவு முழுதும் தூங்காமல் சற்று தூர உள்ள மரத்தைக் காட்டி "அங்கு தான் நான் உனக்கு காவல் இருந்தேன். " என்கிறார். இதை நேற்றைக்கே சொல்லியிருக்கலாமே நான் நன்றாக தூங்கி இருப்பேனே என்றான் மகன். எல்லா அப்பாக்களும் இப்படித்தான் . குழந்தைகளை நெஞ்சிலே சுமப்பார் . கவனிக்காமல் இருப்பது போலெ தெரியும் ஆனால் அத்தனையும் கூர்ந்தது கவனித்து கொண்டே இருப்பார். அப்பாவுக்கு ஈடு இணை யாருமே இல்லை முன்பு நாம் சைக்கிள் பழக ஆசைப்படும் போ து ...அப்பா பின்னால் பிடித்துக்கொண்டு இருப்பா ர் ..அப்பா பிடிக்கிறார் என்ற துணிவில் தைரியத்தில் நாம் ஓட முயற்சிப்போம். ஓடிக் கொண்டு இருக்கும் போ து இடை இடையே வி ட்டு விட்டு பிடிப்பார் . நாமாகவே ஓடடுவோம். "நான் ஓடுவேனா ? அப்பா என்றால் இது வரை நான் பிடிக்காமல் நீ தானே தனியாக ஓட டினாய் என்பார். அப்போது நமக்கு தைரியம் வந்து விடும். இன்னும் துணிவாக சற்று வேகமாக ஓட டிட தைரியம் வரும் . அப்பாக்கள் என்றும் நிழல் போல எம்மோடு தான் இருப்பா ர்கள். அப்பாக்கள் என்றும் அப்பாக்கள் தான்.
 3. 2 points
  இந்த தொடரை தட்டச்சு செய்து போடுவதற்கான எனது நேரம் குறித்து இங்கு வெகுவாக கவலை தெரிவிக்கப்பட்டதை வாசித்தறிந்தேன். கவலை தெரிவித்தவர்களுக்கு நன்றி. எழுதி வைக்கப்பட்ட Text ஜ பார்த்து ஆங்கிலத்திலோ தமிழிலோ மிக விரைவாக ரைப் செய்வதற்கான பயிற்சி எனக்கு பாடசாலைக் காலத்திலேயே அளிக்கப்பட்டு விட்டதால், எனது ஓய்வுநேரத்தில் மிக விரைவாக அதை செய்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. (இருந்தாலும் போனில் எழுதுவது மட்டும் இப்போதும் தலையிடி தான்) பின்னர் புறூவ் பார்ப்பதற்கும், தரவுகள் சரியானதா என்பதை பல்வேறு இணையங்களில் தேடி அதை உறுதிப்படுத்துவதற்கும், பொருத்தமான படங்களை தேடு எடுப்பதற்கும் சற்றே மேலதிக நேரம் தேவைப்பட்டாலும், அதை நான் ஆர்வத்துடன் செய்வதால் அதிலும் எனக்கு பிரச்சனை இல்லை என்பதை யாழ்கள உறவுகளுக்கும் வாசகர்களுக்கும் தெரிவித்து கொள்ளுகிறேன். நன்றி
 4. 2 points
  தனிமை கூட இனிமையே… உன்னையே நினைத்துக் கொண்டிருப்பதால் என் தனிமை கூட இனிமையே நான் தனிமையாய் இருப்பதாய் பிறர் நினைக்கலாம் என் இல்லம் முழுவதும் நீ நிறைந்திருக்க என் உள்ளம் முழுவதும் நீ குடியிருக்க என் நிழலாக நீயும் உன் நினைவாக நானும் வாழும் இவ் வாழ்வில் என் தனிமைக்கேது கொடுமை உன் நினைவு மட்டுமே இனிமை. நூன் அழகாக உடுத்துகையில் நீ அருகிருந்து ரசிப்பதாய் நான் மகிழ்வாகச் சிரிக்கையில் நீ மன நிறைவாய்ப் பார்ப்பதாய் நான் தனிமையில் இருக்கையில் என் தலை வருடி நெகிழ்வதாய் நான் மனம் சோரும் வேளையில் நீ கனிவாக அணைப்பதாய் என் அழுகையில் என் சிரிப்பில் என் உணர்வினில் என் உயிரில் அத்தனையிலும் நீ துணையிருக்க என் தனிமைக்கேது கொடுமை உன் நினைவு மட்டுமே இனிமை என் சமையலறை மேடையில் நீ குடித்த தேநீர்க் கோப்பை என் ஆடை அலுமாரியிலோ நீ அணிந்த கைக்கடிகாரம் என் படு;க்கை அருகினிலே நீ பார்த்தபடி உன் நிழற்படம் எப் பக்கம் திரும்பினும் உன் நினைவாக ஞாபகங்கள் என் கூட நிழலாக எம் பிள்ளைகள் நால்வர் அத்தனையிலும் நீ துணையிருக்க என் தனிமைக்கேது கொடுமை உன் நினைவு மட்டுமே இனிமை என் கழுத்திலே தொங்குவதோ நீ கட்டி விட்ட மாங்கல்யம் என் கை விரலில் தழுவுவதோ நீ அணுவித்த கணையாழி மனம் முழுதும் மலருவதோ உன் இனிய நினைவலைகள் உன் மடியில் தவழாத நீ பார்த்து மகிழாத எம் பேரக் குழந்தைகள் என் மடியில் தவழுகையில் என் தனிமைக்கேது கொடுமை உன் நினைவு மட்டுமே இனிமை.
 5. 2 points
  மீண்டும் ஆட்சியைப் பிடிக்க போடும் வேடம். இதைத்தான் முதலைக் கண்ணீர் வடித்தல் என்பது. நாம் நம்பி வாக்குபோடுவோம் என்று நினைக்கலாம். இவா முதல் தேர்தலில் நிக்கும்பொழுது ஆயுதத்துக்கு தந்தையையும், கணவனையும் பறிகொடுத்தேன், உங்களின் வேதனை எனக்குப் புரியும் என்று வந்த தேவதை, செய்த ஊழியாட்டம் போதும். எங்கள் சொந்த இடங்களை அழித்து, அகதிகளாக அலைய வைத்த முதற் பெருமை இவவையே சேரும். மாமனாருடன் சேர்ந்து கொஞ்ச ஆட்டமே ஆடினவா. இப்ப அடக்கி வாசிக்கிறா.
 6. 1 point
  அல்பேர்ட் ஐன்ஸ்ரைன் என்ற பெயரை கேட்டாலே நினைவுக்கு வருவது அவர் கண்டுபிடித்த சார்பியல் கோட்பாடு தான். அந்த சார்பியல் கோட்பாட்டை நிரூபிக்க அவர் எவ்வளவு கஷ்ரப்பட்டார் என்பதை இந்த காணொலி விளக்குகிறது. அத்துடன் மனிதர்களால் உருவாக்கபட்ட இனம், மதம், தேசபக்தி போன்ற விடயங்கள் மனித குலத்திற்கு தேவையான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு எவ்வளவு தடையாக உள்ளது என்பதயும், இவ்வாறான இனவெறுப்பு, மதம், தேபக்தி போன்றன போர் வெறியை தூண்டி அறிவியல் கண்டுபிடிப்புகளை அழிவு சக்திகளாக உபயோகிக்க தூண்டுதல் செய்யும் வரலாற்றையும் இக்காணொளி விளக்குகிறது.
 7. 1 point
  மரவள்ளிகிழங்கு சாப்பிடுவதற்கு முன்பு இத பாருங்க - Dr.Asha Lenin
 8. 1 point
  கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்களுக்கு மாவை அழைப்பு! by : Vithushagan துரதிஸ்ரவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியிருப்பது தனக்கு மிகுந்த கவலை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்தோடு தேர்தல் முடிந்ததற்கு பிறகு அவர்களை இணைத்து இந்த நெருக்கடியான காலகட்டத்தில், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லவேண்டும் எனும் ஆதங்கத்தோடு தான் இருப்பதாகவும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட மாவை சேனாதிராஜாவிடம் ஊடகவியலாளர்கள் மாற்றுத் தலைமை பற்றிய கேள்வியினை எழுப்பினர். அவ்வாறு எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , ”நான் ஒரு கட்சியின் தலைவராக இருக்கின்றேன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு துணைத் தலைவராக இருக்கின்றேன். அவ்வாறு நான் ஒரு கட்சியின் தலைவராக இருந்துகொண்டு மாற்று தலைமை வேண்டும் என்று சொல்வதைப்பொல அறிவீனம் வேறு ஏதும் இருக்காது. இரண்டாவது தமிழ் மக்களிடம் ஒரு மாற்றுத் தலைமை வேண்டு என்பது பரவலான செல்வாக்கு மிகுந்த கோரிக்கையாக இன்று இல்லை துரதிஸ்ரவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியிருக்கின்றார்கள் எனக்கு அது மிகுந்த கவலை. நாங்கள் தேர்தல் முடிந்ததற்கு பிறகு அவர்களை இணைத்து இந்த நெருக்கடியான, மோசமான காலகட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லவேண்டும் என்ற ஆதங்கத்தோடு நான் வேலை செய்துகொண்டிருக்கின்றேன். மாற்றுத் தலைமை என்பது ஜனநாயக ரீதியாக அவர்கள் யாரும் அப்படி பேசலாம், அப்படியான கட்சியாக இயங்கலாம் ஆனால் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் இன்னும் பலமடைய வேண்டும். மாற்றுத் தலைமை பற்றி நாங்கள் பேசவேண்டிய அவசியம் இல்லை அவர்கள் சிறிது சிறிதாக அரசாங்க கட்சியில் இருந்தும், சுயேச்சைகளாகவும் எங்கள் வாக்குகளை பிரிக்கின்றார்கள். அதுக்கு இடமளிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே நாங்கள் வாக்களித்து பலத்தை உண்டாக்கவேண்டும். அந்த பலத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெற செய்ய வேண்டும் எனும் கருத்துத்தான் இன்று வரையிலும் மிக பலமாக இருக்கின்றது. அது இன்னும் வருங்காலத்தில் நாங்கள் மக்கள் மத்தியில் வேலை செய்ய ஆரம்பித்தால், எங்களுடைய தேர்தல் அறிக்கையையும் முன்வைத்து நாங்கள் பேசினால் நான் நினைக்கின்றேன் இன்னும் அதிகமாகும். மிகப் பெரும்பாலான இடங்களை மக்கள் வெற்றிபெற வைக்கின்ற போது மாற்றுத் தலைமையினுடைய பேச்சு இல்லாமல் போகும் என நினைக்கின்றேன்” என தெரிவித்துள்ளார். http://athavannews.com/கூட்டமைப்பில்-இருந்து-வெ/
 9. 1 point
  மன்னிக்க வேண்டும் டுல்ப்பன். நீங்கள் இந்த விபரங்களை பதிவின் இறுதியாக போட்டு விடுவதால், நீங்கள் அந்த புத்தகத்தின் பக்கங்களை copy & paste செய்து போடுகிறீர்கள் என்று நினைக்க வேண்டியதாகி விட்டது. நூல் - இரண்டம் உலகப்போர் எழுதியவர் - மருதன் வெளியீடு - கிழக்கு பதிப்பகம் , மே 2009 உங்கள் பதிலிலிருந்து, நீங்கள் தான் இந்த ஆக்கத்தினை தயாரிக்கிறீர்கள் என்றால், எனது புரிதல் தவறு. அந்த புரிதலுடன் தான், ஜஸ்டினுடனுன் விவாதித்தேன். ஜஸ்டினும் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் நேரத்துக்கும் பதிவுக்கும் நன்றி. உங்கள் பெயரையே போடலாமே என்பது எனது சிறு ஆலோசனை. (அல்லது மருதன், உங்கள் புனை பெயரோ?) தொடர்ந்து பதியுங்கள், நன்றி.
 10. 1 point
  இதென்னடா விசயம்.... யாரு சப்பாத்தியினை, களவு எடுத்து விட்டார்களோ என்று பார்த்தேன். நம்மூரில் நாகதாளி என்று அழைப்போம் ஆனாலும் நீலநிறமாக மேலே இருப்பது வேறு இனமோ என்று நினைக்க வைக்கிறது.
 11. 1 point
  கள் வாங்கியதோடு என் வேலை முடிந்து விட்டது. அடிமண்டி கூட எனக்கு கிடைக்கவில்லை.ஏற்கனவே சுவைத்துப்பார்த்த அனுபவம் இருந்ததால் அந்த அளவுக்கு ஆர்வமும் இருக்கவில்லை. எனக்கு கள்ளு விட்ட அப்பம் மட்டுமே மிச்சம்.அப்பம் சுவையோ சுவை.
 12. 1 point
  இத்தனை இனிமையோடு வாழும் உங்களுக்கு தனிமை ஏது சகோதரி.கடல் அலை போல் தமிழ் அலைகள்.
 13. 1 point
  மீண்டெழுதல்-resilience-பா.உதயன் மனிதன் உலகத்தை தேடுகிறான் உலகம் மனிதனைத் தேடுகிறது தடைகளை உதைத்தபடி நம்பிக்கை இழக்காமலே மீண்டும் மீண்டெழ உலகமும் மனிதனும் காத்திருக்கிறது. பா.உதயன்
 14. 1 point
 15. 1 point
  சொதி - Sothi மிக்க நன்றி உடையார்.
 16. 1 point
  ஆகா என்ன ஒரு முன்னேற்றம் குரலில், இப்பதான் எனோதானோ என்றில்லாமல் நன்றக ஒலி/ஒளிப்பதிவுகள் செய்து உள்ளீர்கள், வாழ்த்துக்கள். கொஞ்சம் நல்லெண்ணை விட்டு குழைத்தால் கன நேரத்திற்கு காயமல் அப்படியே இறக்கிய மாதிரி மென்மையாக இருக்கும்
 17. 1 point
  non-stick என்பதை உற்பத்தி செய்வதற்கு பாவிக்கப்படும் PFOA, PFTE புற்று நோயை தூண்டுவதாக ஓர் கருத்தொருங்குப்பாடு மருத்துவ விஞ்ஞான சமூகத்தில் உருவாகி உள்ளது. இதை நீங்களாக தேடிப்பார்ப்பதற்கு ஆரம்ப உசாத்துணையாக: https://www.cancer.org/cancer/cancer-causes/teflon-and-perfluorooctanoic-acid-pfoa.html இப்பொது PFOA, PFTE அற்ற non-stick pans என்று நீங்கள் வாங்கலா. இப்பொது ceramic, stone, marble coating உள்ள non-stick பிரபல்யம் அடைவதற்கு இதுவும் ஓர் காரணம். மற்றது, எந்த pans ஆயினும் Western Europe இல் வாங்குங்கள். ஏனெனில் ஆசிய manufacturing மற்றும் material standard இற்கும், European, north american manufacturing மற்றும் material standard இற்கும் இடையில் வித்தியாசம் உண்டு. உ.ம். ஆசியா standard இல் cadmium அனுமதிக்கப்படுகிறது, ஆனால் European, north american இல் பொதுவாக இல்லை. ஏலவே சொன்னது போல துவாரங்கள், இடைவெளிகள், மற்றும் தவாளிப்புகள் இருக்கும், எந்த non-stick எவ்வளவு நுண்ணிய உற்பத்தி முறை ஆயினும் (விலை கூடும் உற்பத்தி முறை நுண்ணிய தன்மை கூடும் போது). பாவனையின் போது இவை பெரிதாகும், metal-safe என்று metal utensils பாவித்தால் இன்னும் அது துரிதமாகும். சமைக்கும் உணவு ஒட்டுதல் தன்மை அதிகரிக்கும். அதை உரசி அகற்றும் போது மிகவும் non-stick ஐ மிக மிக நுண்ணிய அளவில் பாதிக்கும் அல்லது உரசி அகற்றப்படும். அதனால், metal-safe non-stick என்று உறுதிப்படுத்தப்பட்டு இருந்தாலும், metal utensils ஐ non-stick இல் பாவிப்பது தவிர்க்கப்பட வேண்டும். தனிப்பட்ட முறையில், மரத்தாலான அகப்பைகளே non-stick இற்கு மிகவும் பொருத்தமானது, உடல் நலத்திற்கும் தீங்கு இல்லாதது. எந்த non-stick ஆயினும் அல்லது வேறு விதமான pans ஆயினும், வெறுமையாக சூடாக்குதல் தவிர்க்கப்பட வேண்டும் . இது non-stick ஐ பாதிக்கும். இது பௌதிக இராசாயனத்தோடு தொடர்பு பட்ட விடயம். இப்படியான பல காரணகளுக்கும், எந்த விதமான pans ஆயினும், நீண்ட காலா பாவனைக்கும், முக்கியாமாக உணவு நேரடியாக pans இன் மேற்ப்பரப்பை நேரடியாயன தொடுகை இல்லாமலும் மற்றும் ஒட்டுதலை கூடிய அளவு தவிர்ப்பதற்கும், இரும்பு ஆயின் துரு பிடித்தலை குறைபதற்கும், தாமதம் செய்வதற்கும், செய்வது தான் seasoning. இது சாதாரணமாக எவராலும் செய்யக் கூடியது. ஆனால், இரும்பால் (carbon steel, cast iron) ஆன pans, seasoning செய்யப்பட்டு இருந்தாலும், சமைத்த பின், கழுவி துடைத்து, மிக சிறிதளவில் எண்ணெய் பூசி வைப்பதே மிகச் சிறந்த பராமரிப்பு முறையாகும். pan seasoning, non-stick pans உட்பட, எப்படி செய்வது என்பதை youtube இல் பாருங்கள்., விளங்கப்படுத்துவது எழுத்தை கூட்டும். சுருக்கமாக எண்ணையை pans உள்ளே மேற்பரப்பில் துணியால் பூசி, ஓரளவு எண்ணெய் புகைக்கும் (smoke point) வரைக்கும் சூடாக்கி, இயல்பாக ஆறவிடுவது. இது எண்ணையில் இருக்கும் கொழுப்புகளின் மிகவும் மெலிய, கண்ணுக்கு தெரியாத, மிகவும் உறுதியான, எண்ணெய்யின் கொதிநிலை வரைக்கும் தாக்கு பிடிக்க கூடிய படலத்தை உருவாக்கும், இடைவெளி, தாவலிப்புகள் நிரவும். எதனை தரம் மீளவும் செய்ய முடியுமோ அவ்வளவு நல்லது, பொதுவாக 4-10 முறை. seasoning செய்வதை பொறுமையாக செய்யுங்கள், அவசரப்படாமல். unrefined avacado oil ஐ பாவியுங்கள் seasoning செய்வதற்கு. ஏனெனில் அதன் smoke point (கொதி நிலை) 270 செல்சியஸ். seasoning ஐ எமது முன்னோரும் (பாட்டன், பாட்டியும், அதற்கு முதலும்), எனது பெற்றோரும், மண் சட்டிக்கு கூட செய்து வந்தனர். புதிய மண் சட்டி வாங்கி முதல் பாவனையின் முன்பு தண்ணீர் நிரப்பி கொதிக்கவைத்து, ஆற விட்டு, பின் தேங்காய் எண்ணெய் பூசி புகைக்கும் வரைக்கும் சூடாக்கி, ஆற விடுவார்கள். இது ஒரு வகையான seasoning ஆகும். உலோக சட்டி என்றால், தேங்காய் என்னை பூசி புகைக்கும் வரைக்கும் சூடாக்கி, ஆற விடுவார்கள். மற்றும், மண் சட்டியில் சமைக்கும் போது பொதுவாக கூட்டிய பின்பே அடுப்பில் ஏற்றுவார்கள், எண்ணெய் கொதிப்பதற்கு உட்பட. வெறுமையாக எந்த விதமான சட்டியும், குறிப்பாக மண் சட்டி அடுப்பில் காய்வது வீட்டுக்கு கூடாது என்ற நம்பிக்கையும் இருந்தது.
 18. 1 point
  சிங்களவனின் அரசியலுக்கு மூலதனமே தமிழரும், இனப்பிரச்சனையுமே. அதைத் தீர்த்தால் எப்படி அரசியல் செய்வது, கொள்ளை அடிப்பது, வயிறு வளர்ப்பது?
 19. 1 point
 20. 1 point
  நரி இராசாவாகினாலும் மார்கழி மாதக்குளிருக்கு ஊழையிடும் என்றொரு பழமொழியுண்டு. இது தேர்தல் காலமாதலால் சிங்கங்கங்களாக வேடமனிந்து நின்கின்றன. பாவமிந்த மங்கள இங்குமின்றி அங்குமின்றி அரசியல் அலைவாகத் திரிகிறார். ஏன் இவர்களிடம் உண்மையான சனனாயகப் பண்பிருந்தால் வெறுமனே அரசை வெத்துவேட்டு விமர்சனம் செய்வதைவிடுத்து தமிழரின் நீதிக்காகக் குரல் கொடுக்கலாம். அதேவேளை சந்திரிகா அம்மையா தனதுஆட்சிக் காலத்திற் செய்தபடுகொலைகளை முன்னுதாரணமாக ஒத்துக்கொண்டு தமிழரிடம் மன்னிப்புக் கேட்பதோடு அரசிடம் பேசி தமிழினத்துக்கான இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுத்தால் நம்பலாம்.
 21. 1 point
  சுமந்திரனுக்கு எதிரான உள்வீட்டுக் குத்து வெட்டுகள் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூன் 24 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, என்றைக்கும் இல்லாதளவுக்கு விருப்பு வாக்குச் சண்டைகளால் அல்லாடிக் கொண்டிருக்கின்றது. வழக்கமாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதிலேயே, கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆனால், இம்முறை, ஒரே கட்சிக்குள் இருக்கும் சக வேட்பாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கும் குழிபறிப்புகளுக்கும் எதிராக நின்று, தேர்தல் வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கின்றது. கூட்டமைப்புக்குள், குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள் வெற்றிக்காக ஓடும் எந்தவொரு வேட்பாளரும், இன்னொரு வேட்பாளரை நம்புவதற்குத் தயாராக இல்லை. தோற்பதற்காகவே களமிறக்கப்பட்ட வேட்பாளர்கள் தவிர்ந்த, முக்கிய வேட்பாளர்கள் யாரும் ஒருவரோடு ஒருவர் இணக்கமாக இல்லை. கூட்டமைப்புக்குள் எழுந்திருக்கிற விருப்பு வாக்குச் சண்டை, அந்தக் கட்சியின் வேட்பாளர்களையும் அவர்களின் ஆதரவாளர்களையும் எவ்வளவு கீழ்நிலைக்கும் கொண்டு செல்லத் தயாராக இருக்கின்றது. அத்தோடு, தமிழ்த் தேசிய அரசியலைக் கபளீகரம் செய்வதற்குத் தயாராக இருக்கும் அரச ஒத்தோடிகள், முகவர்கள், வெளிச்சக்திகள் உள்ளிட்ட அச்சுறுத்தல் தரப்புகளோடு, தார்மிகங்களுக்கு அப்பால் நின்று இணைந்து செயற்படவும் வைக்கின்றது. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், சிங்கள ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய பேட்டியொன்று சர்ச்சையானதைத் தொடர்ந்து, ஏட்டிக்குப் போட்டியாக அறிக்கை அரங்காற்றுகையொன்று நிகழ்த்தப்பட்டது. அதை, ஆரம்பித்து வைத்தவர், டெலோவின் செல்வம் அடைக்கலநாதன் ஆவார். குறித்த பேட்டியின் எந்தப் பின்னணியும் தெரியாமல், சுமந்திரனுக்கு எதிரான அறிக்கையை, தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான கடிதத் தலைப்போடு ஊடகங்களுக்கு அனுப்பினார். அடுத்த அறிக்கை, அவரது சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான சாள்ர்ஸ் நிர்மலநாதனிடம் இருந்து வந்தது. இந்த இருவரும், ஏன் இவ்வளவு அவசரப்பட்டு அறிக்கைகளை வெளியிட்டார்கள் என்பது சார்ந்து பார்த்தால், திருக்கேதீஸ்வர கோவில் வரவேற்பு வளைவு உடைக்கப்பட்ட விவகாரம் மேலெழுகிறது. அதாவது, கோவில் வளைவு உடைப்புக்கு எதிரான வழக்கில், பாதிக்கப்பட்ட சைவ மக்களின் சார்பில் சுமந்திரன் ஆஜராகிறார். கோவில் வளைவு உடைப்பு விவகாரம், மன்னாரின் கத்தோலிக்க - சைவ மக்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் நிகழ்ச்சி நிரலோடு அரங்கேறிய சம்பவம் ஆகும். அப்படியான நிலையில், அந்த மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் தரப்புகளிடம் இருந்து, மக்களைக் காப்பாற்ற முயற்சித்திருக்க வேண்டும். அவர்கள் விருப்பு வாக்கு விடயத்தை முன்னிறுத்தி, பொறுப்பை மறந்த புள்ளியில், கூட்டமைப்பின் மீதான பெரும் விமர்சனமாக அது மாறியது. இதையடுத்து, மன்னார் கத்தோலிக்க மறை மாவட்டத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்த சுமந்திரன், குறித்த வளைவு உடைப்பு விவகாரம் தொடர்பில் பேசினார். இந்த விவகாரத்துக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்படவில்லை என்றால், நீதிமன்றத்தினூடாகத் தீர்வொன்றுக்கு முயற்சிக்கப் போவதாக அறிவித்தார். அதற்கு மன்னார் மறை மாவட்டப் பிரதிநிதிகளும் இணங்கினார்கள். அதையடுத்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், வழக்கு திகதிக்கு முதல்நாள் மாவையை தொலைபேசியில் அழைத்த செல்வம், “சுமந்திரன் இந்த வழக்கில் ஆஜராகக்கூடாது. அது, கூட்டமைப்புக்கு எதிராகக் கத்தோலிக்க மக்களைச் சிந்திக்க வைக்கும்” என்றிருக்கிறார். இதையடுத்து, சுமந்திரனுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த மாவை, வழக்கில் வேறு சட்டத்தரணிகளை ஆஜர்படுத்துமாறு கோரியிருக்கிறார். ஏற்கெனவே, வளைவு உடைப்பு விவகாரத்தை, அந்த மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமூகமாகத் தீர்த்திருக்க வேண்டும். அதைச் செய்யாது விட்டுவிட்டு, வழக்குக்கு முதல்நாள் அழைத்து, அதில் ஆஜராக வேண்டாம் என்பது, என்ன வகையிலான நியாயம் என்று சுமந்திரன் கேட்டவுடன், மாவை விடயத்தை அப்படியே விட்டுவிட்டார். சுமந்திரன் வழக்கில் ஆஜராகவும் செய்தார். இந்த விடயம், செல்வத்தை மாத்திரமல்ல, கடந்த காலத்தில் சுமந்திரனோடு இணக்கமாக இருந்த சார்ள்ஸையும் விலகிப்போக வைத்தது. அதனால்தான், கத்தோலிக்க மக்களின் வாக்குகளைக் குறிவைத்து இருவரும் சுமந்திரனுக்கு எதிரான அறிக்கை அரங்காற்றுகையின் முதல் நாயகர்கள் ஆனார்கள். “... தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் தீர்வை உள்ளடக்கிய அரசமைப்பை ராஜபக்‌ஷக்கள் கொண்டு வந்தால், அதற்கு ஆதரவளிப்போம்.” என்று, சுமந்திரன் அண்மையில் கூறியிருந்தார். அப்போது, அவருக்குப் பக்கத்தில் மாவையும் இருந்தார். ஆனால், அந்த விடயத்தைச் சுதிமாற்றி, சுமந்திரனைக் குறிவைக்க ஊடகமொன்று நினைத்தது. அதற்காகச் செல்வத்திடம் ஒலிவாங்கியை நீட்டியது. செல்வமும், முழுமையான விடயத்தை அறியாமல், ‘ராஜபக்‌ஷக்களுக்கு ஆதரவளிப்போம்’ என்கிற விடயத்தை மாத்திரம் மண்டைக்குள் ஏற்றிக்கொண்டு, “கூட்டமைப்புக்குள் புல்லுருவிகள் நுழைந்துவிட்டார்கள். அவர்களை அகற்ற வேண்டும்” என்பது வரை பேசி ஓய்ந்தார். இந்த விடயம் தொடர்பாக, சித்தார்த்தனையும் சம்பந்தப்பட்ட ஊடகம் அணுகியது. ஏற்கெனவே, சுமந்திரனுக்கு எதிரான அறிக்கைப் போரில் சம்பந்தப்பட்டுச் சிக்கி, விமர்சனங்களைச் சந்தித்த சித்தார்த்தன் விடயங்களை புரிந்துகொண்டு, சம்பந்தப்பட்ட விடயத்தைச் சரியாக அணுகினார்; தப்பித்துக் கொண்டார். சிங்களப் பேட்டிச் சர்ச்சையை, சுமந்திரனுக்கு எதிராகக் கையாள எத்தனித்த தரப்புகளில், வெளிச் சக்திகளைக் காட்டிலும் தமிழரசுக் கட்சிக்குள் இருப்பவர்களே அதிக பங்காற்றினார்கள். யாழிலுள்ள தமிழரசுக் கட்சியின் பிரபல வர்த்தக வேட்பாளர் ஒருவர், சுமந்திரனுக்கு எதிராக அறிக்கை வெளியிடாத, வன்னி மாவட்ட வேட்பாளர்கள் இருவரைத் தொடர்ச்சியாகத் தொலைபேசியில் மிரட்டிக் கொண்டிருக்கிறார். எப்படியாவது, சுமந்திரனுக்கு எதிரான அறிக்கையை வெளியிட்டு, கட்சி முழுவதும் சுமந்திரனுக்கு எதிராக இருக்கின்றது என்று காட்டவும் முயன்றார். இம்முறை சம்பந்தப்பட்ட வர்த்தகர், தனக்கு வாய்ப்பு வழங்குவது தொடர்பில் சம்பந்தன், சுமந்திரன் தரப்பு எதிர்நிலைப்பாட்டில் இருப்பதைப் புரிந்து கொண்டதும், மாவையின் காலடியில் தஞ்சம் புகுந்து தப்பித்துக் கொண்டார்; வேட்பாளரும் ஆனார். ஆனால், அவருக்காக வாதாடிய மாவை, தேசியப்பட்டிலுக்காக மாவையோடு நெருக்கமான இருந்த சட்டத்தரணி ஒருவரைக் கைவிட்டார். குறித்த சட்டத்தரணி, ஒரு கட்டம் வரையில் சுமந்திரனோடு நெருக்கமாக இருப்பது மாதிரிக் காட்டிக் கொண்டார். அவரின் ஆதரவாளர்கள், சுமந்திரனின் படத்தை ‘பேஸ்புக்’ முகப்புப் படமாகவும் கொண்டு சுமந்தார்கள். இறுதியில், தேசியப் பட்டியல் விவகாரம், சம்பந்தனின் இறுதி முடிவுக்கு உட்பட்டது என்று அறிந்து, குறித்த சட்டத்தரணி, சம்பந்தனிடமே சென்று கெஞ்சினாராம். ஆனால், அந்தச் சட்டத்தரணியின் பெயரை எந்தவொரு காரணத்துக்காகவும் பரிசீலிக்க மாட்டேன் என்று மாவையிடமே சம்பந்தன் சொல்லியிருக்கிறார். அவர், சார்ந்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கின் தீர்ப்பையும் எடுத்துக் காட்டியிருக்கிறார். இந்த விடயத்திலும், குறித்த சட்டத்தரணியும் அவரது ஆதரவாளர்களும் சம்பந்தனுக்குப் பதிலாக, சுமந்திரனைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் மனக்கிலேசங்களை ஊடகங்கள் சில, பயன்படுத்திக் கொள்கின்றன. புலம்பெயர் தேசத்தைத் தளமாகக் கொண்டியங்கும் தொலைக்காட்சி, இணைய ஊடகக் குழுமம் ஒன்றின் தலைவர் ஒருவர் நேரடியாகவே, சுமந்திரனுக்கு எதிராகக் களத்தில் இறங்கி வேலை செய்கிறார். கடந்த வாரத்தில்கூட வடமராட்சி கிழக்கில், மக்கள் சந்திப்பொன்றில் பேசிய சிவஞானம் சிறீதரன், “லண்டனில் இருந்து பாஸ்கரன் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சுமந்திரனோடு இணைந்து செயற்பட வேண்டாம்; அவரோடு பயணித்தால் தோற்றுப் போய்விடுவீர் என்றார். நான் அப்படித் தோற்றால், அது வரலாறாக இருக்கட்டும் என்று பதில் சொன்னேன்.” என்றார். இந்தத் தேர்தலில், தமிழ்த் தேசிய அரசியல் இயங்கு தளத்தின் மய்யப் புள்ளியாக, சுமந்திரனின் பெயர் மாறியிருக்கின்றது. எதிர்க்கட்சிகள் தொடங்கி, சொந்தக் கட்சிக்கார்களாலும் அவரே குறிவைக்கப்படுகிறார். ஏனெனில், அவரைச் சுற்றித்தான் ஊடாடல்த் திரட்சியொன்று, கடந்த சில ஆண்டுகளாகக் காணப்படுகின்றது. சமூக ஊடகங்கள் தொடங்கி, பிரதான ஊடகங்கள் வரையிலும் அந்தப் பெயருக்கு அப்பால் நின்று பேசப்படுவதில்லை. வெற்றியும் தோல்வியும் அவரின் பெயரை முன்வைத்தே தீர்மானிக்கப்படும் என்று, இந்தப் பொதுத் தேர்தல் காட்சிகள், தமிழரங்கை நிறைக்கின்றன. அது, உண்மையில் ஆரோக்கியமானதா என்றால், ‘இல்லை’ என்பதே பதிலாகும். ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியல், தாங்கி நிற்கவேண்டிய முதன்மை விடயங்களைத் தவிர்த்துவிட்டு, சுமந்திரனை முன்னிறுத்திப் பேசிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலை, மீண்டும் ஏகநிலைத் தலைவர்களையும் கட்சிகளையும் மாத்திரமே வளர்த்தெடுக்கும். இது, சுமந்திரனுக்கு இலகுவான வெற்றியைத் தேடித்தரலாம். ஆனால், அது ஆரோக்கியமான அரசியல் கலாசாரமொன்றை தமிழ் மக்களிடம் தோற்றுவிப்பதற்கு ஒத்துழைக்காது. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சுமந்திரனுக்கு-எதிரான-உள்வீட்டுக்-குத்து-வெட்டுகள்/91-252328
 22. 1 point
 23. 1 point
  காலம் கடந்த ஞானம். அன்றிச் சுடலை ஞானம் என்றும் கூறலாம். ஆட்சியில் இல்லாதபோதுதான் பலருக்குப் பலதும் புரிகிறது. இதனை உங்கள் வருங்கால அரசியல் செய்ய வருவோருக்குப் போதியுங்கள் அவர்களாவது ஞானம்பெறட்டும்.
 24. 1 point
  கொம்மான் வைத்திருக்கும் பணமெல்லாம் கொழும்பில் கோப்பி கொட்டை வியாபாரம் பண்ணி சேர்த்த காசா? கொஞ்சமும் கூச்சம் இல்லமால் இப்படி முழு பூசணிக்கையையே புதைக்கிறீரங்களே? இயக்கத்துக்கு காசு கொடுத்த ஒவ்வரு தமிழனும் கருணாவால் ஏமாற்றப்பட்டவர்கள்தான் இதில் நான் நீங்கள் என்று தனி தனியாக இனி பிரிக்க முடியாது
 25. 1 point
  தமிழ் நாட்டில்... பிறக்காமல், தப்பித்து விட்டார்.
 26. 1 point
  செத்தல் மிளகாய், பச்சை மிளகாய், மிளகு எல்லாம் போட்டு செய்த ஒரு கலவன் சம்பல். இன்று தான் பார்க்கிறேன். செய்து பார்க்க வேண்டும்.
 27. 1 point
  நானும் தான் பார்த்தனான்.நாங்களும் அந்தக் காலத்தில் சின்ன பேணி கொண்டு போய் வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்திருக்கிறோம்.இதென்ன பெரிய பானையோடு போக அவனும் நிறைய ஊத்தி விடுறான்.சரி முறிஞ்சு வரட்டும் பார்ப்போம். ஏற்கனவே காணொளி பார்த்தாச்சு.
 28. 1 point
 29. 1 point
  என்னது முல்லைத்தீவு முகாம் தாக்குதலில் கும்மானா.... அட போங்கடா நான் இந்த ஊரை விட்டே...... போறன்...
 30. 1 point
 31. 1 point
  இந்து மதம் என்று ஒரு சொல் எந்த ஒரு வேதத்திலும் இல்லை. சிந்து எனும் நதியின் பாரசீகப் பதமே ஹிந்து ஆகி இந்து ஆனது. இந்து மதம் என்பதும் இந்தியா என்பதும் வெள்ளைக்காரர் இந்தியாவை ஆண்ட போதுஉருவாகிய சொற்பதங்கள். சிந்து வெளியை அழித்த வந்தேறிகள் உருவாக்கிய சம்ஸ்கிருதமும் சனாதன தர்மமும் ஆதியில் இருந்த சித்தர், ஆசீவக வழிபாட்டுமுறைகளை கொச்சைப்படுத்தி உருவாக்கப்பட்டவையே. புராணக்கட்டுக்கதைகள், இதிகாசங்கள் எல்லாம் ஆதி வழிபாட்டு முறைகளை இழிவு படுத்தி எழுதப் பட்டவையே. விஷயம் விளங்காமல் எழுதியவன் உருவாக்கிய மதமே இந்து மதம். மகாவம்சம் எப்படி கட்டுகதையோ அப்படித்தான் புராணங்களும் இதிகாசங்களும் . ஐயப்பன் எப்படிப் பிறந்தார் என்பது எவ்வளவு அசிங்கமான கட்டுக்கதை. இதை ஒரு காவாலிப்பிராமணிதானே திட்டமிட்டுத்தானே எழுதியிருக்கவேணும். வந்தேறிகளின் பிரித்தாழும் சூழ்ச்சியில் உருவானதே சைவம், வைணவம் எனும் பிரிவுகள். ஆதியில் தமிழரிடமிருந்த குலத்தொழில் வழக்கங்களை சாதியாக்கி, அறிவு புகட்டும் ஆசான்களாகிய பிராமண குலத்தைத் தமதாக்கி, மற்றவர்களை இழிசாதியாக்கி சுரண்டினார்கள். ஆதியில் இருந்த தமிழ் பிராமணர்களில் ஒரு பகுதியினர் எதிர்த்துப்போராட இயலாமையினால் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர், பார்ப்பனர் ஆனார்கள் (தற்போதைய போராட்ட நிகழ்வுகள் தெரிந்ததே). பூசைகள், மந்திரங்கள் எல்லாம் இந்த பொய்ப் பிராமணர்களே செய்து உடலுழைப்பில்லாமல் சம்பாதிக்க வேண்டும். மற்றவர்கள் இவர்களைத் தெய்வத்துக்கு சமமாக மதிக்க வேண்டும் என்று விதித்தார்கள். ஈழத்துக்குருக்களும் இவர்களது பரம்பரயினரே. வேதங்கள் ஆகமங்களை சம்ஸ்கிருதத்துக்கு மாற்றி மூலப் பிரதிகளை அழித்தார்கள். தம்மைத் தவிர தாங்கள் எழுதிய பொய் வேதங்களை கீழ்சாதியார் படிக்கத்தடை செய்தார்கள், படித்தாலோ, படிப்பதைக்கேட்டாலோ காதுக்குள் ஈயம் காய்ச்சி ஊற்றவேண்டும் என்று தங்களது மனு தர்ம சாஸ்திரத்தில் எழுதி வைத்தார்கள். உண்மையான மனு தர்ம சாஸ்திரம் வேறு, அது எரிக்கப்பட்டுவிட்டது. இன்னும் ஆயிரம் இருக்குது. இவைகள் இன்றுவரை தொடர்கின்றன. கீழடி தொல்பொருள் ஆய்வு, பூம்புகார் கடலடி ஆய்வுகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நடப்பதை அவதானியுங்கள். முதலில் நாங்கள் விழித்துக்கொள்ள வேண்டும். நாங்கள் விழிப்பதற்கு, நாங்கள் கண்மூடியிருக்கிறோமா என்பது உணரப்படவேண்டும். எவனோ எங்களைப் பற்றித் தவறாக எழுதி வைத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எங்களை அடிமையாக்கி அவன் ஆண்டு அனுபவித்ததை நாங்களும் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். விழிப் படைய முயற்சித்தோமா? எக்சத் ராச்சிய என்றும் எக்கிய ராச்சிய என்றும் சிலர் விளக்குவது போல. எங்களை ஆள அவன் வகுத்த வழிமுறைகளை பகுப்பாய்வு செய்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம், நல்ல முயற்சி. (இந்த விழிப்பின் ஒரு முயற்சியாகவே, தமிழைப்பற்றிய ஆய்வு, ). தமிழ் சிந்தனையாளர் பேரவை என்று Dr pandian (Physics), இவைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் சொல்வதன் அடிப்படையான விடயங்கள் சரியானதே, எல்லாம் சரியென்று எடுக்கத் தேவையில்லை. அதுபற்றி விவாதியுங்கள். தமிழரின் மொழி, வழிபாட்டு முறைகள் எல்லாம் சித்தர்கள் உருவாக்கியதே. முதலில் சித் தர்களைப் பற்றியும் அவர்கள் வகுத்த வழிமுறகள் பற்றியும் அறியுங்கள், அதுபற்றி விவாதியுங்கள். இந்த சித்தர்களைத்தான் அவர்கள் தேவாரம் பாடி அரசனைக் கைக்குள் போட்டுக் கழுவேறினார்கள். Part-1 Siddhar Phenomenon & Color Concept
 32. 1 point
  சிரிக்காமல் இருக்கிறதுக்கும் ஒரு கெட்டித்தனம் வேணும்.
 33. 1 point
 34. 1 point
  கருணாவால் நாம் அழிக்கப்பட்டோம் அத்துடன் அவர் வேலை முடிந்தது .ஆனால் சுமத்திரனால் தமிழர்களின் ஒவ்வொருவரின் எதிர்காலமும் சிதைக்கப்பட போகிறது சுமத்திரன் வரும் தேர்தலில் வென்றால் அடுத்து வரும் 20 வருடங்களில் இலங்கையில் தமிழர் எண்ட இனம் இருக்கும் ஆனால் சிறுவர்களும் கஞ்சாமுதல் போதை வஸ்த்துவுக்கு அடிமையாக இருப்பார்கள் திருட்டும் வன்புணர்வுகளும் மலிந்து போய் இருக்கும் படிப்பறிவு அற்ற நிலையில் இப்போ மலேசிய தமிழர்களின் நிலையை விட அதி மோசமான நிலையில்தமிழ் இனம் இருக்கும் யாழில் மூலைக்கு மூலை முஸ்லீம் பள்ளிவாசல்கள் முளைத்து இருக்கும் போட்டிக்கு பன்சாலைகளும் அதில் தென்பகுதியில் குற்றம் புரிந்த பிக்குகளுமாய் இருப்பினம்.இங்கிருந்து போய் வாங்கிய புலம்பெயர் தமிழரின் காணிகள் அடாத்தாக அபகரிக்கப்பட்டு இருக்கும் அதற்கு சுமத்திரன் கோஸ்ட்டி முஸ்லிலிம்களுக்கு ஆதரவாய் வாதாடி வென்று கொடுப்பிணம் இப்பவே யாழ் கிழக்கில் உள்ள ஆரம்ப பாடசாலைகளில் நடக்கும் கூத்துக்களை சொல்ல முடியாது அவ்வளவு மோசமானவை . கஞ்சாவும் போதைப்பொருளையும் பரவும் மட்டும் பார்த்துக்கொண்டு இருப்பினம் ஆவா போல் நாலு வாழ் வெட்டு குழுவை உருவாக்கி வைத்திருப்பினம் இப்படியான விடயங்களை சமாளிக்க புலிகளுக்கு நான்கே நாலு நாட்கள் காணும் ஆனால் சுமத்திரன் அவற்றை அடக்க ராணுவம் தேவை என்று கோரிக்கை வைத்து ராணுவம் வந்து பிலிம் காட்டும் .கருணாவின் காட்டி கொடுப்பால் தமிழ் இனத்தை சிங்களம் வெற்றி கொள்ள மட்டுமே முடிந்தது ஆனால் சுமத்திரனால் தமிழ் இனம் அழிக்கப்படும் .
 35. 1 point
  அருமையான கவிதை உங்களை பார்த்து மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். "மறந்தால் தானே நினைப்பதற்கு" என்பார்கள் . நினைவே அவராக இருக்கையில் தனிமையும் இனிமையே ..தனிமையை இனிமையாக்குவது அவரவர் திறமை.
 36. 1 point
  தனிமைக்கு மருந்து சொன்னீர் வாழ்க நலமுடன்
 37. 1 point
  கண்மணி தனிமையால் டாக்ரரை நாடுபவர்கள் உலகில் தனிமையை இனிமையாக்கி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
 38. 1 point
  அப்பா உங்க மடியில நான் தலைசாய்க்கணும் அப்பா உங்க நெனப்புலதான் உயிர்வாழணும்
 39. 1 point
  'தென்புலத்தார்' தமிழர் மூதாதையரே! ஆரியரின் பிதுரர் அல்லர்!! - குறள் ஆய்வு-6 பகுதி-1 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் விருந்தோம்பல் என்னும் தமிழர் அறம் ஆரியப் பிராமணரின் சடங்கியல் அன்று! தொல்லியல் அறிஞர் முனைவர் நாகசாமி அவர்களின் "Thirukkural - An Abridgement of Sastras" என்னும் நூலின் 93-94ம் பக்கங்களில் பின்வருமாறு கூறியுள்ளார்: "The Dharma sastras speak of these tarpana and panca mahayajnas, one after the other, mentioning that they must be performed daily. The Tirukkural referring to these two forms of daily offering in the second and third Kural beginning with 'Illara Iyal', and Tenpulattar has these offerings in mind. This would show Valluvar is household, was no doubt listing these essential rituals of the Hindus so the view of modern scholars that Valluvar did not refer to any Hindu rituals is not correct. The verse reads - தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தால் ஓம்பல் தலை. (என்னும் குறளுக்கு, பின்வருமாறு ஆங்கிலத்தில் விளக்கம் சொல்கின்றார்.) It means it is important to offer sacrifices to pitr, deivam(Gods), guests(athithi), okkal(all living beingsa, like man and Tan(one's own living) This is a very important aspect of Hindu system, that has come down from Pre-Buddhist periods. The very fact that Valluvar emphasizes (ஓம்பல் தலை) the performance of these five sacrifices for the Grhasta is a pointer to the fact that Valluvar was a follower of the Hindu System. The Panca mahayajnas are mentioned in all the Dharma sastras of Manu, Yajnavalkya, Gautama, Apastamba, Bodhayana and others." வருணத்திற்கு ஏற்ப மாறும் ஆரியச் சடங்கியல்! ஆரியர்கள் இனத்திலேயே இவர் குறிப்பிடும் தர்ப்பணம், சிறுபான்மை எண்ணிக்கையிலான பிராமணர்களுக்கு மட்டுமே முழுவதும் பொருந்துவது; பிராமணர்களைவிட எண்ணிக்கையில் உயர்ந்த சத்திரியர்களுக்கு சில பகுதிகளும், இவர் இருவரையும் விட எண்ணிக்கையில் உயர்ந்த வைசியர்களுக்கு மிகச்சில பகுதிகளுமே பொருந்தும். இம்மூவரையும்விட அதிக எண்ணிக்கையில் வாழும் ஆரிய தேச சூத்திரர்களுக்கு இவை எதுவுமே பொருந்தாது. தமிழர்களுக்குத் தர்ப்பணம் இல்லை! தமிழர்களில் வருணப்பாகுபாடு இல்லை என்பதால் தமிழர்களுக்குத் தர்ப்பணம் இல்லை. ஆரிய வேதமுறையைக் கைக்கொண்ட சிறுபான்மை தமிழ்ப் பார்ப்பனர்கள் மட்டுமே தர்ப்பணம் செய்வார்கள். ரிக் வேத 'சோமன்' முதலியோர், தமிழர்களின் 'பித்ரு அல்லர் நாகசாமி அவர்கள் தமது நூலின் 93வது பக்கத்தில் பித்ரு என்பவர் யார் என்று பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: "3. The pitru mentioned are Soma, Pitruman, Agni, Yama, Angirasvan and Kavyavahana' திரு.நாகசாமி குறிப்பிடும் பித்ருக்களான சோமன் முதலியோர், ரிக் வேதத்தில் கூறப்படும் ஆரியரின் மூதாதையர்கள். தமிழர்களின் மூதாதையர்கள் அல்லர். தமிழர்களுக்கு சோமன், பிதுர்மன், அன்கிரச்வான், காவ்யாவாகன என்பவர்கள் எவரென்றே தெரியாது. மிகச் சிறுபான்மை எண்ணிக்கையிலான தமிழ்ப் பார்ப்பனர்கள் மட்டுமே ஆரிய வேதம் ஓதுபவர்கள். அறியாமையினால் அல்லது வேதவழிபாட்டுமுறையை ஏற்றுக்கொண்டமையினால், கடனே என்று தமிழ்ப் பார்ப்பனர்கள் சோமன் உள்ளிட்ட ஆரியமூதாதையருக்கு பித்ருக் கடன் செய்யலாம். ஆரிய மூதாதைக்குத் தமிழன் ஏன் 'பித்ருக்கடன்(?)' கழிக்க வேண்டும்? வேதம் ஓதுதலோ, பூணூல் அணிதலோ செய்யாத 97 விழுக்காடு தமிழ் இல்லறத்தார்கள் பஞ்ச மகா யக்ஞங்களில் ஒன்றான இந்த 'பித்ருக்கடன்(?)' எவ்வாறு கழிக்க இயலும் என்பது திரு.நாகசாமிக்கும், சோமன் முதலான ஆரிய பித்ரு-மார்களுக்கே வெளிச்சம்! ஆரியரின் மூதாதையருக்குத் தமிழர்கள் ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதும் விளங்கவில்லை. 'பஞ்ச மகாப் பெரும்புளுகு' மூட்டை பலநூறு ஆண்டுகளாக, பரிமேலழகர் உள்ளிட்ட ஆரியச்சார்பு கொண்ட உரையாசிரியர்கள் பூணூலே அணியாத 97 விழுக்காடு எண்ணிக்கையில் உள்ள தமிழர்களின் மரபுகளையும், வாழ்வியல் முறைகளையும் வசதியாக மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, ஆளுயர பூமாலையைக் காதில் சுற்றும் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றனர். 'அப்துல் கலாம்' அவர்களே அப்துல் கலாம் ஐயராகும்போது எதுவும் ஆரியர்களுக்கு சாத்தியமே! திரு.நாகசாமி கூறும் ஆரியரின் 'பஞ்சமகா யக்ஞம்' தமிழர்களைப் பொறுத்தவரை 'பஞ்ச மகாப் பெரும்புளுகு' மூட்டையே அன்றி வேறொன்றும் இல்லை. தமிழர்களுக்கத் தென்புலத்தார் யார்? இப்போது வள்ளுவர் தமது காலத்தில் வாழ்ந்த தமிழர்களை நோக்கிச் சொன்ன 'தென்புலத்தார்' உண்மையில் யாராயிருக்கக் கூடும் என்று நம் அறிவைச் செலுத்தி ஆய்வு செய்து அறிவோம். தொல்காப்பியம் முதற்சங்க இறுதிக்கும் இடைச்சங்கத்துக்கும் இலக்கண நூல் என்று மரபுரை கூறுகின்றது. தொல்காப்பியத்தை அரங்கேறியது பாண்டிய மன்னன் நிலந்தரு திருவிற் பாண்டியன்(மாகீர்த்தி என்றும் நெடியோன் என்றும் முடத்திருமாறன் என்றும் அறியப்படுபவனும் இவனே!). இம்மன்னன் முதற்கழக(சங்க) இறுதியில் இருந்தவன் என்றும், முதற் கடற்கோளுக்குபின் இடைச்சங்கம் தோற்றுவித்தவன் என்றும் மரபுரை சொல்கின்றது. கடைக்கழக(சங்க)த் தொகுப்பில் உள்ள மிகப் பழமையான பாடல்கள் இப்பாண்டியன் பஃறுழியாற்றின் கரையிலிருந்த தென்மதுரையில் ஆண்ட மிகப்பழமையான முற்கால மன்னன் என்றும் புகழ்கின்றன. இடைக்கழகத்தை(இடைச்சங்கத்தை)த் தொடங்கிய இப்பாண்டிய மன்னனின் புகழ் தலைக்கழத்தை(தலைச்சங்கத்தை)ச் சேர்ந்ததாகும். தலைச்சங்க நூற்கள் இத்தலைக்கழக(சங்க) நூல்களாக முதுநாரை, முதுகுருகு போன்ற இசை நூல்கள் குறிப்பிடப்படுகின்றன; முறுவல், சயிந்தம், குணநூல், செயிற்றியம், அவிநயம் உள்ளிட்ட நாடக நூல்கள் பட்டியலிடப்படுகின்றன. இடைக்கழக(சங்க) நூலான இசை நுணுக்கம் போன்றவை கழக மரபுகளில் காணக்கிடைக்கின்றன. இத்தகைய நூல்கள் இருந்து, அழிந்துபோயின என்று சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுள்ளதை தாம் பதிப்பித்த சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரைநூலின் முன்னுரையில் தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படும் முனைவர் உ.வே.சா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். கடற்கோளினால் மறைந்த தென்புலத்தார்! தலைச்சங்கத்தைப் பற்றியும், இடைச்சங்கத்தைப் பற்றியும் இறையனார் அகப்பொருளுரைக் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. இத்தகைய புகழ்பெற்ற பஃறுழியாற்றின் கரையிலிருந்த முதற்கழகம்(முதல் தமிழ்ச்சங்கம்) வளர்த்த தென்மதுரை கடல்கோளினால் அழிந்துபோனது என்பதும் பண்டைய இலக்கியங்களில் பேசப்பெறுகின்றது. இத்தென்புலத்தில் கடற்கோளினால் மறைந்த அறம்வளர்த்த தமிழர்களே திருவள்ளுவர் காலத்தில் தென்புலத்தார் எனப்பட்டனர். தென்புலத்தார் - தென்மதுரை மூதாதையர் நினைவேந்தல்! தென்புலத்தார்,தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஐந்தாகத் திருக்குறள் கூறும் பொருள், தென்புலமாம் குமரிக்கண்டத்தில் வாழ்ந்து, கடல்கோளால் மறைந்த தமிழ் மூதாதையர் நினைவேந்தல், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தெய்வச் சான்றோர்கள் நினைவேந்தல், தம்மைத்தேடிவரும் விருந்தினர்கள் பேணல், தம்மோடு ஒத்த உறவினர்கள் பேணல், தாம் என்னும் ஐந்து நிலையினரிடத்தும் அறவுணர்வைப் பேணிக் கடைப்பிடித்தல் இல்லறத்தார்களுக்குத் தலையாய கடமையாகும் என்பதே. இதை இன்னும் சற்று ஆழமாக ஆய்வோம். தென்புலத்தார் என்று வள்ளுவர் குறிப்பிடுவது கடல்கோளினால் மறைந்துபோன குமரிக்கண்டத்து தமிழர் மூதாதையர்களையே என்பதை இப்போது காண்போம். 'தென்புலம்' என்றால் 'தென்பகுதி நிலம்' தமிழ் மொழியில் 'புலம்' என்றால் நிலம், இடம் என்பதே பொருள் வழக்கு. 'தென்புலம்' என்றால் 'தென்பகுதி நிலம்' என்றும் 'வடபுலம்' என்றால் 'வடபகுதிநிலம்' என்றும் வழங்குவதே தமிழர் வழக்கம் என்பதை பழந்தமிழ் இலக்கியங்களில் பரவலாக வழங்கப்படும் வழக்குகள் மூலம் எளிதில் அறியலாம். எடுத்துக்காட்டாக, சிலப்பதிகாரத்தில் "மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதற் பிழைத்தது கெடுக என் ஆயுள்!" - சிலப்பதிகாரம் "தென்புலமான பாண்டிய நாட்டில் வாழும் மக்களைக் காக்கும் அரசுமுறை பிழைபட்டதற்கு நான் முதற் காரணமாகிவிட்டேன்! என் ஆயுள் முடிந்துபோகட்டும்!"என்று ஆராயாமல் கோவலனைக் கொன்று கண்ணகிக்குச் செய்த தவறை தனது அரசவையில் இவ்வாறு கூறி ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர்துறந்தான். இங்கு, பாண்டிய நாடே 'தென்புலம்' என்ற பெயரால் குறிக்கப்பட்டது வெளிப்படையாக விளங்கும். இனி, பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதாக வரும் சிறுபாணாற்றுப்படையில், கடையேழு வள்ளல்களுள் ஒருவனாகிய ஓய்மான் நாட்டு நல்லியக்கோடன் கொடைத்திறத்தைப் பாராட்டி, இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது. சேர மன்னனைக் குறிக்க 'குடபுலங் காவலர்' மருமா னொன்னார் 'வடபுல' விமயத்து வாங்குவிற் பொறித்த எழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவண் வருபுனல்வாயில் வஞ்சியும் வறிதே யதாஅன்று - சிறுபாணாற்றுப்படை:47-50 என்று பாடுகின்றார். இப்பாடலில், பாட்டுடைத்தலைவன் தரும் கொடை, வளமிக்க 'குடபுலம்' என்னும் சேரநாட்டின் வளத்தைக் காட்டிலும் அதிகமான வளத்தைத் தருவதாகப் பாராட்டிப்பாடியது. வளமிக்க 'குடபுலம்' காக்கும் மரபில் வந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், 'வடபுல'த்தில் உள்ள தன் பகைவர்களை அடக்கி, அவர்களது 'வடபுல' எல்லையிலிருக்கும் இமய மலையில் தன் வில்லம்புச் சின்னத்தைப் பொறித்தான்; கோட்டைக்கதவுக்குத் தாழ்ப்பாள் போடும் கணையமரம் போன்ற வலிய தோள் கொண்ட அந்தக் குட்டுவனின் வளம் மிக்க வஞ்சி நகரமே ஏழை-நகரம் என்று எண்ணும்படியாக நல்லியக்கோடன் பொருள் வளத்தை வாரி வழங்குவான் என்று பாராட்டுகின்றார். இங்கு 'குடபுலம்' சேரநாட்டையும், 'வடபுலம்' வடநாட்டையும் குறிக்கின்றது. தத்துநீர் வரைப்பிற் கொற்கைக் கோமான் 'தென்புலங் காவலர்' மருமா னொன்னார் மண்மாறு கொண்ட மாலை வெண்குடைக் கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன் 65 தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனைமறுகின் மதுரையும் வறிதே யுதாஅன்று - சிறுபாணாற்றுப்படை: 62-67 "கடலலை மோதும் கொற்கையைத் துறைமுகமாக, மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு 'தென்புலம்' காக்கும் உரிமை பூண்டவர்களின் வழி வந்தவன் பாண்டியன் நெடுஞ்செழியன். அவன் தன் பகைவர்களின் நிலத்தைப் பொருள் வளத்தில் மாறுபடுமாறு செய்தவன். தன் நாட்டுக்கு நிழல் தரும் காவல் வெண்குடையின் கீழ் வீற்றிருப்பான். கண்ணைப் போன்ற வேப்பிலைக் கண்ணியைத் தலையில் சூடிக்கொண்டு தேரில் வருவான். தமிழ் நிலைபெற்றிருப்பதால் இவனது மதுரை பிறரால் தாங்க முடியாத மரபுப் பெருமையினைக் கொண்டது. அவனது மதுரைத் தெருவில் எப்போதும் மகிழ்ச்சித்தேன் பாய்ந்துகொண்டே இருக்கும். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இவனது மதுரை நகரமே ஏழைநகரம் என்று எண்ணும்படியாக நல்லியக் கோடன் வளத்தை வாரி வழங்குவான்." என்கின்றது இப்பகுதி. தண்பணை தழீஇய தளரா இருக்கைக் 'குணபுலங் காவலர்' மருமா னொன்னா ரோங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியுந். தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பிய னோடாப் பூட்கை யுறந்தையும் வறிதே யதாஅன்று - சிறுபாணாற்றுப்படை: 78-83 குளிர்ந்த நீர் பாயும் வளவயல்களைக் (தண்பணை) கொண்ட உறையூரைத் தலைநகராகக் கொண்ட 'குணபுலம்' என்னும் சோழநாட்டின் மரபுரிமை மன்னன் ‘நற்றேர் செம்பியன்’ எனப் போற்றப்பட்டான். வானளாவ உயர்ந்து தொங்கிய கதவினைக் கொண்ட இவனது தூங்கெயில் கோட்டையில் மேகம் தன் முதுகைச் சொரிந்துகொள்ளும். அத்தகைய வளமிகு செம்பியனின் உறையூர் நகரமே ஒன்றுமில்லாத வறுமைக்கோலம் எய்திவிட்டது போல நல்லியக்கோடன் பரிசுகளை வழங்குவான், என்கிறார் பாணனை ஆற்றுப்படுத்தும் புலவர். மேற்கண்ட மூன்று பகுதிகளில் வரும் 'வடபுலம்' வடநாட்டையும், 'குடபுலங் காவலர்' சேரநாட்டு மன்னனையும், 'தென்புலங் காவலர்' பாண்டியநாட்டு மன்னனையும், 'குணபுலங் காவலர்' சோழமன்னனையும் தெளிவாகச் சுட்டுகின்றன. எனவே, 'தென்புலம்' என்றால் தென்னாடு என்பதே இலக்கிய வழக்கு. இன்னும் தேடுவோம். தெற்கே உள்ள கடல் 'தென்கடல்' என்றும், அங்குள்ள குமரி தெய்வம் தென்குமரி' என்றும் வழங்கப்படுவதை அனைவரும் அறிவர். முத்தொள்ளாயிரம் 94-3ல் 'தென் கொற்கை' என்று கொற்கைத் துறைமுகம் சுட்டப்பட்டுள்ளது. சிலப்பதிகாரமோ 'தென் தமிழ்', 'தென் தமிழ்நாடு', 'தென் தமிழ்ப்பாவை' என்று பரக்கப் பேசுகின்றது. மணிமேகலையோ 'தென்தமிழ் மதுரை', 'தென்திசைப் பொதியில் காணிய வந்தேன்' என்கின்றது. 'தென்புலம்' என்னும் சொல் குறுந்தொகை(317-7), அகநானூறு(24-8), புறநானூறு(35-7, 388-1), சிலப்பதிகாரம்(10-103, 20-76) ஆகிய பழந்தமிழ் இலக்கியங்களில் எங்கும் பரந்து கிடக்கின்றது. தென்புலமருங்கு என்னும் சொல்லாட்சி மதுரைக்காஞ்சி(202), நெடுநல்வாடை(52), நற்றிணை(153-5), சிலப்பதிகாரம்(27-133) ஆகிய தொன்மையான இலக்கியங்களில் பயின்றுவரும் சாட்சியங்கள். தமிழ்ப்பெருவெளி எங்கும் பரக்கக் காணும் 'தென்றல்' என்னும் சொல்லாட்சி 'தென்' என்னும் அடையின் தமிழ் அடையாளத்தையும், பொருளையும் சுட்டி நிற்கின்றது. மேற்கண்ட சான்றுகள் காட்டும் உண்மை 'புலம்' என்னும் சொல்லின் வெளிப்படையான, இயல்பான, எளிமையான பொருள் 'இடம்' என்பதே. ஆக, 'தென்புலத்தார்' என்பதற்கு 'தென்பகுதி நிலத்தவர்' என்னும் பொருளே மிகவும் சரியான பொருத்தமான ஒன்று. தென்பகுதி நிலத்தவர் தமிழ் இனத்தவர் என்பதும் தெளிவு. 'தென்புலத்தார்' அறிவிக்கும் திருவள்ளுவரின் இனம்-மொழி திருக்குறளாசிரியர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால், 'தென்புலத்தார்' என்னும் இவ்வொரு சொல்லே திருவள்ளுவரின் இனத்தையும், மொழியையும் குறிப்பால் அறிவிக்கும் சொல்லாக உள்ளது. திருவள்ளுவர் காலத்திலேயே தமிழ்நாட்டில் வேற்றினத்தவரான ஆரியர்கள் புகுந்து, அரசியல், சமுதாயம் என்பவற்றில் மேன்மையடைந்திருந்த தமிழரையும், அவர்கள் தாய் மொழியான தமிழையும், தமிழர்களின் உயர்மரபு வாழ்வியல் நலன்களையும், கலை, அறிவியல் பண்பாடுகளையும் சிறிது சிறிதாக அழிக்கவும், ஆரியர்தம் அரைச் செயற்கை மொழியாகிய சமஸ்கிருதத்தையும், ஆரியக் கருத்தியலையும் தமிழர்களிடம் புகுத்த முயன்ற காலம் என்பது தமிழின வரலாறு. தமிழர் மூதாதையர் 'தென்புலத்தார்' கழக(சங்க) இலக்கியங்கள் கூறும் தமிழரின் மூதாதையர் வாழ்ந்த இடங்களான 'குமரிக்கண்டம்', 'குமரியாறு, பஃறுழியாறு' என்பவை தற்போதுள்ள தமிழ் மண்ணுக்கும் தென்புலத்தில் உள்ளது. பன்நெடுங்காலத்துக்குமுன், கடற்கோளால் மறைந்துபோன தம் தென்புலத்துக் குமரிக்கண்டத்து மூதாதையரை நினைந்து, விருப்பமுடன் படையலிட்டுத் தமிழர்கள் நிகழ்த்திவந்த பயன்கருதா நன்றி செலுத்தும் வழிபாடே திருவள்ளுவர் காலத்துத் தமிழரின் தென்புலத்தார் வழிபாடு ஆகும். இல்லறத்தானின் ஐந்து தலையாய உறுப்புகள் ஆக, வள்ளுவர் கூற்றுப்படி, இல்லறத்தான் ஓம்பவேண்டிய ஐந்து தலையாய உறுப்புகள் தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்பன. இவற்றுள், 'தான்' என்பது 'தலை'யாய் இருந்து பிற உறுப்புக்களைப் பேண வேண்டும் என்றே அறிவுறுத்துகிறார் வள்ளுவர். ஒக்கலை(தம்மோடு ஒத்த உறவினர்களை) 'உடம்பாக'வும், விருந்தைக் கைகளாகவும், தெய்வத்தை இதயமாகவும், தென்புலத்தாரைக் கால்களாகவும் உருவகித்துப் பேணவேண்டும் என்று பொருள்கொள்ள வேண்டும். 'தென்புலத்தார்' வழி நடக்கவேண்டும் என்பதால், அவர்களே இல்லறத்தானின் கால்கள்; தெய்வப்பண்புடன் வாழ்வாங்கு வாழவேண்டும் என்பதால், தெய்வமே இல்லறத்தானின் இதயம்; இருகைகளையும் ஒருசேரக்கொண்டு முழுநிறைவான ஈகையறம்மேற்கொள்ளவும், விருந்தினர்களைத் தம் கைகள்போல் உதவும் உறுதுணையாகக் கருதவேண்டும் என்பதால், விருந்தினரே இல்லறத்தானின் கைகள்; தம்மோடு ஒத்த உறவினர்களுடன் இணைந்து உழைத்து ஒருவருக்கொருவர் பயன்பட்டுக்கொள்ளவேண்டும் என்பதால் 'ஒக்கல்' இல்லறத்தானின் உடல்; காட்சி, கேள்வி, உயிர்ப்பு, மொழி, அறிவு ஆகிய அனைத்துக்கும் அடிப்படையான தலைபோல் 'தான்' இருந்து அனைவரையும் பேணி, அறவழியில் நடத்துதல் வேண்டும் என்பதால் இல்லறத்தானுக்கு அவனே தலை என்பதாக உருவகப்பொருள் கொண்டு வாழவேண்டும். இதுதான் இத்திருக்குறளுக்கு இயல்பான பொருளாக இருக்க இயலும். பஞ்சமகாப் பாதகம் ஆரியப் பிராமணர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய பஞ்சமகாயக்ஞம் என்ற ஆரியப் பிராமண சமயவியல் சடங்குச் செயலை, தமிழரின் அறநெறிப் பண்பாட்டு அசைவுகளின் விளைவாகத் தோன்றிய இத்திருக்குறளுக்குப் பொருத்துதல் அறமன்று. ஆரியரின் மொழியில் சொல்வதானால், இது ஒரு பஞ்சமகாப் பாதகம்! பஞ்சமகாப் பாபம்!! ஆரியச்சார்பு கொண்ட பரிமேலழகர் முதல் இக்கால திரு.நாகசாமி வரை, தொடர்ந்து இட்டுக்கட்டிக் கூறும் இப்பொய்யுரை, ஆரிய வேதத்துக்கு எவ்விதத்திலும் தொடர்பற்ற பெரும்பான்மை மக்களின் பண்பாட்டு மரபுகளை அவமதிக்கும் செயல். தமிழகத்தில் வாழும் ஆரியர்களும், ஆரிய வேதத்தை ஏற்றுக்கொண்ட தமிழ்ப் பார்ப்பனர்களும் பஞ்சமகாயக்ஞம் செய்ய முழுஉரிமை பெற்றவர்கள். இவ்விரண்டு குழுக்களும் அல்லாத தமிழர்களின் பொதுமறை திருக்குறளுக்கு 'Hindu System' என்ற பெயரில் ஆரியப் பிராமணர்களின் சடங்கியல் முலாம் பூச முயல்வது கடும் கண்டனத்துக்குரியது. வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்! அன்னார் உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்! கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்! குறளறம் தொடர்ந்து பேசுவோம்!
 40. 1 point
 41. 1 point
 42. 1 point
  மணியான கவிதை. அட இவ்வளவு விடயமும் எனக்குள்ளே இருந்திருக்கு.......!
 43. 1 point
 44. 1 point
  சட்ட விரோத மதுபான உற்பத்தியாளர் ஒருவரைக் கைதுசெய்ய வேண்டாம் என தேரர் ஒருவர் விடுத்த கோரிக்கையை மீறி செயற்பட்டமைக்காக, பொலிஸ் பரிசோதகர் தர அதிகாரி ஒருவர் மீது பொலிஸ் நிலையத்துக்குள்ளேயே தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவமொன்று வாரியப்பொல பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது. வாரியப்பொல பொலிஸ் நிலையத்துக்கு புதிதாக கடமைகளுக்காக சென்ற, அப்பொலிஸ் நிலையத்தின் சுற்றிவளைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மீதே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் திகதி இரவு, பிரதேசத்தின் சட்ட விரோத மதுபான உற்பத்தியாளராக கருதப்படும் சந்தேக நபர் ஒருவர், குறித்த பொலிஸ் அதிகாரிக்கு தொலைபேசியில் அழைத்து, தன்னை கைதுசெய்ய வேண்டாம் என கோரியுள்ளார். இது குறித்து உடனடியாக ஏனைய அதிகாரிகளையும் தெளிவுபடுத்தியுள்ள பொலிஸ் பரிசோதகர், அது தொடர்பில் பொலிஸ் புத்தகத்திலும் தேவையான பதிவுகளை இட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில், நேற்று 20 ஆம் திகதி காலை, பிரதேசத்தின் விகாரை ஒன்றின் விகாரதிபதி எனக் கருதப்படும் தேரர் ஒருவர், தொலைபேசியில் அழைத்து, பொலிஸ் புத்தக பதிவுகளை நீக்குமாரும், சந்தேக நபரை கைது செய்ய வேண்டாம் எனவும் பொலிஸ் பரிசோதகரிடம் கோரியுள்ளார். இதேவேளை வேறு கடமைகளுக்காக வெளியே சென்ற போது, குறித்த பொலிஸ் பரிசோதகரை தேரர் உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும்,அன்றைய தினம் வெளியே கடமைகளை முடித்துவிட்டு குறித்த பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் நிலையம் வந்த போது, அங்கு குறித்த தேரர், சட்ட விரோத மதுபான உற்பத்தியாளர் என கருதப்படும் நபர் உள்ளிட்ட பலர் இருந்துள்ளனர். இந்நிலையில், வாரியப்பொல பொலிஸ் நிலையத்தின், சிறைக் கூடத்துக்கு அருகே, தேரருடன் வந்த நபர் ஒருவர் குறித்த பொலிஸ் பரிசோதகரை சுவருடன் சேர்த்து பிடித்து தாக்கிகியுள்ளதாகவும், இதன்போது உடன் இருந்த தேரர் உள்ளிட்டோர் அந்த பொலிஸ் அதிகாரியை மிகக் கேவலமாக திட்டியதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. எவ்வாறாயினும் தாக்குதல் நடாத்திய நபரை உடனடியாக பொலிஸார் கைது செய்துள்ளனர். சுவருடன் சேர்த்து தாக்கும்போது பொலிஸ் பரிசோதகரின் தலைப் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ள நிலையில், அவர் நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் இன்று வாரியபொல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில், பொலிஸ் பரிசோதகர் மீதான தாக்குதலின் போது, அங்கு சென்ற, சட்டவிரோத கோரிக்கையை முன்வைத்த தேரர் கைதுசெய்யப்படாத நிலையில், அது குறித்து பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்னவை வீரகேசரி வினவியது. இதற்கு பதிலளித்த அவர், குறித்த சம்பவத்தில் கூறப்படும் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விசாரணை தகவல்களுக்கு அமைய மேலதிக கைதுகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/80458
 45. 1 point
  யாழ்ப்பாணத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களினால் அச்சுறுத்தல் – சந்தேக நபர்களை தேடி வலை வீச்சு! கொழும்பில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த 7 பேர் தொடர்பில் விவரங்கள் கிடைத்துள்ளன. அந்த விவரங்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளன என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(புதன்கிழமை) இரவு நடத்திய அவசர ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வலி.மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட சங்கானை, தொல்புரம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு மாவட்டத்தின் அபாய வலயங்களில் தங்கியிருந்த இவர்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் குருநகர், பாசையூர், நாவற்குழி, தெல்லிப்பளை, தொல்புரம் மற்றும் சங்கானையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் விவரங்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு மாதகாலம் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு கொரோனா அச்சுறுத்தலிலிருந்து மீள்வதற்கு அனைவரும் வழங்கிய தியாகம் இந்த நபர்களால் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அடையாளம் காணப்பட்டால் தனிமைப்படுத்தல் நிலையத்தில் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உண்மையைக் கூறி உரிய வகையில் இங்கு வருகை தந்திருக்க முடியும். அவர்களால் சொந்தக் குடும்பத்தினருக்கும் அயலவர்களுக்கும் சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது“ எனக் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/யாழ்ப்பாணத்திற்குள்-சட்/ யாழ்ப்பாணத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரண்டாவது நபரும் தனிமைப்படுத்தப்பட்டார் கொழும்பிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த இரண்டாவது நபரும் சங்கானையில் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சங்கானை தேவாலய வீதியில் அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு மாவட்டம் டாம் வீதியில் தங்கியிருந்த ஒருவர், பாரவூர்தியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த நிலையில் அவரை உடனடியாக தேடிக் கண்டறிந்த வலி.மேற்கு பிரதேச சுகாதார பரிசோதகர்கள், சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தினர். முதலாவது நபர் சுழிபுரம் – தொல்புரம் முத்துமாரி அம்மன் ஆலய வீதியைச் சேர்ந்த 30 வயதுடையவரே அமைச்சின் அறிவுறுத்தல்களை மீறி யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்தவர் என்று கண்டறியப்பட்டார். இந்த நிலையில் சங்கானையைச் சேர்ந்த இரண்டாவது நபரும் இன்று(புதன்கிழமை) மாலை வட்டுக்கோட்டை பொலிஸாரின் உதவியுடன் கண்டறியப்பட்டார். அவர் உடனடியாகவே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொழும்பு டாம் வீதியில் தங்கியிருந்து மேசன் வேலை செய்வதாகவும் அங்கிருந்து மிளகாய் ஏற்றி வந்த பாரவூர்தியில் ஏறி இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்ததாக அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய போதும் சந்தேகங்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இவர் வருகை தந்த பாரவூர்திகளின் சாரதிகள் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சிறப்புப் பொலிஸ் அணி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. http://athavannews.com/யாழ்ப்பாணத்திற்குள்-சட-2/
 46. 1 point
  வட்டுக்கோட்டை பொலிஸார் இளம் குடும்பத்தலைவர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து அவரை சரமாரியாகத் தாக்கி பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேலும் மேற்படி சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விளக்க தருமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அராலி மேற்கைச் பகுதியைச் சேர்ந்த முத்துராசா கண்ணதாசன் (வயது-23) என்ற குடும்பத்தலைவரின் வீட்டில் 19 ஆம் திகதி இரவு 8 மணியளவில் அயல்வீட்டைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கதைத்துக்கொண்டிருந்துள்ளனர். அந்தக் குடும்பத்தலைவரின் வீட்டு வீதியால் சிவில் உடையில் பயணித்த வட்டுக்கோட்டைப் பொலிஸார் அறுவர் திடீரென்று அவரது வீட்டுக்குள் நுழைந்து, ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் அயல் வீட்டுக்காரரை எதற்காக வைத்துள்ளாய் வாக்குவாதப்பட்டனர். அத்துடன் அங்கிருந்த இளைஞர்களுக்குக் கொட்டன் தடியால் பலமாகத் தாக்கித் துரத்திய பின் குடும்பத்தலைவரின் ஆளடையாள அட்டையைக் கேட்டனர். இதையடுத்து, அவரது மனைவி ஆடையாள அட்டை எடுப்பதற்காக உள்ளே சென்ற சமயம், பொலிஸாருக்கும் குடும்பத்தலைவருக்கும் வாக்குவாதம் முற்றி பொலிஸார் குடும்பத்தலைவரை கொட்டன் தடியால் சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படுகின்றது. பொலிஸாரின் பலமான தாக்குதலால் குடும்பத்தலைவரின் வாய் மற்றும் ஏனைய உடற்பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் மயங்கிய நிலையில், அவரை மோட்டார் சைக்கிளில் தூக்கி ஏற்றி பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்வதற்குப் பொலிஸார் முயன்ற வேளை, அவரது மனைவி கூக்குரலிட்டார். அவரது சத்தத்தைக் கேட்டுச் சம்பவ இடத்துக்குச் சென்ற அக்கம் பக்கத்தினரை பொலிஸார் துரத்தித் சென்று கடுமையாகத் தாக்கியது மட்டுமால்லாமல் தமது ஆடைகளைக் கூட பொலிஸார் கிழித்துத் தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அடாவடிகளைப் பொறுக்கமாட்டாது ஆத்திரமுற்ற அப்பகுதி இளைஞர்கள் பொலிஸார் மீது கற்களால் எறிந்தமையை பொலிஸார் காணொளி எடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர்களை பொலிஸார் மிரட்டியதுடன், இவ்வாறு அராஜகத்தில் ஈடுபட்ட பொலிஸார் மதுபோதையில் நின்றதாகவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர். என் கணவர் கடற்றொழில் செய்பவர். பொலிஸார் வருவதற்குச் சற்று முன்தான் தொழிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியிருந்தார். அவரைச் சாகுமளவுக்குப் பொலிஸார் கொட்டன் தடிகளால் அடித்ததாகவும் அவரது மனைவி கூறியுள்ளார். http://athavannews.com/வட்டுக்கோட்டையில்-குடும/
 47. 1 point
  யாழ்ப்பாணத்தில் கொரோனா அபாயம் நீங்கவில்லை! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் யாழ்ப்பாணத்தில் இன்னமும் கொரோனா அச்சுறுத்தல் நீங்கவில்லை என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் உட்பட பல மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், தற்போது மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள், மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தொடர்பிலும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தகவல் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர், https://www.ibctamil.com/srilanka/80/141588
 48. 1 point
  ’குருகெதர’ புதிய கல்வி அலைவரிசை ஆரம்பம் இலங்கையின் அனைத்துப் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், “குரு கெதர” என்ற புதிய தொலைக்காட்சி அலைவரிசை, இன்று (20) முதல் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை ரூபவாஹினிக் கூட்டுதாபனத்தின் ஊடகப் பங்களிப்புடன், நேற்று முதல் கற்றல் நடவடிக்கைகளில் மாணவர்களும் இணைந்துகொள்ள முடியும். இதன்படி, காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரைக்கும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கற்றல் நடவடிக்கைகளில் கலந்துகொள்ள முடியும். நாளை (21) முதல் முற்பகல் 4 மணி வரை, கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். இதன் பிரகாரம், உயர்தர கலைப் பிரிவுக்காத் தமிழ், சிங்களம், அரசியல் விஞ்ஞானம், புவியியல் ஆகிய விடயதானங்களும் வணிக பிரிவுக்காகப் பொருளாதார விஞ்ஞானம், வணிக கல்வி, கணக்கியல் ஆகிய பாடங்களும் கணித மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளுக்கான பாடங்களும் கற்பிக்கப்படும். அத்துடன், சாதாரண தர மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம், தமிழ், சிங்களம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படும். அனைத்துப் பாடங்களும், தமிழ் மற்றும் சிங்கள மொழிமூலமாக கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். மேலும், இலங்கைப் பரீட்சை திணைக்களத்தின் நிபுணத்துவத்துவம் வாய்ந்தவர்களின் கலந்துரையாடல்களும் இடம்பெறும். http://www.tamilmirror.lk/செய்திகள்/கரகதர-பதய-கலவ-அலவரச-ஆரமபம/175-248979