Jump to content

Leaderboard

  1. Rajesh

    Rajesh

    வரையறுக்கப்பட்ட அனுமதி


    • Points

      10

    • Posts

      3105


  2. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      23378


  3. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      76716


  4. புரட்சிகர தமிழ்தேசியன்

    புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      15883


Popular Content

Showing content with the highest reputation on 06/30/20 in all areas

  1. 1985 காலப்பகுதியில் தமிழகத்தில் 35 போராளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மூத்த தளபதி கேணல் சங்கரண்ணாவின் நெறிப்படுத்தலில் நீரடி நீச்சல் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தது. அந்த விசேட நீரடி நீச்சற்பிரிவில் லெப் கேணல் கங்கையமரன் அவர்களும் செயற்பட்டிருந்தார். இவ் அணியில் பயிற்சிபெற்ற சுலோஜன் என்பவர் காரைநகர் கடற்பரப்பில் தரித்துநின்ற கடற்கலத்தை தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டபோது,வீரச்சாவைத்தழுவிக் கொள்கின்றார்.இவரது பெயரிலேயே கடற்புலிகளின் “சுலோஜன் நீரடி நீச்சல் அணி” தளபதி கங்கையமரன் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டது. இவ்வணியே பாரிய கடல் வெற்றிகளைப் பெற்றுத்தந்ததென்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னாளில் இவ்வணி கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவாக பெயர் மாற்றப்பட்டு கடற்தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. கடற்புறா எனும் கடல்சார் நடவடிக்கை அணி கடற்புலிகளாக பெயர்மாற்றம் பெற்ற காலத்தில் அதன் தளபதியாகப் பொறுப்பேற்று பல வெற்றித் தாக்குதல்களுக்கு வித்திட்ட வீரத்தளபதி லெப் கேணல் கங்கையமரன் அவர்களை இதேநாள் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலின்போது இழந்திருந்தோம். நினைவுகளுடன்.. வீரவணக்கம். நன்றி Eelapriyan Balan போர்ப்படகு பரந்தாமன்
    2 points
  2. ஆமா எப்ப கேட்டாலும் மனதில் ஒரு அமைதி என் உயிரான இயேசு
    1 point
  3. சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி சிவகங்கை குளத்தருகே ச்ரி துர்கை சிரித்திருப்பாள் (சின்னஞ்சிறு)
    1 point
  4. செர்மனி நாட்டில் தமிழரின் மகிழுந்து. தமிழும் ஈழமும் குறிக்கும் விதத்தில் இந்த குறியீட்டை தனது மகிழுந்தில் வைத்துள்ளார்.
    1 point
  5. நன்றி நில்மினி. அக்குபஞ்சர் என்றவுடன் எனக்கு கொஞ்சம் பயம் இருந்தது. இருந்தாலும் வலியின் அவதியாலும் அதற்கு எடுக்கும் குளிசையின் பக்கவிளைவாலும் ஒரு முடிவோடு அக்குபஞ்சர் யாத்திரையை தொடங்கி விட்டேன். அவர் ஒரு சீன மருத்துவர். மூன்று வருடங்கள் ஆங்கில மருத்துவம் படித்ததாகவும் இரண்டு வருடங்கள் அக்குபஞ்சர் மருத்துவம் படித்ததாகவும் கூறினார். முதல் நாள் போகும் போது எனது வைத்தியசாலை வரலாற்று பைலை அவரிடம் சமர்ப்பித்தேன். எடுக்கும் மருந்துகளின் விபரங்களையும் காட்டினேன்.எல்லாவற்றையும் பார்த்து விட்டு அவர் தனது அறிக்கையை சொன்னார். அதாவது வலிகளை குறைக்க 100% முடியாது.ஆனால் குறைக்க முயற்சி செய்யலாம்.பத்து தடவைகள் செய்ய வேண்டும்.படிப்படியாக முன்னேற்றம் தெரியலாம் என்றார்.நானும் சரிப்பட்டவுடன் முதல் நாள் சிகிச்சை ஆரம்பமானது. முதலில் இடுப்பு முதுகு வளைவுகளை விரலால் தடவி அளவெடுப்பது போல் இருந்தது.பின்னர் தலை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் இடப்பக்கம் வலப்பக்கம் என இஞ்சிக்கணக்கில் அமத்தி பார்த்தார்.சில இடங்களில் உருவி விடுவது போல் உருவி விட்டு நாடி பிடித்து பார்த்தார். நாக்கின் அடிப்பக்கத்தை முக்கியமாக பலதடவைகள் பார்த்தார். நானும் ஏனென்று கேட்கவில்லை.முதுகு தசைகள் இறுக்கமாக இருப்பதாக கூறி ஒரு சில பயிற்சி முறைகளை செய்து காட்டினார். முழங்கால் தசைகளும் மிக இறுக்கமாக இருப்பதாக கூறினார். அதற்கும் ஒரு சில பயிற்சி முறைகளை செய்து காட்டினார்.அக்குபஞ்சரோடு நிற்காமல் காட்டித்தந்த பயிற்சி முறைகளையும் தினசரி செய்ய வேண்டுமென அறிவுறுத்தினார். பின்னர் வயிற்று பக்கமாக படுக்க விட்டு கழுத்திற்கு கீழிருந்து கால் வரைக்கும்14 ஊசிகள் ஏற்றினார். நினைத்த அளவிற்கு பெரிதாக வலி தெரியவில்லை.இருந்தாலும் சில இடங்களில் சுள்ளென இருந்தது.அரை மணி நேரத்தின் பின் ஊசிகள் அனைத்தையும் அகற்றி விட்டு இரத்தம் வருகின்றதான் என பார்த்தார். பின்னர் முதுகுப்பக்கமாக படுக்க சொல்லி விட்டு வயிற்றை சுற்றி பல ஊசிகள். முழங்காலிலும் முழங்காலுக்கு கீழும் பல ஊசிகள்.முழங்காலில் ஊசி குத்தும் போது இயமன் முன்னால் நின்ற உணர்வு.ஒவ்வொரு ஊசிக்கும் உச்சி பிளக்கும் வலி....😖 இப்ப எனக்கு எழுதினதிலை கை வலி மிச்சத்தை பேந்து எழுதுறன்....😎
    0 points
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.