Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Leaderboard

 1. உடையார்

  உடையார்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   12

  • Posts

   21,817


 2. அபராஜிதன்

  அபராஜிதன்

  கருத்துக்கள பார்வையாளர்கள்


  • Points

   12

  • Posts

   2,300


 3. tulpen

  tulpen

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Posts

   3,757


 4. புரட்சிகர தமிழ்தேசியன்

  புரட்சிகர தமிழ்தேசியன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Posts

   14,280


Popular Content

Showing content with the highest reputation on ஞாயிறு 19 ஜூலை 2020 in all areas

 1. இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் வரும் 5 ஆம் திகதி நடைபெற உள்ளது அது சம்பந்தமாக யாழ் கள உறவுகளிடம் ஒரு வாக்கெடுப்பு அனைவரும் பங்கெடுப்பீர்கள் என நம்புகிறேன்
  11 points
 2. இவர்களின் சில வீடியோகள் முன்பு பார்த்துளேன், இவர்கள் பொதுவாக RSS ஐ target பண்ணுபவர்கள், முன்பு RSS இல் இருந்து வெளியேறியவர்களை பேட்டி கண்டு வெளியிட்ட வீடியோ ஒன்று சிறப்பாக இருந்தது. திராவிட இயக்கங்களுடன் முக்கியமாக திமுக தொடர்பில் உள்ளார்கள் என்று தெரிகிறது. சில காலங்களுக்கு முன்பு வந்த இந்த விடியோவை வைத்து இப்போது பிரச்னை கிளப்புவதில் இருந்து இதன் பின்புலம் சந்தேகமாக உள்ளது. இதை சங்கிகள் எதிர்ப்பதை புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது, ஆனால் இந்த ஒரு விடீயோவை வைத்து சங்கிகளின் குயுக்திக்கு தமிழ் இயக்கங்களும் சேர்ந்து தாளம் போடுவது சகிக்க முடியாமல் உள்ளது. எங்கே என்று பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள், அதற்கு நாங்களும் சேர்ந்து துணை போகிறோம். தமிழ் இயக்கங்கள் பிஜேபி ஆதரவு இயக்கங்களாக வளர்ந்து வருவது எங்களுக்கு நல்லதல்ல.
  3 points
 3. 2 points
 4. கறுப்பர் கூட்டத்தின் வீடியோ ஒன்றில் தான் ஆர். எஸ். எஸ் இல் முன்பு இருந்தாதாக அவர் தெரிவித்திருந்ததை கேட்டேன். ஆர் எஸ் எஸ் இல் இருந்ததால் அவர்களின் புராணங்களில் உள்ள ஆபாசங்களை விளக்க ஆபாச புராணம் என்ற தொடரை நடத்துவதாக அவர் தெரிவித்தார். அதை விட அவர்களை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. எனது கருத்து யாராவது மூட நம்பிக்கைகளை பற்றியோ கடவுள் பற்றியோ விமர்சித்தால் கடவுள் நம்பிகையாளருக்கு வரும் தலைகால் தெரியாத கோபத்தை பற்றி தான். கடவுளே இந்த பிரபஞ்சத்தையும் மனிதர்களையும் படைத்து காத்து வருகிறான் என்று கூறும் இவர்கள் கடவுளை விமர்சித்தவனை கடவுள் பார்த்து கொள்வான் என்று விடுவது தானே கடவுள் நம்பிக்கையின் அடையாளம். கடவுள் எல்லாம் வல்லவர் என்று கூறும் இவர்கள் சாத்திரத்தையும், மூடநம்பிக்கள்ளையும் நம்புவது முரண்பாடு அல்லவா? ஒன்றில் கடவுளை நம்ப வேண்டும் அல்லது சோதிடத்தை நம்பவேண்டும். சோதிடத்தில் எல்லாம் தீர்மானிக்கபட்டுவிடுவது என்றால் கடவுள் என்பவர் எதற்காக? இதை கேட்டால் ஆன்மீகவாதிகளுக்கு தலைக்கு மேல் சன்னதம் ஆடும் அளவுக்கு கோபம் வருகிறது. ஆன்மீகம் மன அமைதி கொடுக்கும் என்று வேறு கூறுகிறார்கள். ஆனால் அதிக கோபபபடுவது இவர்கள் தான்.
  2 points
 5. கடவுளை ஒருவன் விமர்சித்தால் அவனை கடவுள் பார்ததுக் கொள்வார் தானே, என்று நினைக்க கடவுளை நம்புவதாக பம்மாத்து விடும் இவர்களால் முடிவதில்லை. ஏனென்றால் கடவுள் என்பது ஒரு கற்பனை கதாபாத்திரம் தான் என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் இவர்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது. இப்படி தலைகால் புரியாத அளவுக்கு, கேவலமான வார்ததைகளை உபயோகிக்கும் அளவுக்கு கோபம் வருவதில் இருந்தே இவர்களது ஆன்மீகம் என்பது பொய். கடவுளை தமது கட்சி தலைவர் போலவே இவர் கள் நினைக்கின்றனர். தனது கட்சி தலைவனை விமர்சிக்கும் போது கட்சித்தொண்டர்களுக்கு வரும் கோபமே இவர்களுக்கும் வருகிறது. உண்மையான ஆன்மீகவாதிகள் என்றால், கடவுள் என்பது மனிதருக்கு பொதுவானது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவரை விமர்சித்தால் அதை செய்பவனுக்கு தானே கெடுதல் வரும் என்று நினைத்து அமைதியாக இருப்பார்கள். அதை விடுத்து அதை சொன்னவன் மீது அதிக கோபம் கொண்டு இப்படி பாய்வதன் மூலம் கடவுள் மீது இவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதை உறுதியாக்குகின்றனர்.
  2 points
 6. எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி, புரட்சி ,சுவி கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாளை வறுமையில் வாடும் முதியோர் இல்லமொன்றை தெரிவு செய்து இன்றைய சாப்பாட்டுக்கு ஒழுங்கு பண்ணியிருந்தேன்.காலை 9 மணியளவில் இந்தப் படங்கள் அனுப்பியிருந்தனர்.படங்கள் அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.படங்களைப் பார்த்ததும் 5-10 நிமிடம் மனதுக்கு மிகவும் கஸ்டமாக இருந்தது. இந்த விபரங்கள் படங்களை இங்கு இணைப்பதற்கு காரணம் இதைப் பார்க்கும் யாராவது ஒருத்தராவது ஏதோ ஒரு தினத்தை அவர்களுடன் கொண்டாடலாம் என்பதே. நன்றி. http://letushelpnow.org/yogar_swami_elders_home
  2 points
 7. பிரெஞ்மொழி கொஞ்சம் அறிவோம்........!
  1 point
 8. கிராமத்து வீடு சாய்வு நாற்காலியில் சரிந்து உட்க்கார் ந்து கொண்டு இருந்தாள் ராசம்மா டீச்சர் , மாலை மங்குவதற்கு சூரியன் தன கதிர்களை மெல்ல இறக்கி கொண்டிருந்தான் . துணைக்கு இருந்த சிறுமியிடம் கோழிகள் கூடு அடைந்துவி ட டால் , கதவை மூடி விடாம்மா . இன்று மின்சாரம் தடைப்படடாலும் , உதவியாக இருக்கும் .நான் விளக்கு வைக்க போகிறேன் என்றாள். அரிக்கன் லாந்தர் விளக்கின் கண்ணடியை துடைத்து அளவாக எண்ணெய் விட்டு, தயார் படுத்தினாள். பின் மேசை விள க்கினையும் . கண்ணடியை துடைத்து மேசையின் ந டுப்பகுதியில் வைத்தாள். துணைக்கு இருக்கும் சிறுமி குமுதா ...அப்பாவின் காரோட்டி தியாகு வின் மகள் எடடாம் வகுப்பு படிக்கிறாள் வீட்டுப் பாடம் செய்ய உதவி கேட்டு படித்து இரவு துணையாக இருந்து காலையில் செல்வாள். இவள் வீடு வாயில் படலையில் நின்று கூப்பிடடால் .கேட்க்கும் தூரம் தான் . தியாகு மிகவும் விசுவாசமானவன் அவன் . மனைவியும் சமையல் முடித்து பிள்ளைகள் இருவரும் பாடசாலைக்கு சென்ற பின் ராசம்மா டீச்சர் வீட்டில் வந்து சமையல் பாத்திரம் தொட க்கம் , துணி துவைப்பது வரை செய்து கொடுப்பாள் . ராசம்மா டீச்சர் இளைப்பாறிய பின் . இரண்டு வருடங்களுக்கு முன் கணவன் இறந்து விட படடனத்தில் இருக்கும் மகன் தன்னிடம் வரும்படி எத்தனையோ முறை கேட்டுக் கொண்டாலும் ராசம்மா மறுத்து வி ட டாள் . வருடமொருமுறையாவது பிள்ளைகளையு ம் கூட்டி வந்து என்னைப் பார்த்துக் கொண்டு போனால் காணும் என்பாள் . கிராமத்து சூழ் நிலையிலே பிறந்து வளர்ந்து வாழ்க்கை படடவள். மகன் பிறந்த பின் சில வருடங்கள் படிப்பிக்க போகாமல் விட்டு அவன் வளர்த்தும் தன மாமியாரிடம் விட்டு கல்வி ஒரு கொடை அதை சிறார்களுக்கு கற்பிப்பது பெரும் புண்ணியம் எனும் கணவனின் விருப்புக்கேற்ப பாடசாலை அருகாமையில் இருந்ததால் சென்று படிப்பித்து வந்தாள் . எல்லாம் கனவு போலாகியாது அவளுக்கு அவளும் ஓய்வு பெற்று பல வருடங்களாகி விட்ட்து வயதும் ஆகி விட்ட்து . சில தடவை மகனின் வீட்டுக்கு சென்ற போதும அங்கு மனம் நிலை கொள்ள வில்லை . வாகன இரைச்சலும் காலையில் எழுந்து கணவன் மனைவி வேலைக்கு ஓடுவதும் , குழந்தைகளை ஆட்டொவில் பள்ளிக்கு அனுப்புவதும் ஒரு எந்திர த்தனமான வாழ்க்கை . தனியாக இருக்க மகனும் விரு ம்ப வில்லை .. அம்மாவின் விருப்பின் படியே இருக்கட்டும் என விட்டு விடடான் . காலம் தன் வழியே பயணித்துக் கொண்டு இருந்தது .சிறுமி குமுதாவும் உயர்கல்வி கற்று பல்கலைக்கு சென்றுவிடடாள் . ராசம்மா பல வாறு யோசிக்க தொடங்கினாள் . மீண்டும் தனக்கு உதவியாக சிறு குழந்தையுடன் கைவிடட தனித்து நின்ற தேவகியை வேலைக்கு அமர்த்தி பொருட்கள் களஞ்சிய படுத்தும் அறையை சகல வசதிகளுடன் ஒதுக்கி கொடுத்து வீட்டொடு வைத்துக் கொண்டாள் . மீண்டும் மகன் தன்னிடம் வரும் படி அவற்புறுத்தவே , காலையில் குயிலின் கூவ லோடு எழும் இன்ப மும் சுற்றிவர மாமரங்களும் தோடை பலா என பயன் தரும் மரங்களும் காலப்போக்கில் கவனிப்பாரற்று அழிந்து விடும் . காலையில் தரிசிக்கும் முருகன் கோவில் , செவ்வாய் வெள்ளி விரதநாட்களில் காக்கைக்கு உணவளித்து உண்ணும் மன நிறைவு இவற்றை அவள் இழந்து மகனுடன் செல்ல தயாரில்லை . என மறுத்து விடடாள். தற்போது அவளுக்கு சற்று எதிர்காலத்தின் முதுமையை நோக்கிய ஒரு பய உணர்வு ....அன்று வழக்கம் போல் எழுந்து காலை க் கடன் முடித்து உணவுண்டு முடித்தவள் , தேவகியை கடைத்தெருவுக்கு மீன் வகை வாங்கி வர அனுப்பினாள். பின் மணிச் சத்தம் கேட்டு வாயிற் கதவை நோக்கியவள் .தபாற்காரன் வந்திருந்தான். அவளது கணவனின் அக்காவின் கடைசி மகளுக்கு ..பெண் குழந்தை பிறந்த சேதி யோடு .கூடிய கடித மொன்றுடன் . மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள் . மதிய உணவு முடித்து ...சற்று ஓய்வெடுக்க எண்ணிய அவள் மேசை மீது கடிதமெழுதும் நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு மகனுக்கு ஒரு மடல் வரைந்தாள் . அன்புள்ள மாதவன் , ஜீவிதா மற்றும் பேரப்பிள்ளைகள் அறிவது ... முருகன் துணையால் நான் நலமே உள்ளேன் நீங்களும் அவ்வாறே இருக்க எல்லாம் வல்ல முருகன் துணை புரிவார் . . தேவகி வீட்டு வேளைகளில் ஒத்தா சையாக இருப்பதால் நிம்மதியாய் இருக்கிறேன் பெரிய மாமியின் மகள் கெளசல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக மாமி கடி தம் போட்டிருந்தார் . என் பேரப்பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்களா ? அங்கு வெயில் எப்படி இங்கு மரங்கள் சூழ இருப்பதால் நல்ல குளிர்ச்சியாக இருக்கிறது . இம்முறை பள்ளி விடுமுறைக்கு என்னைப்பார்க்க வருவீர்களா ? வெள்ளைச்சியும்,கொம்பாளும் ஒரே நேரத்தில் கன்று போட்டிருக் கு . இரண்டு நாகு கன் றுகளும் வீட்டு முற்றத்தில்துள்ளித் திரிந்து ...விளையாடுவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம் வீட்டில் தாராளமாக பால் கிடைக்கிறது . என் பேரப்பிள்ளைகளைத் தான் நினைப்பேன் . வீட்டுத்தேவைக்கு எடுத்து போக மீதியை வறிய பள்ளிப்பிள்ளைகள் மூவர் வந்து மாலை வேளைகளில் எடுத்து செல்வார்கள். அயலில் எல்லோரிடமும் பால் மாடுகள் இருக்கின்றன . அதனால் ஒருவருக்கும் கொடுக்க முடியவில்லை . வறிய பிள்ளைகள் பசியாறட்டும் போகும் வழிக்கு புண்ணியமாகும் என எண்ணிக் கொள்வேன். அடுத்து மகனே உனக்கு நான் உங்களுடன் வந்து தங்கவில்லை என குறையாக இருக்கலாம் யோசித்து பார் பரபரப்பான இந்த காலத்தில் குழந்தைகளின் படிப்பு உன் வேலை வீடு செலவு என்று உனக்கே நேரம் இல்லாத போது என்னை கவனிக்க கஷ்டமாய் இருக்கும் . நான் நடமாடித்திரியும் வரை என சுய தேவைகளை நிறைவேற்றக் கூடிய நிலையில் இருக்கும் வரை நீ பிறந்து வாழ்ந்த இந்த வீட்டிலிருக்கவே விரும்புகிறேன் . நான் உயிருடன் இருக்கும் வரை இதை விற்கவோ ..வேறு தேவைக்கோ எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம். என் சுயம் இழந்து ... மறதி கண்டு ...என்னை இன்னொருவர் துணையோடு தான் வாழ வேண்டிய நிலைமை வந்தால் ...எனது இளைப்பாற்றுச் சம்பள பணம் சேமிப்பில் இருக்கிறது . அது உனதும் எனதுமான இணைந்த வைப்புக் கணக்கில் இருக்கிறது அதை எடுத்து உன் தேவைகளை செய் . என்னை ஒரு கண்ணியமாக நடத்தும் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடு ...இதை என் கடைசி ஆசையாக நிறை வேற்றுவாய் என்பதில் நம்பிக்கை உண்டு . ஒன்று சொல்ல மறந்து விடடேன் . கார் கார தியாகுவின் பெண்ணுக்கு நகரத்தில் ஒரு வேலை கிடைக்க உதவி செய்வாயா? நன்றாக படித்து இரண்டு டிகிரி ..வாங்கி உள்ளாள் .அதுகள் உன்னை குழந்தையாக வீட்டுக்கு கொண்டு வந்த காலத்தில் இருந்து கைக்குள்ள இருந்து சேவை செய்ததுகள் அந்த பெண் தலை நிமிர்ந்தால் அதுகளின் சீவியம் மேம் படும் ...மீண்டும் குடும்பத்தையும் உன்னையும் பாது காக்க .முருக கடவுளை வேண்டி நிற்கிறேன் .இப்படிக்கு .. பாசமுள்ள அம்மா ...கண்கள் பனித்தன வாரங்கள் மாதங்களாகி பள்ளிக்கு கூட விடுமுறையும் வந்தது . ஒரு ஞாயிறு காலை வாயிலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்ட்து ...மகன் மருமகள் பேர ப் பிள்ளைகளோடு வந்திருந்தான் .ராசம்மாவுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி .. பேத்தி நன்றாக வளர்ந்து ரடடை ஜ டை போட்டு இருந்தாள். பார்க்க மிகவும் ஆசையாக இருந்தது . பேரன் தேவகி பையனோடு கிளி பார்க்க மாமரத் தடிக்கு சென்று விடடான் . .அவர்கள் குளித்து முடிந்ததும் காலை ஆகாரத்தை நிறைவு செய்தார்கள் . ராசம்மா மதிய உணவுக்கு என்ன செய்வது என்று ..எண்ணிக் கொண்டு இருக்கையில் .". மாமி எங்களுக்கு கடையில் வாங்கும் கோழி சலித்து விட்ட்து . ஊர் கோழி சமைப்போமா என மருமகள் ஜீவிதா ..கேட்டுக் கொண்டே குசினிக்குள் நுழைத்தாள். அவளும் கூட மாட உதவி செய்து சமையலை ஒப்பேற்றறினார்கள். பல கதைகளும் கதைத்த பின் ..... மத்திய உணவு சுடச் சுட கோழிக் கறியும் தோடடத்து பிஞ்சு வெள்ளைக்கத்தரிக் கறியும் மற்றும் பல உணவுகளுடன் நிறைந்தது . நாட்கள் ஓடி வாரங்களானது ராசம்மா மிகவும் யோசனையுடன் காணப்படடாள் . ..மறு நாள் பயணம் . இரவு உணவு முடித்துக் கொண்டு ...படுக்கைக்கு சென்றார்கள். எல்லோரும் ஆழ்ந்த நித்திரை அதிகாலை மூன்று மணி யளவில் அம்மாவின் அறையில் ...விளக்கு எரிந்து கொண்டிருந்ததை பார்த்த மகன் .. உள் சென்று பார்த்த போது ஒரு வகை விக்கல் ..எடுத்துக் கொண்டிருந்தார் ராசம்மா ...அருகில் சென்று கையை பற்றியவர் ....கை துவண்டு போவதைக் கண்டு ...அதிர்ச்சி அடைந்தார் . தேவகி ஓடிச்சென்று ....கார் கார தியாகுவை அழைத்து வந்து ..வைத்திய சாலை சென்ற போது அவர் ஏற்கனவே மாரடைப்பில் இறந்து விடடார் . தன் கடைசிக் கால ஆசைகளை விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்ட திருப்தியில் ராசம்மா ஆழ்ந்த நித்திரையில் .... .முதியவர்களை அவர்கள் விருப்ப படி ...ஓய்வாக அமைதியான சூழலில் வாழ விடுங்கள் . பணத்தைக் கட்டி முதியோர் இல்லங்களில் தள்ளி விட்டு கடமை முடித்தேன் என வாழாதீ ர்கள் .மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் ஆடு மாடு தோட்ட்ம் வயல் வெளி என ...வாழ்ந்த வாழ்க்கை ஒரு நாலு சுவர் கொண்ட கூட்டுக்குள் வாழ்வது வீட்டுச் சிறை போல தனித்து விடப்பட்டது போல உணர்வார்கள். தனிமையம் ஏக்கமும் அவ்ர்களைக் கொல்லாமல் கொள்ளும் . யார் வருவார்கள் தன்னைப் பார்க்க என்று மனம் எங்கும். முடிந்த வரை முதியோர் இல்லம் தவிர்த்து எஞ்சிய காலத்தை வாழ வையுங்கள். தாய் /தந்தை மனசு தங்கம் நான் அறிந்த சொந்தம் நன்றி சொல்ல போதாதையா ஏழேழு ஜென்மம்
  1 point
 9. பனி படர்ந்த ஊதல் காற்று ஒரு காது வழியே ஊசியாய்த் துளைத்து மற்றைய காது வழியே வெளியேறி அவனை ஒரு வழிப் பண்ணிக்கொண்டிருந்தது. பனித்துகள்கள் மெல்லிய மலர் இதழ்களாய் காற்றோடு இழைந்து பூமியெங்கும் வெண்மையான நிலவிரிப்பை படர விட்டிருந்தது. கிராமப்புறமாதலால் பனிக்காலத்தில் கூட பசுமை மாறாத பச்சை மரங்களும் இலை உதிர்ந்திருந்த சாலையோரத்து மரங்களும் பனி படர்ந்து வெள்ளை வெளேரென நத்தார்ப் பண்டிகை மடலில் காட்சியளிப்பது போன்ற தோற்றத்தை அவனுக்கு நினைவூட்டியது. இன்று போலத்தான் அன்றொரு நாள் கொட்டிய பனியும் நடந்த சம்பவமும் அவனுக்கு ஒரே சம்பவம் மீண்டும் அதே போல நடப்பது போன்றதொரு மாயையைத் தோற்றுவிக்கிறது. நினைவுகள் அசை போட்டன. கெலி அவனோடு வேலை பார்க்கும் வயோதிபத்தை நெருங்கும் பெண் தோழியொருவர். அவளின் வழமையான நக்கல் நளினங்கள் தனித்தன்மை வாய்ந்ததால் அவளுடனான சம்பாசனைகள் அவனுக்கு பிடிக்கும். பனி கொட்டியதைப்பற்றி சலிப்பும் நக்கலுமாகக் கலந்து அவள் கூறியது அவனுக்கு ஞாபகம் வந்ததில் அவனையறியாமல் சிரிப்பும் வந்தது. அப்பெண்ணுக்கு குளிர்காலம் என்றாலே ஆகாது. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு சலிப்புக் கலந்த புதுக்கதையோடு தான் வேலைக்கு வருவாள். அன்றும் அப்படித்தான் ஒரு மாலை வேளையில் வேலை முடிவதற்கு இன்னும் சில மணிகளே இருந்த போது, வானிலை அறிக்கையையும் பொய்யாக்கியபடி, பனிக்கட்டிகள் சின்னஞ்சிறு கூழாங்கற்களாகக் கொட்டத்தொடங்கியது. அவனுக்கு சாளரத்தினூடே பனிபொழிவதைப் பார்க்கும் வசதி இருந்ததில், பார்க்கும் போதே மனமெல்லாம் சிலீரென்ற குளிர் இதமாகப் பரவத்தொடங்கியது. “ என்ன ஒரு அழகு!” என்றவனை பின்னே வந்து நின்றகெலி பெயருக்கேற்றாப் போல் ஒரு விதமான , அதீத ஆர்வம் கலந்த பதட்டத்தோடு அவனையும் தள்ளிக்கொண்டு சாளரத்தின் வழியே வெளியில் பார்த்தவள் புறுபுறுக்கத்தொடங்கினாள். “ இதையெல்லாம் நத்தார் பண்டிகை வாழ்த்து மடல்களில் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த பனி மழைஅன்றாட வாழ்க்கையை நாசப்படுத்தி விடும்!” தாம் நினைப்பதை அப்படியப்படியே முகத்துக்கு நேரே சொல்லிவிடும் பழக்கம் இக்கலாச்சாரத்தினது பாதிப்பு போலும் என்று அவன் நினைத்துக்கொண்டான். வறுத்தெடுக்கும் யாழ்ப்பாணத்து வெயிலில் காய்ந்து போய், கமம் செய்த காலத்தில் மழைக்காக ஏங்கிய வானம் பார்த்த பூமி அவன் மனதில் ஊசலாடியது. வெயிலில் காய்ந்ததால் தான் எனக்கு குளிர்காலம் பொற்காலமாய் இருக்கிறதோ என எண்ணிக்கொண்டான். இப்பனி இன்னும் அதிகமாகக் கொட்டக் கொட்ட கெலிக்கு பதட்டமும் அதிகமானது. “ இன்றைக்கு வீட்டுக்கு போனமாதிரித்தான், காரும் எடுக்கேலாமல்ப் போகப்போகிறது !” தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். இவனையும் தன்னோடு கூட்டுச்சேர்த்துக் கொண்டு வேளைக்கே வீடு போய்ச்சேர்வதே அவள் நோக்கமாயிருந்தது. அவளது வீடும் அவனது வீடும் எதிர் எதிர்த்திசையில் இருந்தாலும் ஒரு மரியாதை அல்லது மனிதாபிமானம் கலந்த உணர்வில் அவனையும் தன்னுடன் வருமாறு வற்புறுத்தினாள். இவளோடு போனால் அநியாயத்துக்கு வழியெங்கும் புறுபுறுத்துக் கொண்டே தான் வருவாள் என நினைத்துக்கொண்டவன் தான் இன்னும் பத்து நிமிட அவசர மின் அஞ்சல் வேலைகளை முடித்துக் கொண்டு புறப்படுவதாய் சாக்குப்போக்கு சொல்லி அவளை அனுப்பி வைத்தான். அப்படி அவளுடன் போகாமல் விட்டது எவ்வளவு தவறென்று புரிவதற்கு அவனுக்கு அதிக நேரமாகவில்லை. உறைபனியை விட கடுங்குளிருடன் கலந்து வீசிய பனிக்காற்று ஒரு செவி வழியே புகுந்து மறுகாது வழியே வெளியேறியது. எதிர்பாரா விதமாய் மாறிய காலநிலையை சமாளிக்கக்கூடிய உடைகளும் இன்றி, மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவையுடன் எத்தனை மணிக்கு வீடு போய்ச்சேர்வதென்ற கவலை அவனை பலமாக ஆட்டத்தொடங்கியது. பஸ் நிலையம் யாருமன்றி அனாதரவாய் பனிமூட்டத்தில் மூழ்கிக்கிடந்தது. வழமையான பொதுப் போக்குவரத்து சேவைகளனைத்தும் ஸ்தம்பித்துப் போயிருந்ததை, வெறிச்சோடிப்போயிருந்த வீதி பறை சாற்றிக்கொண்டிருந்தது. நடந்து போவதானால் ஆறேழு மைல்களாவது நடக்க வேண்டியிருக்கும். ஒரு நாள்ப் பொழுது வேலையில் கழிந்ததில் இயற்கையாக ஏற்பட்ட அசதியும் காலநிலை தந்த குளிரின் தாக்கமும் சேர்ந்து நடப்பதென்பது நடவாத காரியமாய்த் தோன்றியது அவனுக்கு. அப்போது தான் திடீரெனத் தோன்றிய அவ்வாலிபன் அவன் கவனத்தை ஈர்த்தான். அவனுக்குக் கண்பார்வை இல்லாததை அவன் வைத்திருந்த வெண் பிரம்பு பறை சாற்றினாலும், வாலிபத்துக்குரிய கம்பீரம் குறையாத உடல்வாகும், பொன்னிற முடியும், ஆங்கிலேயர்களுக்கே உரிய சிவந்த தோலும் அவனை ஒரு அழகனாகவே காட்டியது. இவன் பஸ் தரிப்பில் நிற்பதை உணர்வால் அறிந்து, “ மன்னிக்க வேண்டும், வழமையான ஆறு மணி 127 பஸ் போய் விட்டதா? “ கேட்டு விட்டு பதிலுக்காக இவன் பக்கம் முகத்தை திருப்பி வைத்துக்கொண்டான். இவனும் அந்த பஸ் சீரற்ற காலனிலை காரணமாய் தாங்கள் நின்ற பஸ் தரிப்பைத் தாண்டிப்போயிருக்கச் சந்தர்ப்பம் இல்லை என்பதைக் கூற அவன் முகத்தில் புன்முறுவல். “ என் பெயர் அலன், உங்கள் பெயர்??” எனக் கேள்வி தொக்கியது. சந்திரசேகரன் என்ற பெயரை இவனுக்கு எப்படிச் சொன்னால் புரியும் என ஒரு நிமிடம் தடுமாறி, சந்திரனும் போய் சேகரனும் போய் தான் ‘ஸான்’ ஆனதைப் பகிர்ந்து கொண்டான். லண்டன் மாநகரம் வந்து ஒரு சில வருடங்களே ஆகியிருந்ததில், இவன் மொழி வாடையில் தெரிந்த வித்தியாசமும் அவன் பெயரில் இருந்த அந்நியத்தன்மையும் அவ்வாலிபனுக்கு இவன் இவ்வூரோ ஆங்கிலமோ தாயகமோ தாய் மொழியோ அல்ல என்பதை நன்றாகவே புரிய வைத்திருக்க வேண்டும். பேசிய ஒரு சில நிமிடங்களிலேயே போக வேண்டிய பஸ் அவர்கள் நின்ற தரிப்பிடத்துக்கு வர அவன் அவ்வாலிபனுக்கும் அவ்விபரத்தை சொல்லி, அவனை முதலில் ஏறச்சொல்லி தான் பின்னே ஏறியவன், அலன் பயணச்சீட்டை எடுத்த பின் தனது பயணச்சீட்டை எடுப்பதற்காக கையை தன் சட்டைப்பைக்குள் விட்டவன், அதிர்ந்து போனான். பணப்பையைக் காணவில்லை. தலை விறைக்க நின்றவனுக்கு அப்போது தான் தன்னுடைய பணப்பையை அலுவலகத்தில் மேசையில் எடுத்து வைத்த நினைவு வர, இப்போது என்ன செய்வது என்ற யோசனை பலமாகத் தாக்கியது. இறங்கி நடப்பதானால் குளிரில் விறைத்தபடி பல மைல்கள் நடக்க வேண்டியிருக்கும். சாரதியும் பொறுமை இழந்தவராய் அவன் முகத்தைப் பார்க்க அவன் வெட்கத்திலும் அவமானத்திலும் கூனிக்குறுகிப் போனான். பொட்டும் பிறையுமாக பஸ்ஸிலிருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண் அவள் கணவனைப் போல பக்கத்திலிருந்தவரை இறுகப் பற்றிக்கொண்டாள். ஏதோ ஒரு கொலைக் குற்றவாளியைப் பார்த்த பயம் அவள் முகத்தில் ஒரு வினாடி தோன்றி மறைய, இவனுக்கு அவமானத்தில் உடல் இன்னும் கூனிக்குறுகியது. அவர்கள் இருவரும் தம் பார்வையை வெளியே பார்ப்பதைப் போல பாவனை செய்த அதே நொடியில் அவனுக்கு முன்னே பஸ்சில் ஏறிய அலன், அச்சம்பவத்தை உணர்ந்து, சாரதியை நோக்கித் திரும்பி, “அவருக்கு தேவையானதை தயவு செய்து இதிலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்,” என்றவாறே தன் பணப்பையை சாரதியின் பக்கம் நீட்டினான். அவன் இருந்த சூழ்நிலையில் அவனால் அந்த உதவியை மறுக்கமுடியாமல் தத்தளிக்க, அலன் மறுபடியும் இவன் காதில் மிக மென்மையாக, ” உனக்கு என் உதவி சங்கடமாகப்பட்டால், நீயும் உதவி தேவைப்படும் இன்னொருவருக்கு இதே போல செய்து, என் பங்கைச் செலுத்தி விடு!” என்றவாறே அழகான புன்னகையுடன் நகர்ந்தான். நெகிழ்ந்து போன அந்தக்கணங்கள் நேற்று நடந்தது போல் இருந்தாலும் ஒவ்வொரு பனிக்காலத்திலும், பஸ் தரிப்பிற்கு வரும்போதெல்லாம் இந்நினைவு அவன் கேட்காமலே வந்து போகும். கண் தெரியாத அலனும், நிறங்களும் இனங்களும் பார்த்தறியாத அவன் மனத்தில் தோன்றும் மனித நேயமும் இவனை இன்றைக்கும் நெகிழ வைத்துக்கொண்டே தான் இருக்கின்றன. அவன் வசிக்கும் வீட்டிற்கு பஸ் தரிப்பிலிருந்து பத்து நிமிடங்களாவது நடக்க வேண்டியிருக்கும். உறைபனியில் வழுக்கி விழாமல் மெதுமெதுவாக அடியெடுத்து வைத்தவனுக்கு பசி வயிற்றைப் பிறாண்டத் தொடங்கியது. வீட்டில் எப்படியாவது நல்லதொரு உணவு காத்திருக்கும் என்ற உணர்வும் இதுக்கெல்லாம் ஏதோ தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற நன்றியும் அவன் மனதில் தோன்றி மறைந்தது. சிரித்த முகம் மாறாமல் உணவு பரிமாறும் அவன் சகோதரி தற்செயலாகவே அவனுக்குப் பரிச்சயமானவள். தன் உடன் பிறந்த சகோதரியாகவே அவளை மதிப்பவனுக்கு அவன் இரத்தம் கூட அவள் உடம்பில் ஓடுவதும் ஒரு காரணமாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டான். ஒரு மாலை வேளையில் வேலை விட்டுத்திரும்பிய போது இருண்ட வீதி விபத்தொன்றில் அடிபட்டு இருந்தவளை யாரெனத்தெரியாமலே அவசர மருத்துவ சேவைக்கு அறிவித்து, அவர்களுடனே பயனம் செய்து அவளுக்கு உடனடியாகத் தேவைப்பட்ட குருதி வகை அதிஷ்டவசமாக அவனுடையதாகவும் இருக்க மறுப்பேதுமன்றி அவளுக்குதவிய தருணத்தில் இருந்து இற்றை வரை அவர்கள் சகோதரங்களாகிப் போயினர். இதோ வீடு கிட்டியாயிற்று, இரண்டே அடிதான் மிகுதியாய் இருக்கவும், வீட்டின் வெளிக்கதவைத் திறந்தபடி தன்னோடு அதே வீட்டில் வசிக்கும் நண்பன் ஒருவன் வீட்டிற்கு வெளியே வரவும் சரியாகவிருந்தது. சத்தமின்றி உள்ளே வந்தவனுக்கு தன் பெயர் எதேச்சையாகக் காதில் விழவும் என்னவாக இருக்கும் என இயல்பாக வந்த ஆர்வத்தில் காதைக் கூராக்கினான். மற்றவர்களின் கதைகளை ஒட்டுக்கேட்கும் பழக்கம் அவனிடமில்லையாயினும், தன்னைப்பற்றிக் கதைக்க அவன் சகோதரிக்கு எதுவும் இருக்கப்போவதில்லை, அவள் அப்படிக் கதைக்கக் கூடியவளுமல்ல என்ற இயல்பான எண்ணம் அவனுக்கு இருந்தது. யாரோ வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருக்க வேண்டும். அக்கா தான் அவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கும் இவன் வீடு வந்து சேர்ந்து விட்டது தெரிந்திருக்கவில்லை என்பது அவர்கள் கதையில் தன் பெயர் அடிபடுவதிலிருந்து தெரிந்தது. மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்ப வழியின்றி தவித்தவனுக்கு, தான் வீட்டுக்கு வந்ததை அறிவிப்பதற்காக அறைக்கு வெளியே போய் அவர்களுக்கு அறிவிப்பதா அல்லது அவர்கள் கதைப்பதைப் பொருட்படுத்தாமல் இருப்பதா என்பதில் சிக்கல் ஏற்பட்டது. மிகவும் சிரமத்தின் மத்தியில் சங்கடத்துடன் தன் அறைக்கு வெளியே வந்தவனுக்கு கால்கள் இயங்க மறுத்ததுக்கு அவர்களின் சம்பாசனையில் தன் பெயர் மட்டுமல்ல தன் குலம் கோத்திரம் எல்லாமும் அடிபடுவது அவனை ஸ்தம்பிக்க வைத்தது. அதுவும் அவன் சகோதரியாய், வலம் வந்தவள், “ என்னவோ மாலா நீ நினைக்குமாப் போல இல்லை. என்னதான் நல்ல பெடியன் எண்டாலும் கலியாணம் எண்டு வரேக்க நாங்கள் கவனமாய்த் தான் இருக்க வேணும். நாளைக்கு எனக்கு இன்னொரு தங்கச்சியும் எல்லோ இருக்கிறாள். நான் மூத்தவளுக்கு ஸானைக் கட்டிக் கொடுத்தால் பிறகு நாங்கள் ஊருக்குள்ள இன்னொரு மாப்பிள்ளை எடுக்கேலுமே?” அவன் சகோதரியாக வரிந்தெடுத்துக் கொண்டவள், தன் உதிரம் தந்து உயிர் காத்த இன்னொரு உயிர், அவள் தானா இப்படி பேசுவது என அதிர்ந்து போனவனுக்கு இன்னும் தொடர்ந்த அசிங்கங்கள் மனிதர்கள் எவ்வாறெல்லாம் தம்மைப் பிரித்துக் கொள்கிறார்கள், இன வாரியாக, மத வாரியாக, கலாச்சார வாரியாக, ஊர் வாரியாக என்பது ஒரு சாட்டை அடியுடன் பலவந்தமாக மண்டைக்குள் புகுத்தப்பட்டது. அக்குளிரிலும் வியர்த்துக் கொட்ட, மெதுவாக சத்தமின்றி வெளிக்கதவைத் திறந்து, பனிக்காற்றை ஆழ உள்ளெடுத்து வெளியேற்றியவனுக்கு பழையபடி பஸ் தரிப்பும் பார்வை இழந்த அலனும், அவனுடைய மனித நேயமும் மீண்டும் ஒருமுறை வந்து போனது. அவனது அறையும், அவன் விட்டுப் போன பொருட்களையும் பார்த்து அவன் ‘அக்கா’ அவனைக் காணாமல் போனவர்களின் பட்டியலில் இணைத்துக் கொண்டு, “ நாகரீகமற்றதுகள், நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டுக்க வைச்சது என்ர பிழை தான்!” எனக்கூறிக்கொண்டாள்.
  1 point
 10. இன்றும் சம்பந்தன் ஐயா அவர்களை விலைபேசி வாங்க முடியாத ஒரு சூழ்நிலையின் காரணமாகத் தான் கூட்டமைப்பினை ஒவ்வொரு துண்டுகளாக இன்று சிங்கள தேசம் உடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனைப் பலப்படுத்துவது எமது பாரிய கடமையாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிங்கள மக்களுக்கும் தமிழர்களுக்கும் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. சிங்கள ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியைத் தீர்மானிப்பதற்காகவும், அதனைத் தொடர்ந்து தக்க வைப்பதற்காகவுமே தமிழர்களுக்கு எதிரான இனப்பிரச்சினை ஆரம்பிக்கப்பட்டது. சிங்கள இனவாதிகளால் தமிழ் மக்களுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட இராணுவ அடக்கமுறைகளுக்கு எதிராக வடக்கு கிழக்கிலே உள்ள ஒட்டுமொத்தத் தமிழர்களும் செயலாற்றினார்கள். இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தின் பின்புலத்தில் இருந்து வந்திருக்கின்ற எமது தமிழ் இனம் வெறுமனே அபிவிருத்திக்கும், சலுகைகளுக்காவும் விலைபோய் விட முடியாது. தெற்கிலே விலைவாசி குறைத்தால் வாக்களிக்கப்படும். ஆனால் வடக்கு கிழக்கிலே அறிவிக்கப்படுகின்ற எந்த சலுகைகளுக்குப் பின்னாலும் தமிழர்கள் செல்ல மாட்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை போராளிகள் தாங்கி நிற்பதற்கான காரணம் ஒன்றுதான். இன்றும் சம்பந்தன் ஐயா அவர்களை விலைபேசி வாங்க முடியாத ஒரு சூழ்நிலையின் காரணமாகத் தான் கூட்டமைப்பினை ஒவ்வொரு துண்டுகளாக இன்று சிங்கள தேசம் உடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனைப் பலப்படுத்துவது எமது பாரிய கடமையாகும். கிழக்கிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைபேசி வாங்க முடியாமலும், அவர்களைத் தேசியவாதத்தில் இருந்து பிரிக்க முடியாமல் இருந்த நிலையில் கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக உருவாக்கப்பட்ட ஒரே ஒரு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரமே பேரம் பேசலினூடாகப் பணம் கொடுத்து வாங்கப்பட்டார். அந்தப் பலவீனமான மனிதர் தற்போது தன்னை ஒரு பலமானவராகக் காட்டிக் கொண்டு மீண்டும் இந்தத் தேர்தல் மேடைக்கு வந்திருக்கின்றார். நாங்கள் ஒன்றை மட்டும் சொல்லுகின்றோம் அபிவிருத்திதான் தேவை, வேலைவாய்ப்பு தான் தேவை என்றால் நேரடியாக சிங்களவர்களுக்கே வாக்களித்து விடுங்கள். ஆனால் ஒன்றை மட்டும் மறக்க வேண்டாம். காணி தந்து, வீடு தந்து அதில் என்ன செய்தாலும் அக்காணிக்கு உறுதி பெறப்படாத வரைக்கும் எப்போது வேண்டுமானலும் நீங்கள்வீதிக்கு வர நேரிடும். இது தான் உரிமை தொடர்பில் உள்ள விளக்கம். உரிமை தொடர்பிலான ஆரம்பக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படாமல் ஏற்படுகின்ற அபிவிருத்தியும் இவ்வாறு தான் நிலையில்லாமல் இருக்கும். முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டார்கள். தங்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்தார்கள் என்றெல்லாம் சொல்கின்றார்கள். ஆனால், ஹிஸ்புல்லா கட்டிய பல்கலைக் கழகத்திற்கு நடந்த நிலைமையை அனைவரும் சிந்தித்துப் பார்த்தால் உள்ள நிலைமை விளங்கும். ஒரே நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி நிற்கின்றது. எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் ஒவ்வொரு கல்லையும் பிடுங்கி எடுப்பதற்கு பேரினவாதம் கங்கனம் கட்டிக் கொண்டிருக்கின்றது. இந்த விடுதலைப் போராட்டத்திற்கு வடக்கு எந்தளவுக்கு அர்ப்பணிப்பினைச் செய்துள்ளதோ அதற்கு ஒருபோதும் சலைக்காத அளவில் கிழக்கும் இந்தப் போராட்டத்திற்கு அர்ப்பணிப்பினைச் செய்துள்ளது. வடக்கிலே ஏற்படுகின்ற அரசியற் தடுமாற்றங்கள் இன்னுமொரு தமிழருக்கான வாய்ப்பாகவே அமையும். ஆனால் கிழக்கில் ஏற்படுத்தப்படுகின்ற ஒரு சிறு அசைவு கூட தேவையற்ற விதத்திலே இன்னுமொரு இனத்தை வளர்த்தெடுக்கக் கூடிய விதத்திலேயே அமையும். அபிவிருத்தியை நாங்கள் எமது மாகாணசபை அலகின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் நாடாளுமன்றம் என்பது பேரம் பேசி எமது அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்கின்ற ஒரு இடம். அந்த விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்ற ஏனைய கட்சிகளின் வேட்பாளர்கள் செல்லுகின்றார்கள் தாங்கள் நாடாளுமன்ற உறுப்பிரான பின்னர் ஜனாதிபதி அமைச்சுப் பதவி தருவார் என்று. அவர்கள் சொல்வதைப் பார்த்தால் இலங்கையின் அமைச்சரவை கிட்தட்ட 200 மேற்பட்ட அமைச்சர்களைக் கொண்டதாகத் தான் அமைய வேண்டும். இங்கே வேறு கட்சிகளில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களோ அல்லது சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களோ குறைந்தது ஆளுக்கு 100 வாக்குகளைப் பெற்றுக் கொண்டாலும் இங்கே தமிழர்களின் ஒரு பிரதிநித்துவம் இழக்கப்படும். எனவே ஆரோக்கிமான ஒரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக பலமான ஒரு தமிழ்த் தேசியத்தைக் கொண்டு வரவேண்டிய தேவை நம் அனைவருக்கும் இருக்கின்றது. அந்தவகையில் தமிழ் மக்கள் ஒரே முடிவாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளித்து ஒரு மாபெரும் வெற்றியை நோக்கி நகர்த்த வேண்டும். தற்போதுள்ள ஜனாதிபதி தனிச் சிங்கள மக்களால் உருவாக்கப்பட்டவர் எனச் சொல்லப்படுகின்றார். நல்லாட்சியில் இருந்த ஜனாதிபதியை நாமும் சேர்த்து உருவாக்கியமையால் அவர் இரு பக்கமும் சார்ந்து செல்லக் கூடியவராக இருந்தார். ஆனால் தற்போது நிலைமை அவ்வாறு இருக்க மாட்டாது. நாங்கள் பலம் வாய்ந்ததாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை நாடாளுமன்றம் அனுப்பினால் எமக்கான தீர்வு வருமா வராது என்ற விடயத்தை சிங்கள அரசிடம் உரத்துக் கோரி, அவர்கள் அதற்கான முடிவினை சர்வதேசத்திடம் சொல்ல வைக்க முடியும். தீர்வு கிடைக்கும் என்றால் சிங்கள் தேசம் தமிழர்களுடன் சேர்ந்து வாழத் தயார் என்று சர்வதேசம் ஏற்றுக் கொள்ளும். இல்லை என்று அவர்கள் சர்வதேசத்திற்குச் சொல்லும் பட்சத்தில் நாங்கள் சர்வதேசத்துடன் இணைந்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார். https://www.tamilwin.com/politics/01/251402?ref=home-top-trending
  1 point
 11. சிங்களத்துக்கு விலை போகாதவர், உங்களை விலை கொடுத்து வாங்கி விட்டாரா? ஆயுதப்போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை என்றவர்கள், உங்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்றவர்கள். அவர்களிடம் போய், விலை போகாதவர்கள் என்று சான்றிதழ் நீங்கள் கொடுக்கிறீர்கள். நீங்களும் விலை போய்விட்டீர்களா? அல்லது வேறு வழியில்லாமல் தஞ்சம் அடைந்து விட்டீர்களா? என்று ஒரு சந்தேகமே எனக்கு, வேறொன்றும் இல்லை.
  1 point
 12. நாங்கள் எங்களுக்குள் நாங்களே உனக்கு பகுத்தறிவு எனக்குப் பகுத்தறிவுன்னு வெட்டிப் பெருமை பேசிக்கிட்டு.. புராணம்.. இட்டுக்கதை.. இதிகாசம் என்று பேச்சோடு புறக்கணித்து சென்று விட.. எமது இலக்கியங்களை.. புராணங்களை சிங்களவன் மட்டுமல்ல.. மேலை நாட்டினரும்.. வேலை மிணக்கட்டு அறிவியல் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். இராமர் பாலம் தொடர்பில் அமெரிக்க நாசா அக்கறை செய்திருக்கிறது. இப்ப சிங்களம் இராவணனின் புட்பக விமானம் தொடர்பில் ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வுக்கான நோக்கம் சிங்கள பெளத்த இனப்பரம்பலை உறுதி செய்வதும் பாதுகாப்பதும் என்றிருந்தாலும்.. ஆய்வுக்கு உட்படுவது.. நாம் வெறும் இதிகாசம்.. புராணம்.. என்று புறக்கணிக்கத் தூண்டியவை. இதே யாழில்.. ஒரு தசாப்தத்திற்கு முன் நிகழ்ந்த விவாதம் ஒன்றில்.. எமது விருப்பு வெறுப்பு அப்பால்.. இராமாயணம்.. குறிப்பாக கம்பராமாயண எடுகோள்கள்.. ஆய்வுக்குட்படுத்தப்படனும்.. குறிப்பாக அறிவியல் ஆய்வுக்கு உட்படனும் என்று எழுதி இருந்தோம். அதனையும் இங்கு சில தம்மை மேதாவிகள் என்று காட்டிக்கொள்ள விளைந்து நக்கல் அடித்தனர். இப்ப அவர்கள் இங்கு அதே பெயரில் இல்லை. எம்மவர்கள் எப்பவுமே எதையும் ஒரு மட்டத்திற்கு மேல் ஆய்வதில்லை. அதற்கான திறமையும் இல்லை. ஆனால் வெட்டிப் பெருமை. நாம் மறந்தவற்றை மிதித்தவற்றை புறக்கணித்தவற்றை மற்றவன் தனதாக்க எவ்வளவு கஸ்டப்படுறான்.. உழைக்கிறான் என்பதற்கு இது நல்ல உதாரணம்.
  1 point
 13. கறுப்பர் கூட்டம் எனும் களவாணி கூட்டத்திற்கு எச்சரிக்கை என்ற பதிவை யாழ்களத்தில் படிக்கும் வரை கறுப்பர் கூட்டம் என்று ஒன்று இருப்பது எனக்கு உண்மையிலேயே தெரியாது. கடவுள், சோதிடம் தவிர விதி என்று ஒன்றும் வைத்திருக்கிறார்கள். எல்லாம் விதிபடி தான் நடக்குமாம். முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருக்கிறார்கள். கொரோனா வேறு வந்து கடவுளின் பலவீனத்தை காட்டுகிறது. அதனால் தான் ஆன்மீகவாதிகளுக்கு கடுமையான கோபம் வருகிறது
  1 point
 14. கறுப்பர் கூட்டம் யாரென்று இந்தத் திரியைப் பார்க்கும் வரை தெரிந்திருக்கவில்லை. ஈழத்து சைவர்கள் இந்துத்துவா சங்கிகளுக்கு துணைபோவதென்றால் மறவன்புலவு சச்சியரோடு சேரலாம். அவர்தான் இப்ப ஈழத்தில் சங்கிகளின் முகவர்.
  1 point
 15. அனைவருக்கும் வணக்கம் நான் இத்தளத்திற்கு புதியவள் அல்ல. ஆனால் பத்துவருடத்திற்கு மேலாக நான் இங்கு வரவில்லை. யாருக்கும் என்னை நினைவிருக்கப் போவதில்லை. அதனால்தான் மீண்டும் ஒரு அறிமுகம் . தாய்மையின் கடமைகளும் பொறுப்புக்களும் ஏனோ இந்த எழுத்துலகில் இருந்து என்னை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டது. இப்போது மீண்டும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் ... எனது சில கவிதைகளை என் குரலில் பதிவேற்றி இருக்கிறேன். அதற்கான படங்களை தொகுத்து ஒரு video ஆக என் குழந்தைகள் வடிவமைத்து கொடுத்ததில் அத்தனை மகிழ்ச்சி. அதை கள உறவுகளுடன் பகிர்வதில் ஒரு ஆனந்தம். உங்கள் விமர்சனங்களிற்காக கவிதை பூங்காவிலும், கவிதை களத்திலும் நான் பதிவேற்றி உள்ளேன். அதை video ஆக என்னால் பதிவிட முடியவில்லை. அதனால் அந்த link ஐ பதிவேற்றியுள்ளேன்.உங்கள் கருத்துக்களிற்காக...நன்றி nige
  1 point
 16. மதம் என்ற போர்வையில் சமுதாய முன்னேற்றத்தை மழுங்கடிக்கும் மூட நம்பிக்கைகளைக் காவித் திரிய உள்ள சுதந்திரத்தை விட அதிலுள்ள நன்மை தீமைகளை அறிவியல் ஆதாரங்களுடன் மறிதலிக்கும் உரிமை பகுத்து அறியும் சிந்தனையுள்ள அனைவருக்கும் உண்டு.
  1 point
 17. சுட சுட பார்த்துக்கொண்டிருக்கின்றேன் குடித்து முடிந்தவுடன் sorry பார்த்து முடிந்தபின் பதிவிடுகின்றேன் பார்த்து முடிந்துவிட்டது, யாழ்கள குமாரசாமி நட்ட ஈடு வழுக்கு தொடருங்கள்
  1 point
 18. எந்த சீர்திருத்த கருத்துக்களை யார் தெரிவித்தாலும் எமது நம்பிக்கையை புண்படுத்துகிறது என்று பல்லவி பலமாக பாடப்படும். ஓலமிடப்படும். இந்திய வரலாற்றில் பின்வரும் விடயங்களையும் மீட்டல் செய்து பார்த்தால் எப்போதெல்லாம் இந்துகளின் மனம் புண்பட்டதாக ஓலமிடப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முடியும். உடன்கட்டை ஏறுதலை ஒழித்த போது இந்துக்களின் மனம் புண்பட்டதாக ஓலமிடப்பட்டது குழந்தைதிருமணம் தடை செய்யப்பட்டபோது இந்துக்களின் மனம் புண்பட்டதாக ஓலமிடப்பட்டது. இந்துக்களிடையே வேறு சாதியை சேர்ந்தோர் கலப்புதிருமணம் செய்தபோது இந்துக்களின் மனம் புண்பட்டதாக ஓலமிடப்பட்டது. பெண்கள்மறுமணம் ,விதவைமறுமணம் செய்தபோது இந்துக்களின் மணம் புண்பட்டதாம். பெண்கள் சமஉரிமை ,சொத்தில் பங்கு கேட்டபோதும் இந்துக்களின் மனம் புண்பட்டதாக ஓலம். தேவதாசி முறையை ஒழித்த போதும் இந்துக்களின் மனம் புண்பட்டது.. பிடிச்ச உணவை சாப்பிட்டாலும் இந்துக்களின் மனம் புண்படும்.. புண்படட்டுமே.... இந்த கட்டு கதையெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது.. எல்லா மூடநம்பிக்கையையும் அடிச்சு நொறுக்கு.. வாழ்க்கையில் முன்னேற்றம் பெருகும் .
  1 point
 19. மனிதனிடம் தண்ணீர் கேட்டு கெஞ்சிய அணில் குட்டி..
  1 point
 20. ஆகஸ்ட் 04 நள்ளிரவு 12 -00 இலங்கை நேரம்
  1 point
 21. யாழ் இணையத்தில் இணைக்கப்பட்ட இவரது மூன்று கட்டுரைகளும் 1- தேர்தல் களத்தில் பெண்கள், 2- ஆளுமையா? அனுதாபமா?, மற்றும் 3- நேர்பட உரைத்தல்.. இந்த மூன்று கட்டுரைகளும் இலங்கையில் இன்றைய அரசியலில் ஏற்கனவே இருக்கின்ற மற்றும் புதிதாக நுழைய இருக்கின்ற பெண்களின் நிலையை தெளிவுபடுத்துகிறது. இந்த மூன்று கட்டுரைகளும் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டிருந்தாலும் பெண் அரசியல்வாதிகளுக்கு சந்தர்ப்பங்களை வழங்க வேண்டிய காரணத்தை, அவசியத்தை தெளிவாக வலியுறுத்துகிறது. இலங்கை அரசியலில் பெண் அரசியல்வாதிகளின் விகிதசாரம், அவர்களுக்கு எத்தகைய சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகிறது, அவர்கள் எதிர்நோக்கும் தடைகள், பெண் வேட்பாளர்களை நோக்கிய ஆண் அரசியல்வாதிகளின் மனோபாவம் மற்றும் பெண் வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பொதுவெளியில் எவ்வாறு பார்க்கப்படுகிறது.. என்பதை தேர்தல்களத்தில் பெண்கள் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. இரண்டாவது கட்டுரையான ஆளுமையா? அனுதாபமா? .. இதில் பெண் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் சந்தர்ப்பங்கள் கூட பின்பு எவ்வாறு கட்சி நலன், ஆசனபங்கீடு மூலம் காணமல் போகிறது என்பதையும்..ஆசனப்பங்கீடு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது விளங்கப்படுத்துகிறது. ஆசன வாய்ப்பை பெறுவதற்காக எவ்வளவு தூரம் வளைந்து கொடுக்கவேண்டும் என்பதை கூறுவதால் விகிதசாரத்தில் அதிகளவில் உள்ள பெண் வாக்காளர்கள் தங்களது வாக்குசீட்டின் வலிமையை உணர்ந்து கொள்ள அறிவுறுத்துகிறது. நேர்பட உரைத்தலில், பெண் அரசியல்வாதிகளின் தன்மை, சுபாவம் எவ்வாறு வேறுபடுகிறது, இதனாலேயே இவர்களுக்கான சந்தர்ப்பங்களை இழக்கிறார்கள் என்றும்.. அதே நேரத்தில் எப்படி மற்றைய அரசியல்வாதிகளால் கைப்பொம்மையாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை கூறுகிறது. பெண்வேட்பாளர்கள் இதனை உணர்ந்து தமது ஒட்டுமொத்த பெண் சமூகத்தையும் பிரதிநிதிப்படுத்துவதன் அவசியத்தை கூறுகிறது.. இவரது மூன்று கட்டுரைகளும் பெண் அரசியல்வாதிகளின் தேவையை, அவர்கள் செய்யவேண்டியவற்றை எடுத்துக்கூறினாலும், இந்த கட்டுரையும் அதன் விஷயங்களும் முழுமையாக எல்லா மக்களிடமும் சென்றடைந்தால் மட்டுமே இவர் எதிர்பார்ப்பது நிறைவேறும். அதுமட்டுமல்ல தன்னம்பிக்கை, ஆளுமையைடைய பெண்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்கி அவர்கள் அரசியலில் நுழைந்தாலும் இலங்கையில் உள்ள சமூகங்களுக்கிடையில் ஊறியிருக்கும் சில மனநிலைகள், பழக்கவழக்கங்கள் மாற வேண்டும். அப்படி நடந்தால் மாற்றங்களும் நீண்ட தூரத்தில் இல்லை. கட்டுரைகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.
  1 point
 22. ஈழப்பிரியன் பாராட்டுக்கள், உங்கள் நல்ல மனதிற்கு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள். இணைப்பை கொடுத்ததால் நல்ல உள்ளம் கொண்ட பலர் உதவுவார்கள் http://letushelpnow.org/yogar_swami_elders_home
  1 point
 23. இரகசிய வாக்களிப்பு மாதிரி தெரியவில்லை. எனது தெரிவுகளை மற்றவர்கள் பார்ப்பார்கள் போலிருக்கே 6 வது கேள்விக்கு எனது பதில் சரியாகப் பத்து!
  1 point
 24. 1 point
 25. பதிவுக்கு நன்றி சுவி அண்ணா. தொடர்ந்து பதிவிடுங்கள்.
  1 point
 26. மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை எதை நான் கேட்பின்.. ஆஆஆ... எதை நான் கேட்பின் உனையே தருவாய் எதை நான் கேட்பின் உனையே தருவாய் மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை மலர்கள் கேட்டேன் மலர்கள் கேட்டேன் மலர்கள் கேட்டேன் மலர்கள் கேட்டேன் எதை நான் கேட்பின் உனையே தருவாய் மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை எதனில் தொலைந்தால்... எதனில் தொலைந்தால் நீயே வருவாய் மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தனை வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்த்தனை பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தனை வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்த்தனை எதனில் வீழ்ந்தால்... ஆஆஆ... எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய் மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை எதை நான் கேட்பின்.. ஆஆஆ... எதை நான் கேட்பின் உனையே தருவாய் உனையே தருவாய் மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
  1 point
 27. இந்தப் பகுதிக்கு நேரடியாகச் சென்ற போது.. இதனை தான் நினைத்தேன். எவ்வளவோ வளமான பகுதிகள் இருக்கு.. சேதமடைந்த வீடுகளை திருத்த முடியாமல்.. பகுதி திருத்தி வாழும் மக்கள்.. இப்படி இருக்க வெறும் உப்புச் சதுப்பு நிலத்தில் இதனை கட்ட வேண்டிய தேவை என்ன என்று அப்பவே தோன்றியது. கூட்டிச் சென்றவர்களிடமும் கேட்டேன். அவர்கள் சொன்னது.. ஒதுக்கினது 7 இலச்சம் என்றால்.. 4 இலச்சத்தில் வீடு என்ற ஒன்றை மாதிரிக்கட்டிட்டு.. போட்டோ எடுத்துப் போட்டிட்டு.. மிச்சத்தை ஆளாளுக்கு பொக்கட்டுக்குள் போட இதுதான் சரியான இடம். அப்ப தான் களவு காசுக்கு கணக்குக் காட்டிடலாமாம். இதுதான் குத்தியர் கூட்டமும்... உந்தக் கொலைகார சிங்கள இனப்படுகொலை இராணுவமும்.. கடற்படையும் திட்டங்களின் பின்னால் உள்ள சூட்சுமம். பாவம் அந்த ஏழை மக்கள். எல்லாரும் அவர்களை வைச்சுத்தான் பிழைக்கிறது. அவர்களுக்கோ ஒரு பிழைப்பும் இல்லை. பனங்கிழங்கு அவிச்சு விற்கிறார்கள்.
  1 point
 28. எதை எதையோ எல்லாம் கிழிச்செறிவம் எண்டிச்சினம். இப்ப பம்மினம்.
  1 point
 29. கந்தனும் வருவான் நன்றி தோழி வருகைக்கு, ஆமா இனிமையன பொழுது தொடங்குகின்றது மன அமைதியுடன்
  1 point
 30. முயற்சி செய்கிறேன். குழந்தைகளா எழுத்தா என்ற நிலை வரும்போது ஏனோ குழந்தைகளைத்தான் முதலில் வைக்க தோன்றுகிறது. வரவேற்புக்கு நன்றி
  1 point
 31. **** 2) சட்டம் ஆக்கப்பட்டுவிட்டதா ? எப்போது ? 3) அவரது கூற்றில் உண்மை உள்ளது. 4) சட்டம் ஆக்கப்படவில்லை என்பது எனது நிலைப்பாடு. தவறு இருப்பின் சுட்டிக் காட்டலாம், ஆதாரங்களோடு.
  1 point
 32. வணக்கம் வாங்கோ. மீண்டும் தொலைந்திடாமல் இணைந்திருங்கள்.
  1 point
 33. கூட்டாஞ்சோறு......ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீடுகளில் இருந்து ஒவ்வொரு சாமான்களை களவாக கொண்டுவந்து சமைத்து சாப்பிடுவோம்......!
  1 point
 34. கதை சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் தோழி
  1 point
 35. ஒரு அன்பர் ஒருவர் கேட்டார் இவை எல்லாம் போய் என்ன செய்யப்போகினம் என்று. அவரை நான் கேட்டாக வேண்டி வந்தது ' தோழரே சில கட்சிகளில் இருக்கும் ஆண்கள் போய் என்ன செய்தார்கள், இவ்வளளவு நாளும் இருந்து ஆண்கள் சாதித்ததை விட பெண்கள் கூடுதலாக சாதிக்கக் கூடும், ஒரு சந்தர்ப்பம் கூடக் கொடுக்காமல் கேள்விகளே கேட்பது நல்லதல்ல ' என்று. இப்படியாகத்தான் அரசியல் அவதானிகள் இருக்கிறார்கள் என்ன செய்வது ?
  1 point
 36. கல்கத்தாவை சேர்ந்த ஒரு குயவர் சிலையால் கிராமம் முழுவதையும் உருவாக்கியுள்ளார். அவற்றிற்கு மூச்சு விட வைக்க மட்டும் மறந்துவிட்டார்.
  1 point
 37. கொன்றை வேந்தன் பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் 91 அடிப்பாக்கல் உள்ளன கடவுள் வாழ்த்து கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே. நூல் உயிர் வருக்கம் 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று 3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று 4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர் 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் 7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் 8. ஏவா மக்கள் மூவா மருந்து 9. ஐயம் புகினும் செய்வன செய் 10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு 11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் 12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு 13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு ககர வருக்கம் 14. கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை 15. காவல் தானே பாவையர்க்கு அழகு 16. கிட்டாதாயின் வெட்டென மற 17. கீழோர் ஆயினும் தாழ உரை 18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை 19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல் 20. கெடுவது செய்யின் விடுவது கருமம் 21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை 22. கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி 23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி 24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு 25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை சகர வருக்கம் 26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை 27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு 28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு 29. சீரைத் தேடின் ஏரைத் தேடு 30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல் 31. சூதும் வாதும் வேதனை செய்யும் 32. செய்தவம் மறந்தால் கைத்தவம் ஆளும் 33. சேமம் புகினும் யாமத்து உறங்கு 34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண் 35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர் 36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் தகர வருக்கம் 37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை 38. தாயிற் சிறந்து ஒரு கோயிலும் இல்லை 39. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு 40. தீராக் கோபம் போராய் முடியும் 41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு 42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும் 43. தெய்வம் சீறின் கைதவம் மாளும் 44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும் 45. தையும் மாசியும் வையகத்து உறங்கு 46. தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது 47. தோழனோடும் ஏழைமை பேசேல் நகர வருக்கம் 48. நல் இணக்கம் அல்லது அல்லல் படுத்தும் 49. நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை 50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாவை 51. நீர் அகம் பொருந்திய ஊர் அகத்திரு 52. நுண்ணிய கருமமும் எண்ணித்துணி 53. நூன் முறை தெரிந்து சீலத்து ஒழுகு 54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை 55. நேரா நோன்பு சீர் ஆகாது 56. நைபவர் எனினும் நொய்ய உரையேல் 57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர் 58. நோன்பு என்பது கொன்று தின்னாமை பகர வருக்கம் 59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் 60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண் 61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும் 62. பீரம் பேணில் பாரம் தாங்கும் 63. புலையும் கொலையும் களவும் தவிர் 64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம் 65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும் 66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம் 67. பையச் சென்றால் வையம் தாங்கும் 68. பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர் 69. போனகம் என்பது தான் உழந்து உண்டல் மகர வருக்கம் 70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் 71. மாரி அல்லது காரியம் இல்லை 72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை 73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது 74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் 75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் 76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு 77. மேழிச் செல்வம் கோழை படாது 78. மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு 79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம் 80. மோனம் என்பது ஞான வரம்பு வகர வருக்கம் 81. வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண் 82. வானம் சுருங்கில் தானம் சுருங்கும் 83. விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம் 84. வீரன் கேண்மை கூர் அம்பாகும் 85. உரவோர் என்கை இரவாது இருத்தல் 86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு 87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை 88. வேந்தன் சீரின் ஆம் துணை இல்லை 89. வைகல் தோறும் தெய்வம் தொழு 90. ஒத்த இடத்து நித்திரை கொள் 91. ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம் கொன்றை வேந்தன் முற்றிற்று. https://m.dinamalar.com/temple_detail.php?id=18058
  1 point
 38. மலரே மௌனமா ... என்ன குரல் வாவ்.... நீங்களும் கேட்டுப் பாருங்கள்.
  1 point
 39. Salmon ஐ நீங்கள் விரும்புவதால், அதன் வாழ்க்கை வட்டத்தையும் அறியுங்கள், தனது இனவிருத்திக்கு தான் பிறந்த இடத்தை நோக்கி எத்தனையோ தடைகள் தாண்டி வருகிறது. இது எமது, புலம்பெயர்ந்தவர், மீண்டும் பிறந்த இடத்திற்கு வந்து தமது சந்ததிக்கு தமது பாரம்பரியத்தை கடத்தும் துடிக்கும் துடிப்பாகவே இருக்கிறது.
  1 point
 40. நானும் Oven இல் தான் வைப்பது. மெங்கொலியாவிற்கு அடிகடி போவதுட்டு வேலை விடயமாக, அப்போ Hotel இல் நிற்க்கும் போது சல்மன், உருளைகிழுங்குதான் சாப்பிடுவேன். உங்களின் செய்முறையை பார்த்தவுடன் அங்கு சாப்பிட்ட நினைவுதன் உடனே வந்திச்சு. அங்கு மரக்கறி சாப்படோ கோழியோ கிடைப்பது அரிது. மாடு ஆடு தான் எல்லோரும். அவர்களுக்கு மீன் சாப்பிட பிடிக்காது / தெரியாது எப்படி சாப்படுவது என. கடலே இல்லாத நாடு, அத்துடன் பலருக்கு நீந்தவே தெரியாது. ஆனா நல்லவர்கள்
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.