Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Leaderboard

  1. nochchi

    nochchi

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      3,933


  2. கிருபன்

    கிருபன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      26,736


  3. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      21,980


  4. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      60,960


Popular Content

Showing content with the highest reputation on சனி 08 ஆகஸ்ட் 2020 in Posts

  1. யாழ் களத்தில் பல உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னரையும் செல்வராஜா கஜேந்திரனையும் இன்று நேற்றல்ல கடந்த பல வருடங்களாகவே ஒன்றுக்கும் இயலாதவர்கள் கட்டுக்காசு எடுக்கவும் லாயக்கில்லாதவர்கள் டக்ளஸ் ஒரு கூட்டத்தில் நேரடியாகவே யாரையோ பார்த்துக் அந்தக் குதிரைகயேந்திரா எனக்கூறியதுபோல விமர்சனம் செய்கிறார்கள். அவர்களது அரசியல் பயணம் மிக நீளமானது விட்டுக்கொடுப்பெளகள் எதுவுமற்றது செல்வராஜா கஜேந்திரன் தான் பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கத் தகுதியில்லை என உணர்ந்திருப்பாராக இருந்தால் சுமந்திரனுடன் இணைந்து ஒரு பிரதேச சபை அங்கத்தவர் பதவியுடன் கன்னைத் திருப்திப்படுத்தியிருப்பார். இத்தனைக்கும் அவர் காலாகாலமாக ஒரு கட்சியின் அங்கத்தவராகவும் இல்லை சுமந்திரனது புலிநீக்க அரசியிலில் முதல் பலியானது இவர்தான் இங்கு இருந்து எழுதும் பல யாழ் கள உறுப்பினர்களுக்கு யாள் களம் அறிமுகமானதுக்கு முன்னமேயே கஜேந்திரன் அரசியலில் இருக்கிறார். பல விபத்துகள் மூலமான கொலை முயற்சிகளிலும் தப்பியிருக்க்கிறார். சரி தகுதியில்லாதவர் இருக்கலாம் ஏனையோர் எல்லாம் கார்வாட் பல்கலைக்கழகத்தில் அரசியல் முதுமானி படித்திருக்கிறார்களா? ஏன் மாவைய காலம் காலமாக தமிழர் விடுதலைக்கான அரசியல் பயணத்தில் இணைந்திருப்பவர் இன்று மாவையரது த்மிழரசுக் கட்சியின் பதவிக்கே வேட்டு வருவதற்கான சூழல் வந்துவிட்டதே ஆனால் தனி ஒரு மனிதனாக பொன்னர் கஜேந்திரனுடன் 24/7 எனப் பயணம் செய்து அரசியலில் நிற்கும் அதுவும் தேர்தலில் அதிகமான ஓரளவு ஏனையவர்களுக்கு ஈடான வாக்குகளைப் பெற்ற செல்வராஜா கஜேந்திரன் பாராளுமன்றம் போகக்கூடாது அங்கஜன், விஜயகலா, டக்ளஸ் சிறீதரன் போன்றோர் போகலாம் அதுதானே? 40000 சவப்பெட்டி ரெடியாக இருக்கு எனக்கூறிவிட்டு தொடர்ந்தும் தனது மண்ணில்தானே உலாவுகிறார் எம்மைப்போல் துரையப்பாவைக் கூட்டமாகக் கலைத்துக் கலைத்துச் சுட்டதாக சி ஐ டி தேடுகுது எனச்சொல்லி வெளிநாட்டுக்கு ஓடிவரவில்லையே அல்லது புலிகள் காலத்தில் பதவிபெற்று பின்பு லண்டனுக்குக் குடும்பத்துடன் ஒட்டிவந்துவிட்டு பின்பு அண்மையில் மகிந்தவினதும் கொத்தாவினதும் காலில் வீழ்ந்து கிடக்கிறாரே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் (பெயர் நினைவுவரவில்லை) அவரைப்போல் இருக்கவில்லை என எதிர்பார்கிறீர்களா? செல்வராஜா கஜேந்திரன் ஆரம்பகாலத்தில் அரசியலில் வளர்சி அடையாமல் விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன் இருக்கிறார்கள் எனும் துணிவில் பேசியிருக்கலாம் இப்போ புலிகள் இல்லாதொழிந்து பதினொரு வருடம் ஆகிவிட்டது பல அச்சுறுத்தகளுக்கு மத்தியில் ஒரு கட்சியுடன் அதன் கொள்கையுடன் ஒன்றித்துப் பயணம் செய்கிறார் சிறியர்போல் சுமந்திரனே அடுத்த அன்ரன் பாலசிங்கம் என காலில்விழும் சரணாகதி அரசியல் செய்யவில்லை நானும் போயிருந்தேன் தமிழசுகட்சியின் மார்டின் வீதி அலுவலகத்துக்கு, தலைமை வர்ச்சொல்லியிருக்கு அது வந்தனாங்கள் என அங்கினைக்க இருக்கு கதிரைகளைப் பிடித்து ஒட்டாமலும் ஒட்டியும் இருப்பார்கள் கண்களி ஒரு பதட்டம் யாரையும் அழைத்துப்பேச மாட்டார்கள் இறுதியில் சுமந்திரன் கமகட்டுக்குள்ள ஒரு சிறிய பைலுடன் வெளியால வருவார் ஒரு சிலரது பெயர்களை சொல்லி உங்களைத்தான் இந்தவிடையங்களுக்கு நியமித்திருக்கு மிச்ச ஆக்கள் விருப்பம் எண்டல் போகலாம் மற்றப்படி கையெளுத்துபோடக் கூப்பிடுவினம் நிண்டு கையெளுத்துப் போடுட்டு போங்கோ எனக் கூறிவிட்டு கரில ஏறிப்போய்விடுவார் இப்ப எண்டால் சின்ன மாற்றம் அதிரடிப்படை புடசூழ காருல ஏறிப்போய்விடுவார். இவர்தான் உங்கட தலைவர் அப்படித்தானே குதிரைக்கஜேந்திரன் சிறுகச்சிறுக கட்சி வளர்த்து ஆதரவு வளர்த்து ஒரு மோட்டசிக்கிளில் ஊரெல்லாம் திருந்து தமிழ் தேசியம் பேசினால் பிடிக்காது அதுதானே. கொத்தாவை பிள்ளையான் கருணா டக்ளஸ் அங்கயன் ஆகியோர் கும்பிடுகிறதைவிட இன்னும் அதிகமாகக் கும்பிட்டு காலும் கழுவிட்டால் அண்ணருக்கு ஒரு தேசியப்பட்டியல் பதவி பார்சல் கூடவே அதிரடிப்படை காவலுக்கும் ஆர்டர் எனக்கூடி வாழலாம் இப்போ புலிகளது காசை அடித்தவர்கள் அடிக்காதவர்கள் அடைக்கலம் கொடுத்தவன் வசதியான மாவீரர் குடும்பம் அது இது என எல்லாத் துரோகங்களையும் தமிழர்க்கு எதிராக 2009 ல் செய்யாது களத்தில நிக்கிறான் ஒருவன் அவனை வரவேற்க வேண்டாம் நக்கல் நையாண்டி செய்யாதீர்கள்.
    4 points
  2. நல்ல கேள்வி கேட்டீர்கள். வெறும் பஜனை கச்சேரி நடத்தி கொண்டிருப்பார்கள் ஆனால் தங்கள் குடும்ப அபிவிருத்திகளை அக்கறையுடன் செய்து கொள்வார்கள். தமிழ் மக்களுக்கு ஒரு பயனும் கிடையாது.
    3 points
  3. தமிழர்களின் தோல்விக்கும், தமிழ்த் தேசியத்தின் தோல்விக்கும் காரணங்களை உள்ளே தேடாமல், ஒரு பொதுக் கொள்கையில் ஒற்றுமையாக தேர்தலில் நிற்காமல், எல்லாவற்றுக்கும் வெளியார்தான் காரணம் என்று சொல்லுவதை எப்போது நிறுத்தி வரலாற்றுத் தவறுகளை உணர்கின்றோமா அப்போதுதான் ஒரு படி அரசியலில் முன்னேறலாம். ஆனால் அது தமிழர்களால் முடியாதது. எதிர்காலத்தில் ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்படும்போது வெளியாரால்தான் எல்லாப் பாதகங்களும் நடக்கின்றன என்று சொல்லிக்கொண்டே இருப்போம்.
    3 points
  4. உலகெங்கும் நடந்துவரும் இனப்படுகொலைகளில் மறைகரங்களாக இருப்பது மேலாதிக்க நாடுகளே. பிரச்சினைகளைத் தமக்குச் சாதகமான நிலைவரை இழுத்துச் சென்று தமது இலக்கை அடைவதே குறிக்கோள் . இதற்க்குச் சிறந்த எடுத்தக்காட்டாக முன்னாள் யூகோசிலாவியாவும் அதன் உடைவுமாகும். அதற்காக இலங்கைச் சிங்களம் ஒன்றும் தெரியாமல் மற்றவர் சொல்கேட்டுச் செய்யவில்லை. தமது நிகழ்ச்சி நிரலான தனிச்சிங்கள தேசமாக்குதல் என்ற இலக்கை அந்தந்தக் கால உலக ஓட்டம் மற்றும் நியாயங்களுக்கப்பால் எரியும் வீட்டிலே புடுங்குவதுபோல் நகர்ந்து தனது நலனை அடைந்துவருகிறது.
    3 points
  5. இது ஏதோ வழக்கமானது என்று கடந்து போவதைவிட கொஞ்சம் கவனித்து பாருங்கள், வித்தியாசமான மனிதர், வித்தியாசமான பேட்டி .....!
    3 points
  6. ஓட்டுப் போட்ட உரிமையில் கேட்டால் என்ன தப்போ..! (05.08.2020) தேர்தல் திருவிழா முடிந்து தேசம் அமைதியாகிறது உங்கள் கட்சி “தேர்களை” ஊர் ஊராய் கொண்டு சென்று வெண்றும், தோற்றும் விழா முடிவாயிற்று. ஒன்றாக நிற்க்காமைல் ஒவ்வொன்றாய் நின்றாலும் வெண்றவர்கள் நீங்கள் நாங்கள்… வேறு வேறு தமிழர் இல்லை தனிப்பட்ட குரோதங்கள் தலை தூக்கி ஆடாமல்-புல் பனிகாய பகலவனின் கதிர் போலே நீங்கள்-நெல் மணியாக அனைவருக்கும் நிதம் சோறு படைப் பீர். உள்ளக் குமுறலினால் உடைபட்டுப் போனாலும் மக்களை.. அள்ளக் குறையாத அன்போடு பாருங்கள். தெள்ளத் தெளிவாக-எம் திருக்கரத்தில் மை பூசி வெல்லத் தந்த “வாக்கை” வீணடிது போடாதீர். வடகிழக்கு பிரதேசம் வாழ்ந்தவர்கள் தமிழரென அடையாளம் அனைவருக்கும் ஆதி தொட்டு தெரிந்திருக்கும். பாராளுமண்றமதில் பகை முடிச்சுப் போடாமல் தாராள மனம் கொண்டு அனைவரும்.. தமிழ் வளர குரல்கொடுப்பீர். போராலும்,பொருளாதாரத்தாலும் பொலிவிழந்த மக்களுக்கு பொதுச்சேவைக் கடவுள்களாய் புதுமை செய்வீர் நம்புகின்றோம். அன்புடன் -பசுவூர்க்கோபி-
    2 points
  7. கேரள மாநிலம் நிலச்சரிவை சுட்டி காட்டி வெளிநாடுகளில் வானிலையை துல்லியமாக கணிக்கும் கருவிகள் போல் ஏன் இத்தனை ஆண்டுகாலமாக எத்தனையோ இயற்கை சீற்றத்திற்க்கு பிறகும் தயாரிப்பதற்கோ வாங்குவதற்கோ முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என அண்ணன் கல்யாணசுந்தரம் மேலே பதிய பட்ட காணொளியில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திருக்கிறார்... ராமர் கோயில் கட்டுவதற்கும் தமிழர்களுடைய வரலாறை எப்படி ஆட்டைய போடவேண்டும் என்பதற்கும் தான் இந்த ஆரிய திராவிட மண்டைகளுக்குள் இருக்கும் களிமண் வேலை செய்யும்... மக்களை பற்றி சிந்தித்தால்தானே... --ட்ரோஜான் போரின் போது ட்ராய் நாட்டின் தடுப்பு சுவரை தரைமட்டமாவக்குவதற்கு எனக்கு பத்தாயிரம் வீரர்களை பலிகொடுத்தால் போதும் என கொடூரன் அகெமெம்னன் என்ற அரசன் சர்வசாதாரணமாக கூறுவான்... அதை கேட்டு கவலை கொண்ட வேறொரு கிரேக்க மன்னன் ட்ரோஜான் குதிரை திட்டத்தை தீட்டுவார்... அகமெம்னன் போன்ற அரக்கர்கள் தான் நாட்டில் அரசியலயல்வாதிகளாக மக்களுக்கு வாய்க்கப்பெற்றிருக்கின்றனர்...
    2 points
  8. கூட்டமைப்பின் போக்கு எப்போதுமே பிழையாகத்தான் இருக்கின்றது. தனிப்பட்ட ரீதியில் சம்பந்தர் வெல்லவே கூடாது (அதாவது அம்பாறை போல திருமலையும் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமல் இந்தத் தேர்தலில் வரவேண்டும் என்றுதான் விரும்பியிருந்தேன்). அவர்கள் இனப்படுகொலை நடந்தது என்பதை முன்னிறுத்தாமல் தமிழ் மக்களுக்கு தீர்வாக சமஷ்டியை முன்வைப்பது முரண்பாடானது. கட்சிகளாகப் பிரியாமல் ஒரு பொது உடன்பாட்டில் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணையவேண்டும். இதற்காககத்தான் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதை உடைத்து, சிதைத்து செய்யும் தேசிய அரசியல் வெற்றிபெறாது. தொடர்ந்தும் ஒன்றிரண்டு ஆசனங்களைப் பெற்று உதிரிகளாகத்தான் வந்துகொண்டிருப்பார்கள். இது சிங்களம் தனது நிகழ்ச்சிநிரலை எதுவித எதிர்ப்புக்களுமின்றி முன்னெடுக்க தொடர்ந்தும் உதவும்.
    2 points
  9. விக்கியர் தனிய தீர்வு என்டு இல்லாமல் அபிவிருத்தியையும் முன்னிறுத்தியிருந்தால் கூட்டமைப்பு உட்பட எல்லாரும் கானாமல் போயிருப்பினம்.
    2 points
  10. அதை விட தமிழ் மக்களை விற்பவர்கள் பற்றி ஒரு வரியையும் நீங்கள் எழுத கானவில்லையே ஏன்? இதே பாராளுமன்றத்தில் கெகலிய றம்புக்கல கூறிய இனவாத கருத்துக்கு கஜேந்திரன் கூறிய கருத்து பிழையாக உங்களுக்கு தெரிகிறதோ??
    2 points
  11. உங்கள் மொழிப்பிரயோகத்தைக் கொஞ்சம் அவதானத்துடன் கையாழுங்கள். தமிழ் என்பது உங்களுக்கு பொருளற்றதாக இருக்கலாம். ஆனால் அதற்காக ஆயிரம் ஆயிரம் போராளிகள் தமதி இன்னுயிர்களை ஈந்திருக்கிறார்கள். அந்த ஈகத்தை கொச்சைப்படுத்த யாருக்கும் உரிமையில்லை அங்கஜன் வடமராட்சியை விற்காமலிருந்தாலே புண்ணியம். மறதிக்கு மருந்தேதும் உண்டோ (மக்களின் மறதிக்கு மருந்து)
    2 points
  12. சிங்களவனுடன் சேர்ந்தவாழலாம் என்று சொல்பவர்கள் தமது மேற்குலக குடியுரிமையைத் துறந்து இலங்கைக் குடியுரிமையைப் பெற்று அவர்போனவர் நல்லா இருக்கிறார் இவர்போனவர் ஒரு பிரச்சினையும் இல்லமை இருக்கிறார் என்று சொல்லாமல் செய்து காட்டினால் மற்றவர்களுக்கும் நம்பிக்கை வரும்தானே? சாவுகளை விசாக்காளகவும் குடியுரிமைகளாகவும் சூடியவாறு தமிழினத்தின் இனத்தின் இருப்பு சிங்கள இனவாதத்தால் சிதறடிக்கப்படும் சூழலில் தமிழ்த் தேசியத்தைப் பரிகசிப்பதும் அதற்காகத்தம்மால் முடிந்தளவு செயற்படுவோரை நையாண்டி செய்ய என்றும் தமிழர்களே இருக்கிறார்கள் என்பதும் துயரம்தான்.
    2 points
  13. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாத அம்பாறையில் இருந்து ஒருவரையும் தெரிவி செய்யவில்லை என்று பார்த்தால், தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் தான். த.தே.ம.மு தன்னை இன்னும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றால் கிழக்கில் இருந்து ஒருவரை தெரிவு செய்து இருந்திருக்க வேண்டும்.
    2 points
  14. பிணையில் வெளியில் வருகின்ற சந்தர்ப்பம் இருந்தும் தேர்தலுக்காக சிறைக்குள் இருந்து அனுதாப வாக்குகளை"யும்" பெற்றுக்கொண்டார் பிள்ளையான். பிள்ளையானின் வெற்றி முஸ்லீம்களின் மீதான வெறுப்பும் சேர்ந்ததுதான். பிள்ளையான் ஓரளவு செய்யதிறமுள்ள தமிழ் பற்றுள்ள ஒரு தளபதிதான். திட்டங்களை வகுக்கும் தலைவர் அல்ல. தேர்தலுக்காகவே அவர் பிணை கோராமல் சிறைக்குள் இருந்தார். இனி இலங்கை மண்டேலா என்றுகொண்டு கொஞ்சப் பேர் கிளம்புவார்கள். இனி பிணை கோரி வெளியில் வருவார். என்னதான் இருந்தாலும் பிள்ளையான் தன்னை நம்பிய மக்களுக்கு ஏதாவது செய்வார். வடக்கின் டக்ளஸ் போல. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், (குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை ) குறிப்பிட்ட காலத்தின் பின்னும் வழக்கு நீடிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் பிணை கோரி வெளியில் செல்லும் பாத்தியதை உடையவர்.
    2 points
  15. ஈழத்தமிழர்களாகிய நாம் தொடர்ந்தும் கிந்தியா குறித்துத் தவறாகவே கணிப்பிடுகின்றோம். தமிழர்கள் குறித்து உண்மையான பார்வையும் நேர்மையான அரசியல் நோக்குமிருந்தால் கிந்தியாவுக்குக் கோத்தாவை அழைத்து விருந்துகொடுத்துத் தமது நலனைமட்டும் பேசியதோடு நிற்காது குறைந்த பட்சம் மாகாணசபைகளின் அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தமாறு கூறியிருக்கலாம். அதற்கான தார்மீகக் கடப்பாடு அவர்களுக்கு உண்டு. ஏனென்றால் தமிழர் தரப்புக்கான தீர்வுதொடரபாகக் கையொப்பம் இட்டிருப்பது கிந்தியாவின் பிரதமாராகும். ஆனால் எப்போதாவது இது குறித்துக் கடந்த பதினொரு ஆண்டுகளில் கிந்தியா பேசியிருக்கிறதா?
    2 points
  16. நில்மினியவர்களே இணைப்புக்கு நன்றி. உண்மையிலே தமிழர்கள் பிரிந்துநிற்கக் கூடாது என்ற தொலைநோக்கின் விளைவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். ஆனால் 2009இன் பின்னான காலத்தில் அவர்கள் ஆற்றிய பணிகளை இருவிதமாக வகுத்தால் 98வீதமான செயற்பாடுகள் சிங்களத்தை சிறையெடுப்பதிலும் தமிழரது தன்னாட்சி க் கோட்பாட்டை நீர்த்துப்போகச் செய்து சிங்களத்தையும் அதனது ஆட்சியதிகாரத்தைக் காப்பதிலும் வெளிநாட்டுச் சந்திப்புகளிற்கூட தமிழரது இனவழிப்பையும் நிராகரித்து தமிழரை அரசியல் அநாதைகளாக்கவதிலுமே செலவிட்டதன் வாயிலாகத் தமிழர்கள் வேறுதெரிவுகள் நோக்கி நகரமுற்பட்டுள்ளனர். கட்டுரையாசியர் குறிப்பிட்டதுபோல் இது ஒரு அவலமான நிலைதான். ஆனால் மீண்டும் மீண்டும் கூட்டமைப்பை நம்பி மக்கள் ஏமாறத் தயாரில்லை என்பதைத் தமது வாக்குகளாற் காட்டியுள்ளார்கள். கடந்த பதினொரு ஆண்டுகளில் ஒரு வகையிற் கசப்பானதாகவும் மறுவகையிற் மாற்றத்தக்கானதுமாக நோக்க வேண்டியுள்ளது. அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இனியாவது தமிழரது அபிலாசைகளை ஏற்று வட-கிழக்கிலே வெற்றிபெற்ற தரப்புகளோடு புரிந்துணர்வோடு உரையாடி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மையப்படுத்திய அரசியற் செயற்பாடுகளை முன்னெடுக்க முனையவேண்டும். அதைவிடுத்து ராயபக்ச ஆட்சியாளருக்கு மூன்றில்இரண்டு பெரும்பான்மைக்குத் தேவைப்படும் 6இருக்கைகளுக்காகப் பத்தாக வருகிறோம் என்று போய்த் தமிழினத்தை அடகுவைக்கக் கூடாது. அப்படியொருவேளை நிகழ்ந்தால் ஐ.தே.கவுக்கு நடந்தததே அடுத்த தேர்தலில் த.தே. கூட்டமைப்புக்கும் ஏற்படும்.
    2 points
  17. நாம் நாமாகவில்லை எமது கைகள் மட்டும் தான் முதலில் கட்டப்பட்டது இப்போ எமது காலும் கட்டப்பட்டுவிட்டது இனி எம்மால் எழுந்து நடக்க முடியாது எழுதமுடியாது பேசமுடியாது நாம் இனி மேல் நாமாகவே இல்லை எம் விடுதலையும் வெகு துரமாகிவிட்டது நாம் இப்போ எம் அடையாளத்தை தொலைத்த ஓர் அடிமை மனிதர்.
    1 point
  18. கஜேந்திரன் பாராளுமன்றத்திற்கு சமூகம் அளிக்காமல் வெளிநாடுகளில் சில வருடங்கள் இருந்து அவர் பாராளுமன்ற உறுப்புரிமை போகக்கூடிய நிலைமையும் இருந்தது. அவர் வெளிநாடுகளில் என்ன செய்தார் என்று தெரியாது. முதன்முதல் யாழ் மோகன் அண்ணாவையும், நெடுக்ஸையும், இன்னும் சிலரையும் சந்தித்த இலண்டன் பொங்கு தமிழ் நிகழ்வில் கஜேந்திரனும் உரையாற்றியிருந்தார். பிரித்தானியாவில் இன்று நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பேரெழுச்சியுடன் பங்கேற்றனர். இந்நிகழ்வு பிரித்தானியாவின் வேல் பகுதியில் உள்ள றிச்சர்ட்சன் இவன்ஸ் மைதானத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3:40 மணிக்கு தொடங்கியது. நிகழ்வின் பொதுச்சுடரினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஏற்றினார். தொடர்ந்து, அகவணக்கம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அரங்க நிகழ்வுகள் தொடங்கின. பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர்கள் ஐம்பதுக்கும் அதிகமானோர் மஞ்சள், சிவப்பு வர்ண உடையணிந்து மேடையில் பொங்கு தமிழ் எழுச்சிப் பாடல்களைப் பாடினர். https://tamilnation.org/diaspora/ponguthamizh/080712london.htm
    1 point
  19. அண்மையில் பார்த்த காணொளியொன்றில் தலைவரின் உத்தரவின் பேரில் நேர்வேயில் மாவீரர் தினத்தில் கலந்து கொள்ள கஜேந்திரன் அனுப்பப்பட்டதாகவும் பின்னர் அங்கேயே நிற்கும்படியும் சொன்னதனால் அங்கேயே நின்றார் என்று கஜேந்திரகுமார் கூறியிருந்தார்.
    1 point
  20. அதைவிட நீங்கள் இதில் என்னவென்று எங்கள் எல்லோருக்கும் ஏற்கனவே விளங்கிவிட்டது!! இதில் எதோ சுமந்திரன்தான் விக்கி ஐயாவை கூட்டிவந்ததாக வேறு கதையளக்கிறீர்கள் பாருங்கள் அங்கே தான் நீங்கள் மனாவா மொவன்னாவா என்று தெளிவாக தெரிகிறது!!
    1 point
  21. என்ன காரணத்திற்காக வெறுக்கிறது??? காரணம் நியாயமானதாக இருந்தால் மாறலாம்... நியாயமனதாக இல்லையெனில் மாறவேண்டியது உலகமே...
    1 point
  22. இருக்கலாம் மீரா, ஆனால் தேசியப் பட்டியல் மூலம் பிரதினிதிகளை தெரிவு செய்யும் போது எந்த பகுதியில் இருந்து வாக்குகள் அதிகம் பெற்றது என்பதை பொதுவாக கருத்தில் கொள்வதில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னனி கிழக்கிலும் தன் செல்வாக்கை உறுதியாக வளர்க்க வேண்டும் எனில் அங்கிருந்து ஒருவரை தெரிந்தெடுத்து அனுப்பியிருப்பின் அவர்களுக்குத் தான் அனுகூலமாக இருந்திருக்கும். கருணா போன்றவர்களால் பிரதேசவாதம் ஊக்குவிக்கப்படும் சூழலில் தமிழ் தேசியத்தின் நலனுக்காக கிழக்கிலும் இவர்கள் பலம் பெறுதல் வேண்டும். இல்லையெனில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக சிங்கள தேசியக் கட்சிகளில் இருந்து பிரதினிதிகளை அனுப்ப மக்கள் முயல்வர். இது மீண்டும் 1956 இல் தான் கொண்டு வந்து விடும் நிரந்தரமாக.
    1 point
  23. தேர்தலில் தோற்ற குதிரை கஜேந்திரன் பின்கதவால் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் போகின்றார்! 11 வருடங்களுக்குப் பின்னர் ராஜதந்திரப் பாஸ்போர்ட் எடுத்து, கொரோனா வைரஸ் சிக்கலையும் தாண்டி மேற்கு நாடுகளுக்கும், கனடா, அவுஸ்திரேலியாவுக்கும் பயணிக்கவுள்ளார். கடந்தமுறை பாராளுமன்றம் செல்லாமல் அவுஸ்திரேலியாவில் (?) அரசியல் பயிற்சிப்பட்டறைகளில் பல மாதங்கள் இருந்தவர் என்று நினைக்கின்றேன். இம்முறை எந்த நாட்டில் தங்கப் போகின்றார் என்று பார்ப்போம்! அவரேதான். வன்னியிலும் கிழக்கிலும் மக்கள் முன்னணியை வலுவாக்க யாழில் தோற்ற குதிரை கஜேந்திரனால்தான் முடியும் என்று முழங்காவில் கிளிநொச்சிக்குள் இருப்பதே அறியாத கஜேந்திரகுமாரின் தேசியப்பட்டியல் தெரிவு! கஜேந்திரகுமார் முடிவை எடுத்திருப்பாரா அல்லது முன்னணிக்கு ஸ்பொன்ஸர் பண்ணிய புலம்பெயர் அமைப்புக்களின் முடிவா என்று தெரியவில்லை!
    1 point
  24. மீள வாக்குகளை எண்ணுவதற்கான வழிகள் இன்னமும் இருக்கின்றன. தாமதிக்காமல் செயற்பட்டால் பிழை செய்தவர்கள் வெளிப்படுவார்கள். இதை சசிகலாதான் செய்ய வேண்டும். அவர்தான் முறைப்பாட்டாளர்.
    1 point
  25. Charity must start at home. If State of India is serious about its sovereignty, first it must self examine as to why one family's and foreigners' interest prevailed over national interest. State of India must charge those officials (Kerala Mafia et al.) with treason and prosecute under national security act. அறம் வீட்டிலேயே தொடங்க வேண்டும். இந்திய அரசு அதன் இறையாண்மையைப் பற்றி தீவிரமாக இருந்தால், முதலில் ஒரு குடும்பத்தின் மற்றும் வெளிநாட்டினரின் நலன் தேசிய நலனைக் காட்டிலும் ஏன் மேலோங்கியது என்பதை சுயமாக ஆராய வேண்டும். இந்திய அரசு அந்த அதிகாரிகளிடம் (கேரள மாஃபியா மற்றும் பலர்) அரசுத் துரோக குற்றச்சாட்டு மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும். இந்திய அரசு தன்னை குணப்படுத்துவதற்கு, இந்த முதலில் செய்ய வேண்டும்.
    1 point
  26. செந்நிற வானம் பொன்னிறமாக மாறிய அந்திமாலை மின்குமிழ் மலர்கள் மலரும் வேளை ........!
    1 point
  27. ஒரு கிரெ கூஸ் வொட்க்காவை அடிச்சிட்டு இருக்கிறன் இதை மட்டும் எதிர்பார்க்கவில்லை
    1 point
  28. சரத் பொன்சேகா மகிந்தா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் முறைகேடு நடக்கிறது என்று கூப்பாடு போட்ட மஹிந்த தேசப்பிரிய. மகிந்த வென்றதாக அறிவித்தவுடன், தேர்தல் முறைகேடு எதுவும் நடக்கவில்லையென பல்டி அடித்துவிட்டார் உயிர்பயம், ஐயா உயிர்பயம்.
    1 point
  29. யார் இருந்தார்கள், இருக்கவில்லை என்பது பிரச்சினை இல்லை. அப்படி பிரச்னை என்றால் அந்த இடத்தில அதை எழுப்பி இருக்கலாம். பதியப்படட வாக்குகள் எல்லாம் அப்படியே இருக்கின்றன. அவர்களுக்கு தங்களில் நம்பிக்கை இருந்தால் நீதிமன்றம், சடடம் இருக்கின்றது. நீதிமன்றத்தை நாடி நீதியை பெற்றுக்கொள்ளலாம். கடந்த காலங்களில் இப்படி செய்திருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு நேர்மையான, நல்மனசாட்சி இருக்குமாக இருந்தால் அதுதான் ஒரே வழி. சுமந்திரனுக்கு எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை. எனக்கு தெரியும் யாருமே நீதிமன்றத்தை நாடப்போவதில்லை. ஏன் என்றால் அவர்களுக்கு உண்மை தெரியும்.
    1 point
  30. நல்லூர் கந்த சுவாமி கோவில் 14ம் நாள் உற்சவம் மாலை வீடியோக்கள்
    1 point
  31. தான் கள்ளன் பிறரை நம்பான் நீங்கள் ஏன் றோவின் ஆளாக இருக்க முடியாது ? நீங்கள் எப்படியும் சொல்லுங்கள் தேர்தல் வாக்கு எண்ணப்படும் இடத்தில் உங்கள் ஆள் சுமத்திரன் ஏன் இருந்தார் ?
    1 point
  32. கற்பகத்தாரே! குற்றம் செய்து சிறையிலை இருக்கிறவன் பாராளுமன்றம் போறது நல்ல விசயமோ?
    1 point
  33. ஐயா! உங்களால் தனித்து நின்றோ, சேர்ந்து நின்றோ எதுவும் சாதிக்க முடியாது. எழுபது வருடங்களாக கூடியிருந்து சிக்கடிச்சதை நீங்கள் விடுவித்து விடுவீர்களோ, தாங்கள் மாட்டுப்படுவிடுவோமோ என்கிற பயத்தாலேயே உங்களை தூக்கி எறிந்தவர்கள். அவர்களுக்கு விட்டெறிந்து காரியம் சாதித்தவன் சிங்களவன். கஜேந்திரகுமார் வென்றதுடன் நின்று விடுவாரா? அல்லது சாதகமாக தொடர்ந்து செயற்படுவாரா? சிங்களவன் வளைப்பானா? எதுவும் தெரியவில்லை.. உங்களுக்கு சோதனையான காலம் காத்திருக்கு ரொம்ப அவமானப் படவேண்டி வரலாம். முன்னெச்செரிக்கையுடன் செயற்படுங்கள்.
    1 point
  34. அதென்ன நாதம்ஸ் ,ஒவ்வொரு தேர்தலுக்கும் சுமத்திரனுக்கு மட்டும் இப்படி நடக்குது?...அவர்கள் போய் பேசாமல் இருந்த்திட்டு வந்தார்கள் சரி ...சுமத்திரன் இது வரை தமிழ் மக்களுக்காய் பார்லிமென்ட் போய் என்ன பேசினார் /செய்தார் என்று சொன்னால் நானும் அறிந்து கொள்வேன்
    1 point
  35. எமது திறமையீனத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து எப்போதும் மற்றவன் ஏமாற்றிவிட்டான் என்று கூறுவது எமது வழமை தானே. கத்தியால் என் விரலை நானே வெட்டிக்கொண்டுவிட்டேன் என்று கூறாமல் ‘கத்தி வெட்டிவிட்டது’ என்று கூற பழக்கப்படுத்தி விட்டார்கள்.
    1 point
  36. என்னை பொறுத்த வரைக்கும் பிள்ளையான் , வியளந்திரன் (இவர் வென்றாரா என்று தெரியவில்லை) டக்கு, அங்கஜன் போன்றோ வந்தது நல்லதுதான். கருணா வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். கூத்தமைப்பைபோல எப்போதும் எதிர்ப்பு அரசியல் செய்து அரசியல் தீர்வும் இல்லை , அபிவிருத்தியும் இல்லை என்ற நிலைமைதான் தமிழர்களுக்கு. சில வேளைகளில் மக்களை ஏமாற்றும் சம் , சும், விக்கி, கஜன் போன்றோர் அடுத்தமுறை காணாமல் போனாலும் போவார்கள். மக்கள் குறைந்தளவு அபிவிருத்தி, வேலை வாய்ப்பை எதிர்பார்ப்பதால்தான் தேசியக்கட்சிகளின் வேட்ப்பாளர்களை தெரிவு செய்திருக்கிறார்கள். எனவே குறைந்தது மக்கள் வாழ்விலாவது ஒரு முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
    1 point
  37. அட இவ்வளவு காலமும் தெரியாமல் போச்சே...
    1 point
  38. Velmurugan Gowtham 3 years ago அருமையான நடனம்.அதுவும் ஜப்பானில் நமது தமிழரின் பண்பாட்டு நடனம் கண்டபோது மிகவும் மகிழ்ந்தேன்.நடனம் ஆடிய அனைத்து சகோதரிகளும் நன்றாக ஆடினார்கள்.மகிழ்ச்சி .மேலும் நமது பண்பாடு வளர வாழ்த்துக்கள்.நன்றி.
    1 point
  39. இது நல்ல வாசனையானதும், மாலை நேரத்தில்... சாப்பிடுவதற்குரிய பிஸ்கற். இந்த சீனி பிஸ்கற்றை...குழந்தைகள் மட்டுமல்ல, சீனி வருத்தம் இல்லாத, பெரியவர்களும் சாப்பிடலாம். பகிர்விற்கு, நன்றி நிகே.
    1 point
  40. கடல் உணவு கொத்து சுலபமான முறையில் தேவையான பொருட்கள்: 500g மைதா மா 250ml சமையல் எண்ணை தேவைக்கேற்ப உப்பு 5 முட்டை 500g கணவாய் 500g இறால் 5 பெரிய வெங்காயம் 10 பச்சைமிளகாய் கறிவேப்பிலை 4 tbsp கறித்தூள் 1/2tbsp மஞ்சள் தூள் 1 sp கடுகு 1 sp வெந்தையம் 1 எலுமிச்சை
    1 point
  41. "குடிமகனும்... குவாட்டரும்" எல்லாத்துக்கும் காரணம்... நீதான், ஒதுங்கிடு.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.