Jump to content

Leaderboard

  1. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      17

    • Posts

      23379


  2. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      43245


  3. இ.பு.ஞானப்பிரகாசன்

    இ.பு.ஞானப்பிரகாசன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      4

    • Posts

      30


  4. திரு

    திரு

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      4

    • Posts

      29


Popular Content

Showing content with the highest reputation on 10/24/20 in all areas

  1. சின்னப்பு:- டேய் குமாரசாமி எப்பிடியடா எல்லா விரலுக்கும் மோதிரம் போட ஏலுது? எங்காலையடா காசு? குமாரசாமி:- அது வந்து அண்ணை யாழ்களத்திலை மாடாய் உழைச்சு வந்த பச்சை புள்ளியளை வைச்சு வாங்கினது அண்ணை....!
    2 points
  2. முன்னைய பக்கம் கடைசிப் பக்கம். தமிழ் சிறி அண்ணா, + பட்டனை அழுத்தினால் பல கருத்துக்களை மேற்கோள் காட்டமுடிகின்றதே.🤔
    2 points
  3. இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர் இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர் அக்டோபர் 22, 2020/தேசக்காற்று/கரும்புலிகள் காவியங்கள், சமர்க்களங்கள்/0 கருத்து எல்லாளன் நடவடிக்கை: இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர். 22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள். இளங்கோ நிலைமையை அவதானிக்கின்றான். தனக்குச் சாதகமான நேரம் வரும்வரை காத்திருந்தான். அந்த நேரமும் வந்தது அவன் கரும்புலி aவீரர்களைத் தனக்கு அருகாக அழைத்துக் கொண்டான். இறுதித் திட்டத்தை தெளிவாக அவர்களுக்கு விளங்கப்படுத்தினான். “எங்களிடம் இருக்கிற ஆயுதமெல்லாம் எதிரியின்ர இலக்குகளை அழிக்கிற ஆயுதங்கள். நாங்கள் வடிவா நிதானமா சண்டை பிடிப்பம். நாங்கள் இப்ப உள்ளுக்க போறம். சண்டை பிடிக்கிறம். எதிரியின்ர விமானங்களை உடைக்கிறம். விடுதலைப் புலிகளெண்டா ஆரெண்டுறதை சிங்களப் படையளுக்குக் காட்டுவோம்….” இளங்கோவின் குரல் உறுதியாய் ஒலித்தது. “வீமண்ணை என்ன எதிர்ப்பு வந்தாலும் நீங்கள் எம்.ஐ.24 நிக்கிற இடத்துக்கு வேகமாய்ப் போங்கோ. ஹெலி ஒண்டையும் எழும்ப விடாம அடிச்சு நொருக்குவம். அப்ப நாங்கள் வெளிக்கிடுவம்.” இளங்கோவின் அனுமதி கிடைத்ததும் எல்லோரும் தங்கள் ஆயுதங்களை இயங்கு நிலைக்கு தயார் படுத்தியபடி உற்சாகமாக நகர தொடங்கினார்கள். இந்த நாளுக்காக அவர்கள் எத்தனை வருடங்கள் காத்திருந்தார்கள். எத்தனை கடின பயிற்சிகளுக்குள் மூழ்கியிருந்தார்கள். எல்லாமே இந்த நாளுக்காகத்தான். சின்னப் பிசகென்றாலும் எல்லாமுமே தலைகீழாக மாறிவிடும். அதனால் பயிற்சி கடுமையாக இருந்தது. யாரும் அசைந்து கொடுக்கவில்லை. பயிற்சிகளால் உடல் களைப்படையும். ஆனால் அவர்கள் சோர்ந்ததேயில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் இலக்கு பற்றியதாகவே இருந்தது. பயிற்சித் தளத்தில் பயிற்சி ஆசிரியரின் சொல்லை அவர்கள் என்றுமே தட்டிக் கழித்ததில்லை. பயிற்சி சிறிது கடுமையாக இருந்தால் தங்குமிடத்தில் ஆசிரியரை அன்பாகக் கிண்டலடிப்பார்கள். அங்கு சிரிப்பொலிகள் எழும். கைகள் ஆயுதங்களைத் துப்பரவு செய்து கொண்டிருக்கும். இப்படி கழிந்தன அந்த நாட்கள். அமைதியான அந்த இரவில் வண்டுகளின் ரீங்கார ஒலிகளும், சில பறவைகளின் இடைவிட்ட ஓசைகளும் அந்த விமானத் தளத்தைச் சூழ கேட்டுக் கொண்டிருந்தன. இந்த அமைதியைக் குலைக்காதவாறு அவர்கள் அந்தப் படைத்தளத்தின் தடைவேலியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கரும்புலி வீரனும் தான் தாக்குதல் நடாத்தும் விதத்தை மனதில் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது தலைவர் அவர்கள் இறுதியாகச் சொல்லிவிட்ட வரிகள் ஞாபகத்திற்கு வந்தன. “நீங்கள் 21 பேரும் போறியள். நிச்சயம் நிறையச் சாதிப்பீங்கள். எங்களாலையும் செய்யமுடியும் எண்டதை உலகத்துக்கு நாங்கள் காட்டுவோம். உங்கட பேரை நாங்கள் சொல்லத் தேவையில்லை. இந்த உலகம் கட்டாயம் உங்கட பேரை உச்சரிக்கும்.” தலைவரின் உணர்வை அவர்கள் நன்கு புரிந்தவர்கள். தலைவருடன் கூடவிருந்து வாழ்ந்தவர்கள். அவரின் ஒவ்வொரு அசைவினதும் அர்த்தத்தையும் தெளிவாக புரிந்து வைத்திருந்த அந்த வீரர்கள் தலைவரைப் பார்த்து தாங்கள் சாதிப்போம் என்ற உறுதிமொழியை முகத்தில் பூத்த புன்னகைமூலம் காட்டினார்கள். அந்த இடத்தில் “அண்ணை தேசிய கொடியைக் கொண்டு போகட்டுமா?” என இளம்புலி கேட்டான். “நீங்கள் கொண்டுபோகலாம். அதுக்குத் தடையில்லை. ஏனெண்டா இது முற்று முழுதான இராணுவத் தளம். நீங்கள் உங்கட உச்ச வீரத்தை காட்டுங்கோ. ஆனால் ஆரும் அதிகாரியளின்ர பிள்ளையள் சிலநேரம் அங்க நிக்கக்கூடும். தாக்குதல் நடத்தேக்குள்ள அவைய பத்திரமா அகற்றி அவையளுக்கு ஒன்றும் நடக்காம பார்த்துக்கொள்ளுங்கோ.” தலைவரின் கவனம் அவர்களுக்குப் புரிந்தது. உண்மையில் சிங்களப் படைகளைப் போல் பிணந்தின்னிக் கழுகுகளாக அவர்கள் செல்லவில்லை. அவர்களின் ஓரே மூச்சு, சுதந்திரமான தேசம் தான். அதற்காகத்தான் இவர்கள் வெடிசுமந்து போனார்கள். இந்தக் கரும்புலி அணிக்குள் மூன்று பெண் கரும்புலிகளும் இருந்தார்கள். அவர்களில் அறிவுமலர் என்ற பெண் கரும்புலி மிகவும் இரக்க சுபாவமுடையவள். பயிற்சி நாட்களில் இவளின் தங்ககத்தில் ஒருநாள் தலைக்கு அணியும் சீருடை தொப்பிக்குள் எலிக்குஞ்சுகள் கீச்சிட்டுக்கொண்டிருந்தன. எலிக்குஞ்சுகளை இவர்கள் கண்டு விட்டதால் அச்சமடைந்த தாயெலி அங்குமிங்கும் ஒடியபடியிருந்தது. கூட இருந்தவர்கள் அதை வெளியில் விடுவோமென ஆலோசனை சொன்னார்கள். ஆனால் அவள் மறுத்துவிட்டாள். அதை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டாள். தாயெலி அதை ஒவ்வொன்றாக வாயில் கவ்வி இன்னொரிடத்திற்கு கொண்டு சென்றது. கடைசி எலிக்குஞ்சை தாயெலி காவிச் செல்லும்வரை அவள் காவலிருந்தாள். இத்தனை மென்மையான உள்ளங்களிலிருந்து எதிரிகளை அழிக்க வேண்டுமென மனவலிமை பிறக்கின்ற தென்றால் சிங்களதேசம் எத்தகைய கொடுமைகளை எங்கள் மீது புரிந்திருக்கிறது. நேரம் விடிகாலை 3.00 மணி அமைதியாயிருந்த அந்த தளத்தில் தங்களுக்கு சாதகமான இடத்தில் தடையை அகற்றுவதற்காக தடைவேலியை கரும்புலிகள் அணி நெருங்குகின்றது. கரும்புலி வீரர்கள் சிலர் தங்கள் சீருடையிலிருந்த பைகளைத் தட்டிப் பார்க்கின்றார்கள். இவர்கள் வன்னித் தளத்திலிருந்து புறப்படுவதற்கு முதல் நாள் இரவு நடவடிக்கைகான தளபதியை அவசர அவசரமா அழைத்த தலைவர் “பெடியள் வெளிக்கிட்டிட்டாங்களா?” என்று கேட்டார். “இல்லையண்ணை. இனித்தான்…” “அப்பிடியெண்டா அவங்களிட்டச் சொல்லுங்கோ கடைசியா முகாமுக்குள்ள இயங்கேக்கையும் பொக்கற்றில சொக்கிலேற்றுகளைக் கொண்டுபோகச் சொல்லுங்கோ. இவங்கள் கடைசி நேரம் விட்டிட்டுப் போடுவாங்கள். பிறகு நீண்டநேரம் சண்டை பிடிச்சா களைச்சிடுவாங்கள். ஆனபடியா மறக்காம கொண்டுபோகச் சொல்லுங்கோ.” அந்த வீரர்கள் புறப்பட்ட கணம் முதல் தலைவர் அந்த வீரர்கள் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். பெரும் இலட்சிய நெருப்பைச் சுமந்து செல்லும் அந்த வீரர்கள் உச்சமான சாதனை புரிந்துதான் இந்த மண்ணில் வரலாறாக வேண்டுமென அவர் துடித்துக் கொண்டிருந்தார். அதை நன்கு புரிந்து வீரர்கள் இங்கே சாதிக்கும் கணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். அநுராதபுர வான்படைத் தளத்தைச் சூழ கோயில் திருவிழாபோல் வெளிச்சம் போடப்பட்டிருந்தது. ஆனால் அந்த வெளிச்சத்தில் மிகவும் அமைதியாக எழிலின்பனும் பஞ்சீலனும் தடையை நெருங்குகின்றார்கள். வேகமாக தங்களிடமிருந்த கம்பி வெட்டும் கருவியால் தடையை வெட்டத் தொடங்குகின்றார்கள். அவர்களிலிருந்து 15 மீற்றரில் இளங்கோ நிலையெடுத்திருந்து அணிக்கான கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தான். அன்புக்கதிரும் புரட்சியும் தடை அகற்றும் பகுதிக்கு அண்மையாக இருந்த காப்பரணை நோக்கி தங்கள் இரவுப் பார்வைச் சாதனம் பொருத்தப்பட்ட ஆயுதத்தால் குறிபார்த்தபடியிருந்தார்கள் அவர்களின் குறிக்காட்டிக்குள்ளால் அந்த காவலரணில் இருந்த விமானப்படைச் சிப்பாயின் முகம் தெரிந்தது. ஆனால் அவன் இவர்களைப் பார்க்க மனமில்லாதவன் போல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குத் தெரியாமல் இங்கே அதிவேகமாய் தடை வெட்டப்பட்டுக் கொண்டிருந்தது. வான்படைத்தளத்தின் பாதுகாப்புக் கருதி எதிரி அதிக தடைகளை ஏற்படுத்தி இருந்தான். கம்பிவலை வேலி, பட்டுக்கம்பி வேலி, முட்சுருள், கண்ணிவெடிகள் என ஏராளமான தடைகள். தாங்கள் தளத்தில் பயிற்சி செய்தபடி, பயிற்சியை விடவும் வேகமாக தடையை அகற்றிக்கொண்டிருந்தார்கள். தடையில் மின் பாய்ச்சல் இருக்கின்றதா இல்லையா என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டார்கள். குறுகிய நேரத்தில் தடை அகற்றப்படுகின்றது. தடை அகற்றப்பட்டதற்கான சைகையை இளங்கோவிற்கு வழங்க திறக்கப்பட்ட பாதைக்குள்ளால் அணிகள் வேகமாக உள்நுழைகின்றன. இப்போது அவர்கள் சாதிப்பது உறுதியாகிற்று. எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சிப் பிரகாசம். தங்கள் நீண்ட கனவு நிறைவேறப் போவதற்கான ஆனந்தச் பூரிப்பு. இளங்கோ கட்டளை மையத்துடன் தொடர்பெடுக்கின்றான். “நாங்கள் இறங்கப்போறம். இப்ப தொடர்பிருக்காது. விமானத்தளத்தின்ர மையத்துக்குப்போன பிறகுதான் தொடர்பெடுப்பன்.” இளங்கோ நிலைமையைச் சொல்லி விட்டு அணியுடன் உள்நுழைகின்றான். நடப்பதை சற்றும்புரியாத விமானப் படைத்தளம் அமைதியாகவே கிடந்தது. அன்று இரவு பயிற்சி விமானமும், பீச்கிறாவ்ற்றும் வந்து இறங்கியதாக மிகுந்த மகிழ்ச்சியோடு கட்டளைப் பீடத்திற்கு தெரியப்படுத்தினார்கள். நடக்கப்போவதை அறியாத அந்த விமானம் எரிபொருள் தாங்கி முழுவதும் எரிபொருள் நிரப்பியபடி பற்றி எரிவதற்குத் தயாராயிருந்தது. உள்நுழைந்த அணி அங்கிருந்த கிறவல் மண்புட்டியை தாண்டும் போதுதான் காவலில் இருந்த சிப்பாய் முகாமில் மனித உருவங்களைப் பார்த்துத் திகைத்து நின்றான். பயப்பீதியால் “டோ… டோ…” என்று அவன் கத்தத் தொடங்கினான். சுமார் இரண்டு நிமிடங்கள் வரை எதிரிச்சிப்பாய் கத்தித் தொலைத்தான். அத்தோடு அங்கு நிலவிய நிசப்தத்திற்கு முற்றுப்புள்ளி கிடைக்கிறது. சுபேசனின் ‘லோ’ முழங்கியது. காவலரணில் பட்டு பெருமோசையோடு அது வெடித்துச் சிதறியது. கரும்புலிகளின் வீரசாகசம் சிங்களத்தின் கோட்டையான அநுராதபுரத்துக்குள் தொடங்கியது. எதிரி நிலைகளைத் தகர்த்தபடி வேகமாக அணிகள் உள்நுழைகின்றன. இளங்கோ வேகமான முறையில் கட்டளைகளைப் பிறப்பிக்க கரும்புலி வீரர்கள் தங்கள் இலக்குகளை நோக்கி தங்கள் உடலில் சுமந்த நவீனகரமான வெடிபொருட்களோடும் ஆயுதங்களோடும் ஓடிக் கொண்டிருந்தார்கள். சமநேரத்தில் வன்னியில் விடுதலைப் புலிகளின் வான்படைத்தளத்தில் அச்சமென்றால் எதுவென்று தெரியாது, எப்போதும் எதற்கும் துணிந்த வானோடிகள் தங்கள் இலகுரக விமானத்திலேறி அநுராதபுர வான்படைத்தளத்தை நோக்கி விரைந்தார்கள். வீமன் தனது அணியை அழைத்துக் கொண்டு எம்.ஐ.24ரக உலங்கு வானுர்தி தரிப்பிடம் நோக்கி முன்னேறினான். இளங்கோ மற்றைய அணியை அழைத்துக்கொண்டு பிரதான விமானத்தரிப்பு கொட்டகையை நோக்கி ஓடினான். இளங்கோ தானும் சண்டையிட்டபடி அணியையும் வழிநடத்தினான். எந்தவித பதட்டமுமில்லாமல் மிகவும் தெளிவான முறையில் இளங்கோவின் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. சண்டையென்றால் சோளம் பொரி சுவைப்பதுபோன்ற உணர்வவனிற்கு. பதட்டமென்றால் என்னவென்று இளங்கோ புத்தகத்தில்த்தான் படித்தறிய வேண்டும். அனுபவத்தில் அதைப்பற்றி அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. எத்தனை சண்டைக் களங்களில் எதிரியைப் பந்தாடியவன். வன்னியில் நடந்த புகழ்பெற்ற சமர்களிலெல்லாம் அவனின் துப்பாக்கி முழங்கியிருக்கின்றது. ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையில் ஜெயசிக்குறுப் படையை விரட்டியடித்த பெருஞ் சமரில் ஒட்டுசுட்டானிலிருந்த கட்டைக்காட்டுப் பாலத்தை சிங்களப் படைகளிடமிருந்து மீட்பதற்காக எதிரிப்படை மீது அதிரடியாய்ப் புகுந்து எதிரிகளை மண்ணில் புரளவைத்து கட்டைக்காட்டுப் பாலத்தை எல்லோரும் வியக்கும்படி கைப்பற்றியவன் இந்த இளங்கோ. இத்தாவில் சமர்க்களத்தில் பெண் போராளிகளின் நிலைகளை ஊடறுத்து உள் நுழைந்த கவசப்படை கவசவண்டிகள் மீது துணிகர தாக்குதலை மேற்கொண்டு ஒரு பவள் கவசவாகனத்தை மடக்கிப் பிடித்து அதிலிருந்த எதிரிமீது தாக்குதலைத் தொடுத்து மின்னல் வேகத்தில் அந்த பவள் கவச வாகனத்தில் பாய்ந்து ஏறி அதில் பூட்டப்பட்டிருந்த 50 கலிபர் துப்பாக்கியைக் கைப்பற்றி அதிலிருந்தபடியே எதிரியைத் தாக்கி பெரும் சாகசம் நிகழ்த்திய இளங்கோ இந்தக் களத்திலா அசைந்து கொடுப்பான்? அநுராதபுர படைத்தளம் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அதிர்ந்துகொண்டிருந்தது. பெரும் இறுமாப்போடு நீண்ட தடைகளையும் மண் அணைகளையும் காவல்நிலைகளையும் அமைத்து விட்டு ‘முடிந்தால் புலிகள் புகுந்து பார்க்கட்டும்’ என்று நினைத்திருந்த எதிரிகளுக்கு ‘முடிந்தால் தடுத்துப் பார்க்கட்டும்’ என்ற சவாலோடு கரும்புலிகள் விமானங்களை நோக்கி ஓடினார்கள். இந்த விமானங்கள் மீது எத்தனை கோபம் அவர்களுக்கிருந்தது. எங்கள் தாய் நிலத்தில் எங்கள் பிஞ்சுக் குழந்தைகள் தசைத் துண்டுகளாய் சிதறவும், எங்கள் தாய்க்குலம் ஓவென்று கதறி அழுவதற்கும் தினம் தினம் சாவின் வாடையே எங்கள் தாய் நிலத்தின் வாசல்களில் வீசுவதற்கும் கொடிய எதிரிக்கு உதவுவது இந்த விமானங்கள் தானே. இந்த விமானங்களை அழிப்பதால் சிதையப்போவது விமானங்கள் மட்டுமல்ல, சிங்கள அரசினதும் அதன் படையினதும் ஆக்கிரமிப்பு ஆசை நிறைந்த போர்வெறிக் கனவுந்தான். சண்டை தொடங்கி கொஞ்ச நேரத்திற்குள் விமானத்தளத்தில் நின்ற விமானங்கள் பெருமோசையோடு வெடித்துச்சிதறி எரிந்து கொண்டிருந்தன. தங்களைக் காக்கமுடியாத ஆற்றாமையோடு கரும்புலி வீரர்களுக்குக் கட்டுப்பட்டு அவை கவனமாக சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை போல எரிந்து கொண்டிருந்தன. அந்த விமானங்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள் எங்கள் தேசத்தின் புயல்களின் வீச்சில் அகப்பட்டு செத்துவீழ்ந்திருந்தார்கள். எஞ்சியோர் அந்தத் தளத்தை விட்டே ஓடித்தப்பினார்கள். அந்த விமானப் படைத்தளத்தின் ஓடுபாதையின் இடது புறமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘எம்.ஐ – 24’ ரக உலங்கு வானுார்தியை நெருங்கிய வீமனின் அணி அந்த உலங்குவானுார்தி மீது தாக்குதலைத் தொடுக்கின்றது. சிங்களப் படையின் பலம்மிக்க உலங்குவானுர்தியான எம்.ஐ-24 ஒன்று வெடித்துச் சிதறியபடி எரிந்துகொண்டிருக்கின்றது. மற்றைய ‘எம்.ஐ – 24’ உலங்குவானூர்தி மீது தாக்குதல் தொடுத்தபோதும் அது சேதமாகிக்கொண்டே இருந்தது. பற்றி எரியவில்லை. அதன் மீது தொடர்ச்சியாக வீமனின் அணி தாக்குதலை தொடுத்தது. இந்தக் கணத்தில் சிங்களப் படையால் விமானத்தளத்தை நெருங்கவே முடியவில்லை. அவர்களின் கண்முன்னாலேயே அவை வெடித்து பெரும் தீப்பிழம்பை வீசியபடியும் கரும்புகையை கக்கியபடியும் எரிந்துகொண்டிருந்தன. மறுபக்கம் இளங்கோ பிரதான விமானத் தரிப்பு கொட்டகையை நோக்கி தனது மற்றைய அணியை சண்டையிட்டபடி நகர்த்தினான். அந்த கொட்டகை மீது கருவேந்தன் ‘லோ’ வால் தாக்க அங்கிருந்த விமானங்கள் தீப்பற்றத் தொடங்கின. அவர்கள் விமானக் கொட்டகையையும் ஒடுதளத்தில் தரித்து நின்ற விமானங்கள் மீதும் தாக்க அவையும் தீப்பற்றி எரியத் தொடங்கின. அநுராதபுர வான்படைத்தளத்தினுள் எதிரியின் விமானங்களுக்குத் தங்கள் உடலில் சுமந்து வந்த வெடி பொருட்களால் தாக்கி அவை எரியும் காட்சியை ஆனந்தத்தோடு பார்த்தபடி நிலைமையை வன்னியிலுள்ள கட்டளைப் பீடத்திற்கு அறிவித்தான் இளங்கோ. “என்னண்டா வீமனாக்கள் எம்.ஐ-24 ஒண்டை எரிச்சிட்டாங்கள். மற்றது தாக்கி சேதப்படுத்தியிருக்கு அது எரியேல்ல. இஞ்சால என்ர பக்கம் ஒரு கே-8 விமானமும் இன்னுமொரு விமானத்தையும் ரண்வேயில தாக்கி எரிச்சிருக்கிறம். பெரிய கங்கருக்குள்ள நிற்கிற விமானங்களுக்கு அடிச்சிருக்கிறம். தொடர்பில நில்லுங்கோ பார்த்து அறிவிக்கிறன்.” கட்டளை மையத்திற்கு இளங்கோ நிலைமைகளை தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறான். சண்டை தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த வான்படைத் தளத்துள் நடந்த தொடக்கச் சண்டையின் போது உள்ளிருந்த எதிரிகளின் தடைகளை தகர்த்தெறிந்து எழிலின்பன், பஞ்சீலன், சுபேசன், ஆகியோர் தங்களுக்குத் தரப்பட்ட பணியை சரிவர நிறைவேற்றிய திருப்தியோடு வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீயின் ஒளிப்பிழம்புகள் அந்த விமானத் தளத்தை சுட்டெரித்துக் கொண்டிருந்தன. சிங்களப் படைகளால் துளியளவேனும் கரும்புலி வீரர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்கள் எத்தனைதான் முயன்றாலும் விமானத்தளம் கரும்புலி வீரர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. முன்னேறிய படையினர் அடித்துவிரட்டப் பட்டனர். சமாதானம் என்ற மாயையைக்காட்டி எங்கள் விடுதலைப் போரை சிதைத்து விட சிங்களத் தேசம் மும்முரமாக ஈடுபட்டபோது, இவர்கள் எந்த நொடிப்பொழுதும் கரும்புலியாகி எதிரியின் குகைக்குள் புகுந்து பகைவனுக்கு பெரும் சேதம் விளைவித்து தலைவனுக்கு பலம் சேர்க்க காத்திருந்தார்கள். தலைவரோடு கூடவிருந்து அவரின் சுமைகளைத் தாங்கியவர்கள். அந்த உணர்வோடுதான் எதிரியின் கற்பனைகளைச் சிதைத்துவிட்டு மீண்டும் இங்கு போர்மேகம் கருக்கொண்டபோது கரும்புலியாய் பிறப்பெடுத்தார்கள். தங்கள் இலக்கை அழித்தொழிக்கும் அந்த நாளுக்காக அவர்கள் எத்தனை இரவுகள் காத்திருந்தார்கள். அவர்களின் நெஞ்சில் பிறந்த விடுதலைப்பற்று இன்று அநுராதபுரத்து வான்படைத் தளத்தை சிதைத்துக் கொண்டிருந்தது. அநுராதபுர வான்படைத்தளத்தின் மையத்தில் நின்று விமானத்தளத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபடி விமானங்கள் நிற்கும் திசைகளுக்கு கரும்புலிகளை நகர்த்தினான் இளங்கோ. வீமன் மறுபுறத்தே நின்றபடி தனது அணியை வழிநடத்தினான். இந்த வீரர்களை எதிர்த்துச் சமரிடும் திறன் சிங்களப் படைக்கு எங்கே இருக்கின்றது? வீமன் தலைவருக்கு நெருக்கமாக நின்று பணிபுரிந்தவன். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மெய்க்காவலர் அணிக்குப் பொறுப்பாக நின்று செயற்பட்டவன். அந்தப் பெரு மனிதனின் மனதைப் புரிந்து அவரோடு இசைந்துபோய் அவரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் வல்லவனாயிருந்தான் வீமன். ஆனால் பாதுகாப்பு நடைமுறைகளில் அவன் தளர்வு காட்டியதில்லை. தேசத்தின் குரல் பாலா அண்ணன் அவர்கள் இங்கு வந்தால் அவர் கேட்பது வீமனைத்தான். அத்தனை பற்றும் பாச உணர்வும் வீமனிடத்தே அவருக்கிருந்தது. அந்த வீமன்தான் இன்று அநுராதபுர வான்படைத்தளத்தை அதிரவைத்துக் கொண்டிருந்தான். தங்கள் தீரம் மிகு செயல்களால் விடுதலைப் போருக்குப் பலம் சேர்த்த கரும்புலி வீரர்கள் சிலர் தங்கள் உடலோடு சுமந்து வந்த வெடிபொதியை வெடிக்க வைத்து தங்களை இந்தத் தேசத்திற்காக அர்ப்பணித்துக்கொண்டிருந்தனர். நெஞ்சிலே காயமடைந்த காவலன் அணித்தலைவன் இளங்கோவிடம் அனுமதி பெற்றபின் தன் மார்போடு பொருத்தப்பட்டிருந்த கந்தகப்பொதியை வெடிக்க வைத்து காற்றோடு கலந்து போனான். அநுராதபுர வான்தளத்தில் அந்த வீரர்கள் மூட்டிய தீ பிரகாசித்து எரிந்து கொண்டிருந்தது. களத்தில் நின்றபடி அணியை வழிநடத்திய இளங்கோ காயமடைந்தான். அவனால் நகரமுடியவில்லை தனது காயத்திற்கு கட்டுப்போட்டு விட்டு அவன் தெளிவாக கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தான். அந்தக் கரும்புலிகளுள் ஒரிருவரைத் தவிர மற்றைய எல்லோரும் எதிரியின் குண்டுமழையால் வீர வடுவேந்திய போதும் அவற்றிற்குக் கட்டுப் போட்டுவிட்டு தொடர்ந்தும் சண்டையிட்டனர். காயங்களின் வேதனை அவர்களை வாட்டவில்லை. சிங்களம் எங்கள் தேசம் மீது புரிந்த கொடுமைகளின் வடுக்கள்தான் அவர்களின் மனதை வாட்டிக்கொண்டிருந்தது. அதற்காகத்தான் இன்று எதிரியின் கோட்டைக்குள் முழக்கமிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சிங்களப்படை மீண்டும் தங்கள் தளத்தை கைப்பற்ற முன்னேறுகின்றார்கள். இளங்கோ கட்டளை மையத்துடன் தொடர்பெடுக்கிறான். “என்னண்டா ட்ரக்கில வந்து இறங்கி அடிச்சுக்கொண்டு வாறாங்கள். நாங்கள் திருப்பித் தாக்கிறம்.” “நீங்கள் உங்கட ஆக்களை வச்சு நல்லாக் குடுங்கோ. எங்கட விமானங்கள் உங்களுக்கு துணையா இப்ப தாக்குதல் நடாத்துவினம்.” இளங்கோ கட்டளை மையத்துடன் தொடர்பிலிருந்தான். திடீரென முகாமைச் சூழ இருந்த எதிரிகளின் ஆயுதங்கள் வான்நோக்கி குண்டுமழையை பொழிந்தன. உண்மையில் அப்போது வானத்தில் எமது விமானங்கள் தென்படவில்லை. எதிரியின் ராடார் திரையில் எமது விமானம் தென்படுவதாகத் தகவல் கிடைத்ததுமே பீதியால் கண்மண் தெரியாது சுட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் இந்த இரைச்சல்களுக்கூடாகவே விடுதலைப் புலிகளின் திறன் வாய்ந்த வானோடிகள் தங்களுக்குத் தரப்பட்ட இலக்கின் மீது கனகச்சிதமாக குண்டுகளை வீசிவிட்டு மீண்டும் தளம் திரும்பிக்கொண்டிருந்தார்கள். அநுராதபுர வான்தளத்தில் தரையாலும், வானாலும் கரும்புலிகள் தொடுத்த தாக்குதலால் சிங்களச் சிப்பாய்களும் அவர்களது அதிகாரிகளும் கதிகலங்கி போயினர். முன்னேறி வந்த சிங்களப் படையினர் எமது வான்படையின் வரவைக் கேள்வியுற்றதுமே ஒடித் தப்பிக் கொண்டனர். இளங்கோ இந்த நிலைமையை விமானத்தளத்தின் மையத்திலிருந்தபடி கட்டளை பீடத்திற்கு அறிவித்தான். எதிரியின் இலக்குகளை தகர்த்துக் கொண்டிருந்த செந்தூரன் காயமடைந்தான். அவனால் இனிச் செயற்பட முடியாத அளவு பாரிய காயம். அவன் இன்று நிறையவே சாதித்துவிட்டான். அவன் மனதில் நிறைந்த திருப்தியிருந்தது. அவன் புகழ்மணியிடம் தனது உடலில் பொருத்தப்பட்ட வெடிகுண்டை இயக்கிவிடும்படி பணிக்கின்றான். அந்தக் கணத்தில் கரும்புலி வீரர்களின் மனத்தில் எழுந்த உணர்வை எப்படிச் சொல்வது? எத்தனை வருடங்களாக ஒன்றாக இருந்து ஒருவருக்கொருவர் துணையாக வாழ்ந்த வீரர்கள். இன்று பிரியப் போகின்றார்கள். ஆனாலும் சாதித்துவிட்டோம் என்ற பெருமிதத்தோடு அவனது ‘சார்ச்சை’ இழுத்துவிட்டான் புகழ்மணி. சில கணங்களில் செந்தூரன் இந்த தேசத்திற்காக அணுவணுவாக வெடித்து சிதறினான். இளங்கோ தங்களால் அழிக்கப்பட்ட விமானங்களின் தரவுகளை சொல்லிக் கொண்டிருந்தான். அவற்றில் ஒன்றினது இலக்கத்தைக்கூட தெளிவாக பார்த்து அறிவித்துக் கொண்டிருந்தான். “என்னண்டா வீமன்ணையாக்கள் ஒரு எம்.ஐ-24ஐ முற்றா எரிச்சிட்டினம். ஓண்டு சேதத்தோட நிக்குது. அது அடிக்க அடிக்க எரியுதில்லை. என்ர பக்கம் ரக்சி வேயில ஒரு கே-8 எரிஞ்சு முடிஞ்சுது. அதவிடவும் இன்னொண்டும் வெளியில எரிஞ்சிருக்கு. பெரிய கங்கருக்குள்ள 3யூ.ஏ.வி உம் ஒரு பெல்லும் எரியுது. அதைவிடவும் உள்ளுக்க விமானங்கள் எரியுது. ஆனால் நெருப்பு எரிஞ்சு புகையா கிடக்கிறதால எங்களால பார்க்க முடியேல. விளங்கிற்றுதா?” “ஓமோம் விளங்கிற்று. நீங்கள் தொடர்பில நிண்டு நிலைமையை அறிவிச்சுக்கொண்டிருங்கோ.” இளங்கோ சுற்றிவர எரிந்துகொண்டிருக்கும் விமானங்களுக்கு நடுவே காயம் அடைந்த படி சண்டையை நடாத்திக் கொண்டிருந்தான். இரவு வந்து இறங்கிய பீச் கிறாவ்ச் அந்தத் தளத்தில் இருந்த கோபுரத்தின் மறைவில் நின்றதை இப்போது தான் கண்டார்கள். உடனடியாகவே வீமன் தனது கிறனைட் லோஞ்சரால் அதன் மீது தாக்க அது பற்றி எரியத் தொடங்கியது. இப்போது கரும்புலிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. பீச் கிறாவ்ற் விமானம் மிகவும் பெறுமதிவாய்ந்தது. அத்தோடு மற்றைய விமானங்களைவிடவும் இது முக்கியமாக அழிக்கப்பட வேண்டுமென ஏற்கனவே சொல்லப்பட்டுமிருந்தது. இளங்கோ கட்டளை மையத்துடன் மீண்டும் தொடர்பெடுக்கின்றான். “என்னண்டா இப்ப ‘பீச் கிறாவ்ற்’ ஒண்டை அடிச்சு எரிச்சிட்டம். புதுசா மினுங்கிக் கொண்டு நிண்டது. வெடிச்சுவெடிச்சு எரியிற சத்தம் உங்களுக்கும் கேக்குமெண்டு நினைக்கிறன்.?” இளங்கோ ஆனந்த பூரிப்போடு பீச் கிறாவ்ற் வெடித்து எரியும் சத்தத்தை தொலைத் தொடர்புக் கருவியூடாகக் கேட்குமாறு கட்டளைப்பீடத்திற்கு தெரிவித்துக் கொண்டிருந்தான். சிங்களப் படையின் அந்தப் பெரும் விமானத்தளம் இப்போது கரும்புலி வீரர்களிடம் மண்டியிட்டுக் கொண்டது. இப்போது அங்கே கரும்புலிகள் நினைத்தது மட்டும்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தங்களது விமானங்களைப் காப்பாற்றும் நப்பாசை சிங்களத்திடம் இருந்து இன்னும் போகவில்லை. எரிந்து கொண்டிருக்கும் விமானங்களையாவது காப்பாற்றுவோம் என எண்ணி அவர்கள் தீயணைப்பு வாகனத்தோடு விமானத்தளத்துள் நுழைந்தார்கள். அப்போது புகழ்மணி தனது பி. கே ஆயுதத்தால் அவர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதலை தொடுக்க அவர்களும் ஓடித்தப்பிக் கொண்டனர். ஆனாலும் தொடர்ச்சியாக வான் படைத்தளத்தின் எல்லையில் நின்றவாறு கரும்புலிகள் மீது தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருந்தனர். இப்போது அந்தத் தளத்தில் பி.கே ஆயுதத்தைவைத்து சுட்டுக்கொண்டிருந்த புரட்சி காயமடைய அவன் தனது சார்ச்சை இழுத்துவிடுமாறு தர்மினியிடம் வேண்டிக்கொண்டான். அந்தக் கரும்புலி வீராங்கனை அந்த வீரனுக்கு கடைசி விடை கொடுத்து அவனது சார்ச்சை இழுத்து விட்டாள். அந்த வீரனும் தனது தாய் தேசத்திற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டான். அவனது பி.கே ஆயுதத்தை தர்மினி எடுத்து மதியிடம் கொடுத்தாள். மதிவதனன் இப்போது ஒரு கரும்புலி வீரனாயினும் அவனொரு கனரக ஆயுதப்பயிற்சி ஆசிரியர். எத்தகைய கனரக ஆயுதத்தையும் எடுத்தவுடன் கையாளும் திறன் வாய்ந்தவன். அவன் உருவாக்கிய போராளிகள் இப்போதும் களங்களில் கனரக ஆயுதங்களுடன் நிற்கிறார்கள். எந்த ஆயுதத்தையும் இலகுவாகக் கையாளும் அந்தக் கரும்புலி வீரன் வீரச்சாவடைந்த சகதோழனின் துப்பாக்கியை எடுத்து ரவைகளை பொழிந்து கொண்டிருந்தான். தர்மினி ஒரு துடிப்பான போராளி. அவளும் அந்தக் களத்தில் கண்ணில் காயமடைந்த போதும் தனது இயக்கத்தை அவள் நிறுத்திக் கொள்ளவில்லை. தனது காயமடைந்த கண்ணிற்கு கட்டுப் போட்டுவிட்டு அவள் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். புலிமன்னனும் கடும் காயத்திற்குள்ளானான். அவனிற்கு இடுப்பிற்கு கீழ் இயலாமல் போனது. அவனால் நகர முடியாது போனாலும் பெரும் மனவுறுதியைக் கொண்ட அந்த வீரன் தனது பி.கே ஆயுதத்தால் தொடந்தும் சூடுகளை வழங்கிக் கொண்டிருந்தான். அநுராதபுர வான்படைதளம் எங்கும் பெரும் தீயின் வெளிச்சம். துப்பாக்கி வேட்டுக்களினதும் குண்டுகளினதும் காதை கிழிக்கும் வெடியோசைகள். இவற்றிற்கு நடுவே நின்ற படி கரும்புலிகள். தொடர்ந்தும் சண்டையிட்டார்கள். அந்த தளத்தை சூழ இருந்த சிங்கள விமானப்படையால் எதுவும் முடியாது போக தங்கள் ஆற்றாமையால் மன்னாரிலிருந்தும், வவுனியாவிலிருந்தம் விசேட படை அணிகளை அநுராதபுரத்திற்கு அழைத்தனர். இப்போது அந்தத் தளத்தில் சண்டை இன்னும் வலுவுற்றது. எஞ்சியிருந்த கரும்புலி வீரர்கள் மூர்க்கமாகச் சமரிட்டார்கள். இளங்கோவிற்கு மீண்டும் இருமுறை காயம் ஏற்படுகின்றது. அந்தக் காயத்தின் வலியையும் கடந்து அவன் நிதானமாக கட்டளை மையத்துடன் தொடர்பெடுக்கிறான். “எனக்கு திரும்பவும் ரெண்டிடத்தில காயம் வந்திட்டுது. நான் எனக்கு தந்த கடமையை சரியாச் செய்திருக்கிறன். அண்ணையிட்டச் சொல்லுங்கோ. நான் என்ர அணியோட சேர்ந்து சாதிச்சிட்டனெண்டு. நீங்கள் எல்லோரும் அண்ணையை கவனமா பார்த்துக் கொள்ளுங்கோ. அண்ணைதான் எங்களுக்கு முக்கியம். என்ர நண்பர்களிட்ட சொல்லுங்கோ நான் என்ர கடமையைச் சரியாக செய்திருக்கிறன் எண்டு. இனி நீங்கள் தான் அண்ணைக்கு நிறையச் செய்து குடுக்க வேணுமெண்டு சொல்லுங்கோ…” இந்த வார்த்தைகளோடு இளங்கோவின் குரல் அடங்கிப்போகிறது. அதன் பின் அவன் குரலை கேட்க முடியவில்லை. சற்று முன்தான் வீமனும் அந்த அநுராதபுர தளத்துள் வெடித்து சிதறி வரலாறான செய்தியை இளங்கோ சொல்லியிருந்தான். இளங்கோ அந்த அணியை வைத்து நிறையவே சாதித்து விட்டான். தலைவர் நினைத்ததை விட அதிகமாய் அவன் சாதித்துவிட்டான். தனது மனதில் எத்தனை பெரும் சுமைகளை அந்த வீரன் இன்று வரை சுமந்திருக்கிறான். சமர்க்களங்களில் எத்தனை அர்ப்பணிப்புக்களை கண்டிருக்கிறான். அதன் பதிவுகள் அவனது நாட்குறிப்பில் இப்படியிருக்கின்றது… “கடும் சமர் மத்தியிலேயே தலையில் காயம் பட்டு வார்த்தைகள் வெளிவர முடியாத நிலையிலேயே என் மடியில் தலைவைத்தபடியே என்னைக்கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு என் கரம் இறுகப்பற்றியபடியே என் மடியினிலே உயிர்விட்ட உயிர்த்தோழன் மேஜர் மனோவை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.” “ஊடறுப்புச் சமருக்காக நெஞ்சுமுட்ட நீருக்குள்ளால் நகர்ந்து கொண்டிருந்த போது எதிரியின் சரமாரியான செல் மழையில் மார்பில் காயப்பட்ட பெண் போராளி குப்பி கடிக்க முற்பட்ட போது குப்பியை பறித்துவிட்டு ஒரு கிலோ மீற்றர் தூரம் நீருக்குள்ளால் தோளில் காவிச் சென்று கரை சேரும் போது என் தோளிலேயே உயிர் பிரிந்த பெண் போராளியைப் பார்த்து இருக்கின்றேன்.” இது அவனது குறிப்பு பொத்தகம் சொன்ன அவனின் உணர்வுகள். இந்த உணர்வுகளைச் சுமந்து தானே இன்று அவன் சமரிட்டான். அவன் மட்டும் என்ன 21 கரும்புலி வீரர்களும் இப்படிப் பட்ட உணர்வுகளை சுமந்து தானே இன்று கரும்புலியாக உருவாகியிருந்தார்கள். அந்த உன்னத வீரர்களின் இலட்சிய தாகத்தின் முன்னாலும் அசையாத மனவுறுதியின் முன்னாலும் நெஞ்சை நிமிர்த்திய வீரத்தின் முன்னாலும் சிங்களக் கூலிப்படைகளால் எப்படி தாக்குப் பிடிக்க முடியும்? அந்த உன்னத வீரர்களை எதிர்கொள்ளும் துணிவு இவர்களுக்கு எங்கேயிருக்கின்றது? எதிரிகள் கலங்கி நிற்க ஆச்சரியத்தோடு வியந்து நிற்க எஞ்சியிருந்த ஒவ்வொர கரும்புலி வீரனும் மூர்க்கமாக போராடினான். விடிகாலை 3.20 மணிக்கு தொடங்கிய சண்டை காலை 9.00 மணிவரையும் தொடர்ந்த போதும் சிங்களப் படையால் உள்நுழைய முடியவேயில்லை. கடைசியாக கவச வாகனங்களை கொண்டு வந்து பெரும் குண்டு மழை பொழிந்துதான் அவர்களால் தங்கள் வான் படை தளத்தினுள் நுழைய முடிந்தது. அப்போது தங்களுக்கு தரப்பட்ட பணியை கரும்புலி வீரர்கள் உச்சமாக நிறைவேற்றி முடித்து வீரச்சாவை அணைத்திருந்தார்கள். சிங்கள தேசம் தனது ஆற்றாமையின் வெளிப்பாடாய் தங்கள் கோபங்களை கரும்புலி வீரர்களின் வித்துடலில் தான் தீர்த்துக்கொண்டது. பாவம் சிங்களப் படைகள். சிங்கத்தின் வழிதோன்றல்களுக்கு நாகரீகம் பற்றி புரிந்திருக்க நியாயமில்லைதான். ஆனால் கரும்புலிகள் வென்று விட்டார்கள். தலைவர் சொல்லி விட்டது போல வெற்றி பெற்ற அவர்களின் உன்னத அர்ப்பணிப்பால் உலகமிப்போது அவர்களின் பெயரை உச்சரிக்கின்றது. சிறீலங்காவின் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்சவை நவீன துட்டகைமுனுவாகச் சித்தரித்தபடி ஆழிக்கூத்தாடிய சிங்களத்தின் மீது, நவீன எல்லாளனாக புகுந்து அவர்களின் துட்டகைமுனு கொட்டத்தை அடக்கி முறித்ததுதெறிந்திருக்கிறார்கள். அந்த வீரர்கள் தனியே அநுராதபுர வான்படைதளத்திற்கும் மட்டும் தீ மூட்டவில்லை. பெரும் விடுதலை தீயை பலநூறு போராளிகளின் இதயங்களில் மூட்யிருக்கிறார்கள். நிச்சயமாய் இனிவரும் களங்களில் அவர்கள் சிங்களத்தின் தலையில் பேரிடியாய் இறங்குவார்கள். நினைவுகளுடன்: புரட்சிமாறன். நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (ஐப்பசி, கார்த்திகை 2007). https://thesakkatru.com/operation-ellaalan-on-anuradhapura-air-force-base/
    1 point
  4. ஆறு பந்து ஆறு ஆறுகள்........ இந்த அடியை நூறு வருடங்களுக்கு முன் அடித்து துரத்தியிருந்தால் இன்று தமிழினம் இவ்வளவு கேவலப்பட்டிருக்காது......! 🏏
    1 point
  5. தற்போது கருத்துக்கள உறவுகள் ஆறு விருப்புப் புள்ளிகள் வழங்கலாம்.
    1 point
  6. ஈழப்பிரியன்ஸ்... எமக்கு, தெரியாததை... கேட்டு, அறிந்து கொள்வதில்... தயங்கப் படாது. அதற்கு... வயது, வரம்பு... என்று, ஒன்றும் இல்லை ராசா. ❤️
    1 point
  7. எமை முழுதும் உமக்களிக்க எமக்கிருக்கும் ஆசைதனை எடுத்துரைக்கக் கூடிவந்தோம் ஏற்றருள்வீர் ஆண்டவரே இயேசுவுடன் உமை வணங்க நேசமுடன் நன்றி சொல்ல ஆசையுடன் மன்றாட தோஷமெல்லாம் தீர்ந்திடவே கல்வாரி மலைமேலே பலியான இயேசுவையே பலியாகத் தரவந்தோம் ஏற்றருள்வீர் ஆண்டவரே
    1 point
  8. லெப். கேணல் சேகர் வீரத்தின் உச்சம் லெப். கேணல் சேகர்: வீரத்தின் உச்சம் மனித வாழ்வியலில் விடுதலை என்பது உயிரின் தாகமாக உள்ளது. ஆனால் தாயகப் பற்றுகொண்ட விடுதலைப்போராளிக்கோ “விடுதலையே ஆன்ம பசியாகி விடுகிறது” இங்கு தான் ஒரு உண்டையான விடுதலைப் போராளி தன் உயிரை தாய் மண்ணிற்கென்றே ஒப்புவிக்கிறான். தனது தாயகப் பற்றுக்கும் இலட்சியப்பற்றிற்குமான உலகிலேயே உயர்ந்த விலையான உயிர் விலையை கொடுக்க முன்வருகிறான். தான் நேசித் தாயக மண்ணிற்காக தனது உயிரை மயிர்கூச்செறியும் படி தந்த மாவீரன் வீரவேங்கை லெப்ரினன் கேணல் சேகர் விடுதலை வரலாற்றில் வித்தியாசமான வரலாற்றை படைத்தான். ஓயாத அலைகளென எழுந்த களங்கள் மேலும் ஓர்படி மேலே சென்று ‘ஓயாத அலைகள் 04’ என்று பட்டப்பகலில் எதிரியை துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் அரிய வலுவை புலிகளுக்கு ஏற்படுத்தியது. அந்த களம் சிறப்பாக வெற்றி கொள்ளப்படுவதற்காக மாவீரன் சேனர் தனது களப்பணியை செய்தான். ‘ஓயாத அலைகள் 04’ கிற்கான வேவு நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமிருக்க தன்னையே நம்பி தலைவன் கடமையை ஒப்படைத்துள்ளான். எனவே அதை சீர்பட செய்து முடிக்கவென உறுதி எடுத்தான். 18.10.2000 அன்று வழமை போலவே வேவு அணிகள் பல எதிரியின் காவலரண் பிரதேசத்திற்கு முன்பாக தமது வேவு நடவடிக்கையை செய்யலாயின, நாகர் கோயில் கடற்கரையை அண்டிய பிருதேசத்திற்கு தமிழ்க்கண்ணனின் வேவும் அணியும் நகர்ந்து விட்டது. மாலை 5 மணிக்கு வேவு அணிதனது கடமைக்கென சென்ற அணி தனது அன்றைய நாளின் கடமையை செய்து விட்டு குறிப்பிட்ட சேரிடம் வந்தது. எல்லாமே சரியாக பார்க்கப்பட்ட வேவு முழு வடிவை தந்தது. என்றாலும் தனது பணியை சரிவரச் செய்யவேண்டுமென் தனக்கேயுரியதும், தனித்தவமானதுமான கடமையுணர்வுடன் மாவீரன் லெப். கேணல் சேகர் முன்னகர்கிறான். நேரம் இரவு 02 மணியாகி இருந்தது. நாகர் கோயில் கடல் அலைகள் கரையுடன் மோதும் மெலிதான சத்தத்தை தவிர வேறு ஓசையே எழவில்லை. சேகர் அப்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்தான். ஆனால் அவனிடம் எளிமையும், தாயகப்பற்றும் கலங்கமில்லாது இருந்தது. எனவேதான் தானே முன்சென்று அந்த வேவுப்பாதையை உறுதிப்படுத்தச் சென்றான். காரணம் தன்னை நம்பியே ஏராளமான போராளிகள் அந்த பாதையூடாக செல்லவிருந்தனர். தளபதி சேகர் இரவு 2 மணிக்கு முன்செல்வதாக அறிவித்தும் அவரோடு கூட இருந்த போராளிகளான நகுலனும், முத்தழகும் செல்லத் தடை விதிக்கின்றனர். சேகரண்ணை நாங்கள் சென்று பாதையை உறுதிப்படுத்துகிறோம். அந்த சாதரண வேலையை எங்களிடம் விட்டுவிடுங்கள் நாங்கள் போய் வருகிறோம் என்றதும் இல்லை இல்லை யாரும் என்னைத் தடுக்க வேண்டாம் நான் தான் போகவேண்டும்; நான் போய் உறுதிப்படுத்தினால் தான் நல்லது. என்று சொன்னவன் அந்த கருமிருட்டில் தனது சுடுகருவியுடனும், நடைபேசியுடனும் முன்னே செல்கிறான். அங்கு வேவு அணியிலுள்ள ஒரு போராளி முன்வந்து வழிகாட்ட அவனைத் தொடர்ந்து கப்டன் மதியும், சேகரும், முத்தழகனும், நகுலனும் முன் செல்கின்றனர். வேவு அணியுடன் சென்று எதிரியின் பிரதேசத்தை அதாவது அணிகள் கவலரணுக்கு 60 அடி தூரத்தில் எதிரியின் நடமாட்டத்தை அவதானித்தவாறே இருக்கின்றனர். தளபதி சேகரும் எதிரியின் குகைவாசலில் எதிரியை மிக அண்மித்து அவதானித்தவாறு இருக்கிறான். பல மணித்தியாலங்க்ள எதிரியின் நடமாட்டத்தை அவதானித்தவன், நேரம் அதிகாலை 4.30 தாண்டியும் எழுந்து வருவதாய் இல்லை. அங்கிருந்த போராளிகளுக்கோ பதற்றமாய் இருந்தது. அவர்கள் தங்களது தளபதியின் பாதுகாப்பை பற்றி யோசித்தனர். ஆனால் தளபதி சேகரோ தாய் நாட்டின் பாதுகாப்பை பற்றி யோசிக்கலானான். சேகரண்ணை 5 மணியாகப்போகுது விடிஞ்சுட்டுது. எதிரி கண்டிருவான். வாங்கள் போவோம் என்றனர். இன்னும் கொஞ்சநேரம் பார்ப்பம். காரணம் இதுவரை இரவு சண்டைக்கு ஏற்றமாதிரி பார்த்ததேன். அது 100 வீதம் சரி இனி பகல் சண்டைக்கு ஏற்றமாதிரி பார்க்கவேணும் காரணம் பகல் சண்டைக்குதான் சரிவரும் என்று மேலும் சில நிமிடங்கள் அவதானித்த கொண்டே இருந்தவன். போவோமென சொன்னபோதுதான் அது நடந்தேறியது. நேரம் சரியாக 5.20 நிமிடம் வேவு அணிக்கு வெளியேறும் படி கட்டளை வழங்கிவிட்டு எழுந்தவன். திடீரென எதிரியின் எதிர்த் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. எதிரியின் அணி ஒன்று திடீரென தாக்குதலை தொடுக்க, தளபதி சேகர் காயமடைந்துவிட்டான். அவர்களுக்கு சற்று பக்கவாட்டாக இருந்த எதிரியே தாக்குதலை தொடுத்திருந்தான். அந்த எதிரியின் அணி இரவு முன்னகர்ந்து நித்திரை கொண்டிருக்க வேண்டும் காரணம் விடிந்த பிறகே தாக்குதலை தொடுத்திருந்தான். தளபதி சேகர் காயமடைய அவ்விடத்தில் ஓர் பதற்றம் ஏற்பட்டது. திடிரென நிலைமையை சுதாகரித்துக்கொண்ட முத்தழகு சேகரை மீட்கமுயற்சி செய்ய அவ்விடத்திலேயே முத்தழகும் காயப்படுகிறான். நிலைமைக்கேற்ப நகுலன் அதிலிருந்த அணிகளை கொண்டு ஒரு பதில் தாக்குதலை தொடுத்து தளபதி சேகரையும், முத்தழகையும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்பே, தளபதி சேகர் தனது உடலை துளைத்த பெரிய காயங்களையும் பெரிதுபடுத்தாது தென்னரசனின் 81 மி.மீ ஏவுகருவி நிலையைத்திற்கு தொடர்பெடுத்து எறிகணை அடிக்கச் சொல்லி அறிவித்தான். மச்சான் எங்களுக்கு முன்னால் இருந்து தான் அடிக்கிறான். தொடர்ச்சியாக அதெ இடத்திற்கு அனுப்பு. என்று அறிவித்து விட்டு வேகமாக அடி மச்சான் டெய் தென்னரசன் வேகமாக அடி என்ற கட்டளையை வழங்குகின்றான். தளபதி சேகரின் கட்டளையை, அவனது நடைபேசி உரையாடலை நன்க கேட்ட தென்னரசன் தளபதி சேகருக்கு ஏதோ நடந்துவிட்டது என்று திடமான முடிவை எடுத்து சேகர் சொன்ன இலக்கிற்கு மாறி மாறி எறிகணைகளை ஏவினான். அதே சமநேரத்தில் அந்த இடத்திலிருந்து சேகரும், முத்தழகும் அப்பபுறப்படுத்தப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். தனது உடலை பல ரவைகள் துளைத்த போதும், தனது உடலிலிருந்து குருதி பெருக்கெடுத்து ஓடியபோதும் தன்னை காப்பாற்று என சொல்லாதவன், எதிரியை தாக்குவதிலேயே கவனம் செலுத்தினான் என்பதும் வெறும் வரிகளல்ல மாவீரன் சேகரின் உடலில் ஊறிப்போயிருந்த தமிழீழப்பற்றாகும. தனது வாழ்விலும் ஏன் சாவிலும் எதிரியை எதிர் கொண்ட அந்த மாவீரனான லெப். கேணல் சேகர். (மாயண்டி ஜெயக்குமார், கோணவில்) 23.10.2000 அன்று எமது படைய மருத்துவ மனையில் வீரச்சாவடைந்தான். இவனது வீரச்சாவு எத்தனை எத்தனையோ வீரவரலாற்றினை எமக்குக் கற்றுத்தந்திருக்கிறது. 1990 ஆம் ஆண்டு தன்னை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக்கொண்டவன். மாங்குள முகாம் தகர்ப்பின் போதே காவுங்குழுவில் தனது பணியை சிறப்பாக செய்து பின்னாளில் சிறப்பானதொரு படையணியின் சிறப்புத் தளபதியாகும் நிலைக்கு உயர்ந்திடும் அற்புதமான போராளி என்ற உரிமைக்கு ஆளானான். ஒவ்வொருவரினதும் வாழ்விலும் அவர்களின் முன்னனேற்றத்திற்கு அவர்களின் உழைப்பே முன்னிற்கும் தளபதி சேகரின் வரலாற்றிலும் அவ்வாறே சேகரின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் தளபதி தீபன் அவர்களே முதன்மையாக இருந்தார். சிறிய சிறிய விடயத்திலும் சேகரின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் ஊக்கம் கொடுத்து வீரத்தையும் போர்நுணுக் கத்தையும் ஊட்டிவளர்த்து சாதாரண ஜெயக்குமாரை மாவீரன் சேகராக மாற்றிய பெருமை தளபதி தீபன் அவர்களேயே சேரும். சேகர் அவர்களின் போர் நுணுக்கம், போரியல் அனுபவம் என்பனவற்றிற்கும், எதிரியை சரியாக அளவிட்டதற்குமாக எத்தனையோ உதாரணங்களைச் சொன்னாலும் மாவீரன் சேகரின் நினைவு என்றுமே மறக்க முடியாமல் நெஞ்சில் நிழலாடுகிறது. ஜெயசிக்குறு களம் விரிந்து கிடக்க தளபதி சேகர் அக்களத்திலே சிறகு நிலைக்கு (சிறகு பொயிசன்) பொறுப்பாளர் தளபதி தீபனால் நியமிக்கப்பட்டிருந்தார். குறித்த நாளொன்றில் சிறகு நிலையை பார்த்துவிட்டு புளியங்குளம் முகாமை நோக்கி வந்தபோது புளியங்குள மாவித்தியாலய மைதானத்தை நெருங்கிய போது எதிரியின் 81 மி.மீ, 60 மி.மீ ஏவுதளங்கள் திடீரென உயிர்பெற்றன. டுப்,டுப்,டுப், டம்,டம் என்றதும் சேகர் நிலைமையை உணர்தவனாய். அடிக்கடி போறான் வங்கருக்க பாயுங்கோ என்றதும் சேகரோடு வந்த நாம் பாய்ந்த நிலையெடுக்கவும் எதிரியின் பீ.கே சுடுகருவிகள் 03.04 வேட்டைத்தீர்க்கவும் சரியாக இருந்தது. அதேவேளை எதிரி ஏவிய எறிகணைகள் பரவலாக வெடிக்கத் தொடங்க, சேகர் தன்னோடு கூடவந்தவனிடம் டொங்கதனை வாங்கி எழுந்து நின்று 02 40மி.மீ எறிகணைகளை அடித்தான். சேகர் சடுதியாக தேர்தெடுத்து அடித்த அதே இடத்தில் திடீரென எதிரியின் பீ.கே சூடு நின்றுபோக, எழும்பி ஓடிவாங்கோ இந்த இடத்த தூளக்கபோறான் என்று ஓடத்தொடங்கியவனை தொடர்ந்து நாமும் ஓடினோம்; எறிகணைகள் விழவிழ புகையிரத வீதியால் ஓடி புகையிரத பால்ததில் காப்பெடுத்தோம். எதிரியின் எல்லாவித எறிகணைகளும் கலவனாக வந்து வீழ்ந்து வெடித்து ஓய்ந்ததும் அவ்விடத்தை பார்த்தோம் . உண்மையில் அந்த இடம் சாம்பராகி இருந்தது. எதிரி எந்த இடத்தில், எதை எப்படி, எந்த வியுகத்தில் செய்வான் என்பதை சேகர் தனது போர்நுணுக்கத்தினால் நன்கு கணிப்பிட்டிருப்பது அவனது சிறப்புத் தேர்ச்சியாகும். சேகரின் திறமைக்கு இன்னுமொரு சாட்சி சேகரின் வழிநடத்தலில் ‘ஓயாத அலைகள் 02’ இன் முலம் கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி முன்னரங்க கட்டடப் பகுதியால் நிரப்பப்பட்ட எதிரியின் முதலாம் நிலை கட்டளை மையத்தை கைப்பற்றியதாகும். தனது தனித்துவமானதும், இயல்பான வீரத்திலும் எளிமையாக கட்டளையை வழங்கி இலங்கை இராணுவ மேல் நிலை கவ்வியையும் நீண்ட படைய அனுபவத்தையும் கொண்ட கேணல் உபாலி எதிரி சிங்கவை பின்வாங்க வைத்ததன் ஊடாக சேகர் ஓர் போர் அதிகாரி என்பதனை உறுதிப்படுத்தினான். சிறுவயதிலேயே போராளியாக இணைந்தவன் சிறு வயதிலேயே சிறந்தொரு வேவு வீரனாகவும், வீரம்மிக்க சண்டை ஆற்றல் கொண்டவனுமாக வளர்ந்து மாவீரன் லெப். கேணல் அவர்களின் உயர்நிலை படைய கற்கை நெறியிலும் பங்கேற்று புதியதொரு அறிவாற்றலை பெற்றதனால் தொடர்ந்து இயக்கத்தில் நடந்த அனைத்துத் தாக்குதல்களிலும் திறம்பட சண்டை செய்து பல வெற்றிகளை பெற்றுத்தந்து விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்கினான். ஆரம்பத்தில் 50 கலிபர் துப்பாக்கி அணியில் ஒருவனாக களமிறங்கியவன் தனது அயராத உழைப்பினால் பல 50 கலிபர் கொண்ட பெரிதொரு சண்டை அணிகளுக்கே பொறுப்பாளனாக உயர்ந்தான். தன்னைப் போலவே போராளிகளையும் நேசித்தவன். ஒவ்வொரு போராளிகளினதும் தனிப்பட்ட குடும்ப நலன்களில் அக்கறை உள்ளவனாகவே இருந்தான் பல போராளிகளை வீரமிகு சண்டைக்காரர்களாகவும், அணித்தலைவர்களாகவும் வளர்த்துவிட்ட பெருமை அவனையே சாரும். எந்தச்சண்டைக்கும் முன் நின்று உழைத்தவன் கிளிநொச்சி டிப்போசந்தி சண்டைக்கும், ‘ஓயாத அலைகள் 02’ சண்டைக்கும் முன் நின்றே உழைத்ததோடு அதையும் கடந்து தடை அணியோடு முன்னகர்ந்து தடை உடைக்கும் மட்டும் அவ்விடத்திலேயே நின்று தனது கட்டளைப் பீடத்தை செயற்படுத்தியதை இலகுவில் எவராலும் மறக்கமுடியாது. 1998 ஆம் ஆண்டு 2ஆம் மாதச் சண்டைக்கு மீனாட்சிஅம்மன் கோயிலடியில் தடை உடைத்து அணி உள்நுழையும் போது அணிகள் நகர்கின்ற பாதையில் ஒரு பாழடைந்த கிணறு இருந்தது. அதில் போராளிகள் விழுந்து விடாதவாறு அதற்குப் பக்கத்திலேயே இருந்து தம்பி கவனமடா, டேய் கவனமடா, மச்சான் கவனமடா, அண்ணை கவனம் என்று சொல்லி சொல்லி அனுப்பிய அந்தத் தளபதியை போராளிகளால் என்றுமே மறக்க முடியாது. அந்தளவு பாசமும் பற்றும் அவனில் உருவாகி இருந்தது. சேகர் இந்தத்த தேசத்தை காக்கவென பல சிறிய தாக்குலென ஏராளமான சண்டை செய்து அதில் காயமடைந்தம் வீரச்சாவடையும் வரையும் வீரமுடன் களமாடினான். தன் தாய்நாட்டை, தன் தலைவனை, தனது போராளிகளை, தனது உறவையென எல்லோரையும் நேசித்தான். தமிழீழம் கிடைத்தால் எல்லா மாவீரரின் வீட்டையும் போய் அவர்களின் உறவுகளோடு அவர்களின் வீரத்தை சொல்லவேண்டும்மென தனது நாட்குறிப்பில் எழுதியவன். தன் வீரத்தை உலகிற்கு சொல்லி தமிழனின் வீரத்திருவேட்டில் காவியமாகிவிட்டான். நினைவுப்பகிர்வு: க.மிரேசு. நன்றி – வெள்ளிநாதம் இதழ் (21-27.10.2005). https://thesakkatru.com/the-pinnacle-of-lieutenant-colonel-sekar-heroism/
    1 point
  9. اللهم اغفرلنا...... اللهم اغفرلنا.......اللهم اغفرلنا...... يا الله நோயின் சோதணை போதும் இறைவா... வாழும் வழியருள் எந்தன் இறைவா... பாவம் பொருத்து பலாய்கள் நோயை... நீக்கி வாழ்வில் அருள் சுகம் தருவாய் கோபமிருந்தால் காமில் நபியின் முகத்தின் பொருட்டால் நோயை போக்கு... கோடி உயிரின் பாவம் தீரும் வேந்தர் நபியின் முகத்தின் அருளால்... (நோயின் சோதணை) தாங்க முடியா நோயின் பிடியில் காலம் கசக்கிறதே! பாவமறிந்தே பூமியில் எங்கும் செய்த கோபமிதே! இறைவன் நாடும் விருப்பம் மறுத்து ... வாழும் முறை ஏனோ.... கோடி உயிரின் கேடில் விளைந்த ... இறைவன் சோதணையோ...! தன் நலம் போதும் என்ற வாழ்க்கை என்றும் வேண்டாமே! மார்க்கத்தில் பூத்திட்ட சொற்க்கள் ஏற்று வாழ்வோமே..! மன்னெல்லாம் போராடி காத்தும் ஏதும் பயனில்லை... இறைஏகன் முகம் நாடி ஏந்தும் கைக்கு ஈடில்லை... இறைவா எங்கள் நிலமை... உன்னை மறந்தே வந்த வறுமை... மனதாய் உம்மை ஏந்தும் ... கைகளோ நிறைந்தால் போதும்... اللهم اغفرلنا...... اللهم اغفرلنا.......اللهم اغفرلنا...... يا الله (நோயின் சோதணை) கொள்ளை நோயின் கோர பிடியில் நாளும் கடக்கிறதே ... என்ன பாவம் செய்தோம் என்று அறியா நிலைதனிலே... இறையை துதித்து போற்றி மகிழும் இல்லம் உறங்கிடுதே... வணக்கம் மறந்து வாழ்ந்த யாவும் வணங்க தவிக்கிறதே... மண்னகம் முழுதும் நியாயமற்று போனதே... வின்னகம் நோக்கி ஏந்தும் கரம் இல்லையே ... பாவங்கள் செய்திட மணம் தடை இல்லையே... சோதணை அடைந்தும் இறை பயம் இல்லையே... இறைவா எங்கள் மனதில் ... நிரப்பிடு உந்தன் பயத்தை ... பிஞ்சுகள் உள்ளம் பார்த்து... அருள்வாய் பிழையை தீர்த்து ... اللهم اغفرلنا...... اللهم اغفرلنا.......اللهم اغفرلنا...... يا الله (நோயின் சோதணை) உலகின் ஆசை உள்ளத்தில் முழுதாய் நிறைந்து கான்கிறதே... இறைவன் காட்டிய மார்க்க வழியில் நடக்க மறுக்கிறதே... சொத்து சோபனம் இருந்தால் போதும் என்ற ஆசையிலே... கியாம நாளை மறந்து நாமும் வாழும் நிலை இதுவே... பாவத்தை தினம் தினம் கண்கள் மூடி செய்கின்றோம்... சோதணை வந்தால் மட்டும் இறைவனை பார்க்கின்றோம்... வாழ்க்கையின் ஆசையிலே ஹராம் ஹலால் மறக்கின்றோம்... இறையோனின் கோபம் தரும் பாவம் வாழ்வில் செய்கின்றோம்... இறைவா பாவி எமக்கு... நோய்பலாயை சுகமாய் ஆக்கு... இனிதாய் உன்னை போற்றும் .... வணக்கத்தை வாழ்வில் ஆக்கு... اللهم اغفرلنا...... اللهم اغفرلنا.......اللهم اغفرلنا...... يا الله (நோயின் சோதணை) اللهم اغفرلنا...... اللهم اغفرلنا.......اللهم اغفرلنا...... يا الله
    1 point
  10. மகமூட் நபிகள் பிரானே
    1 point
  11. செம் கேழ் அடுத்த சின வடிவேலும் திருமுகமும் பங்கே நிரைத்த நல் பன்னிருதோளும் பதுமமலர்க் கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே.சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச் சரணயுக ளமிர்தப்ரபா சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக சத்யப்ரி யாலிங்கனச் சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி யம்பக விநாயகன்முதற் சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு சித்ரக் கலாபமயிலாம் மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க வனசரோ தயகிர்த்திகா வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய வராசலன் குலிசாயுதத் திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண இகல்வேல் விநோதன் அருள்கூர் இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ ரத்னக் கலாப மயிலே.
    1 point
  12. திருநீற்று மந்திரம் "ஓம் சரவணபவா" பழநி ஷண்முக சுந்தர ஓதுவார் திருப்புகழ் அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய் சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர் திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய் மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர் மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து படியதிர வேந டந்த ...... கழல்வீரா பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.
    1 point
  13. 1 point
  14. Lesson 13 l Syllabe et l French with Pirakalathan l ASCES....! பிரான்சின் சின்னங்கள் பற்றிப் பார்ப்போம்.....! நீங்கள் பிரான்சில் குடியுரிமை கேட்கும்போது இது சம்பந்தமான கேள்விகளும் கேட்கப் படுவது வழமையாகும்.....! இனி பாடத்துக்குள் செல்வோம் ......! 😁
    1 point
  15. எல்லோரும் கேட்பதால்.... சொல்லத்தான், வேண்டும். 22.10. 2020 அன்று... நியானி, 12 விருப்பப் புள்ளிகள் எடுத்து உள்ளார். அவருக்கு... யார், அந்த நாளில்... புள்ளிகளை குத்தியவரை தேடினால்... ஒரே... ஒருவர், மட்டும் வருகிறார். இது, எப்படி சாத்தியம். ❓
    0 points
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.