Jump to content

Leaderboard

 1. பெருமாள்

  பெருமாள்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   10

  • Posts

   12806


 2. nunavilan

  nunavilan

  கருத்துக்கள நிர்வாகம்


  • Points

   10

  • Posts

   47570


 3. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Posts

   37988


 4. தனிக்காட்டு ராஜா

  தனிக்காட்டு ராஜா

  கருத்துக்கள பார்வையாளர்கள்


  • Points

   6

  • Posts

   9179


Popular Content

Showing content with the highest reputation on 12/02/20 in all areas

 1. இந்த இரண்டு லண்டன் பொம்பிளைகளிடம் வாய் காட்ட கூடாது பெருமாள் என்று எனக்கு நானே அடித்துக்கொண்டு ஒதுங்கி விடுறன் ஆளை விடுங்க .அடுத்தவ வந்து விசாரணை கமிஷன் அமைக்காவிட்டால் நல்லது .
  6 points
 2. கொடிது கொடிது வறுமை கொடிது அதனிலும் கொடிது இளமையில் வறுமை. - ஔவையார் https://www.facebook.com/vara.mahadevan.1/videos/10164968333845724 அருந்ததி- 0772151592 மலையாளபுரம் கிளிநொச்சி. நன்றி. முடிந்தளவு share செய்து உதவுங்கள்
  4 points
 3. மழையும் குளிரும் மெல்லிய கூதல் காற்றும் இஞ்சி தேநீரும் இதமாக சூடேற்றுகிறது இங்கே புயல் வருமென புகையும் அடுப்பும் கூப்பன் மாவில் குண்டான றொட்டியாக தேங்காய் சம்பலில் தேசிக்காய் புளியிலே மாசியும் மசிந்து மழையிலே வயிறு நிறைகிறது.
  4 points
 4. மொசாட் - உலகின் தலைசிறந்த உளவு அமைப்பு.அதன் சிறப்பம்சங்களும் தோற்ற வரலாறும். மொசாட். கேட்ட உடனேயே லேசாக அடிவயிற்றில் அமிலம் சுரக்க வைக்கும் பெயர். உலகின் அதிபயங்கர உளவு அமைப்பு. இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொசாத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் இரண்டாயிரம் பேர் வரை இருக்கலாம் என்பது உறுதிப்படுத்தப் படாத தகவல். அத்தனை பெரும் உளவாளிகள். ஆனால் யாரென்று அறிந்து கொள்ளமுடியாத பல்லாயிரக்கணக்கான ரகசிய உளவாளிகள். மொசாத் அமைப்பிற்கு உலகெங்கிலும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு பக்கத்தில் ஒரு மொசாத் இருந்தால்கூட ஆச்சரியமில்லை. உலகத்தில் இருக்கும் அத்தனை உளவு நிறுவங்களில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தைவிடவும் பல மடங்கு அதிகமானது மொசாத்தின் சம்பளம் உலகத்தில் உளவு அமைப்புகளுக்காக வரையறுக்கப்பட்ட வரம்புகளைக் காட்டிலும் மிக மிக அதிக அதிகாரத்தைக் கொண்டிருப்பது மொசாத் மட்டுமே. இஸ்ரேலில் மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியிலும் கூட ஒரு மொசாத் ஏஜெண்ட், தமது தேசத்தின் எதிரி என்று கருதக்கூடியவர்களைக்கொல்லுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அரசியல் கொலைகளை அதிகாரபூர்வமாகச் செய்வதற்கு மொசாத் அமைப்பிற்கு அனுமதி இருக்கிறது என்றால் மிகையாகாது. இந்த உளவு அமைப்பில் உலகத்தில் உள்ள எவரும் சேரலாம். யூதர்களுக்கு முன்னுரிமை உண்டு. ஆனால், அவர்கள் அளிக்கும் பயிற்சிகள் பரம ரகசியமாக வைக்கப்படும். கை கால்களை கட்டி கடலில் போட்டால் கூட நெஞ்சை வைத்தே நீத்தி கரைசேர்வது உள்ளிட்ட பயிற்சிகள் கொடுக்கப்படும். மொசாட் இஸ்ரேலின் உளவுப்படை. மொசாட்டுக்கென்று தனியாக அலுவலகம் (அறிவிக்கப்பட்டது) எதுவும் கிடையாது. அரசாங்க வேலைக்கு ஆளெடுப்பு என செய்திதாளில் செய்தி மட்டுமே வரும். அதற்கு செல்லும் நபருக்கு, தான் மொசாட் பணிக்குத்தான் செல்கிறோம் என்று கூடத் தெரியாது. இது எல்லா நாடுகளிலும் கிளை விரித்துப் பரவியுள்ளது. இஸ்ரேலுக்கு தீங்கு விளைவிக்க நினைத்தாலேஅந்த நாட்டின் நிம்மதியை கெடுக்கும் மொசாட். அமெரிக்காவின் மேற்பார்வையில் உருவானது மொசாட். பின் நாளில் குருவுக்கே தண்ணி காட்டும் சிஷ்யனாக வளர்ந்தது. ஒரு நபரை அவரின் அனுமதியில்லாமல் அவருக்கே தெரியாமல் தன் உளவு வேலைக்கு பயன்படுத்திக் கொள்ளும் திறைமை மொசாட் உளவாளிகளுக்கு உண்டு. மொசாட்டில் ஒருவர் சேருவது என்பது சாதாரண விஷயம் இல்லை. பல கட்ட சோதனைகள் இருக்கும். பல்வேறு விதமான பயிற்சிகள் என இருக்கும். உலகின் பல மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். எந்தக் கடினமான சூழ்நிலையையும் மிக சாமர்த்தியமாக சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும். இந்த சோதனைகளில் பங்கேற்கும் போதே பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டும். இந்த சோதனைகளில் வெற்றி பெற்றுவிட்டால் உளவுக்காக அமர்த்தபடுவார்கள். இல்லையென்றால் அதோடு அவனின் கதை முடிந்தது.. பாகம் 1. மறுபடியும் வேறு விதமாக கேள்விகள். மொசாட் அவ்வளவு பயங்கரமானதா.? இல்லவே இல்லை!! அதிஅதி பயங்கரமானது. உலகத்தில் வீசப்படும் ஒவ்வொரு குப்பைப் பேப்பரும், பழைய கம்ப்யூட்டர்களும் ஆராயப்படும். எனது இந்தப் பதிவு, முந்தைய பதிவிலிருந்து, அதன் லைக், கமெண்ட் வரை தோண்டிவிடுவானுக. 24 மணி நேரமும் காலை ஆட்டிக் கொண்டே இருக்கும் வேட்டை நாய். இன்னும் ஒரு அழகான விடயம். மொசாட்டை வடிவமைப்பு செய்தது ஒரு பெண்!! பல்லாண்டுகள் அந்த தேசத்தின் பிரதமர். ஜெயா போல, இந்திரா போல, சுப்பீரியர் பர்சனாலிட்டி!! இது இப்படித் தான் கேள்வி கேட்கும், சந்தேகப்படும் நபர்கள் வரலாற்றில் தேவை இல்லை. ஜெகோவா. உங்களுக்கு ஒரு விருந்தாளி. தனது மொசாட்டுக்கு உலகத்தில் யார் வேண்டுமானாலும் உளவாளியாக வரலாம் என வெப்சைட் வைத்து உள்ள ஒரே ஒரு உளவு அமைப்பு அதுதான். டபிள் செக், ட்ரிபிள் செக், க்வாட்ரோ செக், பென்டா செக், க்யுனோ செக், நேனோ செக்..என பலகட்டப் பரிசோதனை நிகழும். நிழல் தவறாக அசைந்தாலும், உங்கள் பரம்பரை அத்திப் பட்டியில் புதைக்கப்பட்ட அஜீத் குடும்பம் தான். அப்ப, மற்ற நாடுகளின் உளவு அமைப்புகள்.?? சிம்பிள். அமெரிக்கா 9|11 பிரான்ஸ், பெல்ஜியம், இந்தியா. உலகம் முழுவதும் குண்டு வெடிப்பு. ISIS. உலகம் முழுவதும் வெறியாட்டம்.!! இதுவரை, இஸ்ரேலில், குண்டு எல்லாம் இல்லை. பட்டாசு வெடித்தது என்று செய்தி பார்த்து இருக்கிறீர்களா.?? அதுதான் மொசாட்!! அதனால் தான் அது மொசாட்.!! பாகம் 2 சரி.. இதுவரை நீங்கள் சொன்ன மொசாட்டை எவனுமே ஜெயித்ததில்லையா.? ஆம். ஒரே ஒருவர் உண்டு!! அவன் இன்று உயிரோடு இல்லை என்கின்றனர். ஆனால் பிணத்தைக் காட்டவில்லை. தப்பித்தவறி மீண்டும் உயிரோடு வந்தால்?? அவர்களிடமும், மற்றும் அவர்களது பரம எதிரிகளிடமும், அதாவது பாலஸ்தீன போராளிகளிடமும் ஒரே நேரத்தில் தன் வீரர்களைப் போர் பயிற்சி பெற வைத்தவர். கொரில்லா என்ற திடீர்த் தாக்குதல் என்ற உத்தியில், தற்கொலைப்படை என்ற ஒன்றை உருவாக்கி, உலகத்தை அதிரச் செய்தவர்!! மனித வெடிகுண்டு என்ற ஒருபோர் உத்தியைக்கையாண்ட முதல் போராளி இயக்கம். செக்கோஸ்லோவேக்கியா இரண்டாகப்பிரிக்கப்பட்டு, செக் ரிபப்ளிக் மற்றும் ஸ்லோவேக்கியா எனப்பிரிந்த போது அதில் ஒரு நாட்டிலிருந்து இஸ்ரேலியத் தயாரிப்பு விமானத்தைக் கொண்டு வந்து, அதைவைத்து ஒரு விமானப் படை உருவாக்கியவர். அதைவைத்தே அந்த நாட்டுத் தயாரிப்பு விமானங்களைச்சுக்கு நூறாக்கியவர். அவர் பெயர் #கரிகாலன். அவருக்கு மற்றொரு பெயர் உண்டு. ஆம். எம் தலைவர்!! வேலுப்பிள்ளை_பிரபாகரன். இஸ்ரேலிய ஆயுதங்களும், இந்திய ரேடார்களும் பயனின்றிப் போன இடம். #கட்டுநாயக விமான தளம். மொசாட்கள் மோப்பம் பிடிக்காமல் கோட்டை விட்ட இடம். உலகத்தில் மொசாட் தோற்ற இடம் அது. அதன் பெயர் ஈழம். அதுவே எங்கள் சகோதர தேசம்.
  3 points
 5. குளிர்..... ----------------------- கதவுகளின் இடுக்குகளினூடாக கசிந்து வருகின்றது துருவங்களில் பயணித்த குளிரின் சாரல் கிளைகளினூடே தாவி ஏறுகின்ற குளிர் இலைகளின் விளிம்பில் உதிர்ந்து என் அறையெங்கும் வியாபிக்கின்றது வெளியே பூனை ஒன்று குளிரின் அரவம் கேட்டு தன் மீசைகளை ஒடுக்கி கதவுகளினூடே உள் நுழைகின்றது குளிர் எப்போதுமே இளமை காலம் ஒன்றில் கடந்து போன திருவெம்பாவை பாடல்களையும் வைரவர் கோவிலின் அதிகாலைப் பூசைகளையும் அந்தோணியார் கோவிலின் மார்கழி மாத இயேசு பிறப்பையும் நினைவுபடுத்திக் கொள்கின்றது இடையிடையே மார்கழி மழையில் நனைந்த நந்தியாவட்டை பூவின் வாசத்தையும் பவள மல்லிகையின் இளம் சிகப்பு இதழ்களையும் கூட குளிர் ஞாபகப்படுத்தி செல்கின்றது குளிர் ஒரு காலப் பெரு நதி தன் கீழ் புதைந்து கொண்ட எல்லா நினைவுகளின் மேல் பனியை பொழிந்து இனிப்பை தடவிச் செல்கின்றது சில நேரங்களில் அது தகிக்கும் நினைவுகளின் மீது பெரு நெருப்பை மூட்டி விட்டுச் செல்வதையும் தவறவிடுவதில்லை... ---- நிழலி Nov 29/2020
  3 points
 6. வாழ்த்துகள் நடராஜன். நூல் இல்லாமல் தமிழ் நாட்டில் இருந்து இந்திய அணியில் இடம் பிடித்த முதல் தமிழன் என்று நினைக்கிறேன். நூல் கவசம் இல்லாதபடியால் தூக்கி எறிய துடிப்பார்கள். திறமை கைகொடுக்கட்டும்.
  3 points
 7. முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது. அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டு விட வேண்டும். இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம். அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்த போது ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்களாக விளங்கினர். நாளடைவில் அந்த‌த் தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார். ஆதலால் அந்நாட்டின் சட்டப்படி அவரை மகன் மலைப்பகுதியில் கொண்டு விட்டு விட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான். தந்தையைப் பிரிய அவனுக்கு மனமே வரவில்லை. எனினும் அரச தண்டனைக்குப் பயந்து அவன் தன்னுடையத் தந்தையை மலைப்பகுதிக்கு முதுகில் சுமந்து சென்றான். மலைப்பகுதியை அடைந்த போது அவனுடைய மனம் மிகவும் வருந்தியது. ஆதலால் அவன் தந்தையை தன்னுடனே அழைத்துக் கொண்டு திரும்பி வீட்டிற்கு வந்து விட்டான். வீட்டின் பின்பகுதியில் தந்தையை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தான். மிகவும் ரகசியமாக அவருக்கு உணவளித்து வந்தான். சாம்பல் கயிறு. ஒரு நாள் அரசன், தன் மக்களின் அறிவுத் திறனை சோதிக்க எண்ணி, போட்டி ஒன்றை அறிவித்தான். சாம்பலால் திரிக்கப்பட்ட கயிறினை கொண்டு வர வேண்டும் என்பதே அப்போட்டியாகும். போட்டியைக் கேட்டதும் எல்லோரும் சாம்பலால் எவ்வாறு கயிறு திரிக்க இயலும் என்று எண்ணினர். யாராலும் சாம்பல் கயிறு உருவாக்க முடியவில்லை. அரசனின் போட்டி பற்றி அந்த‌ மகன் தன் தந்தையிடம் தெரிவித்தான். போட்டியைக் கேட்ட தந்தை, மகனிடம் பெரிய தாம்பாளத்தில் கயிறினை முறுக்கி வைத்து, அதனை எரியச் செய்தால் சாம்பலால் திரித்த கயிறு கிடைக்கும் என்றார். மகனும் தந்தை கூறியபடி தாம்பாளத்தில் கயிறினை வைத்து எரித்தான். கயிறு எரிந்து சாம்பாலான பின்பும் அதே கயிறு வடிவில் இருந்தது. இதனை அரசனிடம் காண்பித்து பரிசினைப் பெற்றான். அடி எது? நுனி எது? ஒரு மாதம் கழித்து அரசன் இரண்டாவது போட்டியை அறிவித்தான். அரசன் ஒரு மரக்கொம்பைக் கொடுத்து இதனுடைய அடிப் பாகம் மற்றும் நுனிப் பாகத்தைக் கண்டு பிடிக்குமாறு மக்களுக்கு ஆணையிட்டான். கிட்டத்தட்ட இரு பகுதியும் ஒன்றாகத் தெரிந்ததால் யாராலும் அடி எது? நுனி எது? என்று சொல்ல முடியவில்லை. மகன் தந்தையிடம் அரசனின் கேள்வியைக் கேட்டான். தந்தை மரக்கொம்பை தண்ணீரில் போட்டால், அது லேசாக சாய்வாக மூழ்கும்; அப்போது கீழ் நோக்கி இருக்கும் பகுதி அடி, மேல் நோக்கி இருக்கும் பகுதி நுனி என்றார். மகனும் தந்தை கூறியவாறே அரசனுக்குச் செய்து காண்பித்து இம்முறையும் பரிசினைப் பெற்றான். தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம். அரசன் மூன்றாவது போட்டியை மிகவும் கடுமையானதாக வைத்தான். அதாவது தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் ஒன்றினைத் தயார் செய்து வருமாறு மக்களிடம் கூறினான். வழக்கம் போலவே எல்லா மக்களும் பின்வாங்கி விட்டனர். அரசனின் கேள்வியால் மகன் மிகவும் சோர்ந்து தந்தையிடம் வந்து நடந்ததைக் கூறினான். தந்தை அவனிடம் “மேளத்திற்குத் தேவையான தோல்களை எடுத்துக் கொள். மலைப்பகுதிக்குச் சென்று தேனீக்கூடு ஒன்று கொண்டு வா. அதனை உள்ளே வைத்து மேளத்தை தயார் செய்” என்றார். மகனும் தந்தை கூறியவாறே மேளத்தை தயார் செய்து அதனை அசைக்காமல் கொண்டு சென்று அரசனிடம் தந்தான். அரசன் மேளத்தைக் கையில் எடுத்து மேளத்தை அசைத்தான். மேளத்திற்கு உள்ளே இருந்த தேனீக்கள் அசைவினால் மேளத்திற்குள் இங்கும் அங்கும் பறந்தன. இதனால் மேளத்தில் தட்டாமல் ஒலி உண்டானது. இதனைக் கண்டு ஆச்சர்யமடைந்த அரசன் “உன்னால் எப்படி மூன்று கேள்விகளுக்கும் சரியான விடைகளை செய்து காண்பிக்க முடிந்தது?” என்று கேட்டான். அனுபவம் தந்த பதில்கள். “அரசே உங்களுடைய கேள்விகளுக்கு விடை காணும் அளவிற்கு எனக்கு அனுபவம் கிடையாது. என்னுடைய வயதான தந்தை என்னுடன் இருக்கிறார். அவர் மூலமே எனக்குத் தங்களின் கேள்விக்கான பதில் கிடைத்தது.” என்று கூறினான். இளைஞனின் பதில் அரசனை நெகிழச் செய்தது. சிக்கலான பிரச்சினைகளைத் தீர்வு செய்ய‌ வயதானவர்களின் அனுபவம் உதவியாக இருக்கும் என்பதை அரசன் உணர்ந்து கொண்டான். உடனே அவன் “இனி வேலை செய்ய இயலாத வயதானவர்களை, மலைப்பகுதிக்கு கொண்டு போய் விடத் தேவையில்லை” என்று உத்தரவு போட்டான். அதுமுதல் வயதானவர்கள் தங்கள் கடைசிக் காலத்தை பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகக் கழித்தனர். அனுபவ அறிவு என்றைக்கும் விலை மதிப்பில்லாதது என்பதைத் தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் கதை மூலம் அறியலாம். ஆம், வயதான பெரியவர்கள் வீட்டில் இருப்பதே நமக்கு இறைவன் கொடுத்த அருள் என்று உணர்வோம். நம்மை ஆளாக்கிய பெற்றோரின் வயதான காலத்தில் அவர்கள் நம்மோடு இருப்பதும் அவர்களை பராமரிப்பதும் நமக்கான கடமை மட்டுமல்ல நமக்கு கிடைத்த அருள் என்று உணர்வோம். தொப்புள் கொடியில் இருந்தே தொடங்கிய தாயும் மார்பிலும் தோளிலும் தூக்கிச் சுமந்து கால் தேய உழைத்து நம்மை உருவாக்கிய தந்தையும் நம்மிடம் நன்றியை எதிர்பார்க்கவில்லை FB
  2 points
 8. என்னத்தை சொல்ல..! இந்த மாதிரி 'மெண்டல்கள்' இருக்கும் வரை, தமிழ்நாடு உருப்பட்ட மாதிரிதான்..!
  2 points
 9. கொஞ்சம் அமைதியாகுவும் என்றாலும் பெற்றோல் கானுடன் வந்து நிக்கிறியள் .
  2 points
 10. குமரி இடைத்தேர்தல் பணிகளில் தீவிரம் ரொம்ப லேட் நாம் வயது வந்ததில் இருந்தே இந்த பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்பதை இத்தால் கூறிக்கொள்ள கடமைபட்டு இருக்கிறோம்
  2 points
 11. 1) அமெரிக்க இஸ்ரேல் கூட்டின் இலக்கு ரஸ்யா என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும் வர்த்தகத்தில் ரஸ்யாவை வளரவிடாமல் இருக்க ரசியாவின் கூட்டுக்களை அழித்து வந்தார்கள் பொருளாதார நெருக்கடி நேரடி போர் இரண்டையும் பயன்படுத்தினார்கள் ரசியாவிற்கு இருக்கும் இரண்டு மிச்ச சியா முஸ்லீம் நாடுகள் சிரியாம் ஈரானும் மற்ற சன்னி முஸ்லீம்கள்ளை சவூதியையும் மெக்காவையும் வைத்தே கைக்குள் போட்டு கொள்கிறார்கள் சிரியாவுக்காக நேரிலேயே வந்து ரஸ்யா இறங்கும் என்பதை யாரும் எதிர்பாக்கவில்லை 2011இல் எல்லோரும் நாங்கள் கூட சதாம் குசெய்ன் கடாபி போல ஒருநாள் பஷார் அசாத்தும் இறந்து கிடப்பர் என்றுதான் எண்ணினோம் ......... ஆனால் அப்போதும் நான் இங்கு எழுதிவந்தேன் சிரியா வீழ்ந்தால் அடுத்து ஈரான் ஆகவே ரஸ்யா யாரும் எதிர்பாராத ஒரு காய்நகர்வை செய்யும் என்று ஆனால் நேரிலேயே சென்று இறங்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை சிரியாவுக்காக நேரிலேயே சென்று இறங்கினால் ... ஈரானுக்கு என்ன செய்யும் என்பது எல்லோருக்கும் தெரியும் இன்றைய நிலையில் அணுவாயுதத்தை ஈரான் தயாரிக்க கூட தேவை இல்லை என்ற நெருக்கடியைத்தான் மேற்கு நாடுகள் ரஸ்யாவுக்கு உருவாக்கி இருக்கிறார்கள் 2) தற்போதைய உலக வல்லாதிக்க அரங்கில் யாரும் எதிர்பாராத வளர்ச்சியை சீனா கண்டிருக்கிறது ஈரானை சமர்த்தியமாக காக்க வேண்டிய ஒரு கடமை சீனாவுக்கும் உருவாகி இருப்பது மேற்கு உலகிற்கு மேலும் சிக்கலானது. வட கொரியா ஈரான் பாகிஸ்தான் மூன்றும் சீனாவின் முன்னணி காவலரண்கள் சீனாவின் உளவு வேலை எந்த அளவு ஆழமானது என்பது யாருக்கும் தெரியப்போவதில்லை உற்பத்தி பொருட்களை மேற்கு சந்தையில் விற்கும் தேவை இருப்பதால் சீனா எதையும் யாரிடமும் கூற போவதும் இல்லை. ரஸ்யாவின் தோல்விகளில் இருந்தே சீனா பாடம் கற்று வருகிறது என்பதால் சீனாவின் நகர்வுகள் அனைத்தும் துல்லியமானவை. 3) நீண்ட நோக்கில் பார்த்தால் பொருளாதார ரீதியாக ஈரானுடன் சொறிவது என்பது அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் வீண் விரயம். அமெரிக்காவின் 70 வீத ஏற்றுமதி என்பது சேர்விஸ் களும் (இன்டெர் நெட் ..... மைக்ரோசாப்ட் .... சொப்ட்வேர்ஸ் .. கிளௌட்ஸ்) பாங்கிங் கும் (பைனான்சிங்... க்ரெடிட் கார்ட்.... இன்வெஸ்டிங் .... ரியல் எஸ்டேட்) ஆகும். மெடிக்கல் + விவசாயம் வருடா வருடம் வீழ்ச்சி அடைந்தே வருகிறது அதற்கு மற்ற நாடுகளின் மருத்துவ வளர்ச்சியும் ஜி எம் ஓ பயிர்செய்கைக்கு ஆனா எதிரலையும் காரணம் ஆகும். இப்போ உலகில் வளர்ந்துவரும் மிலேனிமும் ஜெனெரசனிடம் அமேரிக்கா ஒரு விசா மாஸ்டர்கார்ட் அல்லது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டை கொடுக்க தவறினால் அதுவே பாரிய தோல்வி. ஏனெனில் அதை ஈடு செய்ய போவது எலக்ட்ரானிக் கரன்ஸி அல்லது மொபைல் பாங்கிங் சீனா அதை நோக்கி அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. இப்போது உலகில் ஒரு சாதாரண அமைதி நிலையை உருவாக்கி அமெரிக்க உற்பத்திகளுக்கு இளைய தலைமுறையை அடிமையாக்க தவறின் நாம் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகுவோம். இப்போதைய சூழலில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி பைடனின் அரசு சமாதான யுத்தியைத்தான் கையாளும்.
  2 points
 12. கோண்மா - புலி கோ - தலைமை கோண் - வளைவு.
  2 points
 13. வர்ணம் கேணிக்கு பின்வாங்கும்,தன்னையும் கரைத்து விடும் என்று. கேணியோ தளும்ப தளும்ப நிறைந்திருக்கும்.....!
  2 points
 14. ஆரும் உளறி கொட்டுவதை படிப்பதை விட இது சம்பந்தமான புத்தகங்களை படிக்கலாம் netflix ல மொஸாட் மற்றும் அதன் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நிறைய தொடர்கள் உள்ளன அவற்றை பார்க்கலாம்
  2 points
 15. என்ன மாதிரி கதை விடுறாங்கள் உவங்கள் கைதிகளை விட மோசமானவங்கள்
  2 points
 16. இஸ்ரேல் அணு ஆயுதம் வைத்திருக்கலாம். பலஸ்தீனர்களை அழித்து அவர்களின் நிலங்களை (அம் மண் இருவருக்கும் சொந்தமானது வரலாறு) அபகரிக்கலாம். ஈரான் மட்டும் அணு ஆயுதத்தை ஏன் வைத்திருக்க முடியாது?. குறிப்பிட்ட நாடுகள் மட்டும் தான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியுமா? ஈரான் பெரிய ஒரு குண்டை இஸ்ரேலின் மீது வீசுகிறது என வைப்போம். இப்போ உலகில் ஈரானிய விஞ்ஞானியின் கொலைக்கு வாய் மூடி மெளனிகளாக இருப்போர் இது தகுமா எனும் அளவில் கண்டனங்களை தெரிவிப்பார்கள். சுத்த சுயநல உலகம் என்பது வெள்ளிடை மலை. சவூதியும் தலபானுக்கு பண உதவி அளிக்கிறது. யாரும் சவூதியை பயங்கரவாத நாடு என்று அழைக்கிறார்களா?
  2 points
 17. மேலேயுள்ள காணொளியில் ரசுனிக்கு சொம்படிக்கும் அந்த ஜென்மங்களை சாத்த வேண்டுமென பலரும் முகம் சுளித்தார்கள்.. அதன் விளைவு கீழே..!
  2 points
 18. இனம் சார்பாக ஜனாதிபதியுடன் பேசுவதில் தவறில்லை...
  2 points
 19. ம்......வீட்டுக்கு வீடு வாசற்படி. டேய் குமாரசாமி நீ தனி ஆள் இல்லையடா. உன்னைப்போல ஆயிரம் சிங்கங்கள் உலா வருகுதடா...
  2 points
 20. அண்ணைக்கு ஒரு துரோகிப்பட்டம் பார்சல் ப்ரம் ஃபாரின் நெட்வீரதமிழன் ப்ளிஸ்...
  1 point
 21. இலங்கை அரசும், இராணுவமும் தமிழரை சமமாக மனிதர்களாக மதித்திருந்தால் அவர்கள் ஏன் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தார்கள்? அந்த நாட்டு இராணுவத்தில் சேர்ந்தார்கள்? நாம் இலங்கை இராணுவம் என்று பெருமை பேசத் தயங்கி இருப்பார்கள்? சர்வதேச இராணுவத்துக்கு போயே இந்த இராணுவத்தைப்பற்றி பல முறைப்பாடுகள் வெளிவந்தன. அவர்களை இணைப்பதில் குறித்த அமைப்புகள் தயக்கம் காட்டுகின்றன. இதில் நம் இராணுவம் ஒழுக்கமானது என சான்றிதழ் வேறை. வேறு நாடுகளை உதாரணம் காட்ட வேண்டாம். நாம் இந்த ராணுவத்தாலும், அரசாலும் அழிவுகளை சந்தித்தவர்கள் மட்டுமல்ல இன்றுவரை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அவர்களை பாராட்ட எம்மால் முடியாது. வேலையில் இணைபவர்களை யாரும் தடுக்கவில்லை தடுக்கவும் முடியாது. அது அவரவர் அனுபவம், வசதி. ஆனால் நாம் இவர்களால் இன்றும் நம் பூமியில் சுதந்திரமாக நடமாட முடியாமல் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறோம். இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாதவரால் கொடுக்கப்படும் வாதம் பொருத்தமானது அல்ல.
  1 point
 22. ஆமாம் சிறீலங்கா சிங்களவருடையது. அவர்கள் சொல்லியுள்ளார்கள் நாங்கள் சிங்கத்திற்குப் பிறந்தவர்களென்று, அதாவது மிருகத்திற்குப் பிறந்தவர்கள். மிருகங்கள் செய்யும் வேலைகளைச் சிறிதும் தப்பாது செய்கிறார்களே.
  1 point
 23. எனக்கென்னமோ சுமே அக்கா உங்களை கண்டு பிடிச்சிட்டா என்ற பயத்தில ஒதுங்கிற போல இருக்கே
  1 point
 24. நான் திங்கள் கிழமையே இந்த காணொளியை இணைத்துவிட்டேன் ஆனால் யாரும் பார்த்தமாதிரி தெரியல அந்த பதிவில் எனது பதிவில் இருக்கிறது நன்றி நுணாவிலன்
  1 point
 25. ஏன் கக்கூஸ் கழுவுவது கேவலம் என நினைக்கிறீர்களா?? கிழக்கில் சேர்ந்தவர்கள் படம் நான் முன்னொரு திரியில் இணைத்திருந்தேன் பெண்களும் சென்று இருக்கிறார்கள் எனவும் கூறியிருந்தேன் . தற்போது தங்கள் குடும்பத்தையும் அதன் வறுமையையும் போக்க தொழில் வேண்டும் நான் கூட 2010 ல் பொலிசுக்கு சென்றேன் கொஞ்சம் உயரம் போதாது என்ற காரணத்தினால் என்னை வெயிட்டிங் லிஸ்டில் வைத்தார்கள் . பின்னர் செல்ல வில்லை கல்யாணம் கட்டவாவது ஓர் தொழில் வேண்டும் அது கவர்மென்டில் கக்கூஸ் கழுவினாலும் பரவாயில்லையென முன்னோர்கள் வைத்த தீ இப்ப தொழிலில் வந்து நிற்கிறது. தற்போது ஆர்மியில் உள்ள உள்ளக வேலையில் அதிகம் இடம் காலியாக உள்ளதாக சொல்லி இணைந்திருக்கிரார்கள் நேற்று பொலிஸ் சேர்ந்தவர்களின் குடும்ப விசாரணை முடித்து சென்றது நேர்முக பரீட்சையில் கலந்து கொண்டவர்கள் படம் இருக்கிறது தேவைப்பட்டால் இணைக்கலாம் என நினைக்கிறன் மட் / அம்பாறையில் ஆயிரத்துக்குமேல் என நினைக்கிறன்
  1 point
 26. Microsoft files patent to record and score meetings on body language 6 hours ago Microsoft Meeting-room sensors are labelled in this patent-application drawing Technology giant Microsoft has filed a patent for a system to monitor employees' body language and facial expressions during work meetings and give the events a "quality score". A filing suggests it could be deployed in real-world meetings or online virtual get-togethers. It envisions rooms being packed with sensors to monitor the participants, which could raise privacy concerns. Microsoft is already under fire over a separate "productivity-score" tool. 'Employee-surveillance tool' That feature was introduced last year but came to prominence only after a public demo at a corporate event. It allows managers to keep track of individual workers' use of Microsoft's Office 365 software - including Outlook email and the Teams meeting and Excel spreadsheet apps. Microsoft points out the facility is not enabled by default and suggests its primary goal is to identify IT shortcomings. But critics say it is effectively an employee-surveillance tool. Facial expressions Companies do not always make use of patents they register. But they often reveal ideas in development before they appear in commercial products. Details of the "meeting-insight computing system" were filed in July, ahead of being made public this month. They say the sensors could record: which invitees actually attend a meeting attendees' body language and facial expressions the amount of time each participant spent contributing to the meeting speech patterns "consistent with boredom [and] fatigue" They also suggest employees' mobile devices could be used to monitor whether they were simultaneously engaged in other tasks - such as texting or browsing the internet - as well as to check their schedule to take into account whether they had had to attend other meetings the same day. Is my boss allowed to spy on me? 'I monitor my staff with software that takes screenshots' H&M fined £32.1m for illegal employee surveillance All that information would then be combined with other factors, such as "how efficient the meeting was, an emotional sentiment expressed by meeting participants, [and] how comfortable the meeting environment was", into an "overall quality score", Microsoft says. 'False premise' The patent also suggests the technology could be used to identify problems that can make meetings ineffectual. For example, if too many people were packed into a room or if the location becomes uncomfortably hot in the afternoon sun. "Many organisations are plagued by overly long, poorly attended, and recurring meetings that could be modified and/or avoided if more information regarding meeting quality was available," the patent says. But one privacy campaigner suggested the system would be "invasive" and a "major step back for workers' rights". "This type of employee surveillance software obstructs diversity in workplaces by operating on the false premise that there is a uniform, normative way that people work optimally," Big Brother Watch director Silkie Carlo said. "A lot of surveillance tech is marketed as 'innovative' but in reality is astoundingly retrograde." 'Discriminatory outcomes' A Microsoft representative said it applied for "many patents" to protect its engineers' work "However, the application of a patent doesn't necessarily indicate that the technology described will be implemented in a product," they added. It comes as the Trades Union Congress (TUC) releases a report into the use of technology in the workplace - including when artificial intelligence (AI) starts to take on management functions. The report "looks at exactly these types of technologies and the dangers they pose of unfair and discriminatory outcomes for workers", TUC policy officer Mary Towers said. "In particular, we advocate more worker consultation and transparency over when technologies like facial recognition and speech recognition are used and how they are being used to make decisions about people at work," she added. https://www.bbc.com/news/technology-55133141
  1 point
 27. இலங்கை இராணுவம் தமிழ் மக்களுக்கு செய்த அநியாயங்களால் தமிழர்கள் ஏன் அவர்களுடன் இணைய வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு?
  1 point
 28. நல்ல செய்தி பாராட்டுக்கள்.பகிர்வுக்கு நன்றி கோஷன் சே.....!
  1 point
 29. வெத்தலை போட்ட பத்தினிப்பொண்ணு சுத்துது முன்னாலே......செம, அவ்வை சண்முகிக்கு அக்கா .....!
  1 point
 30. அப்படி பார்த்தால், ஷியா பிரிவு 7 ம் நூற்றாண்டில் இருந்து அலமட் (Alamut) அரண்மனையை தளமாக கொண்டு ஷியா வழிபாட்ட்டு தலமும், நம்பிக்கை பீடம் எனும் போர்வையில் இயங்கிய இரகசிய ஷியா கொலை குழு. 12 ம் நூற்றாண்டில், இவர்களின் சக்தியும், வீச்சும் அதி உசகத்தில் இருந்தது. இவர்கள், இப்போதைய ஸ்பெஷல் forces போன்று இயங்கினர், மறைக்க கூடிய கத்திகளை கொண்டு, தற் கொலைப்படையாக. விபரங்கள் : https://www.nationalgeographic.com/history/magazine/2018/11-12/nizari-ismaili-muslim-warriors-medieval-times/ ஆனால், us உம் இரகசிய தற்கொலை படை வைத்து இருந்தது, அதன் கடற்படையில். Spanish armada இற்கு எதிராக பாவிக்கப்பட்டது. ஆனால், us உம் இரகசிய தற்கொலை படை வைத்து இருந்தது, அதன் கடற்படையில். Spanish armada இற்கு எதிராக பாவிக்கப்பட்டது. பாண்டியரும் தற்கொலை வைத்து இருந்தனர் ஆபத்து தாவிகள் என்ற பெயரில். சோழரும் ஆரம்பத்தில் வைத்து இருந்தனர். சோழரின் பலம் மற்றும் சக்தி எழுச்சியை ஆழமாக ஆராய்ந்தால், ஏறத்தாழ US ஐ போலவே, அன்றைய நிலையில் இருந்தது. புலிகள், தற்கொலை படை என்பதை வேறு, இதுவரையில் கண்டிராத பரிமாணத்திற்கு கொண்டு சென்றனர், வரலாற்று தடத்தை அடிப்படையாக வைத்து.
  1 point
 31. https://m.facebook.com/story.php?story_fbid=10220857651843425&id=1003158954
  1 point
 32. இல்லை. தொலைக்காட்சிகளில் நிறையவே விளம்பரங்கள் செய்தார்கள். சிங்கள தொலைக்காட்சிகளில் கூடுதலாக செய்ததை காணக்கூடியதாக இருந்தது. பத்திரிகைகளிலும் பிரசுரித்துஇருந்தார்கள். நாம் இலங்கையர் என்ற ரீதியில் இலங்கை ராணுவத்தில் இணைவதில் தவறில்லை.
  1 point
 33. இதை இங்கே இணைத்தமைக்கு மிக்க நன்றி.. நேற்றிரவு எனக்கு இந்த விபரங்கள், WhatsAppல் வந்தது.. ஆனால் எப்படி அந்த videoவை இங்கே இணைப்பது எனத்தெரியவில்லை.. படங்களை இணைக்கமுடியும் ஆனால் video நேரடியாக இணைக்கமுடியாது என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்தேன்.. நீங்கள் இங்கே இணைத்தது நல்லதாகிவிட்டது.. புலம்பெயர் நாடுகளில் இயங்கும் தமிழ்ப்பாடசாலைகள் தமது பாடசாலை பைகளை இவர் மூலம் செய்தால் நன்றாக இருக்கும்.. சிந்திப்பார்கள் என நம்புகிறேன்
  1 point
 34. புலிகள் தற்கொலைப் படையை முதலில் உருவாக்கினார்கள் என்று என்ன நோக்கத்திலோ இந்த சமூகவலைப் பதிவர் சொல்ல அதை நாங்களும் குதூககலமாகப் பரப்பி சர்வதேச நாடுகளில் தடையை நியாயப் படுத்துவது மாதிரி இருக்கு! ஜப்பானின் கமிகாசி வீரர்கள், இரண்டாம் உலகப் போரிலேயே தற்கொலைத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். நவீன காலத்தில் தற்கொலைத் தாக்குதலை பேரழிவு ஆயுதமாக்கியது இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள், 1981 இல். பின்னர் ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகள் தற்கொலைத் தாக்குதல்களை தொடர்ந்து இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிராக செய்து வந்தன (இஸ்ரேலில் பட்டாசு கூட வெடிக்கவில்லையாம் என்று ஆய்வாளர் சொல்கிறார்!). 2001 இல் விசேட தடைப்பட்டியலில் புலிகள் அமைப்பை அமெரிக்கா சேர்ப்பதற்கு ஹமாஸ், ஹிஸ்பல்லா வழி வந்த தற்கொலைத் தாக்குதல்களும் ஒரு பிரதான காரணம்!
  1 point
 35. இதை தான் நான் நேற்று எழுதுவம் என்று போட்டு பேசாமல் போட்டன்...ரஞ்சித் நினைப்பார் எப்ப பார்த்தாலும் தனக்கு எதிராய் எழுதுகிறாள் என்று ... இங்க சில பேரது கருத்து வல்லரசு நாடுகள் மட்டும் எது வேணாலும் செய்யலாம். ஆனால் மற்றவர்கள் மூடிட்டு இருக்கோணும்
  1 point
 36. செய்வது அரசியல்வாதிகள் வினியோகிப்பது பாதுகாப்புபடை. அழிவது பொதுமக்கள்.
  1 point
 37. யாரந்த உலகமகா ராஜதந்திரிகள் எண்டு கொஞ்சம் சொல்லுங்கோ?? அப்படியென்ன நேர்மையற்ற திரிபுகள் அவர்களுக்கு சொல்லப்பட்டன?? உள்ள பொய்யெல்லாம் சொன்னது சிங்களம் அதுக்கு இங்கை ஒருவர் வக்காலத்து வாங்க வந்திட்டார்!!
  1 point
 38. முடிந்தால் நீங்கள் எழுதியதை மீண்டும் தேடி எடுத்து மீள் பதிவிட்டால் யார் சொல்வது உண்மை என்பது தெரியும். உண்மையை ஏற்றுக்கொள்ள திராணி வேண்டும்
  1 point
 39. வட்சப் குழுக்கள் கணக்கா வந்து எல்லாத்திலயும் நம்மட கருத்துக்களை எழுதி அவையள் என்னை திட்ட நான் திருப்பி திட்ட நேரம் போனது தெரியவில்லை.. ...அரிவரியில படிச்ச குறூப்,உயர்தரத்தில படிச்ச குறூப்,நடக்க போற குறூப்,பழைய மாணவர் சங்க ....வேலைத்தளம் இப்படி எக்கச்சக்கம்...
  1 point
 40. இது உண்மை - நான் எழுதியதும் அதுவே. இது உங்கள் திரிபு. இப்படியான நேர்மையற்ற திரிபுகளும் உங்களை உலக இராஜதந்திரிகள் கைவிட்டதற்கு ஒரு காரணம். மற்றவர்களை முட்டாள்களாக நினைத்து உங்கள் முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்தால் தோல்வியும் அழிவுமே உங்களை தேடிவரும். நேர்மையுடன் உண்மை பேசி மற்றவர்களை மதித்து உறவுகளை தேடினால் வெற்றி நிச்சயம்.
  1 point
 41. இங்கும் அதே.. அதே.. நான் மாட்டுப்பட்டது Jaffna கோட்டில், Prison Guard டிடம்.. கைதிகளின் நிலைதான் பரிதாபம்..
  1 point
 42. ஒரு பத்து நிமிட நடைதான் அவவின் வீடு ஏன் போன் எடுப்பான் அவவின் வீட்டுக்கு பக்கத்தில் நிறைய தமிழ் சனம் போனை விட செய்தி வேகமா வந்திடும் அனுமதியில்லாமல் இங்கு அவ இல்லாத நேரம் கதைக்க கூடாது என்று இருந்துவிட்டேன் . யாழ் நெருங்கிய உறவு அதே கதையை சொன்னபோது அப்படியா என்று கேட்டு விட்டு அமைதியாக இருக்கவேண்டி இருந்தது . எப்படியும் சுகமாகி வந்து கதை எழுதுவா என்ற நம்பிக்கை இருந்தது அதனால் அலட்டிக்கொள்ளவில்லை . இவவின் வீட்டுக்கு பக்கத்து மைதானத்தில் காலை 5.30மணியளவில் இருந்து தமிழ் சனம் கூட்டம் கூட்டமா நடைபயிற்சி போட்டிக்கு செய்யுதுகள் சிலதுகள் 35ஆயிரம் காலடி கவனிக்க பெண்கள் சன்டே போன்ற நாட்களில் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்கு மேலான நடை நடந்து உடம்பை கவனிக்குதுகள் இவ என்னடா என்றால் பாலுமகேந்திரா நினைப்பில் அந்த கிரவுண்டை காலையிலும் மாலையிலும் விழுந்து விழுந்து போனில் போட்டொ எடுத்து முகநூலில் போடுவதுடன் சரி பிறகு வருத்தம் வராமல் என்ன செய்யிம் ?
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.