Jump to content

Leaderboard

  1. அக்னியஷ்த்ரா

    அக்னியஷ்த்ரா

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      12

    • Posts

      1778


  2. goshan_che

    goshan_che

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      14517


  3. Justin

    Justin

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      5644


  4. ரஞ்சித்

    ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      8269


Popular Content

Showing content with the highest reputation on 12/11/20 in all areas

  1. ஒரு துரோகத்தின் நாட்காட்டி தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலாறுகளை அது கண்டிருக்கிறது. நமது முன்னோடிகளின் வாழ்க்கை வரலாறுகள் எமதினத்தின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாதது என்பதுடன், அவைபற்றித் தொடர்ந்தும் பேசப்படவேண்டும் என்பதும், எமது எதிர்காலச் சந்ததிக்கும் இவை கடத்தப்படவேண்டும் என்பது அவசியமானது. எமது வரலாற்றில் வீர மறவர்களினதும், வரலாற்று நாயகர்களினதும் கதை சொல்லப்படும்பொழுது உதிரியாக இன்னொரு விடயமும் கூட வருகிறது. இது தமிழினத்தால் தவிர்க்கமுடியாத, இனத்தினுள்ளேயே உருவாகி நெருக்கமாக இழையோடிப்போயிருக்கும் ஒரு சாபக்கேடு என்றால் அது மிகையில்லை. எமது வீர வரலாற்றின் ஒவ்வொரு எழுச்சியின்போதும் அல்லது அவ்வரலாற்றின் வீழ்ச்சிகளின்பொழுதும் இந்தச் சாபம் விடாது எம்மைப் பின் தொடர்ந்தே வருகிறது. வரலாற்றில் தனது சொந்த இனத்தையே தனது நலன்களுக்காகவும், இச்சைகளுக்காகவும் காட்டிக்கொடுத்து, எதிரியுடன் சேர்ந்து நின்றே தனது இனத்தைக் கருவறுத்து, சொந்த இனம் அழிவதில் இன்புற்ற பல சாபங்களைத் தமிழினம் கண்டதுடன், இப்பிறப்புக்கள் பற்றிய சரியான பதிவினையும் எமது வரலாற்றில் பதிவுசெய்தே வந்திருக்கிறது. இவ்வாறு தமிழினத்திற்கெதிராக எதிரியுடன் சேர்ந்து செயற்பட்ட துரோகிகளின் வரலாறு சரித்திரத்தில் நிச்சயம் பதியப்படவேண்டும் என்பதுடன், இத்துரோகங்களால் எமதினம் பட்ட அவலங்கள் தொடர்ந்து பேசப்படுவதும் அவசியமாகிறது. அந்தவகையில், கடந்த 15 அல்லது 16 வருடங்களுக்கு முன்னர் தமிழினம் இவ்வாறான மிகப்பெரிய துரோகம் ஒன்றிற்கு முகம் கொடுத்தது. தனது இச்சைகளுக்காகவும், நலனுக்காகவும் மட்டுமே தனது இனத்தையும், அவ்வினத்தின் சுந்தந்திர விடுதலைப் போராட்டத்தினையும் காட்டிக் கொடுத்து, பலவீனமாக்கி, ஈற்றில் அப்போராட்டமும் லட்சக்கணக்கான மக்களும் அழிக்கப்பட தானும் நேரடியாகக் காரணமாகவிருந்த ஒருவனது துரோகம் பற்றிய எனது புரிதலையும், நான் ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்ட விடயங்களையும் இங்கே பதிய நினைக்கிறேன். துரோகிகளை வரலாற்று நாயகர்களாகவும், உதாரண புருஷர்களாகவும் காட்ட முனையும் முனைப்புகள் வரலாற்றில் இத்துரோகிகளுக்கு வெள்ளையடித்து, அவர்களது துரோகத்தினை நியாயப்படுத்தும் கைங்கரியங்களில் ஈடுபடுவதால், இத்துரோகிகள் பற்றி நாம் தொடர்ந்து பேசுவதும், அந்தத் துரோகங்கள் பற்றித் தொடர்ந்து பதிவிடுவதும் அவசியமாகிறது. ஏனென்றால், இத்துரோகங்கள் மன்னிக்கப்படமுடியாத, மறக்கப்படமுடியாத, இனியொரு தடவை நடக்கக் கூடாத வெறுக்கப்படவேண்டிய நிகழ்வுகள் ஆகும். துரோகத்தின் நாள் 1 : 3 ஆம் திகதி மார்ச் மாதம், 2004 கேணல் கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளீதரனின் பேச்சாளர் செய்திச் சேவை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் புலிகள் இயக்கத்தினுள் பிளவுகள் இல்லை. நாம் எமது தலைவரின் நேரடிக் கட்டளையின்கீழ்த்தான் இனிமேல் செயற்படுவோம் என்று கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட புலிகள் இனிமேல் தலைவரின் நேரடிக் கட்டளைகளுக்கு மட்டுமே செவிசாய்ப்பதாகவும், இந்த மாவட்டங்களில் இருக்கும் மக்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு இனிச் செயற்படப் போவதாகவும் கூறுகிறார்.
    1 point
  2. மற்ற நாடு எப்படியோ தெரியல தோழர்.. சாதாரண கால்வாய் வெட்டுவதற்கே இங்கு 100க்கு 40% கொமிசன் .. இந்தியன பற்றி சொல்லி வேலையில்ல..☺️..😊
    1 point
  3. கெய்லின் குடும்ப ஆல்பம்......! 🌹
    1 point
  4. மனிதாபிமானத்துக்கு வழிவிடும் தாய் நாயார் .......! 👍
    1 point
  5. 2015 மாசி மாதம் செல்லச்சந்நிதி கோவில் சென்று இவ்இறுவெட்டு வெளியிட்டதில் மிகுந்த சந்தோசம்! சதீசுக்கும்.பாடகர்களுக்கும் ஆலய நிர்வாகத்தினர்கும் நன்றி...!பாடல்...star சிறி..சதீஸ்..பற்றீசியா.. அட்சரா..ஆரபி.... ஆக்கம் இசை....star sri parisமுருகன் பாடல் ..குரல்...! starசிறி..சதீஸ்..பற்றீசியா அட்சரா..ஆரபி... ..இசை ஆக்கம்..star sri paris..2015
    1 point
  6. உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் கல்லறை திருவிழா பல்லவி : கொட்டும் பனியில் குளிர்நிலா மண்ணில் வந்த பாலகனே உனை தொட்டு தழுவி அணைக்க எந்தன் உள்ளம் ஏங்கிடுதே -2 அன்னை மடி மீது நீயும் தவழ கண்டு காண மேய்ப்பர்கள் வந்தனர் மாட்டுத் தொழுவமாய் எந்தன் உள்ளம் மாறிட மீட்பர் பிறந்துள்ளார் எந்தன் நண்பனாய் அன்பனாய் நீயும் மாறிட எந்தன் உயிருள்ள நாளெல்லாம் உம்மை போற்றுவேன் - 2 சரணம் : வானின் நீளம் ஓடும் நீரும் உம் அன்பை அறிந்ததே பாவியான எந்தன் உள்ளம் உம்மை மறந்ததே சாதி மதம் தேடல் இங்கே அன்பை அழித்ததே உண்மையான அன்பிற்காக எங்கியே நின்றதே ஒரு தாயை தேடும் பிள்ளை போல அன்பை தேடி நின்றேன் இந்த தேடல் எல்லை செல்லும் முன்னே உம்மை கண்டுக்கொண்டேன் இருள் யாவும் மறைந்திடும் ஒளி எங்கும் பரவிடும் இதை யாவரும் காணவே உம் வருகை உணர்த்திடும் என்னை வீழ்த்திட தாழ்த்திட யார் யார் நினைப்பினும் உந்தன் பார்வையில் பாதையில் என் தேடல் வேண்டுமே - 2
    1 point
  7. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 வள்ளல் இமாம் பூஸ்ரி வாழ்ந்த கதை சொல்லவா ? வேந்தர் நபிகள் வசிக்கும் வீட்டில் விளக்கே தேவை இல்லை
    1 point
  8. பொல்பொட் எனும் சர்வாதிகாரக் கொலைகாரனுக்கு நிகரானவர் கருணா - கரிகாலன் தெரிவிப்பு "மக்கள்மேல் தொடர்ச்சியாக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, பொறுப்பின்றி நடந்துகொள்வாராக இருந்தால், தமிழர்களின் வரலாற்றில் கருணா பொல்பொட் போன்ற சர்வாதிகாரியாகவே பார்க்கப்படுவார்" என்று மட்டக்களப்பிலிருந்து வன்னியை வந்தடைந்த புலிகளின் முக்கிய உறுப்பினர் கரிகாலன் தெரிவித்தார். மேலும், கிழக்கு மாகாணத்தின் புலிகளின் பல முக்கிய தளபதிகளும், பிரமுகர்களும் தலைமையுடன் கிழக்கில் நடந்த விடயங்களை விளக்கும் முகமாக வன்னியினை வந்தடைந்திருக்கிறார்கள். வன்னியில் கருணாவின் எதேச்சாத்திகார முடிவினையும் நடவடிக்கைகளையும் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் விளக்கிய கரிகாலன், கருணாவின் துரோகத்தின் பின்னால் வெளிச்சக்திகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறதென்றும் கூறினார். "புலிகள் இயக்கத்திலிருந்து பிரியும் தனது துரோக எண்ணத்தினை அவர் தானாகவே டுத்துக்கொண்டார். இதுபற்றி அவர் கிழக்கின் தளபதிகளிடமோ, அரசியல்த்துறையினரிடமோ கலந்தாலோசித்திருக்கவில்லை. தனது முடிவினை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் கிழக்கின் தளபதிகளையும், முக்கியஸ்த்தர்களையும் பயமுறுத்திவருகிறார், ஆனால் அவரது எண்ணம் நிறைவேறப்போவதில்லை". "இன்று கிழக்கில் எந்தத் தமிழரும் எமது தேசியத்தலைவரின் தலைமையினை நிராகரிக்கப்போவதில்லை. இதை நான் இங்கு உறுதிபடக் கூற விரும்புகிறேன். அண்மையில் கிழக்கில் நடந்த பொங்குதமிழ் நிகழ்வின் போதும் ஆயிரக்கணக்கான மக்கள் எமது தேசியத் தலைவரின் படத்தினைத் தாங்கி வந்ததோடு, புலிகளே தமிழர்கள், தமிழர்களே புலிகள் எனும் கோஷத்தினையும் மிகத் தெளிவாக முன்வைத்து தேசியத் த்லைமைக்கான தமது ஆதரவினையும், தாயக விடுதலைக்கான தமது உறுதியாத நிலைப்பாட்டினையும் எடுத்தியம்பியிருந்தார்கள்" என்றும் கூறினார்.
    1 point
  9. துரோகத்தின் நாள் 5 : 7 ஆம் திகதி மார்ச் மாதம், 2004 "நாம் மட்டக்களப்பில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை மிகுந்த அவதானத்துடன் கையாள்கிறோம்" - தளபதி ரமேஷ் கருணாவின் பிரச்சினையினைத் தீர்க்கும் எமது நடவடிக்கைகளில் மக்களுகோ, போராளிகளுக்கோ இழப்புக்கள் ஏற்படாதுவண்ணம் இப்பிரச்சினையினைக் கையாளுமாறு எமது தேசியத் தலைவர் கேட்டிருக்கிறார். இதற்கான திட்டங்களை மிகுந்த அவதானத்துடன் நாம் தீட்டி வருகிறோம். இத்திடத்தின் பிரகாரம் நாம் நடவடிக்கைகளிலும் இறங்கிடிருக்கிறோம். மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கு சென்று எமது செயற்பாடுகளை வழமைபோல முன்னெடுக்கவிருக்கிறோம் என்று விசேட தளபதி ரமேஷ் தெரிவித்தார் "கருணாவினது பிரச்சினை தனிப்பட்டது. கருணாவைத் தவிர மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மக்களும் போராளிகளும் எமது தலைவருக்குப் பின்னாலேயே நிற்கிறார்கள். எந்தப் பிரச்சினையென்றாலும் தலைவருடன் பேசித் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். நாம் கருணாவிடம் அவரது பிரச்சினை தொடர்பாக தலைவருடன் பேசுமாறு பலமுறைக் கேட்டிருந்தோம். ஆனால், அவர் அவற்றை உதாசீனம் செய்ததோடு, எம்மையும் தலைவரிடம் இதுபற்றிப் போய் பேசவதையும் தடுத்துவிட்டார்". "மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத் தமிழ்மக்கள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு அளப்பரிய தியாகங்களைப் புரிந்திருக்கிறார்கள். எமது இலச்சியத்தினை அடையும் நோக்கில் அவர்கள் உறுதியாக இருந்திருக்கிறார்கள். எமது போராட்டம் பிரதேசவாதம் பேசும் பிரிவினைவாதிகளால் தோற்கடிக்கப்படுவதை அவர்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. அவர்கள் எம்முடன் சகலவிதத்திலும் ஒத்துழைப்பு நல்கிவருகிறார்கள்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
    1 point
  10. துரோகத்தின் நாள் 4 : 6 ஆம் திகதி மார்ச் மாதம், 2004 புலிகளியக்கத்திலிருந்து கருணா அகற்றப்படுதல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்ட செய்தியில், மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட தளபதியான கருணா இயக்கத்திலிருந்து நீக்கப்படுவதாகவும், அவர் இயக்கத்தின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் அகற்றப்படுவதாகவும் அறிவிக்கின்றது. தமிழீழ தேசியத் தலைமை மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கு ரமேஷ் அவர்களை விசேட தளபதியாகவும், ராம் அவர்களைத் தளபதியாகவும், பிரபா அவர்களைப் பிரதித் தளபதியாகவும், கெளசல்யன் அவர்களை மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல்த் துறைப்பொறுப்பாளராகவும் நியமித்திருப்பதாக அவர்களது விசேட செய்திக்குறிப்பு மேலும் சொல்கிறது. "மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கு புலிகளின் தளபதியாகவிருந்த கருணா என்பவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கெதிரான நச்சுச் சக்திகளினால் தூண்டப்பட்டு, தமிழினத்திற்கெதிராகவும், தமிழ்த் தேசிய தலைமைக்கெதிராகவும் மிகத் துரோகத்தனத்துடன் செயற்பட்டு, எமது தேசிய விடுதலை இயக்கத்தினைத் துண்டாட முனைந்திருக்கிறார். அவருக்குக் கீழ் செயற்பட்ட தளபதிகளும், பிரிவுத் தளபதிகளும் கருணாவின் இந்தத் துரோகத்தனத்தினை விமர்சிக்கமுடியாமலும், அவருடன் இருந்து அதனை எதிர்க்கமுடியாத நிலையிலும், அவருக்குக் கீழ் இனிமேல் செயற்படப்போவதில்லை எனும் முடிவினை எடுத்திருப்பதுடன், தமிழீழ தேசியத்தலைமையிடம் இதுபற்றி விளக்கமும் அளித்திருக்கின்றனர். இவற்றின் அடிப்படையில் கருணா இயக்கத்தின் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும், பதவிகளிலிருந்து உடனடியாக அகற்றப்படுகிறார்" என்றும் அவ்வறிக்கை மேலும் சொல்கிறது. சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கோ அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு கருணாவின் துரோகத்தினால் பாதிப்பில்லை - தமிழ்ச்செல்வன் புலிகளின் அரசியல்த்துறைப்பொறுப்பாளர் செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டியில் புலிகளியக்கம் சமாதான பேச்சுவார்த்தைகளிலும், புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் தொடர்ந்தும் இதயசுத்தியுடன் செயற்படும் என்றும், துரோகம் இழைத்தவர்கள் தமது தவறினை உணரும் பட்சத்தில் தேசியத்தலைவர் நிச்சயமாக அவர்களுக்கு மன்னிப்பளிப்பார் என்றும் தெரிவித்தார். தமிழ்ச்செல்வனுடன் இந்த பேட்டியில் கலந்துகொண்ட மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி ரமேஷ் கருத்துக் கூறுகையில், "மட்டக்களப்பில் நடந்த பிரச்சினை தனி ஒருவரால் ஏற்படுத்தப்பட்டது. இயக்கத்திலிருந்து வெளியேற அவர் எடுத்த முடிவு அவரது சொந்த முடிவு. இதுபற்றி அவர் ஒருபோதும் தலைமைத்துவத்திடம் பேசியிருக்கவில்லை. தளபதிகளோ, போராளிகளோ கருணா எடுத்த முடிவினை ஏற்றுக்கொள்ளவில்லை" என்று தெரிவித்தார்.
    1 point
  11. துரோகத்தின் நாள் 3 : 5 ஆம் திகதி மார்ச் மாதம், 2004 "உங்களின் கட்டளையின் கீழ் எங்களைச் சுதந்திரமாகச் செயற்பட விடுங்கள்" - பிரபாகரனுக்கு கருணா பகிரங்கக் கடிதம் நாங்கள் இயக்கத்திலிருந்து பிரிந்துபோகும் முடிவினை எடுக்கவில்லை, உங்களுக்கு எதிராகப் போராடும் எண்ணமும் எமக்கில்லை. மக்களின் அவலங்கள் குறித்து உங்களோடு பேசாமல் விடுவதன் மூலம் ஏற்படக்கூடிய வரலாற்றுத் தவற்றினை நான் விட விரும்பவில்லை. இங்கிருக்கும் மக்களினதும் போராளிகளினதும் நலன்களில் உண்மையாக உங்களுக்கு அக்கறையிருந்தால், எங்களைச் சுதந்திரமாகச் செயற்பட விடுங்கள்" என்று தமிழ் அலை பத்திரிக்கையில் அவர் குறிப்பிடுகிறார். "புலிகள் இயக்கத்தின் ஏனைய நிர்வாக அமைப்புக்களுக்கு இருக்கும் சுதந்திரத்திற்கு எந்தவிதத்திலும் குறையாத நிர்வாகச் சுதந்திரத்தினை கிழக்கு மாகாணத்திற்குத் தரவேண்டும், இன்றைய இக்கட்டான நிலையில நான் தென் தமிழீழ மக்களுக்கான நலன்கள் பற்றியே கவனமெடுப்பேன், அவர்களுக்காகவே எனது உயிரையும் கொடுப்பேன், இதற்கு எவர் குறுக்கே வந்தாலும் நான் எதிர்ப்பேன்" என்று கூறிய கருணா, "உங்களின் நேரடியான கட்டளைகளின் கீழ் நான் பயணிக்கத் தயார் ஆனால், வேறு எந்த பிரதி தலைமைகளுக்கோ தளபதிகளுக்கோ நான் அடிபணியப்போவதில்லை" என்றும் அவர் கூறுகிறார். "எமது பிரச்சினைகளை நாம் தீர்க்கமுயன்றுகொண்டிருக்கிறோம்" - மட்டக்களப்பு ராணுவத் தளபதி ரமேஷ் கிழக்கில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை தொடர்பாக நாம் எமது தேசியத் தலைவருடன் விலாவாரியாக கலந்தாலோசித்திருக்கிறோம். இப்பிரச்சினை சுமூகமாகத் தீர்க்கப்படும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இப்பிரச்சினை தொடர்பான விபரங்களை எமது தலைவர் மிக விரைவில் தமிழ்மக்களுக்கும், உலகிற்கும் அறியத்தருவார்" என்று கருணாவின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட புலிகளின் ராணுவப் பிரிவிற்குப் பொறுப்பானவருமான கேணல் ரமேஷ் தெரிவித்தார்.
    1 point
  12. துரோகத்தின் நாள் 2 : 4 ஆம் திகதி மார்ச் மாதம், 2004 மட்டக்களப்பு புலிகள் தமது நிலையினை மீள உறுதிப்படுத்துகிறார்கள். "நாம் எமது இலச்சியத்தினை நோக்கிப் பயணிப்போம். எமது தேசியத் தலைவரின் கட்டளையின் கீழும், எமது எமது தளபதி கருணாவின் வழிநடத்துதலின் கீழும் இனிச் செயற்படுவோம்" என்று கருணாவின் மூத்த தளபதிகளில் ஒருவர் கிழக்கு மாகாண புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கொக்கட்டிச்சோலையிலிருந்து வெளிவரும் உள்ளூர் இதழான தமிழ் அலையில் பேசுகிறார். "நாம் புலிகள் இயக்கத்திலிருந்து பிர்ந்துபோகும் முடிவினை இதுவரை எடுக்கவில்லை. ஆனால், நாம் பிரிந்து இயங்கினால் வரும் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் மக்களுக்கிருக்கும் அச்சத்தையும், அமைதியின்மையினையும் நாம் அறிவோம்" என்றும் அவர் மேலும் கூறினார்.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.