Jump to content

Leaderboard

 1. மல்லிகை வாசம்

  மல்லிகை வாசம்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Posts

   1662


 2. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   7

  • Posts

   39325


 3. Kavi arunasalam

  Kavi arunasalam

  கருத்துக்கள பார்வையாளர்கள்


  • Points

   6

  • Posts

   1057


 4. நிழலி

  நிழலி

  கருத்துக்கள பொறுப்பாளர்கள்


  • Points

   6

  • Posts

   14204


Popular Content

Showing content with the highest reputation on 01/05/21 in Posts

 1. கள உறவுகளுக்கு வணக்கம், நம் நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு அறிஞர்கள், ஞானிகள், பெரியோர் என்று பலரிடமிருந்து எண்ணற்ற நற்சிந்தனைகளை, வாழ்வியல் தத்துவங்களை, கோட்பாடுகளைக் கேட்டிருப்போம், கற்றிருப்போம். அவை பெரும்பாலும் அவர்களது வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாக இருந்திருக்கும். யோகரோ, இயேசுவோ, புத்தரோ, லெனினோ, பெர்னாட் ஷாவோ, தந்தை பெரியாரோ, ஓஷோவோ, டேல் கார்னகியோ யாராக இருந்தாலும் அவர்களின் சுய சிந்தனையில், கண்ணோட்டத்தில் அவரவருக்குச் சரியெனப்பட்டதைத் தத்துவங்களாக, நற்சிந்தனை மொழிகளாக உலகிற்கு எடுத்துரைத்தார்கள். எனினும், இந்தத் திரியின் நோக்கம் பிற ஞானிகள், அறிஞர் கூறிய நற்சிந்தனைகளை, தத்துவங்களை எல்லாம் தாண்டி கள உறவுகளான நமது சுய சிந்தனையில் உதித்த நல்ல சிந்தனைகளை இங்கு ஏனைய கள உறவுகளுடனும், வாசகர்களுடனும் பகிர்ந்துகொள்ள ஓர் சந்தர்ப்பமாக இதைப் பயன்படுத்துவதாகும். அனுபவசாலிகளான மூத்தோர், அறிவார்ந்த இளையோர், நாத்திகர், பகுத்தறிவாளர், ஆன்மீகவாதிகள், மதங்களின் நெறியில் செல்வோர் எனப் பரந்துபட்ட கள உறவுகள் நிறைந்த இந்த யாழ் இணையத்தில் அவர்கள் யாராக இருந்தாலும் ஒவ்வொருவரிடமிருந்தும் கற்றுக்கொள்ளக் கூடிய பல நல்ல சிந்தனைகள், வாழ்வியல் தத்துவங்கள் இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். 🌧 அந்த வகையில், உங்கள் நாளாந்த வாழ்வில் உங்களுக்குத் தோன்றும் நல்ல சிந்தனைகளை, தத்துவங்களை இங்கு பகிருமாறு கள உறவுகளுக்கு எனது தாழ்மையான வேண்டுகோளை வைக்கிறேன். நீங்கள் இங்கு பகிர்பவை, உங்கள் சுய சிந்தனையில் தோன்றியவை உங்கள் சுய அனுபவத்தில், உங்கள் வாழ்வில் பரிசோதித்ததில், பயிற்சி செய்ததில் அவை மிகவும் உண்மையானவையே என நீங்கள் உணர்ந்தவை ️நேர்மறையான வார்த்தைகளில் பிறருக்குப் புத்துணர்வும், தெளிவையும் தர வல்லவை ஆக இருக்குமாறு அமையத் தாழ்மையுடன் வேண்டுகிறேன். இது உங்கள் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட பார்வை; எனவே என்னளவில் அவை சரியென்றால் அவற்றை உள்வாங்கிக்கொள்வேன். என் அறிவுக்கு முரண்பட்டால் எதிர் விவாதம் வைக்காமல் கடந்து செல்வேன். ஆரோக்கியமான நேர்மறை எண்ணங்களை மட்டுமே பரிமாறும் திரியாக இது அமைய வேண்டும் என்பதே என் அவா. ஏனெனில் நாத்திகருக்குள்ளும் நல்ல நேர்மறை எண்ணங்கள் பல உண்டு என்பதையும், அந்த எண்ணங்கள் ஏனைய கொள்கை உள்ளோருக்கும் பயன்படலாம் என்பதை நான் உறுதியாக நம்புபவன். முரண்பாடுகள் உண்டென்ற தெளிவுடன் வீண் முரண்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பது ஆரோக்கியமானது என்பது என் எண்ணம். இந்த நேர்மறையான சிந்தனைப் பரிமாற்றத்தினால் நாமெல்லாம் ஒன்று கூடி ஒவ்வொருவரினதும் வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும் கற்று தெளிவை நோக்கி முன்னேறலாம் என்பது என் நம்பிக்கை. உங்கள் நற்சிந்தனைகள், வாழ்க்கைத் தத்துவங்கள் ஒரு வரியிலோ, பந்தியிலோ, ஏன் ஒரு சில பக்கங்களில் கூட அமையலாம். அது உங்கள் சுதந்திரம். குளியலறையில் கூட சட்டென நல்ல சிந்தனைத் துணுக்கு உதிக்கலாம்! எனவே உங்கள் சிந்தையில் உதித்த, உங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்து பெறப்பட்ட நல்ல சிந்தனைகளை, உங்கள் தத்துவங்களை இத்திரியில் ஞானச் சுடராக ஏற்றுங்கள்! அவை கூட்டாக நம் அனைவருக்கும் ஞான ஒளியைத் தரட்டும்! நன்றி (குறிப்பு: நற்சிந்தனைகளின் செறிவை நோக்கமாகக் கொண்டு, தேவையற்ற பின்னூட்டங்களை என்னளவில் நான் இட மாட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனினும் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றம் உங்கள் சுதந்திரம்.)
  7 points
 2. 'முழுச் சிங்கள அரசு' தம்மை முழுமையாக ஆட்சி செய்யவேண்டும் என்று என்று சிங்கள மக்கள் நினைத்து வாக்களித்தனரோ அதே சிங்கள அரசு நாட்டை இனி மீட்கவே முடியாத நிலைக்கு கொண்டு வந்து விடுகின்றது. 65 இலட்சம் சிங்கள மக்களால் வாக்களித்து ஆட்சிக்கு வந்த அரசு, எல்லாருக்கும் வாய்க்கரிசி போடப் போகின்றது. பெளத்த பேரினவாதம் அது செல்லக் கூடிய அதி உச்சி வரைக்கும் அடைந்த பின் கீழே விழத் தொடங்கி இருக்கு. Curve இனி flat ஆகி பின் இல்லாமல் போகக் கூடிய காலம் விரைவில் வரும். ஆனால் அப்படி விழும் போது அதன் பாதிப்புகள் தமிழ் மக்களின் தலையில் இரட்டிப்பாக விழும் என்பது தான் கவலைக்குரிய விடயம். புலம்பெயர் தமிழ் மக்களால் அனுப்பப்படும் காசு மற்றும் பொருளாதார உதவிகள் மட்டுமே ஓரளவுக்கு அவர்களின் பாதிப்பை எல்லை மீறாதவாறு காப்பாற்றும்
  6 points
 3. வங்காளம் தந்த அருமையான ஒரு அழகான இசைக்குயில். எந்த ஒரு இளம் பாடகியும் அடைந்திராத குரலுக்கு சொந்தமானவர் இவர். பல விருதுகளை வென்று சாதனை படைக்கும் இந்த குரல் இந்தியாவுக்கு வெளியேயும், சிங்களத்துக்கும், ஆங்கிலத்துக்கும் அறிமுகமானது. இவரது குரலை கேட்டு மெய் மறந்து போன அமெரிக்க ஒஹயோ மாநில ஆளுநர், ஸ்ரேயா கோஷல் தினம் என்னும் ஒரு தினத்தினை ஜூலை மாதத்தில் வரும் வகையில் அறிவித்து உள்ளார். லண்டனின் புகழ் மிக்க மெழுகு சிலைக்கூடத்தில், மெழுகு சிலையாக இருக்கும் ஒரே அழகான, இந்திய இசைக்குயில் இவர் மட்டுமே. வங்காளத்தில் ஆரம்பித்து, பாஞ்சாலி எனும் இசை அமைப்பாளரால் இந்தி திரை உலகுக்கு அறிமுகமாகி, இளையராஜா மகன், கார்த்திக் இளையராஜா மூலம் தமிழுக்கு வந்தார் இவர். பின்னர் தெலுங்கு, மலையாளம் என இந்தியா எங்கும் கலக்கி வருகிறார். மெய்யை உருக்கும் குரலுக்கு சொந்தமான இந்த பெண், போர்ப்ஸ் சஞ்சிகையின் முகப்பில் சிலமுறை வந்துள்ளார். இந்தியாவில் இரு முறை தேசிய விருதினை பெற்றுக் கொண்ட பெண் பாடகிகள் ஆன, லதா மங்கேஷ்கர், சுசிலா, சித்திரா வரிசையில் இவர் அண்மையில் இணைந்துள்ளார். பின்னர் பலரிடம் பழகி இருந்தாலும், இவரது ஆரம்ப கால குரு இவரது தாயார் தான். இவர் தனது மானசீக குருவாக சின்னக்குயில் சித்திரா என்று சொல்லி இருந்தாலும், சின்னக்குயில் சித்திரா, சின்னத்தனமாக, மலையாள இசை அமைப்பாளர்கள், ஸ்ரேயாவை அழைப்பதன் மூலம், உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பு தருவதில்லை என்று புலம்பி, இவரை அதிர வைத்தார். பெயரை குறிப்பிடாமல், பொதுவாக சொல்லி இருக்கலாம், சித்திரா. இருந்தாலும், அதனை கண்டுகொள்ளாத மிகப் பெரிய உயரத்துக்கு போய் விட்டார் ஸ்ரேயா கோஷல். துள்ளிசைப் பாடகி ஆகவும் மேடையினை அலங்கரிக்கிறார் அவர். அமைதியாக பாடி விட்டு செல்லும் மற்ற இந்திய பெண் பாடகிகளை போலன்றி, மேடையில், ஆடி, பாடி ரசிகர்களை மகிழ்விக்கும் இவரது ஸ்டைல் வித்தியாசமானது. தமிழில், கார்த்திக் ராஜாவின் பின்னர், இளையராஜா, ரகுமான், யுவன் சங்கர் ராஜா என்று இப்போது இமான் உடன் கலக்கிக் கொண்டு இருக்கிறார். கண்டாங்கி பாடல் இவரை தமிழில் புகழ் பெற வைத்தது. அது மட்டுமல்ல, மனதை உருக்கும் பல தமிழ் பாடல்களையும் இவர் தந்துள்ளார். இப்போது, டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் வருகின்றார்.
  4 points
 4. நீங்கள் தியானம் என்று கூறும்போதுதான் ஞாபகம் வருகுது....! தியானத்துக்கு அமைதியான இடங்கள் நல்லதுதான். ஆனால் சன சந்தடி நிறைந்த இடங்களிலும் தியானத்தை அப்பியாசிக்க முடியும். முயன்று பாருங்கள். "பத்துபேர் ஹாலில் இருந்து வள வள என்று கதைத்துக் கொண்டிருப்பார்கள்.அங்கு ஒரு சிறு குழந்தை 3 வயதென்று வைத்துக் கொள்ளுங்கள். அது தன் பாட்டுக்கு ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு அதனுடன் பேசி விளையாடிக்கொண்டிருக்கும். அருகில் இருக்கும் சத்தங்கள், கூத்துக்கள் அக் குழந்தையைப் பாதிப்பதில்லை.அதுபோல்தான் இதுவும். நீங்கள் உங்களுக்குள் அமைதிக்குள் இறங்க இறங்க புறசத்தங்கள் எல்லாம் தானாக விலகிப் போகும். இது மனமும் உடலும் சேர்ந்து நிகழ்த்தும் அதிசயம்.....! வீடு அமைதியாக இருக்கும் போதும் வீட்டில் நான் இந்த ரிஸ்க் எடுப்பதில்லை. நான் பத்மாசனத்தில் இருந்து பத்மத்தை நினைக்க பத்தினி தேங்காயை பக்கத்தில் உடைத்து இதை திருவித் தந்தால்தான் இரவைக்கு புட்டு என்றிட்டு போவாள்.......!
  2 points
 5. அக்கா, இந்த ஊசி பாவனைக்கு இன்று வந்தாலும் இது பற்றிய அறிவிப்பு கடந்த 30 திகதியே வெளியாகி விட்டது. பைசர்/மொடோர்னா வக்சீன்கள் mRNA தொழில் நுட்பத்தில் தயாரானவை. இது இதுவரை முயற்சிக்காத அதி புதிய முறை. இந்த முறையில் ஒரு மரபணுவியல் செய்தி ஊசி மூலம் எமது உடலில் செலுத்தபடும். இந்த செய்தியானது, எமது உடலில் உள்ள கலங்களுக்கு உத்தரவு பிறப்பித்து, அந்த கலங்கள் நோயெதிர்ப்பை எமது உடலில் ஏற்படுத்தும். இந்த முறையின் பரீட்சார்த்த்தத்தின் போது 94-95% சதவீதம் ஆட்களுக்கு நோயெதிர்ப்பு ஏற்பட்டதாக அறியப்பட்டது. பைசர் வைரஸ் அதி குறைந்த வெப்ப நிலையிலும், மொர்டேர்னா அதை விட கொஞ்சம் குறைந்த வெப்ப நிலையிலும் பேணப்பட வேண்டும். ஒன்க்ஸ்போர்ட்/அஸ்டிரா செனக்கா வக்சீன் வெக்டர் தொழில் நுட்பத்தில் தயாரானது. இது இப்போ நடைமுறையில் உள்ள ஏனைய சில வக்சீன்களும் தயாரகும் முறை. இதில் சிம்பான்சியில் சளி காய்ச்சலை ஏற்படுத்தும் வைரசை எடுத்து அதை மரபணு மாற்றத்துக்கு உள்ளாக்கி, அந்த வலுவற்ற வைரசை எமது உடலில் செலுத்தி அதன் மூலம் நோயெதிர்ப்பு எம் உடலில் தூண்டபடுகிறது. பரீட்சார்த்த காலத்தில் இது ரெண்டு முழு டோஸ் கொடுத்தவர்களிடம் 62% சதவீதம் நோயெதிர்ப்பையும், (தவறுதலாக) ஒரு முழு டோசும் ஒரு அரை டோசும் கொடுத்தவர்களிடம் 90% பேரில் நோயெதிர்ப்பையும் உண்டாக்கியது. இது சாதாரண குளிரூட்டி வெப்ப நிலையில் பேணப்படலாம். இவை உண்மையில் நிஜத்தில் எவ்வளவு தூரம் பாதுகாப்பு அளிப்பன என்பது இப்போது தெரியவராது. லொக் டவுனும் வந்துள்ளதால் தொற்று குறைவது வக்சீனாலா அல்லது லொக் டவுனாலா என்ற குழப்பமும் வரும். February மாதமளவில் தொற்று கூடினாலும், குறைந்தாலும் அது வக்சீனாலா அல்லது வேறு காரணிகளாலா என்பதை தனியே தொற்று எண்ணிகையை வைத்து மட்டும் சொல்ல முடியாது. ஆனால் இதற்கும் ஒரு கட்டுப்பாடு பரிசோதனையை ஏற்படுத்தி உள்ளார்கள். ஆஸ்பத்திரிகளில் இப்போ நியுமோனியாவுடன் சேர்பவர்களில் கொவிட் தொற்று எண்ணிக்கையையும், பெப்ரவரியில் நியூமோனியாவுடன் சேர்பவர்களில் கொவிட் தொற்று உடையவர்களின் எண்ணிகையையும் ஒப்பிட்டு வக்சீன்கள் வேலை செய்கிறனவா என ஒரு முடிவுக்கு வர முடியுமாம். அதே சமயம், தென்னாபிரிக்காவில் உருவாகியுள்ள வைரசுக்கு எதிராக இப்போ உள்ள 3 வக்சீனும் செயல்படுமா? என்ன சதவிகிதத்தில் என்பது பற்றியும் கேள்விகளை நிபுணர்கள் கேட்கிறார்கள். தேவைபடின் தமது வக்சீன்களை விரைவாக அதையும் எதிர்கொள்ளும் படி மாற்ற முடியும் என பைசர் கூறியுள்ளது. இது மொடர்னாவுக்கும் பொருந்தும். முடிவாக, 2020 மார்ச்சில் இருந்ததை விட நாம் முன்னேறற்றமான நிலையிலேயே இருக்கிறோம். வக்சீன்கள் தொழில்படுகிறதா இல்லையா என்பதை நாம் யாரும் இப்போது கூற முடியாது. குரல்தரவல்ல அமைப்புகள் இதை சொல்லும் போது யாழின் கொரோனா பதிவுகள் பக்கத்தில் இவை பதியப்படும். அதுவரை அரசு சொல்லும் முறைகளை கடைப்பிடிப்போம். https://www.theguardian.com/society/2021/jan/03/oxford-covid-jab-delivered-this-week-when-vaccines-results https://www.dailymail.co.uk/news/article-9110847/Matt-Hancock-worried-super-infectious-South-African-coronavirus-mutation.html
  2 points
 6. கூப்பிடுபவர்கள் இன்னும் பொறுப்பான மேட்டுக்குடிகள் ஆனால் நான் எதிலும் கொஞ்சம் கவனம்
  2 points
 7. எல்லா துன்பமும் கடந்து போய் இனிதே மலர்க இனி வரம் ஆண்டு.அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.Happy New Year . மார்கழி மாதமடி மழை சிந்தும் நேரமடி கண்ணம்மா பா.உதயன் ——————————————————————————— மார்கழி மாதமடி கண்ணம்மா மழை சிந்தும் நேரமடி பொழுது புலர்ந்ததடி பூத்திருக்கு காலையடி கண்ணம்மா பாவை இன்னும் துயிலுவியோ பரம்தாமன் புகழ் பாடல்லையோ மார்கழி மாதமடி மலரவன் மேனியிலே மழை சிந்தும் நேரமடி மங்கை உன் கூந்தலை போல் கங்கை அணிந்தவனை காதல் செய்யல்லையோ கண்ணம்மா கன்னி நீயும் துயிலுவியோ கடும் குளிர் காலையடி காலைக் கதிரவனும் கண் விழிக்கும் நேரமடி காலைப் பூ சூடலையோ கண்ணம்மா கண் இமைகள் பாடல்லையோ காலை இன்னும் புலரலையோ கண்ணம்மா மார்கழி பனி துளியும் மல்லிகை பூ வாசனையும் கோயில் மணி ஓசையிலும் குயிலின் இசை பாடலிலும் கன்னி இன்னும் துயிலுவியோ கண்ணன் மடி தேடலையோ கண்ணம்மா இமய மலை தலையில் நின்று பரமசிவன் திருநடனம் இவன் பாதம் பட்ட பனி மலையில் கடல் அலை போல் கங்கையடி கங்கை நதி பார்த்திருக்க கண்ணே உன் காலடியை கண்ணம்மா காலை நேர கனவு வந்து காதல் செய்யும் நேரமோடி கண்ணே உன் கனவுகளை கண்ணம்மா கங்கையிலே உயிர்ப்பிப்போம் மகா நதியில் சிலை வடித்து வரம் பெறுவோம் வாடி பெண்ணே நீண்ட சடை முடியான் நீராட அழைகின்றான் நிலவில் என்ன உறக்கமடி நீல வானம் பாடுதடி கூடி வாடி பெண்ணே பாடி நாமும் அந்த பரம் பொருளை தேடி செல்வோம் . பா.உதயன்
  2 points
 8. தமிழரின் திறமையை உலகுக்கு தெரிவிக்கும் கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில்.! கி.பி. 1036 ம் வருடம்.! கங்கையில் இருந்து சுமந்து வரப்பட்ட புனித நீரை, இராஜேந்திரன் பெற்று அந்தணர்கள் கையில் தர, பக்திப்பெருக்கோடு குடமுழுக்கும் நடந்தேற, அதன்பிறகு, கங்கைகொண்ட சோழபுரத்தின் பெரிதனினும் பெரிதான கங்கை கொண்ட சோழீச்சுவரரின் நிழலில் இருந்தே தெற்காசியாவின் அடுத்த 400 ஆண்டுகால வரலாறு எழுதப்பட்டது. தஞ்சை பெரிய கோயில் ஆண்மையின் மிடுக்கென்றால், கங்கைகொண்ட சோழீச்சுவரம் பெண்மையின் நளினம். தஞ்சை பெரிய கோயில் பிரமாண்டம் என்றால், கங்கைகொண்ட சோழீச்சுவரம் பேரழகு. கற்களால் வரையப் பட்ட அழகோவியமாக பார்த்துப் பார்த்து வார்க்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் சோழீஸ்வரர் பிரகதீஸ்வரர் பெருவுடையார் என்றும் அழைக்கப்படுகிறார். இந்தக் கோயிலைக் கட்டிய சிற்பியின் பெயர் குணவன். தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய இராஜராஜ சுந்தரமல்லப் பெருந்தச்சனின் மாணவன். தஞ்சை பெரிய கோயில் கட்டுமானத்தில் குணவனின் திறமையையும், திட்டமிடலையும் கண்டு வியந்து "நித்த வினோத பெருந்தச்சன்" என்ற பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தான் இராஜராஜன். அந்த நித்த வினோத பெருந்தச்சன் தான் கங்கை கொண்ட சோழீச்சுவரத்தின் தலைமைச் சிற்பி. இலத்திச் சடையன், சீராளன் போன்ற தேர்ந்த கலைஞர்கள் வினோதனுக்கு துணை நின்றார்கள். கங்கை கொண்ட சோழபுரத்தின் நடுவில் கிழக்கு நோக்கி 6 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ளது. இந்தக் கற்றளி. மொத்தம் இரண்டு வாயில்கள் உண்டு. சிதைவுக்குள்ளாகி சரிந்து கிடக்கும் மொட்டை கோபுர பாதையே இக்கோயிலுக்கான பிரதான வழியாக இருந்தது. சுமார் 86 க்கு 86 அடி அடிப்பீடமிட்டு 214 அடி உயரத்துக்கு எழுப்பப்பட்டது தஞ்சை பெரிய கோயில். இக்கோயிலைக் காட்டிலும் பெரிதாக எழுப்பத் திட்டமிட்டே 100 க்கு 100 அடி என இக்கற்றளிக்கான அடிபீடம் அமைக்கப்பட்டது. ஆனால் 186 அடியே கோபுரம் உயர்த்தப்பட்டது. தான் எழுப்பும் கோயில், தன் தந்தை எழுப்பியதை விட பெரிதாக இருந்தால், வரலாற்றில் அவரின் புகழ் மங்கிவிடும் என்ற நோக்கிலேயே இக்கற்றளியின் உயரத்தைக் குறைத்தான் இராஜேந்திரன் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கோபுரத்தின் உயரத்தைக் குறைத்த இராஜேந்திரன் ஆனால் சோழீஸ்வரரை தன் தேடலுக்கு ஏற்றவாறு பிரமாண்டமானவராக அமைத்தான். 13 அடி, 3 அங்குலம் உயரம். இந்த ஈசனின் உடல் முழுதும் போர்த்த 9 முழ அங்கவஸ்திரம் வேண்டும். இந்தக் கற்றளிக்கான கற்கள் பெரம்பலூருக்கு அருகில் உள்ள சிற்றளி, பேரளி கிராமங்களில் இருந்து பெயர்த்து கொண்டுவரப்பட்டுள்ளன. இராஜராஜன் கட்டிய தஞ்சை பெரியகோயிலுக்கும், கங்கை கொண்ட சோழீச்சுவரத்துக்கும் கட்டமைப்பில் சில வேறுபாடுகள் உண்டு. தஞ்சைக் கற்றளி நான்கு பக்க கோபுர விமான அமைப்பைக் கொண்டது. கங்கை கொண்ட சோழீச்சுவரம் எண் பக்க வடிவ கட்டடக் கலை நுட்பத்தில் வடிக்கப்பட்டிருக்கிறது. கோயிலின் சிற்பங்கள் அனைத்தும் சைவத் திருமறைகள் சொல்லும் செய்திகளைக் காட்சிப்படுத்துகின்றன. அக்காலத்தில் மன்னர்கள் போரில் வெற்றியடையும் தருணத்தில், வெற்றிச் சின்னமாக சிற்பங்களையும், மணிமுடிகளையும் கொண்டு வருவது வழக்கம். இராஜேந்திரன் வெற்றி பெற்ற தேசங்களில் இருந்து கொண்டு வந்த அற்புத சிற்பங்கள் பலவும் கங்கை கொண்ட சோழீச்சுவரத்தில் நிறுவப் பட்டுள்ளன. சாளுக்கியத்தில் இருந்து போர் வெற்றிச் சின்னமாகக் கொண்டு வரப்பட்ட 20 கரங்கள் கொண்ட துர்கை. ஒரே கல்லிலான நவகிரக சிற்பங்கள் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சூரியனை தாமரை வடிவில் சித்திரித்து, சுற்றிலும் கிரகங்கள் அமர்ந்திருக்கும் இச்சிற்பத்தை போன்ற வடிவம் இந்தியாவில் வேறெங்கும் இல்லை. இங்கு வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களில் திறன் வாய்ந்த சிற்பிகளின் கரங்கள் நர்த்தனமாடியுள்ளன. ஒவ்வொரு சிற்பத்திலும் ஒவ்வொருவித தனித்தன்மை. சிற்ப சாஸ்திரம் குலையாமல் வடிவமைக்கப்பட்ட தில்லை ஆடவல்லான் சிற்பம் கலையின் உச்சம். முப்பரிமாணத்தில் எங்கிருந்து பார்த்தாலும் நம்மைப் பார்த்து புன்னகைத்தவாறு நிற்பதைப் பார்க்கும்போது, உடம்பு சிலிர்க்கிறது. இங்கிருக்கும் நர்த்தன விநாயகர் தன் ஏழு பாகங்களிலும் ஏழு விதமான ஒலியாக எழும்புகிறார். அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தின் நளினம் வியக்கவைக்கிறது. அச்சிற்பத்தில் உயிர்ப்பும், உணர்ச்சியும் ததும்புகிறது. கருவறையின் உள்ளே, சுற்றுப்புற பிராகாரத்தில் கோடையில் குளிர்ச்சியாகவும் குளிர்காலத்தில் வெப்பமாகவும் இருக்குமாறு சந்திரகாந்தக் கற்கள் கொண்டு வடிவமைத்துள்ளார்கள். சிற்பக்கலையின் உச்சமென இக்கோயிலை அடையாளம் காட்டலாம். இந்தக் கோயில் முழுதும் அற்புதம் ததும்பும் புதுமைகள் காட்சியாக இருக்கின்றன. விமானத்தில் உச்சியில் 34 அடி குறுக்களவு கொண்ட பெருங்கல் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. விமானமே லிங்கத்தின் வடிவில் அமைந்திருக்கிறது. 600 அடி நீளம், 450 அடி அகலத்தில் இக்கோயிலின் மதில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நின்றபடி எதிரிகளோடு போரிட முடியும். இரண்டடுக்கு மாட வரிசையுடன் திருச்சுற்று அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள நந்தி, செங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயினும் செய்நேர்த்தியிலும், அளவிலும் தஞ்சை பெரியகோயில் நந்தியை போன்றிருக்கிறது. நந்திக்கு வலது புறத்தில் 27 அடி குறுக்களவுள்ள சிங்கமுகக் கிணறு ஒன்று அமைந்துள்ளது. சிங்கத்தின் வயிற்றுக்குள் நுழைகிறது வாயில். 50 படிக்கட்டுக்களைக் கொண்ட இந்த கிணற்றையும் கங்கை நீரைக் கொண்டு புனிதப் படுத்திய பிறகே நீர் நிரப்பினான் இராஜேந்திரன். உட்கோயிலின் நீளம் 340 அடி. 100 அடி அகலம். இதன் உள்ளே பிரமாண்டமான மகா மண்டபமும், அர்த்த மண்டபமும் அமைந்துள்ளன. மகா மண்டபத்தில் மட்டும் 140 தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இக்கோயிலின் தூண்கள், விமானங்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்டதாக இருக்கின்றன. சிற்ப மேன்மையில் தஞ்சை பெரிய கோயிலை விஞ்சி நிற்கிறது. கங்கை கொண்ட சோழீச்சுவரம். https://puthusudar.lk/2021/01/02/தமிழரின்-திறமையை-உலகுக்க/
  1 point
 9. மண்டும் இருள் கலைந்து செங்கொண்டைச் சேவல் சிலிர்த்தெழுந்து கொக்கரக்கோவென்று தொண்டை கிழியத் துயிலெழுப்பும்! தோட்டத்தே கறவை மாடும் மடி நிரம்பி அம்மா என்றழைக்கும்! காக்கை கரையும் கருவானம் வெளுக்கும் பறவையினங்கள் சிறகடிக்கும் வண்டினங்கள் ரீங்காரமடிக்கும் குயிலினங்கள் பாட்டிசைக்கும்! மேற்கில் மதி மறையும்... கீழ்க் கதிரும் மேலெழும்பும் விளக்குமாற்றோசை தெருவெல்லாம் இரையும் கேணிக் கரையில் வளைக் குடங்கள் கிண்கிணிக்கும் அதிகாலைத் துயிலெழுந்து தையலும் கெண்டைக்கால் தெரிய கண்டாங்கி சேலை கட்டி துளசிமாடம் வலம் வரும்! விண்ணும் மண்ணும் உறவென வாழ்ந்து மண்ணின் சுவாசமே உயிர் சுவாசமாய் நேசித்து கதிரெழு முன் இருளுடையில் நீர் குடைந்திட முத்து மணிகளைப் போல் நெல்மணிகளை விதைத்திட பல மாந்தரும் சோற்றில் கை வைக்க தமை வருத்தி சேற்றில் கை வைத்து ஏறு பூட்டி வயலில் உழவர் பெருமக்காள் இறங்குவார்! பொழுது மைகரைந்து தெளிவாகப் புலரும் இதமான தென்றல் காற்று முகத்தில் ஓங்கி அறையும் மாணிக்கச் செம்பரிதி நீலக்கடலை விட்டெழும்பும் தோணி வலை வீசி தோய் துறைக்கு மீண்டு வரும்! சீருடையில் தேன் சிட்டுக்களாக தேனிதழ் குறுநகையுடன் சிட்டென இளையோர் செந்தமிழாம் மால் மொழியை பயில சின்னச் சுட்டு விரல் பிடித்து ஆனா எழுதி உள்ளத்தில் அறிவு விதைக்க இளங் காலையிலே கள்ளமில்லா ஞானச்சாலை செல்லுவார்! சோர்வுற்ற பொழுதிலேயோர் இயற்கை அழகில் முகிழ்த்து ஈடற்றுப் பொலிந்த உயிர்ப்புடன் கூடிய கிராமத்து அழகிய சீர்வுற்ற விடியலைக் காண்மின் நேர்வுற்ற துயரால் நைவுற்ற உள்ளம் இன்பம் பெறும் கோடி... உளத்தினில் நீடிய இன்பம் துய்த்துப் போம்! -தமிழ்நிலா.
  1 point
 10. கவனமாக இருங்கள். வருபவர்கள் Counter இல் இருந்து தூர நிற்பது போல் ஏற்பாடுகள் செய்துள்ளீகளா? அவர் மாஸ்கை எடுத்தால் உதை விட பயங்கரமாய் இருக்கும்
  1 point
 11. நீங்கள் சொன்ன தகவல்கள் சரியானவையே. இது வேற பிரச்சினை, விட்டு விடுங்கள்!
  1 point
 12. உண்மை. அதுக்குத்தான் "பெயரளவில்" என்று போட்டிருக்கிறேன். டக்ளஸ் ஆதரவோடு மணிவண்ணனோ வேறு கட்சியினரோ இருப்பது இப்போதைக்கு best of the worst options ஆகத் தெரிகிறது!
  1 point
 13. விட்டா ..ராஜபக்சேவே தமிழ் தேசிய சக்திகளோடு இணைந்து தேர்தலில் போட்டி போடுவார் போல கிடக்கு நிலவரம்கள் ..
  1 point
 14. அதென்ன சுறாமீனின் பல்லு போல் இருக்கு என்று இங்குள்ள சிங்களவர் ஒருத்தரை கேட்டேன் பாவி பயல் சிரிக்காமல் சொல்றான் அது வளர்ந்துகொண்டு இருக்காம் .
  1 point
 15. குமாரசாமி அண்ணை.... சிறிலங்கா இந்த வருசத்துக்குள்ளை, 726 பில்லியன் கட்டி முடிக்க வேணும், எண்ட கவலையிலை இருக்கிறன். நீங்கள்... கோவம் வரும், கீவம் வரும் எண்டு... சொல்லுறியள். அந்தக் காசை... தலதா மாளிகையில் உள்ள, புத்தரின் பல்லை வித்துத்தான், கட்ட வேணும் போலை இருக்கு. ஒரு பில்லியன் --- 1,000,000,000 ஒண்டுக்கு பக்கத்திலை, ஒன்பது சைவர் அண்ணே...
  1 point
 16. 1 point
 17. 1 point
 18. கிழக்கிலை வியூகம் வகுத்து முடிஞ்சுது இனி யாழ்ப்பாணியளுக்கு வியூகம் வகுக்கப்போறாராம்......அடுத்தவர் பிள்ளையானும் மண்வெட்டியை தூக்கிக்கொண்டு ஜப்னா போவாராக்கும்
  1 point
 19. "உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு" நன்றி மறக்காத நண்பர்கள்.......!
  1 point
 20. மனிதர்களை நம்பி வந்து உதவி கேட்ட காட்டு விலங்குகள்.......!
  1 point
 21. இதை நானும் பழகியுள்ளேன். இங்கு இதை sophrologie என்ற தியான முறையில் கற்றுத் தந்தார்கள். முதல் 5 நிமிடம் அக்கம் பக்கத்தில் நடப்பதெல்லாவற்றையும் புறக்கணிக்கக் கூடியவாறு சிந்தனைகளைத் துறந்து, உடல் தசைகளைத் தொய்ய விட்டு 3 - 4 நிமிடங்களுக்கு ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்று திரும்புவது. இதைக் கதிரையில் இருந்தவாறு செய்யலாம். 3 நிமிடங்களுக்கு மூளை தூக்கத்தில் உடல் தசைகளுக்கு ஓய்வு கொடுக்கும். விழித்து எழும்போது உடல் முழுவதும் சில மணி நேரம் தூங்கியது போன்ற உளைவு ஏற்படும். புத்துணர்ச்சி ஏற்படும். 10 - 15 நிமிடங்களுக்கு மேல் செய்யக் கூடாது. வேலையில் சோர்வு ஏற்படும்போது மதிய நேரத்தில் இதைச் செய்வோம். பின்னர் உற்சாகமாக வேலை செய்யலாம்.
  1 point
 22. இதை விட பெரிய சந்தோஷம்.. அப்பாவுக்கு. என்ன இருக்க போகுது
  1 point
 23. நல்ல குரல். வேற்று மொழி பாடகி என்று கண்டு பிடிப்பதே கஷ்டம். இளையராஜாவின் இசையமைப்பில் பாடிய பாட்டுக்களும் யுவன்சங்கர் ராஜாவின் இசையமைப்பில் பாட்டுக்களும் எனக்கு பிடிக்கும்.. இமானின் இசையமைப்பிலும் நல்ல பாடல்களை பாடியுள்ளார்.
  1 point
 24. என்னை சிரேயா கோஷல் உருக்கியது இந்த இரு பாடல்கள் ஊடாகவே ...... ஆயிரம் தடவைகளுக்கு மேலாக கேட்டுருப்பினும் இன்னும் சலிக்காத பாடல்களாக இருக்க நிச்சயம் சிரேயாவின் குரலே காரணம். இவர் தமிழ் இல்லை என்று கண காலம் கழித்தே தெரிந்து கொண்டேன்.
  1 point
 25. உதுகளாலை தான் மனித குலத்துக்கும் பூமிக்கும் அழிவு... ஒரு கால தூக்கி நெளிக்கிற அளவுக்கு வந்துட்டுதுகள்.
  1 point
 26. நான் எழுத வந்ததை நாதம் எழுதியுள்ளார். ஒரு 6 கிழமை போல் நான் அபுதாபியில் வேலை விடயமாய் நின்று பார்த்த அனுபவமும் இதையே சொல்கிறது. வீடு இதர கொடுப்பனவுகள் இருந்தாலும் எனக்கு தெரிந்த வெள்ளைகள் அதிகம் சேமிப்பதாக தெரியவில்லை. அல்கஹோலிலே அதிகம் செலவழிப்பது ஒரு காரணம். ஆனால் நல்ல லக்சறி வாழ்கை வாழ்கிறார்கள். இங்கே இருந்து போன தெற்காசியர் நன்றாக சேமிக்கிறார்கள்.
  1 point
 27. இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகிறார்.! இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் .ஜெயசங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக நாளை இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பயணத்தின் போது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஆகியோரைச் சந்தித்தித்து உத்தியோகபூர்வ பேச்சுக்களில் ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 இல் வெளிநாட்டின் உயர் அதிகாரி ஒருவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும். இந்தப் பயணத்தின் மூலம் இலங்கை - இந்தியா இடையேயான உறவை வலுப்படுத்திக்கொள்ள எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. http://aruvi.com/article/tam/2021/01/04/21161/ டிஸ்கி : =======(கிந்தியன்)===== நீங்க சரி என்டு சொல்லும் வரைக்கும் உங்கட காலை விட மாட்டன் .. பாருங்கோ ....
  1 point
 28. நம் வாழ்வில் எல்லாம் ஒருநாள் மாறும் ஆனால் ஒரே நாளில் மாறிவிடாது..!
  1 point
 29. யாழ்பாணம் வவுனியாவில் தான் போராட்டம் நடத்துவார்கள். சாணக்கியனும் குரல் கொடுப்பார்.
  1 point
 30. அவிழ் (சோற்று பருக்கை ) அவி (சோறு) அ
  1 point
 31. பத்த வைக்கிறார் மை லாட்....
  1 point
 32. நான் சுகமாய் இருக்கிறேன் ...நீங்களும் ,உங்கள் குடும்பத்தாரும் சுகமாய் இருப்பீர்கள் என நம்புகிறேன் ...உங்களுக்கு இனிய புது வருட நாள் வாழ்த்துக்கள்
  1 point
 33. நீங்கள் கொடுத்து வைத்தவர் ...உங்களில் ஒரு எரிச்சலும் இல்லை ...இங்குள்ள சிலர் மாதிரி நீங்கள் நெடுக அரட்டையில் இல்லைத் தானே
  1 point
 34. நிலச்சரிவில் 10 பேர் காணாமல் போயிருந்தார்கள். அதில் தமிழ் பெயர்கள் எதுவும் இல்லை. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியினைச் சுற்றியிருந்த பல குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பபட்டுள்ளார்கள். அறிந்த வரையில் குறைந்தபட்சம் இரண்டு தமிழ்க் குடும்பங்கள் அவ்வாறு வெளியேறியுள்ளார்கள். காணாது போனவர்களில் மூவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள்.
  1 point
 35. மற்றோரைச் சபித்தோர், துன்புறுத்தியோர் தற்காலிகமாக நன்றாக வாழலாம் / அது போல் வெளி உலகிற்குத் தோன்றலாம்; ஆனால் அந்த சந்தோஷம் அவர்களுக்கு நிலைக்காது என்றோ அல்லது அதன் விளைவை அவர்கள் உண்மையில் அனுபவித்தாலும் வெளியில் நமக்குத் தெரிவதில்லை என்பார்கள் மூத்தோர். விளைவுகள் எதுவும் ஓர் இரவில் நடந்துவிடாது. சில நாட்கள், வாரங்கள், மாதங்கள், ஏன் பல வருடங்கள் கூட ஆகலாம்; எப்படியோ இறைவன் உரியதை உரிய நேரத்தில், உரிய அளவில் திரும்பித் தருவான் என்பர். தம் ஆயுட் காலத்தில் பலவற்றைப் பார்த்த முதியோர், ஞானிகளின் இந்த அனுபவ மொழிகளை நம்புவதைத் தவிர நமக்கு ஏதும் மாற்று வழி உண்டோ! 'மெய்யெனப்படுவது' பகுதி தானே! கேள்விகளால் நானும் கற்கிறேன். என் அறிவுக்கெட்டியதை நான் எழுதுகிறேன். நீங்களும் எழுதுகிறீர்கள். இங்கே என்னிலும் பல மூத்த அனுபவசாலிகள் இருக்கிறார்கள். அவர்கள் கருத்துக்களயும் அறிய ஆவல். ஆரோக்கியமான விவாதத்தால் எல்லோரும் சேர்ந்து உண்மையை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதில் நான் திருப்தியடைகிறேன். ஆரோக்கியமான கேள்விகள், கருத்துக்களுக்கு நன்றி பிரபா.
  1 point
 36. முற்பிறவியில் என்ன தவறு செய்தோம் என தெரியாமலும் இப்பிறவியிலும் தீங்கிழைக்காமலும் தண்டனை அனுபவிப்பது நியாயமன்று.. அப்படியென்றால் மற்றவர்களை சபிக்கும் ஒருவர் எப்படி நன்றாக வாழமுடியுமா? மற்றவர்களை புறம்கூறுவதோ, மற்றவர்களுக்கு தீங்கு நடக்கவேண்டும் என வெளிப்படையாக கூறி மற்றவர்களை நோகடித்தாலும்.. அப்படியானவர்கள் மனதளவில் தீங்கிழைக்காதவர்கள் எனலாமா? தலைப்பை விட்டு வேறு திசையில் போவது போல இருக்கிறது ஆனாலும் பலநாட்களாக எனக்குள் எழும் கேள்விகள் ஒவ்வொருவருடைய அனுபவங்களும் வித்தியாசமானவை.. பாதிப்புக்களும் வித்தியாசமானவை..ஆனாலும் உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றிகள்..
  1 point
 37. அவாசி (தென் திசை) வாசி = இசைக்குழல் அவா விருப்பம்
  1 point
 38. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஏராளன்.
  1 point
 39. பிறந்த நாள் வாழ்த்து ஏராளன் .
  1 point
 40. ஏராளனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  1 point
 41. வருகைக்கும் கவிதைக்கும் நன்றி அக்கா. மன்னிக்க தெரிந்த மாமனிதன் மண்டேலா. அத்தனை வருட அடக்குமுறைக்கு பதிலாக ஆட்சிக்கு வந்த அடுத்த 5 ஆண்டுகளில் வெள்ளையினத்தவரை வேலையில் இருந்து, வியாபாரத்தில், பண்ணகளில் இருந்து விரட்டி அடித்திருக்கலாம்... ஆனால் மடிபா செய்யவில்லை. சாகும் வரை ஜனாதிபதியாக இருந்திருக்கலாம்.. ஆனால் மடிபா அதையும் செய்யவில்லை. The long walk to freedom ... வெள்ளை சிறையில் இருந்து மட்டும் அல்ல, சாதாரண மானிடர்களின் உள்ளத்தில் இருக்கும் சிறையில் இருந்தும் மடிபாவை விடுவித்திருந்தது.
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.