Jump to content

Leaderboard

  1. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      14

    • Posts

      43054


  2. tulpen

    tulpen

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      8

    • Posts

      4150


  3. பெருமாள்

    பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      14330


  4. புரட்சிகர தமிழ்தேசியன்

    புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      15868


Popular Content

Showing content with the highest reputation on 01/08/21 in all areas

  1. Just married... watch how quickly the “ control system “ gets activated...!!😁
    3 points
  2. இன்று வெள்ளி.....சூப்பரான ஒரு வெஜ் பிரியாணி சாப்பிடலாம்......ரெடியா .....! 😊
    2 points
  3. பிரெஞ்மொழி கொஞ்சம் அறிவோம்........! 🙏
    1 point
  4. நந்தன்..... இந்தப் படம் "மலரும் நினைவுகளும் " பகுதியிலும் பொருந்தும்........!
    1 point
  5. இப்படியான நடுவர்கள் இருக்கும் போது யாருக்கு தான் விளையாட பிடிக்காது .? 👌 சிறப்பானவற்றை தேர்ந்து இணைக்கும் தோழருக்கு கோடான கோடி நன்றிகள்..👍
    1 point
  6. வயசான காலத்துல... கம்பை ஊண்டி நடக்காம, இது... என்ன விளையாட்டு. 🤣
    1 point
  7. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9 தை 2007 வாழைச்சேனையில் கருணா துணைப்படை முகாம்கள் மீது தாக்குதல் - 12 பேர் பலி மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பகுதியில் கருணா துணைப்படையினரின் இரு நிலைகள் மீது இனம் தெரியாத ஆயுத தாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 12 துணைப்படை உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்குடியிருப்பு மற்றும் விநாயகபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த கருணா துணைப்படை முகாம்கள் மீதே இத்தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. சுமார் 400 மீட்டர்கள் இடைவெளியில் அமைந்திருந்த இந்த இரு முகாம்கள் மீது முச்சக்கரவண்டிகளில் வந்த ஆயுததாரிகளே அதிரடியாகத் தாக்குதலில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது. காயப்பட்ட மூன்று துணைப்படையினர் வாழைச்சேனை வைத்தியசாலைக்கும், அவர்களை வழிநடத்திய சிங்களப் புலநாய்வுத்துறை அதிகாரி பொலொன்னறுவை வைத்தியசாலைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். சுமார் 25 துணைப்படைக் கூலிகள் தங்கியிருந்த இவ்விரு வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏனையோர் அருகிலிருந்த ராணுவ முகாமிற்குத் தப்பியோடியதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.
    1 point
  8. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30 மார்கழி 2006 குடும்பிமலைப்பகுதியில் கருணா துணைப்படைக் கூலிகள், ராணுவம் இணைந்து நடத்திய தாக்குதல் முறியடிப்பு மட்டக்களப்பு நகரிலிருந்து வடமேற்காக அமைந்திருக்கும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான குடும்பிமலைக்குள் ஊடுருவி தாக்க முயன்ற கருணா துணைப்படைக் கூலிகள் மற்றும் ராணுவத்தினர் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் ஒரு துணைப்படை கூலி கொல்லப்பட்டதாகவும், இன்னொருவர் உயிருடன் பிடிக்கப்பட்டதாகவும் புலிகளின் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார். இத்தாக்குதலில் நான்கு புலிகள் காயங்களுக்குள்ளானதாகவும் அவர் மேலும் கூறினார். குடும்பிமலை எனும் தொப்பிவடிவ மலைக் குன்று வடமுனை - தரவைப் பகுதியில் அமைந்திருக்கிறது. இப்பகுதியில் அமைந்திருக்கும் புலிகளின் முகாம் மீது தாக்குதல் நடத்த கருணா துணைப்படைக் கூலிகள் எடுத்த முயற்சிக்கு ராணுவம் பின்புலச் சூட்டாதரவை தொடர்ச்சியாக வழங்கியபோதும், துணைப்படையினர் புலிகளின் எதிர்த்தாக்குதலால் நிலைகுலைந்து பின்வாங்கிச் சென்றதாக அறியமுடிகிறது. பின்வாங்கிச் சென்ற கருணா துணைப்படையினரை அருகிலிருக்கும் காடுகளுக்கூடாக புலிகள் விரட்டிச் சென்றதாகவும் இளந்திரையன் மேலும் தெரிவித்தார்.
    1 point
  9. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 21 மார்கழி 2006 கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்திலிருந்து 19 சிறுவர்களைக் கடத்திச்சென்ற கருணா துணைப்படை கடந்த புதன்கிழமையன்று, காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தினை காத்தான்குடி - பொலன்னறுவை வீதியில் கோரகல்லிமடு பகுதியில் வழிமறித்த ஆயுதம் தாங்கிய கருணா துணைப்படையினர் அப்பேரூந்திலிருந்து 16 ஆண் சிறார்களையும் 3 பெண்சிறார்களையும் ராணுவம் பாதுகாப்பு வழங்க கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இக்கடத்தல்பற்றி குறைந்தது 6 பெற்றோர்கள் பொலீஸில் முறைப்பாடுகளைப் பதிவுசெய்துள்ளனர். தமது பிள்ளைகளை கருணா துணைப்படையினர் பேரூந்திலிருந்து இழுத்து வெளியே இறக்கும்போது அவர்களைத் தடுத்த பெற்றோர்மீது துணைப்படையுறுப்பினர்கள சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதாக ஏனைய பயணிகள் தெரிவித்தனர்.
    1 point
  10. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 10 மார்கழி 2006 பெண்டுகல்ச்சேனையில் கருணா துணை ராணுவக் கூலிப்படை நடத்திய தாக்குதல் முறியடிப்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான பெண்டுகல்ச்சேனையில் கடந்த ஞாயிறு காலை சுமார் 25 கருணா துணைப்படைக் கூலிகளும் இலங்கை ராணுவமும் இணைந்து நடத்திய தாக்குதல் முயற்சி தம்மால் முறியடிக்கப்பட்டுள்ளதாக புலிகள் அறிவித்துள்ளனர். இத்தாக்குதலில் குறைந்த இரு துணைப்படைக் கூலிகள் கொல்லப்பட்டதுடன் மேலும் 10 பேர்வரையில் காயமடைந்திருப்பதாகத் தெரிகிறது. இத்தாக்குதல் முறியடிப்புப் பற்றி மேலும் தகவல் வழங்கிய மட்டக்களப்பு அரசியல்த்துறைப் பேச்சாளர் சீராளன் இத்தாக்குதலில் புலிகள் தரப்பில் இரு போராளிகள் பலியானதாகவும் தெரிவித்தார். கிண்ணையடி ராணுவ முகாமிலிருந்து புறப்பட்ட துணைப்படைக் கூலிகளும் ராணுவமும் கிண்ணையடி வாவியைக் கடந்து அருகிலிருக்கும் முருக்கந்தீவு, பிரம்படித்தீவு, சரவெள்ளி ஆகிய கிராமங்களுக்குள்ளால் ஊடுருவி பெண்டுகல்ச்சேனை நோக்கி முன்னேறிவர எத்தனித்ததாகவும், இதன்போதே புலிகள் எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அவர் மேலும் கூறினார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சுமார் 5 கிலோமீட்டர்கள் ஊடுருவிய ராணுவ துணைப்படைக் குழு தாக்குதலை நடத்த எத்தனித்ததாகவும், புலிகளின் எதிர்த்தாக்குதலினையடுத்து கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த சகாக்களைத் தூக்கிக்கொண்டு பின்வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. புலிகள் தரப்பில் கலையரசன் மற்றும் சவுந்தா ஆகிய போராளிகள் இத்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
    1 point
  11. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 21 கார்த்திகை 2006 திங்கட்கிழமைக்கு முன்னர் உங்கள் பாராளுமன்ற பதவிகளை ராஜினாமாச் செய்யுங்கள், இல்லையென்றால் கொல்லப்படுவீர்கள் - கிழக்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கருணா பகிரங்க கொலை எச்சரிக்கை கருணா துணைப்படையின் முக்கியஸ்த்தர் குணானன் எனபவர் கிழக்கின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ள நேரடி கொலை அச்சுருத்தலில், திங்கட்கிழமைக்கு முன்னதாக தமது பதவிகளை ராஜினாமாச் செய்யவில்லை என்றால் உங்களைக் கொன்றுவிடுவோம் என்று கூறியிருக்கிறார். மட்டக்களப்பு நகரில் ராணுவத்தினருடன் சேர்ந்து செயற்படும் இவர் வெளிப்படையாகவே அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள், செயற்பாட்டாளர்களுக்கெதிரான செயற்பாடுகளில் தீவிரம் காட்டிவருவதுடன் வெளிப்படையான அச்சுருத்தல்களையும் விடுத்து வருகிறார். இவரது அச்சுருத்தலினையடுத்து இலங்கையின் பாராளுமன்ற சபாநாயகருக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றினை எழுதியுள்ள கிழக்கு மாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இதுபற்றி மேலதிகத் தகவல்களை வழங்கியிருக்கிறார்கள். திருமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுதியிருக்கும் இந்தக் கடிதத்தில் தமக்கு கருணாவினால் விடுக்கப்பட்டிருக்கும் பகிரங்க கொலை அச்சுருத்தல்பற்றி தெரிவிக்கும்போது, கார்த்திகை 27 ஆம் திகதிக்கு முன்னதாக தாம் பதவிகளை ராஜினாமாச் செய்யவில்லையென்றால், இதுவரை கொல்லப்பட்ட குறைந்தது 7 தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகள் போல் நீங்கள் சுட்டுக் கொல்லப்படுவீர்கள் என்று அச்சுருத்தப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். கடிதத்தின் தமிழாக்கம் கீழே, கெளரவ சபாநாயகர் அவர்களுக்கு, கிழக்கின் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கருணாவால் விடுக்கப்பட்டிருக்கும் கொலைப்பயமுருத்தல் கடந்த ஞாயிறு, கார்த்திகை 19 அன்று மட்டக்களப்பு அம்பாறை, திருமலை மாவட்டங்களின் தமிழரசுக் கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களான எங்களுக்கு கருணா துணைப்படையின் முக்கியஸ்த்தரான குனானன் என்பவரிடமிருந்து தொலைபேசிமூலமான கொலைப்பயமுருத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. கார்த்திகை 27 ஆம் திகதிக்கு முன்னர் நாம் எமது பதவிகளை ராஜினாமாச் செய்யவில்லையென்றால் நிச்சயம் கொல்லப்படுவீர்கள் என்று அவர் எமக்கு தெரிவித்திருக்கிறார். தன்னை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவின் மட்டக்களப்பு அரசியல்த்துறைப் பணியகத்திலிருந்து பேசும் குணானன் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அவர் கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 8 பாராளுமன்ற உறுப்பினர்களும் கார்த்திகை 27 ஆம் திகதிக்கு முன்னர் பதவி விலகவில்லையென்றால், இறந்துபோன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் "மாமனிதர்" விருதிற்கு உரித்துடையவர்கள் ஆவீர்கள் என்று மிரட்டினார். எமது தலைவரான கருணா அம்மாணின் கட்டளையின்பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் எம்மிடம் கூறினார். இதுவரை எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட கொலைகளை அடிப்படியாகக் கொண்டு, எம்மீது தற்போது விடுக்கப்பட்டிருக்கும் இந்தக் கொலை எச்சரிக்கையினை நீங்கள் மிகுந்த கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். எமது பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசேப் பராரசிங்கமும், நடராஜா ரவிராஜும் இதே குழுவினரால் எம்மைப்போன்றே கொலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு சில நாட்களில் கொல்லப்பட்டார்கள் என்பதனையும் தங்கள் கவனத்திற்கு நாங்கள் கொண்டுவருகிறோம். எம்மீதான இந்த கொலை எச்சரிக்கைகள் எமது மக்களுக்கான சேவையினை நாம் திறம்படச் செய்வதைத் தடுத்துக்கும் நோக்கிலேயே விடுக்கப்படுகின்றன என்பதனை தாங்கள் அறிவீர்கள். ஆகவே இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் நலனில் அக்கறையும், பொறுப்பும் கொண்ட நீங்கள் எம்மீது விடுக்கப்பட்டிருக்கும் இக்கொலை எச்சரிக்கையினை கடந்து எமது மக்களுக்கு நாம் சேவை செய்வதற்கு ஏதுவாக உங்கள் அதிகாரத்தினைப் பாவித்து எமக்கான பாதுகாப்பினை ஏற்படுத்தித் தருமாறு வேண்டிக்கொள்கிறோம். நன்றி. த. கனகசபை (மட்டக்களப்பு), தங்கேஸ்வரி கதிரமன் (மட்டக்களப்பு), ச. ஜெயநந்தமூர்த்தி (மட்டக்களப்பு), ப. அரியநேந்திரன் (மட்டக்களப்பு), க. பத்மநாதன் (அம்பாறை), ச. சந்திரநேரு (தேசியப்பட்டியல்).
    1 point
  12. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 13 கார்த்திகை 2006 கருணா துணைப்படையினருக்காக சிறுவர்களை ராணுவம் கடத்துகிறது - ஐ நா. கருணா துணைப்படை எனப்படும் இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்படும் கூலிப்படைக்கு சிறுவர்களைக் கடத்திச் சென்று கட்டாய பயிற்சியளிப்பதற்கு இலங்கை ராணுவம் உதவிவருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியிருவர் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் போரில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்களைக் கண்காணிக்கும் அமைப்பின் சிறப்பு ஆலோசகரான அலன் ரொக் எனப்படும் அதிகாரியே இந்த தகவலை அண்மையில் தான் கொழும்பிற்கு மேற்கொண்ட விஜயத்தின்பொழுது ரொயிட்டர்ஸ் செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். "இலங்கை ராணுவம் கருணா துணைப்படைக்கு சிறுவர்களைக் கட்டாயப்படுத்திச் சேர்ப்பதற்கான நேரடியானதும், மறைமுகமானதுமான ஆதாரங்களை நாம் வைத்திருக்கிறோம். கிராமம் கிராமமாக சிறுவர்களைச் சுற்றிவளைத்து இழுத்துச் செல்லும் ராணுவம் அவர்களைக் கருணா குழுவிடம் ஒப்படைக்கிறது. கருணா துணைப்படைக்கும் ராணுவத்துக்குமான தொடர்பினை எனது 10 நாள் ஆய்வுகளின்போது என்னால் காணமுடிந்தது. கருணா துணைப்படையில் இணைப்பதற்காக கிழக்கின் பல கிராமங்களில் இருந்து 13 முதல் 14 வயது சிறுவர்களை இலங்கை ராணுவம் சுற்றிவளைத்துப் பிடித்து கருணா குழுவினரிடம் ஒப்படைக்கிறது. இதற்கான நேரடியான, கண்ணால் கண்ட சாட்சியசங்களை நாம் சேகரித்து வைத்திருக்கிறோம்" என்று அவர் கூறினார். இலங்கை அரசாங்கத்தின்மேல் ஐ நா அதிகாரியொருவர் இவ்வாறான வெளிப்படையான குற்றச்சாட்டினை முன்வைப்பது இதுவே முதன்முறையாகும். புலிகள் மீது சிறுவர்களை இணைக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டினை இதே அதிகாரிகள் முன்வைத்து வந்தபோதிலும், கடந்த மாதத்திலிருந்து 17 வயதிற்குக் குறைந்தவர்களை இயக்கத்தில் சேர்த்துக்கொள்வதில்லை என்கிற புலிகளின் நிலைப்பாட்டினை இவ்வதிகாரி வரவேற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
    1 point
  13. வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ.. விண்ணும் மண்ணும் வந்து சேர அது பாலம் போடுதோ..
    1 point
  14. நாங்க இருக்கும் வரை அது நடக்காது..☺️..😊
    1 point
  15. இதை கட்டாயம் கேளுங்கள். அற்புதமான பாடல். இசையமைப்பு ஏ. ஏ. ராஜ்
    1 point
  16. அதிகப் பாதுகாப்போடு வாழ்பவர்கள்
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.