Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 01/14/21 in all areas
-
தை-பா.உதயன் காலைச்சூரியன் எழுதிய கவியினால் வானம் முழுவதும் வசந்தம் தெரியுது காலைப் பறவைகள் பாடல் இசைக்குது காதல் கவிதையை காற்றில் வரையுது ஏழு சுரங்களும் எழுதிய ராகமாய் ஆளக்கடலலை தாளம் இசைக்குது வானம் முழுவதும் வண்ணக் கோலமாய் காலைக் கதிரவன் கவிதை வரைகிறான் நீலக் கடலலை ராகம் இசைக்குது அது ஆடும் அழகினை பறவை ரசிக்குது சந்தம் இசைக்குது சலங்கை சிரிக்குது சிந்து பைரவி ராகம் கேட்குது காலைப் பொழுதினில் பூக்கள் விரியுது கையில் வந்தொரு கனவு உயிர்க்குது பாடும் பறவைகள் சிறகை விரிக்குது தை பேசும் கவியினை வானில் வரையுது . -பா.உதயன் ✍️ அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தை பொங்கல் வாழ்த்துக்கள் 🙏4 points
-
4 points
-
3 points
-
2 points
-
2 points
-
2 points
-
1 point
-
1 point
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, மாசி 2007 அம்பாறையில் 5 இளைஞர்களைக் கடத்திச் சென்ற கருணா துணைப்படைக் கூலிகள் கல்முனைக்கு வடக்கேயிருக்கும் மத்திய முகாம் பகுதியிலிருந்து 5 இளைஞர்களை இம்மாதம் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் கருணா துணைப்படைக் கூலிகள் வெள்ளை வான்களில் வந்து கடத்திச் சென்றிருக்கிறார்கள். கடத்திச் செல்லப்பட்ட மூன்று இளைஞர்களின் பெற்றோர்கள் இதுபற்றிப் பொலீஸாரிடம் முறைப்பாடு செய்திருக்கிறார்கள். சிறிதாஸ், தம்பிப்பிள்ளை சிறிதரன், தருமராஜா தயாபரன் ஆகியோரின் பெற்றோரே இம்முறைப்பாட்டினைப் பதிவுசெய்திருக்கின்றனர். ஏனைய இருவரது பெற்றோரும் அச்சம் காரணாமாக இதுவரையில் முறைப்பாடு எதனையும் பதிவுசெய்யவில்லையென்று தெரியவருகிறது.1 point
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, மாசி 2007 பயணிகள் பேரூந்தினை வழிமறித்துக் கொள்ளையில் ஈடுபட்ட கருணா துணைப்படைக் கூலிகள் காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேரூந்தினை ஏறாவூர் பொலீஸ் பிரிவில் அடங்கும் சித்தாண்டிப் பகுதியில் வழிமறித்த கருணா துணை ராணுவக் கூலிகள் பயணிகளிடமிருந்து சுமார் பதினைந்து லட்சம் ரூபாய்களைக் கொள்ளையடித்துள்ளனர். கடந்த செவ்வாயன்று நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் பயணிகளிடமிருந்து கைத்தொலைபேசிகள், நகைகள் , தேசிய அடையாள அட்டைகள் என்பனவும் கூலிகளால் அபகரித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. மாவடி மற்றும் முறக்கொட்டாஞ்சேனை பகுதிகளில் அமைந்திருக்கும் ராணுவ முகாம்களுக்கு நடுவில் அமைக்கப்பட்டிருந்த கருணாவின் அலுவலகத்திற்கு அருகிலேயே இக்கொள்ளைச் சம்பவத்தினை துணைப்படைக் கூலிகள் நிகழ்த்தியிருக்கின்றனர். ஓட்டமாவடி வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான இப் பேரூந்து சுமார் 45 பயணிகளுடன் மாலை 7:30 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பித்ததாகவும், சித்தாண்டி முருகன் ஆலயச் சந்தியினை அடைந்தபோதே இப்பேரூந்தினை வழிமறித்த கருணா துணைப்படைக் கூலிகள் கொள்ளையில் ஈடுபட்டதாகவும் தெரியவருகிறது. இதேபகுதியில் பல முறை சிறிய வான்கள் கருணாவினால் கொள்ளையடிக்கப்பட்டபோதிலும், இப்பேரூந்துக் கொள்ளையே மிகப் பெரியது என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு முஸ்லீம் அமைச்சர் அமீர் இக்கொள்ளைபற்றி மூத்த பொலீஸ் அத்தியட்சகரிடம் முறையிட்டுள்ளபோதிலும், பொலிஸார் இதுதொடர்பாக அசமந்தப் போக்கினைக் கடைப்பிடிப்பதாக தமது பணத்தினைப் பறிகொடுத்த பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.1 point
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 8, மாசி 2007 தன்னைப் பலவந்தப்படுத்தியமைக்காக அதிருப்தி தெரிவித்த இந்துக்குருக்கள் கருணா துணைப்படைக் கூலிகளால் படுகொலை மட்டக்களப்பு சந்திவெளியில் வசித்துவந்த இந்து மதகுரு செல்லையா பரமேஸ்வரக் குருக்களை கருணா துணை ராணுவக் கூலிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். இக்குருக்கள் அண்மையில் வாகரைப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மகிந்தவுக்கு ஆசி வழங்கவென்று ராணுவத்தாலும் துணைப்படைக் கூலிகளாலும் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டிருந்தார். கடந்த புதனன்று, ராணுவ முகாமிற்கு அருகில் அமைந்திருந்த அவரது வீட்டிற்கு வெளியே அவரை வரவழைத்த துணைப்படைக் கூலிகள் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே அவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். தன்னைப் பலவந்தமாக மகிந்தவின் நிகழ்விற்கு அழைத்துச் சென்றதைப்பற்றி அக்குருக்கள் பெரிதும் விசனமடைந்திருந்தார் என்றும், சிலருடன் இதுபற்றிய தனது அதிருப்தியினைத் தெரிவித்து வந்திருந்தார் என்றும் கூறும் அப்பகுதி மக்கள், இதற்குப் பழிவாங்கவே அவரை கருணா துணைப்படைக் கூலிகள் சுட்டுக்கொன்றதாகக் கூறுகின்றனர். இக்குருக்களுடன் மேலும் கிறிஸ்த்தவ, முஸ்லீம் மதத் தலைவர்களும் மகிந்தவின் வாகரை விஜய நிகழ்விற்கு ராணுவத்தாலும் கருணா துணைப் படைக் கூலிகளாலும் இழுத்துச் செல்லப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.1 point
-
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, தை 2007 ஆரையம்பதியில் நிலைகொண்டிருந்த கருணா துணைப்படையினரை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்ற ராணுவ அதிகாரி அண்மையில் ஆரையம்பதி - காத்தான்குடி எல்லையில் முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளையடுத்து தமது ஊரினூடாக கருணா துணை ராணுவக் கூலிகள் சென்றுவருவதனை காத்தான்குடி முஸ்லீம்கள் எதிர்த்ததனையடுத்து அவர்களை வேறு பகுதியொன்றிற்கு மாற்றியிருக்கிறார் இலங்கை ராணுவத்தின் 23 - 3 படையணியின் தளபதி கேர்ணல் முனசிங்க. இப்பகுதியில் விசேட அதிரடிப்படை முகாமுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கூலிகளின் முகாமுக்கு வேறு இடத்திலிருந்து இன்னுமொரு தொகுதி கூலிகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றனர். முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள் ஆகியோர் மட்டுநகர் ராணுவத் தளபதியுடனும், மக்கள் தொடர்பாட்டு அதிகாரியுடனும் சுமார் 3 மணித்தியாலங்கள் இத்துணைப்படைக் கூலிகளை அகற்றுவதுபற்றிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். முஸ்லீம் மக்களுடனான இந்தச் சந்திப்பிற்கு துணைப்படைக் கூலிகளின் முக்கியஸ்த்தர்களும் இராணுவத்தால் அழைத்துவரப்பட்டிருந்தனர். காத்தான்குடியில், இராணுவத்தில் அரவணைப்பில் துணைப்படைக் கூலிகள் தங்கவைக்கப்படுமிடத்து, அவர்களின் முகாம்கள் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்றும், அதனை துணைப்படைக் கூலிகளும் ராணுவமும் முஸ்லீம்களுக்கெதிரான நடவடிக்கைகளில் இதனைப் பாவித்து ஈடுபட முயலலாம் என்றும் அச்சம் தெர்வித்தனர். மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் துணைப் படைக் கூலிகளால் கடத்தப்பட்டு பின்னர் தலை துண்டிக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவரின் உடலை துணைப்படையினர் வேண்டுமென்றே காத்தான்குடியில் எறிந்துவிட்டுச் சென்றதைக் குறிப்பிட்ட முஸ்லீம்கள், தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையிலான மோதல் ஒன்றினை உருவாக்கவே துணைப்படைக் கூலிகள் முயல்வதாக தெரிவித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து முஸ்லீம் மக்களும் உடனடியாக இந்த துணைப்படை கூலிகளின் முகாம் அகற்றப்பட வேண்டும் என்று கோரிக்கையினை ராணுவத் தளபதியிடம் முன்வைத்தனர். இதனையடுத்தே அங்கு முகாமிட்டிருந்த துணைப்படையினரை வேறு முகாம்களுக்கு மாற்றிய தளபதி இன்னொரு தொகுதி துணைக் கூலிகளை அங்கே நிறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.1 point
-
1 point
-
1 point
-
எனதருமை யாழ்கள உறவுகள் அனைவருக்கும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துக்கள். வாழ்க வாழியவே.1 point
-
1 point
-
கொஞ்ச நேரம் இறைவா கொஞ்சி பேச வேண்டும் கொஞ்சம் நேரம் இறைவா கொஞ்சி பேச வேண்டும் – 2 உன் மடி அமர்ந்து உன் மடி தவழ்ந்து உன்னோடு நான் பேச வேண்டும் கொஞ்சம் நேரம் இறைவா கொஞ்சம் நேரம் – 2 1. என் அன்பு தாயக உன் அன்பு சேயாக உன்னோடு நான் பேச வேண்டும் உன் குரலை நான் கேட்டு உனை என்றும் தியானித்து உன் நிழலில் நான் வாழ வேண்டும் கொஞ்சம் நேரம் இறைவா கொஞ்சம் நேரம் – 2 2. என் ஆயன் நீயாக உன் சீடன் நானாக உன்னோடு நான் வாழ வேண்டும் உன் ஞானம் எனக்களித்து உன் வழியில் எனை நடத்தி உன் உருவாய் எனை மாற்ற வேண்டும் -21 point
-
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 இறைவன் தந்த அருட்கொடை1 point
-
1 point
-
இப்படியான பல வீடியோக்கள் நானும் பார்த்திருக்கின்றேன். சில வீடியோக்களை பார்க்க அழுகைதான் வரும். ஏனெனில் நாங்களும் பல உறவுகளை பிரிந்து வாழ்கின்றோம். அதன் வலி எமக்கும் நன்கு தெரியும். இணைப்பிற்கு நன்றி சுவியர்.1 point
-
1 point
-
1 point
-
1 point
-
அணையாத சுடராய்/காணிக்கைப்பாடல் அப்பா நான் தவறு செய்தேன் உன் அன்பை உதறி சென்றேன் நன் கெட்டலைந்து திரும்பி வந்தேன் எனை கண் பாரும் உந்தன் பிள்ளை நான் பாடி வரும் பறவைகளும் காடுகளில் மிருகங்களும் உம அன்பில் மகிழ்ந்திருக்க நான் உன்னை பிரிந்து நொந்தேன் சுமைகளில் சோர்ந்தோரை என்னிடத்தில் வாரும் என்றீர் அந்த ஆறுதல் வார்த்தை என்னை உன்னிடத்தில் ஈர்த்ததைய்யா வாழ்வு தரும் வசனம் எல்லாம் நீர் என்று அறிந்த பின்னும் வேறு எங்கு நான் போவேன் எந்தன் புகலிடம் நீரே அப்பா1 point
-
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
என் அன்புள்ள ரசிகனுக்கு கவிப்புயல் எழுதும் கவிதை --------------------------------------- ஒரு கவிஞன் தன் வலிகளை.... வரிகளாய் எழுதுகிறான் .... ஒரு ரசிகன் அதை ஆத்மா ... உணர்வோடு ரசிக்கிறான் ..... கவிதை அப்போதுதான் ... உயிர் பெறுகிறது .....! # என் உயிரை உருக்கி .... நான் எழுதும் கவிதைகள் என்னை ஊனமாக்கி மனதை ... இருளாக்கி இருந்தாலும் .... கவிதைகள் உலகவலம் வருகிறது ... உலகறிய செய்த ரசிகனே ... உன்னை நான் எழுந்து நின்று .... தலை வணங்குகிறேன் .....! # என்இரவுகளின் வலி...... விழித்திருந்த கண்களுக்கு தெரியும் .... பகலின் வலி அவள் எப்போது .... இரவில் கனவில வருவாள் ....? ஏங்கிக்கொண்டிருக்கும்..... இதயத்துக்கு புரியும் ..... ரசிகனே உனக்குத்தான் புரியும் .... நான் படுகின்ற வலியின் வலி ......! # ஒருதலையாக காதலித்தேன் ... காதலின் இராஜாங்கம் என்னிடம் .... காதலை சொன்னேன் .... என் இராஜாங்கமே சிதைந்தது ..... காதல் ரகசியத்தில் ஒரு துன்பம் .... பரகசியத்தில் இன்னொரு துன்பம் .... காதல் என்றாலே இன்பத்தில் துன்பம் .... கண்டு கொல்லாதே ரசிகனே .....! # என் காதலுக்கு காதலியின் முகவரி ... இன்னும் தெரியவில்லை ... அதனால்தான் இதுவரை ..... என்னவளில் பதில் வரவில்லை ... வெறுத்தவள் மறுத்தவளாகவே.... வாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ... என் கவலையை சொல்லாமல் .... யாரிடம் சொல்வேன் .....? என் வாழ்வில் ரசிகனே நிஜம் ....! # வேதனையில் சாதனை செய்யப்போகிறேன் .... என்னை விட தாங்கும் இதயம் ... இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது .... வேதனைகள் மணிக்கூட்டு முள் போல் .... என்னையே சுற்றி சுற்றி வருகின்றன ..... அவ்வப்போது ஆறுதல் பெறுவது ..... என் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....! # என்னை உசிப்பி விட்டு .... வேடிக்கை பார்த்த என் நண்பர்கள் .... என்னை காதல் பைத்தியம் .... வாழதெரியாதவன் ஒன்றில்லாவிட்டால் ... இன்னொன்று தெரிவுசெய்யதெரியாதவன்.... என்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....! ரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ... என்னை பைத்தியம் போல் .... அவர்களுக்கு காட்டுகிறது .... காதல்கிழியாமலே இருக்கிறது .....! # பள்ளி பருவத்தில் மாறு வேடபோட்டியில் ..... பைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் .... காதலியால் வாழ் நாள் முழுவதும் .... முதலிடம் அருமையான வேஷம்.....! பிடித்தது கிடைக்கவில்லை என்றால் .... கிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...!!!1 point
-
1 point
-
வயசான காலத்துல... கம்பை ஊண்டி நடக்காம, இது... என்ன விளையாட்டு. 🤣1 point
-
1 point
-
1 point
-
1 point
-
ஊரோடும், உறவோடும் உறவாடி அன்போடு வாழ்வோம்!! அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!!1 point
-
1 point