Jump to content

Leaderboard

  1. தனிக்காட்டு ராஜா

    தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      13

    • Posts

      9910


  2. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      11

    • Posts

      28969


  3. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      43057


  4. ஈழப்பிரியன்

    ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      15413


Popular Content

Showing content with the highest reputation on 02/23/21 in all areas

  1. நாட்டுக்கு போக வெளிக்கிட்டார்கள் இருவரும் பயணம் தயாரானது விமானம் வெளிக்கிடுகிறது மாஸ்க போடுங்கள் , நீ என்ன சாறி கட்டாமல் ரவுசரோட வாரநீ? ஊருக்க போய் சாரியை கட்டுறன் போதுமா? நீங்க அங்க போனதும் கைக்கு குளவுஸ்சோடதான் திரிய வேண்டும் ம்ம் பயணம் முடிந்து நாட்டை வந்தடைகிறார்கள் இருவரும் .சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா என்பது போல திறந்த வெளிச்சிறைச்சாலையானாலும் அங்கே முழுமூச்சை இழுத்து விடும் போது அந்த மூச்சின் சுதந்திரத்தை அனுபவிக்கிறார் மாணிக்கவாசகர். இலங்கை போரின் பின்னர் புதிய கண்ணாடிக் கட்டிடங்கள் மெதுவாக நகர்புறங்களில் முளைத்து வளர்ச்சியடைவதையும் பாதைகள் சீராக இருப்பதை பார்த்தவாறே மட்டக்களப்பு விரைகிறார்கள். ஆனாலும் இலங்கையென்பது எத்தனை யுகங்கள் ஆனாலும் தமிழ் மக்களை நிம்மதியாக வாழவிடாது என்று என்று அவர் மனத்துக்குள் ஓர் விம்பம் திரைவிரித்து செல்கிறது .மட்டக்களப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது எனும் பெயர் பலகையைப்பார்த்த பின்னர் தான் தன் கால்களுக்கு ஓர் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மூட்டுவலி வந்த முழங்கால் வலி இல்லாமல் ஓடித்திரியவும் புழுதியில் நடக்கவும் புதிதாக நடை பழக எண்ணிய குழந்தைபோல தான் வளர்ந்த ஊரை சுற்றிப்பார்க்க துடிக்கிறது மாணிக்கவாசகர் மனது ஊரை( கல்லடி) வந்தடைகிறார்கள் ஊரில் மாணிக்கவாச்காரின் அக்காவின் வீடு மேல்மாடி இவர்களுக்காக தயாராக இருந்தது வீடு வந்தவர்களை பொது சுகாதார பரிசோகதருக்கு அறிவிக்கிறார் அக்கா. அவர் வந்து பி சி ஆர் பரிசோதனையெல்லாம் முடிந்ததா? ஓம் எல்லாம் கொழும்பில முடிச்சிட்டம் சரி இருந்தாலும் வெளியில் அதிகமாக நடமாடாதீர்கள்.. சரி என உறுதி வழங்கிய பின்னர் அவர் நகர்கிறார். நலன் விசாரிப்புகள் தொடர்ந்த பின்னர் மாணிக்க வாசகர் குளிக்க செல்கிறார் குளித்து முடிந்து வந்த அவர் சரத்தை கட்டிக்கொண்டு காலில் செருப்பை மாட்டிக்கொண்டு ஓடத்தயாராகிறார் அந்த கல்லடி பாலத்துக்கு எங்க போறீங்க அவசரமாக?? இந்த கல்லடி பாலத்துக்குத்தான் போயிட்டு வாரன் ஒரு டீ , சாப்பாடு ஏதாவது சாப்பிட்ட்டு போகலாமே? வேனில வரக்குள்ள சாப்பிட்டது இன்னும் சமிக்கல நான் நடந்து போய் வந்தால் சமிச்சிடும் என்று சொல்லிவிட்டு போகிறார் பசியும் மறந்து ஊர் நினைவும் நண்பர்களுடன் கூடி ,மகிழ்ந்த நினைவும் யாரைத்தான் விட்டு வைத்தது. போய் வந்த பிறகே பல நினைவுகளை பாலம் இன்னமும் சுமந்து நிற்பதை அறிகிறேன். என்னைப்போன்றவர்களின் பலநினைவுகளைசுமந்து பழைய பாலமும். எப்போதும் புதிதை கண்டால் மனிதன் பழையதை மறந்துவிடுவார்கள் ஆனால் பழையது பழையதுதான் காதலாகட்டும் , கடந்த கால நினைவுகளாகட்டும் மனதில் நின்றுகொண்டே பயணம் செய்யும் மரணிக்கும் வரை. அந்த நினைவுகளுடன் விடு வருகிறார் மாணிக்க வாசகர் அன்றிரவே எந்த குழுசையும் இல்லாமல் நிம்மதியான நித்திரையை அணைத்துக்கொள்கிறார். அடுத்த நாள் காலை பரிமளம் சொன்ன பிள்ளையின் வீட்டுக்கு இருவரும் செல்கிறோம் வேகம் கூடிய மோட்டார் சைக்கிளும் ,அதிக வாகனங்களும் கொஞ்சம் கூட பொறுமைஇல்லாத சாரதிகளும் , பெரிய மதில் சுவர்களும் யாரும் எட்டிப்பார்க்க முடியாத மதில் சுவர்கள் ஒரு மாடி வீடு ஒரு கார் என்றும் தானும் தன்ற குடும்பமும் என்ற சுவரை மனதில் எழுப்பி காலத்தின் மாற்றத்தில் நகர்புறங்களில் நாகரீகத்திலும் வாழ்வதைக்காணக்கூடியதாக இருந்தது . அவர்கள் வீட்டை அடைகிறோம் பிள்ளையை பார்த்ததும் மனிசிக்கு பிடித்து போகிறது. சீதனம் வேண்டுமென்றவள் சீதனம் கீதனம் ஒன்றும் வேண்டாம் பெண்னை மட்டும் கொடுங்கள் என்றதும் எனக்கும் அவளை மருகளாக ஏற்றுக்கொள்ள மனம் ஏங்கியது . மகனும் கதைத்ததா உங்கள் நம்பர், பேஸ்புக் ஐடி எல்லாம் கொடுத்தேன் அவனிட்ட கோல் எடுக்கலயா? என்று கேட்க அவள் தலையை அசைத்தும் அசைக்காமலும் இருந்தாள் . அந்த அசைவில் நான் புரிந்து கொண்டேன் அவன் இவளும் கதைக்கவில்லையென . என் மனைவி லண்டனைப்பற்றிப் புழுக ஆரம்பித்தாள் அவளுக்கு அவள் மனதில் ஓர் மாய‌விம்பத்தை ஏற்படுத்துகிறாள் ஆனால் அவை வெளியுலக வாழ்க்கையே ஆனால் கல்யாண வாழ்க்கை இருமணம் இணைந்து வாழும் உள்ளக வெளியக வாழ்க்கை என்பது எனக்கு மட்டுமே தெரிந்தது . நலன் விசாரிப்புக்களும். தேநீர் உரையாடல்களுடன் அவளுடைய ஜாதகம் வாங்கி விடைபெறுகிறோம். மனைவி ஐயரை தேடிச்செல்கிறாள் நானோ மீண்டும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ மீண்டும் நாட்டுக்கு வர எண்ணி மாமாங்கேஸ்வரயும், கொக்கட்டிச்சோலையானையும் ,களுதாவளை பிள்ளையாரையும் , வெளிச்சவீடு, கச்சேரி இருக்கும் கோட்டை பகுதியியையும் , முகத்துவார கடற்கரையும் காணச்செல்கிறேன் ஓர் ஆட்டோவைப்பிடித்து. நாட்கள் கரைகின்றது விடுமுறை முடியும் தறுவாயில் அந்த பிள்ளையின் வீட்டுக்குச் செல்கிறேன் . வாங்கோ அண்ணா என அந்த பிள்ளையின் அம்மா உள்ளே அழைக்கிறாள் என்ன நீங்கள் மட்டும் தனிய வந்திருக்கிறியள்? ஒன்றும் இல்லை மனிசி ஐயருட்ட போய்ட்டா நான் பிள்ளையோட கொஞ்சம் கதைக்க வேணும் அதுதான் வந்தேன் ஓஅப்படியா! இனி வந்துடுவா என்றது பிள்ளையும் வருகிறது வாங்கோ மாமா எப்ப வந்த நீங்கள் இப்பதான் மகள் ஓ சாப்பிட்ட நீங்களா ஓம் சாப்பிட்டன் உங்களுடன் மகள்கொஞ்சம் கதைக்க வேண்டும் ஓ கதைக்கலாமே. தொடரும்
    6 points
  2. அன்று போருக்கும் போராடியவர்களுக்கும்.. அதற்கு துணை நின்றவர்களுக்கும் கை தடியாய் நின்றது யாழ். இன்று போர் செய்தவர்களும் இல்லை, போராடியவர்களும் இல்லை.. போராட்டுத்துக்காக குரல் கொடுத்தவர்களும் இல்லை. கைத்தடி மட்டும் தனியே நிற்கிறது. கை தாங்கலாய் போராட்டத்தை தாங்கியவர்கள் எல்லோருமே உடலாலும் மனதாலும் கை கால் இழந்து நிற்கின்றனர், இழந்தது மட்டும் இல்லை அது தரும் வலியைகூட வெளியே சொல்ல முடியாமல் அவஸ்தை படுகின்றனர். பலர் நம்பிக்கையிழந்து இந்த மாற்று திறனாளி வாழ்வு இனிமே வேண்டாம் என்று ஓடியே போய்விட்டனர். சிலர் மாற்றங்கள் இனிமேலும் வரும் என்ற ஒற்றை புள்ளி நம்பிக்கையில் இந்த கைதடியை பிடித்தபடி காலம் கழிக்கின்றனர். அன்று நமக்கெதிராய் சிவப்பு புள்ளி உயிர் செலவாய் தெறித்த போரில் கோபம் கொண்டு இக் களத்தில் ஒன்று சேர்ந்தவர்கள், இனிமே எதுவும் ஆகபோவதில்லை என்று ஓடியே போய்விட்டனர். அவர்கள் ஓடி போன பின்பும் பச்சை புள்ளிகளை மட்டும் வரவாய் வைத்துக்கொண்டு சிலர் இந்த தளத்தில் உயிர் நகர்த்துகிறார்கள். எங்களுக்கு வடக்கு அரசியல்வாதிகளை பிடிக்காது, கிழக்கு அரசியல் வாதிகளையும் பிடிக்காது, எங்களுக்கு பிடித்தது எல்லாம் வடக்கு கிழக்கு என்ற வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாதபடி வரிபுலி சீருடையில் இருந்த போராளிகள் மட்டுமே. இன்று வடக்கும் கிழக்கும் எங்கள் தாயகம் என்று போரிட்ட எம் தேச வீரர்களும் எங்கள்கூட இல்லை. ஆனால் அவர்கள் விரும்பியிருக்காத பிரதேச வாதங்கள் மட்டும் வடக்கும் கிழக்கும் சேர்ந்த சிலரிடம் விரும்பபட்டு எங்கள்கூட பயணிக்கிறது. அவர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றுதான்.. உதிப்பது கிழக்கு, மறைவது மேற்கு, இதுக்கு சம்பந்தமேயில்லாம வடக்கு கிழக்கு பிணக்கு பற்றி பேசுகிறவர்கள் உருபடாதவர்கள், அவர்கள் கருத்துக்கள் சபையேறாது. யாழ் எனும் கைத்தடி தனிப்பட்ட எவருக்கும் உரித்தானதொன்றல்ல, இனவிடுதலையில் சோர்வானவர்கள் எவர் வேண்டுமானாலும் அதை பற்றிக்கொண்டு ஓய்வெடுத்துவிட்டு மறுபடியும் அவர்கள் பணத்தில் நகரலாம் என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன். அகவைகள் வருசம் வருசம் அதிகரிக்கும்போது சராசரி மனிதனுக்கு நாடி நரம்பு தளர்ந்து வயசாகிறது என்றே பொருள்படும். ஆனால் இனத்துக்கான காலபதிவுகளை ஒரு பணியாக தொடரும் தளங்களுக்கு காலம் செல்ல செல்ல நரம்புகள் இன்னும் முறுக்கேறுமே தவிர முடிவுக்கு வராது., வாழிய உங்கள் இன பணி.
    4 points
  3. ஏன் என்ன ஆச்சு பிரசர் கூடிட்டுது போல இருக்கு எதுக்கு இந்த கோதாரி பிடிச்ச வீடியோக்களை பார்க்குறீங்க நீங்க??. எனக்கென்ன விருப்பமா நாட்டில இருந்து அனுப்பிவிடுறாங்கள் சரி சரி அந்த சோபாவில இருங்க முதலில் ம் ம் . அப்பாடா நீ என்ன சொன்ன?? சைக் லண்டனா? அடியேய் நான் உன்ன இங்க கல்யாணம் கட்டி எடுக்காட்டி நாட்டில கருவாடு வித்திட்டு இருந்திருப்ப . நான் எதுக்கு கருவாடு விற்கபோறன் என்ற படிப்பிக்கு நான் வேலை எடுத்திருப்பன் ம்கூம் உன்ற படிப்புக்கு வேலை வேறா அடகடவுளே என்று இழுத்தார் மாணிக்கவாசகர் . நான் உங்களை கல்யாணம் கட்டாட்டால் நீங்கள் வெள்ளைக்காரியத்தான் கல்யாணம் கட்டி இருக்கணும் உங்க அரியெண்டம் தாங்க முடியாமல் அவளே உங்கள விட்டுட்டு ஓடியிருப்பாள். நானெண்டபடியால் உங்கள தாங்கிக்கொண்டு இருக்கன். அட பார்ரா புதுனத்தை ........... சரி சரி மகள் யமுனா எங்க? அவள் ஏதோ வகுப்பாம் என போயிருக்கா இனி வருவா. ம்ம் உன்ற புதல்வன் எங்க அதோ வாரான் . மகன் இஞ்ச வாங்க என்று அம்மா கூப்பிட மகனோ என்ன சொல்லுங்க நேரம் இல்ல எனக்கு மாணிக்க வாசகர் மனதுக்குள் (ஒரு வேலைக்கு போக துப்பில்லை இவனுக்கு நேரம் வேற போகுதாம்) ஒன்றும் இல்லை ஊரில ஒரு பெண் பார்த்திருக்கம் உனக்கு கல்யாணம் கட்டி வைக்க எதுக்கு அவசரம்? எனக்கு கல்யாணம் கட்ட இஸ்டம் இல்ல உன்ற மனுசருக்கு இன்னொன்றை பார்த்து கட்டி வையும் ( மாணிக்கவாசகர் மனதுக்குள் சிரிக்கிறார் நான் என்ன வேணாம் என்றா சொல்ல போறன்) காலம் முழுவதும் ஒருவளைக்கட்டிக்கொண்டு இழுத்துக்கொண்டு திரிய என்னால் முடியாது என்றான் அவன். அப்படி சொல்லாத மகன் நம்மட கலாச்சாரத்துக்கு ஏற்றமாதிரித்தான் நாம வாழணும் நாட்டை விட்டு வந்தாலும் நீங்கள் ரெண்டு பேரும் இங்க பிறந்தாலும் நாம் தமிழர்கள் தெரியுமோ? அதுக்கு என்ன இப்போ என மாறி கேட்கிறான் அவன் நாங்கள் இந்த நாட்டு பிரஜைதான் வேணுமென்றால் நீங்கள் இருவரும் உங்கட நாட்டுக்கு போங்க என்றான் அவன் மாணிக்க வாசகர் நடப்பதை பார்த்தும் கேட்டுக்கொண்டிருந்தார் ஒன்றும் பேசாமல். ஏனென்றால் அவர் அவன் விருப்பத்துக்கு நடப்பதால் அவனிடம் கதைப்பது குறைவு. என்பதை கதைத்து பல ஆண்டுகள் மாணிக்க வாசகர் ஒரு செருமலை கொடுக்க இருவரும் அமைதியானார்கள் அவர் எழுந்ததும் அவன் வெளியே சென்றுவிட்டான் . அடுத்த நாள் காலை இஞ்சாருங்க அவனுக்கு கல்யாணம் கட்டிக்கொடுத்தால் திருந்திடுவான். நீ நம்புறயா? ஓம். சரி அந்த பிள்ளையிட போட்டோவ காட்டு இப்ப எல்லோரும் பேஸ்புக், வட்ஸ் அப் அது இது எண்டு எல்லாம் வச்சிருக்கு பேசிப்பழகினால் சந்தோசம் ஆனால் எனக்கு இதில் துளியும் நம்பிக்கை இல்லை என்றார் மாணிக்கவாசகர். சரி நீங்கள் டிக்கட்ட போடுங்கள் போவோம் நாட்டுக்கு போய் அந்த பெண் வீட்டாருட்ட ஜாதகம் எல்லாம் வாங்கி ஐயரிட்ட காட்டி பொருத்தம் எல்லாம் பார்த்து சீதனம் பற்றி பேசணும் எதுக்கு சீதணம்? பின்ன ? அதை வேண்டித்தான் அங்க கல்யாண செலவை முடிக்கணும் சீதணம் வேண்டக்கூடாது... சீதணம் வேண்டாட்டி எப்படி கல்யாணம் முடிக்கிற ? என்றாள் மனைவி அங்க போய் பார்ப்போம் குடும்பம் வசதியென்றால் பேசிப்பார்ப்போம் இருந்தாலும் நாம சீதனம் வேண்டுவது அழகில்லை ம்ம் என்றாள் மனைவி யமுனாவை (மகளை) என்ன செய்வது அவளைக்க்கூட்டிக்கொண்டு போக இயலாது அவள உங்க அக்காவீட்டில விட்டுட்டு போவோம் என்ன ?? ம்ம் தொடரும்...........
    4 points
  4. இரண்டு நாள் தாமதமாயிற்று. எனது வாழ்ததுக்கள் சிறி
    2 points
  5. நண்பர்களே ! இந்தப் பக்கத்தில் கருப்பு வெள்ளைப் படங்களின் காலத்தை வென்ற பாடல்கள் இடம்பெறட்டும். சேர்ந்து பயணிப்போம்....!
    1 point
  6. சுதந்திரம் எம் சுவாசம். "சுதந்திரம் விரும்பி சுவாசத்தை நிறுத்திய அத்தனை வீரர்களுக்கும் வந்தனம்". மரத்தினின்று வீழ்ந்த பழுத்த சருகுகள் வேருக்கு உரமாகின்றன மரணித்த வீரனின் பாச நினைவுகள் மனதில் தடுமாறுகின்றன சுதந்திரம் ஒரு பசுஞ்சுனைதான் அதை நோக்கி நாம் கொடும் பாலையில் அல்லவா நடக்கின்றோம் கண்தொடும் தூரம் கானல் நீர் நாம் எதைத் தொலைத்தோம் எங்கே தொலைந்து போனோம் எம் மூதாதையர் வாழ்ந்தார்களே நிறைவாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்தார்களே சுதந்திரமாய் வாழ நினைத்தோமே சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்திவிட முயன்றோமே யூதாசும்,ப்ரூட்டசும், எட்டப்பனும் காக்கை வன்னியனும், கருணா நிதியும் நிதிக்காகவே அலைவார்களா --- நிகரில்லா சுதந்திரத்தை விற்பார்களா காலங்கள் தோறும் பிறந்து வருவார்களா ஓ ....வீரனே ...... திறந்திருக்கும் உன் விழிகளில் இலட்சிய ஒளி மட்டுமல்ல --- களமாடி விழுந்து கிடக்கும் உன் உடல்கூட முட்களையும், கற்களையும் ஓநாய்களையும், நரிகளையும் --- எமக்கு இனம் காட்டி விட்டல்லவா விதையாகியது.......! யாழ் அகவை 23 க்காக ஆக்கம் சுவி.........!
    1 point
  7. தம்பிக்கு வெளிநாட்டு மனங்களின் புதினங்கள் எல்லாம் வடிவாத் தெரியுது......ம் .....தொடருங்கள்.....! 😁
    1 point
  8. ஆழமான எழுத்துக்கள். பாராட்டுக்கள்.
    1 point
  9. அண்மையில் இப்பாடலைக் கேட்க நேர்ந்தது. எனக்குப் பிடித்திருந்தது. சுவி அண்ணா ஏற்கனவே இப்பாடலை இணைத்திருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.
    1 point
  10. இந்த பூமி எங்களுக்குமானதுதான் ....... இப்படிக்கு 🦢
    1 point
  11. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, புரட்டாதி 2013 முன்னாள்ப் போராளிகளை ராணுவத்தில் பலவந்தமாக இணைக்கத் தொடங்கியிருக்கும் கருணா மற்றும் பிள்ளையான் கிழக்கில் முன்னாள் விடுதலைப் புலிகள் போராளிகளை ராணுவத்தில் பலவந்தமாக இணைக்கும் கைங்கரியத்தில் கருணாவும் பிள்ளையானும் அரசாங்கத்தால் பணிக்கப்பட்டிருப்பதாக முன்னாள்ப் போராளிகள் தெரிவிக்கின்றனர். ஆண்கள் மற்றும் பெண் போராளிகளை பலவந்தமாக இணைக்க ஆரம்பித்திருக்கும் இத் துணை ராணுவக் கொலைக்குழுக்கள் அவ்வாறு இணைய மறுக்கும் போராளிகளின் பெற்றோரை அல்லது குடும்பஸ்த்தவர்களைக் கொன்றுவிடப்போவதாக மிரட்டிவருகின்றனர் என்று இப்போராளிகள் தெரிவிக்கின்றனர். வாகரை, வெள்ளாவெளி, குடும்பிமலை, வேப்பவெட்டுவான் ஆகிய பகுதிகளில் முன்னாள்ப் போராளிகளின் வீடுகளுக்குச் செல்லும் துணைராணுவக் கொலைக் குழுக்கள் போராளிகளை மிரட்டி வருவதுடன் அவர்களைப் பலவந்தமாக ராணுவத்தில் இணைக்கும் கைங்கரியத்தையும் ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது. இறுதிப் போரின்பின்னர் ராணுவத்திடம் சரணடைந்து, புணர்வாழ்வு எனும்பெயரில் கடுமையான உடல், உல சித்திரவதைகளுக்குப் பின்னர் சமூகத்திற்கு அனுப்பப்பட்ட பல போராளிகள் இன்னும் மன ரீதியிலான அழுத்தங்களுக்கு உட்பட்டே வாழ்ந்துவருகின்றனர். இவர்களில் பலர் திருமணம் முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையிலேயே இப்போராளிகளை மிரட்டி ஆக்கிரமிப்பு ராணுவத்தில் இணைக்கும் கைங்கரியத்தினை ராணுவப் புலநாய்வுத்துறையினரால் ஏவப்படும் கொலைக்குழுக்களான கருணாவும் பிள்ளையானும் செய்துவருகின்றனர். ராணுவப் புலநாய்வுத்துறையினரால் ஏவப்படும் கருணா மற்றும் பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களுக்கு அவர்களின் எஜமானர்களால் வழங்கப்பட்டுள்ள பணிப்புரையில் ஒவ்வொரு துணைப்படை உறுப்பினரும் குறைந்தது இரு போராளிகளையாவது ஒரு மாதத்தில் ராணுவத்தில் இணைக்கவேண்டும் என்றும், அப்படி இணைக்கத் தவறும் பட்சத்தில் அவர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படும் என்றும் கட்டளையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே கருணாவும் பிள்ளையானும், திருமணம் முடித்த அல்லது தனியே இருக்கும் ஆண் மற்றும் பெண் போராளிகளைக் கட்டாயப்படுத்தி இணைத்துவருவதாகத் தெரியவருகிறது. இந்த பலவந்த ஆட்சேர்ப்புப் பற்றி மனிதவுரிமை அமைப்புக்களிடம் தெரிவித்தால் தாக்குதலுக்கு உள்ளகலாம் என்கிற அச்சத்தில் இப்போராளிகள் வாழ்ந்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை ராணுவத்திடம் சரணடைந்து கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் நடைபிணங்களாக சமூகத்தில் உலவ விடப்பட்டிருக்கும் முன்னாள்ப் போராளிகளை ராணுவப் புலநாய்வுத்துறையும், துணைப்படைக் கொலைக் குழுக்களும் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. அண்மையில் தனது வீட்டிற்கு வந்த ராணுவப் புலநாய்வுத்துறையினர் தனது வீட்டிற்கு வந்துபோகும் உறவினர்கள் பற்றிக் கடுமையாக விசாரணை செய்ததாக ஒரு பெண்போராளி கூறினார். அரச சார்பற்ற நிறுவனங்களால் முன்னாள்ப் போராளிகளுக்கு வழங்கப்படும் ஒரு சில நிவாரணங்களைக் கூட ராணுவப் புல்நாய்வுத்துறையினரும், துணைப்படைக் கொலைக் குழுவினரும் சந்தேகிப்பதாகவும், இவ்வாறான அரச சார்பற்ற அமைப்புக்கள் போராளிகளைச் சந்தித்த மறு நிமிடமே புலநாய்வுத்துறையினரும், கொலைக்குழுக்களும் போராளிகளை விசாரணைகளுக்கு இழுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிங்களத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களைத் தம்மிடம் காண்பித்து கையொப்பம் இடும்படி தம்மைச் சித்திரவதை செய்யும் ராணுவப் புலநாய்வுத்துறை, ஒவ்வொருமாதமும் தம்மால் இவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதாகப் பொய்யான ஆவணங்களைத் தயாரித்து போராளிகளின் ஒப்புதல் கையொப்பத்தினைப் பெற்றுக்கொள்வதாகவும், நிவாரணம் என்று இதுவரை அரசால் தமக்கு எதுவுமே வழங்கப்படவில்லையென்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
    1 point
  12. அழகென்ற சொல்லுக்கு முருகா ஸ்ரீ மகாலட்சுமி போற்றி
    1 point
  13. நீயின்றியே நிறைவில்லையே என் வாழ்க்கையோ இங்கே இங்கே
    1 point
  14. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 கைகளை ஏந்தி விட்டேன் நாகூர் ஆண்டகை வாழுமிடம்
    1 point
  15. எவ்வளவு அழகாக சோளப்பொரி செய்கின்றார். நீங்களும் செய்யலாம்......! 👍
    1 point
  16. கவி வரிகளை அவற்றுக்கேற்ப ஏக்கமான தொனியில் வழங்கியமையும், இசையும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள் உதயன் அண்ணா.
    1 point
  17. பெயர் பிரச்சினை பெரிய தொடர். ஏன் எங்களுக்கு குடும்ப பெயர் இல்லாமல் போனது என்பது பலமுறை யோசித்திருக்கிறேன். எங்கள் பெயர்களை வெளிநாட்டவர்கள் உச்சரிக்க பெரும் சிரமப்படுவார்கள். அவர்கள் சிரமம் என்றால் அதற்கு நான் அவர்களுக்கு சொல்வேன் உங்கள் மொழியும் எனக்கு சிரமமாகத் தான் இருந்தது. அதை சிரமப்பட்டுத் தான் நானும் கற்றுக் கொண்டேன். எனது அப்பாவின் பெயர் ஆனந்தசடாட்சரம். அதை யேர்மனியில் இழுத்து நீட்டி அலுவலகங்களில் கூப்பிடுவார்கள். அதற்கு ஒவ்வொரு இடத்திலும் மன்னிப்பு கேட்பார்கள். சிலர் தலையைப்பிடித்து ஒருதரம் சொல்வாயா உன் பெயரை என்று கேட்டால் நமது தன்மானத்தை சீண்டுவது போலிருக்கும். அப்படி கோட்போரிடம் அவர்கள் பெயரைக் கேட்பேன். அவர்கள் பெயரை சரியாக உச்சரிக்க முடியும் ஆனால் நான் இழுத்து நீட்டி முறிப்பேன். தங்கள் பெயரை அப்படி தவறாக உச்சரிக்க விடாமல் திருந்துவார்கள். அவர்களுக்கு நான் சொல்வது "இதுபோல் என் பெயரையும் உச்சரியுங்கள்" தொடர்ந்து பழக்கப்பட்ட இடங்களில் ஆனந்தா என்று அடிவாங்காமல் சுருக்கி கூப்பிடுவார்கள்.
    1 point
  18. "ஸொம்பி" என்றால்.. என்ன கிருபன் ஜீ. 🤣
    1 point
  19. கவிதை சொன்ன விதம் அழகு. அடுக்கு மொழியும் கலக்குது.குரலும் இசையும் அசத்துகின்றது. 👍🏽
    1 point
  20. என்னுடன் மட்டக்களப்பு நண்பரொருவர் கல்லூரிக் காலத்தில், ஒன்றாகப் படித்தார்...! அவரது பெயர் போடியார் என்று குறிப்பிட்டார்! தனது குடும்பத்தில் அனைவரும் போடியார் என்று தான் அழைக்கப் படுவதாகக் கூறினார்! வன்னிப் பகுதிகளில் நாச்சியார் என்று அழைக்கப் படுவது போல...வன்னி மன்னர்களின் ஆதிக்கம், கிழக்கில் விரிந்த போது இந்தப் பெயர்கள் அங்கு வழக்கத்துக்கு வந்திருக்கவும் கூடும்..! இந்தியாவில் எல்லா தலைப்பாகைகளின் குடும்பப் பெயர் சிங் என்பது போலவும் இருக்கலாம்! பஞ்சாப் மாகாணத்தின் 'ஆதாமாக" மிஸ்டர் சிங் இருந்திருப்பாரோ?😜
    1 point
  21. கொரோனாக் கவிதை நன்று👍🏾 மனிசரைக் கண்டால் ஸொம்பிகளைக் கண்ட மாதிரி விலகி ஓட வைக்கின்றது!
    1 point
  22. கொண்டாடியவர்கள் திண்டாடுகிறார்கள் திண்டாடியவர்கள் கொண்டாடுகிறார்கள் இந்த கருத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளும் விதத்திலே இருக்கிறது
    1 point
  23. தொடருங்கள் ராஜா. ஒரு மார்க்கமாகத் தான் எழுதுறியள்.
    1 point
  24. தம்பி தனியொருவனாக நிக்கிறியள் கவனம். மிச்சத்தை யும் வாசிக்க காத்திருக்கிறேன்.
    1 point
  25. ஐரோப்பிய சமூகத்தில் பிள்ளைகள் வளர்வதால் அந்த முறைப்படி பெயர் இருப்பதே குழப்பம் இல்லாமல் இருக்க வழி. 90 களில் தமிழ் ஒலி வானொலியில் இது பற்றி நேரடி விவாதம் ஒன்று நடந்தது. நான் இதை சொன்ன போது நடாத்துநர் தனது பிள்ளைகளுக்கு தனது தகப்பனாரின் பெயர் வருவதை அசிங்கமாக தான் பார்த்ததால் தனது பிள்ளைகளுக்கு தனது பெயரை முதற் பெயராக வைத்ததாக சொன்னார். எனக்கு வந்த கோபத்தில் ஆமாம் நீங்கள் ஊரில் இருந்து வரும் போதே பிளான் பண்ணி வந்தீர்கள் நான் அகதியாக ஓடி வந்தவன் என்றேன். பேச்சு மூச்சு இல்லை. நல்லதொரு கருத்து இதை கதையாக்க எல்லோராலும் முடியாது. வாழ்த்துக்கள்.
    1 point
  26. இது போன்ற பெயர்க்குழப்பங்கள் எனக்கும் வந்ததுண்டு. இலங்கை கடவுச் சீட்டின் படி இங்க பல ஆவணங்களில என் பெயர் குடும்பப் பெயரா இருந்து, அப்பாவின் பெயர் கொண்டு என்னை அழைக்க இப்படி பல குழப்பங்களுக்குப் பிறகு இந்நாட்டு கடவுச்சீட்டு எடுக்கும்போது இக்குழப்பத்தைச் சரிசெய்து கொண்டேன். அதன்படி ஏனைய ஆவணங்கள் பலவற்றையும் சரிசெய்து நேரவிரயமாகியது. ஆனாலும் பெயர்க்குழப்பத்தால வாற சிக்கல்கள் இப்ப இல்லை.
    1 point
  27. ஆம் அத்தத் தன்னம்பிக்கை மிக முக்கியம் சிறியர்.......! நாடு விரலால் உங்கள் மூக்கை மட்டுமல்ல அடுத்தவர் மூக்கையும் நோண்ட முடியாது. அது கொஞ்சம் பெரிது. அதுக்கு ஆள்காட்டி சுட்டுவிரல்தான் சரி.(நான் முயற்சித்துப் பார்த்துட்டுத்தான் எழுதுகின்றேன்). ஆனால் பேப்பர் பாவிப்பவர்கள் அதில் டிஸ்சு சுத்தி காலைகடனின் போது உபயோகிக்கலாம் வாகாக இருக்கும்.......! 😎
    1 point
  28. சனியன் தலையில் ஏறி உட்கார்ந்துவிட்டது.
    1 point
  29. தொடருங்கள், நல்ல திருப்பு முனைகள் இருக்குமென நினைக்கின்றேன், பணம் குவிய தொடங்கினல் நல்ல மனமெல்லாம் காற்றில் பறந்துவிடும், வாழ்கை திசை மாறும்
    1 point
  30. மேலும் தொடருங்கள், நாங்களும் தொடர்கின்றோம்.....! 😁
    1 point
  31. அருமையான தேவையான பதிவு கிருபன். இதே பிரச்சினையும் அனுபவமும் எனக்கும் நிறைய உண்டு. பின்பு எழுதுகின்றேன்......! 👍
    1 point
  32. நிச்சயமாக தமிழர்களின் நல்ல வழக்கங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வேறு கலாச்சாரங்க்ககளைத் தழுவி எமது இனம் வளர்ச்சி அடைவதிலும் தவறில்லை. ஏனென்றால் மாற்றங்களினூடாகவே எதையும் தக்கவைக்க முடியும். ஆனால் எம்மவர்கள் பெரும்பாலும் மூடநம்பிக்கையை இறுகப் பற்றுவதும் பயனற்ற வேற்றுப் பழக்கவழக்கங்களை எமது கலாச்சாரத்தில் புகுத்துவதும் ஆரோக்கியமானது அல்ல. இன்று நாம் எதிர்பார்க்கும் சுதந்திரம் கிடைக்காமல் போவதற்கான காரணங்களின் வேரைத் தேடிப் போனால் அது எமது சமூகக் கட்டமைப்பிலேயே முடியும்.
    1 point
  33. நாசா அனுப்பிய "ரோவர்" செவ்வாய்க் கிரகத்தில் கால் பதித்தது.
    1 point
  34. ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே ......! 💞
    1 point
  35. இரு சூப்பர்ஸ்டார்களான தியாகராஜ பாகவதரும், எம்.ஜி.ஆரும் ஒரே பாடலில். 'சர்வகுண போதன்...' பாடல் அஷோக்குமார் திரைப்படம் (1941)
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.