Jump to content

Leaderboard

 1. புங்கையூரன்

  புங்கையூரன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   16

  • Posts

   13325


 2. உடையார்

  உடையார்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   10

  • Posts

   22082


 3. நிலாமதி

  நிலாமதி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   9

  • Posts

   9993


 4. சுப.சோமசுந்தரம்

  சுப.சோமசுந்தரம்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   9

  • Posts

   330


Popular Content

Showing content with the highest reputation on 03/04/21 in all areas

 1. ஊரில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும்,…..நெடுந்தீவின் அடிப்படை அடையாளங்கள் இன்னும் மாறாது அப்படியேயிருந்தன ! கற்களால் அடுக்குப்பட்ட பயிர் வேலிகள், எவரோ தாட்டு விட்டுப் கிழங்கு பிடுங்க மறந்து போன பனம் பாத்திகளிலிருந்து முளைத்த பனங்கூடல்கள், மாட்டு வண்டித் தடங்கள் என்பன இன்னும் இருந்தன! முள்ளிவாய்க்காலில் மரணித்துப் போனவர்களில், விகிதாசார அடிப்படையில் பார்த்தால், நெடுந்தீவு தான் அதிக விலை கொடுத்தாக இருக்கும் என்பது சந்திரனின் அனுமானமாக இருந்தது! ஸ்ரீ மாவோ அம்மையார் கொண்டு வந்த மரவள்ளி வளர்க்கும் திட்டத்தினாலும் , முத்தையன்கட்டுப் பிரதேசத்தில் இலவசக் காணி பகிர்ந்தளிப்புத் திட்டத்தினாலும் கவரப்பட்டு அங்கு சென்றவர்களில் பலரும் , அவர்களது சந்ததியினரில் சிலரும் அவர்களுக்குள் அடங்குவர்! குறிப்பாக, இசைப்பிரியா போன்றவர்களின் இழப்பு அவனை மிகவும் பாதித்திருந்தது! தம்பி, இஞ்சையோ நிக்கிறியள் என்று கேட்ட படியே, குறிகாட்டுவானில் வள்ளத்துக்கு வரும்படி கூப்பிட்ட அந்தப் பெரியவர் அருகில் வந்தார்! வந்தவர், எங்க தங்கப் போறீங்கள் தம்பி என்று கேட்டார் ! மகா வித்தியாலயத்துக்குப் பக்கத்தில , எங்கையாவது ஒரு ஹோட்டல்ல நிக்கலாம் எண்டு யோசிக்கிறன்! தம்பி, இப்ப வெளிநாட்டுக் காசு புழக்கத்துக்கு வந்த பிறகு எல்லாம் அவையின்ர ஹோட்டல்களாய்த் தான் இருக்குது! தம்பிக்குக் கனநாள் நிக்கிற பிளானோ? அந்தப் பெரியவரது பேச்சின் சாராம்சம் அவனுக்குள் ஓடி வெளிப்பதற்கு அவனுக்குக் கொஞ்சக் கால அவகாசம் தேவைப் பட்டது! அவையின்ர என்றால்…...ம்ம்ம்….இன்னும் நெடுந்தீவு மாறவேயில்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்! அது சரி…..இவருக்கு எப்படித் தெரிந்தது , நான் அவையின்ர ஆக்களில் ஒருவன் இல்லையென்று…! அவன் யோசிக்கும் போதே பெரியவர் தொடர்ந்தார்! தம்பி, நெழுவினிப் பிள்ளையார் கோவிலடிக்குப் பக்கத்தில ஒரு வீடு இருக்குது! வீட்டுக்காரர் எல்லாரும் வெளிநாட்டிலை தான் இருக்கினம்! இப்ப வீடு சும்மாதான் கிடக்குது! உங்களுக்கு விருப்பமெண்டால் தாராளமாக அங்கு நிற்கலாம்! வேணுமெண்டால் என்னிட்ட ஒரு மோட்டச் சைக்கிளும் இருக்குது! உங்களுக்குத் தேவையான இடத்தில நான் கொண்டுபோய் இறக்கி விடுவன் என்றும் கூறினார்! சரி பெரியவர், எவ்வளவு காசு எண்டும் பேசுவமே என்று சந்திரன் சொல்லவும், என்னடா தம்பி….மீன் கரைஞ்சா எங்க போகப்போகுது….ஆணத்துக்கை தானே கிடக்கப் போகுது! நீங்களாய்ப் பாத்துத் தாறதைத் தாங்கோவன் எண்டு சொல்லவும் சந்திரனுக்கு கொஞ்சம் உதறலெடுக்கத் தொடங்கியது! ஒரு வேளை பெரியவர் தன்னைப் பற்றி ஏதாவது மணந்து கிணந்து இருப்பாரோ? இருந்தாலும் குறுக்கால வந்த தெய்வத்தையும் திருப்பி அனுப்ப மனம் வரவில்லை! பெரியவரே, நான் நீங்கள் சொல்லுற இடத்தில நிக்கிறன்! ஆனால் ஒரு கொண்டிசன்! எனக்கு உங்கட பழைய சைக்கிள் ஏதாவது இருந்தால் அதைத் தந்தால் போதும்! சாப்பாட்டுக்கு கிட்டடியில கடையள் ஏதாவது இருக்கும் தானே...என்று கேட்கவும்….என்ன தம்பி நீர், நாங்கள் என்னத்துக்கு இருக்கிறம்? நீர் என்ன விருப்பம் எண்டு சொல்லும் , நான் செய்விச்சுத் தாறன் எண்டு சொல்ல சந்திரனும் சம்மதித்தான்! இருந்தாலும் , பெரியவரை ஒரு முறை ரெஸ்ற் பண்ணிப் பார்க்கவேணும் என்று நினைத்தவனாக, ஐயா….ஒருக்கால் ஈச்சங்காட்டுப் பக்கம் போகவேணும், கொண்டு போய் விடுவீங்களோ எண்டு கேட்கவும் , பெரியவர் திடுக்கிட்டவர் போலச் சந்திரனைப் பார்த்தார்! தம்பிக்கு இடங்கள் தெரியுமோ என்று மிகவும் ஆச்சரியமாகக் கேட்கவும்….இவனுக்கு கொஞ்சம் மனதில் நிம்மதி வந்தது! இல்லை ஐயா, எனது நண்பனொருவன் தன்னுடைய பழைய வீடடைப் பார்த்து வரும்படி சொல்லியிருந்தான்! ஈச்சங்காட்டில எவடம்? விளாத்தி மரத்துக்கு கிட்டவாக! சரி, எதுக்கும் இதை வைச்சிருங்கோ எண்டு சொல்லி கொஞ்சக் காசை அவரிடம் கொடுக்க, அவர் என்ன தம்பி இப்பவே எண்டு சொல்லிக் சிரிக்கப் பெரியவருக்கு கடவாய்ப்பற்கள் ஒன்று கூட இல்லை என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தது! உடனேயே அங்கே நின்ற பெடியன் ஒருவனைக் கூப்பிட்டுத் தம்பி இந்த ஐயாவைக் கொண்டு போய் ஈச்சங்காட்டிலே இறக்கி விடு என்று கூற…..அவனும் பின்னால் திரும்பிப் பார்த்து விட்டுத் தான் தான் அந்த ஐயா என்று உறுதி படுத்திய பின்னர் மோட்டார் சைக்கிளில் லாவகமாக ஏறி அமர்ந்து கொண்டான்! ஈச்சங்காட்டில் ஒரு ஈச்ச மரங்களையும் இப்போது காணவில்லை! விளாத்தி மரத்தடியில் வீடு இருந்த இடம் வெறிச்சோடிப்போய்க் கிடந்தது! அந்த விளாத்தி மரம் மட்டும் இன்னும் அப்படியே நின்றது! தனது மூதாதைகளின் மூச்சுக்காற்றை இந்த மரமும் சுவாசித்திருக்கும் என்ற நினைவே...அவனுக்கு இதமாக இருந்தது! இங்கு தான் இந்தக் கதையின் கதாநாயகியை அடிக்கடி சந்திரன் இரகசியமாகச் சந்திப்பதுண்டு! இவன் கதைகள் சொல்லும்போது விழிகளை அகல விரித்தபடியே...அவள் கேட்டுக் கொண்டிருப்பாள்! இந்த விளாம்பழங்களை யானை எப்படிச் சாப்பிடும் எண்டு உனக்குத் தெரியுமா? இல்லை என்று அவள் தலையாட்ட ‘ஒரு சின்ன ஓட்டை மட்டும் போட்டுவிட்டு, அதன் உள்ளடையை அப்படியே உறிஞ்சி எடுத்து விடும்! அப்போ விதைகளை என்ன செய்யும்? அதை அப்படியே பழத்துக்குள் விட்டு விடும்! அவள் , அது உனக்கெப்படித் தெரியும்? சாப்பிட்ட பழத்தை யானை ஒருமுறை குலுக்கிப் பார்க்கும்! அப்போது அருகில் நிற்பவர்களுக்குக் கிலுக்கட்டி கிலுக்குவது போல ஒரு சத்தம் கேட்கும்! இதிலிருந்து உனக்கு என்ன தெரிகின்றது? அவளின் பதில் உடனடியாகவே வந்தது! யானை தனது அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு….விதைகளைச் சாப்பிடாமல் அப்படியே விட்டு விடுகிறது…! அடுத்து வரும் மழைக்கு விளாம்பழத்தின் கோது உடைய விளாத்தி மரங்கள் முளைக்கும்! இப்படியான பதில்கள் தான்...சந்திரனுக்கு அவளிடம் ஒரு விதமான ஈர்ப்பை உருவாக்கியிருக்க வேண்டும்! அவளை முதலில் சந்தித்த சம்பவம் இன்னும் தெளிவாகவே அவனது நினைவில் இருந்தது! வீட்டில் விருந்தினர்கள் வந்திறங்கியிருந்தார்கள்! பொழுது பின்னேரமாகி விட்டிருந்தது! சந்திரனின் தாயார் சந்திரனிடம் கொஞ்சம் காசைக் கொடுத்துத் தம்பி, கடற்கரைக்குப் போய் மீன் ஏதாவது வாங்கிக் கொண்டு வா என்று கூற….அம்மா உங்களுக்கென்ன விசரே, இந்த நேரத்தில கடற்கரையிலே ஒரு வள்ளமும் வராது என்று பின்னடிக்க அம்மாவும், ஆராவது வீச்சு வலைக்காரர் நிப்பாங்கள், போய்ப்பார் என்று சொல்லத் தயக்கத்துடன் கடலுக்குப் போனவனுக்கு ஆச்சரியமாக இருந்தது! அவன் அம்மா சொன்ன மாதிரியே ஒரு வீச்சு வலைக்காரன் நின்று கொண்டிருந்தான்! அவனது இடுப்பில் தொங்கிய பறியும் காற்றில் அசையவில்லை! ம்ம்ம்...பறிக்குள்ள என்னவோ பாரமான சாமான் என்னவோ கிடக்குது! பிரச்சனை என்னவென்றால், அவன் கரைக்கு வரும் வரை பார்த்துக் கொண்டிருந்தால், கரையில் கன சனம் நிண்டு...மீனுக்கு விலையைக் கூட்டிப் போடும்! கடல் கொஞ்சம் வத்தாக இருந்ததால்...மீன் காரனிடம் நடந்தே போக முடிவு செய்தான்! மீன் காரனுக்கு கிட்டப் போனதும் அவனது அதிஸ்ட்டத்தை நினைத்து...தனது முதுகில் தட்டித் தன்னைத் தானே பாராட்டியும் கொண்டான்! ஆம், அந்த மீன் பறிக்குள் ஒரு பால் சுறாவும் இருந்தது! பால் சுறா, அதுவும் ஆண் சுறா எல்லாருக்கும் பிடிக்குமென அவனுக்குத் தெரியும்! பின்னேரமானதால் ….குழல் புட்டும் அவித்து சுறா வறையும் வைக்க அந்த மாதிரி இருக்கும்! விலையும் சரியாக இருக்கவே...வாலைப் பிடித்த படி...அந்தப் பால் சுறாவைத்...தண்ணீருக்குள் விட்ட படி இழுத்துக் கொண்டு கரைக்கு நடந்து வந்தான்! அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன! ,முதலாவது சுறா பழுது படாமல் இருக்கும்! இரண்டாவது…..தமிழர்களுக்கே ,,தனித்துவமான குணமான...ஆற்றையும் கண்பட்டு விடக்கூடாது என்ற ஆதங்கமும் தான்! கரைக்கு ஒரு இருபதடி தூரம் கூட இருக்காது! ‘கிளிக்’ என்றொரு சத்தம் கேட்டது! தண்ணீரில் ஒரு வட்டம் போட்டுவிட்டுப் பால் சுறா, அவைனப் பார்த்துக் கண்ணை ஒரு முறை அடித்து நன்றி சொல்லி விட்டுப் போயே விட்டது! இப்போது அவனிடம் காசுமில்லை! கறிக்குச் சுறாவுமில்லை! கண்ணீரும் கட்டுப்படுத்த முடியாமல்…...வரத் தொடங்கியது! அப்போது ‘கிளுக்” என்று யாரோ கரையில் நின்று சிரிப்பதும் தெளிவாகச் சந்திரனுக்குக் கேட்டது! அடுத்த பகுதியில் தொடரும்….!
  12 points
 2. கவலையில்லாத மனிதன் சந்திரபாபு அவர்கள் முக்கியக் கதாபாத்திரமாக நடித்து 1960 ம் வருடம் வெளியான படத்தின் தலைப்பு. இத்தலைப்புக்கு முழுத்தகுதியான ஒரு மனிதரை நெடுங்காலம் எனக்கு மிக அருகிலேயே பார்த்திருக்கிறேன். எனது அடுத்த வீட்டின் உரிமையாளரும் அங்கேயே நீண்ட காலம் வசித்தவருமான திரு. ரங்கசாமிதான் அவர். அந்தக் குடியிருப்புப் பகுதியில் 1982ல் முதலில் வீடு கட்டி வந்தவர் அவர்தான். 12 வருடங்கள் கழித்து அவருக்கு அண்டை வீட்டுக்காரனாகும் பேறு பெற்றவன் நான். அவர் உயர்ந்த கொள்கை பிடிப்புள்ளவர் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த விஷயங்கள் ஒன்றிரண்டு உண்டு. அதனால் அவர் சில விஷயங்களில் எனக்கு முன்மாதிரி என்றே இன்றளவும் வைத்துள்ளேன். நான் அங்கு குடிவந்தபோதே அவரது ஐந்து பிள்ளைகளும் வேலையிலோ திருமண பந்தத்திலோ கட்டுண்டதால், அவரும் அவரது மனைவியும் மட்டுமே அவ்வீட்டில். பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் அவ்வப்போது வந்து போவார்கள். அவரும் அவரது மனைவியும் அரசுப் பணியில் இருந்தார்கள் அப்போது. துணைவியார் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் நமது கதாநாயகர் வருவாயித்துறையில் இளநிலை உதவியாளராகவும் இருந்தனர். “முப்பத்தி மூணு வருஷ சர்வீஸ்” என்று அவர் பெருமையாகக் கூறியதும் நான் தயங்கியபடி கேட்டேன், “சார், உங்கள் துறையில் இத்தனை வருஷமாகவா பதவி உயர்வு தராமல் Junior Assistant ஆகவே வைத்திருப்பார்கள்?” பொதுவாக ஒருவரின் பதவி நிலை, பணி உயர்வு போன்ற தனிப்பட்ட விஷயங்களுக்குள் போவது அநாகரிகம் என்று நினைக்கும் நானே அடக்கமாட்டாமல் கேட்டு விட்டேன். முப்பத்து மூன்று வருடங்கள், ஆரம்ப நிலையான இளநிலை உதவியாளர் என்னும் கொடுமையை என்னாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் மனிதர் ஒரு மந்தகாசச் சிரிப்புடன் அக்கேள்வியைக் கடந்து சென்றார் பாருங்கள், “தம்பி, நான் அந்த நேரத்தில் நியமனம் ஆன முறைப்படி (ஏதோ 10A1, வழக்கு, கோர்ட் தீர்ப்பு என்றெல்லாம் சொன்னார்) Junior Assistant தான் எனக்கு கியாரண்டி. அடுத்த நிலைக்குச் செல்ல ஏதோ டெஸ்ட் எழுதணுமாம். அதெல்லாம் படிக்க எனக்குப் பொறுமையில்லை; சரக்குமில்லை. அப்புறாம் பதவி உயர்வு கொடுத்து இடமாற்றம் வேற பண்ணுவான். போதும் தம்பி ! நமக்கு என்ன குறை?” என் தந்தை இதே துறையைச் சார்ந்தவர். இவரைப் போலவே இளநிலை உதவியாளராய்ச் சேர்ந்து படிகள் சில கடந்து அப்போது வட்டாட்சியராய் இருந்தார்கள். அவர்கள் சொன்னது, “ஒரு முறை அலுவலக நண்பர்கள் ரங்கசாமியை வலுக்கட்டாயமாகத் தேர்வு எழுத வைத்து, புத்தகங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து, காபி டிபனெல்லாம் வாங்கி வந்து எழுத வைத்தார்கள். மனிதர் சாவகாசமாய் அமர்ந்து அவற்றையெல்லாம் சாப்பிட்டு விட்டு, “வே! உங்களையெல்லாம் மறக்க முடியாது வே!” என்று உணர்ச்சிப்பூர்வமாக நன்றி சொல்லி, விடைத்தாளில் ஏதோ கிறுக்கிவிட்டுச் சென்று விட்டார். நான் அதுகுறித்துக் கேட்டேன். “தம்பி ! அந்தப் புத்தகங்களில் விடை எங்கே இருக்கிறது என்று எவனுக்குத் தெரியும்? அவற்றைக் கொண்டு வந்த நம்ம ஃப்ரெண்ட்ஸ்கே தெரியல!”. பொதுவாக இப்படிப்பட்டவரை ‘சோம்பேறி’ என்றுதான் உலகம் விளிக்கும். அவரை அருகிலிருந்தே பார்ப்பதால் எனக்கு என்னவோ அப்படித் தோன்றவில்லை. பதவி உயர்வுகளை உரிய நேரத்தில் பெற்ற என் தந்தையாரை விட அவர் மகிழ்ச்சியாகவே தோன்றினார். பணியில் சேர்ந்த நாள் முதல் ‘Enterprising’, ‘Active’ என்ற பெயரில் எதையோ விரட்டிக் கொண்டே திரியும் நிம்மதியிழந்த ஜீவன்களை விட அவர் ஒரு உயிர்ப்புள்ள மனிதராகவே தெரிந்தார். சரி, இதிலிருந்து கிடைத்த பாடம்? பணி மேம்பாடு பக்கமே போகாமல் நானும் சித்தராகத் திரிந்தேனா? அவ்வளவு நான் முத்தி அடையவில்லை. அடுத்த நிலைக்கான சிறிய முயற்சியை மேற்கொள்ளாமல் இல்லை. ஆனால் அதையே நினைத்து வாழ்க்கையை வீணாக்காமல் தப்பினேன். ஒரு விரிவுரையாளனாய்ப் பணியில் சேர்ந்த நான் அதே நிலையில் ஓய்வு பெறும் மனநிலை பெற்றேன். அதையும் மீறி வந்த உயர்வினை ‘இலாபம்’ என்று எழுதினேன். அலுவலகம் எனும் உலகில் அமைதியான வாழ்வைப் பெற்றேன். உபயம் : உயர்திரு. ரங்கசாமி அவர்கள். பயன் : அதிகார வர்க்கத்திடம் தேவையில்லாமல் நான் சமசரம் செய்ததில்லை; மனநிறைவுடன் ஒரு தொழிற்சங்கவாதியாய் வாழ்ந்தேன். இளைய தலைமுறைக்கும் இத்தாரக மந்திரத்தைக் கடத்த முற்பட்டேன். அதன் பொருள் புரிந்தோர் பேறு பெற்றோர். சரி. மீண்டும் புகைப்படக் கருவியை (Camera) ரங்கசாமியின் பக்கம் திருப்புவோம். பிரச்சினையே இல்லாத மனிதன்தான் கவலையில்லாத மனிதனாய் வாழ முடியும் என்று நீங்கள் நம்பினால், ஒரு நொடி உங்களைக் கண்ணாடியில் பார்த்து நீங்களே சிரித்து விட்டுத் தொடருங்கள். இல்லறம் நல்லறமாய் அமையாத துர்பாக்கியசாலி அவர். அதற்கு அவரும் காரணமாய் இருந்திருக்கலாமே! இருக்கலாம். இல்லை என்று தீர்ப்பு வழங்க நான் நீதிமான் இல்லை. எது எப்படியாயினும் அது அவருக்கும் துன்பம்தானே ? இங்கு ஒரு நிகழ்வைப் பதிவு செய்ய விழைகிறேன். அவர்கள் வீட்டில் தென்னை நன்றாகக் காய்த்து என் வீட்டு மாடியில் தண்ணீர்த்தொட்டியின் குழாயை அவ்வப்போது பதம் பார்த்தது. ஒரு நாள் முற்றத்தில் நின்று கொண்டிருந்த அந்த அம்மாவிடம் சொன்னேன். உடனே சீற்றத்துடன், “நீங்கள் புதுசு புதுசா ரூம் எடுப்பீர்கள். எங்களுக்கு வேறு வேலையில்லையா?” என்றார் அந்த அம்மா. “என்னது, சம்பந்தமில்லாமல் பேசுகிறார்?” என்று யோசித்த பின்தான் தெரிந்தது; என் வீட்டில் அந்தப் புதிய தண்ணீர்த் தொட்டியே மாடியில் புதிய அறை கட்டியதால்தானே வந்தது ! பின்னர் ரங்கசாமி ஆளை அழைத்து வந்து தேங்காய் பறிக்கச் செய்தார். என்னிடம் சொன்னார், “தம்பி ! அவளிடம் பேசி உங்கள் மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். என்னிடம் சொல்லுங்கள்”. இந்த நிகழ்வை நான் இப்போது சொன்னது, வாசிக்கும் உங்கள் நியாயத் தராசு ஒரு பக்கமாய்ச் சாயட்டுமே என்ற எனது அரசியலாக இருக்கலாம். 24x7 அந்த அம்மா கரித்துக் கொட்டுவதைச் சட்டை செய்யாமல், தேய்த்து வாங்கிய சட்டையை மடிப்புக் குலையாமல் எடுத்து அணிவார். சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட வாசனைத் திரவியத்தை அள்ளித் தெளித்து, தினமும் சவரம் செய்து பளபளப்பாக வைத்திருக்கும் முகத்தில் பவுடரால் (அதுவும் வாசனையுடன்) மெருகேற்றிக் கிளம்பி விடுவார். அது அலுவலகத்திற்கு அல்லது கடைத்தெருவில் நட்பு வட்டத்துடன் அரட்டையடிக்கும் தேநீர்க் கடைக்காக இருக்கலாம். அவருக்கு மகிழ்ச்சி எங்கே கிடைக்கிறதோ அங்கேதானே போக முடியும்! வெளியே செல்ல முடியாத நேரமாயிருந்தால் அவரும் குரலை உயர்த்துவார். கவலையில்லாத மனிதர் ஒருவரை சந்திக்கக் கிடைத்தது எனக்கு வாய்த்த பேறு என்றால், தினமும் அவர்களுக்கு இடையில் பரிமாறப்படும் வசவுகள் என் காதில் விழுவது நான் செய்த பாவம். பிள்ளைகள், பேரன், பேத்தி எல்லாம் ஏற்படுவதற்கு மனதளவில் கணவன் - மனைவி ஆக வேண்டிய அவசியமில்லை என்பதை அவர்களிடம் தெரிந்து கொண்டேன். எல்லா வீடுகளிலும் கோப தாபங்கள் எல்லாம் சகஜம்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஹலோ ! உங்கள் வீட்டில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குப் பெயர் ஊடல். அது உளவியல் அறிவியல் சார்ந்தது. இவர்கள் வீட்டில் நடப்பதற்குப் பெயர் யுத்த காண்டம்; வெகு சில வீடுகளிலேயே இது அரங்கேறும். கொதி நிலை என்ற ஒன்று உண்டே ! இருவரும் பணி ஓய்வு பெற்றபின் விவாகரத்து வழக்கு நீதிமன்றம் சென்றது. ஒரு மகள் மட்டும் அவர் பக்கமும், மூன்று பிள்ளைகள் தாயின் பக்கமும், ஒரு மகள் நடுநிலை வகித்தும் குடும்பம் சின்னா பின்னமாகியது. வீட்டின் மீது உரிமை கோரும் வழக்கும் பதிவானது. வழக்கு முடியும் வரை தம் பக்கம் நின்ற மகள் வீட்டோடு சென்றார் ரங்கசாமி. அந்த அம்மா மட்டும் இவ்வீட்டில். அவருக்கு யாருடனும் ஒத்துவராது என்று அவரே சொல்லிக் கொள்வார். ஆகையால் மற்ற பிள்ளைகள் அவரவர் வீட்டில். ஒரு நாள் திடீரென்று இரவில் மாரடைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்; அந்த அம்மா நீள்துயில் கொண்டார். அண்டை வீடு என்பதால் முதலில் கண்டுபிடித்த துர்பாக்கியசாலி நானேதான். அந்த அம்மாவைச் சார்ந்து நின்ற பிள்ளைகளுக்குத் தகவல் கொடுத்தேன். வந்தார்கள். வீட்டுக் கதவை உடைக்கத் தயங்கினார்கள். அப்பா போலீஸில் பொய் வழக்குக் கொடுத்துத் தங்களுக்குப் பிரச்சனை ஏற்படுத்துவார் என்று பேச ஆரம்பித்தார்கள். நான் அவரிடம் சென்று பேசினேன். ‘அக்கம் பக்கத்தார் சாட்சியாக உங்கள் முன்தான் கதவு உடைக்கப்பட்டது என்று இருக்கட்டும்’ என்று அழைத்தேன். “தம்பி ! நீங்கள் வந்து அழைப்பதால் வருகிறேன். மற்றபடி அந்த உறவெல்லாம் எனக்கு முடிந்துவிட்டது. அவளுடன் வாழ்ந்து வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தொலைத்தது போதும்” என்று கிளம்பினார். சுமார் முப்பத்தைந்து வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்காக இல்லாமல், ‘அவருக்கு யாரோ’ எனும் நான் அழைத்ததால் வந்தார் என்பது அவர்களுக்கு இடையில் உள்ள வெறுப்பின் குறியீடு. கதவை உடைத்த பின் அவர் வீட்டின் உள்ளேயே செல்லாமல் போய் விட்டார். “இனி இந்தப் பயலுக என்னை அநாகரிகமாகப் பேச ஆரம்பிப்பானுக. நான் போறேன், தம்பி!” என்று மட்டும் சொன்னார். வீடு அவருக்கே உரியது என நீதிமன்றத்தில் தீர்ப்பானது. சில நாட்களில் வீட்டை விற்றுவிட்டார். அப்புறம் எங்கே சென்றார் என்று எனக்குத் தெரியாது. சுமார் மூன்று வருடங்கள் கழித்து ஒரு நாள் சந்தடி மிகுந்த சாலையில் நான் நடந்து செல்லும் போது ஒரு கார் என்னருகில் வந்து நின்றதை உணர்ந்தேன். அதிலிருந்து முன்பு போல் ‘மேக்-அப்புடன்’ நம் கதாநாயகர் இறங்கினார். “தம்பி, நல்லா இருக்கீங்களா?” என்று கை குலுக்கினார். சில வருடங்கள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சியை நானும் வெளிப்படுத்தினேன். “ஏய் ! கொஞ்சம் இறங்கு” என்று காரில் அமர்ந்திருந்த சுமார் 55-60 வயது மதிக்கத்தக்க அம்மணியிடம் கூறினார். அந்த அம்மா இறங்கி எனக்கு வணக்கம் தெரிவிக்க, நானும் புன்னகையுடன் வணக்கம் சொன்னேன். “தம்பி! இவள் என் மனைவி. நாங்கள் திருமணம் செய்து ஒரு வருஷம் ஆகுது. இவளும் டீச்சர்தான். இன்னும் ரெண்டு வருஷம் சர்வீஸ் இருக்கு.” நான் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தேன். அந்த அம்மாவிடம் சொன்னேன், “நீங்கள் கொடுத்து வைத்தவர். இந்த உலகில் மிக சந்தோஷமான மனிதரைக் கல்யாணம் பண்ணி இருக்கிறீர்கள்”. - சுப. சோமசுந்தரம்
  9 points
 3. தாரமே தாரமே வா என் சுவாசமே சுவாசமே வா ... படம் :. கடாரம் கொண்டான்
  3 points
 4. * முதல் காதல் கடிதம் புதிதாய் படிக்கிறேன் நூறாவது தடவையாய் *ஊசியாய் குத்துவது முட்கள் மட்டுமல்ல பனிக்குளிரும் தான் . *சம்மதம் சொல்ல தயங்கிய பெண் நேரில் கண்ட போது சொன்னாள் நேற்று ஏன் வரவில்லை ?
  3 points
 5. நேற்று இரவு உதித்த ஒரு சுய கைகூ தும்மினேன் எட்ட தள்ளி சிதறின சொந்தங்கள்.
  3 points
 6. நான் ஐரோப்பிய நாட்டுக்கு வந்து முதல்,முதல் கொட்டிப்பார்த்த.. வெண்பனித்தூறல் நான் பிறந்த மண்ணின்(ஈழம்) வாசனையே என்னுக்குள் வந்து எழுத வைத்தது. வெண்பனித்தூறல்..! ***************** மார்கழி தொடங்கிவிட்டால் வானம் மந்திரித்துக் கொட்டுமிந்த-வெண்மைநிற தேங்காய்த் துருவலோ? தேசமெல்லாம் பூத்திருக்கும் மல்லிகையோ!முல்லையோ! வெள்ளை நிற றோஜாவோ? வெண்தாமரை இதழ்தானோ-ஏன் கடல் களைத்து கரையொதுங்கும் நுரையலையோ.. கண்சிமிட்டிக் கொட்டுகின்ற விண்மீனோ.. வெட்டுக்களி எழுப்பும் வெண்புளுதிப் படலமோ வெற்றிலைக்கு போட்டுமெல்லும் வெண்நிறத்துச் சுண்ணாம்போ பாலாறு ஓடி தயிர் படிந்து உறைந்ததுவோ பருத்தி மரம் ஈன்ற பஞ்சினத்துக் குஞ்சுகளோ இலவம் காய் வெடித்ததுவோ இளம் பெண்கள் புன் சிரிப்போ முதுமை உலகத்து மூதாட்டி நரை முடியோ கொட்டிக் குவிந்துவிட்டால் கோபுரமும் தெரியாது-பின்பு பட்டக் குளிர் அடிக்கும் பல நிறமும் உள் மறையும்-இப்போ எல்லாம் ஒரே நிறம் எங்கும் சமாதானம் இது வேண்டும்,வேண்டும். அன்புடன்-பசுவூர்க்கோபி-
  2 points
 7. ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசிய மூன்றாவது வீரரானார் பொல்லார்ட் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு : 20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணித் தலைவர் கிரான் பொல்லார்ட் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் சூப்பர் ஸ்டாரான சகலதுறை ஆட்டக்காரர் பொல்லார்ட் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த மூன்றாவது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இன்று வியாழக்கிழமை அதிகாலை ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இதில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனால் 132 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு மேற்கிந்தியத்தீவுகள் அணி துடுப்பெடுத்தாடி வந்தபோது, ஆறாவது ஓவருக்காக அகில தனஞ்சய பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார். அந்த ஓவரை எதிர்கொண்ட பொல்லார்ட் தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்களை விளாசித் தள்ளி இந்த சாதனையை நிகழ்த்தினார். இதனால் டி-20 கிரிக்கெட் அரங்கில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேனாக திகழந்த முன்னாள் இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரரான யுவராஜ் சிங்குடன் பொல்லார்ட் இணைந்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில், தென்னாபிரிக்காவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஹெர்ஷல் கிப்ஸ் தான் இந்த சாதனையை முதலில் பெற்றார். அதன்படி 2007 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ண போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை கிப்ஸ் நிகழ்த்திக் காட்டினார். அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச டி-20 உலகக் கிண்ணத்தின் தொடக்கப் பதிப்பில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது யுவராஜ் சிங் ஸ்டூவர்ட் பிராட்டின் பந்து வீச்சை எதிர்கொண்டு, ஒரு ஓவரில் தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்களை விளாசித் தள்ளி டி-20 கிரிக்கெட் அரங்கில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். https://www.virakesari.lk/article/101536
  2 points
 8. கிழக்கு மாகாணத்தில் குளத்தைக் காணவில்லை எனப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள கஞ்சிக்குடியாறு, தாமரைக்குள கண்டத்திலுள்ள ‘காரப்புக்கேணி’ குளக்கட்டை நபரொருவர் பாரிய இயந்திரத்தைக் கொண்டு உடைத்து அழித்து குளத்தை மணல்கொண்டு நிரப்பி மூடியுள்ளார். இந்நிலையில் குறித்த சமபவம் தொடர்பில் தம்பிலுவில் கமநல சேவை நிலையத்தில் விவசாயிகள் முறையிட்டதையடுத்தே, குளக்கட்டை உடைத்த நபருக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன், பிரதேச செயலக அதிகாரிகள், கமநல சேவை நிலைய அதிகாரிகள் ஆகியோர் குறித்த குளம் இருந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். அத்துடன் குறிப்பிட்ட இடத்தில் எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கக் கூடாதென பிரதேச செயலகத்தால் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.pearlonenews.com/குளத்தைக்-காணவில்லை-எனப்/?fbclid=IwAR0-K8Ft0Th5vIfH6hHNi1ZwElXq8b47pXZE3ukasjXfk03Gtf85WQMgO5I
  2 points
 9. 2016 இல் நான் ஊருக்கு போன போது கிணறு இருந்தது, ஆனால் துலா, கப்பி ஒன்றும் இல்லை, கம்பி வலையால் கிணறு மூடப் பட்டு கிடந்தது. ஒரு சின்ன தொட்டியும் பெரிய தொட்டியும் அதனோடு சேர்ந்த பத்தலும் கவனிப்பாரற்று வெடித்து கிடந்தது. சவர்க்காரம் போடுற கல் உறு மாறி காட்சி தந்தது. சிறு வயதில் நீச்சலடித்த தொட்டிகளும், கிணறு கலக்கி இறைக்க இறங்கும் படிகளில் கம்பிகள் இல்லை. இயந்திரங்கள் இல்லாத காலத்தில் அரும் பாடுபட்டு பல தொழிலாளர்களால் வெறும் பிகான்களும், மண்வெட்டிகளும், பாறைகளை உடைக்க வெடி மருந்துகளும் பயன்படுத்தி 70 களில் தோண்டப்பட்ட கிணறும் அதனோடு சேர்ந்து கட்டிய ஆடுகல், துலா, தொட்டிகள், பத்தல், சவர்க்காரம் போடும் இடம், எலுமிச்சை, பலா, மா வாழை மரங்கள் செழிப்பாக இருக்க கட்டின சீமெந்து வாய்க்கால்கள் எல்லாம் உரு தெரியாமல் இருந்தன. மோட்டார் இயந்திரம் முன்பும் இருந்ததது, ஆனால் எல்லோரும் கிணத்தடியில்தான் குளிப்போம், மரங்களும் மண்ணும் குளிர்மையாக நின்றன. இப்போ குளியலறை, கக்கூஸ் எல்லாம் குசினிக்கு பக்கத்தில் வந்து விட்டது. இப்படி பல கிணறுகள் கவனிப்பாரற்று கிடக்கின்றது. 50 வயது கூட ஆகாத சிறந்த வசதிகளுடன் கட்டிய எமது கிணற்றடியை பராமரிக்க முடியாத நாம், எப்படி மற்றைய நீர் நிலைகளை பாதுகாக்க போகின்றோம்.
  2 points
 10. காலையில்... இந்தச் செய்தியை இணைக்கும் போதே, ஒரு சிலராவது.... மோகன் அண்ணாவைத்தான் நினைத்து வாசிப்பார்கள் என எண்ணினேன். அது சரியாக நடந்து விட்டது. செய்தியின் அடியில்... பிற்குறிப்பு ஒன்று போட்டு... அதில்... "மோகன் அண்ணா என்று வாசித்தால், கம்பெனி பொறுப்பல்ல" என்று எழுத யோசித்தேன். சிலர் அதுக்கு, நாங்கள் அப்படி எல்லாம் வாசிக்க மாட் டோம் என்று, "மீசையில் மண் ஓட்டாத மாதிரி", கதை விடுவார்கள் என்றதால்... அந்த பிற்குறிப்பை எழுதாமல் விட்டது இன்னும் நல்லதாய் போச்சு.
  2 points
 11. காசை கொடுத்தால்.. பொருளை வாங்கலாம்.. பொருளை கொடுத்து காசும் வாங்கலாம்.. பொருளையும் கொடுத்து.. காசையும் கொடுத்தேன்.. சலூன்கடை.
  2 points
 12. நாங்கள் சிங்கம் போல கர்சித்துக் கொண்டு அம்மா தம்பி தங்கைகளை வெருட்டிக்கொண்டு திரிந்தோம்.கலியாணக் கட்டியபின் எப்படித்தான் அப்படியொரு பக்குவம் வருகுதோ தெரியவில்லை. காலில அடிவாங்கிய டாக் மாதிரி (நாய் என்று சொல்ல ஒரு மாதிரி இருக்கு) அனுங்கிக் கொண்டு திரிகிறம்.உங்கட நிலைமையையும் பார்க்க கொஞ்சம் ஆறுதலாய் இருக்கு......!
  2 points
 13. சூனா...பானா, உங்கள் மகள் எழுதிய கதைகளை வாசித்துள்ளேன்! இன்று உங்கள் கதையையும் வாசிக்கக் கிடைத்தது! சம்பிரதாயங்களும், சமூக நம்பிக்கைகளும் காலத்திற்கேற்ப மாற வேண்டும்! இல்லா விட்டால், அவையும் காலா வதியாகி விடும்..! ஒருவரது மன மகிழ்ச்சி என்பது பணத்திலோ, பதவி உயர்விலோ தங்கியிருப்பதில்லை என்றே நானும் கருதுகின்றேன்! பிரபல மோட்டார் கார் கம்பனியின் உரிமையாளரான கென்றி போர்ட் என்பவர்...தனது கம்பனியில் தொழில் பார்க்கும் கறுப்பினத்தவஒ ஒருவன்... அவனது மதிய உணவை அருந்தும் போது, அவன் முகத்திலிருக்கும் மகிழ்ச்சியைக் கண்டு தனக்குப் பொறாமை வருவதாக எழுதியுள்ளார்! அவ்வளவுக்கும் அவன் சாப்பிடுவதோ....வெறும் காய்ந்து போன பாண் துண்டுகள் மட்டுமே!
  2 points
 14. நாதமுனியர்.... கணித்தது சரியாய் போய் விட்டது. விளங்க நினைப்பவனுக்கு... 100 வயசு.
  2 points
 15. முன்னே பின்னே தெரியாத ஓர் உயிருக்கு உதவும் மனசு தான் கடவுள் https://www.facebook.com/ilango.muru/videos/2163822630414826
  2 points
 16. இப்ப இரண்டொருவர் வந்து, இது வீடியோ மாபிங் எண்டு சொல்லலாம், கண்டியளே...
  2 points
 17. ஒரே பத்திரிகையில் பிறந்தநாள் வாழ்த்தும் நினைவாஞ்சலியும் வாழ்க்கை அப்பா என்னை அடிக்கும் போது அம்மாவுக்கு வலிக்கிறது ஒரே ரத்தம் அடிக்கடி வருவார் அம்மாவின் வார்த்தைகளில் இறந்து போன அப்பா அம்மாவின் கடிதம் பாதியில் படிக்கிறது என்னோடு கண்ணீரும். காதலியை பிரிந்த பின் நினைவாக மெளனம் தந்த பரிசு கண்ணீர் நாகரீகமான எடுக்கும் பிச்சை வரதட்ஷனை நிலவுக்கு வந்த பல கோடிக் காதல் கடிதங்கள் நட்ஷத்திரங்கள்
  2 points
 18. காலம் தான் எவ்வளவு விரைவாக ஒடி விடுகின்றது....? இப்போதெல்லாம் இந்தக் கடற்கரை வெறிச்சுப் போய்க் கிடப்பது போல அவனுக்கு ஒரு பிரமை...! அந்த நாட்களில் எத்தனை கிடுகுக் கொட்டில்கள் இதே இடத்தில் முளைத்திருந்தன? மயிலிட்டி, வடமராட்சி, பேசாலை, வங்காலை போன்ற இடங்களிலிருந்தெல்லாம் சூடை மீனும், கீரி மீனும் அள்ள வந்தவர்களுடன் உள்ளூர் மீனவர்களிளின் கொட்டில்களும் நிறைந்திருக்கும்! ஒருவரும் தீண்டாத சாளை மீன்களையும் கொழும்பு கோழித்தீன் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வார்கள்! அரை வாசி வள்ளங்கள் கடலில் நங்கூரமிட்டிருக்க, மிச்சக் கட்டு மரங்கள் கரைகளில் கிடந்தது வெயில் காயும்! கிடுகு பின்னுபவனிலிருந்து...கள்ளிறக்குபவன் வரைக்கும் முகமெல்லாம் புன்னகை நிறைந்திருக்கும்! சுருக்கமாகச் சொல்லப் போனால்....அந்தக் காலப் பகுதியில் புங்குடுதீவின் பொருளாதாரம்....அதி உச்சத்துக்கு உயர்ந்து போயிருக்கும்! சந்திரனின் மனதிலிருந்து ஒரு பெரு மூச்சு அதிக வெப்பத்தைச் சுமந்தபடி வெளியில் போனது! நீண்ட நாட்களின் பின்னர் நெடுந்தீவு போகும் வள்ளத்திற்காகக் குறிகாட்டுவான் கரையில் அவன் காத்திருக்கிறான்! இராஜேஸ்வரி, சில்வர் ஸ்பிறெ, அலை அரசி, குமுதினி, எலாறா என்று வள்ளங்களின் பெயர்கள் நினைவில் வந்து போயின! குமுதினியின் நினைவு வந்த போது...கண்களில் இரண்டு துளிகள் கண்ணீர்த் துளிகள் தோன்றிக் கீழே விழுவதா என்று யோசித்தன!! அவனுக்குச் சிறுவயதில் படிப்பித்த அந்த ஆசிரியையின் முகமும் ஒரு கணம் தோன்றி மறைந்தது! தம்பி...என்ன கனவு கொண்டிருக்கிறீரோ என்று ஒரு பெரியவரின் குரல் அவனை இவ்வுலகத்துக்குக் கொண்டு வந்தது! வள்ளம் வெளிக்கிடப் போகுது...கெதியா ஓடி வாரும்! அந்தக் காலத்தில்...வள்ளத்தின் கொண்டக்ரரிலிருந்து வள்ளத்தின் ஓட்டுனர் வரை, எல்லாரது பெயரும் அவனுக்கு அத்து படி..! இப்போது அவனை ஒருவருக்கும் தெரியாது..! ஆரோ வெளிநாட்டுக்காரர் போல கிடக்குது என்று யாரோ ஒருவர் சொல்லுவது கேட்டது! சில வருடங்கள் அவனை ஒரு வெளிநாட்டுக் காரனாக்கி விட்டதை நினைக்கக் காலம் எவ்வளவு வலிமையானது என தனக்குள் நினத்துக் கொண்டான்! வள்ளம் புறப்பட்ட போது ...தன்னை யாரும் அடையாளம் கண்டு விடக் கூடாது என்பதற்காக...தனது கறுப்புக் கண்ணாடியை ஒரு முறை துடைத்து விட்டுப் போட்டுக் கொண்டான்! நயினாதீவு நாக பூஷணி அம்மனின் கோபுரம் கிட்டக் கிட்ட நகர்ந்து வந்தது! அம்மன் கோபுரத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும்...இடையில் நகர்ந்து போய் விட்ட வருடங்களை நினைத்துக் கொள்வான்! ஒவ்வொரு தடவையும்...அந்தக் கோபுரம் உரு மாறிக் கொண்டேயிருக்கும்! நயினாதீவு மக்களின் பொருளாதர நிலையையும். அவர்கள் அப்போதைய மனோ நிலையையும் அந்தக் கோபுரம் பிரதி பலிப்பதாக, அவன் நினைத்துக் கொள்வதுண்டு! தேர்த் திருவிழா பார்க்க வந்து அனியாயமாகக் கடலில் சங்கமித்த அந்த இருபத்தியொரு பேரும் ஒரு முறை வந்து நினைவில் போனார்கள்! வள்ளம் எழாத்துப் பிரிவைத் தாண்டும் போது..தாலாட்டும் அந்தத் தாலாட்டு அவனுக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமான ஒன்று! இன்றும் அப்படித் தான்! ஒரு மெல்லிய தூக்கம் கூட அப்போது எட்டிப்பார்த்த்து! கண்களை மூடிய படியே சிந்தனையில் மெதுவாக மூழ்கத் தொடங்கினான்! கொஞ்சம் தங்களைச் சிலாகித்துக் கொண்ட ஊரவர்கள் சிலர், வள்ளத்தின் மேல் தளத்திலிருந்து '304' விளையாடத் தொடங்க, அவர்களுக்கிடையே கதையும் களை கட்டத் தொடங்கியது! முதலாமவர் ...இந்த வள்ளங்களுக்கு ஏன் இந்த அறுவாங்கள் பொம்பிளையளின்ர பேரை மட்டும் வைச்சுத் துலைக்கிறாங்க்ளோ தெரியாது! இரண்டாமவர்.... அதுக்கு இப்ப என்ன பிரச்சனை...சூறாவளியளுக்கும் தானே...அவையளின்ர பேரை வைக்கிறாங்கள்! முதலாமவர்.....அது பரவாயில்லை...வள்ளங்களுக்குப் பொம்பிளைப் பெயர் இனிமேல் வைக்கக் கூடாது எண்டு சட்டம் கொண்டு வர வேண்டும்! இரண்டாமவர்....உம்மட மனுசி உம்மை விட்டிட்டு ஓடிப் போனத்துக்காக இப்பிடியே..! முதலாமவர்.. உனக்கு விசயம் விளங்கேல்லைப் போல கிடக்கு...நீ எப்பவுமே ரியூப் லயிற் தானே! இந்தப் பேருகளை வைக்கிறதால மாததத்திலை இரண்டு மூண்டு நாளைக்கு வள்ளம் ஓடாமையெல்லோ கிடக்குது! வள்ளத்தில் உள்ளேயிருந்த பலர் சிரித்தார்கள்....சில பெண் பயணிகள் மெதுவாக நெளிந்தார்கள். அவர்களில் ஒருவர்...அப்புமாரே...கதையை மாத்துங்கோ....உங்கட எலாறா மட்டும் பெரிசாக் கிழிச்சு விட்டுதாக்கும்! இந்தக் கதைகள் பொழுது போவதற்காகவே கதைக்கப் படுகின்றன என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், சில வேளைகளில்....அடிபிடியிலும் முடிந்த நாட் களும் இல்லாமல் இல்லை! இடையில் கொஞ்சம் அவன் அயர்ந்து போயிருக்க வேண்டும்! தூரத்தில்...பனை மரங்கள் பச்சை வரிசையாகத் தெரியத் தொடங்கி விட்டன! ஊரைக் கண்ட புழுகத்தில்...கறுப்புக் கண்ணாடியைக் கொஞ்சம் கழற்றினான்! அப்போது ஒரு இளம் பெண் சந்திரனைப் பார்த்துச் சிரிக்க...அவனும் மரியாதைக்காகப் பதிலுக்குச் சிரித்து வைத்தான்! இப்போதெல்லாம் அவனுக்குள், அவனையறியாமலே ஒரு விதமான பயம் வந்து குந்திக் கொண்டது! அவனது சாதகக் குறிப்பை எழுதிய பண்டிதர் ஒருவர்....சாதகன் பிறக்கும் போது கன்னி ஸ்தானத்தில் சந்திரன் உச்சம் பெற்று நின்ற காரணத்தால்...சாதகன் குளிர்ந்த கண்களை உடையவனாகவும், பர தார மனம் கொண்டவனாகவும் இருப்பான் என்று எழுதியிருந்தார்! பர தார மனம் என்பதன் பொருள் அவனுக்கு விளங்கா விட்டாலும், ஏதோ பாரதூரமான வார்த்தை என்ற அளவில் அவனுக்குப் புரிந்திருந்தது! சாதகங்களை அவன் நம்புவதில்லை எனினும்....மனதில் ஒரு விதமான பயம் நிரந்தரமாகவே குடி கொண்டு விட்டது! தனது உணர்ச்சிகளை வெளியே காட்டாது மறைக்கும் எண்ணத்துடன்...கறுத்தக் கண்ணாடியை எடுத்து மீண்டும் போட்டுக் கொண்டான்! மாவலி இறங்கு துறையில், கால் வைத்தவுடன்...உடம்பெல்லாம் ஒரு விதமான புத்துணர்ச்சி ஒன்று தோன்றியது போல இருந்தது! அருகிலிருந்த குமுதினிப் படகில் இறந்தவர்களின் நினைவுக் கல்லைக் கண்டதும்...அந்த உணர்ச்சி வந்த மாதிரியே போயும் விட்டது..! அதிலிருந்த பெயர்களை ஒரு முறை வாசித்துப் பார்த்தான்! பல பெயர்கள் மிகவும் பரிச்சயமாக இருந்தன! அந்த ஆசிரியை, மீண்டுமொரு முறை நினைவில் வந்து போனார்! சங்கக்கடைக்குப் பக்கத்திலிருந்த பொன்னம்மா ஆச்சியின் கடையை இப்போது காணவேயில்லை! அந்த நாட்களில் பணம் எதுவும் வாங்காமலே, யானை மார்க் ஒரேன்ஜ் பார்லியை அந்த ஆச்சி அன்புடன் உடைத்துத் தரும்போது, வள்ளத்தில் வந்த களைப்பு உடனேயே பறந்து போய் விடுவது நினைவுக்கு வந்தது! அடுத்த பகுதியில் முடியும்…!
  1 point
 19. நான் முன்பு வாசித்த கைக்கூக்களில் இந்த இரண்டும் எப்போதும் மனதில் வந்து போகும். உங்களின் சொந்த அல்லது நினைவில் இருக்கும் கைக்கூக்களை பகிருங்கள். (திருக்குறள் தான் கைகூவின் மூலம்) எறிந்தேன் கல் சிதறியது நிலா நீரில். வணங்கினேன் கடவுளை மனது வாசல் பாதணியில்.
  1 point
 20. ஆகையால் உங்கள் மகிந்த கொம்பனிகள் செய்பவைகள் எதிலும் தவறில்லை?
  1 point
 21. கன இடங்களிலை தோல் கலர் முக்கியம்.
  1 point
 22. நல்ல இணைப்பு தம்பி நுணாவில். பயணிகளான எமக்கும் நல்ல தகவல்.
  1 point
 23. குடிக்க தண்ணீர் இல்லாமல் ஒரு காலம் வரும்.அப்போது தெரியும் குளங்கள் ஏரியின் அருமைகள்.
  1 point
 24. இப்போ என்ன பிரச்சினை மே என்றதற்கு ஒரே ஒரு அரவு கூடப் போட்டு வாசிச்சுட்டோம். அவ்வளவு தானே அது ஒன்றும் பெரிய பிரச்சினையே இல்லை.இனிமேலாவது செய்தி இணைக்கும் போது அவதானம் வேணும்..
  1 point
 25. சாக பிறந்தவர்கள் பயந்து வாழ்ந்தார்கள் சாவிற்கு!
  1 point
 26. உடையார்...சேம் பிளட் நானும் மோகனுக்கு என்று தான் பதறிப் போய் வாசித்தேன்... யூ ரூ?
  1 point
 27. ஒரு காலத்தில் உள்நாட்டினரோ வெளிநாட்டினரோ காலை எழுந்தவுடன் தமிழ்நெட் பக்கத்தைப் பார்த்தால்த் தான் களலவரங்களை அறிந்து கொள்ள முடியும். அந்த தமிழ்நெட்இன் நிறுவனர் தான் மேலே உள்ள செவ்வியை வழங்கியிருந்தார். இதுவரைக்கும் வேறு ஒருவரையே தமிழ்நெட்இன் நிறுவனராக நினைத்திருந்தேன்.மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த செவ்வியை முழுமையாக பார்த்த போது இன்னும் பிரமையாக இருந்தது. அண்மையில் சிவில் சமூகத்தினராலும் அரசியல்கட்சிகளாலும் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் உள்ள சாராம்சம் அதில் உள்ள ஓட்டைகள் அதை எப்படி செய்யலாம் என்று சகலரும் விளங்கக் கூடியவாறு தெளிவாக சொல்கிறார். நேரமிருக்கும் போது கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்.
  1 point
 28. மடியிலே கனம் என்றால் வழியிலே பயம் என்பார்கள். இது படிப்பு பணம் பதவி எல்லாவற்றுக்குமே எடை போடலாம்.
  1 point
 29. இதுதான் வாழ்கை, ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனை பிரச்சனைகள், அருமை உங்கள் எழுத்து நடை
  1 point
 30. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 21, பங்குனி 2015 கிரானில் காணி உரிமையாளரைத் தாக்கிய கருணா மட்டக்களப்பு மாவட்டம், கிரான் பிரதேசத்தில், நூறு ஏக்கர் பகுதியில் விவசாயம் செய்துவரும் வனராஜா என்பவரை துணையமைச்சரும், துணை ராணுவக் கொலைக்குழுவின் தலைவரும், கருணா என்றழைக்கப்பட்டவருமான விநாயகமூர்த்தி முரளீதரன் கடுமையாகத் தாக்கியுள்ளார். சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவத்தின் போர் நடவடிக்கைகளையடுத்து இப்பகுதியில் வசித்துவந்த வனராஜாவும் அவரது குடும்பமும் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருந்தனர். புலிகளின் கட்டுப்பாட்டில் இப்பிரதேசம் வந்தபோது, வனராஜாவின் காணி புலிகளால் பாவிக்கப்பட்டு வந்தது. 2007 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டம் ராணுவத்தால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், வனராஜாவும் அவரது குடும்பமும் மீண்டும் தமது பகுதிக்குத் திரும்பிவந்து தமது சொந்தக் காணியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால், அக்காணி தனக்கே உரியதென்றும், தனது வர்த்தக நோக்கங்களுக்காக அக்காணியை தான் எடுத்துக்கொள்ளப்போவதாகவும் கூறிய கருணா வனராஜாவை தனது சகாக்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார். சனிக்கிழமை காலை 10:30 கருணாவால் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து வனராஜா வாழைச்சேனை வைத்தியசாலையில் கடுமையான காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தனது தொண்டர்கள் புடைசூழ வான்களில் வந்திறங்கிய கருணா வனராஜாவின் காணியில் வேலைபார்த்துக்கொண்டு நின்ற தொழிலாளர்களை அடித்து விரட்டியுமிருக்கிறார். கருணாவின் அடாவடித்தனத்திற்கெதிராக வாழைச்சேனை பொலீஸில் முறைப்பாடொன்று செய்யப்பட்டிருக்கிறது. அரச மாற்றத்தின்பிறகு துணைராணுவக் குழுக்களின் கொட்டம் அடங்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த மக்கள், நிலைமைகளில் மாற்றமேதும் ஏற்படவில்லையென்று, வழமைபோலவே கருணா துணைராணுவக்குழு ராணுவத்தினருடன் பவனி வருவதாகவும், வெளிப்படையாக ஆயுதங்களைக் கொண்டு திரிவதாகவும் கூறுகின்றனர். ராணுவத்தினரிடையே கருணாவுக்கு இருக்கும் செல்வாக்கு இன்னமும் குறையவில்லையென்றும், அவரைத் தொடர்ந்தும் தமது துணைராணுவக் குழுவின் தலைவராகவே அவர்கள் நடத்திவருவதாகவும் தெரிவிக்கின்றனர். இதேவேளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கருணாவின் செல்வாக்குப் பற்றித் தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கத்திற்கும் கருணாவுக்குமிடையிலான தொடர்பு அப்பட்டமாகத் தெரிவதாகவும், அவரது நடவடிக்கைகளில் ஆட்சிமாற்றம் எதுவித மாற்றத்தினையும் உருவாக்கவில்லையென்றும் கூறினார்.
  1 point
 31. பெருமாளின் மேனியை அலங்கரிக்கும் அணிகலன்கள், தீபாராதனையுடன்.....!
  1 point
 32. குடும்ப அரசியலுக்கு, முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் - சரத்குமார். ஏன் தல... தலைவர் வீட்டுக்கு போகும் போது மொத்த நகையையும் காணவில்லை. யார் பயம் யாரை விட்டது. இதுக்கு... பிளைட் ஏறி வீட்டுக்கு வந்திருக்கலாம்.
  1 point
 33. இந்தியாவில்....கொம்யூனிசம் வளரக்கூடாது என்பதற்காகவே...கொம்யூனிஸ்ட் ஆகியவர்..!
  1 point
 34. அதையேன் பேசுவான்! உந்த மேக்கப்காரர் வருவினம் பாருங்கோ.... சொல்லி வேலையில்லை. ஒரு பொம்புளைக்கு மேக்கப் பண்ண நாலைஞ்சு சூட்கேஸ் கொண்டுவருவினம்.மக்கு தப்புற மாதிரி அள்ளி தப்பு தப்பபெண்டு தப்பி உள்ள வடிவையும் கெடுத்துப் போட்டு போவினம். உந்த மேக்கப் எண்டது சொந்த செலவிலை சூனியம் செய்யிற மாதிரி...
  1 point
 35. இட்லி தட்டில்கூட பிளாஸ்டிக் பையை வெட்டிப்போட்டு மாவை ஊற்றி அவிக்கிறார்கள். சொன்னால் வரும் பிரச்சினையை விட புற்றுநோய் பரவாயில்லை என்று சில கணவன்மார் கடந்து போகிறார்கள்.....!
  1 point
 36. மனிதர் சுதந்திரமாக வாழ்ந்தார்கள் தொலைபேசி சுவரோடு கட்டியிருந்தபோது.
  1 point
 37. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 19, மாசி 2015 அம்பாறையில் செயற்பட்டுவரும் அரச ராணுவக் கொலைக்குழுவிற்கெதிராக நடவடிக்கையெடுங்கள் - அரசைக் கோரும் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் ராணுவக் கொலைக்குழு ஆயுததாரிகள் - கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், இனியபாரதி எனப்படும் புஷ்பகுமார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், மகிந்த ராஜபக்ஷவின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளரும், கருணா கொலைக்குழுவின் மிக முக்கிய ஆயுததாரியுமான இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமாரை உடனடியாகக் கைது செய்து, தண்டனை வழங்குமாறு அம்பாறை மாவட்டத்தில் இவனால் வலிந்து காணமலாக்கப்பட்ட பலநூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளின் பெற்றோர் அரசை வேண்டிக்கொண்டுள்ளனர். 2007 இற்குப் பின்னர் ஆக்கிரமிப்பு ராணுவத்தால் அம்பாறை மாவட்டம் முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து இனியபாரதியால் இதுவரையில் குறைந்தது 200 இளைஞர்களும் யுவதிகளும் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டிருப்பதாக பதிவுசெய்யப்பட்டிருக்கும் முறைப்பாடுகளிலிருந்து தெரியவருகிறது. மேலும், புலிகளிடமிருந்து பிரிந்து பொதுவாழ்க்கைக்கு திரும்பிய பல முன்னாள்ப் போராளிகளும் இவனது குழுவினரால் காணாமலாக்கப்பட்டிருப்பதோடு, அவர்கள் பற்றிய பதிவுகள் தொடர்ச்சியாக மறைக்கப்பட்டே வந்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. அம்பாறை மாவட்டத்தில் ராணுவப் புலநாய்வுத்துறையினரின் வழிகாட்டலில் இனியபாரதி தனக்கென்று தனியான கொலைக்குழுவொன்றினை நடத்திவருவதாகத் தெரிகிறது. சுமார் 700 ஆயுதம் தரித்த கொலைக்குழுவினர் இவனது கட்டுப்பாட்டில் இயங்குவதோடு, கடத்தல்கள், காணாமற்போதல்கள், கப்பம் உட்பட மிகக் கொடூரமான வன்முறைகளில் இவனும் இவனது குழுவும் அம்பாறை மாவட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக பல சர்வதேச அமைப்புக்கள் உட்பட பல மனிதவுரிமைக் குழுக்கள் குற்றஞ்சாட்டியிருந்ததோடு, மகிந்தவின் அரசுக்கும் இவனுக்குமான நெருக்கம் பற்றியும் மிகத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியிருந்தன. இனியபாரதி ஆரம்பத்தில் செய்த கொலைகளில் குறிப்பிடத் தக்கது கிழக்கின் அனுபவம் மிக்க செய்தியாளரான ஐய்யாத்துரை நடேசன் என்பவரது படுகொலையாகும். 2004 இல் அவரது இல்லத்திற்கு மிக அருகே இனியபாரதியால் பலதடவைகள் தலையில் சுட்டுக்கொல்லப்பட்ட நடேசனின் மரணத்தில் தற்போது ஜனாதிபதியாகவிருக்கும் மைத்திரிபால சிரிசேனவின் பங்களிப்பும் இருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. இனியபாரதியால் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஐய்யாத்துரை நடேசனின் இறுதி நிகழ்வு ராணுவப் புலநாய்வுத்துறையின் அதிகாரி அபயரட்ணவின் நேரடி வழிகாட்டலில் செயற்படும் இனியபாரதியின் கொலைக்குழு, கருணா கொலைக்குழு அங்கத்தவர்களையும், ஈ என் டி எல் எப் எனும் இந்தியாவின் துணையுடன் இயங்கும் துணைப்படையின் உறுப்பினர்களையும், சில முஸ்லீம் ஆயுதக் குழு உறுப்பினர்களையும் கொண்டு அமைக்கப்பட்டது. பெரும்பாலும் கடத்தல்கள், காணாமலாக்குதல்கள், படுகொலைகள் ஆகியவற்றில் ஈடுபடும் இக்கொலைக்குழு அவ்வப்போது தமிழ் முஸ்லீம் சமூகங்களிடையேயான பிணக்கினை பெரிதுபடுத்தவும் மகிந்த அரசினால் பாவிக்கப்பட்டு வந்தது, இன்றும் நிலை அப்படித்தான். 2005 இல் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற நடவடிக்கையொன்றில் சரணடைந்த இரு இனியபாரதி கொலைக்குழு உறுப்பினர்களின் தகவல்களின்படி இனியபாரதி மைத்திரிபால சிரிசேன, டக்கிளஸ் தேவானந்தா மற்றும் அதாவுள்ளா அக்கியோருடன் மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணிவந்திருந்தான் என்று தெரியவந்திருந்தது. இவ்வாறு புலிகளிடம் சரணடைந்த இனியபாரதியின் கொலைக்குழு உறுப்பினர்கள், தாம் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்றும், தாம் இனியபாரதியுடன் சேர்ந்தது அவனைக் கொல்வதற்காகவே என்றும், தாம் தப்பி வருமுன்னர் இனியபாரதியையும், அவனது சகாக்கள் சிலரையும் கொன்றுவிட்டுத் தப்பிவந்ததாகவும் கூறியிருந்தனர். ஆனால், இனியபாரதி அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிவிட்டான் என்பது நாம் அறிந்ததே. கடந்த புதனன்று, திருக்கோயில் பிரதேச செயலகத்தின்முன்னால் கூடிய ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோயில் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 70 உறவினர்கள் தமது பிள்ளைகளைக் கடத்திச் சென்று கொன்றுபோட்ட இனியபாரதியின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இனியபாரதியின் கொலைக்குழு முகாம் அமைத்திருந்த பகுதியில் அகழ்வுகளை மேற்கொண்டு தமது சொந்தங்களின் எச்சங்கள் இருக்கின்றதா என்று கண்டறியப்படவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டனர். இனியபாரதியின் கொலைமுகாமிலிருந்து தப்பிவந்த ஒரு சிலரின் தகவல்ப்படி இனியபாரதியால் கடத்திக் கொண்டுவரப்பட்ட பல இளைஞர்கள் இம்முகாமிலேயே கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் மிகக் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறியிருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. அத்துடன், தம்பிலுவில் பகுதியில் அமைந்துள்ள மத்திய சந்தைப் பகுதியில் இனியபாரதி அமைத்திருக்கும் அவனது "பாதுகாப்பு வீடு" உடனடியாகச் சுற்றிவளைக்கப்பட்டு அவன் கைதுசெய்யப்படவேண்டும் என்றும் கோரியிருந்தனர். இனியபாரதி இப்போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் த. கலையரசன் கூறுகையில் 1990 ஆம் ஆண்டிலிருந்து 2008 வரையான காலப்பகுதியில் ஆலையடிவேம்பு, திருக்கோயில், காரைதீவு, நாவிதான்வெளி, அக்கரைப்பற்று, சம்மாந்துரை, பொத்துவில் மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் இருந்து மட்டும் குறைந்தது 5000 தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் காணாமற்போயுள்ளனர் என்றும், இவர்களுள் பலநூற்றுக்கணக்கானவர்களின் காணாமற்போதல்களோடு இனியபாரதி நேரடியாகத் தொடர்புபட்டிருக்கிறான் என்றும் கூறினார். இந்த ஆர்ப்பாட்டங்களில் அம்பாறை மாவட்டத்தின் கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேருவும் பங்கெடுத்திருந்தார்.
  1 point
 38. இகல் பகை; விரோதம்; போர்; கல் படி இகம் இம்மை இவ்வுலகு
  1 point
 39. பார் புகழும் வேல் முருகா
  1 point
 40. இயற்கையே மாறிப்போச்சு..! ********************* கடல் நீரோ முக்கால் பாகம்-பூமி கால் பாகம் தரையே இங்கு இயற்கையின் செழிப்பு எல்லாம் ஏன் தானோ விறகாய் போச்சு பாரெல்லாம் வெய்யில் வெக்கை பாலைவனம்போல் காயும் தேசம் நீரெல்லாம் வற்றித்தானே-எம் நிலமெல்லாம் புழுதியாச்சு மழைவந்து கொட்டித் தாக்கும் மரமெல்லாம் காற்றால் சாயும் நெருப்பெல்லாம் காட்டுத் தீயாய் நிலமெல்லாம் நடுங்கித்தீர்க்கும். விஞ்ஞானம் உயர்ந்ததாலே விண் மேகம் கீழேயாச்சு சந்திரனில் கால் பதித்து—பூமி சரித்திரமே பின்னால் போச்சு நெருப்போடு நீரும் காற்றும் நிலத்தோடு ஆகாய ஐம்பூதம் அத்தனையும் எம்முள் வைத்தே அகிலமே எம் உடலாய்யாச்சு இயற்கையின் கொந்தளிப்பே-எம் உடலிலும் நோயாய் தோன்றும் அதனோடு இசைந்து வாழ்ந்தால் அனைவர்க்கும் இனிமை வாழ்வே. அன்புடன் -பசுவூர்க்கோபி-
  1 point
 41. நூல் இல்லாமல் வலைபின்னியது சிலந்தி! கண்ணை நோண்டி சுவைத்தார்கள் நுங்கு!
  1 point
 42. துஷ்பிரயோக சாட்சி : வெளிப்படுத்துகையின் சமூகத் தேவை by vithaiFebruary 9, 2021 அடிப்படைச் சமூகக் கட்டமைப்புக்களான குடும்பம், பாடசாலை மற்றும் கல்வி நிறுவனங்களில் அதிகாரப் படிநிலைகளில் மேலுள்ளவர்களினால், உறவினர்களினால், ஆசிரியர்களினால் சிறுவர்களும் குழந்தைகளும் அன்றாடம் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகிய வண்ணம்தான் உள்ளார்கள். எம்மில் அதிகமானவர்கள் துஷ்பிரயோகம் சார்ந்த அனுபவங்களைக் கொண்டிருப்போம். எமது பெற்றோரது காலத்திலிருந்து எமது சிறுவர் பராயம் வரை இவ் அனுபவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இத் தொடர்ச்சி நிலைக்கு நாம் உருவாக்கியுள்ள சமூகக் கட்டமைப்பும், அது சார்ந்து நாம் கொண்டுள்ள புரிதல்களும் முக்கிய பங்குவகிக்கின்றன. நம்மில் எத்தனை பேர் எமது துஷ்பிரயோகம்சார் அனுபவங்களைப் பற்றியும், அது எமது சிறுவர்பராயத்தில் மனதளவில் ஏற்படுத்திய பாதிப்புக்கள் பற்றியும் பொதுவெளிகளில் பேசியிருக்கின்றோம்? “இதைப் பற்றிப் பேசி இனி என்னவாகப் போகின்றது” எனும் எமது மனப்பாங்கே துஷ்பிரயோகம் செய்பவர்களுக்குத் தைரியத்தை வழங்குகின்றது. இவ் அலட்சியத் தன்மையினாலும், இத் துஷ்பிரயோகங்களின் தொடர்ச்சி நிலையினாலும் எமது எதிர்காலச் சந்ததியினரே அதிகளவில் பாதிக்கப்படப் போகின்றார்கள். சமகாலத்தில் மிக அரிதாக வெளிப்படுத்தப்படும் துஷ்பிரயோகச் சாட்சிகளும் பாதிக்கப்பட்டவர்களைக் குற்றஞ்சாட்டல் (Victim blaming) மூலம் சமூகக் கட்டமைப்புக்களால் ஒடுக்கப்படுகின்றன. “நீ எதிர்ப்புத் தெரிவிக்காததால் தானே அவர் அவ்வாறு செய்தார்” என ஒரு சிறுவரைப் பார்த்துக் கேட்டல் எவ்வளவு அபத்தம்! எமது சமூகத்தில் பாலியல் துஷ்பிரயோகங்கள் சார்ந்த அடிப்படைப் புரிந்துணர்வு நிலை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. அவற்றைப் பற்றிப் பேசாதிருப்பதன் மூலம் அவ்வாறான விடயங்கள் நடப்பதைத் தடுக்க முடியும் என்பதனை நம்பவைத்துள்ளது நமது சமூகக் கட்டமைப்பு. இந்த ஒடுக்குமுறை குடும்பங்களிலிருந்தே ஆரம்பிக்கின்றது. பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டில் அக்கறைகாட்டும் பெற்றோர்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலீர்ப்பு சார்ந்த புரிந்துணர்வாக்கத்தில் அதிகளவில் கவனம் செலுத்துவதில்லை. சிறுவர்களிடம் இவைசார்ந்த உரையாடல்களை பெற்றோரைத் தவிர யாராலும் இலகுவாக ஆரம்பிக்க முடியாது. சிறுவர்கள் பெற்றோர்களிடம் காட்டும் வெளிப்படைத் தன்மையினை நாம் வேறு எவரிடமும் எதிர்பார்க்க முடியாது. எனது அனுபவம் சார்ந்த துஷ்பிரயோக சாட்சி ஒன்றினை முன்வைக்கின்றேன். 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எனது பத்தாவது வயதில் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகிக்கொண்டிருந்தேன். பிள்ளைகளின் படிப்பில் அதிக அக்கறையுள்ளவர்கள் என்ற வகையில் எனது பெற்றோர் பாடசாலைக் கல்வி போதாது என்று தனியார் கல்வி நிலையம் ஒன்றில் என்னைச் சேர்த்துவிட்டார்கள். ‘வளர்மதி’ எனும் பெயர் கொண்ட அந்தக் கல்வி நிலையம் சாவகச்சேரியில் அமைந்திருந்தது. அன்று முதல் இன்றுவரை யாழ்ப்பாணத்தில் புலமைப்பரிசில் பரீட்சை வகுப்புக்களில் பிரபலமாக இருக்கின்ற ஆசிரியர் அன்பழகன் அவர்கள் அங்கு படிப்பித்துக்கொண்டிருந்தார். அடிக்கடி பரீட்சைகள் வைத்து 150 புள்ளிகளுக்கு மேல் பெறும் பிள்ளைகளுக்குப் பரிசில்களும், அதற்குக் கீழே புள்ளிகள் பெறும் பிள்ளைகளுக்குத் தண்டனைகளும் வழங்கப்படும். அவரது தண்டனை வழங்கும் முறைகளினாலேயே அவரையும், அக் கல்வி நிலையத்தையும் அந்தக் காலகட்டங்களில் அதிகளவில் வெறுத்தேன். எனினும் எனது பெற்றோரின் கட்டாயத்தின் பெயரில் தொடர்ந்து அங்கு செல்லவேண்டியதாயிருந்தது. ஒருமுறை நடந்த பரீட்சையில் முதன்முறையாக நான் 150 இற்குக் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். அன்றைய தினம் பரீட்சை வினாத்தாளினைப் பெற்றுக்கொண்ட பின்னர், எப்படியும் இன்று அடிவாங்கியாக வேண்டும் என்று அறிந்து பதற்றமாக அமர்ந்திருந்தேன். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்ட பின்னர், நான் எதிர்பார்த்தது போல் எனக்கும் குறைய மதிப்பெண்கள் பெற்ற மற்றைய பிள்ளைகளுக்கும் அடிகள் விழுந்தன. முதன்முதலில் அங்கு அடிவாங்கிய நான் வலி மற்றும் கவலை தாங்கமுடியாமல் அழ ஆரம்பித்துவிட்டேன். வகுப்பு முடிவடையும் நேரத்தில் வீட்டை ஓடிச் சென்று அம்மாவைக் கட்டியணைத்து அழலாம் என்ற எண்ணத்துடன் அழுகையினை வலிந்து அடக்கிக் கொண்டேன். நான் அழுததைக் கவனித்த அன்பழகன் அவர்கள் வகுப்பு முடிவடைந்து வெளியேற எத்தனித்த என்னைப் போகவிடாது கைகளைப் பிடித்துக்கொண்டார். அனைத்து மாணவர்களும் வெளியேறிய பின்னர் தான் அடித்தது வலித்ததா என்றும், இனி அடிக்க மாட்டேன் என்றும் செல்லமாக விசாரிக்க ஆரம்பித்தார். விசாரித்துக் கொண்டிருக்கும் போதே மெதுவாக காற்சட்டையுடன் சேர்த்து எனது ஆண்குறியினைக் கசக்க ஆரம்பித்தார். அதற்கு முதல் எந்தவகையிலும் பாலியல் தொடுகையொன்றினை உணர்ந்திராத எனது உடல் நடுங்க ஆரம்பித்தது. பதற்றத்தில் வியர்த்து ஒழுகியது. ஓர் அசௌகரியமான மனநிலையில் நெளிந்துகொண்டிருந்த என்னைச் சிறிது நேரத்தில் விடுவித்துவிட்டார். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அப்போது அவர் அடித்த அடியின் வலி முற்றாக மறக்கடிக்கப்பட்டிருந்தது. நான் தவறிழைத்து விட்டேன் என்பதைப் போல உணர்ந்தேன். இதைப்பற்றி அம்மாவிடம் சொல்லக்கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டேன். யாரிடமும் சொன்னால் என்னைப் பற்றித் தவறாக நினைப்பார்கள், ஏசுவார்கள் என்று நினைத்தேன். பதற்றத்துடன் அன்று வீடு நோக்கி ஓடிச்சென்ற என்னை எனக்கு இப்போதும் நினைவில் உள்ளது. வீடுபோய்ச் சேர்ந்து அழுதபோது, எனது அழுகைக்கான காரணம் என் புத்தகப்பையில் இருந்த மதிப்பெண்கள் குறைவாகப் இடப்பெற்ற அந்தப் பரீட்சை வினாத்தாளே என்று என்னிடம் எதுவுமே கேட்காமலே எனது அம்மா ஊகித்துக்கொண்டார். “அடுத்த தடவைகள் அதிக மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளலாம்” என்றார். ‘கட்டாயம் எடுத்தாக வேண்டும்; மறுபடியும் அடிவாங்கிச் சிக்கிக்கொள்ள முடியாது’ என்று யோசித்துக்கொண்டேன். பிறப்பிலேயே கேட்கும் திறன் குறைவாகக் கொண்ட நான் வகுப்பறைகளில் அதிகளவில் முன் ஆசனங்களிலேயே அமர்ந்துகொள்வேன். ஆனால் அச் சம்பவத்தின் பின் அன்பழகன் அவர்களின் வகுப்பறையில் முன் ஆசனங்களில் அமர்வதை வலிந்து தவிர்த்துக் கொண்டேன். அது அவரிடமிருந்து என்னைத் தூர வைத்துக்கொள்ளும் என்று பலமாக நம்பினேன். அந்தக் காலகட்டத்தில் அச் சம்பவம் எனக்கு வளர்ந்த ஆண்கள் மீதான பயத்தினை உருவாக்கியது. அனைவரது நெருங்குகையினையும், தொடுகைகளையும் சந்தேகிக்க ஆரம்பித்தேன். அவற்றிலிருந்து ஒருவகையான பதற்றத்துடன் விலகியே இருக்க எத்தனித்தேன். இவற்றையெல்லாம் வலிந்து மறக்கடிக்க எனக்கு அண்ணளவாக மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டன. இவைபோன்ற துஷ்பிரயோகங்கள் ஒரு பிள்ளையின் மனநிலையில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும்? இக் கேள்விக்கான பதிலினையும் துஷ்பிரயோகங்கள் சார்ந்த புரிந்துணரவினையும் சாட்சி வெளிப்படுத்துகைகளின் மூலமும், பாலியல் கல்விமுறைமையின் மூலமும் அடைய முடியும். இப் புரிந்துணர்வாக்கம் பிள்ளைகள் பெற்றோர்களிடம் வெளிப்படையாகப் பேசும் சந்தர்ப்பங்களினை உருவாக்கும். இச் சமூகத்தில் தொடர்ச்சியாக துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஓர் பயத்தினையும் உருவாக்கும். ஒரு சமூக செயற்பாட்டாளராய் என்னால் இச் சம்பவம் நடைபெற்று 15 வருடங்களின் பின்னரே அதனைப் பற்றி பேசக்கூடிய தைரியத்தைப் பெற முடிந்திருக்கின்றது. ஆனால் இவை போன்ற துஷ்பிரயோக சாட்சி வெளிப்படுத்துகைகள் எதிர்காலத்தில் பாதிக்கப்படுபவர்களின் குரல்களையும் எதிர்ப்புக்களையும் உடனடியாகவோ அல்லது விரைவாகவோ பதிவுசெய்யக்கூடிய வெளிகளை உருவாக்கும் என நம்புகின்றேன். இங்கு துஷ்பிரயோகம் செய்தவர்களைத் தண்டித்தல் என்பது முக்கிய நோக்கமல்ல. என்னைப் போல் 15 வருடங்களுக்குப் பின்னரோ அல்லது அதிகளவான கால இடைவெளிக்குப் பின்னரோ பாதிக்கப்பட்டவர்கள் தமது எதிர்ப்பினைப் பதிவுசெய்வார்கள் என்பதனை நாம் உறுதிப்படுத்துகின்றோம். அதுவே எமது வெற்றியும் சமூகத் தேவையும் ஆகும். அத்துடன் இவ்வாறான துஷ்பிரயோகங்கள் சமூகத்தில் தவறான புரிந்துணர்வுகளின் உருவாக்கத்திற்கு வழிவகுக்கின்றன. எம்மில் அதிகமானவர்களுக்கு தற்பாலீர்ப்பிற்கும் துஷ்பிரயோகங்களுக்குமான வேறுபாடு புரிவதில்லை. தனது பாலினத்தைச் சேர்ந்த நபர்கள் மீது பாலீர்ப்புக்கொள்ளும் நபர்களினை நாம் தற்பாலீர்ப்புள்ளோர் என அழைக்கின்றோம். அனைத்து சமூகங்களிலும் நல்லவர்களும் இருக்கின்றார்கள்; தவறான விடயங்கள் செய்பவர்களும் இருக்கின்றார்கள். அது தற்பாலீர்ப்புள்ளோர் சமூகமாயினும் சரி; எதிர்பாலீர்ப்புள்ளோர் சமூகமாயினும் சரி. இத் துஷ்பிரயோக சாட்சி வெளிப்படுத்துகைகள் எல்லா சமூகங்களிலும் துஷ்பிரயோகம் தவறு என்பதனையும், அவை சார்ந்த சமூகப் புரிந்துணர்வினையும் ஏற்படுத்துகின்றது. 16 வயதிற்கு மேற்பட்ட இரு ஆண்களோ அல்லது இரு பெண்களோ பாலீர்ப்புக்கொண்டு காதலித்தல் என்பது அன்பினை அடிப்படையாகக் கொண்டது. தற்பாலீர்ப்பு அடிப்படை மனித உரிமை என்பதுடன், தற்போது இலங்கையில் சட்டவிரோதமானதாகக் காணப்படுகின்றது. அதனைச் சட்டபூர்வமானதாக மாற்ற பல சமூக செயற்பாட்டு அமைப்புக்கள் போராடிக்கொண்டிருக்கின்றன. இந் நிலையில் இவைபோன்ற துஷ்பிரயோக சம்பவங்கள் சமூகத்தில் தற்பாலீர்ப்பு சார்ந்து ஓர் எதிர்மறையான புரிந்துணர்வினை உருவாக்குகின்றன. ஆகவே துஷ்பிரயோக சாட்சி வெளிப்படுத்துகைகளில் துஷ்பிரயோகம் மற்றும் தற்பாலீர்ப்பு சார்ந்து சரியான கருத்துக்கள் முன்வைக்கப்பட வேண்டும். ஆகவே துஷ்பிரயோகங்களற்ற சமாதானமான சமூகவெளி ஒன்றினை எமது எதிர்காலச் சந்ததிக்கு வழங்குவதற்காய் ஒன்றிணைவோம். எமது சமூகத்தில் பாலீர்ப்பு சார்ந்த சரியான புரிந்துணர்வினை உருவாக்குவோம். துஷ்பிரயோகங்களுக்கு எதிராகக் குரல்கொடுப்போம். துஷ்பிரயோக சாட்சி வெளிப்படுத்துகைக்கான சமூகத் தேவையினை உணர்வோம். –கஸ்ரோ துரை https://vithaikulumam.com/2021/02/09/20210209/
  1 point
 43. மகாத்மா காந்தி சிறையில் இருந்தபோது ஸ்மட்ஸ் என்ற மகா கொடியவன் ஜெயிலராக இருந்தான். எல்லாக் கைதிகளையும் எலும்பு ஒடிய அடிப்பவன். காந்தியையும் கீழே தள்ளி, பூட்ஸ் காலால் பலமுறை மிதித்தான், அடித்தான். அடிக்கும்போது எல்லோரும் ஐயோ!என்று அலறினார்கள். ஆனால், காந்தி மட்டும் "ராம்!ராம்!!" என்று சொன்னது, அவனை மிகவே யோசிக்க வைத்தது. அன்று முதல் காந்தியை அடிப்பதை நிறுத்தினான். ஆனால், காந்தியை அவ்வப்போது உற்றுப் பார்த்தான். இலேசாகப் புன்முறுவல் காட்டினான். ஒரு நாள் "மிஸ்டர் காந்தி"!என்று கனிவாக அழைத்து நான் உங்களுக்கு ஏதாவது உதவ நினைக்கின்றேன்; என்ன வேண்டும் என்றான்? ஏதாவது புத்தகம் கொடுங்கள் என்றார் காந்தி. அவன் "பைபிள்" சார்ந்த இரு நூல்களைப் பரிசாக கொடுத்தான். இந்தத் தொடக்கம் நட்பாக மாறியது; வளர்ந்தது. ஒரு நாள் காந்தியிடம் வந்த ஸ்மட்ஸ், நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியையும், ஓரு வருத்தமான செய்தியையும், கொண்டு வந்துள்ளேன் என்றான். மகழ்ச்சி எது? வருத்தம் எது? என்று கேட்டார் காந்தி. இன்று உங்களுக்கு விடுதலை. இது மகிழ்ச்சியான செய்தி. ஆனால், உங்களைப் பிரிய என்னால் முடியவில்லை. இது வருத்தமான செய்தி என்றான் ஸ்மட்ஸ். காந்தி சொன்னார், "நானும் உங்களுக்கு ஒரு பரிசு தருகிறேன்; என் நினைவாக வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி, தான் சிறையில் தைத்த பூட்சை அவரிடம் கொடுத்தார். ஆவலோடு அணிந்து பார்த்த ஸ்மட்ஸ் கேட்டான், "இவ்வளவு துல்லிமாகத் தைக்க, என் கால்களின் அளவு எப்படிக் கிடைத்தது" என்று கேட்க, சிரித்தபடி காந்தி தனது மார்புத் துண்டை அகற்றினார்; ஆரம்பத்தில் ஸ்மட்ஸ் காலால் உதைத்தபோது ஏற்பட்ட வடுக்கள் அங்கு இருந்தன. "இந்த வடுக்களை அளந்துதான் தைத்தேன்" என்று காந்தி சொன்னார். "தடால்" என்று சத்தம்; ஸ்மட்ஸ் கீழே விழுந்து காந்தியின் கால்களைப் பிடித்துக் கதறினான். "நான் மிருகம்! கொடிய, கேவலமான, மிருகம்!! என்னை மன்னித்து விடுங்கள். இனி யாரையும் அடிக்க மாட்டேன்" என்றார். ஒரு நிமிடத்தில், ஒரு கொடிய மிருகம், மென்மையான மனிதனாக மாறியது. "கல்லையும் கனியாக மாற்றலாம்" என்று இதைத்தான் சொன்னார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஸ்மட்ஸ் சத்தியம் செய்தான். "இந்த பூட்ஸ்தான் இனி எனக்குக் கடவுள்; இதை மட்டுமே வணங்குவேன்" அணியமாட்டேன் என்று சொல்லி அந்த பூட்சை தன் பூஜை அறையில் வைத்து அப்படியே வணங்கினான். *"நாம் நினைத்தால், யாரையும் மன்னிக்கவும் முடியும். மாற்றவும் முடியும்".* மன்னிக்கின்ற மனம் தான் மனிதனை மகாத்மாவாக மாற்றும். அன்பே சிவம்!!!கருணையே யேசு!!! நற்பண்பே நபிகள்!!!! மனிதன் மகிழ்வுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்திட மாமனிதமே மிகச்சிறந்த பண்பு.....
  1 point
 44. மானமென்றே வழ்வென கூறி
  1 point
 45. தாயக மண்ணே தாயக மண்ணே விடை கொடு தாயே
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.