Jump to content

Leaderboard

  1. புங்கையூரன்

    புங்கையூரன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      16

    • Posts

      13561


  2. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      23379


  3. சுப.சோமசுந்தரம்

    சுப.சோமசுந்தரம்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      414


  4. நிலாமதி

    நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      11007


Popular Content

Showing content with the highest reputation on 03/04/21 in Posts

  1. ஊரில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும்,…..நெடுந்தீவின் அடிப்படை அடையாளங்கள் இன்னும் மாறாது அப்படியேயிருந்தன ! கற்களால் அடுக்குப்பட்ட பயிர் வேலிகள், எவரோ தாட்டு விட்டுப் கிழங்கு பிடுங்க மறந்து போன பனம் பாத்திகளிலிருந்து முளைத்த பனங்கூடல்கள், மாட்டு வண்டித் தடங்கள் என்பன இன்னும் இருந்தன! முள்ளிவாய்க்காலில் மரணித்துப் போனவர்களில், விகிதாசார அடிப்படையில் பார்த்தால், நெடுந்தீவு தான் அதிக விலை கொடுத்தாக இருக்கும் என்பது சந்திரனின் அனுமானமாக இருந்தது! ஸ்ரீ மாவோ அம்மையார் கொண்டு வந்த மரவள்ளி வளர்க்கும் திட்டத்தினாலும் , முத்தையன்கட்டுப் பிரதேசத்தில் இலவசக் காணி பகிர்ந்தளிப்புத் திட்டத்தினாலும் கவரப்பட்டு அங்கு சென்றவர்களில் பலரும் , அவர்களது சந்ததியினரில் சிலரும் அவர்களுக்குள் அடங்குவர்! குறிப்பாக, இசைப்பிரியா போன்றவர்களின் இழப்பு அவனை மிகவும் பாதித்திருந்தது! தம்பி, இஞ்சையோ நிக்கிறியள் என்று கேட்ட படியே, குறிகாட்டுவானில் வள்ளத்துக்கு வரும்படி கூப்பிட்ட அந்தப் பெரியவர் அருகில் வந்தார்! வந்தவர், எங்க தங்கப் போறீங்கள் தம்பி என்று கேட்டார் ! மகா வித்தியாலயத்துக்குப் பக்கத்தில , எங்கையாவது ஒரு ஹோட்டல்ல நிக்கலாம் எண்டு யோசிக்கிறன்! தம்பி, இப்ப வெளிநாட்டுக் காசு புழக்கத்துக்கு வந்த பிறகு எல்லாம் அவையின்ர ஹோட்டல்களாய்த் தான் இருக்குது! தம்பிக்குக் கனநாள் நிக்கிற பிளானோ? அந்தப் பெரியவரது பேச்சின் சாராம்சம் அவனுக்குள் ஓடி வெளிப்பதற்கு அவனுக்குக் கொஞ்சக் கால அவகாசம் தேவைப் பட்டது! அவையின்ர என்றால்…...ம்ம்ம்….இன்னும் நெடுந்தீவு மாறவேயில்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்! அது சரி…..இவருக்கு எப்படித் தெரிந்தது , நான் அவையின்ர ஆக்களில் ஒருவன் இல்லையென்று…! அவன் யோசிக்கும் போதே பெரியவர் தொடர்ந்தார்! தம்பி, நெழுவினிப் பிள்ளையார் கோவிலடிக்குப் பக்கத்தில ஒரு வீடு இருக்குது! வீட்டுக்காரர் எல்லாரும் வெளிநாட்டிலை தான் இருக்கினம்! இப்ப வீடு சும்மாதான் கிடக்குது! உங்களுக்கு விருப்பமெண்டால் தாராளமாக அங்கு நிற்கலாம்! வேணுமெண்டால் என்னிட்ட ஒரு மோட்டச் சைக்கிளும் இருக்குது! உங்களுக்குத் தேவையான இடத்தில நான் கொண்டுபோய் இறக்கி விடுவன் என்றும் கூறினார்! சரி பெரியவர், எவ்வளவு காசு எண்டும் பேசுவமே என்று சந்திரன் சொல்லவும், என்னடா தம்பி….மீன் கரைஞ்சா எங்க போகப்போகுது….ஆணத்துக்கை தானே கிடக்கப் போகுது! நீங்களாய்ப் பாத்துத் தாறதைத் தாங்கோவன் எண்டு சொல்லவும் சந்திரனுக்கு கொஞ்சம் உதறலெடுக்கத் தொடங்கியது! ஒரு வேளை பெரியவர் தன்னைப் பற்றி ஏதாவது மணந்து கிணந்து இருப்பாரோ? இருந்தாலும் குறுக்கால வந்த தெய்வத்தையும் திருப்பி அனுப்ப மனம் வரவில்லை! பெரியவரே, நான் நீங்கள் சொல்லுற இடத்தில நிக்கிறன்! ஆனால் ஒரு கொண்டிசன்! எனக்கு உங்கட பழைய சைக்கிள் ஏதாவது இருந்தால் அதைத் தந்தால் போதும்! சாப்பாட்டுக்கு கிட்டடியில கடையள் ஏதாவது இருக்கும் தானே...என்று கேட்கவும்….என்ன தம்பி நீர், நாங்கள் என்னத்துக்கு இருக்கிறம்? நீர் என்ன விருப்பம் எண்டு சொல்லும் , நான் செய்விச்சுத் தாறன் எண்டு சொல்ல சந்திரனும் சம்மதித்தான்! இருந்தாலும் , பெரியவரை ஒரு முறை ரெஸ்ற் பண்ணிப் பார்க்கவேணும் என்று நினைத்தவனாக, ஐயா….ஒருக்கால் ஈச்சங்காட்டுப் பக்கம் போகவேணும், கொண்டு போய் விடுவீங்களோ எண்டு கேட்கவும் , பெரியவர் திடுக்கிட்டவர் போலச் சந்திரனைப் பார்த்தார்! தம்பிக்கு இடங்கள் தெரியுமோ என்று மிகவும் ஆச்சரியமாகக் கேட்கவும்….இவனுக்கு கொஞ்சம் மனதில் நிம்மதி வந்தது! இல்லை ஐயா, எனது நண்பனொருவன் தன்னுடைய பழைய வீடடைப் பார்த்து வரும்படி சொல்லியிருந்தான்! ஈச்சங்காட்டில எவடம்? விளாத்தி மரத்துக்கு கிட்டவாக! சரி, எதுக்கும் இதை வைச்சிருங்கோ எண்டு சொல்லி கொஞ்சக் காசை அவரிடம் கொடுக்க, அவர் என்ன தம்பி இப்பவே எண்டு சொல்லிக் சிரிக்கப் பெரியவருக்கு கடவாய்ப்பற்கள் ஒன்று கூட இல்லை என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தது! உடனேயே அங்கே நின்ற பெடியன் ஒருவனைக் கூப்பிட்டுத் தம்பி இந்த ஐயாவைக் கொண்டு போய் ஈச்சங்காட்டிலே இறக்கி விடு என்று கூற…..அவனும் பின்னால் திரும்பிப் பார்த்து விட்டுத் தான் தான் அந்த ஐயா என்று உறுதி படுத்திய பின்னர் மோட்டார் சைக்கிளில் லாவகமாக ஏறி அமர்ந்து கொண்டான்! ஈச்சங்காட்டில் ஒரு ஈச்ச மரங்களையும் இப்போது காணவில்லை! விளாத்தி மரத்தடியில் வீடு இருந்த இடம் வெறிச்சோடிப்போய்க் கிடந்தது! அந்த விளாத்தி மரம் மட்டும் இன்னும் அப்படியே நின்றது! தனது மூதாதைகளின் மூச்சுக்காற்றை இந்த மரமும் சுவாசித்திருக்கும் என்ற நினைவே...அவனுக்கு இதமாக இருந்தது! இங்கு தான் இந்தக் கதையின் கதாநாயகியை அடிக்கடி சந்திரன் இரகசியமாகச் சந்திப்பதுண்டு! இவன் கதைகள் சொல்லும்போது விழிகளை அகல விரித்தபடியே...அவள் கேட்டுக் கொண்டிருப்பாள்! இந்த விளாம்பழங்களை யானை எப்படிச் சாப்பிடும் எண்டு உனக்குத் தெரியுமா? இல்லை என்று அவள் தலையாட்ட ‘ஒரு சின்ன ஓட்டை மட்டும் போட்டுவிட்டு, அதன் உள்ளடையை அப்படியே உறிஞ்சி எடுத்து விடும்! அப்போ விதைகளை என்ன செய்யும்? அதை அப்படியே பழத்துக்குள் விட்டு விடும்! அவள் , அது உனக்கெப்படித் தெரியும்? சாப்பிட்ட பழத்தை யானை ஒருமுறை குலுக்கிப் பார்க்கும்! அப்போது அருகில் நிற்பவர்களுக்குக் கிலுக்கட்டி கிலுக்குவது போல ஒரு சத்தம் கேட்கும்! இதிலிருந்து உனக்கு என்ன தெரிகின்றது? அவளின் பதில் உடனடியாகவே வந்தது! யானை தனது அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு….விதைகளைச் சாப்பிடாமல் அப்படியே விட்டு விடுகிறது…! அடுத்து வரும் மழைக்கு விளாம்பழத்தின் கோது உடைய விளாத்தி மரங்கள் முளைக்கும்! இப்படியான பதில்கள் தான்...சந்திரனுக்கு அவளிடம் ஒரு விதமான ஈர்ப்பை உருவாக்கியிருக்க வேண்டும்! அவளை முதலில் சந்தித்த சம்பவம் இன்னும் தெளிவாகவே அவனது நினைவில் இருந்தது! வீட்டில் விருந்தினர்கள் வந்திறங்கியிருந்தார்கள்! பொழுது பின்னேரமாகி விட்டிருந்தது! சந்திரனின் தாயார் சந்திரனிடம் கொஞ்சம் காசைக் கொடுத்துத் தம்பி, கடற்கரைக்குப் போய் மீன் ஏதாவது வாங்கிக் கொண்டு வா என்று கூற….அம்மா உங்களுக்கென்ன விசரே, இந்த நேரத்தில கடற்கரையிலே ஒரு வள்ளமும் வராது என்று பின்னடிக்க அம்மாவும், ஆராவது வீச்சு வலைக்காரர் நிப்பாங்கள், போய்ப்பார் என்று சொல்லத் தயக்கத்துடன் கடலுக்குப் போனவனுக்கு ஆச்சரியமாக இருந்தது! அவன் அம்மா சொன்ன மாதிரியே ஒரு வீச்சு வலைக்காரன் நின்று கொண்டிருந்தான்! அவனது இடுப்பில் தொங்கிய பறியும் காற்றில் அசையவில்லை! ம்ம்ம்...பறிக்குள்ள என்னவோ பாரமான சாமான் என்னவோ கிடக்குது! பிரச்சனை என்னவென்றால், அவன் கரைக்கு வரும் வரை பார்த்துக் கொண்டிருந்தால், கரையில் கன சனம் நிண்டு...மீனுக்கு விலையைக் கூட்டிப் போடும்! கடல் கொஞ்சம் வத்தாக இருந்ததால்...மீன் காரனிடம் நடந்தே போக முடிவு செய்தான்! மீன் காரனுக்கு கிட்டப் போனதும் அவனது அதிஸ்ட்டத்தை நினைத்து...தனது முதுகில் தட்டித் தன்னைத் தானே பாராட்டியும் கொண்டான்! ஆம், அந்த மீன் பறிக்குள் ஒரு பால் சுறாவும் இருந்தது! பால் சுறா, அதுவும் ஆண் சுறா எல்லாருக்கும் பிடிக்குமென அவனுக்குத் தெரியும்! பின்னேரமானதால் ….குழல் புட்டும் அவித்து சுறா வறையும் வைக்க அந்த மாதிரி இருக்கும்! விலையும் சரியாக இருக்கவே...வாலைப் பிடித்த படி...அந்தப் பால் சுறாவைத்...தண்ணீருக்குள் விட்ட படி இழுத்துக் கொண்டு கரைக்கு நடந்து வந்தான்! அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன! ,முதலாவது சுறா பழுது படாமல் இருக்கும்! இரண்டாவது…..தமிழர்களுக்கே ,,தனித்துவமான குணமான...ஆற்றையும் கண்பட்டு விடக்கூடாது என்ற ஆதங்கமும் தான்! கரைக்கு ஒரு இருபதடி தூரம் கூட இருக்காது! ‘கிளிக்’ என்றொரு சத்தம் கேட்டது! தண்ணீரில் ஒரு வட்டம் போட்டுவிட்டுப் பால் சுறா, அவைனப் பார்த்துக் கண்ணை ஒரு முறை அடித்து நன்றி சொல்லி விட்டுப் போயே விட்டது! இப்போது அவனிடம் காசுமில்லை! கறிக்குச் சுறாவுமில்லை! கண்ணீரும் கட்டுப்படுத்த முடியாமல்…...வரத் தொடங்கியது! அப்போது ‘கிளுக்” என்று யாரோ கரையில் நின்று சிரிப்பதும் தெளிவாகச் சந்திரனுக்குக் கேட்டது! அடுத்த பகுதியில் தொடரும்….!
    12 points
  2. கவலையில்லாத மனிதன் சந்திரபாபு அவர்கள் முக்கியக் கதாபாத்திரமாக நடித்து 1960 ம் வருடம் வெளியான படத்தின் தலைப்பு. இத்தலைப்புக்கு முழுத்தகுதியான ஒரு மனிதரை நெடுங்காலம் எனக்கு மிக அருகிலேயே பார்த்திருக்கிறேன். எனது அடுத்த வீட்டின் உரிமையாளரும் அங்கேயே நீண்ட காலம் வசித்தவருமான திரு. ரங்கசாமிதான் அவர். அந்தக் குடியிருப்புப் பகுதியில் 1982ல் முதலில் வீடு கட்டி வந்தவர் அவர்தான். 12 வருடங்கள் கழித்து அவருக்கு அண்டை வீட்டுக்காரனாகும் பேறு பெற்றவன் நான். அவர் உயர்ந்த கொள்கை பிடிப்புள்ளவர் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த விஷயங்கள் ஒன்றிரண்டு உண்டு. அதனால் அவர் சில விஷயங்களில் எனக்கு முன்மாதிரி என்றே இன்றளவும் வைத்துள்ளேன். நான் அங்கு குடிவந்தபோதே அவரது ஐந்து பிள்ளைகளும் வேலையிலோ திருமண பந்தத்திலோ கட்டுண்டதால், அவரும் அவரது மனைவியும் மட்டுமே அவ்வீட்டில். பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் அவ்வப்போது வந்து போவார்கள். அவரும் அவரது மனைவியும் அரசுப் பணியில் இருந்தார்கள் அப்போது. துணைவியார் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் நமது கதாநாயகர் வருவாயித்துறையில் இளநிலை உதவியாளராகவும் இருந்தனர். “முப்பத்தி மூணு வருஷ சர்வீஸ்” என்று அவர் பெருமையாகக் கூறியதும் நான் தயங்கியபடி கேட்டேன், “சார், உங்கள் துறையில் இத்தனை வருஷமாகவா பதவி உயர்வு தராமல் Junior Assistant ஆகவே வைத்திருப்பார்கள்?” பொதுவாக ஒருவரின் பதவி நிலை, பணி உயர்வு போன்ற தனிப்பட்ட விஷயங்களுக்குள் போவது அநாகரிகம் என்று நினைக்கும் நானே அடக்கமாட்டாமல் கேட்டு விட்டேன். முப்பத்து மூன்று வருடங்கள், ஆரம்ப நிலையான இளநிலை உதவியாளர் என்னும் கொடுமையை என்னாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் மனிதர் ஒரு மந்தகாசச் சிரிப்புடன் அக்கேள்வியைக் கடந்து சென்றார் பாருங்கள், “தம்பி, நான் அந்த நேரத்தில் நியமனம் ஆன முறைப்படி (ஏதோ 10A1, வழக்கு, கோர்ட் தீர்ப்பு என்றெல்லாம் சொன்னார்) Junior Assistant தான் எனக்கு கியாரண்டி. அடுத்த நிலைக்குச் செல்ல ஏதோ டெஸ்ட் எழுதணுமாம். அதெல்லாம் படிக்க எனக்குப் பொறுமையில்லை; சரக்குமில்லை. அப்புறாம் பதவி உயர்வு கொடுத்து இடமாற்றம் வேற பண்ணுவான். போதும் தம்பி ! நமக்கு என்ன குறை?” என் தந்தை இதே துறையைச் சார்ந்தவர். இவரைப் போலவே இளநிலை உதவியாளராய்ச் சேர்ந்து படிகள் சில கடந்து அப்போது வட்டாட்சியராய் இருந்தார்கள். அவர்கள் சொன்னது, “ஒரு முறை அலுவலக நண்பர்கள் ரங்கசாமியை வலுக்கட்டாயமாகத் தேர்வு எழுத வைத்து, புத்தகங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து, காபி டிபனெல்லாம் வாங்கி வந்து எழுத வைத்தார்கள். மனிதர் சாவகாசமாய் அமர்ந்து அவற்றையெல்லாம் சாப்பிட்டு விட்டு, “வே! உங்களையெல்லாம் மறக்க முடியாது வே!” என்று உணர்ச்சிப்பூர்வமாக நன்றி சொல்லி, விடைத்தாளில் ஏதோ கிறுக்கிவிட்டுச் சென்று விட்டார். நான் அதுகுறித்துக் கேட்டேன். “தம்பி ! அந்தப் புத்தகங்களில் விடை எங்கே இருக்கிறது என்று எவனுக்குத் தெரியும்? அவற்றைக் கொண்டு வந்த நம்ம ஃப்ரெண்ட்ஸ்கே தெரியல!”. பொதுவாக இப்படிப்பட்டவரை ‘சோம்பேறி’ என்றுதான் உலகம் விளிக்கும். அவரை அருகிலிருந்தே பார்ப்பதால் எனக்கு என்னவோ அப்படித் தோன்றவில்லை. பதவி உயர்வுகளை உரிய நேரத்தில் பெற்ற என் தந்தையாரை விட அவர் மகிழ்ச்சியாகவே தோன்றினார். பணியில் சேர்ந்த நாள் முதல் ‘Enterprising’, ‘Active’ என்ற பெயரில் எதையோ விரட்டிக் கொண்டே திரியும் நிம்மதியிழந்த ஜீவன்களை விட அவர் ஒரு உயிர்ப்புள்ள மனிதராகவே தெரிந்தார். சரி, இதிலிருந்து கிடைத்த பாடம்? பணி மேம்பாடு பக்கமே போகாமல் நானும் சித்தராகத் திரிந்தேனா? அவ்வளவு நான் முத்தி அடையவில்லை. அடுத்த நிலைக்கான சிறிய முயற்சியை மேற்கொள்ளாமல் இல்லை. ஆனால் அதையே நினைத்து வாழ்க்கையை வீணாக்காமல் தப்பினேன். ஒரு விரிவுரையாளனாய்ப் பணியில் சேர்ந்த நான் அதே நிலையில் ஓய்வு பெறும் மனநிலை பெற்றேன். அதையும் மீறி வந்த உயர்வினை ‘இலாபம்’ என்று எழுதினேன். அலுவலகம் எனும் உலகில் அமைதியான வாழ்வைப் பெற்றேன். உபயம் : உயர்திரு. ரங்கசாமி அவர்கள். பயன் : அதிகார வர்க்கத்திடம் தேவையில்லாமல் நான் சமசரம் செய்ததில்லை; மனநிறைவுடன் ஒரு தொழிற்சங்கவாதியாய் வாழ்ந்தேன். இளைய தலைமுறைக்கும் இத்தாரக மந்திரத்தைக் கடத்த முற்பட்டேன். அதன் பொருள் புரிந்தோர் பேறு பெற்றோர். சரி. மீண்டும் புகைப்படக் கருவியை (Camera) ரங்கசாமியின் பக்கம் திருப்புவோம். பிரச்சினையே இல்லாத மனிதன்தான் கவலையில்லாத மனிதனாய் வாழ முடியும் என்று நீங்கள் நம்பினால், ஒரு நொடி உங்களைக் கண்ணாடியில் பார்த்து நீங்களே சிரித்து விட்டுத் தொடருங்கள். இல்லறம் நல்லறமாய் அமையாத துர்பாக்கியசாலி அவர். அதற்கு அவரும் காரணமாய் இருந்திருக்கலாமே! இருக்கலாம். இல்லை என்று தீர்ப்பு வழங்க நான் நீதிமான் இல்லை. எது எப்படியாயினும் அது அவருக்கும் துன்பம்தானே ? இங்கு ஒரு நிகழ்வைப் பதிவு செய்ய விழைகிறேன். அவர்கள் வீட்டில் தென்னை நன்றாகக் காய்த்து என் வீட்டு மாடியில் தண்ணீர்த்தொட்டியின் குழாயை அவ்வப்போது பதம் பார்த்தது. ஒரு நாள் முற்றத்தில் நின்று கொண்டிருந்த அந்த அம்மாவிடம் சொன்னேன். உடனே சீற்றத்துடன், “நீங்கள் புதுசு புதுசா ரூம் எடுப்பீர்கள். எங்களுக்கு வேறு வேலையில்லையா?” என்றார் அந்த அம்மா. “என்னது, சம்பந்தமில்லாமல் பேசுகிறார்?” என்று யோசித்த பின்தான் தெரிந்தது; என் வீட்டில் அந்தப் புதிய தண்ணீர்த் தொட்டியே மாடியில் புதிய அறை கட்டியதால்தானே வந்தது ! பின்னர் ரங்கசாமி ஆளை அழைத்து வந்து தேங்காய் பறிக்கச் செய்தார். என்னிடம் சொன்னார், “தம்பி ! அவளிடம் பேசி உங்கள் மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். என்னிடம் சொல்லுங்கள்”. இந்த நிகழ்வை நான் இப்போது சொன்னது, வாசிக்கும் உங்கள் நியாயத் தராசு ஒரு பக்கமாய்ச் சாயட்டுமே என்ற எனது அரசியலாக இருக்கலாம். 24x7 அந்த அம்மா கரித்துக் கொட்டுவதைச் சட்டை செய்யாமல், தேய்த்து வாங்கிய சட்டையை மடிப்புக் குலையாமல் எடுத்து அணிவார். சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட வாசனைத் திரவியத்தை அள்ளித் தெளித்து, தினமும் சவரம் செய்து பளபளப்பாக வைத்திருக்கும் முகத்தில் பவுடரால் (அதுவும் வாசனையுடன்) மெருகேற்றிக் கிளம்பி விடுவார். அது அலுவலகத்திற்கு அல்லது கடைத்தெருவில் நட்பு வட்டத்துடன் அரட்டையடிக்கும் தேநீர்க் கடைக்காக இருக்கலாம். அவருக்கு மகிழ்ச்சி எங்கே கிடைக்கிறதோ அங்கேதானே போக முடியும்! வெளியே செல்ல முடியாத நேரமாயிருந்தால் அவரும் குரலை உயர்த்துவார். கவலையில்லாத மனிதர் ஒருவரை சந்திக்கக் கிடைத்தது எனக்கு வாய்த்த பேறு என்றால், தினமும் அவர்களுக்கு இடையில் பரிமாறப்படும் வசவுகள் என் காதில் விழுவது நான் செய்த பாவம். பிள்ளைகள், பேரன், பேத்தி எல்லாம் ஏற்படுவதற்கு மனதளவில் கணவன் - மனைவி ஆக வேண்டிய அவசியமில்லை என்பதை அவர்களிடம் தெரிந்து கொண்டேன். எல்லா வீடுகளிலும் கோப தாபங்கள் எல்லாம் சகஜம்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஹலோ ! உங்கள் வீட்டில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குப் பெயர் ஊடல். அது உளவியல் அறிவியல் சார்ந்தது. இவர்கள் வீட்டில் நடப்பதற்குப் பெயர் யுத்த காண்டம்; வெகு சில வீடுகளிலேயே இது அரங்கேறும். கொதி நிலை என்ற ஒன்று உண்டே ! இருவரும் பணி ஓய்வு பெற்றபின் விவாகரத்து வழக்கு நீதிமன்றம் சென்றது. ஒரு மகள் மட்டும் அவர் பக்கமும், மூன்று பிள்ளைகள் தாயின் பக்கமும், ஒரு மகள் நடுநிலை வகித்தும் குடும்பம் சின்னா பின்னமாகியது. வீட்டின் மீது உரிமை கோரும் வழக்கும் பதிவானது. வழக்கு முடியும் வரை தம் பக்கம் நின்ற மகள் வீட்டோடு சென்றார் ரங்கசாமி. அந்த அம்மா மட்டும் இவ்வீட்டில். அவருக்கு யாருடனும் ஒத்துவராது என்று அவரே சொல்லிக் கொள்வார். ஆகையால் மற்ற பிள்ளைகள் அவரவர் வீட்டில். ஒரு நாள் திடீரென்று இரவில் மாரடைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்; அந்த அம்மா நீள்துயில் கொண்டார். அண்டை வீடு என்பதால் முதலில் கண்டுபிடித்த துர்பாக்கியசாலி நானேதான். அந்த அம்மாவைச் சார்ந்து நின்ற பிள்ளைகளுக்குத் தகவல் கொடுத்தேன். வந்தார்கள். வீட்டுக் கதவை உடைக்கத் தயங்கினார்கள். அப்பா போலீஸில் பொய் வழக்குக் கொடுத்துத் தங்களுக்குப் பிரச்சனை ஏற்படுத்துவார் என்று பேச ஆரம்பித்தார்கள். நான் அவரிடம் சென்று பேசினேன். ‘அக்கம் பக்கத்தார் சாட்சியாக உங்கள் முன்தான் கதவு உடைக்கப்பட்டது என்று இருக்கட்டும்’ என்று அழைத்தேன். “தம்பி ! நீங்கள் வந்து அழைப்பதால் வருகிறேன். மற்றபடி அந்த உறவெல்லாம் எனக்கு முடிந்துவிட்டது. அவளுடன் வாழ்ந்து வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தொலைத்தது போதும்” என்று கிளம்பினார். சுமார் முப்பத்தைந்து வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்காக இல்லாமல், ‘அவருக்கு யாரோ’ எனும் நான் அழைத்ததால் வந்தார் என்பது அவர்களுக்கு இடையில் உள்ள வெறுப்பின் குறியீடு. கதவை உடைத்த பின் அவர் வீட்டின் உள்ளேயே செல்லாமல் போய் விட்டார். “இனி இந்தப் பயலுக என்னை அநாகரிகமாகப் பேச ஆரம்பிப்பானுக. நான் போறேன், தம்பி!” என்று மட்டும் சொன்னார். வீடு அவருக்கே உரியது என நீதிமன்றத்தில் தீர்ப்பானது. சில நாட்களில் வீட்டை விற்றுவிட்டார். அப்புறம் எங்கே சென்றார் என்று எனக்குத் தெரியாது. சுமார் மூன்று வருடங்கள் கழித்து ஒரு நாள் சந்தடி மிகுந்த சாலையில் நான் நடந்து செல்லும் போது ஒரு கார் என்னருகில் வந்து நின்றதை உணர்ந்தேன். அதிலிருந்து முன்பு போல் ‘மேக்-அப்புடன்’ நம் கதாநாயகர் இறங்கினார். “தம்பி, நல்லா இருக்கீங்களா?” என்று கை குலுக்கினார். சில வருடங்கள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சியை நானும் வெளிப்படுத்தினேன். “ஏய் ! கொஞ்சம் இறங்கு” என்று காரில் அமர்ந்திருந்த சுமார் 55-60 வயது மதிக்கத்தக்க அம்மணியிடம் கூறினார். அந்த அம்மா இறங்கி எனக்கு வணக்கம் தெரிவிக்க, நானும் புன்னகையுடன் வணக்கம் சொன்னேன். “தம்பி! இவள் என் மனைவி. நாங்கள் திருமணம் செய்து ஒரு வருஷம் ஆகுது. இவளும் டீச்சர்தான். இன்னும் ரெண்டு வருஷம் சர்வீஸ் இருக்கு.” நான் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தேன். அந்த அம்மாவிடம் சொன்னேன், “நீங்கள் கொடுத்து வைத்தவர். இந்த உலகில் மிக சந்தோஷமான மனிதரைக் கல்யாணம் பண்ணி இருக்கிறீர்கள்”. - சுப. சோமசுந்தரம்
    9 points
  3. நான் ஐரோப்பிய நாட்டுக்கு வந்து முதல்,முதல் கொட்டிப்பார்த்த.. வெண்பனித்தூறல் நான் பிறந்த மண்ணின்(ஈழம்) வாசனையே என்னுக்குள் வந்து எழுத வைத்தது. வெண்பனித்தூறல்..! ***************** மார்கழி தொடங்கிவிட்டால் வானம் மந்திரித்துக் கொட்டுமிந்த-வெண்மைநிற தேங்காய்த் துருவலோ? தேசமெல்லாம் பூத்திருக்கும் மல்லிகையோ!முல்லையோ! வெள்ளை நிற றோஜாவோ? வெண்தாமரை இதழ்தானோ-ஏன் கடல் களைத்து கரையொதுங்கும் நுரையலையோ.. கண்சிமிட்டிக் கொட்டுகின்ற விண்மீனோ.. வெட்டுக்களி எழுப்பும் வெண்புளுதிப் படலமோ வெற்றிலைக்கு போட்டுமெல்லும் வெண்நிறத்துச் சுண்ணாம்போ பாலாறு ஓடி தயிர் படிந்து உறைந்ததுவோ பருத்தி மரம் ஈன்ற பஞ்சினத்துக் குஞ்சுகளோ இலவம் காய் வெடித்ததுவோ இளம் பெண்கள் புன் சிரிப்போ முதுமை உலகத்து மூதாட்டி நரை முடியோ கொட்டிக் குவிந்துவிட்டால் கோபுரமும் தெரியாது-பின்பு பட்டக் குளிர் அடிக்கும் பல நிறமும் உள் மறையும்-இப்போ எல்லாம் ஒரே நிறம் எங்கும் சமாதானம் இது வேண்டும்,வேண்டும். அன்புடன்-பசுவூர்க்கோபி-
    2 points
  4. சூனா...பானா, உங்கள் மகள் எழுதிய கதைகளை வாசித்துள்ளேன்! இன்று உங்கள் கதையையும் வாசிக்கக் கிடைத்தது! சம்பிரதாயங்களும், சமூக நம்பிக்கைகளும் காலத்திற்கேற்ப மாற வேண்டும்! இல்லா விட்டால், அவையும் காலா வதியாகி விடும்..! ஒருவரது மன மகிழ்ச்சி என்பது பணத்திலோ, பதவி உயர்விலோ தங்கியிருப்பதில்லை என்றே நானும் கருதுகின்றேன்! பிரபல மோட்டார் கார் கம்பனியின் உரிமையாளரான கென்றி போர்ட் என்பவர்...தனது கம்பனியில் தொழில் பார்க்கும் கறுப்பினத்தவஒ ஒருவன்... அவனது மதிய உணவை அருந்தும் போது, அவன் முகத்திலிருக்கும் மகிழ்ச்சியைக் கண்டு தனக்குப் பொறாமை வருவதாக எழுதியுள்ளார்! அவ்வளவுக்கும் அவன் சாப்பிடுவதோ....வெறும் காய்ந்து போன பாண் துண்டுகள் மட்டுமே!
    2 points
  5. காலம் தான் எவ்வளவு விரைவாக ஒடி விடுகின்றது....? இப்போதெல்லாம் இந்தக் கடற்கரை வெறிச்சுப் போய்க் கிடப்பது போல அவனுக்கு ஒரு பிரமை...! அந்த நாட்களில் எத்தனை கிடுகுக் கொட்டில்கள் இதே இடத்தில் முளைத்திருந்தன? மயிலிட்டி, வடமராட்சி, பேசாலை, வங்காலை போன்ற இடங்களிலிருந்தெல்லாம் சூடை மீனும், கீரி மீனும் அள்ள வந்தவர்களுடன் உள்ளூர் மீனவர்களிளின் கொட்டில்களும் நிறைந்திருக்கும்! ஒருவரும் தீண்டாத சாளை மீன்களையும் கொழும்பு கோழித்தீன் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வார்கள்! அரை வாசி வள்ளங்கள் கடலில் நங்கூரமிட்டிருக்க, மிச்சக் கட்டு மரங்கள் கரைகளில் கிடந்தது வெயில் காயும்! கிடுகு பின்னுபவனிலிருந்து...கள்ளிறக்குபவன் வரைக்கும் முகமெல்லாம் புன்னகை நிறைந்திருக்கும்! சுருக்கமாகச் சொல்லப் போனால்....அந்தக் காலப் பகுதியில் புங்குடுதீவின் பொருளாதாரம்....அதி உச்சத்துக்கு உயர்ந்து போயிருக்கும்! சந்திரனின் மனதிலிருந்து ஒரு பெரு மூச்சு அதிக வெப்பத்தைச் சுமந்தபடி வெளியில் போனது! நீண்ட நாட்களின் பின்னர் நெடுந்தீவு போகும் வள்ளத்திற்காகக் குறிகாட்டுவான் கரையில் அவன் காத்திருக்கிறான்! இராஜேஸ்வரி, சில்வர் ஸ்பிறெ, அலை அரசி, குமுதினி, எலாறா என்று வள்ளங்களின் பெயர்கள் நினைவில் வந்து போயின! குமுதினியின் நினைவு வந்த போது...கண்களில் இரண்டு துளிகள் கண்ணீர்த் துளிகள் தோன்றிக் கீழே விழுவதா என்று யோசித்தன!! அவனுக்குச் சிறுவயதில் படிப்பித்த அந்த ஆசிரியையின் முகமும் ஒரு கணம் தோன்றி மறைந்தது! தம்பி...என்ன கனவு கொண்டிருக்கிறீரோ என்று ஒரு பெரியவரின் குரல் அவனை இவ்வுலகத்துக்குக் கொண்டு வந்தது! வள்ளம் வெளிக்கிடப் போகுது...கெதியா ஓடி வாரும்! அந்தக் காலத்தில்...வள்ளத்தின் கொண்டக்ரரிலிருந்து வள்ளத்தின் ஓட்டுனர் வரை, எல்லாரது பெயரும் அவனுக்கு அத்து படி..! இப்போது அவனை ஒருவருக்கும் தெரியாது..! ஆரோ வெளிநாட்டுக்காரர் போல கிடக்குது என்று யாரோ ஒருவர் சொல்லுவது கேட்டது! சில வருடங்கள் அவனை ஒரு வெளிநாட்டுக் காரனாக்கி விட்டதை நினைக்கக் காலம் எவ்வளவு வலிமையானது என தனக்குள் நினத்துக் கொண்டான்! வள்ளம் புறப்பட்ட போது ...தன்னை யாரும் அடையாளம் கண்டு விடக் கூடாது என்பதற்காக...தனது கறுப்புக் கண்ணாடியை ஒரு முறை துடைத்து விட்டுப் போட்டுக் கொண்டான்! நயினாதீவு நாக பூஷணி அம்மனின் கோபுரம் கிட்டக் கிட்ட நகர்ந்து வந்தது! அம்மன் கோபுரத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும்...இடையில் நகர்ந்து போய் விட்ட வருடங்களை நினைத்துக் கொள்வான்! ஒவ்வொரு தடவையும்...அந்தக் கோபுரம் உரு மாறிக் கொண்டேயிருக்கும்! நயினாதீவு மக்களின் பொருளாதர நிலையையும். அவர்கள் அப்போதைய மனோ நிலையையும் அந்தக் கோபுரம் பிரதி பலிப்பதாக, அவன் நினைத்துக் கொள்வதுண்டு! தேர்த் திருவிழா பார்க்க வந்து அனியாயமாகக் கடலில் சங்கமித்த அந்த இருபத்தியொரு பேரும் ஒரு முறை வந்து நினைவில் போனார்கள்! வள்ளம் எழாத்துப் பிரிவைத் தாண்டும் போது..தாலாட்டும் அந்தத் தாலாட்டு அவனுக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமான ஒன்று! இன்றும் அப்படித் தான்! ஒரு மெல்லிய தூக்கம் கூட அப்போது எட்டிப்பார்த்த்து! கண்களை மூடிய படியே சிந்தனையில் மெதுவாக மூழ்கத் தொடங்கினான்! கொஞ்சம் தங்களைச் சிலாகித்துக் கொண்ட ஊரவர்கள் சிலர், வள்ளத்தின் மேல் தளத்திலிருந்து '304' விளையாடத் தொடங்க, அவர்களுக்கிடையே கதையும் களை கட்டத் தொடங்கியது! முதலாமவர் ...இந்த வள்ளங்களுக்கு ஏன் இந்த அறுவாங்கள் பொம்பிளையளின்ர பேரை மட்டும் வைச்சுத் துலைக்கிறாங்க்ளோ தெரியாது! இரண்டாமவர்.... அதுக்கு இப்ப என்ன பிரச்சனை...சூறாவளியளுக்கும் தானே...அவையளின்ர பேரை வைக்கிறாங்கள்! முதலாமவர்.....அது பரவாயில்லை...வள்ளங்களுக்குப் பொம்பிளைப் பெயர் இனிமேல் வைக்கக் கூடாது எண்டு சட்டம் கொண்டு வர வேண்டும்! இரண்டாமவர்....உம்மட மனுசி உம்மை விட்டிட்டு ஓடிப் போனத்துக்காக இப்பிடியே..! முதலாமவர்.. உனக்கு விசயம் விளங்கேல்லைப் போல கிடக்கு...நீ எப்பவுமே ரியூப் லயிற் தானே! இந்தப் பேருகளை வைக்கிறதால மாததத்திலை இரண்டு மூண்டு நாளைக்கு வள்ளம் ஓடாமையெல்லோ கிடக்குது! வள்ளத்தில் உள்ளேயிருந்த பலர் சிரித்தார்கள்....சில பெண் பயணிகள் மெதுவாக நெளிந்தார்கள். அவர்களில் ஒருவர்...அப்புமாரே...கதையை மாத்துங்கோ....உங்கட எலாறா மட்டும் பெரிசாக் கிழிச்சு விட்டுதாக்கும்! இந்தக் கதைகள் பொழுது போவதற்காகவே கதைக்கப் படுகின்றன என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், சில வேளைகளில்....அடிபிடியிலும் முடிந்த நாட் களும் இல்லாமல் இல்லை! இடையில் கொஞ்சம் அவன் அயர்ந்து போயிருக்க வேண்டும்! தூரத்தில்...பனை மரங்கள் பச்சை வரிசையாகத் தெரியத் தொடங்கி விட்டன! ஊரைக் கண்ட புழுகத்தில்...கறுப்புக் கண்ணாடியைக் கொஞ்சம் கழற்றினான்! அப்போது ஒரு இளம் பெண் சந்திரனைப் பார்த்துச் சிரிக்க...அவனும் மரியாதைக்காகப் பதிலுக்குச் சிரித்து வைத்தான்! இப்போதெல்லாம் அவனுக்குள், அவனையறியாமலே ஒரு விதமான பயம் வந்து குந்திக் கொண்டது! அவனது சாதகக் குறிப்பை எழுதிய பண்டிதர் ஒருவர்....சாதகன் பிறக்கும் போது கன்னி ஸ்தானத்தில் சந்திரன் உச்சம் பெற்று நின்ற காரணத்தால்...சாதகன் குளிர்ந்த கண்களை உடையவனாகவும், பர தார மனம் கொண்டவனாகவும் இருப்பான் என்று எழுதியிருந்தார்! பர தார மனம் என்பதன் பொருள் அவனுக்கு விளங்கா விட்டாலும், ஏதோ பாரதூரமான வார்த்தை என்ற அளவில் அவனுக்குப் புரிந்திருந்தது! சாதகங்களை அவன் நம்புவதில்லை எனினும்....மனதில் ஒரு விதமான பயம் நிரந்தரமாகவே குடி கொண்டு விட்டது! தனது உணர்ச்சிகளை வெளியே காட்டாது மறைக்கும் எண்ணத்துடன்...கறுத்தக் கண்ணாடியை எடுத்து மீண்டும் போட்டுக் கொண்டான்! மாவலி இறங்கு துறையில், கால் வைத்தவுடன்...உடம்பெல்லாம் ஒரு விதமான புத்துணர்ச்சி ஒன்று தோன்றியது போல இருந்தது! அருகிலிருந்த குமுதினிப் படகில் இறந்தவர்களின் நினைவுக் கல்லைக் கண்டதும்...அந்த உணர்ச்சி வந்த மாதிரியே போயும் விட்டது..! அதிலிருந்த பெயர்களை ஒரு முறை வாசித்துப் பார்த்தான்! பல பெயர்கள் மிகவும் பரிச்சயமாக இருந்தன! அந்த ஆசிரியை, மீண்டுமொரு முறை நினைவில் வந்து போனார்! சங்கக்கடைக்குப் பக்கத்திலிருந்த பொன்னம்மா ஆச்சியின் கடையை இப்போது காணவேயில்லை! அந்த நாட்களில் பணம் எதுவும் வாங்காமலே, யானை மார்க் ஒரேன்ஜ் பார்லியை அந்த ஆச்சி அன்புடன் உடைத்துத் தரும்போது, வள்ளத்தில் வந்த களைப்பு உடனேயே பறந்து போய் விடுவது நினைவுக்கு வந்தது! அடுத்த பகுதியில் முடியும்…!
    1 point
  6. மடியிலே கனம் என்றால் வழியிலே பயம் என்பார்கள். இது படிப்பு பணம் பதவி எல்லாவற்றுக்குமே எடை போடலாம்.
    1 point
  7. இதுதான் வாழ்கை, ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனை பிரச்சனைகள், அருமை உங்கள் எழுத்து நடை
    1 point
  8. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 21, பங்குனி 2015 கிரானில் காணி உரிமையாளரைத் தாக்கிய கருணா மட்டக்களப்பு மாவட்டம், கிரான் பிரதேசத்தில், நூறு ஏக்கர் பகுதியில் விவசாயம் செய்துவரும் வனராஜா என்பவரை துணையமைச்சரும், துணை ராணுவக் கொலைக்குழுவின் தலைவரும், கருணா என்றழைக்கப்பட்டவருமான விநாயகமூர்த்தி முரளீதரன் கடுமையாகத் தாக்கியுள்ளார். சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவத்தின் போர் நடவடிக்கைகளையடுத்து இப்பகுதியில் வசித்துவந்த வனராஜாவும் அவரது குடும்பமும் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருந்தனர். புலிகளின் கட்டுப்பாட்டில் இப்பிரதேசம் வந்தபோது, வனராஜாவின் காணி புலிகளால் பாவிக்கப்பட்டு வந்தது. 2007 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டம் ராணுவத்தால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், வனராஜாவும் அவரது குடும்பமும் மீண்டும் தமது பகுதிக்குத் திரும்பிவந்து தமது சொந்தக் காணியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால், அக்காணி தனக்கே உரியதென்றும், தனது வர்த்தக நோக்கங்களுக்காக அக்காணியை தான் எடுத்துக்கொள்ளப்போவதாகவும் கூறிய கருணா வனராஜாவை தனது சகாக்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார். சனிக்கிழமை காலை 10:30 கருணாவால் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து வனராஜா வாழைச்சேனை வைத்தியசாலையில் கடுமையான காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தனது தொண்டர்கள் புடைசூழ வான்களில் வந்திறங்கிய கருணா வனராஜாவின் காணியில் வேலைபார்த்துக்கொண்டு நின்ற தொழிலாளர்களை அடித்து விரட்டியுமிருக்கிறார். கருணாவின் அடாவடித்தனத்திற்கெதிராக வாழைச்சேனை பொலீஸில் முறைப்பாடொன்று செய்யப்பட்டிருக்கிறது. அரச மாற்றத்தின்பிறகு துணைராணுவக் குழுக்களின் கொட்டம் அடங்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த மக்கள், நிலைமைகளில் மாற்றமேதும் ஏற்படவில்லையென்று, வழமைபோலவே கருணா துணைராணுவக்குழு ராணுவத்தினருடன் பவனி வருவதாகவும், வெளிப்படையாக ஆயுதங்களைக் கொண்டு திரிவதாகவும் கூறுகின்றனர். ராணுவத்தினரிடையே கருணாவுக்கு இருக்கும் செல்வாக்கு இன்னமும் குறையவில்லையென்றும், அவரைத் தொடர்ந்தும் தமது துணைராணுவக் குழுவின் தலைவராகவே அவர்கள் நடத்திவருவதாகவும் தெரிவிக்கின்றனர். இதேவேளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கருணாவின் செல்வாக்குப் பற்றித் தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கத்திற்கும் கருணாவுக்குமிடையிலான தொடர்பு அப்பட்டமாகத் தெரிவதாகவும், அவரது நடவடிக்கைகளில் ஆட்சிமாற்றம் எதுவித மாற்றத்தினையும் உருவாக்கவில்லையென்றும் கூறினார்.
    1 point
  9. பெருமாளின் மேனியை அலங்கரிக்கும் அணிகலன்கள், தீபாராதனையுடன்.....! 💐 🙏
    1 point
  10. "போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து" அதனால்தான் அவர் கவலை இல்லாமல் இருக்கின்றார். எல்லோருக்கும் அப்படி ஒரு "தில்" இருப்பதில்லை......நல்ல நகைச்சுவையான பதிவு சுப. சோமசுந்தரம்.....! 👍
    1 point
  11. அருமையான சொல்லாட்சி. கவலை இல்லாத மனிதனைப் பற்றி கவலைக் கொண்டதால்... கிடைத்தது அருமையான பதிவு 🤝👏
    1 point
  12. பிறர் கவலையில் உள்ளனரோ இல்லையோ, இதனை எழுதும் நீங்கள் மகிழ்வாக உள்ளீர்கள் என்பது நிச்சயம். 😀
    1 point
  13. ஒரு பொம்பிளையா.....நீங்கள் ரொம்ப அப்பாவியாய் இருக்கிறீர்கள்.... பொம்பிளையோடு அவவின் நண்பர்கள், உறவுக்காரர்கள்,பிள்ளைகள், குஞ்சு குருமான் என்று ஒரு முப்பது நாப்பது தேறும்.....இதில் எழுதப்படாத விதி அவரவர்கள் மேக்கப்புக்கான செலவை அவரவர்களே குடுக்க வேண்டும்.....ஒருமுறை மகள் மேக்கப் செய்து கொண்டு வர (அவதான் பொம்பிளைத்தோழி ) கடைசி கிட்டவே போகவில்லை. தாயென்று நம்பவே மாட்டன் என்று.அவளும் தாத்தாவோடயே இரு என்றுட்டுப் போட்டாள் .....! 😂
    1 point
  14. அதையேன் பேசுவான்! உந்த மேக்கப்காரர் வருவினம் பாருங்கோ.... சொல்லி வேலையில்லை. ஒரு பொம்புளைக்கு மேக்கப் பண்ண நாலைஞ்சு சூட்கேஸ் கொண்டுவருவினம்.மக்கு தப்புற மாதிரி அள்ளி தப்பு தப்பபெண்டு தப்பி உள்ள வடிவையும் கெடுத்துப் போட்டு போவினம்.😁 உந்த மேக்கப் எண்டது சொந்த செலவிலை சூனியம் செய்யிற மாதிரி...
    1 point
  15. படம்: இதயமலர் (1976) இசை : MSV வரிகள் : கண்ணதாசன் பாடியோர் : KJ ஜேசுதாஸ் & வாணி ஜெயராம் லவ் ஆல் ஹுஹும் லவ் ஒன் செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து சேல்விழி ஆடட்டும் காதலில் வந்து லவ் ஆல் லவ் ஒன் என்றும் இந்த இதயம் ஒருவனுக்கென்று இருப்பதைக் கூறட்டும் விரைவினில் சென்று (செண்டு) கங்கையின் சங்கமம் கடலோடு கண்டேன் மங்கையின் சங்கமம் பார்த்திட வந்தேன் கரை வழிச் செல்வது கங்கையின் பெருமை முறை வழிச் செல்வது மங்கையின் பெருமை (செண்டு) ஆயிரம் நாடுகள் சென்று வந்தாலும் தாயக பெருமையைக் காத்திட வேண்டும் காதலும் தாயகப் பெருமையில் ஒன்று காணட்டும் அதையும் இளமையில் இன்று (செண்டு) மந்திரம் சொல்லும் மணவறை கோலம் மனதினில் தோன்றும் ஒவ்வொரு நாளும் எண்ணுவதெல்லாம் நேரினில் காணும் புண்ணியம் இருந்தால் அது எங்கு போகும் (செண்டு)
    1 point
  16. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 19, மாசி 2015 அம்பாறையில் செயற்பட்டுவரும் அரச ராணுவக் கொலைக்குழுவிற்கெதிராக நடவடிக்கையெடுங்கள் - அரசைக் கோரும் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் ராணுவக் கொலைக்குழு ஆயுததாரிகள் - கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், இனியபாரதி எனப்படும் புஷ்பகுமார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், மகிந்த ராஜபக்ஷவின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளரும், கருணா கொலைக்குழுவின் மிக முக்கிய ஆயுததாரியுமான இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமாரை உடனடியாகக் கைது செய்து, தண்டனை வழங்குமாறு அம்பாறை மாவட்டத்தில் இவனால் வலிந்து காணமலாக்கப்பட்ட பலநூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளின் பெற்றோர் அரசை வேண்டிக்கொண்டுள்ளனர். 2007 இற்குப் பின்னர் ஆக்கிரமிப்பு ராணுவத்தால் அம்பாறை மாவட்டம் முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து இனியபாரதியால் இதுவரையில் குறைந்தது 200 இளைஞர்களும் யுவதிகளும் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டிருப்பதாக பதிவுசெய்யப்பட்டிருக்கும் முறைப்பாடுகளிலிருந்து தெரியவருகிறது. மேலும், புலிகளிடமிருந்து பிரிந்து பொதுவாழ்க்கைக்கு திரும்பிய பல முன்னாள்ப் போராளிகளும் இவனது குழுவினரால் காணாமலாக்கப்பட்டிருப்பதோடு, அவர்கள் பற்றிய பதிவுகள் தொடர்ச்சியாக மறைக்கப்பட்டே வந்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. அம்பாறை மாவட்டத்தில் ராணுவப் புலநாய்வுத்துறையினரின் வழிகாட்டலில் இனியபாரதி தனக்கென்று தனியான கொலைக்குழுவொன்றினை நடத்திவருவதாகத் தெரிகிறது. சுமார் 700 ஆயுதம் தரித்த கொலைக்குழுவினர் இவனது கட்டுப்பாட்டில் இயங்குவதோடு, கடத்தல்கள், காணாமற்போதல்கள், கப்பம் உட்பட மிகக் கொடூரமான வன்முறைகளில் இவனும் இவனது குழுவும் அம்பாறை மாவட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக பல சர்வதேச அமைப்புக்கள் உட்பட பல மனிதவுரிமைக் குழுக்கள் குற்றஞ்சாட்டியிருந்ததோடு, மகிந்தவின் அரசுக்கும் இவனுக்குமான நெருக்கம் பற்றியும் மிகத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியிருந்தன. இனியபாரதி ஆரம்பத்தில் செய்த கொலைகளில் குறிப்பிடத் தக்கது கிழக்கின் அனுபவம் மிக்க செய்தியாளரான ஐய்யாத்துரை நடேசன் என்பவரது படுகொலையாகும். 2004 இல் அவரது இல்லத்திற்கு மிக அருகே இனியபாரதியால் பலதடவைகள் தலையில் சுட்டுக்கொல்லப்பட்ட நடேசனின் மரணத்தில் தற்போது ஜனாதிபதியாகவிருக்கும் மைத்திரிபால சிரிசேனவின் பங்களிப்பும் இருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. இனியபாரதியால் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஐய்யாத்துரை நடேசனின் இறுதி நிகழ்வு ராணுவப் புலநாய்வுத்துறையின் அதிகாரி அபயரட்ணவின் நேரடி வழிகாட்டலில் செயற்படும் இனியபாரதியின் கொலைக்குழு, கருணா கொலைக்குழு அங்கத்தவர்களையும், ஈ என் டி எல் எப் எனும் இந்தியாவின் துணையுடன் இயங்கும் துணைப்படையின் உறுப்பினர்களையும், சில முஸ்லீம் ஆயுதக் குழு உறுப்பினர்களையும் கொண்டு அமைக்கப்பட்டது. பெரும்பாலும் கடத்தல்கள், காணாமலாக்குதல்கள், படுகொலைகள் ஆகியவற்றில் ஈடுபடும் இக்கொலைக்குழு அவ்வப்போது தமிழ் முஸ்லீம் சமூகங்களிடையேயான பிணக்கினை பெரிதுபடுத்தவும் மகிந்த அரசினால் பாவிக்கப்பட்டு வந்தது, இன்றும் நிலை அப்படித்தான். 2005 இல் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற நடவடிக்கையொன்றில் சரணடைந்த இரு இனியபாரதி கொலைக்குழு உறுப்பினர்களின் தகவல்களின்படி இனியபாரதி மைத்திரிபால சிரிசேன, டக்கிளஸ் தேவானந்தா மற்றும் அதாவுள்ளா அக்கியோருடன் மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணிவந்திருந்தான் என்று தெரியவந்திருந்தது. இவ்வாறு புலிகளிடம் சரணடைந்த இனியபாரதியின் கொலைக்குழு உறுப்பினர்கள், தாம் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்றும், தாம் இனியபாரதியுடன் சேர்ந்தது அவனைக் கொல்வதற்காகவே என்றும், தாம் தப்பி வருமுன்னர் இனியபாரதியையும், அவனது சகாக்கள் சிலரையும் கொன்றுவிட்டுத் தப்பிவந்ததாகவும் கூறியிருந்தனர். ஆனால், இனியபாரதி அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிவிட்டான் என்பது நாம் அறிந்ததே. கடந்த புதனன்று, திருக்கோயில் பிரதேச செயலகத்தின்முன்னால் கூடிய ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோயில் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 70 உறவினர்கள் தமது பிள்ளைகளைக் கடத்திச் சென்று கொன்றுபோட்ட இனியபாரதியின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இனியபாரதியின் கொலைக்குழு முகாம் அமைத்திருந்த பகுதியில் அகழ்வுகளை மேற்கொண்டு தமது சொந்தங்களின் எச்சங்கள் இருக்கின்றதா என்று கண்டறியப்படவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டனர். இனியபாரதியின் கொலைமுகாமிலிருந்து தப்பிவந்த ஒரு சிலரின் தகவல்ப்படி இனியபாரதியால் கடத்திக் கொண்டுவரப்பட்ட பல இளைஞர்கள் இம்முகாமிலேயே கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் மிகக் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறியிருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. அத்துடன், தம்பிலுவில் பகுதியில் அமைந்துள்ள மத்திய சந்தைப் பகுதியில் இனியபாரதி அமைத்திருக்கும் அவனது "பாதுகாப்பு வீடு" உடனடியாகச் சுற்றிவளைக்கப்பட்டு அவன் கைதுசெய்யப்படவேண்டும் என்றும் கோரியிருந்தனர். இனியபாரதி இப்போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் த. கலையரசன் கூறுகையில் 1990 ஆம் ஆண்டிலிருந்து 2008 வரையான காலப்பகுதியில் ஆலையடிவேம்பு, திருக்கோயில், காரைதீவு, நாவிதான்வெளி, அக்கரைப்பற்று, சம்மாந்துரை, பொத்துவில் மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் இருந்து மட்டும் குறைந்தது 5000 தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் காணாமற்போயுள்ளனர் என்றும், இவர்களுள் பலநூற்றுக்கணக்கானவர்களின் காணாமற்போதல்களோடு இனியபாரதி நேரடியாகத் தொடர்புபட்டிருக்கிறான் என்றும் கூறினார். இந்த ஆர்ப்பாட்டங்களில் அம்பாறை மாவட்டத்தின் கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேருவும் பங்கெடுத்திருந்தார்.
    1 point
  17. பார் புகழும் வேல் முருகா
    1 point
  18. ஏந்தி வந்தேன் காணிக்கை பூவாசம் தினம் கமழும் பொற்பாதமே.
    1 point
  19. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 கஸ்தூரி மனம் வீசும் மாண்பாளரே...|
    1 point
  20. வாவ் தொடக்கமே அட்டகாசமா இருக்கு நைனாதீவுக்கு நான் சென்ற நேரம் நம்ம கள உறவு ஜீவன் சிவா அண்ண கூட்டிக்கொண்டு சென்றார் அப்போது எனக்கு முன் ஓர் அழகிய 2 பெண் பிள்ளைகள் ஏன்டா இதுகளுல ஒன்றைப்பார்த்து கல்யாணம் கட்டிட்டு இங்க செட்டில் ஆகன்டா என்றார் மனுசன் அந்த நேரம் காஞ்ச மாடு கம்பில பாயுற ரைம் கல்யாணம் ஆகல எனக்கு புள்ள ஓகே சொன்னா நான் வேண்டாம் என்றா சொல்லப்போறன் என மனதுக்குள் நினைத்துக்கொண்டன் இந்த யாழ்ப்பாண சனம் மட்டக்களப்பார கல்யாணம் கட்டுமா? குறிப்பு அது இது என எக்கச்செக்க பிரச்சினை வரும் நான் யோசித்து அவளப்பார்ப்போம் என முன்னே நிமிர்ந்தேன் ஏனென்றால் எனக்கு கூச்ச சுபாவம் அதிகம் அவளைப்பார்க்கிறேன் . அவளும் என்னைப்பார்க்கிறாள் ஆகா அந்தப்பயணம் நெடுந்தீவுக்கும் செல்லாதா என நான் நினைத்தால் நைனாதீவில் படகு கரைதட்ட நான் முதலில் பாய்ந்து தரையில் இறங்கினன் அண்ணன் ஜீவன் சிவாவை வெளியே இழுத்து எறியாத குறையாக அவளை தூக்கிவிட கையை கொடுத்தேன் அவளும் சிரித்துவிட்டு கையை கொடுத்தாள் மெதுவாக தூக்க மனுசன் அங்கால திரும்பிட்டு நான் இந்த கூத்தையெல்லாம் பார்க்கல என ஓடிட்டார் பின்னர் மடத்தில் சோறு சாப்பிட போனோம் அங்கேயே நின்றாள் பார்வைகள் மட்டும் பேசி கதைத்து விடை பெற்றது . குறிப்பு இது என் மனைவிக்கு தெரியாமல் இருப்பது மிக நல்லது 😀
    1 point
  21. வில்லி தங்களுடன் இருந்த இரண்டுமாதங்களும் போனதே தெரியவில்லை, மிகவும் இயல்பாக எதிலுமே பற்றற்றவனாக , கனிவும் சாந்தியும் எதிலும் நிதானம் கொண்டவனாக ஒரு முற்றுமுழுதான துறவியாக மாறிவிட்டான், நாளை மதியம் ரோட்டர்டாமிலுள்ள (rotterdam ) துறைமுகத்திலிருந்து கோவா துறைமுகத்திற்கு செல்லும் கப்பலில் 15 நாட்கள் தொடர்ந்து பயணம் , சோபியாவிற்கு இருக்கும் ஒரே பயம் உலகப்போர் இப்போதுதான் முடிந்து ஒரு பிரளயமே ஓய்ந்திருக்கும் சமயத்தில் எங்காவது தனித்து விடப்பட்ட ஜேர்மனிய யு போர்ட் (U-boat) தனது மகன் செல்லப்போகும் கப்பலை குறிவைத்துவிடுமோ எனபதுதான், உலகப்போர்க்காலத்தில் ஏகப்பட்ட பயணிகள் கப்பல்கள் இப்படி யு போட்களால் துவம்சம் செய்யப்பட ஒருகாலத்தில் ஐரோப்பாவிலிருந்தான பயணிகள் கப்பல் போக்குவரத்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டன, பயத்திலிருந்தவள் அதனை மகனிடம் கேட்டும்விட்டாள் ,வில்லியும் சிரித்துக்கொண்டே பயப்படாதீர்கள் அம்மா , ஒரு மாதத்திற்கு முன்னர் தான் என்னுடைய மூன்றாம் பிரிவு துறவிகள் எதுவித இடர்பாடுகளுமின்றி கோவா சென்றடைந்தனர், நீங்கள் பயப்படுமளவுக்கு ஒன்றும் இல்லை என்று ஆறுதல் கூறிவிட்டு தன்னுடைய நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அடுத்தநாள் மதியம் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க எதனையும் வெளிக்காட்டாது துறைமுகத்தின் இறங்குதுறையுடன் தொடுகையிலிருந்த கப்பலின் படிக்கட்டில் தனது உறவுகளை திரும்பிப்பார்த்துக்கொண்டே ஏறினார் வில்லி, தாய் சோபியாவோ அழுகை உச்சத்தில் வாயை பொத்திக்கொண்டு விசும்பிக்கொண்டிருக்க தங்கை அவள் தோளை இருகரத்தால் பற்றிப்பிடித்துக்கொண்டிருந்தாள், தம்பியின் கையிலிருந்த டியூக் அவரிடம் ஓடிவர திமிறிக்கொண்டிருந்தது, இறுதியாக எல்லோரையும் பார்த்து கையசைத்த வில்லி கீழிருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு எறும்பு போல தெரிந்தார், கப்பல் புறப்படபோவதற்கு முன்னர் கப்பல் கப்டன் தனது சமிங்ஞ்சையான அந்த காதினை செவிடாக்கும் ஒலியெழுப்பியை இயக்க பாபா.....ங்ங் என்ற சத்தம் முழு துறைமுகம் முழுக்க கேட்டது, மெதுவாக கப்பல் கண்களிருந்து மறையும் வரை வெறித்து பார்த்துக்கொண்டிருந்த வில்லியின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக தங்களது வாகனம் நோக்கி செல்லத்தொடங்கினர். 2003 , இலங்கை கிழக்கு மாகாணம் உள்ளே சுலக்சனை காணவில்லை என்றதும் தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு, எங்கே போயிருப்பான் இவன் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே சுலக்சனின் கை இவன் தோள்மீது விழுந்தது, சற்று பயந்துவிட்டான் இருப்பினும் காட்டிக்கொள்ளாமல் திரும்ப சுலக்சனோ என்ன ...முடிஞ்சுதா ....? ம்...நீ எங்க போனனீ ......? இது அவன் ங்கே ...நீங்க மட்டும்தான் மனுஷன் எங்களுக்கெல்லாம் வராது பாருங்க என்றான் சுலக்சன் சிரித்துக்கொண்டே தூங்கிக்கொண்டு இருந்தியே எப்போ எழும்பின நீ ...? இது அவன் நீங்க பூனை நடையென்று யானை நடை நடந்தபோதே எழும்பிட்டன் . அதிருக்கட்டும் எங்க ரிலீஸ் பண்ணநீ ...? நான் குப்பை மேட்டுப்பக்கம் நீ ...? அதைத்தான் மச்சான் சொல்லவந்தனான் என்று தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒன்றும் விடாமல் சுலக்சனிடம் சொல்லிமுடித்தான். சொல்லிமுடிக்கும் தறுவாயில் சுலக்சன் பார்த்த பார்வையே சொல்லியது இவன் சொல்லிய எதையுமே அவன் நம்பவில்லை என்று, சரி ,நீ நம்பேல்ல தானே என்னோட வா உனக்கு என்ன நடக்குது என்று காட்டுறன், தலையை சொறிந்துவிட்டு சரி நட என்றுவிட்டு சுலக்சனும் அவன் பின்னால் நடக்கிறான், இருவரும் புதரை நெருங்கியிருப்பார்கள் சட்டென்று அவர்களை நோக்கி மெதுவான உறுமலுடன் எதுவோ ஒன்று வருவதை போல் தோன்றியது. இருவருமே அவ்விடத்தில் நின்று இருளை உற்று நோக்க வாயை திறந்து தன்னுடைய வேட்டைப்பற்களை காட்டியவாறு உறுமிக்கொண்டே பாயத்தயாராக நாயொன்று அவர்களை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது , இதுவரை எத்தனையோ நாய்களை பார்த்திருக்கிறான் எவற்றிலும் இந்த நாயின் கண்களை அவன் கண்டதில்லை அப்படியொரு இரத்த சிவப்பில் அந்த இரவு வேளையிலும் மினுமினுத்துக்கொண்டிருந்தது. ம...ச்...சா...ன் சுலக்சன் உடைந்த குரலில் ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்துக்கொண்டு இவனுடன் சேர்ந்து ஒவ்வொரு அடியாக பின்னேறிக்கொண்டிருக்க மாட்டினால் வெறும் எலும்புதான் என்பதை வேட்டை தோரணையில் முன்னேறிக்கொண்டிருந்த நாயின் பார்வையும் அதன் வாயிலிருந்து வடிந்த வீணியும் சொல்லாமல் சொல்லியது (தொடரும் )
    1 point
  22. இயற்கையே மாறிப்போச்சு..! ********************* கடல் நீரோ முக்கால் பாகம்-பூமி கால் பாகம் தரையே இங்கு இயற்கையின் செழிப்பு எல்லாம் ஏன் தானோ விறகாய் போச்சு பாரெல்லாம் வெய்யில் வெக்கை பாலைவனம்போல் காயும் தேசம் நீரெல்லாம் வற்றித்தானே-எம் நிலமெல்லாம் புழுதியாச்சு மழைவந்து கொட்டித் தாக்கும் மரமெல்லாம் காற்றால் சாயும் நெருப்பெல்லாம் காட்டுத் தீயாய் நிலமெல்லாம் நடுங்கித்தீர்க்கும். விஞ்ஞானம் உயர்ந்ததாலே விண் மேகம் கீழேயாச்சு சந்திரனில் கால் பதித்து—பூமி சரித்திரமே பின்னால் போச்சு நெருப்போடு நீரும் காற்றும் நிலத்தோடு ஆகாய ஐம்பூதம் அத்தனையும் எம்முள் வைத்தே அகிலமே எம் உடலாய்யாச்சு இயற்கையின் கொந்தளிப்பே-எம் உடலிலும் நோயாய் தோன்றும் அதனோடு இசைந்து வாழ்ந்தால் அனைவர்க்கும் இனிமை வாழ்வே. அன்புடன் -பசுவூர்க்கோபி-
    1 point
  23. இரு சூப்பர்ஸ்டார்களான தியாகராஜ பாகவதரும், எம்.ஜி.ஆரும் ஒரே பாடலில். 'சர்வகுண போதன்...' பாடல் அஷோக்குமார் திரைப்படம் (1941)
    1 point
  24. தளராத துணிவோடு களமாடினாய் இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய் அழகான
    1 point
  25. மானமென்றே வழ்வென கூறி
    1 point
  26. தாயக மண்ணே தாயக மண்ணே விடை கொடு தாயே
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.