Jump to content

Leaderboard

  1. மெசொபொத்தேமியா சுமேரியர்

    மெசொபொத்தேமியா சுமேரியர்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      12

    • Posts

      8471


  2. கிருபன்

    கிருபன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      33688


  3. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      43054


  4. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      23357


Popular Content

Showing content with the highest reputation on 03/15/21 in all areas

  1. சிறக்குதனை விரித்து நாம் பறப்பதெப்போ சுதந்திரமாய் நாமெம்மை உணர்வதெப்போ சிந்தனைச் சிறகை ஒடித்து வைத்து அடக்குமுறைக்குள் எமைச் சிறைப்பிடித்து அழகாய்ப் பூட்டி வைத்துவிட்டார் ஆண்கள் பெண்கள் இன்றி பேரண்டமும் இல்லை உலகில் மனிதப் பெருக்கமும் இல்லை மகிழ்வு கொள்ளவும் எதுவுமே இல்லை மானிட வாழ்வில் பெருமையும் இல்லை உணர்வுக் குவியலின் உன்னதமும் அவள் உறவைப் பிணைத்திடும் ஊக்கியும் அவளே உயிர் காத்திடும் மருந்தும் அவளே உலக மாந்தரின் உயிர்ப்பும் அவளே உணர்வுகள் தந்து உறவுகள் காக்க தன்னைக் கரைத்து தவறுகள் மறந்து சொந்தம் காக்க சொற்கள் குறைத்து பந்தம் போற்றப் பலதும் துறந்து உதிரம் தந்துயிர் தந்திடுவாள் பெற்றவர்க்காகப் பெருமை துறந்து மற்றவர்க்காக மனதைப் புதைத்து கற்றிருந்தாலும் கலைகள் மறந்து பற்றியிருக்கும் பணிகள் நிறைந்து பார்த்திருக்கும் கண்கள் நிறைக்க பாரங்கள் பலவும் சுமந்திடுவாள் குடும்பங் காக்கும் இயந்திரமாய் அவள் தன்னிகரில்லா பெண்ணின் தாய்மை தயங்காது உழைத்திடும் அவளின் மேன்மை திடமாய்க் கொண்டிடும் அவளின் வாய்மை தேசங்கள் எங்கிலும் தெரிந்த உண்மை ஆயினும் அவள் இன்றும் ஆணின் அடிமை கனவுகளும் கற்பனைகளும் காட்சிகளாய் விரிவது பெண்மனம் காரணங்கள் தேடி அலைவதும் கட்டுடைத்துப் போவதும் கொண்டாடி மகிழ்வதும் கொதித்து எழுவதும் அவளே கண்டங்கள் தாண்டிய கற்பனைகளில் விரிவதும் காட்சிகள் கொண்டு கனவாய் இசைபவளும் அவளே திண்ணிய மனதுடன் திடமாய் இருப்பவள் மற்றவர்களுக்காய் மயங்கியே மானமிழந்தே வாழ்கின்றாள் பத்து மாதங்கள் பத்திரமாய்ப் பிள்ளைகளைச் சுமந்திடுவாள் பாசத்துடன் வேடமேற்றுப் போற்றியும் வளர்த்திடுவாள் பருவம் கடந்தபின்னும் பிறந்த குழந்தையாய்ப் பார்த்திடுவாள் பேரன் பேர்த்தி கண்ட பின்னும் பிள்ளைகள் நலனை புறம் தள்ளி சும்மா இருந்து சுகம் காண என்றும் அவளால் முடிவதில்லை கொடிய விலங்குகள் சூழ நின்றிட அச்சம் இன்றியே கூட்டத்தின் தலைவியாய் குடும்பம் காத்தாள் அன்று கட்டியே போட்ட குடும்ப அமைப்பில் அத்தனை பேரிடம் குட்டுகள் வாங்கியே குனிந்த தன் தலையை நிமிர்த்தவும் அஞ்சிக் குனிந்தே வாழ்கின்றாள் இன்றும் பெண்ணுக்காய் அவளின்றி மேன்மை கொண்டிட அத்தனை பேருக்கும் அவள் வேண்டும் எனினும் பொத்திப் பொத்தியே வீட்டினுள் வளர்க்கும் பெற்றோர் ஆணவம் கொண்டு அவளை அடக்கிடும் அறிவற்ற கணவன் ஆதிக்கம் கொண்டே அவளை ஏய்த்திடும் பிள்ளைகள் ஆராதிப்பதாய்ப் பூட்டி வைக்கும் உறவுகள் இப்படி உலகம் முழுதும் பெண்ணை அடக்கிட நடிப்பவர் அதிகம் உன்னால் முடியும் உணர்ந்துகொள் எல்லாம் முடியும் எழுந்து நில் பெண்ணே உன் பலம் தெரியவிடாது உறவுகள் உன்னைச் சூழந்திடும் மண்ணில் உன்னை மேன்மை கொள்ள விடாது உன்னைக் காத்திடும் மாயப் பிம்பம் பலதும் காட்டி மயக்கம் கொள்ள வைத்திடும் தேடித் தேடிக் கதைகள் சொல்லி தெரியாதவளாய் ஆக்கிடும் கூடிக் கூடிக் கதைத்தே உன்னைக் குற்றுயிராயும் ஆக்கிடும் பேதை என்று பேடியர் கூடப் பிதற்றித்திரிய வைத்திடும் காமம் கொண்ட கண்கள் பலதும் முன்னும் பின்னும் பார்த்திடும் பொறாமை கொண்டு பொருமியபடியே மண்ணில் புதைக்கக் காத்திடும் ஆதலால் உன்னை திமிராய் நீ உணர்ந்து கொள் பெண்ணே ஊனம் எதுவும் உன்னிடம் இல்லை உயிர்ப்புடன் நீ எழுந்திடு எத்தனை பேரின் எள்ளல் கண்டும் ஏக்கம் துறந்து மீண்டிடு உறவுகள் எல்லாம் உடன் வரமாட்டா உண்மை அதை உணர்ந்திடு உயிர் வாழும் காலம் கொஞ்சம் உன்னை நீயும் அறிந்திடு துணிவு கொண்டு துயர் கடந்து தூக்கம் கலைந்து எழுந்திடு காலம் கடந்து எண்ணுவதெல்லாம் கானல் நீராய் ஆகிவிடும் கவலை கொண்டே நீயும் இருந்தால் உன் கோலம் கூட மாறிவிடும் கட்டிப்போட்ட கயிறுகள் அனைத்தும் நீயே அறுத்திட வேண்டுமடி காலம் தானாய்க் கனிந்திடாது காத்திருப்பும் மீண்டிடாது காற்றாய் நீயும் மாறிவிடு கனவுகள் எல்லாம் நினைவுகள் ஆகி துயரங்கள் எல்லாம் தூசாய் மாற உன் நினைவுகள் மட்டும் போதாது மனம் என்னும் மாயக் குதிரையின் மகுடியில் நீயும் மயங்காது அறிவின் ஆழம் தனைக் கடைந்து துணிவின் தூரம் தொட்டுவிட சிந்தனை என்னும் சிறகை விரித்து சிகரம் தொடும் தூரம் வரை பெண்ணே நீயும் தலை நிமிர்ந்து தடைகள் தாண்டிப் பறந்துவிடு
    12 points
  2. ஈழத்தமிழினத்தின் இனறைய நிலையை எவ்வாறு புரிந்து கொள்வது?? எந்தவகையில் நீ போராடினாலும் எந்த வகையிலும் நீ கவனிக்கப்படமாட்டாய் இது சிறீலங்கா சொல்வதல்ல உலகம் ஏன் மக்களை காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஐநா சொல்வது? இன்றைய ஈழத்தமிழினத்தின் மௌனநிலை என்பதும் கூட மற்றவர்களால் கேட்கப்பட்டு அல்லது தேவைப்பட்ட ஒன்றல்ல ஈழத்தமிழினம் தன்னால் இதற்கு மேல் அழிவை சந்திக்கமுடியாது இதற்கு மேலும் தன்னிடம் போராடும் வலு கிடையாது என்பதனால் வந்தது அப்போ ஈழத்தமிழினத்தின் அடுத்த கட்டம் என்ன?? மீண்டும் உண்ணாவிரதம் ஊர்வலங்கள்? ஒன்றை மதிப்பவரிடம் அல்லது மனித மாண்புகளை கொண்டோரிடம் நாம் பரீட்சிக்கவேண்டியவை இவை கொலைகாரர்களிடம் அதற்கு துணைபோனவர்களிடம் அதற்காக ஆயுத விநியோகம் செய்தவர்களிடம் .... எவ்வாறு ஒரு படியாவது அவர்கள் முன்னகர்த்துவர்??? அவர்களுக்கு ஆப்பிழுத்த குரங்கின் கதை தெரியாதா??? நான் பிரான்சில் நடாத்தப்படும் அத்தனை ஊர்வலங்களுக்கும் சென்றிருக்கின்றேன் ஐரொப்பாவில் நடாத்தப்படும் அநேக ஊர்வலங்களுக்கும் சென்றிருக்கின்றேன் ஐநா வுக்கு முன்னால் நடாத்தப்படும் அத்தனை ஊர்வலங்களுக்கும் சென்றிருக்கின்றேன் இது வருடத்துக்கு 2 அல்லது 3 ஆக இருக்கும் இவ்வாறு செல்வதென்பது எவ்வளவு கடினமானது எவ்வளவு நேரத்தை விழுங்கக்கூடியது எவ்வளவு செலவானது என்று பல தமிழருக்கும் தெரிவதில்லை (அவ்வாறு தெரிந்தால் அவை பற்றி கிண்டலடிக்கமாட்டார்கள்) 2 நாட்கள் லீவு வேண்டும் மற்றும் எல்லைகளில் சோதனை என்ற பெயரில் நடக்கும் அவமதிப்புக்கள் திருப்பி அனுப்புதல்கள்....??? மற்றும் செலவுகள்?? இதையெல்லாம் தாண்டித்தான் போவதுண்டு போய் கால் கடுக்க பல மணி நேரம் நின்று நடந்து ஊர்வலமாக சென்றால் அங்கே எதையுமே கணக்கெடுக்கமாட்டார்கள் இத்தனை வருடங்களாக இவ்வளவு ஆயிரம் பேர் அமைதியாக வருகிறார்களே எமது கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நாம் சொல்வதையெல்லாம் கேட்டு திரும்பி சென்று மீண்டும் மீண்டும் அமைதியாக வந்து கெஞ்சுகிறார்களே என்று எந்த மனச்சாட்சியும் அற்ற செயற்பாடற்ற நிலை தான் ஒவ்வொரு முறையும். கடைசியாக நான் சென்றது 2018. அன்று அதே நடைமுறை அதே நடை ஊர்வலம் மேடைப்பேச்சு... இவை நடந்து கொண்டிருந்தபோது ஐநா வாசலில் சில கூக்குரல்கள் கேட்டன அங்கே சென்று பார்த்தபோது சில இளைஞர்கள் ஐநாவுக்குள் உட்புக எத்தனித்துக்கொண்டிருந்தார்கள் காவலர்கள் இவர்களை தடுத்து வைத்திருந்தாலும் அமைதியாக ஆனால் ஆக்ரோசமாக இளைஞர்கள் உட்புக எத்தனித்தனர் இந்த இளைஞர்களுக்கு ஆதரவாக கூட்டம் அதிகரிக்கத்தொடங்கியது நானும் அவர்களுடன் சேர்ந்த கொண்டேன் மேலும் நின்றிருந்த காவல்த்துறையினர் தம்மால் முடியாது போவதை உணர்ந்து மேலதிக காவல்த்துறையினரை வரவளைத்து சுற்றி வளைத்தனர். ஆனால் இளைஞர்கள் எவரும் பின் வாங்கவோ வன்முறையை பாவிக்கவோ இல்லை இறுதியாக இனியும் முன்னேறுவது என்றால் வன்முறையை தவிர வேறு வழியில்லை என்பதால் அழுதபடியும் திட்டியபடியும் எல்லோரும் பின் வாங்கினர். நானும் தான் அதற்கு பின்னர் நான் ஐநா ஊர்வலத்துக்கு போவதில்லை ஏனெனில் அவர்கள் எம்மிடம் வன்முறையை மட்டுமே விட்டு வைத்திருக்கின்றனர். இந்த யுத்தத்துக்கு உதவிய அனைவரும் அழிந்து உலகம் தலைகீழாக மாறினால் மட்டுமே எமக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு எம்மினத்தின் மேல் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அட்டூழியங்களுக்கு நியாயம் கிடைக்க சிலவேளைகளில் வழியுண்டு.. அதைவிடுத்து அமைதி வழி இவர்களுக்கு புரியும் என்று அப்பாவித்தனமாக நம்பி திலீபனாக பூபதி அம்மாவாக முருகதாசாக இறுதியாக அம்பிகை அம்மாவாக .... கைவிடப்படுவீர்கள்????? (ஆனால் அதே கதவை இன்றும் இன்னும் பலர் தட்டியபடி தான் உள்ளனர். தட்டுங்கள்)
    5 points
  3. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021 வணக்கம், 14வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2021 சீசன் ஏப்ரல் மாதம் 09-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதிப்போட்டி அஹமதாபாத்தில் மே 30ம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. யாழ்கள ஐபிஎல் T20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை நாடாத்த சிலர் கேட்டுக்கொண்டதால் போட்டியை நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன். யாழ் களப் போட்டியில் குறைந்தது பத்துப் பேராவது பங்குபற்றினால் மட்டுமே தொடர்ந்து நடத்த தீர்மானித்துள்ளேன். 25 பேர் பங்குபற்றினாலும் உடனுக்குடன் புள்ளிகளை கணக்கிட கூகிள் ஷீற் தயார்.😃 கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும். இந்த போட்டியில் 8 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. Chennai Super Kings (CSK) Delhi Capitals (DC) Punjab Kings (PBKS) Kolkata Knight Riders (KKR) Mumbai Indians (MI) Rajasthan Royals (RR) Royal Challengers Bangalore (RCB) Sunrisers Hyderabad (SRH) 1. Chennai Super Kings Suresh Raina, MS Dhoni, Narayan Jagadeesabn, Ruturaj Gaikwad, KM Asif, Josh Hazlewood, Karn Sharma, Ambati Rayudu, Deepak Chahar, Faf du Plessis, Shardul Thakur, Mitchell Santner, Dwayne Bravo, Lungi Ngidi, Sam Curran, Ravindra Jadeja, Imran Tahir, Robin Uthappa, Moeen Ali, K Gowtham, Cheteshwar Pujara, M.Harisankar Reddy, K.Bhagath Varma, C Hari Nishaanth, R Sai Kishore 2. Delhi Capitals Shreyas Iyer, Ajinkya Rahane, Amit Mishra, Avesh Khan, Axar Patel, Ishant Sharma, Kagiso Rabada, Prithvi Shaw, Ravichandran Ashwin, Rishabh Pant, Shikhar Dhawan, Lalit Yadav, Marcus Stoinis, Shimron Hetmyer, Chris Woakes, Anrich Nortje, Steve Smith, Umesh Yadav, Ripal Patel, Lukman Hussain Meriwala, M Siddharth, Tom Curran, Sam Billings, Pravin Dubey, Vishnu Vinod 3. Punjab Kings KL Rahul (c), Chris Gayle, Mayank Agarwal, Nicholas Pooran, Mandeep Singh, Sarfaraz Khan, Deepak Hooda, Prabhsimran Singh, Mohammed Shami, Chris Jordan, Darshan Nalkande, Ravi Bishnoi, Murugan Ashwin, Arshdeep Singh, Harpreet Brar, Ishan Porel, Dawid Malan, Jhye Richardson, Shahrukh Khan, Riley Meredith, Moises Henriques, Jalaj Saxena, Utkarsh Singh, Fabian Allen, Saurabh Kumar 4. Kolkata Knight Riders Dinesh Karthik, Andre Russell, Kamlesh Nagarkoti, Kuldeep Yadav, Lockie Ferguson, Nitish Rana, Prasidh Krishna, Rinku Singh, Sandeep Warrier, Shivam Mavi, Shubman Gill, Sunil Narine, Eoin Morgan, Pat Cummins, Rahul Tripathi, Varun Chakravarthy, Pawan Negi, Tim Seifert, Shakib al Hasan, Sheldon Jackson, Vaibhav Arora, Karun Nair, Harbhajan Singh, Ben Cutting, Venkatesh Iyer 5. Mumbai Indians Rohit Sharma, Aditya Tare, Anmolpreet Singh, Anukul Roy, Dhawal Kulkarni, Hardik Pandya, Ishan Kishan, Jasprit Bumrah, Jayant Yadav, Kieron Pollard, Krunal Pandya, Quinton de Kock, Rahul Chahar, Suryakumar Yadav, Chris Lynn, Mohsin Khan, Saurabh Tiwary, Trent Boult, Adam Milne, Nathan Coulter-Nile, Piyush Chawla, James Neeshan, Yudhvir Charak, Marco Jansen, Arjun Tendulkar 6. Rajasthan Royals Sanju Samson, Ben Stokes, Jofra Archer, Jos Buttler, Riyan Parag, Shreyas Gopal, Rahul Tewatia, Mahipal Lomror, Kartik Tyagi, Andrew Tye, Jaydev Unadkat, Mayank Markande, Yashasvi Jaiswal, Anuj Rawat, David Miller, Manan Vohra, Shivam Dube, Chris Morris, Mustafizur Rahim, Chetan Sakariya, K.C. Cariappa, Liam Livingstone, Kuldip Yadav, Akash Singh 7. Royal Challengers Bangalore Virat Kohli, AB de Villiers, Yuzvendra Chahal, Devdutt Padikkal, Harshal Patel, Daniel Sams, Washington Sundar, Mohammed Siraj, Navdeep Saini, Adam Zampa, Shahbaz Ahmed, Kane Richardson, Pavan Deshpande, Glenn Maxwell, Sachin Baby, Rajat Patidar, Mohammed Azharuddeen, Kyle Jamieson, Dan Christian, Suyesh Prabhudessai, K.S. Bharat, Finn Allen 8. Sunrisers Hyderabad Kane Williamson, David Warner, Manish Pandey, Virat Singh, Priyam Garg, Abdul Samad, Bhuvneshwar Kumar, Khaleel Ahmed, Sandeep Sharma, Siddharth Kaul, T Natarajan, Abhishek Sharma, Shahbaz Nadeem, Mitchell Marsh, Vijay Shankar, Mohammad Nabi, Rashid Khan, Jonny Bairstow, Wriddhiman Saha, Shreevats Goswami, Basil Thampi, Jason Holder, Jagadeesha Suchith, Kedar Yadav, Mujeeb ur Rahman
    2 points
  4. தூங்கி எழுந்தது போன்ற உணர்வுடன் அவன் கண்ணை விழித்து, தான் எங்கிருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்த முயன்ற போது தான், மிருதுவான, ஆனால் மென்மையான வெட்பத்துடன் ஒரு சோடிக் கைகள் அவனது கைகளைப் பிடித்திருந்ததை உணர்ந்தான். தலையைத் திருப்பிப் பார்க்கக் கூடிய ஒரு நிலைக்குத் தன்னை சுதாகரித்துக் கொண்டவனுக்கு, அந்தக் கைகளிலில் பச்சை குத்தியிருந்த ரோஜாப்பூக்களின் அழகு, அவனுக்கான நினைவுகளை மீட்டெடுக்கப் பிரயத்தனம் செய்தன. இந்தக் கைகளை எங்கோ பார்த்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன்! ரோஜாப் பூக்கள் போன்ற அந்தக் கைகளிலும் ரோஜாப்பூக்களா என வியந்தும் இருக்கிறேன் என்பதும் நினைவுகளின் சுழற்சியில் அவனுக்கு வந்து போனது. அந்தக் கைகளின் சொந்தக்காரியையோ அவளது முகத்தையோ அவன் முன்னெப்போதும் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை என்பது மட்டும் திடமாக அவனுக்குத் தெரிந்தது. ஆனால் அவள் எப்படி இங்கே என்பது தான் புரியாத புதிராய்... தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவனுக்கு புரிந்தது. அவனுக்கு முதுகைக் காட்டியபடி வைத்தியருடன் அவள் பேசுவதும் பல மைல் தூரத்திற்கப்பால் கேட்பது போலிருந்தது. அவள் முகம் தெரியவில்லை, பாதி மயக்கத்திலும் அவள் முகம் தேடி அவன் கண்கள் அலைந்தன. இன்று மட்டுமல்ல அவளைப் பார்க்கவென பரிதவித்த கடந்த பல மாதங்களும் மனக்கண்ணில் வந்து போயின.முதன் முதலாய் ஒரு பெண்ணின் நெருக்கத்தை தேடி அலைந்த அந்த உணர்வு அவனுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. பாறாங்கல் ஒன்றைத் தலையில் தூக்கி வைத்திருப்பது போன்ற வலியோடு, அப்போது தான் அவனுக்கு தனக்கு என்ன நடந்திருக்கும் என்பதான கேள்வி ஒன்று எட்டிப் பார்த்தது. முழுவதும் ஞாபகம் வரவில்லை. இருந்தாலும் அவன் மிகப்பிரயத்தனப்பட்டு சில நினைவுகளை சுழியோடிப் பிடித்துக் கொண்டான். ****************************************************************************** வழமை போலவே அன்றும் விடிகாலை ஐந்தரை மணிக்கு சொல்லி வைத்தாற் போல் கீழே கதவை திறக்கும் சத்தமும் அதைத் தொடர்ந்து சில வினாடிகளில் மீண்டும் கதவை அறைந்து சாத்தும் சத்தமும் கேட்டது. தினசரி வேலைக்குப் போக முன்னே வீட்டுக்கழிவுகளைக் கட்டி வெளியேயுள்ள கழிவுப்பெட்டிக்குள் எறிந்து விட்டுப்போகும் அந்தப் பெண்ணின் முகத்தை அவன் தன் மூன்றாவது மாடியிலிருந்த அறையின் சாளரத்தினூடே மறைந்து நின்று பார்க்கும் போதெல்லாம், அவனுக்குத் தெரிந்தது அவள் கைகள் மட்டுமே. கழிவுப்பையை எறியும் போது கூட மிக நிதானமாகவும், நேர்த்தியாகவும் அவள் அதை சிரத்தையுடன் செய்வது போலிருக்கும். குளிருக்காக தன் தலையை குளிர் அங்கியால் மூடியபடி, ஒரு ரோஜாப்பூ பறந்து போவது போல மெதுவாக அவள் அந்த மென்பனியில் இன்றும் மறைந்து போனாள். கடந்த சில மாதங்களாகவே முகம் தெரியாத அந்த ரோஜாப்பூவிற்காக அவன் மனதில் இனம் புரியாத ஒரு தேடல் பரிதவிப்பாய் மாறிக்கொண்டிருந்தது. இப்போதைக்கு மூன்று பேரில் ஒருவர் வீட்டிலிருந்து வெளியே போய் விட்டது உறுதியாகியது அவனுக்கு. அடுத்த இரண்டு கதவுச் சத்தங்கள் வரும் வரை அவன் கட்டிலை விட்டு இறங்க மாட்டான். இதுவே கடந்த பல மாதங்களாக, முக்கியமாக தொற்றுப் பரவத் தொடங்கிய பேரிடர் காலத்திலிருந்து நடை பெற்று வருகிறது. மாதங்கள் கடந்ததில், ஊரடங்கிய நிலைமை வழமையானதாய் போக, தனிமையாய் இருப்பது, வழக்கமாகிப் பழக்கப்பட்டுப் போயிற்று. அது ஒரு வகையில் அவனுக்கு ஆறுதலாகவும் இருந்தது. யாரையும் முகம் பார்த்துக் கதைக்க வேண்டிய அவசியம் இல்லாமற் போயிற்று. மனிதர்களை அதுவும் புதிய மனிதர்களைச் சந்திப்பதென்பது மனதின் ஆழத்தில் ஒரு பயத்தை, ஒரு பதற்றத்தை அல்லது ஒரு இனம் தெரியாத படபடப்பை அவனுக்குத் தோற்றுவித்திருந்தது. இந்த நாட்டில் அவனுக்கென்று கைவிட்டு எண்ணக்கூடிய நண்பர்களே இன்றுவரை இருக்கிறார்கள். வேறு யாருக்கும் அவன் சக பணியாளர்களைத் தவிர அவனது இருப்பிடமோ வேறு தனிப்பட்ட விபரங்களோ தெரியாது. தெரிய வரக்கூடாது என்பதில் அவன் தன்னால் முடிந்தவரை சிரத்தை எடுத்துக் கொண்டான். அவனது அறைக்கும் வெளியே இருந்த வீதிக்குமிடையே ஒரு பத்து யார் தூரம் தான் என்றாலும், வாகனங்களின் இரைச்சல், வீதி ஓரமாக நடந்து போகும் பாதசாரிகளின் காலடிச் சத்தங்கள், சில வேளைகளில் அவர்கள் தொலைபேசியில் சத்தமாக கதைக்கும் உரையாடல்கள் என எல்லாமும் அவனுக்கு துல்லியமாக கேட்கத் தொடங்கியிருந்தன. இதற்கு முன் இவையெல்லாம் காதுக்குக் கேட்காமல் இல்லை. வழமையான சத்தங்கள் தாம், ஆனால் இப்போதெல்லாம் ஒவ்வொரு சின்னஞ்சிறு ஒலியும் வழமையை விட பிரமாண்டமாகக் கேட்பது போல் ஒரு உணர்வு. அது பிரமையாய் இருக்குமோ என்று பல தடவை யோசித்தும் பார்த்தான். எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. அவனது அறையோடு ஒட்டிய வீதியின் ஓரமாக ஓங்கி வளர்ந்திருந்த மரங்களில் இருந்த மரக்கிளைகளின் உறவினர்கள் விடி காலையிலேயே இதமாகப் பாடத் தொடங்கி விட்டனர். கீச்சுக் கீச்சென்ற பாடல்கள் அவனுக்கு பிடித்திருந்தாலும் அவர்களின் பாடல்களின் ஒலி ஒவ்வொரு நாளும் வர வர அதிகமாகி வருவது போலவே அவனுக்கு நினைக்கத் தோன்றியது. அவர்களின் ரீங்காரமும் சுரமும் சுருதியுமாக மிகத் தெளிவாகக் கேட்பதை அவன் ரசிக்கத் தொடங்கி ஒரு சில நிமிடங்கள் கடந்த போது மீண்டும் அவன் அறைக்கு வெளியே, கீழ்த் தட்டிலிருந்து இரண்டாவது தடவையாக கதவு திறக்கும் ஓசையும் பின் அதை அறைந்து சாத்தும் ஓசையும் கேட்டு அடங்கியது. அவன் கடிகாரத்தைப் பார்க்காமலே இப்போது மணி ஐந்தே முக்கால் என நினைத்துக் கொண்டான். ஆடாமல் அசையாமல் படுத்திருந்தால் இயற்கை உபாதைகளை வராமல் தடுக்கலாம் என்ற மனப்பக்குவமும் நாளடைவில் வந்து விட்டிருந்தது. இன்னும் ஒரேயொரு கதவுச் சத்தம் தான் மிச்சமிருந்தது. அதை ஆவலோடு எதிர்பார்த்திருந்தான். இன்னும் ஒரு பத்து நிமிடங்களுக்குள் அதுவும் கேட்டு விடும் என்ற நம்பிக்கை வீண் போகவில்லை. இரண்டாவது தட்டிலிருந்த அறைக்கதவு திறக்கப்படும் ஓசையும் அதைத் தொடர்ந்து இதோ தட தடவென்ற காலடிச் சத்தம் வீட்டின் பிரதான வெளிக் கதவை நோக்கி நகர்ந்து போவது அவன் காதுகளுக்கு மிகத் தெளிவாகக் கேட்டது . வர வர அவன் காதுகள் இரண்டும் மிகவும் தீவிரமாக வேலை பார்ப்பது போல இருப்பதை அவனால் புறம் தள்ள முடியவில்லை. அப்பாடி வீட்டிலிருந்த மூன்று மனிதர்களும் வேலைக்குப் புறப்பட்டு விட்டார்கள், இனி மதியம் தாண்டி, மாலை ஐந்து, ஆறு மணி வரையில், அவர்கள் வருவதற்கிடையில் அவனுக்குச் செய்ய வேண்டிய வேலைகள் எத்தனையோ இருந்தன. அவற்றுக்கான சிறிய நேர அட்டவணை ஒன்று அவன் அலுவலக மேசையின் சுவரில், நிறங்கள், வேலைகளின் முக்கியத்துவம் குறித்த வித்தியாசங்களைக் காட்டி நிற்க, ஓட்டப் பட்டிருந்தது. வீட்டிலிருந்து வேலை பார்க்கத் தொடங்கிய புதிதில் எதுவுமே பிடிக்காமல், மனதில் ஒட்டாமல் செயற்கைத் தனமாய் இருந்தது என்னவோ உண்மை தான். இருந்தாலும் எல்லாம் நாளடைவில் மாறத் தொடங்கியதற்கு வலுவான காரணம் என்ன என எதையும் அவனால்ச் சுட்டிக் காட்ட முடியவில்லை. ஆனால் அவனோடு மிக நெருங்கிய உறவுகள் இரண்டு திடீரெனத் தொற்று ஏற்பட்டு இறந்து போனதும், அவன் இருந்த நாட்டில் அவசர காலச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டு, எல்லோரும் வீடு அடங்கி இருக்க வேண்டி வந்ததோடும் தான் எல்லாமுமே அவனுக்குள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்ற கணிப்பீடு ஒன்றும் அவனுக்குள் இல்லாமல் இல்லை. முக்கியமாக அவனுடைய வேலை தொழில் நுட்பம் சார்ந்திருந்த படியினால் அவனுக்கு அவன் பணி சார்ந்த அனைத்து பட்டறிவையும் அனுபவத்தையும் ஒரு விரல் நுனியில் வைத்திருக்க முடிந்தது. எப்போதாவது சந்தேகங்கள் வந்த போது அவனுடைய குழுவில் உள்ளவர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்பினால் அவர்களில் ஒருவர் எப்படியாவது ஒரு பத்தே நிமிடத்தில் அந்தப் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காண்பதென்பதை 'மாதிரிக் காணொளி வாயிலாக' (demo video) அல்லது அது குறித்த ஆவணத்தில் போய் (Google document) தேவையான மாற்றங்களைச் செய்து அனுப்பி விட்டு, தொலைபேசியில் வந்து அவனுக்கு விளக்கமும் தந்து விடுகிறார். அதைப் பற்றி நினைத்து, அதற்காக அலட்டிக் கொள்ளும் மன நிலையில் அவன் இப்போது இல்லை என்பது தான் நிஜமாகிப் போனது. இன்று அவனுக்கிருந்த வழமையான வேலைகளுடன் இன்னுமொரு புதிய அதிகப்படியான கடமை ஒன்றும் ஒட்டியிருந்தது. அம்மாவுக்கு தொலைபேச வேண்டும், அவனது குரலுக்காக ஏங்கிப் பார்த்துக் கொண்டிருப்பாள். இன்று அவனது பிறந்த நாள், ஏதோ அவளுக்குத் தான் பிறந்த நாள் போல கடந்த முறை கதைத்த போதே சொல்லி வைத்திருந்தாள். உலகில் உள்ள அம்மாக்கள் அனைவருக்கும் இது போல இருக்குமா அல்லது இவளுக்கு மட்டும் தான் அநியாயத்துக்கு இப்படி ஒரு ஏக்கமா? அம்மாவை நினைத்த போது கண்களில் இயல்பாக ஈரம் தோன்றியதை அவன் கைகள் பட்டெனத் துடைத்து விட்டன. அவள் நினைவுகள் அந்தக் குளிரின் கடுமையைக் குறைத்து தற்காலிகமாக ஒருவித வெப்பத்தை அந்த அறையில் கொண்டு வந்ததைப் போல உணர்ந்தான். அவனுக்கு அம்மா மீதிருந்த பாசத்தையும் மீறி அன்றைய பொழுதில் முடிக்க வேண்டிய வேலைகளுக்குள், இதுவும் ஒரு வேலையாக, வேலைப்பளுவை அதிகரித்த மனோநிலையானது சாதுவான எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. நேர அட்டவணையில் மிகவும் நெருக்கமான இரண்டு மதிய வேளை அலுவலகக் கூட்டங்களுக்கிடையே தொலை பேச வேண்டியதையும் சிவப்பில் அடிக்கோடிட்டிருந்தான். அவனுடைய போதாத காலம், அவனுடைய பிறந்த நாள் புதன் கிழமையில் வந்து தொலைத்திருந்தது. புதன் கிழமைகளில் வழமையாக இருக்கும் அவன் சார்ந்த குழுவின் கூட்டத்தோடு அலுவலகப் பணியாளார்கள் அனைவரும் சேர்ந்து பங்கு பற்ற வேண்டிய வழமையான கூட்டமும் ஒன்று இருந்தது. பரவாயில்லை, முதலாவது கூட்டத்திற்கும் இரண்டாவது கூட்டத்திற்குமிடையே இருபத்தியைந்து நிமிட இடைவெளி இருந்தது. அந்த இடைவெளிக்குள் எப்படியும் அம்மாவுக்கு தொலைபேசி விடவேண்டும் என முடிவெடுத்துக் கொண்டான். முதல் நாள் இரவு வேலைப்பளுவினால் மின் அஞ்சல்களுக்குப் பதில் எழுவதை சற்றே ஒதுக்கி வைத்திருந்தான். அதன் விளைவு இன்று தெரிகிறது, பல்வேறு விதமான மனிதர்களின் தேவைகளும் கேள்விகளும் அவனைச் சற்றே களைப்படைய வைத்தது. பதில் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்களுக்கு ஏற்றாற்போல் பதில்களை அனுப்பினான். சில மின் அஞ்சல்களுக்கு ஆவணங்கள் இணைத்து அனுப்ப வேண்டிய கட்டாயமிருந்தது. ஒவ்வொன்றையும் மிகக் கவனமாகக் கையாண்டவன், மேசைக்கு எதிரே தினசரி நேர அட்டவணையைக்குப் பக்கத்தில் இருந்த சுவர் மணிக்கூட்டைப் பார்த்ததும் ஒரு வினாடி அதிர்ந்து போனான். முதலாவது கூட்டம் தொடங்குவதற்கு இன்னும் ஐந்தே நிமிடங்கள் இருந்தன. உடனடியாக, தற்சமயம் செய்து கொண்டிருந்த மின் அஞ்சல் தொடர்பான ஆவணங்களை சேமித்து வைத்துவிட்டு, மின்னம்பல வழி (zoom meeting) கூட்டத்திற்கு தன்னை தயார்படுத்தி, அதில் அமர்ந்து கொண்ட அந்த நிமிடத்தில் கூட்டம் ஆரம்பமானது. அவன் எப்போதுமே கூட்டங்களுக்கு இணையவழியிலோ அல்லது இப்பேரிடர் காலத்தின் முன்னே நேரடி வருகைகளுக்கோ பிந்திப் போனதில்லை. அவனுக்கு அலுவலக ஊழியர்கள் மத்தியில் இதற்கென நல்லதொரு பெயர் எப்போதுமே இருந்து வருகிறது. அதைப் பேணிப் பாதுகாப்பதில் அவனுக்கொரு அலாதியான மகிழ்ச்சி மனதின் ஆழத்தில் இருப்பது அவனுக்கு மட்டுமே தெரியும். கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஒரு வித ஆர்வத்துடனும் அதே சமயம் புன்னகையுடனும் இருந்தது அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் அனைவருமே அவனுடன் ஒரு அலுவலகத்தின் பணி சார்ந்து வேலை பார்ப்பவர்கள். எதிர்வரும் வாரத்தில் செய்ய வேண்டிய வேலைகளைத் திட்டமிட்டு, அவற்றை அவன் உட்பட தமது கடமைக்கான பங்கை அனுப்பியிருந்ததால் அதை எல்லோருக்கும் சமர்ப்பித்து, அதில் எதாவது மாற்றங்கள் அல்லது மேற்கொண்டு அத்துடன் இணைக்க வேண்டிய கடமைகள் ஏதாவது உண்டா எனப்பார்ப்பதே அக்கூட்டத்தின் பிரதான நோக்கமாயிருந்தது. இருந்தாலும் கூட்டம் அதிகாரபூர்வமாக ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைவரும் ஒருவருக்கொருவர் கை அசைத்தோ, புன்னகைத்தோ அல்லது வணக்கம் சொல்லியோ கொண்டது அவனுக்கு பெரியதொரு ஆறுதலைத் தந்தது. அவர்கள் அவனுக்குத் தெரிந்தவர்கள், அவர்களுடன் பழகுவது பாதுகாப்பானது, அவர்கள் அவனுக்கு பல வழிகளிலும் அவன் பணி சார்ந்த தொழில் நுட்பங்களை அவனுக்கு அறிமுகம் செய்து, அது தொடர்பான சிக்கல்களைக் கூட தீர்ப்பவர்கள். வாரத்தில் ஒரு முறை இப்படியாவது அவர்களைச் சந்திப்பது அவனுக்கு மனத்திருப்தி தந்தது. கூட்டம் அவனுடைய சில கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டதுடன் அது தொடர்பாக சில மாற்றங்களையும் ஏற்படுத்திக்கொண்டது. அவனும் வணக்கம் சொல்லி விடை பெற்றுக் கொண்டான். நேர அட்டவணையை நிமிர்ந்து பார்த்ததில் அவன் தன்னுடைய தனிப்பட்ட மின் அஞ்சல்களை வாசிக்காதது தெரிய வந்தது. அவசரம் அவசரமாக அந்தப் பக்கத்தை திறந்து, முக்கியமான மின் அஞ்சல் ஏதாவது வந்துள்ளதா என ஆராய்ந்தான். வீட்டின் சொந்தக்காரர் ஒரு மின் அஞ்சல் அனுப்பியிருந்தார், அதை அவசரமாகப் பிரித்தான். வழமையாக அவரிடமிருந்து வாடகைக்கான நன்றி சொல்லி ஒரு வரியில் ஒரு அஞ்சல் வரும். இது என்னவோ வித்தியாசமாக இருந்ததில் அவன் வாசிப்பதை ஆறப்போடாமல் கண்ணால் மேயத் தொடங்கினான். அன்புள்ள என்று தொடங்கி, அவனுக்கு ஒரு விடயத்தை தெரிவிப்பது நல்லது என்ற ரீதியில் கடிதம் தொடர்ந்தது. இந்த வீட்டில் சில திருத்த வேலைகள் இருப்பதால், அந்த வீட்டில் இருக்கும் மற்றைய அறைகளில் இருப்பவர்களை வீட்டை விட்டு எழுப்புவதற்கு அறிவித்தல் கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவனது அறை நல்ல நிலையில் இருப்பதால் அவன் வெளியேற வேண்டிய அவசியம் இல்லை எனவும் அடிக்கோடிட்டு எழுதியிருந்தார். இவ்வீட்டில் இருக்கும் மற்றவர்கள் அனைவரும் அவனுக்குப் பின்னர் தான் அவ்வீட்டிற்கு குடி புகுந்திருந்தனர். அவர்களும் அவனும் எப்போதுமே சந்தித்ததில்லை. அவர்களுக்கு அவன் இந்த அறையில் இருப்பது தெரிந்திருந்தும் அவரவர் வேலையும் வீடுமாய் இருந்த இந்த பேரிடர் காலம் அவனை முற்றாக இவ்வுலகத்தில் இருந்து வெகு தூரத்தில் வைத்திருந்தது. அவன் ஒருவன் தான் அந்த வீட்டில் நம்பிக்கைக்குப் பாத்திரமான நீண்ட கால வாடகைக்காரனாயிருப்பதால் வீட்டின் உரிமையாளருக்கும் அவனுக்கும் இடையில் ஒரு நல்ல உறவு நிலவியது. அவரைப் பற்றி ஒரு சில நிமிடங்கள் சிந்தித்தவன் திடீரென ஞாபகம் வந்தவனாய், நேரத்தைப் பார்த்த போது அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது! அடுத்த அலுவலக கூட்டத்திற்கு இன்னும் பதினைந்தே நிமிடங்கள் இருக்க, அந்த இடைவெளியில் அம்மாவுடன் பேசவும் சாப்பிடவும் வேண்டும் என்பதை மூளையும் வயிறும் ஞாபகப்படுத்தின. அலுவலக மேசையிலிருந்து அவசரமாய் எழுந்து, தன் அறைக் கதவில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்கண்ணாடியூடாக வெளியே யாராவது நடமாடும் அசைவுகள் இல்லை என்பதை உறுதி செய்த அதே வேளை அவன் காதுகளும் துல்லியமாக எந்த அரவமும் இல்லை என்பதை அடித்துக் கூறின. அவன் அப்படியிருந்தும் சத்தமின்றி கதவைத் திறந்து, இரண்டாவது தளத்தில் இருந்த சமையலறையை இரண்டே நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் எட்டி, கைகளை நன்றாகக் கழுவி, குளிர் சாதனப்பெட்டியில் பதப்படுத்தி வைத்திருந்த தன் உணவை மின்கதிர் சூடாக்கியில் மூன்று நிமிடங்களில் சூடாக்கி பழையபடி தன் அறைக்குத் திரும்பிய போது கூட்டம் ஆரம்பிப்பதற்கு, இன்னும் ஐந்தே நிமிடங்கள் தான் இருந்தன. அவசர அவசரமாக உணவு வயிற்றினுள்ளே போய் பசியை அடக்கியது, ஏற்கனவே மேசையில் வைத்திருந்த தண்ணீரையும் அருந்திக் கொண்டான். இனி மாலை ஆறு மணிவரை வயிறும் மனதும் சொல்வழி கேட்டு நடக்கும் என்பது உறுதியாயிற்று அவனுக்கு. ஊரில் இப்போதே ஆறு மணிக்கு மேலாகி விட்டது, இதற்குப் பின் தொலைபேசினால் அம்மா சோர்ந்து போவாள், கவலைப்படுவாள், அழுதபடியே தூங்கி விடுவாள், அவளுக்கு அவன் தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள, இப்பேரிடர் காலத்தில் படும்பாடுகளை புரிய வைக்க முடியாது. அப்படி அவன் முயன்றதும் கிடையாது. அவன் அம்மாவிற்கு தொலைபேசி அழைப்பை தொடர்ந்து கொடுத்தும் இணைப்பை ஏற்படுத்த முடியாது தவித்த வேளை அவனுடைய அலுவலகக் கூட்டமும் ஆரம்பித்தது. அவன் ஒரு நாளும் இல்லாதவாறு தன் காணொளி, ஒலி வாங்கி இரண்டையும் மறைத்தவாறே அம்மாவுக்கு அழைப்பை அனுப்பியவாறே இருந்தான். ஏன் அம்மா தொலைபேசி அழைப்பை இணைக்கிறாள் இல்லை என்ற யோசனை பலமாகத் தாக்கியதில் அவனுக்கு கூட்டத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அம்மாவின் இணைப்புக் கிடைத்த போது அவனுக்கு சரியாகப் பேசக்கூட முடியவில்லை. அம்மாவும் அவன் அலுவலகத்தில் பலரோடு இருப்பதாகத் தெரிந்த போது, அவசர அவசரமாக அவனை வாழ்த்தி விடை பெற்றது, அவனுக்கு ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தது. அலுவலகக் கூட்டம் முடிந்த கையோடு அவனுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தும் அவன் கேட்டபடியே ஒரு பல்பொருள் அங்காடியொன்றிலிருந்து வீட்டுக்கு வெளியே வந்திறங்கியிருந்தன. யாரும் பார்க்க முதலே அவற்றை எடுத்து வந்துவிட வேண்டும் என்ற துடிப்பில் சாளரத்தின் வாயிலாக, பனி படர்ந்திருந்த முன் முற்றத்தை நோட்டம் விட்டு, யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின் மெதுவாக கீழ்த் தளத்திற்கு விரைந்தான். இப்படியெல்லாம் பிந்தியதற்கு அந்த ஒரு தொலைபேசி தான் காரணம் எனத் தோன்றியதில் தேவையில்லாமல் அம்மா மீது கோபம் வந்தது. முன் கதவைத் திறந்து முற்றத்திற்கு வந்து உணவுப் பெட்டிகளைத் தூக்கிய போது அவனது வலது கால் பனியில்ச் சறுக்கி அவனை நிலை குலையப் பண்ணியது மாத்திரமில்லாமல், சரிவான ஒற்றையடிப் பாதையில் அவனை வழுக்கி இழுத்துச் சென்று மதிலைக் கடந்து வெளியே தள்ளியது. மதிலின் முனையில் தலையடிபட்ட ஞாபகம் இருந்தது. அவன் தன் கைகளை அந்தப் பனிப்பாறைகளில் ஊன்றி எழும்ப எத்தனித்ததும் ஞாபகம் வந்தது, அவ்வளவு தான், அதற்கு மேல் எதுவும் நினைவில் இல்லை. ****************************************************************************** அந்த ரோஜாப்பூ இப்போது தன் முதுகை அவனுக்கு காட்டியபடியே, வைத்தியருக்கு தன் அழகான ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டிருந்தது எல்லாம் மிகத் தெளிவாக அவனுக்கு கேட்கத் தொடங்கியது. "இவர் நான் இருந்த வீட்டில் தான் ஒரு அறையில் இருந்தார் என்பது எமக்கு ஒருவருக்குமே தெரிந்திருக்கவில்லை. பனியில் சறுக்கி விழுந்து, தலையில் பலமாக அடிபட்டதில் மயங்கியிருக்க வேண்டும் என்பதால் அவரது காற்சட்டைப் பையைச் சோதனை போட்டதில் தான் அவர் முகவரியைக் கண்டு பிடித்தோம். நல்ல வேளையாக சரியான நேரத்தில் அம்புலன்சில் வைத்தியசாலை வரை கொண்டு வந்து சேர்த்தாயிற்று. என்னுடைய கடமை முடிந்தது. நான் இன்றுடன் வீடு மாறிப் போகிறேன்.' அந்த ரோஜாப்பூ முகம் காட்டாமலே அவனிருந்த வைத்தியசாலை அறையிலிருந்து மிக மெல்லிய துள்ளலுடன் மறைந்து போனது. அவனால் பேச எத்தனித்தும் பேச முடியவில்லை, ஆனால் அவள் பேசுவது யாவும் தெளிவாகக் கேட்டது. அவன் கண்களில் கண்ணீருடன் அவள் காலடிச் சத்தத்தை நீண்ட நேரத்திற்கும் , பின் நீண்ட காலத்துக்கும் மிகத் துல்லியமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். -
    2 points
  5. காசும் போச்சுது….கையிலையிருந்த சுறாவும் போச்சுது…! கண்களில் கண்ணீர் முட்டிய படியே...கரையிலிருந்து சிரிப்பு வந்த திசையை நோக்கிச் சந்திரன் திரும்பவே ...அந்தச் சிரிப்புக்குரியவள் அங்கே நின்று கொண்டிருந்தாள்! மீனவர்களுக்கேயுரிய கொஞ்சம் பரட்டையான தலை மயிர்! நீல நிறம் கொஞ்சம் கலந்த கண்கள்! வெளிர் நிறம்! அந்தக் கண்களில் ஒரு குறும்பு..! வீட்டை விருந்தாளிகள் வந்திருக்கினம் போல கிடக்குது! வெறும் கையோட போகப் போறீங்களோ? விருந்தினர் வீட்டுக்கு வந்தது அவளுக்கு எப்படித் தெரிந்தது என்று சந்திரன் ஆச்சரியப்பட வேண்டியே இருக்கவில்லை! நெடுந்தீவில் அந்தக் காலத்திலிருந்தது ஒரேயொரு இ.போ.ச பஸ் மட்டும் தான், மாவலித் துறைமுகத்திலிருந்து குருக்கள் மடம் வரைக்கும் ஓடுவதுண்டு! யாராவது தூரத்தில் ஓடி வருவதைக் கண்டால், அவர் பஸ்ஸுக்கு வரும் வரைக்கும் அந்த பஸ் காத்திருக்கும்! அதே போலவே குறிகாட்டுவான் போகும் வள்ளமும் பஸ்ஸைக் காணும் வரை காத்திருக்கும்! அதனால் ஊருக்குப் புதிதாக யார் வந்தாலும் அது ஊருக்கே தெரிந்து விடுவதில் ஆச்சரியம் எதுவும் இருப்பதில்லை! சரி...இப்ப என்ன செய்யப் போறீங்கள் என்று கூறியவள் கடலுக்குள் மெல்ல இறங்கினாள்! தண்ணீர் இடுப்பளவில் வரும் வரைக்கும் நடந்து போனவள்...திடீரெனத் தண்ணீருக்குள் புதைந்து போனாள்! செத்தல் தேங்காய்கள் இரண்டைக் கட்டிக்கொண்டு கரையில் நீந்துவதுடன் அவனது நீந்தல் அறிவு மட்டுப் பட்டிருந்தது! கண்களை அகல விரித்த படி ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில்...அவள் மீண்டும் தண்ணீருக்கு மேலே வருவது தெரிந்தது! பின்னர் நடந்து கரைக்கு வந்தவளின் கைகளில் ஒரு பெரிய கயல் மீன் இருந்தது! கயல் மீனின் பிடரிப்பக்கம் கறுப்பாக இருக்குமென்ற வரையில்..அவனுக்குத் தெரிந்திருந்தது! எதுவும் பேசாமலே...கண்களில் மட்டும் நன்றியைக் காட்டிய படியே மீனை வாங்கிக் கொண்டாள்! கோடாலியைத் தொலைத்து விட்டுக் கவலையுடன் குளத்துக் கரையில் குந்திக்கு கொண்டிருந்த குடியானவன் முன்பு தோன்றிய தேவதையின் கதையின் நினைவு வந்தது! எவரோ போட்டு வைத்த களங்கண்டிப் பட்டியிலிருந்து...அந்த மீனை அவள் கள்ளமாகக் களட்டிக் கொண்டு வந்திருக்கிறாள் என்று அப்போது அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை! அதன் பின்னர் அவளைக் காணும் போதெல்லாம் ...அவனுக்குள் ஒரு எதிர்பாராத உணர்வு ஒன்று தோன்றுவது உண்டு! எல்லோரும் அவளைப் பிலோ என்று கூப்பிடுவதால்..அவனும் அவ்வாறே அவளைக் கூப்பிடுவான்! அடிக்கடி ‘பிலோவைக் ’ காணும் சந்தர்ப்பங்களை வேண்டுமென்றே அவன் உருவாக்கிக் கொள்வான்! அப்படியான சந்திப்பு ஒன்றின் போது உனது கண்கள் ஏன் நீலமாக இருக்கின்றன எனச் சந்திரன் கேட்கவே, உண்மையிலேயே நீங்கள் ஒரு அப்பாவி தான் என்று கூறியவள் ஒரு நாட்டுப் பாடலொன்றைப் பதிலாகத் தந்தாள்! என்ன பிடிக்கிறாய் அந்தோனி எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே பொத்திப் பொத்திப் புடி அந்தோனி பூறிக் கொண்டோடிற்று சிஞ்ஞோரே அப்போது அவனுக்கு...அந்தப் பாடலின் கருத்துப் புரியவேயில்லை! அது புரியும் காலத்தில் அவள் அருகில் இருக்கவில்லை!! ஒரு நாள் அருகிலிருந்த தேவாலயத்தில் அவள் பிரார்த்தனையில் இருந்தாள்! சந்திரனும் கண்களை மூடிப் பிரார்த்தித்தான்! தேவாலயங்களில் எப்போதுமே ஒரு அமைதி குடி கொண்டபடி இருப்பதால், அது ஒரு பொதுவான சந்திப்பிடமாக அமைந்தது! கடவுளிடம் என்ன வேண்டிக்கொண்டாய் என அவள் கேட்டாள்! வலசைப் பறவைகளைப் போல எனக்கு இறக்கைகள் வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்! நீ என்ன கேட்டாய்? மீனைப் போல...பூவல்கள் வேண்டுமென்று கேட்டிருப்பாய் என்றான்! இல்லையே...நீ நல்லாயிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்! நீ நல்லாயிருந்தால் தானே...நான் நல்லாயிருக்க முடியும் என்று அவள் கூறிய போது தான் அவர்களது நட்பு எவ்வளவு தூரம் ஆழமாகி விட்டது என்று அவனுக்குப் புரிந்தது! அதெல்லாம் சரி….எதற்காக வலசைப் பறவைகளைப் போல நீ வலசை போக வேண்டும்? அந்தப் பறவைகள் வாழுகின்ற இடத்தில்...இரவுகள் மிகவும் நீளமானவை! பகல் பொழுதுகள் மிகவும் குறைந்தவை! பனிக்காலம் அதிகம்! கோடை காலம் குறைவு! அதனால் அவை வலசை போக வேண்டியது காலத்தின் கட்டாயம்! வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரும் பறவைகள்…..தென்னிந்தியாவின் வேடந்தாங்கல் சரணாலயம் நிரம்பிய பின்னர்...அவற்றின் கண்களில் அடுத்த தெரிவு நெடுந்தீவு தான்! அதனால் அங்கு வாழும் மக்களின் பேச்சு வழக்கில்..வலசை போகும் பறவைகள் உதாரணமாக அடிக்கடி வருவதுண்டு! தம்பி...தோசைக்குப் போட்டிருக்கிறன்...கொண்டு வரட்டே? அந்தப் பெரியவரின் குரல் அவனது சிந்தனையை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்தது! சரி...ஐயா ..என்று கூறியவன் பிலோமினா அன்று கூறியது எவ்வளவு உண்மை என்று சிந்தித்தான்! நான் எதற்காக வெளி நாடு போனேன்? இன்று வரையில் அந்தக் கேள்விக்கான பதில் அவனுக்கு கிடைக்கவேயில்லை! எல்லோரும் போகின்றார்களே என்ற ஒரு மந்தை மனநிலையில் தான் சந்திரன் அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்! தோசையைக் சாப்பிட்டு விட்டுச் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீதியில் இறங்கியவன் கொஞ்ச நேரம் காற்றை நன்றாக உள்ளிளுத்து..வெளியே விட்ட படியே சைக்கிளை மிதித்தான்! நீண்ட நாட்களாக ஓடாததால்...கிட்டத் தட்ட ஒரு நீராவி எஞ்சினைப் போலவே, அவனது மூச்சுச் சத்தம் அவனுக்குக் கேட்டது! கொஞ்சம் களைத்துப் போனவன் கண்களில் ஒரு பெட்டிக்கடை தெரிந்தது! சைக்கிளை நிறுத்தி விட்டுக் கடையில் நின்ற சிறுமியிடம் ஒரு சோடா வாங்கிக் குடித்தவன் சிறுமியிடம் காசைக் கொடுக்கக் காசை வாங்கிய சிறுமி மெத்தப் பெரிய உபகாரம் என்றாள்! வெள்ளைக்காரர் கடைகளில் காசு கொடுக்கும் போது அனேகமாகத் தாங்க் யூ என்று சொல்லுவார்கள்! அதைத் தான் அந்தச் சிறுமியும் சொல்லுகின்றாள்! இந்த வழக்கம் ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்திலும் இருந்திருக்குமா? இப்போதெல்லாம் சாமான் ஏதாவது வாங்கினால், ஒரு இடமும் நன்றி கூடச் சொல்வதில்லையே! தொலைந்து போகின்ற நல்ல பழக்கங்களில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான் என நினைத்துக் கொண்டான்! எங்கேயோ நிறையக் கிளைகள் விட்ட பனை மரம் ஒன்று நின்றது நினைவிலிருந்தது!! இப்போது அதனைக் காணவில்லை! மகா வித்தியாலயத்தை அண்மித்ததும் அவனது பழைய நினைவுகள் மீண்டும் நினைவுக்கு வந்தன! பிலோமினாவின் வீட்டை அண்மிக்கும் போது, முன்பு கிடுகுகளினால் மேயப் பட்டிருந்த அந்த வீடு, இப்போது ஒரு சின்ன ஒட்டு வீடாக மாறியிருந்ததைக் கண்டு அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! விறாந்தையில் ஒரு வயசானவர் ஒருவர், சாய் மனைக்கதிரையில் சாய்ந்த படியே, வீரகேசரி வாசித்துக் கொண்டிருந்தார்! தூரத்தில் வரும்போதே அவரை அடையாளம் கண்டு கொண்டவன், சைக்கிளைக் கொண்டு போய்ப் பகிர் வேலியில் சாத்தி வைத்தான்! கண்ணாடியைக் கழட்டியவர் தலையை நிமிர்த்திச் சந்திரனைப் பார்த்தார்! ஆச்சரியத்துடன், தம்பி இண்டைக்குக் காலமையிலையிருந்து இந்தக் காகம் விடாமல் கத்திய படியேயிருந்தது! இண்டைக்கு யாரோ வரப் போகினம் எண்டு எனக்கு அப்பவே தெரியும் என்றவர் தனது இரு கரங்களாலும் அவனைக் கட்டிப் பிடித்துத் தழுவினார்! மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக அவர் காணப்பட்டார்! சந்திரனும் தான் கொண்டு வந்த சூட் ஒன்றை அவரிடம் கொடுக்கத் தம்பி...இதைப் போட்டுக் கொண்டு நான் எங்க போறது என்று ஆதங்கப் பட்டார்! ஏன், ஞாயிற்றுக் கிழமைகளில் சேர்ச்சுக்குப் போறதில்லையோ எண்டு கேட்க...அதெல்லாம் முந்திப் போல இல்லை மகன் என்று கூறினார்! அவர் எப்போதுமே சந்திரனை மகன் என்று தான் அழைப்பார்! இப்ப கடலுக்குப் போறதில்லையோ என்று சந்திரன் கேட்க ' இல்லையப்பன், கண்டறியாத சரள வாதம் ஒரு காலில வந்த பிறகு தண்ணிக்குள்ள கன நேரம் நிக்கேலாது! வலது கால் விரல்களில மரத்துப் போன மாதிரி ஒரு விதமான உணர்ச்சியும் இருக்காது! அந்தக் காலத்தில்..அவர் திருக்கைகளைக் கருவாட்டுக்காகக் கீறி எறியும் அழகு இப்போதும் கண் முன்னே தெரிந்தது! பருந்துகள் வானத்தில் வட்டமிட்ட படி...கடலுக்குள் வீசியெறியப் படும் திருக்கைக் குடல்களைத் தூக்கிக் கொண்டு போவதற்காக வட்டம் போட்டுப் போட்டுக் கீழே இறங்கி வருவது, ஒரு சர்வதேச விமான நிலையத்தில் அடிக்கடி விமானங்கள் வந்திறங்குவது போலவே இருப்பதால், சந்திரனும், பிலோமினாவும் அதை எப்போதும் ரசிப்பது உண்டு! அத்துடன் அவளைத் தான் கருவாட்டுக்குக் காவலாக விட்டுப் போவதால் கிடைக்கும் தனிமையையும் சந்திரன் விரும்புவதுண்டு! அங்கு வரும் மீனவர்களின் வலைகளில் சில வேளைகளில் பெரிய சிங்கி றால்கள் சிக்குவதுண்டு! அவ்வாறு கிடைப்பவகளில் பெரிதானவைகளைத் தெரிந்து பிலோவின் அப்பா அவனிடம் கொடுப்பதுமுண்டு! இதை யாழ்ப்பாணம் கொண்டு போனால் நிறையக் காசு வருமே என்று சந்திரன் சில தடவைகளில் அவரிடம் சொல்லும் போது,மகன் இதை யாழ்ப்பாணம் கொண்டு போற காசு இதன் விலையை விடக் கூடவாக இருக்கும் என்று கூறுவதுண்டு! எதுவோ ஒரு பெரிய பொருளாதாரத் தத்துவம் ஒன்றைக் கூறி விட்டது போல, அவரது முகத்தில் ஒரு சிரிப்பொன்று எப்போதும் வந்து போகும்! கருவாடு காய விடும் போது...கொஞ்சம் வெயில் ஏறியதும், கடற்கரை கொஞ்சம் வெறுமையாகத் தொடங்கும்! காய்கின்ற கருவாடுகளை காவலுக்கு நிற்கும் நாய்கள் பார்த்துக் கொள்ள சந்திரனும், பிலோமினாவும் எதிர்பார்க்கும் தனிமை கொஞ்சம் கிடைக்கும்! இன்னும் வரும்....!
    2 points
  6. ரொம்ப நொந்து நூடூல்ஸ் ஆகி இருப்பார் போல..☺️..😊
    2 points
  7. கோப்பையை இந்தியாவில் Vivo கொம்பனி கொடுக்கும்😂 விளையாடிக் கோப்பையை வெல்வதைவிட யாழ் களப் போட்டியில் வெல்லுவது கஷ்டம். 😃ஏனென்றால் தினமும் கிரிக்கெட் பார்த்து எல்லா தரவுகளையும் அத்துபடியாக வைத்திருப்பவர்களை விட கிரிக்கெட் என்றால் முழம் என்ன விலை என்று கேட்பவர்களும் வெல்ல சாத்தியங்கள் அதிகம் இருக்கு😬 எனவே நீங்களும் தயங்காமல் பங்குபற்றலாம்😎
    2 points
  8. என்னைப் பெரியப்பா என்று அழைப்பவர்களுக்கு பத்து வயதுக்குக்கும் குறைவுதான்.😀 பையனும் அப்படித்தான் எனக்கு😂
    1 point
  9. நியாயம், தர்மம், நீதி ஆகியவற்றின்படி உலகமும் இயற்கையும் இயங்குவதில்லை. மாறாக, இலாபம், சுயநலம், பொதுநலம், கூட்டுநலம் ஆகியவற்றின்படியே உலகமும் இயற்கையும் இயங்குகின்றன. இந்த உண்மையை புரிந்து கொண்டு, ஒவ்வொரு கணமும் இவற்றை மனதில் நிறுத்திக்கொண்டு, அடிப்படை தேவைகளில் இருந்து மீண்டும் ஆரம்பித்து, புதியதொரு தீர்வையும் அதை அடைய புதிய வழிமுறைகளையும் தேடுங்கள் - விடிவு கிடைக்கும்.
    1 point
  10. வணக்கம், விசுகர்! பழையதை நினைப்பது தான் இனி எமது வாழ்வில் வசந்தம்! அப்படியெல்லாம் இல்லை என்று தான் நினைக்கிறேன்! எனது கருத்துப் படி வாழ்வு என்பது அந்த நிமிடத்தில் வாழப்பட வேண்டும்! நாளை..நாளை என்று பின்போட்டுக்கொண்டு போனால், ஒரு நாளும் அந்த நாளை வரப்போவதில்லை! இதை உங்கள் வீட்டுக்குக்கிட்ட வசித்த ஆசிரியை ஒருவர் தான் எனக்குக் கூறி விளங்கப் படுத்தினார்! அவர் இங்கு விடுமுறையில் வந்திருந்த போது, பல இடங்களுக்கு அழைத்துக் கொண்டு சென்றேன்! பணமிருக்கின்றது, வசதியுமிருக்கின்றது. எனினும் உடம்பில் அதை அனுபவிக்கும் வலுவில்லையே தம்பி..! எதையும் உடம்பில் வலுவிருக்கும் போதே அனுபவித்து விட வேண்டும்! வரவுக்கும் கருத்துக்கும் நன்றி, விசுகர்! நன்றி....நிலாக்கா! உடனுக்குடன் பதிலெழுதத் தான் முயற்சிக்கிறேன்! நேரம் வெகு விரைவாக ஓடி விடுகின்றது! வணக்கம் திரு. சு.ப. சோமசுந்தரம்! நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் தொடர எண்ணியிருக்கின்றேன்! மிக்க நன்றி..! நன்றி...பசுவூர்க்கோபி. தொடருகின்றேன்! வணக்கம், குமாரசாமி அண்ணை! தொடருகின்றேன். நன்றி..!
    1 point
  11. மாமா என்று கூப்பிடாத வரைக்கும் அந்த மனுசன் சந்தோசப்படும் தம்பி 😉😉😊
    1 point
  12. அன்னையே தமிழ் அன்னையே
    1 point
  13. அம்மா நீ தந்த செபமாலை செபிக்கும் நாளெல்லாம் சுபவேளை (2) அன்றாடம் ஓதி உயர்வடைந்தோம் மன்றாடும் நலன்கள் உடனடைந்தோம் (2) 1. சந்தோச தேவ ரகசியத்தில் தாழ்ச்சியும் பிறரன்புமாய் நின்றாய் - எம் தோசம் தீர இயேசுபிரான் உம் அன்பு மகனானார் - அவரைக் காணிக்கை தந்து கலங்கியதும் காணாமல் தேடிப் புலம்பியதும் வீணாகவில்லை தாய்மரியே உம் வாழ்வு எமக்கு முன்மாதிரியே 2. துயர் நிறை தேவ ரகசியத்தில் தூயரின் வியாகுலங்கள் கண்டோம் - உயர் வாழ்விழந்த எமக்காக உன்மைந்தன் உயிர் தந்தார் - அவரை சாட்டைகளும் கூர் முள்முடியும் வாட்டிய சிலுவைப்பாடுகளும் - சாய்த்திட்டக் கோரம் பார்த்தாயம்மா தாய் நெஞ்சம் நொறுங்கியதாரறிவார் 3. மகிமையின் தேவ ரகசியத்தில் மாதா உன் மாண்பினைக் கண்டோமே - சாகாமை கொண்ட நின் மகனார் சாவினை வென்றெழுந்தார் அவரே ஆவியால் உன்னை நிரப்பியதும் தாயுன்னை வானுக்கு எழுப்பியதும் மூவுலகரசி ஆக்கியதும் மாதா உன் அன்புக்குத் தகும் பரிசே
    1 point
  14. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
    1 point
  15. பிரதர்! வேண்டாம் உந்த விளையாட்டு. 😎 நோகாமல் நொங்கு நோண்டி குடிக்கிற பழக்கம் என்னட்டை துண்டற இல்லை. இருந்தாலும் நான் லேட்டாய் வருவன். வந்தாலும் லேட்டஸ்சாய் வருவன்.
    1 point
  16. அதிக சக்தி வாய்ந்த சில யந்திரங்கள்........! 👍
    1 point
  17. "நினைவில் வைத்துக் கொள் உன் வாழ்க்கையில் உறக்கம் இரக்கம் இரண்டும் அளவோடு தான் இருக்க வேண்டும். உறக்கம் அளவுக்கு மீறினால் சோம்பேறி என்பார்கள். இரக்கம் அளவுக்கு மீறினால் ஏமாளி என்பார்கள்."
    1 point
  18. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021 கேள்விக்கொத்து கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. https://docs.google.com/spreadsheets/d/1YyI_RcsFZQt1oEQ8SgLRUa0Q4Tlj_6mtsYBQNK-iZSM/edit?usp=sharing அதிகபட்ச புள்ளிகள் 190 ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும் வெற்றி (Win) - 2 தோல்வி (Loss)- 0 முடிவில்லை (No Result) - 1 சமநிலை (Tie) - 1 குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சம்நிலையில் முடிய வாய்ப்பில்லை வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்) என்று குறிப்பிடவேண்டும். அணிகளை சுருக்கிய வடிவில் தந்தால் வசதியாக இருக்கும். CSK Chennai Super Kings (CSK) DC Delhi Capitals (DC) PBKS Punjab Kings (PBKS) KKR Kolkata Knight Riders (KKR) MI Mumbai Indians (MI) RR Rajasthan Royals (RR) RCB Royal Challengers Bangalore (RCB) SRH Sunrisers Hyderabad (SRH) ஆரம்ப சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து தரவரிசையில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் அடுத்த Playoff கட்டத்திற்கு போகும். முதலாம், இரண்டாம் இடங்களில் இருக்கும் அணிகள் Qualifier 1 போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி உடனடியாகவே இறுதி போட்டிக்கு தெரிவாகிவிடும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு Qualifier 2 இல் கிடைக்கும். மூன்றாம், நான்காம் இடங்களில் இருக்கும் அணிகள் Eliminator போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி Qualifier 2 இல் மீண்டும் விளையாடவேண்டும். இதில் தோல்வி அடையும் அணி போட்டித் தொடரில் இருந்து நீக்கப்படும். இறுதிப் போட்டியில் Qualifier 1 இலும் Qualifier 2 இலும் வெற்றி பெறும் அணிகள் 30 மே அன்று அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் வெற்றிக் கிண்ணத்திற்காக மோதும். Qualifier 1: 1st placed team v 2nd placed team Eliminator: 3rd placed team v 4th placed team Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி வியாழன் 08 ஏப்ரல் 2021 பிரித்தானிய நேரம் மதியம் 12 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்
    1 point
  19. அப்போது பார்த்தால் கள்ள மரம் வெட்டுபவர்கள் அவர்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் எழும்பி துப்பாக்கியை நீட்ட அவர்கள் அலறினார்கள் எங்களுக்கு சிங்களம் தெரியாது. அவர்களோ கைபாஷையில் மரம் வெட்ட வந்ததாக சொன்னார்கள் இவர்களை விடுவதா? அல்லது சுடுவதா? அல்லது கைது பண்ணி செல்வதா? என எங்களுக்குள் பாரிய வினா எழுகிறது ?? அப்போது எனது அப்பா ஞாபகமும் வருகிறது இப்படித்தான் எனது அப்பாவும் அகப்பட்டிருப்பாரோ படையினரிடம் என நினைத்து கொடிகளால் அவர்கள் கைகளை கட்டி மரக்கிளையுடன் அமர வைக்கிறோம் சத்தம் போட கூடாது என‌. நேரம் 3 மணி ஆனதும் அன்றய தாக்குதல் சம்பவங்களோ சண்டையோ இடம்பெறவில்லை அவர்களை விடுவதா அல்லது முகாமுக்கு கொண்டு செல்வதா என கேள்விகள் மீண்டும் எழ நான் விட்டு விடுவோம் ஆனால் இனிமேல் இங்கே வரக்கூடாது என சொல்ல கைகூப்பி கும்பிட்டு அவர்கள் காட்டுக்குள் ஓடுகிறார்கள் ஆனால் அவர்களால்தான் பல போராளிகள் சுடப்பட்டார்கள் என்பது தெரிந்தும் விட்டு செல்கிறோம். இந்த சம்பவம் பொறுப்பாளருக்கு தெரிய எனக்கு பணிஸ்மென்ற் கொடுக்கப்படுகிறது சமையல் பிரிவில் அந்த நேரமே சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு யுத்த நிறுத்தம் வருகிறது போராளிகளுக்கு சரியான சந்தோசம் பலர் அரசியல் நடவடிக்கயென எல்லா இடங்களுக்கு செல்கிறார்கள். மனிதர்களும் மனதும் மாறக்கூடியவை இதில் போராளிகளும் விதிவிலக்கல்ல நகர் புறங்களில் சென்றவர்கள் பலர் நாள் தோறும் விலகி செல்ல ஆரம்பித்தார்கள் சிலர் வெளிநாடு செல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் நாங்கள் செல்லவில்லை வெளிநாடு செல்ல காசும் இல்ல. பேச்சு வார்த்தையின் இடையில் போராட்டமும் நியாயப்படுத்தலால் பிளவுறுகிறது எங்களுக்கு என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என தெரியவில்லை ஒர் நாள் கர்ணா அம்மானால் அனைத்து போராளிகளும் அழைக்கப்படுகிறார்கள் நான் போராட்டத்திலிருந்து விலகுறன் இல்லாட்டால் கிழக்கு பகுதிய நாம் வச்சிருக்கணும் அப்படி இல்லையென்றால் அண்ணன் ஏதும் செய்ய வெளிக்கிட்டால் யாரும் இங்க நிற்கக்கூடாது எல்லோரும் அவங்கவங்க வீட்ட போகலாம் என்றார் அடியும் தெரியல முடியும் தெரியாமல் போராளிகள் முளித்துக்கொண்டிருந்தார்கள் பல ஆயிரக்கணக்கான போராளிகள் விலகி செல்ல ஆரம்பித்தார்கள் என்பதை விட அம்மாமார் வந்து அழைத்து செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். முக்கியமானவர்கள் சிலரே இருந்தார்கள் போராட்டம் தலைகீழாக மாறியது ( அது யாவரும் அறிந்தது) என்னையும் அம்மா அழைத்து சென்றுவிட்டார் நானும் நகர் பகுதிதில் வந்து ஒளிந்து கொண்டேன் அழைப்புக்கள் வந்தன இணையச்சொல்லி ஆனால் மீண்டும் சேரவோ இணையவோ மனதும் உறவுகளும் விரும்பல ஆனால் காட்டிக்கொடுப்பால் சிறை செல்ல அங்கே சகோதர யுத்தமும் அரங்கேறுகிறது இந்த நேரத்திலே அரசு வெற்றி கொண்டது என்றும் சொல்லலாம். சிறையிலிருந்து வந்தால் எல்லாமே வேதனையான வெற்றியுடன் முற்று முழுதாக முற்றுப்பெற்றிருந்தது. படிப்பும் இல்லை தொழிலும் இல்லை அம்மாவை தேடி நானும் செல்ல அம்மாவோ படுக்கையில் அண்ணன் மிருக வைத்திய துறையில் தங்கை திருமணம் முடித்து இருந்தாள் நம்மவர் யாரிடமாவது ஓர் வேலையை பெற்று வாழலாம் என நினைத்தால். வாழ்க்கையை இந்த சமுதாயத்தில் வாழ முடியாது ஓடி விடு என துரத்திக்கொண்டே இருக்கிறது துரோகியென்ற‌ பட்டத்துடன். திடிரென யாரோ என் மீது விரலால் தட்ட துப்பாக்கி முனைதானோ என‌ துடித்து எழும்புகிறேன் தம்பி கடையை திற சனம் வந்துட்டுது என்று சொன்னார் அந்த முஸ்லீம் கடை முதலாளி முகத்தை கழுவி முன்கண்ணாடியில் பார்க்கிறேன் கண்ணாடி மட்டும் பொய் சொல்லாமல் என்னைப்பார்கிறது. பொய்யென்றும் சொல்ல முடியல கற்பனையென்றும் சொல்ல முடியல‌ முற்றும் .
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.