Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Leaderboard

 1. இணையவன்

  இணையவன்

  கருத்துக்கள பொறுப்பாளர்கள்


  • Points

   16

  • Posts

   6,182


 2. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   13

  • Posts

   60,893


 3. உடையார்

  உடையார்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   11

  • Posts

   21,979


 4. கிருபன்

  கிருபன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Posts

   26,677


Popular Content

Showing content with the highest reputation on திங்கள் 05 ஏப்ரல் 2021 in Posts

 1. இந்தக் கட்டுரையை சென்ற வருடம் இதே நாளில் எழுதியிருக்க வேண்டியது, கொரோனா வந்து திசைமாற்றி விட்டது. எழுத நினைத்த கட்டுரையை ஒரு வருடத்தின் பின்னர் வேறு விதமாக எழுதுகிறேன். ஐம்பதிலும் ஆசை என்பதில் எனக்கு உடைபாடில்லை. சென்ற வருடம் ஐம்பதாவது வயதை எட்டியிருந்தேன். முன்பெல்லாம் ஒவ்வொரு பத்தை எட்டும்போதும் வயதாகிக் கொண்டே போகிறதே எதையும் சாதிக்கவில்லையே என்ற விரக்தியும் எதிர்பார்த் இலக்குகளை எட்டவில்லையே என்ற கவலையும் தோன்றும். இப்போது ஆறுதலாக நான் கடந்துவந்த பாதையை யோசித்துப் பார்க்கும்போது பரவாயில்லையே என்று தோன்றுகிறது. எனது பாட்டனார் எனக்குச் சின்ன வயதில் தனது அனுபவங்களைக கதை போல் சொல்வார். பன்றி வேட்டையாடியது, வயலில் சூடு அடிக்கும்போது யானை வந்தது, சகோதரங்களுடன் முரன்பட்டு வேறு ஊர் சென்று கடின உழைப்பால் முன்னேறியது போன்ற பல கதைகள் சொல்வார். அன்று ஆவற்றைப் பெரிதாகக் காதில் வாங்கியதில்லை. அவர் சொன்னவற்றில் நினைவில் இருந்த சிலவற்றை பல வருடங்கள் கழித்து மீட்டபோது அவரைப்போல் எனக்கு சொல்லத்தக்கவாறு அனுபவங்கள் எதுவும் இல்லையே என்று தோன்றும். இப்போது அந்த ஏக்கம் இல்லை. இப்போது என்ன நிலையில் உள்ளேனோ அதைத் திருப்தியாக ஏற்றுக் கொண்டு அதனை மேம்படுத்தி எதிர்காலத்தைத் திட்டமிடுவதே புத்திசாலித்தனம் என்பதில் உறுதியாக உள்ளேன். வாழ்வதற்கு வாழ்க்கை இன்னும் ஏராளம் உள்ளது. அதற்கு எனது உடல் ஆரோக்கியம் முக்கியம். என்னுடைய உடலைக் கவனமாகப் பார்க்காவிட்டால் உள்ளத்தால் என்னை நிறைவாக உணர முடியாது. எனது இனம் நிலைக்க வேண்டுமானால் முதலில் நான் நன்றாக இருக்க வேண்டும். ஏனென்றால் எனது இனத்தில் நானும் ஒரு அங்கம். *** முன்பு ஒரு திரியில் ஓட்டப் பயிற்சி செய்வதாக எழுதியிருந்தேன். ஆரம்பத்தில் 15 நிமிடங்கள் - 2 கிலோமீற்றர் தூரம் ஓடினேன். ஓடி முடிந்ததும் மிகக் களைப்பாக இருக்கும். அதன்பின்னர் இன்னும் தூரம் ஓட வேண்டும் என்பதற்காக 3 கிலோமீற்றராக மாற்றிக் கொண்டேன். அது காலப்போக்கில் கடினமான பிரயத்தனத்துடன் 35-40 நிமிடங்களில் 5 கிலோமீற்றர்களாக ஆக மாறியது. அதுவே எனது அதி உச்ச எல்லை என்று நினைத்திருந்தேன். சில காலங்களின் பின்னர் படிப்படியாக நின்று ஓய்வெடுத்து ஒரு மணி நேரம் 7 கிமீ வரை ஓட முடிந்தது. இப்படியே சுமார் ஒரு வருடம் சென்றது. நான் இருக்கும் ஊரில் ஒரு உடற்பயிற்சி நிலைய உறுப்பினர்கள் சிலரைத் தற்செயலாக சந்திக்க நேரிட்டது. ஓட்டப் பயிற்சி செய்தால் இன்னும் முன்னேறலாம் என்று உற்சாகப் படுத்தினார்கள். அது நகரசபையால் நடத்தப்படுவதால் வருடத்துக்கு 75 யூரோ, முயற்சித்தும் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன். வாரத்தில் 3 நாள் பயிற்சி. மாலை 6.30 க்கு ஆரம்பிக்கும். வேலை காரணமாக வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் மட்டுமே பங்குபற்ற முடியும். 6 மாதப் பயிற்சியின் பின் 10 கிமீ ஓட்டப் போட்டி ஒன்றில் பங்குபெற முடிந்தது மட்டுமல்லாது சில மாதங்களுக்குப் பின்னர் அரை மரதன் ஓடும் அளவுக்கு வந்துவிட்டேன். முதலாவது 10 கிமீ போட்டி சரி, 50 வயதாகிறது ஒரு தடவை மரதன் ஓடினால் என்ன என்று தோன்றியது. மரதன் ஓடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு இருக்கும். ஓடியோ நடந்தோ தவழ்ந்தோ முடிவு எல்லை ஓட வேண்டும் என்பதே எனது இலக்கு. இந்த எல்லையைத் தாண்டுவதென்பது விவரிக்க முடியாத இனிய அனுபவம் என்று ஓடி முடித்தவர்கள் கூறிக் கேட்டுள்ளேன். சிலர் எல்லையில் காத்திருக்கும் தமது பிள்ளைகள், மனைவி அல்லது உறவினர்களைக் கட்டி அணைத்துக் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதைக் காணொலிகளில் கண்டிருக்கிறேன். ஆகவே கால்கள் சரியாக இயங்கும்போதே வாழ்க்கையில் ஒரு தடவை ஓடிப் பார்க்க முடிவு செய்தேன். எனக்குப் பயிற்சி தருபவராகிய ஸாஹிர் என்பவனிடம் சொன்னேன். மகிழ்ச்சியாக உற்சாகப்படுத்தினான். ஆனால் கடுமையான பயிற்சியைப் பின்பற்றினால் நான் நிர்ணயித்த இலக்கை விட நன்றாக ஓடலாம் என்றான். அதன்படி பரிசில் ஏப்ரல் 2020 இல் நடக்கவிருந்த சர்வதேச மரதன் போட்டியில் பதிவு செய்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 65 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். இது மரதன் வரலாற்றில் உலகில் அதிகம் பேர் பங்குகொள்ளும் மிகப் பெரிய போட்டியாகக் கருதப்பட்டது. போட்டிக்கு 4 மாதங்களுக்கு முன்னர் கடுமையான பயிற்சி ஆரம்பமாகியது. மழை குளிர் காற்று என்று எதையும் பார்க்க முடியாது. ஓட வெளிக்கிட்டால் ஓட வேண்டியதுதான். கிளப் உறுப்பினர்கள் 3 குழுவாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். முதலாவது குழு முயல் வேகத்தில் ஓடக் கூடியது. நான் 3 ஆவது ஆமை வேகக் குழு. நான் ஒரு தடவை முதல் முழுவோடு சேர்ந்து ஓடி ஆவஸ்தைப்பட்ட அனுபவம் இருந்ததால் அவர்களோடு சேர்வதில்லை. மழையிலும் பனி உறைந்த குளிரிலும் கொட்டும் வியர்வையுடன் அன்றொருநாள் மார்கழி மாதம் குளிர் மழை தூறிக்கொண்டிருந்தது, சிலர் பயிற்சிக்கு வரவில்லை. வேகமாக ஓடுபவர்களே அதிகமாக இருந்தனர். பழைய உறுப்பினர் ஒருவவன் அன்று வந்திருந்தான். அவன் பெயர் பிரெடெரிக், கரிபியன் தீவைச் சேர்ந்தவன். தனது ஊரில் சில காலம் தங்கிவிட்டு பிரான்சுக்குத் திரும்பியிருந்தான். அன்றைய இருளில் அவனது முகம் சரியாகத் தெரியவில்லை. அதிகம் நின்று பேசிக் கொண்டிருந்தால் குளிரில் நடுங்கத் தொடங்கும் ஆகவே மெதுவாக ஓட்டத்தை ஆரம்பிப்போம் என ஸாஹிர் கூறிவிட்டு பிரெடெரிக்கை அறிமுகப்படுத்தி நீங்கள் இருவரும் மட்டுமே இரண்டாவது முழுவில் பயிற்சி செய்யப் போகிறீர்கள் என்று கூறி நாங்கள் ஓட வேண்டிய பாதையையும் வேக மாற்றங்களையும் அவசரமாக் விளக்கிவிட்டு முதல் குழுவுடம் பறந்துவிட்டான். நானும் பிரெடெரிக்கும் தனியே நின்றிருந்தோம். ஓரிரு வார்த்தைகள் பரிமாறிக் கொண்டு ஓட ஆரம்பித்தோம். வீதியின் மின் வெளிச்சத்தில் சில நிமிடங்கள் மௌனமாக ஓடிக் கொண்டிருந்தோம். பிரெடெரிக் மெதுவாக ஓடுவதற்கே சற்றுச் சிரமப் படுவதாகத் தோன்றியது. 15 நிமிடங்களுக்குப் பிறகு வேகத்தைச் சற்றே அதிகரிக்க வேண்டும் ஆனால் வேகம் அதிகரித்ததாகத் தெரியவில்லை. 30 நிமிடத்தின் பின் வேகம் அடுத்த கட்டத்தை அடைய வேண்டும். ஆனால் அவன் கொஞ்சம் மூச்சு வாங்குவது தெரிந்தது. பேசாமல் முதல் குழுவோடு ஓடியிருக்கலாம் என்று தோன்றியது. பேச்சு வாக்கில் உனக்கு எத்தனை வயது என்று கேட்டேன். 71 என்றான். ஒரு கணம் எனது நாடி நரம்புகள் எல்லாம் செயலிழந்து அதிர்ச்சியிலிருந்து மீழ சில வினாடிகள் ஆனது. வாயிலிருந்து அப்படியா, நன்றாக ஓருகிறாய் என்ற வார்த்தைகள் மட்டுமே வந்தது. ஓடுவதற்கு வயது எல்லை கிடையாது என்பதை அன்றுதான் புரிந்து கொண்டேன். இன்றுவரை பிரெடெரிக் எனக்கு மரியாதைக்குரிய நண்பனாகவும் அறிவுரை கூறும் ஆசானாகவும் இருக்கிறான். படத்தில் இடது பக்கத்தில் பிரெடெரிக் பயிற்சி தொடர ஆர்வம் அதிகரிக்க இலக்குகளும் மாறிக்கொண்டிருந்தன. மரதன் ஆரம்பமாவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. *** ஓட்டப் பயிற்சியோ போட்டியோ ஏனைய விளையாட்டுகள் போல் போட்டி மனப்பான்மையுடன் அமைவதல்ல. ஒவ்வொருவரும் தமது தகமைக்கேற்ப தாங்களே ஒரு வரயறையை அல்லது தமது சொந்த இலக்கை வைத்து ஓடுவதால் மனதளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. இன்னொருவர்போல் ஓடவேண்டும் என்ற போட்டி மனப்பான்மையும் ஏற்படாது. மரதன் போட்டியிலும் 50 ஆயிரம் பேர் ஓடினால் அதில் முதல் 100 பேருக்குள்தால் சரியான போட்டி இருக்கும். ஏனையவர்கள் தமது சொந்த இலக்கை வைத்தே ஓடுவார்கள். ஆகவே 5கிலோமீற்றர் ஓடும் ஒருவர் ஒருவர் தன்னால் 10 கிலோமீற்றர் ஓட முடியவில்லையே என்ற கவலை தேவையில்லை. உடல் அமைப்பும் இவ்வாறுதான். எல்லோருக்கும் உடல் அமைப்பு ஒரே மாதிரி இருக்காது. என்னை விட உயரம் மிகக் குறைந்த ஒருவர் என்னைவிட மிக வேகமாக ஓடுகிறார். அதேபோல் என்னைவிட எடை கூடிய ஒருவர் என்னைவிட வேகமாக ஓடுகிறார். அதற்காக நான் இந்த இருவரையும் விட வேகமாக ஓட முடியவில்லையே என்று ஏங்க முடியாது. ஓடுவதால் உள்ள நன்மைகளில் முக்கியமானவை சில வேக ஓட்டத்தின்போது இதயம் அதிகமான இரத்தத்தினை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதால் இதயத் தசைகள் வலுவடைந்து இதயம் விரிவடைந்து ஒரே இதயத்துடிப்பில் அதிகமான இரத்தைதை உடலுக்கு வழங்கம் ஆற்றலைப் பெற்றுக் கொள்ளும். இதன் மூலம் இதயத்துக்கும் வேலைப்பழு குறைந்து நீண்ட காலம் இயங்கும் ஓடும்போது கால்கள் தரையில் படும்போது ஏற்படும் மைக்க்ரோ அதிர்வுகளால் தசைகளும் எலும்பும் சிறிய சிதைவுகளுக்குள்ளாகொன்றன. பின்னை ஓய்வின்போது சிதைவுகள் மறுசீரமைக்கப்பட்டு தசைகளும் எலும்புகளிம் புத்துயிர் பெறுகின்றன இரத்தத்தில் மேலதிக சீனியும் கொலஸ்ரரோலும் சக்தியாக எரிக்கப்படும் போட்டி மனப்பான்மையற்ற பயிற்சியாதலால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். ஒவ்வொரு பயிற்சியின்போதும் ஓடும்போது ஏற்படும் களைப்பு சோர்வு ஏக்கம் தளர்வு அவஸ்தை எல்லாவற்றையும் ஓட்ட முடிவில் மறந்து வர்ணிக்க முடியாத மகிழ்ச்சியை உணர முடியும் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும். இன்னும் பல உடலை அசைத்து அதிக நேரம் வேலை செய்கிறேன், ஆகவே உடற்பயிற்சி தேவையில்லை என்று நினைப்பது தவறு. இரண்டும் ஒன்றல்ல. 1 மணி நேர உடற்பயிற்சியினால் கிடைக்கும் நன்மைகள் உடலை வருத்திச் செய்யும் வேலையால் கிடைக்காது. *** ஆரம்ப ஓட்டப் பயிற்சி இது ஓட விருப்பம் இருந்தாலும் தயங்குபவர்களுக்கும் நாளைக்கு ஓடலாம் என்று இன்றுவர ஆரம்பிக்காமல் இருப்பவர்களுக்கும். முக்கிய குறிப்பு : உடல், இதயம் பலவீனமானவர்கள் உங்களது வைத்தியரின் ஆலோசனைக்குப் பின்னர் இதனைப் பின்பற்ற வேண்டும். சரியான சப்பாத்து உடை மற்றும் இதர உபகரணங்கள் இருந்தால்தான் ஓடுவேன் என்று நினைக்க வேண்டாம். இதையெல்லாம் பின்னர் பார்க்கலாம். முதலில் இருப்பவற்றை அணிந்து கொண்டு வெளியே வாருங்கள். எப்போது உங்கள் வயது, உயரம், நிறை, உருவம் எல்லாவற்றையும் விட்டு ஓட முன்வருகிறீர்களோ அதுவே உங்களது முதல் வெற்றி. உங்கள் உடையையோ உடலையோ ஓட்டத்தையோ பார்த்து யாராவது சிரிப்பார்களோ என்ற தயக்கம் சிறிதும் வேண்டாம். எல்லா அனுகூலங்களும் இருந்தும் ஓட்டத்தால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் புறக்கணித்து ஓடாதிருக்கும் கோடிக்கணக்கானவர்கள் மத்தியில் நீங்கள் ஓட முன்வந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். எடுத்த உடனேயே ஓட முயற்சிக்க வேண்டாம். தசைகளையும் இதயத்தையும் தயார்படுத்த வேண்டும். படிப்படியாகப் பயிற்சியை ஆரம்பிப்போம். நாள் 1 15 நிமிட வேக நடை அதைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் உங்களால் எவ்வளவு மெதுவாக ஓட முடியுமோ அவ்வளவு மெதுவாக ஓடுங்கள். அது வேகமாக நடப்பதை விட வேகம் குறைந்ததாகக் கூட இருக்கலாம். இந்த 10 நிமிடங்களை எட்ட முடியாமல் போனல் நீங்கள் மெதுவாக ஓடவில்லை என்று அர்த்தம். 10 நிமிடம் சாதாரண நடை நன்றாகச் சாப்பிட்டு நிறைய நீர் அருந்தி நன்றாகத் தூங்குங்கள். நாள் 2 பயிற்சி இல்லை நாள்3 1 மணி நேர வேக நடை நாள் 4 பயிற்சி இல்லை நாள் 5 15 நிமிட வேக நடை 30 நிமிட ஓட்டமும் நடையும். 1நிமிட மெதுவான ஓட்டம், 30 விநாடிகள் நடை என்பதைச் சுழற்சியாகச் செய்யுங்கள் 15 நிமிட நடை நாள் 6 பயிற்சி இல்லை நாள் 7 10 நிமிட வேக நடை விரும்பிய அளவு நேரம் மெதுவான ஓட்டம். கடைசி 1 நிமிடத்தை உங்களால் முடிந்தவரை வேகமாக ஓடுங்கள். 10 நிமிட நடை மெதுவாக ஓடும்படி வற்புறுத்தக் காரணம் அதிகமாகக் களைத்து அரைவாசியில் பயிற்சியை முடிக்கக் கூடாது என்பதற்காக. அத்துடன் மெதுவான ஓட்டம் என்பது ஓட்டப் பயிற்சியில் முக்கியமான அங்கம். மெதுவாக ஆரம்பிப்பது படிப்படியாக இதயத் துடிப்பை அதிகரிப்பதற்கு. சடுதியாக ஆரம்பித்தால் 10 நிமிடத்தில் களைப்பு ஏற்பட்டு பயிற்சியைத் தொடர முடியாமல் போய்விடும். தொடரும் நாட்களில் வேகத்தையும் நேரத்தையும் படிப்படியாக அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். *** வேகத்தை அதிகரிப்பதற்கான பயிற்சி இதும் ஏற்கனவே ஓரளவு ஓட முடியுமானவர்களுக்கானது. ஆரம்ப நிலையில் ஓடுபவர்களும் தாராளமாகச் செய்யலாம். பயிற்சியின் அங்கங்கள். A. Warm up : மிக மெதுவாக ஆரம்பித்து படிப்படியாக இதயத் துடிப்பை அதிகரித்து அதிக வேகம் எடுக்காமல் அதிக களைப்பு இல்லாமல் ஓடுவது. இது இதயத்தை சாதாரண நிலையில் இருந்து வேகத் துடிப்பிற்குத் தயார் படுத்துவது மட்டுமே. உங்கள் அதிகபட்ச வலுவில் 50-60% போதுமானது. B. மெதுவான ஓட்டம் : ஓட்டப் பயிற்சியில் இதுவும் மிக முக்கியமானது. இதயத் துடிப்பைக் குறைத்து தொடர்ச்சியாக சக்தியை உடலுக்கு வழங்குவது. மெதுவான ஓட்டத்தின் இறுதியில் களைப்பு உண்டாகக் கூடாது. C. தயார்படுத்தல் 1 - கால்களைப் பின்னால் மடித்து ஓடுதல். முன்னர் குறிப்பிட்டது போல இந்தத் தடவை கால்களை எந்த அளவு பின்னால் மடிக்க முடியுமோ அவ்வளவு மடித்து வேகமாகக் கால்கள அசைக்க வேண்டும். ஒவ்வொர அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். D. தயார்படுத்தல் 2 - முழங்கால்களை உயர்த்தி ஓடுதல். முழங்கால்களைச் சமாந்தரமாக மேலே தூக்கி வேகமாக ஓடுதல். ஒவ்வொரு அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். ஏறத்தாள நின்ற இடத்திலேயே ஓடுவது போன்றது. E. தயார்படுத்தல் 3 - கால்களை மடிக்காமல் ஓடுதல். முழங்கால்களை மடிக்காமல் கால்களை முன்னே மட்டும் உயர்த்தி வேகமாக ஓட வேண்டும். ஒவ்வொரு அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். கிட்டத்தட்ட நின்ற இடத்திலேயே ஓடுவது போன்று இருக்கும். இந்த 3 பயிற்சிகளும் (C, D, E) இந்த வீடியோவில் 1:22 முதல் 2:18 வரை உள்ளது. F. Jamping jack - இது உங்களுக்குத் தெரிந்திருக்கும். G. ஓய்வு : கை கால்களைத் தளர விட்டு ஆழமாகச் சுவாசித்தல். நீர் அருந்தலாம். H. Stretching - அவசியமில்லை. செய்வதாக இருந்தால் 2 மணி நேரத்துக்குப் பிறகு அல்லது அடுத்த நாள் செய்யலாம். இனி பயிற்சியை ஆரம்பிக்கலாம். நீங்கள் ஏற்கனவே நன்றாக ஓடுவதால் நேரடியாகவே இரண்டாவது நிலை பயிற்சிக்கே போகலாம். 1 வாரத்தில் 4 நாட்கள் செய்ய வேண்டியவை. பயிற்சி 1 15 நிமிட Warm up (A) 1 நிமிட ஓய்வு 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் C 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் D 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் E 30 வினாடிகள் ஓய்வு. நீர் அருந்தலாம். மேலே குறிப்பிட்ட 15 வினாடிப் பயிற்சிகளை மீண்டும் 2 தடவை செய்யுங்கள் மிகவும் களைப்பாக இருக்கும். 15 நிமிட மெதுவான ஓட்டம் B. பயிற்சி முடிவடைகிறது. அடுத்த நாள் கால்களில் வலி இருக்கும். ஒரு நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 2 10 நிமிட Warm up (A) 1 நிமிட ஓய்வு 1 நிமிட Jamping jack F 1 நிமிட மெதுவான ஓட்டம் B 1 நிமிட Jamping jack F 1 நிமிட மெதுவான ஓட்டம் B 30 நிமிட ஓட்டம். முதல் 10 நிமிடங்கள் உங்கள் உச்ச வலுவில் 60 வீதமாக இருக்க வேண்டும். அடுத்த 7 நிமிடங்கள் 70 வீதமாக அதிகரியுங்கள். அதற்கடுத்த 7 நிமிடங்கள் உங்களால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு ஓட வேண்டும் ஆனால் களைத்து ஓட்டத்தைக் கைவிடும்படியாக ஓடக் கூடாது. மீதி நேரத்தை மெதுவாக ஓடி முடிக்க வேண்டும். பயிற்சி முடிவடைகிறது. அடுத்த நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 3 interval running 20 நிமிட Warm up (A) 30 வினாடிகள் ஓய்வு. 30 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 30 வினாடிகள் வேகமான ஓட்டம். இந்த 30 விநாடி ஓட்டங்கள் இரண்டையும் 10 தடவைகள் நிற்காமல் மாறி மாறிச் செய்ய வேண்டும். வேகமான ஓட்டத்தின்போது 80-90 வீதமான உச்ச வலுவுடன் ஓடலாம். 10 தவடவை ஓடி முடிக்க முடியாது போனால் நீங்கள் 90 வீதத்துக்கு மேலான வலுவுடன் ஓடியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். மறுபடி இன்னொரு தடவை 30 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 30 வினாடிகள் வேகமான ஓட்டம். இந்த 30 விநாடி ஓட்டங்கள் இரண்டையும் 10 தடவைகள் நிற்காமல் மாறி மாறிச் செய்ய வேண்டும். 5 நிமிட மெதுவான ஓட்டம் B. பயிற்சி முடிவடைகிறது. மிகவும் களைப்பாக இருக்கும், அடுத்த 1 அல்லது 2 நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 4 விரும்பியபடி ஓட்டம் உங்க விருப்பத்திற்கேற்ப நேர எல்லை வைத்தோ தூர எல்லை வைத்தோ விரும்பிய வேகத்தில் ஓடலாம். இந்த 4 பயிற்சிகளையும் சுழற்சியாகச் செய்யுங்கள். *** ஐம்பதுக்கு வருவோம். பிள்ளைகள் வளர்ந்து விட்டனர். ஊரில் இருந்திருந்தால் பிள்ளைகளின் படிப்பு முடிந்தால் அவர்களுக்கான வேலை, திருமணம், செலவு பற்றியெல்லாம் நினைத்துக் கவலைப்பட வேண்டும். இங்கு அதொன்றும் இல்லை. பொருளாதார ரீதியாக சாதாரனமாக வாழ்வதற்கான தன்நிறைவை அடைந்துவிட்டேன். வேலையிலிருந்து ஓய்வு பெறும் எல்லை தொலைவில் தெரிகிறது. எனக்கான எதிர்காலத்தைத் திட்டமிட்டு விட்டேன். என்மேலுள்ல அழுத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவதுபோல் உணர்வு. சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் மனதில் இளமையுடனும் வாழ்க்கையைத் தொடர இதுவே பொற்காலம். நீங்களும் வாருங்கள் ஓடி வாழ்ந்திடலாம்.
  14 points
 2. சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் ஆர். அபிலாஷ் எனக்கு சீமானின் மேடை உடல் மொழி, பேச்சுத்திறன், அவருடைய சூழலியல், மாநில தன்னுரிமை குறித்த கருத்துக்கள் பிடிக்கும் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். திமுக எதிர்ப்பை அவர் கூவிக்கூவி விற்பதாலும் எனக்கு அவர் மீது கோபமில்லை. திமுக ஒழிப்பை அவர் தன் இலக்காகவும் வைக்கலாம். ஒரு கட்சியின் இலக்கு என்கிற விதத்தில் தப்பில்லை. ஆனால் இந்த மேற்பூச்சுகளை சுரண்டி எடுத்து விட்டால் சீமானிடம் ஒன்றுமில்லை என்பதே பிரச்சனை. இந்த புரட்சிகர கருத்துக்களும் சீமானுடைய சொந்த கருத்துக்கள் அல்ல என்பதே பிரச்சனை. அவர் கல்வி, வேலை வாய்ப்பு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு வைக்கும் மாற்றுகள் பற்றி பேசும் போது அவருடைய போதாமை, அவருக்குள் ஒளிந்திருக்கும் சமூக, பொருளாதார அறியாமை வெளிப்படுகிறது என்பதே பிரச்சனை. அதை விட ஆகப்பெரிய பிரச்சனை ஜனநாயக ஆட்சிமுறையில் அவருக்கு அடிப்படையிலேயே நம்பிக்கை இல்லை என்பது. இந்த சுவாரஸ்யமான வெறும் பேச்சால் அவர் இளந்தலைமுறையினரில் அரசியல் புரிதலோ சமூக வரலாற்று வாசிப்போ முதிர்ச்சியோ இல்லாதவர்களை ஈர்த்து வருகிறார், அவர் எதிர்காலத்தில் ஒரு கவனிக்கத்தக்க சக்தியாக வளர்ந்து விடலாம், (கமலைப் போன்றே) எதிர்காலத்தில் பாஜகவுக்கான கலாச்சார களத்தை அவர் தயாராக அமைத்திடலாம் என நினைக்கும் போது எனக்கு நிஜமாகவே கவலை ஏற்படுகிறது. சீமானின் கல்விக் கொள்கைக்கு முதலில் வருகிறேன். அவர் அரும்பு, மொட்டு, மலர் என ஒரு திட்டத்தை வைக்கிறார். இது மேம்போக்காக கேட்க ஏதோ மனிதாபிமான சிந்தனை கொண்ட புரட்சித் திட்டம் எனத் தோன்றும். ஆனால் அவருடைய பேச்சுக் கவர்ச்சியில் இருந்து வெளிவந்து என்னதான் அவர் சொல்ல வருகிறார் என ஊன்றி கவனித்தால் இது எவ்வளவு அபத்தமான ஆபத்தான கல்விக் கொள்கை என புரியும்: ஐந்தாம் வயது முதல் ஒரு குழந்தை முறையான கல்வியை ஆரம்பித்தால் போதும் என்கிறார். சரி தான். அடுத்து தான் விவகாரமே துவங்குகிறது - ஆங்கிலம், தமிழ், வரலாறு, அறிவியல், கணிதம் போன்ற அடிப்படை பாடங்கள் எவையும் கட்டாயமாக கற்பிக்க தேவையில்லை, இவற்றில் தேர்வு எழுதவும் அவசியம் இல்லை என்கிறார். அதாவது இந்த பாடங்களை electivesஆக மாற்றலாம் என்கிறார். அதுவும் தேர்வில்லாத தேர்வுப்பாடங்கள். கேட்க நன்றாக இருக்கிறதல்லவா, ஆனால் இங்கே தான் சிக்கலே. ஒரு குழந்தைக்கு ஆங்கிலம் வேண்டாம் என்றால் தமிழ் மட்டுமே படிக்கலாம். கணிதம், அறிவியல் கூட தவிர்த்து விடலாம் என்பது சீமானின் கொள்கை. எனில் நாளை இந்த குழந்தைக்கு வாழ்க்கையின் அடிப்படைகள் எப்படி புரியும்? நியூட்டனின் மூன்றாவது விதி என்றால் பெயரளவில் கூட புரியாமல் போய் விடும். கேல்குலேட்டர் இல்லாமல் சின்ன பெருக்கல் போட தெரியாமல் போய் விடும். வரலாறு படிக்காத ஒரு குழந்தைகளிடம் நாம் அனைவரும் ஆரியர்கள் என சங்கிகள் சொன்னால் அதை மறுத்துப் பேசும் அறிவு கூட இராது. தமிழ் மொழியின் வளர்ச்சியில் மாற்று மொழியை தாய்மொழியாய் கொண்டவர்களின் பங்களிப்பு என்னவென்று தெரியாது. பொன்னியின் செல்வன் படித்தால் அதில் ஏன் ஆழ்வார்க்கடியான் நம்பி மதப்போர் புரிகிறான் எனப் புரியாது. ஆங்கிலத்தில் பேசவோ எழுதவோ தெரியாத ஒரு குழந்தைக்கு இந்த உலகின் அறிவுச்செல்வங்கள் எப்படி போய் சேரும்? இதை ஏன் சீமான் வலியுறுத்துகிறார் என்றால் தன்னை கேள்வி கேட்காத ஒரு மூடக் கூட்டத்தை அவர் உருவாக்க விரும்புகிறார் என்பதும், அவருக்கு போதுமான முறையான கல்வி கிடைக்காததன் போதாமை இருக்கிறது என்பதையுமே காரணங்களாக காண வேண்டி உள்ளது. ஏனென்றால் மண்டையில் மசாலா உள்ள எந்த கல்வியாளனுமே இந்த அரும்பு, மொட்டு பின்னாத்தல்களை ஏற்க மாட்டான். சீமான் அடுத்து சொல்வதைப் பாருங்கள்: சின்ன வயதிலேயே என்ன திறனை, ஆர்வத்தை ஒரு குழந்தை வெளிப்படுத்துகிறதோ அதில் மட்டுமே அக்குழந்தைக்கு பயிற்சி அளிக்க வேண்டும், வேறு விசயங்களில் அதை ஈடுபடுத்த அவசியமில்லை என்கிறார். இதற்கு அவர் உதாரண்மாக காட்டுவது சச்சினையும் ஏ.ஆர். ரஹ்மானையும். ரஹ்மான் அடிப்படை பள்ளிக்கல்வி பெற்றவர். நவீன காலத்தின் அனுகூலங்களை அனுபவித்து தன் இசையை விரிவுபடுத்தியவர். அவரும் சரி, சச்சினும் சரி விதிவிலக்குகள். ஒரு குழந்தை சின்ன வயதில் பாட்டில் ஆர்வம் காட்டுகிறது என்பதற்காக பாட்டு மட்டுமே பயின்றால் போதும் என வளர்ப்பது ஆபத்தானது - ஏனென்றால் ஒருவருடைய திறன் என்பது வெளிப்பட்டு, அதில் முழுமையான ஈடுபாடும் தோன்ற ஒரு குழந்தைக்கு பதின்வயதைத் தாண்ட வேண்டி வரலாம் என உளவியல் கூறுகிறது. எட்டு வயதில் இசையில் ஆர்வம் காட்டும் ஒரு குழந்தை பதிமூன்று வயதில் விமானப் பயணியாக விரும்பலாம். பதினாறு வயதில் நிர்வாகவியல் படிக்க விரும்பலாம். அப்போது என்ன செய்வீர்கள்? அதுவரை வேறெதையுமே படிக்காத அந்த குழந்தையின் நிலை என்னவாகும்? அம்போவென தெருவில் விட்டு விடுவீர்களா? இதே பரிந்துரையைத் தான் பாஜகவின் புதிய கல்விக்கொள்கையும் வைக்கிறது - என்ன தேர்வுகளை சீமான் தவிர்க்கிறார், அதைத் தவிர அவருக்கும் சங்கிகளின் கல்விக் கொள்கைக்கும் வித்தியாசமில்லை. இதை அவர் குறிப்பிட்டு பெருமைப்பட்டு வேறு கொள்கிறார். கேவலமாக இல்லையா? மேலும் சங்கிகளின் குலக்கல்வி பரிந்துரையையும் சீமான் வேறுவடிவில் (தொழிற்கல்வி) முன்வைக்கிறார். அடுத்து சீமானின் வேலை வாய்ப்பு, வணிக, உற்பத்தி கொள்கைகளுக்கு வருவோம். இங்கு தான் அந்த பிரசித்தமான ஆடு, மாடு வளர்ப்பு கொள்கை வருகிறது. தமிழர்களின் பூர்வீக தொழில்களுக்கு நாம் மீள வேண்டும் என்கிறார். அது என்ன? கடலை மிட்டாய் செய்வதில் இருந்து பயிர்களை விளைவிப்பது வரை குறிப்பிட்டு இவற்றை செய்து வெளிநாட்டுக்கு உற்பத்தி செய்தால் நாம் பல மடங்கு வளர்ச்சியை பெறலாம் என்கிறார். இதற்கெல்லாம் சீமானுக்கு எந்த புள்ளிவிபர ஆதாரமும் இல்லை. தமிழ் நாட்டில் இருந்து பல லட்சம் கோடிகளுக்கு கடலை மிட்டாய், நீராகாரம், வேம்புக்குச்சி போன்றவற்றை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய எந்த வெளிநாட்டு எம்.என்.சியும் இன்னும் அவரை அணுகியதாக தெரியவில்லை. அவர் பாட்டுக்கு அடித்து விடுகிறார். யாரும் அறிவுசார் வேலைகளுக்கு போக வேண்டியதில்லை, கார் தொழிற்சாலைகளை வெளியேற்றுவோம், இங்கு எந்த அயல் தொழில்களுக்கும் இடமில்லை, “அண்ணாமலை”, “சூரிய வம்சம்” பாணியில் பால்விற்றும், பேருந்து ஓட்டியும் நாம் பெரும்பணக்காரர்கள் ஆகி விடலாம் என்கிறார். எந்த பொருளாதார, சமூக அறிவும் இல்லாத ஒரு மாக்கானால் மட்டுமே இப்படியெல்லாம் தனக்கு நிபுணத்துவம் இல்லாத துறைகளை சீர்திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளை தயக்கமின்றி சொல்ல முடியும். அதனால் தான் சொல்கிறேன் - சீமானுக்கு (நமது ஜியைப் போன்றே) சொந்த அறிவு இல்லை. ஏற்கனவே சொல்லப்பட்டதை கடன்பெற்று கண்ணை உருட்டி, மீசையை முறுக்கி, அங்கிங்கு திரும்பி போஸ் கொடுத்து, கையை நீட்டி முழக்கி நடித்துக் காட்டி பேசி கைதட்டு வாங்கத் தெரியும். அவருடைய சொந்த சரக்கை எடுத்து விடும் போது தான் இவர் ‘மிக ஆபத்தான ஒரு பேதை’ என நமக்குப் புரிகிறது. அடுத்து, அவருடைய ‘வடுகர்களை ஒழிப்போம்’ கொள்கைக்கு வருவோம் - தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தபட்ட சாதிகளின் பட்டியல் இணையத்தில் கிடைக்கிறது. அதைத் திறந்து பாருங்கள். நம்மிடைய வாழும் பற்பல சாதி மக்களின் தாய்மொழி தமிழ் மட்டுமல்ல, அது தெலுங்காக, சௌராஷ்டிராவாக, கன்னடாவாக, உருதுவாக வேறு மொழிகளாக உள்ளது. இவர்கள் பல தலைமுறைகளாக இங்கு இருப்பவர்கள். இங்கே உழைத்து, வரி செலுத்தி, வாக்களித்து நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கு, கலாச்சார, அரசியல் எழுச்சிக்கு பங்களித்தவர்கள். இவர்களா வந்தேறிகள்? சீமான் இயக்குநராக இருந்த போது அவர் தமிழர்களிடம் மட்டும் தான் பணியாற்றினாரா? அவருக்கு பெயர் பெற்றுத் தந்த “தம்பி” படத்தின் தயாரிப்பாளர் ஒரு கன்னடியர். “எவனோ ஒருவனை” தயாரித்தது வட இந்தியர். சீமானின் பட நாயகிகள் அனேகமாக வேற்று மொழிப் பெண்கள். வட இந்தியர்களை அடித்து துரத்தும் சீமானுக்கு சினிமா என்று வந்தால் மட்டும் அவர்களுடைய தயவு தேவைப்பட்டதா? கீர்த்தி ரெட்டி, சிவரஞ்சனி எல்லாரும் வடுகர்கள் அல்லவா? சினிமாவில் மட்டும் தனித்தமிழ் கொள்கை கிடையாதா? இல்லை, நீங்கள் வட இந்தியர்களை ஓட விடும் போது கோடம்பாக்கத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பீர்களா? இவர்கள் அந்நியர்கள், எந்த அதிகாரத்துக்கும் வரக் கூடாது என சீமான் சொல்வதை நிறைவேற்றினால் தமிழ்நாட்டின் கதி என்னவாகும்? ஒன்று சீமானுக்கு இங்கு வாழும் பலதரப்பட்ட மக்களின் மொழிப்பின்னணி பற்றி, அவர்களுடைய தாய்மொழி குறித்த புள்ளிவிபரங்கள் தெரியாது. அல்லது அவர்கள் சிறுபிள்ளைத்தனமாக உளறுகிறார். ஆனால் ஒருவேளை சீமானைப் போன்றவர்களிடம் ஆட்சி போனால் பாஜக ‘இஸ்லாமிய வந்தேறிகளுக்கு’, ‘இந்து விரோதிகளுக்கு’ சி.ஏ.ஏ முகாம்களை அமைப்பது போல சீமான் மொழிசார்ந்த வந்தேறிகளின் அடிப்படை உரிமைகளை பறித்து, அவர்களுக்கு முகாம்கள் அமைத்து சிறைவைப்பார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. பல பேச்சுகளில் அவர் இத்தகைய மக்களை சிங்களவருடன் ஒப்பிடுவதை கவனியுங்கள். சிங்களவர்கள் தமிழரை அழித்ததற்கு பழிவாங்குவோம் என்கிறார். எவ்வளவு ஆபத்தான பேச்சு இது. “வடமாநில தொழிலாளர்கள் நான் ஆட்சிக்கு வந்தால் பெட்டியை தூக்கிக் கொண்ட ஓட வேண்டியது தான்” என்று சிரிக்கிறார். அவர்கள் என்ன தப்பு செய்தார்கள்? அவர்கள் குறைந்த கூலிக்கு நமது பொருளாதார வளர்ச்சிக்கு நல்கும் பங்களிப்பு முக்கியமில்லையா? உழைக்கும் வர்க்கத்தை ஏதோ கொள்ளைக்காரர்களைப் போன்றா வர்ணிப்பது? சரி நீங்கள் இவர்களை துரத்திய பின் இதையே வேறு மாநில அரசுகள் அங்கு பணி செய்யும் தமிழர்களுக்கு செய்தால் என்னவாகும்? தாராவியில் உள்ள தமிழர்களை சிவசேனா ஆட்கள் சட்டமியற்றி வெளியேற்றினால் அவர்கள் எங்கு போவார்கள்? அவர்களுக்கு நீங்களா வேலை கொடுப்பீர்கள்? அவர்களுக்கு நீங்களா இங்கு வீடு கட்டித் தருவீர்கள்? வெளிமாநிலங்களில் இருந்து துரத்தப்படும் தமிழ் மென்பொருளாளர்களுக்கு, மருத்துவர்கள், வியாபாரிகளுக்கு என்ன வேலை தருவீர்கள்? கருப்பெட்டி, கடலைமிட்டாய் உற்பத்தியா? பால் கறப்பதா? இல்லை நீங்களே பரிந்துரைப்பது போல டீக்கடை வைப்பதா? ஏஸியில் உட்கார்ந்து, வசதியாக வேலை செய்து லட்சங்களில் சம்பாதிக்கிறவர்கள் எதற்கு பால்கறந்து, சாணி அள்ளி, டீ அடித்து அதே பணத்தை ஈட்ட வேண்டும்? உங்கள் ஆட்சியில் உண்மையில் அப்படி ஒரு புலம்பெயர்வு நடந்தால் வேலை இழந்து இங்கு வரும் நிலை ஏற்பட்டால் ஒரு பெருங்கூட்டத்துக்கு உடனடி வேலையளிக்க நமக்கு எந்த கட்டமைப்பும் இல்லை, அவர்கள் கடைசியில் சோறின்றி சாலையில் கிடந்து இரப்பார்கள் என்பதே உண்மை. மேடைக்கு மேடை பாஜகவை, மோடியை சீமான் விமர்சித்தாலும் அவர் மோடியை போன்றே ஆபத்தான, மனதளவில் ஹிட்லருக்கு இணையான ஒருவர் என்பதில் எனக்கு இப்போது சந்தேகமில்லை. மோடி ஒரு கற்பிதமான ஆதி இந்து தேசத்தை கனவு காண வைத்தால், அந்த அடையாள பெருமிதம் மூலம் வடமாநில வாக்குகளை வென்றால், சீமானோ அதே மாதிரி ஒரு கற்பிதமான பழந்தமிழ் நிலச்சுவாந்தார் சமூகத்தை மீளமைக்க முயல்கிறார், அது ஒரு பரிசுத்தமான உயர்வான சமூக நிலை என கதை விடுகிறார், அப்படி கதைவிட்டு வாக்குகளை வெல்லலாம் என கனவு காண்கிறார். இருவருமே நடைமுறைக்கு பொருந்தாத விசித்திர திட்டங்களை முன்வைத்து அரசியல் பண்ணுகிறார்கள்; இத்திட்டங்களின் விளைவுகள் குறித்த தொலைநோக்கு பார்வை இல்லாமல் இருக்கிறார்கள். இருவருமே மாற்றுத்தரப்புடன் விவாதம் செய்கிற, எதிர்கருத்துக்களை பரிசீலிக்கிற ஜனநாயக மாண்பு இல்லாதவர்களாக இருப்பதுடன் தமது தொண்டர்களையும் அவ்வாறே பயிற்றுவிக்கிறார்கள். இருவருமே பேசிப் பேசியே ஆட்சியைப் பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். இருவருமே அறிவியல், வரலாற்றுப் புரிதல் சற்றும் இல்லாதவர்கள். இருவருமே, முக்கியமாக, தன்னை சதா முன்னிறுத்துகிற தன்விருப்ப மனநிலை கொண்ட சர்வாதிகாரிகள். ஒரு உதாரணம் தருகிறேன்: ஒரு உரையில் சீமான் தன்னுடைய ஆட்சியில் நா.த.க செயல்படுத்தும் (தோன்றித்தனமான) முடிவுகளுக்கு எதிராக சிலர் நீதிமன்றம் போவார்கள் எனறு சொல்லி விட்டு “ஹா ஹா ஹா” என சிரிக்கிறார். அடுத்து அத்தகையோரை நாங்கள் ரோட்டில் வைத்து வெட்டுவோம் என்கிறார். அதாவது இவர்களை விமர்சிக்கும், கேள்வி கேட்கும், எதிர்த்து போராடும் யாரையும் படுகொலை செய்வார்களாம். இவருக்கு கைதட்டி ஆதரவு தரும் இளைஞர் கூட்டம் எவ்வளவு கொடூரமானவரக்ளாக இருக்க வேண்டும்? இப்போது ஆளும் அரசை விமர்சித்ததற்காக அந்த ஆளுங்கட்சியின் தொண்டர்கள் உங்கள் சகோதரனை, சகோதரியை, தாய், தந்தையை ரோட்டில் வைத்து வெட்டினால் இப்படி கைதட்டி மகிழ்வீர்களா? ஒரு காலத்தில் சீமானுடன் நெருக்கமாக இருந்த அமீர் அண்மையில் ஒரு பேட்டியில் பாஜகவினர், ஆர்.எஸ்.எஸ்காரர்கள் நா.த.கட்சியில் ஊடுருவி உள்ளதாக குறிப்பிட்டதை, சீமானும் பொன்.ராதாகிருஷ்ணனும் மறைமுக புரிந்துணர்வுடன், நட்புடன் அரசியல் செய்து வருவதாக சொன்னதை இங்கு குறிப்பிட வேண்டும். எனில் ஏன் நா.த.கட்சி பாஜகவை எதிர்க்கிறது? சீமான் கிடைத்த வாய்ப்பில் எல்லாம் மோடியை திட்டுவதும், ஒரு மனிதகுல விரோதி என அவரை வர்ணிப்பதும் ஒரு ஈடிபல் காம்பிளக்ஸ் என நினைக்கிறேன் - தந்தை உருவாக உள்ள மோடி மீது மகன் உருவான சீமானுக்கு உள்ள பொறாமையும், தந்தை உருவின் பிம்பத்தை மறுத்து அவரது அதிகாரத்தை தான் கைப்பற்ற வேண்டும் எனும் இச்சையே இங்கு வெளிப்படுகிறது. உள்மனத்தில் அவர் ஒரு ‘தமிழக மோடியாக’ உருவாகவே ஆசைப்படுகிறார். ஆனால் தந்தையின் இடத்தை அடைய விரும்பும் எந்த மகனையும் போல அதை ஒப்புக்கொள்ள விரும்பாமல் கசப்பாக வெளிப்படுத்துகிறார். சீமானுக்கெல்லாம் இவ்வளவு சீரியஸான பதிவு தேவையா என சிலர் கேட்கலாம் - நா.த.க ஒரு வளர்ந்து வரும் கட்சி, அது தன்னுடைய தொண்டர்களை விரிவுபடுத்தி வருகிறது, அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் வளரும் என்று புரிந்தே இதை எழுதுகிறேன். இதைப் போன்ற அபத்தமான கருத்துக்கள் அன்று எண்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ்ஸால் பேசப்பட்டு பொது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டன அல்லவா! ஆனால் அவை இன்று வளர்ந்து பாஜகவின் சித்தாந்தமாகி நம்மை அடிமைப்படுத்தவில்லையா? சீமான் ஒரு தமிழ் சாவர்க்கர். அவரை நாம் இப்போதே அடையாளம் கண்டு கிள்ளி எறிய வேண்டும்! பின்குறிப்பு: சீமான் குறித்து நான் இங்கு சொல்லி உள்ளவை தமிழ் தேசிய இயக்கம் மீதான என் விமர்சனம் அல்ல. தமிழ் தேசியம் மீது எனக்கு மரியாதையும் நம்பிக்கையும் உள்ளது. அதன் ஒரு சீரழிந்த பாசிச வடிவம் மட்டுமே சீமான் உளறிக் கொட்டுவது. http://thiruttusavi.blogspot.com/2021/04/blog-post_36.html
  4 points
 3. வேண்டாம் தாயே, நடையே போதும், கொரோணா அதிர்விலிருந்து இன்னும் லண்டன் மீளவில்லை
  2 points
 4. நிழலி மன்னிக்க வேண்டும். எனது புரிதல் அல்ல..... உங்கள் புரிதல் குறித்தே பேசுகிறோம். கிருபன் மற்றும் எனது நிலைப்பாட்டுக்கும், உங்களது நிலைப்பாடுக்கும் நிச்சயமாக வித்தியாசம் உண்டு. நீங்கள் வெளிப்படையாக நாதக எதிர்த்துக்கொண்டே, மட்டுறுத்து செய்வதால், எமக்கு வரும் சில சங்கடங்கள் நியாமானவை அல்லவா. நன்றி.
  2 points
 5. இதுவரை சொன்னது......! இதுதான் தினசரி நடப்பது .......!
  2 points
 6. நாங்கள் போட்ட பதில்கள் எப்படி என்றால் ஒரு இடத்தில் புள்ளிகள் சறுக்கினாலும் மற்ற இடத்தில் வரும் என்ற நோக்கில்.விடைகள் 90 வீதமானவை எனது மகளின் தேர்வு.இப்டியே விடுவம்.பாரப்போம்.நன்றி.
  2 points
 7. வேண்டாம், சில ஆய்வுகளின் படி, அதிகம் ஓடுவதும் சிலருக்கு முழங்கால் சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய தேவையை உருவாக்குகிறது. நாளுக்கு ஒரு மணித்தியாலம் வேக நடை போங்கள். சோறு, புட்டு, இடியப்பம், பாண் போன்ற அரிசி, மா, தானிய வகை உணவுகளை வாரத்துக்கு ஒருமுறை சிறிய அளவு என்று குறைத்து கொள்ளுங்கள். இரவு ஒரு பழம் மட்டும் சாப்பிட்டு தண்ணீர் குடியங்கள். காலையில் என்ன நிறை என்று நாளும் நெறுத்து பாருங்கள். ஒரு மாதத்துக்கு பிறகு நிறை குறைவதையும், உயர்இரத்த அழுத்தம் குறைவதையும் நன்கு தூங்க முடிவதையும் அவதானிப்பீர்கள். இந்த முறைகளில் இருந்து ஒரு வாரம் தவறினாலும் எல்லா பயனும் இழந்து போய் மீண்டும் நிறை கூடி, நோய்களும் வர தொடங்கும்.
  2 points
 8. 6அடியில ஒரு கிடங்கு வெட்டி வச்சிட்டுத்தான் நான் தொடங்கவேனும் .
  2 points
 9. நானும் அறிந்தேன். அந்த விவசாய திட்டத்தால் விவசாயம் செய்த தமிழர்கள் நன்மை அடைந்து செல்வந்தர்கள் ஆனார்கள். விவசாயம் செய்யாத தமிழர்களும் கூட்டமைப்பும் அந்த அரசின் மீது கடுமையான வெறுப்பில் இருந்தார்களாம். அடுத்த தேர்தலில் அந்த அரசு படு தோல்வி.
  2 points
 10. புலம் பெயர்ந்த சாதியம் March 28, 2021 — அ. தேவதாசன் — 1983 தைமாதம் ஒன்பதாம் திகதி பாரிசில் வந்து இறங்குகிறேன். ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா பயண விசா பெற்றுக்கொண்டு பிரான்சுக்குள் சட்ட விரோதமாக நுழைகிறேன். உள் நுழைவு என்பது லேசுப்பட்ட காரியமில்லை- உயிரை பணயம் வைத்தல் – அது ஒரு தனிக்கதை. திகில்க்கதை… நான் சவூதி போன்ற நாடுகளுக்கு போவதைப் போலவே பிரான்சுக்கும் வந்தேன். நான்கு ஆண்டுகள் வேலை செய்து உழைக்கும் பணத்தில் இரண்டு தங்கைகளை கரைசேர்ப்பது. மீண்டும் ஊரில் பணிபுரிந்த தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனவு சங்கத்தில் வேலையை தொடர்வது. இதுவே எனது திட்டம். நான் வரும்போது அரசியல் அகதியாக வரவில்லை. பொருளாதார அகதியாகவே வந்தேன். பிரான்சில் தங்கி வாழ்வதற்கும், தொழில் வாய்ப்பு பெறுவதற்கும் அரசியல் அகதியாக பதிவு செய்யவேண்யது அவசியம். அதனாலையே அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பம் செய்தேன். 1983 இனக்கலவரம், அதனைத் தொடர்ந்து தனி நாட்டிற்கான ஆயுதப்போராட்டம் போன்றவை இலங்கையை யுத்த பூமியாக மாற்றின. இதுவே என்னை நிரந்தர அரசியல் அகதியாகவும் மாற்றியது. நான் பிரான்ஸ் வந்த புதிதில் தமிழர்கள் மிக குறைவானவர்களே இருந்தனர். இதனால் எங்காவது ஒரு தமிழ் முகத்தை பார்த்தவுடன் நட்புக் கொண்டாடி விடுவோம். காரணம் தமிழ் தவிர்ந்த வேறு மொழிகள் தெரியாததும் பிரெஞ்சு மொழி அறவே தெரியாததுமாகும். தமிழர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஊர் தெருக்களை விசாரிக்க மறந்ததில்லை. ஆனாலும் அதை பெரிதுபடுத்திப் பார்க்கும் சூழல் அப்போது இருக்கவில்லை. நான் பிரான்ஸ் வரக்காரணமாக இருந்த அண்ணன் காசி, ரஞ்சினி அக்கா அவர்களிடமே வந்து சேர்ந்தேன். அது ஒரு சிறிய அறை, அதற்குள் ஏற்கனவே நண்பன் தங்கம் உட்பட ஐவர் இருந்தனர். நான் ஆறாவது ஆள். மிகுந்த சிரமத்தோடேயே பல நாட்கள் கழிந்தன. பின்னர் ரஞ்சினி அக்காவின் முயற்சியால் வேறு ஒரு வீடு எடுத்தோம். அதற்குள் பெடியங்கள் தனியாக வந்து விட்டோம். ஒரு சிறிய அறை, அதற்குள் சிறிதாக ஒரு குசினி, ரொய்லெற் இதை ஸ்டூடியோ என அழைப்பர். இதற்குள் ஏழுபேர் இருந்தோம். சில நாட்களில் பத்து பன்னிரண்டாகவும் கூடிவிடும். ஒரு போர்வைக்குள் நான்கு பேர் முடங்கும் நிலை. இவ்வேளைகளில் ஆண்களும் ஆண்களும் அணைத்தபடி சுகம் காண்பது ஒன்றும் புதினமில்லை. நமது அறையில் ரீ.வி, டெக் எதுவும் கிடையாது. படம் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டால் பாரிஸ் நகரில் பெல்வில் எனும் பகுதியில் ஒரு தமிழ் கடை இருந்தது, அங்கே ரீ.வி, டெக், தமிழ் படக் கசெட் வாடகைக்கு விடுவார்கள். அதை இரண்டு நாள் வாடகைக்கு நாம் காவி வந்து. படங்கள் பார்த்து மகிழ்வோம். மாதம் ஒரு முறையாவது இந்நிகழ்வு இடம்பெறும். இப்படியான நேரங்களில் சொல்லாமல் கொள்ளாமல் பல நண்பர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள். அப்போது சாப்பாடு பெரிய பிரச்சினை ஆகிவிடும். சினிமா பார்க்கும் ஆர்வத்தில் யார் சமைப்பது என்னும் குழப்பத்தில் இருக்கும்போது நண்பர்கள் பலர் வந்து விட்டால் சொல்லவா வேண்டும். சோறும், கோழிக்கறியும், பருப்பும் – தினமும் காலை, இரவு, பகல் என மூன்று நேரங்களும் இதுவே எமது உணவு. அதில் நண்பர்கள் அதிகமாக வந்து விட்டால் கறிக்குள் தண்ணீர் ஊற்றி பெரிதாக்கி விடுவோம். ஒருவருக்கு ஒரு இறைச்சித் துண்டு கிடைத்தால் அது அவரது அதிஷ்டம். அந்த சில வருடங்கள் யாரு என்ன சாதி என்பதை கண்டுகொள்ளாத காலம். ஒரே கோப்பையில் ஒன்றாக கூடிச் சாப்பிட்ட காலம். யாழ்ப்பாணமே ஐரோப்பாவுக்கு… பின்னர் இலங்கையில் யுத்தம் அதிகரிக்க, அதிகரிக்க யாழ்ப்பாணமே ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்தது. அதனால் எப்படியோ கஷ்டப்பட்டு தமக்கு தமெக்கென வீடுகள் எடுக்கத் தொடங்கினர். அண்ணன், தம்பி, மாமன், மச்சான், ஊரான், உறவு என தனித்தனி குடும்பங்களாக வீடுகள் அதிகரித்தன. அதோடு சேர்ந்து சாதிச்சமூகமும் தளிர் விடத்தொடங்கியது. அரபு ஆபிரிக்க நாட்டவர்களின் கைவசமிருந்த பாரிஸ் நகர உணவகங்களின் சமையலறைகள், குறைந்த விலையில் நிறைந்த சேவை என்பதற்கு, இணங்க தமிழ் இளைஞர்களின் கைகளில் மாறின. அரபு நாட்டவரின் பலசரக்கு கடைகள் தமிழர்கள் கைக்கு மாறின. அடையான் கடையென கேலியாக அழைக்கப்பட்ட கடைகள் தமிழர்களால் அடையாத கடைகளாகவே மாறிப்போயின. கடைகளின் வாடகைகளும், விலைகளும் இரட்டிப்பாக ஏறிப்போயின. இரவு, பகல் பாராமல், ஊண், உறக்கம் இன்றி பணமே வாழ்வென வாழ்வு முடங்கிப் போனது. சிலர் மன ஆறுதலுக்காகவும், சிலர் பெயர் புகழ்ச்சிக்காகவும், சிலர் ஊர் மக்கள் மீது கொண்ட பற்றின் காரணமாகவும், சிலர் தொழிலாகவும் ஊர்ச்சங்கங்களை உருவாக்கினர். யாழ்ப்பாணத்தில் உள்ள குக்கிராமங்களின் பெயரிலும் சங்கங்கள் அமைந்தன. ஊரில் உள்ள பாலர் பாடசாலையில் இருந்து பட்டப்படிப்புக்கு தேர்வாகும் பென்னம்பெரிய பாடசாலை வரை சங்கங்கள் உருவாகின. ஊரில் உள்ள குலதெய்வக்கோயில்கள் தவிர இந்தியாவின் பெரும்கடவுள்கள் அனைவரும் சிலையாகவும் சிற்பமாகவும் அவைகளுடன் கூடவே சிலைகளுக்கு பூசைகள் செய்ய அந்தணர்களும் வந்திறங்கினார்கள். ஒருபுறம் சாதி பேதமற்ற சமுத்துவ தமிழீழம் வேண்டும் என போராடியவர்களே, மறுபுறத்தில் சாதிச் சங்கங்களையும், கோயில்களையும் நடாத்திக் கொண்டிருந்தார்கள். ஊரில் மாட்டுக்கொட்டில் அளவு இருந்த கோயில்களெல்லாம் கோபுரமும் கலசமுமாக கொழுத்து வீங்கிவிட்டன. புலம்பெயர் தமிழர்களின் அன்பளிப்பால் வாங்கிய சாமிதூக்கும் வாகனங்கள் தூக்க ஆளின்றி துருப்பிடித்து கிடக்கின்றன. ஊரில் இருந்து வந்த கத்தோலிக்க பக்தர்களும், சைவப்பழங்களும் தங்கள் தங்கள் மதவழிகளில் நம்பிக்கை அற்றவராய் பைபிள் என்னும் ஒரு புத்தகத்தில் இருந்து உருவான பல விதமான சபைகளிலும் தங்களை இணைத்துக்கொண்டனர். புகையிரத நிலையங்களிலும் தெருக்களிலும் குழந்தை குஞ்சுகளுடன் நின்று மத உபதேசம் வழங்குகின்றனர். இவர்கள் தெருவில் போகும்போது வீட்டுக்கதவில் தமிழர் பெயரைக் கண்டால் கதவைத்தட்டி நேரடித் தரிசனமும் கொடுப்பர். ஒருநாள் எனது வீட்டுக் கதவையும் தட்டினார்கள். வணக்கம் சொன்னார்கள், நான் பதிலுக்கு அஸ்லாம் ஆலேக்கும் என்று சொன்னேன், திரும்பிக்கூட பார்க்கவில்லை கழன்று விட்டார்கள். இவர்களது கவர்ச்சிப்பேச்சு முஸ்லிம்களிடம் எடுபடாது என்பதுதான் இதற்குக் காரணம். இவர்களிடத்திலும் சாதிச்சபைகளும் உண்டு. ஆனாலும் ஒரு சிறப்பம்சமும் உண்டு. இந்துக்கோயில்களில் பிராமணர் என்கிற சாதியினர் மட்டுமே அர்ச்சகராக சமஸ்கிருத மொழியில் பூசை செய்ய முடியும். ஆனால் கிறித்தவ சபைகளில் எளிய சாதிகள் என ஒதுக்கப்பட்டோரும் போதகர்களாக வரமுடியும். இதற்காகவே பலர் சபைகளில் இணைந்தனர். ஒவ்வொரு ஊர்ச்சங்கங்கள், பாடசாலைச் சங்கங்கள், ஆலயச்சங்கங்கள் அனைத்திலுமே சாதிய விசம் கலந்தே கிடக்கிறது. (தொடரும்……) https://arangamnews.com/?p=4499
  1 point
 11. யாழுடன் எனது கோபம் தணிந்து வர சில காலம் எடுத்து விட்டது மீண்டும் வந்திருக்கின்றேன் மோகன் அண்ணா உங்களுக்கு நான் எப்போதும் சிறு துரும்பாக இருந்து உதவி செய்வதாகக் கூறிய வார்த்தைகள் தான் பல நாட்கள் எனது நினைவுகளில் வந்து சென்றது
  1 point
 12. நம்மில் பலரும் தமிழ்நாடு தேர்தலை உற்று நோக்கி வருகிறோம். உங்கள் கணிப்புகளை இங்கே பதியுங்கள் போட்டி விதிகள் 1) முடிவுத் திகதி 05/04/2021 2) முடிவுத் திகதிக்கு முன் எத்தனை முறையும் வாக்குகளிக்கலாம்.
  1 point
 13. சீமான் - ஒரு பார்வை எனும் திரி தமிழும் நயமும் பகுதியில் இருந்து செய்தி திரட்டி பகுதிக்கு நகர்த்தப்பட்டு திரியும் மூடப்பட்டுள்ளது.
  1 point
 14. கருணாநிதி.. எம் ஜி ஆர்.. வை கோ.. திருமாவளவன்.. ராமதாஸூக்கு எல்லாம்.. ஈழத்தமிழர் அரசியல் செய்ய அனுமதித்த எம்மவர்கள்.. சீமானுக்கு மட்டும்.. அதனை அனுமதிக்க வெறுப்புக்காட்டுவதேன். யாழ் களம்.. சீமான் வெறுப்புவாதத்துக்கு அளிக்கும் முக்கியத்துவத்துக்குப் பதிலாக.. சீமான் பேசும்.. நியாயங்களை பேசவும் இடமளிக்க வேண்டும்.
  1 point
 15. வெளிநாடுகளில்.. தமிழர்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறையே தவறு. பிள்ளை தம் சொல் கேளாமல் போயிடுமோ என்ற பயத்தில்.. பிள்ளைக்கு சேவகம் செய்யும் பெற்றோராக.. பயந்து நடுங்கும் பெற்றோராகவே அநேக வீடுகளில் தமிழர்கள் உள்ளனர். எங்க வீட்டில்... எனக்கு அறிவு வந்த காலத்தில் இருந்து.. நான் உண்ணும் உணவுக் கோப்பையில் இருந்து எல்லாவற்றையும் நானே தான் கழுவி வைப்பேன். நித்தம் குளியறை சென்றதும்.. அதனை விட்டு வெளியேறும் முன் உடனடி சுத்தம் செய்ய வேண்டும்.. அது தான் வீட்டில் பணிப்பு. எனது உடைகளை நானே தான் துவைப்பேன். எனது பாடப்புத்தகங்களை நானே தான் ஒழுங்கமைப்பேன். எனது உடைகளை நானே தான் மடித்து வைப்பேன். சிறிய வயதில் அயன் பண்ணுவதை தவிர.. வளர்ந்த பின் அயனும் நானே தான் செய்வேன். இப்படிப்பல. ஆனால்.. புலம்பெயர் நாடுகளில்.. மாடு மாதிரி வளர்ந்த பிள்ளைகளுக்கு வாசிங் மிசினில் உடுப்புப் போடுவது கூட அம்மாமார். சாப்பிடுற கோப்பை கழுவிறது அம்மாமார். அறை துப்புரவு செய்வது அம்மாமார். ஏன் பாடசாலை உபகரணங்களை தேடிக் கொடுத்து.. பாடசாலைக்கு கொண்டு போய் விடுவது வரை அம்மாமார். இப்படித்தான்.. புலம்பெயர் நாடுகளில்.. அதிக ஓவரா பிள்ளை வளர்க்கினம். இறுதியில்.. அந்தப் பிள்ளைகள் ஒரு வேலையில் கூட ஒழுங்கா தாக்குப்பிடிக்க முடியாமல்.. தவிப்பதை பார்க்கிறோம். காரணம்... பெற்றோர் பிள்ளைகளின் சுயத்தை அவர்களுக்கான சுய வாழ்க்கை ஒழுங்கை தீர்மானிக்கும் வகைக்கு வழிநடத்தாமையே. கோழி கூட ஒரு காலத்துக்கு தான் குஞ்சுக்கு உணவூட்டும். அதன் பின்.. குஞ்சே தான் கிளறி.... உணவு தேடிச் சாப்பிட்டாகனும். ஆனால் நம்மவர்கள்.. ஏதோ காணாததை கண்ட கணக்கு. இது தான் இப்பிரச்சனைக்கு முக்கிய காரணமே தவிர... வேலைப் பகிர்வு என்பது.. இயல்பானதாக அமைய வேண்டுமே தவிர.. மனைவிக்கு செய்யுறன்.. கணவனுக்கு செய்யுறன் என்ற பாகுபாட்டு அடிப்படையில் அமைவது ஆரோக்கியமான குடும்ப நிலைக்கான அறிகுறியல்ல.
  1 point
 16. இதே யாழ் களத்தில் இதே கிருபன் அண்ணர்.. சீமான் இராமசாமியை கொண்டாடித் திரிந்த போது.. சீமானின் பேச்சுக்களை தேடி தேடி ஒட்டி வந்ததையும் மறக்கக் கூடாது. இன்று சீமான் தமிழகத்தில் தமிழர் உணர்வை தமிழ் தேசிய உணர்வை உயர்த்திப் பிடிப்பதால்.. இராமசாமியின் போலித் திராவிடத்தை எதிர்ப்பதால்.. கிருபன் அண்ணா உட்பட அந்த வகையினர்.. சீமானை.. எதிர்ப்பது ஒன்றும்.. வியப்பல்ல. சீமான்.. ஈழம் எடுத்துத் தருவார்.. சீமான்.. தேசிய தலைவரை புகழ்ந்து திரிவார் என்பதற்காக அல்ல.. அயலில் உள்ள தமிழனின் சோகத்தை தமிழகம் அறியாத வகைக்கு செய்த திராவிடப் பிசாசுகளை விட.. சீமானின் தமிழ் தேசியம்.. கொஞ்சம் என்றாலும்.. நாம் தமிழராக தமிழர்களை இணைக்கும் என்ற ஒரு நப்பாசை 2009 க்குப் பின் மேலுழுந்துள்ளது.. தெற்காசியாவில்.. தமிழர்கள் மொழியால்.. இனத்தால்.. ஒருங்கிணையாமல்.. சிங்கள பெளத்தத்தின் சீன ஆதரவு பேரினவாத ஆக்கிரமிப்பை எதிர்கொள்வது என்பது அசாத்தியமானது.
  1 point
 17. மருதங்கேணியா ???? அப்ப எங்களுக்கு பொய்யா சொன்னவர்???? மனைவியுடன் இருப்பவரும் குறிப்பு அனுப்பலாம். ஆனால் மனைவியின் குறிப்பும் சேர்த்து அனுப்பவேணும் .
  1 point
 18. போட்டியை சிறப்பிக்க வாத்தியாரிடமும் கேட்டுள்ளேன். வேறு சிலரிடமும் தனிமடல் மூலம் கேட்டுள்ளேன்.
  1 point
 19. இதே கேள்வி ஏன் மிச்ச நேரங்களில் உங்களுக்கு வருவதில்லை? கமலஹாசனை பற்றி எதிர்மறையாக கிருபன் ஒரு தொடர் திரியையே இணைத்து வருகின்றார், திமுகவின் ஊழல்பற்றி எத்தனை பதிவுகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன, திமுக ஈழத்தமிழர் விடயத்தில் செய்த துரோகம் பற்றி இந்த 3 மாதங்களில் எத்தனை தடவைகள் எழுதப்பட்டுள்ளன, பிஜேபி யின் அடிப்படைவாதம் பற்றி பல திரிகள் இங்குள்ளன. நாம் தமிழர் தவிர்ந்த ஏனைய கட்சிகளைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஒரு புரிதலும், நாம் தமிழர் கட்சி பற்றிய எதிர்மறையான விமர்சனத்துக்கு இன்னொரு விதமான புரிதலும் உங்களுக்கு உள்ளது. நன்றி.
  1 point
 20. கிருபன் நான் சொல்வது இப்படி நடந்திருந்தால் இவ்வளவு காலமும் பொத்தி வைத்திருப்பார்களா? சீமானின் குரலில் நடித்துக் காட்டிய எத்தனையோ ஒலி ஒளி நாடாக்கள் பார்த்திருப்பீர்கள்.அப்படி இருந்தும் இது ஏதோ சிக்கிவிட்டது என்பதற்காக பொய் என்று தெரிந்தாலும் விடமாட்டீர்கள் என்பது தெரிகிறது.
  1 point
 21. ரோகின்யா மக்களை அவர்களின் பூர்விக இடத்தில் இருந்து சுட்டும் வெட்டியும் இனவழிப்பு செய்து உலகெங்கும் அகதிகளாக உண்ண உணவின்றி இருக்க இடமின்றி அலைந்தார்கள் அப்போது இதே மியான் மர் பெருங்குடிகள் அந்த மக்களை பார்த்து இரக்கப்படவோ அல்லது நியாயப்படுத்தவோ இல்லை இன்று சொந்த நாட்டு பெருங்குடி மக்களையே அதே நாட்டு ராணுவம் சகட்டு மேனிக்கு சுட்டு 500 மேற்பட்டவர்கள் மேலே அனுப்பி வைத்துள்ளது காலம் கடந்து அழுது பலனில்லை . அதே போலத்தான் சிங்களமும் வெகுவிரைவில் தனது இரத்த பசியை சொந்த மக்கள் மீதே காட்டும் நாள் நெருங்கிக்கொண்டு உள்ளது மியான்மருக்கும் இலங்கைக்கும் பின்புல உதவி சைனாதான் தற்போதே பொருளாதார நெருக்கடி எல்லை கடந்து விட்டது பல இறக்குமதிகள் நிறுத்தப்பட்டுள்ளன காரணம் அந்நிய செலவாணி தீர்ந்து போகும் நிலையில் கடந்த இரண்டுமாதங்களுக்கு மேல் வாகன சில்லு தட்டுப்பாடு இருக்கும் பழைய டயர்களை வைத்து சமாளிக்கிறார்களாம் .
  1 point
 22. பிரான்ஸ் Cergy Paris Université பல்கலைக்கழகத்தில் தமிழர்களுக்கு பெருமை சேர்த்தது மட்டுமல்லாது, தமிழர்களுக்கு நீதி கோரிய இளம்தலைமுறை பெண் I Sharuka Thevakumar, 1er prix du jury et prix des internautes MT180 CY Cergy Paris Université 2021 https://www.facebook.com/watch/?v=293520048888512
  1 point
 23. கிருபன் ஜீ, செந்தமிழன் சீமான்... தமிழகத்தில், தவிர்க்க முடியாத சக்தி என்று, காலம் கடந்து உணர்ந்தமை.. வரவேற்கத் தக்க மாற்றம்.
  1 point
 24. புலம் பெயர்ந்த சாதியம் – 2 April 5, 2021 — அ. தேவதாசன் — என்னோடு அறையில் ஒன்றாக தங்கி ஒன்றாக உணவருந்தி இருந்த பல நண்பர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியாது. சிலர் மட்டும் ஒரு குடும்பம் போலத்தொடர்கிறோம். இதன் பின்னணியிலும் சாதியே ஒட்டி இருக்கிறது. நான் பிரான்சுக்கு வரமுன்னர் இருந்த நட்புக்களில் சிலரே இன்றுவரை எனது நன்மை தீமைமைகளில் ஒன்றறக் கலக்கும் உறவாக தொடர்கிறார்கள் . பிரான்சில் தமிழ் ஈழ விடுதலைப்பேரவை எனும் அமைப்பில் 1983ல் அண்ணன் காசி. ஊடாக என்னை இணைத்துக்கொண்டேன். பாலகிருஷ்ணன், சபாலிங்கம், உமாகாந்தன், கொம்மினிஸ் பாலா ஆகியோரது நட்பு அங்கிருந்தே உருவானது. பேரவையால் வெளியிடப்பட்டு வந்த தமிழ் முரசு பத்திரிகை ஆரம்பத்தில் கையெழுத்து பிரதியாகவும் பின்னர் தட்டச்சு பிரதியாகவும் வெளியானது. எனக்கு ஓரளவு ஓவியம் வரையத் தெரிந்த காரணத்தால் அட்டைப்படம் வரைதல், கட்டுரைகளுக்கான தலைப்புகள் எழுதுதல் போன்ற வேலைகள் ஊடாக சங்க நிர்வாக சபையில் நானும் ஒருவனானேன். அச்சங்க நிர்வாகம் சாதிய ரீதியான பாரபட்சம் இல்லாமல் செயல்பட்டதை அறிவேன். அவர்களது வீட்டுக்குள் எப்படி இருந்தார்கள் என்பதை நானறியேன். சமூகக் கட்டமைப்பு அவர்களை மட்டும் விட்டுவைக்குமா? கருத்தோவியங்கள் பக்கம் சிந்திக்க வைத்ததில் தமிழ் முரசுக்கு முக்கிய பங்குண்டு. பாலஸ்தீன விடுதலைக் கருத்தோவியங்கள் போன்றவற்றை சேகரித்து தரும் சபாலிங்கம் மிகப்பெரிய உற்சாக ஊட்டியாக இருந்தார். உமாகாந்தன் நெருங்கிய நண்பன் ஆனான். நேரத்தை மதிக்கத்தெரியாத சமூகத்தில் நேரமும், நிர்வாகமும் மனித சக்திக்கு அவசியம் என்பதை செயலில் கற்பித்தவர் பாலகிருஷ்ணன். சாதி மதம் அற்ற சமத்துவ ஈழம் அமைய வேண்டும் என்பதை பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அடிப்படைக் கொள்கையாக வைத்திருந்தனர். இதனாலேயே பின்னாளில் eprlf இயக்கத்திற்கு பேரவை சார்பெடுக்கக் கூடிய சூழல் உருவானது. அது சாதாரணமாக நடந்து விட்ட காரியமல்ல. பேரவை ஆரம்பித்த காலத்தில் இருந்ததை விட 1983க்குப் பின்னர் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் மிக வேகமாக வளர்ந்தன. அதன் தாக்கம் பேரவையையும் தாக்கியது. பிரான்சில் வாழும் தமிழர்களில் அதிகமானோர் அறிந்து வைத்திருக்கும் அளவுக்கு பேரவை இயங்கியது. மாதம் ஐநூறு புத்தகங்கள் விநியோகம் செய்தோம். அதில் சில பக்கங்கள் பிரெஞ்சு மொழியிலும் தகவல்கள், செய்திகள் எழுதபட்டிருந்தன. நாம் பேரவை சார்பில் இலங்கை இனப்பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்து மக்களை சந்திக்கும் போதெல்லாம் நீங்கள் எந்த இயக்கத்திற்கு சார்பு என்கிற கேள்விகள் தொடர்ச்சியாக எழ ஆரம்பித்தன. இதனால் எமது அமைப்பு ஏதோ ஒரு இயக்கத்திற்கு சார்பு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்பன தனிநபர் இயக்கங்களாக கருதப்பட்டு பேரவையினால் உடனேயே நிராகரிக்கப்பட்டன. மீதியாக இருந்த EROS, EPRLF, TELO ஆகிய மூன்று இயக்கங்களில் எது என்பதே விவாதத்துக்கு எடுக்கப்பட்டது. இதிலும் பெரும்பான்மை உறுப்பினர்கள் EPRLF கருத்தியல் ரீதியாகவும், செயற்பாட்டு ரீதியாகவும் பேரவையின் கருத்தோடு ஒன்றிப்போய் உள்ளதால் EPRLF அமைப்புக்கு சார்பெடுப்பது என்பதே தீர்மானமாகியது. அங்கேதான் மாற்றுக்கருத்து, ஜனநாயகம், சர்வதேசியம் போன்ற பல விடயங்களை கற்கும் வாய்ப்பு ஏற்பட்டதுடன், பல புதிய நண்பர்களும் கிடைக்கக்பெற்றனர். பேரவை ஈபிஆர்எல்எவ் இயக்கத்திற்கு சார்பெடுத்தபோது தோழர் புஷ்பராஜா அவர்கள் கட்சியின் மத்திய குழுவால் பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அப்போதுதான் அவர் எனக்கு அறிமுகமானார். பின்னாளில் நாங்கள் உறவினரானோம். இவரோடு அசுரா, கலாமோகன், அருந்ததி போன்ற பலர் அடங்குவர். இதில் அசுரா மட்டுமே அன்று தொட்டு இன்றுவரை எல்லா காலங்களிலும் இணைந்து வேலை செய்பவராகவும் குடும்ப நண்பராகவும் தொடர்கிறார். ஆயுதப்போராட்ட இயக்கங்கள் ஆரம்பித்த காலங்களில் சாதியத்தின் வீரியத்தை தெளிவாக புரிந்து வைத்திருக்கவில்லை. சோசலிச ஈழமோ, தமிழீழமோ அமைந்தால் சாதியம் அற்ற சமூகம் அமைந்துவிடும் என பெரும்போக்காக நினைத்ததுண்டு. ஒரு இயக்கத்தை சாதியின் பெயரோடு இணைத்து ஏளனமாக அழைக்கப்பட்டதும், அதைத்தொடர்ந்து அந்த இயக்கம் அழிக்கப்டடதுமே அதன் பின்னால் உள்ள சாதியத்தின் வீரியத்தை புரிந்து கொள்ள முடிந்தது. Eprlf விடுதலைப்புலிகளால் அழித்தொழிக்கப்பட்டது. அதன் விளைவு பிரான்சிலும் எதிரொலித்தது. சுரேஸ் பிரேமச்சந்திரன் கட்சியின் தலைவர் பதவி ஏற்று சில காலங்களிலேயே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சரணடைந்தார். இதை பிரான்சில் வேலை செய்த தோழர்கள் யாவரும் ஏற்றுக்கொள்வில்லை. அதிர்ச்சியில் உறைந்தனர். தொடர்ச்சியாக இயங்கி வந்த என்போன்ற தோழர்கள் அடுத்து என்ன செய்வது என குழப்பிக் கொண்டிருந்தோம். “தமிழ் முரசும்” நின்று போயிருந்த காலம், அதனால் “புன்னகை” எனும் பெயரில் ஒரு சிற்றிதழை கொண்டு வந்தேன் அதுவும் ஒன்றோடு நின்றுபோனது. ஜேர்மனியில் சில நண்பர்களால் உருவாக்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு ஜனநாயகத்தின் குரலாகவும், மாற்றுக்கருத்தை பேசுவதாகவும், பாசிசத்திற்கு எதிரான குரலாகவும் செயற்பட்டு வந்தது. எனது கருத்தோடு அவர்களது கருத்தும் ஒத்துப்போனதால் அவர்களது சந்திப்புக்களில் தொடர்சியாக பங்கெடுத்துவந்தேன். ஐரோப்பாவில் தொடர்ச்சியாக நடைபெற்ற இலக்கியச் சந்திப்பு போன்ற உரையாடல்களே சாதியம், தேசியம், மதம், பெண்ணியம், தலித்தியம், மாற்றுக்கருத்து என பல விடயங்களை தேடலுக்குள்ளாக்கியது. பெரியார், அம்பேத்கர் போன்றோரையும் படிக்கத்தூண்டியது. விவாதங்களை உருவாக்கியது. இலக்கியச் சந்திப்பு ஊடாக பல ஆற்றல் மிக்க தோழர்கள் அறிமுகமானார்கள். செயற்பாட்டாளர்களாக, எழுத்தாளர்களாக, ஆய்வாளர்களாக, சிறுபத்திரிகை வெளியீட்டாளர்களாக, பெண்கள் சந்திப்பு நடாத்துபவர்களாக, விமர்சகர்களாக, நடிகர்களாக, ஓவியர்களாக, இப்படி பல்வேறு துறைகளின் வல்லுனர்கள் எனது நண்பர்களானார்கள். விஜி, ஞானம், நிர்மலா, ராகவன், உமா,முரளி, ஜெபா, கற்சுறா, லக்ஷ்மி, கலைச்செல்வன், இன்பா, சுசீந்திரன், றஞ்சி, ரவி, பத்மபிரபா, புதுமைலோலன், வனஜா, சின்ரா, நித்தியானந்தன், சிவராஜா, கேகே ராஜா, ஷோபாசக்தி, சுகன், சரவணன், கீரன், காண்டீபன், றங்கன், முத்து, தமயந்தி, அசோக், கரவைதாஸ், கலையரசன், அரவிந் அப்பாத்துரை, வாசுதேவன், றயாகரன், மனோ, பௌவுசர், தர்மினி இப்படி பலரோடு இணைந்த எனது பங்களிப்பானது அற்புதமான அனுபவங்கள். பிரான்சில் முப்பத்தியெட்டு வருடங்கள் பல்வேறு அமைப்புகளில் இணைந்து செயற்பட்டமையால் சாதியம் எவ்வளவு நுணுக்கமாக செயற்படுகிறது என்பதை அனுபவபூர்வமாக அறிந்து வந்துள்ளேன். யாழ்ப்பாண குடாநாட்டின் குடியிருப்புகள் யாவும் சாதிச் சமூகங்களாகவே பிரிந்து கிடக்கின்றன. அதனாலேயே ஒருவரின் சாதியை அறிய வேண்டுமெனில் ஊர், தெரு, வட்டாரம் போன்றவைகளை விசாரித்தால் யார் என்ன சாதி என்பதை இலகுவாக அறிந்து விடலாம். உதாரணமாக நான் பிறந்து வளர்ந்தது வேலணை. வடமாகாணத்தில் ஏழு தீவுகளில் ஒரு தீவான வேலணையும் அடக்கம். அதனால் நான் ஒரு தீவான். வேலணையானது மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு எனப்பிரிக்கப்பட்டுள்ளது. அதில் பன்னிரண்டு வட்டாரங்களும் உள்ளன. அங்குள்ள வாழ்விடங்கள் சாதிளாகவே இன்றும் பிரிக்கப்பட்டுள்ளன. தெற்கிலிருந்து முக்கியர், பள்ளர், நளவர், கோவியர் , தச்சசர், வெள்ளாளர் என வரிசைபப்படுத்தப்பட்ட வாழ்விடங்கள் இப்போதும் அப்படியேதான் காட்சி தருகின்றன. முப்பது வருட ஆயுதப்போராட்டம் பத்துவருட இடப்பெயர்வு இவைகளால் கூட இதை அசைக்க முடியவில்லை. ஐரோப்பாவிலும் குறிப்பாக பிரான்சிலும் அதே மனநிலையை அறிவேன். ஆரம்பத்தில் நம்மவர்கள் பல மாடிக் கட்டிடத்தொடர்களிலேயே வீடுகள் வாங்க ஆரம்பித்தனர். அவர்கள் வீடு பார்க்க வரும்போது அந்த மாடியில் ஆபிரிக்கர்கள், அரேபியர்கள், சீனர்கள் இருப்பது பிரச்சினை இல்லை. ஆனால், தமிழர்கள் இருந்தால் அவர்கள் எந்த சாதியை சேர்ந்தவர்கள் என்பதை விசாரித்து விட்டே வீடு வாங்குவர். தட்டத்தவறி ஏற்கனவே பள்ளரோ, நளவரோ அந்த மாடியில் குடியிருந்தால், அவர்கள் அந்த இடத்தை தவிர்த்து விடுவார்கள். அந்தளவுக்கு நிறம், மொழி, தேசம் யாவற்றையும் பின்தள்ளி விட்டு சாதி மட்டும் முன்செல்கிறது. இதேவே தமிழரின் முதன்மை கலாச்சாரம் என்பேன். எனது நண்பன் ஞானம் தானும் ஒரு வீடு வாங்க வேண்டும் என்பதால் பல வீடுகள் பார்த்தார். Bondy என்னும் இடத்தில் வீடு பார்க்க சென்றபோது முன்னர் இவரோடு ஒரே அறையில் வசித்த நண்பரை தற்செயலாக காண்கிறார். பரஸ்பரம் சுகம் விசாரித்துவிட்டு வீடு பார்க்க வந்த செய்தியை சொல்கிறார். பதிலுக்கு அந்த நண்பர் “ஏன் இதுக்குள்ள வீடு பாக்கிறியள் இதுக்குள்ள நளவரொல்லோ கனபேர் இருக்கினம்” என்கிற தனது நல்லெண்த்தையும் பகிர்ந்து விட்டு நகர்ந்தார். ஞானம் என்னைக் கண்டு “உங்கட யாழ்ப்பாணத்தார் என்னடாப்பா இப்படி சொல்கிறார்” எனச்சிரித்தார். “இப்படி அவர் சொல்லாவிட்டால் தான் ஆச்சரியம்” என பதில் சொன்னேன். ஐரோப்பாவில் வெள்ளையர்களது ஆட்சியில் அவர்களது நிர்வாகத்திற்குள் வாழ்ந்தாலும் ஒடுக்கப்பட்ட சாதியினர் எனச்சொல்லப்படுவோர் இன்னொரு தமிழரிடம் தனது சாதியை மறைத்து வாழ்வதே பண்பாடாகவுள்ளது. எனது மைத்துனர் முறையானவர் ஜேர்மனியில் வாழ்கிறார். அவரது வீட்டிற்கு ஒருநாள் சென்றேன். பல வருடங்களுக்கு பின்னர் அவரோடு உரையாடுவது மகிழ்ச்சி, அவரும் ஊரில் என்னைப்போலவே தெங்கு பனம்பொருள் சங்கத்தில் பணிபுரிந்தவர். அந்த அனுபவங்கள் பற்றி நான் பேச்சு எடுக்கும்போது, பதட்டப்பட்ட அவர் அதனை தொடர வேண்டாமென கண்ணசைவால் காட்டினார். என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் கதையை மாற்றிக் கொண்டேன் காரணம் அவர் பக்கத்தில் இன்னுமொரு நண்பரும் இருந்தார். அந்த நண்பர் சென்றவுடன், ‘தாசன் (என்னை தாசன் என்றே அழைப்பார்) அவை பெரியாக்கள் நான் எனது ஊரை மறைத்து அறிமுகப்படுத்தியிருக்கிறேன் நமது சங்கத்தைப் பற்றி கதைத்தால் என்னை கண்டுபிடித்து விடுவார் நட்பு கெட்டுவிடும்’ என விளக்கம் கொடுத்தார். நானும் கூட ஆரம்பத்தில் அப்படித்தான். (தொடரும்..) https://arangamnews.com/?p=4570
  1 point
 25. எனக்குத் தெரிந்த ஒருவர் முழங்கால் சத்திர சிக்கிச்சைக்கு உள்ளாகி 3 வாரங்கள் மருத்துவ மனையிலும் பின்னர் 4 மாத ஓய்விலும் இருந்து குணமாகி இப்போது ஓடுகிறார். உங்களது மருத்துவர்தான் கூற முடியும் நீங்கள் ஓடுவது நல்லதா இல்லையா என்று. பொதுவாக வாரத்தில் 2 தடவை 1 மணிரேர ஓட்டம் கால்களைப் பாதிக்காது. நன்றி சாமானியன். என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும் ஓட்டப் பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கும். ஐரோப்பாவில் மட்டுமல்ல எமது நாட்டிலும் இதனை ஊக்குவிப்பது நல்லது. இங்கு உள்ளதை விட அங்குள்ளவர்களுக்குத்தான் நேரம் தாராளமாகக் கிடைக்கும்.
  1 point
 26. என்னதான் குத்தி முறிந்தாலும் அந்த கடைசி நேர விளம்பரங்கள் திமுகவின் வோட்டு வங்கியை சிதைக்கும் பிரம்மாஸ்திரம் .
  1 point
 27. என்னையா இதுகளை முன்னரே சொல்லியிருக்கக் கூடாதா? பெருமையாக இருக்கிறது.பாராட்டுக்கள்.
  1 point
 28. ஆ..... தல.... ஓடோடி வந்த உங்களை ஏமாற்றி விட்டேன்? அட சும்மா ஒரு ஜோக் தான்....
  1 point
 29. வைகறை பொழுதின் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
  1 point
 30. பல நாட்களின் பின் நல்லதொரு பதிவை வாசிந்த மகிழ்ச்சி, உங்கள் அனுபவ பகிர்வு பலரை மாற்றும், காலை மாலை நடைதான் இனி செல்ல குட்டியுடன் ஓடி பழக வேண்டும், அவளுக்கும் உடலுக்கு நல்லது நன்றி உங்கள் பகிர்வுக்கு & வாழ்த்துக்கள்
  1 point
 31. உறையாளை கத்தியை உருவி ஓடியாந்தா, சும்மா வைக்கேளுமே... அதுதான்...
  1 point
 32. தமிழில் எழுதப்படும் துணையெழுத்துகள், எழுத்துருக்கள் ஆகியவற்றை விளக்கும் படம் இது. ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு போன்றவற்றை அறிந்திருக்கும் நம்மில் பலர்க்கு மேல்விலங்கு, கீழ்விலங்கு என்றால் என்னென்று தெரியாது. தமிழில் எழுதப்படும் ஒவ்வோர் எழுத்தும் எத்தகைய சேர்ப்பு வடிவத்தினால் அதன் வரிசையில் இன்னோர் எழுத்தாகிறது என்பதனை நாம் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு சேர்க்கப்படும் ஒவ்வொரு வரைவுக்கும் ஒரு பெயர் இருக்கிறது. அவற்றையும் அறிந்திருக்க வேண்டும். மூத்த தமிழாசிரியர்களிடையே அறியப்பட்டிருக்கும் தமிழ்த் துணையெழுத்துப் பெயர்கள் புதிய தலைமுறைத் தமிழாசிரியர்களிடையே பரவலாகாமல் இருப்பதைப் பார்க்கிறோம். அவர்களுக்கும் நம் மாணாக்கர்களுக்கும் தமிழ்த் துணையெழுத்துப் பெயர்களின் பட்டியல் உதவும். துணையெழுத்துகளை விளக்கி எழுதப்பட்ட கட்டுரை நக்கீரன் இணையத்தில் சொல்லேர் உழவு பகுதியில் வெளியாகியிருக்கிறது. அதனையும் படித்துத் தெளிவுறுக
  1 point
 33. கத்தியுடன் வந்து எட்டி நின்று பார்த்திட்டு போயிருப்பார்கள்.
  1 point
 34. புதுவாழ்வு தரும் இயேசுவின் உயிர்ப்பு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில், மீண்டும் உயிரோடு வந்ததை நினைவுகூரும் ஈஸ்டர் பெருவிழாவை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று (4-ந்தேதி) கொண்டாடுகின்றனர். இயேசுவின் உயிர்த்தெழுதல் குறித்து பைபிள் தரும் நிகழ்வுகளை இங்கு காண்போம். இந்த உலகில் இறையரசை நிறுவும் நோக்கத்துடன் மனித உரிமையை நிலைநாட்ட குரல் கொடுத்த இறைமகன் இயேசுவை, ரோமானியரின் உதவியுடன் யூத சமய குருக்கள் சிலுவையில் அறைந்து கொன்றனர். உண்மையையும், உரிமைக்குரலையும் கொன்று புதைத்து விட்டதாக பெருமைப்பட்ட அவர்களால், ஒரு நாள் கூட நிம்மதியாக உறங்க முடியவில்லை. கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு மீண்டும் உயிரோடு வந்து விடுவாரோ என்ற பயம் அவர்களைத் தொற்றிக் கொண்டது. இயேசு சிலுவையில் இறந்த வேளையில், எருசலேம் கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை, இரண்டாக கிழிந்தது யூத குருக்களின் மனதில் ஒரு திகிலை ஏற்படுத்தி இருந்தது. கடவுளையும் மனிதரையும் பிரித்துக் கொண்டிருந்த அந்த திரை கிழிந்தது, இயேசு இறைமகனாக இருப்பாரோ என்ற எண்ணத்தை அவர்கள் உள்ளத்தில் விதைத்தது. அவராக உயிர்த்தெழுந்து வரவில்லை என்றாலும், அவரது சீடர்களே உடலை மறைத்து வைத்துவிட்டு வதந்தியைப் பரப்பலாம் என்ற சந்தேகம் அவர்களுக்கு.சனிக்கிழமை காலை ஆலோசனை நடத்திய யூத சமயத் தலைவர்கள்,இயேசுவின் கல்லறைக்கு முத்திரையிட்டு, காவல் வீரர்களைக் கொண்டு அதை கவனமாக காவல் காக்க ஏற்பாடு செய்தார்கள். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின்னல் வடிவில் வந்த வானதூதர் இயேசுவின் கல்லறையைத் திறந்தார். இடி சத்தத்தில் மயங்கி விழுந்த காவல் வீரர்கள் எழுந்து பார்த்தபோது, கல்லறைக்குள் இயேசுவின் உடலை காணவில்லை. யூத சமயத் தலைவர்களுக்கும் இந்த தகவல் சென்றது. ஆனால் அவர்கள், இயேசுவின் உடல் திருடப்பட்டதாக வதந்தியைக் கிளப்பி விட்டனர்.மறுபக்கம் இயேசுவின் உடலுக்கு நறுமணப் பொருட்கள் தடவி மரியாதை செலுத்த வந்த பெண் சீடர்கள், கல்லறையை மூடியிருந்த கல் அகற்றப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு தோன்றிய வானதூதர்கள், இயேசு மரணத்தை வென்று உயிர்த்தெழுந்து விட்டதாக அறிவித்தனர். இந்த செய்தியை அப்பெண்கள் இயேசுவின் மற்ற சீடர்களிடம் கூறியபோது அவர்கள் நம்பவில்லை. அவ்வேளையில் கல்லறை அருகில் நின்று அழுது கொண்டிருந்த மகதலேன் மரியாவுக்கு இயேசு காட்சி அளித்து, தாம் உயிரோடு இருப்பதை உறுதி செய்தார். இந்த நிகழ்வை,“ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்,எழுந்து யிர்த்தனன் நாள்ஒரு மூன்றில்;நேசமா மரியாமக்த லேநாநேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்”என்று மகாகவி சுப்ரமணிய பாரதியார் பாடியுள்ளார்.இதையடுத்து, யூத சமயத் தலைவர்களுக்கு பயந்து, பூட்டிய அறைக்குள் தஞ்சம் அடைந்து கிடந்த சீடர்களுக்கு முன்பும் இயேசு தோன்றினார். சிலுவையில் அறையப்பட்டதால், தமது கைகளிலும் கால்களிலும் விலாவிலும் ஏற்பட்ட காயங்களை அவர்களுக்கு காட்டினார். இதனால் அவர் உயிர்த்து எழுந்தது உண்மை என்பதை சீடர்கள் உணர்ந்து கொண்டனர். அவர்களுக்கு நாற்பது நாட்களாக பலமுறை காட்சி அளித்த இயேசு, அவர்களோடு பந்தியில் அமர்ந்து உணவு உண்டதாகவும், தமது நற்செய்தியை அறிவிக்க அவர்களைத் தயார் செய்ததாகவும் பைபிள் கூறுகிறது.உயிர்த்தெழுந்த நாற்பதாம் நாளில் ஒலிவ மலைக்கு சீடர்களை அழைத்து சென்ற இயேசு, உலகெங்கும் சென்று தம்மைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க கட்டளையிட்டார். அவரை கடவுளாக நம்புவோருக்கு, தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் ஞானஸ்நானம் வழங்குமாறும் ஆணையிட்டார். உலகம் முடியும் வரை தமது சீடர்களோடு இருப்பதாக வாக்களித்த இயேசு, அவர்கள் கண் முன்பாகவே விண்ணகத்திற்கு ஏறி சென்றார். அப்போது அவர்களுக்கு தோன்றிய வானதூதர்கள், உலகின் முடிவில் மக்களுக்கு தீர்ப்பு வழங்கும் நீதியுள்ள அரசராக இயேசு மீண்டும் வருவார் என்று கூறி மறைந்தனர்.எருசலேமுக்கு திரும்பிய சீடர்கள், இயேசு கிறிஸ்து விண்ணகத்தில் இருந்து வந்த இறைமகன் என்றும், மரணத்தை வெற்றி கொண்ட ஆண்டவர் என்றும் மக்களிடம் போதித்தனர். சீடர்களின் வார்த்தைகளைக் கேட்ட யூதர்கள் பலரும் இயேசுவை கடவுளாகவும், தங்கள் மீட்பராகவும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் அனைவரும், நட்புறவுடன் வாழ்வதிலும், உடைமைகளை பொதுவாக கொண்டு பிறரது துயர் துடைப்பதிலும் ஆர்வமாக செயல்பட்டனர். சீடர்கள் வழியாக ஆண்டவர் இயேசு பல்வேறு அற்புதங்களை செய்தார். இதனால், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது.இந்த வேகமான வளர்ச்சி யூத சமயத் தலைவர்களின் கண்களை உறுத்தியது. சீடர்களை பிடித்து, அடித்து உதைத்த அவர்கள், உயிர்த்த இயேசுவின் பெயரால் போதிக்கக்கூடாது என்று கட்டளையிட்டனர். அப்போதும், யூத குருக்களால் இயேசு உயிர்த்தெழவில்லை என உறுதியாக கூற முடியவில்லை. பலவித துன்பங்களை சந்தித்தாலும், இயேசுவுக்கு சான்று பகர்வதை சீடர்கள் நிறுத்தவில்லை. இயேசுவின் பெயரால் அதிக அளவில் அற்புதங்கள் நிகழ்ந்ததால், பாலஸ்தீன் நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கும் கிறிஸ்தவம் விரைந்து பரவியது. இயேசுவின் சீடரான புனித தோமா அந்த காலத்திலேயே தமிழகத்திற்கு வந்து பலரையும் கிறிஸ்தவர்களாக மனந்திருப்பினார்.இதனிடையே, பாலஸ்தீன் நாட்டில் கிறிஸ்தவ சமயத்தை தீவிரமாக எதிர்த்த சவுல் என்ற இளைஞர், கிறிஸ்தவர்களை அழித்தொழிக்க கொலை வெறியுடன் செயல்பட்டார். இயேசுவை கடவுளாக ஏற்றுக்கொண்ட பலரையும் கைது செய்து சிறையில் அடைக்க செய்தார். ஸ்தேவான் என்ற கிறிஸ்தவரின் கொலைக்கு உடந்தையாக இருந்தார். தாமாஸ்கஸ் நகருக்கு செல்லும் வழியில், திடீரென வானத்தில் இருந்து வீசிய பேரொளியால் அவர் குதிரையுடன் தடுமாறி விழுந்தார்.அப்போது, “சவுலே, சவுலே ஏன் என்னை துன்புறுத்துகிறாய்?” என்ற குரல் ஒலித்தது. “ஆண்டவரே நீர் யார்?” என்று திருப்பிக் கேட்டார் சவுல். “நீ துன்புறுத்தும் இயேசு நான்தான்” என பதில் வந்தது. அத்துடன் கிறிஸ்தவர்கள் மீதான அவரது கொலைவெறி அடங்கியது. பவுல் என்ற பெயருடன் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று, “இயேசுவே ஆண்டவர்” என்று போதித்தார்.ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்த காரணத்தாலே, கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்கு பின் என்று உலக வரலாறு பிரிக்கப்பட்டுள்ளது. நரபலி உள்ளிட்ட கொடூரங்கள் கிறிஸ்தவ சமயத்தின் பரவல் காரணமாகவே முடிவுக்கு வந்தன. உலகெங்கும் அடிமை முறை ஒழிந்ததற்கும், ஆண் - பெண் சமத்துவம் ஏற்படவும், தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை கேட்டு பெறவும் கிறிஸ்தவ போதனைகளே வித்திட்டன. இவ்வாறு, இயேசுவின் உயிர்ப்பு இந்த உலகில் கொண்டு வந்த மாற்றங்கள் ஏராளம். இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்போர் அனைவருக்கும் மாற்றமும், புதுவாழ்வும் கிடைப்பது உறுதி என்று பைபிள் கூறுகிறது. அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்!தமிழகத்திற்கு வந்த இயேசுவின் சீடர் :உயிர்த்த இயேசு முதல் முறை தம் சீடர்களுக்கு தோன்றியபோது, பன்னி ருவரில் ஒருவரான தாமஸ் அங்கு இல்லை. “ஆண்டவரை கண்டோம்“ என்று மற்ற சீடர்கள் கூறியபோது, “அவ ருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும் பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட் டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்று தாமஸ் பதில் கூறினார். ஒரு வாரத்துக்கு பிறகு, தாமசும் இருந்தபோது இயேசு தம் சீடர்கள் முன்பு தோன்றினார்.அப்போது அவர் தாமஸைப் பார்த்து, “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. சந்தேகப்படாமல் நம்பிக்கைகொள்” என்றார். உடனே தாமஸ் இயேசுவைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்று கூறி அவரை பணிந்து வணங்கினார். இயேசு அவரிடம், “நீ என் னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார். இந்த நிகழ்வு இயேசுவின் உயிர்ப் புக்கு உறுதியான சான்றாக அமைந்தது.அப்போது தாமஸ் பெற்ற நம்பிக்கையே, பல ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து இந்தியாவுக்கு வந்து இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் ஆர்வத்தை அவருக்கு வழங்கியது. கி.பி.52ல் கேரளாவுக்கு வந்திறங்கி ஏராளமான மக்களை மந்திருப்பிய தாமஸ், ஏழு இடங்களில் திருச்சபையை நிறுவினார். பின்னர் தமிழகத்தின் பல இடங்களில் இயேசுவைப் பற்றி போதித்த தாமஸ், இறுதியாக சென்னைக்கு வந்ததாக வரலாறு கூறுகிறது. சைதாப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் நற்செய்தி அறிவித்த தாமஸ், இங்குள்ள பலரையும் இயேசுவை கடவுளாக ஏற்கச் செய்ததாக அறிகிறோம்.கி.பி.72ல் செயின்ட் தாமஸ் மவுன்டில் செபம் செய்து கொண்டிருந்த அவரை, கிறிஸ்தவத்தின் எதிரிகள் சிலர் ஈட்டியால் குத்தி கொலை செய்தனர். தாமஸின் உடல், சாந்தோம் பேராலயம் உள்ள இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள அவரது கல்லறையை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து கிறிஸ்தவர்கள் வருகின்றனர். இயேசுவின் சீடர்களை அவருக்காக உயிரைக் கொடுக்கும் அள வுக்கு தூண்டியது அவரது உயிர்த் தெழுதலே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.-டே.ஆக்னல் ஜோஸ். https://www.maalaimalar.com/devotional/christianity/2021/04/03141642/2503755/Jesus-Christ.vpf
  1 point
 35. வீதி ஒழுங்கை... பின் பற்றவும்.
  1 point
 36. கண்ணீர் கவிதை பகிர்விற்கு நன்றி தோழர்..
  1 point
 37. வணக்கத்திற்குரியவர். உங்கள் வரிகள் அதை அழகாக்கியுள்ளது..
  1 point
 38. என் பாட்டி சொல்லுவார், இந்தக்காலத்திற் தான் விவசாயிகள் கல்வீட்டை கட்டி(ண்டா)னார்கள் என்று. சோம்பறிகள், கைநீட்டி இரந்துண்போர் பெருகிவிட்டனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. வரிசையில் நின்று பங்கீட்டு அட்டைக்கு ஒரு இறாத்தல் பாண் என்கிற திட்டத்தை கொண்டு வந்து, உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்ததன் (பலன்)வந்த விளைவு அது.
  1 point
 39. கருனா, பிள்ளையான் போன்றோருக்கு ஆளுக்கு 100 எருமைகள் வாங்கிக் கொடுத்தால் மேச்சல் தரைகள் பாதுகாக்கப்படலாம்.
  1 point
 40. எம் மனதில், நினைத்தவற்ரை... கவிதையாக, வடித்தமைக்கு நன்றி. எமது... வணக்குத்துக்கு உரிய, ஜோசப் ஆண்டகை அவர்களின் நினைவுகள் எம்முடன் என்றும் இருக்கும்.
  1 point
 41. வேட்பாளருக்குஆரத்தி எடுத்து பணம் பெறுதல் , பெண்கள் பிரச்சாரத்திற்கு சென்றால் தனி காசு , தேர்தல் பணிக்குழு .. என்டு எலக்செனில் மனைவிமார்கள் பிசியாகத்தான் இருக்கினம் .. இஞ்ச வீட்டில் சும்மா இருக்கும் கணவன்மார் செய்து பார்க்க வேண்டிய பதிவு .. பகிர்ந்தமைக்கு நன்றிகள் தோழர்..
  1 point
 42. இறந்தபின்...... காலை நேரம்., அலுவலகத்திற்குக் கிளம்பியாக வேண்டும். நான் செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம் அய்யோ.... என்ன ஆயிற்று எனக்கு? நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? ஒரு நிமிடம் யோசிக்கிறேன்.... நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது, என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, நான் நன்றாகத் தூக்கிவிட்டேன் என்று நினைக்கிறேன். காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? மணி பத்தாகிவிட்டது என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம். அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான். அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்...... என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள். பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோகம் கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு சனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள். என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள். நான் இறக்கவில்லை., இங்கே இருக்கிறேன் என்று கத்தினேன். ஆனால், என் குரல் யாருக்கும் கேட்கவில்லை. என் உடல் அருகே நான் நிற்பது கூட யாருக்கும் தெரியவில்லை. அய்யோ என்ன செய்வேன் நான்? எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பேன்? நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன். "நான் இறந்துவிட்டேனா?" நான் என்னையே கேட்டேன். இறப்பு இப்படித்தான் இருக்குமா?.... என் மனைவியும், அம்மா, அப்பாவும் அடுத்த அறையில் அழுதுகொண்டிருந்தார்கள். என் மகனுக்கு என்ன நடக்கிறது என்பது விளங்கவில்லை. எல்லோரும் அழுவதால், அவனும் அழுது கொண்டிருக்கிறான். நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். அவனை பிரிந்து என்னால் இருக்கவே முடியாது. என் மனைவி, பாசமும், பரிவும் கொண்டவள். எனக்கு தலைவலி என்றால் கூட அவள் அழுவாள். அவளை பிரியப்போவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அம்மா, நான் ஒரு குழந்தைக்கு தந்தையானபோதும், இன்னமும் என்னை குழந்தையாகவே பார்ப்பவள். அப்பா, கண்டிப்பானவர் என்றாலும், அந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் பாசமே நிறைந்திருக்கும். இதோ, ஒரு மூலையின் நின்று அழுது கொண்டிருப்பவன், அட.. என் நண்பன். பகையை மறந்து வந்திருக்கிறானே? சிறு தவறான புரிதல் எங்களை பிரித்துவிட்டது. இருவரும் பேசி ஓராண்டுக்கு மேலாகிறது. அவனிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. அருகில் சென்று அவனை அழைக்கிறேன். ஆனால், என் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. என் உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான். ஆம்.. நான்தான் இறந்துவிட்டேனே. அருகில் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்களைப் பார்க்கிறேன். "ஓ கடவுளே! எனக்கு இன்னும் சில நாட்கள் கொடுங்கள். நான் என் மனைவி, பெற்றோர்கள் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்" என் மனைவி அறையில் நுழைந்தாள். "நீ அழகாக இருக்கிறாய்" என்று நான் கத்தினேன். அவளுக்கு என்வார்த்தைகளை் கேட்கவில்லை..உண்மையில் இதற்கு முன்னால் இவ்வாறு சொல்லவே இல்லை. "கடவுளே!" நான் கத்தினேன், கதறினேன். தயவு செய்து எனக்கு இன்னும் ஒரு வாய்ப்புக் கொடு, என் குழந்தைகளைக் கட்டி அணைக்க, என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க, என் அப்பா என்னை பெருமையாய் நினைக்க வைக்க, என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க, இப்போது நான் அழுதேன்! திடீரென என் உடலை பிடித்து யாரோ உலுக்கினார்கள். அதிர்ந்து கண் விழித்தேன். "தூக்கத்தில் என்ன உளறல், கனவு ஏதாவது கண்டீர்களா? என்றாள் மனைவி. ஆம் வெறும் கனவு. நிம்மதியானேன். .. என் மனைவியால் தற்போது நான் பேசுவதைக் கேட்க முடியும் இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். அவளை கட்டி அணைத்து. "இந்தப் பிரபஞ்சத்திலேயே நீதான் மிகவும் அழகான, பாசமான மனைவி, உன்னை நான் என்றும் பிரியமாட்டேன் மிகவும் நேசிக்கிறேன்" என்றேன். முதலில் புரியாமல் விழித்த அவள், பின்னர், என் அருகே வந்து என்னைக் கட்டி அணைத்துக் கொண்டாள். அவளது கண்களில் இருந்து லேசாக கண்ணீர் வெளியேறத் துடித்தது. அது ஆனந்தக் கண்ணீர் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. நான் உயிரோடு வாழ்வதற்கு, இந்த இரண்டாவது வாய்ப்புக் கொடுத்த கடவுளுக்கு நன்றி.! நண்பர்களே......! இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கிறது. உங்களது ஈகோவை புறம் தள்ளி விட்டு உங்களது பாசத்தையும் நேசத்தையும் உங்களிடம் நெருக்கமானவர்களிடம் வெளிப்படுத்துங்கள். ஏனெனில், உங்களது பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த… உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்!!...
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.