Jump to content

Leaderboard

  1. கிருபன்

    கிருபன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      12

    • Posts

      33787


  2. tulpen

    tulpen

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      10

    • Posts

      4150


  3. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      43243


  4. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      76734


Popular Content

Showing content with the highest reputation on 04/10/21 in all areas

  1. முறுக்கு என்றாலே... மொறுக்கு, மொறுக்கு.. என்று சாப்பிட வேணும் போல் இருக்கும். "பத்து நிமிசத்தில் முறுக்கு, தயாரிக்கலாம்" என்று, சொன்னதை நம்பி... 7´மணித்தியாலம் எடுத்து, நொந்து, நூடில்சாக வந்தவனின் சோகக் கதை.
    6 points
  2. சென்னை சூப்பர் கிங்ஸ் அதிக ஓட்டங்களை எடுத்திருந்தும் டெல்லி கேப்பிட்டல்ஸ் இலகுவாக இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 குமாரசாமி 4 2 வாத்தியார் 4 3 கல்யாணி 2 4 அஹஸ்தியன் 2 5 நந்தன் 2 6 சுவைப்பிரியன் 2 7 கிருபன் 2 8 பையன்26 2 9 நுணாவிலான் 2 10 ஈழப்பிரியன் 0 11 சுவி 0 12 வாதவூரான் 0 13 எப்போதும் தமிழன் 0 14 கறுப்பி 0
    3 points
  3. சபையோர்களே! ஆபாச படங்களை இணைத்து என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றார். 😎
    2 points
  4. RCB கடைசிப் பந்தில் வெற்றியை ஈட்டிகொண்டது! இன்று நடந்த முதலாவது போட்டியின் பின்னர்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 குமாரசாமி 2 2 நந்தன் 2 3 வாத்தியார் 2 4 பையன்26 2 5 ஈழப்பிரியன் 0 6 சுவி 0 7 வாதவூரான் 0 8 கல்யாணி 0 9 அஹஸ்தியன் 0 10 சுவைப்பிரியன் 0 11 எப்போதும் தமிழன் 0 12 கிருபன் 0 13 நுணாவிலான் 0 14 கறுப்பி 0
    2 points
  5. என்னவென்று சொல்வதம்மா வீதிகளின் வேலைகளை ...........! 👍
    1 point
  6. ந‌ண்பா தாத்தா க‌ள்ளு அடிச்சாலும் ம‌னுச‌ன் விளையாட்டு க‌ணிப்பில் கிங் ? தாத்தா வேற‌ லெவ‌ல் 😀😁
    1 point
  7. நம்ம தல வேற லெவல். நெற்றிக்கண்ணுக்கும் சேர்த்து கூலிங்கிளாஸ் டோய்....
    1 point
  8. பசுவூர்க்கோபியின் படம்சொல்லும் வரிகள்-03 ********************************** கூட்டுக்குடும்ப வாழ்வை விட்டு குடத்து நீரை இடுப்பில் அணைத்து பிரிவின் துயரை மனதில் சுமந்து ஒற்றையடி பாதையிலே ஓரமாய் வந்தேன் அப்போது.. கும்பலாய் கிடந்த நெருஞ்சி முற்கள் குத்திச் சொன்னது. இயற்கையின் விதியை தனியே வாழ ஆசைப்படுகிறோம் தாயே எடுத்து தூர எறியுங்கள். உதிரம் வடிந்த காலின் வலியால் ஒளிமயமானது எங்களின் வாழ்வும். -பசுவூர்க்கோபி- 08.04.2021
    1 point
  9. கருணா குழுவுடனான அரசாங்கத்தின் உறவும் அதனை மறைக்கும் அரசின் கைங்கரியமும் கடத்தல்களுக்காக கருணா பாவிக்கும் ஏ 11 நெடுஞ்சாலையின் ஒருபகுதியும், அங்கே அமைக்கப்பட்டிருக்கும் இலங்கை அரச ராணுவத்தின் சோதனைச் சாவடியும் இவையெல்லாவற்றிற்கும் மேலாக கருணா குழுவுக்கு பாதுகாப்பினையும், முகாம்களையும், வளங்களையும் வழங்கி காத்து வருவது அரசுதான் என்பதற்கு கருணாவினால் கடத்தப்பட்ட சிறுவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் முகாம்கள் அமைந்திருக்கும் பகுதியினைப் பார்க்கும்போது நன்கு தெளிவாகிறது. வெலிக்கந்தைப் பகுதியில் கருணாவுக்காக அரசு அமைத்திருக்கும் முகாம்களுக்குத் தமது பிள்ளைகளைப் பார்க்கச் சென்ற பெற்றோரின் கூற்றுப்படி இம்முகாம்கள் முற்றான ராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், ராணுவ முகாம்களுக்கு மிக அருகில் அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறுகின்றனர். கருணாவின் முகாம்களுக்குச் செல்லும் பெற்றோர் தொடர்பான விபரங்களை சோதனைச் சாவடியில் உள்ள ராணுவ வீரர்கள் தொலைத்தொடர்புக் கருவிகளைப் பாவித்து கருணா குழுவின் முகாம்களுக்கு வழங்கிவருவதை இப்பெற்றோர்கள் கண்டிருக்கின்றனர். கருணா குழுவின் முகாம்களுக்குச் செல்வதற்கு ஏ 11 பாதையில் இருந்து செவனப்பிட்டிய எனும் சிங்களக் கிராமத்திற்கு பல சோதனைச் சாவடிகளூடாகவே பேரூந்துகளில் இப்பெற்றோர்கள் பயணித்து வருகின்றனர். இச்சோதனைச் சாவடிகளிலேயே இப்பெற்றோரின் பெயர் விபரங்கள், கடத்தப்பட்ட பிள்ளையின் பெயர் ஆகிய விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் ராணுவ வீரர்கள் அதனை உடனடியாகவே குறிப்பிட்ட கருணா குழு முகாமின் உறுப்பினர்களுக்கு அறியத் தருகின்றனர். பலவிடங்களில் பேரூந்துகளை விட்டு இறங்கியவுடன் தயாராக நிற்கும் முச்சக்கரவண்டிகளில் ஏற்றப்படும் இப்பெற்றோர்களை அப்பகுதி சிங்கள்வர்கள் கருணா குழுவின் முகாம்களுக்குக் கொண்டு சென்று இறக்கிவிடுகின்றனர். இப்பகுதியில் கருணா குழுவின் ஆயுததாரிகள் அனைவருமே ராணுவத்தினரின் சீரூடைகளையே அணிந்து உலாவருகின்றனர் என்று பெற்றோர் தெரிவிக்கின்றனர் . "சோதனைச் சாவடியில் ராணுவத்தினர் எனது பெயர், அடையாள அட்டை இலக்கம், கடத்தப்பட்ட எனது மகனின் பெயர், கடத்தப்பட்ட நாள், அவரைத் தடுத்து வைத்திருக்கும் கருணா முகாம் ஆகிய விபரங்களைப் பெற்றுக்கொண்டபின்னர் , என்முன்னாலேயே அவர் தொலைபேசியில் கருணா குழுவின் முகாமைத் தொடர்புகொண்டு நான் வந்திருப்பதுபற்றிக் கூறிவிட்டு, என்னைத் தொடர்ந்து பயணிக்க அனுமதியளித்தார்" என்று கடத்தப்பட்ட தனது 16 வயது மகனைத் தேடிச் சென்ற தாயொருவர் மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திடம் கூறினார். மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திற்கு வழங்கிய செவ்வியில் பல பெற்றோர்கள் தாம் வெலிக்கந்தைக்கு வந்திருப்பது தமது பிள்ளைகளைத் தேடித்தான் என்பது நன்கு தெரிந்தும், அவர்களை விடுவித்து எம்முடன் அனுப்பிவைக்க எதுவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை, மாறாக அம்முகாம்களுக்கு சகலவிதத்திலும் ஒத்துழைப்பு வழங்கி, கருணாவின் கடத்தல்களை ஊக்குவிப்பது வெளிப்படையாகவே தெரிகிறது என்றும் கூறுகின்றனர். "முதுகல பகுதியில் கருணாவுக்காக ராணுவத்தால் அமைக்கப்பட்டிருந்த முகாமிற்கு நாம் முதல்முறையாகச் சென்றபோது , அருகிலிருந்த ராணுவ முகாமிலிருந்து வந்த இரு படைவீரர்கள் நாம் எதற்காக இங்கே நிற்பதாகக் கருணா குழுவினரிடம் கேட்டனர். அவர்கள் தமது பிள்ளைகளைப் பார்க்க வந்திருப்பதாக கருணா குழு ஆயுததாரிகளால் கூறப்பட்டது. அதன்பின்னர் சிங்களத்தில் எம்மிடம் பலகேள்விகளை அப்படைவீரர்கள் கேட்டதுடன், இவர்களை இங்கே நிற்க விட வேண்டாம், உடனடியாக வெளியேறச் சொல்லுங்கள் என்று கருணா குழுவிடம் கூறியபோது, எம்மை அப்பகுதியிலிருந்து கருணா குழுவினர் விரட்டினர்" என்று அப்பெற்றோர்கள் கூறுகின்றனர் . மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திற்கு கொடுக்கப்பட்ட முறைப்பாடொன்றில், வெலிக்கந்தைப் பகுதி கருணா குழு முகாம் ஒன்றிலிருந்து தப்பியோடிய சிறுவன் அருகிலிருந்த ராணுவ முகாமில் தஞ்சமடைந்து, தன்னை காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டபோது, அம்முகாமிலிருந்த ராணுவ வீரர்கள் அச்சிறுவனை மீண்டும் கருணாகுழு முகாமிற்கு இழுத்துச் சென்று, அவனைக் கடத்திவந்தவர்களிடமே கையளித்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை வெலிக்கந்தையெனும் சிங்களக் குடியேற்றப்பகுதியுடன் இணைக்கும் ஒரே நெடுஞ்சாலையாக ஏ 11 இருக்கிறது. ராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டிலும், பூரணமாக ராணுவமயப்படுத்தப்பட்ட நிலையிலும் இப்பிரதேசம் இயங்கிவருகிறது. இப்பகுதியில் ஐந்து பாரிய முகாம்களை அமைத்து பலநூற்றுக்கணக்கான கடத்தப்பட்ட சிறுவர்களை இப்பகுதிக்குக் கொண்டுவந்து ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்துவதென்பது ராணுவத்தினருக்குத் தெரியாமல் நடப்பதற்குச் சாத்தியமேயில்லாதது. சாதாரண மக்களுக்கே இப்பகுதிக்குள் பிரவேசிப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளும், சோதனைகளும் விதிக்கப்படுமிடத்து, பல வாகனங்களில், ஆயுதங்கள் சகிதம் கருணா குழு இப்பாதையினூடாக இப்பிரதேசத்தினுள் நுளைவது எப்படிச் சாத்தியம்?
    1 point
  10. மனிதவுரிமைக் கண்காணிப்பகத்தின் அறிக்கையிலிருந்து..... கருணா குழுவுடனான அரசாங்கத்தின் உறவும் அதனை மறைக்கும் அரசின் கைங்கரியமும் கிழக்கில் வாழும் அனைத்து மக்களும் கருணா குழுவினை பின்னால் இருந்து இயக்குவதே அரசுதான் என்பதை உறுதியாக நம்புகின்றனர். மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சிங்கள அரச ராணுவம் மற்றும் பொலீஸாருடன் இணைந்து சோதனைச் சாவடிகளில் கருணா குழு உறுப்பினர்கள் காவலில் ஈடுபட்டுவருவதும், ராணுவ வாகனங்களில் ரோந்துபுரிந்துவருவதும் பொதுமக்களால் பரவலாக வெளிக்கொணரப்பட்டபோதும், அரசும் ராணுவமும் இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. அருகருகே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, ராணுவத்தின் கடுமையான கண்காணிப்பின் கீழிருக்கும் பல தமிழ்க் கிராமங்களிலிருந்து சிறுவர்கள் கருணா குழுவால் கடத்தப்பட்டு சிங்கள மக்களால் குடியேற்றப்பட்டிருக்கும் மட்டக்களப்பின் எல்லைக் கிராமங்களில், அரச ராணுவத்தின் பாரிய முகாம்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் கருணா குழுவின் முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்படுவது அரசுக்குத் தெரியாமல் நடப்பதற்குச் சாத்தியமில்லை என்பது வெளிப்படையானது. சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு ஆகிய அமைப்புக்கள் கருணா குழுவுக்கும் அரச ராணுவத்திற்குமிடையிலான உறவுபற்றி மிகத் தெளிவான பார்வையையே கொண்டிருப்பதாகத் தெரிகிறது. "கருணா குழுவினருக்கும், ராணுவத்தினருக்கும் இடையிலான ஒத்துழைப்புப் பற்றி நாம் நீண்ட நாட்களாகவே கண்காணித்து வருகிறோம். இதுதொடர்பான பல ஆதாரங்களைச் சேகரித்து வருகிறோம். முடிவில் இதுதொடர்பான விரிவான அறிக்கையொன்றினை அரசாங்கத்திடம் முன்வைக்க இருக்கிறோம்" என்று நோர்வே தலைமையிலான யுத்த நிறுத்தக் கண்காணிப்புகுழுவின் அதிகாரியொருவர் கார்த்திகை மாதம் 2006 இல் கண்காணிப்பகத்திடம் தெரிவித்தார். கருணா குழுவினரால் சிறுவர்கள் ராணுவப் பயிற்சிக்காக இழுத்துச் செல்லப்படுவதுபற்றி உள்ளூர் மனிதவுரிமை அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "அவர்கள் எங்கள் சிறுவர்களை வெளிப்படையாகக் கடத்திச் செல்கிறார்கள். அவர்களைக் கேள்விகேட்கவோ தடுக்கவோ எவருக்கும் இங்கு அதிகாரமில்லை. சட்டத்திலிருந்து அவர்களுக்கு முற்றாக விலக்களிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இக்கடத்தல்கள் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று அரசாங்கம் கையை விரிப்பதை எம்மால் நம்பமுடியாமல் இருக்கிறது" என்று அவர் விரக்தியுடன் கூறுகிறார். 2006 கார்த்திகையின் நடுப்பகுதிவரை கருணா குழுவினரால் கடத்தல்கள் நடத்தப்படுவதை ஏற்கமறுத்துவந்த அரச அதிகாரிகள், தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் முறைப்பாடுகள் மற்றும் ஆதாரங்களையடுத்து இக்கடத்தல்கள் பற்றி தமக்குத் தெரியும் என்பதை இப்போது ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், கடத்தல்கள் ஆரம்பிக்கும்போதே அரச அதிகாரிகளுக்குத் தெரிந்தே ஆரம்பிக்கப்பட்டன என்று நம்புவதற்கு எம்மிடம் நியாயமான காரணங்கள் இருக்கின்றன. ஆனி 2006 இல் கருணா மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமம் ஒன்றிலிருந்து 13 சிறுவர்களையும் ஒரு இளைஞனையும் கடத்திச் சென்றார். கடத்தப்பட்ட சிறுவர்களில் நான்கு சிறுவர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கருணா கடத்தி இழுத்துச் செல்லும்போது ராணுவம் அருகே நின்றிருந்தது என்றும், ராணுவ முகாமின் அருகிலேயே கடத்தல் நிகழ்த்தப்பட்டதென்றும் சாட்சி வழங்கியிருக்கிறார்கள். தமது பிள்ளைகளை விடச் சொல்லுங்கள் என்று ராணுவத்திடம் பெற்றோர்கள் கெஞ்சியபோதும் அவர்கள் சிரித்துக்கொண்டே நின்றதாக அவர்கள் மேலும் மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திடம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனி 22 ஆம் திகதி யுனிசெப் அமைப்பு விடுத்த அறிக்கையில், கருணா குழுவினரின் சிறுவர் கடத்தல்களை அரசாங்கம் தடுத்து நிறுத்தவேண்டும் என்று பகிரங்கமாகக் கேட்டிருந்தது. மேலும், கருணா , சிறுவர்களைக் கடத்திச் செல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சாடியிருந்ததோடு, கடந்த மாதத்தில் மட்டும் 18 வயதிற்கும் குறைந்த 30 சிறுவர்களைக் கருணா கடத்திச் சென்றுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தது. ஆடி மாதம், கருணாவினால் கடத்திச் செல்லப்பட்ட தமது பிள்ளைகளை விடுவிக்கக் கோரி அவர்களின் தாய்மார்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்திருந்தனர். 48 தாய்மார்கள் தமது பிள்ளைகளின் விபரங்கள், கடத்தப்பட்ட நாள், இடம் ஆகிய விபரங்களோடு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷெ, இடர் நிவாரண - மனிதவுரிமை அமைச்சர் மகிந்த சமரசிங்ஹெ, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐ நா மனிதவுரிமை ஆணையகத்திற்கும் இவற்றின் பிரதிகளை அனுப்பியிருந்தனர். ஆனால், மார்கழி மாதத்தில் மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திற்கு மகிந்த சமரசிங்ஹெ அளித்த விளக்கத்தில் இந்த முறைப்பாடு குறித்து தாம் ஐப்பசி மாதத்திலேயே அறிந்துகொண்டதாக குறிப்பிட்டிருந்தார். இந்த 48 சிறுவர்களினது கடத்தல்கள் பற்றி ஆராயப்போவதாக ராணுவம் மார்கழியில் தெரிவித்திருந்தது. ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால், இந்த முறைப்பாட்டைப் பாவித்த ராணுவம், அத்தாய்மார்களைத் தொடர்புகொண்டு, "கடத்தியது கருணா குழு என்பதை மாற்றி, இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டனர்" என்று கூறும்படி அழுத்தம் கொடுத்திருந்தது. பின்னர் இந்த முறைப்பாடுகள் விசாரணைக்காக 2007 இல் பொலீஸாரிடம் கையளிக்கப்பட்டிருந்தன.
    1 point
  11. முறுக்கு சாப்பிட்டவர்கள் nige யின் தலைமையில் குசினி துடைக்க தயாராகுங்கள்.......! 😂
    1 point
  12. டாய் குமாரசாமி! உலக அதிசயமடா நீ...
    1 point
  13. என்னது சிறி அண்ணை முறுக்கு சுட்டவரா நான் நினைக்கின்றேன் தாச்சியில் எண்ணெய்க்குப்பதிலாக தண்ணீரை ஊத்தியிட்டாரோ 🤣
    1 point
  14. நானும் அவருடைய ஊர்தான் ...எனக்கு கிடைக்குமென்ற நம்பிக்கையில்லை. ஆனால். தமிழ்கடையிலே. முறுக்கு. பைக்கற்றைப்பார்த்தேன்...😍
    1 point
  15. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
    1 point
  16. ஆஹா......நெருஞ்சிக்கு கவிபாடிய குறிஞ்சிக் கவிஞனே நின் கற்பனை வளம் பெறுக, நீவிர் நீடுழிவாழ்க .....! 🌹
    1 point
  17. உண்மையை மறைக்காத சீவன்😀
    1 point
  18. கருணாவின் கடத்தல்களும் பொலீஸாரின் அசமந்தமும் https://ibb.co/3sJNnvK கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கொலைப்படையின் முக்கியஸ்த்தர்கள் (பிள்ளையான் பிரியுமுன்) மேலே விபரிக்கப்பட்டதுபோல, கருணா குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட பல ஆட்கடத்தல்களும், கட்டாய ராணுவப் பயிற்சிக்குமான ஆட்சேர்ப்பும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்களால் முறைப்பாடுகள் எதுவும் பதியப்படாமலேயே மறைக்கப்பட்டு விட்டன. பல கடத்தல் சம்பவங்கள் பொலீஸாருக்குக் கூட கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. தமது பிள்ளைகள் கடத்தப்பட்டதை பொலீஸாருக்கு தாம் அறியத் தராமைக்கான காரணங்களாக பின்வருவனவற்றை அவர்கள் முன்வைக்கிறார்கள். முதலாவது, அச்சம். கருணா குழு இவர்களது பிள்ளைகளைக் கடத்திச் செல்லும்போது சர்வதேச அமைப்புக்களான யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றிற்கோ, பொலீஸாருக்கோ தெரிவிக்கக் கூடாதென்று அச்சுருத்தியிருந்தமை. " நான் உங்களுடன் இதுபற்றிப் பேசுவதைக் கேள்விப்பட்டாலே கருணா குழுவினர் என்னை இன்றிரவே சுட்டுக் கொன்றுவிடுவார்கள்" என்று கருணா குழுவினரால் கடத்தப்பட்ட 18 வயது நிரம்பிய இளைஞனனின் சிறியதாயார் தெரிவித்தார். இரண்டாவது காரணம், பொலீஸாரிடம் முறையிடுவதால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை என்கிற மக்களின் நம்பிக்கை. பொலீஸாரிடம் தமது பிள்ளைகள் கருணாகுழுவினரால் கடத்தப்பட்டதை முறையிட்ட பெற்றோர்கூட தமது பிள்ளைகளைப் பொலீஸார் கண்டுபிடித்துத் தருவார்கள் என்பதை நம்பவில்லையென்பது தெளிவாகத் தெரிகிறது. "அவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் எங்கள் பிள்ளைகளைக் கடத்திச் சென்றார்கள்?" என்று கடத்தப்பட்ட சிறுவன் ஒருவரின் பேத்தியார் தெரிவித்தார். மனிதவுரிமைக் கண்காணிப்பகத்தினால் செவ்வி காணப்பட்ட 20 குடும்பங்களில் 15 குடும்பங்கள் தமது பிள்ளைகள் கடத்தப்பட்டதுபற்றி பொலீஸில் முறையிட்டதாகச் சொன்னார்கள். இந்த முறைப்பாடுகளைப் பொலீஸார் பதிவுசெய்து வைத்துக்கொண்டதுடன் அவர்களின் கடமை முடிந்துவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள் என்று இந்தப் பெற்றோர் தெரிவிக்கின்றனர். ஆனால், பல சந்தர்ப்பங்களில் கருணா குழுவுக்கெதிரான முறைப்பாடுகளை தம்மால் ஏற்கமுடியாதென்று பொலீஸார் பெற்றோர்களை திருப்பியனுப்பிய சம்பவங்கள் நிறையவே நடந்திருப்பதாக மனிதவுரிமை கண்காணிப்பகம் கூறுகிறது. "எமது பிள்ளைகளைக் கடத்திச் சென்றது கருணாதான் என்று நாம் வாக்குமூலம் கொடுத்தபோதும், பொலீஸார் இதுபற்றி விசாரணைகளை மேற்கொள்ளவோ அல்லது இதுவரையில் கடத்தப்பட்ட எமது பிள்ளைகளைக் கண்டுபிடித்துத் தரவோ எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை" என்று கடந்த புரட்டாதி மாதம் கடத்திச்செல்லப்பட்ட சிறுவன் ஒருவரின் தாயார் வருத்தத்துடன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது பிள்ளைகளைக் கருணா குழுவினரிடம் பறிகொடுத்த பல பெற்றோர்கள் தாம் பொலீஸாரிடம் இதுபற்றி முறையிடச் சென்றவேளையில் தமக்கு அளிக்கப்பட்ட பதில்களைப்பற்றி விவரிக்கிறார்கள். ஒரு சில முறைப்பாடுகளை பொலீஸார் கவனமெடுத்துப் பதிவுசெய்துகொண்டதாக தெரிகிறது. ஆனால், பல சந்தர்ப்பங்களில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட பொலீஸார் பெற்றோருடன் மிகவும் கடுமையாகவும், அநாகரீகமான முறையிலும் நடந்துகொண்டதாக மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திடம் பெற்றோர் தெரிவிக்கின்றனர். "நான் ஏறாவூர் பொலீஸாரிடம் எனது மகன் கடத்தப்பட்டதுபற்றி முறையிட்டபோது, உங்களின் முறைப்பாட்டைப் பதிவுசெய்துகொள்கிறோம், ஆனால் கருணாவினால் கடத்தப்பட்ட உங்களது பிள்ளையை நாங்கள் மீட்டுத் தரப்போவதில்லை" என்று ஏளனமாகக் கூறியதாகவும் தன்னை ஒரு நாயைப்போல அடித்துவிரட்டியதாகவும் தனது மகனைப் பறிகொடுத்த தாயொருவர் கண்ணீருடன் கூறுகிறார். இவ்வாறே, கருணாவினால் கடத்தப்பட்ட தமது மகனை மீட்டுத்தருமாறு ஒரு குடும்பம் பொலீஸாரிடம் வேண்டியபோது, "உங்களின் பிள்ளையைக் கடத்திச் சென்றது கருணாதானே, அப்படியானால் அவரிடம் தானே நீங்கள் போய் உங்கள் பிள்ளையை விடுவிக்குமாறு கேட்கவேண்டும்? இங்கே எதற்காக வருகிறீர்கள்?" என்று கடிந்துகொண்டதாக அக்குடும்பம் மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திடம் தெரிவித்தது. "பொலீஸாரின் அசமந்தமும், போலியான அக்கறையும் பாதிக்கப்பட்ட பெற்றோரை நோகடித்தாலும் கூட, பொலீஸாரினாலோ அல்லது விசேட அதிரடிப்படையினராலோ செய்யப்படும் அநீதிகளை முறையிட ஒரு வழியிருக்கிறது. ஆனால் கருணாவினால் கடத்தப்பட்டுவரும் எமது பிள்ளைகளைப் பற்றி எங்கே முறையிடுவது, யாரை நோவது? கருணாவைக் கேள்விகேட்கும் அதிகாரம் இங்கே யாருக்கு இருக்கிறது" என்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னார்வ மனிதவுரிமை அமைப்பொன்றில் செயற்பட்டுவரும் நண்பர் ஒருவர் கண்காணிப்பகத்திடம் கேட்டார். பொலீஸாரிடம் முறைப்பாடுகளைச் செய்தபோது, அவர்கள் கடத்தலின் முழு விபரங்களையும் பெற்றுக்கொள்வதில் அக்கறை காட்டவில்லையென்பது தெரிகிறது. மேலும், பல முறைப்பாடுகளுக்கான பதிவு இலக்கத்தினை பெற்றோருக்கு வழங்குவதைப் பொலீஸார் மறுத்துவிட்டதாகவும் தெரியவருகிறது. ஏறாவூரில் கடத்தப்பட்ட தனது மகன் தொடர்பாக பொலீஸாரிடம் முறைப்பாடு செய்யச் சென்ற தகப்பன் ஒருவரிடம் சில விபரங்களைக் கேட்டுக்கொண்ட பொலீஸார், அந்தப் முறைப்பாட்டிற்கான பதிவு இலக்கத்தினை இடாது அம்முறைப்பாட்டினைப் பதிவு செய்ததாகவும், தகப்பனிடம் முறைப்பாடு தொடர்பான இலக்கம் ஒன்றை வழங்கவில்லையென்றும் தெரியவ்ருகிறது. தனது மகனின் புகைப்படத்தினைத் தகப்பன் பொலீஸாரிடம் கொடுக்க முனைந்தபோது, அது தமக்குத் தேவையில்லை, உங்கள் மகனைக் கண்டுபிடித்தால் சொல்கிறோம் என்று அலட்சியமாகக் கூறி அனுப்பியதாக அத்தகப்பன் தெரிவிக்கிறார். இடர் நிவாரண மற்றும் மனிதவுரிமையமைச்சர் மகிந்த சமரசிங்க தமது அரசாங்கம் கடத்தப்பட்ட சிறுவர்கள் தொடர்பாக பொலீஸார் முறைப்பாடுகளை உரியமுறையில் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறிவுருத்தியிருப்பதாக சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களிடம் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றபோதும்கூட, இவ்வறிக்கை வெளிவரும்வரை பொலீஸார் ஒரு கடத்தல் முறைப்பாடுபற்றியும் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லையென்றும், இதுவரையில் கடத்திச் செல்லப்பட்ட ஒருசிறுவனையாவது விடுதலை செய்து மீட்டுவர முயலவில்லையென்றும் தெரிகிறது.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.