Jump to content

Leaderboard

  1. உடையார்

    உடையார்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      23359


  2. கிருபன்

    கிருபன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      33697


  3. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      28979


  4. அன்புத்தம்பி

    அன்புத்தம்பி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      5425


Popular Content

Showing content with the highest reputation on 05/11/21 in all areas

  1. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ தமிழீழ விடுதலைப்போரின் போது தமிழீழ விடுதைப்புலிகள் மற்றும் ஈழப் புரட்சி அமைப்பு (ஈரோஸ்) ஆகிய இயக்கங்களில் போராளிகளாகயிருந்து வீரச்சாவினைத் தழுவி மாவீரராகிய முஸ்லிம்கள் 1) லெப். ஜோன்சன் (ஜெயா ஜுனைதீன்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 22.08.1963 — 30.11.1985 --> படையினரைத் தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பிச் செல்கையில் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. --> தமிழீழ விடுதலைப்போரில் களச்சாவான முதலாவது இசுலாமிய தமிழ் மாவீரர் இவராவார். 2) வீரவேங்கை லத்தீப் (முகமது அலியார் முகமது லத்தீப் ஒல்லிக்குளம்) காத்தான்குடி, மட்டக்களப்பு. 16.11.1962 — 24.12.1986 --> மட்டக்களப்பு தாழங்குடாவில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் தேசவஞ்சகக் கும்பலின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 3) வீரவேங்கை நசீர் (முகமது நசீர்) காங்கேயனோடை, மட்டக்களப்பு. 15.03.1963 — 30.12.1987 --> மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 4) வீரவேங்கை சாபீர் (சரிபுதீன் முகமது சாபீர்) தியாவெட்டுவான், மட்டக்களப்பு. 13.05.1988 --> நாசிவன்தீவில் ரெலோ தேசவஞ்சகக் கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் வீரச்சாவு. 5) வீரவேங்கை ஜெமில் (ஜெயாத் முகமது உசைதீன்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 28.03.1968 — 05.08.1989 --> மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இந்தியப் படையினருடனான சமரில் வீரச்சாவு. 6) வீரவேங்கை ஆதம் (எஸ்.எம். ஆதம்பாவா) சாய்ந்தமருது, அம்பாறை. 21.12.1967 — 03.01.1990 --> மட்டக்களப்பு கல்முனைக்குடியில் முஸ்லிம் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட கோரத் தாக்குதலில் வீரச்சாவு. 7) வீரவேங்கை அலெக்ஸ் (அகமது றியாஸ்) மருதமுனை, நீலாவணை, மட்டக்களப்பு. 23.01.1970 — 04.05.1990 --> அம்பாறை கல்முனை இறக்காமத்தில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 8 ) வீரவேங்கை கபூர் (முகமது அலியார் முகமது சலீம்) காங்கேயனோடை, மட்டக்களப்பு. 11.06.1990 --> மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு. 9) வீரவேங்கை தாகீர் (முகைதீன்பாவா அன்சார்) திருகோணமடு, பொலன்னறுவை. 29.04.1972 — 11.06.1990 --> மட்டக்களப்பு கல்குடா பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 10) வீரவேங்கை அன்வர் 15.06.1990 --> அம்பாறை பாணமையில் விடுதலைப் புலிகளின் தாவளத்தை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு. 11) வீரவேங்கை தௌவீக் (இஸ்மாயில்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 12.06.1990 --> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 12. வீரவேங்கை ஜிவ்றி (முகம்மது இலியாஸ்) 4ம் வட்டாரம், மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு. 05.03.1974 — 13.06.1990 --> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 13) வீரவேங்கை அர்ச்சுன் ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 14.06.1990 --> திருகோணமலை திருமலை 3ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 14) வீரவேங்கை ஜலீம் (முகமது இஸ்மாயில் மன்சூர்) ஏறாவூர், மட்டக்களப்பு. 01.09.1990 --> முல்லைத்தீவில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவு. 15) வீரவேங்கை மஜீத் (முகமது இஸ்காக் கூப்சேக்அலி) மீராவோடை, மட்டக்களப்பு. 18.06.1990 --> வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 16) வீரவேங்கை ஜின்னா (லெப்பைதம்பி செய்னூர்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 20.10.1970 — 19.06.1990 --> அம்பாறை பொத்துவில் கொட்டுக்கலவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 17) வீரவேங்கை தர்சன் (அப்துல்காதர் சம்சி) 13.06.1990 18) வீரவேங்கை நகுலன் (ஜுனைதீன்) அட்டாளைச்சேனை, காரைதீவு, அம்பாறை. 26.06.1988 --> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 19) வீரவேங்கை அகஸ்ரின் (சம்சுதீன் அபுல்கசன்) அக்கரைப்பற்று, அம்பாறை. 15.08.1971 — 27.10.1988 --> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு. 20) வீரவேங்கை நசீர் (சம்சுதீன் நசீர்) ஒலுவில், அம்பாறை. 19.02.1960 — 17.02.1989 --> மட்டக்களப்பு நிந்தவூரில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் தேசவஞ்சகக் கும்பலினால் பிடிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கோரத்தாக்குதலில் வீரச்சாவு. 21) வீரவேங்கை பாறூக் (நாகூர்தம்பி பாயிஸ் ஆதாம்லெப்பை) அக்கரைப்பற்று, அம்பாறை. 08.01.1973 — 22.06.1989 --> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை ஈ.என்.டி.எல்.எவ்வினரின் முற்றுகையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு. 22) வீரவேங்கை அஸ்வர் (ஜபார் ஜாபீர்) அட்டாளைச்சேனை, அம்பாறை. 06.12.1989 --> பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பலின் முகாம்மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 23) வீரவேங்கை சியாத் (மீராசாகிபு காலிதீன்) சாய்ந்தமருது, அம்பாறை. 18.08.1972 — 06.12.1989. --> பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எஃவ் தேசவிரோத கும்பலின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 24) வீரவேங்கை சந்தர் எ சுந்தர் (அகமது லெப்பை செப்லாதீன்) வேப்பானைச்சேனை, அம்பாறை. 25.02.1973 — 25.05.1990 --> அம்பாறை காரைதீவு பகுதியில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 25) வீரவேங்கை ராவ் (முகமது ரவீக்) பொத்துவில், அம்பாறை. 15.06.1990 --> அம்பாறை இலகுகல்லில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 26) வீரவேங்கை இராமன் (மாப்பிள்ளை லெப்பை அல்வின்) இறக்காமம், அம்பாறை. 16.06.1990 --> மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 27) வீரவேங்கை கனியா (அபுசாலி புகாரி) அக்கரைப்பற்று, அம்பாறை. 15.07.1990 28) வீரவேங்கை கமால் மட்டக்களப்பு 07.06.1990 29) வீரவேங்கை கசன் (ஆதம்பாவா கசன்) மூதூர், திருகோணமலை. 05.11.1989 --> முல்லைத்தீவு மாங்குளத்தில் தவறுதலாக ஏற்பட்ட வெடிநேர்ச்சியின்போது வீரச்சாவு. 30) வீரவேங்கை சலீம் 03.07.1987 --> அம்பாறை மாவட்டம் தாண்டியடி பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 31) வீரவேங்கை ஜெகன் (ஆப்தீன் முகமது யூசுப்) குச்சவெளி, திருகோணமலை. 08.04.1972 — 15.06.1990 --> திருகோணமலை கட்டைபறிச்சான் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 32) வீரவேங்கை நியாஸ் மூதூர், திருகோணமலை. 17.06.1990 --> மட்டக்களப்பில் சிறிலங்கா வான்படையினர் மேற்கொண்ட உலங்குவானூர்தி தாக்குதலில் வீரச்சாவு. 33) வீரவேங்கை கலையன் (கச்சுமுகமது அபுல்கசன்) முதலாம் வட்டாரம், புல்மோட்டை, திருகோணமலை. 14.06.1990 --> (அறியில்லா இடத்தில்) சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 34) வீரவேங்கை டானியல் (கனீபா முகமது ராசீக்) திருகோணமலை. 23.06.1970 — 22.06.1990 --> திருகோணமலை திருமலை 2ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 35) வீரவேங்கை நிர்மல் (அப்துல் நசார்) புடவைக்கட்டு, திருகோணமலை. 19.01.1972 — 27.07.1990 --> திருகோணமலை திருமலை திரியாயில் ஏற்பட்ட வெடிநேர்ச்சியில் வீரச்சாவு. 36) வீரவேங்கை உஸ்மான் கிழங்கு (அப்துல்காதர் சாதிக்) யாழ்ப்பாணம். 10.05.1966 — 25.08.1986 --> யாழ். கோட்டையில் சிறிலங்கா படையினருடனான முற்றுகைச் சமரில் வீரச்சாவு. 37) வீரவேங்கை ரவீஸ் ராமநாதபுரம், கிளிநொச்சி. 08.08.2006 38)வீரவேங்கை குபீர் அக்கரைப்பற்று, அம்பாறை. 15.06.1990 --> அம்பாறை பாணாமையில் விடுதலைப் புலிகளின் முகாமை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு. 39) வீரவேங்கை பர்ஸாத் செட்டிக்குளம், வவுனியா 10.06.1990 40)வீரவேங்கை ரகுமான் 08.05.1986 --> வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் ஸ்ரீலங்கா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு. 41) வீரவேங்கை ரகீம் 08.05.1986 42) வீரவேங்கை கணேசன் (அப்துல்ஜபார் கணேசன்) யாழ்ப்பாணம் 19.03.2007 --> யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு. 43) வீரவேங்கை தமிழ்மாறன் (அப்துல் ரகுமான் நிமால்) ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு 01.01.1983 - 19.10.2000 --> யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது வீரச்சாவு. 44) வீரவேங்கை வசந்தி (அப்துல்கரீம் கற்பகரூபவதி) முள்ளியான், கட்டைக்காடு, யாழ்ப்பாணம் 06.05.1978 - 26.06.1999 --> மன்னார் பள்ளமடு பகுதியில் ரணகோச நடவடிக்கைப் படையினரின் முற்றுகை முயற்சிக்கெதிரான முறிடிப்புச் சமரில் வீரச்சாவு. 45) வீரவேங்கை பர்சாண் (அப்துல்காதர் சம்சுதீன்) காக்கையன்குளம், வவுனியா 04.05.1969 - 15.06.1990 --> வவுனியா காமினி வித்தியாலயத்தில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 46) வீரவேங்கை நசீம் (கஜன்) (அப்துல்மானாப் முகமது நசீம்) மூதூர், திருகோணமலை 05.07.1964 - 25.07.1986 --> மூதூர் ஆலிம்சேனைப்பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச்சூட்டில் வீரச்சாவு. 47) வீரவேங்கை அருள் (மேலதிக விரிப்பு கிடைக்கப்பெறவில்லை) மன்னார் 48) வீரவேங்கை மருதீன் எ முகமது (சந்திரயோகு மருத்தீன்) உயிர்த்தராசன்குளம், மன்னார் 25.10.1965 - 15.10.1987 --> யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் இந்தியப்படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 49) வீரவேங்கை பதூர்தீன் எ குஞ்சான் (காலித்தம்பி காதம்பவா) அக்கரைப்பற்று, அம்பாறை. 16.10.1963 - 07.06.1987 50) வீரவேங்கை கசாலி (சேகு முகமது சகாப்தீன்) ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை 23.05.1989 --> மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டு வீரச்சாவு. 51) வீரவேங்கை குமார் (சேதுதாவீது காசிம்) இரத்தினபுரம், கிளிநொச்சி. 26.11.1988 --> யாழ்ப்பாணம் காரைநகரில் இந்தியப்படையின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு. 52) வீரவேங்கை கலீல் (கலீல் ரகுமான்) தோப்பூர், திருகோணமலை. 27.04.1988 --> யாழ்ப்பாணம் கப்பூது வெளியில் இந்தியப்படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு. 53) வீரவேங்கை அசீம் அஷாத் 54) 2ம் லெப். சாந்தன் (நைனா முகைதீன் நியாஸ்) நிலாவெளி, திருகோணமலை. 17.05.1972 — 06.02.1990 --> திருகோணமலை மாவட்டம் ஜமாலியா பகுதியில் அமைந்திருந்த ஈ.என்.டி.எல்எஃவ் கும்பலின் முகாமை தாக்கிவிட்டு தளம் திரும்பும்போது ஏற்பட்ட படகு நேர்ச்சியில் வீரச்சாவு. 55) லெப். ஜெமில் (கரீம் முஸ்தபா) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 12.06.1990 --> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 56) லெப். ராஜிவ் எ ரகீம் எ நஜீம் (காசிம் துலானி) பட்டாணிச்சூர், புளியங்குளம், வவுனியா 15.09.1990 --> வவுனியாவில் நெஞ்சுவலி காரணமாக சாவு. 57) லெப் அருள் (யூசப் ஜாசிர்) உப்புக்குளம், வவுனியா 14.05.1975 - 05.11.1995 --> யாழ். வலிகாமத்தில் சூரியகதிர் எதிர்ச்சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு. 58) லெப். ஈழநாதன் எ ஈழமாறன் (காதர்முகைதீன் சருதீன்) ஒட்டருத்தகுளம், வவுனிக்குளம், முல்லைத்தீவு 01.10.1978 - 07.04.1998 --> கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன் அவர்களது உடன்பிறப்பு --> ஜெயசிக்குறுய் காலத்தில் முல்லைத்தீவு ஒலுமடுவில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது காயச்சாவு. 59) கப்டன் பாறூக் (அகமதுலெப்பை முகமது கனீபா) அக்கரைப்பற்று, அம்பாறை. 12.06.1959 — 07.01.1987 --> யாழ்ப்பாணம் கோட்டையில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. 60) கப்டன் குட்டி எ தினேஸ் (முகமது அலிபா முகமது கசன்) பேராறு, கந்தளாய், திருகோணமலை. 28.04.1987 --> திருகோணமலை கந்தளாயில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 61) கப்டன் நசீர் சாளம்பைக்குளம், வவுனியா 00.11.1990 62) கடற்புலி லெப் கேணல் முல்லைமகள் (முகைதீன் ஜெரீனா) 50 வீட்டுத்திட்டம், கள்ளப்பாடு, முல்லைத்தீவு. 19.06.2007 --> யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு. 63) கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன் (காதர்முகைதீன் நஜீம்கான்) முல்லைத்தீவு 29.09.2008 --> அக்கராயன் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற நடவடிக்கைக்கெதிரான மறிப்புச் சமரின்போது வீரச்சாவு. --> இவருடைய உடன்பிறப்பு ஒருவரும் மாவீரர். அவருடைய பெயர் லெப். ஈழமாறன் என்பதாகும். 64) லெப். கேணல் அப்துல்லா (முகைதீன்) காத்தான்குடி, மட்டக்களப்பு 02.04.2009 --> ஆனந்தபுரம் முற்றுகைச் சமரின்போது வீரச்சாவு. --> இவர் லெப்.ஜுனைதீன் அவர்களின் அண்ணன் என்றும் அறிந்தேன். சரியாகத் தெரியவில்லை. 65) ஈரோஸ் மாவீரர் நியாஸ் மன்னார் 11.07.1986 --> தமிழீழக் கடற்பரப்பில் பயணம் செய்து கொண்டிருக்கையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வான்குண்டு வீச்சில் வீரச்சாவு 66) ஈரோஸ் மாவீரர் கஜன் எ நசீம் (அப்துல் மானாஃப் முகம்மது நசீம்) மூதூர், திருகோணமலை 05.07.1964 - 25.07.1986 --> மூதூர் ஆலிம்சேனைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு 67) ஈரோஸ் மாவீரர் கசாலி (சேகு முகமது சகாப்தீன்) ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை 23.05.1989 --> மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு நடாத்தப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு 68) ஈரோஸ் மாவீரர் ரசிட் இயற்பெயர் அறியில்லை திருகோணமலை 26.08.1989 --> திருகோணமலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலுடனான மோதலில் வீரச்சாவு 69) ஈரோஸ் மாவீரர் மிஸ்வின் இயற்பெயர் அறியில்லை அக்கரைப்பற்று, அம்பாறை 09.11.1989 ------------------------------------------------- தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் பேசும் இசுலாமியர்கள் மாவீரராகினர் என்றும் அவர்களின் பெயர்க்குறிப்புகள் புலிகளால் மறைக்கப்பட்டது என்ற சோனக அரசியல்வாதிகளின் பொய்ப் பரப்புரையினை முறியடிப்பதற்காகவே இதை நான் தொகுத்துள்ளேன். ஒரு 5-10 விடுபட்டிருக்கும். அவையள் எல்லோரும் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த போராளிகள் ஆவர். இவர்களோடு ஓரிரு ஆதரவாளர்களும் பிடிபட்டு கொல்லப்பட்டதாக என்னால் அறியக்கூடியதாக உள்ளது. அதே நேரம் 1990ம் ஆண்டு பல ஆதரவாளர்கள் தென் தமிழீழத்தில் பிடித்துச் சாக்கொல்லப்பட்டனர். ஆனால் அன்னவர்களின் பெயர்களை என்னால் அறிய இயலாமல் உள்ளது. இதை தேடியெடுத்து என்பின் ஆவணப்படுத்துவோர் உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ------------------------------------------------ உசாத்துணை: மேற்கண்ட தகவல்கள் யாவும் இணையத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டு என்னால் தொகுக்கப்பட்டவையாகும். http://eelamheroes.com/ http://veeravengaikal.com/ https://m.facebook.com/774278089313609/photos/a.774933562581395/1774614085946666/?type=3&source=57&__tn__=EH-R ஈழநாதம்: 17/09/1990 ஈழநாதம்: 17/06/1990 தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்
    2 points
  2. Album : Skanda Shasti Kavacham Song: Thuthiporku val vinai pom Lyrics : Traditional டைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையும் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் தீயும் தனிஒளி யொவ்வும் குண்டலி யாம் சிவகுகன் தினம் வருக ஆறுமுகமும் அணிமுடி ஆறும் நீறுஇடும் நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறுஇரு திண்புயத்து அழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்துஅணி மார்பும் செப்பழகு உடைய திருவயிறு உந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்னம் பதித்த நற் சீராவும் இருதொடை அழகும் இணை முழந்தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து எந்தனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதன் என்று உன் திருவடியை உறுதியென்று எண்ணும் எந்தலை வைத்து உன் இணையடி காக்க என்னுயிர்க்கு உயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினை காக்க விழிசெவி இரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத்து இருபல்முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க என்இளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்ன வடிவேல் காக்க சேர் இள முலைமார் திருவேல் காக்க வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழூபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க கைகளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை இரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நல் துணையாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்ரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்கத் தடையறத் தாக்க பார்க்க பார்க்கப் பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லல் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புறக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும் விட்டாங்காரரும் மிகு பல பேய்களும் தண்டியக்காரரும் சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும் இடி விழுந்துஒடிட ஆனை அடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகள் உடனே பலகல சத்துடன் மனையில் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட கால தோதாள் எனைக் கண்டால் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட்டு அலறி மதிகெட்டு ஓடப் படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுடல் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கால்கை முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்குச் செதில் செதிலாக சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணல் எரி தணல்எரி தணல்எரி தணல்அது ஆக விடுவிடு வேலை வெருண்டது ஓடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித் தொடர்ந்து ஓடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்து உயிர் அங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க ஒளிப்புஞ்சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயம் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் புரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தறணை பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய் ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும் உன்னைத்ட் துதிக்க உன் திரு நாமம் சரவண பவனே! சையொளி பவனே! திரிபுர பவனே! திகழ் ஒளி பவனே! பரிபுர பவனே! பவமொழி பவனே! அரிதிரு மருகா! அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்! கந்தா குகனே ! கதிர்வே லவனே ! கார்த்திகை மைந்தா ; கடம்பா கடம்பனை இடும்பனை அழித்த இனியவேல் முருகா தணிகா சலனே ! சங்கரன் புதல்வா ! கதிர்காமத்து உறை கதிர்வேல் முருகா ! பழநிப் பதிவாழ் பால குமரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா ! செந்தின்மாமலையுறும் செங்கல்வராயா ! சமரா புரிவாழ் சண்முகத்து அரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க, யான் உனைப்பாட எனைத்தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனைப் படினேன் ஆடினேன் பரவசமாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை நேசமுடன் யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன் அருள் ஆக அன்புடன் இரட்சி அன்னமும் சொர்ணமும் மெத்தமெத் தாக வேலா யுதனார் சித்திபெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க, மலைக்குரு வாழ்க ! வாழ்க வாழ்க, மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க, எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செய்யினும் பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன் பெற்றவள் குறமகள் பெற்ற வளாமே பிள்ளையென்று அன்பாய் பிரியம் அளித்து மைந்தஎன் மீதுன் மனமகிழ்ந்து அருளித் தஞ்சமென்று அடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவராயன் பகர்ந்ததை கலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கம் துலக்கி நேச முடன் ஒரு நினைவது ஆகிக் கந்தர் சஷ்டி கவசம் இதனைச் சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத் தாறு உருக்கொண்டு ஓதியே ஜெபித்து உகந்து நீறுஅணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்னர் எண்பர் சேர்ந்தங்கு அருளுவர் மாற்றவர் எல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமதன் எனவும் நல் எழில் பெறுவர் எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத்து அடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியால் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்குரு சங்காரத்தடி அற்ந்தென உள்ளம் அஷ்டலட்சுமிகளில் வீரலட்சுமிக்கு விருந்து உண வாகச் சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க்கு உவந்து அமுது அளித்த குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி என்னைத்தடுத்து ஆட்கொள்ள எந்தனதுள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி தேவர்கள் சேன பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இரும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேலா போற்றி உயர்கிரி கனக சபைக்கு ஓர் அரசே மயில்நட மிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவண பவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம் சரணம் சரணம் சண்முகா......... சரணம்!
    2 points
  3. இணைப்புக்கு ந‌ன்றி சுவி அண்ணா 🙏🙏🙏
    1 point
  4. அன்பிற்குமுண்டோ அடைக்குந் தாள் ......! 👍
    1 point
  5. உங்களின் பக்தி கண்டு யாம் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்....... நீங்கள் குறிப்பிட்ட வரிகள் 1:10 ல் இருந்து வருகின்றது பண்ணோடு பாடி இன்புறுக......! 👍
    1 point
  6. Album Name: Chakravarthi Thirumagal Starring: MGR, Anjali Devi, N.S. Krishnan Composer: G. Ramanathan Album Year: 1957 எத்தனை தானம் தந்தாலும் எந்த லோகம் புகழ்ந்தாலும் தானத்தில் சிறந்தது நிதானந்தான்
    1 point
  7. செங்கே ழடுத்த சினவடி வேலுந் திருமுகமும் பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க் கொங்கே தரளஞ் சொரியுஞ்செங் கோடைக் குமரனென எங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந் தெதிர்நிற்பனே.
    1 point
  8. இனிமயைான குரல்,அருமையான பாடல்
    1 point
  9. கனவொன்று நான் கண்டேன்.... இறையாட்சி மலரக் கண்டேன்... இறையாட்சி மலரக் கண்டேன்... இன்பக் கனவொன்று நான் கண்டேன் இறையாட்சி மலரக் கண்டேன் எங்கும் மனங்கள் மகிழக் கண்டேன் இன்பக் கனவொன்று நான் கண்டேன் (2) 1.இயேசுவின் அருகினில் ஏழைகள் அமரக் கண்டேன் இறை அன்பினில் அகிலமே ஒன்றென உணர்ந்து நின்றேன் (2) பிறர்க்கென வாழ்ந்திடும் மனிதர்கள் பலரைக் கண்டேன் - 2 பிறர்நலம் பேணிடும் பணியில் எனை இணைத்தேன் எந்தன் வாழ்வின் பொருள் அறிந்தேன். 2.அன்பே அனைவர்க்கும் ஆக்கம் என அறிந்தேன் அகச் சுதந்திரமே எங்கும் ஒளியெனக் கண்டுகொண்டேன்.(2) நீதியின் பாதையில் யாவரும் நடக்கக் கண்டேன். -2 நிதமும் புதுமை வாழ்வில் சேரக் கண்டேன். அன்பின் நிறைவை நான் கண்டேன். வானம் திறந்து வெண் புறா போல இறங்கி வரவேண்டும்.
    1 point
  10. பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க.......! 😍
    1 point
  11. இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள் மனதையே கொள்ளை கொண்டுவிடும் சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன் எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... முன்பு அடிக்கடி கேட்பதுண்டு அனேமாக வேலைக்கு செல்லும்போது இவருடைய பாடல்களையே கேட்டுக்கொண்டு செல்வேன். ரெஹ்மா வின் குரலில் ஒரு காந்த சக்தி இருக்கிறது கண்ணைமூடி கொண்டு கேட்டு பாருங்கள்
    1 point
  12. அன்பான... கணவனும், மனைவியும்.
    1 point
  13. "தெரிந்த ரகசியம்" சிவராமை கருணாவே கொன்றான் என்பது புலிகளுக்குத் தெரிந்தே இருந்தது. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் அரச புலநாய்வுத்துறையும், தமிழ் துணைராணுவக் குழுவும் இப்படுகொலையின் பின்னால் இருப்பதாக வெளிப்படுத்தியிருந்தார்கள். சிவராமைக் கொன்றவர்களைக் கைதுசெய்வதில் பொலீஸாருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் விசாரணைகள் இங்கிருந்தே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் அது சாத்தியமற்றதாகவே படுகிறது. அரசின் பலம்வாய்ந்த ஒரு பிரிவு மக்களைக் கடத்திச் சென்று படுகொலை செய்யும்போது, பலமற்ற இன்னொரு பிரிவு அப்படுகொலைகளை விசாரிப்பதென்பது இயலாத காரியம். ஆகவே, சிவராமின் படுகொலையும் விசாரிக்கப்படமுடியாத படுகொலைகளின் நீண்டுசெல்லும் பட்டியலில் சேர்க்கப்படப்போகிறதென்பது திண்ணம். தமிழ் மக்களைப் பொறுத்தவரை சிவராமை கருணாவே கொன்றான் என்பது ஓரளவிற்குத் தெரிந்த "ரகசியம்" என்றே எண்ணத் தோன்றுகிறது. கருணாவே சிவராமைக் கொன்றான் என்பதை புலிகள் வெளிப்படையாகக்ச் சொல்லாமைக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது, தமக்குச் சார்பான பத்திரிக்கையாளர் ஒருவரைக் கருணாவோடு இணைந்து ராணுவப் புலநாய்வுத்துறை கொல்வதென்பது, மீதமிருக்கும் தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவான பத்திரிக்கையாளர்களை முடக்கிப் போட்டு விடும் என்பது மட்டுமல்லாமல், கருணாவுக்கு தேவையற்ற விளம்பரத்தை வழங்குவதையும் அவர்கள் விரும்பியிருக்கவில்லையென்றும் சொல்லப்படுகிறது. அதேவேளை, தனது பழிவாங்கலினை நேர்த்தியாகச் செய்துமுடித்த கருணாவினால்க் கூட சிவராமைக் கொன்று பழிதீர்த்த தனது வீரப் பிரதாபத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியாமற் போய்விட்டது. தனது பிரதேசவாத மாயைக்குள் சில அடிவருடிகளை இழுத்துவைத்திருக்கும் கருணா, தனது சொந்தப் பழிவாங்களுக்காகவே மட்டக்களப்பைச் சேர்ந்த சிவராமைக் கொன்றான் என்பது வெளிவரும் பட்சத்தில் அவர்களுக்குள் தான் பற்றிய சந்தேகங்கள் எழலாம் என்று அவன் கருதியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்படுகொலையில் இருக்கும் மிக முக்கியமான அபாயம் யாதெனில், இனிவரும் கொடூரமான பலபடுகொலைகளுக்கு இது முன்னோடியாக இருக்கப்போவதுதான். சந்திரிக்காவின் அரசாங்கத்திலிருக்கும் மிகப் பலம் வாய்ந்த அமைச்சரும், ராணுவப் புலநாய்வுத்துறையினருடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டுவருபவருமான ஒருவரின் ஆசீர்வாதம் இப்படுகொலையின் பின்னால் இருந்திருக்கிறதென்பது மிகவும் ஆபத்தானது. அரச ஆதரவுடன் இனிமேல் நடக்கவிருக்கும் இம்மாதிரியான பல படுகொலைகளைத் தடுப்பதற்கு காட்டமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம். சர்வதேசத்திலிருந்து வரக்கூடிய அழுத்தங்களினால் மட்டுமே இவ்வாறான அரச மயப்படுத்தப்பட்ட படுகொலைகளை தற்காலிகமாத் தன்னும் நிறுத்திவைக்க முடியும். ஆங்கில மூலம் : டி பி எஸ் ஜெயராஜ் தமிழில் : ரஞ்சித் உங்கள் போன்றவர்களின் ஆதரவே என்னை தொடர்ந்தும் இத்துரோகிகள் பற்றித் தேடித் தேடி எழுதத் தூண்டுகிறது. மிக்க நன்றி சிறி !
    1 point
  14. 2004 இற்கு முன்னரான கேர்ணல் கருணாவே, இப்போது நீ எங்கே இருக்கிறாய்? தமிழ் சங்கம் இணையத்தளத்தில் சச்சி சிறிகாந்தா சித்திரை 2019 இல் எழுதிய கட்டுரை. 2004 இற்கு முன்னர் அனைவராலும் மரியாதையாக அழைக்கப்பட்ட கேர்ணல் கருணாவும், இன்று வெற்று விநாயகமூர்த்தி முரளீதரனுமாக மாறியிருக்கும் உனக்கு நான் எழுதிக்கொள்வது. இன்றைய உனது நிலை என்ன? பங்குனி 2004 இல் எமது இனம் அறிந்திராத துரோகத்தைச் செய்துவிட்டு இறுமாப்புடன் நீ இருந்தபோது உனது புகழைக் காவிவந்த 800 சொற்கள் அடங்கிய பி பி ஸியின் பசப்புகளையும், அது உனக்கு உலகளவில் புகழ்தேடித் தந்ததாக நீ எண்ணியிருந்ததையும் மறந்திருக்க மாட்டாய். உனது துரோகம் நிகழ்ந்து 15 வருடங்கள் உருண்டோடிவிட்ட நிலையில் நீ இன்று செய்துவரும் செயல்கள் குறித்து என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன. முடிந்தால் பதில் அளி. 2004 இற்குப் பிறகு நீ செய்துவருவதாகக் கூறும் உனது வீரப் பிரதாபங்கள், நீ யாருக்குத் துரோகமிழைத்து வெளியேறி எதிரியுடன் சேர்ந்தாயோ, அந்த புலிகளின் தலைவர் பிரபாகரனின் ராணுவ ஆற்றலுக்கு நிகராக இருக்கும் என்று உண்மையாகவே நம்புகிறாயா? இன்றைய உனது நிலை என்ன கருணா? இன்றும் ஈழத்தமிழர்களுக்கான தலைவனாக உன்னைக் கருதுகிறாயா? 2004 இற்குப் பின்னர் நீ செய்துவரும் எந்தத் திருகுகுதாலமும் உன்மீது படிந்திருக்கும் நிரந்தரக் கறையான "இனத்துரோகி " எனும் அவப்பெயரைக் கரைத்துவிட முடியும் என்று நீ நம்புகிறாயா? அண்மைக்காலமாக அரசியலில் இருப்பதாகக் கூறுகிறாயே, அதில் எத்தனை வெற்றிகளை நீ பெற்றிருக்கிறாய்? தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும், பின்னர் அங்கிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தாவிக்கொண்டிருக்கிறாய். 2019 இல் நீ இன்னும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மகிந்தவுக்குப் பணிவிடை செய்கிறாயா அல்லது அவனையும் விட்டு விலகி மைத்திரியிக்குப் பணிவிடைகள் செய்துவருகிறாயா? உனது வீரப் பிரதாபங்களைக் காவிவந்த பி பி ஸி யின் செவ்வியில் உனது மொழிபொஎயர்ப்பாளராக நின்றிருந்த வரதனுக்கு என்னவாயிற்று? அவன் இப்போது உன்னுடன் இருக்கிறானா, அல்லது அவனைக் கொன்றுவிட்டாயா? இதுபற்றியும் எங்களுக்கு நீ கூறமுடியுமா கருணா ? 2004 இல் நீ அரியணை மீது வீற்றிருந்து பி பி ஸி இற்கு வழங்கிய செவ்வியில், "என்னுடன் 2000 பெண்போராளிகள் உட்பட, 5000 போராளிகள் பக்கபலமாக இருக்கிறார்கள்" என்று இறுமாப்புடன் கூறியிருந்தாய். இந்தப் பசப்புகளை விரும்பியே காவித்திருந்த இந்திய செய்திச் சேவைகளுக்கு நீ ஒரு பெருந்தளபதியாகவும், ஆயிரக்கணக்கான படைவீரர்கள் சூழ்ந்த மாபெரும் சேனையாகவும் தெரிந்ததில் எனக்கு வியப்பில்லை. சரி, அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், நீ அன்று கூறிய 5000 "பெரும்படையில்" இன்று உன்னுடன் கூட இருப்பவர்கள் எத்தனை பேர் கருணா? உனது இனத்துரோகத்திற்காக புலிகள் உன்னைத் தூக்கி எறிந்தபொழுது. பல புலியெதிர்ப்பு கருத்தாளர்களான கே டி ராஜசிங்கம், டி பி எஸ் ஜெயராஜ், தயான் ஜயதிலக்க மற்றும் தமிழ்நாட்டின் இந்து கற்பனைவாதிகள் உன்னை வராது வந்த மாமணியாகப் பார்த்து ஆரத்தழுவி ஆதரித்து எழுதியதை நான் பார்த்தேன். ஈழத்தமிழனின் புதிய துருவ நட்சத்திரமாக அவர்கள் உன்னைப் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்ததையும் நான் பார்த்தேன். ஆனால், அவர்களின் பேனாக்களில் இருந்து நீ இன்று முற்றாக மறைந்துவிட்டாயே, அது ஏன் கருணா? 2004 இற்குப் பின்னரான உனது வீழ்ச்சியென்பது எத்தனை கீழ்த்தரமானது , கேவலமானது என்பதை நீ உணர்கிறாயா? 1996 இல் தாரகி சிவராம் எழுதிய கட்டுரை ஒன்றை அண்மையில் படித்தேன். அதி அவர் இப்படி எழுதுகிறார். "விடுதலைப் புலிகள் அம்பாறை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை ஒரே ராணுவ நிர்வாகப் பிரதேசமாகவே கையாள்கிறார்கள். இப்பிரதேசத்திற்கான ஒட்டுமொத்தத் தளபதியாக கருணாவே திகழ்கிறார். ஒரு சில உயர் தளபதிகளைத் தவிர, கிழக்கின் அனைத்துப் புலிப் போராளிகளும் அவரை கெளரவத்துடன் அம்மான் என்றே அழைக்கின்றனர்". உன்னை ஒரு ஒப்பற்ற தளபதியாக எண்ணி, 2005 இல் அமெரிக்கச் சஞ்சிகையொன்றில் குடிபோதையில் உளறிய ஒருவர், "கருணா கிழக்கு மாகாண மக்களுக்கான ஆட்சியதிகாரத்தை அரசாங்கத்திற்கு எதிராகவும், புலிகளுக்கு எதிராகவும் போராடி நிலைநாட்டப் பார்க்கிறார். ஆனால், பிரபாகரனின் ராணுவப் பலத்தின் முன்னால் கருணாவால் ஈடுகொடுக்க முடியாதிருக்கும், ஆகவே அவர் வெளிநாடொன்றிற்குத் தப்பிச் சென்றாவது தனது மக்களின் விடுதலைக்காகப் போராடுவார். கிழக்கில் புலிகள் இழந்த நிலங்களை மீண்டும் அவர்கள் மீட்டெடுப்பது சாத்தியமில்லை" பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வெறும் 30 வெள்ளிகளுக்காக நீ ஈழத்தமிழரிடம் சிறுகச் சிறுகச் சேர்த்துவைத்த அபிமானத்தையும், கெளரவத்தையும் 2004 துரோகத்துடன் ஒரே இரவில் இழந்தாய். விடுதலைப் புலிகளால் உனக்கு வழங்கப்பட்ட கெளரவமான "கருணா" எனும் பெயர் கூட 2009 உடன் உன்னை விட்டு ஓடிவிட்டது. அதற்குப் பின்னர் வந்த 10 வருடங்களில் உன்னை ஆட்டுவிக்கும் சிங்கள, இந்திய புலநாய்வுப்பிரிவுகளும் இன்னும் இன்னோரென்ன சக்திகளும், உனது இனத்துரோகத்திற்கான பரிசாக உன்னை உயிருடன் புதைத்துக்கொண்டிருக்கின்றன. உனது கதைதான் எவ்வளவு கேவலமானது? 1957 இல் மறைந்த மக்கள் திலகம் எம் ஜி ஆர் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய வரிகள் உனக்கும் எவ்வாறு பொருந்திச் செல்கிறதென்பதைப் பார். "உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம் எது? நிலை கெட்டுப் போன நய வஞ்சகரின் நாக்குத்தான் அது!".
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.