Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Leaderboard

 1. Justin

  Justin

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   10

  • Posts

   4,150


 2. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Posts

   60,487


 3. புரட்சிகர தமிழ்தேசியன்

  புரட்சிகர தமிழ்தேசியன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   4

  • Posts

   14,550


 4. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   4

  • Posts

   21,334


Popular Content

Showing content with the highest reputation on வெள்ளி 21 மே 2021 in all areas

 1. பூஞ்சணங்கள் தரும் கிலி: என்ன நடக்கிறது இந்தியாவில்? கோவிட் தொற்றுக்களின் சமகால அல்லது பின்விளைவாக கறுப்புப் பூஞ்சணமும் (தற்போது வெள்ளைப் பூஞ்சணமும்) பரவி வருவதாகச் செய்திகள் வருகின்றன. இவற்றுள் கறுப்புப் பூஞ்சணத்தின் தொற்றுக் காரணமாக இளம் வயதினர் பலர் கண்களை இழக்க வேண்டிய சத்திர சிகிச்சைக்குட்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கறுப்புப் பூஞ்சணம் என்பது என்ன? எங்கள் சூழலில் அழுகல் வளரிகளாக ஏராளமான பூஞ்சண (fungi) இனங்கள் வளர்கின்றன. மண்ணிலும், நீரிலும் வளரும் இந்தப் பூஞ்சண இனங்களில் மிகப் பெரும்பாலானவை மனிதர்களிலோ விலங்குகளிலோ நோய்களை உருவாக்குவதில்லை. தினசரி நாம் சுவாசிக்கும் காற்றின் வழியே இந்தப் பூஞ்சணங்களின் விதைகளுக்கொப்பான மகரந்தங்கள் எங்கள் உடலினுள் சேர்கின்றன - ஆனால் பெரும்பாலானவை நோயை உருவாக்குவதில்லை. ஆனால், கறுப்புப் பூஞ்சணம் எனப்படும் மியூகோர் (Mucorales) வகைப் பூஞ்சணம் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி குறைந்தோரில் மட்டும் தொற்றையும் நோயையும் உருவாக்கும். இப்படி உருவாகும் நோயைத் தான் மியுகோர்மைகோசிஸ் (mucormycosis) என்று அழைக்கின்றனர். சாதாரணமாக, இந்த நோயின் தாக்கம் மேற்கு நாடுகளில் மிக அரிது: அமெரிக்காவில் இந்தத் தொற்று ஒரு லட்சத்தி நாற்பதினாயிரம் பேர்களில் ஒருவரைத் தாக்கும் அளவுக்கு அரிதாக இருக்கிறது. இந்தியாவில், இந்த அளவீடு இன்னமும் சரியாகக் கணிப்பிடப் படவில்லையாயினும், கறுப்புப் பூஞ்சணத் தொற்றுக்கள் பற்றி அதிகமாக இப்போது செய்திகளில் வருவதைப் பார்க்கும் போது, தொற்றுக்கள் அதிகம் என்றே கருதப் படுகிறது. வெள்ளைப் பூஞ்சணம் என்பது என்ன? கடந்த ஒரிரு நாட்களில், வெள்ளைப் பூஞ்சணத் தொற்றும் அதிகரித்திருப்பதாக செய்திகள் வருகின்றன. வெள்ளைப் பூஞ்சணம் என்பது வேறான ஒரு இனமான கன்டிடா அல்பிகன்ஸ் (Candia albicans) என்ற பூஞ்சணம். கறுப்பு பூஞ்சணம் போல உடலுக்கு வெளியே சூழலில் இருந்து வருவதல்ல. கன்டிடா வகைப் பூஞ்சணங்கள் எங்கள் உடலின் வாய், இனப்பெருக்க உறுப்புகள் போன்ற பகுதிகளில் ஒத்துவாழும் உயிரியாகக் (commensal) காணப்படுகின்றன - சாதாரண மனிதர்களில் தீங்கெதுவும் பெரிதாகச் செய்வதில்லை. ஆனால், உடலின் நோயெதிர்ப்புச் சக்தி நன்கு குறைக்கப் பட்ட எயிட்ஸ் போன்ற நிலைமைகளில் கன்டிடா அல்பிகன்ஸ் வெள்ளைப் பூஞ்சணமாக வாய், இனப்பெருக்க உறுப்புகளில் வளர ஆரம்பிக்கும். இதைக் கன்டிடியாசிஸ் (candidiasis) என்பர். சில சமயங்களில், இந்த வெள்ளைப் பூஞ்சணத் தொற்று, சுவாசக் குழாயினூடாக கீழிறங்கி சுவாசப் பைகளையும் தாக்கக் கூடும் -இது இப்போது இந்தியாவில் நடந்து வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில், மருந்துகளை உடனே செலுத்த வேண்டிய தேவைக்காக உடலினுள் நீண்ட நாட்களாக ஊசிகளை இரத்தக் கலன்களினுள் செலுத்தி வைத்திருக்கும் indwelling catheters எனப்படும் மருத்துவ உபகரணங்கள் மூலமும் கன்டிடா தொற்று நிகழலாம். இப்படி உருவாகும் வெள்ளைப் பூஞ்சணத் தொற்று, இரத்தம் மூலம் உடல் முழுவதும் பரவ வாய்ப்புகள் அதிகம். திடீர் அதிகரிப்பின் காரணங்கள் எவை? அடிப்படையான காரணம்: கோவிட் தொற்றிற்காக வழங்கப் படும் மருந்துகளில் ஒன்று டெக்சாமெதசோன் (dexamethasone) எனப்படும் அழற்சி எதிர்ப்பு மருந்து. இந்த மருந்தின் வேலை உடலின் அழற்சி எதிர்ப்பை மந்தப் படுத்தி கோவிட் தொற்றின் தீவிரத்தை இல்லாதொழிப்பதாகும். இதன் பக்க விளைவு: மந்தமான அழற்சி பூஞ்சணம் போன்ற ஏனைய நுண்கிருமிகளுக்கெதிரான உடலின் நோயெதிர்ப்பைக் குறைத்து விடுவதாகும். அப்படியானால், இந்த மருந்து பயன்படுத்தப் படும் வேறு பல நாடுகளில் கறுப்பு வெள்ளைப் பூஞ்சணங்கள் கடந்த ஒரு வருட காலத்தில் பிரச்சினையாக உருவாகவில்லையென்பது கவனிக்க வேண்டியது. இந்தியாவிற்குரிய பிரத்தியேக காரணம்: நோயாளிகளைப் பராமரிக்கும் சூழலின் சுத்தமின்மை. இந்தியாவின் கோவிட் அவலம் பற்றி வெளிவரும் காணொளிகளில் நீங்கள் இந்த சுத்தமின்மையை தெளிவாகக் காணலாம்: மயங்கிக் கிடக்கும் கோவிட் நோயாளிகளுக்கு அருகிலேயே நோயாளியின் உறவினர்களும் (பலர் முகக் கவசத்தை வாய்க்கு மட்டும் அணிந்த படி!) கூட்டமாக இருப்பது, கைகளில் கையுறை இன்றியே தாதிகளும், சில சமயம் மருத்துவர்களும் நோயாளியைத் தொடுவது என்று பல அடிப்படைச் சுகாதார நடைமுறைகளை மீறிய செயல்களை சாதாரணமாகக் காணலாம். மேலும், தற்போதைய பல கோவிட் தீவிர சிகிச்சை நிலையங்கள் இந்தியாவில் சாதாரண கட்டிடங்களில், வெளிக்காற்றைச் சுத்திகரிக்கும், சுழற்சி செய்யும் எந்த ஏற்பாடுகளுமின்றி இயங்க வேண்டிய நிலை. இது சூழலில் இருந்து தொற்றும் கறுப்புப் பூஞ்சணத்தை நன்கு பரவ அனுமதிக்கும் ஒரு செயல் பாடு. எப்படித் தடுப்பது? இந்த இரு வகைப் பூஞ்சணத் தொற்றுக்களையும் குணமாக்கும் மருந்துகள் பல ஆண்டுகளாகப் பாவனையில் இருக்கின்றன - மிக இலகுவாகக் கிடைக்கின்றன. ஆனால், கறுப்புப் பூஞ்சணம் உடலினுள் நன்கு ஊடுருவிக் கட்டிகளாக வளரும் இயலுமை கொண்டதால், சிகிச்சை அளித்த பின்னர், சத்திர சிகிச்சை மூலம் பாதிக்கப் பட்ட இழையங்களை அகற்ற வேண்டியது அவசியமாகிறது - இல்லையேல் அந்தப் பூஞ்சணக் கட்டியில் இருந்தே எதிர்காலத் தொற்றுக்கள் புதிதாக உருவாகும். ஆனால், இந்தத் தொற்றுக்கள் பரவாமல் தடுக்கும் முறையே வினைத்திறன் மிக்கது. நோயாளிகளைப் பராமரிக்கும் விடுதிகள் அதிகம் மனிதப் போக்குவரத்தற்ற இடங்களாக இருக்க வேண்டும். சுவாச உதவிக்காக இயந்திரங்கள் பயன்படுத்தப் படும் போது, அவற்றின் குழாய்கள் முறையாகத் தொற்று நீக்கப் பட வேண்டும் - பாரிய எண்ணிக்கையான கோவிட் நோயாளிகள் காரணமாக இந்த சாதாரண தொற்று நீக்கல் நடவடிக்கைகளிலும் சறுக்கல்கள் ஏற்படும் நிலை ஏற்படக் கூடும். எனவே தான், கோவிட் தொற்றின் மரணங்களையும், பின்விளைவுகளாக உருவாகும் இது போன்ற பூஞ்சணத் தொற்றுக்களையும் குறைக்க மிக அடிப்படையானதும் வினைத்திறனானதுமான நடவடிக்கை: மருத்துவ மனைகள் நிரம்பி வழியாமல் தடுத்தல். இதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதை பலர் பல்லாயிரம் வழிகளில் அலசி விட்டதால், இங்கே குறிப்பிட அவசியமில்லை என நினைக்கிறேன். - ஜஸ்ரின்.
  9 points
 2. வேலியிலை.... போற ஓணானை, வேட்டிக்குள்ளை விட்ட மாதிரி ஆயிடும். நமக்கு.. இரண்டும் வேண்டாம்.
  3 points
 3. உடல் சூட்டை தணிக்கும் நுங்கு பாயசம்கள் .
  2 points
 4. மச்சானே அச்சாரம் போடு........!
  2 points
 5. வணக்கம், அன்புத்தம்பி..! உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களில்,நானும் ஒருவன் என்னும் வகையில் சில கருத்துக்களை முன் வைக்க விளைகின்றேன்! கீதை என்பது வேதமன்று! அது ஒரு வேதாந்த நூல் மட்டுமே! அதாவது வேதத்தின் சில சாராம்சங்களை எடுத்துச் சொல்கின்றது! அதற்குப் பல உரைகள் எழுதப்பட்டுள்ளன! சில வேளைகளில், உரைகள் மூலத்தைத் திரிபு படுத்துகின்றன! காலப் போக்கில் அதுவே...கீதையாகி விடுகின்றது! உதாரணத்துக்குப் பிராமணரைக் கீதை மிக உயரத்தில் வைக்கின்றது! சில உரைகளில், பிராமணன் என்னும் ஸ்தானம், பிறப்பால் மட்டும் வருவதாகக் குறிப்பிடப் படுகின்றது! சில உரைகளில், கல்வி அறிவால், ஒருவர் செய்யும் உயரிய செயல்களால் பிராமணன் என்னும் ஸ்தானம் அடையப் படுவதாகக் குறிப்பிடப் படுகின்றது! மேற்குறிப்பிடப்பட்ட பகுதி எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது! எல்லா அறங்களையும் விட்டு ..விட்டுத் தன்னை வணங்கும் படி அவன் கூறுவதாக நினைவில்லை! நீ நல்லவனாக வாழ்ந்தாயோ இல்லையோ...மரணத் தறுவாயில் உன்னிடம் இருக்கும் மனநிலையே உனது அடுத்த பிறப்பைத் தீர்மானிக்கின்றது என்று தான் கூறுகின்றான்!நீயும்,நானும் வேறு, வேறு அல்ல! உனது ஆன்மாவின் அருகிலேயே நான் இருக்கின்றேன் என்று தான் அவன் கூறுகின்றான்! அதாவது உனது ஆன்மாவானது எனது விம்பம் என்று தான் கூறுகின்றான்! தொடர்ந்தும் எழுதுங்கள்...!
  2 points
 6. அதாவது 10% மான ஏவுகணைகள் இசுரவேலின் ஏவுகணைத் தடுப்பு வலையத்தைத் தாண்டிச் செல்வதென்பது உண்மையில் மிகப் பெரும் சாதனைதான். இதனை ஹமாசின் ஏவுகணைகளுடன் மட்டும் பார்க்காது, லெபலானின் கிஸ்புல்லா, ஈரான் என்பவற்றின் ஆயுத பலத்தினோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இஸ்ரவேலுடன் ஒப்பிடுகையில் 'கொசு' ஹமாசின் தாக்குதலையே வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியாத இசுரேல் எப்படி ஈரானுடனோ அல்லது லெபனானின் ஹிஸ்புல்லாவுடனோ தாக்குப்பிடிக்க முடியும் ? இந்தப் பதினொரு நாள் சண்டையில் இஸ்ரவேல் மீதான ஏவுகணைத் தாக்குதலை எள்ளளவும் இஸ்ரேலால் தடுக்கமுடியவில்லை. பதிலாக இஸ்ரேல் காசாவிலுள்ள அடுக்கு மாடிக் கட்டடங்களை எல்லாம் தரைமட்டமாக்குகிறது. எங்கள் மீது கைவைத்தால் உங்களைக் கற்காலத்துக்கு அனுப்பிவிடுவேன் என்றா இஸ்ரவேல் கூறுகிறது ? ""ISIS ஐ உருவாக்கி மத்திய கிழக்கை துண்டு துண்டாக மீண்டுமொருமுறை உடைக்க முனைந்த இஸ்ரவேல் + அமெரிக்க திட்டம் இறுதியில் இஸ்ரவேல் அமெரிக்கா இரண்டிற்கும் பாதகமாகவே முடிந்திருக்கிறது"" இந்தப் பதினொரு நாள் யுத்தம் உண்மையில் இஸ்ரவெலின் பலவீனத்தைப் புடம்போட்டுக் காட்டிவிட்டது. இஸ்ரவேல் தன்னைச் சூழவும் தன்னுள்ளேயும் எதிரிகளை (ஈரான், சிரியா, லெபனானின் கிஸ்புல்லா மற்றும் இஸ்ரவேலினுள் உள்ள அரபிக்கள்) வைத்துக் கொண்டு எப்படி அமைதியாக வாழ முடியும் ?
  2 points
 7. பட்டறிவு கொண்டு படை நடத்திய ‘பால்ராஜ்’ – மருத்துவர் தணிகை 169 Views அசாத்திய திறமைகளால் – எம்மை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கிய ஆற்றலன் புகழ் சிரஞ்சீவியாக எம் மண்ணில் என்றுமே நிலைத்திருக்கும் எண்பதுகளின் நடுப்பகுதில் ஒரு கெரில்லா(guerrilla) போராட்ட வீரனான முத்திரை பதித்தவர் பால்ராஜ் அவர்கள், அந்த கெரில்லா அணிகளை வழிநடத்தி பல வெற்றிகளை பெற்றார். கெரில்லா போராட்ட வடிவம் மரபுவழி வடிவம் பெற்ற போது, அந்த மரபுவழி இராணுவத்தையும் வழிநடாத்தி வெற்றிகளை குவித்த ஒரு தளபதியை தமிழினம் சமர்க்கள நாயகன் என அழைத்தது. ஒரு நவீன மரபுவழிச் சமரானது பல்வேறு வகைப்பட்ட, பல்வேறு வகையான தேர்ச்சி மிக்க வீரர்களால் மேற்கொள்ளப்படுகின்றது. நவீன சமர்க்களங்கள் என்பது முன்னணி, பின்னணி என இருவகையாக பிரிக்கப்பட்டிருப்பதுடன் பல பிரிவு போராளிகளின் கடுமையானதும், தேர்ச்சி மிக்கதுமான உழைப்பினால் வெல்லப்படுகின்றது. பல்வேறு தேர்ச்சிகள் மிக்க பல நூறு போராளிகளை மிகத் திறமையாக வழிநடத்தி பல இராணுவ வெற்றிகளை தமிழினத்திற்கு பெற்றுத் தந்தவர் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள். “Taking care of the wounded in battle is a key element in sustaining the morale of an army or any organised fighting force.” – Taraki Sivaram- ஒரு பின்னணி போராளியாக சமர்க் களங்களின் பின்னே அவரது தலைமையில் மகத்தான மருத்துவப்பணி செய்த எனது பார்வையில் சமர்க்கள நாயகன் எப்படி இருந்தார் என கீழே பதிவு செய்கின்றேன். எமது போராளிகள் சாவுக்கு அஞ்சாதவர்களாக போர்க் களங்களில் உலா வருவார்கள். ஆனால் போரில் விழுப்புண் அடைவதால் உண்டாகும் வலியினை போக்கிட அருகே களமருத்துவர்கள் அருகிருக்க வேண்டும் என்பதை அதிகம் விரும்புவார்கள். அப்படி களமருத்துவர்கள் நெருக்கமாக அருகிருந்த சமர்களில் எல்லாம் களமுனை போராளிகளின் போரிடும் ஆற்றலும், வினைத்திறனும் அதிகம் இருந்ததை தனது பட்டறிவால் பரிபூரணமாக அறிந்தவர்தான் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள். ஆம், மேற்படி இராணுவ ஆய்வாளரும் மாமனிதருமான சிவராம் சொன்னது போல போரிடும் வீரர்களுக்கு தேவையானது என்ன என்பதை அச்சொட்டாய் புரிந்து கொண்டவர் எங்கள் சமர்க்கள நாயகன். எந்தச் சமரினை எடுத்துக் கொண்டாலும் அச் சமருக்காக தனக்கு தலைவரால் வழங்கப்பட்டுள்ள களமருத்துவ அணியின் ஆற்றல்கள் எத்தகையது? மருத்துவ அணியில் எத்தனை களமருத்துவர்கள் உள்ளனர்? எத்தனை மருத்துவ நிர்வாக போராளிகள் உள்ளனர்? எங்கெங்கு நிலையெடுத்து உள்ளனர்? அவர்களின் நடைபேசி(Walkie Talkie) இலக்கம் எல்லாமே அவரிடம் இருக்கும். அந்த விபரங்களை எல்லாமே தனது கையடக்கக் குறிப்பேட்டில்(Note Book) குறித்தும் வைத்திருப்பார். எல்லா விபரங்களையும் குறிப்பேட்டில் ஒரு எழுதுவினைஞர் போல எழுதி வைத்திருந்தாலும் தேவைப்படும் போது தனது அதீத நினைவாற்றல் மூலம் நினைவுபடுத்தியே கட்டளைகளை இட்டவாறு இருப்பார். மருந்தும் மருத்துவமும் எவ்வளவு முக்கியமோ அதேயளவு வெடிமருந்து களஞ்சியத்தையும்(Ammunition andArmory) அவற்றை விநியோகம் செய்யும் அணியையும் தன்னருகிலேயே வைத்திருப்பார். ஒரு சமர்க்களத்தில் முன் தளத்தைப்(Foreword Defence Line) போலவே பின் தளத்தையும் ஆழமாகவும் நுணுக்கமாகவும் ஆராய்ந்து தானே நேரடியாக ஒழுங்கமைப்பவர். முன்னணியில் நின்று மூர்க்கமுடன் களமாடும் வீரனுக்கு கொடுக்கும் அதே அளவு மரியாதையினை அங்கீகாரத்தினையும் பின்னணியில் நின்று பணி செய்யும் வீரர்களுக்கு கொடுப்பார். பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் அடைந்த மகத்தான வெற்றிகளின் பின்னணியில் இந்த துல்லியமான ஒழுங்கமைப்பும் அதற்கு என்றுமே கட்டியம் கூறி நிற்கும். “லீமா” எனும் குறியீட்டுப் பெயரினால் களத்திடையே கனகாலம் வாசம் செய்த இவரின் இயற்பெயர் கந்தையா பாலசேகரம் ஆகும். பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இந்த உளவுரண் ஊட்டல் என்றுமே நல்லூட்டமாய் அமைவதால் முன்னணி வீரர்களை போலவே பின்னணியில் சேவையாற்றும் நாங்களும் எப்போதுமே காலில் சக்கரம் பூட்டியவர்களாக வேகமாக இயங்கிக் கொண்டே இருப்போம். உலக இராணுவ வல்லுனர்களால் வியந்துரைக்கப்படும் குடாரப்பு தரையிறக்கமும் அதைத் தொடர்ந்து ஆனையிறவுப் பெருந்தளத்துக்கான விநியோக வழிகளை(A9 நெடுஞ்சாலை) துண்டாடி இரவு பகலாக முப்பது நான்கு (34)நாட்கள் சமராடிய அணிகளை வெற்றிகரமாக வழிநடத்திய அந்த நாட்களை செம்மொழியாக எம் மொழியாலும் இயம்பிட முடியாது. இத்தாவில் பகுதியில் பெட்டி போன்ற வடிவில் வியூகம் அமைத்தாடிய சமரின் வெற்றியின் இரகசியங்களில் ஒன்று அவரின் கடின உழைப்பு ஆகும். அதே போல போராளிகள், இளநிலை தளபதிகள், சிறப்பு எல்லைப்படை வீரர்கள் சமர்கள நாயகன் மீது கொண்டிருந்த அதீத நம்பிகையும் பென்னம் பெரிய வெற்றியை நோக்கி அவர்களை உந்தியது. போராளிகள் நம்பிக்கை வைத்திருந்ததை போலவே பொதுமக்களும் எங்கள் சமர்க்களநாயகன் மீதிலே பெருநம்பிக்கை வைத்திருந்தார்கள். மார்ச் கிரெகொரியின் நாட்காட்டியின் மூன்றாவது மாதமாகும். இம்மாதம் “மார்ஸ்” என்னும் உரோமானியப் போர்க் கடவுளின் நினைவாகப் பெயரிடப்பட்டது. தமிழர்களைப் பொறுத்த வரையிலும் அவர்கள் “பால்ராஜ்” எனும் தம் போர்க் கடவுளை அதிகம் நினைக்கும் மாதம் ஆகும். ஆம், அப்படியொரு பங்குனியில் தான் வடமராட்சியின் கிழக்கு சுடுமணலில் காயப்படும் மக்களுக்காகவும், விழுப்புண் அடையும் போராளிகளுக்காகவும் காப்பகழிகள் அமைத்துக் கொண்டிருந்தோம். மணல் மண்ணின் தன்மை இறுக்கமானது அல்லவே அதனால் நீரில் எழுத்துப் போல அது முடியாத காரியமாகவே இருந்து கொண்டிருந்தது. எதிரியும் பலமுனைகளில் இருந்தும் ஆட்லெறி, ஐந்து இஞ்சி எறிகணைகள் என எங்கள் மக்கள் பெருமளவில் தங்கியிருந்த செம்பியன்பற்று பிலிப்பு நேரியார் ஆலயத்தை அண்டிய பிரதேசத்தில் அள்ளிக் கொட்டிக் கொண்டேயிருந்தான். அந்த நேரத்தில்தான் சுண்டிக்குளத்திலிருந்து கடற்புலிகளின் அரசியற்பிரிவைச் சேர்ந்த ஒருவர் எங்களிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்தினார். போரில் சிக்குண்ட மக்கள் சுண்டிக்குளம் பகுதியில் தங்குவதற்காக கொட்டகைகள் அமைத்துவிட்டு பெரிய வாகனம் ஒன்றைக் கொண்டு வந்திருந்தார். அங்கிருந்த அருட்தந்தை பிரான்சிஸ் அடிகளார்தான் தன் பங்கு மக்களையும் அயலூர் மக்களையும் காத்து நிழலாக நின்றவர். ஆதலால் அருட்தந்தை ஊடாகவே மக்களுடன் பேசி பாதுகாப்பான சுண்டிக்குளம் பகுதிக்கு அழைத்துச் செல்ல முற்பட்டார். மக்கள் பின்னே செல்ல மறுத்துவிடடார்கள். எல்லாமே பயன் அற்றுப்போய் அவர் எங்களிடம் வந்தார். காயமடைந்தவர்களுக்கு மருத்துக்கட்ட (Wound Dressing) முதல் நாளும் அவர்களுக்கு ஏற்புவலித் தடுப்பு ஊசி (Anti Tetanus Toxoid) போடுவதற்கு என இரண்டாவது நாளுமாக, இரண்டு நாட்கள் முன்னரே அவர்களுடன் பழகியவர்கள் என்ற முறையில் உதவி மருத்துவர் வண்ணனும் மருத்துவத் தாதி அருள்நங்கையும் அடியேனும் அவர்களுடன் பேசினோம். அதன் பின்னர் சிலர் சம்மதித்தனர். இப்போது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மறுத்தவர்களிடம் காரணம் கேட்டோம். “இஞ்சை வந்திருக்கிறது பால்ராஜ் தம்பி, ஆனையிறவில் உள்ள ஆமி இரண்டொரு நாட்களில் ஓடிவிடுவான்”…பிறகு “நாங்கள் ஏன் ஓடுவான்…?” என்று இராணுவ ஆலோசகர்கள் போல எங்களிடம் திரும்பக் கேள்வி கேட்டார்கள். ஆம், தமிழர்கள் தம் காவல் தெய்வங்களை வெகுவாகவே நம்பினார்கள். அதிலும் சமர்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் (Man of Valour) அவர்களை மக்கள் மலையாகவே நம்பினார்கள். அஃதே, சமர்கள நாயகனும் மக்களை ஆழமாக நேசித்தார் என்பதற்கும் பெட்டிச் சமரில் நடந்த ஒரு சம்பத்தையே உதாரணமாக சொல்கின்றேன். இத்தாவில் பெட்டிச் சசமர் நடந்த பகுதியில் சிக்கிய மூன்று குடும்பங்களை சேர்ந்த எட்டுப்பேரை கண்டு கொண்ட லெப்.கேணல் இராஜசிங்கன் தலைமையிலான சாள்ஷ் அன்ரனி படையணியினர் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு நடைபேசியில் அறிவித்தனர். உடனடியாக அவர்களை ஒரு கீறல் காயங்கள் கூட ஏற்படாதவாறு அவர்களின் உடமைகளுடன் பின்னுக்கு அனுப்பி வைக்குமாறு கட்டளையிட்டார். இத்தாவிலுக்கும் செம்பியன்பற்றுக்கும் இடையில் உள்ள நன்னீர் எரியூடகத்தான் அவர்கள் படகுகள் மூலம் பின்னுக்கு பக்குவமாக அனுப்பப்பட்டார்கள். அவ்வாறு பின்னுக்கு அனுப்பட்டவர்களில் நான்கு பேர் மிகவும் வயதானவர்கள் அவர்களில் ஒருவர் 94 வயது மூதாட்டி ஆவார். பெட்டிச்சமர் நிறைவுக்கு வந்து ஆனையிறவும் முழுமையாக மீட்கப்பட்ட பின்னர் ஏறத்தாழ மூன்று மாதங்களின் கடந்த நிலையில் களமுனை களமருத்துவர்களையும் மருத்துவ போராளிகளையும் சந்தித்தார். நடந்து முடிந்த சண்டை தொடர்பில் நிறைய விடையங்களை பேசியதுடன் எங்கள் எல்லோரையும் வெகுவாக பாராட்டினார் அதன் ஒரு கட்டத்தில் இத்தாவில் களத்திடை மீட்கப்பட்ட பொதுமக்கள் தொடர்பிலும் கேட்டார். அத்தனை வேலைகள் பணிச்சுமைகள் மத்தியிலும் அந்த மக்கள் தொடர்பில் அவர் கேட்ட போது நாங்கள் அனைவரும் அசந்து போனோம். அவர்களை எங்கே அனுப்பி வைத்தீர்கள் எனக் கேட்டார். நல்ல காலம் நாங்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரிடம் அந்த மக்களை அனுப்பிய போது அவர்கள் தந்த ஒரு கடிதம் என்னிடம் இருந்தது. அந்த கடித்தில் இருந்த அவர்களின் முகவரியை பார்த்துச் சொன்னேன். சந்திப்பின் இறுதியில் அந்த மூதாட்டி தற்காலிமாக தங்கியிருந்த அக்கராயன் கிளிநொச்சி விலாசத்தை தனது குறிப்பேட்டில் குறித்துக் கொண்டார். மிடுக்கு மிகுந்த இந்த மூத்த தளபதியின் எல்லையில்லாத பேரன்பும் பேச்சும் மூச்சும் எங்களை அன்று இயக்கிக் கொண்டேயிருந்து. தமிழர்தம் போரியல் மேதை சமர்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் காலத்தில் வாழ்ந்தோம் என்பதில் அதிகம் அதிகம் பெருமை கொள்கின்றோம்! அசாத்தியமானது என எதிரி எதிர்பார்த்த களநிலைகளும் வெற்றிகளும் எங்கள் சமர்க்களநாயகன் முன் சாத்தியம் ஆகிய போரியல் வரலாறுகள் நீண்டு பெரும் அத்தியாயங்களை கொண்டது. அவற்றை நினைவு கூருவதும் பதிவு செய்வதும் எம்மை நாமே மீளாய்வு செய்யவும், அவர் போன்ற வீரத் தளபதிகளின் தடம் பதித்து எமது உரிமைகளை வென்றெடுக்கவும் வழி சமைக்கும். https://www.ilakku.org/?p=50181
  2 points
 8. தமிழர்களை அசிங்கப்படுத்தும் சமந்தா.
  1 point
 9. கனடா நாட்டில் “The Unbreakable Woman” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இலங்கை பெண் – குவியும் பாராட்டுக்கள் கனடா நாட்டின் Canadian Occupational Safety சஞ்சிகையினால் நடாத்தப்பட்ட “நாடுதழுவிய ஆழுமை மிக்கவர்களுக்கான” போட்டித் தேர்வில் “The Unbreakable Woman” பட்டத்தினை இலங்கையின் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகக் கொண்ட புஷ்பலதா மதனலிங்கம் என்பவர் பெற்றுக் கொண்டுள்ளார். இலங்கையிலிருந்து யுத்த அகதியாக கனடா நாட்டில் புலம்பெயர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான புஷ்பலதா ஒரு விதவை பெண்ணாக பல தடைகளை கடந்து ரேயொர்சன் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினை மேற்கொண்டதோடு, தனது அயராத முயற்சியினால் ஒன்டாரியோ தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு ஆலோசனை நிறுவனத்தினையும் ஆரம்பித்து பல்வேறு இடர்முகாமைத்துவ சேவைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரொனா தொற்றானது கனடா நாட்டில் மிக வேகமாக பரவி பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இறந்து கொண்டிருந்த வேளையில் தனது இடர்முகாமைத்துவ அமைப்பின் ஊடாக உயிர்காப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். இத்தகை துணிச்சலாலும், மன உறுதியாலும் கனடா நாட்டினை கொரொனா நோய் தொற்றிலிருந்து மீட்டெடுக்க உதவியமைக்காகவும், துணிச்சல் மிக்க பெண்களை வெளி உலகத்திற்கு இனங்காட்டும் வகையிலும் Canadian Occupational Safety சஞ்சிகையினால் “The Unbreakable Woman” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். கனடா நாட்டின் உயர்சாதனை படைத்தவர்களின் வரிசையில் தனது பெயரைப் பொறித்தமையின் ஊடாக உலகெங்கும் வாழும் தமிழ்ப் பெண்களை தலை நிமிர வைத்துள்ளதாகவும் தனக்கு மட்டுமே வாழாமல் தன் தேசத்துக்கும் தன்னை அர்ப்பணித்த இப் பெண்னால் ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களும் பெருமை கொள்வதாகவும் பலர் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். https://www.meenagam.com/கனடா-நாட்டில்-the-unbreakable-woman-பட்டம/
  1 point
 10. இனிமேல் அவர் மகிந்தவின் கோத்தபாயவின் அனைத்து அநியாயமான முடிவுகளுக்கும் தலை அசைப்பார் அதாவது தமிழர்கள் தலை அசைப்பர்??
  1 point
 11. தியேட்டர்களில் வெளியானால் அவற்றை முடக்கலாம். ஆனால் இது அமேசன் ஓடிடியாமே? உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமது அமேசன் கணக்குகளை இரத்து செய்ய வேண்டும்.
  1 point
 12. நாங்கள் விடுதலை புலிகள் செய்தவை சரியா , பிழையா என ஆராட்சி செய்து கொண்டிருக்கிறோம்.
  1 point
 13. இலங்கைஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தமிழ் செய்திகளின் முன் இசை என நினைக்கின்றேன்
  1 point
 14. வையிரவருக்கு வாய்ச்ச நாய் மாதிரி எண்டு சொல்லுவினம்.... போர்த்துக்கேயர் காலத்தில், பிற மத வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த போது, சூலத்தை நட்டு வச்சு, கும்புடுவதும், போர்த்துகேயன் அந்த பக்கம், கேள்விப்பட்டு வந்தால், தேங்காய் உரிக்க தான் வைச்சிருக்கிறோம் எண்டு, கும்பிடாத நேரங்களில் ஒரு தேங்காயினை தூக்கி சூலத்தில குத்தி வைக்கிறதும் வழக்கமாக இருந்திருக்கிறது. நாய், போய் அந்த சூலத்துக்கு பக்கத்தில, நிண்டு, தேங்காயை இழுக்க நிண்டு, நிண்டு..... நாய்க்கும், வையிரவருக்கும், ஒரு கானெக்சின் வந்துடுது. மறைந்த செங்கை ஆழியான் என்ற எழுத்தாளர் சொல்லுவார்.... போர்த்துக்கயேன் வந்து, 'என்ன நீ வேற சாத்தானை கும்புடுகிறாயாம்' என்றால்..... 'சிவ, சிவா... எண்ட ஜேசுவை நான் மறப்பேனா' என்று பாமரத்தனமாக சொல்லும் வழக்கம், கர்ண பரம்பரையாக இருந்ததாம். போர்த்துகேயனுக்கு, பே, பிசாசு பயம் காட்டி, தங்கள் வழிபாடுகளை தடை இல்லாமல் செய்ய, வையிரவர் உதவினார் என்று சொல்வார்கள்,
  1 point
 15. இலங்கையில்... சட்டமா அதிபர்களாக, பொலிஸ் மா அதிபர்களாக, வெளிவிவகார அமைச்சராக, உயர்நீதியரசர்களாக இலங்கையை நிர்வகிக்கும் அதி உயர் பதவிகளில் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் பெயர்கள் மட்டுமே தமிழில் இருக்கும் மற்றும்படி தம்மை தமிழர் என்று வடக்கு கிழக்கு தமிழர்கள் சொல்வதை அடியோடு வெறுப்பவர்கள், தமிழராக தம்மை பொதுவெளியில் காட்டிக்கொள்வதை விரும்பாதவர்கள், ஒரு சிங்களவனைவிட சிங்கள தேசத்தின்மீது அதியுயர் விசுவாசமாகவும், சிங்கள இனத்திடம் தமது உரிமைகளை வேண்டி நிற்கும் தமிழர்கள்மீது கொலைவெறி கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இந்த தமிழர்களைவிட கோத்தபாயவும் இலங்கையின் இனவெறி தேரர்களும் எவ்வளவோ உயர்வானவர்கள், அவர்கள் தமிழரின் எதிரிகள் என்ற உண்மையை எப்போதும் மறைத்ததில்லை. வேடதாரி தமிழர்களைவிட வெளிப்படையான எதிரிகள் உயர்வானவர்களே.
  1 point
 16. தற்போதைய நிலையில் கொரோனா வட கிழக்கில் அதி தீவிரமாகப் பரவல் அடைகின்றது மக்கள் அலட்சியமாகத் திரிவது முக்கியமான ஒரு காரணம். முடிவில் போர்க்காலச் சூழலைப் போல ராணுவம் வீட்டுக்கு வீடு காவல் நிற்கும் நிலையும் வரலாம் .
  1 point
 17. எனக்கு இன்றளவும் பிடிக்காத இசையும், விளம்பரமும் இதுதான். மிகவும் அந்நியமான ஒலி..! செத்த வீட்டில் மெல்லிய ஒப்பாரி மாதிரி காதில் விழுவதால், அப்பொழுதெல்லாம் தொலைக்காட்சியை சிறிது நேரம் கழித்துதான் போடுவது வழக்கம். இன்னமும் தூர்தர்சனும், அதன் ஒளிபரப்பின் (ஆ)ரம்ப ஒலியும் இருக்கிறதா..? என தெரியவில்லை.
  1 point
 18. இஸ்ரேலை அவ்வளவு எளிதாக எடை போட முடியாது. அடுத்து ஏதாவது நடந்தால், அவர்களின் நகர்வுகள் இன்னும் மூர்க்கமாகவே இருக்கும்.
  1 point
 19. ரொக்கட் விட்டு இஸ்ரேலிடம் அடிவாங்கியது பலஸ்தீனியர்கள். ceasefire அறிவித்தல் வந்ததும் வெற்றி விழா கொண்டாட்டம் கொண்டாடுகிறார்கள் ரொக்கட் விடாமலே இருந்திருக்கலாம். ஈழதமிழர்கள் யாரை ஆதரிக்க வேண்டும் சியா முஸ்லிம்கள் சன்னி முஸ்லிம்கள்
  1 point
 20. நேற்று வரை இங்கு பூத்து இருந்தீர் கரும் நெருப்பென போகவோ காத்திருந்தீர்? விதியினை மாற்றிய புலி ஒன்று இங்கு வீசிடும் காற்றிலும் உந்தனின் பெயர் உண்டு 05-21-****
  1 point
 21. மகிழ்ச்சி.. மிக மகிழ்ச்சி
  1 point
 22. என்னம்மா.... அங்க சத்தம்.
  1 point
 23. உறவுகளே தாயகத்தில் நடந்துவரும் அடக்குமுறைகளால் எமது புல உறவுகள் ஒரு விளக்கைதானும் ஏற்றி தெய்வங்களாகிபோன எமது இரத்த உறவுகளை நினைவுகூற முடியாது தவித்துவருகையில் , நினைவஞ்சலி செய்யக்கூடிய நிலையில் இருந்தவர்கள் எப்படியெல்லாம் நினைவஞ்சலி செலுத்தினோம் என்பதை இங்கே பதிவு செய்வோம், அதன் மூலம் எமது விடுதலை வேட்கை தணியவில்லை, நீறு மட்டுமே பூத்திருக்கிறது என்பதை தெளிவாக முரசறைவோம் சிங்கையில் என்னால் முடிந்த அளவில் என்னுறவுகளுக்காக செலுத்திக்கொண்ட அஞ்சலி
  1 point
 24. இஸ்லாமியர்கள் ஒன்றிணந்து ஒருபோது போராட மாட்டர்கள். ஈரான் சியா முஸ்லீம்கள், மற்ற அரபு நாடுகள் சன்னி முஸ்லீம்கள் இவர்கள் தம்க்குள் பிரிபட்டு அடிபட்டு சாவர்கள். மேலும் இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கால் வைத்து விட்டது.
  1 point
 25. நன்றி குணா, ஆனால் சில கருத்துக்களில் உடன்பாடில்லை. ஈரான் எப்போதுமே ஹமாசையும், லெபனானின் ஹிஸ்புல்லாவையும் ஆதரித்து உதவி செய்வது வெளிப்படை, ஆனால் இஸ்ரேலின் ஏவுகணைப்பாதுகாப்பை உடைத்து விட்டார்கள் என்பது சரியான தகவலா? மூவாயிரம் ஏவுகணைகளில் 300 தான் தப்பி உள்ளே விழுந்திருக்கிறது எனப்பார்க்கும் போது, இது ஏவுகணைப்பாதுகாப்பை நாசம் செய்தது போலத் தெரியவில்லை. ஆனால், ஹமாஸ் ஈரானின் வலையில் விழுந்து தமக்கும் பலஸ்தீன விடிவுக்கும் நீண்ட கால ஆப்பு வைத்துக் கொண்டு விட்டார்கள் என்பது உண்மை. பதவியிழக்க இருந்த நெரன்யாஹுவை இப்போது ஒரு வலது சாரிக் கட்சி ஆதரித்துப் பதிவியில் வைத்திருக்க முனைகிறது. அவர் பதவியில் இருக்கும் வரை கிழக்கு ஜெருசலேமில் விட்டுக் கொடுப்பு, யூதக்குடியேற்ற நிறுத்தம், பேச்சு வார்த்தை என்று எதுவும் இல்லை!
  1 point
 26. ஈழ அரசு உருவாகாமல் தடுக்க என்ன எல்லாம் செய்தீர்கள்? இப்ப அறுவடை காலம்
  1 point
 27. Paadha Kaanikkai 1962 directed by K. Shankar. Gemini Ganesan, Savitri, M. R. Radha and Kamal Haasan in lead roles. produced by G. N. Velumani, musical score by Viswanathan–Ramamoorthy ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா?
  1 point
 28. லண்டன் பெரு நகரங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி - QR குறியீட்டுடன் கோப்பைகளில் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நாளான மே.18-ஆம் திகதி தமிழ் மக்களின் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில் லண்டன் பெருநகரங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. மோதலின் இறுதிக் காலத்தில் மோதல் வலயத்துக்குள் சிக்கியிருந்த மக்கள் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாதவாறு தடை ஏற்படுத்தப்பட்டது. பட்டினியை யுத்த ஆயுதமாக இலங்கை அரசு பயன்படுத்தியது. இந்தக் காலப்பகுதயில் மோதல் வலயத்துக்கு சிக்கியிருந்த மக்களுக்கு கஞ்சியே உணவாக வழங்கப்பட்டது. இந்தக் கஞ்சியைப் பெற வரிசையில் காத்திருந்தவர்களுக்கு குண்டு வீசிப் படுகொலை செய்யப்பட்டனர் என இந்தக் கஞ்சியை விநியோகித்து ஏற்பாட்டாளர்கள் விளக்கமளித்தனர். பிரித்தானிய தமிழர்கள் உள்ளூராட்சி மன்றங்கள், ஆலயங்களின் அனுசரனையுடன் பிரித்தானிய தலைநகர் முழுவதும் 1,000 கோப்பை கஞ்சிகள் தன்னார்வலர்களால் விநியோகிக்கப்பட்டன. இந்தக் கஞ்சிக் கோப்பையில் www.RememberMay2009.com என்ற இணையத்தளத்தில் தரவேற்றப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் அவலங்களை விளக்கும் புகைப்படங்களை காணும் வகையில் QR குறியீடு பதிக்கப்பட்டிருந்தது. https://www.thaarakam.com/news/52e244ce-ba47-4e18-b763-4812a545959d
  1 point
 29. ஒரு இன்னிங்சில் அதிகமான சிக்ஸர்கள்...... world record.......!
  1 point
 30. பூகம்பத்தின் மத்தியில் பூக்கும் பூக்களுக்கு ஆயுள் குறைவுதான் ஆயினும், மகத்துவம் அதிகம்
  1 point
 31. இன்று சகோதரியின் 39வது பிறந்த நாள் ......
  1 point
 32. வாரு புலிலஸ்தோடம்பு சம்பாதிஸ்தாரு. புலிகளை வைத்து பணம் சம்பாதிக்கின்றார்கள். அவ்வளவுதான்.. சந்தோஷ் சிவன் தனது இனம் படத்தையும் ஓடிடியில் வெளியிடவுள்ளாராம். இப்படி ஈழத் தமிழரின் ஆயுதப்போராட்டத்தை கொச்சையாக சித்தரிப்பது பாலச்சந்தரின் புன்னகை மன்னன் காலத்திலேயே ஆரம்பமாகிவிட்டது. சரியான புரிதல் இல்லாமல், அல்லது புரிதல் இருந்தும் உள்நோக்கங்களுக்காகவும், பணம் சம்பாதிக்கவும் ஈழப்போராட்டத்தைப் பாவிப்பவர்கள் பலர் இருக்கின்றார்கள். அமேஸன் பிரைம் சந்தா உள்ளது. ஆனால் சீரியலை எல்லாம் பார்க்கும் எண்ணம் இல்லை. தமிழர்கள் புறக்கணித்தாலே பார்வை குறையும். ஆனால் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இருப்பவர்கள் பார்ப்பதை தடுத்து நிறுத்த முடியும் என்று நினைக்கவில்லை. அமேஸன் பிரைமுக்கு அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு பெரிதாக எதிர்ப்பு வருமா என்றும் தெரியவில்லை.
  0 points
 33. எனது சகோதரன் 2009 என்னிடம் கூறியது, "எங்கட இனம் ஒரு நன்றியில்லாத இனம். கடைசியில பிரபாகரனைத் துரோகியெண்டு எங்கட ஆக்கள்( சனம் என்று கூறவில்லை) சொல்லாட்டி இருந்து பார்" அந்த வசனம் வெகு விரைவில் நிறைவேறும்போல தென்படுகிறது.
  0 points
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.