Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Leaderboard

 1. அன்புத்தம்பி

  அன்புத்தம்பி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   15

  • Posts

   2,244


 2. ரஞ்சித்

  ரஞ்சித்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   11

  • Posts

   6,744


 3. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   11

  • Posts

   34,966


 4. goshan_che

  goshan_che

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   11

  • Posts

   7,947


Popular Content

Showing content with the highest reputation on வெள்ளி 18 ஜூன் 2021 in all areas

 1. அவர்களுக்கு உள்ள உணர்வு நம்மவர்களுக்கில்லை.
  5 points
 2. இன்னைக்கு தான் முதல் முறையா BMW கார எடுத்து ஓட்டினேன்.. கீர்லாம் இல்லை...ஆட்டொமெடிக் கீர்..வண்டி சம ஸ்மூத்தா போகுது சரி ஒரு பெரிய ரவுண்ட் போயிட்டு வரலாம்னு நினச்சி.. பீச் ரோட் வழியா வண்டிய எடுத்துகிட்டு போனேன்.... ரோட் காலியா இருந்துச்சு..140 கிலோ மீட்டர் ஸ்பீட்ல போனேன்.. நல்லா வேகமா போயிகிட்டு இருக்கும் போது திடீர்னு டர்னிங்ல ஒரு பைக் காரன் குறுக்க வந்துட்டான்... நான் டக்குனு பிரேக் அடிசிட்டேன்... ஆனா பின்னாடி வந்தவன் தான் என் கார்ல வந்து மோதிட்டான்... பின்னாடி இண்டிகேட்டர் கண்ணாடிலாம் உடஞ்சி போச்சு... உனக்கு வண்டியும் ஓட்ட தெறியல ஒன்னும் தெறியலனு... என் பையன் வந்து கேம் கன்ட்ரோல புடிங்கிகிட்டு போயிட்டான்...
  3 points
 3. வரலாற்று வடிவமாகத் திகழும் யாழ்ப்பாணம் நகுலேஸ்வரர் ஆலயம் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் பகுதியில் அமைந்துள்ள சிவன் ஆலயம் ஆகும். மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையபெற்ற மிகப்பழமைவாய்ந்த இவ்வாலயம் இலங்கையில் உள்ள பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகும். காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான இவ்வாலயம், நகுல முனிவர், சோழவேந்தன், நளன், அருச்சுனன், மாருதப்புரவீகவல்லி, ஆதி சோழ மன்னன், முசுகுந்தன் போன்ற வரலாற்று நபர்களால் வழிபடப்பட்ட தீர்த்தத் திருத்தலம் என வரலாற்று சான்றுகளில் கூறப்பட்டு வருகின்றது. ஆரம்ப காலத்தில் திருத்தம்பலை கோயில் கொண்ட பெருமான் என்றும், திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்றும் பெயர் கொண்ட இக்கோயில் இந்நாளில் கீரிமலைக் கோயில் என்றும் நகுலேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டடு வருகின்றது. ஈழப்போரில் குண்டுவீச்சினால் சேதமடைந்த நகுலேசுவர ஆலயத்தின் கோபுரம் படஉதவி : visitsrilanka.com ஆரம்ப காலங்களில் ஈழத்தின் வடகரை முழுவதும் மலைத் தொடராக காணப்பட்டதாகவும் பின் கடலரிப்பினால் மலைத்தொடர் அழிந்துபோனதாகவும் எஞ்சியுள்ள அடிவாரமே இப்போதுள்ள கீரிமலை என்கிறார்கள் ஆய்வாளர்கள். இருப்பினும் சமய நம்பிக்கைகளின் படி, மேரு மலையின் உச்சியில் தவம் செய்து கொண்டிருந்த சுதாமா என்னும் முனிவர், தனது தவத்திற்கு இடையூறு செய்தமைக்காக யமத்கினி என்ற வேடனுக்கு சாபமிட்டுள்ளார். அதனால் அவன் கீரிமுகம் பெற்றதாகவும் பின்னாளில் அவ் வேடன் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சாப விமோசனம் பெற்று கீரிமுகம் நீங்கியதால் நகுல முனிவர் என அழைக்கப்பட்டதாகவும் இதனையடுத்தே இப்பிரதேசம் கீரிமலை என்றும் நகுலகிரி என்றும் பெயர் பெற்றதாகவும் சமய சித்தாந்தங்களின் படி சிலர் நம்பி வருகின்றனர். உள்நாட்டுப் போரில் பாதிப்புக்குள்ளான கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தின் நுழைவுப் பகுதி படஉதவி : visitsrilanka.com பொதுவாகப் பழமையான ஆலயங்கள் என்றாலே வரலாற்று நிகழ்வுகளும் சில ஐதீகங்களும் கொட்டிக்கிடப்பது வழக்கம். அந்த வகையில் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் கிடைக்கப்பெற்ற தொல்லியல் சான்றுகள் ஆரியச்சக்கரவர்த்திகால வரலாற்றையும் போர்த்துக்கேயர்கால வரலாற்றையும் நினைவுபடுத்துவதாக தொல்லியல் துறையினர் தெரிகின்றனர். யாழ்ப்பாணத்தில் நல்லுரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில், அரச ஆதரவு பெற்ற பிரதான தலமாக நகுலேச்சரம் ஆலயம் திகழ்ந்துள்ளது. பின்னர் மூன்று பிரகாரங்களும் ஐந்து கோபுரங்களும் கொண்டு காணப்பட்ட இந்த பிரம்மாண்ட ஆலயமானது போத்துக்கீசியர் காலத்தில் இடிக்கப்படுள்ளது. கி.பி 1621 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர்கள் நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், நகுலேசுவரம் ஆகிய ஆலயங்களை இடித்தழித்துள்ளனர். அப்போது பரசுரபாணி ஐயரெனும் பிராமணர் கீரிமலை ஆலயங்ககளின் சில பொருட்களையும் விக்கிரகங்களையும் கிணறுகளுள் போட்டு மூடி வைத்தார் என யாழ்ப்பாண வைபவ மாலையில் குறிப்புகள் காணப்படுகின்றது. மற்றும் நகுலேசஸ்வரத்தின் வரலாறுகள் தொடர்பில் தட்சிண கைலாசபுராணம், யாழ்ப்பாண வைபவமாலை, சீர்பாதகுலவனாறு, கைலாசமாலை, நகுலேஸ்வர புராணம், நகுலகிரிப்புராணம் என்பனவும் நகுலேஸ்வரர் விநோத விசித்திரக் கவிக்கொத்து, நகுலாம்பிகை குறவஞ்சி, நகுலமலைச் சதகம் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பம்சமெனலாம். யாழ்ப்பாண வைபவ மாலை புத்தகம் படஉதவி : poobalasingham.com இக்கோவிலின் சிறப்பில் ஒன்றான தீர்த்தமானது, பகீரதனின் முயற்சியால் பூமிக்கு கொண்டு வரப்பட்ட கங்கையின் துளிகள் என நம்பப்பட்டு வருகின்றது. பரமசிவன் பார்வதிக்காக உருவாக்கிய தீர்த்தம் இது என்றும் கூறுவார்கள். ஆகையால்தான் இந்த தீர்த்தம் காசி மற்றும் ராமேஸ்வரத்திற்கு இணையான மகத்துவம் பெற்று விளங்குகின்றது கீரிமலைத் தீர்த்தக் குளம் படஉதவி : twitter.com 1000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வரலாற்று நிகழ்வுகள் நம்பப்படும் வகையில் இங்குள்ள சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மாருதப்புரவல்லி குதிரை முகத்துடன் இருக்கும் சிற்பங்கள், முனிவரிடம் வரம் பெறுவது போல் செதுக்கப்பட்ட சிற்பங்கள், குதிரைமுகம் நீக்கிய மாருதப்புரவல்லியின் தோற்றம், ஆட்சி அரியணையில் அவர் வீற்றிருக்கும் காட்சி போன்று செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் இவ்வாலயத்தின் வரலாற்று மரபுரிமையை நினைவு படுத்துவனவாக உள்ளது எனலாம். நகுலேஸ்வரம் ஆலயத்தில் செதுக்கப்பட்டுள்ள தூண் சிற்பங்களும், குதிரை முகம் கொண்ட மாருதப்புரவல்லியின் சிற்பமும் படஉதவி : flickr.com உடைந்த நிலையில் காணப்படும் நகுலேஸ்வரம் ஆலயத்தில் சிற்பங்கள் படஉதவி : flickr.com யாழ்ப்பாணக் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம், இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் பல்வேறு குண்டு வீச்சுகளையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டு பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி கேதாரகௌரி விரதத்தின் போது கோயிலின் மீது குண்டுகள் வீசப்பட்ட நிலையில் மூலஸ்தானம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் பெரும் சேதத்திற்குள்ளானது. அந்நிலையில் பக்தர்களும் அர்ச்சகர்களும் சிறப்பு அனுமதியின்றி இக்கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. பின்னர் 2009 ஆண்டு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டு 2012 ஆம் ஆண்டில் மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது மக்கள் வழிபாட்டிற்கு விடப்பட்டது. புனரமைப்பின் போது எடுக்கப்பட்ட நகுலேஸ்வரர் ஆலயத்தின் தோற்றம். படஉதவி : blogspot.com நகுலேஸ்வர ஆலயத்தின் உள்வீதி படஉதவி : thesundayleader.lk கீரிமலை நகுலேஸ்வரர் கோவிலின் தற்போதைய பிரதான கோபுரம் படஉதவி : twitter.com இந்நாட்களில் தினமும் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையான நேரத்தில் எண்ணற்ற சைவப்பெருமக்கள் தங்கள் பித்ருக் கடன்களை கீரிமலைத் தீர்த்தத்தில் செலுத்தியா பின்னர் ஆலயம் சென்று மோட்ச தீபம்ஏற்றி, ஆத்ம சாந்தி பிரார்த்தனை செய்து வேண்டுதலை நிறைவு செய்வதை வழக்கமாகக் கொண்டு நகுலேஸ்வரரின் தரிசனம் பெற்று வருகின்றனர்.https://roar.media/tamil/main/history/jaffna-naguleswaram-temple
  3 points
 4. இப்பதான் தெரியுது நான் கணக்கில எலியானதுக்கு காரணம் அந்த தரங்கெட்ட அரசனும், துணியின்றி தெருவில் துணிந்து ஓடிய மிடிசும்தான்......!
  2 points
 5. போட்டியில், ஆர்வத்துடன் கலந்து கொண்ட.... சுவி அண்ணா, ஜெகதா துரை, கோசான், மியாவ், தமிழினி... ஆகியோருக்கு நன்றி. சரியான பதில்... "B". ஒரு மணித்தியால இடை வெளியில்.... ஐந்து பேரை, இங்கு கூட்டி வந்த, மியாவுக்கு... விசேட நன்றி.
  2 points
 6. அதாவது உங்களை சுற்றி இருக்கும் நாடுகள் எல்லாம் உங்களது பாதுகாப்பை அனுசரிச்சு நடந்து கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் எவரோட பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளாமல் நீங்கள் நினைத்ததை அவர்கள் நாடுகளில் அரங்கேற்ற பார்ப்பீர்கள் அப்படியா? இந்த எகத்தாளத்திற்காவது சீன மொழியை கற்று சீனர்களுடன் ஐக்கியமாகிவிடலாம் .
  2 points
 7. அதொன்றுமில்லை சுவைப்பிரியன்.......நானறிந்த காலத்தில் இங்கு நிறைய கருத்துக்கள் பதிந்தவர்கள்.....தற்சமயம் அவர்களின் வருகை குறைந்து போனாலும் அவர்களின் பெயர் கண்ணில் படும்போது வாழ்த்து சொல்வது நல்லதுதானே......அவர்களுக்கும் என்னென்ன வேலைப் பளுக்களோ யார் கண்டது.....ஆனாலும் இந்தத் துறைமுகத்தில் இறங்கியவர்கள் பின் எங்கிருந்தாலும் ஒருதரம் எட்டிப் பார்ப்பார்கள். அந்த நம்பிக்கைதான்.....!
  2 points
 8. நிச்சயமாக. உங்களை போல் ஈழத்தமிழர்கள் கூட இப்போ எழுதுவதில்லை. அந்தளவுக்கு எங்களின் தமிழ் மேல் சினிமா பாதிப்பு. ஆனால் உங்கள் எழுத்தில் தமிழகவாடையே இல்லை. அச்சு அசல் ஈழத்தமிழ் எழுத்து. பாராட்டுகள்.
  2 points
 9. ஒவ்வொரு கருத்திற்கு எதிரான உங்கள் கருத்து சுத்தமாக சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது...
  2 points
 10. படம் : ககாவேரியின் கணவன் (1959) இசை : K.V. மகாதேவன் வரிகள் : உடுமலை நாராயண கவி குரல் : எம்.எல். வசந்தகுமாரி
  2 points
 11. கருணா அம்மானுக்கு உதவுவது தேசியப் பாதுகாப்பிற்கு அவசியமானது இணையத்தளம் : லங்கா வெப் ஆங்கிலத்தில் சிரீபால் நிஷன்க காலம் :கருணா லண்டனில் போலி கடவுச் சீட்டுடன் பயணித்தார் என்பதற்காக பிடிபட்டுச் சிறையில் அடைபட்டிருந்தபொழுது "உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாதியினை எதிர்த்து மிகத் துணிச்சலாக போரிட்ட உண்மையான வீரன் கருணா தற்போது லண்டன் சிறையில் ஆள் மாறாட்டம் செய்தமைக்காக அடைக்கப்பட்டிருக்கிறார். வன்னியின் பயங்கரவாதத் தலைவனான பிரபாகரனின் கட்டளைக்குப்பணிந்து கருணா அம்மான் முன்னர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் வன்னிப் பயங்கரவாதியின் உண்மையான முகம் தெரிந்தவுடன், அவனை விட்டு விலகி சாதாரண மனிதர்களுடன் சேர்ந்து தந்து உச்ச பட்ச திறமையினைப் பாவித்து அந்தப் பயங்கரவாதியை அழிக்கும் நற்காரியத்தில் ஈடுபட்டார்".
  2 points
 12. கருணா தொடர்பாக இருவேறுவகையான புரிதல்களைத் தமிழ்ச் சமூகம் கொண்டிருக்கிரது. பெரும்பாலானவர்களின் கருத்துப்படி அவர் தமிழினத்திற்குச் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் . அதேவேளை, இன்னும் ஒரு பகுதியினரைப் பொருத்தவரை அவர் செய்தது தவறில்லை. இதுதொடர்பாகப் பேசிக்கொன்டே போகலாம்.ஆனால், கருணா தமிழினத்திற்குச் செய்தது துரோகமா அல்லது நண்மையா என்று தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு அவர் எவருக்காக தமிழினத்தை உதறிவிட்டுச் சென்றாரோ, அவர்கள் பார்வையில் கருணா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதைப் பொறுத்து கருணா தமிழினத்திற்குச் செய்தது துரோகமா இல்லையா என்பது புலப்படும். கருணா பற்றிய தேடல்களின்பொழுது லங்கா வெப் எனும் ஆங்கில இணையத்தளம் ஒன்று கண்ணில் பட்டது. போர்க்காலத்தில் ராணுவத்தினரின் சாகசங்களையும், புலிகளின் தோல்விகளையும் காவிவந்த ஒரு சிங்கள இனவாத இனையத்தளம். இத்தளத்தில் கருணாவுக்கென்று சிறப்பான அந்தஸ்த்து கொடுக்கப்பட்டிருக்கிறது. பல சிங்கள புத்திஜீவிகளின் பார்வையில் கருணா சிங்கள தேசத்திற்கு எந்தளவு தூரத்திற்கு அவசியமானவர் என்பது ஆய்ந்தறிந்து எழுதப்பட்டிருக்கிறது. இத்தளத்திலிருந்து இத்தொடருடன் சம்பந்தப்பட்ட சில கட்டுரைகளை மொழிபெயர்த்து இங்கு இனிமேல் இணைக்கவிருக்கிறேன். எனது புனைவுகளை எழுதுகிறேன் என்று கூறும் சிலருக்காக தவறாமல் நான் எடுக்கும் ஆக்கத்தின் மூலத்தையும் இணைத்துவிடுகிறேன்.
  2 points
 13. பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் அற்புதமான பயன்களும்!! மாப்பிளை சம்பா : உடலை பலபடுத்தும் மாமருந்து . திருமணதிற்கு தயாராகும் மணமகன்கள் தொடர்ச்சியாக 41 நாட்கள் இதன் நீராகாரத்தை உண்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும். கவுணி அரிசி : புது மாப்பிள்ளைகான விருந்துணவு அரிசி. இதன் கஞ்சி குடித்தால் குதிங்கால் வலி நீங்கும் . சிவப்பு கவுணி அரிசி : புது மண தம்பதியர் உண்ண வேண்டிய அரிசி . இது ஒரு பலகார அரிசி. இட்லி,ஆப்பம், பணியாரம் செய்ய ஏதுவானது . குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி தரும் .கருவில் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகும் . சேலம் சன்னா : கர்ப்பகாலத்தில் உண்ண வேண்டிய அரிசி . குழந்தை பேரு நன்முறையில் நடக்கும் . களைப்பில்லாமல் வேலை செய்ய உதவும் . இது நாய் கடி விஷத்தை முறிக்கும் . பூங்காற் அரிசி : மகப்பேறு காலங்களில் உண்ண வேண்டிய அரிசி . தாய்பால் சுரக்கும் . கட்ட சம்பா அரிசி : நோய் எதிர்ப்பு சக்தி தரும் . சிங்கினி கார் அரிசி : எல்லா விதமான நோயாளிகளும் உண்ண வேண்டிய அரிசி. உடல் நலம் பெற உதவும் . இலுப்பைபூ சம்பா அரிசி : சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். மூட்டு வலி,பக்க வாதம் போன்ற நோய்க்கான மருந்து . நரம்பு பிரச்சனையின் மருந்து . காட்டுயானம் அரிசி : இந்த அரிசியில் காஞ்சி வைத்து கறிவேப்பில்லை போட்டு மூடி வைத்து , மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் . இப்படி தொடர்ச்சியாக செய்தால் புற்றுநோயால் ஏற்படும் புண்கள் ஆறும் . இதுவே புற்று நோய்க்கு மருந்தாக இருக்க வேண்டும் என ஆய்வுகள் நடைபெற்று வருகிறது . சூரகுருவை அரிசி : நோய் எதிர்ப்பு சக்தி தரும் . பனங்காட்டு குடவாழை அரிசி : தொழிலாளர்களின் தோழன் இந்த அரிசி . அந்த அளவிற்கு நோய் எதிர்ப்பும், உடல் வலிமையையும் தரும் . கருடன் சம்பா : நோய் எதிர்ப்பு சக்தி தரும். சாப்பாடு மற்றும் பலகார அரிசி . கருங்குறுவை அரிசி : இதன் நெல் கரு நிறம். அரிசி செந்நிறம் இது ஒரு மாமருந்து. இந்த அரிசியுடன் மூலிகை மருந்து சேர்த்தால் லேகியம் செய்ய முடியும் . அது யானைக்கால் நோய்க்கான மருந்து . குஷ்டதிற்க்கும் , விஷகடிக்கும் மாமருந்து. உடலை வலுவாக்கும் காயகல்ப சக்தி கொண்டது . இந்த அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஊரவைத்து ஆறுமாதம் கழித்து எடுத்தால் பால் போல் இருக்கும் . இதற்க்கு 'அன்ன காடி 'என்று பெயர் .இது காலராவிர்க்கான மருந்து . இது கிரியா ஊக்கியாக உள்ளது . கார் அரிசி : சர்க்கரை நோய்க்கும், வாதம் சம்பந்தமான நோய்க்கும், கரப்பான் களுக்கும் மருந்தாகும். தங்க சம்பா : இந்த அரிசியை தொடர்ந்து உணவிலும் , பலகாரத்திலும் சேர்த்து வந்தால் முகம் பொலிவுடன் ஜொலிக்கும். நோய் எதிர்ப்பு திறனும் கொடுக்கும். தூயமல்லி அரிசி : மேல குறிப்பிட்ட எல்லா அரிசிகளும் சிவப்பரிசி . கட்ட சம்பா தவிர்த்து . தூய மல்லி அரிசியானது இன்னும் மல்லிகை போல் பளபள வென இருக்ககூடியது .மக்கள் எதிர்ப்பார்க்கும் எல்லா குணங்களும் கொண்ட ஒரு அரிசி . தெவிட்டாத , நோய் எதிர்ப்பு சக்தி தரும் அரிசி . இந்த பாரம்பரிய அரிசி எதுவும் உரமோ, பூச்சி கொல்லி மருந்தோ இல்லாமலேயே வளரக்கூடியது. மேற்காணும் அரிசி வகைகள் தானாக வளரக்கூடியது . தானே எதிர்ப்பு திறனுடன் வளர்வதால் இந்த அரிசியை உன்னுபவர்களுக்கும் அதே எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வல்லமை கொண்டது. பாரம்பரிய அரிசி உண்போம் . ஆரோக்கியத்தை பேணி, ஆயுளை அதிகரிப்போம். நன்றி-நெல் அதிகாரம்-தொகுப்பாளர் ரா. பொன்னம்பலம் அவர்களின் புத்தகத்தில் இருந்து மேற்காணும் அரிசி வகைகள் அனைத்தும் , எல்லா இயற்கை உணவு அங்காடிகளில் கிடைக்கிறது . விலை சற்று அதிகம் . மருத்துவரிடம் கொடுப்பதில் பாதியை விவசாயிக்கும் கொடுக்கலாமே ! நன்றி-சுவாதி,வலை தமிழ். பல நெல்-அரிசி வகைகள் இன்று அழிந்து விட்டன என்கிறார்கள். இதேபோல் மாட்டிலும்-பசுவிலும் பல இன வகைகள் இருந்தனவாம்.ஒவ்வொரு இனப் பசுவும் கொடுக்கும் பால் மருத்துவக் குணங்கள் கொண்டன என்று படித்திருக்கிறேன். தெரிந்தவர்கள் பகிரலாம்.தெரிந்து கொள்ள முடியும். இதற்குக் காரணம் மண்வளம் காரணமாக அங்கு வளரும் புல்,செடி,மூலிகைகளைக் சாப்பிடுவதனால்,அங்கு வளரும் பசுக்கள் தரும் பால் மருத்துவக் குணங்கள் கொண்டவை என்று சொல்கிறார்கள். அவையெல்லாம் இப்போது எங்கே? இன்னமும் இருக்கின்றனவா?
  2 points
 14. அன்றும் அவர்கள் சிந்தித்ததினால் தான் சிங்கள பிரதேசங்களில் தமிழர்கள் கடை வைத்திருந்தார்கள். வீடுகள் வைத்திருந்தார்கள். சொந்த ஊரில் இருந்தது போல் இருந்தார்கள்.வெள்ளவத்தை,கொள்ளுப்பிட்டி,பம்பலப்பிட்டி என தமிழர்கள் வாழ்ந்தார்கள். என்னவொண்டு சிங்களத்துக்கு இனவாதம் முத்த பற தெமில எண்டு சொல்லி செல்லமாய் கன்னத்திலை தட்டினவங்கள் அவ்வளவுதான்... மட்டக்களப்பு எல்லையள்லை சிங்களவன் அடிச்சு நொருக்கினாலும் பிரச்சனை இல்லை....அவர்களும் சிந்திக்கின்றார்கள் எண்டு நாங்கள் சொல்லுவம்.
  2 points
 15. இந்த கேள்வி கட்டுரையாளரிடம் கேட்க‌ வேண்டும் ...அவர்தான் புதிய தலைமுறையினர் என்று கட்டுரை தலைப்பை போட்டுவிட்டு தன்னுடைய 80 களின் சித்தாந்த சிந்தனையிலிருந்து கட்டுரை வரைந்திருக்கின்றார்.... மேற்கு மற்றும் சீனா போன்ற நாடுகளின் மிரட்டலுக்கு அடிபணிய வேண்டிய நிலையில் சிறிலங்கா மாதா இருப்பதற்கு முக்கிய காரணம் சிங்கள அரசியல்வாதிகளின் கெடு கெட்ட தூரநோக்கு .......பேகர் நூடில்ஸ் கிறிபத் ஒட்டுதோ என்று அவர்கள் சிந்திக்கட்டும்.. இளைய தலைமுறையினர் இங்கு மனித உரிமை என்ற வகையில் இந்த பிரச்சனையை நோக்கின்றனர் அந்த துறையில் பட்டம் பெறுகின்றனர் தூதரகங்கள், மற்றும் அரசுகளின் பிராந்திய கொள்கை வகுப்பு மையங்களில் பணிபுரிய தொடங்கி விட்டார்கள் ....ஆனால் அவர்கள் ஈழம் தமிழர்களுக்கு தீர்வு என்று சிந்திக்க போவதில்லை பாரிய இனவழிப்பு நடைபெற்ற ஓர் இடம் என்ற வகையில் சிந்திப்பார்கள் அது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்...... சீனா கம்னிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் உலக வல்லரசாக் வேண்டும் என்ற சிந்தனையில் சிறிலங்காவில் சீனா வன்மினிட் நூடில்ஸ் போடுயினம் பார்ப்போம் எப்படி ருசி என்று.... ஆசியாவின் எழுச்சி என்று மகிந்தா கூவிக்கொண்டிருக்க ஆசியா பூர்வீகம் கொண்ட(தென் கோரியா) பெண்மணியை சிறிலங்காவின் தூதுவராக அமெரிக்கா நியமித்திருக்கின்றது,அம்மணியின் பெற்றோர்கள் தென் கோரியாவின் போர்காலங்களில் அமெரிக்காவில் குடிபெயர்ந்திருக்கலாம்
  2 points
 16. கவலையான விடயம். அந்த ஒலி பரப்பாளரின் குரலும், உடல் மொழியும் மிக நன்றாக இருந்தது. தமிழன்... இனி, "டாஸ்மாக்" சாராயம் குடித்துத் தான், சாக வேண்டும் போல் உள்ளது.
  1 point
 17. இந்த நூடில்ஸ் கதை சண் மாஸ்டர் இங்க இருந்துதான் எடுத்தவர்.
  1 point
 18. ஆயுதப் போராட்டத்துக்கு எமது மக்கள் கொடுத்த பல வருடங்களுடன் ஒப்பிடும் போது அந்த பல வருடங்கள் மிகக் குறைவானவை, இல்லையா விசுகு? உண்மையில், ஆயுதப் போராட்டத்தோடு ஒப்பிடும்போது இராஜதந்திர சமாதான தீர்வுக்கான பாதை கடினமானதும் மிக நீண்டகாலம் எடுப்பதுமாகவே இருக்கும். ஆகவே எங்கள் வாழ்நாளில் நாம் எந்த மாற்றத்தையும் காணும் சாத்தியம் இல்லை. வழி விட்டு கனம் பண்ணுவது மிகவும் பாராட்டுக்குரியது. நீங்கள் உயர்ந்த மனிதர் என்பதையும் அது காட்டுகிறது. நன்றி.
  1 point
 19. இது வேற லெவல் ......!
  1 point
 20. விசப் பாம்பு சாப்பிடும் எங்களுக்கு உந்த கப்பல் விசம் சாப்பிட்ட மீன்கள் பெரிய விடயம் அல்ல.....அனுப்பு சீனாவுக்கு நாங்கள் அதை பிளிச்சில் போட்டு சுத்தம் பண்ணி அழகாக பொதி செய்து மீண்டும் அமெரிக்கா ,இந்தியா,மத்தியகிழக்கு நாடுகளுக்கு அனுப்பிவிடுகிறோம் ....நீ வடமகாணத்தை என்க்கு 50 வ்ருட குத்தகைக்கு தா....
  1 point
 21. அப்படி சொல்ல முடியாது ஜி. வென்றவர்களை விட நம் தரப்பில் இருந்து சரியான வரலாறு வரவே வாய்ப்பு அதிகம். அவர்களது வெறும் வெற்றிகளிப்பு மட்டுமே. ஹிட்லர் சொன்னது தோற்றால் விளக்கம் கொடுக்கும் நிலையில் இருப்பதை விட இல்லாமல் போவதே மேல். அதுதான் எம் விடயத்திலும் நடந்தது.
  1 point
 22. குவளை B ல் தான் அதிக தண்ணீர் உள்ளது
  1 point
 23. ’’நினைவிருக்கா?’’ இதை எப்படி மறக்கிறது, மறந்தால் எனது மழலை காலத்தையும் மறந்துவிடவேண்டியதுதான். வண்ண வண்ண ஓவியங்கள் மிக எளிமையான கதைகள், அதிலும் இந்த வேதாளம் விக்கிரமாதித்தன் கதையை படிக்கும்போது மன்னன் கையில் வாள், அந்த பாம்பு எல்லாம் பார்த்து லேசான பயத்துடனேயே படித்த ஞாபகம். என் அம்மாவாங்கி அவ படித்து பின்னாட்களில் அண்ணா படித்து அதற்கப்புறம் நான் படித்து என்று பல அம்புலிமாமாக்கள் உட்பட பல சிறுவர் மலர்கள், நாவல்கள், அந்தகால பத்திரிகைகள் என வாசிப்பு பழக்கமும் தமிழார்வமும் மிக்க என் தாயாரினால் எங்கள் வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன, ஒரு இடப்பெயர்வில் ஒரு மாசம் வேறு இடத்தில் தங்கியிருந்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது அத்தனையையும் கறையான் அரித்து இருந்தது, கூடவே எம் குழந்தை பருவ நினைவுகளையும் சேர்த்து. டிஜிட்டலுக்கு மொத்த உலகமுமே மாறிவிட்டாலும் இந்த வேதாளங்கள் அந்த முருங்கைமரத்தை மறக்காமலிருக்கும். அன்புதம்பியும் யாயினியும் பக்கம் பக்கமாக பகிரும் அம்சங்கள் பல்சுவையானவை... தொடர்க.
  1 point
 24. நான்கிலும் சமமாக உள்ளது.....!
  1 point
 25. எல்லாரும் இங்கயும் லைக்கை அள்ளி வீசுங்கோ
  1 point
 26. சரி செய்தாயிட்டு, பார்க்கவும்.
  1 point
 27. யோ பெரிய‌ப்பா உங்க‌ளுக்கு குசும்புத் த‌ன‌ம் கூடி போச்சு ஹா ஹா தேர்த‌ல் முடிவு வ‌ந்த‌ போது யாழில் தேர்த‌ல் ப‌திவுக‌ளை அதிக‌ம் இணைத்த‌து நான் தான் ஹா ஹா யாழ்க‌ள‌ ஜ‌பிஎல் போட்டியும் த‌டை ப‌ட்ட‌தால் சிறு ஓய்வு ஹா ஹா போட்டி மீண்டும் அர‌பி நாட்டில் ந‌ட‌க்கும் போது போட்டி புள்ளிக‌ளை ச‌ரியாக‌ போட‌னும் ஹா ஹா க‌ட‌சி இட‌த்தை நீங்க‌ள் தான் பிடிப்பிங்க‌ள் போல் தெரியுது பாப்போம் ஹா ஹா
  1 point
 28. 1 point
 29. Aayiram Poi Tamil Movie Jaishankar, Vanisri and Manorama on Pyramid Music composed by V. Kumar. காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே பெ: அழகு என்பதும் மெய்யே மெய்யே ஆ: ஓஹோ….ஓ.. பெ: ஆசை என்பதும் மெய்யே மெய்யே பழகும் நோக்கமும் மெய்யே மெய்யே உங்கள் பாஷை ஒன்று தான் பொய்யே பொய்யே
  1 point
 30. இந்தக் கேள்வி நீண்ட காலமாக எனக்குள் இருக்கிறது. இந்தக் கட்டுரையை வைத்து. ர முடிவுக்கு வர முடியவில்லை. இணைப்புக்கு நன்றி யாயினி.
  1 point
 31. பழங்கால ரோமாபுரி வரலாறு: ரோம் நகரம் எரியும் போது உண்மையிலேயே நீரோ ஃபிடில் வாசித்தாரா? 16 ஜூன் 2021 பட மூலாதாரம்,BETTMANN (இந்தக் கதை, 'இன் அவர் டைம்' என்ற பிபிசி ரேடியோ ஃபோரில் ஒலிபரப்பான நீரோ குறித்த 50 நிமிட நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.) "ரோம் நகரம் எரியும் போது, நீரோ மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தார்."இந்தச் சொல்லாடல், ரோமானிய பேரரசர் நீரோவைப் பற்றிய பிரபலமான ஒன்று. நீரோ ரோமுக்கு தீ வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அவர் வேண்டுமென்றே அவ்வாறு செய்தார் என்று கூறப்படுகிறது.வரலாற்றின் பக்கங்களில் நீரோ ஒரு கொடூரமான ஆட்சியாளராக அறியப்படுகிறார், அவர் தனது சிற்றன்னை, அவரது மக்கள் மற்றும் மனைவிகள் அனைவரையும் கொன்று, தனது நீதிமன்றத்தில் இருந்த திருநங்கைகளை மணந்ததாகவும் கூறப்படுகிறது. கி.பி 54இல், தனது பதினாறு வயதில், நீரோ தனது தாயின் முயற்சியால் ஒரு பேரரசின் சக்ரவர்த்தியானார். அந்தப் பேரரசு, ஸ்பெயினிலிருந்து வடக்கே பிரிட்டன் மற்றும் கிழக்கில் சிரியா வரை பரவியிருந்தது. அரசாட்சி மீது மோகம் கொண்ட நீரோவின் தாயார் அக்ரிபீனா, சதித்திட்டங்கள் மற்றும் கலகங்கள் மூலமாக, நீரோவுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தந்தார். அக்ரிபீனா தனது 'மாமா', பேரரசர் கிளாடியஸை மணந்தார், பின்னர் நீரோவை பேரரசரின் மகளுக்கு மணமுடித்தார். இதன் மூலம் நீரோ, அரச குடும்பத்தில் உறுப்பினராகவும், ராஜாவின் வாரிசாகவும் ஆனார், அதே நேரத்தில் ராஜாவுக்கும் ஒரு மகன் இருந்தான்.அக்ரிபீனா பேரரசர் கிளாடியஸை விஷம் கலந்த உணவைக் கொடுத்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது, ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று உறுதிப்படுத்த முடியவில்லை. தாயைக் கொன்ற நீரோ நீரோ ஆட்சியைப் பிடித்தபோது, அவரது தாயார் அக்ரிபீனா அவரது நெருங்கிய ஆலோசகராக இருந்தார். ரோமானிய நாணயங்களில் கூட நீரோவின் படங்கள் அச்சிடப்பட்டன. ஆனால் ஆட்சிக்கு வந்து சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதிக அதிகாரம் மற்றும் சுதந்திரம் வேண்டி, நீரோ தனது தாயையே கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. நீரோ தனது தாயைக் கொல்லச் செய்த முதல் முயற்சி தோல்வியடைந்தது. நீரோ தனது தாயைக் கடற்கரையில் நடந்த ஒரு விழாவிற்கு அழைத்தார். ஒரு கப்பலில் அவரைத் திருப்பி அனுப்புவதாகவும் அந்தக் கப்பலை வழியில் நீரில் மூழ்கடித்துத் தாயைக் கொல்வதாகவும் திட்டம். ஆனால் இந்த முயற்சியில் அவர் தப்பிவிட்டார். இதற்குப் பிறகு நீரோ தனது தாயைக் கிளர்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டி, அவரைக் கொல்லச் சிலரை அனுப்பினார். சீனப் பெருஞ்சுவரை கட்டத் தொடங்கிய மன்னரின் கல்லறை ரகசியம்: 'திறந்தால் ஆபத்து' கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் வெளிப்பட்டது ராஜேந்திர சோழன் அரண்மனையா? நீரோ தன் தாயைக் கொன்றது ஏன்? ரோம் மக்களைக் கவர, கிரேக்க வழக்கப்படி, நீரோ மிகப் பெரிய அளவில் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்தார் பிபிசி வானொலி நிகழ்ச்சியில் பேசிய பண்டைய ரோமாபுரி குறித்த நிபுணர் பேராசிரியர் மரியா வாயெக், "நீரோவின் தாய் மிகவும் தந்திரம் நிறைந்தவராகவும் பேராசை கொண்டவராகவும் இருந்தார். அவர் தனது மகனைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கச் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தன் மகனுடனே கூட உடலுறவு கொள்ளவும் துணிந்தார் என்று சில ஆவணங்கள் கூறுகின்றன. பட மூலாதாரம்,FOTOTECA STORICA NAZIONALE ஆனால், இதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை என்று அவர் கூறுகிறார். ஆனால், தன்னைக் கொல்ல அனுப்பப்பட்ட ஆளிடம் அவர் தாயார், தனது வயிற்றைக் காட்டி, நீரோவின் பாவம் வளரும் இந்த வயிற்றில் கத்தியால் குத்துமாறு கூறியதாக மரியா கூறுகிறார். தனது குழந்தைப் பருவத்தில் இருந்தே அதிகாரப் போராட்டத்தின் சூழலிலேயே வளர்ந்ததால், அது அவரது ஆளுமை மற்றும் சிந்தனையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது மரியாவின் கருத்து. ஆட்சிக்காகச் செய்யப்பட்ட திருமணங்களும் கொலைகளும் நீரோவின் காலம் முதல் நூற்றாண்டு என்று கூறும் மரியா, "அப்போது, ரோமானியப் பேரரசு ஐரோப்பாவில் பிரிட்டனில் இருந்து ஆசியாவில் சிரியா வரை பரந்து விரிந்திருந்தது. ஆனால் இந்த பரந்த சாம்ராஜ்யம் நிலையற்றதாக இருந்தது. ஒரு சுதந்திரத் தலைவர், செனட்டின் உதவியுடன் ஆட்சி செய்து வந்தார். ரோமானியப் பேரரசின் முதல் பேரரசரான அகஸ்டஸ், அதிகாரத்தில் இருப்பவர்களிடையே சமத்துவம் குறித்த ஒரு யோசனையை அறிமுகப்படுத்தினார்.ரோமின் முதல் பேரரசர் அகஸ்டஸ் சீசரால் தொடங்கப்பட்ட அமைப்பில், ஜூலியஸ் கிளாடியஸ் சீசர் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக அதிகாரத்தை வைத்திருக்க விரும்பினர். இதன் விளைவாக அதிகாரத்தைப் பெற குடும்பத்திற்குள் ஒரு போராட்டம் ஏற்பட்டது. அதிகாரத்தைப் பெறுவதற்காக, குடும்பத்தில் திருமணங்கள், குழந்தைகளைத் தத்தெடுப்பது, விவாகரத்து செய்தல், நாடுகடத்தப்படுதல், நாட்டுக்கு வெளியேயிருந்து ஆட்சி செய்வது என்று தம் போட்டியாளரை அகற்ற எல்லா விதமான, தந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.ரோமானியப் பேரரசின் இரண்டாவது பேரரசரான திபெரியஸின் ஆட்சியின் போது நீரோவின் பாட்டி சிறையில் அடைக்கப்பட்டார். நீரோவின் தாய் மூன்றாவது மன்னனின் ஆட்சியில் நாடுகடத்தப்பட்டார். கிளாடியஸின் ஆட்சியின் போது, நீரோவின் தாயார் நாடு திரும்பினார். மேலும் அவர் தனது மாமாவான பேரரசரை மணந்து அரச குடும்பத்தில் தனது இடத்தைப் பிடித்தார். நீரோவின் ஆளுமை மற்றும் தன்மை குறித்த பிபிசி வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரிட்டன் செளத் ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுஷ்மா மாலிக் கூறுகையில், ரோமானிய பேரரசின் நான்காவது பேரரசரான கிளாடியஸ் கி.பி 41 முதல் 54 வரை ஆட்சி செய்தார். அவரது ஆட்சியின் கடைசி நாட்களில், கிளாடியஸ் நீரோவின் தாயார் அக்ரிபீனா உட்பட தனது மனைவிகளையே பெரிதும் சார்ந்து வாழ வேண்டியிருந்தது என்று தெரிவிக்கிறார்."இந்த மனைவிகளில், 'மிகவும் அவப்பெயர் கொண்டவர்,' முசலினா என்று வரலாற்றுப் புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கிறது. அவர் கிளாடியஸைச் சுற்றி ஒரு வலையை விரித்திருந்தார். அவர் செனட்டர்களுடன் உடல் உறவு கொள்ளும் அளவுக்குக் கூடச் சென்றார், தனது இச்சைக்காகத் தன் நிலையைக் கூட அவர் மறந்தார். கிளாடியஸ் அவளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார் என்றும் வரலாறு கூறுகிறது." என்று சுஷ்மா மாலிக் கூறுகிறார்.நீரோ மற்றும் கிளாடியஸின் காலங்களை ஒப்பிடும் சுஷ்மா மாலிக், "நீரோவின் ஆரம்ப நாட்களில் அவரைச் சுற்றிச் சில நல்ல மனிதர்கள் இருந்தார்கள், இதில் செனெகா மற்றும் அஃப்ரெக்ஸ் புரூஸ் என்ற தலைவர்களும் இருந்தனர். செனெகா நீரோவின் உரைகளின் எழுத்தாளரும் ஒரு தத்துவஞானியும் ஆவார். பட மூலாதாரம்,BETTMANN கர்ப்பிணி மனைவியைக் கொன்ற நீரோ நீரோ தனது முதல் மனைவி ஆக்டேவியாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் அவளை நாடு கடத்திக் கொலை செய்ய உத்தரவிட்டார். அதன் பிறகு நீரோ போபியாவை காதலித்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். போபியா கர்ப்பமாக இருந்தபோது, நீரோ ஒரு நாள் கோபமடைந்து அவளையும் கொன்றான். நீரோவின் ஆட்சியின் முதல் ஐந்து ஆண்டுகள் ரோமானியர்களுக்குப் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. பண்டைய ரோமில், செனட் அமைப்பு தான் நிர்வாகம் மற்றும் ஆலோசனை குழுவாக இருந்தது. நீரோ ரோமன், செனட்டுக்கு அதிகாரம் அளித்தது, ரோமானிய ராணுவத்தைத் திருப்திகரமாக வைத்திருந்தது, விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்தது போன்றவற்றால், பொது மக்களிடையே புகழ் பெற்றது. ஆனால் இந்த ஆரம்பகால வெற்றிகள் நீரோவின் எஞ்சிய காலத்தில் நடந்த கொடூரமான வன்முறை மற்றும் காட்டுமிராண்டித்தனத்தால் மறைக்கப்பட்டன. தனது செயல்களால், நீரோ வரலாற்றின் பக்கங்களில் தீமை மற்றும் துன்மார்க்கத்தின் அடையாளமாக மாறினார். கிளாடியஸின் காலத்தில் செனட் புறக்கணிக்கப்பட்டது போல, தனது ஆட்சியில் நடக்காது என்றும் ராஜீய விவகாரங்களில் இந்த அமைப்பின் முக்கியத்துவம் மீட்டெடுக்கப்படும் என்றும் நீரோ செனட்டிற்கு உறுதியளித்தார் என்று பேராசிரியர் சுஷ்மா மாலிக் கூறுகிறார். ரோமானிய ராணுவமான பிரிட்டோரியன் காவல்படையினருக்கான ஊதியம் சரியான நேரத்தில் வழங்கப்படும் என்றும் நீரோ உறுதியளித்தார். அந்த ஆரம்ப நாட்களில், நீரோ ரோம் விவகாரங்களில் பெரும்பாலானவற்றை செனட்டின் பொறுப்பில் விட்டுவிட்டார். செனட்டின் கிளர்ச்சி எழக்கூடாது என்றும் அவர் முயற்சி செய்தார். அப்படி எழும் கிளர்ச்சியால் ஒருவருக்கெதிராக ஒருவர் சதியில் ஈடுபட்டனர். தனது ஆட்சியின் ஆரம்ப நாட்களில், நீரோ செனட்டின் நம்பிக்கையை மீட்டெடுக்க முயன்றார், மேலும் அவர்களுக்கும் ரோமுக்கும் ஒரு சிறந்த ஆட்சியாளராகத் தாம் இருக்க முடியும் என்ற நம்பிக்கையையும் அளிக்க முயன்றார். ரோமானியர்களைக் கவர, நீரோ கி.பி 54 இல் கிரீஸ்-ல் நடப்பது போன்ற பெரிய அளவிலான விளையாட்டுகளை ஏற்பாடு செய்தார். மக்களின் பொழுதுபோக்குக்காக சர்க்கஸ் போன்ற பல விஷயங்களும் இந்த விளையாட்டுகளில் சேர்க்கப்பட்டன. நீரோவின் ஆரம்ப நாட்கள் ரோமின் பொற்காலம் என்று பிரிட்டனில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மத்தேயு நிக்கோல்ஸ் வரலாற்றுக் குறிப்புகளுடன் உறுதிப்படுத்துகிறார். நவீன காலங்களில் கூட, ஆட்சியாளர்கள் தங்கள் ஆரம்ப நாட்களில் இதுபோன்ற பல முடிவுகளை எடுப்பது, மக்களிடையே அவர்களின் புகழை அதிகரிக்கிறது, ஆனால் படிப்படியாக அவர்களின் புகழ் அவர்கள் ஆட்சி செய்யும் முறையாலேயே முடிவடைகிறது என்று அவர் கூறினார். நீரோவின் புகழ் பெரும்பாலும் அவரது கடைசி நாட்கள் வரை நீடித்திருந்தது என்று மேத்யூ கூறுகிறார். நீரோ தனது ஆட்சிக் காலத்தில் எதிர்கொண்ட பிரச்னைகள் குறித்துப் பேசிய மேத்யூ, ஜூலியஸ் கிளாடியஸ் இந்த அரச வம்சத்தின் ஐந்தாவது மற்றும் கடைசி மன்னர் என்று கூறுகிறார். பட மூலாதாரம்,ALBERTO PIZZOLI நீரோ ஆட்சிக்கு வந்தபோது, அவர் பல சிக்கல்களை எதிர்கொண்டார். அவர் பொறுப்பேற்றபோது, நிர்வாகம் சீராக இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அதிகாரத்தைப் பெற குடும்பத்திற்குள் ஒரு கடுமையான போராட்டம் நடந்து கொண்டிருந்தது, தவிர, சதித்திட்டங்கள் உச்சத்தில் இருந்தன. கூடுதலாக, செனட்டின் உயரடுக்குப் பிரபுக்களைத் திருப்திப்படுத்துவது அவசியமாக இருந்தது. மாகாண ஆளுநர்கள் இருந்தனர், அவர்களின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, ரோம் மக்கள் விளையாட்டு மற்றும் கண்காட்சிகளில் ஆர்வம் காட்டினர். நீரோ இவர்கள் அனைவரின் நலன்களையும் சமநிலைப்படுத்தி அவர்களை திருப்திப்படுத்த வேண்டியிருந்தது என்று மேத்யூ கூறுகிறார். நீரோ ஆட்சியைக் கைப்பற்றிய போது இருந்த ராஜ்ஜியத்திற்கும் அவர் விட்டுச் சென்ற போது இருந்த ராஜ்ஜியத்திற்கும் இடையே அதிக வித்தியாசம் இருந்ததா என்ற கேள்விக்கு மேத்யூ, இந்தப் பேரரசு, தொடர்ந்து எல்லைகளின் விரிவாக்கத்தின் அடிப்படையில் அமைந்தது என்று ஒப்புக்கொள்கிறார். நீரோவின் காலத்தில் ராஜ்ஜியம் விரிவாக்கப்படவில்லை. ஆனால் அதில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது என்கிறார் அவர். ராஜ்ஜியங்களை வெற்றி பெறுவதன் மூலம் கிடைக்கக்கூடிய பொருட்கள் வரத்து இல்லாததால், ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவது இன்னும் கடினமானது. ரோம் எரியும் போது நீரோ குழல் வாசித்ததாகக் கூறப்படுவது உண்மையா? கி.பி 64 இல் ரோமாபுரி எரிந்து சாம்பலானது. நீரோ சக்கரவர்த்தியால்தான் தீ வைக்கப்பட்டதாக வதந்தி பரவியதுடன் ரோம் எரியும் போது நீரோ ஃபிடில் வாசித்ததாகவும் கூறப்பட்டது.தீ விபத்து குறித்து, வரலாற்றாசிரியர் சுஷ்மா மாலிக் கூறுகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில், குறைந்தது இரண்டு வரலாற்றாசிரியர்களாவது நீரோ தானே ரோமில் தீயை வைத்தார் என்பதை உறுதிப்படுத்துகிறார்கள். மீண்டும் ஒரு நகரைக் கட்டியெழுப்பி, அதில் தான் விரும்பிய புகழ்பெற்ற கோல்டன் ஹவுஸை உருவாக்க நீரோ விரும்பினார் என்று தெரிவிக்கிறார்.ஆனால் சில வரலாற்றாசிரியர்கள் நீரோவுக்கு ஆதரவாக வாதிடுகின்றனர், அவர் இந்த நெருப்பை வைக்கவில்லை, ஏனென்றால் அவருடைய அரண்மனையே கூட இந்த நெருப்புக்கு இரையானது என்று அவர்கள் கூறுகிறார்கள். அதே காலகட்டத்தின் மற்றொரு வரலாற்றாசிரியரான டெசிட்டஸ், நீரோ தான் தீ வைத்தார் என்பது ஒரு வதந்தி என்று கூறுகிறார். "நீரோ இதைச் செய்திருப்பார் என்பது நகைப்புக்குரியதாகத் தெரிகிறது. நீரோ பின்னர் நகரத்தை மிகச் சிறந்த முறையில் மீண்டும் கட்டியெழுப்பினார். தீ விபத்து ஏற்பட்டால், மீண்டும் விரைவாகப் பரவக்கூடாது என்பதற்காக அகலமான சாலைகள் கட்டப்பட்டன, மேலும் சிறந்த கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன என்று சுஷ்மா மாலிக் கூறுகிறார். இரண்டு வரலாற்று ஆதாரங்கள் நீரோ தானே நகரத்திற்கு தீ வைத்ததாகக் கூறுகின்றன என்கிறார் மேத்யூ. தீ எரிந்து கொண்டிருந்த போது அலங்கார ஆடையுடன் பாட்டுப் பாடத் தொடங்கினார் நீரோ என்பது அவர்களின் வாதம். ஏழாம் நூற்றாண்டில் புல்லாங்குழல் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் நீரோவின் காலத்தில் ஃபிடில் இசைக்கருவியே இல்லை என்றும் மேத்யூ கூறுகிறார். நீரோ லைர் என்ற இசைக்கருவியை வாசித்ததாகவும் கூறப்படுகிறது. அமேசான் காடுகளை சேதப்படுத்தாமல் 5,000 ஆண்டுகள் வாழ்ந்த மனிதர்கள் .சாம்பார் என்ற உணவு எங்கிருந்து வந்தது தெரியுமா? சுவாரஸ்ய வரலாறு தீ வைத்ததாகக் கிறிஸ்துவர்கள் மீது குற்றச்சாட்டு நீரோ சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தினர் தான் தீ வைத்ததாகக் குற்றம்சாட்டினார்.அந்த நேரத்தில் ரோமில் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவும், பொது மக்கள் கிறிஸ்துவர்களின் மத நம்பிக்கைகளைப் பற்றி மிகக் குறைவாகவே அறிந்திருந்ததாகவும், அவர்களைப் பற்றி வெறுப்பு உணர்வைக் கொண்டிருந்ததாகவும் டெசிட்டஸ் எழுதுகிறார் என்று சுஷ்மா மாலிக் கூறுகிறார்.எனவே பொது மக்களால் எளிதில் நம்பப்படுமாதலால் கிறிஸ்தவர்களைக் குற்றம்சாட்டுவது மிகவும் எளிதானது. நீரோ பின்னர் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தும் நோக்கில், தீ வைத்ததற்குத் தண்டனையாகப் பொது வெளியில் அவர்களை துக்கிலிடச் செய்தார், காட்டு ஓநாய்களின் முன் அவர்கள் வீசப்பட்டனர், இரவில் உயிருடன் எரிக்கப்பட்டனர், பொதுமக்கள் அந்தக் காட்சியைக் காண கூட்டப்பட்டனர். முடிக்கப்படாத நீரோவின் அரண்மனை இந்த தீ விபத்துக்குப் பிறகு, நீரோ ஒரு பெரிய அரண்மனையைக் கட்டினார். இதில் ஆடம்பரமான தளபாடங்கள் மற்றும் அறைக்கு வாசனை சேர்க்க சுவர்களுக்குள் வாசனை திரவிய குழாய்கள் பொருத்தப்பட்டிருக்கும் "கோல்டன் ரூம்" இருந்ததாக கூறப்படுகிறது. இந்த அரண்மனையை நிர்மாணிப்பதற்காக ஒரு பெரிய அளவிலான பொருட் செலவிடப்பட்டது. ஆனால் அது கட்டி முடிக்கப்படாமலே இருக்கிறது. சாம்பல் குவியலிலிருந்து மீண்டு, பழைய வாழ்க்கையை எட்ட முயன்று கொண்டிருந்த அந்த நகர மக்கள், இந்த அரண்மனையை நிர்மாணிப்பதில் மகிழ்ச்சியடையவில்லை. இது விளையாட்டு மற்றும் கொண்டாட்டங்களுக்காக, பொதுமக்களுக்காகத் திறக்கப்படும் என்று கூறப்பட்ட போதும் அவர்கள் இதை விரும்பவில்லை. நீரோ இசைக்கருவியான லைர் வாசிப்பதிலும் பாடல் பாடுவதிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். மேடையில் நடிப்பதையும் அவர் விரும்பினார். ஆனால் ரோமப் பேரரசரின் தகுதிக்கு இவை பொருத்தமில்லாதவை என்று செனட்டினர் கருதினர். ஆனால் நீரோ அதைப் பொருட்படுத்தவில்லை, கிரேக்கத்திற்குச் செல்ல ஒரு வருடம் விடுமுறை எடுத்தார், அங்கு அவர் நாடகப் போட்டிகளில் பங்கேற்றார்.மேடையில் ஒரு சோகமான கதையில் கதாநாயகியாக நடித்தபோதெல்லாம் நீரோ அவர் தனது இரண்டாவது மனைவி போபியாவின் முகமூடியை அணிந்திருந்தார் என்று கூறப்படுகிறது. அவரது கொலை காரணமாக அவர் துக்கத்திலும் குற்ற உணர்ச்சியிலும் சிக்கித் தவித்தார் என்பதற்கு இது ஒரு அடையாளம். மக்கள் விரோதியின் நாடகத்துவமான மரணம் அவர் 30 வயதை எட்டிய நேரத்தில், நீரோவின் எதிர்ப்பும் கெட்ட பெயரும் பெரிதும் அதிகரித்தன. இராணுவத்தின் ஆதரவுடன், செனட் நீரோவை "மக்களின் எதிரி" என்று அறிவித்தது, இது ஒரு வகையில் அவரது மரணத்தை அறிவித்தது, அதாவது நீரோ கண்ட இடத்தில் கொல்லப்படலாம் என்று பொருள். பாதுகாப்பு அதிகாரிகள் பின் தொடர்ந்துவர, நீரோ இரவின் இருளில் தப்பி ஓடி, நகரின் புறநகரில் உள்ள தனது அரண்மனைகளில் ஒன்றில் மறைந்து தற்கொலை செய்து கொண்டார்.நீரோ தனது உயிரை மாய்த்துக் கொண்டபோது, அவரது கடைசி வார்த்தைகள் 'குவாலிஸ் ஆர்டிஃபெக்ஸ் பேரியோ' என்று கூறப்படுகிறது. நீரோவின் கடைசி தருணங்களில் பேசப்பட்ட இந்த வார்த்தைகளின் சரியான பொருளைக் குறிப்பிடுவது கடினம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், ஆனால் அவை பல அர்த்தங்களைக் கொண்டிருக்கலாம்: "என் மரணத்தில் கூட நான் ஒரு கலைஞன்""என்னுடன் இறப்பவர் எப்பேர்ப்பட்ட கலைஞர் !""நான் ஒரு வர்த்தகனைப் போல இறக்கிறேன்"நீரோவின் இந்த வார்த்தைகளின் பொருள் என்னவாக இருந்தாலும், அவரது கடைசி வார்த்தைகள் அவரைப் போலவே நாடக பாணியில் இருந்தன என்று கூறினால் அது மிகையாகாது. bbc.com/tamil/global-57481496?at_custom3=BBC+Tamil&at_custom1=%5Bpost+type%5D&at_custom2=facebook_page&at_custom4=9E21B006-CE96-11EB-BA29-
  1 point
 32. இனவாதிகளும் பிக்குகளும் அடங்கி பெட்டிப் பாம்பாவார்கள். சிங்கள இனவாதிகளின் வீரம் முழுவதும் கையொடிந்த ஈழத்தமிழரிடம் மட்டுமே. சும்மா ஒரு சத்த வெடிக்கும் "அம்மே கொட்டியா" என தலை தெறிக்க ஓடியவர்கள் தான் இந்த இனவாதிகளும் பிக்குகளும் என்பதை நாம் எக்காலமும் மறக்கக்கூடாது.
  1 point
 33. நான் கூறும் கருத்து கிழக்கு மட்டும் அல்ல வட க்கும் சேர்த்துதான்.... தமிழ் தேசியவாதிகள் தமிழ்தேசியம் பேசி அபிவிருத்தி செய்ய தவறிவிட்டார்கள் என குற்றம் சாட்டி அரசுடன் இணைந்து கொண்ட வடக்கு,கிழக்கு(இரு பகுதியும் சேர்த்து....)பிரதிநிதிகள் அதிகம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு .....இராணுவம் வீடு கட்டி கொடுப்பது நல்ல விடயம் அது இராணுவத்தின் சொந்த பணத்திலா? அரசு பணம்..... ஏன் அரச பணத்தில் இராணுவம் கட்டி கொடுக்க வேண்டும்? அரசு கட்டிகொடுக்கலாமே? எம்மக்கள் காசுகளை விளையாடிவிடுவார்கள் என சொல்லுவீர்கள் ....இன்றைய ஆட்சியாளருக்கு இராணுவம் தான் பாதுகாப்பு மக்களோ சிவில் நிர்வாகமோ அல்ல அதுதான் இராணுவத்தை மக்களுக்கு நண்பனாக்க முயல்கின்றனர்....சீனா பெரியண்ணாவின் ஆலோசனைப்படி
  1 point
 34. அனந்தி வழக்கு போடுவது இந்திய நலனுக்கு உகந்ததா இல்லையா என்பதை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள். நீங்களோ நானோ இங்கிருந்து சொல்ல முடியாது. ஆனால் அனந்தி செய்யகூடியது அவர்களிடம் போவது. அதைதான் நிழலி சொன்னார். அது அவர்களின் நலனுக்கு உகந்ததாயின் உதவுவார்கள். இல்லை என்றால் இல்லை. ஆகவே நிழலி கூறியதில் ஒரு பிழையும் இல்லை.
  1 point
 35. இதிலும்விட மிகவும் கீழ்த்தரமாக இங்கே யாழ் களத்தில் நடக்கிறது முதலில் நாம் அதனை தடுப்போம் பின்பு தூரகங்களுக்கு மனு கொடுப்போம்
  1 point
 36. சுவையை தான் சுவி என்று எழுதிவிட்டேன் (உங்களை போய் அப்படி எண்ணுவேனா? தவிர அந்த கருத்துதான் உண்மையான கருத்து அதைத்தான் நானும் எழுதிவருகிறேன் சீமானும் பேசிவருகிறார். அதில் புடுங்குபடுபவர்கள்தான் பல்டி அடிக்கிறார்கள்) நான் ஒருவரை பற்றி எழுந்தமானாக எண்ணுவதில்லை அவர்களை பல காலம் அவதானித்து அவர்கள் கருத்துக்களை வாசித்தாலும் ... தாம் யார் என்று அவர்கள் வாக்குமூலம் தந்த பின்புதான் ஏற்றுக்கொள்ளுவேன் தங்களை அறியாமலே அவர்கள் வாக்குமூலம் தரும்போது வாங்கி வைத்துக்கொள்வேன்.
  1 point
 37. 3-9-2008 கிழக்கு மற்றும் மேற்கு கிளிநொச்சி சமர்களின் முடிவாய்
  1 point
 38. திருவாளர் கோசான்! மேலே வளவன் எழுதிய கருத்தை நான் இங்கு போடுகிறேன் அந்த கருத்தில் ஒன்றும் இல்லை. அதுக்கு 5 பேர் பச்சை குத்தி வரவேற்று இருக்கிறார்கள் ஒருவர் சுவிஅவர்கள் அவருக்கு அந்த கருத்து பிடித்து இருக்கிறது என்று எண்ணுகிறேன். மற்ற நாலு போரையும் நினைத்து உருண்டு உருண்டு சிரிக்கிறேன் இந்த பாம்பாம்த்து சிர்த்தத்தங்களில் தொங்கும் கீழ்நிலையைத்தான் நான் மேலே எழுதினேன். அதைத்தான் திரும்ப திரும்ப நான் மேலே எழுதி இருக்கிறேன் வலவன் வடிவில் நான் வைத்த மிதிவெடியில் வந்து இப்படி மிதித்து நிக்கிறார்களே? இவ்வாறான ஒரு கேவலம் எதற்கு? இதுக்கு அடித்தளமே முதலில் குழுவாதம் மற்றது தாங்கள்தான் பெருந்தகைகள் எனும் கர்வம் மற்றது இன்னொருவனை மிதிக்கும் ஒரு அதிகார ஆணவம் மற்றதை சீமானின் வாலில் புலிவாலில் தொங்குவது இவற்றை கட்டிப்பிடித்து தொங்கிக்கொண்டு அடுத்தவனுக்கு பாடம் எடுப்பு. அரசியல் என்பதே முதலில் ஆளுமை சார்ந்தது ஆளுமையை கைவிட்டால் அரசியல் இல்லை ஆளுமையை பற்றிக்கொள்ள பலம் வேண்டும் அது இப்போது பண (பொருளாதார) பலமாகவே இருக்கிறது எந்த அரசுகள் என்றாலும் அதற்கு உட்பட்டுதான் ஆட்ச்சி என்னைப் பொறுத்தவரை இதில் சிலாகிக்கவே ஏதும் இல்லை. உண்மையில் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை ..... விழுந்து விழுந்து சிரிக்கிறேன் ஓநாய் ஓநாய் என்பவன் ஒரு நாள் உண்மையிலேயே ஓநாய் வரும்போது ஆடுகளை இழப்பதுபோல. குழுவாதம் மூலம் அடுத்தவர்களை சாதி வெறியில் இருந்துகொண்டு நலிந்தவனை மிதிப்பதுபோல இங்கிருக்கும் சக கருத்தாளர்களை வீம்புக்கு வம்புழுத்து வன்மம் வளர்க்கும் இவர்கள் ஒருநாள் தங்கள் முகத்தில் கரிப்பூசிக்கொண்டு நிற்பார்கள் என்பது நான் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். இருந்தாலும் எனக்கு ஒரு கவலை உண்டு இப்போது ஈழத்தமிழரிடம் பெரும் சக்தி உண்டு ஏன் வீணாக எந்த அரசியல் பலமும் இல்லாத சீமானை ஆதரவாகமும் எதிராளியாகவும் காவிக்கொண்டு திரிகிறோம் என்பதே (ஸ்டாலின் கனிமொழியையே வழிக்கு கொண்டுவரும் பொருளாதார பலம் உண்டு) அதுக்கு விடை எனக்கு 90லேயே தெரியும் தெளிவாக அது தெரிந்தபின்தான் நான் போர் உச்சத்தில் இருந்தபோதும் சுயலநலத்துடன் உயிருக்காக தேசத்தை விட்டு ஓடினேன். சிங்களவன் போட்டு கும்பு கும்பு என்று கும்மினால் யாழ்ப்பாண ஆணவ தலைகளுக்குள் கொஞ்சம் புத்தி வரலாம் என்று எதிர்பார்த்தேன் அது இன்னும் ஒரு ஆயிரம் வருசத்துக்கு வாராது என்றே மேலே இருக்கும் சில ஆணவ கருத்துக்கள் அடித்து சொல்கின்றன. நான் எந்த வலதுசாரிகளுக்கும் ஆதரவாளன் இல்லை அதுக்காக போலி இடதுசாரிகளின் வேஷம் தெரியாதவனும் இல்லை இந்த வேஷங்கள் ஒருநாள் கலையும் என்று எனக்கு தெரியும் இவ்வளவு சீக்கிரமாக.......... என்பதுதான் எதிர்பாராதது.
  1 point
 39. ஹாய்! இன்னைக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க? - Dr. K. முருகானந்தம் Sponsored content சிறுநீரகக் கல் வெயில் காலம் வந்துவிட்டது, இந்நேரத்தில் ஒழுங்காக தண்ணீர் பருகாமல் போனால் அது நம் சிறுநீரகத்தை வெகுவாக பாதிக்கும் என்பது நாம் அறிந்ததே. இதன் நீண்ட கால விளைவுதான் கிட்னியில் தோன்றும் கற்கள். ஆண்கள், பெண்கள், ஏன் ஓடியாடித் திரியும் குழந்தைகளுக்குக் கூட இப்போதெல்லாம் சிறுநீரகக் கல் பாதிப்பு ஏற்படுகிறது. வெயில் காலத்தில் வியர்வை மற்றும் மூச்சு மூலம் நிறைய நீர்ச்சத்தை இழக்கிறோம். இதனால் உடலின் கழிவுகள் மற்றும் தேவையற்ற தாது உப்புகளை வெளியேற்றத் தேவையான நீர் இல்லாமல் சிறுநீரகம் கஷ்டப்படுகிறது. தாது உப்புகள் சிறுநீரகத்திலேயே தேங்கி நாளடைவில் சிறு சிறு கற்களாக உருமாற்றம் அடைகின்றன. இந்தக் கற்கள் சிறுநீரகத்தை விட்டு வெளியேறி, சிறுநீர்ப்பாதையை அடைக்கும்போது பின்புற விலாப் பகுதியிலிருந்து ஆரம்பித்து பிறப்புறுப்பு வரை தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. சிறுநீர் வருவது போன்ற உணர்வு இருக்கும் ஆனால் சிறுநீர் வராமல் இருப்பது, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்/வலி, அங்கே ரத்தம் கசிதல், வாந்தி, காய்ச்சல், குளிர், நடுக்கம், சோர்வு போன்றவை இதன் பிற அறிகுறிகள் ஆகும். இளமையில் கல். வெயிலில் சுற்றும் / வேலை செய்யும் 20-40 வயது ஆண்களில் சிறுநீரகக் கல் பிரச்னை அதிகம் வருவதைக் காண்கிறோம். அல்ட்ராசவுண்ட், சி.டி ஸ்கேன் மூலம் கல்லின் அளவும் பாதிப்பும் அறியப்படுகிறது. லேப் பரிசோதனையில் சிறுநீரில் ரத்தம், நோய்த்தொற்று இருக்கிறதா என்று கண்டறியப்படுகின்றன. சிகிச்சைகள். 60-70% நோயாளிகளில், மாத்திரை மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் மூலமே கற்களைக் கரைத்துவிட முடியும். காய்ச்சல்/வாந்தி போன்ற அறிகுறிகள் இல்லாமல் சிறுநீரகத்தின் உள்ளே அல்லது மூத்திரப் பை அருகே சிறிய கல் இருந்தால் ஒரு மாதம் வரை மருந்துகள் கொடுத்து கல் வெளியேற்றப்படுகிறது. இதுபோன்ற நோயாளிகளைக் குறைந்தது 3-4 லிட்டர் தண்ணீர் அருந்துமாறு அறிவுறுத்துகிறோம். பொதுவாக, எப்போதும் சிறுநீர் தண்ணீர் போன்ற நிறத்திலேயே இருக்க வேண்டும். மஞ்சள், பழுப்பு என்று நிறம் மாறுபட்டால் இன்னும் போதிய அளவு நீங்கள் தண்ணீர் அருந்தவில்லை என்று அர்த்தம். இது 95% பேருக்கு பொருந்தும். ஆனால் இதய நோயாளிகள், சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் இவ்வளவு தண்ணீர் அருந்தக்கூடாது, அவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே நீர் அருந்த வேண்டும். வலியைக் குறைக்க வலி நிவாரணிகள், வலியின்றி சிறு கற்கள் வெளியேறவும், சிறுநீரிலேயே கல் கரைந்திடவும் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. தீராத வலி/பிற தீவிர அறிகுறிகளுடன் வருவோர்க்கு உடனடி சிகிச்சையாக எண்டோஸ்கோப்பி லேசர் சிகிச்சை வழங்கப்படுகிறது. 'டே கேர்' செயல்முறை, அதாவது காலையில் எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்துகொண்டு அன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ வீடு திரும்பலாம். இந்த நவீன சிகிச்சையில் வலி இல்லாமல், தழும்புகள் இல்லாமல் கற்களை அகற்றிவிட முடிகிறது. மிக மிகத் தீவிரமான நிலையை எட்டிய நோயாளிகளுக்கு மட்டுமே லேப்பரோஸ்கோப்பி/ஓப்பன் சர்ஜரி எல்லாம் தேவைப்படும், ஆனால் இவை மிக மிக சொற்பமே! கேல்சியம் ஆக்சலேட், யூரிக் ஆசிட், நோய்த்தொற்றினால் ஏற்படும் மிருதுவான மேட்ரிக்ஸ் கற்கள் போன்றவை சிறுநீரகக் கற்களின் சில வகைகளாகும். சிறுநீரகக் கற்களால் தொற்றும், தொற்றால் சிறுநீரகக் கற்களும் வர வாய்ப்புண்டு. குரோன்ஸ் டிசீஸ் (Crohn's disease) போன்ற குடல் பிரச்னை உள்ளோர்க்கு சிறுநீரகத்தில் கல் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும், சிறுநீரகக் கல் பிரச்னையைக் கவனிக்காமல் விட்டால் நாளாக ஆக உடலின் பிற உறுப்புகள் பாதிப்படையக்கூடும். வராமல் தடுத்துக்கொள்ள சில வழிகள்! * ஒருநாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள். * அதிக உடல் உழைப்பில் ஈடுபடுவோர், உடற்பயிற்சி செய்வோர், மாரத்தான் வீரர்கள், களத்துக்குச் செல்லும் முன்னரே தேவையான நீர் அருந்த வேண்டும். கையில் எப்போதும் தண்ணீர் பாட்டில் வைத்திருக்க வேண்டும். * ஊறுகாய், அப்பளம், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற உப்பு அதிகமான உணவுகளைக் குறைக்கவும்/தவிர்க்கவும். * குழந்தைகளுக்கு அதிக நொறுக்குத்தீனி/ஜங்க் ஃபுட் கொடுத்து பழக்கக்கூடாது. * கிட்னி பிரச்னை உள்ளவர்கள் இறைச்சி உணவுகளைக் குறைத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம். * உயரத்துக்குத் தேவையான எடையைப் பராமரிக்க முயற்சிக்கவும். * டி.பி. சொரியாசிஸ், எச்.ஐ.வி. மருந்துகளாலும் கிட்னியில் கல் வரலாம். மருத்துவரிடம் இதுகுறித்து கேட்டு அறிந்துகொள்ளுங்கள். * ஏற்கெனவே சிறுநீரகக் கல் அகற்றப்பட்டவர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை செக் அப் செய்துகொள்வது நல்லது. தோராயமாக, சிகிச்சை எடுத்துக்கொண்ட 100 நோயாளிகளில் 50 பேருக்கு, 10 வருடங்கள் கழித்து சிறுநீரகக் கல் பிரச்னை மீண்டும் வருவதைக் காண்கிறோம். வாழ்வியலில் மாற்றத்தைக் கொண்டுவரத் தவறுவதுதான் இதற்கு காரணம். தண்ணீர் ஒழுங்காக பருகினாலே இப்படி நடக்க வாய்ப்பில்லை. ஒருமுறை சிறுநீரகக்கல்லின் வலியால் அவதிப்பட்டவர்கள் மீண்டும் இந்தத் தவறை செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன். 'வாழ்வியல் மாற்றத்தால் பெண்களுக்கும், ஏன் குழந்தைகளுக்கும்கூட இப்போது சிறுநீரகக் கல் வருகிறது.' கோவிட் பயம் வேண்டாம். கோவிட் காலத்தில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வீட்டிலேயே பெரும்பாலானோர் இருப்பதால், தேவையான அளவு தண்ணீர் பருகி உடல் நலன் மேல் அக்கறை செலுத்துகிறார்கள் என்று நம்புகிறேன். ஆனால், சிறுநீரகப் பிரச்னையை வைத்துக்கொண்டு, கோவிட் வந்துவிடுமோ என்ற பயத்தில் டாக்டரை அணுகாமல் இருப்பது மிக மிகத் தவறு. கோவிட் இருந்தாலும்கூட சிறுநீரகத்தில் வலி, அடைப்பு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் கிலெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி போன்ற அவசரகால சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகளை நாட வேண்டும். முதலாம் கோவிட் அலையில், பயம் காரணமாக சிறுநீரகப் பிரச்னையைக் கவனிக்காமல் விட்டு, இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர்களைக் கோவிட் நேரத்திலும் குணப்படுத்தியுள்ளோம். எனவே, சிறுநீரக நோயாளிகள் சிகிச்சை எடுத்துக்கொள்ள எந்தவித பயமும் தயக்கமும் வேண்டாம்! https://www.vikatan.com/news/miscellaneous/kidney-stone-problem-during-summer
  1 point
 40. அஸ்வினின் அபார சுழற்சிகள்.
  1 point
 41. 4. மனிதவுரிமை கண்காணிப்பாளர்களும் விடுதலைப்புலிகளும் கருணா குழு இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து கடத்தல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் ஆகியவற்றில் ஈடுபடுவதுடன், புலிகள் இயக்கத்தின் போராளிகள் மீது கெரில்லா முறையில் தாக்குதல்களை நடத்திவருவதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். இலங்கை ராணுவத்தின் பல பிரிவுகள் கருணா குழுவுடன் சேர்ந்து இயங்குவதும், அக்குழுவிற்கான உதவிகளை வழங்குவதும் இலங்கையில் பரவலாக அறியப்பட்ட விடயமாக இருந்தபோதும், அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களை இதுவரை எவரும் வெளிப்படையாக முன்வைக்கவில்லை. அண்மையில் சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளை விசாரிக்கும் ஐ நா வின் அதிகாரியான பிலிப் அல்ஸ்ட்டன் கருத்துக் கூறுகையில், "கருணா குழுவிற்கும் ராணுவத்திற்கும் இடையிலான நெருக்கமான உறவு தொடர்பான சந்தர்ப்ப ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன. கிழக்கில் இயங்கிவரும் சமூக அமைப்புக்கள் பலவற்றிடமிருந்து எனக்குக் கிடைத்த நம்பகரமான அறிக்கைகளின்படி கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட பல சிறுவர்கள் பின்னர் அரச ராணுவமுகாம்களிலிருந்து மீட்கப்பட்டிருக்கின்றனர்" என்று கூறியிருக்கிறார். அத்துடன், கிழக்கில் இயங்கிவரும் அரசுசாரா சமூக நலன் அமைப்புக்களின் பொதுவான தலைமை அதிகாரி எம்மிடம் பேசும்போது, கிழக்கில் கருணா குழுவினரின் முகாம்கள் ராணுவ முகாம்களிலிருந்து 50 மீட்டர்களுக்கும் குறைவான தூரத்தில், சில இடங்களில் நேரெதிராக அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அத்துடன் அலன் ரொக்கின் அறிக்கையும் கருணா குழுவினருக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பினை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது.
  1 point
 42. புலிகளை அழிக்க கருணாவை முன்னிறுத்தும் கொழும்பு அரசாங்கம் : அமெரிக்க ஆய்வுக்குழு தகவல் காலம் : ஆடி 14, 2004 மூலம் : தமிழ்நெட் மற்றும் தமிழ்னேஷன் புலிகளின் முன்னாள் கிழக்குப் பிராந்தியத் தளபதியாகவிருந்த கருணாவின் பிரிந்து செல்லுதலை அரசாங்கத்தின் அதியுயர் மட்டத்திலிருப்பவர்கள் ஆதரித்துவருவதாகவும், இதற்கு அமெரிக்க அரசின் தந்திரோபாய ஆசியும் இருப்பதாகவும் அமெரிக்காவின் பூலோக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். "புலிகளை நிலைகுலைய வைத்து, கட்டாயப் போர் ஒன்றிற்குள் அவர்களை இழுத்து, இறுதியில் பலவீனப்பட்டுப்போன புலிகளின் ராணுவப் பலத்தை பாரிய ராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலம் முற்றாக அழிப்பதே இலங்கை அரசின் திட்டமாகும்" என்று Strategic Forecasting (Stratfor) எனும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். கருணா தொடர்ச்சியாக புலிககளின் தலைமையை கடுமையாக விமர்சித்தும், அதற்கெதிராகச் செயற்பட்டு வருவாராகவிருந்தால் புலிகளுக்கும் அவரது குழுவிற்குமிடையிலான மோதல்கள் மீள தொடங்கும் அபாயம் இருக்கின்றது. இது கொழும்பிலிருக்கும் அரசால் மிக விருப்பத்தோடு எதிர்ப்பார்க்கப்படுவது மட்டுமல்லாமல், அவ்வாறானதொரு நிலையினை ஏற்படுத்த அது தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்பதும் திண்ணம்" என்றும் இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். "உள்வீட்டு மோதல்களால் புலிகள் இயக்கம் கடுமையாகப் பலவீனமடைவதை எதிர்பார்த்து நிற்கும் இலங்கையரசு, அதன்பின்னர் புலிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும் ஏதுநிலைகளையும் அவதானிக்க விரும்புகிறது" என்றும் இவ்வமைப்பினர் கருதுகின்றனர். இதனாலேயே கருணாவுக்கான தந்திரோபாய உதவிகளை இலங்கை ராணுவம் அவரது பிரிவின்போது வழங்கியது என்று கூறும் இந்த ஆய்வாளர்கள், அவரது பிரிவு உயிர்ப்புடன் இருப்பதனை உறுதிப்படுத்த தொடர்ச்சியான உதவிகளை இலங்கை அரசு அவருக்கு வழங்கிவருவதாகவும் இவர்கள் கூறுகின்றனர். உள்வீட்டு பிளவுகளால் புலிகள் இயக்கத்திற்குள் மீண்டும் உருவாகாகக்கூடிய கரந்தடிப்படைப் போர் ஒன்றிற்குள் இயக்கம் இழுக்கப்பட்டு, பலவீனமடையும் என்று எதிர்பார்க்கும் அரசு இறுதியில் அவர்களை முற்றாக அழித்துவிடலாம் என்று கருதுவதாக இந்த ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். அரசிடமிருந்து தனக்கு உதவிகள் கிடைப்பதை கருணா தொடர்ச்சியாக மறுத்துவருகின்ற போதிலும்கூட, இலங்கை அரசாங்கத்தின் பல பிரிவுகள் கருணாவுக்கு உதவிவருவதனை வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டிருக்கின்றன. தனது 6 வார கிளர்ச்சி புலிகளால் மிக இலகுவாக முறியடிக்கப்பட்டதையடுத்து சுமார் 3 மாதங்கள் தலைமறைவாகியிருந்த கருணா மீண்டும் கொழும்பில் தோன்றி இலங்கை அரச வானொலிக்கும், பி பி ஸி தமிழ்ச் சேவைக்கும் சில செவ்விகளை வழங்கியிருக்கிறார். "புலிகளால் தான் மிகவும் மோசமான முறையில் தோற்கடிக்கப்பட்டதையடுத்து மீண்டும் வெளியே வந்திருக்கும் கருணா, புலிகளை அழிக்கும் தனது நோக்கத்திற்கு இன்னும் வலுச் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும்" என்று இந்த ஆய்வாளர்கள் மேலும் கூறுகின்றனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கருணாவுக்கான ஆதரவு மட்டக்களப்பில் இன்னும் இருப்பதாகவே தெரிகிறது என்றும் கூறுகின்றனர். பி பி ஸி தமிழ்ச்சேவையுடனான செவ்வியின்போது, தான் அரசியலில் ஈடுபட ஆர்வமாக இருப்பதாகக் கருணா தெரிவித்திருந்தார். இதுபற்றி இந்த ஆய்வாளர்கள் கூறுகையில், "அரசியலில் ஈடுபடும் தனது விருப்பத்தினைக் கருணா வெளிப்படையாகத் தெரிவித்திருப்பதன் மூலம், புலிகளினால் இலக்குவைக்கப்படக்கூடிய ஒரு நபராக தன்னை அவர் அடையாளப்படுத்தியிருக்கிறார்" என்று தெரிவிக்கின்றனர். "இவ்வாறு புலிகளின் இலக்காக மாறி, புலிகளுக்கும் தனக்குமான தொடர்ச்சியான பகையினை வளர்த்தெடுப்பதன் மூலம் புலிகளை பலவீனப்படுத்தலாம் என்று அவரும், இலங்கை அரசும் நம்புவதாகத் தெரிகிறது" என்றும் இவ்வறிக்கை கூறுகிறது. "ஆனால், புலிகள் இலங்கை அரசுக்கெதிராக பல்லாண்டுகளாகப் போரிட்டு வருகின்றனர். ஆகவே, இருபக்கத்திலும் பாரிய இழப்புக்கள் இல்லாமல் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வொன்று வருவதற்கான சாத்தியப்பாடுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது" என்று அமெரிக்காவினைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு கூறுகிறது. இந்த ஆய்வாளர்களின் கணிப்பின்படி, போர் ஒன்று மீளத் தொடங்குமாக இருந்தால், புலிகள் மிகவும் பலவீனப்படுத்தப்படுவார்கள் என்றும், அவர்கள் இதுவரை எதிர்பார்த்துப் போராடிவரும் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைக்கும் பலத்தினை இதனால் இழப்பார்கள் என்றும் எதிர்வுகூறுகிறது. "அதேவேளை, காயப்பட்ட புலியை பொறிக்குள் சிக்கவைப்பதென்பதும் ஒரு அபாயகரமான விளையாட்டே" என்றும் இவ்வமைப்பு கூறுகிறது. "பேச்சுவார்த்தைகள் ஒரு தேக்க நிலையினை அடைந்திருக்கின்றன. புலிகள் தமது கோரிக்கைகளை விட்டுக்கொடுத்தாலோ அல்லது அரசு பலவீனப்பட்டாலோ அன்றி, இப்பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கும் என்று கூறமுடியாது" என்றும் இவ்வமைப்பினர் கூறுகின்றனர்.
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.