Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Leaderboard

 1. valavan

  valavan

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   11

  • Posts

   1,060


 2. நன்னிச் சோழன்

  நன்னிச் சோழன்

  கருத்துக்கள உறவுகள்+


  • Points

   8

  • Posts

   19,890


 3. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Posts

   21,963


 4. shanthy

  shanthy

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Posts

   4,529


Popular Content

Showing content with the highest reputation on திங்கள் 21 ஜூன் 2021 in Posts

 1. அந்தத் காலம் ஈபிஆர்எல்எஃப் தலைவர் பத்மநாபாவின் சிந்தனை என ஒரு வாக்கியம் அவர்களது வெளியீடுகளில் வந்தது. "மக்களில்லா மண்ணை நான் நேசிக்கவில்லை" இப்படி சிந்தனை கொண்ட ஒருவரின் தலைமையில் இந்திய இராணுவகாலம் நடந்த அனியாயங்கள் பார்த்து அறிந்து அனுபவித்த அனுபவங்கள் நிறைய. இவர்கள் மரணம் எந்த வருத்தத்தையும் தரவில்லை.
  6 points
 2. டமார் எண்டு குண்டு வெடிச்சுது எண்டு அதிர்ச்சியா சொல்லுறமாதிரி, பிரதேசத்தை அழகுபடுத்த சுமார்....... 20 மில்லியன் ரூபாய்கள் என்று அதிர்வலைகளை ஏற்படுத்துவதைவிட சுருக்கமா கோத்தபாய ஒரு பிரதேசத்துக்கு 2 கோடி ரூபாய் ஒத்துக்கியிருக்கிறார் என்று சொல்லலாம். அந்த 2 கோடியில் அவரின் யாழ் பிராந்திய எடுபிடிகள் அமுக்கியதுபோக ஒரு 50 லட்சங்கள் மிஞ்சும், 50 லட்சம் என்பது தற்போது யாழ்ப்பாணத்தில் 20 மாடு வாங்கும் காசு,அந்த 50 லட்சத்தில் யாழ்நகர பிரதேசங்கள் அழகுபெற்று தக தக என்று எம்ஜிஆர் கலர்ல ஜொலிக்கபோகுது.
  4 points
 3. எனக்கு சீமானின் அரசியல் கொள்கைகளில் உடன்பாடு இல்லாவிடினும் இவ்வாறான சேறடிப்புகளைக் கொண்ட செய்திகளுக்கு எந்த ஆதரவும் இல்லை. இருவரின் அந்தரங்களை பாதுக்காக்க முடியாத ஒருவரின் கொச்சைத்தனமான நடவடிக்கைகளுக்கு யாழ் களமும் மேடையாக அமைவதை தவிர்ப்பதே நல்லது..
  4 points
 4. அதுக்குத்தான் இன்னொரு பெண்ணையும் இதற்குள் இழுத்து விட்டிருக்கோறோம் இல்ல....???
  2 points
 5. வெற்றிச்செல்வனின் பதிவுகள் அனைத்தும் சேமிப்பில் ஆவணமாக உள்ளது அவரின் முகநூல் பதிவுக்கு அவரின் ஆட்களே எதிரி தங்களின் உள் வீட்டு குத்து பாடுகளை வெளி உலகத்துக்கு சொல்கிறார் என்று உங்களின் மெயில் ஐடி இருந்தால் பிரைவேட்டில் போட்டு விடுங்க வேர்ட் பைலா இருக்கு அனுப்பி விடுகிறேன் அல்லது முன்பு எழுதினது மாற்றப்படாமல் அப்படியே இருந்தால் இங்கு இணைக்கிறேன் சில அவரின் பதிவுகள் உள்ள பெயர்கள் பின்பு மாற்றியுள்ளார் நெருக்குவாரத்தால் சில சம்பவங்களும் மாற்றியுள்ளார் .
  2 points
 6. இவர்கள் சில வருடம் முன்பு M TV அவார்ட் வென்றார்கள் பல அவ்ர்டுகள் வாங்கி இருக்கிறார்கள் தமிழில் பாடிய பாடல்கள் இவைதான் ......
  2 points
 7. இக் குறும்படம் சற்று அதிகமாக மிகைப்படுத்தி சமூகத்திற்கு செய்தி சொல்லுவதாக எனக்கு படுகிறது. மகன்மாரை அப்பாவிகள் போலவும் மருமகள்களை வில்லிகள், மோசமானவர்கள் போலவும் காட்டியுள்ளது தமிழ் சீரியல் நாடகங்களின் வகைக்கு இட்டு செல்கிறது. யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது. காலங்காலமான தமிழ்ப்பட பாணி.
  2 points
 8. தமது முக்கியமான போராளிகளை கொன்றுவிட்டார்கள் என்று புலிகள்மேல் ஆறாத வன்மம் கொண்டிருந்தார்கள் புளொட் இயக்கத்தினர். ஆனால் ஆரம்பகால தகராறுகளுக்கு வேறு காரணங்கள் என்று பலரும் பேசிகொள்வார்கள். இதில் முரண்நகை என்னவென்றால் புலிகளால் கொல்லப்பட்ட புளொட் இயக்கத்தினரின் எண்ணிக்கையைவிட புளொட் இயக்கத்தினால் கொல்லப்பட்ட புளொட் தளபதிகள் போராளிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். செல்லரித்ததுபோல் சொந்த இயக்க போராளிகள்,தளபதிகள் ஆதரவாளர்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக போட்டுக்கொண்டுபோய் கடைசியில் அவர்கள் தலைவரையும் கொன்றுதள்ளிவிட்டு வவுனியாவில் இலங்கை ராணுவத்தின் பாதுகாப்புடன் வதைமுகாம்களை அமைத்து புலிகள் எம்மை அழித்துவிட்டார்கள் என்று சொல்லி போற வாறவன் எல்லோரையும் புலிகள் ஆதரவாளர்கள் என்று கொன்று குவித்து புலிகளுக்கெதிராக போராட்டம் நடத்துகிறோம் என்று வீராப்பு பேசினார்கள் மாணிக்கதாசன் குறூப். ஒருகாலகட்டத்தில் தமிழர்பகுதிகளில் நிலைகொண்டிருந்த ராணுவத்தினரின் தொகையை காட்டிலும் அனைத்து இயக்கங்களில் இருந்த ஆயுதபயிற்சிபெற்ற போராளிகள் தொகை அதிகம் என்று பேசி கொள்வார்கள். திடகாத்திரமான போராளிகளை பெரும் எண்ணிக்கையில் கொண்டிருந்த புளொட் ரெலோ இயக்கங்கள் உட்பட அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர்ந்தால் ஆயுதம் தேவையில்லை சிங்கள ராணுவத்தை தலைமயிரில் பிடிச்சு தூக்கி வரலாம் என்றும் பேசிக்கொண்டார்கள். ஆனால் அத்தனையையும் விடுதலைபோராட்டம் என்ற பெயரில் புகை குடி பொம்பள சோக்கு என்று பொழுது போக்கியும் தமது தனிப்பட்ட வன்மங்களை தீர்க்க விழலுக்கிறைத்த நீராக்க்கியும்விட்டு இன்று அஞ்சலியும் கட்டுரைகளும் வரைந்து கொண்டிருக்கிறார்கள். கேட்டால் புலிகள் தம்மை அழித்துவிட்டார்களாம், புலிகள் அரவணைத்து போறமாதிரி உங்கள் தரம் இருந்ததா? இந்த அமைப்புகளில் இருந்து சிங்களவனுக்கெதிராக போராடி மடிந்த ஒரு சில போராளிகளை தவிர மற்ற எதுவும் எவரும், இருந்தாலும் இறந்தாலும் மரியாதைக்குரியவர்களாகவோ அனுதாபத்துக்குரியவர்களாகவோ இல்லை.
  2 points
 9. லண்டன் பிரான்ஸ் போன்றநாடுகளில் விசா இல்லாதவர்கள் எங்கு வேலை செய்கிறார்கள், எப்படியெல்லாம் கஷ்டபடுகிறார்கள் என்பது எம்மவர் அனைவருமே அறிந்த ரகசியம்தான். தாம் கசக்கி பிழியபடுகிறோம் என்பது அவர்களுக்கு தெரியும், ஆனால் வந்த கடனை அடைச்சு கையில் கொஞ்ச காசுடனாவது நாட்டுக்கு திரும்பிபோகாவிட்டால் இதைவிட கஷ்டபடவேண்டும் என்பது அதைவிட நன்கு தெரியும். விதி என்று தெரியும் வேறு வழியின்றி வலி தாங்குகிறார்கள். வீடியோ வெளியிட்டவர் என்னமோ பெரிய அநீதிக்கு எதிராக போரிடுகிறவன் போன்ற போர்வையில் தனது யூடியூப் பொழைப்புக்காக விசா இன்றி ஒழிந்திருப்பவர்கள் எங்கிருக்கிறார்கள் எங்கெல்லாம் வேலை பார்க்கிறார்கள் என்பதை குடிவரவு அதிகாரிகளுக்கு காட்டி கொடுக்கிறாரா? துன்பத்திலிருப்பவர்களின் வியர்வையில் லாபம் பார்க்கும் முதலாளிகள் பொறுக்கிதனமானவர்களென்றால்,நாதியின்றி மறைந்திருப்பவர்களின் மறைவிடங்களை அரசுக்கு போட்டு கொடுப்பவர்களும் பொறுக்கிதனமானவர்கள்தான்.
  2 points
 10. அசோகா ஹோட்டலை மறந்துவிட்டீர்களே. நூற்றுக்கணக்கான போராட்ட ஆதரவாளர்கள், பொதுமக்கள்,சந்தேகத்தின் பேரில் பிடித்து செல்லப்பட்ட இளைஞர்கள் விசாரணை என்ற பெயரில் உச்சந்தலையில் இரும்புகம்பிகளால் அடித்து கொல்லப்பட்டு மல குழிகளில் போட்டு மூடப்பட்டார்கள். அதனை தலைமையேற்று நடத்தியவர் இன்று தமிழர்களின் பிரதிநிதிகளில் ஒருவர் என்று தன்னை சொல்லி கொள்ளும் மண்டையன் எனும் சுரேஷ் பிரேமச்சந்திரன். காலத்தின் கோலம் இந்த மண்டையனையும் கூட்டமைப்பிற்குள் உள்வாங்கி கிளிநொச்சிவரை அழைத்து தலைவரும் சந்தித்திருந்தார். சொந்த இன மக்களை என்னமோ ஜென்மவிரோதிகள்போல் தேடி தேடி வேட்டையாடிவிட்டு இந்தியபடை திரும்பும்போது தாயக பகுதியெங்கும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு சொந்த மக்களின் உயிர்களை சுருட்டியது போதாதென்று உடமைகளையும் சுருட்டிக்கொண்டு ஓடி தப்பியவர்கள் பதிலுக்கு வேட்டையாடப்பட்டார்கள். அவ்வளவுதான் இவர்களுக்கு அஞ்சலியெல்லாம் கிடையாது. அந்நிய சக்திகளின் பிராந்திய ஆக்கிரமிப்பு போதைக்கு அவர்களை மகிழ்விக்க சொந்த மக்களை வகை தொகையின்றி படுகொலை செய்து அவர்களிடம் வாங்கி உண்ட சோற்றுகடன் தீர்த்தார்கள். காரைநகர் கடற்படை முகாம் தாக்குதல் முயற்சியின்போது ஒரு ஈபி போராளி இறந்ததாக ஞாபகம், ஈபிஆர் எல் எவ்.வில் அந்த ஒரேயொரு போராளிக்கு மட்டும் அஞ்சலிகள். கடல்கடந்துபோய் இந்திய மண்ணில் இவர்களை போட்டு தள்ளியது தவறு என்று ஒரு விமர்சனம் உண்டு, கடல்கடந்து வந்து சொந்தமக்களை கொன்று குவித்துவிட்டு மீண்டும் கடல்கடந்து ஓடி தப்பி இந்திய மண்ணில் அடைக்கலம் புகுந்தது தவறில்லையென்றால், கடல்கடந்துபோய் அவர்களுக்கு தண்டனை வழங்கியதும் தவறில்லை. அது தவறு என்று வாதிட்டால், இங்கிலாந்திலிருந்து கடல் கடந்து வந்து இந்தியாவில் ஜூலியன்வாலா படுகொலைகளை செய்துவிட்டு இங்கிலாந்து திரும்பிய ஜெனரல் டயரை இங்கிலாந்துவரை தேடி சென்று இந்தியரான ஷாஹீத் உதம்சிங் அவரை கொன்று பழி தீர்த்ததும் தவறு.
  2 points
 11. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தரைப்புலிகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள். "மீட்பர்களாய் நடந்தார்கள் புலிவீரர்கள் மீளமுடியாது பகை தோற்றோடினார்கள்" மட்டு-அம்பாறை படையணிகள் மூன்று :- கீழே மூன்று விதமான சீருடை அணிந்தோர் நிற்கின்றனர்: (பச்சை, பச்சை வரிப்புலி, ஒருவித Olive/sap பச்சை) 'Two different colours of uniform' 'Two different colours of uniform' ----------------------------------------------------------------------------------------- இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  1 point
 12. யுவர் ஆனர், நான் சீமான் தரப்பில் நாதம், கு.சா போன்ற வக்கீல்களோடு pro bono ஆக ஆஜராக விண்ணப்பிக்கிறேன் (விதி படத்தை 10 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன், அது தான் என் "லா" தகுதி!). கோர்ட் அந்த முதலில் சொன்ன "வுட்றா வுட்றா" உப பிரிவோடு, "எல்லாருங் கள்ளங்கள் தான்" clause ஐயும் சேர்ந்து இ.பி.கோ 417 ஐ வலுவிழக்க உத்தரவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்!
  1 point
 13. அடேங்கப்பா மேதகு சேர்ப்பு வேறை.....அவங்க தவற விட்டாலும் நாங்க தவற விடமாட்டம்.
  1 point
 14. ஈழத்தமிழர்களை அழிப்பதில் சிங்களவனை விட கிந்தியனுக்குத்தான் அதிக கவனம் இருந்தது.முள்ளிவாய்க்கால் அழிவிற்காகவே உலக நாடுகளின் வாயை மூட பட்டிதொட்டியெல்லாம் ஏறி இறங்கினார்கள்.
  1 point
 15. சினிமா எனும் கனவுத்தொழிற்சாலை சீரழிக்கும் பெண்களின் எண்ணிக்கை இங்கு அமெரிக்காவிலேயே பல லட்ஷம். இதற்கு அடிப்படை காரணம் இவர்கள் வெளியுலக அறிவு அற்ற வெறும் 16-18 வயதுக்கு உட்பட்ட காலத்திலேயே கனவுத்தொழிற்சாலைக்கு வேலைக்கு போகிறார்கள். பணம் புகழ் வந்து கொட்டும் என்ற ஆசை எல்லோராலும் கொடுக்கப்படுகிறது சினிமா என்பது 95வீதம் காமம் சார்ந்தது 5 வீதம் கலை சார்ந்து இருந்தாலும் அவை குப்பைக்குத்தான் தகுதி என்று பார்வையாளர்கள் ஆகிய எங்களாலயே தூக்கி எறியப்படுகிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. இவர்களின் அழகும் காமமும் களையப்பட்ட பின்பு கறிவேப்பிலை ஆகும்போது .... வெளியுலகில் கால் பாதிக்க இவர்களுக்கு வெளியுலக அறிவு என்பது 1 வீதம் கூட இல்லை வேறு எந்த தொழிலோ கல்வி அறிவோ கூட பலருக்கு இல்லை சிலருக்கு திரும்பி போவதற்கு குடும்பம் இருந்தால் அதிர்ஷ்ட்டம் என்றுதான் எண்ணுகிறேன் இடையில் இவர்களுக்கு கிடைக்கும் சினிமா அறிமுகத்தால் சிலர் குடும்பங்களையும் மதிக்காது நடந்து மீண்டும் போக முடியாத நிலையை தோற்றுவிக்கிறார்கள் தமிழ் சினிமா முன்னணி நடிகை நயன்தார ( இன்று அதிக அளவு சம்பளம் வாங்குபவர் என்று எண்ணுகிறேன்) இவரின் கதையே கறிவேப்பிலை கதைதான் எனும்போது பாட்டுக்கு டான்ஸ் அடபோனவர்கள் நிலை என்னவாக இருக்கும்?
  1 point
 16. திசையை மாற்றாதீர்கள் விசுகர்: பங்களிப்பைப் பார்த்தால் நானும் செய்யவில்லை, நீங்களும் செய்யவில்லை. உயிரைக் கொடுத்தவனும், உடல் பாகம் கொடுத்தவனும் தான் பிஸ்தா! நீங்கள் சொன்னது: கை காட்டி விட்டு ஒதுங்கினார்கள் என, நான் சுட்டிக் காட்டியது: மாற்று வழிகள் தேடியோர் ஒதுக்கப் பட்டார்கள் அல்லது விரட்டப் பட்டார்கள் என. இப்படி பங்களிக்க முயன்று ஓரங்கட்டப் பட்டவர்களில் பாலசிங்கமும் அடங்குகிறார் என குணா மறைமுகமாகச் சொன்ன உரையாடல் யாழில் இருக்கிறது. ஆனால், உண்மை உங்களுக்கு முக்கியமில்லையல்லவா? எனவே, கொள்கையோடு ஒத்து வராதவனெல்லாம் தோல்விக்குக் காரணமென மணலுக்குள் தலையைப் புதைத்துக் கொள்வது அதிசயமில்லை!
  1 point
 17. 1 point
 18. மேலே கோசான் சொன்ன கருத்து அரைவாசிக்காரணம், எனவே ஆமோதித்திருக்கிறேன்! அடுத்த பாதிக் காரணம்: hypocrisy என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியது அவசியம். அது முன்னே வரத் துடிக்கும் தலைவர்கள், பிரபலங்களாக இருக்கும் போது அவசியம். ஒருவனைக் கள்வன் என்று சீமான் சொன்னால், சீமானின் பண வரவு ஆய்வுக்குள்ளாவது நியாயமானது. ஒருவரை நடத்தைப் பிறழ்வுடையவர் என்று சீமான் சொன்னால் , அவரது நடத்தைப் பிறழ்வாகத் தெரியும் நடவடிக்கை ஆய்வுக்குள்ளாவது நியாயமானது. சீமான் கட்சிக்கு 6% வாக்குக் கிடைத்த போது நீங்கள் சொன்னது: "இனி அவர்களில்லாமல் நிகழ்ச்சிகள் நடக்கக் கூடாது!"( உடனே நிழலி யாழ் அப்படியெல்லாம் நடந்து கொள்ளாது என்று மறுக்க வேண்டியிருந்தது!) பந்தியில் இடம் வேணுமெண்டால் விமர்சனங்கள் பொது வெளியில் வைக்கப் படும் போதும் அதை எதிர் கொள்ள வேண்டும். நோகாமல் நொங்கு தின்ன முயலக் கூடாது! (நான் குறிப்பிட்ட பெண்ணின் பெயரை சீமான் குழு இழுத்து விட்டு, அதற்கு யாழ் தம்பிகள் நியாயம் கற்பித்த போது, இதே கரிசனை விசுகருக்கு எங்கே போனதென யோசிக்கிறேன், பதில் தெரியுமென்பதால் சிரித்து நகர்கிறேன்!)
  1 point
 19. இந்தியா, இலங்கைக்கு ஒரு எச்சரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வருகிறது. இந்தியா தனது பாதுகாப்பு தொடர்பான முதல் நடவடிக்கையாக, கச்சதீவினை மீள எடுத்துக்கொள்ளும் நடவடிக்கையில் முனைப்பு காட்டும் என்றும் கூறப்படுகிறது.
  1 point
 20. நிழலி, இதை ஆங்கிலத்தில் எழுதினால் மக்கள் கடுப்பாக கூடும் என்பதால் கடந்த பதிவில் எழுதவில்லை. பத்திரிகை உலகில் அடிப்படை test ஒன்று உள்ளது. ஒருவரின் அந்தரங்கத்தை எழுத முன் இந்த test பிரயோகிப்பார்கள். அந்த டெஸ்டானது: Is it in the public interest to publish this story? Or is it a story in which the public are interested ? இந்த செய்தி மக்கள் நலன் சம்பந்த பட்டதா? அல்லது வெறுமனே மக்கள் அறிய விரும்புபதா (கொசிப்பா)? ஒரு அரசியல் தலைவரின் மீதான மக்களின் நோக்கு, நம்பிக்கை அவர் தனிவாழ்வோடு பிண்ணி பிணைந்தது. குறிப்பாக இந்த குற்றசாட்டுகளை பற்றி அவர் ஒரு தகுந்த தன்னிலை விளக்கம் கொடுக்காத போது. கிளிண்டன் மொனிக்கா லிவின்சி வழக்கை ஏன் இவ்வாறு கடந்து போகவில்லை? ஒரே காரணம்தான். அனந்தி மீது வாறியிறைக்கப்பட்டது சேறு. அங்கே பாதிக்க பட்டதாக எந்த ஆணும் முறையிடவில்லை. ஆகவே அவை ஆதாரமற்ற வெறும் வதந்திகள். ஆனா இங்கே ஒருவர் பொலீசில் முறைபாடு கொடுத்துள்ளார். உண்மையில் உங்களுக்கும் இரெண்டுக்குமான வித்தியாசம் விளங்கவில்லையா?
  1 point
 21. அதில் ஒரு மகன் சமையல் பானையை திறந்து சோறு கறி இருக்கிறதா என்று பார்ப்பார்
  1 point
 22. இந்த சம்வத்தினடிப்படையில் சீமான்மீது வழக்கு தொடுக்கிறார்களோ கைது செய்கிறார்களோ என்பதெல்லாம் அவர்களது சட்டம் அரசியல் சம்பந்தமான பிரச்சனைகள் , ஆனால் பத்மா சேஷாத்திரி பள்ளி, சிவங்கர்பாபா விஷயங்களும் உங்கள் விஷயமும் ஒன்றல்ல விஜயலட்சுமி. அவை பாதிக்கப்பட்ட பெண்களின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட பாலியல் சீண்டல்கள் என்று பாதிக்கப்பவர்களால் தொடுக்கப்பட்ட வழக்கு. ஆனால் மாஜி அமைச்சர் மணிகண்டன் நடிகை சாந்தினி விஷயமும் உங்கள் விஷயமும் ஒன்றேதான், நீங்கள் இருவரும் விரும்பியே உங்கள் தனிப்பட்டவாழ்வில் அவர்களுடன் நெருக்கத்தை பேணினீர்கள், அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கும் நீங்களே பொறுப்பானவர்கள். திருமணம் செய்யவில்லை ஏமாற்றிவிட்டார் என்று சொல்லி கலாச்சாரம் கண்ணியம் காக்கும் நீங்கள், திருமணத்தின் முன்னர் ரகசிய வாழ்வை வைத்திருந்தது மட்டும் கலாச்சாரம் கண்ணியத்திற்குரியதா? சாந்தினியும் நீங்களும் நிச்சயமாக இந்த சம்பவங்களில் பாதிக்குமேல் பங்காளிகள். சிலமாதங்கள் முன்னாடி தற்கொலை செய்யபோறேன் என்றீர்கள், பின்பு மறுபடியும் நாளைக்கு சாகபோறேன் ரஜனி சார் உதவி செய்யவேண்டும் என்று செயற்கை சுவாச குளாய்களை பொருத்தியபடி ஆஸ்பத்திரியில் படுத்திருந்தீர்கள், ரஜனி உதவி செய்ததா தெரியவில்லை ஆனால் உங்கள் நிலமையை பார்த்து பரிதாபபட்டு அங்கே வந்து உதவி செய்த ரவிபிரகாஷ் எனும் நடிகர்மீதே பின்பு பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி புகார் கொடுத்தீர்கள். அந்த சம்பவம் முடிந்ததும் நீங்களும் நடிகை வனிதாவும் நடமாடும் நகைகடை ஹரிநாடாருடன் நெருக்கத்தை பேணியதாகவும் தமிழக ஊடகங்களில் செய்திகள் உண்டு . அவர் உதவியுடன் படவாய்ப்பே இல்லாத நீங்கள் மாதவாடகையே லட்சங்களில் செலவு செய்து எப்படி இருந்தீர்கள் என்று கேள்வியும், ஹரிநாடார் கைதின் பின்னர் 3 மாத வாடகை பாக்கியால் விரட்டியடிக்கப்பட்டீர்கள் என்றும் தமிழக ஊடகங்களில் செய்திகள் சாரை சாரையாக வந்திருக்கிறது. கூட்டி கழித்து பார்த்தால் எப்போ எல்லாம் பண கஷ்டம் வருகிறதோ அப்போ மட்டுமே நீங்கள் பரபரப்பை கிளப்புகிறீர்கள், சீமான்மீது கொந்தளிக்கிறீர்கள் என்பதை எளிதில் எல்லோரும் புரிந்து கொள்வார்கள், பட வாய்ப்புகளும் ஹரிநாடார் பெரும் புள்ளிகளின் நட்பும் இருந்துவிட்டால் சீமான் கதையை பற்றி பேசமாட்டீர்கள் என்பதும் கடந்தகால வரலாறு. இன்றைய முதல்வர் ஸ்டாலின்மீதுகூட அன்றைய தொலைக்காட்சி அறிவிப்பாளர்களான பெப்சி உமா, பாத்திமா பாபு போன்றவர்களுக்கு நெருக்கடி கொடுத்தார் என்று புகார்கள் உண்டு அவர் யோக்கியமே அந்த ரேஞ்சில் இருக்கு நீங்கள் அவரிடம்போய் நியாயம் கேக்கிறீர்கள்? கண்டிப்பாக இது சீமானுக்கு வக்காலத்து வாங்கவோ ஆதரவாகவோ செய்யும் பதிவல்ல, உங்கள் குற்றசாட்டுக்களில் நேர்மை தன்மை இல்லை என்பதை சுட்டிக்காட்ட மட்டுமே இது.
  1 point
 23. ஸ்ராலின், உதய நிதி, அவங்க தாத்தா… எல்லாரும் இந்த விசயத்திலை…. பழம் திண்டு… கொட்டை போட்ட ஆக்கள். அவங்களிடம் நீதி கேட்கப் போகலாமா?
  1 point
 24. உண்மைதான் எனக்கும் போராட்டம் தொடங்கிய காலம் முடிந்தபின்னும் இருவரில் செயலதிபர் எனப்படும் இவர் இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட உளவாளியோ என்பதில் பலத்த சந்தேகம் உள்ளது பல இடங்களில் பஸ்தியாம் பிள்ளை தாக்குதலை செட்டி போட்டுக்கொடுத்தார் என்று இவரும் ஊர்மிளாவும் தங்கள் கொழும்பு செல்வாக்கை பயன்படுத்தி செட்டியின் கைப்பட எழுதிய லெட்டர் என்று ஒன்றை காட்டி உள்ளார்கள் அதில் செட்டிக்கு கைநாட்டு என்ற விபரம் பின்னாட்களில்தான் தெரிகிறது அப்ப யார் போட்டுக்கொடுத்தார்கள் ? அடுத்தவர் தற்போது உயிருடன் லண்டனில் இருப்பவர் புனை பெயர் கிருஸ்ணா அவரின் ஈழப்போராட்டத்தின் பங்கு என்ன? பழம் தின்று கொட்டை போட்ட நம்ம அர்ஜுனும் ஒரு சமீபத்திய பேட்டி ஒன்றில் வியக்கின்றார் அவரின் ஈழப்போராட்ட பங்கு பற்றி .
  1 point
 25. ஆடு பார்க்கலாம் ஆடு.......ஆட்டுடன் மோதிப் பார்ப்பது யாரு.......!
  1 point
 26. andre rissell லின் dog devil (நாய் பேய்) அடி......13 six சர்கள் ......!
  1 point
 27. நல்ல கருத்து, இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். தகவலுக்கு நன்றி சகோதரி......! ஆனால் சிலருக்கு உள்ளி வாசம் பிடிப்பதில்லை அதனால் முதலில் போட்டு வதக்குகிறார்கள் போலும்.....!
  1 point
 28. ஆம் இதைத்தான் நானும் ஊகித்துக் கொண்டேன் இதற்குத்தான் கதை அமைப்பும் நன்றாக பொருந்துகிறது அண்ணா (பிரபாகரன் ) லண்டன் (வடக்கு கிழக்கு தாயகம்) ஜேம்ஸ் காஸ்மோஸ்(சிங்களம் (இனவாதா அரசியல் தலைவர்) தணுஸ் (இந்தியா) அண்ணா ஈழதமிழர்களை சிங்கள இனவாத செயல்களிருந்து காப்பாற்றி நல்லது செய்கிறார்.இதனால் சிங்கள தனித்து அண்ணாவை முறியடிக்க முடியவில்லை ...சிங்களம் தனது கட்சியை அழைத்து ஆலோசனை கேட்கிறது .சிங்களதிடம் கூலிக்கு வேலை செய்யும் ஒருத்தன் சொல்லுறான் அண்ணையை விழுத்த இந்தியாவுடன் உறவுகொள்ள வேண்டும் இந்தியா தான் திறம் என்று கூலி சொல்லுறான் ,சரி இந்தியாவை அழைத்துவா (இந்தியாவுடன் எங்களுக்கு ஜன்மத்து பகை இருக்கு ஆனாலும் அண்ணையை விழுத்த அவன்கள் தான் சரி என சிங்களம் நினைத்து) இந்தியா சிங்களத்துடன் டீல் பேசுகிறது இந்தியா எதிர்பார்த்ததை விட அதிகம் சிங்களம் கொடுக்க முன்வருகின்றது .இந்தியா களம் இறங்கிறது.வழமை போல துரோக சாணக்கியத்தை கையில் எடுத்து உள் புகுந்து அண்ணையை போட்டு தள்ளுகிறது இந்தியா. சிங்களம் மகிழ்ச்சியில் பல டில்கள் போடுகிறது சிங்களம் தன்னுடைய சில பகுதிகளை இந்தியாவுக்கு கொடுத்து (லிட்டில் மதுரை...திருகோணமலை துறைமுகம்)இந்தியாவை குசிப்படுத்துகிறது.... இந்தியாவுக்கு அண்ணையை போட்டு தள்ளின பிறகு ஈழத்தமிழர் மீது காதல் வருகிறது இது சிங்களத்துக்கு தெரிய வருகிறது..சிங்களம் இந்தியாவிடம் ரவுடிதனம் பண்ணி கொடுத்த சலுகைகளை திருப்பி எடுக்கிறது . இந்தியாவின் இருப்புக்கே வேட்டு வைக்கிறது சிங்களம் (தனுஸின் கடை வீடு எல்லாம் வில்லனின் சுற்றிவளைப்பில் தனுஸ் தப்பி ஓட முடியவில்லை வில்லனிடன் சரணடர் ஆகிவிடுகிறார்) ஈழத்தமிழர் மீது காதல் பொங்கி கொண்டு வருகிறது இந்தியாவுக்கு ஆனால் ஈழதமிழர் அண்ணையை போட்டு தள்ளிய இந்தியாவுக்கு பாடம் புகட்ட துடியாக துடிக்கின்றனர் பல முயற்சியும் எடுக்கின்றனர் .இறுதியாக காதலி ஊசி மூலமாக போட்டு தள்ளும் முயற்சியில் ஈடுபடும் பொழுது இந்தியா விழித்துக்கொள்கிறது .இந்தியாவுக்கு ஒன்றும் தெரியாத மாதிரி கேட்கின்றது ஏன் என்னை போட்டு தள்ள நினைத்தாய் என ஈழத்தமிழரிடம் ....ஈழத்தமிழர் ஆரம்பத்திலிருந்து முழுவதையும் சொல்ல இந்தியாவுக்கு ஈழத்தமிழர் மீது கொள்ளை காதல் வந்து விட்டதாம்.... (பாரத மாதா (தார்மீக மாதா வடிவுக்கரசி ...இந்தியாவுக்கு பாடம் எடுக்கிறா) நீ செய்த சின்ன குரங்கு சேட்டைகளை பார்த்து கொண்டு சகித்து கொண்டேன் நீ விளையாட்டு பிள்ளை என்ற காரணத்தால் ஆனால் நீ செய்த துரோகத்தை என்னால் பொறுத்து கொள்ள முடியாது அதை துடைத்து கழிவிட்டு வா .......) என்னிடம் இந்த பிரச்சனையை விடுங்கள் நான் உங்களுக்கு தீர்வை தருகிறேன் .இதை நம்பாத ஈழதமிழ் பெடியள் இந்தியா மீது வன்முறையை பயன்படுத்த இந்தியா தமிழ்பெடியளை அடிச்சு துவசம் பண்ணி என்னிடம் விடுங்கள் நான் தனிக்காட்டு ராஜா உங்களுக்கு செய்த துரோகத்துக்கு பரிகாரம் தேடி தருவேன் நிச்சயம் , இந்தியா சிங்களத்தை ஏனைய நாடுகளுடன் சேர்ந்து ஒதுக்கி வைத்து ஒரு பாலைவனத்தில் தண்ணியில்லா காட்டில் விட்டு ஈழத்தமிழரை காதலித்து கலியாணம் கட்டி முதலிரவு நடத்தினமாம் எப்படி யிருக்கு நம்ம விமர்சனம்
  1 point
 29. நீங்கள் தொடர்ந்து முட்டையில் உரோமம் புடிங்கி கொண்டே இருங்க.
  1 point
 30. ஈ பி ஆர் எல் எப் என்ற சொல் கண்ணில் படும்போதெல்லாம் 1988 இலிருந்து 1990 வரை யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் நான் அனுபவித்த, பார்த்த அட்டூழியங்கள்தான் வந்துபோகிறது. என்னுடன் படித்த மாணவன் ஒருவனை பாடசாலை வாயிலில் வைத்து தமது வாகனத்தில் ஏற்றியதைப் பார்த்தேன். அவன் எப்படியோ அவர்களின் வாகனத்திலிருந்து தப்பியோடி எங்கள் விடுதிக்குள் வந்து ஒளிந்துகொண்டான். சில நிமிடங்களில் அவனைத் தேடி விடுதியினுள் ஈ பி ஆர் எல் எப் கும்பல் ஆயுதங்களுடன் வந்தது. தன்னைக் காட்டிக் கொடுக்கவேண்டாம் என்று அவன் அழுதது இன்னும் நினைவில் இருக்கு. சில நாட்களின் பின்னர் அவன் அவர்களால் பிடிபட்டு வந்தாறுமூலைப் அல்லது களுவங்கேணி பகுதியில் உள்ள கட்டாய ராணுவப் பயிற்சி முகாமுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்தும் தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டான். இவ்வாறே திருநெல்வேலிச் சந்தைக்குப் போய்வரும் ஒரு நாள் இந்திய ராணுவத்தின் முக்கால் ட்ரக்கின் பின்னால் அமர்ந்துகொண்டு போவோர் வருவோரை எல்லாம் புலியென்று காட்டிக் கொடுத்த ஒரு முகம். நான் தப்பிவிட்டேன், ஆனால் அன்று குறைந்தது 15 அல்லது 20 பேரையாவது அவன் தலையாட்டிக் காட்டிக் கொடுத்திருந்தான். இவர்கள் புரட்சிக்காரர்கள் என்று நம்புமளவிற்கு ஈழத்தமிழினத்திற்குச் செய்த சேவைகள் என்னவென்று எனக்குத் தெரியாது. வரதராஜப் பெருமாளும், டக்கிளசும் இன்று இருக்கும் இடங்களப் பார்க்கும்போது இவர்கள் ஒருபோதுமே தமிழ் மக்களுக்காகப் போராடியதில்லை என்பதே தெளிவாகிறது. சுரேஷ் மண்டையன் குழு ஆயுததாரி, ஆனால் இப்போது தேசியம் பேசுகிறார், இந்திய நலனிலும் அக்கறை கொண்டவர். புலிகளைக் காரணம் காட்டியே தமது அட்டூழியங்களைச் சொந்த மக்கள் மீதே நடத்திய கயவர்கள்.
  1 point
 31. வினா..! "நீங்களும் உங்கள் நண்பரும்ம் நடுக்காட்டில் மாட்டிக்கொண்டீர்கள். திடீரென ஒரு சிங்கம் உங்களைத் துரத்த ஆரம்பிக்கிறது, இருவரில் யார் சிங்கத்தைவிட அதிக வேகமாக ஓடி தப்பிப்பீர்கள்?"
  1 point
 32. பகை அல்ல சவால். காகத்துக்கு கனவிலையும்............................ வெர்சன்
  1 point
 33. இந்த Greak freak என அழைக்கப்படும் Giannis Sina Ugo Antetokounmpoவின் கூடைபந்தாட் கோல்களை பார்த்திருக்கிறீர்களா? இன்று நடந்த போட்டியில் Brooklyn Nets தோற்கடித்து அரையிறுதிக்கு போகும் Milwaukee Bucksன் Greak freakன் சில actions..
  1 point
 34. மாரடைப்பால் வீழ்ந்த வீரர்! நமக்கான பாடம்!
  1 point
 35. அந்த வீடியோவை பார்க்கும்போது அவர் தன்னை காட்டிக்கொள்ளாமல் சடையும்போதே எழுந்த கேள்வி . அங்கு ஒவ்வொருமுறை வரும்போதும் கேட்க்கும் கேள்வி அநேக தமிழர்கள் பாரிஸ் புறநகர் பகுதியில் இருக்கினம். ஏன் பாரிஸ் நகரத்தை அண்டிய லாச்சப்பலில் யூதர்களின் கட்டிடங்களுக்கு அதிகூடிய வாடகையை கொடுத்து முதலாளி என்று யூத அடிமையாக யூதனுக்கு உழைத்து கொடுக்கும் வர்க்கமாக நாம் இருக்கிறேம் பாரிஸ் புறநகர் பகுதியில் தமிழர்களுக்கு என்று மலிவான வாடகை உள்ள பகுதிகள் எவ்வளவோ உள்ளன அங்கு ஒரு கடைதொகுதியை உருவாக்கலாமே @விசுகு அண்ணா போன்றவர்கள் விளங்கப்டுத்தினால் நல்லது . தமிழ் முதலாளி என்கினம் அங்குள்ள கோபால் அன்கோ கடை உண்மையான முதலாளி ஒரு யூதன் அவனுக்கும் தமிழுக்கும் சம்பந்தமே கிடையாது இந்த விபரங்கள் இந்த விபரண ஒளி படமாக்கியாக்கியவருக்கு தெரியுமா தெரியாதா ? இன்னும் மூன்றெழுத்து கடைகளின் பினாமி யூதன் என்கிறார்கள் . இந்த விடயத்தில் லண்டன் காரர் அசகாய சூரர் சிற்றிக்குள் ஒரு தமிழ்க்கடை பார்க்க முடியாது . இப்போது இருக்கும் அநேக கடைகள் `அவர்களின் சொந்த கடைகள் ஆகி விட்டன .
  1 point
 36. நாங்கள் தவ்வல்களாக இருந்த காலம். புலிகள் என்று அச்சில் கூட வரமுடியாத அளவு தணிக்கைகள் நிலவிய காலம். எனினும் தினமும் செய்திகள் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம். இவர்களின் அசோகா ஹோட்டல் அராஜகங்கள் ஓரளவுதான் தெரிந்திருந்தன. இந்திய இராணுவத்தின் கொடுமைகளால், எனது நண்பனின் தமையனை கோப்பாய் பகுதிக்கு பாதுகாப்பாக படிக்க அனுப்பியிருந்தனர். ஆனால் இவர்கள் பிடித்து தலைக்கு மொட்டையும் அடித்து இமை மயிர்களையும் மழித்து வைத்திருந்தனர். பெற்றோர், பலரின் கையைக் காலைப்பிடித்து நண்பனின் தமையனை மீட்டிருந்தனர். வடமராட்சிப் பகுதியில் இவர்களின் அட்டகாசங்கள் அதிகம் இருக்கவில்லை. எனினும் முக்கிய இடங்களில் ஆள்காட்டிகளாகவும், தலையாட்டிகளாகவும் இருந்தனர். இந்திய இராணுவத்தின் சுற்றிவளைப்புக்களை எல்லாம் உச்சிக்கொண்டிருந்ததால், அவர்களிடம் அடி வாங்கியதில்லை. ஆனாலும் ஈபிஆர்எல்எவ் இடமும் ஒருமுறை அகப்பட்டு திமிர்க்கதை (அரசியல்தான்) கதைத்து முட்டுக்காலில் வெயிலுக்குள் பலமணி நேரம் நின்றதும், ரெலோவிடம் அகப்பட்டபோது நண்பன் ஒருவன் மட்டக்களப்பு சாயலில் கதைத்தற்காக (அவன் ஒன்றிரண்டு வருடங்கள் இருந்து படித்தான்), அவன் சேர்ட் கிழிந்துபோகுமளவிற்கு அடித்தார்கள். இப்படித்தான் இவர்களை நினைவில் இருக்கின்றது.
  1 point
 37. டாக்டர்> என்ன பிரச்சினை உங்களுக்கு ? . எனக்கு என்ன வயசுன்னு தெரியாதது தான் பிரச்சனை டாக்டர் . அப்படியா...!? . ஆமா டாக்டர் இப்ப பொண்டாட்டி புள்ள குட்டிகளோட வசதியாயிருந்தாலும் சின்ன வயசுல அப்பா அம்மா இல்லாமலயே வளந்துட்டதால வயசு தெரியல... . இப்ப என்ன உங்க வயசு தெரியனும் அவ்ளோதானே..? . ஆமா டாக்டர்... ஆமா...? . சரி இப்ப நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க கண்டுபிடிச்சிடலாம்... சிஸ்டர் இங்க வாங்க நான் சொல்றத எழுதிக்குங்க... . உங்க பேரென்ன... . ராமநாதன்... . என்ன தொழில் பண்றீங்க... . பைனான்ஸ்... . நைட்டு நல்லா தூங்குவீங்களா...? . கடவுள் புண்ணியத்துல படுத்தவுடனே தூங்கிடுறேன் டாக்டர்... . சந்தோஷம்... தூக்கத்துல கனவுலாம் வருமா...? . நெறய டாக்டர்.... . அந்த கனவுல நடிகைகளெல்லாம் வர்றாங்களா...? . ஆமா டாக்டர்... . எந்த மாதிரி நடிகைங்க... . ரேவதி,அமலா மாதிரியான நடிகைங்க.... . சிஸ்டர்... 45ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்...சரி வேற எந்த நடிகைகளும் வரமாட்டாங்களா... . சிலசமயம் அம்பிகா ராதா மாதிரியான வங்களும் வருவாங்க... . சந்தோஷம்... சிஸ்டர் 48 ன்னு நோட்பண்ணிக்குங்க... ம்... அப்புறம் வேற யாரெல்லாம் வருவாங்க...? . ஷகிலா... . உஹூம்... ஷகிலாலாம் எவர்கிரின்..அதவெச்செல்லாம் வயச கணிக்க முடியாது... வேற...வேற...? . வேற... சிலசமயம் கனவுல ராதிகா வருவாங்க... திடீர்னு ஶ்ரீபிரியா க்கூட வருவாங்க... . ம்ம்... சிஸ்டர் 54ன்னு நோட் பண்ணிக்குங்க.. ம்... அப்புறம் ராமநாதன்.. . அப்புறம்... அப்புறம்... ம்... என்னைக்காவது நான் ரொம்ப உற்சாகமா இருந்தா அன்னைக்கு கனவுல சிம்ரன்,நயன்ஸ் வருவாங்க... . சிஸ்டர் 40 ன்னு நோட் பண்ணிக்குங்க... ம் சொல்லுங்க ராமநாதன்... . ம்ம்... அவ்ளோதான் டாக்டர்... . அவ்ளோதானா... சரி சிஸ்டர் நான் சொன்ன நம்பரை யெல்லாம் சொல்லுங்க... . 45,48,54,41.. . நாலு ரிசல்ட்டையும் கூட்டி நாலால வகுத்தா வர்ற ரிசல்ட் 47.. மிஸ்டர் ராமநாதன் உங்க வயசு நாற்பத்தேழு... . அட கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க டாக்டர்... . என்ன கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டேனா...? அப்ப ஏற்கனவே உங்க வயசு தெரியுமா..? . தெரியும் டாக்டர்... பக்கத்து பார்பர் ஷாப்புக்கு முடிவெட்டிக்க வந்தேன் அங்கே ஒரே கூட்டம் ஒருமணிநேரமாகும்னுட்டாங்க திரும்ப வீட்டுக்கு போகவும் மனசில்ல பக்கத்துலயே மனோதத்துவ டாக்டர் நீங்க சும்மா உக்காந்திருந்நீங்களா... அதான் சும்மா ஒரு டைம்பாசுக்கு... ரொம்ப தேங்ஸ் டாக்டர்..! . அடப்பாவி...
  1 point
 38. இப் பெண்போராளியின் இயக்கப்பெயர் தமிழ்விழி என்பதாகும். இவர் விடுதலைப் புலிகளின் களப்படப்பிடிப்பாளர் ஆகும். இவருடைய வீடு கிளிநொச்சியில் உள்ளது. ஓமந்தையில் இருந்து இரண்டு மணித்தியால துரவில் இவருடைய வீட்டினை அடையலாம். இவர் மிதிவெடியில் தன்னுடைய கால் ஒன்றினை இழந்துள்ளார். 'தமிழ்விழி அவர்கள் அவருடைய நிலைக்கு அருகில் உள்ள கண்ணிவயலில் நிற்கின்றார் | படிமப்புரவு: தோமஸ் காகேர்சுவீன்' 'பெண்போராளி | படிமப்புரவு: தோமஸ் காகேர்சுவீன்'
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.