Jump to content

Leaderboard

  1. Maruthankerny

    Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      10574


  2. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      29175


  3. கிருபன்

    கிருபன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      33803


  4. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      76765


Popular Content

Showing content with the highest reputation on 07/02/21 in all areas

  1. மாடித்தோட்டம் வீட்டுத் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள குறிப்புகள்......! 👍
    2 points
  2. செய்வதை சொல்வோம் சொல்வதை செய்வோம் அடுத்தவன் வந்து முடடையில் மயிர்புடுங்க ஈழ விடுதலை போராட்டத்தில் ஏதும் இல்லை ஒவ்வாரு பேச்சுவார்த்தை முடியும்போதும் அங்கே என்ன நடந்தது என்பதை புலிகள் கூறியே வந்தார்கள் அதை அப்போதைய பத்த்ரிக்கைகள் வெளியிட்டு வந்தன அதை வாசித்து வளந்தர்வர்களுக்கு எவ்வாறு ஏமாற்றபட்டோம் என்பது தெரியும். திலீபன் உணாவிரதம் இருந்தபோது டிக்ஸிட் சார்பாக வெங்கட் புலிகளை வந்து சநதித்து இருந்தார் அதில் யோகி கலந்துவிட்டு வந்து ... திலீபனின் மேடையில் அங்கே என்ன நடந்தது என்று சொல்லிக்கொண்டு இருந்தார் அண்ணளவாக நான் அதில் பங்கேற்றது போல இருந்தது இவ்வாறே ஒவொரு பேச்சும் இருந்தது
    2 points
  3. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது அரசு சார்பற்ற அமைப்பான அ அரசு சாரா தொண்டு நிறுவனமான TRO என்ற தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் சீருடைகள்(Uniforms), கஞ்சுகங்கள்(Vest) போன்றவற்றைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். இந்நிறுவனமானது 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ஆகும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இறுதிவரை தொண்டாற்றி வந்த ஒரே நிறுவனம் இதுவாகும். இம்முறை வழக்கமாக நானெழுதும் பந்தி எல்லாம் இல்லை. இதில் வெறும் படிமங்கள் மட்டுமே இருக்கும் என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர் புனர்வாழ்வுக்கழக கட்டடம்:- (படிம விளக்கம்: கீழ்க்கண்ட படிமங்கள் யாவும் சிறீலங்கா சிங்கள அரசு தமிழர் மீது இனப்படுகொலை நடத்திய 2008 - 2009 ஆண்டு காலத்தில் எடுக்கப்பட்டவை ஆகும்.) T-shirt:- இவை மூன்று நிறங்களில் அணியப்பட்டமைக்கான சான்றுகள் இதுவரையிலும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றின் முன்புறத்தில் அடி நெஞ்சில் இருந்து அடி வயிறு வரையிலும், அரக்கு நிறத்தில் 'TRO' எழுதப்பட்டு, அதன் கீழ் நிறுவன இலச்சினை பொறிக்கப்பட்டு, அதன் கீழ் சிறிய எழுத்துக்களில் இந்நிறுவனத்தின் பெயர் ஆங்கிலம் மற்றும் தமிழில், முறையே, எழுதப்பட்டுள்ளது. இவற்றின் பின்புறத்தில் மேல்முதுகில் இருந்து கீழ்முதுகு வரை, முன்னால் இருப்பது போன்றே இங்கும் பொறிக்கப்பட்டிருந்தது. 1) வான்நீல நிறம் 2) வெளுறிய மண் நிறம் 2) & 3) வெளுறிய மண்ணிறம் & வெளுறிய இளநீல நிறம் 'Emergency Rescue Team' இனது கஞ்சுகம்:- இது கறுப்பு நிறத்தில் அணியப்பட்டது. இதன் முன்புறத்தின் இடது மார்புப் பகுதியில் 'TRO' என எழுதப்பட்டு அதன் கீழ் அந்நிறுவனத்தின் இலச்சினை அச்சிடப்பட்டிருந்தது. சள்ளையின் முன்பக்கத்தில் இரு பக்குகள்(Pockets) இருந்தன. முதுகுப் புறத்தின் மேற்பகுதியில் 'EMERGENCY RESCUE TEAM' என மூன்று சொல்லாக பிரித்து எழுதப்பட்டு, அதன் கீழ் 'RESCUE TEAM' என இரண்டாக எழுதப்பட்டு, அதன் கீழ் இந்நிறுவனத்தின் சின்னம் அச்ச்சிடப்பட்டு, அதன் கீழ் 'தமிழர் புனர்வாழ்வுக் கழகம்' என எழுதப்பட்டிருந்தது. இவை அனைத்தும் பால்பச்சை நிறத்தில் இருந்தன. 'பின்பக்கம்' 'முன்பக்கம்' உயர் கட்புலன் பாதுகாப்பு கஞ்சுகம் - High Visibility Safety Vest இது பால்பச்சை நிறத்தில் அணியப்பட்டது. இதன் முன்புறத்தின் வலது மார்பில் செஞ்சிலுவை சின்னமும், இடது மார்பில் கறுப்பு நிறத்தில் TRO இன் இலச்சினைமும் பொறிக்கப்பட்டிருந்தது.. இடது மார்பிற்குக் கீழே, சள்ளைக்கு மேலே, விலா எலும்பு பகுதியில் 'TRO' என கறுப்பு நிற ஆங்கிலப் பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. இதன் முதுகுப் புறத்தின் நடுவில் ஒரு பெரிய அரக்கு நிற வட்டத்தினுள் இந்நிறுவனத்தின் இலச்சினை அரக்கு நிறத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. அதன் கீழ் 'TRO' எனவும், அதன் கீழ் 'தமிழர் புனர்வாழ்வுக் கழகம்' எனவும் முறையே அரக்கு நிறத்திலும் எழுதப்பட்டிருந்தது. இவ்விரண்டு வாசகங்களும் சாம்பல் நிறப் பட்டைகளால் பிரிக்கப்பட்டிருந்தன. அவை முன்புறத்தில் இருந்த 'TRO' என்ற சொல்லையும் பிரித்திருந்தன. 'முன்பக்கம்' 'பின்பக்கம்' சாதாரண கஞ்சுகம் - Normal Vest இது ஒரே ஒரு நிறத்தில் மட்டுமே இருந்தது. இதன் முன்புறத்தில், வலது மார்பில் இந்நிறுவனத்தின் இலச்சினையும் இடது மார்பில் 'TRO' எனவும் மஞ்சள் நிறத்தில், எழுதப்பட்டிருந்தது. பின்புறத்தில் மேல்முதுகில் இருந்து கீழ்முதுகு வரை, மஞ்சள் நிறத்தில், 'TRO' எழுதப்பட்டு, அதன் கீழ் நிறுவன இலச்சினை பொறிக்கப்பட்டு, அதன் கீழ் சிறிய எழுத்துக்களில் இந்நிறுவனத்தின் பெயர் ஆங்கிலம் மற்றும் தமிழில், முறையே, எழுதப்பட்டுள்ளது. முன்புறத்தின் இரு பக்கத்திலும் ஒரு சராசரி தமிழீழத் தமிழனின் உயரத்தின் அடிப்படையில் நடு நெஞ்சில் இருந்து, மேலும் கீழுமாக, இவ்விரு பக்குகளாக மொத்தம் நான்கு பக்குகள் இடம்பெற்றுள்ளன. அவற்றிற்கு மூடி உண்டு. 1) #043927 நிறம் மேலணி வகையிலான கஞ்சுகம் - Apron type vest இஇது சாம்பல் நிறத்தில் மட்டுமே இருந்தது. இதனை தலையால் போட்டு (இணைக்கப்பட்ட இருதுணி போன்று) பளுவில் நாடா மூலம் கட்டலாம். இதன் வலது மார்பில் சிறு நீள்வட்டமிடப்பட்டு அதனுள் இந்நிறுவனத்தில் இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது. அதற்கு வெளியே, சுற்றிவர, மற்றொரு பெரிய நீள்வட்டமிடப்பட்டு, இவ்விரு நீள்வட்டங்களுக்கும் இடையில் இந்நிறுவனத்தின் பெயர் தமிழில் எழுதப்பட்டிருந்தது. முதுகுப்புறத்தில் நடுவில் இதே போன்று, ஆனால் பெரியதாக, பொறிக்கப்பட்டிருந்தது. இவ்விலச்சினைகள் அரக்கு மற்றும் ஒருவகையான நீல நிறத்தில் காணப்பட்டன. தொப்பிகள் - Caps இவை கடுநீல நிறத்தில் இருந்தன. ஆனால் அவற்றின் முன்பத்தில் பெரிய வட்டமிடப்பட்டு அதனுள் இந்நிறுவனத்தின் குறியீடு பொறிக்கப்பட்டிருந்தது. அவ்வட்டத்தில் இந்நிறுவனத்தின் பெயரானது மேற்பக்கத்தில் ஆங்கிலத்திலும், கீழ்ப்பக்கத்தில் தமிழிலும் எழுதப்பட்டிருந்ததது. இப்பொறிப்புகள் மஞ்சள்மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்பட்டன. மனிதநேயக் கண்ணிவெடியகற்றும் பிரிவு:- இவர்கள் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் ஒரு பிரிவாகும். இவர்களின் சீருடை மண்ணிறத்திலான 'T- சட்டை' ஒன்று மட்டுமே. அதுவும் சில நேரங்களில் மட்டுமே சிலரால் அணியப்பட்டதுண்டு. மேலாடையாக இதையும் கீழாடையாக சாதாரண முழுகாற்சட்டை ஏதேனும் ஒன்றை அணிந்திருப்பர். இத் '' கழுத்துப்பட்டை உண்டு. இதற்கு இடது நெஞ்சின் மேல் ஒரு பக்கு உண்டு. இந்த 'T- சட்டை' இன் முதுகுப்புறத்தில் சொல்-கீழ்- சொல்லாக "" என எழுதப்பட்டிருக்கும். இதன் வலது கைப் புயத்தில் நோர்வேயின் கொடியும், இடது கையில் இவ்வமைப்பின் சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் பக்கின் மேல் செஞ்சிலுவைச் சங்க சின்னம் போன்று பச்சை நிற இலச்சினை உள்ளது. அது தெளிவாக இல்லாததால் அஃது என்னவென்று கண்டறிய இயலவில்லை. இவர்கள் முற்றாக காப்புடைகள் அணியாமல் சில காப்புடைகள் மட்டுமே அணிந்திருந்தனர். அதாவது, கடுநீல நிறத்தில் ஒரு வகையான வெடித்தகை கஞ்சுகம் (blast proof vest) மற்றும் வெள்ளை நிற தலைச்சீரா ஆகியன மட்டுமே. அவற்றை கீழே காண்க. இவ்வெடித்தகை கஞ்சுகத்தின் நடு நெஞ்சில் 'HDU' என அக்காப்புடைகள் மீதினில் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. . அவ்வளவுதான் .... நிறைவடைந்தது! உசாத்துணை: TRO படிமங்கள் (ஆகஸ்டு 11 2008 - சனவரி 6, 2009) படிமப்புரவு: அருச்சுனா, Flickr எரிமலை இதழ் ap archieves ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
    1 point
  4. இணைப்புக்கு நன்றி கோசான். தெரியாத மனதுக்கு கஸ்டமான பல விடயங்களை உரையாடுகிறார். இவர்கள் பட்ட கஸ்டம் உரையாடலில் தெரிகிறது.
    1 point
  5. சில சமயங்களில் நானும் கலங்கி விடுகிறேன்......அதுபோன்ற ஒரு தருணம் இது....! பகிர்வுக்கு நன்றி மகள்......! 🌹
    1 point
  6. மசாலா சுண்டல் (கரம் சுண்டல்) மாலையில் சைட் டிஷ்சாக மதுவுடனோ அல்லது தேனீருடனோ சாப்பிட சூப்பர் ......! 😁
    1 point
  7. மாத்தி யோசித்த விக்கட் கீப்பர்கள் .......! 👍
    1 point
  8. இன்று ஒரு குட்டி கதை படித்ததில் நெகிழ்ந்தது: அருமை கொண்ட சிறு கதை *அறநீர் - சிறுகதை* அப்பாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த வேலை பிடிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த போது நான் நர்ஸிங்கில் சேருகின்றேன் என்ற போது கடுமையாக எதிர்த்தார். எனக்கு அந்த சேவை மீது அளப்பறிய ஆவல் இருந்தது. அதே போல, கிட்டத்தட்ட அதே போல இப்போது இந்த வேலை. சைக்காலஜியில் முதுகலை பெற்றிருந்தேன் அந்த சமயம் தான் இந்த நிறுவனத்தில் இருந்து பணிக்கு அழைத்தார்கள். பணி என்றாலும் இது ஒரு சமூகத்திற்கான சேவை தான். *“தி சர்வீஸ்”* என்ற நிறுவனம் அது. முழுக்க முழுக்க சேவை மனப்பான்மை கொண்ட நிறுவனமா அல்லது லாப நோக்கத்தில் செயல்படும் நிறுவனமா என்று என்னால் கணிக்க இயலவில்லை. பீடிகை இல்லாமல் அது என்ன நிறுவனம் எனச் சொல்லிவிடுகிறேன். *வயதானவர்களை இந்தியாவில் விட்டுவிட்டு அயல்நாடுகளுக்கு செல்பவர்கள் பயன்படுத்தும் சேவை இது*. எங்கள் நிறுவனத்தில் வயதானவர்களுக்கான சகல சேவைகளும் உண்டு. ஈமெயிலில் தங்கள் தந்தை/தாயின் தகவல்கள், வீட்டு முகவரி ஆகியவற்றை கொடுத்துவிடுவார்கள். நாங்கள் தினமும் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும். தினசரிகளை அவர்களே கவனித்துக்கொள்வார்கள். அவர்களுக்கான *Emotional Balance* ஐ கொடுக்கும் பணியில் தான் நான் அமர்த்தப்பட்டேன். இறுக்கமாக இருக்கும் அவர்களிடம் பேச வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் சுமார் ஒரு மணி நேரம் இருந்தால் போதும். மாலை அலுவலகம் திரும்பி அன்று சந்தித்த நபர்கள், அவர்களின் நிலை பற்றி சின்ன அறிக்கையை அலுவலகத்தில் கொடுத்துவிட வேண்டும். இந்த சேவை என்று மட்டுமல்ல அவர்களுக்கு உடல்நல கவனிப்புகள், இதர சேவைகள் (வெளியே சென்று பில் கட்டுதல்) ஆகியவையும் எங்கள் நிறுவனத்தில் உண்டு. வாரத்தில் ஒருமுறை அவர்களின் பிள்ளைகளுக்கு பெற்றோர்களின் நிலை அனுப்பப்படும். எந்தெந்த சேவை தேவையோ அதற்கு ஏற்றார்போல பணம். ஆரம்ப நாட்களில் மிகவும் செயற்கைத்தனமாக இருந்தது. அவர்களிடம் செயற்கையாக நலம் விசாரிப்புகள். ஆனால் ஒரு வாரத்திலேயே ஒருவித நெருக்கம் எல்லா பெரியோர்களிடமும் ஏற்பட்டுவிட்டது. ஒதுக்கப்பட்டது என்னவோ ஒரு மணி நேரம் தான் ஆனாலும் கணக்கு வழக்கில்லாமல் அவர்களிடன் செலவழிக்க ஆரம்பித்தேன். அவர்களின் விருப்பங்கள் விசித்திரமாகவே இருக்கும் ஆனால் மிக மிக எளிதானவை தான். தாமோதரன் சாருக்கு அவருடன் வாக்கிங் போக வேண்டும். சரஸ்வதி அம்மாவிற்கு அவர்களுடன் சில நிமிடங்களாவது தாயம் ஆட வேண்டும். மோசஸ் தம்பதிக்கு அன்றைய அரசியல் செய்திகளைப்பற்றி பேசிவிடவேண்டும். சின்னச்சின்ன ஆசைகள் தான். சைக்காலஜி படித்திருந்ததால் பேசியே அவர்களின் ஆசைகளை கேட்டுவிடுவேன். ஆனால் நாயர் சார் மட்டும் இதுவரைக்கும் எதுவே கேட்டதில்லை. கேட்ட கேள்விக்கு கூட பதில் சொல்லமாட்டார். எங்களுக்கு ஏற்கனவே பயிற்சி கொடுத்திருந்தார்கள். பெரியவர்கள் காட்டமாக நடந்துகொள்வார்கள் ஆனாலும் பொறுமையாக இருக்க வேண்டும் என்று. நாயரின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. வழக்கமாக செல்லும் நேரத்தில் எனக்காக டீ மட்டும் போட்டுவைத்து மேஜையில் எனக்காக அமர்ந்திருப்பார். பெரும்பாலான நேரங்கள் தன் மனைவியின் புகைப்படத்தின் முன்னர் அமர்ந்து இருப்பார். எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்டதில்லை. அவர் பேசினால் அது அனேகமாக கொஞ்சம் மலையாளம் கலந்த தமிழில் தான் இருக்கும் என்பது என் யூகம். அவர்கள் முன் மகிழ்வாக இருந்தாலும், அலுவலகம் திரும்பி ஒவ்வொருத்தர் பற்றிய குறிப்புகள் எழுதும்போது கண்ணீரும் கோபமும் நிச்சயம் வந்துவிடும். ஆயிரம் ஆயிரம் கேள்விகள் அவர்கள் பிள்ளைகள் மீது எழும். ஆனால் அவர்கள் தங்கள் குழந்தைகளை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதே இல்லை. *“அவர்கள் வாழ்கையை அவர்கள் வாழ்கின்றார்கள்”* என்ற தொனியிலேயே அவர்கள் பேசுகிறார்கள். அதுவும் சரி தான் என்றும் தோன்றும். சாந்தா என்னுடைய ஜூனியர். நானும் அவளும் வாரத்திற்கு மூன்று முறையேனும் யாராவது கதையைச் சொல்லி அழுதுவிடுவோம். மெல்ல மெல்ல எனக்கு வெளிநாடு மீது வெறுப்பும் வராமல் இருக்கவில்லை. அப்பா தீவிரமாக வரன்களை தேடிக்கொண்டு இருந்தார். அவருக்கு மிகுந்த கோபம் என்மீது. கைகூடிவந்த ஒரு வரனை நான் நிராகரித்துவிட்டேன். காரணம் மாப்பிள்ளை போனில் சொன்ன தகவல் தான். “ *ரெண்டு பேரும் பாரின் போய் செட்டிலாகிடலாம்*. *நிம்மதியா காசு பார்க்கலாம்”* என்பதுதான். வாழ்க்கை கவிதைப்போல ஓடிக்கொண்டிருந்தது, ஒரு நாள் மொத்த உலகமும் ஸ்தம்பிக்கும்படியான செய்தி வந்தது. சைக்கிளில் சென்ற அப்பா விபத்தினை சந்தித்தார். ICUவில் சேர்த்துவிட்டார்கள். டாக்டர்கள் எங்கே அடி என்ன ஆனது என்றும் சொல்லவில்லை. யாரையும் பார்க்கவும் அனுமதிக்கவில்லை. வரன் பார்க்கத்தான் எங்கோ போயிருக்கார். அவர் பையில் இருந்த மாப்பிள்ளை போட்டோகள் அதையே காட்டியது. அலுவலகத்திற்கு தகவல் சொல்லிவிட்டேன். கையில் இருந்த மொத்த காசும் கட்டிவிட்டேன். மருத்துவமனையில் சேர்த்த இரண்டு மணி நேரத்தில் *நான் கவனித்துக்கொள்ளும் பெரியவர்கள் எல்லோருமே மருத்துவமனைக்கு வந்துவிட்டர்கள்*. இதனை நான் எதிர்பார்க்கவேயில்லை. அலுவலகத்திற்கு செய்தி சொன்னதும் அவர்கள் இன்று நான் வீட்டிற்கு நேரடியாக வர இயலாது என தகவல் சொல்லி இருக்கின்றார்கள். எல்லோரும் மருத்துவமனை விலாசம் கேட்டுவிட்டு வந்துவிட்டார்கள். ஒரு சுவாரஸ்யம் என்னவெனில் வந்திருந்தவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் தான். அவர்களை இணைக்கும் இரண்டு புள்ளிகள். *ஒன்று முதுமை மற்றொன்று நான்*. ICU வாசலில் ஒருத்தருக்கு இவ்வளவு பேரா என விரட்டிவிட்டார்கள். எல்லோரையும் எல்லோருக்கும் அறிமுகம் செய்துவைத்தேன். சரஸ்வதி அம்மா ஒரு ப்ளாஸ்கில் டீ எடுத்து வந்திருந்தார். ஆனால் அவர் இத்தனைப்பேரை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எல்லோரும் எளிதில் நண்பர்களாகிவிட்டார்கள். தங்கள் கதைகளையும் மருத்துவமனை அனுபவங்களையும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். தோள் மீது கைப்போட்டு கல்லூரி நண்பர்களைப்போல தாமோதரன் சாரும் மோசஸ் சாரும் பேசுவதை பார்த்ததே மனதிற்கு இதமாக இருந்தது. மருந்து மாத்திரைகள் பழக்கப்பட்டு இருந்தாலும் இந்த ஆஸ்பிட்டல் வாசம் ஏனோ பிடிக்கவே இல்லை. மாலையில் தான் நாயர் சார் வந்தார். என்னிடம் என்ன விபத்து என்றெல்லாம் விசாரிக்கவில்லை. நேராக முதன்மை டாக்டர் அறைக்குச் சென்றார். அன்று தான் நாயர் ஒரு டாக்டர் என்ற விஷயம் தெரியும். ரிப்போர்ட்டுகளை பலவந்தமாக பேசி வாங்கி எல்லா டாக்டர்களுக்கு டோஸ்விட்டார். ஏதோ சொதப்பி இருக்கின்றார்கள். உடனே ICU பரபரப்பானது. என்னிடம் வந்து *“ஆப்பரேஷன் உடனடியா செய்யனும் ஐம்பதாயிரம் கட்டுங்க”* என்று சொல்லிவிட்டனர். கையிருப்பு தீர்ந்துவிட்டது. அலுவலகத்தில் கேட்டதற்கு பெரிய ப்ராசஸஸ், இன்று கிடைக்காது என சொல்லிவிட்டார்கள். தோழிகளுக்கு ஃபோன் அடிப்பதற்குள் சரஸ்வதி அம்மா பில்லை பிடிங்கி பணம்கட்டச்சென்றார். *“நாளைக்கு பணம் வந்ததும் கொடுத்திட்றேம்மா”* *“நான் கேட்டேனா?”* என்றார் புன்னகைத்தபடியே. அந்த நொடி தான் உடைந்து போனேன். ஆஸ்பிட்டலில் *மனங்களின் மனதினை கமழ்வதை நுகர்ந்தேன்*. எதற்காக இந்த வேகமான ஓட்டம் என்றே புரியவில்லை. எதனை எதிர்பார்க்கின்றது மனது? இன்னொரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. உடனடி ஆப்பரேஷன் என்பதால் உடனடியாக ரத்தம் தேவை என்று சொல்லிவிட்டார்கள். ரத்தம் கொடுத்தது நாயர் சார் தான். ரத்தம் கொடுத்தவர் மெல்ல நிதானமாக வெளியே வந்தார். காபி வாங்கிச்சென்றேன். வராண்டாவில் அமர்ந்தார். அருகினில் அமர்ந்தேன். அவர் என் கைகளைப் பற்றி *“காலையிலயே, இந்த அப்பாகிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமில்ல”* வழிந்தோடியது அறநீர்.. (குழந்தைகளுக்கான எழுத்தாளர்- விழியன் அவர்கள் எழுதியது.) Velu Mohan Kumar
    1 point
  9. 🤣 செம காமெடி. சீமான் நாங்கள் தலையிட்டா சரியா வராது, நீங்கள் படத்தை நிறுத்தி விடுங்கள் என்று யாரிடமோ கேட்பாராம். யாரிடம் இப்படி கேட்டார் சீமான்? திமுக? அதிமுக? பாஜக? அடுத்து படம் வந்த பின் ஒரு அறிக்கையோடு அதை கடந்து போவாராம். அழைத்தும் பட வெளியீட்டுக்கு போக மாட்டாராம். இவ்வளவு பிரச்சனை சீமானுக்கும், பட குழுவுக்கும் இருக்க , அதுவும் படம் வரமுதலே பல காலமாக இருக்க - எதோ படம் வந்த பின் “யாரோ சிண்டு முடிகிறாத்களா?”. அதுவும் யாழ்களத்தில் முடிகிறார்களா? சீமானுக்கும் பட குழுவுக்குமான பிரச்சனை பல ஆண்டுகள் பழையது. இந்த படத்தை தயாரித்த சுமேசு, குகன் குமார் ஆகியோரிடம் போய் கேளுங்கள். அவர்களை யாரும் சிண்டு முடிந்து விட்டார்களா? அல்லது அவர்கள் சீமானை ஏன் எதிர்கிறார்கள் என. இருவரும் டுவிட்டரில் உள்ளார்கள். இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் குகன். கீழே பேட்டி போடுகிறேன். இந்த திரியில் இதை பதிய வேண்டாம் என விலகியே நடந்தேன். ஆனால் இங்கே எழுதும் சிலருக்கு தமிழ் நாட்டில் தமிழ் தேசிய அரசியலில் என்ன நடக்கிறது என்ற அடிப்படை தெளிவு கூட இல்லாமல் - எழுதும் போது அதை மறுக்க வேண்டியதாகிறது. நான் இதை காசி ஆனந்தன் அல்லது புதுவை எழுதினர் என @பிரபா சிதம்பரநாதன்க்கு கூறினேன். பிழையான தகவல். அறிவுமதி, யுகபாரதி என பெரிய தலைகள் எல்லாம் ஓடி ஒழிய (மேலே குகனின் பேட்டி பார்க்கவும்) ஒரு படலை கிட்டுவும் இந்த பாடலை திருக்குமரன் எழுதியுள்ளார்.
    1 point
  10. மேதகு திரைப்படத்திற்காக ஐ எம் டி பி இணையத்தளம் பார்வையாளர்களின் கணிப்பினை வைத்து 9.8/10, அதாவது 98 வீதம் தரமான படம் என்று மதிப்பிட்டிருக்கிறது. https://www.imdb.com/title/tt14923112/ https://twitter.com/search?q=%23methagu&lang=en
    1 point
  11. வணக்கம் அண்ணா, நீங்கள் சொன்னதில் பலதில் உண்மை இல்லை. வேணும் எண்டு இல்லை. தவறான புரிதல் என்றே எண்ணுகிறேன். 1. சீமான் இந்த படத்தை எதிர்கிறார் என்பது பற்றி படம் வெளி வரமுதலே எனக்கு தெரியும். ஆனால் படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதை பற்றி கதைக்காமல் விட்டேன். இந்த திரியில் ஆ. சாமி சீமானின் ஆடியோவை போட்ட பின்பும் எதுவும் எழுதாமல் கடந்து போனேன். அதன் பின் @Nathamuni அதற்கு எதிர் வினையாற்றிய போதும், இதன் பின்னால் கேடு கெட்ட அரசியல் உள்ளது ஆனால் இந்த திரியில் அதை பற்றி கதைக்க விரும்பவில்லை என்றே சொல்லி போனேன். 👆🏼 இது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பானது. நீங்கள் யாழிலும் சிண்டு முடிகிறார்கள் என்று எழுதும் வரை இந்த திரியில் சீமானை பற்றி நான் எழுதவில்லை. இப்போ சொல்லுங்கள் இந்த திரியை திசை திருப்புவது, திரியின் ஒற்றுமையை குலைப்பது நானா? நீங்களா? நான் இணைத்த வீடியோ - படத்தின் நிர்வாக தயாரிப்பாளரின் பேட்டி. இதையும் 3 நாளுக்கு முதலே பார்த்து விட்டு இணைக்காமல் விட்டேன். ஆனால் நீங்கள் யாழில் சிண்டு முடிகிறார் என எழுதியதன் பின், இந்த சிண்டு எப்பவோ முடிந்ததது என்பதை காட்ட அந்த வீடியோவை இணைத்தேன். பிகு இந்த படத்தை சீமான் ஏன் எதிர்கிறார் என்பதை நான் இன்னொரு திரியில் (இந்த திரியில் அல்ல) எராளனுடன் (மட்டும்) சிலாகித்தேன். எனது பார்வையை அவருக்கும், அக்னிக்கும் கூறினேன். அந்த திரியில் கூட - எராளனுடன் மட்டும் அதை விவாதிக்க விரும்புகிறேன், திரியை 10 பக்கம் நீட்ட விரும்பவில்லை என்று சொல்லி, அதை கடைபிடிக்கவும் செய்தேன். முடிவாக இந்த திரி படம் பற்றி மட்டுமே இருக்க வேண்டும், இதில் சீமானை இழுக்க கூடாது என மிக உறுதியாக இருந்த என்னை, அதேபோல் ஒற்றை நோக்கத்தில், ஒற்றுமையாய் போய் கொண்டிருந்த திரியை குழப்பியடித்தது, உங்கள் “யாழிலும் சிண்டு முடிகிறார்கள்” என்ற கூற்று மட்டுமே. இப்படியான அநாவசிய அரசியல் குழுவாத கருத்துகளை இட்டு, அதற்கு ஒரு மூணு பேர் பச்சை குத்தி பக்கவாத்தியம் வாசிக்காமல் - இந்த திரியை தொடர்ந்தும் படம் பற்றி உரையாட மட்டுமே பாவிப்போம்🙏🏾. நன்றி வரணியான், ஒரு பேட்டியில் ஈழ கவிஞர் என்றார்கள். அதனால்தான் நானும் காசி ஆனந்தன்/ புதுவை ஐயாவாய் இருக்கும் என யோசித்தேன்.
    0 points
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.