Jump to content

Leaderboard

  1. நன்னிச் சோழன்

    நன்னிச் சோழன்

    கருத்துக்கள உறவுகள்+


    • Points

      9

    • Posts

      30346


  2. விசுகு

    விசுகு

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      32973


  3. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      28979


  4. நிழலி

    நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்


    • Points

      4

    • Posts

      14881


Popular Content

Showing content with the highest reputation on 07/20/21 in all areas

  1. தரப்படுத்தல் - என் பார்வை தரப்படுத்தல் ஒரு சிக்கலான விடயம். ஆனால் இதை தமிழர் தரப்பு கையாண்ட முறையில் பல பாடங்களை படிக்க முடியும். தரப்படுத்தல் மட்டும் அல்ல, நிர்வாக சேவையில், இராணுவத்தில், பொலிசில் இப்படி பல இடங்களில் தமிழர்கள் அளவு குறைக்கப்பட வேண்டும் என்ற நீண்ட கால உள்நோக்கம் சிங்கள பொது கூட்டுக்கு இருந்தது. அநகாரிக தர்மபால போன்றோர் ஆங்கிலேய ஆட்சி காலத்திலேயே இதை பற்றி பேச தொடங்கி விட்டார்கள். ஒரு காலத்தில் இருந்த தரப்படுத்தலுக்கும் இப்போ இருக்கும் தரப்படுத்தலுக்கும் பல வேறுபாடுகள் இருப்பினும் அடிப்படை ஒன்றுதான். இந்தியாவில் தரப்படுத்தல் சாதிவாரி இட ஒதுக்கீடு என்று உள்ளது. அது பிராமணர்கள் காலாகாலமாக பெற்ற அவர்கள் எண்ணிக்கைக்கு அதிகமான இடங்களை சுதந்திரத்தின் பின் ஏனைய சாதிகளுக்கு பிரித்து கொடுக்கிறது. இலங்கையில் அதுவே மாவட்ட ரீதியாக இருக்கிறது. இதில் இந்தியாவில் ஏழை பிராமணன் பாதிக்கபடுகிறான். அதே போல் யாழ் மாவட்டத்தில் வருவதால், யாழ்-வன்னியின் எல்லையில் செம்பியன்பற்றில் வாழும் ஒரு ஏழை மாணவனும் பாதிக்க படுகிறான். ஆனால் தரப்படுத்தலை உதவி அரசாங்க அதிபர் மட்டத்தில் செய்தால் - அது மேலும் குளறுபடி, களவுகளுக்கே வழி கோலும் (வாழ் நாள் முழுவதும் யாழில் படித்து விட்டு, ஓ எல், ஏ எல் சோதனையை மட்டும் மன்னாரில் எடுப்பது போல்). நாம் யாரும் இந்திய பிராமணர்கள் இல்லை. எனவே 1947 இல் இருந்த பிராமண ஆதிக்கத்தை சமன் செய்ய ஏற்படுத்தபட்ட இட ஒதுக்கீட்டை நாம் பக்க சார்பின்றி அணுகுவதால் - அதன் நியாயம் எமக்கு இலகுவில் புரிகிறது. ஆனால் இதே போல குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் மிக அதிகமான வளமான பதவிகளில், இடங்களில்தான் 1948இல் நாம் இருந்தோம். இங்கே தமிழர் என்று பொதுவாக கூறினாலும் அது யாழ் தமிழரையே சேரும். சிறுபான்மை ஒன்று, தனது எண்ணிக்கைக்கு பலமடக்கு விகிதாசரத்தில் கூடிய பெரும்பான்மை இடங்களை, பதவிகளை, வளங்களை அனுபவிப்பது என்பது ஒரு நியாயமான நிலை அல்ல. இதை சமன் செய்ய இந்தியாவில், தென்னாபிரிக்காவில் எங்கும் இந்த கோட்டா முறை நடைமுறையில் உள்ளது. 1948 இல் இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு என்ற தத்துவத்தை எமது அரசியல் தலைமைகள் ஏற்று கொண்ட பின் (அதன் காரணங்களை பின்பு ஆராயலாம்) ஒன்று பட்ட இலங்கைக்குள் யாழ் தமிழர் தொடர்ந்தும் தம் எண்ணிக்கைக்கு அதிகமான அளவில் கல்வியில், ஏனையவற்றில் தொடர்ந்தும் கோலோச்ச முடியும் என எதிர்பார்த்தது நடைமுறை சாத்தியம் இல்லாதது. இதை நிச்சயமாக சிங்கள பொதுக்கூட்டு இனவாத கண்ணோட்டத்தில்தான் முன்னெடுத்தது. ஆனால் இதன் பின்னால் உள்ள நியாயத்தையும், இதை தடுக்க முடியாது என்பதையும் எமது தலைமைகள் கண்டு கொள்ள தவறி விட்டன. தமிழ் தலைமகள் எப்போதும் proactive ஆக எதையும் செய்வது அரிது. ஒரு விடயத்தில் நாம் proactive ஆக செயல்படும் போது, அந்த விடயத்தின் agenda setting ஐ நாம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம். ஆனால் நாம் எப்போதும் சிங்கள பொதுகூட்டு ஒரு விடயத்தை செய்த பின் react பண்ணுவதே வழமை. அப்போ அவர்கள் போட்ட அஜெண்டாவில்தான் விடயம் நகரும். தரப்படுத்தலில் பல நல்ல விடயங்கள் யாழ் அல்லாத தமிழருக்கு நடந்தது. இப்போ ஒவ்வொரு வருடமும் மட்டகளப்பில் ஓ எல் சோதனை செய்த 10 மாணவர்கள் டொக்டர் ஆகிறார்கள். இதை தரப்படுத்தலுக்கு முன்னான நிலையுடன் ஒப்பிடுங்கள். அது மட்டும் அல்ல மருத்துவராக தேவைப்படும் புள்ளிகள் அடிப்படையில் ஒரு காலத்தில் மிக இலகு என்ற நிலையில் இருந்த மட்டகளப்பு இப்போ, யாழ், கொழும்பு, காலிக்கு நிகராக வந்து விட்டது. உலகெங்கும் கோட்டா சிஸ்டம் அடைய விழைவது இந்த பெறுபேறைத்தான். கொழும்பின் நிலைக்கு மட்டகளப்பை உயர்த்துவது அல்லது உயர்த்த முனைவது. இந்த யதார்தத்தை புரிந்து கொண்டு, முடிந்தளவு எமது பங்கை உறுதி செய்யும் திரை மறைவு நகர்வுகள் எதையும் எம் தலைவர்கள் செய்யவில்லை. இந்த தவிர்க முடியாத யதார்த்தை எமது மக்களுக்கு புரியவைக்கவில்லை. அதிலும் கொஞ்சம் நியாயம் இருக்கிறது என்று பேசவே இல்லை. சரி இந்த வாய்புகளை இழந்தால், வேறு வகையில் இவற்றை ஈடு செய்ய முடியுமா என சிந்திக்கவில்லை. சரி இதை எப்படி அணுகி இருக்கலாம்? இப்போ இருப்பதை போல், 30 ஆண்டுகால போரின் பிந்திய நிலை அல்ல அன்று. போர்கால சமநிலையும் அன்று இல்லை. அன்றைய தமிழ் தலைவர்கள் அரசோடு டீல் போட பெரிய தடைகள் ஏதும் இருக்கவில்லை. தேவைபடும் போது போட்டார்கள். ஆனால் பண்டா-செல்வா, டட்லி-செல்வா என்று பெரும் எடுப்பில் ஒப்பந்தம் போட்டால் அதை இனவாதிகள் கிழிக்க வைப்பார்கள் என்பதை ஊகித்து, திரைமறைவில் சில டீல்களை போட்டிருக்கலாம். பின்னாளில் தொண்டைமானும், அஷ்ரப்பும் இதைதான் செய்து காட்டினார்கள். ஆனால் நாம் செய்தது முழுக்க முழுக்க வோட்டரசியல். உணர்சிப் பேச்சு. இரத்தப்பொட்டு, வட்டுக்கோட்டை தீர்மானம். இதை கூட உண்மையாக செய்யவில்லை என்பதுதான் ஆக பெரிய கொடுமை. தனி நாடு சாத்தியமோ இல்லையோ தலைவர் அதற்கு முழு மனதோடு தன்னை அர்பணித்து போராடினார். ஆனால் இவர்களுக்கு தனிநாட்டை எப்படி அடைவது என்ற ஐடியாவே இல்லை. வெறும் வாயால் வடை மட்டுமே சுட்டார்கள். தனிநாட்டுக்கு ஒரு துரும்பைதானும் தூக்கி போடவும் இல்லை. முழுக்க முழுக்க வோட்டு அரசியல் மட்டுமே குறி. கற்ற பாடங்கள் என நான் காண்பன 1. சிங்களவர்கள், முஸ்லீம்கள் போல் எமக்கும் ஒரு பொதுகூட்டு தேவை (இப்போ இது இல்லை). 2. நாம் proactive அரசியல் செய்யவில்லை. இனி செய்ய வேண்டும். 3. வரலாற்றின் போக்குக்கு குறுக்கே நின்று ஒரு சிறுபான்மை அணை கட்ட முடியாது. 4. எமது அரசியல் மக்கள் நலன் சார்ந்து, எடுக்கும் கொள்கை முடிவுகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும். மக்களுக்கு உள்ளதை உள்ளபடி கூறல் வேண்டும். உணர்சி வசப்படுத்தல் அறவே ஆகாது. 5. சிங்கள தலைவர்களோடு டீல் பேசும் போது இரெண்டு விடயங்களை கருத வேண்டும். அ. நாம் அவர்களுக்கு எதையாவது கொடுக்க வேண்டும் - வாக்குகள், மாலை மரியாதை -எதுவாகிலும். ஆ. பெரிய எடுப்பில் ஒப்பந்தம் போட்டால் அதை சிங்களவர்கள் குழப்பி அடிப்பது நிச்சயம். ஆகவே தொண்டா பிரஜா உரிமை விடயத்தில் சாதித்தது போல, அஷ்ரப் ஒலுவில் துறைமுகம் இதர திட்டங்களில் சாதித்தது போல ஒரு அணுகுமுறை தேவை. 6. இந்த அணுகுமுறையை தமிழ் தேசிய அரசியல்வாதிகள், அரசாங்கத்தில் சேராமலே செய்ய வேண்டும். பொறுப்பான எதிர்கட்சியாக எல்லாம் அவர்கள் செயல்பட தேவை இல்லை. தமிழ் தேசிய அரசியலை நீர்த்து விடாமல் பேணுவது அதே சமயம் மக்கள் நலனின் பால்பட்டு சில டீல் களை செய்வது. இவர்கள் இந்த அணுகுமுறையை எடுக்க தவறினால் அந்த வெற்றிடத்தை இன்னும் பல அங்கஜன்கள் நிரப்புவார்கள். பிகு: இந்த பாடங்கள் போருக்கு பிந்தியவர்களுக்கே, போர்காலத்தில் இருந்த சமநிலை வேறு.
    3 points
  2. நன்றி சகோ தரைப்படுத்தல் சார்ந்து உங்கள் நீண்ட நேரத்திற்கு இன்றைய தலைமுறையினரின் இது சார்ந்த கேள்விக்கு பதில் சொல்வது கடினமாக இருக்கிறது. இன்று அவர்களுக்கு அரசின் செயல் சரியாகவே படுகிறது. போருக்கு பின்னான காலத்தில் எமது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் எனது எதிர்பார்ப்பு அபிவிருத்தி மட்டுமே. சம்பந்தரில் இருந்து விக்கி வரை கோட்டை விட்ட கோபம் தான் அவர்களுக்கு எதிராக எனது கருத்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
    2 points
  3. ஏன்... ராசாத்தி, இப்பிடி எல்லாம் செய்யுறீங்கள். 🤣
    2 points
  4. என்னை பொறுத்த வரை போராட்டம் என்பது தமிழ் அரசியற் கட்சிகளின் உசுப்பேத்தலினால் தான் ஆரம்பிக்கப்பட்டது ...அவர்கள் தம்மை ,தங்கள் கட்சியை வளர்த்து கொள்ள இவர்களை பலி கடாவாக்கினார்கள் .... இது இந்தளவிற்கு வரும் என்று அவர்களே எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள்...ஆரம்பத்தில் இருந்தே இந்தியாவின் பேச்சை கேட்டதால் வந்த வினை. இதற்காக அந்த காலத்தில் அநியாயமே செய்யவில்லை என்று சொல்லவில்லை ...அவர்கள் பெரும்பான்மை. அதைக் காட்டுவதற்கு ,தமிழர்கள் எந்த விதத்திலும் தம்மை விட முன்னேறி விட கூடாது என்பதற்காய் அநியாயம் செய்தார்கள் ...சிங்கள அரசியற் கட்சிகளும்,பிக்குகளும் தூபம் போட்டனர். தமிழ் அரசியற் கட்சிகள் நினைத்திருந்தால் இதை சமூகமாய் கையாண்டு இருக்கலாம் . முஸ்லீம் கட்சிகளால் முடியும் போது ஏன் தமிழ் கட்சிக்கலால் முடியாமற் போனது தமிழர்களுக்கு பொதுக் கூட்டு தேவை தற்போது அது இல்லை என்று எழுதியுள்ளீர்கள்...முந்தி இருந்ததா? புலிகளால் முழு தமிழரையும் ஒன்றிணைக்க முடிந்ததா? முஸ்லிம்களை தவிர்த்து பார்த்தால் கூட புலிகளால் தமிழரை ஒன்றிணைக்க முடியவில்லை . அப்படி ஒன்றிணைந்தால் மு.வாய்க்கால் அவலம் நிகழ்ந்திருக்காது.
    1 point
  5. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எதிர்பாராத தொல்லைகள்.......! 😂
    1 point
  6. தல .....சீ ......முடி வெட்டலாம் வாங்க.........! 😂
    1 point
  7. முதல்வன், உங்கள் பதிலுக்கு நன்றி. ஆனால் நான் கூறியது அந்த அரசியல்வாதிகளின் தனிப்பட்ட, அரசியல் குணாம்சம்களை பற்றியதல்ல. அவர்கள் சரியானவர்கள் என்று கூட நான் கூறவில்லை. ஆனால் அவர்களை கொலை செய்ததன் மூலம் தமிழீழ விடுதலை போராட்டம் அடைந்த நன்மை எதுவும் இல்லை. மாறாக இலங்கை அரசின் பரப்புரைக்கு உதவி செய்ததாகவே அமைந்தது என்பதையையே குறிப்பிட்டேன். ஒரு நாட்டை ஸதாபிப்பதானால் உலக நாடுகளின் அங்கீகாரத்துடனேயே அதை செய்ய முடியும். எவரைப்பற்றியும் எமக்கு கவலை இல்லை எமக்கு சிறிதறவு ஒத்துவராவிட்டால் அல்லது முரண்பட்டால் அவரை கொலை செய்வேன் என்ற நிலைப்பாடு ஒரு நாட்டை ஸதாபிக்க உதவாது. அப்படி என்றால் ஏதாவதொரு பலமான நாட்டில் ஆதரவாவது இருந்திருக்க வேண்டும். அல்லது உலக நாடுகளை எதிர்த்து வெல்லக்கூடிய super power எமக்கு இருந்திருக்க வேண்டும். நீங்கள் கூறியது போல் புலிகள் எப்போதும் பிரச்சனைகளை தீர்க்க பின்இ விளைவுகளை சிந்திக்காது இலகுவான தெரிவுகளாக கொலைகளையே நாடினார்கள். எவ்வளவு வீரத்துடன் போராடிய போதும் அவர்களின் பெரிய மைனஸ் பொயின்ற் அது தான். யாழ் முஸ்லீம் மக்கள் வேளியேற்றமும் அந்த வகையானதே.
    1 point
  8. தொடர்சசியாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் கொலைகளால் தமிழீழ விடுதலை போராட்டம் அடைந்த இலாபம் என்ன? தென்னிலங்கை அரசியல்வாதிகள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதல்களால் தமிழர் போராட்டம் அரசியல் ரீதியாக பாரிய பின்னடைவை கண்டது. தமிழரின் போராட்டத்தை பயங்கரவாதமாக பிரச்சாரம் செய்ய ஶ்ரீலங்கா அரசுக்கு சிறந்த வாய்ப்பைக் கொடுத்தது. விடுதலைப்புலிகளால் கொல்லப்படாதவர்களையும் புலிகளால் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் சேர்தது ஶ்ரீலங்கா அரசாங்கம் பிரச்சாரம் செய்த போது அவற்றறை மறுக்க முடியாத கையறு நிலையில் புலிகளின் வெளிநாட்டு பிரதிநிதிகள் இருந்தார்கள். பெயர் குறிப்பிட்டு இவர்களை எல்லாம் நாம் கொலை செய்யவில்லை என்று கூறும் போது அப்படியானால் மற்றவைகளை நீங்கள் தானே செய்தீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதனால் மௌனமாக அரசின் பரப்புரையை எதிர் கொள்ள முடியாத நிலை இருந்ததை ஜெனிவாவில் தமிழர் தரப்புக்காக செயற்பட்ட பலர் அறிவார்கள். உலக ராஜதந்திரிகளால் நன்கு அறியப்பட்ட நீலன் திருச்செல்வம் கொலை செய்யப்பட்ட போது ஜெனிவாவில் தமிழர் தரப்பில் பரப்புரை வேலைகளை மேற்கொண்ட நண்பர்கள் சில காலம் ஜெனிவா பக்கமே போக முடியாமல் இருந்தது. அதை தொடர்தது அதே ஆண்டில் சந்திரிகா மீதான தற்கொலை தாக்குதல். என்னைப் பொறுத்தவரை இவை எல்லாம் தனியே வெறும் உணர்சசி வசப்பட்ட பழிவாங்கும் தாக்குதல்களே. யாழ்பபாண எம். பியாக இருந்த யோகேஸ்வரன் ஆரம்பத்தில் இருந்தே இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். போராட்ட இளைஞர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாலேயே 1981 ல் அவரது வீட்டை எரித்து அவர் மயிரிழையில் தப்பி இருந்தார். அப்படிப்பட்டவர்களை கொலை செய்து விட்டு இன்று எமக்காக அரசியல்வாதிகள் இல்லையே என்று அழுகிறோம். இது போல் பல விடயங்களை குறிப்பிடலாம். இவற்றை கூறும் போது பழைய விடயங்களை கிளறுவதாக கூறுவார்கள். ஆனால் தாம் சிலாகிக்கும் பழைய விடயங்களை மட்டும் அசைபோட்டு மணிக்கணக்கில் பேசுவார்கள்.
    1 point
  9. தேநீர் குடிக்க போறீங்களா ஒரு நிமிஷம் இதைப் பார்த்துட்டு குடியுங்கள்.......! 😁
    1 point
  10. 1 point
  11. மாவீரர் துயிலுமில்லங்களின் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் ஓர் பலகை
    1 point
  12. ஈகைச்சுடர்கள் மக்கள் ஏற்றும் சுடரின் பெயர் ஈகைச்சுடர் என்பதாகும் "கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம் - உங்கள் கனவுதனை நினைவாக்கித் தொடர்கிறோம்" கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்
    1 point
  13. முதன்மை சுடர்ப் பீடம் இங்குதான் பொதுச்சுடர் ஏற்றப்படும் "ஒளி தீபம்தான் தேசம் போலத் தோணுதே! தனித் தேசம் காணப் போரிடு என்றே கூறுதே!" 'முதன்மைச் சுடர் கொளுந்துவிட்டு எரிவதைக் காண்க' '???' கிளி. கனகபுரத்தில் பொதுச்சுடர் ஏற்றும் முதன்மை சுடர்ப் பீடம்:-
    1 point
  14. யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டு இடித்தழிக்கப்பட்ட துயிலுமில்லங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட எச்சங்கள் இவ்வாறு கண்ணாடிப் பெட்டியில் இடப்பட்டு கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஏனைய மாவட்டங்கள் பற்றி நானறியேன்! "மாவீரரான செல்வங்களே! மனிதம் உள்ளவரையில் நின்று வாழ்வீர், தெய்வங்களே!"
    1 point
  15. துயிலுமில்ல மாவீரர் நாள் நிகழ்வுகள் முடிந்த பின்னர் துயிலுமில்ல மாவீரர் நாள் நிகழ்வுகள் முடிந்த பின்னர் துயிலுமில்லத்தினுள்ளிருந்து பொதுமக்கள் வெளியேறும் காட்சி. முதன்மை வாசல் உட்பட மூன்று வாசல்களுக்குள்ளாலும் மக்கள் வெளியேறுகின்றனர்.
    1 point
  16. மாவீரர் துயிலுமில்ல ஒலிமுகங்கள் "மாவீரர் வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கையடா - அவர் வாழும் சரித்திரத்தில் மரணம் கூட மடிந்ததடா" இதன் முதன்மை வாயிலிற்குள்ளால்தான் வித்துடல்கள் காவிச் செல்லப்படும். 1991 ஆம் ஆண்டு புதுவை இரத்தினதுரை அவர்களால் தான் "மாவீரர் துயிலும் இல்லம்" என்ற பிடாரச் சொல் முன்மொழியப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதல் துயிலும் இல்லம் "கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்'' ஆகும். '?????? கட்டுமான வேலை நடந்துகொண்டிருக்கிறது' 'கனகபுரம் ஒலிமுகம் (பழையது)' 'கனகபுரம் ஒலிமுகம் (புதியது)' 'கட்டுமான வேலை நடந்துகொண்டிருக்கிறது' 'மேற்கண்ட கட்டுமான வேலைகள் முடித்த பின் புத்துயிர் பெற்று எழுந்த கோப்பாய் துயிலுமில்லத்தின் ஒலிமுகம் ' 'ஈச்சங்குளம்' 'முள்ளியவளை' 'தலைநகர்' 'தரவை' 'உடும்பன்குளம்'
    1 point
  17. முதல் மாவீரர் லெப். சங்கர் அவர்களின் நினைவாய் உதயபீடம் படைமுகாம் துயிலுமில்லத்தில் எழுப்பப்பட்ட கல்லறை
    1 point
  18. மாவீரர் பொதுத் திருவுருவப்படம் "தேசத்தையும் மாந்தரையும் கண்மணி போல் காத்து வந்தார் தங்கள் தேகம் பலியாக்கியே!" இதைத்தான் அனைத்து மாவீரர்களின் படிமங்களும் வைக்க இயலாத இடத்தில் பொதுவாக சில மாவீரர் படங்களோடு வைத்து வீரவணக்கம் செலுத்துவர். இதனோடு "முதல் மாவீரர்களின் படங்கள்"ஓடு கூடியவரையான மாவீரர்களின் திருவுருவப்படங்களும் வைக்கப்பட்டிருக்கும். இதன் சிலை விருத்து (version): இது மட்டு. தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்டிருந்தது. முதன்மை சுடர் பீடத்திலிருந்து பார்க்கின் - இரு ஒலிமுகங்களிற்கும் நடுவில், முதன்மைச் சுடர்ப் பீடத்திற்கு அருகில், (45 பாகை கோணத்தில்)/ (V வடிவிலெனில் அதன் கவட்டில்) அமைக்கப்பட்டிருந்தது.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.