Jump to content

Leaderboard

 1. valavan

  valavan

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   12

  • Posts

   1093


 2. putthan

  putthan

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   12

  • Posts

   12628


 3. பசுவூர்க்கோபி

  பசுவூர்க்கோபி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   9

  • Posts

   342


 4. nunavilan

  nunavilan

  கருத்துக்கள நிர்வாகம்


  • Points

   7

  • Posts

   46725


Popular Content

Showing content with the highest reputation on 08/15/21 in all areas

 1. ஊருக்கு போய்வந்த தம்பர்..! *********************** ஊருக்கு போனபோது ஒருபோத்தல் பியர் அடிக்க பாருக்கு.. (Bar) போன்னான் பாருங்கோ.. அங்கவந்த சின்னம் சிறுசு பெருசுகள் எல்லாம் தாள் தாளா எறிஞ்சு-பின் தண்ணியில குளிச்சு தவளுதுகள். ஒரு கூட்டம் உட்காந்து காசுவந்த கதை சொல்லி கதைச்சு பெருமைபேசி கஞ்சா, புகையில என புகையாக் கக்குதுகள். பிச்சைக்காஸ் அனுப்பினான் இவனுக்கு பின்னால போனவன் கொட்டிக்குவிக்கிறானாம் என தான் கொடுத்தனுப்பினவன் போல வெட்டி முறிக்கிறான் ஒருத்தன் விட்டுத்தொலை மச்சான் நீ மற்றவனுக்கு போன் போடு வந்தா மலை வராட்டி மயிர் என்றான் மற்றவன் காச்சல் இருமல் என்றாலும் கொஞ்சம் கடும் வருத்தம் என்று சொல்லு காஸ்வரும் என்றான் என்னொருவன் இப்படி வெளிநாட்டுக்கசை வேண்டும் முறைபற்றி அடுக்கடுக்காக அலசி ஆராஞ்சு குடிச்சு வெறிச்சு.. கும்மாளம் போடுதுகள். பாருங்கோ. இங்க பார்த்தா.. வேற்று மொழி இடத்தில வேற்றுக்கிரக வாசிபோல-பலர் வீசாவுக்கும் அலைஞ்சு கொண்டு இரவு பகலாய் கண் முளிச்சு வெய்யிலிலும் குளிரிலும் சமையல்.. அடுப்பிலும் நெருப்பிலும் அப்பிள் புடுங்கியும் ஆர்பயன் புடுங்கியும் தூசி துடைத்து துப்பரவுப் பணிசெய்தும் சுப்பர் மாக்கட்களிலும் பெற்றோல் நிலையங்களிலும் பிள்ளைகள்,பெரியவர்கள் படும் பாட்டை எப்படித்தான் இவங்களுக்கு சொல்லிப்புரியவைப்பேன். பாருங்கோ போராட்டம் முடிஞ்சுது போரில்லாத புனித பூமி சொல்ல.. நல்லாத்தான் இருக்கு போதை நிறைச்சு பாதையை மாத்தினதும் சிந்தனையை மறக்க செய்த இந்த உத்தியும் ஒருவித போர்தானே பாருங்கோ. அனால் ஒன்றை மாத்திரம் உங்களுக்கு.. சொல்லுறன் ஓடி ஓடி உழைக்கிற பணத்தை ஊதாரியாய் செலவுசெய்வோர் என அறிந்தால் உன் தாய்க்குகூட பணம்அனுப்பாதே. அங்கு பல உயிர்களை காப்பாற்றலாம். என்று சொல்லி ஒரு பெருமூச்சு விட்டார் தம்பர். தொடரும்.. அன்புடன் -பசுவூர்க்கோபி-
  9 points
 2. வடக்கே திரும்பாமலா சாவகச்சேரி,நாகர்கோவில் அரியாலை கொழும்புதுறை யாழ்கச்சேரிவரை என அனைத்து பகுதியிலும் முன்னேறினார்கள்? அப்போதைய போர் சூழலில் வவுனியா பக்கமாக முன்னேறிய புலிகள் ஜோசப் முகாமை தாக்கபோகிறார்கள் என்றும் வவுனியா மக்களை இடம்பெயர அறிவித்திருக்கிறார்கள், ஈரபெரியகுளம்,மதவாச்சி பகுதிகளில்கூட ராணுவம் புலிகள் முன்னேற்றத்தை தடுக்க பலமான ராணுவ தடுப்பு ஏற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் ஊடகவியலாளர் சிவராம் பிபிசிக்கு பேட்டியளித்திருந்தார். ஆனால் புலிகள் வவுனியா பக்கமான மேலதிக தாக்குதலில் இறங்கவேயில்லை, அவர்கள் முழு கவனமும் வடபகுதிமீதே இருந்தது. சந்திரிக்கா அரசு இந்திய உதவியை நாடியதாகவும் இந்தியா வடக்கில் உள்ள ராணுவத்தை பாதுகாப்பாக வெளியேற்ற இலங்கைக்கு உதவ விளைந்ததாகவும், படையினர் மட்டும் வெளியேறலாம் ஆயுதங்கள் அப்படியே விட்டுபோட்டு போகோணும் என்பதுதான் புலிகள் விதித்த நிபந்தனை என்றும், அப்போது யாழில் உள்ள பொதுமக்கள் சிலரும் வெளியேற விரும்புகிறார்கள் என்று தகவலளிக்கப்பட்டதாகவும், யார் அந்த பொதுமக்கள் என்று கேட்டபோது ஈபிடிபியும் அதன் ஆதரவாளர்களும் என்று பதிலளிக்கப்பட்டதாகவும் ஓரு மாவீரர் நாளில் அன்ரன் பாலசிங்க உரை நிகழ்த்தினார். பல ஆயிரம் போராளிகள் இழப்பின் மத்தியிலும் கைப்பற்றபடமுடியாமல் போன வன்னியின் முகாம்கள் ஆனையிறவு எல்லாம் மிக குறைந்த போராளிகள் இழப்புடன் மீண்டும் கைப்பற்றகூடியதாய் இருந்ததுக்கு பிரதான காரணம் புலிகள் பக்கம் திடீரென அதிகரித்த எறிகணை சூட்டின் வலு. கைப்பற்றிய இடங்களையெல்லாம் ராணுவம் விட்டுவிட்டு ஓட காரணமே சரமாரியான புலிகளின் எறிகணை தாக்குதல்தான். அதேபோல் புலிகள் கைப்பற்றிய இடங்களை எல்லாம் ராணுவம் மீள கைப்பற்ற காரணம் அவர்கள் பக்கம் அதிகரித்த எறிகணை சூட்டு வலுதான். ஆம் என்று மல்ரிபரல் எறிகணை செலுத்திகள் செக்கோவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ராணுவத்தின் கைகளுக்கு வந்து சேர்ந்ததோ அன்றே ராணுவ சமநிலை மாறிபோனது. வெட்டவெளிகளை பின்புலமாக கொண்ட நாகர்கோவில்,முகமாலை பகுதிகளை தவிர்த்து ஏனைய அனைத்து பகுதிகளிலிருந்தும் புலிகள் பின்நோக்கி தள்ளப்பட்டார்கள். இறுதிபோரின்போதுகூட பல ஆயிரம்போராளிகள் முன்பு நடந்த போர்களைபோல ராணுவத்தை நெருங்கி போக முடியாமல் , அவர்களை காணாமலே வீமரணம் அடைந்ததற்கு காரணம் மழையென பொழிந்த மல்டி பரல் சூட்டுவலுதான். அதன்பின்பு ஓயாத அலைகள் நான்கு தீச்சுவாலையும் முகமாலை பகுதியிலேயே வலுவாக நடந்ததாகவும் ஓயாத அலைகள் மூன்றுபோன்று அவை பாரிய வெற்றியளிக்கவில்லை என்பதும்தான் சம்பவங்கள். நான் சொன்னேன் புலிகள் கேக்கவில்லையென்று ஐயா ஜெயபாலனும் ஓரிடத்தில் அளந்திருந்தார் .போராளிகள் ஆயுதபயிற்சி பெற்ற எல்லைபடைகள் பொதுமக்கள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர்வீரர்கள், சில ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்ட காடுகளில் எப்படி மறைந்திருப்பது கெரில்லா தாக்குதல் செய்வது? கெரில்லா தாக்குதல் என்றாலே சிறு குழுக்களாய் பிரிந்து செயல்படுவது, பல ஆயிரம் வீரர்கள், பல ஆயிரம் கனரக ஆயுதங்கள் ,விமானங்கள் பெரும் எண்ணிக்கையிலான போராயுதங்கள் கடற்கலங்களை கொண்ட கடல்புலிகள் இவற்றையெல்லாம் காட்டுக்குள் போய் பதுக்கி வைத்துக்கொண்டு என்ன கெரில்லா தாக்குதல் செய்வது? அப்படி செய்தாலும் தரை கடல் என எல்லைகளின் கட்டுப்பாட்டை இழந்தால் எங்கிருந்து பல்லாயிரம் போராளிகளுக்கு உணவு மருத்துவம் உட்பட்ட வளங்கல்களை செய்வது? முன்னர் சிறிய எண்ணிக்கையில் போராளிகள் இருந்தபோது புலிகள் இயக்கம் கெரில்லா தாக்குதலில் மிரட்டியது அப்போது புலிகளுக்கு இந்தியாவில் தடையிருக்கவில்லை, காயபட்ட போராளிகளை பராமரிக்கவும்,ஆயுதங்கள் வெடிமருந்துகளை கொண்டு வந்து சேர்க்கவும் தமிழகம் பின்புலமாய் இருந்தது. இறுதி போரின்போது அதுவா நிலமை? ஜெயபாலன் ஐயா கெரில்லா தாக்குதல் செய்ய சொல்லி நான் சொன்னேன் புலிகள் கேட்கவில்லை என்று அளந்துவிட்டைதை பார்த்து நாங்களும் சாத்தியமில்லாத விசயங்களை அலசகூடாது அது எதிர்கால சந்ததிக்கு பகிரப்படும் தவறான தகவலாக போய்விடும்..
  5 points
 3. இது ஒரு அவியலாக தான் இருக்கும் என நம்புகிறேன். கவிஞர் புளட்டில் இருந்தும் இவரை அவர்களே நம்புவதில்லை. கவிஞர், புலிகள் பதுளை காடுகளை பிடிக்க வேண்டும் என்றும் யாழ்களத்தில் கூறியவர்.
  3 points
 4. ஆளுனரின் அனுமதிக்குக் காத்திருக்கத் தேவையில்லை என நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவளிகள் எனக் குற்றஞ்சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் 7 பேரையும் ஆளுனரின் அனுமதிக்குக் காத்திராமல் உடனேயே விடுதலை செய்யும்படி சென்னை உயர்நீதி மன்றம் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இக் கொலையில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட நளினி சிறிகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இக் கட்டளையை விடுத்துள்ளனர். ஆளுனரின் அனுமதியில்லாது, இவ்வேழுபேரையும் விடுதலைசெய்யும் ஆணையை, மாநில அரசு பிறப்பிக்கவேண்டும் என்பதே நளினியின் விண்ணப்பமாகும். தலைமை நீதிபதி சஞ்சிப் பனர்ஜி மற்றும் நீதியரசர் பி.டி. அவ்டிகேசவலு ஆகியோர் நேற்று (13) இவ் வழக்கை விசாரித்திருந்தார்கள். இக் கட்டளைக்கு மாநில, மத்திய அரசுகள் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமெனவும் அத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. நளினி, முருகன், சாந்தன்,பேரறிவாளன்,ஜயகுமார்,ரவிச்சந்திரன், றொபேர்ட் பயஸ் ஆகிய ஏழு பேரே ரஜிவ் காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவாசம் அநுபவிப்பவர்களாவர். இந்த 7 கொலைக்குற்றவாளிகளையும் விடுதலை செய்வதை யோசிக்கும்படி தமிழ்நாடு ஆளுனர் பன்வர்லால் புரோஹித்துக்கு, செப்டம்பர் 9, 2018 இல், தமிழ்நாடு அரசின் முந்தைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிபார்சு செய்திருந்தார். ஆனாலும் அதன் மீது ஆளுனர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருப்பினும், தம்மை விடுதலை செய்யக் கட்டளையிடும்படி நளினியும் மற்றயோரும் தொடர்ந்து பல்வேறு விண்ணப்பங்களையும் ஹேர்பியஸ் கோர்ப்பஸ் மனுக்களையும் உயர்நீதிமன்றத்தில் செய்திருந்தனர். அப்படியிருந்தும் ஆளுனருக்குக் கட்டளையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தற்போது நளினி செய்த விண்ணப்பத்தில், மாநில அர்சின் சிபார்சின்மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்காதமை அரசியலமைப்புக்கு முரணானது எனவும் மாநில அரசின் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு ஆளுனருக்கு உண்டு அதைவிட அவருக்கு வேறு வழியேதும் இல்லை எனவும், அதனால் அவரது ஆணைக்குக் காத்திராமல் மாநில அரசு தங்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனவும் கேட்டிருந்தார். அதே வேளை இந்திய அரசியலமைப்பின் 161 வது கட்டளையின் பிரகாரம், 10 வருடங்கள் அல்லது அதற்கு குறைவாக சிறைத்தண்டனை அனுபவித்த 3,800 ஆயுள் கைதிகள் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் நளினி தனது விண்ணப்பத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.(தி நியூஸ் மிநிட்) https://www.marumoli.com/ராஜிவ்-கொலை-சந்தேகநபர்கள/?fbclid=IwAR2lRAyALm8J_gYbIqwA-3SYh5RSM-NgWSEfq-Ct0kunkOkXkKkmtZkpGSE
  3 points
 5. ஜெயபாலன் ஐயா அவர்கள் ஒருகவிஞர் சமூக ஆர்வலர் என்று அறிந்திருக்கிறேன், ஆனால் விடுதலைபுலிகளின் போர்முறைமை பற்றி அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பிரதம ராணுவ ஆலோசகராக எப்போதிலிருந்து இருந்தார் என்பதைதான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. ஒருபொழுது புலிகளுக்கு ஆலோசனை வழங்கியதாக சொல்வார், மறுபொழுதில் முஸ்லீம்கள் சிங்களவர்கள் இந்தியாவுக்காக உருகுவார். கவிஞர் எந்த நிலையில் உறுதியாக இருக்கிறார் என்பது இன்றுவரை புரிந்ததில்லை. மண்ணுக்கான போரின்போது உலகில் உள்ளவர்களெல்லாம் புலிகளை வைத்து தமிழரை அடையாளம் கண்டார்கள். போர் முடிந்து எமக்காய் போரிட்டவர்கள் போய் முடிந்த பின்னர் சில தமிழர்கள் தங்களை வைத்து புலிகளை அடையாளபடுத்த எத்தனிக்கின்றார்கள். புலிகள் என்ற அமைப்பு அதன் ஆயிரக்கணக்கான போராளிகள் மற்றும் தலைமைக்கு மட்டும் சொந்தமல்ல, மண்மீட்புக்காய் அவர்களுடன் தோளோடு தோள் நின்ற பல லட்சம் மக்களுக்கும் சொந்தமானதொன்று . எம் இனத்தின் எதிர்கால இருப்புக்காய் போர் செய்தார்கள் லட்சியங்களில் தோற்று போய் அவர்கள் போய் முடிந்துவிட்டாலும், நாங்கள் இருக்கிறோம் அவர்களை தேவையின்றி தொட்டுக்கொள்வதை சகித்து கொள்ளபோவதில்லை. விடுதலை அமைப்பு இனத்துக்கான கடமையை ஆற்றமுனைந்து அது முடியாமல் போகவே மெளனமாகிபோனது, அதேபோல் உங்களை போன்றவர்கள் உறங்கிகொண்டிருக்கும் பல ஆயிரம் ஆத்மாக்களின் கல்லறைகளை தங்கள் சுய தம்பட்டங்களுக்காக கிளறாமல் , பல்லின சமுதாயம் இந்தியா,கவிதை சினிமா இணைய பேட்டி போன்ற உங்கள் கடமையை மட்டும் கவனித்தாலே போதும் அதுவே இனத்துக்கு நீங்கள் செய்யும் பெரும் தொண்டு என்று நினைக்கிறேன்.
  3 points
 6. புலிகள் மீது பிழை இல்லை புலிகளின் கைகளில் பிரச்சினையை விட்டு விட்டு நழுவிக்கொண்ட மக்கள் மீதுதான் பிழை இனி யார் மீதும் பிழை சொல்லியும் எதுவும் நடக்க போவதில்லை இந்த தலிபான் களை பார்த்து ஈழ மக்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என கட்டுரைகள் வராமல் இருந்தால் மிகவும் நல்லது
  2 points
 7. இந்த கேள்விகள் நியாயமானதே. இலங்கை தமிழர்களை மாற்றாந்தாய் மனநிலையோடு நடத்துவது ஒரு சந்தேகம் கூட இல்லை. அது ஒரு உண்மை. ஆனால் அதை ஒத்த உண்மைகள்தான்: 1. 1ம், 2ம் அலைகள் இலங்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. 2. கொவிட்டால் வர இருக்கும் risk ஓடு ஒப்பிட்டால் - சைனோபார்ம் ஊசியால் வர இருக்கும் risk பல மடங்கு குறைவு என்பதும். 3. இலங்கை சொல்கிறதோ இல்லையோ தமிழர்கள் நாம் கோவிலை பூட்டி விட்டு நம்மை நாமே தற்காற்க வேண்டும். என்பதும். இலங்கை மீதான கடுப்பில் மேலே சொன்ன மூன்று உண்மைகளையும் திரித்து எழுதுவதால் - இலங்கைக்கு எந்த கெடுதலும் இல்லை -கெடுதல் முழுக்க எமது மக்களுக்குத்தான்.
  2 points
 8. இவ்வாறு, மருத்துவத் துறையில் இருந்து கொண்டு அடிப்படையான உயிரியல் புரிந்திருக்க வேண்டிய வேலைகளில் இருந்து கொண்டு கோவிட் தடுப்பூசிகளை சந்தேகிப்போர் மீது எனக்கு மரியாதை மிகக் குறைவு! -ஏனெனில் இவர்கள் தங்கள் துறை சார் அறிவை வாழ்க்கை சார்ந்த முடிவுகள் எடுக்கப் பாவிக்காமல் மாதச் சம்பளம் எடுக்க மட்டுமே பாவிக்கும் போலிகள்! அமெரிக்காவில் மிகப் பெரும்பான்மையான மருத்துவமனைகளில் சேவையில் இருப்போர் கோவிட் தடுப்பூசி எடுக்கா விட்டால் வேலை காலி! மிகச்சரியான முடிவென நினைக்கிறேன் - மருத்துவ விஞ்ஞானத்தை நம்பாதவர், அதை நோயாளியின் நலனுக்காகப் பாவிப்பார் என்று எனக்கு நம்பிக்கையில்லை!
  2 points
 9. வாசிக்காமல் எழுத்து பிழைகளை ஞானகண்ணால் கண்டுபிடிக்கும் அளவுக்கு ஞானம் வரவில்லை எனக்கு.
  2 points
 10. மௌனமான யுகங்கள் இன்பமான அதிர்ச்சியோடு தான் இந்த நாள் ஆரம்பித்தது, இன்னொரு புதிருக்கு விடை தரப்போவதும் தெரியாமலே! எதிர்பாராத விதமாக இன்று காலையில், அவசர அவசரமாக, எண்ணி ஒரு சில ஊழியர்களை மட்டும், அவர்கள் கடின உழைப்பை அங்கீகரித்து, பணி உயர்வு குறித்துப் பேச வேண்டும் என, முகாமைத்துவ அதிகாரி தனது அலுவலகத்துக்கு வருமாறு பணித்திருந்தார். அந்த ஒரு சிலரில் அவனும் ஒருவராக இருந்தான். அழைக்கப்பட்ட அனைவருமே நேர்மையான, கடின உழைப்பை விரும்புகின்ற ஊழியர்களாக இருந்தது அங்கு தொழில் புரிகின்ற அனைவருக்கும் தெளிவாகவே தெரிந்தாலும் எப்படி இவர்களைத் தெரிவு செய்தார்கள், யார் இவர்களைக் கண்காணித்தார்கள், எப்படி இது சாத்தியமாயிற்று என்பதெல்லாம் தெரியாத, புரியாத புதிராகவே இருந்தது. கிறிஸ் தனது உழைப்புக்கு தகுந்த ஊதியம் தனக்கு கிடைத்து வந்ததை ஒரு வரமாகவே நினைத்து, அந்தத் தொழிற்சாலை உழைப்பை எப்போதுமே உயர்வாக எண்ணிஉழைப்பவன். இன்று அதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. தந்தையில்லாத, அவனது குடும்பத்தின் வறுமையைப் போக்கி, ஓரளவுக்கு அவர்களை வாழ்க்கையில் முன்னுக்கு கொண்டு வந்ததற்கு அவனது நேர்மையான, கடின உழைப்பே காரணம் எனலாம். இதோ, ஒவ்வொருவராக அலுவலகத்துள் அழைக்கப்பட்டனர். அவனது பெயர் அழைக்கப்பட்டபோது மகிழ்ச்சியை மீறிய ஒரு படபடப்புடன் அவன் உள்ளே போன போது, அவனது முகாமைத்துவ அதிகாரி அவனது கைகளைக் குலுக்கி, அவனுக்கு வாழ்த்து தெரிவித்தபடியே அவனது பணி உயர்வையும், ஊதிய உயர்வையும் அவனுக்கு அறிவித்தார். அதனை உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் தோரணையில் அவனுக்கு ஒரு கடிதமும் கையளிக்கப்பட்டது. சொல்ல வந்த வார்த்தைகள் தடுமாற, ஒருவாறு சமாளித்து நன்றி கூறியவன் கண்களில், அப்போது தான் அந்த மேசையும் அதிலிருந்த உணவுகளின் மீதியும் தென்பட்டு அதிர்ச்சியை ஊட்டியது. அதிர்ச்சிக்கு காரணமான அந்த மீந்து போன உணவும், நீல நிறப் கைப்பிடிகளைக் கொண்ட உணவு வெட்டுக்கருவிகளும் அவனுக்குப் பல கேள்விகளுக்கு விடையளித்தது. அவனது நினைவுகள் பின்னோக்கி நகர்ந்து, அவனுக்குள் தேங்கியிருந்த பல வினாக்களுக்கு விடை சொல்லத் தொடங்கின. பரந்து விரிந்திருந்த அந்த பச்சைப் பசேலென்ற திடலிலிருந்து கோடை காலப் பருவக்காற்று மழைச் சாரலைத் தன்னுடன் சேர்த்து இழுத்து வரப்பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்ததது. அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தொழிற்சாலைக் கட்டடத்தின் கதவுகளைக் கோடை கால வெப்பநிலையை சமப்படுத்துவதற்காய் திறந்து வைத்திருந்தனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை செழிப்பாய் வளர்த்து, அழகாய் வெட்டப்பட்டிருந்த புற்களும் அதன் எல்லைகளில் பரவலாய் வேரூன்றியிருந்த விலோ மரங்களும் (Willow trees )ஆஷ் மரங்களும் (Ash trees) அப்பிள் (apple), செரி (Cherry) மரங்களும், இன்னும் பல வேலியோரத்து பூஞ்செடிகளும் கொடிகளும் கோடையின் அழகை மேலும் பசுமையாக்கிக் கொண்டிருந்தன. அது மட்டுமல்லாது வெறும் கற்களும் கட்டடங்களுமாய் இருக்கும் அந்த செயற்கைத் திடலுக்கு அந்த இயற்கை நிழலும் செழித்து, அடர்த்தியாய் வளர்ந்த மரங்களும் அந்த இடத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒரு வித ஈர்ப்பை வழங்கிக் கொண்டிருந்தது. இவை எல்லாமே அந்தத் தொழிற்சாலையின் நிர்வாக அதிகாரியின் தன்னலமற்ற, இயற்கையை நேசிக்கும் கைகளால் நடப்பட்டு பராமரிக்கப்பட்டதால் விளைந்த சொர்க்கம் என அவனுடன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நடுத்தர வயதுக்காரர் கூறியிருந்தார். அவனுக்கு அப்போது மதிய இடைவேளை, அது வெறும் கண் துடைப்புக்கான ஓய்வு என்று தான் எடுத்துக் கொள்ளுவான் அவன். அவனோடு வேலை செய்யும் மற்ற தொழிலாளிகள் சாப்பாடு, ஓய்வு, அரட்டை, புகை பிடித்தல் என தமது நாற்பது நிமிட இடைவேளையை மிகுந்த களைப்புடன் கழிக்க அவன் மட்டும் அந்த தொழிற்சாலைக் கட்டடத்தைக் கடந்து, ஏகாந்தமாக அந்த புல்வெளியைச் சுற்றி நடப்பது வழமையாகிப் போனது. தன் கண்ணில் படும் குப்பை கூளங்களை அக்கறையுடன் அகற்றிக் குப்பைத் தொட்டிகளில் போடுவான். அப்படியே நடந்து போய் அப்பிள் மரங்களிலிருந்து விழுந்திருக்கும் அப்பிள்களை அகற்றி, அவற்றை தனியாக அவற்றுக்கென இருக்கும் தொட்டியில் போட்டு விட்டு, ஏனைய மரங்களின் நிழலையும் ரம்மியத்தையும் ரசித்து விட்டு, திரும்ப ஒரு சுற்றில் நடந்து போன கையோடு தனது மதிய உணவை அவன் அருந்துவது வழக்கம். அதைத் தொடர்ந்து ஒரு ஐந்து அல்லது ஏழு நிமிடங்களில் தொழிற்சாலையின் மணி ஒன்று ஓங்கி ஒலித்து, மதிய இடைவேளை முடிந்ததை எல்லோருடைய காதுகளுக்கும் எட்ட வைக்கும். அன்றும் அப்பிடித்தான், சற்றே ஈரப்பிடிப்புடன் அவன் முகத்தைத் தழுவிச் சென்ற காற்றை நீளமாக உள் இழுத்து வெளியே விட்டபடி எட்டி அடியெடுத்து வைத்த போது, அவனுக்கு வேலைப்பளுவால் வந்திருந்த களைப்பு காணாமல் போனது போல் உணர்ந்தான். களை மறந்து, பாட்டைக் கேட்டபடி நடந்து போகும் போது தான் திடீரென அந்த, முக மலர்ச்சியோடு தன்னை நோக்கி நடந்து வந்த இளம் பெண்ணை இவன் கவனித்தான். இவளை முன்னெப்போதும் பார்த்ததில்லையே என யோசித்து முடிக்க முன்னரே அவளுடைய கைகள் இவனை நோக்கி இயல்பாய், நட்புடன் நீண்டன. "எனக்குப் பெயர் ஹனா, நான் இத்தொழிற்சாலையின் கணக்கு எழுதும் பகுதியில் ஆரம்ப நிலைத் தொழிலாளி. இனி அங்கு வேலைகள் குறைந்து விட்டன, உனது பகுதிக்கு எனக்கு மாற்றலாகியுள்ளது." தன்னை அறிமுகம் செய்யும் போதே அவனுடன் கைகளைக் குலுக்கிக் கொண்ட ஹனாவை இவன் திகைப்போடு பார்த்தான். அவள் உடல் மொழியும் பேசுகின்ற விதமும் அவளுக்கு ஒரு அலாதியான கவர்ச்சியைக் கொடுத்திருந்தது மட்டுமல்ல, மிக மிடுக்கான ஒரு இராணுவ வீராங்கனை போன்ற அவளது தோற்றம் அவனுக்கு அவளை முதன் முறை பார்த்த போதே ஈர்ப்பொன்றையும் ஏற்படுத்தியது. அலாதியான துள்ளலுடன், ஒருவித மிடுக்குடன் தன்னருகே நடந்து வந்தவளுடன் தன்னை அறிமுகம் செய்யத் தடுமாறிப் போனான் அவன். "எனக்குப் பெயர் கிறிஸ், நான் நீங்கள் வேலை செய்ய வந்திருக்கும் தொழிற்சாலையின் மருத்துவப் பொருட்களை உற்பத்தி செய்யும் பகுதியில் கடந்த ஒரு வருடமாக வேலை பார்க்கிறேன்." மேற்கொண்டு வேறு என்ன சொல்வதெனத் தெரியாமல் புன்னகைத்தவனைப் பார்த்து அவள் கேள்வி ஒன்றை வீசினாள். "நானும் என்னுடைய பகுதியிலிருந்து இந்த பழமரத் தோட்டங்கள் வரைக்கும் மதிய இடைவேளையின் போது நடந்து வருவதுண்டு, நான் உன்னை ஒரு போதும் முன்பு பார்த்ததே இல்லையே. என்னைப் பார்த்ததும் ஒளிந்து கொண்டாயா?" கலகலத்துச் சிரித்துக் கொண்டவளை இவன் பரவசத்துடன் பார்த்தான். ஒருவரைப் பார்த்த முதல் முறையிலேயே இப்படி இயல்பாய் கலகலத்து பேச எப்படி முடிகிறது இவளால் என எண்ணிக் கொண்டான். ****************************************************************************************************** அதன் பின் வந்த நாட்களில் அவனுடைய தொழிற் சுத்தமும் நேர்த்தியும், சுறுசுறுப்பும் அவளுக்கும் பிடித்ததோ என்னவோ அவனை சந்திப்பதிலும் பேசுவதிலும் ஒரு விதமான ஆர்வத்தை வெளிப்டையாக அவள் காட்டியது அவனுக்கு சில நேரங்களில் கூச்சத்தையும் ஏற்படுத்தியது. தன்னுடைய பகுதிக்கு அவள் புதிதாக இருப்பதால் வேலை பழகுவதில் அவளுக்கிருந்த ஆர்வம் காரணமாக இருக்கலாம் என அவன் எண்ணினாலும் அவனது தோழர், தோழிகள் அவள் இல்லாத போது அவனைக் கிண்டல் அடிக்கத் தொடங்கியிருந்தனர். அவனோடு வேலை செய்தவர்களில் பெரும்பான்மையானோர் அந்தத் தொழிற்சாலையில் பல்லாண்டு காலமாக வேலை செய்வதாகக் கூறியிருந்தார்கள். தற்போதுள்ள தலைமை நிர்வாக அதிகாரி, மிக இளம் வயதில், கடந்த ஆண்டில் அவரது தந்தையின் திடீர் மரணத்தோடு பதவிக்கு வந்தவர். புதியவர் ஒரு ஆண் என்பதைத் தவிர எவருக்கும் அவர் முகம் தெரியாத ஒன்றாகவே இருந்தது. அவருக்குக் கீழ் பதவியில் இருந்தவர்கள் மூலமாகவே சகல கட்டளைகளும், வழிமுறைகளும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. தொழிற்சாலை முகாமைத்துவம், அதன் தலைவனை இழந்ததோடு பலத்த ஆட்டம் கண்டிருந்தது. தலைவனை இழந்த கப்பலாக, தொழிற்சாலை திக்குத் திசை தெரியாமல் அலைபாய, நிர்வாகத் தேவையில் அவர் தந்தையோடு ஒட்டி உறவாடிய பலர் அவரது மறைவை சாதகமாக்கி, சுயநலத்தோடு, தமது பொருளாதாரத் தேவையை நிறைவு செய்து கொண்டனர். கடை நிலை ஊழியர்களில்க் கூட பல சோம்பேறிகள் இந்த நிலையை தமக்கு சாதகமாக்கிக் கொண்டனர். தொழிற்சாலையின் உற்பத்தி கணிசமான அளவில் சரியத் தொடங்கிய வேளையில் தான் கிறிஸ் வேலையில் சேர்ந்திருந்தான். பழைய நிர்வாக அதிகாரி உயிரோடிருந்த காலப்பகுதியில், அவர் இருந்தவரை தனது குடும்ப அங்கத்தவர்கள் அனைவரையும் அவர்களது பாதுகாப்பு கருதி திரை மறைவிலேயே வைத்திருந்தார் என அவன் அறிந்திருந்தான். இருந்தாலும் அவர் இதைப்போல இன்னும் பல தொழிற்சாலைகளில் நேர்மையாக வேலை செய்த தொழிலாளிகளை இனம் கண்டு, அத்தொழிலாளிகளையும் அவர்கள் குடும்பங்களையும் அன்போடு ஆதரித்தவர் எனவும் சக தொழிலாளிகள் பேசிக் கொண்டனர். கிறிஸ் வேலையில் சேர்ந்த சிறிய காலப்பகுதியிலேயே தன் வேலையைத் திறம்பட பழகி, தனக்குப் பின் வந்து சேர்ந்தவர்களுக்கும் தொழிற்பயிற்சி அளிக்கும் அளவுக்கு முன்னேறியிருந்தான். அவனது குடும்பத்திற்கான பொருளாதாரத் தேவையை நிறைவு செய்யும் பொறுப்பும் அவனுக்கு இருந்தது. "இன்று மதிய இடைவேளையில் உன்னோடு சேர்ந்து உணவு அருந்த வரலாமா?" ஹனா மிகுந்த ஆர்வத்தோடு கேட்ட போது கிறிஸ்ஸுக்கு சம்மதம் தெரிவிப்பதைத் தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை. மனதெல்லாம் இனிமையாய் ஓர் உணர்வு தேனாய் வடிந்தது போல் இருந்தது. "அதற்கென்ன வரலாமே!" கிறிஸ் பதில் கொடுத்திருந்தான். அவள் வரும் போது மதிய இடைவேளையில் அவன் வழமை போல தனியாக மரங்களின் நிழலில் இருக்கப் போவதை நினைத்து அவளைச் சந்திக்கப் போகும் ஒரு ஆவலும், இனிமையான ஒரு படபடப்பும் மனதில் தோன்றியதை அவனால் இனம் காண முடிந்தது. இப்படியே பல மதிய இடைவெளிகள் ஒன்றாகக் கழிந்த போது அவளது பல தனிப்பட்ட, நுணுக்கமான, சுகாதாரமான உணவுப் பழக்கங்களை கிறிஸ் அறிந்து கொண்டான். பச்சைக் காய்கறிகளுடன் (salad ) ஒரு சிறிய மாமிசத் துண்டு அல்லது மீன் போன்றவற்றை உணவாகப் பயன்படுத்துவதும், ஸ்ரோபெரிகளைக் கழுவி, அவற்றை இரண்டாகப் பிளந்து, பின் single cream எனும் நுரைத்த பால் கலவையை அதன் மேல் படர விட்டு முள்ளுக்கரண்டியால் ஒவ்வொன்றாக ரசித்துச் சாப்பிடுவதும், அன்று பிடுங்கிய புதினா இலைகளை தேனீருக்குப் பதில் பாவிப்பதும் அவளது வழக்கம் என்பதையும் அறிந்து கொண்டான். சாப்பிட்ட பின்னர் அதிமதுரத்தால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை மட்டும் ( liquorice) உள் எடுப்பதும் என ஹனா மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவளாக இருந்தது, அவளை கிறிஸ் மேலும் விரும்புவதற்கு காரணமாயின. தனது தந்தை தனது அந்திம காலம் வரை பாவித்த ஒரு நீல நிறப்பிடி கொண்ட கத்தியும் நீல நிற முள்ளுக்கரண்டியும் தனக்கு மிகப் பிடிக்கும் என, அவள் அவற்றைத் தன் உணவுப் பெட்டியில் எப்போதுமே வைத்திருப்பாள். சாதாரண ஆங்கிலேயப் பெண்களுக்கில்லாத ஒரு ஒலிவ் நிறமும், பழுப்பு (Hazel )நிறக்கண்களும் அவளுக்கொரு தனி அழகைக் கொடுத்ததாகவே அவன் நினைத்துக் கொண்டான். அது மட்டுமல்லாமல் அவள், மதிய இடைவேளைகளில் அவனுடன் வெளியே நடக்கும் போதெல்லாம், காலநிலை கருதியோ என்னவோ தன் கண்களைத் தவிர, தன் முகத்தை அழகிய பருத்தியினாலான, இளம் வெளிர் நீல துணிகளினால் மறைத்துக் கொண்டாள். எவ்வளவு தான் வேலைப் பளு தாக்கினாலும் தனது உணவு, உடற்பயிற்சி போன்றவற்றால் அவள் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்வாக வைத்திருக்க விரும்புவாள். அதற்கு மேல் கிரீஸுக்கு ஹனாவைப் புரிந்து கொள்ள முடியாதபடி எதுவோ தடுத்துக் கொண்டே தான் இருந்தது. அவளது கவனம் முழுவதும் வேலையிலும், தன்னோடு வேலை பார்பவர்களுடன் பேச முடிந்த வேளைகளில் பேசி, அவர்களைப் பற்றி நல்ல முறையில் அறிந்து கொள்வதிலுமே இருந்ததை அவன் கவனிக்கத் தவறவில்லை. என்னதான் அவனுடன் சிரித்துப் பேசினாலும், ஒரு எல்லைக்கு மேல் அவள் அவனுடன் நெருக்கமாகவில்லை. அவனுக்குத்தான் அவள் மீதிருந்த அன்பு அதற்குள்ளாக பேரன்பாகியிருந்தது. ஹனா அவனது பகுதிக்கு மாற்றலாகி வந்த காலப்பகுதியில், சோம்பேறி மன்னர்கள் பலர், உற்பத்தி குறைவு, ஊதியச் செலவுக்குத் தேவையான வருமானம் பற்றாமை போன்ற தொழிற்சாலை விதிகளைக் காரணமாக்கி வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். புதிய ஊழியர்கள் வேலைக்கமர்த்தப்பட கிறிஸ் அவர்களைத் திறம்பட பயிற்றுவித்ததில் , சில மாதங்களில் தொழிற்சாலையின் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியது. அவனுக்கு உதவியாக இன்னும் ஒரு சிலரும் வேலைக்கமர்த்தப்பட்டனர். சில ஆண்டுகளின் முன்னர் பழைய நிறுவனர் உயிரோடிருந்த காலத்தில் சுவாச நோய்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை மூலப்பொருட்கள் கொண்ட மருந்துகளையும் அவற்றை பாதுகாப்பதற்கான மேலுறைகளையும் தயாரிப்பதில் பெயர் எடுத்த தொழிற்சாலை அது. ஹனாவும் திறம்பட இயங்கி, பல அனுகூலங்கள் ஏற்பட்டதில் தொழிற்சாலையின் நீண்ட கால நற்பெயர் மீண்டும் இப்போது தக்க வைக்கப்பட்டது. ஒரு நாள் வழமை போல தன்னுடன் மதிய இடைவேளைக்கு உணவருந்த வந்தவளது நடவடிக்கைகள் சிறிது விசித்திரமானதாக இருந்ததை அவன் உணர்ந்தான். "நான் நாளையிலிருந்து வேலைக்கு வரப்போவதில்லை, எனது குடும்பத்தில் அவசரத் தேவை ஒன்று தோன்றியுள்ளது. அதை நான் தான் சரி செய்ய வேண்டிய நிலையில் உள்ளேன். மீண்டும் வேலைக்கு வருவதா இல்லையா என முடிவு செய்யவில்லை. உன்னுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!" மிகத்திடமாகப் பேசியவளை கிறிஸ் சொல்வதறியாது வெறித்துப் பார்க்கையில், ஹனா சட்டென எழும்பி அவனைப் பார்த்தபடியே அவனிடமிருந்து விலகிச் சென்றாள். சொல்லத் துடித்த வார்த்தைகளும் சொல்லப்படாமலே அவன் நெஞ்சில் புதைந்து போயின. ஹனாவைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. அவன் அவளைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்து தோற்றுப் போனான். அவள் போய் நெடு நேரமாகியும் அவள் எப்போதும் பாவிக்கும், அந்த இயற்கை மூலப்பொருட்களால் செய்த அந்த மிக மிருதுவான வாசனைதிரவியம் மட்டும் அவனை விட்டுப் போகாமல், அவன் சுவாசத்தில் ஒன்றாகக் கலந்து கொண்டது. அந்த தனித்துவமான வாசனையை அவன் இனி நுகரப்போவதில்லை. அன்று தான் அவன் ஹனாவை இறுதியாகப் பார்த்தது. இப்போது மிகவும் துப்பரவாக , பளிச்சென்றிருந்த அந்த அலுவலகத்தின் மூலையிலிருந்த மேசையில் , யாரோ கிரீஸும் அவனது முகாமைத்துவ அதிகாரியும் வருவது தெரிந்து அவசர அவசரமாக உணவு அருந்திய குறையில் உணவைப் பாதியில் விட்டுவிட்டு, மறைந்து விட்ட தோரணை தெரிந்தது. இன்னுமொரு சிறியதோர் அறையினுள்ளே போய் அறைக்கதவை தாளிடும் வசதி வாய்ந்த அலுவலகம் அது. அங்கு மேலதிகாரிகள் போய் வருவதை அவன் முன்பொரு தடவை பார்த்திருக்கிறான். மேசை மேல் விடப்பட்ட மீந்து போன உணவை இன்னுமொருமுறை அவன் கண்கள் விரைவாக மீண்டும் ஒருமுறை மொய்த்தன. அங்கு ஒரு தட்டில் ஸ்ரோபெரி பழங்கள் பாதியாக வெட்டப்பட்டு, நுரைத்த பால் (single cream) விடப்பட்டிருக்க இன்னுமொரு தட்டில் பச்சை மரக்கறிகளும் வறுத்த மாமிசத்துண்டுகளும் வைக்கப்பட்டிருந்தன. புதினா இலைகள் அந்த தேனீர் குவளையுள் மிதந்து கொண்டிருந்தன. அவனுக்கு மிகப்பரிச்சயமான அந்த நீல நிறப்பிடி கொண்ட கத்தியும் நீல நிற முள்ளுக்கரண்டியும் அந்த உணவுத்தட்டில் உணவை அருந்தி முடித்த களைப்புடன், கழுவுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தன. உணவை அருந்தியவரின் நாற்காலியில் வெளிர் நீல பருத்தியினால் நெய்த ஒரு முகப்போர்வைத் துண்டு ஒன்று அனாயாசமாய் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது. போதாக்குறைக்கு அதிமதுர இனிப்புகள் நிரம்பிய ஒரு பளிங்கு வகைக் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட புட்டி ஒன்றும் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. அவன் நாசியில் மீண்டும் ஒருமுறை அந்த தனித்தன்மையுடன் கூடிய இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியம் நுழைந்து, அவன் இதயத்தில் ஒரு கீறலைத் தந்தது. கிரிஸ் தனது பணி உயர்வுக்கான கடிதத்தை இறுகப் பிடித்தபடி ஹனாவுடைய அருகாமை தந்த உணர்வுகளின் கலவையில் குளித்தபடியே வெளியேறினான்.
  1 point
 11. விட்டால் தலைவருக்கே இராணுவ நகர்வு பற்றி பாடம் எடுப்பார் போல நாதம். சும்மா நீங்கள் நினைப்பது போல யாழ்பாணத்தை கைப்பற்றும் வாய்ப்பு இருந்தும் புலிகள் வாழாது இருக்கவில்லை. மண்டைதீவிலும் கொழும்பு துறையிலும் சில அவதானிப்பு தாக்குதலை செய்து பார்த்து அதன் பிரதிபலனை கணிப்பிட்டும், அப்போது இருந்த ஆளணி, வழங்கல் நிலைமைகள், இந்திய அளுத்தத்தை வைத்தும் எடுக்கப்பட்ட மிக சரியான முடிவு அது. புலிகள் அந்த முடிவு எடுக்க தனியே இந்திய எச்சரிக்கை மட்டும் காரணம் அல்ல. இந்திய எச்சரிக்கைக்கு பயந்திருந்தால் புலிகள் 86 இலேயே மூட்டை கட்டி இருப்பார்கள். அப்போ புலிகள் யாழ்பாணத்தை தாக்கி இருந்தால் - 2ம் உலக போரில் ஹிட்லர் செய்ததை போல ஒரே நேரத்தில் பல் போர்முனைகளை திறந்த தவறு போல அது அமைந்திருக்கும். மேலும் நீங்கள் சொல்லும் கருத்தே ஏறுக்கு மாறாக உள்ளது. தலிபான் கெரில்லா பாணியில் இருந்ததால் வென்றது என்கிறீர்கள், ஆனால் ஓயாத அலைகள் போன்ற மரபு போர் செய்து யாழை புலிகள் மீட்டிருக்க வேண்டும் என்கிறீர்கள். என்ன செய்வது, கேடு கெட்ட தலிபான்களோடு ஒப்பிட்டு, யாழ்களத்தில் புலிகளை கீழ்மை செய்யும் நிலையில் இப்போ நாமிருக்கிறோம். *** பிகு இப்போ எல்லாம் வாழைபழத்தில் இல்லாமல் ஊசியை நேரடியாகவே ஏத்தும் தைரியம் வந்து விட்டதோ? அப்படியா சிங்கம், அப்ப சுருக்கா முடிச்சி வக்கிய டெக்னிக்க நீங்க ஏன் செல்லி குடுக்கல்ல? போராட்டம் என்பது கால அளவிடை நிர்ணயித்து ஆரம்பிப்பதில்லை. தலிபான்களுக்கு பாகிஸ்தான், ரஷ்யா, சீனா என ஒரு பெரும் உலக சக்தியே பின்னால் இருக்கிறது, அப்படி இருந்தும் அவர்களால் புலிகள் போல ஒரு தீரமிகு, தியாக மிகு, நியாயமிகு போராட்டத்தை செய்ய முடியவில்லை. எதை, எதோடு ஒப்பிடுவது என்ற விவஸ்தை வேணாம்? ***
  1 point
 12. ஒரு தமிழ் பொதுமகனால் எழுதிய அண்மையில் படித்த கவிதைகள் தமிழீழ விடுதலை என்றார்கள் பாட்டாளி வர்க்க புரட்சி என்றார்கள் பெண் விடுதலை என்றார்கள் சாதி, மத பேதம் இனி இல்லை என்றார்கள் அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்து எறிவோம் என்றார்கள் தொழிலாளர் உரிமை காப்போம் என்றார்கள் கம்மியுனிஸம், மாக்ஸிஸம், சோசலிசம் என்னென்னமோ சொன்னார்கள் தமிழீழம் தாகம் என்றார்கள் எங்களுக்கு ஆயுத மோகமில்லை எதிரி தான் தூக்க வைத்தான் என்றார்கள் யாருக்கு எதிராகவென்றது தான் புரியவில்லை? வங்கிகளெல்லாம் கொள்ளையிட்டார்கள் ஏழை மக்கள் சேமித்து வைத்த பணத்தையும், நகைகளையும் ஆயுத முனையில் தன்னினத்தையே அடக்குமுறை செய்தார்கள் உட்கொலை செய்தார்கள், வெளிக் கொலை செய்தார்கள் ஊருக்குள் கொலை செய்தார்கள் துரோகிகளையும் கொன்றார்கள் தியாகிகளையும் கொன்றார்கள் குற்றம் என்று சொல்வதா? தமிழன் வரலாறு என்று சொல்வதா? விதியை நோவதா? மதியை கடிவதா? ஒரு விரல் காட்டி நிற்கிறோம் உலகம் குற்றவாளியென்று மீதி மூன்று விரலுக்கும் பதில் சொல்ல திராணியற்று!!! —————— எனது கருத்து உனக்கு எதிர்க்கருத்து உனது கருத்து எனக்கு எதிர்க்கருத்து நமது கருத்து அவனுக்கு எதிர்க்கருத்து அவனது கருத்து நமக்கு எதிர்க்கருத்து உண்மையில் இங்கே எதிர்க்கருத்து என்று எதுவுமேயில்லை எல்லா கருத்துமே அவரவர் கருத்து கருத்தை கருத்தால் மறுதலிக்கலாம் அல்லது கருதாமல் செல்லலாம் கருத்திலெடுக்காமலும் விடலாம் எதிர்க்கருத்தென்று சொல்லியே நம் இனத்தில் எத்தனை கல்வியாளர்களும், புத்தி ஜீவிகளும் கொலை செய்யப்பட்டார்கள் அவரவர் கருத்தினை மதித்திருந்தால் அளப்பரிய இழப்பை சந்தித்திராது நம் இனம்… ————————— வரலாற்றின் முழுமையும் யாருக்கும் தெரியாது ஒவ்வொருவருக்கும் ஒரு சில தெரியாமல் இருக்கலாம்...... எனக்கு நினைவு தெரிந்த நாளில் தான் தமிழீழம் கேட்டார்கள் அதுவும் எங்கள் ஊரில் என் கண்முன்னாலேயே தான்..... ஆயுதப் போராட்டமும் அதே போல எனக்கு அறிவு தெரிந்த நாளில் தான் ஆரம்பிக்கப் பட்டது.... சிவகுமாரன், இன்பம், செல்வம், உமாமகேஸ்வரன், பிரபாகரன், சுந்தரம் சந்ததியார், குட்டிமணி, தக்கதுரை,சபாரத்தினம், பரமதேவா, ஒபரோய்தேவன், பத்மநாபா, டக்லஸ் தேவானந்தா........ இப்படி பல பேர் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள் ஆனால் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து இயங்கவில்லை பிரிவினையில் தான் எங்கள் விடுதலையின் ஆரம்பமே........ தலைமைப் போட்டியிலும் தனிமனித வழிபாட்டிலும் பல உயிர்கள் பலியெடுக்கப் பட்டன பலி கொடுக்கப் பட்டன ஆரம்பம் முதலே....... எதிரியோ, துரோகியோ எங்களை வெல்லவில்லை நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக எங்களை அழித்துக் கொண்டோம்........ இதை சுட்டிக் காட்டியவர்களையும், அறிவு ஜீவிகளையும் அழித்துக் கொண்டோம்... கொல்வதே வீரமெனக் கண்டோம் கொல்வதால் மட்டுமே வெற்றி கிட்டுமென நம்பினோம்...... காலத்தின் தீர்ப்புகளுக்கு கட்டுப்பட மறுத்தோம் வீரம், வீரம் என்று வெறுவாய் சப்புகிறோம் விவேகம் மறந்தவர்களாய்........
  1 point
 13. போனவருடம் பரவல் இலங்கையில் நடந்தபோது நாங்க பிழையான தகவலை சொல்கிறார்கள் என்று சொல்ல வரிந்துகட்டிக்கொண்டு அப்படி நடக்க சான்ஸ் இல்லை அப்படி இப்படி கோத்தா அரசுக்கு சார்பாக கதைகளை அவிட்டு விட்டார் அவர் எழுதியது இப்பவும் இருக்கு . பிழையான தகவலையும் தேவையற்ற உசுப்பேத்தலும் புலிகளை அழித்த எமக்கு கொர்னோவை அழிப்பது பெரிய வேலைகிடையாது பிளஸ் புத்த பிரான் கைவிடார் மந்திரித்த தண்ணீர் இப்படியானது உருட்டல் சுருட்டலுக்கும் சிங்களவர் மயங்கி சுகாதர திணைக்களம் கரடியாக கத்தியும் யாரும் காது கொடுத்து கேட்கவில்லை விளைவு இன்றுள்ள நிலைமை மேலும் மேலும் தப்பு பண்ணுகிறார்கள் குறைத்து காட்டுவதன் மூலம் அஜாக்கிரதை உணர்வே மேலும் வளரும் என்பதை உணர மறுக்கிறார்கள் .
  1 point
 14. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் எனப் புரியவில்லை! என்ன தான் பலமாக இருந்தாலும், இந்தியாவை திரும்பவும் சீண்டி விட்டு சிங்களவர்கள் பக்கம் தள்ள புலிகள் விரும்பவில்லை! எனவே கோடு போட்ட இடத்தில் நின்றார்கள், இதில் மாயம், மர்மம் என்றெல்லாம் எதுவும் இல்லை! உங்கள் கைரேகை போல தெளிவான விடயம்!
  1 point
 15. உண்மையில் இதன் முழு விபரமும் தலைவருக்கு மட்டுமே தெரியும். ஏனெனில் பொதுமக்கள் மற்றும் முக்கிய தளபதிகள் உட்பட அனைவரது எதிர்பார்ப்பும் வடபகுதி முழுமையாக விழுந்து விடும் என்பது தான். ஏனெனில் களநிலை கல்லால் எறிந்து முன்னேறும் நிலையில் தான் இருந்தது?? தலைவர் ஒருவர் மட்டுமே நிதானமாக தூரநோக்கோடு உத்தரவு தர மறுத்ததாக தான் சொல்லப்பட்டது. என்ன காரணம் என்ன அழுத்தம்?? அவர் மட்டுமே அறிவார்.
  1 point
 16. சரியாகக் குறிப்பிட்டிருக்கிறீங்க. இந்த ரத்தினச் சுருக்கம் சிலருக்கு புரிய வாய்ப்பில்லை. அவர்கள் புலிகள் சிறுவர்களை பிடிச்சு போராட்டம் நடத்தினர் என்று மட்டும் எமது விடுதலைப் போராட்டத்தையே பிள்ளை பிடி போராட்டமாகச் சித்தரிக்க ஆரம்பித்தவர்கள் 2009 மே பின். 2009 மே பின் பிறப்பெடுத்த சிங்கள பெளத்த பேரினவாத தமிழ் விசுவாசிகளானவர்களிடம் இருந்து.. தப்பான பரப்புரைகளை.. கயிறு திரித்தல்களை தான் காண முடியும். இப்போதும்.. சொறீலங்காவில் குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் பரிந்துரைக்கப்பட்ட வயது எல்லையை கடந்தும் சினோபாம் தான் போடப்படுகிறது. இந்தச் செய்தியில் எந்த தவறும் கிடையாது. சிங்களப் பகுதிகளில் வேறு தடுப்பூசிகளுக்கான தெரிவுக்கு வழி இருக்கிறது. இது ஒரு பாரபட்சமான நடைமுறையாகும். இதனை வேறு அமைப்புக்களும் கண்டித்துள்ளன. மேலும்.. உலகெங்கும் கொரோனா நோயாளிகள் பயணிகளை தனிமைப்படுத்த அந்த பயணிகள்.. நோயாளிகள் வசிக்கும் வந்திறக்கும் இடங்களை அண்மித்தே தனிமைப்படுத்தல் மையங்கள் இருக்கின்றன. காரணம்.. நோய்க்காரணியின் பரவலை கட்டுப்படுத்த. ஆனால் சொறீலங்காவில் மட்டும் தான் சிங்கள பகுதிகளில் இருக்கும் நோயாளிகளை தமிழர் பகுதிகளுக்கு அனுப்பி தனிமைப்படுத்தினம். தொற்றுள்ள உடலங்களை புதைக்கிறார்கள். இராணுவ முகாம்கள் நாடெங்கும் இருக்க.. தமிழர் பகுதிகளில் தான் கொரோனா தனிமைப்படுத்தல் மையங்களை இராணுவ முகாம் அல்லது இராணுவ ஆக்கிரமிப்பு மையங்களில் உள்ள கொட்டல்களில் மக்களின் விருப்புக்கு எதிராக செய்தனர். இதனை அலை1 மற்றும் 2 இல் தமிழ் பகுதிகளில் மக்களே பகிரங்கமாக வீதிக்கு இறங்கி எதிர்த்தனர். அப்போது தமிழர் பகுதிகளில் கொரோனா தொற்று வெகு குறைவு. இதனை சொறீலங்கா இராணுவத் தளபதியே வடக்கு மக்கள் அலை 1 நல்ல ஒத்துழைப்பை வழங்கியதாகவும் இப்போ இல்லை என்றும் குறைப்பட்டுக் கொண்டார். ஆனால் தமிழர் பகுதிக்குள் கொரோனாவை கடத்தி வந்தவர்களில் சொறீலங்கா இராணுவத்தின் செயற்பாடுகளும்... தனிமைப்படுத்தல் மையங்களை இயங்க வைத்ததும்.. பொருண்மிய நோக்கம் மட்டுமே கருத்திற்கொண்டு.. தற்போதும் கூட மாகாணங்களுக்கிடையேயான போக்கு வரத்து தடை இருக்க.. புகையிரதங்கள் வடக்கு நோக்கி இயக்கப்படுகின்றன. இராணுவம் சிங்கள பெளத்த சுற்றுலாப் பயணிகள்.. அதிகளவில் அதில் பணிக்கிறதுடன்... இவர்களில் பலர் கொரோனா தொற்றுக்குரிய பரிசோதனை கூடச் செய்து கொண்டதில்லை என்பது குறிப்பித்தக்கது.. இவை..வடக்கு கிழக்கில் தொற்று அதிகரிப்பு...வகித்த பங்களிப்பை திட்டமிட்டு மறைத்துவிட்டனர். .. மறைத்து வருவதோடு.. சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டியது போல்... கொரோனா தடுப்பு சட்ட விதிகள்..இராணுவ மயப்படுத்தப்பட்டு.. மக்களை.. பழிவாங்கவும்.. அரசுக்கு எதிரான கருத்தோட்டம் உள்ளவர்களை பழிவாங்கவும் பாவிக்கப்படுவதையும் காணலாம். இதையும் சிலர் பூசி மொழுகி இல்லாத்துக்கும் பச்சப் பொய் சாயம் பூசி.. சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட மனித உரிமை அமைப்புக்களின் குற்றச்சாட்டுக்களை கூட மறுதலிக்க வல்ல சிங்கள பெளத்த பேரினவாத அரசின் பாரபட்சத்துக்கு ஒத்தூதி வருகின்றனர். இது இவர்களின் வழமையாகிவிட்டது இன்று. இவர்களைப் பொறுத்தவரை.. தமது கருத்தை யாழில் திணிப்பதும்.. அதன் மூலம்.. தம்மை சிறந்த அறிவாளி என்று பிரமையை உருவாக்கிக் கொள்வது... ஆகும். மக்கள்.. மக்கள் நலன் குறித்த எந்த எண்ணமும் இல்லை. இல்லாவிட்டால்.. அஸ்ராசெனிக்காவில் டி என் ஏ அதிகம் இருப்பதால்.. அது குருதி உறைதலுக்கு இட்டுச் செல்கிறது என்ற அஸ்ராசெனிக்கா தொடர்பான சொந்த தவறான விளக்கத்தை சினோபாம் வினைத்திறன் தொடர்பான கருத்தில் பதிய வேண்டிய அவசியம் என்ன..??! எல்லா வக்சீன்களும் 100 சதவீதம் பாதுகாப்பானவை அல்ல. மேலும் செய்யப்பட்ட ஆய்வுகளுக்கு ஏற்பவே தான் வினைத்திறன் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சினோபாம் உட்பட சீன வக்சீன்கள் தொடர்பில் ஆற்றப்பட்ட ஆய்வுகள் தொடர்பில் சீனா உண்மையான தகவல்களை தான் பரிமாறிக் கொண்டதா என்ற சந்தேகமும் நிலவி வரும் நிலையில்.. சீன வக்சீனை கிட்டத்தட்ட எல்லா மேற்கு நாடுகளும் முற்றாகப் புறக்கணித்து விட்டுள்ளன. இதனடிப்படையில் சீன வக்சீன்கள் தொடர்பான வினைத்திறன் என்பது பலத்த சந்தேகத்துக்குரிய ஒன்று என்பதை அதனை மக்களிடம் திணிக்க முன் அந்த மக்கள் முன் சொல்ல வேண்டும். இந்த விடயத்தில் மக்கள் தமது உடலுக்குள் செல்லும் வக்சீன் தொடர்பில் தகுந்த அறிவூட்டப்படுவதோடு.. இயன்ற வரை.. சரியான தகவல் வழங்கப்பட்டு... அவை வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளப்படுதல் அவசியமாகும். ஏனெனில்.. ஒவ்வாத மக்களுக்கு ஒவ்வக் கூடியதை தெரிவு செய்யும் உரிமை உண்டு. அதனை சொறீலங்காவில் அரசும்.. இராணுவமும் முடிவு செய்யக் கூடாது. மருத்துவர்களும்.. மருத்துவ சேவை அமைப்புக்களும்.. விஞ்ஞான பூர்வ ஆய்வுகள்.. பரிசோதனைகள்.. தரவு பகுப்பாய்வுகள் மூலம் தீர்மானிக்க வேண்டும். இதுதான் இங்கு வேண்டப்படும் பகிரப்படும் முக்கிய கருத்துக்களின் தொனிப்பொருளாகும். மீரா நீங்கள் அதனை ரத்தினச் சுருக்கமாக்கி உள்ளீர்கள்.
  1 point
 17. ஓயாத அலை சண்டையில் நின்றவர் யுத்த நிறுத்த காலத்தில் வந்தவர் சொன்னது நானும் இதே கேள்வியை கேட்டன் அதற்கு அண்ணை சொன்னவராம் அடித்து பிடிப்பது சுலபா இருக்கும் ஆனால் இடத்தை தக்கவைக்க போராளிகள் அதிகம் வேண்டும் அந்த நேரத்தில் போராளிகள் ஐவரின் வேலையை ஒருவர் செய்திருந்தார்கள் என பாராட்டியும் இருந்தாராம். எல்லோரும் சண்டை சண்டை என விலகி வந்துவிட்டு இப்ப வாய் ஊறுகிறோம் நான் உட்பட
  1 point
 18. புலிகளுக்கு வகுப்பு எடுத்தேன் என்கிறார் அந்த கால கட்ட அவரின் அறிக்கைகளை தேடிக்கொண்டு உள்ளேன் . இங்கு அவரின் கருத்துக்களுக்கு கருத்து வைப்பதாயின் அவரின் சிங்கள நண்பர்கள் முஸ்லிலிம் நண்பர்கள் யார் என்று புரிந்துகொண்டாள் காணும். அத்துடன் பத்து வருடம் போனபின் இப்ப இவர் இப்படி ஒரு கதை சொல்கிறார் அதுவும் தமிழ் எழுத்துப்பிழைகளை பற்றி கவலைப்படாத ஒரு இணையத்தில் . புலியை சாட்டி பணம் அடித்தவர்களும் ஓரிருமுறை ஊர் போய் வந்தபின் தவறானவர்களினால் நடந்த ஒரு சில ஆதாரமும் இல்லாத கதைகளை சொல்லி தமிழ்மக்கள் புலிகளினால் வஞ்சிக்கபட்டுவிட்டனர் அய்யோ மனிதவுரிமை மீறல் நடந்துள்ளது என்று சொல்லி நாங்கள் வைத்து இருந்த பணத்தை அவர்களுக்கே முழுக்க சிலவளித்து விட்டோம் என்று சொல்லி கணக்கு முடித்தவர்களுக்கு உண்டாம் மேலும் கணக்கு பிரச்சனையில் இருந்து தப்ப முழுநேர புலி எதிர்ப்பு வாதியாக நடிப்பவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு என்பதை சமீபத்தில் தெரிந்து கொண்டேன் . இப்படி இருக்கையில் நான் இங்கு தேடிக்கருத்து வைப்பது நேர விடயம் .அந்த நேரத்துக்கு இனி அங்கு வடகிழக்கில் கொரனோவால் வடகிழக்கில் மறைமுகமாக பாதிக்கப்பட்டு அடுத்தவேளை உணவுக்கு மறுபடியும் யோசிக்கும் நிலைக்கு அங்கிருப்பவர்கள் வரப்போகிறார்கள் அவர்களுக்கு எப்படி உதவி செய்வது என்பதை சிந்தித்தால் நல்லது என்று நினைக்கிறன் . விலைவாசி லண்டன் கனடா விலைகளுக்கு கிட்டவாக வந்துவிட்டது அங்கு .
  1 point
 19. பட்டியலின மக்கள்மீது கொலை, தாக்குதல்கள்,ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்படுவதாக வலைதளங்களில் பாட்டாளி மக்கள் கட்சிமீதும் அதன் தலைவர் ராமதாசின்மீதும் அவர் சார்ந்த வன்னிய சமூகத்தின் மீதும் மிக பரவலான கண்டனங்கள் கருத்துக்கள் , அவர்கள்மீது எந்தவகையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கபடுவதில்லை குற்றச்சாட்டுக்களும் எப்போதும் உலாவருகின்றன. காயத்திரி ரகுராம் பட்டியலின மக்களை மறைமுகமாக மையபடுத்தி சேரியில இருக்கிறவனுக பழக்க வழக்கங்கள் என்ற வார்த்தை பேசி திட்டியபோது இதே வேகத்தில் சட்டம் செயல்பட்டதா தெரியவில்லை. எஸ்வி சேகரும் சர்ச்சையான கருத்துக்கள் தெரிவித்து காவல்துறையால் தேடபடும்போது மீரா மிதுன் போலவே என்னை யாரும் கைது செய்ய முடியாது என்று திமிராக தலைமறைவாக இருந்தபடி அறிக்கைவிட்டார், காவல்துறை தேடுது என்றார்கள் பின்பு அவர் பொலிஸ்காரருடன் அவர்கள் வாகனத்தில் சுற்றி திரிந்த படம் எல்லாம் வந்தது அதுக்கும் ஒரு நடவடிக்கை இல்லை. மீராமிதுன் ஒண்டுக்கும் பிரயோசனம் இல்லாத ஒரு ஒண்டரையணா கேசு என்பதால் உடனடி நடவடிக்கை பாய்ந்திருக்கிறது, இந்தியாவில் குற்றங்களை யார் புரிகிறார்கள் என்பதை வைத்தே நீதி தன் கடமையை உடனடியாக செய்யும். மீராமிதுன் பேசுற பேச்சுக்கும் விடுற வீடியோ அறிக்கைகளுக்கும் ஐஞ்சுரூபா எலிபாசணம்தான் வாங்கி வைக்கோணும் அவ்வளவு அநியாயம். தமிழக சில செய்திகள் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் பற்றி யாழில் செய்திபகிர அனுமதி மறுப்பு உண்டு, அப்படியிருந்தும் மீரா யாழில் முக்கியத்துவம் பெறுகிறார் என்றால், தலைவி மீராமிதுன் சும்மா இல்ல வேற லெவல்.
  1 point
 20. இது தற்போதைய நிலவரம்.. ஆனால் உழைக்கிற பணத்தை ஊதாரியாகவும், ஊரில் வந்து விலாசம் காட்டாமலும் இருக்கவேண்டும் என தம்பர் கூறுவாரா?
  1 point
 21. கொரில்லா குழுவாக இருந்ததால், வல்லரசுகளே மண்டியிட்டு ஓட வேண்டிய நிலை. ஓயாத அலைகளை தொடர்ந்து, வன்னி, துடைத்தெறியப்பட்டு, ஓமந்தை, வவவுனியா எல்லை வரை போன புலிகள், வடக்கே திரும்பி யாழ்பாணத்தையும் பிடித்திருந்தால் கதையே வேற..... இந்தியாவின் எச்சரிக்கையினை கணக்கில் எடுக்காமல் இருந்திருந்தால்...... இன்று கதை வேறாக இருந்திருக்கும். எல்லாம் தலையெழுத்து தான்.
  1 point
 22. கோவில் திருவிழாக்களும் திருமண நிகழ்வுகளும் அரசாங்க ஏற்பாட்டில் தானே நடக்கினறன். அங்கே கூடும் பக்தர்களையும் மக்களையும் அரச செலவில் தானே அழைத்து வருகின்றார்கள் . கோவிட் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாட்டில் உங்கள் பங்கு எந்த நிலைமையில் இருந்தது... இருக்கின்றது.
  1 point
 23. சிந்தாமல் சிதறாமல் உதிராமல் ஒரு மீன் பொரியல்........! டிஸ்கி: காப்பு டிசைன் அழகோ அழகு.....!
  1 point
 24. உடம்பில், மனதில், மூளை (அவற்றின் பகுதிகள் கூட) தொழிற்படுவது - use it or loose it என்ற அடிப்படியில். பாலியல் ஈடுபாடு கூட இதில் விதி விலக்காக இல்லை என்று நினைக்கிறன். உ.ம். முறிவுக்கு நீண்ட நாள் தொடர்ச்சியாக பற்று போட்டிருந்தால், பற்றை அகற்றியவுடன் முறிவடைந்த பகுதி ஏதோ தேவை இல்லாத, புதிதாக தோன்றிய பகுதியான உணர்வும் , அதன் அசைவை மாற்ற அங்ககங்களின் அசைவோடு ஒருங்கு படுத்துவதற்கு, ஓரளவு காலா இடைவெளியும் தேவைப்படும். ஒரே தொழிலில், ஒரே பொறுப்பில் இருக்கும் போது, இதற்கான வாய்ப்புகள் ஏதோ ஒரு வகையில் அதிகம் என்று நினைக்கிறன்.
  1 point
 25. தம்பர் உண்மையா ஊருக்கு வந்து போயிருக்கிறார்.
  1 point
 26. ராஜபக்சா குடும்பத்தினர் இந்த செய்தியை கேட்டவுடன் தலைமறைவு ஆகிவிட்டனர்....என்று சம்ப.ந்தன் அறிக்கை.....சிறிதரன் பேட்டி....
  1 point
 27. Brian Green என்ற பௌதீகவியலாளரின் "Until the End of time" என்ற புத்தகம் நான் அண்மையில் வாசித்த அருமையான நூல்களுள் ஒன்று. கடவுள் நம்பிக்கை, அல்லது மத நம்பிக்கை எவ்வாறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களைக் காத்து, கூர்ப்பிற்கு வழி வகுத்தது என்று விளக்கியிருக்கிறார். ஒரு மனிதக் கூட்டம் கடவுள் என்பதை நம்பி ஒரு குகைக்குள் அல்லது மறைவிடத்தில் கூடிப் பாதுகாப்பாக இருக்க, அந்த நம்பிக்கை இல்லாத தனியன்கள் வெளியே சுற்றப் போய் விலங்குகள் அல்லது இயற்கை இடரினால் இறந்து போகின்றன. ஒரு கட்டத்தில் கடவுள் நம்பிக்கை இருக்கிற மனிதர்களுக்குத் தான் பாதுகாப்பான வாழ்வு என்ற புரிதல் வந்த போது, அடுத்த தலைமுறைகள் எல்லாமே கடவுள் நம்பிக்கையோடு வளரும் எச்சங்களாக ஆகிப் போயினவாம்! இப்படித் தான் கடவுள் நம்பிக்கை எம்மிடையே கூர்ப்போடு சேர்ந்து வளர்ந்திருக்கலாம் என்கிறார். தற்போது தலைகீழ் நிலைமை: கடவுள்/மத நம்பிக்கை மிகுதியானோர் மொக்குத் தனமாக வெளியே போய் கொரனாவால் பலியாகிப் போக, வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்போர் தப்பி , அதனால் அடுத்த தலைமுறையை உருவாக்கப் போகின்றனர். "கடவுள் இருக்கிறாரா தெரியாது, ஆனால் கடவுள் உலகின் தோற்றத்திற்கும் இயக்கத்திற்கும் அவசியமில்லை!" என்ற ஸ்ரிபன் ஹாவ்கின்சின் கருத்து இப்போது மிகவும் பொருந்துகிறது!
  1 point
 28. யார், எங்கு வாழ்கிறார்கள் என்பதில் இல்லை பிரச்சனை. பிரச்சனையே பொருத்தமில்லா இரட்டை வேஷத்திற்தான். அப்பப்ப மாத்தி, மாத்தி பேசி மாட்டுப்பட்டு முழிக்க வேண்டியுள்ளது. ஆனாலும் சமாளித்து விடுவோமில்ல!
  1 point
 29. அப்ப வாசித்த விடயத்தைப் பற்றிக் கருத்தொன்றும் இல்லைப் போல! இருக்கோணும் என்று கட்டாயமில்லை, சும்மா கேட்டனான்!
  1 point
 30. நம்பிக்கை என்பது ஒரு பலமான சக்தி, சிலர் அதற்காக உயிரையும் கொடுக்கிறார்கள், படித்தவர்கள் தடுப்பூசியினை சந்தேகக்கண் கொண்டு பார்க்கிறார்கள், இலங்கையைப்பூர்வீமாகக்கொண்ட அவுஸ்திரேலியாவில் வளர்ந்து படித்து மருத்துவத்துறையில் பட்டம் பெற்றவர, முண்ணனி வைத்தியசாலையில் பணிபுரிகிறார் (செவிலித்தாய்), கோவிட் தடுப்பூசி போடவில்லை (அதற்கு பல காரணங்களை கூறினார்) ,அவர்களது வைத்தியசாலையில் முகாமையாளர் மட்டுமே தடுப்பூசி போட்டதாகக்கூறினார், அத்தியாவசிய சேவை செய்பவர்கள் தடுப்பூசி போடாமல் விடுவதால் சமூக அளவில் ஏற்படும் தீமைகளை புரிந்து கொள்ளவில்லை. கோவிட் பரவல் தீவிரமானபின் அண்மையில் தொலைபேசியில் தொடர்புகொண்டு தடுப்பூசி பெற்றுக்கொண்டீர்களா என்று கேட்டபோது ஆம் என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். மானில அரசுகள் அத்தியாவசிய சேவையாளர்களுக்கு தடுப்பூசி அவசியமாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது ஆனால் தேசிய அரசு அதற்கு மறுக்கிறது. கோவிட் தடுப்பூசி போடுவதால் போடுபவர்க்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று தெரியாது, அதனால்தான் நான் யாருக்கும் தடுப்பூசி போடுங்கள் என்று சிபார்சு செய்யவில்லை, ஆனால் நான் தடுப்பூசி பெற்றுக்கொண்டேன், அது எனது விருப்பம். அதே மாதிரி தடுப்பூசி போட வெண்டாம் என கூறுவதற்கும் தனிமனித அதிகாரமில்லை. குறிப்பாக பாமரமக்களை இந்த படித்தவர்கள் குழப்பிவிதிறார்கள். ஜனநாயகம் என்பது எனது கைத்தடி உனது மூக்கைத்தொடாதவரைதான்.
  1 point
 31. கைதும்... அதன் பின்னணியும், சிறையில் நடந்த... மறக்க முடியாத சம்பவங்கள்.
  1 point
 32. அண்ணன் வேலுமணி ஒரு சொக்கத்தங்கம். இது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை.
  1 point
 33. நல்லூர் கந்தசுவாமி ஆலய முதலாம் நாள் மாலை உற்சவம் #nallurlk #nallur #நல்லூர் #நல்லூர்_கோவில் #Nallur_Kandaswamy_kovil #nallur_Kandaswamy_Temple #நல்லூரான் #lo #lka #நல்லூர்_கந்தசுவாமி_ஆலயம் #nalluran #நல்லையம்பதி நல்லூர் கந்தசுவாமி ஆலய இரண்டாம் நாள் மாலை உற்சவம் Nallur Kandaswamy Kovil 2nd Day Evening Festival #nallurlk #nallur #நல்லூர் #நல்லூர்_கோவில் #Nallur_Kandaswamy_kovil #nallur_Kandaswamy_Temple #நல்லூரான் #lo #lka #நல்லூர்_கந்தசுவாமி_ஆலயம் #nalluran #நல்லையம்பதி
  1 point
 34. டோய் இவர் தமிழீழத்தைச் சேர்ந்தவரோ..; ஒரு கவிஞரா ... நான் கூட இவ்வளவு நாளும் இவர் திரைப்படத்தில் நடிக்கும் ஒரு நடிகர் என்றல்லவா நினைத்திருந்தேன்... இவருக்கு இவ்வளவு பின்னணி இருப்பது இப்போதுதான் தெரியும். இவர் தொடர்பாக நான் தேடியபோது ஐயா யாழிலும் உள்ளார்... @ poet '---------- கருத்து அடுத்து
  1 point
 35. இது இலங்கைக்கு ஒன்றும் புதிதல்ல வசி. காலாகாலமாக ஒவ்வொரு விடயத்திலும் அரசுகள் பச்சை பொய்யை சொல்லியே வந்துள்ளன. ஆனால் சில விடயங்களை மூடி மறைக்க முடியாது. ஆனால் இதை வைத்து மக்களை திசை திருப்பும் முகமாக பொய் செய்திகளை பரப்புவோரும் உண்டு. உதாரணமாக யாழ்களத்யில் கொரோனா 1ம், 2ம் அலைகளின் போது இலங்கையில் நிலமை படுமோசம், மக்கள் ஆயிரகணக்கில் சாகிறார்கள் என்பது போல தகவல்கள் பரப்பபட்டது. நானும் இன்னும் பல யாழ்கள உறவுகளும் தமது தொடர்புகளை விசாரித்த போது அப்படி இல்லை என்றே பதில் வந்தது. அதை இங்கே எழுதிய போது - எம்மை இலங்கையின் ஒற்றர்கள் என்ற ரேஞ்சில் திட்டி தீர்த்தார்கள். ஆனால் இப்போ? உண்மையிலே நிலமை மோசமான போது உண்மை வெளி வருகிறதுதானே? இப்போ களுபோவில ஆஸ்பத்திரி, இராகம ஆஸ்பத்திரியில் இருந்து வரும் வீடியோ, போட்டோ போல அப்போதும் வந்திருக்க வேண்டும் அல்லவா? ஆகவே 1ம், 2ம் அலையில் இலங்கையில் நிலமை நன்றாக இருந்தது, இப்போ இல்லை என்பதுதான் உண்மை. தமிழராக பிறந்த நம் எல்லாருக்கும் இலங்கை மீது தீராத கடுப்பு உண்டு. ஆனால் அதற்க்காக எம் கற்பனையில் உதித்தவற்றை செய்தி, கருத்து என்று பரப்புவதால் எமதும், யாழ்களத்யின் நம்பகதன்மை பாதிக்குமே ஒழிய, இலங்கைக்கு இதில் எந்த நட்டமும் இல்லை. பிகு இது உங்களுக்கான கருத்து அல்ல. ஆனால் இலங்கை மீதான கடுப்பில், இலங்கைக்கு சேறடிப்பதாக நினைத்து எமக்கு நாமே ஆப்படிக்க்கும் போக்கு அதிகரிப்பதாக படுகிறது. குறிப்பாக தடுப்பூசி பற்றிய திரிகளில். அதனால் உங்கள் கருத்தை இரு வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டேன்.
  1 point
 36. சிறிய கோட்டுக்கு முன்னால் பெரிய கோடு போட்டு அசத்திட வேண்டியதுதான் மீராவையும் முருகனையும் ஒப்பிடும் அளவு அழகோ அழகு...
  1 point
 37. என்னையே… கொலை பண்ணிக்கிட்டு, செத்துடுவேன்… அதை, முதல்ல செய்…. மூ*வி.
  1 point
 38. Directed by Krishnan Panju Produced by A. V. Meiyappan, P.A.Perumal Mudaliar Written by M. Karunanidhi Starring Sivaji Ganesan Pandari Bai S. S. Rajendran S. V. Sahasranam Sriranjani Music by R.Sudarsanam Released on 17 October 1952 கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு வீண் கற்பனை யெல்லாம் மனதில் அற்புதம் என்றே மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியை
  1 point
 39. இன்று அவுஸ்ரேலியாவில் என்ன நடக்கிறது என உங்களுக்கு தெரியவில்லை.. ஏழாவது கிழமையாக NSW lockdown.. AstraZeneca பற்றி இங்கே பயமுறுத்தி வைத்திருப்பதால் எல்லோரும் Pfizerதான் போடுவோம் என இருக்கிறார்கள்.. பாதிக்கப்பட்டுள்ளது நடுத்தர மற்றும் வறிய மக்களே.. அவுஸ்ரேலியா முன்னேறிய நாடு எனக்கூறினாலும் இங்கே உள்ள அரசாங்கம் இந்த தடுப்பு ஊசி விடயத்தில் எத்தனை பிழைகள் விட்டது என்பதை இங்குள்ளவர்கள் அறிவார்கள்.. போதாக்குறைக்கு தடுப்பு ஊசி போடமாட்டோம்.. lockdown எதிர்த்து ஊர்வலம் கூட வைத்திருக்கிறார்கள் இந்த முன்னேறிய நாட்டில் வாழும் மக்கள்..ஊசியும் போடுகிறார்கள் இல்லை, lockdown restrictions ஒழுங்காக கடைப்பிடிக்கிறார்களும் இல்லை.. இந்த நிலையில் அவுஸ்ரேலியா ஒரு பிழையான உதாரணம்.. மேலும், நீங்கள் ஒன்றை கவனத்தில் கொண்டால் மிகவும் நல்லது.. இன்றைய நிலையில், இலங்கையில் இருக்கும் அதுவும் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்பவர்களின் உரிமை, சுதந்திரம் எந்த நிலையில் உள்ளது என்பதையும், சும்மாவே விதிமுறைகளை கடைப்பிடிக்காமலும், தடுப்பு ஊசி போடுவதில் தயக்கம் உள்ள இடத்தில் அது சரியில்லை.. இது பிழை.. எங்களுக்கு AstraZeneca அல்லது Pfizerஅதன் வேண்டும் என்றால் தரவிருக்கும் ஊசியை கூட தராமல் போகும் அரசாங்கமே உள்ளது.. ஒவ்வொரு முறையும் நான் எனது தந்தையுடனும் தங்கையுடனும் கதைக்கும் பொழுது “ இங்கே தரும் ஊசியை தானே போட முடியும்” என அவர்கள் கூறும் பொழுது அவர்களின் குரலில் இருக்கும் இயலாமையை என்னால் உணரமுடியும்.. அந்த சமயத்தில் நான் அவர்களிடம் இந்த ஊசி சரியில்லை என கூறமுடியுமா? எங்களின் அரசியல் தலைவர்களும் சரியில்லாது இருக்கும் பொழுது மக்கள் தங்களுக்கு கிடைக்கும் வசதிவாய்ப்புக்களிற்கேற்பவே நடக்கமுடியும்.. எத்தனை விழிப்புணர்வு நடவடிக்கைகளை செய்தும் என்ன இந்த மாமாங்கம் கோவிலில் நடந்தது என்ன? ஆலய நிர்வாகம் சரியான முறையில் நடந்திருந்தால் இந்த நிலமை வந்திருக்குமா? நல்லூரில் நாளை திருவிழாவிற்கு உபயகாரர் மட்டுமே கோயில் உட்பிரகாரத்திற்கு செல்லமுடியும்.. ஏன் இந்த மாதிரி ஒரு செயலை மாமாங்கம் செய்ய முடியவில்லை.. இப்படியெல்லாம் நடக்கும் பொழுது இந்த ஊசி சரியில்லை வினைத்திறன் இல்லாத ஒன்று என கூறி ஊசி போடவருபவர்களையும் தடுப்பது சரியா?
  1 point
 40. அம்மாவின் சேலை நினைவலைகள்.... அருமையான வரிகள். மறைந்து போன சிறப்பான குரல்... https://m.facebook.com/story.php?story_fbid=10220735760246759&id=1319608745&wa_logging_event=video_play_open
  1 point
 41. உலகை ஆள்வதற்கு ஒவ்வொரு வல்லரசுகளும் எத்தனை திட்டங்கள் எத்தனை வளர்ச்சிகள் எத்தனை எத்தனை விதமான அணுகுமுறைகள் எல்லாம் வைத்திருக்கிறார்கள், ஆனால் அரபியர்கள் உலகை ஆள வைத்திருக்கும் ஒரேயொரு திட்டம் அதிக பிள்ளைகளை பெத்துபோடுவது, உலகத்தில் எவனுக்குமே தெரியாத திட்டம் ஒன்று பாருங்க, இது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. குரான்,குண்டுவெடி,குட்டி போடுதல் என்ற இந்த முக்கோண அம்சம் உலகை ஆள போதுமென்று நினைக்கவில்லை. அரபியர்கள் உலகை ஆள நினைத்தாலும் அதனை தடுக்கபோவதும் அரபியர்களே. உலகை ஆள அவர்கள் நினைக்கிறது ஒருபக்கம் இருக்க உள்ளூக்குள் அவர்கள் எங்கேயாவது ஒற்றுமையாய் இருந்திருக்கிறார்களா? காலையில எழுந்ததும் பல்லு தீட்டுறாங்களோ இல்லையோ புனிதபோர் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் மதத்தை சேர்ந்தவர்களையே போட்டு தள்ள கிளம்பிவிடுகிறார்கள். உலகை ஆள்வதற்கு ராணுவ பொருளாதார வளர்ச்சி நிலையில் அரபுதேசங்கள் இருக்கவேண்டும், நிச்சயமாக அரபுதேசங்களில் பல பொருளாதார ராணுவ ரீதியில் பலமாக இருக்கின்றன, ஆனால் அந்த பொருளாதாரமும், ராணுவ பலமும் அமெரிக்காவும் ஐரோப்பாவும் கொடுத்தவை, அவர்களில் தங்கி வாழ்பவை அப்புறம் எப்படி அவங்களை ஓவர்டேக் பண்ணி உலகத்தை ஆளுறது? அகதியாய் போய் சாப்பிடுற தூங்குற நேரம் தவிர்த்து மற்றைய நேரமெல்லாம் தையல்மெசின் மாதிரி இயங்கி அதிக குழந்தைகளை பெற்று அவர்களின் நாட்டை பிடித்து இஸ்லாமியநாடுகளாக்கலாம் என்ற கனவு இவர்களுக்கு இருந்தால், அங்கே இருக்கும் பிற இனங்கள் வெள்ளைக்காரனுடன் சேர்ந்து இவர்கள் கனவை தோற்கடிப்பார்கள், இவர்களை யாருக்குத்தான் பிடிக்குது? அதையும் மிஞ்சி இவர்கள் கரப்பான்பூச்சிபோல பல்கி பெருகினால் நாட்டு குடியேறிகளின் சட்டங்களை மாற்றியும், ஆக குறைந்தது படித்தவர்கள் பணக்காரர்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள் என்ற பெயரில் இந்தியர்கள் சீனர்களை தமது நாட்டுக்குள் லட்சக்கணக்கில் வதிவிட அனுமதி வழங்கி இவர்களை ஈடு கட்டுவார்கள். இப்பவே பலநாடுகள் அதை படிப்படியாக ஆரம்பித்துவிட்டார்கள். இந்த வளர்ச்சியடைந்த நாடுகளை தவிர்த்து வேறுநாடுகளை அவர்கள் இஸ்லாம் நாடுகளாக்க நினைக்கலாம், ஆனால் அவர்களை இஸ்லாம் நாடு ஆக்கி எப்படி உலகத்தை ஆளமுடியும்?
  1 point
 42. வணக்கம் வாத்தியார்.......! சின்ன பொண்ணு நான் ஒரு செந்தூரப்பூ நான் செங்கமலம் நான் புது தேன்கிண்ணம் நான் வெல்லக்கட்டி நான் நல்ல வெள்ளி ரதம் நான் கண்ணுக்குட்டி நான் நல்ல கார்காலம் நான் ஒரு செந்தேரில் உல்லாச ஊர் போகலாம் நீ என்னோடு சல்லாப தேரெறலாம் அடி ஆத்தாடி அம்புட்டும் நீ காணலாம் இது பூச்சூடும் பொன்மாலை தான் என் செல்லக்குட்டி ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி.....! ---ஆசை அதிகம் வச்சு---
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.