Jump to content

Leaderboard

  1. இணையவன்

    இணையவன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்


    • Points

      22

    • Posts

      7216


  2. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      11

    • Posts

      28969


  3. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      76585


  4. அன்புத்தம்பி

    அன்புத்தம்பி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      5425


Popular Content

Showing content with the highest reputation on 10/21/21 in all areas

  1. ஒரு வளியாக இந்த வருடம் பரிசில் நடைபெற்ற மரதன் போட்டியில் கலந்து கொள்ள முடிந்தது. 3 மாத கடும் பயிற்சியின் பின் சென்ற ஞாயிறு ஓடி முடித்துள்ளேன். கோவிட் காரணமாக இந்தத் தடவை சுமார் 30000 பேர் மட்டுமே போட்டியில் பங்குபற்றினர். 3 மணித்தியாலங்களும் 39 நிமிடங்களும் ஓடி 6890 ஆவது இடத்துக்கு வந்துள்ளேன். இதோ சில படங்கள் 🙂
    17 points
  2. அய் நம்ப முடியவில்லை😎 ரதி மூன்றாம் இடத்தில் 😂எப்ப இறங்க போறாவோ தெரியலையே
    5 points
  3. இந்தக் கட்டுரையை சென்ற வருடம் இதே நாளில் எழுதியிருக்க வேண்டியது, கொரோனா வந்து திசைமாற்றி விட்டது. எழுத நினைத்த கட்டுரையை ஒரு வருடத்தின் பின்னர் வேறு விதமாக எழுதுகிறேன். ஐம்பதிலும் ஆசை என்பதில் எனக்கு உடைபாடில்லை. சென்ற வருடம் ஐம்பதாவது வயதை எட்டியிருந்தேன். முன்பெல்லாம் ஒவ்வொரு பத்தை எட்டும்போதும் வயதாகிக் கொண்டே போகிறதே எதையும் சாதிக்கவில்லையே என்ற விரக்தியும் எதிர்பார்த் இலக்குகளை எட்டவில்லையே என்ற கவலையும் தோன்றும். இப்போது ஆறுதலாக நான் கடந்துவந்த பாதையை யோசித்துப் பார்க்கும்போது பரவாயில்லையே என்று தோன்றுகிறது. எனது பாட்டனார் எனக்குச் சின்ன வயதில் தனது அனுபவங்களைக கதை போல் சொல்வார். பன்றி வேட்டையாடியது, வயலில் சூடு அடிக்கும்போது யானை வந்தது, சகோதரங்களுடன் முரன்பட்டு வேறு ஊர் சென்று கடின உழைப்பால் முன்னேறியது போன்ற பல கதைகள் சொல்வார். அன்று ஆவற்றைப் பெரிதாகக் காதில் வாங்கியதில்லை. அவர் சொன்னவற்றில் நினைவில் இருந்த சிலவற்றை பல வருடங்கள் கழித்து மீட்டபோது அவரைப்போல் எனக்கு சொல்லத்தக்கவாறு அனுபவங்கள் எதுவும் இல்லையே என்று தோன்றும். இப்போது அந்த ஏக்கம் இல்லை. இப்போது என்ன நிலையில் உள்ளேனோ அதைத் திருப்தியாக ஏற்றுக் கொண்டு அதனை மேம்படுத்தி எதிர்காலத்தைத் திட்டமிடுவதே புத்திசாலித்தனம் என்பதில் உறுதியாக உள்ளேன். வாழ்வதற்கு வாழ்க்கை இன்னும் ஏராளம் உள்ளது. அதற்கு எனது உடல் ஆரோக்கியம் முக்கியம். என்னுடைய உடலைக் கவனமாகப் பார்க்காவிட்டால் உள்ளத்தால் என்னை நிறைவாக உணர முடியாது. எனது இனம் நிலைக்க வேண்டுமானால் முதலில் நான் நன்றாக இருக்க வேண்டும். ஏனென்றால் எனது இனத்தில் நானும் ஒரு அங்கம். *** முன்பு ஒரு திரியில் ஓட்டப் பயிற்சி செய்வதாக எழுதியிருந்தேன். ஆரம்பத்தில் 15 நிமிடங்கள் - 2 கிலோமீற்றர் தூரம் ஓடினேன். ஓடி முடிந்ததும் மிகக் களைப்பாக இருக்கும். அதன்பின்னர் இன்னும் தூரம் ஓட வேண்டும் என்பதற்காக 3 கிலோமீற்றராக மாற்றிக் கொண்டேன். அது காலப்போக்கில் கடினமான பிரயத்தனத்துடன் 35-40 நிமிடங்களில் 5 கிலோமீற்றர்களாக ஆக மாறியது. அதுவே எனது அதி உச்ச எல்லை என்று நினைத்திருந்தேன். சில காலங்களின் பின்னர் படிப்படியாக நின்று ஓய்வெடுத்து ஒரு மணி நேரம் 7 கிமீ வரை ஓட முடிந்தது. இப்படியே சுமார் ஒரு வருடம் சென்றது. நான் இருக்கும் ஊரில் ஒரு உடற்பயிற்சி நிலைய உறுப்பினர்கள் சிலரைத் தற்செயலாக சந்திக்க நேரிட்டது. ஓட்டப் பயிற்சி செய்தால் இன்னும் முன்னேறலாம் என்று உற்சாகப் படுத்தினார்கள். அது நகரசபையால் நடத்தப்படுவதால் வருடத்துக்கு 75 யூரோ, முயற்சித்தும் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன். வாரத்தில் 3 நாள் பயிற்சி. மாலை 6.30 க்கு ஆரம்பிக்கும். வேலை காரணமாக வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் மட்டுமே பங்குபற்ற முடியும். 6 மாதப் பயிற்சியின் பின் 10 கிமீ ஓட்டப் போட்டி ஒன்றில் பங்குபெற முடிந்தது மட்டுமல்லாது சில மாதங்களுக்குப் பின்னர் அரை மரதன் ஓடும் அளவுக்கு வந்துவிட்டேன். முதலாவது 10 கிமீ போட்டி சரி, 50 வயதாகிறது ஒரு தடவை மரதன் ஓடினால் என்ன என்று தோன்றியது. மரதன் ஓடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு இருக்கும். ஓடியோ நடந்தோ தவழ்ந்தோ முடிவு எல்லை ஓட வேண்டும் என்பதே எனது இலக்கு. இந்த எல்லையைத் தாண்டுவதென்பது விவரிக்க முடியாத இனிய அனுபவம் என்று ஓடி முடித்தவர்கள் கூறிக் கேட்டுள்ளேன். சிலர் எல்லையில் காத்திருக்கும் தமது பிள்ளைகள், மனைவி அல்லது உறவினர்களைக் கட்டி அணைத்துக் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதைக் காணொலிகளில் கண்டிருக்கிறேன். ஆகவே கால்கள் சரியாக இயங்கும்போதே வாழ்க்கையில் ஒரு தடவை ஓடிப் பார்க்க முடிவு செய்தேன். எனக்குப் பயிற்சி தருபவராகிய ஸாஹிர் என்பவனிடம் சொன்னேன். மகிழ்ச்சியாக உற்சாகப்படுத்தினான். ஆனால் கடுமையான பயிற்சியைப் பின்பற்றினால் நான் நிர்ணயித்த இலக்கை விட நன்றாக ஓடலாம் என்றான். அதன்படி பரிசில் ஏப்ரல் 2020 இல் நடக்கவிருந்த சர்வதேச மரதன் போட்டியில் பதிவு செய்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 65 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். இது மரதன் வரலாற்றில் உலகில் அதிகம் பேர் பங்குகொள்ளும் மிகப் பெரிய போட்டியாகக் கருதப்பட்டது. போட்டிக்கு 4 மாதங்களுக்கு முன்னர் கடுமையான பயிற்சி ஆரம்பமாகியது. மழை குளிர் காற்று என்று எதையும் பார்க்க முடியாது. ஓட வெளிக்கிட்டால் ஓட வேண்டியதுதான். கிளப் உறுப்பினர்கள் 3 குழுவாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். முதலாவது குழு முயல் வேகத்தில் ஓடக் கூடியது. நான் 3 ஆவது ஆமை வேகக் குழு. நான் ஒரு தடவை முதல் முழுவோடு சேர்ந்து ஓடி ஆவஸ்தைப்பட்ட அனுபவம் இருந்ததால் அவர்களோடு சேர்வதில்லை. மழையிலும் பனி உறைந்த குளிரிலும் கொட்டும் வியர்வையுடன் அன்றொருநாள் மார்கழி மாதம் குளிர் மழை தூறிக்கொண்டிருந்தது, சிலர் பயிற்சிக்கு வரவில்லை. வேகமாக ஓடுபவர்களே அதிகமாக இருந்தனர். பழைய உறுப்பினர் ஒருவவன் அன்று வந்திருந்தான். அவன் பெயர் பிரெடெரிக், கரிபியன் தீவைச் சேர்ந்தவன். தனது ஊரில் சில காலம் தங்கிவிட்டு பிரான்சுக்குத் திரும்பியிருந்தான். அன்றைய இருளில் அவனது முகம் சரியாகத் தெரியவில்லை. அதிகம் நின்று பேசிக் கொண்டிருந்தால் குளிரில் நடுங்கத் தொடங்கும் ஆகவே மெதுவாக ஓட்டத்தை ஆரம்பிப்போம் என ஸாஹிர் கூறிவிட்டு பிரெடெரிக்கை அறிமுகப்படுத்தி நீங்கள் இருவரும் மட்டுமே இரண்டாவது முழுவில் பயிற்சி செய்யப் போகிறீர்கள் என்று கூறி நாங்கள் ஓட வேண்டிய பாதையையும் வேக மாற்றங்களையும் அவசரமாக் விளக்கிவிட்டு முதல் குழுவுடம் பறந்துவிட்டான். நானும் பிரெடெரிக்கும் தனியே நின்றிருந்தோம். ஓரிரு வார்த்தைகள் பரிமாறிக் கொண்டு ஓட ஆரம்பித்தோம். வீதியின் மின் வெளிச்சத்தில் சில நிமிடங்கள் மௌனமாக ஓடிக் கொண்டிருந்தோம். பிரெடெரிக் மெதுவாக ஓடுவதற்கே சற்றுச் சிரமப் படுவதாகத் தோன்றியது. 15 நிமிடங்களுக்குப் பிறகு வேகத்தைச் சற்றே அதிகரிக்க வேண்டும் ஆனால் வேகம் அதிகரித்ததாகத் தெரியவில்லை. 30 நிமிடத்தின் பின் வேகம் அடுத்த கட்டத்தை அடைய வேண்டும். ஆனால் அவன் கொஞ்சம் மூச்சு வாங்குவது தெரிந்தது. பேசாமல் முதல் குழுவோடு ஓடியிருக்கலாம் என்று தோன்றியது. பேச்சு வாக்கில் உனக்கு எத்தனை வயது என்று கேட்டேன். 71 என்றான். ஒரு கணம் எனது நாடி நரம்புகள் எல்லாம் செயலிழந்து அதிர்ச்சியிலிருந்து மீழ சில வினாடிகள் ஆனது. வாயிலிருந்து அப்படியா, நன்றாக ஓருகிறாய் என்ற வார்த்தைகள் மட்டுமே வந்தது. ஓடுவதற்கு வயது எல்லை கிடையாது என்பதை அன்றுதான் புரிந்து கொண்டேன். இன்றுவரை பிரெடெரிக் எனக்கு மரியாதைக்குரிய நண்பனாகவும் அறிவுரை கூறும் ஆசானாகவும் இருக்கிறான். படத்தில் இடது பக்கத்தில் பிரெடெரிக் பயிற்சி தொடர ஆர்வம் அதிகரிக்க இலக்குகளும் மாறிக்கொண்டிருந்தன. மரதன் ஆரம்பமாவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. *** ஓட்டப் பயிற்சியோ போட்டியோ ஏனைய விளையாட்டுகள் போல் போட்டி மனப்பான்மையுடன் அமைவதல்ல. ஒவ்வொருவரும் தமது தகமைக்கேற்ப தாங்களே ஒரு வரயறையை அல்லது தமது சொந்த இலக்கை வைத்து ஓடுவதால் மனதளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. இன்னொருவர்போல் ஓடவேண்டும் என்ற போட்டி மனப்பான்மையும் ஏற்படாது. மரதன் போட்டியிலும் 50 ஆயிரம் பேர் ஓடினால் அதில் முதல் 100 பேருக்குள்தால் சரியான போட்டி இருக்கும். ஏனையவர்கள் தமது சொந்த இலக்கை வைத்தே ஓடுவார்கள். ஆகவே 5கிலோமீற்றர் ஓடும் ஒருவர் ஒருவர் தன்னால் 10 கிலோமீற்றர் ஓட முடியவில்லையே என்ற கவலை தேவையில்லை. உடல் அமைப்பும் இவ்வாறுதான். எல்லோருக்கும் உடல் அமைப்பு ஒரே மாதிரி இருக்காது. என்னை விட உயரம் மிகக் குறைந்த ஒருவர் என்னைவிட மிக வேகமாக ஓடுகிறார். அதேபோல் என்னைவிட எடை கூடிய ஒருவர் என்னைவிட வேகமாக ஓடுகிறார். அதற்காக நான் இந்த இருவரையும் விட வேகமாக ஓட முடியவில்லையே என்று ஏங்க முடியாது. ஓடுவதால் உள்ள நன்மைகளில் முக்கியமானவை சில வேக ஓட்டத்தின்போது இதயம் அதிகமான இரத்தத்தினை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதால் இதயத் தசைகள் வலுவடைந்து இதயம் விரிவடைந்து ஒரே இதயத்துடிப்பில் அதிகமான இரத்தைதை உடலுக்கு வழங்கம் ஆற்றலைப் பெற்றுக் கொள்ளும். இதன் மூலம் இதயத்துக்கும் வேலைப்பழு குறைந்து நீண்ட காலம் இயங்கும் ஓடும்போது கால்கள் தரையில் படும்போது ஏற்படும் மைக்க்ரோ அதிர்வுகளால் தசைகளும் எலும்பும் சிறிய சிதைவுகளுக்குள்ளாகொன்றன. பின்னை ஓய்வின்போது சிதைவுகள் மறுசீரமைக்கப்பட்டு தசைகளும் எலும்புகளிம் புத்துயிர் பெறுகின்றன இரத்தத்தில் மேலதிக சீனியும் கொலஸ்ரரோலும் சக்தியாக எரிக்கப்படும் போட்டி மனப்பான்மையற்ற பயிற்சியாதலால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். ஒவ்வொரு பயிற்சியின்போதும் ஓடும்போது ஏற்படும் களைப்பு சோர்வு ஏக்கம் தளர்வு அவஸ்தை எல்லாவற்றையும் ஓட்ட முடிவில் மறந்து வர்ணிக்க முடியாத மகிழ்ச்சியை உணர முடியும் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும். இன்னும் பல உடலை அசைத்து அதிக நேரம் வேலை செய்கிறேன், ஆகவே உடற்பயிற்சி தேவையில்லை என்று நினைப்பது தவறு. இரண்டும் ஒன்றல்ல. 1 மணி நேர உடற்பயிற்சியினால் கிடைக்கும் நன்மைகள் உடலை வருத்திச் செய்யும் வேலையால் கிடைக்காது. *** ஆரம்ப ஓட்டப் பயிற்சி இது ஓட விருப்பம் இருந்தாலும் தயங்குபவர்களுக்கும் நாளைக்கு ஓடலாம் என்று இன்றுவர ஆரம்பிக்காமல் இருப்பவர்களுக்கும். முக்கிய குறிப்பு : உடல், இதயம் பலவீனமானவர்கள் உங்களது வைத்தியரின் ஆலோசனைக்குப் பின்னர் இதனைப் பின்பற்ற வேண்டும். சரியான சப்பாத்து உடை மற்றும் இதர உபகரணங்கள் இருந்தால்தான் ஓடுவேன் என்று நினைக்க வேண்டாம். இதையெல்லாம் பின்னர் பார்க்கலாம். முதலில் இருப்பவற்றை அணிந்து கொண்டு வெளியே வாருங்கள். எப்போது உங்கள் வயது, உயரம், நிறை, உருவம் எல்லாவற்றையும் விட்டு ஓட முன்வருகிறீர்களோ அதுவே உங்களது முதல் வெற்றி. உங்கள் உடையையோ உடலையோ ஓட்டத்தையோ பார்த்து யாராவது சிரிப்பார்களோ என்ற தயக்கம் சிறிதும் வேண்டாம். எல்லா அனுகூலங்களும் இருந்தும் ஓட்டத்தால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் புறக்கணித்து ஓடாதிருக்கும் கோடிக்கணக்கானவர்கள் மத்தியில் நீங்கள் ஓட முன்வந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். எடுத்த உடனேயே ஓட முயற்சிக்க வேண்டாம். தசைகளையும் இதயத்தையும் தயார்படுத்த வேண்டும். படிப்படியாகப் பயிற்சியை ஆரம்பிப்போம். நாள் 1 15 நிமிட வேக நடை அதைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் உங்களால் எவ்வளவு மெதுவாக ஓட முடியுமோ அவ்வளவு மெதுவாக ஓடுங்கள். அது வேகமாக நடப்பதை விட வேகம் குறைந்ததாகக் கூட இருக்கலாம். இந்த 10 நிமிடங்களை எட்ட முடியாமல் போனல் நீங்கள் மெதுவாக ஓடவில்லை என்று அர்த்தம். 10 நிமிடம் சாதாரண நடை நன்றாகச் சாப்பிட்டு நிறைய நீர் அருந்தி நன்றாகத் தூங்குங்கள். நாள் 2 பயிற்சி இல்லை நாள்3 1 மணி நேர வேக நடை நாள் 4 பயிற்சி இல்லை நாள் 5 15 நிமிட வேக நடை 30 நிமிட ஓட்டமும் நடையும். 1நிமிட மெதுவான ஓட்டம், 30 விநாடிகள் நடை என்பதைச் சுழற்சியாகச் செய்யுங்கள் 15 நிமிட நடை நாள் 6 பயிற்சி இல்லை நாள் 7 10 நிமிட வேக நடை விரும்பிய அளவு நேரம் மெதுவான ஓட்டம். கடைசி 1 நிமிடத்தை உங்களால் முடிந்தவரை வேகமாக ஓடுங்கள். 10 நிமிட நடை மெதுவாக ஓடும்படி வற்புறுத்தக் காரணம் அதிகமாகக் களைத்து அரைவாசியில் பயிற்சியை முடிக்கக் கூடாது என்பதற்காக. அத்துடன் மெதுவான ஓட்டம் என்பது ஓட்டப் பயிற்சியில் முக்கியமான அங்கம். மெதுவாக ஆரம்பிப்பது படிப்படியாக இதயத் துடிப்பை அதிகரிப்பதற்கு. சடுதியாக ஆரம்பித்தால் 10 நிமிடத்தில் களைப்பு ஏற்பட்டு பயிற்சியைத் தொடர முடியாமல் போய்விடும். தொடரும் நாட்களில் வேகத்தையும் நேரத்தையும் படிப்படியாக அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். *** வேகத்தை அதிகரிப்பதற்கான பயிற்சி இதும் ஏற்கனவே ஓரளவு ஓட முடியுமானவர்களுக்கானது. ஆரம்ப நிலையில் ஓடுபவர்களும் தாராளமாகச் செய்யலாம். பயிற்சியின் அங்கங்கள். A. Warm up : மிக மெதுவாக ஆரம்பித்து படிப்படியாக இதயத் துடிப்பை அதிகரித்து அதிக வேகம் எடுக்காமல் அதிக களைப்பு இல்லாமல் ஓடுவது. இது இதயத்தை சாதாரண நிலையில் இருந்து வேகத் துடிப்பிற்குத் தயார் படுத்துவது மட்டுமே. உங்கள் அதிகபட்ச வலுவில் 50-60% போதுமானது. B. மெதுவான ஓட்டம் : ஓட்டப் பயிற்சியில் இதுவும் மிக முக்கியமானது. இதயத் துடிப்பைக் குறைத்து தொடர்ச்சியாக சக்தியை உடலுக்கு வழங்குவது. மெதுவான ஓட்டத்தின் இறுதியில் களைப்பு உண்டாகக் கூடாது. C. தயார்படுத்தல் 1 - கால்களைப் பின்னால் மடித்து ஓடுதல். முன்னர் குறிப்பிட்டது போல இந்தத் தடவை கால்களை எந்த அளவு பின்னால் மடிக்க முடியுமோ அவ்வளவு மடித்து வேகமாகக் கால்கள அசைக்க வேண்டும். ஒவ்வொர அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். D. தயார்படுத்தல் 2 - முழங்கால்களை உயர்த்தி ஓடுதல். முழங்கால்களைச் சமாந்தரமாக மேலே தூக்கி வேகமாக ஓடுதல். ஒவ்வொரு அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். ஏறத்தாள நின்ற இடத்திலேயே ஓடுவது போன்றது. E. தயார்படுத்தல் 3 - கால்களை மடிக்காமல் ஓடுதல். முழங்கால்களை மடிக்காமல் கால்களை முன்னே மட்டும் உயர்த்தி வேகமாக ஓட வேண்டும். ஒவ்வொரு அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். கிட்டத்தட்ட நின்ற இடத்திலேயே ஓடுவது போன்று இருக்கும். இந்த 3 பயிற்சிகளும் (C, D, E) இந்த வீடியோவில் 1:22 முதல் 2:18 வரை உள்ளது. F. Jamping jack - இது உங்களுக்குத் தெரிந்திருக்கும். G. ஓய்வு : கை கால்களைத் தளர விட்டு ஆழமாகச் சுவாசித்தல். நீர் அருந்தலாம். H. Stretching - அவசியமில்லை. செய்வதாக இருந்தால் 2 மணி நேரத்துக்குப் பிறகு அல்லது அடுத்த நாள் செய்யலாம். இனி பயிற்சியை ஆரம்பிக்கலாம். நீங்கள் ஏற்கனவே நன்றாக ஓடுவதால் நேரடியாகவே இரண்டாவது நிலை பயிற்சிக்கே போகலாம். 1 வாரத்தில் 4 நாட்கள் செய்ய வேண்டியவை. பயிற்சி 1 15 நிமிட Warm up (A) 1 நிமிட ஓய்வு 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் C 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் D 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் E 30 வினாடிகள் ஓய்வு. நீர் அருந்தலாம். மேலே குறிப்பிட்ட 15 வினாடிப் பயிற்சிகளை மீண்டும் 2 தடவை செய்யுங்கள் மிகவும் களைப்பாக இருக்கும். 15 நிமிட மெதுவான ஓட்டம் B. பயிற்சி முடிவடைகிறது. அடுத்த நாள் கால்களில் வலி இருக்கும். ஒரு நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 2 10 நிமிட Warm up (A) 1 நிமிட ஓய்வு 1 நிமிட Jamping jack F 1 நிமிட மெதுவான ஓட்டம் B 1 நிமிட Jamping jack F 1 நிமிட மெதுவான ஓட்டம் B 30 நிமிட ஓட்டம். முதல் 10 நிமிடங்கள் உங்கள் உச்ச வலுவில் 60 வீதமாக இருக்க வேண்டும். அடுத்த 7 நிமிடங்கள் 70 வீதமாக அதிகரியுங்கள். அதற்கடுத்த 7 நிமிடங்கள் உங்களால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு ஓட வேண்டும் ஆனால் களைத்து ஓட்டத்தைக் கைவிடும்படியாக ஓடக் கூடாது. மீதி நேரத்தை மெதுவாக ஓடி முடிக்க வேண்டும். பயிற்சி முடிவடைகிறது. அடுத்த நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 3 interval running 20 நிமிட Warm up (A) 30 வினாடிகள் ஓய்வு. 30 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 30 வினாடிகள் வேகமான ஓட்டம். இந்த 30 விநாடி ஓட்டங்கள் இரண்டையும் 10 தடவைகள் நிற்காமல் மாறி மாறிச் செய்ய வேண்டும். வேகமான ஓட்டத்தின்போது 80-90 வீதமான உச்ச வலுவுடன் ஓடலாம். 10 தவடவை ஓடி முடிக்க முடியாது போனால் நீங்கள் 90 வீதத்துக்கு மேலான வலுவுடன் ஓடியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். மறுபடி இன்னொரு தடவை 30 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 30 வினாடிகள் வேகமான ஓட்டம். இந்த 30 விநாடி ஓட்டங்கள் இரண்டையும் 10 தடவைகள் நிற்காமல் மாறி மாறிச் செய்ய வேண்டும். 5 நிமிட மெதுவான ஓட்டம் B. பயிற்சி முடிவடைகிறது. மிகவும் களைப்பாக இருக்கும், அடுத்த 1 அல்லது 2 நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 4 விரும்பியபடி ஓட்டம் உங்க விருப்பத்திற்கேற்ப நேர எல்லை வைத்தோ தூர எல்லை வைத்தோ விரும்பிய வேகத்தில் ஓடலாம். இந்த 4 பயிற்சிகளையும் சுழற்சியாகச் செய்யுங்கள். *** ஐம்பதுக்கு வருவோம். பிள்ளைகள் வளர்ந்து விட்டனர். ஊரில் இருந்திருந்தால் பிள்ளைகளின் படிப்பு முடிந்தால் அவர்களுக்கான வேலை, திருமணம், செலவு பற்றியெல்லாம் நினைத்துக் கவலைப்பட வேண்டும். இங்கு அதொன்றும் இல்லை. பொருளாதார ரீதியாக சாதாரனமாக வாழ்வதற்கான தன்நிறைவை அடைந்துவிட்டேன். வேலையிலிருந்து ஓய்வு பெறும் எல்லை தொலைவில் தெரிகிறது. எனக்கான எதிர்காலத்தைத் திட்டமிட்டு விட்டேன். என்மேலுள்ல அழுத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவதுபோல் உணர்வு. சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் மனதில் இளமையுடனும் வாழ்க்கையைத் தொடர இதுவே பொற்காலம். நீங்களும் வாருங்கள் ஓடி வாழ்ந்திடலாம்.
    2 points
  4. இன்னும் ஆர‌ம்ப‌ சுற்று முடிய‌ வில்லை தாத்தா அதுக்கிடேல‌ எங்க‌ளை கலாக்கிறார்.................😁😀 மெது மெதுவாய் வார‌ கிழ‌மையில் இருந்து ஒரு நாளுக்கு 4புள்ளியோட‌ முன்னேக்கி போவோம்...............அது ம‌ட்டும் ல‌ண்ட‌ன் பெரிய‌ப்பா பொறுத்து இருக்க‌வும்...................😁😀
    2 points
  5. இன்றைய இரண்டாவது போட்டியில் ஓமான் அணி சகல விக்கெட்களையும் இழந்து 122 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 2 விக்கெட் இழப்புடன் 123 ஓட்டங்களை எடுத்தது. முடிவு: ஸ்கொட்லாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கறுப்பி 18 2 ரதி 18 3 முதல்வன் 16 4 ஏராளன் 16 5 ஈழப்பிரியன் 16 6 மறுத்தான் 16 7 நந்தன் 16 8 வாதவூரான் 16 9 சுவைப்பிரியன் 16 10 எப்போதும் தமிழன் 16 11 பிரபா சிதம்பரநாதன் 16 12 சுவி 14 13 வாத்தியார் 14 14 கோஷான் சே 14 15 கிருபன் 14 16 நுணாவிலான் 14 17 நீர்வேலியான் 14 18 தமிழ் சிறி 14 19 கல்யாணி 14 20 அஹஸ்தியன் 14 21 பையன்26 12 22 குமாரசாமி 12 ஜேர்மன் தாத்தாவும் அவரது கூட்டுக் களவாணிப் பையனும் அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கின்றார்கள்
    2 points
  6. இன்றைய முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பாடிய பபுவா நியூகினி அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 97 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. முடிவு: பங்களாதேஷ் அணி 84 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. யாழ்களப் போட்டியாளர்கள் எல்லோரும் பங்களாதேஷ் வெல்லும் என்று கணித்ததால் தலா இரண்டு புள்ளிகளை எடுத்துள்ளனர். நிலைகளிலும் மாற்றம் இல்லை.
    2 points
  7. இந்த மெழுகுதிரி என்பது, சந்தையில் வாங்குபவர்களும், விற்றுபவர்களும், குறிப்பிட்ட நேர இடைவெளியில் முட்டி மோதி, எவரின் விலை இறுதியாக தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிக்கிறது. இது எப்போதுமே இறந்த கால தரவு என்பதால், குறிப்புட கால இடைவெளியை, நிமிடம், மணிகள், நாட்கள், வாரங்கள், மாதங்கள் என்று பார்ப்பவர் வகைப்படுத்தலாம். சிவப்பு நிற மெழுகு திரி, விற்பவர்கள் ஒங்கி விட்டதை குறிக்கும். பச்சை நிறம் வாங்குபவர் ஓங்கி விட்டார்கள். தடித்த மெழுகு திரியின் மேலேம், கீழும் சற்று கோடாக இருப்பவை, முறையே அதி கூடிய விலை, அதி குறைந்த விலை. தடித்த மெழுகு திரிரில் இருக்கும் விலைவாசிகளே பெரும்பான்மையான வாங்குதல்கள் (பச்சை நிறம்), விற்பனைகள் (சிவப்பு நிறம்) நடை பெற்று இருக்கிறது. அதனால், சிவப்பு நிற மெழுகு திரி நேர இடைவெளியில், வாங்குதல்கள் நடைபெற இல்லை என்பது அல்ல, வாங்குதல்கள் நடைபெற்று இருக்கிறது, ஆனால், விற்றுபவர்கள் விலையை தஹிர்மானிப்பதில் ஓங்கி விட்டார்கள். இதை நீங்கள், livecharts.co.uk இணைய தளத்தில், எதாவது ஓர் சந்தையை தெரிவு செய்து, பொறுமையாக அவதானியுங்கள், உங்களுக்கு புரியும். சிலவேளை, சிவப்பாக ஆரம்பித்து, பச்சையாக மாறும், மறு வளமாகவும் நடக்கும். முட்டி, மோதி ஒன்றை ஒன்று ஓங்குவதற்கு நடைபெறும் போராட்டத்தையும் உணரலாம். முக்கியமாக, மெழுகு திரி, சந்தையின் முட்டி மோதும் உணர்வை (emotions) மற்றும் போக்கை காட்டுவது. அனால், எப்படி கணக்கு பார்ப்பது என்பது வேறு விடயம், முழு chart உடன் தொடர்பு பட்டத, technical analysis.
    2 points
  8. 🤣பார்க்கலாம்🤣 என்ன செய்யுறது அண்ணை உணர்சி வசப்பட்டு பஞ்ச் டயலாக் எல்லாம் வேற விட்டுட்டன். வெள்ளி கிழமை ஜும்மாவுகும் போவம் எண்டு யோசிக்கிறன்🤣.
    2 points
  9. சங்கீத கலா ரசிக மணிகள்......! 😂
    2 points
  10. ஒருநாள் முதல்வருக்கு வாழ்த்துக்கள்.
    2 points
  11. அடங்கொக்கமக்கா நான் முதலாவதா வந்திட்டன்! போட்டியில் நான்காவதா கலந்து கொண்டதால இரிக்கும். வாழ்த்தலாமே பிரண்ட்ஸ். Sri Lanka (19.6/20 ov)171/7 Ireland
    2 points
  12. அனைவருக்கும் அன்பு வணக்கம். "குடியிருந்த கோயில்"
    1 point
  13. நன்றி நிழலி. நடக்கும்போது 5ஆவது கிலோ மீற்றரில் 5 நிமிடங்கள் உங்களால் முடிந்த அளவு மெதுவாக ஓடிப் பாருங்கள். கால்களுக்குப் பிரச்சனை வரும் என்பது தவறான அபிப்பிராயம். எதுவும் அளவுக்கு மீறினாக் கூடாது. மேலே குறிப்பிட்டபடி ஓட்டம் எலும்புகளுக்கும் நார்களுக்கும் புத்துயிர் அளித்து உறுதியாக்கும். இதைத் தவிர உங்கள் இதயம் உறுதியாகும். 50 வயதின்பின் வாழ்க்கையின் இன்னொரு பகுதி ஆரம்பமாகிறது. அனுபவிக்க வேண்டும். 🙂
    1 point
  14. அதுக்கு முதல் ஸ்பரிச உணர்ச்சியின் மகிமை பற்றி ஒன்று எழுதுவதாக சொன்னீர்களாம், ஏன் இன்னும் எழுதவில்லை என்று பிழம்பார் கவலையில் கேட்கின்றார்.
    1 point
  15. பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள். போட்டியில் ஒவ்வொரு கணங்களும் பல நாட்களுக்கு அசை போடக் கூடியவை. வீதியோரங்களில் பெயர்ப் பலகையுடன் நிற்கும் உறவுகள், ஒருபோதும் கண்டிராத போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் மக்கள், வீதியோரங்களில் பிஞ்சுக் கைகளை நீட்டி தொட்டுக் கொண்டு ஓடுங்களேன் என்று ஏக்கத்துடன் பார்க்கும் சிறுவர்கள், ஆங்காங்கு உற்சாகப்படுத்தும் இசைக் குழுவினர், நடனக் குழுவினர்... எல்லாமே ஒரு இன்ப அனுபவம். மறக்க முடியாத இன்னொரு அனுபவம். 3மணி 34 நிமிடங்களில் ஓடி முடித்திருக்க வேண்டியது கடைசி 7 கிமீற்றரில் இதுவரை எதுவுமே சாப்பிடாததால் பசி காரணமாக ஓட முடியாமல் போனது. கடைசியாக இருந்த தண்ணீர்ப் பந்தலில் சாப்பாடுகள் இருந்தும் அவற்றை விழுங்க முடியாமையால் சீனிக் கட்டி இரண்டை வாய்க்குள் போட்டபடி ஓட்டமும் நடையுமாகச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது பின்னால் பார்வையாளராக நின்றிருந்த பெண் ஒருவர் என்னை நோக்கி ஓடி வந்து 'ஓடுங்கள், நீங்கள் கடுமையான பயிற்சி எடுத்தது ஓடி முடிப்பதற்காக. இன்னும் கொஞ்சத் தூரமே உள்ள நிலையில் நிற்பதற்காக அல்ல, ஓடுங்கள்' என்று உரக்கக் கத்தினார். பின்னால் திரும்பிப் பார்க்கச் சக்தியற்று கையை மேலே தூக்கி நன்றி சொல்லிவிட்டு புது உற்சாகத்துடன் மெதுவாக ஓடத் தொடங்கினேன். அவர் யார் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்ய முடியவில்லை. திரும்பிப் பார்த்து ஒரு புன்னகையோடு அவருக்கு நன்றி சொல்லியிருக்கலாம் என்று கவலைப்படுகிறேன். ஓட்ட முடிவில் வரவேற்க மனைவியும் மகளும் வந்திருந்தனர். அப்போது ஏற்பட்ட வலிகளையும் தாண்டிய இன்ப உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. நன்றி பிரபா. இத்தனையாவதாக வந்தது என்பது உதிரியான மகிழ்ச்சியே தவிர இங்கு போட்டி மனப்பான்மை கிடையாது. எனக்கு முன் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். 🙂 திரியின் ஆரம்பத்தில் சொன்னதுபோல் எனக்கு நானே போட்டியாளன்.
    1 point
  16. நாங்கள் எல்லாம் நேஷனல் லைசென்ஸ்தான் வைத்திருக்கிறம்.........இண்டெர்நேஷனலுக்கு இன்னும் கொஞ்சம் படிக்க வேணும் போல......! 😂 முறையே பையன், சுவி , கு.சா.......!
    1 point
  17. அவசரத்தில் பெயரை வைத்து எவரையும் எடைபோடக்கூடாது.......ரதி முதல்வராய் வந்தால் மிகவும் மகிழ்ச்சி .....! 🤔
    1 point
  18. 17 கிருபன் 10 பாவியள் போற இடமெல்லாம் பள்ளமும் திட்டியும் எண்டுறது போல இஞ்சை ஒராளுக்கு ஏறுமுகமே இல்லை. அங்கைதான் அப்பிடியெண்டால் இஞ்சையுமா? 🤣
    1 point
  19. கால்குலேட்டரையும் மிஞ்சி கணக்குப்போடும் சிறுவன்......! 🌹
    1 point
  20. ஒரு முன்னுதாரணம் இந்தத் தாய் ........! 🌹
    1 point
  21. அடுத்த போட்டி இருக்கெல்லோ! அப்ப உங்களை சிரிக்க வைத்து சந்தோசப்படுத்தி இருக்கிறன்.😀
    1 point
  22. காரணம், bit coin முதலாவது ETF (exchange traded funds) trade பண்ண, 19 அல்லது 20 ஆம் திகதி US regulators அனுமதித்து விட்டார்கள். தாறுமாறாக ஏறியது. ஆனாலும், bit coin இல் systemic ரிஸ்க் இருக்கிறது. ஆனால், இன்வெஸ்டிங் மற்றும் டிரேடிங் என்பது கிளினிக்கில் ஆக உணர்வுகளுக்கு இடம் அளியாமல் செய்வது. என்னிடம், அவளவு நேரம் இல்லை. இயலுமானவரை எழுதுகிறேன்.
    1 point
  23. வாழ்த்திய உறவுகளுக்கு நன்றி. ஒரு நாளுக்காவது முதலாம் இடத்தில இருந்திட்டன். ஏராளன் (குமுதா ) ஹப்பி அண்ணாச்சி.
    1 point
  24. வாழும், வாழ்ந்து தொலையும் 🤣 (இம்சை அரசன் பாணியில் வாசிக்கவும்). அக்கா நீங்கள் joint first place. நாளைக்கு ஸ்கொட்லாண்ட் வெல்ல நம்ம ஏராளன் தம்பி தாராள மனசோட கதிரையை விட்டுத்தர நீங்களும் கறுப்பியும்தான் முதலாம் இடம். @நந்தன் @மறுத்தான் sorry about that guys 🤣.என்னில பிழை இல்லை. அந்தோணியார் ஏமாற்றி போட்டார். உப்பிடிதான் ஓ எல் சோதனைக்கும் செய்தவர்.
    1 point
  25. யோவ் புலவரே என்னையா இது பொது வெளில வச்சி புரோக்கர் லிங் கேட்கிறீங்க🤣. இப்ப எல்லாமே ஆன் லைனில்தானே. உங்களுக்கு traditional brokers வேண்டும் என்றால் https://www.hl.co.uk Hargreaves Lansdown நல்லம். அவர்களும் ஒன்லைன் அப் எல்லாம் வச்சிருக்கினம். ஆனால் coinbase, binance, eToro போன்றவற்றையும் டிரை பண்ணலாம். புதிதாக தொடங்குபவர்கு நான் etoro வை பரிந்துரைப்பேன். User friendly. கொமிசன் இல்லை. ஆனால் இதை நம்பி ஏமாற வேண்டாம். Spread மிக அதிகமாக இருக்கும். அதாவது ஒரு பங்கின் விலை .10 என்றால் அவர்கள் .11 இல்தான் விற்பார்கள். பங்குகள் ஏறி கொண்ண்டிருக்கும் போது இந்த spread மேலும் அதிகரிக்கும். அதே போல் ஆட்டொமேடிக்கா take profit, stop loss ஐயும் செட் பண்ணவும் கூடும்: அதையும் பார்த்து எமக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும். ஈடோர்ரொவில் 100,000 டாலருக்கு ஒரு விளையாட்டு கணக்கு தருவார்கள். முதலில் அதில் விளையாடி பாருங்கள். அதில் கொஞ்சம் பிடிப்பு வந்ததும் நிஜத்தில் 50$ க்கு செய்து பாருங்கள் அதே போல் copy trading உம் செய்யலாம். அங்கே நல்லா உழைக்கும் ஒருவரை அப்படியே கொப்பி பண்ண ஒரு 1000 டொலரை போடுவது. நீங்கள் ஏதுவும் செய்யவேண்டியதில்லை. அவர் லாபம் என்றால் நீங்களும் லாபம். அவர் நட்டம் என்றால் நீங்களும் நட்டம். அதே போல் binance இல் அடிப்படை கணக்கு, பெரிய லெவலில் செய்பவர் கணக்கு எண்டு இரெண்டு இருக்கு. ஆனால் இது கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச். இங்கே ஸ்டொக் வாங்க முடியாது. மிக முக்கியமாக வாசியுங்கள். வசி தரும் வீடியோக்கள் போல தேர்ந்து எடுத்து பாருங்கள். ஒரு நிறுவனத்தை பற்றி முழுமையாக ஆராயுங்கள். கிரிப்டோவில் முதலில் mining என்றால் என்ன, proof of work என்றால் என்ன போன்ற அடிப்படைகளை விளங்கி கொள்ளுங்கள். நாம் மைன் பண்ணும் அளவுக்கு தேவையில்லை ஆனால் அடிப்படை விளங்கினால் நல்லம். அதே போல் மேலே எழுஞாயிறு சொன்ன tether பற்றியும் அறியுங்கள். பாய்ஸ் படத்தில் செந்தில் சொன்னது போல knowledge is wealth. அதை அடைந்து கொண்டால் பின்னர் அதை காசக்குவது அவ்வளவு கடினமாக இராது.
    1 point
  26. முதல்வர் தூங்கியிட்டார். அட கறுப்பியும் ரதியும் 2வது 3றாவதாக நிற்கிறார்கள்.
    1 point
  27. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் ஆடிய சிறிலங்கா அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 171 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு களத்தில் இறங்கிய அயர்லாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் 101 ஓட்டங்களுக்கு இழந்து சுருண்டது. முடிவு: சிறிலங்கா அணி 70 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஏராளன் 14 2 கறுப்பி 14 3 ரதி 14 4 முதல்வன் 12 5 சுவி 12 6 வாத்தியார் 12 7 ஈழப்பிரியன் 12 8 மறுத்தான் 12 9 நந்தன் 12 10 வாதவூரான் 12 11 சுவைப்பிரியன் 12 12 எப்போதும் தமிழன் 12 13 அஹஸ்தியன் 12 14 பிரபா சிதம்பரநாதன் 12 15 பையன்26 10 16 கோஷான் சே 10 17 கிருபன் 10 18 நுணாவிலான் 10 19 நீர்வேலியான் 10 20 குமாரசாமி 10 21 தமிழ் சிறி 10 22 கல்யாணி 10 என்னுடன் கீழே நிற்பவர்கள் மேலே ஏறுகின்ற மார்க்கம் இல்லாமல் தவிக்கின்றார்கள் வாழ்த்துக்கள் @ஏராளன் அப்படியே மேலே நிற்கமுடியாது!!
    1 point
  28. ந‌ம்பியா வெற்றி முன்னாள் தென் ஆபிரிக்கா வீர‌ர் ந‌ம்பியா அணிக்கு விளையாடி அமொக‌ வெற்றி தென் ஆபிரிக்கா அணியில் புர‌க்க‌னிக்க‌ப் ப‌ட்ட‌ வீர‌ர்க‌ள் ம‌ற்ற‌ நாட்டு குடியுருமை பெற்று ந‌ல்லா விளையாடின‌ம் David Wiese அடி அகோர‌ம் இவ‌ர் தென் ஆபிரிக்கா அணியால் புர‌க்க‌னிக்க‌ப் ப‌ட்ட‌ வீர‌ர்..................🤔
    1 point
  29. நல்ல டேஸ்டா இருந்தது அதாங்க முட்டை போண்டா இனிமே முட்டை போண்டா, முட்டை கோபி,முட்டை ரீ,பச்சை முட்டை தான் குடிக்க வேணும் போல இருக்கிறது😀😀
    1 point
  30. இன்றுதான் நான் இந்த திரியில் உள்ள விடயங்களை பக்கம் 1லிருந்து skipசெய்யாமல் வாசித்தேன்.. @கிருபன், உங்களுடைய நேரம், தகவல்கள், கேள்விகளை தயாரித்த விதம், புள்ளிகள் அனைத்திற்கும் மிக்க நன்றி.. சுவாரசியமாக உள்ளது..super 12லிருந்துதான் ஜேர்மன் தாத்தா 22வது இடமா இல்லை நான் 22 இடமா எனத்தெரியும்..🙂
    1 point
  31. இந்தப் பெரிய வீட்டில் ஒரு ஆள் தடடந்தனிய இருக்க ஏலாது தானே .😃
    1 point
  32. சாவகசேரியில் ஊத்துன கழிவோயிலை மாறி பார்த்துவிட்டான்கள் போல் உள்ளது .
    1 point
  33. அழகிய கிராமம் வனப்பான தென்னை பணிப்புகை அழகு
    1 point
  34. குமாரசாமி அண்ணை... உங்களிடமிருந்து, இப்படியான கேள்வி வரும் என்று.. நான், எதிர் பார்க்கவே இல்லை. இப்படியான... செயலை, செய்பவர்கள்.. நிச்சயம், மன நோயாளிகளாகவோ... அல்லது... வேண்டுமென்றே, இந்தப் படத்தைப் போட்டு.. முகநூலில்... தம்மை, பிரபலமாக்குவதற்கும் இருக்கலாம். உண்மையில்.. அந்த மனிதன், படுக்கும் பாவாடையுடன்... வங்கிக்கு போனது, தவறு... தவறு தான்... பிற் குறிப்பு: நானும், வீட்டில் நிற்கும் போது... எப்பவும் சாரத்துடன்தான் நிற்பேன். அதுக்காக... இவர் வெளிநாட்டில், பொது இடத்தில் செய்த செயல், மிகவும்... தரக் குறைவானது.
    0 points
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.