Jump to content

Leaderboard

  1. மெசொபொத்தேமியா சுமேரியர்

    மெசொபொத்தேமியா சுமேரியர்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      12

    • Posts

      8472


  2. Justin

    Justin

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      5643


  3. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      28969


  4. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      43058


Popular Content

Showing content with the highest reputation on 12/28/21 in all areas

  1. களத்திற்கு ஒவ்வொரு நாளும் வந்தேனே.. ( வாசிக்க மட்டும்) எப்படி என்னை எட்டி உதைக்கலாம் ஆ? இது கூட்டுச்சதியா? அல்லது கூட்டாளிகள் சதியா?🤬
    2 points
  2. நானும் நினைவு வந்தால்தான் வந்து ஒட்டுவது ஓணாண்டியார். மிச்சத்தை 2022 இல் ஒட்டிமுடிக்கவேண்டும் என்று கொரோனா அம்மனுக்கு வேண்டுதல் வைத்திருக்கிறன்😬
    1 point
  3. படிமங்கள் கைப்பற்றப்பட்ட படைக்கலன்கள் கட்டம் ஒன்றின் போது 'இந்நான்கும் ஓ.அ-3 இல் கனகராயன்குளம் படைத்தளத்தில் சிறீலங்கா படைகள் கைவிட்டு ஓடிய பின் புலிகளால் கைப்பற்றைப்பட்ட சண்டை ஊர்தி 603 அல்விசு சராசென்கள் ஆகும்' 'கனகராயன்குளம் படைத்தளத்தில் கைப்பற்றப்பட்ட அல்விசு சலாதீன் கவச சகடமும் (Armoured Car) சண்டை ஊர்தி 603 அல்விசு சராசென்களும்' 'ஒட்டுசுட்டான் சிறுமுகாமில் கைப்பற்றப்பட்ட இயுனிகோன் விதம்-6இன் மேல் கைப்பற்றியோர்' கட்டம் மூன்றின் போது 'ஓயாத அலைகள்-3 கட்டம்-3இல் புலிகளால் கைப்பற்றப்பட்ட சோவியத் ஒன்றியக் கால 25மிமீ 2எம்-3 கடற்சுடுகலன் (25mm 2M-3 Naval Gun). இப்படைக்கலன் பின்னாளில் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்டது. பின்னால் நடைபேசியோடு நிற்பவர் விக்டர் கவச எதிர்ப்புப் படையணியின் கட்டளையாளர் லெப். கேணல் இளங்கீரன் ஆவார்' கட்டம் நான்கின் போது '02-04-2000 அன்று இத்தாவில் பெட்டியை உடைக்க பகையால் மேற்கொள்ளப்பட்ட 'வலிசக்கர' நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட இயுனிகோன் விதம்- 2/3 இல் ஏறிநின்று சமராடும் பெண் போராளிகள். இக் களமுனையில் பெண் போராளிகளின் நிலைகளை ஊடறுத்து உள்நுழைந்த இக்கவசவூர்தியுடன் தட்டந்தனியாக பொருதி இதிலிருந்த சிங்களப் படையினரைக் கொன்றுவிட்டு இதற்குள் கைக்குண்டை வீசியெறிந்துவிட்டு ஏறி இதில் பூட்டப்பட்டிருந்த .50 கலிபர் இயந்திரச் சுடுகலனைக் கொண்டு பிற சிங்களப் படையினரோடு சமராடி இக்கவச ஊர்தியைக் கைப்பற்றியவர் தரைக்கரும்புலி லெப். கேணல் இளங்கோ (வீ.சா.: 21/10/2007) ஆவார். ' '2-04-2000 அன்று பகையால் மேற்கொள்ளப்பட்ட 'வலிசக்கர' நடவடிக்கையின் போது இத்தாவில் பெட்டியினுள் கைப்பற்றப்பட்ட மற்றொரு இயுனிகோன் விதம்-2/3 மேல் நிற்கின்றார், பால்ராயர் அவர்கள்' 'இத்தாவிலில் கைப்பற்றப்பட்ட வகை-63 கவச ஆளணி காவியுடன் கேணல் பால்ராஜ் நிற்கின்றார்' 'ஆனையிறவில் கைப்பற்றப்பட்ட 152 மிமீ தெறோச்சி மீது ஏறி நிற்கும் விக்டர் கவச எதிர்ப்புப் படையணியினர். நடுவில் கொடியுடன் நிற்பவர் அதன் கட்டளையாளர் லெப். கேணல் சேட்டன்' 'ஆனையிறவில் கைப்பற்றப்பட்ட 152 மிமீ தெறோச்சி. கேணல் மணிவண்ணன், லெப். கேணல் சேட்டன் ஆகியோர் தெறோச்சியின் இடது பக்கத்தில் நிற்கின்றனர்.' 'பரம்பப்பட்ட ஆனையிறவுக் கூட்டுப்படைத்தளத்திலிருந்து கைப்பற்றப்பட்ட 152மிமீ இழுவைச் சேணேவியின் மேல் போராளிகள் அமர்ந்திருக்க கட்டியிழுத்துச் செல்லப்படுகிறது.' 'நெருப்பெழுந்து புகை சூழ எரியும் ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தினுள் கைப்பற்றப்பட்ட 122மிமீ தெறோச்சி' வகை-66 152மிமீ தெறோச்சி ஓயாத அலைகள் மூன்றின்போது ஆனையிறவில் கைப்பற்றிய தெறோச்சிகளை பார்வையிடும் தலைவர் & கிட்டு பீரங்கிப் படையணியின் முன்னாள் கட்டளையாளர் கேணல் ராஜு கட்டம் ஐந்தின் போது 152 மிமீ தெறோச்சி கொண்டு பகை மீது எறிகணை வீசும் கிட்டு பீரங்கிப் படையணியினர் :
    1 point
  4. படிமங்கள் ஓயாத அலைகள் - 3 பாரிய படை நடவடிக்கையின் சமர்க்களக் காட்சிகள் (22) - http://www.aruchuna.com/categories.php?cat_id=66 =============================== ஓயாத அலைகள் மூன்று - நிழற்படத் தொகுப்பு: https://www.scribd.com/document/141290851/ltte-unceasing-waves-3#fullscreen&from_embed =============================== 'கைப்பற்றப்பட்ட அன்று ஆனையிறவு நுழைவுவாயில் பெயர்ப் பலகை. ' ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையின் தொடக்கத்தின் போது போராளிகளோடு கலந்துரையாடுகிறார், தலைவர்: 'இலகு இயந்திரச் சுடுகலனை கீழ்நோக்கி பிடித்தபடி நிற்பவர் அவருடைய மெய்க்காவலர் ஆவார்' 'கேணல் கடாபியோடு கதைக்கிறார் தலைவர்' 'கட்டம் நான்கு திட்டமிடலின் போது. அருகில் லெப். கேணல் மகேந்தி ஏனைய கட்டளையாளர்களோடு நிற்கின்றார்' 'வடபோர்முனை தாக்குதலை விளங்கப்படுத்தும் ஒருங்கிணைப்புக் கட்டளையாளர் கேணல் பானு.' 'ஓயாத அலைகள் - 3 இல் இத்தாவில் பெட்டிச் சமர் தொடர்பாக விளக்குகிறார் பால்ராஜ் அவர்கள்' 'ஆனையிறவு இறுதித் தாக்குதலிற்கு திட்டமிடும் கட்டளையாளர்கள்' கட்டம்-4இன் போது சோரன்பற்று - மாசார் பரப்பினூடாக தப்பியோடும் சிங்களப் படையினர் கட்டம்-4 இன் முடிவில் ஆனையிறவு கூட்டுப் படைத்தளத்தை விட்டு தப்பி ஓடும் சிங்களப் படையினர் 'மாலதி படையணியினர்' ஆனையிறவினை மீட்டபின்னர்(22/04), சமர் ஒருங்கிணைப்புக் கட்டளையாளர் கேணல் பானு அவர்கள் (2000 ஆம் ஆண்டில் கேணல் தரநிலையுடையவர்) தமிழீழத் தேசியக் கொடியான புலிக்கொடியை 23/04/2000 அன்று காலை 9:52ற்கு கூட்டுப் படைத்தளத்தின் நடுப்பரப்பில் ஏற்றிவைக்கிறார் . 'அன்னார் அருகில் நிற்பவர் கட்டளையாளர் பாப்பா அவர்கள் ஆவார். அந்தக் கட்டில் இருக்கும் இகுப்பங்களிற்கு அருகில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகள் குறிக்கும் சொற்கள்: மட்டு-அம்பாறை' ஆனையிறவு பாத யாத்திரை: ''வெற்றிகொள்ளப்பட்ட அற்றை நாளே ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தினுள் அதைக் காணச் செல்லும் தமிழீழ நடைமுறையரசின் குடிமக்கள்'' "வெற்றிகொள்ளப்பட்ட ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தினுள் இருந்து புகை எழும்புகிறது" 'வெற்றிகொள்ளப்பட்ட ஆனையிறவு படைத்தளமும் மீட்கப்பட்ட ஆனையிறவு மண்ணும். அந்தக் கட்டில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகள் குறிக்கும் சொற்கள்: ஜெயந்தன் படையணி. அடுத்த நாள் இந்தக் கட்டிற்கு அருகில்தான் புலிக்கொடி எற்றப்பட்டது.' 'கைப்பற்றப்பட்ட அன்று ஆனையிறவு ஊர்ப்பெயர் பலகை. அதில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகள் குறிக்கும் சொற்கள்: ஜெயந்தன் படையணி (கைப்பற்றுவதில் முக்கிய பங்காற்றிய படையணியின் பெயர்)' 'ஆனையிறவை மீட்ட பின்னர் ஒரு பாட்டியோடு கட்டொன்றில் அமர்ந்திருந்து உரையாடும் ''பொது நோக்கு இயந்திரத் துப்பாக்கி'' சூட்டணி ஒன்று' இக்கவசவூர்தியில் எழுதப்பட்டுள்ளவை: "மேஜர் தயாளினி மேஜர் ஐயள் கப்டன் ??ய் கப்டன் மணியிழை" இவர்கள் நால்வரும் சோதியா படையணிப் போராளிகள் ஆவர். இந்தப் போராளிகளே இக்கவச ஆளணி காவியினை அழித்தவர்கள் ஆவர்! 'இத்தாவில் பெட்டிச் சமரில் அழிக்கப்பட்ட இந்த வகை-63 கவச ஆளணி காவியானது வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு காப்பகம் அமைக்கப்பட்டு 26 மார்ச் 2005 அன்று பளையில் கேணல் தீபன் அவர்கள் நாடா வெட்டித் திறந்துவைக்க சோ.தங்கன் அவர்களால் கல்வெட்டு திரைநீக்கம் செய்யப்பட்டு மக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது' 'பின்னால் தெரியும் அந்த நினைவுக்கல்லானது பளை சேணேவித்தளத்தை அழித்த போது வீரச்சாவடைந்த கரும்புலிகள் நினைவாக கட்டப்பட்டது ஆகும்.'
    1 point
  5. 1 point
  6. முன்னதான சிங்கள வன்வளைப்பு நடவடிக்கைகள் இதில், வன்னியில் 1997 ஆம் ஆண்டு முதல் இந்நடவடிக்கை தொடங்கப்படும்வரை சிறீலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் அதன் மூலம் தமிழர் தரப்பு இழந்த நிலங்கள் தொடர்பாகவும் சுருக்கமாக பார்ப்போம். 1997 ஆம் ஆண்டு மே மாத நடுப்பகுதியானது வன்னி பெருநிலப்பரப்பின் தென்பகுதி யாவும் அதிரத்தொடங்கிய காலகட்டமாகும். சிங்கள சிறீலங்கா அரசின் பூதப்படைகளானவை தமிழ் மண்ணை விழுங்கவென பெரும் ஆரவாரத்தோடு 'ஜெயசிக்குறுய்'(தமிழ்: வெற்றிநிச்சயம்) என்று பெயர் சூட்டிய பாரிய படையெடுப்பினை 13 திகதியன்று தொடங்கியிருந்தன. சந்திரிக்கா அம்மையாரின் மாமனாரும் அப்போதைய சிங்கள படைய நாயகமுமான ரத்வத்தையின் கண்டி வீதி பிடித்து யாழிற்கு பாதை திறப்பு என்ற நோக்கத்தோடு வந்த சிங்களப்படைகள் புலிகளின் 18 மாத நெடிய எதிர் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க ஏலாமல் பெருத்த ஆய்த-ஆளணி இழப்புகளோடு 18 மாதங்கள் கழித்து (1999 நவம்பர்) மாங்குளத்தோடு தம்முடைய நகர்வினை நிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இக்காலகட்ட வன்வளைப்பு நடவடிக்கையின் போது 1000 சதுர கிமீ தமிழர் நிலங்கள் சிங்களவரால் வல்வளைக்கப்பட்டன. 'வெற்றிநிச்சயம் நடவடிக்கையின் பின்னர் வல்வளைக்கப்பட்ட மொத்த சதுர கிமீ: 1000' இந்நடவடிக்கை அலுவல்சாராக முடிந்ததாக அறிவிக்கப்படாத நிலையிலேயே, 1998 டிசம்பர் 2ம் திகதி 'ரிவி பல'(தமிழ்: சூரிய வலிமை) என்ற மற்றொரு படை நடவடிக்கை சிறீலங்கா அரசால் தொடங்கப்பட்டது. கண்டி வீதிக்கு கிழக்காக நெடுங்கேணி-கரிப்பட்டமுறிப்பு பரப்புயில் நிலைகொண்டிருந்த சிறீலங்காப்படைகள் இரவோடிரவாக முன்னேறி ஒட்டுசுட்டான் மற்றும் அதனை அண்டிய பரப்புகளை - புதுக்குடியிருப்பிலிருந்து 10 - 15 கிலோ மீற்றர் தொலைவுவரை வரை- வல்வளைத்தன. இந்நடவடிக்கையால் வன்னி பெருநிலப்பரப்பின் பெருங்குளங்களில் ஒன்றான முத்தையன்கட்டுக் குளத்தின் பாசன வசதி பெற்றுவந்த நிலப்பரப்பு பேயிடமாகியது. இவ்வன்வளைப்பு நடவடிக்கையின் போது 134 சதுர கிமீ தமிழர் நிலங்கள் சிங்களவரால் வல்வளைக்கப்பட்டன. 'சூரிய வலிமை நடவடிக்கையின் பின்னர் வல்வளைக்கப்பட்ட மொத்த சதுர கிமீ: 134' பின்னர், 1999 மார்ச் 6 அம் திகதியன்று பூவரசன்குளத்தில் இருந்தும் பம்பைமடுவில் இருந்தும் மற்றொரு படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. 'ரணகோச-1' (தமிழ்: போர்முழக்கம்) என்று பெயர் சூட்டப்பட்ட இந்நடவடிக்கையால் இரணையிலுப்பைக்குளம் வரையில் உள்ள நௌவி, பனங்காமம், பாலமோட்டை, மூன்றுமுறிப்பு மற்றும் வன்னியின் பெருங்குளங்களில் ஒன்றுள்ள முத்தையன்கட்டு ஆகிய ஊர்கள் வல்வளைக்கப்பட்டன. இதனால் 535 சதுர கிமீ தமிழர் நிலங்கள் சிங்களவரால் விழுங்கப்பட்டன. 'போர்முழக்கம்-1 நடவடிக்கையின் பின்னர்: வல்வளைக்கப்பட்ட மொத்த சதுர கிமீ: 535' அடுத்து, 1999 மார்ச் 19 ஆம் திகதியன்று வவுனியா-மன்னார் வீதியில் உள்ள மடு வீதிச் சந்தியிலிருந்தும் மூன்றுமுறிப்பில் இருந்தும் தொடங்கப்பட்ட 'போர்முழக்கம்-2' நடவடிக்கை மூலம் தமிழர் நிலங்களில் 325 சதுர கிமீ பரப்பளவு சிங்களப்படைகளின் ஆதிக்கத்தினுள் சென்றது. 'போர்முழக்கம்-2 நடவடிக்கையின் பின்னர்: வல்வளைக்கப்பட்ட மொத்த சதுர கிமீ: 325' அடுத்து ,1999 மே 8 அம் திகதியன்று மன்னார்-வவுனியா வீதியில் உயிலங்குளம் பரப்புயில் நிலை கொண்டிருந்த சிங்கள தரைப்படையினர் 'போர்முழக்கம்-3' நடவடிக்கையினை தொடங்கினர். இந்நடவடிக்கை மூலம் சிங்களப் படையினர் கறுக்காய்குளம்-ஆண்டான்குளம் வழியாக நகர்ந்து அடம்பன், ஆட்காட்டிவெளி மற்றும் பரப்புக்கடந்தான் ஆகிய ஊர்களைக் கைப்பற்றி தமிழரின் 102 சதுர கிமீ நிலப்பரப்பினை வல்வளைத்தனர். 'போர்முழக்கம்-3 நடவடிக்கையின் பின்னர்: வல்வளைக்கப்பட்ட மொத்த சதுர கிமீ: 102' அடுத்து, 1999 ஜூன் 10ம் மற்றும் 25ம் திகதிகளில் பாலம்பிட்டியில் இருந்தும் பாப்பாமோட்டையில் இருந்தும் தொடங்கப்பட்டது 'போர்முழக்கம்-4' நடவடிக்கை. இதன் மூலம் இவ்விடங்களில் இருந்து பள்ளமடு வரையிலான 425 சதுர கிமீ பரப்பளவு தமிழர் நிலம் சிங்களப்படைகளால் வல்வளைக்கப்பட்டது. 'போர்முழக்கம்-1' நடவடிக்கையில் இருந்து 'போர்முழக்கம்-4' நடவடிக்கைவரை புலிகளின் பாரிய எதிர்ப்பினை சந்திக்காதலால் பெரும் ஊக்கமகிழ்வான சிங்கள அரசு, யாழ். குடாநாட்டிற்கான தரைவழிப் பாதையினை பூநகரி ஊடாக திறந்துவிடலாம் என்று நப்பாசை கொண்டது. இதன் காரணமாக 1999ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தின் முற்பகுதியில் பூநகரியைக் கைப்பற்றும் நோக்கத்தோடு 'சுழல்காற்று-1' என்ற நடவடிக்கையினை சிங்கள அரசு தொடங்கியது. இதற்காக சிறீலங்காவின் முப்படைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு மண்டைதீவில் இருந்து கௌதாரிமுனையிற்கு கடல் மற்றும் வான் வழியாக பாரிய தரையிறக்கம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. தரையிறக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையானது விடுதலைப்புலிகளின் கடும் எதிர் தாக்குதலால் முற்றாக முறியடிக்கப்பட்டு தோல்வியில் முடிவடைந்தது. அடுத்து, 1999ம் ஆண்டு செப்டெம்பர் 12ம் திகதி 'போர்முழக்கம்-5' நடவடிக்கை சிங்களப்படைகளால் தொடங்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தின் சிராட்டிக்குளம், பெரியமடு மற்றும் பள்ளமடு பரப்புகளை வல்வளைக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட இந்நடவடிக்கையானது விடுதலைப்புலிகளின் கடும் எதிர்தாக்குதல் மூலம் முறியடிக்கப்பட்டது. கடைசிக்கு முதலாக, 1999ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி முதல் 17 ம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட 'வோட்டர்செட்-1' (தமிழ்: நீர்சிந்து) நடவடிக்கை மூலம் முத்தையன்கட்டு குளத்தை சூழவுள்ள சில பரப்புகள் கைப்பற்றப்பட்டன. இதன் மூலம் மேலும் 12 சதுர கிமீ நிலப்பரபபினை வல்வளைத்தது, சிங்களம். 'நீர்சிந்து-1 நடவடிக்கையின் பின்னர்: வல்வளைக்கப்பட்ட மொத்த சதுர கிமீ: 12' கடைசியாக, ஓயாத அலைகள் மூன்று தொடங்கப்படுவதற்கு முன்னர், அம்பகாமம் பரப்பில் இருந்து 'நீர்சிந்து-2' என்ற படை நடவடிக்கையினை 1999 ஒக்டோபர் 28ம் திகதி சிங்கள அரசு தொடங்கியது. இதன்மூலம் முத்தையன்கட்டுக் குளத்தை முற்றாக சுற்றிவளைத்து அம்பகாமத்திற்கு வடகிழக்காக உள்ள படையினருடன் தரைவழி தொடர்பேற்படுத்துவதே நோக்கமாகும். இவ்வாறாக மொத்தம் 2,533 சதுர கிமீ வரையிலான தமிழர் நிலங்கள் சிங்கள சிறீலங்கா அரசபடைகளால் வல்வளைக்கப்பட்டன. உசாத்துணை: ஓயாத அலைகள் - 3 முழு நீள நிகழ்படம் http://www.tamilcanadian.com/article/tamil/447 ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன், 26|12|2021 ********
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.