Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. பாலபத்ர ஓணாண்டி

  பாலபத்ர ஓணாண்டி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   12

  • Posts

   983


 2. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Posts

   71674


 3. Nathamuni

  Nathamuni

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Posts

   12465


 4. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Posts

   25372


Popular Content

Showing content with the highest reputation on 01/10/22 in all areas

 1. (இராமாயணத்தில் ஆரியப்பொய்களுக்கு எதிராக நான் இராவணன் பக்கம் என்பதை சொல்லிக்கொண்டு.. இன்றைய இலங்கை நிலையின் உவமைக்காக ) இராவணன் ராமனுடனான யுத்தத்தில் தனது ஆயுதங்களை இழந்து நிராயுத பாணியாக ராமன் முன் தலைகுனிந்து நிற்கிறான்.. அப்பொழுது எவ்வளவோ ஆயிரம் உவமானங்கள் இருக்க இராவணனின் நிலையை,வேதனையை எதற்கு கம்பன் ஒப்பிடுகிறான் எண்றால் கடன்பட்டவன் நிலைக்கு ஒப்பிடுகிறான்.. அப்படி ஒரு கொடிய வேதனையான நிலமை கடன்பட்டு அதை அடைக்க முடியாமல் தடுமாறி நிற்பது கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்- கம்பன் ஆனால் சிங்கள அரசோ அதைப்பற்றிய எந்த வெக்கமோ துக்கமோ இன்றி கடன் மேல் கடன் வாங்கி குவிப்பதில் முனைப்பாக இருக்கிறது.. இது எங்க போய் முடியுமோ..??
  7 points
 2. உங்களுக்கு தனி நாடு கிடைப்பதில் முடியும். அசைக்க முடியாத பேரரசு என்று மார் தட்டி, எக்காளம் செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் பேரரசுக்கு, இடியாக வந்தது ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனியின் அதிகாரத்துக்கு வந்த ஹிட்லர். அடுத்தவன் சுதந்திரத்தை துப்பாக்கி முனையில் பறிப்பது அறமன்று என்ற போதனை கிடைத்தது, பேரரசுக்கு. அதே போல, புலிகளை ஒழித்த கோத்தாவுக்கு, அரியணை கொடுத்த சிங்களத்துக்கு, பசி என்றால் என்ன என்று போதிக்கும் காலமிது. அடுத்தவன் சுதந்திரத்தை துப்பாக்கி முனையில் பறிப்பது அறமன்று என்ற போதனை கிடைக்கும், சிங்களத்துக்கு.
  6 points
 3. நம்மட அடையாளங்கள், பண்டைய கோவில்கள் என்பன பல இந்த தீவை சுத்தி இருக்கிற போதிலும். பலரின் அலட்சியதன்மை, அறியாமையால் இளம் சமூகத்திற்கு அவை கடத்தபடாமலே செல்கிறது, அப்படி ஒரு இடம் தான்இதுல சொல்லி, காட்டி இருக்க இந்த சோழர் காலத்து சிவன் கோவிலும், அதனுடன் சேர்ந்த தமிழ் மொழி கல்வெட்டும். திருகோணமலையிலிருந்து 25- 45 KM தொலைவில் காணப்படுகிற இந்த இடம் பலருக்கு தெரியாமலே செல்கிறது, தொல்பொருள் திணைக்களத்தின் அலட்சியத்தால் சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. நீங்களும் பார்த்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்கோ.
  5 points
 4. அக்கினிக்குஞ்சு இணையத்தில் இம்மாதம் வெளியாகியிருந்தது . அந்த மேளச் சத்தத்தின் அதிர்வில் கண்விழிக்கிறார் தேவர். டகு டகு டகு டகு டகு டகு டகு டகு டண் டண் டண் டண் டாடாண்டு டண் டண் டாடாண்டு டண் டண் டகு டகு டகு டகு டகு டகு டகு டகு டண் டண் டண் டண் டாடாண்டு டண் டண் டாடாண்டு டண் டண் பறை மேளத்துக்குச் சொல்லியிருக்கு எண்டல்லோ சொன்னவை. இதென்ன கர்ண கடூரமான ஒரு அடி. சத்தத்தைக் கேட்டால் பறை மேளச் சத்தம் போல இல்லையே. மெதுவாக யார் அடிக்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தார் தேவர். அதில் ஒன்றே ஒன்றுதான் பறை மேளம். மற்ற இரண்டும் வேறு வடிவத்தில் இந்தியாவில் கிந்திக் காரங்கள் அடிக்கிற மேளத்தின்ர வடிவில இருக்க, எல்லாமே இப்ப மாறிக்கொண்டேதான் வருகுது என்னைத் தவிர என எண்ணிக்கொண்டார். தாளக்கட்டுப்பாட்டோட தான் மூன்றுபேரும் மேளத்தை அடிக்கினம். ஆனாலும் முன்னைய இசை எங்கோ தொலைந்து ........... சனங்களுக்கும் அதுபற்றி எல்லாம் யோசிக்க எங்க நேரம். காசைக் குடுத்துக் கடமையைச் செய்தாச் சரி என்ற மனநிலை. டாங்கு டுக்குடு டுக்குடு டுக்குடு டாங்கு டுக்குடு டுக்குடு டுக்குடு டாண் டாண் டாண் டாண் டாண் டாண் டாங்கு டுக்குடு டுக்குடு டுக்குடு முன்னரெல்லாம் செத்தவீடுகளுக்கு அடிக்கும் இசை நினைவில் வந்து மனதை நிறைக்க பெரிய பெருமூச்சு வெளிவருகிறது அவரிடம் இருந்து. உடலை அசைக்க முடியாமல் இருக்கிறது. கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகப் படுத்த படுக்கைதான். எட்டு மாதங்களுக்கு முதல் சைக்கிளால விழுந்து ஆஸ்பத்திரியில கொண்டுபோய் போட்டதுதான். கோதாரி விழுந்த கொறோனா அங்க தொத்தி தனி வாட்டில கொண்டேப் போட்டு ஒருத்தரும் கொறோனா வந்தவையைப் பாக்க வரேலாது எண்டுபோட்டு, “இவரைப் பார்க்க தனி ஆள் போடுவம். ஒரு நாளைக்கு 2000 ரூபா தரவேணும்” எண்டு சொன்னார்கள். அங்க போய் ஆரிட்டைக் கதைக்க முடியும்? உடனேயே வீட்டுக்காறரும் வேற வழியில்லாமல் ஓம் என்று தலையாட்ட, ஒழுங்கான சாப்பாடுகூட அவங்கள் தராமல்த்தான் நான் சரியாய் இளைச்சுப்போனன் என எண்ணியவருக்கு மானச்சாட்சி உறுத்தியது. காலையில இடியப்பமும் சொதியும் சம்பலும் கட்டிய பார்சல் கொண்டுவந்து குடுத்தவங்கள் தானே. மத்தியானமும் இரண்டு கறியோட சோறு, இரவிலும் என்ன வேணும் எண்டு கேட்பாங்கள். சிலவேளை பக்கத்துக் கட்டில்காரர் சாப்பிடும்போது அவிச்ச முட்டை கூடக்கண்ணில் பட்டதுதான். இவர் தான் வீட்டில இருந்து சாப்பாடு வாறேல்லை என்ற கோபத்தில வேண்டாம் எண்டு தலையாட்டிவிட்டுச் சாப்பிடாமல் பிடிவாதம் பிடிச்சது. சாப்பிடாமல் விடவிட வயதுபோன இவரின் குடல் இன்னும் சுருங்கிப்போய் இவரால ஒழுங்காச் சாப்பிடவே முடியாமல் போச்சு. ஒரு மாதத்தின் பின்னர்தான் அவரை வீட்டுக்குக் கூட்டிப் போக அனுமதித்தார்கள். இவரைப் பார்த்த ஆளுக்கு வீணாக அறுபதாயிரம் கட்ட மருமகன் தான் தன் இருப்பிலிருந்த பணத்தைக் கொடுக்கவேண்டியதாகிவிட்டது. இவர் மருமகன் இவரைக் கூட்டிக்கொண்டு போக வந்து பார்த்து என்ன இப்பிடி மெலிச்சு போனார் மாமா என்று ஏங்கித்தான் போனான். வீட்டை போனதும் இவர் மனைவி சந்திரா ஐயோ என்னப்பா இப்பிடி ஆயிட்டிங்களே என்று கத்திக் குளறி அழ, மாமி அவருக்கு வருத்தம் இல்லை மாமி. நீங்கள் அழுது அவரைப் பயப்படுத்தாதேங்கோ எண்டதோடை மகள்களின் சத்தம் வராத அழுகையும் நிண்டு போச்சு. வெளிநாட்டில இருக்கிற இவற்றை மருமகன் அனுப்பின காசில உயத்திப் பதிக்கிற கட்டில் வாங்கி அவரை அதில கிடத்திச்சினம். பேரப்பிள்ளையள் எல்லாம் இவரில நல்ல உயிர். சுற்றிவர வந்து நின்று இவரின் கையைப் பிடிச்சுக்கொண்டு தாத்தா என்று விக்கியபடி இருக்கினம். “எனக்கு ஒண்டும் இல்லை. அதுதான் நான் வீட்டை வந்திட்டன் தானே அழாதேங்கோ அப்பனவை” “சந்திரா உன்ர கையால இடியப்பமும் சம்பலும் சொதியும் செய்துதா” தலையைத் திருப்பி மனைவியிடம் கேட்க “வருத்தமாக கிடந்தாலும் அவற்றை குரலிலை இருக்கிற கம்பீரம் குறையேல்லை” என எண்ணியபடி எழுபத்தி ஐந்து வயதுக் குமரி மகிழ்வுடன் சமையலறைக்கு ஓடுகிறார். ************************************************ பணக்காரக் குடும்பத்தில இந்திரன் மூத்த மகன். மூன்று பெயரை ஒன்றாகச் சேர்த்து பெற்றவர்கள் ஏன் அவனுக்கு வைத்தார்களோ என்று அவன் அடிக்கடி விசனப்பட்டதுண்டு. பள்ளிக்கூடத்தில சேரந்தபோது மார்க்கண்டு வாத்தியார் ஆரடா உனக்கு உந்தப் பெரிய பேரை வச்சது எண்டு சொல்லிக்கொண்டு அவனின் பெயரை உச்சரிக்க மற்றப் பிள்ளையள் எல்லாம் சிரிக்க இவனுக்கு அவமானமாகப் போய்விட்டது. என்ர பேர் நல்லாத்தானே இருக்கு என்று இவன் சொல்ல, “எனக்கு வாய் காட்டிறியோ. கையை நீட்டடா என்று சொல்லி தான் வைத்திருந்த பெரிய பிரம்பால் போட்ட அடியில் கை வீங்கியதுகூட இந்திரனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. இந்த வாத்தியிட்டை இன்னும் எத்தனை நாட்கள் படிக்கவேணுமோ என்ற கவலையே பெரிதாக ஏற்பட்டது. அன்று மாலையே வீட்டுக்குப் போய், “ஏனமா இப்பிடிப்பெரிய பெயர் வச்சனீங்கள்” என்று கொஞ்சம் கோபத்துடன் கேட்க, “எல்லாரும் ஒரேமாதிரிப் பேர் தானே வைக்கிறவை. உன்ர பெயர் ஆருக்காவது இருக்கோ சொல்லு. மற்றவைக்கு ஒரேஒரு பேர்தான் இருக்கு. உனக்கு மூண்டுவிதமாக கூப்பிடலாம்” தாய் கூறியது சரியாகவே பட அவனுக்கு ஆறுதல் ஏற்பட்டது. வளர வளர பெயரைக் குறுக்கிச் சிலர் தெய்வா என்றும் சில நண்பர்கள் இந்திரன் என்றும் அழைக்க இவனுக்கு இந்திரனே பிடித்துப்போனது. பணக்காரச் செல்லர் என்ற தந்தையின் பட்டமே இவனைப் படிக்கவிடாது பின் தள்ளியது. உனக்கென்ன நல்ல சொத்துப்பத்து என்று நண்பர்கள் சொல்லும்போது இவனையறியாமலே ஒரு கர்வம் இவன் முகத்தில் வந்தமர்ந்துவிடும். இத்தனைக்கும் இந்திரனின் தந்தை ஒன்றும் உழைத்துப் பணக்காரர் ஆனவர் கிடையாது. பெரிதாகக் கல்வியறிவும் கிடையாது. “அந்தக் காலத்தில வழியிலாத சனங்களின்ர காணியளைக் காசு குடுத்து எழுதிவாங்கினதும், விதானை, புரக்கராசி எல்லாம் சேர்ந்து கன காணியளை உப்பிடித்தான் காலாலை அளந்தே வாங்கினவை” என்று இவனின் தந்தையின் தாய்க்கிழவி பேரப்பிள்ளைகளை இருத்திவைத்துக் கதை சொல்லும் வேளைகளில் கூறும்போது, “அதுக்கும் ஒரு திறமை வேணும் எல்லோ மாமி. எல்லாராலையும் அது முடியுமே” என்று மாமனாருக்கு இவன் தாயார் வக்காலத்து வாங்குவதையும் சிறு வயதில் கேட்டிருக்கிறான். ஊரில கால்வாசித் தோட்டக்காணி இவர்களதாய்த் தான் இருந்தது. தோட்ட வேலை செய்யவும் நிறையப்பேர் இருந்தார்கள். ஆனால் இந்திரனின் வீடு அத்தனை பெரிதாக இல்லை. வளவுதான் எட்டுப் பரப்பு. அந்தப்பக்கம் இரண்டு அறைகளுடன் ஒரு கட்டடம். பக்கத்தில சமையலறை. இந்தப்பக்கம் ஒரு அறை. மூண்டும் ஆண்பிள்ளைகள் என்றதால தானோ என்னவோ செல்லர் பெரிதாக வீட்டைக் கட்டவில்லை. பிள்ளைகளுக்கும் அந்த இரசனையும் இல்லை. இப்படியான விடயங்களில் பெண்கள் எல்லாத்துக்கும் ஆசைப்படுபவர்கள் என்ற குற்றச்சாட்டு இவனின் தாயோ அதற்கு எதிர்மாறாக இருந்தார். அதற்கு யாவரும் பெரிதாகப் படிக்காததுகூடக் காரணமாக இருக்கலாம். இருந்தாலும் முற்றத்தில் தனியாக ஒரு கட்டடம். நாலு பக்கமும் குந்துகளேயன்றி சுவர் எழுப்பாமல் கத கத என்று நான்கு பக்கமும் காற்று வருவதுபோல் கட்டியிருந்தது நன்றாகத்தான் இருந்தது. மூத்த பிள்ளை எண்டதாலை அவரை நன்றாகப் படிப்பிக்க வேண்டும் என்று அவர் தந்தை ஆசைப்பட்டாலும் அவனால் முன்னிலை மாணவனாகவே முடியவில்லை. தந்தையும் நல்ல பள்ளிக்கூடங்கள் என்று இரண்டு மூன்றில் மாற்றிமாற்றிச் சேர்த்தும் பார்த்தார். ஆனால் நூல்கள் வாசிப்பதிலும், சமய அறிவுப் போட்டிக்களில் கலந்து பரிசுகள் எடுப்பதிலும் காட்டிய உற்சாகத்தையும் அக்கறையையும் படிப்பில் காட்டவே இந்திரனால் முடியவில்லை. தகப்பன் ஆசைப்பட்டதுபோல் பல்கலைக் கழகம் செல்லவும் முடியவில்லை. சிறிய கதைகள் கட்டுரைகள் என்று எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்ப அவை வரவேற்புப் பெற்றன. “வெடிப்புக்கள்” என்ற பெயரில் அவர் எழுதிய சிறுகதை உதயன் பத்திரிகையில் வந்து சிறந்த பாராட்டைப் பெற்றது. பெண்கள் உட்பட எத்தனையோ பேர் இவனை உற்சாகப்படுத்தி உதயன் பத்திரிக்கைக்குக் கடிதம் எழுதினர். அவற்றை அவர்கள் இந்திரனுக்கு அனுப்பியிருந்தனர். கடிதங்களைப் பார்த்தபோது அவனுக்கு வானில் மிதப்பதுபோல் மகிழ்வேற்பட்டது. இன்னும் எழுதவேணும் என்ற உத்வேகமும் எழ அவன் எழுதிக் குவித்தான். இந்திரனின் கதை வருகின்றது என்றாலே பத்திரிகை வாங்குவோரும் அதிகரித்தனர். “சேற்றில் ஒரு செந்தாமரை” என்ற பெயரில் அவன் எழுதிய தொடர்கதை மிகப் பிரசித்தமானது. பிரபல எழுத்தாளராக இருந்த “செங்கை ஆழியான்” கூட தன்னை வந்து பார்க்கும்படி இந்திரனுக்குக் கடிதம் போட, அக்கடிதத்தை தன் நண்பர்களிடம் எல்லாம் காட்டி அவர்களைப் பொறாமை கொள்ள வைத்ததை எண்ணி இப்பவும் இந்திரன் சிரிப்பதுண்டு. ஆனாலும் அவன் செங்கை ஆழியான் கூப்பிட்டவுடன் ஓடவுமில்லை. இன்றுவரை போக நினைத்ததுமில்லை. நண்பர்களை விடுங்கள். அதன்பின் வந்த பெண் விசிறிகளின் கடிதங்களை வாசித்து முடிக்கவே அதிக நேரம் தேவைப்பட்டது. அந்த நேரம் வொலிங்டன் திரையரங்கில் வெளியாகிய “பலே பாண்டியா” திரைப்படத்தை நண்பர்களுடன் பார்த்துக்கொண்டிருந்தபோதே அப்படத்தில் வந்த பாடல் வரிகளைத் தலைப்பாக்கி “நான் என்ன சொல்லிவிட்டேன்” என்னும் தலைப்பில் தொடர்கதையை வீரகேசரியில் ஆரம்பித்து அதை அவர்களே நாவலாகவும் வெளியிட்டு இரண்டாம் பதிப்பும் பதிப்பிக்கவேண்டி வர, முக்கியமான ஒரு எழுத்தாளராக இந்திரன் அறியப்பட, எழுதுவதிலும் அவனுடைய பெண் விசிறிகளைச் சமாளிப்பதே பெரும் பாடாகிப் போனது. அவனின் எழுத்தாற்றலைக் கண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இவனை வேலையில் இணைந்துகொள்ளும்படி அழைத்தார்கள். இந்திரனின் பெருமை சொல்ல முடியாததாக, அவனுக்கே தாங்க முடியாததாக இருக்க, விண்வெளிக்குச் செல்லும் ஒருவன் போல தன்னை எண்ணிக்கொண்டு கற்பனைகளுடன் வேலைக்குக் கிளம்பினான். அவன் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வேலை அத்தனை இலகுவானதாக இருக்கவில்லை. ஒவ்வொருவரும் தானே முன்னிலை வகிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு மற்றவரை ஏறி மிதித்தபடி போய்க்கொண்டிருந்தனர். பெண்களுக்கு பேயும் இரங்கும் எண்டதால் அவர்கள் கலகலப்போடு தம் அலுவல்களைச் சாதித்துக்கொண்டனர். இவர் நினைத்ததற்கு நேர்மாறாக இவரை யாருமே ஒரு பெரிய எழுத்தாளர் என்று சட்டை செய்யவே இல்லை என்பது இவரின் தன்மானத்தைச் சீண்ட, நீங்களும் உங்கள் வேலையும் என்றுவிட்டு ஒரு மாதம் முடிய முன்னரே மீண்டும் இவரின் ஊருக்கு வந்துவிட்டார். கொஞ்சம் அனுசரிச்சுப் போயிருக்கலாமே என நண்பர்கள் அங்கலாய்த்ததுக்கு “இவையிட்டையெல்லாம் பல்லைக்காட்டி வேலை செய்யவேண்டிய தலையெழுத்து எனக்கு இல்லை. அப்பர் சேர்த்து வைத்த முதிசமே எவ்வளவு இருக்கு. என்ர பிள்ளையளுமே சும்மா இருந்து சாப்பிட ஏலும்” என்று திமிராகப் பதிலளிக்க, நண்பர்கள் வாயை நெளித்தும் கண்ணைக் காட்டியும் ஒருவருக்கொருவர் சிரித்துக்கொண்டதை இந்திரன் கவனிக்கவில்லை. வந்ததும் வாராததுமாக தன்னைச் சந்திக்க வருமாறு தூது அனுப்பிய அளவெட்டி வனஜா மூன்று மாதம் கற்பமாக இருப்பதாகக் கூற, பெரும் இடி ஒன்று தன்னைத் தாக்கியதுபோல் நிலைக்குலைந்தான் இந்திரன். ************************************************ திடீரென்று செத்தவீட்டில் சலசலப்பு அதிகமாக தேவர் கண்ணைத் திறந்து பார்க்கிறார். முன் வீட்டு கணபதிப்பிள்ளையின் மகள் சுகிர்தா “ ஐயோ எங்களை எல்லாம் விட்டுட்டுப் போட்டியளோ” என்று தலையிலடித்து அழுதபடி வருகிறாள். அவளைப் பார்த்தவுடன் எழும்பி இருந்து பார்க்கவேண்டும் போல இருக்க எழ முயற்சிக்கிறார். அவரின் கையைத் தவிர எதையுமே அசைக்க முடியவில்லை. இப்ப உவளுக்கு அறுபது வயது இருக்கும் என்று எண்ணிய தேவர் இந்த வயதிலும் இன்னும் கட்டுக்குலையாமல்த்தான் இருக்கிறாள். சுருள் முடியும் இறுகிய உடலும் அவளின் வயதில் பத்தைக் குறைத்தே மற்றவர் மதிப்பிடுவதாய் இருக்கின்றது. தேவண்ணை தேவண்ணை என்று இந்த வீட்டு முற்றத்தைச் சுற்றியவள் தானே. இண்டைக்கு குழந்தை கணவன் பொறுப்புகள் எண்டு மட்டுமில்லை, மட்டுவிலுக்குக் கலியாணம் கட்டிப் போனபிறகு நெருங்கின உறவுகளின் திருமணத்தைத் தவிர வேறு எதுக்கும் இந்த ஊர்ப் பக்கம் அவள் எட்டியும் பாரக்கேல்லை. அப்படி எப்பவாவது தாயைப் பார்க்க வந்தாலும் புருஷனோட வந்திட்டு அப்பிடியே போய்விடுவாள். பிள்ளைகள் பேர்த்தியாரைப் பார்க்க சிலவேளை வாறதுதான். பெட்டை உரிச்சுவச்சு சுகிர்தா போலவே இருக்க, தேவர் பார்த்துவீட்டுப் போய்விடுவார். பிரேதத்துக்கு மேலே விழுந்துகட்டி அழுதுவிட்டு பக்கத்தில் கதிரையில் இருந்த சந்திராவைக் கட்டிப்பிடித்து அழத்தொடங்க, சந்திராவுக்கு வந்த கோபத்தில் சுகிர்தாவைத் தள்ளிய தள்ளில் சுகிர்தா ஒருவாறு சமாளித்து காலை ஊன்றி அப்பால் நகர்ந்துபோக, அதைக் கவனித்த தேவருக்கு சுகிர் தாவின் மேல் இரக்கமும் சந்திராவின் மேல் ஒருவித பச்சாதாபமும் எழுந்தது. கூடவே ஒரு பயமும் எழுந்தது. சந்திராவுக்கு அந்த விஷயம் தெரியுமோ? என்னட்டை ஒருநாளுமே தெரிஞ்சமாதிரி இதுவரை காட்டிக்கொள்ளேல்லையே. சரியான அமசடக்கி தான் சந்திரா என்று எண்ணியவர் முந்தி நடந்தவற்றை எல்லாம் ஒவ்வொன்றாய் நினைவில் கொண்டுவர முயன்றார். அக்கம் பக்கத்தவர் எல்லாம் இவர்கள் வீட்டுக்கு வந்து போவார்கள். வாசிப்பில் இவருக்கு இருக்கும் ஆர்வம் காரணமாக ஒரு அறை முழுவதும் கதைப்புத்தகங்கள் நிறைந்த அலுமாரிகள் நிறைந்திருக்க பலரும் வந்து வாங்கி இவரின் வீட்டுக் குந்தில் இருந்து வாசித்துவிட்டுப் போவார்கள். எவருக்குமே இவர் கொண்டுபோய் வாசிக்க அனுமதித்ததில்லை. இவர் பெற்றோர் உட்பட வீட்டில் உள்ள மற்றவர்கள் கூட அந்த அறையுள் இவர் அனுமதியின்றி நுழைவதே இல்லை. இவருக்கு அது கோவில் போல. கோயில் திருவிழாக்கள் எண்டால் சொல்லி வேலையில்லை. சுவாமி தூக்குவது தொடக்கம் எல்லாமே இவர்கள் தலைமையில் நடக்கும். ஆண்கள் எல்லாம் வேட்டி கட்டி பார்க்கவே பக்தி மயமாக இருக்கும். இவர் வேட்டி கட்டி இடுப்பில் நிறத் துண்டு ஒண்டும் கட்டி யானைப்பல் வைத்துக் கட்டிய பென்ரன் கோர்த்த நாலு பவுன் சங்கிலியையும் கழுத்தில போட்டுக்கொண்டு றோட்டால போனால் ஆரெண்டாலும் திரும்பிப் பார்க்காமல் விடாயினை. அத்தனை கம்பீரமாகவும் அழகாகவும் இருப்பார். எத்தனையோ பெண்கள் எல்லாம் கண்களால் கதை சொல்லிவிட்டுக் கடந்து போவார்கள். ஊருக்குள் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும் என்பதில் இவர் கவனமாக இருந்தபடியால் நல்லகாலம் பல இடங்களில் தப்பிவிட்டார். சுகிர்தாவுக்கு அப்ப பதினேழு வயது தான் இருக்கும். இவருக்கு முப்பத்திமூன்று கடந்திட்டுது. தளதளவென பெரிய கண்களும் நீண்ட முடியுடனும் இருந்த அவள் அடிக்கடி கதைப் புத்தகம் வாங்க இவரிடம் வந்து நின்றாள். இவர் ஓரிருதடவை எடுத்துக் கொடுத்தார்தான். எப்பிடித்தான் அத்தனை விரைவாக வாசிச்சு முடிக்கிறாளோ என்று ஆச்சரியப்பட்டாரே ஒழிய படிக்கிற வயதில ஏன் இத்தனை புத்தகம் வாசிக்கிறாய் என்று ஒருமுறை கூட அவளைக் கண்டிக்காவோ கேட்கவோ செய்யவில்லை. அடிக்கடி வந்து வந்து அவள் புத்தகம் கேட்டதால் அவருக்கும் புத்தகங்களை எடுத்துக் குடுக்கப் பஞ்சிப்பட்டு நீயே போய் எடு என்று கூறிவிட்டார். முன்னரெல்லாம் மற்றவர்கள் நிற்கும்போது வந்து நூல்களை வாங்கும் சுகிர்தா இப்போதெல்லாம் மற்றவர்கள் இல்லாத நேரமாகப் பார்த்து வருவதையும் நீண்ட நேரமாக அந்த அறையுள் நின்று நூல்களை எண்ணுவதையும் இவர் சில காலம் செல்லத்தான் உணர்ந்துகொண்டார். இவரும் பாலை விரும்பிக் குடிக்கும் பூனைதானே. தானாக வந்து விழுவதை ஏன் வேண்டாம் என்பான். கோவிலில் மாலை நேரப் பூசை நடக்கும் போது மனைவியும் தாயும் சென்றுவிட இவர்கள் வீட்டிலும் ஆராதனை நடந்தது. சுகிர்தா இன்னும் பூப்பெய்தாததும் இவருக்குச் சாதகமாய்ப் போனது. பதினெட்டு வயதாகியும் அவள் அப்படியே இருக்க இன்னும் உன்ர மேள் பெரிசாகேல்லையே என்று கேட்போரின் வாய்க்காக அவளை பள்ளிக்கும் செல்லாமல் தடுத்ததும் நல்லதாயிற்று. இவரோ எந்தவிதக் குற்ற உணர்வும் இன்றி தொடர்ந்தும் தான் விருப்பப்படி இருக்கத் தலைப்பட்டார். பத்தொன்பது வயதில அவள் பெரிதானபின் கண்டபடி வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் கட்டுப்பாடுகளும் அவளைக் கண்காணித்தபடி தாயோ அம்மம்மாவாரோ இருக்க அவரைப் பார்க்கவேணும் என்ற தவிப்பு உண்டானது. பெரிதான பிறகு எதுக்குத் தேவையில்லாத பிரச்சனை என்று தேவரும் அவளைப் பற்றிய சிந்தனை இல்லாமல் இருந்தார். ஆனால் ஒருநாள் இவர் வீரகேசரியை வாசித்துக்கொண்டு இருந்தபோது திடுதிப்பென்று சுகிர்தா இவர் முன்னால் வந்து நின்றாள். நீங்கள் என்னை ஒரேயடியா கைகழுவி விட்டுட்டியளோ. என்னை ஏமாத்திப்போட்டியள் என்று அவள் கூற தேவர் வெலவெலுத்துப்போய் கதிரையை விட்டு எழுந்தார். “உனக்கு என்ன விசரே. வீட்டில ஆக்கள் நிக்கினம். நான் பிறகு கதைக்கிறான். முதல்ல வெளிய போ” என்று உறுக்க, “இண்டைக்கு நீங்கள் ஒரு முடிவு சொல்லுமட்டும் நான் போக மாட்டான்” என்று வீம்புடன் நிக்க, மனைவியும் தாயும் வீட்டில் தான் என்னும் எண்ணத்தில் தவிப்புக் கூடி முதல்முறையாக கைகால்களில் நடுக்கமும் பதட்டமும் ஏற்பட்டது. “எளிய நாயே. அவன் கலியாணம் கட்டினவன் எண்டு தெரிஞ்சும் இப்பிடி வந்து நிண்டு கதைக்க உனக்கு வெக்கம் இல்லையே” என்றபடி தாய் சுகிர்தாவை தலைமயிரில பிடிச்சு இழுத்துக்கொண்டு போய் அவளின் வீட்டுக்குள் தள்ளிவிட்டு வந்ததும், மனைவிக்கு ஏதும் கேட்டிருக்குமோ என்ற பதட்டத்துடன் சுற்றுமுற்றும் பார்க்க, மனைவியின் தலை தெரியாததில் இவர் நின்மதிப் பெருமூச்சு விட்டதும் இவருள் இப்பவும் ஒரு உலுக்கத்தை ஏற்படுத்த நடுக்கத்துடன் பெருமூச்சொன்று வெளிவந்தது. சந்திராவுக்குத் தெரிந்தும் அவள் ஒருநாள்க்கூட என்னை எதுவும் கேட்கவே இல்லை என்னும் எண்ணம் எழுந்ததும் அவரை அறியாமல் கண்கள் நிறைகின்றன. ************************************************ இந்திரனின் நண்பன் மாறனுக்கு நேற்றுத்தான் அம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்று முடிந்திருந்தது. வந்தவர்களுக்கு உணவு பரிமாறுவதில் இருந்து எல்லோரையும் தண்ணி வென்னி எல்லாம் குடுத்து உபசரிப்பது உங்கள் வேலை என்று மாறன் கட்டன் றைற்றாகக் சொன்னதால எல்லா நண்பர்களும் ஒரு குறையும் விடாமல் வந்தவர்களை உபசரித்து அனுப்பி ஒருவாறு எல்லாம் முடிந்தாயிற்று. பெண் வீட்டில் நாலாம் சடங்கு. கட்டாயம் எல்லாரும் வந்திடுங்கோடா என மாறன் சொன்னதைத் தட்டாமல் இந்திரனும் மற்ற நண்பர்களுடன் செல்லத்தான் எண்ணியிருக்கின்றான். “உனக்கும் முப்பத்தைந்தாகுது. எத்தனை நாளைக்குத்தான் சாக்குப்போக்குச் சொல்லப்போறாய். நீ கட்டினாத்தானே உன்ர தம்பிமாருக்கும் கட்டிவைக்கலாம்” என்ற வழமையான தாயின் புலம்பலுக்கு, “அம்மா என்னைப் பார்க்கவேண்டாம். எனக்கு எப்ப முடிக்கவேணும் என்று தோன்றுதோ அப்ப உங்களிட்டைச் சொல்லுறன். முதல்ல தம்பிக்கு பாருங்கோ” “அப்ப அதுவரை ஊர் மேஞ்சு கொண்டு இருக்கப்போறியோ” தாய் கூறியதைக் காதில் வாங்காதவன் போல சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் இந்திரன். அன்று மாலை நாலாம் சடங்குக்கு நல்லா வெளிக்கிட்டுக்கொண்டு போய் நண்பனுக்குப் பக்கத்தில் இவர்களுக்கும் கதிரை கொண்டுவந்து போடுகிறார்கள். பெண்கள் எல்லாம் அப்போது கதிரைகளில் இருப்பதில்லை. அழகிய பாய்கள் நிலத்தில் விரிக்கப்பட்டிருக்கும். வருபவர்கள் குழுவாகவோ அல்லது குடும்பத்துடனோ அமர்ந்திருக்க எவசில்வர் தட்டிலோ அல்லது பித்தளைத் தாம்பாளத்திலோ பலகாரங்கள் வைக்கப்பட்டிருக்கும். சில்வர் தேநீர் குவளைகளில் சுடச் சுடப் பரிமாறப்படும் டரின்பால் விட்ட தேனீரும் கூட சுவையாக இருக்கும். ஆண்களுக்கு பந்தலினுள்ளே கதிரைகள் போடப்பட்டிருக்கும். அவர்கள் போகும்போது மட்டும் மாப்பிளையையும் பெண்ணையும் எட்டிப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்தபடி போட்டுவாறன் என்று கூறிவிட்டுச் செல்வார்கள். இவர்கள் நண்பர்கள் என்பதனால் பக்கத்தில் கதிரைபோட்ட உபசரிப்பு. இந்திரன் வெள்ளை பெல்பொட்டமும் செம்மஞ்சள் நிற சேர்ட்டும் போட்டு வந்துள்ளான். அடர் மீசையும் மேலே சிறிது திறந்துவிட்ட அங்கியூடாகத் தெரியும் சங்கிலியும் மாப்பிள்ளைபோலவே தெரிக்கிறான். மற்ற நண்பர்கள் கூட நன்றாகவே இருக்கின்றனர். இரு குமர்ப்பெண்கள் ஓடியாடி எல்லோருக்கும் சிற்றுண்டியும் தேனீரும் பரிமாறுகின்றனர். தேவதைபோல் ஒருத்தி இவர்களுக்கு சிறுசிறு தட்டுக்களில் பழக்காரவகைகளுடன் இவர்களை நோக்கி வந்து ஒவ்வொருவருக்கும் ஒரு தட்டை எடுத்துக் கொடுக்கிறாள். ஒவ்வொருவரிடமும் கொடுக்கும்போதுகூட அவள் யாரையுமே நிமிர்ந்து பார்க்கவில்லை. அந்த நிறமும் அமைதியான அழகிய முகமும் அவளின் ஆடையும் அவளின் பண்பைச் சொல்லி நிறக்கின்றது. “எடேய் மச்சான். சினிமாவில நடிக்க வைக்கலாம் போல இவ்வளவு அழகாய் இருக்கிறாள். ஆரடா இது” என்று நண்பனிடம் முணுமுணுக்கிறான் இந்திரன். “எனக்குத் தெரியாதடா இவவைத்தான் கேட்கவேணும். இப்ப கேட்டு என்ர குடும்பத்தைக் குழப்ப ஏலாது. கொஞ்சம் பொறுமையாய் இரு” என்கிறான். வீட்டுக்கு வந்த பின்னரும் அந்தப் பெண்ணின் நினைப்பாகவே இருக்கிறது. எவ்வளவு அமைதியும் அழகும். எத்தனை பெண்கள் என் மேல் வந்து விழுந்திருக்கிறார்கள். இவளை விடக்கூடாது. எனக்கானவள் இவள்தான் என்று எண்ணிக் கனவுகளுடன் மனம் கனக்க, யாரும் இவளைக் கொத்திக்கொண்டு போக முதல் நான் முந்தவேண்டும் என்பதுவாய் மூன்று நாட்கள் சென்றபின் வெட்கத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு நண்பன் வீட்டுக்குச் செல்கிறான். “நான் இவாவிட்டைக் கேட்டனான். இவவின் மாமியின் மகளாம். ஆனா என் மனிசியின்ர குடும்பம் மாதிரி வசதி ஒண்டும் இல்லை. ஒரு சீதானமும் எதிர்பார்க்கேலாது மச்சான். மூண்டு பெட்டைகளில இது கடைசிப் பெட்டையாம். மற்ற இண்டுபேரும் கலியாணம் கட்டீட்டினம். ஆனா இப்பவே சொல்லிப்போட்டன். என்னை ஒண்டுக்கும் சாட்டப்படாது. நல்ல பிள்ளையாம். ராமநாதன் கொலிச்சில படிச்சிட்டு வேலை தேடிக்கொண்டிருக்குதாம். யூனிவேசிற்றி கிடைக்கேல்லையாம்” கிளார்க் வேலை ஒண்டுக்கு அப்பிளிக்கேசன் போட்டுட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கிறாவாம். வதானா எண்டு கூப்பிடுறவையாம்” சிவம் சொல்லி முடிக்கமுதலே தகப்பன்ர பெயரைச் சொல்லு. எங்க இருக்கிறவை? என்று அவதிப்பட்டான் இந்திரன். உடுவில் லேடீஸ் கொலிச்சுக்குப் பக்கத்தில குலத்தார் வீடு எங்கே எண்டால் காட்டுவினமாம். “சரியடா வாறன்” என்றுவிட்டு சைக்கிளை மிதித்தவன் தாயின் முன் வந்து நின்றான். “அம்மா எனக்கு அந்தப் பிள்ளையை நல்லாப் பிடிச்சிருக்கு. நான் இப்ப கலியாணம் செய்ய ரெடி. மிச்ச அலுவலை நீங்கள் தான் கெதியாப் பார்க்கவேணும்” என்று முடித்தான். ஒரு மாதத்திலேயே திருமணப் பேச்சு முடிந்து திருமணமும் முடிந்து வதானா குனிந்ததலை நிமிராமல் இவர்கள் வீட்டுக்குள் அடி எடுத்து வைத்தாள். அதிர்ந்து பேசத் தெரியாத வதானாவை எல்லோருக்கும் பிடித்துப்போனது. அண்ணி அண்ணி என்று இந்திரனின் சகோதரர்கள் அன்பையும் மரியாதையையும் காட்டினார்கள். மாமியார் தான் பெரிதாக வதானாவை மதிக்கவில்லை. எல்லா வேலைகளையும் இவள் தலையில் சுமத்திவிட்டு அங்கும் இங்கும் வலம் வந்துகொண்டிருந்தாள். அவவுக்கும் வயது போட்டுது தானே என்று தன் மனதைத் தேற்றிக்கொண்டு இது என் வீட்டு வேலைதானே என எண்ணியபடி எந்தவித முகச்சுழிப்புமின்றி வேலை செய்தாள் வதானா. திருமணமாகி ஒரு மாதத்திலே இவளுக்கு ஒரு கடிதம் வந்திருப்பதாக இவளின் தாயார் கொண்டுவந்து கொடுத்தபோது ஏனோ தானோவென அதை உடைத்தவளுக்கு முகம் முழுதும் விளக்கெரிந்தது. “அம்மா எனக்கு வேலைக்கு அழைப்பு வந்திருக்கு” என்று மகிழ்வுடன் கூறும் மகளை அம்மா பார்த்த பார்வையில் எவ்வித பூரிப்பும் இருக்கவில்லை. “ஏனம்மா எனக்கு வேலை கிடைச்சது உங்களுக்கு சந்தோசம் இல்லையோ” கவலையுடன் கேட்ட மகளுக்கு என்னத்தைச் சொல்வாள் அவள். “கலியாணம் கட்டின பிறகு அவர் என்ன சொல்லுவாரோ எனக்குத் தெரியாது. எதுக்கும் கேட்டுப் பாரம்மா. சம்மதிச்சால் போ. இல்லையெண்டாலும் என்ன. முந்தி எண்டால் வேலைதான் முக்கியம் எண்டு சொல்லியிருப்பன். இப்ப நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு. அதோடை திருப்திப்பட்டுக் கொள்ளம்மா” என்று புத்திசொல்லிவிட்டுப் போகும் தாயை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். இந்திரன் வந்தவுடன் மகிழ்ச்சியுடன் தனக்கு வந்த கடிதத்தைக் கொடுத்தாள். வாங்கிப் பார்த்தவன் மனதிலும் மகிழ்ச்சி ஏற்பட “வாழ்த்துக்கள் வதானா. ஆனால் மட்டக்களப்புக்குப் போய் நீர் வேலை செய்ய நான் இங்க தனிய இருக்கேலுமே. இங்கினேக்கை எண்டால் கட்டாயம் போம் என்று நானே அனுப்பியிருப்பன்” என்று கூறிவிட்டு அவளைப் பார்க்கத் துணிவின்றி அப்பால் நகர வதானாவுக்கு அழுகை வந்தது. பெலத்து அழக்கூட என்னால் முடியவில்லையே. இந்த வேலை ஒரு மாதத்தின் முன்னம் கிடைத்திருந்தால் கலியாணமே வேண்டாம் என்று ஒற்றைக்காலில் நின்றாவது கலியாணம் காட்டாது வேலைக்குப் போயிருப்பன். என் விதி இதுதான் போல என மனதைத் தேற்றிக்கொண்டாள். அடுத்த வாரம் தமக்கை தாய் வீட்டுக்கு வருகிறாள் எனக் கேள்விப்பட்டு கணவனின் அனுமதியுடன் அங்கு சென்றவள் தமக்கையைக் கட்டிப்பிடித்து “சின்னக்கா வேலை கிடைத்தும் என்னால போக முடியேலையே” என விக்கி விக்கி அழுபவளை ஆறுதல் படுத்த அவளின் முதுகை ஆதரவாக வருடிக்க கொடுத்தபடி இருந்தாள் வதானாவின் இளைய சகோதரி. அவள் கச்சேரியில் வேலை பார்க்கிறாள். கணவனும் பேராசிரியராக இருப்பதனால் இருவரும் வசதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மூன்று பிள்ளைகளும் இருக்கின்றனர். மூத்த சகோதரிக்குத் திருமணமாகி பத்து ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லை. ஆனாலும் கடைசித் தங்கைமேல் பாசம் இருக்கிறதா இல்லையா என்பதுபோல் நடந்துகொள்வாள். பெரிதாக யாரையுமே தன்னுடன் ஒட்ட விட்டது கிடையாது. வசதியாகத்தான் வாழ்கிறாள். ஆனாலும் தங்கையின் திருமணத்துக்கு ஒரு அட்டியல் செய்துபோடுமாறு தாய் கேட்டும், தந்தை வேலை செய்யும்போது கிளிநொச்சியில் வாங்கிப்போட்ட மூன்று ஏக்கர் காணியை தனக்கு எழுதுங்கோ என்று விடாப்பிடியாய் நிண்டு தான் பேருக்கு மாற்றிய பிறகுதான் தங்கையின் திருமணத்துக்கு நகையைச் செய்து கொடுத்தாள். வதானாவின் சின்னக்கா “அப்புவுக்கும் ஆச்சிக்கும் சரியான விசர். அரசாங்க உத்தியோகம் பாக்கிற மாப்பிளை எண்டு எல்லாக் காணியளையும் அக்காவுக்கே சீதானமாய்க் குடுத்திட்டு எங்கள் இரண்டு பேரையும் அனாதைகள் போல விட்டிட்டினம் என்று அடிக்கடி வதானாவிடம் மட்டும் அங்கலாய்ப்பாள். அந்தக் கோபத்துடனேயே படித்து கச்சேரியில் வேலை கிடைத்ததும் தகப்பன் ஈடுவைத்த மூன்று பரப்புக் காணியை மீண்டு, அதில் வீடு ஒன்றும் கட்டி நன்றாகத்தான் வாழ்கிறாள். “எனக்கு இங்கே எங்காவது வேலை கிடைச்சிருந்தால் நான் கட்டாயம் விட்டிருப்பன். நீ இல்லாமல் நான் எப்பிடித் தனிய இருக்கிறது எண்டு சொன்னவர்” என்று தன் கணவனையும் விட்டுக்கொடுக்காது கூறியவளை அன்பொழுகப் பார்த்தாள் தமக்கை. ****************************************** வதானாவுக்கு எல்லாமே பழகிவிட்டது. இந்திரன் இப்பொழுதெல்லாம் எழுதுவதுக்கூட இல்லை. சும்மா இருக்காமல் ஏதும் எழுதுங்கோ எண்டால் எனக்கு நீ புத்தி சொல்லாதை, எனக்கு என்ர அலுவல் தெரியும் என்பான். முன்புபோல இல்லை இப்ப எல்லாம். செல்லருக்கும் தோட்டங்களைப் பராமரிப்பது கடினமாக இருந்தது. இரண்டாவது மகன் முன்பு இவருடன் தோட்ட வேலைகளைப் பார்த்துக்கொண்டான். இப்ப அவனும் ஆசிரியர் வேலை கிடைச்சு மட்டக்களப்புக்குப் போய்விட்டான். அவனுக்கும் நிறையச் சம்மந்தம் வருகிறது. வேளைக்கு அவனுக்கும் திருமணம் செய்து வைக்கவேணும் என்று எண்ணியபடி இந்திரனை அழைத்தார் செல்லர். “தம்பி எவ்வளவு நாளைக்குத்தான் இப்பிடிப் பொறுபில்லாமல் இறுக்கப்போறாய். ஏதேனும் வேலைவெட்டி தேடவேணும். இல்லாட்டில் தோட்டங்களையாவது பாக்கவேணும். உவன் கடைசி குகனும் இவ்வளவுநாள் தோட்டவேலையளுக்கு உதவி செய்தவன். இப்ப அவன் யூனிவேசிற்றிக்குப் போப்போறான். இனி நீதான் எல்லாத்தையும் பாக்கவேணும்” என்று தகப்பன் கூறிய பிறகு மறுத்து எதுவும் சொல்ல முடியாது தலையாட்டிவிட்டுச் சென்றான் இந்திரன். மற்றவரிடம் சென்று கையேந்தி வாழ அவனுக்குத் துளிகூட விருப்பம் இல்லை. வதானாவுக்கு சீதனம் என்று இவன் கேட்கவில்லையே ஒழிய, ”உங்களால முடிஞ்சதைச் செய்து போடுங்கோ” என்று இவனின் தாயார் சொன்னதாலை மட்டுமில்லை, சும்மா தங்கச்சியை அனுப்பக் கூடாது எண்டு வதானாவின் சின்னக்கா சொல்லி இரண்டு சோடி காப்புகளும் பதக்கமும் தானே செய்து போட்டு தமக்கை கொடுத்த அட்டியலோடு தங்கையைச் சிறப்பாய் அனுப்பி வைத்தார்கள். வதானா திருமணமாகி மூன்று மாதங்களில் கர்ப்பமாகி அயலட்டையாரின் வெறும் வாய் மெல்ல சந்தர்ப்பம் கொடுக்காது எல்லாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினாள். ஆனாலும் அவளை ஆசைக்கு இரு வாரம் கூட அவள் வீட்டில் இருக்க விடாது இங்கே வேலைகள் குவிந்திருந்தன. எட்டாம் மாதம் நடக்கும்போது சின்னக்காவும் தாயாரும் தம்முடன் அழைத்துப் போகிறோம் என்றதற்கு “ஏன் நாங்கள் ஒழுங்காப் பார்க்க மாட்டமோ” என்று மாமியார் கூறியதில் வதானாவின் ஆசையும் மதுக்குள்ளேயே அடங்கிப்போக தமக்கையும் தாயும் வேறு வழியின்றித் திரும்பிச் செல்லவேண்டியதாயிற்று. மாமியார் உதவிகள் செய்தார்தான். ஆனாலும் இந்திரன் தன் வேலையில் ஒன்றைக் கூட தான் செய்ய முன்வரவில்லை. ஒன்பதாம் மாதத்தில் ஒருநாள் நோவெடுக்க சொக்கனின் காரைப் பிடிச்சு யாழ்ப்பாணம் பெரியாசுபத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். மாமியாரும் கூடவே வந்திருந்தது வதானாவுக்குத் தெம்பாக இருந்தது. இரண்டு மணிநேர வாதைக்குப் பின்னர் ஆண் குழந்தை எவ்வித அசுமாத்தமும் இன்றி வெளியே வர வதானாவுக்கு அரை மயக்கமாய் இருந்தது. “இவான்ர புருஷன் வெளியில நிண்டாக் கூட்டிக்கொண்டு வாங்கோ” என்று அந்தப் பெண் மருத்துவர் கூற, மனப் பதைப்புடன் தாய் சென்று மகனை அழைத்து வந்தார். சொறி குழந்தை பிறக்கேக்குள்ளையே செத்துத்தான் பிறந்தது. ஒருக்கா வடிவாப் பிள்ளையைப் பாருங்கோ. தாய்க்கு மயக்கம் தெளியமுதல் பிள்ளையை எடுத்துக் கொண்டுபோய்விட வேண்டும் என்றுவிட்டு மருத்துவர் அகல.. “அளவெட்டிக் காறியின்ர பிள்ளையையும் கலைப்பிச்சு அவளைக் கைகழுவி விட்டதுக்குத் தான்ரா உனக்கு உந்தத் தண்டனை கிடைச்சிருக்கு” தாய் கூறப் பதட்டத்துடன் “வாயை மூடெணை” எனத் தாயை உறுக்கியவன் வதனா கேட்டிருப்பாளோ என்று துணுக்குற்றான். தாய் கதவைத் திறந்துகொண்டு வெளியே செல்ல வதனா என்று மெதுவாகக் கூப்பிட்டான். அவளுக்கு எல்லாமே நன்றாகக் கேட்டதுதான். ஆயினும் கண்களை தொடர்ந்தும் மூடியபடி மயக்கத்தில் இருப்பதுபோல் இருந்தாள். மனதில் எழுந்த வெறுமையும் ஏக்கமும் கவலையும் கண்ணீராக மூடிய கண்களினூடாக வழிந்தபடி இருக்க எதுவும் செய்வதற்று தொய்ந்துபோய்க் கிடந்தாள் வதானா. அவன் சிறிது நேரத்தில் அப்பால் செல்ல வெடிக்கும் மனதுடன் அசையாது கிடந்த குழந்தையை எடுத்து நெஞ்சோடு அணைக்கவேண்டும்போல் இருக்க மெதுவாகக் கைகளை ஊன்றியபடி எழும்ப எத்தனிக்க, அதற்குள் பெண் தாதியும் அவனின் தாயாரும் உள்ளே வந்து அவளை எழும்பவேண்டாம் என எச்சரித்துவிட்டு பிள்ளையை இவளுக்குக் காட்டிவிட்டு உடனே வெளியே கொண்டுசெல்ல எப்படித் தன் கவலையை வெளிப்படுத்துவது என்று கூடத் தெரியாமல் படுத்துக்கிடந்தாள் வதனா. குழந்தை அதுவும் ஆண்குழந்தை இறந்துவிட்டது அனைவருக்கும் மிகக் கவலையாக இருக்க இந்திரனுக்கு நரக வேதனையாக இருந்தது. அவளை எங்களோடை அனுப்பியிருந்தால் இப்பிடி நடந்திருக்காது என்று ஏசிவிட்டு அவளை வைத்தியசாலையிலிருந்தே தன்னுடன் சின்னக்கா கூட்டிச் சென்றாள். மனதிலை கவலையளை வச்சிருக்காமல் இணக்கை ஏந்தாலும் வடிவா அழுதிடு என்று அவளுக்கு ஆறுதல் கூறி அவளை நன்றாகத் தேற்றி ஒரு மாதம் சென்றபிறகே இந்திரனின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வதானாவைக் கண்டதும்தான் இந்திரனுக்கு உயிர் வந்தது போல இருந்தது. வதானாவுக்கு எதுவுமே சொல்லாமலேயே அதது அவனுக்குக் கிடைத்துக்கொண்டிருந்தது. “எங்கிருந்தோ வந்தாள். எனக்காகவே வந்தாள்” என்றுதான் அவள் இவனுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்யும்போதெல்லாம் இந்திரன் எண்ணிக்கொள்வதுண்டு. அவள் இல்லாமல் தாய் வைத்துக் கொடுத்த சுரணைகெட்ட தேனீரும் உணவுகளும் அயன் செய்யாத ஆடைகளும் எல்லாமே அவளின் அருமையை உணரவைத்தன. உடையவன் உழைத்தால் தான் தோட்டமும் தொழிலும். இந்திரனுக்கு மண்வெட்டி பிடித்து வாய்க்காலில் நீர் கட்டக்கூடத் தெரியாமல் இருந்தது. எல்லாத்துக்கும் கூலிக்கு ஆள் வைத்து விவசாயம் செய்ததில் பெரு நட்டமே ஏற்பட்டது. வதானாவின் நகைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய்க் காணாமல் போயின. அடுத்த ஆண்டிலேயே அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து மூக்கும் முழியுமாக எல்லாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இரண்டு ஆண்டுகளின் பின்னர் இன்னொரு பெண் குழந்தை. அவர்கள் எல்லாம் ஆண்பிள்ளைகள் என்றதாலோ அல்லது முதல் முதல் வதானாவுக்குப் பிறந்தது ஆண் குழந்தை என்பதாலோ என்னவோ இந்திரனோ தாயோ கூட ஆண் குழந்தை என்ற பெயரை மறந்துபோயும் உச்சரிப்பதுமில்லை. ஆண் பிள்ளைக்கு ஆசைப்பட்டதும் இல்லை. பிள்ளைகள் வளர வளர பணம் தேவைப்பட “உவ்வளவு காணிகளை வச்சு என்ன செய்யப்போறம்” என்று சில நிலங்களையும் அப்பப்ப விற்றுக் குடும்பத்தை நடத்தினாலும் எந்தவிதக் குற்ற உணர்வும் இந்திரனுக்கு ஏற்பட்டதே இல்லை. அதன் பிறகும் இந்திரன் சில நாவல்களை எழுதினான்தான். ஒரு நாவலுக்கு சாகித்திய விருதும் கிடைத்ததுதான். ஆனால் அதனால் கிடைத்த சொற்ப வருமானம் அவரின் குடும்பத்துக்குப் போதுமானதாக இருக்கவில்லை. மண்வெட்டி எடுத்துத் தோட்டம் கொத்தவோ வேறு வேலை செய்யவோ இந்திரனால் முடியாதது அவன் குற்றமா என்ன? சிறுவயதில் இருந்தே எனக்குப் பொறுப்பைப் பழக்கியிருக்க வேணும். பிழை விட்டது அம்மாவும் அப்பரும் தான். இன்னும் காணியள் கிடக்குத்தானே. பார்த்துக்கொள்ளலாம் என்று மனதைத் தேற்றிக்கொண்டான். அப்பப்ப இவனின் கதைகளை வாசித்த பல்கலைக் கழக மாணவர்கள் இவனை வந்து பார்த்துச் செல்கிறார்கள். அவர்களுடன் பலவிடயங்களையும் விவாதிக்குமளவு பொது விடயங்களையெல்லாம் கரைத்துக்குடித்து வைத்திருந்தான் இந்திரன். வதானாவுக்கு இவர் வேலை எதுவும் செய்யாது திண்ணையில் இருந்து விவாதிப்பது எரிச்சல் கொடுத்தாலும் பெருமையாகவும் இருந்ததுதான். எனக்கு அந்தளவு அறிவு இல்லை. விஷயமில்லாமலோ அவரைத் தேடி வரீனம் என தமக்கையாருடன் கதைக்கும் போது கூறுவதை தமக்கையோ சிரித்தபடி கேட்டுக்கொண்டிருப்பாளேயன்றி தங்கையின் மனதைப் புண்படுத்தக் கூடாது என எதிர்மறையாகக் கதைத்ததில்லை.. வதானா வெறுங்கையுடன் வந்ததைப் பொறுக்க முடியாமல் தன் காப்புகளில் ஒரு சோடியை வேண்டாம் என்று சொன்ன தங்கைக்குப் போட்டே அனுப்பினாள். எக்காரணம் கொண்டும் இதை உன்ர கையைவிட்டுக் கழட்டவே கூடாது என்றும் சத்தியம் வாங்கிக்கொண்டும் தான் இவளை அனுப்பினாள். ஆனால் அக்காப்பு ஆறு மாதங்களின் பின்னர் அடக்குக் கடைக்குப் போனதையும் அதேபோன்ற கிலிட்டுக் காப்பு ஒன்றைக் கணவன் அவளுக்கு மாற்றிச் செய்து கொடுத்ததையும் அவளும் தெரிந்ததுபோல் இந்திரனுக்குக் காட்டிக்கொள்ளவில்லை. மறந்துபோய்த்தன்னும் தமக்கைக்கு மட்டுமல்ல யாருக்குமே கூறவில்லை. ***************************************************** ஐயர் வந்து கிரியைகள் எல்லாம் முடிந்து பிள்ளைகள் வாய்க்கரிசி போட்டு பேரபிள்ளைகள் எல்லாம் சுற்றி நின்று நெய்ப்பந்தம் பிடித்து முடிய ஊரில் உள்ள பெரியவர்கள் சிலரும் இலக்கிய கர்த்தாக்கள் சிலரும் அவரைப்பற்றி ஆகா ஓகோவென்றெலாம் புகழ, கேட்டுக்கொண்டிருந்த சில உறவினர்களுக்குப் பெரிய இம்சையாக இருந்தது. சிலருக்கோ அட இப்பிடி எல்லாம் கூட நடந்திருக்கா. எங்களுக்குத் தெரியாமல் போட்டுதே இவ்வளவு நாளும் என எண்ணியபடி வாய்பிளந்து கேட்டுக்கொண்டும் இருந்தனர். “இவர் இலங்கையின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். இவர் எம்மூரில் பிறந்தது நாம் செய்த பாக்கியம். இத்தனை விரைவில் இவர் மரணமடைந்தது எமக்கெல்லாம் பெரிய இழப்பு” என்று கூறிவிட்டு அமர்ந்தார் ஒருவர். இதைக் கேட்டுக்கொண்டிருந்த தேவருக்கு வாய்விட்டுச் சிரிக்கவேண்டும் போல் இருந்தது. “இவன் எண்பத்தைந்து வயதுவரை இருந்து எழுதினதைத் தவிர என்னத்தைச் சாதிச்சுக் கிழிச்சான் என்று இன்னும் இருந்திருக்க வேண்டும் என்று உப்பிடிக்க கதைக்கிறாங்கள்” “பிள்ளையளுக்கும் பெண்டிலுக்கும் சோறு போட்டதும், உடம்பை வளர்த்ததும், பிள்ளையளைக் கலியாணம் கட்டிக் குடுத்ததும் தகப்பன் சேர்த்து வச்ச சொத்துக்களை விற்றுத்தான்” இவர் மனதில் எண்ணி முடிய முதல் அடுத்தவர் ஆரம்பித்துவிட்டார். “இவரைப்போல ஒருவரை நான் இதுவரை காணவில்லை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கிடைத்த அரசாங்க வேலையைக் கூட வேண்டாம் என்று கூறிவிட்டு இந்த மண்ணுக்காக உழைக்கவேண்டும் என்று தோட்டம் செய்து உழைத்துச் சாப்பிட்ட உழைப்பாளி இவர்” “எடேய்.. செத்தவீட்டில ஒருத்தரும் வந்து சொல்ல மாட்டினம் எண்டு இப்பிடி எல்லாமா புழுகுவியள். தோட்டத்தைப் பாக்கிறன் எண்டு தோட்டத்துக்குப் பக்கத்தில இருந்த சுகுணாவைப் பார்க்கப் போறது உவங்களுக்குத் தெரியாது போல” மனதுள் எண்ணியவுடனேயே இவருக்கு வாய்விட்டுச் சிரிக்கவேண்டும் போல இருந்ததை அடக்கிக்கொண்டார். ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வேலை அரச வேலையோ இல்லையோ எண்டு இவருக்கு இப்ப சந்தேகம் வந்தது. “இப்ப கோதாரி ஆரிட்டைக் கேட்கமுடியும்” என்று தன்மனதை அடக்கிக் கொண்டார். எண்டாலும் உந்தக் கொறோனாக் கட்டுப்பாடுகள் தளர்த்தின பிறகு செத்ததால ஊரிப்பட்ட சனம். ஒரு இருநூறு முன்னூறு பேராவது இருக்கும். இரண்டு கிழமைக்கு முதல் செத்த பாக்கியத்துக்கு இருபது பேர் கூடப் போகேல்லையாம். பாடை கட்டவும் ஆட்கள் வரேல்லை. ஐயரும் பயத்தில போகாமல் ஒரு இருபது பேரோடை வானிலதான் கொண்டு போய் எரிச்சதெண்டு இவரை வருத்தம் பார்க்க வந்த கந்தசாமி சொன்னவன். பெரிய வடிவான பாடைகட்டி தென்னோலையெல்லாம் பின்னி, பூமாலை எல்லாம் கட்டி பார்க்கவே அழகாய்த்தான் இருக்கு. எனக்கே ஏறிப் போய்ப் படுக்கவேணும் போல இருக்கு என்று எண்ணித் தன்பாட்டில் சிரித்துக்கொண்டார் தேவர். திடீரென பெருங் குரலெடுத்து எல்லோரும் அழுகின்றார்கள். திடுக்கிட்ட தேவர் என்ன நடக்குது என்று நினைவுகளைத் தள்ளிவிட்டுப் பார்க்கிறார். சவப்பெட்டியை மூடுகிறார்கள். மூடவிடாது பிள்ளைகளும் மனைவியும் பிடித்துக்கொண்டு கத்த, அவர்களை பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக மூடியபின் உரித்துடையவர்கள் ஆறுபேர் நான் முந்தி நீ முந்தி என தள்ளுப்பட்டு அவரின் பிரேதப் பெட்டியைக் கொண்டுபோய் பாடையில் வைத்துவிட்டு தூக்கிக்கொண்டு போகிறார்கள். டகு டகு டகு டகு டகு டகு டகு டகு டண் டண் டண் டண் டாடாண்டு டண் டண் டாடாண்டு டண் டண் டகு டகு டகு டகு டகு டகு டகு டகு டண் டண் டண் டண் டாடாண்டு டண் டண் டாடாண்டு டண் டண் மேளச் சத்தம் காதைப் பிளக்கும்படி இருக்கிறது. தேவரின் எரிச்சல் அதிகரிக்கப் பாடை நகர்ந்தபடி இருக்கின்றது. “என்றாலும் நான் குடுத்துவைத்துத்தான் பிறந்திருக்கிறேன். இத்தனை நாட்கள் இராசா மாதிரி இருந்தேன். எந்தக் குறையும் இல்லாமல் மனைவி பிள்ளைகள் பார்த்துக்கொண்டார்கள். இறந்தபின்னும் சிறப்பாகப் பாடைகட்டி இத்தனைபேர் பின்தொடரச் செல்கிறேனே. பாவம் சந்திரவதனா நானில்லாமல் என்ன செய்யப்போறாளோ. என்னோடை அவளையும் கூட்டிக்கொண்டு போனால் எவ்வளவு நல்லாய் இருக்கும்” என்று எண்ணியபோதே உடலெங்கும் விசுக்கென இழுபட, தன் செத்தவீட்டை இத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருந்த இந்திரன், தேவர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட தெய்வேந்திரத் தேவரின் உயிர், மிகுதி இறுதி ஊர்வல நிகழ்வைப் பார்க்க முடியாதவாறு எங்கோ வேகமாக இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. முடிந்தது.
  4 points
 5. இந்த வரலாற்றுச் சம்பவம் நடந்தபோது வீரசிங்கம் மண்டபத்துக்கு வெளியே உள்ள தெருவில் அதாவது மண்டபத்துக்கும் இப்போது நினைவுத்தூபி இருக்கும் கோட்டை அகழிக்கு இடையிலிருக்கும் வெளிக்கும் இடையேயான தெருவில் நானும் எனது தம்பியும் தார் ரோட்டில் சுமார் எட்டு மணியளவில் அரைக்கால்சட்டையுடன் சப்பணக்கலிட்டு இருந்தோம் எங்களுடன் எங்களது அயல் வளவில் வீடுகட்ட வல்வெட்டித்துறையிலிருந்து வந்த மேசன் இருவரும் அவர்களது உதவியாளரும் வந்திருந்தனர் அவர்கள் எங்குபோனாலும் ஒரு ட்ரான்ஸ்சிஸ்டர் ரேடியோவை எடுத்துசெல்வார்கள் அதும் அவர்கள்கூடவே இருந்தது. நைனா மரைக்காயர் எனும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் சிறப்புரையாற்றிக்கொண்டிருந்தார் உள்ளரங்கில் நடந்த நிகழ்ச்சி ஆனால் மிகப்பெரிய மக்கள் கூட்டம் வெளியே காவல் நின்றதால் வெளியே வந்து பேசும்படி விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டிருந்தனர் வீரசிங்கம் மண்டபத்தின் மாடியில் அப்போது வருமானவரித்துறையினரது அலுவலகமும் இருந்தது அங்கிருந்த பெரிய மேசைகளை வெளியில் எடுத்து வந்து அதை ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து அதில் பேராசிரியரை ஏற்றி சற்று உயரமாகத்தென்படும்படி ஒழுங்குசெய்யப்பட்டு அவர் பேசிக்கொண்டிருந்தார். இன்றைய தினத்திலிருந்து எதிர்வரும் வாரத்தில் வரும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளைப்பற்றி அவர் மிகவும் சுவைபடப்பேசிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மேற்குத்திசயிலிருந்து ஒரு போட்டார் சைக்கிள் சத்தம் அண்மித்ததாகக் கேட்டது யார் அதில் வந்தது என என்னால் அவதானிக்க முடியவில்லை ஆனால் ஒரு சிறு சலசலப்பு அந்த இடத்தில் நடந்ததை உணர முடிந்தது பின்னர் அடங்கிவிட்டது சிறிது நேரத்தில் பெரிய வாகனச்சத்தம் ஒன்று அதே திசையிலிருந்து கேட்டது சலசல்ப்பு பெரிதாகிபோது எல்லோரும் எழும்பி ஓடத்தொடங்கியிருந்தார்கள் மக்கள் ஓடத்தொடங்கும்போதே கண்ணீர்ப்புகைக் குண்டு வானத்தை நோக்கி வீசப்பட்டதை அவதானித்தேன் தெய்வாதீனமாக நானும் தம்பியும் வீரசிங்கம் மண்டபத்தை நோக்கி ஓடிணோம் உருவத்தில் சிறியவர்களாக இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை மண்டபத்தின் முகப்பின் ஒரு சுவரோடு நாம் இருவரும் தள்ளப்பட்டு அங்கேயே நின்றுவிட்டோம் நல்லவேளை இருவரும் நிலத்தில் விழவில்லை விழுந்திருந்தால் நான் இப்போது இச்சம்பவத்தையிட்டு எழுதியிருக்க முடியுமோ தெரியாது மீண்டும் கண்ணீர்ப்புகைக்குண்டு அப்போது அது கண்ணீர்ப்புகைகுண்டு என்பதே எமக்குத்தெரியாது ஆனால் மீண்டும் மீண்டும் வீசப்பட்டதால் கண் எல்லாம் ஒரே எர்ச்சம் கண்திறக்க முடியவில்லை ஒரு அம்மாதான் தம்பி இங் நிக்காதையும்கோ ஓடுங்கடா எனச் சென்னது நினைவிருக்கு அப்படியே மண்டபத்தின் உள்ளே சென்று பக்கதிலுள்ள வாசலால ரீகல் தியேட்டருக்கும் மண்டபத்துக்கும் இடையிலுள்ள நிலப்பகுதியால பின்பக்கம் சென்று மண்டபக்காணிக்குப் பின்புறமுள்ள கள்ளுக்கோப்பிரேசன் வளவுக்குள்ள ஒரு சேறு அடங்கிய மதவைத்தாண்டி வந்து கரன் தியேட்டருகுள்ளால மிதந்து ஆஸ்பத்திரி வீதிவது ஆனைப்பந்தியை நோக்கி ஓட்டமும் நடையுமாக வீடு வந்தடைந்தேன் இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் சிங்கப்பூர் டிஸ்பென்சரி உரிமையாளரது மகம் நவரத்திரம் ராஜன் எனும் எங்களது வீட்டுக்கு அண்மையிலிருக்கும் ஒரு இளஞர் சிங்களப் போலீசாரின் ரக் வண்டியால் அடித்துக்கொல்லப்பட்டார் ஒரு லைட் போஸ்டுக்குப் பின்னால் தப்பிக்க ஒளித்தவரை வாகனத்தால் அடித்துக்கொன்றார்கள் இதற்கு முழு உடந்தையாக இருந்தது அப்போதைய நாழ்ப்பாணம் நகரசபை மேயர் அல்பிரட் துரையப்பா
  3 points
 6. இப்போது… நாங்கள், அவர்களை உன்னிப்பாக அவதானிக்கும் நேரம். 🙂
  3 points
 7. உங்களுக்கு நீண்ட நாளாக இந்த சந்தேகம் இருக்கு.....சத்தியாமா சொல்லுறன் பாஸ்வேர்ட் தெரிந்த ஐ டி புத்தன் மட்டுமே
  3 points
 8. சிங்களத்தை நம்பேலாது..அவனுங்க சீனாக்கு வித்துட்டு… அதையே கள்ள உறுதி போட்டு இந்தியாவுக்கும் வித்து போடுவாங்கள்…🤣
  3 points
 9. நாட்டின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார கொள்கைகள் காரணமாக ஏதோ ஒரு வகையில் நாடு வங்குரோத்து நிலைமைக்கு சென்றால், நாட்டில் முதலீடுகளை செய்துள்ள வெளிநாட்டவர்கள், தமது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைப் பிரிவின் பேராசிரியர் ஆனந்த (Prof.Ananda) தெரிவித்துள்ளார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்றால், அதுவும் நாட்டின் பொருளாதாரத்தின் மீதான மரண அடியாக இருக்கும் எனறும் அவர் எச்சரித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பேராசிரியர் ஆனந்த இதனை குறிப்பிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு மொத்தமாக 7 ஆயிரம் மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது. ஜனவரி மாதத்தில் மாத்திரம் 699 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும். இந்த கடன் செலுத்துதலை பிற்போட முடியாது. இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லுமாறு பலர் ஆலோசனை வழங்கி வருகின்றனர். எனினும் அரசாங்கம் தற்போதும் சீனாவிடமே கடனை பெற்று வருகிறது. சீனாவிடம் பெறப்படும் கடன் நிதியை பயன்படுத்தி, அந்நாட்டிடம் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் அல்லது நாட்டின் சொத்து ஒன்றை எழுதிக்கொடுக்க வேண்டும். இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் கடனை பெற போகின்றனர். இந்த பணத்தில் மூலம் இந்தியாவில் இருந்து 500 சிறிய பேருந்துகள் மற்றும் பொலிஸாருக்கு தேவையான 750 ஜீப் வண்டிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு இவை தேவையா?. இது நாட்டு மக்களை வாழ வைக்க வேண்டிய நேரம். நாடு தற்போது ஏல விற்பனை நிலையம் போல் காணப்படுகிறது. இவ்வாறான நிலைமையில் எமக்கு சில மாற்று வழிகள் உள்ளன. பிணை முறி கடன்களை பெற்றுள்ள நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவற்றை செலுத்துவதற்கு சிறிய காலத்தை அவகாசமாக கோரலாம். அதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும். எமக்கு நெருக்கமான நாடுகள் அப்படியில்லை என்றால், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி அல்லது வேறு சர்வதேச நிறுவனங்களிடம் நிவாரண முறையின் கீழ் கடனை பெற வேண்டும். எனினும் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லுமாறு இந்த நிறுவனங்கள் கூறுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தை கண்டு ஏன் அரசாங்கம் இந்தளவுக்கு பயப்படுகிறது என்று புரியவில்லை. ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவே அந்த நிறுவனம் கடனை வழங்குகிறது. மறைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து டொலர்களையும் மீண்டும் வெளியில் கொண்டு வர நேரிடும். இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ள தொழிலாளர்கள் தமது டொலர்களை அனுப்புவதில்லை. இதன் காரணமாக நாட்டுக்கு கிடைக்க வேண்டிய டொலர்களில் 500 மில்லியன் டொலர் வரை குறைந்துள்ளது. நாட்டின் நிதியில் காணப்படும் நிச்சயமற்ற நிலைமை இதற்கு காரணம். சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை பெறும் போது, அவர்களின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும். சீனா, இந்தியா போன்ற நாடுகளில் பெறப்படும் கடனை போன்று சர்வதேச நாணய நிதியத்திடம் பெறும் கடனை பயன்படுத்த முடியாது. நிதியை வெளிப்படை தன்மையுடன் பயன்படுத்த வேண்டும். சர்வதேச நாணய நிதியம் வழங்கும் கடனில் தரகு பணம் பெற முடியாது. கடனை வழங்கிய பின்னர், நாணய நிதியம் முழுமையான கண்காணிப்பை மேற்கொள்ளும். எனினும் அரசாங்கம் குறுகிய கால இலாபங்களுக்காக முற்றாக திரிபுப்பட்ட பொருளாதார கொள்கையை அரசாங்கம் பின்பற்றுவதை காண முடிகிறது எனவும் பேராசிரியர் ஆனந்த குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/the-death-blow-going-to-fall-on-country-s-economy-1641791683
  2 points
 10. கொடுக்க வேண்டிய நிலையில் சிங்களம் இருக்காது....! எடுக்க வேண்டிய நிலைக்கு எமது நாடும் வந்து விடும்...!
  2 points
 11. செய்தித்தாள் அடித்தும் மகிந்த கோத்தாவின் பொய்ப்புளுகுகளை மையில் ஏற்றி அடிப்பதை விட பேசாமல் பேப்பர் இல்லை என்றுவிட்டு இருக்கலாம் .
  2 points
 12. ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா… 😂 🤣
  2 points
 13. எந்த நாட்டில் மதச் சார்பற்ற கல்வி? https://www.gov.uk/national-curriculum/other-compulsory-subjects
  2 points
 14. 2019 ம் ஆண்டு வெளியான எனது சிறுகதைத் தொகுப்பான "உணர்வுகள் கொன்றுவிடு" 2020 இன் அரச விருதுக்காக மூன்றுக்குள் ஒன்றாகத் தெரிவாக்கியிருந்தது. ஒருபுறம் இது மகிழ்வான விடயமாக, என தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஒன்றாகவும் இருந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் முதலாவதாகத் தெரிவாகியிருக்காமலேயே முகநூலில் இதைப் பகிர்ந்தபோது நீண்டகாலமாக என்னுடன் நட்புடன் இருந்த ஒருவர் என்னை வாழ்த்தவில்லை. மாறாக வெளிநாட்டு Nationality வைத்திருப்பவர்களுக்கு எப்படி இலங்கை அரச விருதை வளங்கலாம் எனப் பதிவு போட்டிருந்தார். அதைவிட நான் மதிப்பு வைத்திருந்த இன்னொரு சிறந்த எழுத்தாளர், அவர் ஏற்கனவே இந்திய விருதைப் பெற்றிருந்தார். அவர் கூட எனக்குப் போனில் வாழ்த்துச் சொல்லிவிட்டு எப்படி உங்களையும் தெரிவு செய்தார்கள். உங்களுக்கு இலங்கை Nationality இருக்கிறதா என்றதும் தான் நான் ஓடி விழித்து என்னிடம் இரண்டும் இருக்கிறது என்று கூறினேன். அன்றே அவர் முகநூலில் தன் நூல் ஒன்றைப் போட்டு அந்நூலுக்கு தன் பழைய மாணவன் ஒருவர் எழுதியிருந்த விமர்சனத்தையும் போட்டு, " எல்லா விருதுகளிலும் விட இதையே நான் சிறந்த விருதாக எண்ணுகிறேன்" எனப் பதிவிட்டிருந்தார். இன்னொருவரோ உங்கள் சொந்தக்காரர் யாராவது தெரிவுக் குழுவில் இருக்கின்றனரா என்று கேட்டார். இவர்கள் மனங்களில் இத்தனை அழுக்குகளை வைத்துக்கொண்டு எதற்காக எழுதுகிறார்கள் என்றே புரியவில்லை. மனதார வாழ்த்தவும் பலர் இருந்தார்கள் என்பதில் மனம் இலேசாகிப் போனது. இன்னும் சிறப்பாக எழுதவேண்டும் என்னும் எண்ணத்தையும் எனக்குள் தோற்றுவித்தது. முக்கியமாய் என்னை உற்சாகப்படுத்தி எழுதத் தூண்டும் யாழ் இணைய உறவுகளுக்கே எப்போதும் என் நன்றி.
  1 point
 15. அப்படிவந்தால் மகிழ்ச்சியே. ஆனால் அதற்கான எந்த மிதப்பையும் காணமுடியவில்லை. ஆயுதபலமிருந்தபோதாவது இந்தா அந்தா என்று ஒரு துடிப்பாவது இருந்தது. கடந்த 12ஆண்டில் ஒரு துகளளவுகூட நகரதாநிலை. எங்கள் இராசதந்திரயளும் குண்டுச்சட்டிக்கை குதிரையோடுகினம். கால, நேர, சூழலை வைத்து ஒன்றையும் நகர்த்தாதநிலையில்....
  1 point
 16. நினைவாஞ்சலிகள்.........! யாழ்நங்கை மற்றும் அவர் தோழிகள் என்று அலங்கரிக்கப்பட்ட பாரஊர்தியில் வந்து கொண்டிருந்தேன்.....ஆஸ்பத்திரி பின் வீதியில் வர பிரச்சினை தொடங்கி விட்டது.....சனங்களின் கலவரத்துக்கிடையில் நங்கைகளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்வதற்கே மிகவும் சிரமப் பட்டோம் .......!
  1 point
 17. அருந்தப்பு என்பது இதைத்தான்! காப்பாற்றிய பொலிசாருக்கு நன்றி. அமெரிக்க பொலிஸ் வழக்கமாக body camera வில் எடுக்கப்பட்ட video வை இலேசில் வெளியே விட மாட்டார்கள். ஆனால் இதில் தங்களுக்கு நல்ல பெயர் வரும் என்பதற்காக உடனடியாகவே வெளியிட்டுள்ளார்கள்.
  1 point
 18. நிலவுக்கு சரக்கு டெலிவரி: நாசாவோடு சேர்ந்து களத்தில் இறங்கும் நிறுவனங்கள் பென் மோரிஸ் தொழில்நுட்பத் துறை செய்தியாளர் 58 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,INTUITIVE MACHINES படக்குறிப்பு, டிம் கிரைன் கிரகங்களுக்கு இடையிலான பாதை குறித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளதாகக் கூறிக்கொள்ளும் பலர் இங்கு இல்லை. ஆனால், டிம் கிரைன் அதில் முனைவர் பட்டம் பெற்றவர். 1990-களில், டெக்சாஸில் உள்ள ஆஸ்டினில் தனது முனைவர் பட்டத்திற்காக உழைத்துக்கொண்டிருந்தபோது, ஒரு நாள் செவ்வாய் கிரகத்திற்கான பயணங்களில் பணியாற்றவேண்டும் என்று அவர் விரும்பினார். மேலும் 2000-ஆம் ஆண்டில் அவர் ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் நாசாவுடன் தனது கனவு வேலையைச் செய்தார். "இன்னும் சில ஆண்டுகளில் விண்வெளி நிலையத்தை முடித்துவிடுவோம். அதன்பின் அடுத்த பெரிய மனித விண்வெளிப் பயணத் திட்டம் செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதுதான் என்று 2000-ஆம் ஆண்டில் கருதினேன்," என்கிறார் டிம் கிரைன். ஆனால், விஷயங்கள் சரியாக வேலை செய்யவில்லை. அவர் நாசாவில் சேர்ந்த சிறிது காலத்திலேயே ஏஜென்சியின் முன்னுரிமைகள் மாறின. "கொலம்பியா விண்கலத்தை இழந்தோம், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர் அதனால், செவ்வாய் கிரகப் பயணம் முன்னுரிமைகளின் வரிசையிலிருந்து நீக்கப்பட்டது," என்று அவர் விளக்குகிறார். சர்ச்சைக்குள்ளாகும் ஆன்லைன் கல்வி நிறுவன செயல்பாடுகள் - கொதிக்கும் ஆர்வலர்கள் 'சென்னை பல்கலை. மாணவியிடம் பாலியல் சீண்டல்' - பேராசிரியருக்கு எதிராக போராட்டம் அவர் சந்திரனுக்கும் இறுதியில் செவ்வாய்க்கும் திரும்புவதற்கான ஒரு லட்சியத் திட்டமான கான்ஸ்டலேஷன் என்ற மற்றொரு நாசா திட்டத்திற்கு மாறினார். ஆனால், 2010-ஆம் ஆண்டின் வாக்கில் அதுவும் கைவிடப்பட்டது. "நாசாவிடம் நிலா தொடர்பான திட்டங்களில் எந்த வாய்ப்பும் இல்லை என்பதில் நான் சிறிது ஏமாற்றமடைந்தேன்," என்கிறார் கிரைன். எனவே, நாசாவுடன் பத்தாண்டுகள் பணியாற்றிய பிறகு, அவர் ஸ்டீவ் அல்டெமஸ் மற்றும் கேம் கஃபாரியிஅன் ஆகியோருடன் சேர்ந்து இண்டியூடிவ் மிஷின்ஸ் (Intuitive Machines) நிறுவனத்தை உருவாக்கினார். சிக்கலான பொறியியல் திட்டங்களுக்கு தங்களுடைய நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதே அவர்களின் திட்டமாக இருந்தது. அதை அவர்கள் சில ஆண்டுகளாகச் செய்தார்கள். ஆனால், 2018-ஆம் ஆண்டில் கூட்டாளிகளால் தவிர்க்க முடியாத ஒரு வாய்ப்பு வந்தது. அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், வணிகரீதியிலான லூனார் பேலோட் சேவைகள் (CLPS) என்ற திட்டத்தை நாசா அறிமுகப்படுத்தியது. இது நிலவுக்கு சரக்குகளை எடுத்துச் செல்ல தனியார் நிறுவனங்களுக்கு ஆணையிடும் திட்டம். பட மூலாதாரம்,GETTY IMAGES 2025-ஆம் ஆண்டுக்குள் சந்திரனுக்குத் திரும்பிச் செல்வதற்கான நாசாவின் சமீபத்திய திட்டமான ஆர்டிமிஸூக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கருவிகள் மற்றும் சாதனங்கள் அந்த சரக்குகளில் அடங்கும். எனவே, அவர்கள் எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டு, ஒன்றாகச் சேர்ந்து ஒரு திட்டத்தைப் பெறத் துடித்தார்கள். "30 நாட்களுக்கு ஒரு நிலவுப் பயணத்திற்கான திட்டத்தை எழுதுவது, புதிய அனுபவமாக இருந்தது. மேலும், எங்கள் போட்டியாளர்களான ஆஸ்ட்ரோபொடிக் மற்றும் ஆர்பிட் பெயாண்ட் உடன் நாங்களும் வெற்றியடைந்தோம். பிறகு எங்கள் வாழ்க்கையே மாறியது," என்கிறார் டிம் கிரைன். ஆனால், ஒப்பந்தத்தை வெல்வது முதல் படி மட்டுமே. அடுத்ததாக நிலவுக்குச் செல்லக்கூடிய ஒரு விண்கலத்தின் வடிமைப்பை உருவாக்க வேண்டியிருந்தது. "ஒரு முழு திட்டத்தையும் ஒன்றாக இணைக்கவேண்டும் என்பதை நாங்கள் விரைவாகக் கண்டுபிடித்தோம். எங்களுக்கு செயல்பாடுகள் தேவையாக இருந்தது. எங்களுக்கு முழு பேலோட் ஒருங்கிணைப்புக் குழு தேவையாக இருந்தது. இவையனைத்தையும் முழுவதுமாகச் சேர்த்துப் பார்த்தீர்களானால், எங்களிடம் ஒரு சிறிய விண்வெளித் திட்டமே இருப்பது தெரியும்," என்றார் கிரைன். ஒரு நிழல் வரைபடத்தைத் தவிர வேறொன்றுமில்லாமல் தொடங்கி, நோவா-சி என்ற விண்கலத்தை உருவாக்க, இண்டியூடிவ் மிஷின்ஸுக்கு மூன்று ஆண்டுகள் ஆனது. பட மூலாதாரம்,INTUITIVE MACHINES அவர்களுடைய பொறியாளர்கள் தற்போதுள்ள விண்வெளி தொழில்நுட்பத்தைப் பற்றிய அறிவை, தங்கள் சொந்த வளர்ச்சியோடு கலந்து பயன்படுத்தினார்கள். நன்கு முயற்சி செய்து ஒரு கலவையாக, மீத்தேன் மற்றும் திரவ ஆக்சிஜனை பயன்படுத்தும் அதன் உந்துவிசை அமைப்பை நிறுவனம் உருவாக்கியது. இது ஓர் எரிபொருளும்கூட. எதிர்கால பயணங்களுக்கு ஆற்றல் அளிக்க விண்வெளியில் ஒருநாள் தயாரிக்கப்படலாம். "நமக்கு இதுவரை தெரிந்த அளவில், பிரபஞ்சத்தில் மிக அதிகமாக உள்ள இரண்டு ரசாயனங்களான, கரிமம் மற்றும் நீர் இருக்கும் எந்த இடத்திலும், எங்களால் மீத்தேன் தயாரிக்க முடியும். திரவ ஆக்சிஜன் மற்றும் மீத்தேன் ஆகியவை சூரிய குடும்பத்தின் மூலம் வர்த்தகத்தை இயக்கும் உந்துவிசை என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் டிம் கிரைன். பட மூலாதாரம்,INTUITIVE MACHINES படக்குறிப்பு, இண்டியூடிவ் மிஷின்ஸ் தங்கள் சொந்த இன்ஜினை உருவாக்கியுள்ளார்கள் நோவா-சி என்ற விண்கலம் 130 கிலோ எடையைச் சுமந்து செல்லும் திறனுடையது. ஆனால், அதன் முதல் பயணத்தில் 80 கிலோ மட்டுமே சுமந்து செல்லும். நோவா-சி தன்னை நிரூபித்தவுடன், அதைவிடப் பெரிய விண்கலம் உருவாக்கப்படும் என்று கிரைன் கூறுகிறார். ஐந்து டன் எடையைச் சுமந்து செல்லும் விண்கலத்தை உருவாக்கும் திட்டம் ஒன்றை நிறுவனம் கொண்டுள்ளது. ஆனால், அந்த லட்சியப் பணிகளுக்கு முன், முதல் ஏவுதல் திட்டமிடலுக்குச் செல்லவேண்டும். 1972-ஆம் ஆண்டு அப்பல்லோ பயணங்களுக்குப் பிறகு ஓர் அமெரிக்க விண்கலம் நிலாவில் மென்மையாகத் தரையிறங்கவில்லை. (2009-ஆம் ஆண்டில் LCROSS திட்டம், மோதும் தாக்கத்தால் பொருட்கள் எகிறுவதை ஆய்வு செய்வதற்காக ஒரு வாகனத்தை நிலவில் வேண்டுமென்றே மோதியது.) நோவா-சி 2022 முதல் காலாண்டில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் விண்வெளிக்குள் செல்ல வெடித்துக் கிளம்பும்போது அதை மாற்றமுடியும். அது சுமார் 18 நிமிடங்களுக்குப் பிறகு அந்த ராக்கெட்டில் இருந்து துண்டிக்கப்பட்டு, நான்கு நாட்கள் பயணமாக நிலவை நோக்கிச் செல்லும். அங்குச் சென்றதும் நோவா-சி சுமார் 24 மணிநேரத்திற்கு நிலவின் கீழ் சுற்றுப்பாதையில் நுழையும். பூமியை நோக்கியிருக்கும் நிலவின் இருண்ட எரிமலைக் கடல்களான மேரே செரினிடாடிஸ் (Mare Serenitatis) மற்றும் மேரே கிரிசியம் (Mare Crisium) இடையே மென்மையான டச் டவுனுக்கு அதன் முக்கிய இயந்திரத்தைப் பயன்படுத்தும். பட மூலாதாரம்,INTUITIVE MACHINES பாதுகாப்பாக தரை இறங்கியவுடன், அது நிலவுடைய நாளில் சுமார் 13.5 நாட்களுக்குச் செயல்பாட்டில் இருக்கும். அந்த நேரத்தில் நாசா மற்றும் வணிக பேலோடுகள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வேலைகளைத் தொடங்கிவிடும். சோதனைகள் மற்றும் சேகரிக்கப்பட்ட தரவுகளை, இண்டியூடிவ் மிஷின்ஸின் தரவு ரிலே சேவை மூலமாக பூமிக்கு அனுப்பப்படும். ஆற்றல் தீர்ந்தவுடன், அனைத்து செயல்பாடுகளும் நின்றுவிடும். அதன்பிறகு, நோவா-சி நிலவின் மேற்பரப்பில் நிரந்தரமாக நிரந்தரமாக இருந்துவிடும். இல்லையேல் எதிர்காலத்தில் ஏதேனும் விண்வெளி வீரர்கள் அதை மறுசுழற்சி செய்யும் வரை அங்கே இருக்கும். நிலவில் நோவா-ச் எதிர்கொள்ளும் தீவிர வெப்பநிலையை நிர்வகிப்பது மிகப்பெரிய பொறியியல் சவால்களில் ஒன்று. அங்கு வெப்பநிலை 140C (284F) வரை அதிகமாகவும் -170C (-275F)அளவுக்குக் குறைவாகவும் இருக்கும். "இது வெறும் விண்கலம் மற்றும் அதன் விமான கணினிகள் என்றால், அது ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கும். ஆனால், இப்போது நாம் நம்முடைய பேலோடுகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும்," என்று கிரைன் கூறுகிறார். நிலவின் தீவிர சூழலில்கூட சரக்குகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க, வெப்பமூட்டும் மற்றும் குளிரூட்டும் அமைப்புகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. பட மூலாதாரம்,INTUITIVE MACHINES சிமியோன் பார்பர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் ஒரு மூத்த ஆராய்ச்சியாளராக உள்ளார். மேலும் விண்வெளியில் கிரகங்கள் மற்றும் நிலவு உள்ளிட்ட பிறவற்றில் வேலை செய்யும் கருவிகளை உருவாக்குவதில் அவருடைய வாழ்வைச் செலவிட்டார். எக்ஸோஸ்பெரிக் மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் தான் அவருடைய தற்போதைய திட்டம். அது, ஆஸ்ட்ரோபோடிக் என்ற இண்டியூடிவ் மிஷின்ஸ் நிறுவனத்தின் போட்டியாளரின் முதல் பயணத்தில் விண்வெளிக்குச் செல்லும். அவருடைய சாதனம் லேண்டர் எனப்படும், நிலவில் தரையிறங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட விண்கலத்தைச் சுற்றியுள்ள நிலவின் வளிமண்டலத்தைப் பகுப்பாய்வு செய்யும். "நாம் ஒரு புதிய சகாப்தத்திற்குள் நுழைகிறோம் என்று நினைக்கிறேன்," என்று அவர் கூறுகிறார். முன்னதாக, அவரைப் போன்ற விஞ்ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் ஒன்று அல்லது இரண்டு பெரிய விண்வெளிப் பயணங்களில் பணியாற்றியிருக்கலாம். ஆனால், நிலவுக்கு அடிக்கடிச் செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் சாத்தியக்கூறுகள் இப்போது இருக்கின்றன. "இப்போது பல திட்டங்கள் இருக்கின்றன. இது உங்களுக்கு விரைவாக விஷயங்களைச் செய்யவும் சற்று ஆபத்தான விஷயங்களைச் செய்யவுமான வாய்ப்பைக் கொடுக்கிறது. அதோடு, அனைத்து வாய்ப்புகளை ஒரே இடத்தில் வைத்திருக்கவும் முடியாது. அதனால், தோல்வி பயத்திலிருந்து இது உங்களை விடுவிக்கிறது," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,OPEN UNIVERSITY படக்குறிப்பு, சிமியோன் பார்பர் இண்டியூடிவ் மிஷின்ஸ் மற்றும் அதன் போட்டியாளர்களின் நிலா போக்குவரத்து கட்டமைப்புகௌம் நாசாவின் ஆர்டிமிஸ் போன்ற அரசின் தலைமையிலான திட்டங்களும் நிலவில் மனித செயல்பாடுகளின் புதிய சகாப்தத்தின் தொடக்கமாக இருக்கும் என்று கிரைன் கூறுகிறார். "முதன்முறையாக நாங்கள் புதிதாக நிறைய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது போல் அன்றி, மின்னணுவியல், கணினிகள், உற்பத்தி மற்றும் கலப்பு பொருட்கள் என்று நிலைமையை மாற்றியமைத்த பல தொழில்நுட்பங்கள் எங்களிடம் உள்ளன." "அடுத்த 20-30 ஆண்டுகளில், பொதுமக்கள் நிலவுக்கான பயணங்களுக்கு, விடுமுறை நாட்களுக்காகப் பணம் செலுத்துவதை நீங்கள் பார்ப்பீர்கள் என்று நினைக்கிறேன். "எதிர்காலத்தைக் கணிப்பது கடினம். ஆகவே, அது நடக்காமலும் போகலாம். ஆனால், அது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன்." முனைவர் பார்பர் எச்சரிக்கையுடனான நம்பிக்கையோடு இருக்கிறார். நிலவு மனிதர்களுக்கு எவ்வளவு எதிரானதாக இருக்கும் என்பதை அவர் எடுத்துக்காட்டோடு சொல்கிறார். மிகப்பெரிய வெப்பநிலை வரம்பு மற்றும் சந்திர தூசி ஆகியவை நிர்வகிக்கப்படாவிட்டால், இயந்திரங்கள் மற்றும் மனித நுரையீரலைச் சேதப்படுத்தும். மேலும், எதிர்கால மனித ஆய்வுகள் ஏற்படுத்தும் குறைந்தபட்ச சுற்றுச்சூழல் தாக்கத்திலும் அவர் ஆர்வமாக உள்ளார். ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர் செல்வாரா? "எனக்கு என் வீட்டில் உள்ள வசதிகள் பிடிக்கும். ஆனாலும் ஆம் செல்வேன். முடியாது என்று எப்படிச் சொல்லமுடியும்?" https://www.bbc.com/tamil/science-59923797
  1 point
 19. டிராகன் சிங்கத்தை விழுங்கும் ......! அதுக்கு அவசியமில்லை பிரியன்.....தமிழ் தெரிந்த அழகிய சீன ஆசிரியைகள் இப்பவே தயார்......! 😂
  1 point
 20. கோப்பரேசன் என்றால் நடத்துபவரை எதுவும் செய்ய இயலாது. தனிப்பட்ட அவரின் சொத்தில் கை வைக்க முடியாது.
  1 point
 21. எந்த வித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் ஊன்னிப்பாக அவதானித்துக் கொண்டே இருந்தால் இப்படித்தான் நடக்கும். 2009 வரைக்கும் ஒரு பயல் சிறிலங்காவின் வடகிழக்குக்கு மட்டுமல்ல தென்பகுதியைக் கூட எட்டியும் பார்க்கவிலை;. புலிகளையும் தமிழரையும் அழிக்ககும் போது வேடிக்கைபார்த்ததுமட்டுமல்லாவில் அதற்கு உதவியும் செய்தவர்கள் தலைக்கே இப்போது ஆபத்து வந்துள்ளது.அது மட்டுமல்ல அழித்த சிங்களவர்களே பட்டினியால் அழியும் நிலை வந்துள்ளது.
  1 point
 22. இங்கு கத்தோலிக்க பாடசாலைகள் என்றால் ஒழுக்கமாய் இருக்கும் என்று அதில் தங்கட பிள்ளைகளை சேர்ப்பதற்காய் மதம் மாறின தமிழர்களும் இருக்கிறார்கள் ..
  1 point
 23. £100, £1000, £10, 000, £100, 000 தனிபட்டவரின் கடன், அந்த தனிநபருக்கு பிரச்சனை. மில்லியன் அல்லது அதற்கு மேல் கடன், கடன் கொடுத்தவரின் பிரச்னை. நாடுகள், அரசுகளுக்கும் இது பொருந்தும்.
  1 point
 24. சர்வதேச நிதியத்தின் முதல் நிபந்தனையே, யுத்தமில்லா நிலையில் பாதுகாப்பு படை எண்ணிக்கை, செலவை குறை.... அதை செய்ய விருப்பம் இல்லை.
  1 point
 25. எல்லா இடமும் இறுக வேறு வழியில்லாமல் சர்வதேச நிதியத்திடம் கையேந்துவினம் ஆனால் அதுவரை இந்த ஆட்சி நிலைக்குமோ என்பது சந்தேகமே.
  1 point
 26. உங்களுக்கு ஈழ விடுதலைப்போராட்டங்கள் பற்றி தெரியும். எனக்கும் தெரியும். உங்களுக்கு கள நிலவரங்கள் அதிகம் தெரிந்திருக்கும். என்னைப் போன்ற போன்றவர்களுக்கு கேள்வி ஞானங்கள் மட்டுமே. உங்களுக்கு வீரப்பனைப்பற்றி தெரிந்திருக்கும். எனக்கும் அதேயளவு தெரிந்திருக்கும்.
  1 point
 27. சமர்க்கள விரிப்புகள் கட்டுரைகள் மூலம்: 'எரிமலை', எப்ரல் 2000, பக்கம்: 8-11 மூல எழுத்தாளர்: சுப்பு எழுத்துணரியாக்கம் & தனித்தமிழாக்கம்: நன்னிச் சோழன், 09|1|2022 ஆனையிறவு வீழ்ந்ததா? ! நெஞ்சுநெகிழ ஒர்‌ ஆனந்த அவஸ்தை சில மணிநேரத்திற்குள்‌, உலகத்தின்‌ எல்லா மூலைகளுக்கும்‌ அந்த இனிய செய்தி பரவியது. நெஞ்சை நிமிர்த்தி, முகம்‌ மலர்த்தி தெருவில்‌ இறங்கி, இந்த உலகத்தை உரிமையுடன்‌ பார்த்தனர்‌ தமிழர்கள்‌. உலகம்‌ தம்மை வியப்‌புடன்‌ பார்ப்பதாய்‌ உள்ளுணர்வு கொண்டனர்‌. பெருமிதம்‌ பொங்கும்‌ விழிகளால்‌ ஆனந்தக்‌ கண்ணீர்‌ சொரிந்தனர்‌. எதிர்ப்பட்ட தமிழர்‌களை கட்டியணைத்து முத்தம்‌ தந்தனர்‌. வெடி கொழுத்திக்‌ கொண்‌டாடினர்‌. தேசத்தின்‌ வீரர்கள்‌, வெற்றிகொண்டதாய்‌ மகழ்ச்சி. தேசியத்‌ தலைவரின்‌ படத்தை அச்சடித்து வீதிகளிலும்‌ வீடுகளிலும்‌ கடைகளிலும்‌ ஒட்டி நெகிழ்ந்து போயினர்‌. இது சற்று மிகையான வெளிப்‌படுத்தல்‌ அல்ல. உண்மை இதுதான்‌. உலகத்தில்‌ இங்குமங்குமாய்‌ சிதறி வாழும்‌ தமிழர்கள்‌ மெய்சிலிர்த்துப்‌ போனது முற்றிலும்‌ உண்மை. எத்‌துணை பெரும்‌ சாதனை. உலகத்தில்‌ எங்கேனும்‌ இப்பெரும்‌ சாதனை படைக்கப்பட்டிருக்குமா? என்றே ஒவ்‌வொரு தமிழனின்‌ இதயமும்‌ வரலாற்றைப்புரட்டிப்‌ பார்த்திருக்கும்‌. பதினையாயிரத்திற்கும்‌ மேற்பட்ட படையினரைக்‌ கொண்ட பெரும்‌ படைத்தளத்தை நாற்பத்தெட்டு மணிநேரத்திற்குள்‌, தாக்கி கைப்பற்றியிருப்பது, உலக மாசாதனையன்றி வேறென்ன. கடந்த ஆண்டு இறுதியில்‌, வன்னி மண்ணில்‌ சிங்களப்படை பெற்ற மோசமான அவமானகரமான தோல்விகளுக்கு, ஏழு படைத்துறை அதிகாரிகளை பொறுப்பாக்கி, அவர்களுக்கு கட்டாய பணிஓய்வை சந்திரிகா அரசு வழங்கியிருக்கின்றது. வன்னித்‌ தோல்வி எப்படி ஏற்பட்டது எனக்‌ கண்டறிய, சிறீலங்கா அதிபர் சந்‌திரிகாவால்‌ அமைக்கப்பட்ட, மூன்று படைத்துறை அதிகாரிகளைக்‌ கொண்ட உசாவல் குழுவால்‌, ஏழு அதிகாரிகள்‌ தோல்வியின்‌ பொறுப்‌பாளிகளாக்கப்பட்டுள்ளனர்‌. இந்த உசாவல் முடிவின்‌ வழிவகை, அந்த ஏழு அதிகாரிகளுக்கும்‌ சந்‌திரிகாவால்‌ மார்ச்‌ இறுதியில்‌ கட்‌டாய பணி ஓய்வு வழங்கப்பட்டது. இப்படி ஒரு தீர்ப்பை வழங்க, அதற்காக சிலரது தலையை உருட்டி விடுவதன்‌ மூலம்‌ தன்‌ தலையைக்‌ காப்பாற்ற சந்திரிகா முயற்சித்திருப்பது தெளிவானது. இந்த வரலாற்றுத்‌ தோல்விக்கு பதில்‌ சொல்ல வேண்டியவர்‌, முப்படைக்கும்‌ பொறுப்பான சந்திரிகா என்பதன்‌ இசையை மாற்றி, பழி யார்மீது வீழ்த்தப்பட்டிருக்கின்றது. அடுத்து வரும்‌ மாபெரும்‌ தோல்விகளை உணராமல்‌, இத்‌துடன்‌ தோல்வியால்‌ வந்த தொல்‌லைகள்‌ தொலைந்தது என சந்திரிகா நிம்மதிப்‌ பெருமூச்சு விட்டார்‌. ஆனால்‌, சந்திரிகாவின்‌ நிம்மதியின்‌ ஆயுள்‌ கம்மியாவும்‌, சிலநாட்‌கள்தான்‌. ஓயாத அலைகள்‌ மூன்‌றின்‌ அடுத்தகட்டத்‌ தாக்குதல்கள்‌, குடாநாட்டுக்குள்‌ சிங்கள அரசின்‌ வல்வளைப்பு கனவின்‌ மையநிலை அருகே ஆரம்பித்துவிட்டது. வடமராட்சி கிழக்கில்‌ அமைந்‌திருந்த சிங்களப்படையின்‌ வலு பொருந்திய வெற்றிலைக்கேணி, கட்‌டைக்காடு படைத்தளங்கள்‌, அழிக்‌கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட குடாநாட்டு மீட்புப்போர்‌, இன்று அதன்‌ முக்கியமான கட்டத்தில்‌ நிற்‌கின்றது. பொறுமையாகவும் மெதுவாகவும்‌ ஒவ்வொரு அடிகளையும்‌ உறுதியாக வைத்தபடி, ஆனையிறவை முழுமையான முற்றுகைக்குள்‌ கொண்டுவரும்‌ நகர்வை மேற்கொண்டிருந்த விடுதலைப்‌ புலிகள்‌, இன்று, ஆனையிறவு இயக்கச்சிப்‌ பெருந்தளத்தை இரண்டு நாட்கள்‌ நடத்திய உக்கிரமான தாக்‌குதலின்‌ பின்னர்‌ முற்றுமுழுதாக கைப்பற்றிக்கொண்டனர்‌. பத்தாயிரத்திற்கும்‌ மேற்பட்ட படையினர்‌ குவிக்கப்பட்ட பெருந்‌தொகை நவீன ஆயுதங்கள்‌, சேணேவிகள்‌, தகரிகள்‌, கவவூர்திககள்‌ என, ஒரு இறுக்கமான, வலுபொருந்திய படைத்துறை அரக்‌கன்‌ குந்தியிருப்பது போல்‌ அமைந்‌திருந்த பெரும்‌ தளமே, விடுதலைப்‌ புலிகளால்‌ வீழ்த்தப்பட்டுள்ளது. பதினெட்டாம்‌ நுற்றாண்டில்‌, ஒல்லாந்‌தர்களால்‌ ஆனையிறவில்‌ அமைக்கப்‌பட்டிருந்த இத்‌ தடைமுகாம் ஒவ்வொரு வல்வளைப்பாளர்களின்‌ காலகட்டங்களிலும்‌ பத்தாகி நூறாகி ஆயிரமாகி தற்போது பல்லாயிரமாக வலுப்பெற்ற தளமாக இருந்த நிலையிலேயே, தமிழர்‌ சேனையால்‌ அழிக்கப்பட்டிருக்கின்றது. அகற்றப்‌பட்டிருக்கின்றது. மெதுவாக, அதேவேளை உறுதியாக, சரியாகத்‌ திட்டமிட்டு, உரிய தந்திரவழிவகைகளுடன்‌, தமது இலக்கு நோக்கி நாட்கள்‌, வாரங்கள்‌, மாதங்‌களாக நகர்ந்த விடுதலைப்‌ புலிகளின்‌ சிறப்பு அதிரடிப்படை அணிகள்‌, ஏப்பிரல்‌ இருபதாம்‌ திகதி, பெரும்‌ தளத்தை தமது முழுமையான முற்றுகைக்குள்‌ கொண்டு வந்தனர்‌. மதர்ப்போடு, திமிர்காட்டி நின்ற சிங்களப்படையின்‌ ஆனையிறவுப்‌ பெரும்‌ பூதத்தை, பட்டினி போட்டு பணிய வைக்கின்ற முன்னைய தந்திரவழிவகையை கைவிட்டு, நேரடியாகவே களம்‌ இறங்கினர்‌ விடுதலைப்‌ புலிகள்‌. விடுதலைப்‌ புலிகளின்‌ ஆயுத வளமும்‌ படைவலுவும்‌, ஒரு மரபுப்‌போர்ப்‌ பாணியில்‌, படைத்துறை அதிரடித்‌ தாக்குதலை மேற்கொள்ளவும்‌, மழை போன்று சேணேவி எறிகணைத்‌ தாக்குதல்களை நடத்தவும்‌ விடுதலைப் புலிகளுக்கு கைகொடுத்தது. சிங்களப்‌ படையின்‌ வழங்கல்‌ பாதையை முற்றாக துண்டாடி, ஆனையிறவுக்கும் பளைக்கும் இடைப்பட்ட பெரும்‌ பகுதியை மீட்டெடுத்து வலுப்படுத்தி, இறுதிக்‌ கட்டத்‌ தற்போதைய தாக்குதலைத்‌ தொடுத்தனர்‌ விடுதலைப்‌ புலிகளின்‌ சிறப்பு அதிரடிப்படைகள். ஆனையிறவு வீழ்ச்சி, யாழ்‌ குடாநாட்டில்‌ சிங்களப்படை நிலைகொள்ள முடியாத நிலையை ஏற்‌படுத்தியுள்ளது என்பது தெட்டத்‌தெளிவானது. ஆனையிறவு வீழ்ச்‌சியுடன்‌, தெற்கு நோக்கி தமது பெட்டிகளைக்‌ கட்டவேண்டிவரும்‌ என்பது சிங்கள அரசிற்கு நன்கு தெரியும்‌. அதனால்தான்‌ ஆனையிறவை எப்பாடுபட்டாவது காப்பாற்றியாக வேண்டும்‌ என்று, சிங்களப்‌ படைத்‌ தலைமையும்‌ அரச தலைமையும்‌ படாதபாடுபட்டன. பெருந்தொகைப்‌ படையினரைக்‌ குவித்தும்‌, நவீன ஆயுத தளபாடங்களைக்‌ கொண்டு சேர்த்தும்‌ அது கடும்‌ முயற்சிகளை மேற்கொண்டது. வெளிநாட்டு படைத்துறை வல்லுநர்களின் பயிற்சியைப்‌ பெற்றும்‌, ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தியும்‌ பார்த்தது. ஆனால்‌ யாவும்‌ விழலுக்கிறைத்த நீராயின. ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்‌ணூற்ரோராம்‌ ஆண்டும்‌, ஆனையிறவுப்‌ பெரும்‌ தளத்தை விடுதலைப்‌ புலிகள்‌ முற்றுகையிட்டிருந்தனர்‌. முப்‌பத்தியொரு நாட்களாகத்‌ தொடர்ந்த அந்த முற்றுகைச்‌ சமர்‌, இறுதியில்‌ தன்‌ இலக்கை அடையவில்லை என்ற போதும்‌, விடுதலைப்‌ போராட்டத்தை, அது இன்னுமொரு படிநிலைக்கு முன்னகர்த்தியது. இலங்கைத்‌ தீவில்‌ இரு படைத்துறைகள்‌ இருக்கின்றன என்ற உண்மையை அது உலகிற்கு சொல்லியது. கரந்தடிப்போர்‌ அணிகளாக தாக்குதல்களை நடத்திய விடுதலைப்‌ புலிகளை, ஓர்‌ மரபுப்‌படையணியாக இனங்காட்டிய சமராகவும்‌ அமைந்தது. குறைந்த வளத்‌துடன்‌, வலுப்பொருந்திய எதிரியை பல நாட்கள்‌ நேருக்குநேர்‌ சந்தித்து, ஒரு படைத்துறை சாதனையையே விடுதலைப்‌ புலிகள்‌ படைத்திருந்தனர்‌. ஆனால்‌, இன்று நிலைமையோ வேறானது. ஒவ்வொரு சமர்க்களங்‌களிலும்‌, பட்டறிந்து போரியல்‌ கலையில்‌ மெருகேறிப்போயுள்ளது விடுதலைப்‌ புலிகளின்‌ அணிகள்‌. சமர் தந்திரவழிவகைகள்‌, படை நடத்துகைகள்‌, படை நகர்த்துகைகளை நுணுக்‌கமாகவும்‌ ஒரு நீண்ட களமுனை அனுபவங்களோடு கற்றுத்தேர்ந்த கட்டளையாளர்கள், பட்டை தீட்டிமிளிர்‌கின்ற போராளிகள்‌, இவற்றிற்கு விடுதலைப்‌ புலிகளின்‌ கைகளை வலுப்படுத்தியுள்ள சிங்‌களப்படைகளின்‌ நவீன ஆயுதங்கள்‌, சேணேவிகள் என விடுதலைப்‌ புலிகள்‌ முன்னெப்போதையும்விட வலுப்பொருந்திய நிலையில்‌ இருக்‌கின்றனர்‌. இவற்றை எல்லாம்‌ விட, எதிரியின்‌ வலு, வலுவீனங்களை துல்லியமாக எடைபோட்டு, நுண்ணியமாக, அதியற்புதமாக படை நடவடிக்கைகளைத்‌ திட்டமிட்டு, நெறிப்படுத்தும்‌ எமது தேசியத்‌ தலைவரின்‌ உலகம்‌ வியக்கின்ற போராற்றல்‌. தொண்ணூற்ரோராம்‌ ஆண்டு, ஆனையிறவை மீட்க சிங்களப்படை, கடல்வழித்‌ தரையிறக்கத்தை மேற்‌கொண்டது. அதனை ஒத்தவகையில்‌, அதேபாதையில்‌ கடல்வழித்‌ தரையிறக்கத்தை மேற்கொண்டே தற்போது விடுதலைப்‌ புலிகள்‌ ஆனையிறவைக்‌ கைப்பற்றியுள்ளனர்‌. ஆனையிறவு வீழ்ச்சியுடன்‌ யாழ்‌ குடாநாட்டு மீட்சியும்‌, உறுதியாகி விட்டது. கட்டளையதிகாரியை மாற்றி, படை நடத்துகைகளை மேற்கொண்ட போதும்‌, முப்படைக் கட்டளையாளர்களை பலாலியில்‌ தங்கவைத்து படையினரைப்‌ சமரிடப் பணித்த போதும்‌ வெற்றி இயலுமைப்படவில்லை . விடுதலைப்‌ புலிகளின்‌ நகர்வை சிங்களப்‌ படையினரின்‌ எந்த முயற்சிகளாலும்‌ தடுத்து நிறுத்த முடியவில்லை. இறுதிக்கட்டமாக, சந்திரிகாவின்‌ சிறப்புப் பணிப்பின்பேரில்‌, சிங்ககளத்தின்‌ நம்பிக்கை வெள்ளி ஜானக பெரேரா யாழ்‌ சென்ற மறுநாளே, அவர்களின்‌ மோசமான தோல்விச்‌ செய்தியைத்தான்‌ அவரால்‌ கொழும்புக்கு அனுப்ப முடிந்திருக்கின்றது. ஆயிரத்தித்‌ தொளாயிரத்து தொண்ணூற்றைந்தாம்‌ ஆண்டு, யாழ்பாணத்தைக்‌ கைப்பற்றும்‌ நடவடிக்கையில்‌ முன்நின்று வெற்றிகளைக்‌ குவித்தவர்‌ என்பதற்கு மாத்‌திரம்‌, ஜானக பெரேரா யாழ்‌ அனுப்பப்பட்டுள்ளார்‌ எனக்‌ கொள்‌ளப்பட வாய்ப்பில்லை. மாறாக, படுகொலைகளுக்கும்‌ புதைகுழிகளுக்‌கும்‌ பெயர்‌ பெற்றவர்‌ இவர்‌ என்பதே இதன்‌ முதன்மை காரணமாக் இருக்கும்‌. செம்மணிப்‌ புதைகுழிகளின்‌ நாயகன்‌ ஜானக பெரேரா தற்போது யாழ்ப்பாணம்‌ அனுப்பப்பட்டிருப்பதன்‌ நோக்கம்‌ மிகப்‌ பயங்கரமானதாகவும்‌ கொடூரமானதாகவும்‌ இருக்கும்‌ என்றே அஞ்சப்படுகின்றது. யாழ்‌ குடாநாட்டை வல்வளைத்த போது மேற்கொண்ட கொடுமையை, யாழ்‌ குடாநாட்டை விட்டுச்‌ செல்லுகையிலும்‌ சிங்களப்படை செய்யப்‌போகின்றதா? விதைத்தால்‌ எங்‌கேனும்‌ அறுக்க வேண்டிவரும்‌. ********
  1 point
 28. உங்கள் வரிசையில் திருமாளவன்,வை கோ கோபாலசாமி,நெடுமாறன்,வேல்முருகன்,திருமுருகன் காந்தி,நடிகர் வடிவேலு;ராஜ்கீரண், திமுக ராஜீவ், ஜோர்ஜ் பெர்னாண்டேஜ்,ராமதாஸ்,விஜகாந்த்,ரி ராஜேந்தர்,கொளத்தூர் மணி எல்லோரும் வருவார்களா சார்!? இங்கே வீரப்பன் சூழ்ச்சிகளுக்கு ஆளாகவில்லை என வாதாட வருகின்றீர்கள்?
  1 point
 29. இதுவே… தமிழ்ப் பகுதியில், சிங்களத்தை புறக்கணித்திருந்தால்…. பத்திரிகை, சிங்கள அரசியல் வாதிகள், பிக்குகள் எல்லாரும் சேர்ந்து… விஷம், விஷமாக… கக்கி இருப்பாங்கள், நாறல் பயலுகள். சீனன் செய்தவுடன்… நவ தூவாரங்களையும் மூடி கொண்டு, தண்ணீரில் விட்ட “குசு” மாதிரி… சத்தம் இல்லாமல் இருக்கிறார்கள். 😎
  1 point
 30. அடி சக்கை. ஆனந்த சங்கரி இருந்தா கொக்காவிலுக்காள பழைய கண்டி ரோட்ட பிடிச்சி வந்திருவார். இவையள் கதி அதோ கதிதான்🤣. இஞ்ச பார்கிளேசும், நட்வெஸ்டும் அடிக்கிற அடிக்கு அது பரவாயில்லை. ஆக மிஞ்சினால் அம்பாந்தோட்டைல ஒரு அரை கிணறை எழுதி கொடுத்து தப்பிக்கலாம்🤣.
  1 point
 31. இவை ஹிந்தியாவாலும் மேற்காலும் ரசிக்கக் கூடிய காட்சிகள் அல்ல என்பது மட்டும் தெளிவு. இவர் என்னத்தைப் பேசினாலும் சீனாவுடன்.
  1 point
 32. நானறிந்தவரை இப்போதும் (கொவிட்முன்) ஆதிக வருமானம் ஈட்டும் சேவை வடக்கு சேவைதான். மிக விரைவாக நாளுக்கு 1 என்பதில் இருந்து நாளுக்கு 5 வரை சேவையை உயர்த்தினார்கள் என நியாபகம். அப்படி இருந்தும் சிலசமயம் டிக்கெட் கஸ்டம் எடுப்பது.
  1 point
 33. 1 point
 34. கொவிட் தொற்று நோய்க்கு முகங்கொடுத்துள்ள சூழ்நிலையில், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக கடனை தள்ளுபடி செய்வதில் கவனம் செலுத்தினால், அது நாட்டுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார். 👌
  1 point
 35. விடுதலைப்புலிகளுக்கும் வீரப்பனுக்கும் இடையே ஒரு கற்பனை தொடர்பை ஏற்படுத்தியது.. நக்கீரன் கோபாலும்.. ஹிந்திய றோவும் தான். முன்னர் இந்தியா ருடே கட்டுரை ஒன்றில்.. புலிகளே வீரப்பனுக்கு ஆயுதங்களை சப்பிளை செய்வதாக நடிகர் ராஜ்குமார் கடத்தலோடு எழுதி இருந்தார்கள்.. வாசிச்ச ஞாபகம் உள்ளது. விடுதலைப்புலிகள் எப்போதுமே.. தமக்கு வீரப்பனுடன் தொடர்போ இல்லையோ.. அல்லது அவரின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியோ கருத்து வெளியிட்டதாகத் தெரியவில்லை. விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகச் சித்தரித்துக் காட்ட ஹிந்திய றோ.. ஹிந்தியாவில் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட கிட்டத்தட்ட நக்சல்கள்.. மாவோயிஸ்டுக்கள் மற்றும் வீரப்பனுடன்.. விடுதலைப்புலிகளை சேர்த்து சோடிச்சு றோ.. தன் சார்ந்த ஊடகங்கள் வாயிலாக ஹிந்தியாவின் புலி எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு ஹிந்திய மக்களிடம் நியாயம் கற்பிக்க விளைந்தமை தெரிந்ததே. ஹிந்தியா ஈழத்தில் செய்த படுமோசமான மனித உரிமை மீறல்கள்.. போர்க்குற்றங்கள் தொடர்பில் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கே சரியாகத் தெரியாத வகையில் றோ செயற்பட்டிருந்தது. சில வீரப்பன் ஆர்வலர்கள்.. விடுதலைப்புலிகளோடு அவரை சேர்த்துப் பேசுவது.. தமிழ் தேசியம் என்று நினைக்கக் கூடும். ஆனால்.. வீரப்பனை ஒரு பயங்கரமான மனிதனாகவே ஹிந்திய அரசும்.. தமிழக அரசுகளும் சித்தரித்து விட்டுள்ள நிலையில்.. விடுதலைப்புலிகள் மீது மேலும் மேலும் கரிபூசும் நிகழ்வாவே இந்த தொடர்புப் பேச்சுகள் போய் முடியும். தமிழ் தேசியத்திற்கு.. விடுதலைப் புலிகளின் தார்மீகப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை வெளிக்காட்டவோ இது உதவாது. வீரப்பன் ஒரு நியாயவாதியாக.. நவீன ரொபின் கூட்டாகக் கூட இருப்பினும்.. அதிகார சக்திகளுக்கு வீரப்பனையும் புலிகளையும் பயங்கரமானவர்களாக சித்தரிக்க வேண்டிய தேவையே இன்றும் உள்ளதால்.. இது தொடர்பில் இப்படியான பேச்சுக்கள் தொடர்பில் அவதானம் முக்கியமாகும்.
  1 point
 36. எனக்கும் இரண்டாம் வக்சீன் எடுத்த பின் இந்தப் பாதிப்பின் மத்திம தாக்கம் இருந்தது. காரணம் எடுத்தது எல்லாமே எம் ஆர் என் ஏ வக்சீன் தான். ஆனாலும் அது இயல்பாகவே குணமாகிவிட்டது. பொதுவாக இது இயல்பாக குணமாகும். ஆனாலும் அறிகுறிகள் தொடர்ந்து தென்பட்டால்.. இதய வைத்திய நிபுணரின் ஆலோசனையும் மருத்துவக் கண்காணிப்பும் பெறுவது நல்லது. ஏனெனில்.. இதன் தீவிர தன்மை உயிராபத்தை விளைவிக்கலாம்... என்பதால். மேலே குறிப்பிட்டது போல.. சிலவகை இதயப் பாதிப்புக்கள் உள்ளோர் எம் ஆர் என் ஏ வக்சீன் எடுக்க முதல் ஆலோசனைகள் பெறுவதும்.. வக்சீன் போடும் இடத்தில் தமது நிலையை விளக்கிக் கொள்வதும்.. வக்சீனில் இருந்து தவிர்ப்புப் பெறுவதும் சாத்தியமும்.. நல்லதும் ஆகும்.
  1 point
 37. இல்லையே நட்பு வட்டத்தில் அவையும் பொத்தாம் பொதுவாகவே நிற்கிறன. எ+கா 1. இஸ்ரேலில் வலது அல்லது இடது சாரி எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அமெரிக்காவில் குடியரசு, ஜனநாயக கட்சியிடையே சம தூரம்தான். 2. இதே போலதான் யூகே கன்சேர்வேடிவ், லேபர் இடையே அமெரிக்காவின் நிலைப்பாடும். எமக்கு ஒரு நாடு இல்லை. ஆனால் பொதுப்பட்டு “ஈழத்தமிழர்” என்ற கூட்டு அடையாளம் உண்டு. இந்த கூட்டு அடையாளம், அதன் நட்பு வட்டமாகிய தமிழ் நாட்டில் அணிசாராமல் நிற்பதே - அதன் நலனுக்கு உகந்தது. நண்பர் வீட்டு கணவன்-மனைவி ஏச்சுப்பாட்டில் நாம் பக்கம் எடுக்காதவரை, அந்த குடும்பத்தின் எல்லா உறுப்பினரும் எமக்கு வேண்ட பட்டவர்களாக இருப்பர்.
  1 point
 38. கஜானா காலியானதால், இயற்கை பசளையை ஊக்குவிக்கப்போகிறேன் என்று வீரம் பேசி,உள்ளூர் விவசாயிகளை முடக்கி, அரிசி இறக்குமதி செய்கிறார் விண்ணர்! அதிருக்கட்டும், எத்தியோப்பியாவுக்கும் கடன் கேட்டு விண்ணைப்பினமோ சார்! இல்ல, உலகிலே ஒரு நாட்டையும் மிச்சம் மீதி வைக்க மாட்டாங்கள் போலிருக்கே.
  1 point
 39. புத்தனுக்கு பல ஐடி ...எந்த ஐடியில் எப்ப வந்தது என்று மறந்திருக்கும்
  1 point
 40. நானும் குடும்ப உறுப்பினர்களும் கோவிட்டின் பிடியில் இருந்து பூரண விடுதலை ஆகி இருக்கிறோம்.. அன்பையும் ஆதரவையும் பரிமாறிய அனைத்து உறவுகளுக்கும் எம் குடும்பம் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.. அத்துடன் அண்ணன் கொழும்பானும் கொவிட் பிடியிலிருந்து விலகி நலமுடன் இருப்பார் என்று நம்புகிறேன்..
  1 point
 41. 1 point
 42. புலவர் குடும்பமும், கொழும்பானும் சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்.
  1 point
 43. படித்ததில் பிடித்தது _‘‘அம்மா! நான், உங்க மருமக, பேத்தி மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே?’’_ *_‘‘சரிப்பா! நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி எடுக்குது. எனக்கு மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க!’’_* *_‘‘ஏன் பிடிக்காது? பாட்டியும் ஷாப்பிங் மாலுக்கு வரணும்’’ என பேத்தி அடம் பிடித்தாள்._* _‘‘பாட்டியால அங்க எல்லாம் ஏறி இறங்க முடியாதும்மா. எஸ்கலேட்டர்ல ஏறத் தெரியாது அவங்களுக்கு! அது இல்லாம, அவுங்க பார்த்து சந்தோஷப்படுறதுக்கு அங்கே பெரிசா ஒண்ணுமில்ல. அவுங்களுக்கு கோயிலுக்கு போறதுதான் பிடிக்கும்’’ என மருமகள் சொன்னார்._ _பாட்டியும், ‘‘ஆமாம்’’ என்று ஆமோதித்தார்._ _‘‘பாட்டி வரலைன்னா நானும் மாலுக்கு வரலை!’’_ _ பேத்தி அடம்பிடித்தாள். பாட்டி விருப்பமில்லை என்று சொன்னாலும், பேத்தி கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தாள். ஒரே பேத்தி தொடர்ந்து அடம் பிடித்ததால், அவள் விருப்பத்துக்கு ஏற்ப பாட்டியும் ஷாப்பிங் மால் வர ஒப்புக் கொண்டார். பேத்தி துள்ளிக் குதித்தாள்._ _அப்பா அனைவரையும் புறப்படச் சொன்னார். பேத்தி சீக்கிரம் உடை உடுத்திக் கொண்டு வந்தாள். பாட்டியும் தயாராய் இருந்தார். அப்பாவும் அம்மாவும் புறப்பட ரெடியாகும்போது பேத்தி பாட்டியை அழைத்துக்கொண்டு முன்னறைக்கு வந்தாள். சாக்பீஸால் ஒன்றரை ஜான் அகலத்துக்கு இரண்டு கோடுகள் போட்டாள்._ *_‘‘பாட்டி... இங்க பாருங்க. இது ஒரு விளையாட்டு. இப்ப நீங்க ஒரு கொக்கு. சரியா? இந்த இரண்டு கோடுகளுக்கும் நடுவுல உங்க வலது காலை வைத்து, இடது காலை லேசா மூணு இஞ்ச் தூக்கினா போதும். செய்ங்க!’’_* *_‘‘இது எதுக்கும்மா?’’_* *_‘‘இதுதான் கொக்கு விளையாட்டு பாட்டி. நானும் செய்யறேன்’’ என்று செய்து காட்டினாள்._* *_பாட்டியும் பேத்தி கண்டுபிடித்த கொக்கு விளையாட்டை விளையாடிப் பார்த்தார். பையனும் மருமகளும் வர, ஷாப்பிங் மாலுக்கு ஆட்டோ பிடித்துப் போனார்கள்._* _அங்கே நகரும் படிக்கட்டுகள் நகர்ந்து கொண்டிருந்தன. ‘இதில் எப்படி பாட்டி ஏறுவார்’ என்று மகனும் மருமகளும் யோசிக்கும்போது பேத்தி மட்டும் பாட்டியை நகரும் படிக்கட்டு முன்னால் செல்லமாக இழுத்து வந்தாள்._ *_‘‘பாட்டி! இதுல பயப்பட எதுவுமில்லை. இப்ப நீங்க கொக்கு விளையாட்டு விளையாடுங்க’’ என்றாள்._* *_பாட்டி கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு, வலது காலை நகரும் படிக்கட்டில் வைத்து இடது காலை மூன்று நான்கு இஞ்ச் மேலே தூக்கினார். மேலே நகர்ந்தார். பின் இடது காலையும் வைத்து இரண்டு காலால் நின்றார். எஸ்கலேட்டரில் அம்மா பூப்போல நகர்வதை மகனும் மருமகளும் பார்த்து வியந்தனர்._* _பாட்டி உற்சாகமாகிவிட்டார். அடுத்த அடுத்த எஸ்கலேட்டர்களில் மகிழ்ச்சியாகக் குதித்துக் கொண்டே ஏறினார். அதைப் பழகிக்கொள்ளவே பாட்டியும் பேத்தியும் கீழே இறங்கி மறுபடி ஏறினார்கள். சினிமா பார்க்கப் போனார்கள். குளிராக இருந்தது. பேத்தி தன் பையில் வைத்திருந்த சால்வையை பாட்டிக்குக் கொடுத்தாள்._ *_‘‘இதை எப்போ கொண்டு வந்தே?’’ என்று பாட்டி கேட்டதற்கு, ‘‘ஆல் டீடெய்ல்ஸ் ஐ நோ பாட்டி’’ என்றாள் குறும்பாக._* _படம் பார்த்த பிறகு உணவகம் சென்றார்கள். ‘‘அம்மா, உங்களுக்கு என்ன ஆர்டர் பண்ணட்டும்?’’ என்றான் மகன்._ *_"உடனே பேத்தி மெனு கார்டைப் பிடுங்கி, ‘‘ஏன்? பாட்டிக்கு படிக்கத் தெரியாதா? அவுங்க கிட்ட மெனு கார்டைக் கொடுங்க. பிடிச்சதை அவுங்க ஆர்டர் பண்ணுவாங்க’’ என்றாள்._* _பாட்டி மெனுவைப் பார்த்து ஆர்டர் செய்தார். பேத்தியும் பாட்டியும் ஆர்வமாக சாப்பிட்டார்கள். பின் மாலில் வீடியோ கேம் விளையாட்டுகளையும் பாட்டியும் பேத்தியும் விளையாடினார்கள்._ *_வீட்டுக்குக் கிளம்பும் நேரத்தில் பாட்டி டாய்லெட் சென்றார். அப்போது மகளைப் பார்த்து, ‘‘என் அம்மாவைப் பத்தி என்னைவிட உனக்கு நிறைய தெரிஞ்சிருக்கே செல்லம்’’ என்று சொல்லி அப்பா சிரித்தார்._* *_‘‘அப்பா! அதோ பாருங்க... குட்டிப் பாப்பாவை அந்த ஆன்ட்டி கூட்டிட்டு வரும்போது எவ்வளவு ஏற்பாடுகள் செய்துட்டு வர்றாங்க. பால் பாட்டில், துடைக்க துண்டு, டயபர்ஸ் இப்படி எவ்ளோ ஏற்பாடுகள். நீங்க குழந்தையா இருந்தப்போ, பாட்டியும் இப்படித்தான் செய்திருப்பாங்க. அது மாதிரி பாட்டியை வெளிய கூட்டிட்டு போகும்போது பாட்டியை கவனிக்க நீங்க அக்கறை எடுங்க. அதை ஏன் செய்றதில்லை?_* *_எல்லோருக்கும் ஷாப்பிங் மால் பாக்க ஆசையாதான் இருக்கும். நீங்களாவே ‘வயசானவங்க கோயிலுக்குதான் போவாங்க. ஜாலியா இருக்க மாட்டாங்க’ன்னு நினைச்சிக்காதீங்க. அவுங்க வரலண்ணாலும் மனசுக்குள்ளே ஆசை இருக்கும். நீங்கதான் வற்புறுத்தணும் அப்பா’’ என்றாள்._* *_தன் மகளிடம் புதிதாகக் கற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் அப்பா நெகிழ்ந்திருந்தார்._* 👍🍬🍬🍬🍬🍬👍 https://www.facebook.com/Giritharasharma/posts/7382509938429478
  1 point
 44. இது தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்’… முதல்வர் ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவிப்பு தமிழகம்: நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டுள்ளார். மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் இது தொடர்பாகத் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் விதிகளின் அடிப்படையில் இவர்களின் நிகழ்வுகளை ஆராய்ந்தும், அவர்களின் முன்விடுதலைக்கு உரியப் பரிந்துரை வழங்க ஏதுவாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் என். ஆதிநாதன் தலைமையின் கீழ் ஆறு பேர் அடங்கிய ஒரு குழு அமைக்கத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் இந்த அறிவிப்பையடுத்து முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டரில், “சிறை என்பது தவறிழைத்த மனிதனை நல்வழிப்படுத்தி சமுகத்தில் கலக்க தகுதியானவனாக மாற்றுவதற்கே என்பது நாகரீக சமூகம் ஏற்கொண்ட கருத்தியல் ஆகும். அதிலும் குற்றமற்றவர்கள் கூட சில நேரங்களில் நீதிப்பிழையால் சிறை தண்டனை அடைந்து விடும் நேர்வுகளை இந்த உலகம் கண்டிருக்கிறது என்பதால் சிறைகள் ஒருபோதும் பழிவாங்கும் இடமாக இருக்க கூடாது என்பதே நியதி. Hate Crimes: Not Criminals” என்பது மகாத்மா காந்தியடிகளின் புகழ்பெற்ற மேற்கோள். ஒரு மனிதனை 8 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைத்திருப்பதே அதிகப்படியானது எனறார் மறைந்த நீதியரசர் வி.ஆர்.கிருட்டிணய்யர். ஒரு நாடு நாகரீகமடைந்து விட்டது என்பதை சிறைவாசிகளை அவ்வரசு எவ்வாறு கையாள்கிறது என்பதில்தான் அடங்கியிருக்கிறது என சொல்லப்படுகிறது. தமிழக வரலாற்றில் மைல்கல் ஆயுள் சிறை என்பது அரசின் தண்டனை குறைப்பு அதிகாரத்துக்கு உட்பட்டதே என்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் தெளிவுபடுத்தி விட்டது. சிறை விதிகளின்படி இவ்வதிகாரத்தை பயன்படுத்தி முன்விடுதலை பெற தகுதி பெற்றும் சிறை சீர்திருத்தங்கள் குறித்து புரிதலற்ற அதிகாரிகள் கடந்த காலங்களில் விடுதலைக்கு தடையாக இருந்தனர். இதனையெல்லாம் உணர்ந்தவராக ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை தொடர்பில் மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்” என்று பதிவிட்டுள்ளார். https://www.ilakku.org/இது-தமிழக-வரலாற்றிwonderful-thanks-to-chief-minister-stalinல/
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.