Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      19

    • Posts

      76711


  2. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      14

    • Posts

      43212


  3. ரஞ்சித்

    ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      8353


  4. satan

    satan

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      8481


Popular Content

Showing content with the highest reputation on 01/23/22 in all areas

  1. கிரிப்டோ பற்றிய உங்களதும் கோசானினது புரிதல் சிறப்பானது, ஆனால் எனக்கு கிரிப்டோ பற்றிய புரிதல் பூச்சியம், நீங்கள் கிரிப்டோவில் தற்போது முதலிடுவது ஏன் வாய்ப்பானது என கூறுகிறீர்கள், விலை குறைவாக இருப்பதாலா? அல்லது விலை இதற்கு மேல் குறையாது என நினைக்கிறீர்களா, அதற்கு ஏதாவது காரணம் உண்டா? (Fundamental, Technical or Market sentiment) எனது கிரிப்டோ தொடர்பான கருத்து வெறும் Technical analysis அடிப்படையில் கூறப்படுவதுதான். அதுவும் எனது Technical analysis அறிவு அடிப்படை அறிவு மட்டுமே, அதனால் அதில் பல தவறுகள் இருக்கலாம். நான் மேலே கூறியது போல விலை இறங்காமல் இருப்பதற்கு சாத்திய கூறுகள் அதிகம். Fundamental அறிவு பூச்சியம் என்றே சொல்லலாம், கிரிப்டோ மட்டுமல்ல அனைத்து சந்தைகளிலும் எனது Fundamental அறிவு பூச்சியம். ஆனால் எனது முதலீட்டினை Fundamental analysis அடிப்படையிலேயே ஆரம்பித்தேன். நான் முன்பு ஒரு மருத்துவ நிறுவனத்தில் வேலை செய்தேன், அந்த நிறுவனம் மிக பெரிய பன்னாட்டு நிறுவனம், அந்த நிறுவனம் அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு சிறிய மருத்துவ நிறுவனம் ஆராய்சி நிலையில் ஒரு தொழில்னுட்பத்தை கண்டுபிடித்திருந்த, (VAST Platform) தொழில்னுட்பத்தை 240 மில்லியனுக்கு வாங்கியிருந்தார்கள். மேலதிக ஆராய்சிகான செலவை எமது நிறுவனம் ஏற்றுக்கொண்டதுடன் அந்த தொழில்னுட்பத்தில் எமது நிறுவனம் தயாரிக்கும் மருந்தில் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை வழங்க ஒத்து கொண்டது. இது நிகழ்ந்தது 2013 இல் அந்த தொழில்னுட்பத்தினடிப்படையில் மருந்து தயாரிப்பு 2020 அளவில் ஏற்படும் என கூறினார்கள். இந்த ஒப்பந்தம் கைசாத்தாகிய 3ஆம் நாள் அந்த சிறிய நிறுவனத்தின் பங்கினை எனது கையிருப்பில் இருந்த பெரும் பகுதியான பணத்தில் 0.41 சத விலை படி வாங்கினேன். விலை தொடர்ச்சியாக இறங்க ஆரம்பித்தது, எனக்கு விளங்கவில்லை ஒரு சிறிய நிறுவனம் பெரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைசாத்திட்டுள்ளது விலை ஏற வேண்டும் அதற்கு பதிலாக ஏன் இறங்குகிறது? ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது அந்த நிறுவனம் ஒரு தங்க முட்டையிடும் வாத்து ஏதோ ஒரு தற்காலிக காரணமாக விலை இறங்குகிறது, எனவே மிகுதியிருந்த காசில் 0.35 விலை படி இன்னுமொரு தொகுதி பங்குகள் வாங்கினேன்.( Beginners mistake) ஒரு மாதத்திற்குள்ளாக கிட்டத்தட்ட அரைவாசி விலையை நெருங்குவது போல இருந்தது. மே மாதமளவில் அந்த பங்கு முழுவதையும் சந்தை விலைப்படி விற்றேன் 0.28 படி அதுதான் அப்போது ஆகக்குறைந்த விலை. எனது திட்டம் விலை மேலும் குறைந்த பின் அதை திருப்பி வாங்குவது, அத்துடன் அந்த இழப்பினை வரியில் தள்ளுபடி செய்யலாம் (ஆனால் அவ்வாறு வரி சலுகை பெற முடியாது என்பதை பிறகு அறிந்து கொண்டேன்). நான் விற்ற 6 மாதத்திற்குள்ளாக கிட்டத்தட்ட 0.80 மேல் விலை சென்றது ஆனால் அதனை என்னால் திருப்பி வாங்க முடியவில்லை ஏனென்றால் நான் விற்ற 0.28 தான் மிக குறைந்த விலை. சிறிது காலத்தின் பின் அந்த சிறிய நிறுவனத்தின் பங்கு விலை வீழ்ச்சியடைந்து, இறுதியில் காணாமல் போய்விட்டது. பல முதலீட்டாளருக்கு கை கொடுக்கும் Fundamental analysis எப்போதும் எனக்கு மட்டும் காலை வாரிவிடுகிறது. பங்கு சந்தை பற்றிய எந்த அறிவுமில்லாத காலத்தில் வாங்கிய பங்கு, பின் அதனை அவசரப்பட்டு நட்டத்திற்கே விற்றதை நினைக்க மனவருத்தமாகவிருந்தது, ஆனால் இப்போது அதனை நினைத்து பார்க்கும் போது அந்த வர்த்தகத்தில் நான் செய்த ஒரே சரியான விடயம் அந்த பங்குகளை தெரிந்தோ தெரியாமலோ விற்றதுதான், ஏனென்றால் விலை ஏன் இறங்குகிறது என தெரியவில்லை, அதற்குமேலும் அந்த பங்குகளை வைத்திருந்து ஒரு வேளை அதற்கு மேலும் விலை இறங்கி, விலை ஏறாமலே அந்த பங்கு காணாமல் போயிருந்தால் முழு பணத்தினையும் இழந்திருப்பேன்.
    2 points
  2. மீண்டுவரும் பனம் பொருட்களின் சந்தை + காலம்.......! 👍
    2 points
  3. எனக்கு பங்குச் சந்தையில் Technical அனுபவம் கூட இல்லை. Apple நிறுவனத்தின் மீது நீண்டகாலமாக பாவனையாளன் என்ற ரீதியில் முகுந்த ஈடுபாடு இருந்தது. Apple தொடர்பான சஞ்சிகைகள் எல்லம் வாங்கிப் படிப்பேன். 94-95 ஆண்டுகளில் Computer graphic படித்துக் கொண்டிருந்தேன். Apple அக் காலத்தில் மிக நெருக்கடியில் இருந்தது. அப்போது மிகப் பெரிய பகுப்பாய்வு நிறுவனங்கள், 2000 ஆண்டளவில் முற்றாக மூடப்பட்டுவிடும் என்று எதிர்வுகூறியிருந்தன. தீவிர ஆதரவாளன் என்பதாலோ என்னவே எப்படியும் தலைநிமிர்வார்கள் என்று நம்பினேன். அப்போது பங்குச் சந்தையில் சில சதங்கள் மட்டுமே பெறுபதியானதாக இருந்தது. பங்குகள் வாங்க வேண்டும் என்று ஆர்வமிருந்தது. ஆனால் இப்போது போன்று இணைய வசதியோ பங்குச் சந்தை பற்றிய அடிப்படை அறிவோ இல்லாததோடு கையில் ஒரு சதம் காசும் இருக்கவில்லை. இன்று பல தடவைகள் split செய்யப்பட்டு 150 ஈரோவுக்கு மேல் உள்ளது. அன்று 150 ஈரோவுக்கு பங்கு வாங்கியிருந்தால் இன்று அதன் பெறுமதி ஒரு லட்சம் ஈரோவுக்கு அதிகமாக இருக்கும். கிரிப்டோவில் முதலீடு செய்ய இன்று சாதகமாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் விருப்பமில்லாததற்கு நான் கூறும் காரணங்கள் : - சீரற்ற, நிலையற்ற தன்மை. இன்று சந்தையில் உள்ள கிரிப்டோக்களில் நாளை ஒன்று இன்னொன்றை தாண்டி மேலே வரலாம். - கிரிப்டோ தொடர்பான சட்டதிட்டங்கள் இன்று எதுவும் இல்லை. மேலத்தேய நாடுகள் இதனை எப்படிக் கையாள்வது என்று தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. - கிரிப்டோ உலக வெப்பமாதலில் கணிசமான பங்கு வகிக்கிறது. இது பற்றி இங்கு பேசப்பட்டதோ தெரியவில்லை. ஆரம்பத்தில் சீனாவில் நிலக்கரி மின்சாரத்தில் இயங்கிய கணணிகள் (mining) பின்னர் சீனாவால் தடைசெய்யப்பட அவற்றின் பெரும் பகுதி உக்ரெய்னுக்கு மாற்றப்பட்டு எரிவாயுவினால் உற்பத்தி செய்யப்படும் முன்சாரத்தில் இயங்கின. பின்னர் படிப்படியாக பெரும் பகுதி அமெரிக்காவுக்கும் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நகர்த்தப்பட்டுள்ளன. இன்று Bitcoin இன் மின் பாவனை நோர்வே நாட்டின் முழு மின்சார உற்பத்திக்கு ஈடாகக் குறிப்பிடப் படுகின்றது.
    1 point
  4. உலகின் வித்தியாசமான உணவகங்கள்......! 😂
    1 point
  5. சீமான் சொல்வது சரிதான் ஈழம்தேசம் சென்று உறுதிப்படுத்திய தமிழ் ரக்கர் ....😎
    1 point
  6. பிறகாய்ன் இப்போது dominant தான். பிறகாய்ன் ஏற்றம் அல்லது இறக்கம், மற்றையவற்றை ஏற்றவும், இறக்கவும் செய்கிறது. அனால், நீண்ட காலப்போக்கில் கிரிப்டோ நிலைக்க போகிறது. பிறகாய்ன் தவிர ஏனையவை சில, கிரிப்டோ currency இல் மிகவும் உபயோகமானவை. அவற்றை பிறகாய்ன் ஐ வைத்து மட்டும் (புறக்)கணிப்பது, பொதுவாக, குறிப்பாக நலமில்லை. நீண்டகாலத்துக்கு, க்ரிபோட்டோவில் ஈடுபடும் எண்ணம் இருந்தால், க்ரிப்டோவில் buy & forget எனும் அளவில் இறங்க நல்ல வாய்ப்பு. பல கிரிப்டோவில் staking, farming இருக்கிறது. அவற்றையும் பாவிக்கலாம். எதையும் சொந்த ஆய்வில் செய்யவும். பிறகாய்ன் இப்போது dominant தான். பிறகாய்ன் ஏற்றம் அல்லது இறக்கம், மற்றையவற்றை ஏற்றவும், இறக்கவும் செய்கிறது. அனால், நீண்ட காலப்போக்கில் கிரிப்டோ நிலைக்க போகிறது. பிறகாய்ன் தவிர ஏனையவை சில, கிரிப்டோ currency இல் மிகவும் உபயோகமானவை. அவற்றை பிறகாய்ன் ஐ வைத்து மட்டும் (புறக்)கணிப்பது, பொதுவாக, குறிப்பாக நலமில்லை. நீண்டகாலத்துக்கு, க்ரிபோட்டோவில் ஈடுபடும் எண்ணம் இருந்தால், க்ரிப்டோவில் buy & forget எனும் அளவில் இறங்க நல்ல வாய்ப்பு. பல கிரிப்டோவில் staking, farming இருக்கிறது. அவற்றையும் பாவிக்கலாம். எதையும் சொந்த ஆய்வில் செய்யவும்.
    1 point
  7. எனது பழைய ஆன்ட்ராய்ட் கைப்பேசியிலிருந்து (HUAWEI P20 Pro) புது ஐபோனிற்கு(iPhone 13) வாட்ஸ்அப் (WhatsApp)தரவுகளை பலவிதங்களிலும் முயன்றும் பரிமாற்றம் (Transfer) செய்ய இயலவில்லை. முடிவில் இணையத்தில் மென்பொருளை(Dr.Fone) காசுகொடுத்து வாங்கி மாற்றிக்கொண்டேன். அதிலும் பாருங்கள், ஐக்ளவுடில்(iCloud) இலவசமாக 5ஜிபி(5GB) தான் நாம் சேமிக்க முடியும். அதற்கு மேல் எந்த தரவுகளையும் சேமிக்க மாதாந்தம் வாடகை செலுத்த வேண்டுமாம். இதெனப்பு கொடுமையா இருக்கு..? 😪 ஆன்ட்ராய்ட் கைப்பேசியில், ஐக்ளவுடை விட மிக அதிகமான தரவுகளை கூகிள் ட்ரைவில்(Google Drive) சேமிக்க இயலுமே..! யானையை வாங்கி தீனி போடுவது போல ஐபோன் வாங்கி செலவு செய்ய வேண்டியிருக்கு..! "இதுக்கு பருத்தி மூட்டை கொடவுனிலேயே இருந்திருக்கலாம்..!!"
    0 points
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.