Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      72666


  2. பெருமாள்

    பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      13494


  3. மோகன்

    மோகன்

    வரையறுக்கப்பட்ட அனுமதி


    • Points

      7

    • Posts

      9583


  4. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      25951


Popular Content

Showing content with the highest reputation on 02/18/22 in all areas

  1. இந்தியாவின் சாமானிய மக்களே இதை கூறுகிறார்கள். சிங்கப்பூர் பிரதமர் கூறியவுடன் (உண்மையை) தாதாக்களுக்கு கோவம் வந்து விட்டது.
    3 points
  2. உள்ளதை சொன்னால் எதுக்கு எரியுது?? அந்தாள் இப்படி ஆகிவிடவேண்டாம் என்று தனது அடுத்த தலைமுறைக்கு புத்தி சொல்வது எவ்வாறு தவறாகிவிடும்??
    3 points
  3. எல்லா நாயும் குலைக்குதெண்டு சுப்பையரிண்ட பேத்தை குட்டியும் ஊ ஊ எண்டிச்சாம்!😂
    3 points
  4. உங்கள் நம்பிக்கை வீண் போகாது தேங்கிபோயுள்ள எண்ணங்கள்,கற்பனை திறனை யாழ் நதியில் திறந்து விட காத்திருக்கிறோம்
    2 points
  5. மனிசி தன்ர போனில் இருந்து எடுத்திருந்தால் மனுசனுக்கு தெரிந்திருக்கும்.....இப்ப அவவின் இரு நண்பிகளின் போன் நம்பர் உங்களிடம் இருக்கு.....அடிவாங்கினதுக்கு அப்புறம் ஒத்தடம் தேவையென்றால் அவை உதவலாம்......! 😂
    2 points
  6. நல்ல செய்தி, மார்ச் நடுப் பகுதியில் பெறா மகளின் திருமணம் Wuppertal பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் நடாத்த முடிவு எடுத்திருக்கிறார்கள்.
    2 points
  7. அதற்குப் பின் 486 வந்து பின்னர் "பென்டியம்" என ஒரு 'ப்ராசசர்' வந்தது. இப்பொழுது அந்த கணணியை மூட்டையாக கட்டி வீட்டு பரண் மீது வைத்துள்ளேன். 😔 பழைய கணணியை பரணிலிருந்து கீழே இறக்கி பிரித்து படம் எடுத்து, பின் தொழிற்நுட்ப தரவுகளை ஞாபகபடுத்தி தயார் செய்ய வேண்டும்.. கள விதிபடி சுத்தமான சுய ஆக்கங்களாக இருக்க வேண்டுமென்பதால், வெளி இணையத்தில் சில படங்களை அல்லது குறிப்புகளை இணைக்க வேண்டிய தேவை வரலாம்.. அப்போ வந்து யாரும் 'லொள்ளு' பண்ணக்கூடாது இல்லையா? 😋 அதை தெளிவுபடுத்திக்கொள்ள கேட்டேன் தம்பி..!
    2 points
  8. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2022 அன்று யாழ் இணையம் 23 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 24 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து உலகை முடக்கியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடிக்குள்ளும் உலகத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. யாழ் இணையம் 24 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 24 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம். யாழ் களம் 24 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் இரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள். விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
    1 point
  9. வார இறுதிநாட்களில் அநேகமாக இங்கிலிசு பிரேக் பாஸ்ட் சாப்பிடுவது அடியேனின் வழமை.அதற்காக நீங்கள் நினைக்க கூடாது அடியேன் ஆங்கிலபட்டதாரி என்று ..முட்டை பொறியள்,சொசெஜ்,பேக்கன், பாணை டொஸ்ட் பண்ணி தக்காளி சோசுடன் சாப்பிடுவது வழமை.. முட்டையையும்,சொசெஜ்யையும் தாயார் பண்ணி கோப்பையில் வைத்து விட்டு பேக்கனை போட்டேன் சட்டி நல்லா சூடா இருந்திருக்க வேணும் அத்துடன் சட்டியில் எண்ணையும் இருக்கவில்லை ,புகையும் கறுகிய மணம் வீட்டினுள் பரவ, தொலைகாட்சியில் பக்தி சணலில் பக்திபரவசத்துடன் எதோ பார்த்து கொண்டிருந்த சம்சாரம் "என்னப்பா செய்யிறீங்கள் கறுகி மணக்குது" "பேக்கன் பொரிச்சனான் அது கொஞ்சம் எரிஞ்சு போய்விட்டது ,உமக்கும் பேக்கன் பொரிக்கவா" "ஐயோ கடவுளே இன்றைக்கு நல்லூர் தேர் , ஆகஸ்ட் மாதமென்றால் நல்லூர் கலகலப்பாக இருந்த காலம் அது.நல்லூரானுக்கு கொடியேற்றிவிட்டார்கள் என்றால் யாழ்ப்பாணமே கலகலப்பாகி விடும் .ஊர்களில் உள்ள சைக்கிள்களில் முக்கால்வாசி இரவுபகலாக நல்லூரானின்ட பக்த போடிகளை தாங்கியபடி ஓடிக்கொண்டே இருக்கும்.இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகளும் கிழங்கு அடுக்கிய கணக்கில் சனத்தை ஏற்றிகொண்டு ஓடித்திரியும்.எங்களை போன்ற பெடியள் பக்தி பரவசத்தில் வேஸ்டியுடன் முருகனை காணும் ஆவலுடன் சைக்கிளில் செல்வோம்.கோவிலுக்கு செல்வது என்றால் வீட்டில் இலகுவில் அனுமதி கிடைத்து விடும், அப்பாவும் கவனமாக பாவிக்கும் தனது சைக்கிளையும் தந்து விடுவார். கோவிலுக்கு அருகாமையில் செல்ல செல்ல நடந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிடும் .முருகனின் தரிசனத்திற்கு வெளிக்கிட்ட எங்களுக்கு வீதிகளில் தரிசனம் கிடைக்க தொடங்கிவிடும் .சைக்கிள் தரிப்பிடத்திற்க்கு ஒரு ரூபா கொடுக்க வேண்டும் அது பெரிய காசு...5 ரூபா கொண்டு போவது என்பது பெரிய விடயம். சைக்கிளை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு தரிசனத்திற்கு உள்ளே சென்று விடுவோம்.முருகனின் தரிசனத்தை விட எங்களுக்கு விரும்பிய அழகு தரிசனத்தை தேடி அலைந்து திரிவோம்.அநேகமாக விரக்தியடைந்து வெளியே வருவோம் .காரணம் முருகனும் எங்களை கண்டு கொள்வதில்லை ..நாங்கள் தரிசனம் தேடி சென்ற பெண்களும் கண்டு கொள்வதில்லை.கடலை ஆச்சி மட்டும் எங்களை தனது வருமானத்திற்காக வாங்கோ வாங்கோ என கூவி அழைப்பார் .சைக்கிள் பார்க் காசை தவிர மிகுதி பணத்திற்கு கச்சான் சோளப்பொறியல் மற்றும் குச்சி ஐஸ்கிறீம் வாங்கி சாப்பிட்டபடியே வீடு சென்று விடுவோம். நாங்கள் கடலை வாங்க வெளி வீதி வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது கொஞ்சம் எஙகளைவிட அலங்காரம் அதிகம் போட்ட ஆண்களும் பெண்களும் நடுத்தர வயது த‌ம்பதியினர் வீதிகளில் வலம் வந்து கொண்டிருப்பார்கள் . மச்சான் ஆட்களை தெரியுதே என நண்பர்கள் கேட்பார்கள் தெரியவில்லை மச்சான் என்று சொன்னால் ,என்னடா மச்சான் உவையள் கொழும்பில் வேலை செய்கின்ற கோஸ்டிகள் திருவிழாவுக்கு வந்திருக்கினம். பார்க்க தெரியுது பசையுள்ள கோஸ்டிகள் என்று என‌ சொல்லி விட்டு "நாங்களும் இப்படி வருவோமல்ல" என அடுத்த பில்டப்பை போடுவோம். இந்த வழமை நாங்கள் தொழில் மற்றும் உயர்கல்வி தேடி செல்லும் வரை தொடர்ந்தது. ஒரு நாள்திருவிழா முடிந்து வீடு வந்த பொழுது அம்மா சொன்னார் "தம்பி உனக்கு தபால் வந்திருக்கு எதோ வேலைக்கு நேர்முக பரீட்சைக்கு கூப்பிடிருக்கிறாங்கள் போல தெரியுது, நீ ஒவ்வோரு நாளும் போய் கும்பிட்ட அந்த நல்லூரான் கைவிட மாட்டான்" "ஒம் அம்மா" அம்மாவுக்கு தெரியுமோ நாங்கள் என்னத்துக்கு முருகனிட்ட போனோம் என்று, இல்லை நான் தான் சொல்ல முடியுமோ விசயத்தை... இரண்டு நாளில் கொழும்புக்கு செல்ல வேண்டியிருந்தது எனது மாமா கொழும்பில் வாழ்ந்த காரணத்தால் பெரிய பிரச்சனைகள் இருக்கவில்லை .இரவு நேர (மெயில்) தபால் வண்டியில் செல்வதற்கு நண்பர்கள் கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு சைக்கிளில் அழைத்து சென்றார்கள். நல்லூரானின் தேர் திருவிழா முடிந்த கையுடன் கொழும்புக்கு பயணமானேன்.கோண்டாவில் புயையிரத நிலையத்தில் பிலாப்பழசீமேந்து பைகளுடனும் முருங்கைகாய் கட்டுகளுடனும் சனம் முண்டியடித்து கொண்டு நின்றது .அப்ப தான் புரிந்தது கொழும்பில் பணிபுரியும் இளைஞர்கள் ,குடுமபத்தினர் நல்லூரானை தரிசித்து விட்டு மீண்டும் கொழும்புக்கு செல்வதறகு நிற்கின்ரனர் என்பது.அதை பார்த்தவுடன் எனக்கு வேலை கிடைத்தால் நானும் இப்படி வந்து போகலாம என்று நம்ம மனசு கற்பனையில் மிதக்க தொடங்கி விட்டது பல கற்பனைகளில் அதுவும் கடந்து போனது கொழும்பில் முருகன் எனக்கு வேலை தரவில்லை ..ஆனால் ஒவ்வொரு வருட உறசவத்திற்க்கும் தன‌து பக்தர்களை தாங்கி வரும் வேலைய யாழ்தேவிக்கு கொடுத்துகொண்டிருந்தான். நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மக்கள் வெளியேற யாழ்தேவி,மெயில் வண்டி போகுவரத்து துண்டிக்கப்பட கொழும்பு பக்தர்கள் வருவது தடைப்பட, யாழ் பக்தர்களை எம்பெருமான் அலங்கார கந்தன் வெளிக்கிடுங்கோடா வெளிநாட்டுக்கு என ஆணையிட அந்த ஆணையை நிறைவேற்ற யாழ்தேவியை பிடித்து கொழும்பு வந்து சேர்ந்தவர்களில் நானும் ஒருத்தன், வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் இருக்கும் பொழுது கதிர்காமம் போகும் வாய்ப்பு ஏற்பட்டது.பூசாரி பூட்டிய திரைக்கு பின்னால் வாயையும் மூக்கையும் கட்டி பூஜை செய்து விட்டு எங்களுக்கு தீபத்தை தொட்டு வழிபட நீட்டிக்கொண்டு வந்தார். "என்ன மச்சான் ஐயர் பூணுலை மறைக்க , சேர்ட்டும் அணிந்து கொண்டு வாரார் " "இவர் ஐயர் இல்லை இவரை கபராலை என்று சொல்லுறவையள், பரம்பரை பரம்பரையாக அவையள் இப்படித்தான் செய்யிறவையள் " " கேள்வி பட்டனான் இப்ப தான் பார்க்கிறேன்" " ஏன் செல்வசந்நிதியிலும் இப்படித்தானே" " அங்க நான் போகவில்லை" "சனம் சன்னதியிலிருந்து இங்க நடந்து வாரவர்கள்" "முருகா வெளிநாட்டுக்கு போக உதவி செய் என்று தமிழிலும் ,தெரிந்த சிங்களத்திலயும் விண்ணப்பத்தை போட்டு விட்டு வந்தேன்" முருகா நீ தமிழனா சிங்களவனா என்ற கேள்வியை எழுப்பியவாறு பஸில் கொழும்பு திரும்பிகொண்டிருந்தோம் . "டேய் வெளிநாட்டுக்கு போகவேணும் என்று விண்ணப்பம் போடுறாய் எந்த நாட்டுக்கு என்று கேட்டியா? ஒழுங்கா அப்பிளிகேஷன் போடத் தெரியாது இதில நான் சிங்களவனா தமிழனா என்ற கேள்வி..பே...." தெகிவள பயின்டா.... சத்தம் கேட்டு திடுகெட்டு எழுந்து பஸிலிருந்து இறங்கினேன். வெளிநாட்டிலயே வேலை செய்யும் வாய்ப்புக்கள் கிடைத்தது. தமிழர்களில் பலர் வெளிநாடுகளில் தங்கள் அரைவாசிகாலத்தை கழிகின்றனர் அந்த வகையில் எனக்கும் அந்த சந்தர்ப்பம் கிடைத்து. சிங்கள முருகன் கொடுத்ததோ தமிழ் முருகன் கொடுத்தானோ என்ற பிரச்சனை இல்லை காரணம் நமக்கு இப்ப‌ அவுஸ் முருகன் இருக்கிறான் . நல்லூரானின்ட தேர் காலத்தில் மச்சம் சாப்பிட்டு விட்டேன் என்ற பயத்தில் அடுத்த நாள் காலையில் குளித்து வெளிக்கிட்டு நம்ம சிட்னி முருகனிட்ட போனேன் . கோவிலில் கந்தர் நின்றார்.மூக்கு வாய்க்கு ஒழுங்காக கச்சை கட்டியிருக்கினமோ என்று பார்த்து ஆட்களை எண்ணி உள்ளே அனுப்பி கொண்டிருந்தார். என்னை கண்டவுடன். " இப்ப நல்லூரானிட்ட நின்று இருக்க வேணும் இந்த கொரானா கோதாரி எல்லாத்தையும் கெடுத்து விட்டது" "அதுதான் இன்றைக்கு நானும் கோவிலுக்கு வந்தனான்" " என்ன நீ மச்சம் சாப்பிட்டு போட்டியாம் நல்லுரானின்ட திருவிழா காலத்தில்" முருகன் மறந்தாலும் இந்த சுற்றியிருக்கிற சனம் விடாது போட்டு கொடுத்துவிடுவாங்கள் முருகனிட்ட என்று புறுபுறுத்த வாறு "மறந்து போய் சாப்பிட்டு விட்டேன் ,எஸ்கியூஸ் மீ மூருகா" என்றேன்...... கண்ணை திறந்தேன் ஐயர் வாயை கட்டியிருநந்தார் மாஸ்க் என்ற போர்வையில் தீபத்தை நீட்டினார் தொட்டு கும்பிட்டுவிட்டு முருகா தொண்டைமானாறு சன்னிதியிலிருந்து சிட்னி வரை மெளன‌மாக இருந்து உன்னுள் என்னை தேடு என்று சொல்லுறாய் போல.....என்று நானும் மெளனமாக வீடு திரும்பினேன்.
    1 point
  10. கடைசீல குரங்கு அப்பம் பிச்சுக் குடுத்த கதை போலாகிடுச்சு! (நான் ஒருக்காலும் டக்கிளஸ் அங்கிளை குரங்கு எண்டு திட்டேல்ல. இப்பிடி ஒரு கதை இருக்குதெண்டு மட்டும் சொன்னனான்.😁
    1 point
  11. பரிசு விழுந்தால் அதில கழித்துக் கொண்டு தர சொன்னா விசயம் முடிஞ்சுது. வங்கியில் போட்டால் பெரும்பாலும் பிடிபட சந்தர்ப்பம் உண்டு.
    1 point
  12. இங்கை வன்னியில் நீங்கள் சொன்ன நேரமும் பின் இரவு 8.30 இல் இருந்த 9.15 வரை மீன்டும் மின் வெட்டு இடம் பெற்றுள்ளது.😟
    1 point
  13. அது தொட்டில் பழக்கம் ஐந்தில் வளையாதது ஐம்பதில்??? அதைவிட சேர்கிறதுகளும் பூக்கள் இல்லாதபோது????
    1 point
  14. ஏக போகத்துக்கும் வைச்சு சாத்துறாங்கள்........ இஞ்சை போய் பாத்தியளெண்டால் தெரியும் 😁
    1 point
  15. ஐயா! அப்பிடியே இந்தியாவுக்கு பக்கத்து நாடான சிறிலங்காவுக்கும் ஒரு நாலு வரி சொல்லிப்போட்டு போங்கோ..... ஏனெண்டால் அவையள் தான் இப்பவும் உங்கடை சிங்கப்பூர் கனவிலை திரியினம்.
    1 point
  16. பாவம் அந்த இளம்பெண் கெரோயின் பொதிகளில், போதைப்பொருள் கொல்லும் என்று எழுதி, வெளிப்படையாகவே விற்றிருந்தால் பிரச்சனையே வந்திராது. 😋🤗
    1 point
  17. மொபைல் தொடர்பாடல் வரலாறு – பகுதி 1 (0G & 1G) கோரா ஜனவரி 24, 2021 கோரா முகவுரை : எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி ஏழு கடல் அவள் வண்ணமடா அங்குத் தங்கும் வெளியினில் கோடியண்டம் – அந்தத் தாயின் கைப்பந்தென ஓடுமடா இதை எழுதியவர் மகாகவி பாரதியாரா அல்லது பாவேந்தர் பாரதிதாசனா என்று உறுதிபடுத்திக் கூற முடியாவிட்டாலும் எழுதியவர், கோடி அண்டங்கள் மற்றும் ஏழு நிறங்களின் கலவையான சூரிய ஒளியையும் குறிப்பிடுகிறார் என நான் எண்ணுவதுண்டு. அவர் குறிப்பிடப்பட்டுள்ள சக்தியும் இயற்பியலாளர்கள் கூறும் மின்காந்தக் கதிர் வீச்சு ஆற்றலும் (electromagnetic radiation energy) ஒன்றே எனத் தெரிகிறது. மின்காந்தக் கதிரியக்கம் (Electromagnetic Radiation) பழைய இயற்பியலின்படி, ஒத்திசைவாக (Resonance) அலைவுறும் மின்புலங்கள் (electric field) மற்றும் காந்தப் புலங்களின் வழியாக ஒளி வேகத்தில் பரவெளியில் செலுத்தப்படும் சக்தியே மின்காந்தக் கதிரியக்கம் எனப்படுகிறது. தற்காலத்தியக் குவாண்டம் கோட்பாட்டின்படி, மின்காந்தக் கதிரியக்கம் என்பது சக்திச் சொட்டுகளாக (Quanta) ஓடும் போட்டான்கள் (photons) எனக் கருதப்படுகிறது. உண்மையில் கிட்டத்தட்ட 0.01 விழுக்காடு பொருண்மை / சக்தி, மின்காந்தக் கதிர்வீச்சாகவே நிகழ்கிறது. நம்மைச் சுற்றிலும் எப்போதும் இந்தக் கதிரியக்கம் வெவ்வேறு வடிவங்களில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இவற்றின் வீரியங்கள், மிகக் குறைந்த ஆற்றல் முதல் மிக அதிக ஆற்றல் வரையில் வேறுபட்டிருக்கும். மின்காந்த நிறமாலை (Electromagnetic Spectrum) மின்காந்த நிற மாலை என்பது எல்லா விதமான மின்கதிரியக்கங்களின் அலைவெண்கள் மற்றும் அவற்றிற்குரிய அலை நீளங்கள் மற்றும் போட்டான் ஆற்றல்கள் ஆகியவற்றின் வீச்சு (range) ஆகும். இது அலைவெண்கள் 1 Hz முதல் 1025 Hz-க்கும் மேலான மின்காந்த அலைகளை அடக்கியிருக்கிறது. அதையே அலை நீளத்தில் குறிப்பிடுவதென்றால் ஆயிரக்கணக்கான கி.மீ -யில் தொடங்கி அணுக்கரு அளவின் பின்னம் (fraction) வரையெனக் குறிப்பிடலாம். இந்த அலைவெண் (frequency) வீச்சு ஏழு தனித்த பட்டைகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பட்டைக்கும் வெவ்வேறு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. மிகக் குறைவான அலைவெண், மிகக் குறைவான சக்தி, மிக அதிக அலைநீளம்கொண்ட அலைப்பட்டையில் தொடங்கி மிக அதிக அலைவெண், மிக அதிக சக்தி, மிகக் குறைந்த அலைநீளம் வரை வரிசைப்படுத்திய பட்டியலைக் கீழே காணலாம். ரேடியோ அலைகள் (Radio Waves) — 3 x 109க்குக் கீழுள்ள அலைவெண்கள் நுண்ணலைகள் (Micro waves) — 3 x 109 முதல் 3 x 1011 வரை அகச்சிவப்புக் கதிர்கள் (Infrared Rays) — 3 x 1011முதல் 4 x 1014 வரை கண்ணுக்குத் தெரியும் ஒளி (Visible Light) — 4 x 1014 முதல் 7.5 x 1014 வரை புறஊதாக் கதிர்கள் (Ultra Violet Rays) —- 7.5 x 1014 முதல் 3 x 1016 வரை எக்ஸ் கதிர்கள் (X Rays) — 3 x 1016 முதல் 3 x 1019 வரை காமாக் கதிர்கள் (Gama Rays) — 3 x 1019 க்கும் மேல் அலைகள் உற்பத்தியாகும் விதத்திலும் பிற பொருட்களுடன் இடைவினை புரிவதிலும் மற்றும் நடைமுறைப் பயன்பாட்டிலும் ஒவ்வொரு பட்டையும் வெவ்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கின்றன. பூமியின் வளிமண்டலம், மின்காந்தக் கதிரியக்கத்தில் பெரும்பாலானவற்றைப் பூமியின் தரைக்கு வந்துசேர முடியாமல் தடுத்துவிடுகிறது. ரேடியோ அலைகள், கண்ணுக்குப் புலப்படும் ஒளி மற்றும் சில புற ஊதாக் கதிர்கள் மட்டுமே கடல் மட்டம் வரை வந்துசேருகின்றன. பயனுள்ள ரேடியோ நிறமாலை ரேடியோ அலைகள், மின்காந்த நிறமாலையின் மிக அகண்ட பகுதி மற்றும் கீழ்ப் பகுதியும் ஆகும். ரேடியோ நிறமாலை அலைவெண் 3 GHz (Giga Hz)க்குக் கீழுள்ள எல்லா அலைவெண்களையும் அடக்கியுள்ளது. ஆனால் மிகவும் கீழுள்ள அலைவெண்களை (1Hz முதல் 30 Hz வரை) ரேடியோ தொடர்பாடலுக்குப் பயன்படுத்த இயலாது. அதற்கு மிகப் பெரிய வான் அலைவாங்கி (antenna) தேவைப்படும். அதன் மூலம் கிடைக்கும் அலை அகலம் (Band Width) மிகச் சொற்பமே. 30kHz-க்குக்கீழ் ஒலிப் பண்பேற்றம் (audio modulation) செய்யவியலாது. அதுவே கீழ்வரம்பு. ரேடியோ நிற மாலையின் உயர் அலைவெண்களில் 30 GHz-க்கு மேற்பட்டவை பெரும்பாலும் வளிமண்டல வாயுக்களால் உட்கிரகிக்கப்பட்டுவிடும். தொடர்பாடலுக்குப் பயன்படாது. ரேடியோ பட்டைகள் (Radio Bands) ரேடியோ பட்டை என்பது ரேடியோ நிறமாலை அலைவெண்களின் தொடரில் ஒரு சிறு துண்டுப் பகுதி. அதன் அலைப் பாதைகள் (channels) ஒரே நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் அல்லது ஒதுக்கீடு செய்யப்படும். ரேடியோ குறுக்கீட்டைத் (Interference) தவிர்க்கவும் ரேடியோ நிறமாலையின் திறன்மிகு பயன்பாட்டை உறுதிசெய்யவும் ஒரே மாதிரி சேவைகளுக்கான அலைக் கற்றைகள் ஒரு பட்டையில் ஒதுக்கீடு செய்யப்படும். ஒவ்வொரு பட்டைக்கும் அதை எப்படிப் பயன்படுத்துவது மற்றும் பகிர்வது என ஆணையிடுகிற பட்டைத் திட்டத்தைப் பன்னாட்டுத் தொலைத்தொடர்புக் கூட்டமைப்பு (ITU) வெளியிட்டுள்ளது. அதில் அலைநீள வரிசையில் ஒவ்வொன்றும் முந்தையதைவிடப் பத்து (10n) மடங்காக இருக்கின்ற 12 பட்டைகளாகப் பிரிக்கப்பட்டு, அதன் பயன்பாடுகளும் விவரிக்கப்பட்டுள்ளன. ரேடியோ அலைகளின் உற்பத்தி மற்றும் பரப்புகை, பன்னாட்டுத் தொலைத்தொடர்புக் கூட்டமைப்பின் வழிகாட்டுதலின்படி இயற்றப்பட்ட உள்நாட்டு சட்டங்களால் கண்டிப்பாக முறைப்படுத்தப்படுகின்றன. ரேடியோ நிறமாலைப் பற்றாக்குறையும் மேலாண்மையும் தற்போதைய தொழில்நுட்ப அடிப்படையில் அலைவெண் 30 kHz முதல் 30GHz வரையுள்ள ரேடியோ நிறமாலையே தொடர்பாடலுக்குப் பயன்படுத்த உகந்ததாக உள்ளது. இதுவே அமோகம் எனத் தோன்றினாலும் உண்மையில் கிடைக்கும் அலைப்பாதைகள் (channels) போதாதனவாகவே இருந்துவருகின்றன. அதன் காரணங்கள்: அரசாங்கம் ஒரு சேவையில் போட்டியை உருவாக்கக் கொண்டவரும் அதிக எண்ணிக்கை செய்குநர்கள் (operators) மற்றும் தொழில்நுட்பங்கள், குறிப்பிட்ட சில அலைப்பட்டைகளையே பயன்படுத்தும் தனியுரிம (Proprietary) உபகரணங்கள் மற்றும் சிந்தனையற்ற (mindless) பழைய ஒதுக்கீடுகள். நிறமாலையின் பயன்பாட்டை உச்ச நிலைக்குக் கொண்டுசெல்ல (maximise) நிறமாலை மேலாண்மை தேவைப்படுகிறது. அமெரிக்காவில் FCC-யும் (Federal Communications Commission), இந்தியாவில் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் WPC (Wireless Planning & Coordination wing)-யும் ரேடியோ நிறமாலை ஒதுக்கீடு மற்றும் மேலாண்மைப் பொறுப்பை ஏற்றுள்ளன. ரேடியோ தொடர்பாடல் அடிப்படைத் தொழில்நுட்பம் ரேடியோ தொடர்பாடலின் அடிப்படைத் தொழில்நுட்பம் வருமாறு: வானலை அனுப்பியுடன் (antenna) இணைத்த மின் ஒத்ததிர்வு சுற்றில் (electric resonance circuit) மின்னூட்டத்தை (charge) வேண்டிய அலைவெண்ணில் அலைவுறச் (oscillate) செய்தால், அங்கு தேவையான மின்காந்த அலைகள் உற்பத்தியாகும். அவை மின்காந்த வானலை அனுப்பி மூலம் விண்ணில் பரவும். மறுமுனையில் அதே அலைவெண்ணுக்கு இசைவிக்கப்பட்ட (tune) அலைவி மின்சுற்றின் (oscillator circuit) இசைவியில் (tuner) இணைத்த வானலை ஏற்பியால் அதே மின்காந்த அலைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். ஒரு முனையில் குறிகைகளைத் (signals) தகுந்தவாறு மின்காந்த அலைகளின்மேல் பதியவைத்து அனுப்பி மறுமுனையில் அதே குறிகைகளை மீட்டெடுப்பதை ரேடியோ தொடர்பாடல் என்கிறோம். மின்காந்த அலைகள் கண்டுபிடிப்பு: ஜேம்ஸ் கிளெர்க் மேக்ஸ்வெல் 1865-ல் கண்ணுக்குப் புலப்படாத மின்காந்த அலைகளின் இருப்பை முன்னுரைத்தார். மேலும் மின் மற்றும் காந்தப் புலங்களுக்கு (fields) இடையிலான தொடர்பைக்காட்டும் ஒருங்கிணைந்த சமன்பாடுகளை உருவாக்கினார். இந்த சமன்பாடுகளே மேக்ஸ்வெல் சமன்பாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. மேக்ஸ்வெல் கோட்பாட்டுப்படி மின்புலமும் காந்தப் புலமும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அலைந்தால் (oscillate) மட்டுமே அது மின்காந்த அலையைத் தோற்றுவிக்கும். அறிவியலின் வழக்கமான பாதை, புலப்பாட்டில் (phenomenon )தொடங்கி கோட்பாட்டை அடைவதுதான். ஆனால் மின்காந்த அலைகளைப் பொருத்தவரை, முதலில் உருவானது மேக்ஸ்வெல் கோட்பாடு. 1888-ல் அவற்றின் இருப்பைச் சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தியவர் ஹெய்ன்ரிச் ஹெர்ட்ஸ். (Heinrich Hertz.) பிந்தைய பரிசோதனைகள்மூலம் ரேடியோ அலைகள் ஒளிவேகத்தில் பரவுவதையும் கண்டுபிடித்தார். ஆனாலும் அவர் தன் கண்டுபிடிப்புக்கு நடைமுறைப் பயன்பாடுகள் ஏதுமில்லை என்று தவறாகக் கணித்துவிட்டார். பரிசுத்த (pure) கோட்பாட்டாளரான அவர் நினைவாக 1960-ல் அலை வேகத்தைக் குறிக்கும், விநாடிக்கு எத்தனை சுழற்சிகள் என்ற அளவைக்கு ஹெர்ட்ஸ் (Hertz) என்று பெயரிடப்பட்டது. மார்க்கோனியின் கம்பியில்லாத் தந்தி: 1895-96-ல் மார்க்கோனி முதலாவது நடைமுறைப் பயன்பாட்டுக்குரிய ரேடியோ பரப்பி மற்றும் ஏற்பிகளை உருவாக்கித் தன் கம்பியில்லாத் தந்திக்காகக் காப்புரிமம் பெற்றார். இங்கிலிஷ் கால்வாயைக் கடக்கும் கப்பல்களுடன் மோர்ஸ் கோடைப் பயன்படுத்திக் கம்பியில்லாத் தந்தித் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு ரேடியோ பரப்புகை அமைப்பை வெற்றிகரமாகச் செய்துகாட்டினார். இந்த அமைப்புக்குத் தேவையான அனுப்பி (transmitter) மற்றும் ஏற்பி (Receiver) அவரால் கண்டுபிடிக்கப்பட்டவை.1920 வரை, கடலில் பயணித்துக்கொண்டிருக்கும் கப்பல்களுடன் தொடர்புகொள்ளவே ரேடியோ பயன்பட்டு வந்தது. இரண்டாம் உலகப் போரின்போது, கையடக்க ரேடியோ ஏற்பிகள் பெருமளவில் தயாரிக்கப்பட்டுப் போர்க்களத்தில் தொடர்பாடலுக்குப் பயன்படுத்தப்பட்டன. அதன் பயன்பாடு வெளிச்சத்துக்கு வந்ததால், பின்னர் படைத்துறை சாராதவர்களும் ரேடியோக்களைத் தனிப்பட்ட பயன்பாடுகளுக்காக வாங்கினர். பயனர்களின் பேராதரவே மொபைல் ஃபோன் வருகைக்கு காரணமாகியது. ‘ரேடியோவின் தந்தை‘ (Father of Radio) யார்? – சர்ச்சை ரேடியோ தொடர்பாடலில் பெருஞ்சாதனைகள் புரிந்த மார்க்கோனி முறையான பொறியியல் அல்லது இயற்பியல் பட்டம் பெறாதவர். அறிவியலர் என்பதைவிட அரைகுறைப் (tinkering) பொறியாளர் என்றால் பொருந்தும். நோபல் பரிசு ஏற்புரையில் தன் கண்டுபிடிப்பு எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றியெல்லாம் தனக்கு எதுவும் தெரியாது என்று மனம் திறந்து பேசினார். நோபல் பரிசு பெற்றிருந்தாலும் அவரை ‘ரேடியோவின் தந்தை’ எனக் கூறிவிட முடியாது. அதற்கு உரிமை கோருவோர் பலர் உண்டு. கீழ்கண்டவற்றைப் படித்தால் புரியும் . 1895-ல் ரஷ்ய இயற்பியலாளரான அலெக்சாண்டர் போபோவ் இரு கட்டங்களுக்கு இடையே ரேடியோ தகவலைப் பரப்பிக் காட்டினார். அதே ஆண்டில் இந்தியாவின் ஜெகதீஷ் சந்திர போஸ் என்னும் இயற்பியலாளர், ரேடியோ அலைகள் மூலம் மணி ஒலிக்கவும் வெடி வெடிக்கவும் செய்துகாட்டினார். 1891-93-ல் Nikolai Tesla என்பவர்தான் முதன் முதலாக ரேடியோ தொடர்பு அமைப்புகள் பற்றிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டார். பின்னர் 1897-ல் அதிக அலைவெண் மற்றும் அதிக மின்னழுத்தம் உண்டாக்கும் சுருளைக் (coil) கண்டுபிடித்து, அதற்கு டெஸ்லா காயில் என்று பெயரிட்டார். அது ரேடியோ குறிகைகளை அனுப்பவும் பெறவும்கூடிய சாதனம் என்று காப்புரிமம் கோரி விண்ணப்பம் செய்திருந்தார். 1897-ல் இத்தாலியைச் சேர்ந்த மார்க்கோனி, தாம் உருவாக்கிய கம்பியில்லாத் தந்தி அமைப்புக்கு இங்கிலாந்து நாட்டில் காப்புரிமம் பெற்றார். 1899-ல் லண்டனில் இருந்து செயல்படும் மார்க்கோனி தந்திக் கம்பெனியை நிறுவினார். 1901 டிசம்பரில் அட்லான்டிக் கடல் கடந்து போகும் (இங்கிலாந்தின் கார்ன்வாலில் இருந்து நியூ பௌந்துலாண்டில் அமைந்திருந்த படைத்தளத்துக்கு) முதல் ரேடியோ தகவலை அனுப்பினார். ரேடியோ தொடர்பாடலில் ஆற்றிய பணிகளுக்காக இவருக்கும் கார்ல் பிரான் என்னும் இயற்பியலாளருக்கும் 1909-ஆம் ஆண்டின் இயற்பியல் நோபல் பரிசு கார்ல் பகிர்ந்தளிக்கப்பட்டது. 1901-ல் இவ்வகை சாதனத்திற்கான காப்புரிமம் மார்க்கோனிக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து டெஸ்லா நீதிமன்றத்தில் வழக்காடினார். தன்னுடைய 17 காப்புரிமம் பெற்ற கருவிகளைப் பயன்படுத்தியே மார்க்கோனி ஆய்வுகளை மேற்கொண்டார் என்பதே அவர் முறையீடு. மார்க்கோனியின் மேல்முறையீட்டின் காரணமாகப் பல ஆண்டுகளுக்கு வழக்கு தொடர்ந்தது. 1943-ல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் மார்க்கோனியின் உரிமத்தைச் செல்லாததாக்கி (டெஸ்லாவுக்கு ஆதரவான) தீர்ப்பை அளித்தபோது டெஸ்லாவோ மார்க்கோனியோ உயிருடன் இல்லை. தொடக்கக் கால மொபைல் தொலைபேசி அமைப்புகள்: மேற்கு ஜெர்மனி, UK, ஸ்வீடன் ஆகிய நாடுகளும் மொபைல் தொலைபேசி சேவையைத் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும் அனைத்து நாடுகளுக்கும் முன்பாக அமெரிக்காவின் Saint Louis நகரில் Bell Labs என்ற அமெரிக்கக் கம்பெனி அறிமுகப்படுத்திய, வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் மொபைல் தொலைபேசி சேவைகள் பற்றிய குறிப்புகள் மட்டுமே கீழே தரப்பட்டுள்ளன. இவை முதல் தலைமுறையில் தொடங்கி ஆறாவது தலைமுறைக்கு விரைந்து கொண்டிருக்கும் செல்லுலார் சகாப்தத்தின் முன்னோடிகள் என்பதால் பூஜ்யத் தலைமுறைக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன. 0G – மொபைல் தொலைபேசி சேவை (Mobile Telephone Service) 1946 ஜூன் மாதம் Bell Labs செயின்ட் லூயிஸ் நகரில் அறிமுகப்படுத்திய வாகன மொபைல் தொலைபேசி அமைப்பே, மொபைல் சேவை சகாப்தத்தின் ஆரம்பம் எனக் கூறலாம். 1948க்குள், AT&T (American Telephones & Telegraphs) இதே போன்ற சேவையை அமெரிக்காவின் 100 பெருநகரங்களில் தொடங்கியது. மொபைல் பயனாளிகளுக்குத் தரைவழித் தொலைபேசிகளுடன் தொடர்புகொள்ளும் வசதியும் தரப்பட்டது. இவை அனைத்தும் Trunked Mobile Systemவகையாகும். இந்த அமைப்பில் ஒதுக்கப்பட்ட அலைக்கற்றையின் அலைவெண்களைப் பல சிறு அலைவெண்கள் அகல பாதைகளாகப் பிரித்து பயன்படுத்தப்படும். மொபைல் கருவிகளுக்கு ரேடியோ குறிகைகளை அனுப்ப நகரின் மையத்தில் உயரமான இடத்தில் ஒரேயொரு உயர் ஆற்றல் ஆன்டெனாகொண்ட BTS (Base Transmitter / Receiver Station ) அமைத்து அங்கே இணைப்புகளை உண்டாக்க ஓர் ஆபரேட்டர் நியமிக்கப்படுவார். மொபைல் தொலைபேசிகள் வழக்கமாக மகிழுந்து (car) அல்லது சுமையுந்து (truck)களில் வைக்கப்படும். ஓரிரு கைப்பெட்டி (briefcase) மாடல்களும் புழக்கத்தில் இருந்தன.பொதுவாக வாகனங்களின் டிக்கியில் அனுப்பி – ஏற்பி (transceiver அதாவது transmitter cum receiver) வைக்கப்பட்டிருக்கும். அதனுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி, டயல், காட்சியகம் (display) ஆகியன தலையில் அணிந்து கொள்ளக்கூடிய தலையணி (head gear) வடிவில் ஓட்டுனரின் அருகில் வைக்கப்படும். கைப்பேசி உட்பட்ட மொபைல் கருவி ஒவ்வொன்றும் 36 கிலோ எடையுள்ளவை. இந்த தொலைபேசி அமைப்பு, 20-30 மைல்கள் ஆற்றல் எல்லை, 40 அலைப்பாதைகள் (150 Mhz அல்லது 450 Mhz ரேடியோ அலைப்பட்டையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 khz அகலப் பாதைகளாகப் பிரிக்கப்பட்ட 120 khz அலைக்கற்றை), ஒரு சமயம் ஒருவர் மட்டுமே பேசக்கூடிய இருவழி இணைப்பு (semi-duplex) ஆகிய கட்டுப்பாடுகள் கொண்டிருந்ததால் அதன் மூலம் சில பயனர்களுக்கு மட்டுமே சேவையளிக்க முடிந்தது. மேலும் அதே அலைப்பாதைகள் வெவ்வேறு நகரங்களில் மறு பயன்பாட்டுக்கு வேண்டியிருந்ததால் அவ்விரு நகரத் தொலைபேசி அமைப்புகளிடையே குறைந்தது 50 மைல்கள் இடைவெளி இருக்கவேண்டும். நியூயார்க்கில் பயன்படுத்தும் அலைப்பாதைகளை பிலடெல்பியாவில்தான் மறுசுழற்சி செய்யமுடியும். 40 அலைப்பாதைகள் கொண்ட அமைப்பில் நியூயார்க் நகர மற்றும் புறநகர்ப் பயனர்கள் ஒரே நேரத்தில் 40 அழைப்புகளுக்கு மேல் பயன்படுத்தமுடியாது. குறைபாடுகள்கொண்ட விலையுயர்ந்த சேவையாக இது இருந்தபோதிலும் பயனாளிகள் இடப்பெயர்வு வசதிக்காக (mobility) எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். அதனால் சேவைக்கான கோரிக்கைகள் மிகுந்து அலைப்பாதைகளின் பற்றாக்குறை உணரப்பட்டது. ஆற்றல் எல்லை மற்றும் அலைப்பாதைகள் விடயத்தில் கடுமையான குறைபாடுகள்கொண்ட இந்தச் சேவைக்கு மாற்றாக, 1964-ல் AT&T தானியங்கி மேம்பட்ட (Improved) மொபைல் தொலைபேசி அமைப்பைக் கொண்டுவந்தது. மேம்பட்ட மொபைல் தொலைபேசி அமைப்பு (IMTS) IMTS (Improved Mobile Telephone System) அல்லது தானியங்கி மொபைல் தொலைபேசி அமைப்பு AMTS (Automated Mobile Telephone System) என்ற பெயரால் அழைக்கப்படும் AT&-யின் 1964 மொபைல் தொலைபேசி அமைப்பு, ஆபரேட்டர் உதவியின்றி நேரடி டயலிங்கில் அலைப்பாதையையும் விரும்பிய எண்ணையும் தேர்ந்தெடுத்து இருவரும் பேசக்கூடிய இருவழி இணைப்புத் தரும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டிருந்தது. இதில் மொபைல் தொலைபேசிப் பயனாளி, தான் விரும்பும் தொலைபேசி எண்ணை டயல் செய்து முடித்துப்பின், ‘அனுப்பு’ (send) பொத்தானை அழுத்துவார். அவருடைய ஏற்பி எல்லா அலைப்பாதைகளையும் வரிசைக்கிரமமாக ஆராய்ந்து ஓர் ஓய்ந்திருக்கும் அலைப்பாதையைத் தேர்ந்தெடுக்கும். முதல் சுற்றில் எதுவும் கிடைக்காது போனால், ஓய்ந்திருக்கும் அலைப்பாதை கிடைக்கும் வரை சுற்றுகள் தொடரும். சில அமைப்புகளில் தேடல் சுற்றுகள் கட்டுப்படுத்தப்படும். அப்போது குறிப்பிட்ட சுற்றுகள் கடந்தபின், அழைப்பு முயற்சிகள் தற்காலிகமாக முடக்கப்படும். ஆனால் தரைவழித் தொலைபேசிகளிலிருந்து மொபைலுக்கு வரும் அழைப்புகளுக்கு உடனே அலைப்பாதை கிடைக்காவிட்டால் பல சுற்றுகளில் தேடும் வசதி மறுக்கப்பட்டு அழைப்பு முடக்கப்படும். மொத்தத்தில் தானியங்கி அமைப்பினால் சேவையின் தரத்தில் சிறிதளவே மேம்படுத்த முடிந்ததென்றும் தேவைக்கேற்ற அளவில் அலைப்பாதைகள் இல்லாதவரை சேவை மேம்பட வழியில்லை என்ற முடிவுக்கு வர நேரிட்டது. இருப்பினும் முதல் தலைமுறை மொபைல் அமைப்பு வரும்வரை IMTS சேவை தொடர்ந்தது. செல்லுலார் கருத்துப்படிவ உதயம் பூஜ்யத் தலைமுறையின் முதல் ஆளியக்கி (manual ) மொபைல் தொலைபேசி அமைப்பின் பலகீனங்களான குறை திறன் (low capacity மற்றும் அலைவெண் மீள்பயன்பாடு ஆகியன புலப்பட்டவுடனேயே, 1947-ல் பெல் லேப்ஸ் தன் செல்லுலார் கருத்துப் படிவத்தை முன்வைத்தது. ஒற்றை உயர் திறன் அனுப்பிக்குப் பதிலாகச் சேவைப் பரப்பை பயனர் செறிவுக்கேற்ப 2 கிமீ முதல் 50 கிமீ வரை விட்டம் (diameter) கொண்ட சிறுசிறு பகுதிகளாகப் (cells ) பிரித்து அவை ஒவ்வொன்றுக்கும் பயன்பாட்டுக்குத் தக்கவாறு மொத்த அலைக்கற்றையின் சிறு பகுதியை வழங்கி, செல் ஒவ்வொன்றுக்கும் முழுமையாகத் தழுவக்கூடிய (coverage) ஒரு தாழ் திறன் (low power) அனுப்பி என்ற விகிதத்தில் அதிக எண்ணிக்கையில் தாழ் திறன் அனுப்பிகளை நிறுவுவதும், அலைவெண் குறுக்கீடுகளைத் (interference ) தவிர்க்கக்கூடிய வகையில் மீள்பயன்பாடுகளை அமைத்துக்கொள்வதும் செல்லுலார் கருத்துப் படிவத்தின் முக்கிய கருத்துரைகள். மொபைல் அமைப்பில் செல் (cell) என்பது அடிப்படை நிலப்பரப்பு. ஒவ்வொரு செல்லுக்கும் ஓர் அறுகோணம் குறியீடாய் அமையும். ஒவ்வொரு செல்லிலும் ஒரு குறை திறன் அனுப்பியைக்கொண்ட தரை நிலையம் (base station) அமைக்கப்படும். பயனர் செறிவைக் கருதி அதிக செல்களை உண்டாக்குவதற்கு செல்பிரிப்பு (cell splitting) என்று பெயர் . மேலும் பயனர் செல்களுக்கிடையே இடம்பெயரும்போது, பயன்பாட்டில் உள்ள அழைப்பை அடுத்த செல்லுக்கு மாற்றும் வசதியையும் செல்லுலார் அமைப்பு கொண்டிருக்கவேண்டும். இது hand off (கை மாற்றம்) எனப்படுகிறது. செல்லுலார் அமைப்பின் அலைவெண் மீள்பயன்பாடு உத்தியால் மேம்பட்ட ஆற்றலெல்லை, மேம்பட்ட அலைக்கற்றை பயன்பாடு மற்றும் அனுப்பிகளின் திறன் குறைப்பு ஆகிய அனுகூலங்கள் கிட்டும். அனைத்து மொபைல் தொலைபேசி நிறுவனங்களும் செல்லுலார் மொபைல் தொலைபேசி அமைப்புக்கு ஆதரவாக இருந்தபோதிலும் அதை நடைமுறைப்படுத்தத் தேவையான தொழில்நுட்பம் 1970-ல்தான் கிடைத்தது. மொபைல் தலைமுறைகள் செல்லுலார் கருத்துப்படிவம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முந்திய மொபைல் தொலைபேசி அமைப்புகள் அனைத்தும் பூஜ்யத் தலைமுறையைச் சேர்ந்தவை எனவும் பின்னர் செல்லுலார் தொழில்நுட்பத்துடன் பயன்பாட்டுக்கு வந்தவை அவற்றின் தொழில்நுட்ப மேம்பாட்டைக் குறிப்பிடும் வகையில் 1G, 2G…. 5G என்றழைக்கப்படுகின்றன எனவும் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். (G குறிப்பது Generation, அதாவது தலமுறை). உலகின் முதல் 1G செல்லுலார் அமைப்பு 1979-ல் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் NTT (Nippon Telegraph and Telephone) கம்பெனியால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்த ஒவ்வொரு தசாப்தத்திலும் (decade) தொடர்ந்துகொண்டிருக்கும் மேம்பாடுகள் முறையே 2G (1990), 3G (2000), 4G (2010) என்று பெயரிடப்பட்டன. செல்லுலார் மொபைல் தொடர்பாடலில் முன்னிலை வகிக்கும் நாடுகள் அனைத்தும் 2020-ல் 5G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளன. பத்தாண்டுகால இலக்கை நோக்கித் தளராது ஜுர வேகத்தில் பயணிக்கும் தொழில்நுட்ப மேம்பாடுகளைத் தலைமுறை மாற்றங்கள் எனக் கருதுவதில் தவறேது? மேலும் ஒவ்வொரு தலைமுறையும் கணினி மென்பொருள் புதுப்பிப்பு போலல்லாமல் தனித்த அடையாளம்கொண்ட மேம்பாடாக வெளிவருவது அதன் தனிச் சிறப்பு. வரும் பத்திகளில் ஒவ்வொரு தலைமுறை பற்றியும் சற்று ஆழமாக நோக்குவோம். 1G செல்லுலார் ஒப்புமை (analog) தொலைபேசி அமைப்பு பூஜ்யம் G-யில் மொபைல் தொலைபேசி என்றாலே “ஆட்டோமொபைல் தொலைபேசி” என்றுதான் பொருள். 1G-யிலும் பெருவாரியான மொபைல் தொலைபேசிகள் வாகனங்களில் பொருத்தப்பட்டன. 1G-யின் ஆரம்ப காலத்தில் ‘இடம்மாற்றக்கூடியது’ (Portable) என்னும் விருப்பத் தெரிவும் இருந்தது. அது பள்ளிப் பை வடிவில் உடலின் குறுக்காக அணிந்து தோளில் சுமந்து செல்லக்கூடிய தோல் அல்லது கித்தான் பை (satchel) மாடல். பின்னர் வந்த கையடக்க அலைபேசிகள் அவற்றிற்கு மாற்றாக (replacement) ஆயின. Dyna TAC- முதல் கையடக்க அலைபேசி: 1983-ல் மோட்ரோலா (motorola) கம்பெனி வடிவமைத்த DynaTAC 8000xதான் முதல் முழுமையான கையடக்க அலைபேசி. இதுவே அலைபேசி பரிணாமத்தைத் தொடக்கிவைத்தது. பெயரளவில்தான் இது கையடக்க அலைபேசி. உண்மையில் அது 1கிலோ எடை, 30 செமீ நீளம், 9 செமீ தடிமன் கொண்டிருந்தது. தோராயமாக முழுச் செங்கல் அளவில் ஒரு சிறு பெட்டியில் (brief case) எடுத்துச்செல்லத் தக்கதாக இருந்தது. விலை 4,000 டாலர்கள். தொடர்ச்சியாக 30நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதிக்கும் அளவிலேயே அதன் மின்கலனின் ஆற்றல் இருந்தது. மின்கலன் முழுதாக மின்னூட்டம்பெற 10 மணி நேரம் பிடித்தது. 1989-ல் மோட்ரோலா DynaTAC வரிசையில் 9800X (MicroTAC) என்னும் சட்டைப் பையில் மடக்கி வைக்கக்கூடிய சுண்டு (flip) மாடலைக் கொண்டுவந்தது. அதுவே 1990களின் தரநிலை ஆனது. சொந்த (personal) ஃபோன் மகத்துவம் கார் ஃபோன், அலுவலக ஃபோன், வீட்டு ஃபோன் போன்று இடம்சார்ந்து குறிப்பிடவேண்டிய தேவை இல்லாத சொந்த அலைபேசி வைத்திருப்பது வணிக சமூகத்தின் தகுதி நிலைக்குறியீடு (status symbol) எனக் கருதப்பட்டதால் இதன் தேவை மிகவும் அதிகரித்து நீண்ட காத்திருப்புப் பட்டியலும் உருவானது. 1G வந்தபின்னர் உலகளாவிய அலைபேசி சந்தை ஆண்டுக்கு 30%முதல் 50% அளவுக்கு வளர்ந்துகொண்டிருந்தது. 1990 முடிவில் உலகின் மொபைல் பயனர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20 மில்லியன் ஆகி விட்டது. மேம்பட்ட அலைபேசிக் கருவிகள் வந்துவிட்டபடியால் மொபைல் பயன்பாட்டுக்கு ஒப்புமை அமைப்பின் ஒவ்வாமையை நன்கறிந்த பயனர்களும்கூட தொடர்ந்து ஆதரவு அளித்துவந்தார்கள். சொந்த அலைபேசிப் பயன்பாட்டின் உற்சாகமே, பயனர்களின் தயக்கமற்ற ஆதரவுக்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. 1G செல்லுலார் மொபைல் தரநிலைகள் (Standards) இந்த1980-90 தசாப்தத்தில் கீழ்க்கண்ட ஒப்புமை செல்லுலார் மொபைல் தரநிலைகள் பெருமளவில் நிறுவப்பட்டன. அவை அலைக்கற்றைப் பயன்பாடு போன்ற பல அம்சங்களில் வேறுபட்டிருந்தன. NMT 450 – நார்டிக் மொபைல் தொலைபேசி அமைப்பு. (1981 துவக்கம்; 450Mhz அலைவெண் பட்டையில் இயக்கப்பட்டது.) இந்தத் தரநிலை டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நார்டிக் நாடுகள் மற்றும் ஆஸ்ட்ரியா, ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாண்ட்ஸ், ஐஸ்லேண்ட், துருக்கி, ஹங்கேரி போன்ற ஐரோப்பிய நாடுகளில் நிறுவப்பட்டன. AMPS – Advanced மொபைல் ஃபோன் சிஸ்டம். (1983 துவக்கம்; 800/900 Mhz அலைவெண் பட்டையில் இயக்கப்பட்டது.) இது பெல் லேப்ஸ் உருவாக்கிய தரநிலை. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் நிறுவப்பட்டன. TACS-Total Access Communication சிஸ்டம். AMPS-ன் வடிவமைப்பில் ஐரோப்பிய அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு உகந்த வகையில் சிறு மாற்றம் செய்யப்பட்ட அமைப்பு. நிறுவப்பட்ட நாடுகள்: UK மற்றும் அயர்லேண்ட், ஸ்பெயின், ஆஸ்ட்ரியா ஆகிய ஐரோப்பிய நாடுகள், குவைத், UAE, பஹ்ரைன் ஆகிய மத்தியக் கிழக்கு நாடுகள், ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா, சீனா ஆகிய தூர கிழக்கு நாடுகள். NTT System-முதல் செல்லுலார் அமைப்பு. 1979-ல் 800 Mhz அலைவெண் பட்டையில் ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 1988-ல் ஓர் அதிக ஆற்றல் அளவுகொண்ட தரநிலை அறிமுகமானது. வெவ்வேறு தரநிலைகள் பயன்பாட்டில் இருந்ததால் உலகளாவிய இடப்பெயர்வு வசதி கிடைக்கவில்லை. நாடுவிட்டு நாடு பயணிப்போர் தேவைக்கேற்றபடி இரட்டை அலைப்பட்டை (dual-band) அலைபேசிகளை வாங்கிப் பயன்படுத்திக் கொண்டார்கள். பரந்தகன்ற இடங்களில் சுற்றித் திரியும்போதும் தொடர்பாடல் வசதி அளிக்கிற (roaming), மோட்ரோலா மலிவுக் கையடக்க அலைபேசிகள் சராசரிப் பயனர்களைக் கவர்ந்ததால் மொபைல் தொலைபேசி சேவைகள் இதுவரைக் கண்டிராத பெருவளர்ச்சி கண்டது. 1990-களில் அதிக ஆற்றலும் நல்ல செயல்திறனும் கொண்ட இலக்கமுறை அமைப்புகளின் வருகைக்குப் பின்னரும் ஒப்புமை வகை அமைப்புகள் செல்லுலார் சந்தையில் ஆதிக்கம் செலுத்திவந்தன. இதனால் சில ஆண்டுகள் இலக்கமுறை அமைப்புகள் ஒப்புமை அமைப்புகளுடன் சேர்ந்தியங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனினும் புதிய கட்டுமானங்கள் அனைத்தும் இலக்கமுறை அமைப்புகளாக இருந்தன. ஒப்புமை முறை – இலக்க முறை: ஒப்பீடு 1G-யில் பயன்படுத்தப்பட்ட ரேடியோ குறிகைகள் அனைத்தும் ஒப்புமைக் குறிகைகள். இதில் குரல் பேச்சு அலைவெண் பண்பேற்றம் (frequency modulation) செய்யப்படுகிறது; அலைவெண் பண்பேற்றத்தின் பொதுவான பிரச்னையே, குறுக்கீடுகளுக்கு (interference) எளிதில் இலக்காகிவிடும் தன்மைதான். அதனால் ஒப்புமைக் குறிகைகள் வளிமண்டலத்தில் சிதைவுற்றுப் பேச்சின் தன்மை கெடும் வாய்ப்புகள் நிறையவே உண்டு. மேலும் ஒப்புமைக் குறிகைகளை மறையாக்கம் (encryption) செய்ய இயலாது. அதனால் எளிதாக ரேடியோ ரிசீவர் மூலம் பேச்சை ஒட்டுக்கேட்க முடியும். 1G-யின் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் பேச மட்டுமே பயன்படுவது, உரையாடலின்போது அதிக அளவில் இணைப்புகள் முறிதல், அதிகப் பருமன்கொண்ட அலைபேசிகள், அதிக மின்கலப் பயன்பாடு, மோசமான குரல் நயம், குறைவான அழைப்புத்திறன் (55 calls per cell), உரையாடலின் ரகசியக் காப்புக்கு உத்திரவாதமின்மை ஆகியவை 1G-யின் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் ஆகும். இவை அனைத்துமே ஒப்புமை முறையின் குறைபாடுகள். இலக்கமுறைத் தொழில்நுட்பத்தில் முற்றிலுமாகக் களையப்படக்கூடியவை. தொழில்நுட்பச் சொற்கள்: Resonanace – ஒத்திசைவு: மின்சுற்றில் ஏற்படும் ஒரு நிகழ்வு; அதன்படி ஒரு குறிப்பிட்ட அலைவெண்ணில் மின்சுற்றின் வெளிப்பாடு உச்சத்தை அடையும். Quntam theory: அணு மற்றும் துகள் மட்டத்தில் வஸ்து (matter) மற்றும் சக்தியின் இயல்பும் நடத்தையும் எவ்வாறிருக்கும் என்பதை விளக்கும் கோட்பாடு. Quantum: இயல்பான உதிரிகளை அடக்கிய பொட்டலம் / பொதி / சொட்டு. (உதா.: பூந்திப் பொட்டலம்.) மின்காந்த சக்தி, எக்ஸ் கதிர், gamma கதிர் ஆகியவற்றின் அடிப்படை அலகு. Photon: துகள் வடிவ ஒளிப்பொட்டலம் ஃபோட்டான் என்று அழைக்கப்படுகிறது. Spectrum: ரேடியோ குறிகைகள் பயணம் செய்யக்கூடிய கண்ணுக்குப் புலப்படாத ரேடியோ அலைவரிசைகள். (அலைப்பாதைகள்.) Band: பட்டை; ஒளி 7 நிறங்களின் தொகுப்பு என்பதுபோல், ரேடியோ அலையும் தனிப் பண்புகள்கொண்ட பட்டைகளைக் கொண்டது. Hertz: ஒரு வினாடியில் ஏற்படும் சுழற்சிகள். Tera: 1012. Oscillator: குறிப்பிட்ட அதிர்வெண்கொண்ட அலைகளை உற்பத்தி செய்யும் மின்னணுவியல் கருவி அல்லது அலைப்பான் சுற்று. Oscillate: அலைதல். Communication: தொடர்பாடல். Antenna :வானலை அனுப்பி / ஏற்பி. AT&T: முந்தைய American Telephone and Telegraph Company. Bell Labs: பழைய AT&Tயின் புகழ்பெற்ற ஆராய்ச்சிப் பிரிவு. BTS: Base Transceiver Station, ஒரு செல்லில் உள்ள அலைபேசிகளுக்கும் மொபைல் பிணையத்துக்கும் (நெட்ஒர்க்) தொடர்பு ஏற்படுத்திக்கொடுக்கும் உபகரணங்களின் தொகுப்பு. கோபுரம் (டவர்), வானலை அனுப்பி / ஏற்பி, மின்னணுவியல் உபகரணம், மின் வழங்கி, மின்கலம் மற்றும் அவசர நிமித்தப் பயன்பட்டுக்கான மின்திறனாக்கி. (Generator.) Trunked Radio System: இதில் நகரின் நடுப்பகுதியில் ஒரு ரேடியோ டவர் மற்றும் ரேடியோ உபகரணங்கள் அடங்கிய அடிப்படை ரேடியோ நிலையம் அமைக்கப்பட்டிருக்கும். மொபைல் ஃபோன் பயனர்கள் ஆபரேட்டர் மூலமாகவோ அல்லது FDMA / TDMA உபகரணங்கள் மூலமாகவோ வேறு மொபைல் ஃபோனுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்வார்கள். இந்த அமைப்புக்கு ஓர் அலைவெண் வரிசை ஒதுக்கப்படும். அது எல்லாப் பயனர்களின் மொபைல் கருவியாலும் பகிர்ந்து கொள்ளப்படும். FDMA/TDMA: Frequency Division Multiple Access / Time Division Multiple Access:பல பயனர்கள், பயன்படுத்தக்கூடிய அலைக்கற்றையைத் திறமைமிக்க முறையில் பகிர்ந்து கொள்வதற்கான தொழில்நுட்பம். தகவல் குறிப்புகள்: Maxwell’s equations – Wikipedia en.wikipedia.org › wiki › Maxwell’s_equations Spectrum Managament https://en.wikipedia.org/wiki/Frequency_allocation Mobile and Personal Communication System and Services by Raj Panda 2000 IEEE Communication Society, Sponsor Electro Magnetic Spectrum- Introduction- Imagine The Universe https://imagine.gsfc.nasa.gov/science/toolbox/emspectrum1.html https://solvanam.com/2021/01/24/மொபைல்-தொடர்பாடல்-வரலாற/
    1 point
  18. செத்தான்(டா)... சேகர்.
    1 point
  19. தோழர் நுணாவிலானுக்கும் ,அகஸ்தியனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂
    1 point
  20. வடிவேலு பழைய பகிடி.😊 அத்தை மக ரத்தினமே(1994)
    1 point
  21. அப்பெண்ணின் கடந்த கால நடவடிக்கைகள் முதலில் தெரியணும் எடுத்தவுடன் கவுட்டு கொட்டினது போல் சட்டங்களை அப்பாவி மனிதர்கள் மேல் பாயவிட கூடாது . சிலவேளை அந்த குழந்தைக்கு பால்மா போன்ற அத்தியாவசிய பொருள்கள் வாங்க பணமில்லாமல் இருந்ததை பின்னால் இருக்கும் மாபியா கும்பல் உபயோகப்படுத்தி இருக்கலாம் அல்லது ஆவா குறூப்பை பிடிக்க வக்கத்து இருக்கும் இலங்கை போலீஸ் திணைக்களத்தின் செட்டப் பிடிப்பாக இருக்கலாம் .
    1 point
  22. அங்கஜன் எனும் பேத்தை வாலின் உறவினராக இருந்தால் மைத்திரி வருவாராம் 😄
    1 point
  23. தன் இனத்தை மட்டும் நேசிப்பவனிடம் அதிகாரமும் பதவியும் கொடுக்கப்படணும் அதையே சிங்களவர்கள் செய்தார்கள் நாங்கள் நாலு பட்டம் பெற்றுவிட்டான் படித்தவர்கள் எனும் குரங்கு கூட்டத்திடம் பதவியும் அதிகாரமும் கொடுத்து நாடு நாடாய் அகதியாய் அலைகின்றம் .
    1 point
  24. தாங்கள் படித்தவர்கள் என்பவர்களிடம் ஒருகாலமும் பதவியும் அதிகாரமும் கொடுக்க கூடாது என்பதற்கு இந்த விக்கியரின் அறிக்கை சிறந்த உதாரணம் 9 உண்மையை எழுதி ஒரு மகா மோசமான பொய்யை இங்கு விதைக்கிறார் நானும் சுமத்திரனுக்கு காவடி எடுத்தது போல் இவருக்கும் பந்தம் பிடித்தேன் ஆனால் எனக்கு வரும் ஆத்திரத்துக்கு இவரை பிடித்துக்கொண்டு போய் பிரேமானதாவுடன் ஜெயிலில் போடணும் போல் உள்ளது .
    1 point
  25. இலங்கை வங்கியே அதிக வட்டி தருகிரம் என்று புலம்பெயர் வயதானவர்களிடம் சுற்றும் கதை கணபேருக்கு தெரிவதில்லை ஆக்கும் ஐந்து வருடங்களுக்கு முன் டொலரில் இருந்தப்பணத்தை இலங்கை ரூபாயில் போட்டால் ஐந்து வருடத்துக்கு பத்து லட்சம் இலங்கை ரூபாவுக்கு ஐந்து லட்சம் வட்டி தொகை வரும் என்ரார்களாம் நம்ம தெரிந்தவரும் அதை பெரிய புளுகாய் எனக்கு அடித்து விட்டார் நான் சொன்னேன் நீங்கள் இரண்டாயிரம் பவுன்சுக்கு மேல் இழந்து உள்ளீர்கள் என்று அவர்க்கு விளக்கமாக சொல்ல அவர் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை யாரும் அப்படி இல்லை என்பவர்கள் இங்குவந்து கம்பு சுத்தலாம் .😀 அவர்கள் சுத்தி முடிந்தபின் விளக்கம் தருகிறேன் .
    1 point
  26. உறவுகள் இணைவது மகிழ்ச்சியானதே .......இருவருக்கும் பாராட்டுக்கள்.....! 👍
    1 point
  27. 2022 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேஷ் தீக்ஷனவை வாங்கிய பின்னர், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனவுக்கு எதிராக சமூக ஊடக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தீக்ஷன ஐபிஎல் ஏலத்தின் 2ம் நாளில் 70 லட்சம் இந்திய ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதற்கு ரசிகர்கள் சமூக ஊடகங்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அத்துடன், சென்னை அணியை புறக்கணிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர். வைரலாகும் ஜெயலலிதாவின் கோரிக்கை கடிதம் கடந்த 2013ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தமிழகத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் விளையாட தடை விதிக்க வேண்டும் என அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்க்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடித்ததில் அவர், இலங்கை விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி நடுவர்கள், அதிகாரிகள் என இலங்கையை சேர்ந்த யாரும் பங்கேற்க மாட்டார்கள் என ஐபிஎல் நிர்வாகம் உறுதியளித்தால் மட்டுமே சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதிப்போம் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது ஜெயலலிதாவின் கோரிக்கை கடிதம் சமூக ஊடகங்கள் வைரலாகியுள்ளது. சுரேஷ் ரெய்னாவை வாங்காத சென்னை அணி இதேவேளை, சென்னை அணிக்காக கடந்த 12 ஆண்டுகளாக விளையாடி வந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை. குறிப்பாக, அவர் 12 ஆண்டுகளாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த வித பாவனையும் காட்டவில்லை. இது ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை தந்துள்ளது. சென்னை ரசிகர்களால் “சின்ன தல” என அன்புடன் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுக்காத சம்பவம் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையும் இந்தியாவிற்கு எதிரிதான் மகேஷ் தீக்ஷனவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கியதை தொடர்ந்து அந்த அணியை புறக்கணிக்குமாறு ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பாகிஸ்தான் மட்டும் இந்தியாவுக்கு எதிரியல்ல. இலங்கை தமிழர்களை வஞ்சித்த, தமிழக மீனவர்களை தினந்தோறும் துன்புறுத்தும் இலங்கையும் இந்தியாவுக்கு எதிரிதான். பாகிஸ்தான் வீரர்களை நாடு விரும்பவில்லை என்பது போல் இலங்கை வீரர்களை தமிழர்கள் விரும்பவில்லை என பலரும் டுவிட்டரில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். weetSee new TweetsConversation🔆வானவன்🔆@Vaanavan_555Due to terrorist activities, India has banned Pakistani cricket players from participating in IPL but Sri Lankan Navy kills Tamil fishermen and SL was responsible for a genocide of our blood brothers and sisters, yet CSK recruits SL players #Boycott_ChennaiSuperKings https://tamilwin.com/article/agitate-after-theekshana-joins-csk-1645050150?itm_source=parsely-external
    1 point
  28. ஒருவனுக்கு ஒருத்தி என்றே உறவு கண்டோம் திருக்குறளினிலே .......! 😁
    1 point
  29. பள்ளி பருவத்தில் ஸ்பிக்கருக்கு கனக்சன் கொடுத்து விளையான்டவை உங்களில் எத்தனை பேர்.?
    1 point
  30. ஸ்மைலி – அனங்கன் கண்களை பத்துநிமிடத்திற்கு மேல் மூடிக்கொண்டிருக்க முடியவில்லை. எண்ணங்கள் அணுத்துகள்கள் என ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்துச் சிதறுகின்றன. கண்களைத் திறந்தவுடன் ஏற்படும் ஆறுதல் சிறுதுநேரத்தில் நெடுஞ்சாலைகளில் வரிசையாக வரும் வாகனம் போன்ற எண்ணங்களால் கலைந்துவிடுகின்றது. தான் அந்த நெடுஞ்சாலையைக் கடக்க நினைப்பவள் போல தொடர் அர்த்தமற்ற எண்ண வரிசையை வெறித்துப்பார்த்துகொண்டிருந்தாள். எழுந்து மொபைலை எடுத்து செயலிக்குள் சென்று அவர்கள் உரையாடல்களை படிக்க ஆரம்பித்தாள். தன் முகங்களாகவும் அவன் முகங்களாகவும் மாறிப்போன இளிப்பான்களை பார்த்துகொண்டு செல்வது காலவெளியில் நிரந்தரமாக சிக்கிக்கொண்டதுபோல் இருந்தது. தான் பேசின சொற்களை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டு, அதே இடத்தில் அதே நிமிடத்தில் உறைந்துவிட்டது போல. நாளைக்கு அணிய வேண்டிய உடைகளை நான்கு முறை சரிசெய்து அடுக்கிவைத்துவிட்டாள். இருமுறை துப்பட்டாவை மாற்றி அது தேவைதானா என சந்தேகித்து அதை அணிந்தால் நன்றாக இருக்குமா என்று நினைத்து உள்ளே எடுத்துவைத்துவிட்டாள். அறைக்குள் இவள் செய்துகொண்டிருக்கும் செயல்களை யாரோ உற்று நோக்கிக்கொண்டிருப்பது போல் இருந்தது. சுற்றி அறையை பார்த்தாள். வெளியே கார்கள் வழுக்கிச்செல்லும் ஒலிதான் கேட்டது. மீண்டும் பார்வையை உணரவே மொபைல் போனை இழுப்பறையில் போட்டு உள்ளே வைத்தாள். இப்போது பரவாயில்லை என்பது போல் இருந்தது. எழுந்து டாய்லட் சென்று முகம் கழுவி மெத்தையில் படுத்துக்கொண்டாள். எப்போதும் கைகள் என ஏந்திக்கொள்ளும் மெத்தை தரைபோல் மட்டமாக இருந்தது. கால்களை நேராக ஆக்கி கைகளை உடலுடன் இணைத்து, முகம் மேற்கூரையை நோக்க எண்ணங்களை கவனியாது தூங்க முயற்சி செய்தாள். உடல் நேராக இருக்கும்போது எண்ணங்களும் நேராவது போல் அவள் உணர்வதுண்டு. தடுக்கி கிழே விழுவது போல் உடல் அதிர திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். கண்களின் நீர் அலையோய்ந்து மனம் விழிப்படைந்தது. கனவில் தொடர்பற்ற ஏதேதோ காட்சிகள் சென்று பால்கனிப் படிக்கட்டுகளில் தவறி விழும்போது முழிப்பு வந்தது. கண்கள் தெளிந்து மூளைக்கு காற்று சென்றது. மணியை மட்டும் பார்க்கக்கூடாது என்ற எண்ணம் அவள் மனதில் புன்னகையை வரவழைத்தது. மணி ஒன்னறையாகி இருந்தது. அவள் ஒருமணிக்கு படுத்தாள். அவளுக்கு இரவுகள் நீண்டு செல்வது புதிதில்லை. வேலைகளிலும் கொண்டாட்டங்களிலும் வாசிப்பிலும் முழு இரவையும் செலவழித்தவள் அவள். இரவு அவளுக்கு மிகவும் பிடித்தமானது. அதில் படகைப் போல மிதப்பதாக நினைத்துக்கொள்வாள். அப்போது அவளுக்கு தேவதேவன் கவிதை ஞாபகம் வரும். இப்போது மனுஷ்யபுத்திரன் கவிதைகள்தான் மிக நெருக்கமானவைகளாக தோன்றுகிறது. தனிமையை போர்வை போன்று போர்த்திக்கொண்டு அமர்ந்திருக்கும் கவிஞன். பண்டிகைகளில், கொண்டாட்டங்களில், மனிதத்திரள் முன் தன்னை மட்டும் உணரும் ஒருவன், அங்கெல்லாம் கைவிடப்பட்டு அழுதுகொண்டிருக்கும் ஒருவன். இப்போது எடுத்து வாசிக்கலாமா என்று தோன்றியது. ஆனால் சொற்கள் உள்ளே செல்லும் என்று தோன்றவில்லை. அவர் அவருடைய இடத்தில் இருக்கட்டும் நான் அவர் கவிதைகளுடன் இருந்துகொள்கிறேன் என்று நினைத்துக்கொண்டாள். இதுவும் அவர் கவிதைகளின் வரியைப் போல இருப்பதாக நினைத்துக்கொண்டாள். அந்த நினைப்பு மெல்லிய சிரிப்பை வரவழைத்தது அவளுக்கு. அச்சிரிப்பு உடலில் இனிமையை செலுத்தியது. கைகளிலும் கால்களிலும் தாளம் ஏறியது. இசைக்காமலேயே இசையில் திளைக்கமுடிந்தது. எழுந்து கட்டிலைச் சுற்றி துப்பட்டாவை போட்டாள். அது மேகம் தரையில் இறங்குவதுபோல் அசைந்து மிதந்து பறந்து கட்டிலில் படிந்தது. இசைவெளியில் நழுவி விழுந்ததுபோல் நடனம் எழுந்து வந்தது. பள்ளி நாட்களிலும் கல்லூரி நாட்களிலும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பாள். மால்களில் கலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வேலையை கல்லூரி நாட்களில் செய்துவந்திருந்தாள். தலைக்குள் டரம்ஸின் ஒலி அதிர ஆரம்பித்தது. தலையணைகளை சுற்றி விசிறியெறிந்தாள். கால்கள் நீர்மேல் நடப்பதுபோல தரையில் படாமல் மெல்ல எழுந்தெழுந்து பறந்து ஆடின. பழங்குடி மக்களின் சடங்குகளில் ஆடும் நடனம் போல் சுழன்று சுற்றி ஆடினாள். காற்றில் இறகசைவதுபோல் அவள் உடல் மிதந்தது. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது, காதில் வெளியொலிகள் கேட்காமல் அகவெளியில் மனம் எம்பிக்கொண்டிருந்தது. ஆடியாடி அவள் உடல் களைப்படைய ஆரம்பித்தது. அதை மனம் அறிந்த கணம் உடல் முழுக்க அதைச்செலுத்தி எடைகொண்டவளாக அவளை ஆக்கியது. உடல் தளர்ந்து அப்படியே முகம் மெத்தையின் மேல் அறைய விழுந்தாள். உடல் வியர்வை வழிய அது நறுமணமாக நாசியில் ஏறியது. உடல் தளர்ந்திருந்தாலும் மனம் துள்ளலோடு இருந்தது. ஏதாவது இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றியது. சாப்பிடுவதை நினைத்தவுடன் தண்ணீரின் நினைவு மோகம் போல் உடலுக்குள்ளிருந்து மேலெழுந்து வந்தது. ஆனால் எழுந்துகொள்வதற்கு மனமில்லா குழந்தை போல் அடம்பிடித்தது உடல். மழையின்றி வானை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் நிலமென விடாய் அதிகரித்தது. முழுவிசையாலும் உடலை உந்தி எழுந்து கிச்சனுக்குச் சென்று நீர் அருந்தினாள். குருதிவிடாய் கொண்ட தெய்வம் போல் எவ்வளவு குடித்தும் நீர் போதவில்லை. மூச்சு ஏறியிறங்க குடித்து பின் மூச்சுவாங்க மீண்டும் பானையிலிருந்து மொண்டு குடித்தாள். இப்போது மழைபெய்து முடித்த வானம் போல் உடல் அமைதியாக இருந்தது. கண்களைத் திறக்காமலே அவளுடைய அறையை நோக்கி சென்றாள். நேராகச் சென்று கதவ தாழ்ப்பாள் போட்டு கட்டிலில் நீருக்குள் விழும் மழைத்துளியாக விழுந்து கரைந்து போய்விட நினைத்தாள். உடல் மெத்தையில் அழுந்த மனமும் அதில் அழுந்திப்பொருத்திக்கொண்டது. அடியாழங்களில் விழுந்துகொண்டே இருப்பது போல் இருந்தது. கண்களை மூடிக்கொள்வதற்கு இத்தனை சுகமாக இருக்கும் என்று அவள் நினைத்துப் பார்க்கவேயில்லை. இனிய கனவுகளைக் காண மனம் ஏங்கியது, அல்லது கனவற்றவெளியில் சென்று விழவேண்டும். கால்களை அகட்டி போர்வையை போர்த்திக்கொண்டாள். ஏசியை ஆன் செய்தாள். இவ்வளவு நேரம் ஏசி இல்லாமலேயா இருந்தோம் என்று தனக்குள் கேட்டுக்கொண்டாள். ஏசியின் குளிர் ஊதுபத்தியின் நறுமணமாக அறைக்குள் பரவியது. குளிர் உடலில் ஏற மெத்தைக்குள் தன்னை மேலும் சுருட்டிப் புதைத்துக்கொண்டாள். கைகள் நழுவி நீர் வழிவதுபோல் அவள் பெண்சுழிக்குள் சென்று பொருந்தியது. பச்சைப்புல் பரப்பில் மழைத்துளிகளை மிதித்துக்கொண்டு கால்களில் ஈரம் கிச்சுகிச்சு மூட்ட நடந்து சென்றுகொண்டிருந்தாள். முதல் மழை கொட்டி வானம் இரண்டாம் மழைக்கு, பள்ளியைவிட்டு செல்லத்துடிக்கும் சிறுவன் போல் ஆவலாகக் காத்திருந்தது. அவள் மட்டும் தனியே இருந்தாள், அங்கே ஏன் தனியாக இருக்கிறோம் என்ற கேள்வி மனதில் எழுந்தது. பின் அகம் நான் தனியாக இருக்கிறேன் என்று சொல்லியது. நான் தனியாக இருக்கிறேன் என்று வானத்தைப் பார்த்து கத்தினாள், அது அவளைப்பார்த்து ஆம் தனியாக இருக்கிறாய் என்று கத்தியது. அவள் சிரித்துக்கொண்டு காலை ஆட்டியாட்டி வேகமாக ஓட ஆரம்பித்தாள். மலைவிளிம்புக்குச் சென்று ஓவென்று கத்தி மீண்டும் அவள் இருந்த இடத்திற்கே ஓடிவந்தாள். உடல் இன்னும் சற்று நேரத்தில் இனிமையால் வெடித்துவிடும் என்று தோன்றியது. அது இன்னும் இனிமையான பயமாக உடல்முழுக்க சென்று சிலிர்க்கவைத்தது. மூச்சை உள்ளே வேகமாக இழுத்துவிட்டாள். பின் ஏன் இவ்வளவு வேகமாக மூச்சை இழுக்கிறோம் என்று நிதானமாக இழுத்துவிட்டாள். பச்சைப்புல் பரப்பு மனிதர்கள் வரிசையாக குனிந்து அமர்ந்திருப்பது போல் ஏறியேறிச் சென்றுகொண்டிருந்தது. காற்று அவளைத் தழுவி அம்முதுகுப் பரப்பில் அன்னையின் கனிவான கையென தடவிச்சென்றது. அந்தக் கற்பனை உற்சாகத்தை அளித்தது. ‘ஓ’ என்று கத்தினாள். வானம் அவளைப்பார்த்து கத்தத்தொடங்கியது. கிட்டாரின் மெல்லிய அதிர்வாக உடல் அதிர அவளுக்கு முழிப்பு வந்தது. கண்கள் மங்கலாகத் தெரிய யாரையோ தேடுவது போல் அறையை சுற்றிப் பார்த்தாள். கைகளில் பிசுபிசுப்பை உணர்ந்து அதை முகர்ந்து பார்த்து சிரித்துக் கொண்டாள். நிறைய நேரம் தூங்கியது போல் இருந்தது மனம். இனிய சோர்வில் ஆழ்ந்திருந்தது. சோம்பல் முறித்து மணியை பார்த்தாள். மணி ஐந்தாகி இருந்தது. அவளுக்கு நீண்ட நேரம் எதையோ மறந்திருப்பது போல் மனம் ஏங்கியவாறு இருந்தது. வெளியே யாரோ குப்பைகொட்டும் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. “அம்மா எழும் நேரம், சிறிது நேரம் கழித்து மொட்டைமாடிக்குச் செல்லலாம்” என்று நினைத்தாள். சிறிது நேரம்தான் தூங்கியிருப்பாள். ஆனால் அதுவே போதுமானதாக இருந்தது. மெத்தையிலேயே படுத்துக்கொண்டிருப்பது என்னவோபோல் இருந்தது. வேலைக்கு விடுப்பு எடுத்தாகிவிட்டது, இரவே கிளம்பிவிட்டதாக தகவல் அனுப்பினான். ஆனால் மதியம் ஆகிவிடும் சந்திப்பதற்கு என்று சொல்லியிருந்தான். அதுவரை என்ன செய்வது? மீண்டும் தூங்கிவிடலாம். ஆனால் அது முடியாதென்றும் உடனே தோன்றியது. இப்போது வண்டியை எடுத்துக்கொண்டு கடற்கரைவரை சென்று வந்தால் என்ன என்று நினைத்தாள். வேண்டாம். அப்படியெல்லம் எங்கும் செல்லமுடியும் என்று தோன்றவில்லை. இது வெறும் சந்திப்புதானே? இன்னும் அவர்கள் உறவு அத்தனை பலமானதாக ஆகவில்லையே! சிறிதுகாலம், வெறும் ஒன்றரை மாத உறவு… செயலியில் பேசிக்கொண்டிருக்கிறோம். இதில் என்ன ரகசியம், மயக்கம் இத்தனை உற்சாகம்! ஆனால் இவைகளை அவள் நினைத்துக்கொண்டிருக்கும்போதே அவளுடைய மனம் இசையரங்கில் பொருத்தப்பட்ட பியானோபோல் அதிர்ந்து துள்ளிக்கொண்டிருக்கிறது. “மனம் சந்தோஷமடைய ஏங்கிக்கொண்டிருந்ததோ! அத்தனை தனிமையாகவா இருந்தேன் நான்? இப்போது எனக்கு ஏதாவது துக்கம் தேவைப்படுகிறது. இல்லையென்றால் மனம் பொங்கிப் பொங்கி வெடித்து விடும். ஏன் மனிதன் இத்தனை துக்கத்தை தக்கவைத்துக்கொள்கிறான்? அவனால் அதை தூக்கிச் சுமந்தால் மட்டுமே, துக்கம் தங்கியிருக்கும், படகு நீர்ப்பெருக்கில் அடித்துச் செல்லாமல் இருக்கும் பொருட்டு படகை கரையில் கட்டிவைப்பது போல், மனிதன் காலத்துடன் அடித்துச்செல்லாமல் இருக்க தன் துக்கத்தை கற்களில் ஏற்றிவைத்தானோ? கற்கால மனிதன் பெரும்கற்களை அதற்குத்தான் எழுப்பிவைத்தானோ? பின் வரும் தலைமுறைக்கு அத்துக்கத்தை அவர்கள் கூறும் கதைகளில் வழியாக ஏற்றிவிட்டு தான் கரைந்து விடுகிறான். என்னால் உண்மையில் இந்த இனிமையை தாங்கிக்கொள்ள முடியவில்லை, மயிர்த்துளைகள் வழியாக ரத்தம் வந்து இறந்துவிடுவேன்”. இரவிலிருந்து எந்தச் செய்தியையும் படிக்கவில்லை என்று நினைவுக்கு வந்தது. “அது அப்படியே இருக்கட்டும், ஜின்னை விளக்குள் அடைத்துவிட்ட நிம்மதி ஏற்படுகிறது”. மொபைல் இழுப்பறைக்குள் இருப்பது அவளுக்கு தானும் சிறைக்குள் இருக்கும் உணர்வை தந்தது. அங்கே அவள் பிறிதொருத்தியாக இருந்தாள். தன் எல்லையை தானே கடக்கும் கடலலை போல் தான் கடந்து செல்வதை ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தாள். அங்கே தான் ஒருபோதும் வெளியில் சொல்லாத சொற்களை சொன்னாள். தன்னைத் தானே கண்ணாடியில் சரிசெய்து கொள்வது போல ஒவ்வொரு சொற்களுக்கும் தன்னை அழகுபடுத்திக்கொண்டு சென்றுகொண்டிருந்தாள். தனக்குள் அப்படியொருத்தி இருக்கிறாள் என்று அவள் எண்ணியிருக்கவில்லை. அவள் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவள் என்றும் நினைத்திருக்கவில்லை. அவள் வெளிவருவதற்கான வெளி இதுவரை அவளுக்கு அமையவில்லையோ? தன் நிறுவனத்திற்காக வாடிக்கையாளர்களிடம் பேசும்போது மிகத்தேர்ந்த விற்பனையாளராக அவள் தன்னை உணர்வாள். அவர்களுடன் சிரிக்கும்போதும் நகைச்சுவைகளை பகிர்ந்துகொள்ளும் போதும் எந்தவித அசெளகரியத்தையோ உணர்வையோ வெளிப்படுத்திக்கொள்பவள் அல்ல. மேல் தோலில் ஊசிபோடுவது போல் அவை அவளை பாதிக்கவில்லை. அங்கே சிரிக்கும் சிரிப்புக்கு எந்தவித அர்த்தமும் இல்லை. மணல்வெளிக் குப்பைகள் அவை அவளுக்கு. இவன் அனுப்பும் செய்திகள் அவளை பட்டாசுகளாக வெடிக்கவைக்கின்றன. இளிப்பான்களில் தன்னை அனுப்பிவைத்துவிட்டு மிச்சப் புன்னகையாக மேற்கூரையை பார்த்துக்கொண்டிருப்பது அவளை இருளில் ஒளிரும் மின்மினிப்பூச்சியாக்கியது. அதை மேலும் அழகாக்க ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து வடிவமைக்கத்தொடங்கினாள், தான் வடிவமைத்த ஆடையை கடைசி நிமிடம்வரை சீர்செய்துகொண்டிருக்கும் ஓர் ஆடைவடிவமைப்பாளர் செய்வது போல். அவனுடன் காமத்தைப் பேசிய தருணங்களில் மொட்டைமாடியில் பெரும் கட்டிடங்களின் நிழல் மறைவில் அமர்ந்துகொண்டு பேசிக்கொண்டிருப்பாள். தன் அழகை அவன் எப்போது பேச வேண்டும் என்பதை அவள்தான் முடிவுசெய்வாள். அவர்கள் உரையாடல் வெகு சீக்கிரத்தில் ஒத்திசைவை அடைந்தது. அவன் அவளை சிரிக்கவைத்தான். நாணி முகம் சிவக்க கோபம்கொள்ளச் செய்தான். தன்னை கடும் கோபம் கொண்டவளாகவும் தன்னிடம் ஜாக்கிரதையாகத்தான் பேச வேண்டும் என்பது போலவும் நடந்துகொண்டாள். காதல் பேசி வளைத்து முத்தமிடும் தருணத்தில் விலகிவிடுவாள். அவர்கள் பந்தயக்குதிரை போன்று யார் யாரை செலுத்துகிறார்கள் என்பது தெரியாமல் அதன் விசைகளில் சென்று கொண்டிருந்தார்கள். அவன் “இதற்கு முன் யாரையாவது காதலித்திருக்கிறாயா?” என்றான். அவள் “ஆம்” என்றாள். “எத்தனை பேர்” “மூன்று” “அவ்வளவுதானா?” “நினைவில் இருப்பது அவ்வளவுதான்” “ஹ ஹ.. என்ன ஆகியது?” “இறந்துவிட்டனர்” “அனைவருமா” “ஆம்” “எதனால்? ” “தெரியவில்லையே” “ஏன்?” “நான் பார்க்கவில்லையே” “நான் கூறட்டுமா…” “கூறுங்கள்” “…..” “கூறுங்கள்” “அவர்கள் பயத்தில் இறந்திருப்பார்கள்” “என்ன பயம்?” ” உன்னை தவறவிட்டுவிடக்கூடாதே என்ற பயம்” “…….” “நான் ஒன்று கூறவா?” “ம்” “நானும் ஒரு முறை இறக்க ஆசைப்படுகிறேன்” என்றான். அவள் ஒரு கணம் தயங்கினாள். டைப் செய்தாள் “நானும் இறக்க” அழித்தாள், மீண்டும் “உன்” டைப் செய்து அழித்தாள். மனதில் ராக் இசையின் இரைச்சல் கேட்க அழுத்தத்தில், கன்னங்கள் வெட்கத்தால் சிவந்த இளிப்பான்களை அள்ளிவிட்டாள். அவர்கள் ஒரு ஆடலில் இருக்கிறார்கள் என்பது சில நாட்களில் தெரிந்தது. அது அவளை பரவசத்தில் ஆழ்த்தியது. அவன் முன் தன்னை ஒவியம் வரைவது போல் வரைய ஆரம்பித்தாள். தான் விரும்பிய வண்ணங்களை சேர்த்தாள். அசடாக, பதற்றங்கொண்டவளாக, அவை முழுமையானவுடன் அதன் மேல் மேலும் வண்ணக்கலவைகளை தீட்டுவாள். வரைய வரைய அவளுக்கு வண்ணங்களின் கலவை பேதம் முடிவில்லாமல் கிட்டியது. ஓவியத்திரையில் வழியும் வண்ணக்கலவையில் முடிவில்லா ஓவியங்களில் ஒரு ஓவியம் மட்டுமே வரையும் சாத்தியத்தை எண்ணி அலுப்புற்றாள். அவனைச் சீண்டுவது அவளுக்கு இயல்பாக வந்தது, அதை செய்துவிட்டு நாள் முழுக்க செயலிக்குச் செல்லாமல் இருந்துவிடுவாள். பின் ஏதும் நடக்காதது போல் உரையாடலை அவளே துவங்குவாள். சில நாட்களில் அது மகாபாரதத்தில் சித்திராங்கதனை மூழ்கடித்த மாயத்தடாகம் போல் அவளை இழுத்து மூழ்கடிக்க ஆரம்பித்தது. மொபைலையே வெறித்துப்பார்த்துகொண்டு குறுஞ்செய்திக்காக காத்திருந்தாள். அதன் திரையில் வெளிச்சம் பரவி அது உயிர்கொண்டவுடன் தன்னை காப்பாற்ற வந்த தேவனைக் கண்டது போல் மகிழ்ச்சியடைந்தாள். இதன் வழியாக பேசும் நபர் உண்மையாகவே இருக்கிறானா என்று தோன்ற ஆரம்பித்தது அவளுக்கு. வேலைப் பளுவில் அவன் கேட்கும் கேள்விக்கு குறுஞ்செய்தியுடன் இளிப்பான்களை தட்டிவிடுவாள், எந்த உணர்ச்சியுமின்றி. அதனாலேயே அவனும் தனக்கும் அப்படித்தான் அனுப்புகிறானோ என்று சந்தேகம் வந்தது. இளிப்பான்களை பார்க்கும்போது துவேஷம் பொங்கி வந்தது, அதன் இளித்தவாயை மேலும் கிழிக்கவேண்டும் போல் இருந்தது. அதை அனுப்பும் அவன் மேல் குரோதமும் வெறியும் எழுந்து வந்தது. இதெல்லாம் என்ன என்று தோன்றி குளியலறைக்குச் சென்று நீர் குழாயைத் திருகி அதன் முன் அமர்ந்துவிடுவாள். எண்ணங்கள் அவள் உடலில் அசைவை உண்டாக்கவில்லை. மேற்கூரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். சிறுநீர் வருவது போல் இருந்தது. எழுந்து சென்று போய் வந்தாள். முகம் கழுவி கண்ணாடியில் முகத்தை பார்த்துக்கொண்டாள். முகம் அப்பழுக்கற்று தெளிவாக இருந்தது. தூக்கம் புத்துணர்ச்சியை அளித்திருந்தது. ஆனால் ஏதோ குறையாக இருப்பது போல் இருந்தது. நீரையள்ளி முகத்தில் தெளித்துக்கொண்டாள். சிறுவயதில் ஏற்பட்ட காயம்… அவள் அதைப் பார்த்து வெகுகாலம் ஆகியிருந்தது. நெற்றியின் இடக்கோடியில் முடிக்குப்பின் மறைவாகத்தான் இருந்தது. மீண்டும் முகத்தில் நீரைத்தெளித்து முகத்தை அழுத்தி துடைத்துக்கொண்டு வெளியே வந்தாள். தொண்டைக்கு தண்ணீர் தேவைப்பட்டது. நீரையள்ளி குடித்துவிட்டு டீ போட்டுக்கொண்டு மாடிக்கு சென்றாள். காகங்களின் இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்தது. அவளுக்கு காகங்களை பிடிக்கும். அதன் கரிய நிறம் மதியவெயிலில் மினுமினுப்பாகத்தெரியும். காகம் வெயிலுக்கும் பகலுக்கும் உரியது என்று நினைத்தாள். பகலில் பறக்கும் இரவு, காகம். அதன் கரையும் ஒலி வானத்தை எச்சரிக்கைப்படுத்துவது போல் இருப்பதாக நினைத்துக்கொள்வாள், சில சமயம் கெஞ்சுவது போல. “அவனை ஏன் சந்திக்க வேண்டும்? அதனால் என்ன ஏற்படப்போகிறது. அவன் உன்னை சந்திக்க வருகிறேன் என்று சொன்னவுடன் ஏன் என் மனம் அத்தனை எழுச்சிகொள்கிறது?” மீண்டும் மீண்டும் எழும் கேள்வி இது. அவர்கள் அத்தனை ஆழமாகவா சென்றுவிட்டார்கள்? அவனும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பதை அவனது குறுஞ்செய்திகள் மூலமாக பார்த்துக்கொண்டிருந்தாள். ஏக்கம் என்ற சொல் அப்போதுதான் தன் வாழ்வில் பொருள்கொள்வதாக நினைத்தாள். இதுவரையான தன் வாழ்க்கையில் ஒருவித நிறைவோடுதான் இருந்தாள், அல்லது அப்படி இருந்தது போல் இருந்தது. அவள் ஆண்களை அறிந்தவள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அறியாதவள் என்றும் சொல்லிவிட முடியாது. எதிர்ப்பாலினம் என்பதால் ஒரு ஈர்ப்பும் அவர்கள் மேல் கவனமும் இருந்து வந்தது. தனிப்பட்ட முறையில் அவளை ஈர்த்தவர்கள் பெரும்பாலும் இல்லை. அல்லது இன்னும் அவள் வாழ்வில் வரவில்லை. அவள் கவனித்து பேசிய சிலர் பேசியவுடன் சிதறிவிட்டனர். “பெரும்பாலும் இவனுடன் குறுஞ்செய்தி வழியாகவே பேசிக்கொண்டிருப்பதால் இந்த ஈர்ப்பு இருக்கலாம்.” போனில் பேசிய போதும் அவனே பெரிதும் பேசிக்கொண்டே சென்றான். அவள் அவன் பரவசத்தை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவன் பேசுபொருட்கள் தொய்யும் போது அவள் எடுத்துக்கொடுத்தாள். அவளுடைய வேலை பளுதான் அவனுடனான தீவிர ஈர்ப்பை பாதுகாத்தது. அதில் முழுகி வெளிவந்து பார்க்கையில் தூர இருந்து பார்ப்பது போல் தெளிவாகத் தெரிந்தன. அவனிடும் இளிப்பான்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தின, அசந்தர்ப்பமாக அனுப்பும் இளிப்பான்கள் கடும் வெறுப்பை உண்டாக்கின. அதன் சிரித்த முகத்திற்குப் பின் வஞ்சனை கொண்ட முகம் ஒன்று இருப்பது போல, தன்னைப் பார்த்து கேலி செய்து இளிக்கும், இளித்தவாய் முகம். டீ நன்றாக இருந்தது. அதன் வாசம் நாசியில் சென்று குட்டி இளைப்பாறுதலை தந்தது. யாரோ வானத்தின் மூலையில் தீமூட்டினார்கள். அது சிவந்து ஆரஞ்சு நிறம் ஆகியது போல் இருந்தது. மேகம் மணல் திட்டுகள் போல குவிந்து, பின் எறும்புத்தின்னியின் முதுகுபோல் செதில் செதிலாக மாறியது. முருங்கை மரத்தில் அணில்கள் ஓடிப்பிடித்தபடி அன்றைய நாளை துவக்கின. “வாழ்க்கை முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும் உயிரினங்களில் இதுவும் ஒன்று. அதன் உடலுக்குள் இருக்கின்ற ஒன்று, அதை எப்போதும் பரவசத்தில் ஆழ்த்தி அதை ஓடவைத்துக்கொண்டே இருக்கிறது போலும்”. அவர்கள் உரையாடாத நாட்கள் சேற்றில் புதையுண்ட நாட்களாக நகர மறுத்தன. எங்கும் அமைதியின்மை ஏற்பட்டு எதிலும் கவனம் கூடாமல் நாட்கள் சிதறிய துண்டுகளாகிப் போயின. அவன் ஒருமுறைதான் அலுவல் காரணமாக வெளியூர் சென்றிருந்தான். அந்நாட்களில் எடைக்கற்களை தலையில் சுமப்பவள் போல ஓரிடத்திலேயே அழுந்தி தேய்ந்துவிட்டிருந்தவளானாள். அவள் மனம் தன்னால் ஆனமட்டும் உடலை இழுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. ஒருவர் மேல் கோபித்துக்கொள்ள அவர் நமக்கு உரிமைதர வேண்டும். அப்போதுதான் நாம் கோபித்துக்கொள்ள முடியும். உரிமை தராதபோது நாம் என்ன செய்துவிட முடியும்? அவன் மேல் உள்ள கோபத்தால் அந்நாட்கள் கருகி வீணாகிப்போனதைத் தவிர வேறு பிரயோசனமில்லை. மொபைலை எடுப்பதும் பின் ஆன்கூட செய்யாமல் மீண்டும் வைப்பதுமாக அர்த்தமற்ற செயல்கள் வழியாக ஒழுகிச்சென்றன அவனுடன் பேசாத நாட்கள். இவ்வளவுதான்… இங்கே இதை முடித்துக்கொள்வோம் என்று, தினமும் அவன் பக்கத்திலிருந்து காலை வணக்கம் திரையில் எழுவதுவரை காத்திருப்பாள். காலையில் இளிப்பான்களுடன் அங்கே அது இருக்கையில், ஏமாற்றமே வந்து செல்லும். வராதபோது அவ்வளவுதானா என்று மனம் அரற்றத்தொடங்கி பெருமூச்சுகள் விட்டு மனம் காற்றாக மாறிவிடத் துடித்துக்கொண்டிருக்கும். அவனுடைய பக்கத்திற்குச் சென்று அதை வெறுமனே சுற்றிக்கொண்டிருந்துவிட்டு அங்கே அவனைக் காணாமல் கோபம் தலைக்கேற பல்கிட்டித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தவுடன் தான் எளிதாக முயற்சி செய்வாள். அவன் என்னைப்பற்றி என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறான் என்று நினைப்பாள். அழுகை மட்டும் வந்துவிடக்கூடாது என்று மனதை திசைதிருப்பச் செய்யும் வேலைகள் அவனை துல்லியமாக நினைவுபடுத்தும். மனதிற்கு குழந்தையிடம் சொல்லுவது போல அவன் எனக்குரியவன் அல்லன் என்று புரியவைத்த முயற்சிகள், பாலைக்காற்றாக அனல்கொள்ள செய்கின்றன. “அவன் செயலியில் இருந்துகொண்டு என்னுடன் பேசாமல் நான் அவன் ஆன்லைனில் இருப்பதை பார்த்துக்கொண்டிருக்கும் தருணங்கள், உடலே புண்ணாகமாறி அதில் டிஞ்சரைக் கொட்டியது போல் எரிந்துகொண்டிருக்கும். நாம் பிரபஞ்சத்துடன் கடும் வஞ்சம் கொள்ளும் தருணம் இவை”. ஏதோ தோன்ற “இப்போதே இன்றே இதை முடித்துக்கொள்வோம், இனிமேல் இதுவேண்டாம்” என்று எண்ண ஆரம்பித்த கணம் கைகள் மொபைல் போனை தேடின. அது கிழே இருப்பதால்தான் மனம் இப்படி நடிக்கிறதா என்று அவ்வெண்ணத்தை எதிர்திசையில் சென்று ஆராய்ந்தது அவளுடைய வேறோர் மனம். இந்தச் செயலி வாழ்க்கை பொய் என்று தோன்றியது. இளிப்பான்களுக்குப் பின் இருக்கும் முகத்தை யார் அறியமுடியும்? கோபத்தில் இருப்பவர் இடும் இளிப்பான் என்னவாக இருந்தாலும் அது அவரை காட்டப் போவதில்லை. இளிப்பான்களால் கட்டி எழுப்பப்படும் வாழ்க்கையால் ஆனது இது, அதை நினைக்க அவளுக்கு வாய் குமட்டிக்கொண்டுவந்தது. கண்கள் சூரியனின் ஒளியால் கூச ஆரம்பித்தன. “எத்தனை நேரம் இங்கே இதை யோசித்துக்கொண்டிருக்கிறேன்? எண்ணங்கள் கழிவு நுரைகள் என நுரைத்துக்கொண்டிருக்கின்றன. இன்னும் சற்று நேரத்தில் நாற்றம் வெளியே தெரியத்துவங்கிவிடும் என்பது போல. இன்றே இதை முடித்துக்கொள்வோம். ஒரு குறுஞ்செய்தி, பின் அவனை செயலியிலிருந்து நீக்கிவிட்டால் அனைத்தும் முடிந்துவிடும். ஆம், இது சரியான தருணம். இனிமேலும் இதை நீட்டித்து அவஸ்தைக்குள்ளாவதை விட இங்கே நிறுத்திக்கொள்வதே மேல். போதும்… இம்மாய வெளியில் என்னை நான் வைத்து விளையாடிக்கொண்டிருந்தது”. கிழே இறங்க படிகளில் கால்வைத்த போது முருங்கை மரத்திலிருந்து குயில் கூவியது. இவளைப் பார்த்து இடைவிடாது ஏக்கத்துடன் கூவியது. சற்று நிறுத்தி மீண்டும் கூவியது. “இத்தனை ஏக்கம் ஒரு உயிருக்குள் எப்படி வந்தது? எதற்காக ஏங்கி ஏங்கி கத்துகிறது?” அதன் பக்கத்துக் கிளையில் அதன் இணைப் பெண்குயில் வெறுமனே அதை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தது. “அது ஒருமுறை கூவினால் இது நிறுத்திவிடுமா? இல்லை, அதற்கு அது ஒரு பொருட்டே இல்லையா? அந்தச் சின்ன உயிருக்குள்ளிருந்து இந்த அண்டத்தை நிகராகவைக்கும் ஏக்கம் எப்படி வந்தது?” அது மீண்டும் உக்கிரமாக வெளியை நோக்கி கத்தத்துவங்கியது. அவள் அறைக்குச் சென்று மொபைலை எடுத்து செயலிக்குச்சென்று இளிப்பானை இட்டாள் அவனுக்கு அனுப்புவதற்கு. *** -அனங்கன் https://vanemmagazine.com/ஸ்மைலி-அனங்கன்/
    1 point
  31. தம்பி நுணாவிலுக்கும் அகஸ்தியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂
    1 point
  32. அகஸ்தியன் & நுணாவிலான் இருவருக்கும் இனிய பிறந்ததாள் நல் வாழ்த்துக்கள்
    1 point
  33. அகஸ்தியன் நுணாவிலான் இருவருக்கும் பிறந்ததாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்.
    1 point
  34. அகஸ்தியனுக்கும், நுணாவிலானுக்கும்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    1 point
  35. 10 மினிட்ஸ் பிரைட் ரைஸ் ...........! 👍
    1 point
  36. அகஸ்தியனுக்கும், நுணாவுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்….!
    1 point
  37. Ahasthiyan nunavilan (42 years old) Thuvaragan (44 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நுணாவிலான், அகஸ்தியன் & thuvaragan .........! 💐
    1 point
  38. திரு. நியானி, ஒரு சம்சயம்..😎 சுமார் இருபது வருடங்களுக்கு முன், இங்குள்ள மொத்த விற்பனை கடைகளில் கணிப்பொறி உதிரி பாகங்களை வாங்கி, நானே சொந்தமாக கணணியை பொருத்தி (Computer Assembling) பயன்படுத்தி வந்தேன். இப்போது அந்த தொழிற்நுட்பம் அதரப் பழசாகிவிட்டாலும், நான் பெற்ற அனுபவத்தை வெளி இணைப்பு படங்கள் மூலம் விளக்கி, அனுபவக் கட்டுரையை எழுதலாம் என திட்டமிட்டுள்ளேன். அதை வரும் யாழ் இணையம் 24 ஆவது அகவை சிறப்பு பக்கத்தில் பதியலாமா..? 🤔 நன்றி..!
    1 point
  39. ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர். . இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்குபவர் அப்போது அங்கு வந்தார். அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்..! . இறந்தவரின் மனைவி சொன்னாள்.. ”குருஜி.! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே..? நான் என்ன செய்வேன்..? அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்..!” என்றார்..! . குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார்.. ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை... . கடைசியில் அவர் கேட்டார் ”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்” தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார். பின் சொன்னார்.. ”இறந்தவர் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர், இந்தத் தண்ணீரை அருந்தலாம். இறந்தவர் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்..!” என்றார்..! . அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் யாரும் முன் வரவில்லை. அவர் இறந்தவரின் தந்தையைக் கேட்டார்” ஐயா.! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா.?” . தந்தை சொன்னார் ”நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு.?அவளுக்காக நான் வாழ வேண்டும்” . தாயைக் கேட்க அவள் சொன்னாள் ”அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம். நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது.?” . மனைவி சொன்னாள் ”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது.? அவனுக்காக நான் வாழ வேண்டும்” . குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார் ”குழந்தாய், உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா.?” . அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக் கொண்டு சொன்னாள் ”குருஜி, உங்களுக்கென்ன பைத்தியமா.?அவன் ஒரு குழந்தை. இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா.?” . குருஜி சொன்னார் ”உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் இவருக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் . இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்” சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்..! ”உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்” “பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே..!!”. எனவே வாழும் வரை புன்னகைக்கும் முகத்தோடு மகிழ்வாய் வாழ முயற்சிப்போம்.
    1 point
  40. ஒரு குட்டிக்கதை ஒருநாள், முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவே, மக்கள் அவரை மிகவும் மதித்தனர். அவர் சீடர்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர். ஒரு பணக்கார பெண்மணியின் வீட்டருகே அவர்கள் நடந்தனர். அப்போது ஒரு சிறிய பெண் குழந்தை அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தது. குழந்தைகள் மேல் மிகுந்த அன்புடையவர் ஞானி. அவர் குழந்தையை அன்புடன் நோக்கினார். குழந்தை ஒரு தட்டு நிரம்ப ரோஜா மலர்களைக் கொண்டு வந்து சித்தானந்தர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. மலர்கள், மணம் தரும் பொருட்கள், தைலங்கள் என்றால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார் என்பது சீடர்களுக்குத் தெரியும். ஒரு ரோஜா மலரை மட்டும் எடுத்துக் கொண்டு தட்டை சீடர்களிடம் நீட்டினார். சீடர்களுக்கு சொல்லவா வேண்டும். தலைக்கு இரண்டு மூன்றாக அவர்கள் மலரை அள்ளிக் கொண்டனர். மலர்களை அர்பணித்த குழந்தை மகிழ்ச்சியுடன் இல்லம் சென்றது. சீடர்கள் புடை சூழ சித்தானந்தரின் உலா தொடங்கியது. ஒரு வயதான மூதாட்டி ஞானியை தன் வீட்டுக்குள் வரவேற்றாள். சீடர்கள் உள்ளே சென்று அமர்ந்தனர். ஒரு பணியாள் ஆப்பிள் பழத்தட்டை அவர் முன் வைத்தார். ஒரு பழத்தை எடுத்துச் சுவைத்தார் சித்தானந்தர். பழம் மிகவும் சுவையாக இருந்தது. அவைகளை எடுத்து தன் சீடர்களுக்கு வழங்கினார். சீடர்கள் பழங்களை சுவைத்து உண்டனர். ஞானியைத் தொடர்ந்து செல்வதால் அவர்களுக்கு அவ்வப்போது நல்ல சுவையான பொருட்கள் கிடைத்து வந்தன. எனவே, இந்த சந்தர்ப்பங்களை சீடர்களில் எவரும் தவறவிடுவதில்லை. செல்வந்தர்கள் வாழும் வீதிகளை எல்லாம் அவர்கள் கடந்து சென்றனர். இப்போது வசதி குறைந்தவர்கள் இடம்; நகரின் ஒதுக்குப் புறமான பகுதி. ஏழை விதவைப் பெண்ணொருத்தி அங்கே நின்று கொண்டிருந்தாள். அவள் ஞானியை தன் சிறிய வீட்டுக்கு வருமாறு அழைத்தாள். அவளது அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அவரும் சீடர்களும் உள்ளே சென்று அமர்ந்தனர். “”ஐயனே, நீங்கள் இதைச் சாப்பிட வேண்டும்,” என்று கூறி ஒரு தட்டை நீட்டினாள். தட்டைப் பெற்றுக் கொண்ட ஞானி அதில் திராட்சைப் பழங்கள் இருந்ததை பார்த் தார். ஒரு பழத்தை எடுத்து வாயில் போட்டார். சுவைத்து உண்டார். சீடர்கள் பார்த்துக் கொண்டே இருந்தனர். மீண்டும் ஒரு பழத்தைப் பிய்த்து வாயில் போட்டு மென்று சுவைத்தார். இப்படியாக எல்லா பழத்தையும் தான் ஒருவராகவே தின்று தீர்த்தார். தங்களுக்கு அப்பழத்தை வழங்காமல் தானே உண்டதைக் கண்ட சீடர்கள் வியப்படைந்தனர். திராட்சைப் பழம் வழங்கிய ஏழைக் கைம்பெண்ணுக்கு நன்றி கூறினார் ஞானி. பின்னர் வெளியே வந்து நடக்கத் தொடங்கினார். சீடர்கள் அவரோடு நடந்தனர். சீடர்கள் முகத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. “இதுவரை எல்லா பொருட்களையும், உணவையும் பகிர்ந்து கொண்ட குரு திராட்சைப் பழங்களை மட்டும் தன்னந்தனியாய்த் தானே உண்டது ஏன்?’ எல்லாருடைய உள்ளத்திலும் இக்கேள்வி எழுந்து நின்றது. சீடர் ஒருவர் வாய் திறந்து இக்கேள்வியைக் கேட்டே விட்டார். “”நீங்கள் ஏன் தனியாகச் சாப்பிட்டீர்கள்? எங்களுக்கு ஒரு பழங்கூட தரவில்லையே… ஏன்?” “”அந்த திராட்சைப் பழம் மிகவும் புளிப்பாய் இருந்தது. எனவே, நான் ஒருவனாக அவற்றைத் தின்றேன்,” என்றார் குரு. “”உங்களுடைய சுகத்திலும் துக்கத்திலும் நாங்கள் பங்கு கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, சுவையற்றதை நீங்கள் தனியாக உண்ண வேண்டும்; சுவை மிகுந்ததை மட்டும் எங்களோடு பகிர்ந்துண்ண வேண்டுமா? இது நீதியாகுமா?” “”என்னுடைய சுகத்திலும் துக்கத்திலும் நீங்கள் பங்கு கொள்ள விரும்புவது உண்மையாக இருக்கலாம். ஆனால், இதில் ஓர் ஏழைக் கைம்பெண் இடையே இருக்கிறாள். அவள் தந்த திராட்சைப் பழங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டால், “இந்தப் பழம் புளிக்கிறது’ என்று நீங்கள் சாப்பிடும் போதே சொல்லி விமர்சனம் செய்து அந்தப் பெண்ணின் மனதைப் புண்படுத்திவிடுவீர்கள். அவளது மனது படாத பாடுபட்டு நொந்து போய்விடும். அதனால் தான் திராட்சைப் பழங்களை உங்களுக்குத் தரவில்லை,” என்று சொன்னார் முனிவர். எவருடைய மனதையும் புண்படுத்தக் கூடாது என்ற கருத்தில் தங்கள் குரு எத்தனை உண்மையாக இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ந்தனர் சீடர்கள்.😄
    1 point
  41. மொபைல் தொடர்பாடல் வரலாறு-2G பகுதி 2 கோரா 1G-ஒப்புமை (analog) மொபைல் தொலைபேசி அமைப்புகள் கார்களிலும் வாகனங்களிலும் தொலைபேசிகளைப் பொருத்திக் கொள்ள விரும்பிய மேட்டுக்குடி மக்களையே வருவாய் இலக்குகளாகக் கொண்டிருந்தன. ஆனால் அவ்வகை மொபைல் தொலை பேசியின் இடம்-பெயர்வு லாவகம் பாமரரையும் கவர்ந்தது. மேலும் 1980களின் இறுதியில் மோட்டரோலா வடிவமைத்த, மலிவான, இலகு ரக, சட்டைப்பையில் மடக்கி வைக்கக் கூடிய ( foldable) சுண்டு (flip) மாடல் மைக்ரோடேக் (MicroTac) அலைபேசி அனைவரையும் கிறங்க வைத்தது. வீட்டினுள்ளும் வீதிகளிலும் வாகனங்களிலும் வெளியூரிலும் எந்த சூழலிலும் தொடர்புக்கு வசதி செய்யும் சொந்த ஃ போனாக அது உணரப் பட்டதாலும், மின்கலன் துய்ப்பு குறைந்து பயன்பாட்டுக் காலம் கூடி, செலவுகள் அனைவர்க்கும் கட்டுபிடியாகும் அளவில் இருந்ததாலும் மொபைல் சேவையின் கவர்ச்சி பன்மடங்கு அதிகரித்தது. புதிய செல்களை அமைத்தும், இருக்கும் செல்களைப் பிரித்தும் (cell splitting) அல்லது பாகம் செய்தும்(sectorization ) கொள்கையளவில் செல்லுலார் தொலைபேசி அமைப்புகளை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் விரிவாக்கம் செய்ய முடிந்தது. இந்தக் காரணங்களால் உலக 1G மொபைல் பயனர்களின் எண்ணிக்கை 1990 இறுதியில் 20 மில்லியனைக் கடந்தது. ஒப்புமை தொழில் நுட்பத்தின் போதாமைகளோ குறைபாடுகளோ அவர்களின் பேரார்வத்தைக் குறைக்கவில்லை. ஒரு முறை ஒத்திவைக்கப் பட்ட இலக்கமாக்கல் (Digitising) : ஒப்புமை முறை (analog), இலக்க முறை (digital) ஆகிய இரு மொபைல் தொலைபேசி அமைப்புகளிலும், ரேடியோ கோபுரத்திற்கும் தொலை பேசி அமைப்பின் பிற உபகரணங்களுக்கும் இடையே இலக்கமுறை சமிக்ஞைகளே பயன்படுத்தப் படுகின்றன. முக்கிய வேறுபாடு, அலைபேசிக்கும் ரேடியோ கோபுரத்திற்கும் இடையே நிகழும் குரல் சமிக்ஞைப் பரிவர்த்தனைகளில் மட்டுமே; 1G யில் ஒப்புமை குறிகைகளும், 2G யில் இலக்கமுறை குறிகைகளும் குரல் சமிக்ஞைப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப் படுகின்றன. 1970களிலேயே முழு இலக்கமுறை மொபைல் அமைப்பின் சாத்தியக் கூறுகள் மற்றும் அனுகூலங்கள் குறித்த ஆரம்ப கட்ட விவாதங்கள் மேற்கொள்ளப் பட்டன. அந்த காலகட்டத்தில் இலக்க முறை ரேடியோ போன்கள் ராணுவத்தில் பயன்படுத்தப் பட்டுவந்தன. ராணுவப் பயன்பாட்டிற்கான அலைபேசிகள் ரேடியோ குறுக்கீடுகள் நிறைந்த சூழலிலும் தெளிவான வலுவான குறிகைகளை ஏற்கக் கூடியதாகவும், மறையாக்கம் (encryption) மூலமாக ரேடியோ பாதைகளில் ஒட்டுக் கேட்பை அனுமதிக்காத பாதுகாப்பு கொண்டதாகவும், முறைகேடான அணுகலைத் தவிர்க்கக் கூடிய வலிய சான்றுறுதி மற்றும் சரிபார்ப்பு(authentication) செயல்முறைகள் கொண்டதாகவும் வடிவமைக்கப் பட்டன. ஆனால் ஒருங்கிணைசுற்றுகள் (integrated circuits ), நுண் செயலிகள் (microprocessors ) போன்ற அதி நவீன மின்னணுவியல் கூறுகள் கிடைக்காத நிலையில், தனித்த(discrete) கூறுகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப் பட்ட ராணுவப் பயன்பாட்டு போன்கள் பருமனாகவும் அதிக மின் சக்தி நுகர்வனவாகவும் அதிகவிலை கொண்டதாகவும் இருந்தன. மின்னணுவியல் வளர்ச்சி மூலம் கிடைக்கப் போகின்ற சிற்றளவாக்கம்(miniaturisation), குறைந்த மின்சக்தி நுகர்வு மற்றும் குறைந்த மின்கலன் பயன்பாடு ஆகியவை இலக்கமாக்கல் வெற்றிக்கு இன்றியமையாதவை எனத் தொழில்நுட்ப வல்லுநர்களால் கருதப் பட்டதால், இலக்கமாக்கல் திட்டம், 2G தலைமுறைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அவர்கள் எண்ணியவாறே 1980களின் இறுதியில் மின்னணுவியல் கூறுகள் பெருவளர்ச்சி அடைந்து அதுவே இலக்கமாக்கலின் உந்து சக்தி ஆனது. மொபைல் இலக்கமுறையாக்கலின் (digitalization ) உந்து சக்திகள்: மொபைல் அமைப்புகளின் உயர் ஆற்றல் அளவு கையடக்க அலைபேசியின் விலையில் பெரும் சரிவு மின் சக்தித் தேவை குறைந்ததால் மின்கலம் ஆயுள் நீடிப்பு மலிவு விலை இருவழிக் குறிமுறை மாற்றி ( codec-coderdecoder) அலைபேசியில் ஒருங்கிணைச் சுற்றுகள் மற்றும் நுண்செயலிப் பயன்பாடு இலக்கமுறை குறிகை செயலாக்கச் சிப் (Digital Signal Processing chip) வருகை குரல் செயலாக்க (Voice processing ) தொழில் நுட்ப DSP சிப்களின் பயன்பட்டால் குரல் அலைப்பாதைகளின் அலைநீளத் தேவைகள் ⅓ ஆகக் குறைந்தன. அதனால் ஒதுக்கப்பட்ட அலைக் கற்றையில் மும்மடங்கு அலைப் பாதைகளை உருவாக்க முடிந்தது. 2G- இரண்டாம் தலை முறை மொபைல் தொடர்பாடல்(1990- 1999) அறிமுகம் : இலக்கமாக்கலை செல்லுலார் நெட்ஒர்கிங்கிற்கு வெற்றிகரமாகக் கொண்டுவந்த கால கட்டத்தை 2G என்கிறோம். இதுவே மொபைல் தொடர்பாடலின் புரட்சிகரமான மைல்கல்லாகக் கருதப் படுகிறது. ஏனெனில் செல்லுலார் தொடர்பாடலில் இதுவரை சிறிய அளவில் பயன்படுத்தப் பட்டுவந்த ஒப்புமை முறை முழுதாக, இனி எப்போதைக்குமாக, இலக்கமுறைக்கு மாறியது. இலக்கமுறையின் இரைச்சல் நீக்கல் வழிகளால் பிழைகள் திருத்தப்பட்டு குரல் நயம் வெகுவாக உயர்ந்தது. ஒரே அளவு அலைவெண் கற்றையில் அதிக பயனர்களுக்கு இடமளிக்க முடிந்ததால் மொபைல் தொலைபேசிக் கம்பெனிகளும் பயனடைந்தன. இலக்க முறை செல்லுலார் அமைப்புகளால், மொபைல் தொடர்பாடல் நம்பகமானதாக மற்றும் பாதுகாப்பானதாக ஆனதோடு தர அளவுப்பாடு (standardization) முயற்சிகளால் விலையும் வெகுவாக சரிந்தது. ஆனால் அலைக்கற்றை விலை, டவர் சாதனங்கள் விலைகளைச் சரிகட்டி லாபம் ஈட்ட, அதிக எண்ணிக்கையில் பயனர் ஆதாரம் தேவைப்பட்டது. பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தின்(ITU ) தீவிர சீராக்க முயற்சிகளால், அது பரிந்துரைத்த ரேடியோ அலைக்கற்றைப் பயன்பாட்டைப் பெருவாரியான உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன. அத்துடன் எல்லா ஐரோப்பிய நாடுகளும் ஒரே சீராக பயன் படுத்தக் கூடிய ஒற்றை மிகு திறன் இலக்கமுறை செல்லுலார் TDMA தொழில் நுட்ப தர நிலையை தமக்காக உருவாக்கிக் கொள்வதும் அதன் மூலம் அனைத்து யூரோப் திரிகையை(roaming ) உறுதி செய்வதும், அப்போது பயன்பாட்டில் இருந்த அனைத்து ஒப்புமை முறை அமைப்புகளை மூடிவிடுவதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. அதன் செயல் வடிவமாக யூரோப்புக்கான GSM தர நிலை (standard) உருவானது. ஐரோப்பிய நாடுகளில் TDMA அடிப்படையில் உருவான GSM அமைப்புகள் 1991-ல் வணிகப் பயன்பாட்டைத் துவங்கின. வட அமெரிக்காவின் அன்றைய 1G (ஒப்புமை முறை ) அமைப்புகள், AMPS (Advanced Mobile Phone System ) மற்றும் NAMPS (Narrowband version of AMPS) என்னும் தர நிலைகளில் நாடெங்கும் செயல் பட்டுவந்தன . அமைப்புக்கிடை இயக்கத்துக்காக உருவாக்கப்பட்ட IS-41 standard மூலமாக பயனர்களுக்கு பெரும் பரப்பு திரிகை (wide area roaming) வசதியும் கிடைத்துவந்தது . யூரோப் போலன்றி, வட அமெரிக்க AMPS/NAMPS பயன்பாடு இன்னும் பத்தாண்டுகள் (2000 ஆண்டு வரை ) நீடிக்கும் என்று முடிவெடுத்து விட்ட நிலையில், வட அமெரிக்காவுக்கான இலக்கமுறை செல்லுலார் தரநிலைகள், மிகு திறன்கொண்டதாகவும், AMPS/NAMPS அமைப்புகளுடன் இணக்கமாக இயங்கக் கூடியதாகவும் இருப்பதோடு இருவேறு தொழில் நுட்பங்களைப் (TDMA அல்லது CDMA) பயன்படுத்தும் இலக்க முறை தர நிலைகளாகவும் இருக்கவேண்டும் என்று Telecommunications Industries Association (TIA) 1988-ல் உறுதிபடக் கூறியது. அமெரிக்காவில் TDMA அடிப்படையில் உருவான D-AMPS தரநிலை 1992-விலும், CDMA அடிப்படையில் உருவான IS-95A தரநிலை 1995யிலும் வணிகப் பயன்பாட்டைத் துவக்கின. உலக நாடுகள் TDMA அல்லது CDMA தொழில் நுட்பங்களில் ஏதோ ஒன்றைத் தழுவின. தர நிலைகளுக்கிடையே இணக்கம் இல்லாது போனதால், உலகம் சுற்றும் பயனர்கள் தம் தேவைக்கேற்ப இரு அலைப்பட்டை அல்லது மூன்று அலைப்பட்டை மொபைல்களைப் பயன்படுத்தி வந்தனர். அதையும் தொல்லையாகக் கருதாமல் ஒரு இனிய குழப்பமாகவே கருதினர். உலக வாசிகள் அனைவரும் சொந்த அலைபேசி மூலம் எந்த நேரத்திலும் எந்த உலகளாவிய அலைபேசி அல்லது தரைவகை தொலைபேசிக்கு மொபைல் தொடர்பாடல் கொள்ளும் அளவுக்கு எங்கும் நிறைந்து மாபெரும் வளர்ச்சி கண்டதும் தரை வழித் தொலைபேசிக்கு நிகராக செல்லுலார் நெட்ஒர்க்கின் தகவல் பரிமாற்ற சேவை (data service) எழுந்ததும் இந்த தசாப்தத்தில் தான். பல் அணுகு (Multiple Access ) தொழில் நுட்பங்கள்: மொபைல் பிணையங்களில் (networks ) பரப்பு ஊடகப் (transmission medium ) பயன்பாட்டை உச்ச நிலைக்கு கொண்டு செல்லும் உத்தியே பல் அணுகுத் தொழில் நுட்பம் என்று அழைக்கப் படுகிறது. இதன் மூலம் மொபைல் பயனர்கள் ஒதுக்கீடு செய்யப் பட்ட அலைக்கற்றையை மிக அதிகப் பயனுள்ள முறையில் பகிர்கிறார்கள். ரேடியோ நிற மாலை பெருமதிப்புள்ள அரிதான இயற்கை வளம். பெரு நிலப் பரப்பில் மொபைல் அழைப்புகளின் செறிவை மேம்படுத்த முறையான பகிர்தல் அவசியம். எனவே இதன் பயன்பாட்டில் பல் அணுகு உத்திகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. தற்போதைய இலக்கமுறை செல்லுலார் மொபைல் அமைப்புகளில் இரண்டு வகையான பல் அணுகு உத்திகள் பயன் படுத்தப் பட்டு வருகின்றன. காலப் பங்கீடு பல் அணுகு (Time Division Multiple Access-TDMA )-இதில் ஒரு அலைவெண் பல மொபைல் சாதனங்களால் பகிரப் படுகிறது . அதற்காக ஒவ்வொரு ரேடியோ அலைப்பாதையும் பல நேர ஒதுக்கீடுகளாகப் (time slots) பிரிக்கப் படுகிறது. ஒவ்வொரு பயனருக்கும் வேண்டுகோள் அடிப்படையில் அலைவெண் /நேர ஒதுக்கீடு சேர்க்கை விநியோகிக்கப் படுகிறது. குறிமுறைப் பிரிவு பல் அணுகு (Code Division Multiple Access )-இது பரவல் நிறமாலை (spread spectrum) உத்தியைப் பயன்படுத்துகிறது. ஒரு பரவல் குறிமுறையைப் (PNCode–Pseudo-random Noise Code) பயன் படுத்தி அதிக பயனர்களால் அலைக்கற்றையின் பெருந்தொகுதி பகிரப் படுகிறது. வெவ்வேறு பயனர்களிடம் இருந்து வரும் எல்லா PN-code பண்பேற்றம் செய்யப்பட்டக் குறிகைகளும் முழு CDMA அலைப்பாதையின் மீது பரப்புகை செய்யப் படுவதால் இந்த தொழில் நுட்பம் மிக ஆற்றலுடையதாகக் கருதப் படுகிறது. 1991-ல் பயன்பாட்டுக்கு வந்த ஐரோப்பிய இலக்கமுறை செல்லுலார் அமைப்பான GSM, வழக்காறு சார்ந்த TDMA உத்தியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. அமெரிக்காவைப் பொருத்தவரை, புதிதாக வடிவமைக்கப் படுகின்ற செல்லுலார் இலக்கமுறை அமைப்புகள் பழைய ஒப்புமை முறை அமைப்புகளை விட 10 மடங்கு அதிக அழைப்புகள் கையாளும் திறன் கொண்டதாக இருக்கவேண்டுமென்பது CTIA (Cellular Telecommunications Industry Association) உறுதிசெய்துள்ள இலக்குகளில் ஒன்று. TDMA தொழில் நுட்ப இலக்கமுறை அமைப்புகளால் 3 மடங்கு அதிக திறன் மட்டுமே கொடுக்க முடிந்தது. 1990-ல் Qualcomm என்னும் அமெரிக்க கம்பெனி ஒப்புமை முறை அமைப்பை விட 20 மடங்கு அழைப்புகள் கையாளும் திறன் கொண்ட CDMA அடிப்படையில் உருவான செல்லுலார் அமைப்பை உருவாக்கி செயல் விளக்கம் அளித்தது. 1992-ல் CTIA மற்றும் TIA வின் வேண்டுகோளின் படி, Qualcomm தர நிலைப் படுத்துதலைத் தொடங்கியது. இவ்வாறு CDMA தொழில் நுட்ப அடிப்படையில் உருவான IS-95 தர நிலை அமைப்பு, 1995-ல் சீராய்வு மற்றும் மேம்படுதலுக்குப் பின் IS-95A என்ற மறு பதிப்பாக வெளியிடப் பட்டது.1999-ல் வெளியான IS-95B, CDMA மொபைல் போன்களில் 115kbps தரவு பரிமாற்ற வசதியை உருவாக்கியது. 2G இலக்கமுறை செல்லுலார் தர நிலைகள்(standards): 2G இலக்க முறை செல்லுலார் தர நிலைகளைப் பொருத்தவரை, ஒவ்வொரு பெரிய பொருளாதாரமும் தனித்தனி தர நிலைகளை உருவாக்கிக் கொண்டன. உலகின் பெரும்பாலான மொபைல் செல்லுலார் இலக்கமுறை 2G அமைப்புகள் கீழ்க்கண்ட தரநிலைகளில் ஒன்றைப் பயன்படுத்துகின்றன: ஐரோப்பாவின் GSM 900, GSM1800; TDMA தொழில்நுட்பம் வட அமெரிக்காவின் IS-95A CDMA சிஸ்டம் ; CDMA தொழில் நுட்பம் வட அமெரிக்காவின் IS-136(D-AMPS) சிஸ்டம் ;TDMA தொழில் நுட்பம் ஜப்பானின் PDC (Personal Digital Cellular) சிஸ்டம் ; TDMA தொழில் நுட்பம் தர நிலை உருவாக்கலின் அணுகுமுறைகளும் மைல்கற்களும் பின் வரும் பத்திகளில் விவரிக்கப் படுகின்றன. GSM தர நிலை- ஐரோப்பிய நாடுகளின் கூட்டு சாதனை: 1980களின் ஆரம்பத்தில் (அதாவது 1G ஆரம்பத்தில்) பற்பல ஐரோப்பிய மொபைல் டெலிபோன் கம்பெனிகள் NMT 450, TACS தர நிலை ஒப்புமுறை மொபைல் அமைப்புகளை நிறுவிக் கொண்டிருந்தன. அடுத்த (2G) தலைமுறையில் ஐரோப்பிய மொபைல் அமைப்புகள் அனைத்தும் இலக்கமுறை அமைப்புகளாக மாற்ற வேண்டும் என்று கொள்கை அளவில் முடிவு எடுத்து அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின. அவற்றின் விவரங்கள்: 1982-ல் CEPT (Confederation of European Post and Telecommunications), அனைத்து ஐரோப்பிய (PAN -European ) மொபைல் நுட்பத்தை வடிவமைக்க Groupe Speciale Mobile (GSM) என்ற உட்குழுவை அமைத்தது. ஐரோப்பிய நாடுகளில் அப்போது நிறுவப்பட்டிருந்த ஒப்புமை வகை மொபைல் அமைப்புகள் வெவ்வேறு அலைப் பட்டைகளில் இணக்கமற்றும் பிற குறைபாடுகளோடும் இயங்கிக் கொண்டிருந்தன. ஒப்புமை முறை அமைப்பை இலக்க முறைக்கு மாற்றுவதோடு ரேடியோ அணுக்கத் தொழில் நுட்பம் மற்றும் அலைவரிசை ஒருமைப்பாட்டைக் கொண்டுவந்து ஒரே சீரான அனைத்து ஐரோப்பிய அமைப்பை வடிவமைப்பது உட்குழுவுக்கு நியமித்த பணிகள். >1984-பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள்,GSM-க்கான இணை உருவாக்க ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. >1985-ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய ஆணையம் (EC ), GSM திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்தது . >1986- ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் GSM திட்டத்தில் கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தார்கள். 900MHz அலைப்பட்டையை GSM திட்டத்துக்கு முன்பதிவு செய்யலாம் என்ற எண்ணத்தை யூரோப்பிய ஆணையம் எடுத்துரைத்தது. EC-யின் தொலைத்தொடர்பு ஆராய்வுக் குழு அதற்கு ஒப்புதல் அளித்தது. GSM தரநிலைகள் உருவாக்கப் பணிகளுக்கு ஆதரவளிக்கவும் ஆராய்ச்சித் தரவுகளைப் பரிமாறிக் கொள்ளவும் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, U. K ஆகிய நாடுகள் நான்கு தரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. யூரோப் ஒன்றிய உறுப்பு நாடுகளில் தயாரிக்கப் பட்ட வெவ்வேறு இலக்கமுறை ரேடியோ பரப்புகைத் திட்டங்கள் மற்றும் வெவ்வேறு பேச்சு இருவழி குறிமுறை மாற்றி (codec-கோடர் டிகோடர்)கள் அவர்களாலேயே சோதனை செய்யப்பட்டு சோதனை முடிவுகள் ஒப்பீட்டு சீர் தூக்கலுக்காக (comparative evaluation ) பாரிஸ் நகரிலுள்ள CEPT-GSM மையத்துக்கு அனுப்பப் பட்டன. குழுவின் பரிந்துரைகளை பதிப்பிக்கவும் மற்றும் இற்றைப்படுத்தவும் (update) நிலையான மையக் குழு அமைக்கப் பட்டது. >1987- முன்மாதிரிகள்(prototype) மதிப்பிடப் பட்டபின் முக்கிய ரேடியோ பரப்புகை உத்திகள் தேர்வு செய்யப்பட்டன. பிப்ரவரி மாதத்தில் GSM தர நிலையின் அடிப்படைக் கூறளவுகள் (parameters) ஒப்புதல் பெற்றன. செப்டம்பரில் GSM நிறுவல் (deployment) உறுதியளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப் பட்டு 13 உறுப்பு நாடுகளின் 15 உறுப்பினர்களால் கோபென்ஹகேன்-ல் கையெழுத்திடப்பட்டது. >1988 உள்கட்டமைப்பு ஒப்பந்தப் புள்ளி கோருதலுக்குத் தேவையான GSM விரிவான விவரக் கூற்றின் (detailed specification) முதல் தொகுதி நிறைவடைந்தது. ஒரே நேரத்தில் 10 GSM நெட் ஒர்க் ஆபரேட்டர்கள் நெட்ஒர்க் ஒப்பந்த அழைப்புகளை வெளியிட்டனர். அவை அனைத்தும் பின்னர் அதே ஆண்டிலேயே முடிவு செய்யப் பட்டன. >மொபைல் சிறப்புக் குழு, GSM தர நிலையை ஒரு பன்னாட்டு ஒப்புதல் பெற்ற இலக்கமுறை செல்லுலார் தொலை பேசி தர நிலையென அறிவித்தது. >1990-ல் GSM 900 முதல் நிலை (phase1) விவரக் கூற்றுகள் (specifications) நிலைப்படுத்தப் பட்டன(frozen). > 1991-ல் GSM தரநிலையை 1800MHz அலைவெண் பட்டைக்கு இசைவாக்கும் பணிகள் துவங்கின. புதிய GSM தரநிலை DCS 1800 எனப் பெயரிடப் பட்டது. 1991-முதல் 2G GSM செல்லுலார் மொபைல் (நிலை 1) சோதனை ஓட்டம். டிசம்பர் 1991-ல் உலகின் முதல் 2G GSM செல்லுலார் மொபைல் அமைப்பு பின்லாந்தில் (Finland) வணிகப் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. >1992-ல் ஐரோப்பாவின் பெரிய மொபைல் தொலைபேசிக் கம்பெனிகள் அனைத்தும் GSM 900-ன் வணிகப் பயன்பாட்டைத் துவங்கி விட்டன. >1993-ல் முதல் 1800 MHz GSM மொபைல் அமைப்பு (DCS 1800), UK யில் வணிகப் பயன்பாட்டுக்கு வந்தது. அதே ஆண்டில் ஆஸ்திரேலியா முதல் GSM நெட்ஒர்க் பயன்பாட்டுக்கு வந்தது. இதுவே யூரோப் புக்கு வெளியே பயன்பாட்டுக்கு வந்த முதல் GSM நெட்ஒர்க். >1995-ல் fax ,SMS மற்றும் தரவு சேவைகள் வணிகப் பயன்பாடு துவங்கின. வட அமெரிக்காவின் முதல் 1900MHz GSM நெட்ஒர்க் பயன்பாட்டுக்கு வந்தது. உலகளாவிய GSM பயனர்கள் 10மில்லியனைத் தாண்டியது. >1996-ல் ப்ரீபெய்டு GSM SIM அட்டைகள் அறிமுகப் படுத்தப் பட்டன >1998-ல் உலகளாவிய மொபைல் பயனர்களின் எண்ணிக்கை 100 மில்லியனைக் கடந்தது. அமெரிக்க 2 G தரநிலைகள் உருவாக்கம் : 1988-ல் வட அமெரிக்காவின் TIA(Telecommunications Industry Association ) குழு இயற்றிய அணுகுமுறை ஆவணம் இலக்கமுறை பண்பேற்றம் (modulation) இலக்கமுறை குரல் சுருக்கம் (compression) ஆகியவற்றை இணைத்த TDMA தொழில் நுட்பத்தை பரிந்துரைத்தது. அத்துடன் CTIA(Cellular Telecommunications Industry Association ) குழு செயல்திறன் தேவைகளைப் பரிந்துரைத்தது. அவையாவன: புதிய அமைப்பு முன்னோடியான ஒப்புமை முறை AMPS அமைப்பை விட 10 மடங்கு கொள்திறன் கொண்டதாகவும், ஒப்புமை அமைப்புடன் இணக்கமாக செயல் படக் கூடியதாகவும், ஒப்புமையில் இருந்து இலக்கமுறைக்கு நிலை பெயர்வு எளிதானதாகவும் இருக்கவேண்டும். மற்றும் அலைபேசி பழுது பார்ப்பு காலம் குறைவாகவும், இரட்டைப் பயன்பாடு (analog -digital use) அலைபேசிகள் எனில் அவை குறைந்த விலை கொண்டதாகவும் இருக்கவேண்டும். மோசடிப்பயன்பாட்டிலிருந்தும் ஒட்டுக்கேட்பிலிருந்தும் பாதுகாப்பு, சிறந்த குரல் பரப்புகை ஆகியனவும் அவசியம் . பல புதிய மற்றும் மேம்பட்ட சேவைகள் தொடங்கப் பட வேண்டும். புதிய இலக்கமுறை தர நிலைகளின் (standards) நோக்கம், ஒதுக்கீடு செய்யப்பட்ட அலைக்கற்றையின் கொள்திறனை உயர்த்துவது மற்றும் பல்வேறு புதிய சேவைகளை உருவாக்கி செயல் திறனை மேம்படுத்துவது. அது மட்டுமல்லாமல் இணக்கம் இல்லாத நான்கு தர நிலைகளுடன் (AMPS, NAMPS, TDMA, CDMA ஆகியவை ) இணைந்து செயலாற்றவும் வேண்டும். மேலும் தீவிர அமைப்புக் கோளாறுகள் (System failures) நேரும் போது AMPS-ல் பின் சார்தலுக்காக (fall back), இரட்டைப் பாணி (dualmode) அலைபேசி வடிவமைக்கப் படவேண்டும். மேலே கூறப்பட்டுள்ள ஆர்வம் நிரம்பிய அணுகு முறையைக் கருத்தில் கொண்டு அமெரிக்காவில் கீழ்காணும் இரு இலக்கமுறை தர நிலைகள் உருவாயின. TIA-IS-136 : TDMA தொழில் நுட்ப அடிப்படையில் முதலில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட தரநிலை IS-54. அது TDMA அடிப்படையில் உருவான இலக்கமுறை செல்லுலார் தரநிலை, ஒப்புமை முறை அமைப்புகள் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்த சூழலில் அவற்றுடன் இணக்கமாக செயல்படவேண்டிய விதத்தில் dual mode அலைபேசி மற்றும் அமைப்புகளுக்கிடை (inter system) இயக்கம் (ரோமிங்) தேவைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப் பட்ட தர நிலை. இந்த தரநிலை செல்லுலார் மொபைல் அமைப்புகள் வட /தென்அமெரிக்காவில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள AMPS (ஒப்புமை) அமைப்புகளுடன் இணைந்து செயல்படுமாறு நடைமுறைப் படுத்தப்பட்டன. பின்னர் இது 1992-ல் இரட்டைப் பாணி (dual mode) IS-54B தரநிலையாக மேம்படுத்தப் பட்டு, D-AMPS என்ற பெயரில் 1993-ல் வட அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, பிரேசில், கென்யா, இஸ்ரேல் மற்றும் சில நாடுகளில் வணிகப் பயன்பாட்டைத் தொடங்கியது. 1994 இறுதியில், IS-54B, இலக்கமுறை கட்டுப்பாட்டுப் பாதை (DCC-Digital Control Channel) நிறுவல் மற்றும் குறுஞ்செய்தி, circuit-switched தரவு வசதிகள் ஆகியவற்றால் செழுமைப்படுத்தப் பட்டபின் TIA-IS -136 என்ற பெயரில் அழைக்கப் பட்டது. தர நிலையின் மேம்பாடுகளின் அடிப்படையில் வட அமெரிக்க TDMA மொபைல் அமைப்புகள் IS-136 என்றோ D-AMPS (Digital AMPS)என்றோ குறிப்பிடப் படுகின்றன. அமெரிக்காவின் TDMA தர நிலைகளுடன் ஆற்றல் அளவு மற்றும் விலையில் போட்டியிடும் விதமாக, CDMA தொழில் நுட்ப அடிப்படையில் IS-95 தர நிலையை 1993 யிலும், அதன் மதிப்பு கூட்டிய, சரிபார்க்கப்பட்ட பதிப்பான IS -95A தரநிலையை 1995 யிலும் Qualcomm கம்பெனி மூலம் TIA உருவாக்கிக் கொண்டது. இது வட/ தென் அமெரிக்கா மற்றும் ஜப்பான், கொரியா, சீனா ஆகிய நாடுகளில் வணிக ரீதியான பயன்பாட்டில் இருந்தது. ஜப்பானின் 2G PDC (Personal Digital செல்லுலார் ) தரநிலை : ஏப்ரல் 1991-ல் ஜப்பான் ரேடியோ அமைப்புகளின் Research and Development சென்டர், தனி நபர் இலக்கமுறை செல்லுலார் என்ற தரநிலையை சுய பயன்பாட்டுக்காகவே உருவாக்கிச் செயற்படுத்தினர். TDMA அடிப்படையில் அமைந்த அது, வட அமெரிக்காவின் D-AMPS தரநிலையுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளைக் கொண்டிருந்தது. வளி இடைமுகத்தைப் (Air Interface) பொறுத்தவரை PDC தரநிலை சில முக்கிய பண்புக் கூறுகளில் GSM -ஐ விட உயர்ந்திருந்தது என டிசைனர்கள் கருதுகிறார்கள். ஆனால் PDC அமைப்புகள் 2000க்குள் செயல் திறன் அளவில் முழு நிறைவு நிலையை (saturation) அடைந்து விடும் எனக் கருதப் பட்டதால், முன்கூட்டியே அடுத்த தலை முறை (3G) வருகையை விரைவு படுத்த ITU -விடம் வேண்டுகோள் விடுக்கப் பட்டது. GSM, CDMA அமைப்புகளின் முக்கிய தனித்துவங்கள் GSM-ல் பயனர் தகவல்கள் SIM(Subscriber Identification Module ) அட்டையில் பதிவு செய்யப் பட்டுள்ளன .அலைபேசியை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால் சிம் அட்டையை கழற்றி புது அலைபேசியில் சிம் அமரும் ஸ்லாட்டில் பொருத்திப் பயன் படுத்திக் கொள்ளலாம். சிம் பயன்பாடு மட்டுமல்லாமல், GSM அமைப்பில் சாதனங்களின் அடையாள அட்டவணை (Equipment Identity Register ) பராமரிக்கப் பட்டு, அதன் மூலம் அலைபேசிகளில் பொறிக்கப் பட்டுள்ள தனிப்பட்ட IMEI (International Mobile Equipment Identity ) சரி பார்க்கப் படுகின்றன. வகை ஒப்புதல் (type approval) பெறாத, பழுதான அல்லது திருடப்பட்ட அலைபேசிகளுக்கு சேவை மறுக்கப் படுகிறது. CDMA அமைப்பில் அலைபேசியில் சிம் அட்டை பயன்பாடு இல்லை. CDMA, அலைபேசி சார்ந்த தரநிலை. இதில் ஒவ்வொரு அலைபேசியும் போன் நம்பர் இணைந்ததாகவே வழங்கப் படுகிறது. அலைபேசியை மாற்றவேண்டுமானால் பிணைய இயக்குநர் மூலம் பழைய அலைபேசியை செயலிழக்க செய்து புதிய அலைபேசியை செயற்படுத்திக் கொள்ள வேண்டும். குறுஞ்செய்தி சேவை (Short Message Service -SMS): GSM தொழில் நுட்பம் இலக்கமுறைப் பரப்புகை மூலம் அலைபேசிக் குரல் பேச்சுகளை மேம்படுத்துவதற்காகவே கொண்டுவரப்பட்டது. எனவே பேச்சொலி தரமுயர்ந்து இருப்பதில் வியப்பேதும் இல்லை. 2G க்குள் முதன்முதலாக தொடங்கப்பட்ட தரவுச் சேவையான குறுஞ்செய்தி சேவை,வெளி சாதனங்களின் பயன்பாடு ஏதும் இல்லாமல், தனித்துவமான யோசனையால் உருவான கில்லர்(killer) பயன்பாடு. அலைபேசி அழைப்புகளின் கட்டுப்பாட்டுக் குறிகைகள்(control signal ) செல்லும் சமிக்ஞைத் தடவழிகளை (signaling paths), சமிக்ஞை செய்திகள் இல்லாத நேரங்களில் குறுஞ்செய்தி அனுப்பப் பயன்படுத்திக் கொள்வது தான் அந்த ஏற்பாடு. 1992-ல் முதல் குறுஞ்செய்தி அனுப்பப் பட்டது. தொழில் நுட்பக் காரணங்களால் குறுஞ்செய்தியும் 160 க்குள் எண்ணெழுத்துகள்(alphanumeric characters ) கொண்டதாக இருக்கவேண்டும் என விதிக்கப் பட்டது. குறுஞ்செய்தி சேவை பயனர்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றது. வட அமெரிக்க IS-136 TDMA தர நிலைக்கு மேம்படுத்தப் பட்ட மொபைல் அமைப்புகளில் 1994- இறுதியில் குறுஞ்செய்தி சேவை தொடங்கியது. மேம்படுத்தப்பட்ட IS-95A CDMA தரநிலை அமைப்புகளில் குறுஞ்செய்தி சேவை 1995-ல் தொடங்கியது. GSM நிலை 2 (phase 2) : GSM தர நிலையின் மூல வடிவம், தரவு சேவை அதிக பட்சம் 9.6 kbps வேகத்தில் இயங்குமாறு வடிவமைக்கப் பட்டிருந்தது. தரவுகள் TDMA நேர ஒதுக்கீடுகளில் (time slot) அனுப்பப் பட்டன. அதைக் கொண்டு மின்னஞ்சல் மற்றும் சில இன்டர்நெட் சேவைகளை மட்டுமே அணுக முடிந்தது. அடுத்த சில ஆண்டுகளில் திறன் உயர்த்தவும் மதிப்புக்கூட்டு சேவைகளை வழங்கவும் GSM தர நிலையில் பற்பல மேம்பாடுகள் செய்யப் பட்டன. அழைப்புக் கட்டண அறிவிப்பு, அழைப்பு விடுத்தவர் போன் நம்பர் கண்டறிதல் மற்றும் அடைத்த பயனர் குழு (CUG-Closed User Group ) ஆகியவை GSM இரண்டாம் நிலையில் அறிமுகப் படுத்தப்பட்ட அலைபேசி சேவைகள். மேலும் 900MHz அலைப்பட்டை நிறை செறிவு(saturation) அடைந்துவிட்ட GSM அமைப்புகளுக்கு 1800MHz அலைப்பட்டையில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப் பட்டது. பயனர்கள் dual-band அலைபேசிகளைப் பயன்படுத்தினார்கள். GSM நிலை 2+ (GSM Phase 2+) : புதிய தரவு சேவைகளை அறிமுகப் படுத்துவதற்காகவும், குரல் நயம் மேம்படவும் GSM நிலை 2+, அப்போதைய GSM தரநிலைக்கு 90க்கும் அதிகமான மேம்பாடுகளைப் பரிந்துரைத்தது. அவற்றில் முக்கியமானவை: தரை வழித் தொலை பேசியின் குரல் நயத்துக்கு நிகராக அலைபேசிப் பேச்சு மேம்பாடு: 13kbps இருவழிக் குறிமுறை மாற்றிகளுக்கு பதிலாக 6.5 kbps மாற்றிகளைப் பயன்படுத்துதலின் மூலம் செல்லுலார் ஆபரேட்டர்கள் தம் தேவைக்கேற்ப பேச்சு மேம்பாட்டையோ அல்லது அமைப்பின் ஆற்றல் அளவில் உயர்வையோ தெரிவு செய்து கொள்ளலாம் மேம்பட்ட தரவு சேவைகள்: GSM அமைப்பில் எளிய மென்பொருள் புதுப்பிப்புகள் மூலம் உருவாக்கக் கூடிய அதிவேக தரவு சேவைகளாக HSCSD (High Speed Circuit Switched Data) மற்றும் GPRS(General Packet Radio Service) ஆகியவை நிலை 2+ ல் முன்மொழியப் பட்டிருந்தன. 2G என்றாலே முழுக்க முழுக்க இலக்கமுறை எனக் கருதுவது இயல்பு. 1990-1999 தசாப்தத்தின் இறுதியில் அநேகமாக எல்லார் கைக்கும் அலைபேசி வந்து விட்டது. 1996-ல் தரை வழித் தொலைபேசிகளில் பயனர் அணுக்க (dialup ) இணைய சேவையின் வணிகப் பயன்பாட்டை இணையச் சேவையாளர்கள்(Internet Service Providers) துவங்கினர். 2004-ல் தொலை பேசி இணைப்பில் ADSL இணக்கியைப் (modem) பொருத்தி இணையத்துடன் அதிவேக(2 Mbps) அகலப் பட்டை (Broadband) அணுக்க வசதியும் ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. ஆனால் முழுதும் இலக்கமுறை குறிகைகளால் இயங்கும் GSM அமைப்பில் அதிக பட்சம் 9.6 kbps வேகத்தில்தான் தரவுகளை அனுப்ப முடிந்தது. பயனர்கள் அலைபேசியில் Dial-up வேகத்திலாவது இன்டர்நெட் அணுக்கம் தேவையெனக் கருதினர். GSM நிலை 2+-ல் மேற்கொள்ளப்பட்ட படிப்படியான மேம்பாடுகள், தரவு பரப்புகை வேகத்தை கிட்டத்தட்ட 3G யைத் தொடும் அளவுக்கு கொண்டு சென்றன. அவையாவன: . HSCSD (High Speed Circuit Switched Data): அதிவேக circuit-Switched தரவு சேவை என்ற GSM நிலை 2+ மேம்பாட்டில், செயல் திறன் மிக்க குறியிடல் உத்திகளைப் பயன்படுத்தி ஒரு நேர ஒதுக்கீட்டில் 14.4 kbps வேக தரவு மாற்றல் செய்யவும், நான்கு 14.4 kbps அலைப்பாதைகளை ஒருங்கிணைத்து 57.6 kbps வேக தரவு மாற்றல் செய்யவும் ஏற்பாடு செய்யப் பட்டது. இது தரை வழித் தொலைபேசியின் dial-up க்கு நிகரானது. 2.5G GSM phase2+ல் செயல் படுத்தப் பட்ட மேம்பாடு இது. இதில் circuit-switched ஆடியோ தளத்துடன் packet-switched தளமும் இணைந்து செயல்படுவதால் இது 2G யின் நீட்சியாக, அதாவது 2G க்கும் 3G க்கும் இடைப்பட்ட மொபைல் சேவையாகக் கருதப்பட்டு 2.5 G எனப் பெயரிடப் பட்டது. நடைமுறையில் உள்ள GSM உள்கட்டமைப்பின் மேலடுக்கில் packet மென்பொருள் கட்டுமானம் அமைந்திருப்பதால் இது GPRS (General Packet Radio Service) எனப்படுகிறது. GSM TDMA கட்டமைப்பில் 1 முதல் 8 நேர ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தி முறையே 14.4 kbps முதல் 115.2 kbps வரை தரவு பரப்புகை வேகங்களில் GPRS செயல் படுகிறது. அலைக்கற்றைப் பயன்பாட்டைப் பொருத்தவரை HSCSD யை விட GPRS அதிக திறனுள்ள தரவு சேவை. இதுவே 3G படிமலர்ச்சிக்கான சரியான பாதையும் கூட. 2.75G EDGE பிணையங்களுக்கு (Enhanced Data Rate ffor GSM Evolution), GPRS பிணையங்களே வழி வகுத்தன. இது 3G ரேடியோ தொழில் நுட்பத்துக்கு சற்று முந்திய பதிப்பு. EGPRS என்றும் 2.75G என்ற பெயரிலும் அறியப் படுகிறது. EDGE தொழில் நுட்பம் முதன் முதலாக 2003-ல் அமெரிக்க GSM பிணையங்களில் AT&T டெலிபோன் கம்பெனியால் பயன்படுத்தப் பட்டது. EDGE தொழில் நுட்பம் மூலமாக தரவு வேகங்கள் 384 kbps வரை எளிதில் எட்டிவிட முடியும். இந்த தரவு வேக அதிகரிப்பு GPRS- ல் கிடைத்ததை விட கணிசமானதாக (கிட்டத்தட்ட 3G ஆரம்ப அளவாக) இருந்ததால் 2.9G எனவும் சொல்லப் பட்டது. அத்துடன் EDGE பிணையம் நடைமுறையில் உள்ள GSM விவரக் கூற்றுகளின் வரையறைக்குள்ளேயே அறிமுகமாகி இருந்ததால், பின்னோக்கிய இணக்கமும் (backward compatibility) கொண்டிருந்தது. CDMA அமைப்புகளில் தரவு வேகம் CDMA தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் இரு மொபைல் தர நிலைகளான IS-95A &IS-95B முறையே 14.4 kbps & 115 kbps ஆகிய மிதமான தரவு வேகங்களைக் கொடுத்தன. 2.5G ,2.75G, 2.9G ஆகிய படிநிலைகள் , CDMA -வின் படிமலர்ச்சிப் (evolutionary ) பாதையில் இடம் பெறவில்லை. முடிவுரை: கடந்த நூறு ஆண்டுகளில், பயனரின் உற்பத்தித் திறன் பெருக்கம், பயனர் அபிமானம், அதிவேக அற்புத படிமலர்ச்சி (evolution ) ஆகிய காரணிகளால் உயர்வாக வருணிக்கப் படும் மொபைல் தொடர்பாடல் தொழில் நுட்பத்துக்கு நிகரான வளர்ச்சி கண்ட பிற தொழில் நுட்பங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். 2G, குறிப்பாக GSM, மக்களின் பேராதரவைப் பெற்றது. 2001-ல் முதல் 3G அமைப்பு பயன்பாட்டுக்கு வந்து விட்ட பின்னரும் கூட, 2G இணைப்புகள் பெருகி வந்தன. 2005 யில் இணைப்புகள் 2 பில்லியனைக் கடந்தன. 1946-ல் ஆரம்பித்த மொபைல் போன் இயக்கத்தில் பயனர் கவனம் மொபைல் தரவு சேவை பக்கம் திரும்பியது அண்மைய 10-15 ஆண்டுகளுக்குள் தான். 2G-க்கு அடுத்து வந்த தலைமுறைகளிலும் பயனர்களின் நாட்டம் Mbps, Gbps என்ற அதிவேக தரவு சேவையாகத் தான் இருந்து வருகிறது. இன்றும் 2G மொபைல் அமைப்புகள் சாதாரணர்களின் அடிப்படை மொபைல் தொடர்பாடல் தேவைகளை நிறைவு செய்து வருவதால் இந்தியாவில் இன்னும் பல ஆண்டுகள் நிலைத்திருக்கும் என எதிர்பார்க்கலாம். தொழில் நுட்பச் சொற்கள் : Encryption:தகவலை ஒரு ரகசிய குறிமுறையில் (code) மாற்றி அதன் மூலம் தகவலின் உண்மையான அர்த்தம் விளங்காமல் செய்வது. Authentication :பயனரின் அடையாளம் கண்டறியும் செயல் முறை Integrated circuit: தோசைத் துண்டு அளவில் சிலிகான் என்னும் அலோகப் பொருளால் உருவான பல்லாயிரக் கணக்கான டிரான்சிஸ்டர், ரெசிஸ்டர் மற்றும் கேபாசிட்டர்களை உள்ளடக்கி அம்பிலிஃபயிர், டைமர், மைக்ரோப்ரோசசர் போன்ற மின்னணுவியல் சுற்றுகளாக செயல்பட வல்ல ஒரு ஒருங்கிணை சுற்று சில்லு. Microprocessor: டிஜிட்டல் கம்ப்யூட்டரின் மையச் செயலகமாக செயல்படத் தேவையான எண்கணிதம், தர்க்கம், கட்டுப்பாடு செயலாற்றிகளின் மின்சுற்றுக் கூட்டமைப்பாக இருக்கும் ஒரு வகை குட்டி மின்னணுவியல் சாதனம். 1MHz: 1Mega cycles per second -1 வினாடியில் ஒரு மில்லியன் சுற்றுகள் Kbps: kilo bits per second- 1 விநாடியில் ஆயிரம் இரும இலக்கம் (bit) என்ற வேக தரவு மாற்றம். இரும இலக்கங்கள் = 0&1 Mbps: Mega bits per second Gbps: Giga bits per sec (Giga=10^9) Codec : coder-decoder-ன் சுருக்கம். குறியாக்கி-குறிஅவிழ்ப்பி என்று பொருள்படும். இது ஒரு வினைச்சரம். ஆடியோ அல்லது வீடியோ போன்ற வடிவங்களில் உள்ள தரவுகளைத் தொடர் துடிப்புகளாக இலக்க வடிவத்தில் தகவலாகக் குறியாக்கம் செய்வதற்கும் குறியாக்கம் செய்யப்பட்ட தரவுகளை குறிவிலக்கம் செய்வதற்கும் இந்த வினைச்சரம் பயன்படுத்தப் படுகிறது. Circuit switching: பிணையங்களின் முனைகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்திய பின்னர் தரவுகளை அனுப்புதல் Packet Switching : பிணையங்களில் தரவுகள் பொதிகளாக்கப் பட்ட பின்னரே அனுப்ப ஆரம்பித்தல். தொடர்பு ஏற்படுத்தாமல் தரவு மாற்றல் வழி. Digital Signal Processing (DSP😞 மெய்யுலகின் ஒப்புமை குறிகைகளை (எ. கா : பேச்சொலி) இலக்கமுறைக்கு மாற்றி பகுப்பாய்வது. குறிகைகள் நம்பர்களாக சுருங்கிவிட்டபின் அவற்றின் கூறுகளை பிரித்து வைப்பதும் திறமையாகக் கையாள்வதும் எளிதாகி விடும். டிஜிட்டல் ப்ரோசசிங் சிப் ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக சிறப்பு கவனம் செலுத்தி தயாரிக்கப் படும் நுண் செயலி சிப். இது இலக்க முறை தொலை தொடர்புக் கூறுகள் உருவாக்கம், வடிவமைப்பு தயாரிப்பு மற்றும் தொழில் நுட்ப உதவிகள் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கும் ஒரு அமெரிக்க . CDMA2000, TD-SCDMA மற்றும் WCDMA ஆகிய மொபைல் தொடர்பாடல் தர நிலைகள் ஆகியவை இந்த கம்பெனியின் அறிவுசார் சொத்துக்கள். அதற்கான காப்புரிமம் பெற்றுள்ளது. *** https://solvanam.com/2021/04/10/மொபைல்-தொடர்பாடல்-வரலாற-2/
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.