Jump to content

Leaderboard

  1. valavan

    valavan

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      1258


  2. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      29175


  3. பெருமாள்

    பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      14446


  4. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      76771


Popular Content

Showing content with the highest reputation on 02/22/22 in all areas

  1. ஒரு பக்கம் யாழ்நகரம், மறுபக்கம் மட்டு நகரம்... வாள் கொண்டு போர் செய்து வடக்கு கிழக்கு இணைந்தபடி வெல்லபார்த்தோம் முடியவில்ல. போகட்டும் முடிந்தவரை யாழ்கொண்டாவது இணைத்து பார்ப்போமே அதில் தவறென்ன? தர்மத்துக்கு புறம்பாக நாம் ஏதும் நடந்ததில்லை, வன்முறை எங்கள் பொழுது போக்கும் இல்லை. பொழுது போக்காய் எம்மை கொல்ல பார்த்தவர்களை எதிர்கொள்ள வேறு வழியின்றி வன்முறையை தேர்ந்தெடுக்க வைக்கப்பட்ட இனம் நாம். நாங்கள் இனி ஒரு ஆயுத போராட்டத்தை செய்ய போவதில்லை, ஆயுத போராட்டம் என்றால் பயம் என்று ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் நடமாடிய எம் மண்ணின் மாவீரர்கள் பெயரால் ஒன்றும் இதை அறிக்கையாய் விடவில்லை. அதற்கு உரிமையும் இல்லை. ஆண்டாண்டு காலம் போராடியும், ஆயிரக்கணக்கில் அல்ல ஆதரவு வழங்கிய எம் மக்களின் இறப்பும் சேர்த்து லட்சக்கணக்கில் உயிரிழப்பை சந்தித்தும் எதிரிகளால் விழுத்த முடியா ஒரு போராட்டம் எம்மவர்களால் விழுத்த பட்டதே. இனியும் எதுக்கு ஒரு இனம் தனது இனத்துக்காக ரத்தம் சிந்தி போராட வேண்டும். ஒரு அரச இயந்திரத்துக்கு எதிராய் இறுக்கமான ஒழுக்கம், நேர்த்தி,திட்டமிடல், சுயநலம் இன்மை,யுக்தியுடன் போராடுவதெல்லாம் போறவன் வருபவன் செய்ய கூடிய செயல் அல்ல. அது கோடிகளில் ஈழதமிழினம் இல்லாமல் போனாலும் கோடிகளில் ஒருவனால் மட்டுமே முடியும் செயல். அப்படி ஒருவர் எம்மினத்தின் கிரீடமாயிருந்தார், இப்போது அவர் பற்றிய செய்திகள் இல்லை, செய்திகள் இல்லாமல் போனால் என்ன, அவர் இருந்தபோதும் அவர்பற்றி ரோஷம் கொப்பளிக்க கொப்பளிக்க பேசி ஆனந்த பட்டோம், அவர் இல்லாமல் போன ஒரு நிலையிலும் அவர்மேல் உள்ள அதே காதலுடன் இருக்கிறோம். ஒருத்தர் இருக்கும்போது பாசம் கொட்டுவதற்கு பின்னால் பல நூறு சுயநல காரணங்கள் இருக்ககூடும். அவர் இல்லையென்று செய்தி வந்த பின்னரும்... உன்னை தவிர எம் இனத்துக்கு ஒருவர் எப்போதும் இல்லையே மானஸ்தனே என்று நினைக்கும்போது மனசு அழுகின்றது, அதற்கு இனம்மீதான பாசம் என்ற ஒரேயொரு காரணம் மட்டுமே இருக்கும். கண்ணுக்கு தெரிந்தாலா கடவுள் இருக்கிறார் என்று நம்புவோம்? காலின் நகத்தை கல்லொன்று மோதி பெயர்த்து விட்டால் கடவுளை நம்பாதவன்கூட அட கடவுளே என்று அவர் பெயர் சொல்லி கதறுவான், எம் நிலை இப்போ இதுதான். தாய் தந்தை இல்லையென்று இன்று ஆகிவிட்ட இந்த இனத்தின் கொடுமை நிலையை பார்க்கும்போது உனக்கு முன்னே நாம் போய் சேர்ந்திருக்ககூடாதா என்ற வலி பல தமிழர் மனசுக்குள் குமுறுவதுண்டு. நாங்கள் அரசியலாலும் ஆயுதத்தினாலும் போராட்ட வடிவங்கள் தொடுத்து தோற்றுபோன இனம், அடுத்த எம் தலைமுறை எம்மின துயரத்தை பிறருக்கு எடுத்து செல்லுமோ இல்லையோ, அடுத்த சந்ததிக்கும் அதுக்கு அடுத்த சந்ததிக்கும் யாழின் பெயரால் துயரங்களை எடுத்து சொல்வோம், கடத்தி போவோம் எம் இளையோர்க்கும் அவர்கள் குழந்தைகளுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் எம்மினத்தை வாழவைக்க பலர் சின்ன சின்னதாய் சிறு துண்டுகளாய் சிதறி செத்துகூட பார்த்தார்கள் முடியவில்லை என்ற கசப்பு வரலாற்றை அவர்கள் காதினில் போட்டு வைப்போம். நாங்கள் புலம் பெயர்ந்தவர்கள்தான் ஆனால் புலத்தை மறந்தவர்களில்லை. வெளிநாட்டு சுகத்தில் மயங்கி இருப்பவர்கள் தமிழன் என்றால் தாயகத்தின் அவலநிலை கண்டு தினமும் அவன் அழமாட்டான். இரத்தமும் கண்ணீரும் வேர்வையும் கலந்து போராடி தோற்று போனாலும், போராடிய வலிகளை பிறருக்கு கடத்தும் யாழ் இணையமே, நாளைக்கே யாழ் இணையம் ஏதோ ஒரு காரணத்தால் இயங்க முடியாது போனாலும், மான தமிழர் போராட்டத்திற்கு எவருக்கும் மண்டியிடாமலே உன் பங்கை வழங்கினாய் என்பதில் என்றைக்கும் உமக்கும் உம்மோடு தோள் நின்றவர்களுக்கும் உறுதியாய் ஒரு இன திமிர் இருக்கும். வாழிய என்று நாம் உமக்கு சொல்லவில்லை, வாழிய என்று நீர் எமக்கு சொல்லவேண்டும், நாம் வாழதானே உன்னால் முடிந்த ஒரு பங்களிப்பு செய்தாய். யாழ் இணையமே வாழ்த்துங்கள் எங்களை.
    8 points
  2. 🙏 சந்தையில் கிட்டும் கணிப்பொறியின் இதயமான முத்து சிப்பி(Micro Processor) பெரும்பாலும் அமெரிக்காவிலுள்ள இன்டெல்(Intel) என்ற நிறுவனத்தால் வடிவமைத்து உற்பத்தி செய்து, இன்றுவரை பல வகை திறன் கொண்ட சிப்பிகள் (ப்ராசசர்) சந்தைப்படுத்தபடுகின்றன. சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் முதல் இவற்றை தொழில்வாரியாக பயன்படுத்த ஆரம்பித்து இன்றுவரை பல முத்து சிப்பிகளை கண்டுள்ளேன். அதில் முக்கியமானது இன்டெல் பென்டியம்(Intel Pentium) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட ப்ராசசர் மிக முதன்மையாக அதிக திறன் கொண்டது. அந்த வகை சிப்பியைக் கொண்டு நான் வடிமைத்த கணிப்பொறியை பற்றிய கட்டுரையை உங்களுக்கு சிறிய தொகுப்பாக இங்கே எழுதலாமென உள்ளேன்..🌹
    2 points
  3. எடிட்டர் தயவுசெய்து மேடைக்கு வரவும்
    2 points
  4. இதுதான் தாயுள்ளம் தங்கையே! சிறித்தம்பியின் கால் கவனம் என்று நீங்கள் கவலை கொள்வது தெரிகிறது. இதுதான் சமயம் என்று சாமியார் அவரைச் சண்டைக்கு இழுப்பதும் தெரிகிறது.😲 குசும்புகளுக்கு அப்பால், வைத்தியர்கள் தரும் சிகிச்சையை விடவும், யாழ்கழ உறவுகள் காட்டும் அன்புதான் தன்னை வெகு சீக்கிரமாகக் குணப்படுத்தி வருவதாகச் சிறித்தம்பி கூறினார்.🤗
    2 points
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ் சிறி ஐயா!🎊🎂🎉
    2 points
  6. வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது. கள்ளச்சாவி போட்டாவது......! வீதியைப் பெரிதாக்க வேலியை வெட்டுகிறார்கள் வேலிக்கு மேலால் வாசமில்லா வண்ணம் கொண்ட போகன்வில்லா மனமில்லை ஆனால் மயக்கும் அழகு தரையில் விழுந்த கொடியில் சிலிர்த்து நிற்கும் பெரிய முட்கள் பாக்கியமும் பர்வதமும் வேடிக்கை பார்க்க, வருகின்றாள் செல்லாத்தை கொடிய முட்கள் விலத்தி என்ன செல்லாத்தை எங்க இங்கால ஒண்ணுமில்லை சும்மா வந்தேன் உன்னிடம் ஒன்று கேட்பேன் கோவிக்காமல் உத்தரம் கூறு வாசமில்லா மலர் கொய்த வனிதாவும் வியப்புடன் திரும்பிப் பார்க்கிறாள் சொல்லனை என்ன விசயம் நான் கோவிக்கேல்லை, நீ சொல்லு என்ர மகன் வசந்தனுக்கு - உன்ர பிள்ளை வனிதாவைக் கேட்கிறன் நீ சம்மதித்தால் நன்றியோடிருப்பேன் பாக்கியம் திடுக்கிட்டு யோசிக்க பர்வதம் குறுக்கிட்டு சொல்கிறாள் ஊரெல்லாம் திருடுகிறான் உன் மகன் உதவாக்கரையென்று உலகுக்கே தெரியும் கள்ளச்சாவி போடும் நல்ல குடிகாரன் அவனுக்காகப் பெண்கேட்டு இங்கு என்ன துணிவில் வந்தாயம்மா பர்வதத்தைத் தடுத்த பாக்கியமும் பெண் இருந்தால் கேட்பது வழமை அவளையும் ஒருக்கால் கேட்பமென்று என்ன பிள்ளை வனிதா, மாமி சொன்னதெல்லாம் கேட்டனியெல்லோ உனக்கிது சம்மதமோ தயங்காமல் சொல்லு செல்லாத்தை மாமியும் காத்திருக்கிறா எனக்கும் முப்பத்தைஞ்சாச்சு அவவுக்கும் தெரியும் இதுதான் சமயமென்று அம்மாவும் தவிக்குது இனியொரு வரனும் வராமலும் போகலாம் நிலத்தை காலால் சுரண்டி "ம்" என்று சொல்லத்தான் ஆசை, ஆனாலும் வெட்கம் கெட்ட வெட்கமும் என்னை விட்டுப் போட்டுது உனக்கு விருப்பம் எண்டால் எனக்கும் சம்மதம் திருடன் என்றாலும் இருக்கட்டுமே நான் திருத்தப் பார்ப்பேன் குடிகாரன் ஆனாலும் என்ன அவரைக் குறைக்கச் சொல்லுவேன் பெண்பித்தன் ஆனாலும் பார்க்கலாம் என் முந்தானையில் முடிஞ்சுடுவேன் வருவது வரட்டும் வாழ்ந்து பாப்போம் அம்மா தாயே கருமாரி திரிசூலி ஆட்டுக்கும் மாட்டுக்கும் அமாவாசை பறுவமுண்டு அதிஸ்டக் கட்டை எனக்கு அது வந்து போவதுண்டு கருத்தக்கிடா வெட்டி கருத்தாய் பொங்கலிடுவேன் கன்னி கழியவேண்டும் கவலையெல்லாம் தீரவேண்டும் கன்னியாய் இருந்து வீணே என் காலம் கழியாமல் கள்ளத் திறப்பு போட்டாவது கருவறை திறக்கட்டும்.....! யாழ் 24 அகவைக்காக ஆக்கம் சுவி .....!
    1 point
  7. வார இறுதிநாட்களில் அநேகமாக இங்கிலிசு பிரேக் பாஸ்ட் சாப்பிடுவது அடியேனின் வழமை.அதற்காக நீங்கள் நினைக்க கூடாது அடியேன் ஆங்கிலபட்டதாரி என்று ..முட்டை பொறியள்,சொசெஜ்,பேக்கன், பாணை டொஸ்ட் பண்ணி தக்காளி சோசுடன் சாப்பிடுவது வழமை.. முட்டையையும்,சொசெஜ்யையும் தாயார் பண்ணி கோப்பையில் வைத்து விட்டு பேக்கனை போட்டேன் சட்டி நல்லா சூடா இருந்திருக்க வேணும் அத்துடன் சட்டியில் எண்ணையும் இருக்கவில்லை ,புகையும் கறுகிய மணம் வீட்டினுள் பரவ, தொலைகாட்சியில் பக்தி சணலில் பக்திபரவசத்துடன் எதோ பார்த்து கொண்டிருந்த சம்சாரம் "என்னப்பா செய்யிறீங்கள் கறுகி மணக்குது" "பேக்கன் பொரிச்சனான் அது கொஞ்சம் எரிஞ்சு போய்விட்டது ,உமக்கும் பேக்கன் பொரிக்கவா" "ஐயோ கடவுளே இன்றைக்கு நல்லூர் தேர் , ஆகஸ்ட் மாதமென்றால் நல்லூர் கலகலப்பாக இருந்த காலம் அது.நல்லூரானுக்கு கொடியேற்றிவிட்டார்கள் என்றால் யாழ்ப்பாணமே கலகலப்பாகி விடும் .ஊர்களில் உள்ள சைக்கிள்களில் முக்கால்வாசி இரவுபகலாக நல்லூரானின்ட பக்த போடிகளை தாங்கியபடி ஓடிக்கொண்டே இருக்கும்.இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகளும் கிழங்கு அடுக்கிய கணக்கில் சனத்தை ஏற்றிகொண்டு ஓடித்திரியும்.எங்களை போன்ற பெடியள் பக்தி பரவசத்தில் வேஸ்டியுடன் முருகனை காணும் ஆவலுடன் சைக்கிளில் செல்வோம்.கோவிலுக்கு செல்வது என்றால் வீட்டில் இலகுவில் அனுமதி கிடைத்து விடும், அப்பாவும் கவனமாக பாவிக்கும் தனது சைக்கிளையும் தந்து விடுவார். கோவிலுக்கு அருகாமையில் செல்ல செல்ல நடந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிடும் .முருகனின் தரிசனத்திற்கு வெளிக்கிட்ட எங்களுக்கு வீதிகளில் தரிசனம் கிடைக்க தொடங்கிவிடும் .சைக்கிள் தரிப்பிடத்திற்க்கு ஒரு ரூபா கொடுக்க வேண்டும் அது பெரிய காசு...5 ரூபா கொண்டு போவது என்பது பெரிய விடயம். சைக்கிளை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு தரிசனத்திற்கு உள்ளே சென்று விடுவோம்.முருகனின் தரிசனத்தை விட எங்களுக்கு விரும்பிய அழகு தரிசனத்தை தேடி அலைந்து திரிவோம்.அநேகமாக விரக்தியடைந்து வெளியே வருவோம் .காரணம் முருகனும் எங்களை கண்டு கொள்வதில்லை ..நாங்கள் தரிசனம் தேடி சென்ற பெண்களும் கண்டு கொள்வதில்லை.கடலை ஆச்சி மட்டும் எங்களை தனது வருமானத்திற்காக வாங்கோ வாங்கோ என கூவி அழைப்பார் .சைக்கிள் பார்க் காசை தவிர மிகுதி பணத்திற்கு கச்சான் சோளப்பொறியல் மற்றும் குச்சி ஐஸ்கிறீம் வாங்கி சாப்பிட்டபடியே வீடு சென்று விடுவோம். நாங்கள் கடலை வாங்க வெளி வீதி வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது கொஞ்சம் எஙகளைவிட அலங்காரம் அதிகம் போட்ட ஆண்களும் பெண்களும் நடுத்தர வயது த‌ம்பதியினர் வீதிகளில் வலம் வந்து கொண்டிருப்பார்கள் . மச்சான் ஆட்களை தெரியுதே என நண்பர்கள் கேட்பார்கள் தெரியவில்லை மச்சான் என்று சொன்னால் ,என்னடா மச்சான் உவையள் கொழும்பில் வேலை செய்கின்ற கோஸ்டிகள் திருவிழாவுக்கு வந்திருக்கினம். பார்க்க தெரியுது பசையுள்ள கோஸ்டிகள் என்று என‌ சொல்லி விட்டு "நாங்களும் இப்படி வருவோமல்ல" என அடுத்த பில்டப்பை போடுவோம். இந்த வழமை நாங்கள் தொழில் மற்றும் உயர்கல்வி தேடி செல்லும் வரை தொடர்ந்தது. ஒரு நாள்திருவிழா முடிந்து வீடு வந்த பொழுது அம்மா சொன்னார் "தம்பி உனக்கு தபால் வந்திருக்கு எதோ வேலைக்கு நேர்முக பரீட்சைக்கு கூப்பிடிருக்கிறாங்கள் போல தெரியுது, நீ ஒவ்வோரு நாளும் போய் கும்பிட்ட அந்த நல்லூரான் கைவிட மாட்டான்" "ஒம் அம்மா" அம்மாவுக்கு தெரியுமோ நாங்கள் என்னத்துக்கு முருகனிட்ட போனோம் என்று, இல்லை நான் தான் சொல்ல முடியுமோ விசயத்தை... இரண்டு நாளில் கொழும்புக்கு செல்ல வேண்டியிருந்தது எனது மாமா கொழும்பில் வாழ்ந்த காரணத்தால் பெரிய பிரச்சனைகள் இருக்கவில்லை .இரவு நேர (மெயில்) தபால் வண்டியில் செல்வதற்கு நண்பர்கள் கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு சைக்கிளில் அழைத்து சென்றார்கள். நல்லூரானின் தேர் திருவிழா முடிந்த கையுடன் கொழும்புக்கு பயணமானேன்.கோண்டாவில் புயையிரத நிலையத்தில் பிலாப்பழசீமேந்து பைகளுடனும் முருங்கைகாய் கட்டுகளுடனும் சனம் முண்டியடித்து கொண்டு நின்றது .அப்ப தான் புரிந்தது கொழும்பில் பணிபுரியும் இளைஞர்கள் ,குடுமபத்தினர் நல்லூரானை தரிசித்து விட்டு மீண்டும் கொழும்புக்கு செல்வதறகு நிற்கின்ரனர் என்பது.அதை பார்த்தவுடன் எனக்கு வேலை கிடைத்தால் நானும் இப்படி வந்து போகலாம என்று நம்ம மனசு கற்பனையில் மிதக்க தொடங்கி விட்டது பல கற்பனைகளில் அதுவும் கடந்து போனது கொழும்பில் முருகன் எனக்கு வேலை தரவில்லை ..ஆனால் ஒவ்வொரு வருட உறசவத்திற்க்கும் தன‌து பக்தர்களை தாங்கி வரும் வேலைய யாழ்தேவிக்கு கொடுத்துகொண்டிருந்தான். நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மக்கள் வெளியேற யாழ்தேவி,மெயில் வண்டி போகுவரத்து துண்டிக்கப்பட கொழும்பு பக்தர்கள் வருவது தடைப்பட, யாழ் பக்தர்களை எம்பெருமான் அலங்கார கந்தன் வெளிக்கிடுங்கோடா வெளிநாட்டுக்கு என ஆணையிட அந்த ஆணையை நிறைவேற்ற யாழ்தேவியை பிடித்து கொழும்பு வந்து சேர்ந்தவர்களில் நானும் ஒருத்தன், வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் இருக்கும் பொழுது கதிர்காமம் போகும் வாய்ப்பு ஏற்பட்டது.பூசாரி பூட்டிய திரைக்கு பின்னால் வாயையும் மூக்கையும் கட்டி பூஜை செய்து விட்டு எங்களுக்கு தீபத்தை தொட்டு வழிபட நீட்டிக்கொண்டு வந்தார். "என்ன மச்சான் ஐயர் பூணுலை மறைக்க , சேர்ட்டும் அணிந்து கொண்டு வாரார் " "இவர் ஐயர் இல்லை இவரை கபராலை என்று சொல்லுறவையள், பரம்பரை பரம்பரையாக அவையள் இப்படித்தான் செய்யிறவையள் " " கேள்வி பட்டனான் இப்ப தான் பார்க்கிறேன்" " ஏன் செல்வசந்நிதியிலும் இப்படித்தானே" " அங்க நான் போகவில்லை" "சனம் சன்னதியிலிருந்து இங்க நடந்து வாரவர்கள்" "முருகா வெளிநாட்டுக்கு போக உதவி செய் என்று தமிழிலும் ,தெரிந்த சிங்களத்திலயும் விண்ணப்பத்தை போட்டு விட்டு வந்தேன்" முருகா நீ தமிழனா சிங்களவனா என்ற கேள்வியை எழுப்பியவாறு பஸில் கொழும்பு திரும்பிகொண்டிருந்தோம் . "டேய் வெளிநாட்டுக்கு போகவேணும் என்று விண்ணப்பம் போடுறாய் எந்த நாட்டுக்கு என்று கேட்டியா? ஒழுங்கா அப்பிளிகேஷன் போடத் தெரியாது இதில நான் சிங்களவனா தமிழனா என்ற கேள்வி..பே...." தெகிவள பயின்டா.... சத்தம் கேட்டு திடுகெட்டு எழுந்து பஸிலிருந்து இறங்கினேன். வெளிநாட்டிலயே வேலை செய்யும் வாய்ப்புக்கள் கிடைத்தது. தமிழர்களில் பலர் வெளிநாடுகளில் தங்கள் அரைவாசிகாலத்தை கழிகின்றனர் அந்த வகையில் எனக்கும் அந்த சந்தர்ப்பம் கிடைத்து. சிங்கள முருகன் கொடுத்ததோ தமிழ் முருகன் கொடுத்தானோ என்ற பிரச்சனை இல்லை காரணம் நமக்கு இப்ப‌ அவுஸ் முருகன் இருக்கிறான் . நல்லூரானின்ட தேர் காலத்தில் மச்சம் சாப்பிட்டு விட்டேன் என்ற பயத்தில் அடுத்த நாள் காலையில் குளித்து வெளிக்கிட்டு நம்ம சிட்னி முருகனிட்ட போனேன் . கோவிலில் கந்தர் நின்றார்.மூக்கு வாய்க்கு ஒழுங்காக கச்சை கட்டியிருக்கினமோ என்று பார்த்து ஆட்களை எண்ணி உள்ளே அனுப்பி கொண்டிருந்தார். என்னை கண்டவுடன். " இப்ப நல்லூரானிட்ட நின்று இருக்க வேணும் இந்த கொரானா கோதாரி எல்லாத்தையும் கெடுத்து விட்டது" "அதுதான் இன்றைக்கு நானும் கோவிலுக்கு வந்தனான்" " என்ன நீ மச்சம் சாப்பிட்டு போட்டியாம் நல்லுரானின்ட திருவிழா காலத்தில்" முருகன் மறந்தாலும் இந்த சுற்றியிருக்கிற சனம் விடாது போட்டு கொடுத்துவிடுவாங்கள் முருகனிட்ட என்று புறுபுறுத்த வாறு "மறந்து போய் சாப்பிட்டு விட்டேன் ,எஸ்கியூஸ் மீ மூருகா" என்றேன்...... கண்ணை திறந்தேன் ஐயர் வாயை கட்டியிருநந்தார் மாஸ்க் என்ற போர்வையில் தீபத்தை நீட்டினார் தொட்டு கும்பிட்டுவிட்டு முருகா தொண்டைமானாறு சன்னிதியிலிருந்து சிட்னி வரை மெளன‌மாக இருந்து உன்னுள் என்னை தேடு என்று சொல்லுறாய் போல.....என்று நானும் மெளனமாக வீடு திரும்பினேன்.
    1 point
  8. மிக மிக உண்மையானது சில நேரம்களில் மோகன் அண்ணாவின் உழைப்பு வார்த்தைகளில் சொல்ல முடியாது. போர் முடிந்ததும் தமிழ் நாதம் இப்ப கனபேருக்கு தெரியாது அந்த இணையம் மூலமே யாழ் எனக்கு அறிமுகம் ஆரம்பத்தில் பார்வையாளராக இருந்தேன் இந்த பெருமாள் புனைபெயர் மோகண்ணாவுக்கு மட்டும் தெரிந்த ஒன்று என்று நினைக்கிறன் போர் முடிய பல தமிழ்தேசிய இணையங்கள் இலங்கை உளவு பிரிவுகளால் மண்டை கழுவப்பட்டு இழுத்து மூடப்பட்டன அதில் தமிழ்நாதமும் ஒன்று சம்பந்தப்பட்ட நபர் கனடாவில் இலங்கை புலனாய்வு பிரிவினரால் இயக்கப்படும் குடும்பத்தில் ஒரு மாதத்துக்கு மேல் தங்கி இருந்தார் போன் தொடர்பு அற்று யாழும் இப்படி ஆகுமோ என்று தினமும் இங்கு வந்தேன் ஆனால் நான் நினைத்ததுக்கு மாறாக மோகன் அண்ணா மண்டை கயிறாக இருந்தார் மண்டை கயிறு பேச்சு வழக்கு உண்டு பலகோடி நன்றிகள் மோகன் அண்ணாவுக்கும் இயக்கம் மட்டுக்களுக்கும் .
    1 point
  9. தமிழ்சிறி அவர்களே! நலமேகி நகை சூழ இன்னும் பல்லாண்டு இனிதாக வாழிய வாழிய வாழியவே!
    1 point
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி
    1 point
  11. எப்பிடியெல்லாம் யோசிக்கிறங்கள் பாருங்கோ....😂
    1 point
  12. siya (68 years old) தமிழ் சிறி (14 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி & சிவா .....! 💐
    1 point
  13. பேரை சொல்லலாமா கணவன் பேரை சொல்லலாமா.......! 😍
    1 point
  14. கணிப்பொறியின் முக்கிய பகுதி இதயமாக செயல்படும் இந்த நுண்செயலி (Micro Processor) என்றால் என்ன..? நுண்செயலி (Micro Processor) அல்லது முத்துச் சிப்பி என்பது ஒரு கணினியின் மைய செயல் அலகின் (CPU-Central Processing Unit) பெரும்பாலான அல்லது அனைத்து செயல்பாடுகளையும் ஓர் ஒற்றை ஒருங்கிணைந்த சுற்றில் (IC -Integrated Circuit அல்லது மைக்ரோ சிப்) தன்னகத்தே கொண்டதாகும். மைக்ரோ சிப் முதல் நுண்செயலி 1970 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டு அதை மின்கணிப்பான்களில் பயன்படுத்தினர். அதில் 4 பிட் (Bit) வார்த்தைகளில் இரட்டைக் குறியீட்டு முறையில் குறியீடு செய்யப்பட்ட தசம(BCD) எண்கணிதம் பயன்படுத்தப்பட்டது. டெர்மினல்கள்(Terminals), அச்சுப்பொறிகள், பல்வேறு வகையான தானியங்கு முறைமைகள் போன்ற 4 பிட் மற்றும் 8 பிட் நுண்செயலிகளின் பிற பல உட்பொதிக்கப்பட்ட பயன்பாடுகள் விரைவில் அதைத் தொடர்ந்து உருவாயின. 16 பிட் அணுகலம்சம் கொண்ட செலவு குறைந்த 8-பிட் நுண்செயலிகள் 1970களின் மத்தியில் மைக்ரோ கணினிகள் உருவாவதற்கும் வழிவகுத்தன. கணினி செயலிகள் சில எண்ணிக்கை முதல் சில நூறுகள் வரையிலான டிரான்சிஸ்டர்களுக்கு சமமான சிறிய மற்றும் நடுத்தர அளவு கொண்ட IC களைக் கொண்டே நீண்டகாலமாக கட்டமைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. மொத்த CPU அலகையும் ஒரு சிப்பில் ஒருங்கிணைத்ததால், செயலாக்கத் திறனின் செலவு வெகுவாகக் குறைக்கப்பட்டது. எளிய அமைப்பில் இருந்த தொடக்க காலத்திலிருந்து நுண்செயலிகளின் திறனில் ஏற்பட்ட அதீத அதிகரிப்பானது, மிகச் சிறிய உட்பொதிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கையடக்க சாதனங்களில் இருந்து மிகப் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் வரையிலான அனைத்திலும் ஒன்று அல்லது அதற்கதிகமான நுண்செயலிகள் செயல் அலகுகளாக அமைந்து புரட்சி செய்ததால், பிற வகை கணினிகள் அநேகமாக வழக்கழிந்துபோக வழிவகுத்தது. 1970களின் தொடக்கத்திலிருந்து, நுண்செயலிகளின் திறனில் ஏற்பட்ட அதிகரிப்பானது மூரி விதியைப் பின்பற்றியே அமைந்துள்ளதாக தெரிகிறது, குறைந்தபட்ச செலவிலான உபகரணச் செலவைப் பொறுத்து, ஓர் ஒருங்கிணைந்த சுற்றின் சிக்கலான தன்மையானது ஒவ்வொரு ஆண்டும் இரட்டிப்பாகிறது என அவ்விதி கூறுகிறது. மூலம்: விக்கிப் பீடியா
    1 point
  15. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அகஷ்த்தியன், நுணா
    1 point
  16. இனிய பிறந்ததாள் நல் வாழ்த்துக்கள், அகஸ்தியன் & நுணா. 🌹
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.