Jump to content

Leaderboard

 1. ராசவன்னியன்

  ராசவன்னியன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   9

  • Posts

   7083


 2. Maruthankerny

  Maruthankerny

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Posts

   10253


 3. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Posts

   38794


 4. ஈழப்பிரியன்

  ஈழப்பிரியன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   4

  • Posts

   12089


Popular Content

Showing content with the highest reputation on 03/20/22 in all areas

 1. கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது. ஒரு பெண்ணிற்கு பல ஆடவர்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதாரர்கள் ஒரு பெண்ணுடன் வாழ்வார்கள். பிறக்கும் குழந்தைக்கு தாயை மட்டுமே உறுதியாக தெரியும். சகோதரர் இருவரையும் அப்பா என்றே குழந்தை அழைக்கும். இது கண்டி இராச்சிய வீழ்ச்சியோடு ஆங்கிலேர் இயற்றிய சட்டத்தினாலும், இவ்வாறு வாழ்பவர்களை சிங்கள குடிகள் பிற்காலத்தில் கேலிக்கு உட்படுத்தியதாலும் வழக்கொழிந்து போனது. சமீப காலத்தில் இதை தழுவி பாடலாக youtube ல் வெளியீடப்பட்டது.
  4 points
 2. அதை யார் இங்கு யாழ் களத்தில் நியாய படுத்துகிறார்கள்? இப்போ அது அநியாயம் என்று விளக்கு பிடிக்கும் மேற்கு இதைத்தானே இவ்வளவு காலமும் செய்ததே என்றுதான் கூறுகிறார்கள் இவர்கள் செய்யும்போது அது அநியாயம் என்று தெரியவில்லையா?
  4 points
 3. ராஜபக்ஷ குடும்பத்தினரிடம்தான் நாட்டை ஒப்படைக்க வேண்டும். அவர்கள்தான் நாட்டை மேலும் குட்டிச்சுவராக்குவர். சாதாரண சிங்கள குடிமகனுக்கு அப்போதுதன் தமிழனின் வலி புரியும்.
  3 points
 4. உக்ரைன் – ரஷ்யயுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? – (பகுதி-1) March 19, 2022 — ஜஸ்ரின் — தற்போதைய நிலையின் ஆரம்பம் எது? 2021 நவம்பர் மாதத்திலிருந்தே உக்ரைனின் கிழக்குப் பகுதி எல்லையிலும், பின்னர் உக்ரைனுக்கு வடக்கேயிருக்கும் பெலாறஸ் நாட்டின் எல்லையிலும் ரஷ்யா படைகளைத் திரட்டிவைத்திருக்க ஆரம்பித்தது. இது ஆரம்பத்தில் ஆரவாரமின்றி நடந்தாலும், மேற்கு நாடுகளின் செய்மதிப் படங்களின் வழியாக இந்தப் படைக் குவிப்பு வெளிவர ஆரம்பித்தபோது ரஷ்யாவின் பதில் இரண்டு வகையானதாக இருந்தது: ஒன்று, நம் நாட்டினுள்தான் படைகள் இருக்கின்றன, உக்ரைன் நாட்டினுள் படைகள் நுழையாது; இரண்டு, ஒரு பாரிய இராணுவ ஒத்திகைக்காக படைதிரட்டுகிறோம் – முடிந்ததும் கிளம்பி விடுவோம் (இதோ பார் நாம் கிளம்பிவிட்டோம், என்று காட்டும் வீடியோ கூட ரஷ்யாவால் வெளியிடப்பட்டது!). ஆனால், பெப்ரவரி இறுதியில் திடீரென உக்ரைன் அரசு சில உறுதிமொழிகளைத் தரவேண்டும், இல்லையேல் உள்ளே வருவோம் என்பதுபோல எச்சரிக்கை மொஸ்கோவிடமிருந்து வெளிவந்து, இரு நாட்களில் ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பித்தது. உக்ரைன் அரசும் மக்களும் எடுத்துக்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும், கமெராக்களின் கண்காணிப்பில் இணையவழியில் பகிரப்படும் செய்திகளாலும் மக்கள் இழப்பு செச்னியாவில் நிகழ்ந்த அளவுக்கு இல்லையாயினும், மக்கள் இறக்கிறார்கள், காயமடைகிறார்கள், வாழ்விடங்களை விட்டு அகதிகளாக வெளியேறுகிறார்கள். இவை அசாதாரண நிலைமைகள், துன்பியல் நிகழ்வுகள் என்பதையாரும் மறுக்க முடியாது. இனி எங்கள் கேள்விக்குவரலாம்: இந்தப் போரில் யார்வில்லன்? நோக்கர்கள் இது பற்றிய அபிப்பிராயங்களை உருவாக்க உதவும் சில வரலாற்றுத் தகவல்களைப் பார்க்கலாம். சோவியத்தை அமெரிக்கா உடைத்ததா? 1991ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள், கிறிஸ்மஸ் தினத்தன்று சோவியத்ரஷ்யாவின் முதலாவதும் இறுதியுமான ஜனாதிபதி மிகைல் கொர்பச்சேவ் இராஜினாமாச் செய்தமையோடு சோவியத்ரஷ்யா முடிவுக்கு வருகிறது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், 1989 இல்பெர்லின் சுவரின் வீழ்ச்சியோடு அமெரிக்க சார்பு அணிக்கும், சோவியத் நாட்டிற்குமிடையேயான பனிப்போர் முடிவிற்கு வந்துவிட்டது. சோவியத் நாட்டினுள் மறுசீரமைப்பு, வெளிப்படைத்தன்மை என இருகருப்பொருட்களில் கொர்பச்சேவ் சோவியத்தின் செல் திசையை மாற்ற முயல்கிறார். பொருளாதார வீழ்ச்சியினால் சோவியத்ரஷ்யா வங்குரோத்து நிலைமையை அடைகிறது -மேற்கு நாடுகளின் பொருளாதார உதவிகளைப்பெற்று மக்களுக்கு உணவளிக்க வேண்டிய நிலைமை. இந்தக் காலப் பகுதியில் அமெரிக்காவில் ஆட்சியில் இருந்த சீனியர் புஷ்ஷின் கவனம், சோவியத்தை துண்டுதுண்டாக உடைப்பதில்இருந்ததாகத்தான் நோக்கர்கள் பலர் இருதசாப்தங்களாக நம்பிக்கொண்டிருந்தனர். இதற்காக அமெரிக்க சி.ஐ.ஏ உளவு நிறுவனமும் பல சதி வேலைகளைச் செய்ததாக நம்பப்பட்டது. ஆனால், 2000களில் இல் இரகசிய நீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க ஆவணங்கள் சொல்லும் கதை வேறாக இருக்கிறது. சோவியத்தின் அணுவாயுதங்களின் பாதுகாப்புப் பற்றிய பயத்தினால், புஷ் நிர்வாகம் தனி தேசங்களாக சோவியத்திடமிருந்து பிரியமுயன்ற உக்ரைன் உட்பட்ட, கிழக்கு ஐரோப்பிய, பால்ரிக் சோவியத் குடியரசுகளுக்கு ஆதரவை 1991 இறுதிவரை வழங்க முன்வரவில்லை. இறுதியில், கொர்பச்சேவின் கட்டுப்பாடு தளர்கிற நிலையில்தான், பிரிகிற நாடுகளையாவது நட்பாக்கிக்கொள்வோமென்ற நிலையில் ஆதரவை அமெரிக்க அணி வழங்க வந்ததாக ஷேர்கிப்லோஹி என்ற வரலாற்றாசிரியர் எழுதுகிறார். அமெரிக்கா சோவியத் ஒன்றியத்திலிருந்து டசின் கணக்கான சுதந்திர நாடுகளை உருவாக்க எண்ணவில்லையாயினும், அப்படி உருவான போது அந்த தேசங்களை மேற்கின் அரவணைப்பிற்குள் கொண்டுவரப் பின்னிற்கவில்லை. இது உலக அரசியலில் அசாதாரணமான ஒருபோக்கல்ல. ஆப்கானிஸ்தான்உட்பட்ட தேசங்களை சோவியத்ஒன்றியமும், கொரியதீபகற்பத்தை சீனாவும் தங்கள் பக்கம் வளைத்துக் கொள்ள மேற்கை விட வன்முறை மிகுந்த வழிகளைக் கையாண்டன என்பது வரலாற்று உண்மை. இந்த நிலையில், அமெரிக்க சார்பு அணி நிதியுதவி, அபிவிருத்தி, திறந்த சந்தைப் பொருளாதாரம் போன்ற வன்முறை சாரா வழிகளில் முன்னாள் சோவியத்குடியரசுகளை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டதை பாரிய சதிக் குற்றமாகக் கருதமுடியுமா? விடையை நோக்கர்களிடமே விட்டுவிடலாம்! நேட்டோவின் நோக்கம் என்ன? நேட்டோ அமைப்பு எனப்படும் இராணுவக் கூட்டு சோவியத் ஒன்றியத்தின் மீதான பயத்தின் விளைவாக உருவானது. இந்த அச்சம் மிக நீண்ட வரலாறுடையது. 1939இல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பிக்க முன்னரே ஸ்ராலின் தலைமையிலான சோவியத் ஒன்றியம் மீது முடியாட்சி நிலவிய சில ஐரோப்பிய நாடுகள் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் அச்சம் கொண்டிருந்தன. இந்த அச்சத்தை உறுதி செய்யும் வகையில் இரு சம்பவங்கள் நடந்தன: றிப்பன்ட்றொப் -மொலரோவ் ஒப்பந்தம் மூலம் நாசி ஜேர்மனியோடு பகைமை தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து சரியாக ஒரு மாதத்தினுள் (1939), யுத்தப் பிரகடனம் எதுவுமில்லாமல் போலந்தின் கிழக்குப் பாதியை சோவியத் செம்படைகளும், மேற்குப்பாதியை நாசி ஜேர்மனியும் ஆக்கிரமித்தன. இன்னும் சிலமாதங்கள் கழித்து அதே ஆண்டில், பின்லாந்தையும் சோவியத் படைகள் தாக்கி ஆக்கிரமிக்க ஆரம்பித்தன (இன்று உக்ரைனுக்குக் கிடைக்கும் உதவிகளில் ஒருதுளி கூட பின்லாந்துக்குக் கிடைக்காமலே, கடும் இழப்புகளுடன் சோவியத் ஒன்றியம் சமரசத்திற்கு வரவேண்டிய நிலையை பின்னிஷ் போராளிகள் ஏற்படுத்தினார்கள்). படைபலம் கொண்ட ஒரு பெரிய நாடு இவ்வாறு நினைத்த மாத்திரத்தில் சிறிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுக்க ஒரு உருப்படியான அமைப்பும் உலகில் இருக்கவில்லை. இரண்டாம் உலகப் போர்காலத்தில், இந்தப் பின்னணியிலும் சோவியத்ஒன்றியம் நேசப் படைகளுடன் இணைக்கப்பட்டது – இதில் மேற்கு நாடுகளின் சுயநலம் இருந்தது உண்மை. அமெரிக்க, பிரிட்டன் படைகள் மரணப் பொறியென நம்பிய பேர்லின் நோக்கி மெதுவாக முன்னேறிய படி, சோவியத் செம்படையினர் பேர்லினை முதலில் கைப்பற்ற அனுமதித்தனர். போர் முடிந்ததும், மீண்டும் ஸ்ராலினின் சோவியத் ஒன்றியத்தின் மீதான ஐரோப்பாவின் அச்சம் மீளூயிர்ப்புப் பெற்றது, ஸ்ராலினுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்ற உணர்வும் சோவியத் ஒன்றிய ஆதரவாளர்களிடம் ஏற்பட்டது. ஐரோப்பா முழுவதும் கம்யூனிசத்தைப் பரப்பும் வகையில் ஆரம்பத்தில் தேர்தல் மூலம், ஜனநாயக வழியில் முயன்றாலும், விரைவாக வெற்றிபெற வேண்டுமென்ற ஆவலில் சில பகுதிகளில் ஜனநாயகம் சாராவழிகளில் கம்யூனிசத்தைப் பரப்ப ஸ்ராலின் முயன்றார். சோவியத் ஆதிக்கத்தின் கீழ் வந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், ஸ்ராலின் கால NKVD உளவுப்பிரிவையொத்த அமைப்புகள் உருவாகி, மக்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தியமை கிழக்கு ஐரோப்பாவில் இருந்து மக்கள் தப்பி மேற்கு நோக்கிக் குடிபெயரக் காரணமாக இருந்தது (எண்பதுகளில், கிழக்கு ஐரோப்பா வழியாகப் பயணித்து மேற்கு ஐரோப்பாவினுள் நுழைந்த அகதிகளுள், கணிசமான ஈழத்தமிழர்களும் இருந்தமை குறிப்பிடத்தக்கது). 1948இல் மேற்கு பேர்லின் மீது விநியோகத் தடையை விதித்து, 1945 முதல் அமலில் இருந்த அமைதி ஏற்பாட்டை மீறியதும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அச்சத்தைக் கூட்டியது. இந்த வரலாற்றின் துலங்கலாக 1949இல் அமெரிக்கத் தலைமையில் உருவான அமைப்புத்தான் நேட்டோ. நேட்டோ நம்பிக்கைத் துரோகமிழைத்ததா? நேட்டோவிற்கு எதிர்முனை அமைப்பாக சோவியத் உருவாக்கிய அமைப்பு “வார்சா ஒப்பந்த நாடுகள்” என்ற கிழக்கு ஐரோப்பிய கம்யூனிச நாடுகளின் கூட்டு. இந்த இடத்தில் இன்று ரஷ்யா அடிக்கடி குறிப்பிடும் “நேட்டோவின் நம்பிக்கைத் துரோகம்” பற்றியும் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். 1991இல் வார்சோ ஒப்பந்த நாடுகள்அமைப்பு, சோவியத் ஒன்றிய மறைவோடு கலைக்கப்பட்டது. அந்த வேளையில் “நேட்டோ கிழக்கு நோக்கி விரிவாக்கம் செய்யப்படாது” என கொர்பச்சேவுக்கு உறுதி வழங்கப்பட்டதாக ரஷ்யா கூறி வருகிறது. விளாடிமிர் புட்டினின் கருத்துப் படி, இந்த உறுதிப்பாட்டு மீறல் நேட்டோவின் நம்பிக்கைத் துரோகம். இதில் உள்ள பிரச்சினை என்னவெனில், அப்படியொரு உறுதிப்பாடு எழுத்தில் இல்லை. உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொண்டதாகக் கருதப்படும் கொர்பச்சேவ், நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் பற்றிய பேச்சே 1991இல் எழவில்லை என ஒரு பேட்டியில் 2014இல் குறிப்பிட்டிருக்கிறார். கொர்பச்சேவ், மற்றும் மேற்கின் இராஜதந்திரிகளின் கூற்றுப் படி, நேட்டோ, சரத்து 5 இன் படி, “கிழக்கு ஜேர்மனியில் இருந்து ரஷ்யப்படைகள் வெளியேறும் வரை, அங்கே ஜேர்மன் நாட்டுப் படைகள் மட்டுமே இருக்கும், ஏனைய நேட்டோ நாடுகளின் படைகள் கிழக்கு ஜேர்மனியினுள் நிறுத்தப்படமாட்டார்கள்” என்பது பற்றி மட்டுமே உறுதிமொழி வழங்கப்பட்டது. இல்லாத ஒருஉறுதிமொழியை ரஷ்யா மீள மீள ஒப்புவித்து கேட்போரின் மண்டையைக் கழுவுகிறதா அல்லது புட்டின் தவறாக விளங்கிக் கொண்டிருக்கிறாரா என்பது சுவாரசியமான ஒரு கேள்வி. பதில் இரண்டிற்குமிடையில் இருப்பதாக 2017இல் வெளியிடப்பட்ட அமெரிக்க வெளியுறவுத் திணைக்களத்தின் தொடர்பாடல் பரிமாற்றங்கள் காட்டுகின்றன. இப்பரிமாற்றங்களின் படி, 1990 பேச்சு வார்த்தைகளின் போதே நேட்டோவின் கிழக்கு நோக்கிய எதிர்கால விரிவாக்கம் பற்றி கொர்பச்சேவ் தரப்பு அச்சம் வெளியிட்டிருக்கிறது – அந்தவேளையில் சோவியத் ஒன்றியம், அதன் பால்ரிக், மற்றும் கிழக்கு ஐரோப்பிய குடியசுகளை உள்ளடக்கியிருந்ததால் அவை உடைந்து எதிர்காலத்தில் நேட்டோவில் இணையக்கோருவது பற்றிய பேச்சு எழவில்லை. நேட்டோ, கிழக்கு ஜேர்மனி உட்பட்ட சோவியத் ஒன்றியத்தில் அடங்காத நாடுகளுக்குப் பரவுவது பற்றி மட்டுமே அச்சம் இருந்திருக்கிறது. அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ்பேக்கரின் வாய்மொழிஉறுதிப்பாட்டில் “கிழக்கு நோக்கி ஒரு அங்குலம் தானும் நகராது நேட்டோ” என்ற வார்த்தைகள் சோவியத் ஒன்றியத்திற்குக் கொடுக்கப்பட்ட உறுதிமொழி. ஆனால், எழுத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தம் கிழக்கு ஜேர்மனி பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது. மேலும், 1991 டிசம்பரில், சோவியத் ஒன்றியம் இல்லாமல் போகிறது. அதன் பெரும்பகுதி நிலப்பரப்பை உள்ளடக்கி ரஷ்ய சமஷ்டி உருவானாலும், அது சோவியத் ஒன்றியம் அல்ல என்று நேட்டோ சொல்வது சட்ட ரீதியில் வலுவான வாதம். இந்தப் பின்னணியில், நேட்டோ அமைப்பு, முன்னாள் சோவியத் குடியரசுகள் சிலவற்றை, அந்த நாடுகளின் அரசுகள் மக்கள் ஆணையோடு விண்ணப்பிக்கும்போது, உள்வாங்கிக் கொள்கிறது -இதனைத் தடுக்கும் எந்த ஒப்பந்தங்களோ, சர்வதேச விதிகளோ இல்லை என நோட்டோ சொல்கிறது. நேட்டோ அமைப்பில் இணையாத பின்லாந்து போன்ற நாடுகள் கூட, நேட்டோவுடன் ஒரு இணக்கப்பாட்டில் பணி செய்ய ரஷ்யா மீதான சந்தேகமும் அச்சமுமே காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. ரஷ்யாவும் இந்த அச்சத்தை மீளமீள உயிர்ப்பிக்கும் நடவடிக்கைகளாக 2008இல் ஜோர்ஜியாவினுள் ஊடுருவல் செய்தும், 2014 இல் உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ஆக்கிரமித்தும் தன் பாதையை மாற்றாமலே முன் செல்கிறது. இந்த 2014 கிரிமியா ஆக்கிரமிப்பு இடம்பெறும் வரை, நேட்டோவிற்கென ஒரு விசேடமான நடவடிக்கைப் படையணி இருந்திருக்கவில்லையென்பதைக் கவனிக்க வேண்டும். அங்கத்துவ நாடுகளின் படையினரை இணைத்து நேட்டோ சில ஆயிரம் துருப்புகளை சுமாரான தயார் நிலையில் வைத்திருந்த நிலைமாறி, 2014இன் பின்னர் “ஈட்டிமுனைப் பிரிவொன்றை” உருவாக்கி எண்ணிக்கையையும் கிழக்கு ஐரோப்பாவில் அதிகரிக்கும் நிலை உருவானது. எனவே, ரஷ்யாவின் நடவடிக்கைகளால் நேட்டோவின் செல்திசையும், நேட்டோவின் செல்திசையால் ரஷ்யாவின் நடவடிக்கைகளும் தொடரும் நச்சுவட்டம் ஒன்று நிகழ்கிறது. இந்த நச்சு வட்டம் தொடர்ந்து சுற்ற ஏதுவான உந்தலைக் கொடுக்கும் இரு காரணிகள் ரஷ்யாவின் பக்கம் இருக்கின்றன. இதன் அர்த்தம், இந்த இரு காரணிகளும் மட்டுமே நச்சு வட்டத்தின் இயக்கிகள் என்பதல்ல – ஆனால், பிரதான இயக்கிகள் என்பது பொருத்தமாக இருக்கும். (தொடரும்) 1. Serhii Plokhy. The Last Empire: The Final Days of Soviet Union. 2014. 2. “I am against all walls” – Grobachev interview by RBTH, 2014 Russia Beyond.https://www.rbth.com/international/2014/10/16/mikhail_gorbachev_i_am_against_all_walls_40673.html 3. NSA Archives – GWU. Nato Expansion: What Gorbachev Heard. 2017. https://nsarchive.gwu.edu/briefing-book/russia-programs/2017-12-12/nato-expansion-what-gorbachev-heard-western-leaders-early https://arangamnews.com/?p=7330
  2 points
 5. அது ஒன்றுமில்லை சிறி.. "ஒரு 'ஏ' ஜோக் சொன்னால், ஒனக்கு இன்னைக்கு ராகிங் கிடையாது.." என்றார்கள், சீனியர்கள். நான் ஏதும் தெரியாமல் தடுமாறி முழிக்க, "நன்றியுள்ள பிராணிகள் ஏன் தெருவில்.....?" என கேட்டார்கள். நான் காரணம் தெரியாமல் மேலும் முழிக்க, "டோப்பு, அது தருமர் விட்ட சாபத்தால் இப்படி நடக்கிறது..!" என சொல்லி சிரித்துவிட்டு, டி.ராஜேந்தர் பாணியில், அடுக்கு மொழியில் தருமர் விட்ட சாப வரிகளை சொன்னார்கள் பாருங்கள், சிரித்துவிட்டேன். அப்பொழுது வயசு அப்படி..! மேலே காணொளியில் வரும் சால்வைக்கு பதில், இங்கே கதையில் அறையின் வாசலுக்கு வெளியே செருப்பு தான் அடையாளம். பெரும்பாலும் கழட்டி வைத்த செருப்பை நன்றியுள்ள பிராணிகள் கவ்விக்கொண்டு ஆங்காங்கே ஓடிவிடும்தானே? இம்மாதிரிதான் ஒருநாள் தருமர் உள்ளிருக்க, செருப்பை பிராணி கவ்விக்கொண்டு வெளியே ஓடிவிட, அது தெரியாமல் தம்பி நகுலன் தவறி நுழைந்துவிட, கடுங்கோபத்தில் "பிடி சாபம்.." என தருமர், அந்த நன்றியுள்ள பிராணிகளை திட்டி சபித்துவிட்டாராம்..! அந்த சாப வரிகளை, எப்படி இங்கே எழுதுவது..?
  2 points
 6. இரை. தினையளவு இரைதேடி சிற்றெறும்புக் கூட்டம் புற்றுவிட்டு நீங்கி பொழுதெல்லாம் அலையும். குடைபோல் வலைபின்னி வலைக்குள் காத்திருக்கும் பறந்துவந்து சிக்கும் பல்லுயிர்க்காய் எட்டுக்கால் சிலந்தியும். அதிகாலை வேளை மொட்டவிழ்ந்த மலர்தேடி மதுவுண்டு செல்ல மணம் முகர்ந்து அலையும் மாமரத்துத் தேனீக்கள். உடும்பொடு பாம்பும் இரைபார்த்து ஊர்ந்து வரும் பாம்பு மெலிந்தால் உடும்புக்கு இரையாகும் உடும்பு தளர்ந்தால் பாம்பு பசியாறும். வானில் உலவும் பருந்து வீட்டு முற்றம் சேர்ந்து தாயை விட்டு விலகிய குஞ்சை கிள்ளியெடுத்து தன்குஞ்சு பசிபோக்கும். தன்னுயிர் காக்க வெறித்தோடும் கலைமானை தன்பசி தீர்க்க விரட்டிப் பிடிக்கும் வேங்கை கூட்டமாய் வரும் செந்நாய்கள் சேர்ந்தே வேங்கையை விரட்டி இரையை எடுக்கும். கிலோக்கணக்காய் இலையுண்ணும் யானைகளும் கிலோமீட்டர்கள் நடந்து அலைந்து திரியும் அவை சென்ற பாதையெல்லாம் மரங்கள் முறிந்திருக்க பறவைகள் ஓலமிடும். பறவைக்கும் இரையாகும் விலங்குக்கும் இரையாகும் மனிதர்க்கும் இரையாகும் தமக்கும் தாமே இரையாகும் மீன்கள், எல்லாமே பசியால் புசிக்கும் இரைகளன்றோ அதனால் கொல்லுகின்றன ஒன்றையொன்று. பசித்தாலும் பசிக்கும் ஆனாலும் புசிக்கவும் போவதில்லை அதனாலென்ன வெட்டிக் கொல்லுகின்றார் சுட்டுக் கொல்லுகின்றார் குண்டுகளும் கொட்டுகின்றார் கேடுகெட்ட மாந்தர் இவரே......! யாழ் 24 அகவைக்காக, ஆக்கம் சுவி......!
  2 points
 7. கலிபோர்னியா, நேவாடா, அரிசோனா, கொலராடோ,யூட்டா, டெக்சாஸ், போன்ற பெரும் பிரதேசங்கள், ஸ்பெயின்இன் ஆளுகையின் கீழ், மெக்ஸிக்கோவுடன் இருந்தது. பிறகு அமெரிக்க-மெக்ஸிகோ யுத்தத்தின் முடிவில், உடன்படிக்கையின் படி வெற்றி பெற்ற அமெரிக்காவிடம் வந்தது. இதற்கு ஈடாக மெக்ஸிகோ வுக்கு பணம் கொடுக்கப்பட்டது. 1700 களில் ஸ்பானிஷ் குடியேற்றங்கள் திட்டமிடப்பட்டு, மிக அதிகமாக நடைபெற்றது, இங்குள்ள native இந்தியர்களுக்கு மதமும் பரப்பப்பட்டது, பிறகுதான் ஆங்கிலேயர்களும் மற்றைய ஐரோப்பியர்களும், தங்கத்துக்காக வந்தார்கள். அதனால்தான் இங்குள்ள இடங்களின் பெயர்கள் பெரும்பாலும் ஸ்பானிஷ் மொழியில் இருக்கும். Native இந்தியர்களுக்கு சொந்தமான இடங்களுக்காக ஸ்பானியர்களும் ஆங்கிலேயர்களும் அடிப்பட்டுக்கொண்டார்கள் இன்று ஓக்லண்ட் மியூசியம் பார்க்க போயிருந்தேன். இங்கே @நீர்வேலியான் எழுதியது அங்கு படமாக விபரமாக இருந்தது. ஆரம்பத்தில் ஏறத்தாள அரைவாசி அமெரிக்கா கியூபா உட்பட மெக்சிக்கோ வசமே இருந்துள்ளது. 1848இல்த் தான் விடுதலையாகியுள்ளது.
  2 points
 8. இவ்வருட 'துபை எக்ஸ்போ 2020-இளையராஜா கலந்துகொண்டு இசைக் கச்சேரி செய்யவிருக்கிறார்' என சென்ற வாரம் அறிந்தவுடன் எனக்கு இருப்பு கொள்ளவில்லை. சுமார் 12 வருடங்களுக்கு முன் ஏ.ஆர்.ரகுமான் இசைக் கச்சேரியை துபையில் பார்த்த இனிய அனுபவத்தால், இம்முறை இசைஞானி கச்சேரி என்பதால் '80களில் வந்த இனிய பாடல்களை நேரில் கேட்கலாம்' என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. சென்ற வாரமே 'எக்ஸ்போ-2020' தளத்திற்கு சென்று கச்சேரி நடக்கப்போகும் இடத்தை பார்வையிட்டு வந்துவிட்டேன். மிக அருமையான எற்பாடுகள்..! ஜூப்ளி பார்க் இன்று அலுவலக திட்டப்பணிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு பிற்பகல் 2 மணிக்கே சென்றுவிட்டேன்.. பல நாடுகளின் காட்சிதளங்களை(Pavilions) பார்வையிட்டுவிட்டு மாலை 5 மணிக்கு இளையராஜா கச்சேரி நடைபெறப்போகும் ஜூப்ளி பார்க்கிற்கு வந்து பார்த்தால் அப்பொழுதே பலர் கூடிவிட்டனர். இரவு 9 மணிக்கு நடைபெறப்போகும் நிகழ்ச்சிக்கு மாலை 5 மணிக்கே ரசிகர்கள் கூட்டமா..? வேறு வழியின்றி அங்கே, அப்பொழுதே அமர்ந்துவிட்டேன்.. 4 மணிநேர காத்திருப்பிற்கு பின், இளையராஜா மேடையில் கலைஞர்களுடன் தோன்றினார்..! அரங்கமே இசை ஒலியாலும், கரகோசத்தாலும், திரையில் ஒளி வெள்ளத்தாலும் அதிர்ந்தது.. சும்மா சொல்லக்கூடாது.. மேடையின் இசை அமைப்பு, ஒலி சாதனங்களின் துல்லியம் மிக அற்புதம்..ஒவ்வொரு 'ட்ரம் பீட்'களும் நம் நெஞ்சை தாக்கி அதிர வைத்தன. இளமை இதோ இதோ.. ராக்கம்மா கையைத் தட்டு.. மடை திறந்து.. தண்ணித் தொட்டி தேடி வந்த.. ஆத்தா ஆத்தோரமா.. பொதுவாக எம்மனசு தங்கம்.. மேலே குறிப்பிட்ட பாடல்களுக்கு ரசிகர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். இளையராஜா குழுவினர் மிக அற்புதமாக பாடினர்..ஒலியால் இசையால் அக்களமே நனைந்தது.. பலநாட்டு ரசிகர்களும் ஆரவாரித்து ரசித்தனர்.. முடிவில் மேடையின் ஒலி, ஒளியமைப்பை பலரும் பாராட்டினர்.. சில பிறமொழி பாடல்களை தவிர அனைத்துமே அருமை. 3 மணிநேரம் போனதே தெரியவில்லை. இனிய இரவாக அமைந்து, இசையில் நனைந்து, அதிகாலை வீடு வந்து சேர்ந்தேன்..! படங்கள் உதவி: என்னுடைய ஐபோன் 13.
  1 point
 9. மற்றவனின் சொத்துக்களை களவெடுத்து திண்டு ஏப்பம் விடுற இனம்தான் ஆங்கிலேய இனம். களவெடுத்து தின்னுறது எண்டது அதுகளின்ரை ரத்தத்திலை ஊறினது.ஆசியாவை பிடிச்சுதுகள் களவெடுத்துகள்.ஆபிரிக்காவை பிடிச்சுதுகள் அங்கையும் களவெடுத்துகள்.வட அமெரிக்காவுக்கு போச்சுதுகள். அங்கை களவெடுக்காமல் அங்கை வாழ்ந்த செவ்விந்திய இனத்தையே அழிச்சுதுகள்.இது தங்கடை நாடு எண்டுதுகள்...அவுஸ்ரேலியாவுக்கு போச்சுதுகள் அங்கையும் அதே வேலையை செய்துகள்.அங்கை இருந்த மூதாதையரை அழிச்சு ஒடுக்கி அதையும் தங்கடை நாடு எண்டுதுகள். இன்னொரு இனத்தை அழிச்சு சூரியன் அஸ்தமிக்காத இராச்சியம் எண்டுதுகள்.களவெடுத்த கோஹினூர் வைரத்தை கிழவி இப்பவும் தலையிலை வைச்சுக்கொண்டு ரோசம் மானமில்லாமல் திரியுது.கேட்டால் பரிசாய் தந்தவையாம். இவ்வளவு *** (சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்) வேலையளை செய்த ஆங்கில உலகத்துக்கு வக்காளத்து வாங்குது ஒரு கூட்டம்.
  1 point
 10. கடைசி ஓவரில் த்ரில் வெற்றி! செய்திகள் விளையாட்டு ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கடைசி ஓவரில் த்ரில் வெற்றியைப் பெற்ற ஆஸி. அணி அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. நியூஸிலாந்தில் ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கிண்ண போட்டி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஆக்லாந்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாழ்வா, சாவா ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸி. அணியை கட்டாயம் வென்றே ஆக வேண்டிய நிலையில் இந்திய அணி எதிா்கொண்டது. நாணய சுழற்சியை வென்ற ஆஸி. அணி களத்தடுப்பை தோ்வு செய்தது. நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் இந்தியா 277/7 ஓட்டங்களை குவித்தது. ஆஸி. தரப்பில் டாா்ஸி பிரவுன் 3, அலனா கிங் 2 விக்கெட்டுகளை சாய்த்தனா். ஆஸி. பௌலா்கள் 24 வைட் பந்துகளை வீசியது குறிப்பிடத்தக்கது. 278 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆஸி. அணி களமிறங்கியது. 6 முறை சாம்பியன் ஆன ஆஸி. தலைவர் மெக் லேனிங் – அலிஸா ஹீலி ஆகியோா் இணைந்து அதிரடியாக ஆடி தங்கள் அணியின் ஸ்கோரை உயர உதவினா். அலிஸா ஹீலி 65 பந்துகளில் 72 ஓட்டங்களையும், மெக் லேனிங் 107 பந்துகளில் 97 ஓட்டங்களையும் விளாசினா். ரேச்சல் ஹெயின்ஸ் 43, எல்ஸி பொ்ரி 28, பெத் மூனி 30 ஓட்டங்களையும் சோ்த்தனா். ஆட்டத்தின் இடையே சிறிது மழை பெய்ததால் நிறுத்தப்பட்டது. கடைசி ஓவரில் 8 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய ஜுலன் கோஸ்வாமி பந்து வீசினாா். ஆனால் ஆஸி. வீராங்கனை பெத் மூனி முதல் 3 பந்துகளிலேயே வெற்றிக்கு தேவையான ஓட்டங்களை எடுத்தாா். இறுதியில் 49.3 ஓவா்களில் 280/4 ஓட்டங்களை எடுத்த ஆஸி. 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மேலும் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணி என்ற சிறப்பையும் பெற்றது. சிக்கலில் இந்தியா : அதே வேளையில் 5 ஆட்டங்களில் 2 வெற்றி, 3 தோல்வியுடன் உள்ள இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற மீதமுள்ள 2 ஆட்டங்களிலும் வெல்ல வேண்டும். http://kisukisu.lk/?p=60043
  1 point
 11. உலக சிட்டுக் குருவிகள் தினம்: சென்னையில் ஒரு குருவிகள் சரணாலயம் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வீட்டு வாசலில் இருக்கும் மரத்தடியில் சிட்டுக் குருவிகளின் அழைப்புகளைக் கேட்டுக் கொண்டே விளையாடி 90-கள் மற்றும் அதற்கு முந்தைய தலைமுறையினருக்கு சிட்டுக்களுடனான நினைவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. பட மூலாதாரம்,KOODUGAL வீட்டு வாசலில் அரிசி புடைக்கும்போது சிதறுவதைச் சாப்பிட வரும் அவற்றோடு குழந்தைப் பருவத்தில் விளையாடாதவர்கள் இருக்கமுடியாது. அத்தகைய சிட்டுக் குருவிகளுடனான அனுபவம் இன்றைய தலைமுறையினருக்கு முன்பு இருந்த அளவுக்குக் கிடைப்பதில்லை. சீனாவின் மாவோ சிட்டுக் குருவிகளை கொல்ல உத்தரவிட்டது ஏன்? அமெரிக்காவின் காற்று மாசுபாட்டை கண்டறிய உதவிய பறவைகள் அந்த அனுபவத்தை மீட்டுக் கொண்டுவரும் முயற்சியில் சென்னையில் இருக்கும் "கூடுகள்" அமைப்பு 2014-ஆம் ஆண்டு முதல் செய்து வருகிறது. பட மூலாதாரம்,KOODUGAL படக்குறிப்பு, கூடுகள் அமைப்பு பொருத்திய கூட்டில் வாழும் சிட்டுக் குருவிகள் இந்த அமைப்பை உருவாக்கிய பேரா.து.கணேசன், சிட்டுக் குருவிகளை நகர்ப்பகுதியில் முன்பிருந்த அளவுக்குப் பரவலாகப் பார்க்க முடியாமல் போவதற்குக் காரணம், அவை கூடுகட்டி இனப்பெருக்கம் செய்வதற்குரிய வசதி இல்லாமல் போனது தான் என்பதைக் கண்டறிந்தார். விளம்பரம் பட மூலாதாரம்,KOODUGAL முன்பெல்லாம், வீட்டிலுள்ள ஓட்டுச் சந்துகளிலும் சுவர் இடுக்குகளிலும் கூடு கட்டி வாழ்ந்து கொண்டிருந்த அவற்றுக்கு, அதேபோன்ற கூடுகளை செயற்கையாக உருவாக்கி சென்னை முழுவதும் பரவலாக அமைக்கத் தொடங்கினார். பட மூலாதாரம்,KOODUGAL சிட்டுக் குருவிகளுக்கான செயற்கை கூடுகள் வாங்க ஒரு கூட்டிற்கு சராசரியாக 200 ரூபாய் வீதம் ஆனதால், அவரே கூடுகளைத் தயாரிக்கவும் தொடங்கினார். பட மூலாதாரம்,KOODUGAL படக்குறிப்பு, கூடுகள் அமைப்பு தயாரிக்கும் செயற்கை கூடுகள் அவருடைய முயற்சியின் வழியாக உருவான கூடுகள் அமைப்பு இதுவரை சுமார் 10,000 கூடுகளைத் தயாரித்து சென்னை முழுக்க சிட்டுக் குருவிகளுக்காகப் பொருத்தியுள்ளது. அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கூடுகளில் சிட்டுக் குருவிகள் வாழத் தொடங்கிவிட்டன. பட மூலாதாரம்,KOODUGAL படக்குறிப்பு, பேரா.து.கணேசன் சிட்டுக் குருவிகளுக்காக செயற்கை கூடுகளை உருவாக்கி அமைத்து வருகிறார் தண்டையார்பேட்டையில் இரண்டு பள்ளி வளாகங்களுக்குள் சிட்டுக் குருவிகளுக்கு என சிறு சரணாலயங்களை உருவாக்கியுள்ளார். தற்போது திருவொட்டியூரில் மூன்றாவது சிட்டுக்குருவி சரணாலயத்தை உருவாக்கவுள்ளார். பட மூலாதாரம்,KOODUGAL படக்குறிப்பு, செயற்கை கூட்டில் புதிதாகப் பிறந்த சிட்டுக் குருவி குஞ்சுகள் இந்த முயற்சியை அவர் தொடங்கும்போது தனிநபராகவே பொதுமக்களையும் குழந்தைகளையும் அணுகினார். இப்போது அதுவோர் அமைப்பாக உருவெடுத்துள்ளது. பட மூலாதாரம்,KOODUGAL படக்குறிப்பு, கூடுகள் அமைப்பு பொருத்திய செயற்கை கூட்டில் சிட்டுக் குருவிகள் இன்று, உலக சிட்டுக் குருவிகள் தினம். இதன் சிறப்பாக அவற்றின் வாழிட மீட்டுருவாக்கத்திற்காக்ச் செயல்பட்டு வரும் 'குருவி கணேசன்', அதன் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஸ்பேரோ சேவர் விருது (Sparrow Saver Award) என்ற விருதையும் இந்த நாளில் வழங்கி வருகிறார். இது மாணவர்களிடையே சிட்டுக் குருவிகள் பாதுகாப்பில் ஈடுபட வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டும் என்று அவர் கருதுகிறார். https://www.bbc.com/tamil/india-60810976
  1 point
 12. குமாரசாமி அண்ணே.... காணொளியின், 3 வது நிமிடத்தில், அறை வாசலில்... உள்ள, மான் கொம்பில்... 2 சால்வை தொங்குகிறது. இதன் அர்த்தம் என்ன?
  1 point
 13. இதை வாசித்து... அழுவதா, சிரிப்பதா... என்று தெரியவில்லை. உங்களுக்கு... எப்படி, இருக்கு?
  1 point
 14. இதை ஏற்கமுடியாது கிருபன். ஏனென்றால், இது மேற்குலக ஊதுகுழலின் சதியினால் மூளைச்சலவை செய்யப்பட்ட வகையறாக்களினால் எழுதப்பட்டது. மிக்க நன்றி கிருபன், எமது மூத்த அரசியல் ராணுவ விமர்சகர்களின் குப்பைகளை இதுவரை பார்த்த எமக்கு நடுநிலையான , யதார்த்தபூர்வமான தகவல்களை இது கொண்டிருக்கிறது. தொடர்ந்து இணையுங்கள்
  1 point
 15. நுண்செயலிகளின் வகைகள்: பொதுவாக நுண்செயலிகள் இயங்கும் வேகத்தை, "ஜிகா ஹெர்ட்ஸ்" (Ghz) என்று கடிகார அளவீட்டு வேகத்தில் குறிப்பிடுவார்கள்.நுண்செயலிகளின் உள்ளீட்டு வடிவமைப்பும் பலவித ஆராய்ச்சி முன்னேற்றங்களின் பயனாக காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வருகிறது. இவற்றை தலைமுறை மாற்றம் எனவும் குறிப்பிடுவது உண்டு. உதாரணமாக, முதல் தலைமுறை நுண்செயலிகள்(First Generation Processors) 1971ம் ஆண்டில் ஆரம்பித்து இதுவரை 50 வருடங்களில் 12வது தலைமுறை நுண்செயலிகள்(12th Generation Processors) சந்தைக்கு வந்துவிட்டன. "பழையன கழிதலும், புதியன புகுதலும்.." போன்று இப்பொழுது 10 வது தலைமுறைக்கு முன்பிருந்த நுண்செயலிகளைக்கொண்ட கணணிகளை சந்தையில் யாரும் வாங்குவதில்லை. அதேபோல நுண்செயலிகள் உள்ளீட்டு கட்டளைகளை நிறைவேற்றும் செயல்முறை(Internal processing power) வடிவமைப்பும் 4பிட் (4Bit) வகையில் ஆரம்பித்து 4, 8, 16, 32 Bit என ஒவ்வொருவகையாக பரிணாம வளர்ச்சியடைந்து இப்பொழுது பயனாளர்களின் பொது சந்தையில் 64பிட் (64Bit) நுண்செயலிகள் வரை வெளிவந்துவிட்டன. இவ்வகை பிட்(Bits)களைக்கொண்ட நுண்செயலிகளை கையாள, கணணியின் இயங்குதளமும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டுமே..? ஆகையால் கணணிகளின் இயங்குதளமும்(Operating System) அவ்வாறே மாற்றம்பெற்று இப்பொழுது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் (Microsoft Windows) இயங்குதளமும் 64பிட் வகையில் கிடைக்கின்றன. இப்பொழுது ஒரு சந்தேகம் வரலாம், 64பிட்(Bit) நுண்செயலிகளைக் கொண்ட கணணியில் 32பிட்(Bit) இயங்குதளத்தை(Operating System) நிறுவ இயலுமா..? அது செயல்படுமா..? எனக் கேட்டால், நிச்சயம் செயல்படும், ஆனால் இது 'யானை பலத்தை பசுவின் பலமாக குறைத்து பயன்படுத்துவது' போன்றது. இன்னொரு முக்கிய விசயம், 32பிட் (Bit) நுண்செயலிகளைக்கொண்ட கணணியில் 64பிட்(Bit) இயங்குதளத்தை(Operating System) நிறுவ முடியாது. நுண்செயலி பயனாளர்கள் சந்தையில் இன்டெல்(Intel) நுண்செயலிகளைக்கொண்ட கணணிகளே மிக அதிக பயனாளர்களை கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆகையால இனிவரும் திரிகளில் இவ்வகை நுண்செயலிகளை பற்றியே பார்ப்போம்..! கீழேயுள்ள படம் இன்டெல்(Intel) நுண்செயலிகளின் சில வகைகளை விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள்.. உங்களில் எத்தனை பேர் இம்மாதிரி தொழிற்நுட்ப விடயங்களை தீர விசாரித்து கணணிகளை வாங்குவீர்கள்..? அல்லது கடைக்காரர் சொல்வதை அப்படியே நம்பி வாங்கிவிடுவீர்களா..? இத்திரிகளின் முடிவில், 'எம்மாதிரி சிறந்த கணணிகளை ஒவ்வொரு பட்ஜெட்களுக்குள் முக்கிய அம்சங்களை கருத்தில்கொண்டு ஒப்பீடு செய்து வாங்குவது..?' என சொல்கிறேன்.. அதற்கு முன்னால் நான் சொல்லிவரும் விடயங்கள், உங்களுக்கு புரிகிறதா..? என சொன்னால் நல்லது. இல்லையெனில், நான்பாட்டுக்கு "குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதை"யாக எழுதி இத்திரி முடிந்துவிடும்..!
  1 point
 16. நோ........முட்களின் ஊடே ரோஜாபோல் போர் தன்பாட்டுக்கு நடக்கட்டும், நீங்கள் தொடருங்கள் மாஸ்டர் பலன் தானாக கொட்டும்......!
  1 point
 17. அறுபத்தொன்பது லட்ஷம் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று அதே மக்களால் துரத்தப்பட்ட உள்ளார்கள். ஏன் அவர்கள் இவர்களை தெரிந்தெடுத்தார்கள்? இந்த மக்களுக்கு இவர்கள் செய்த நன்மையென்ன? வாக்குக்காக கொடுத்த பணம், வெளிநாடுகளில் இருந்த சிங்களவருக்கு பயணச்செலவு, எல்லாவற்றிற்கும் மேலாக தமிழரை அடக்கி ஒடுக்கியவர்கள் என்கிற ஒரே காரணம், இன்னும் ஒடுக்கப்படுவார்கள் என்கிற உத்தரவாதம் இவர்களை மலைமேல் ஏற்றி வைத்தது. இவர்கள் செய்த ஊழல்கள் மக்களுக்கு தெரியாததல்ல, இப்போ தங்கள் பொருளாதார நெருக்கடிக்காக இவர்களை துரத்துகிறார்களேயொழிய நீதிகாக்கவல்ல. நாங்கள் இவர்கள் படும் கஸ்ரத்திற்கு மேலாக பட்டவர்கள். நம் நிலங்களை, உறவுகளை, இருப்பிடங்களை விட்டு ஏதிலிகளாக துரத்தப்படும் செய்திகள் வானொலி, தொலைக்காட்சி மூலம் ஒலி, ஒளி பரப்பப்பட்டது. பார்த்து, கேட்டு மகிழ்ந்தார்கள், பகிர்ந்தார்கள். எங்களின் அவலநிலை கண்டு யாரும் வருந்தவில்லை, கேள்வி கேட்கவில்லை, எதிர்க்கவில்லை. மாறாக ஊக்கப்படுத்தினார்கள். ஆனால் நாம் இப்போ இவர்களின் அவலத்தில் மகிழவில்லை, நாம் தொடர்ந்து வருத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் இவர்களின் இந்த அவல நிலையிலும் எம்மைப்பற்றி நினைக்கவில்லை, விரும்பவுமில்லை. அதை இவர்கள் உணர்ந்தால் ஆட்சியாளர்கள் அதற்காக வெட்கப்படுவார்கள், இனிமேல் பயங்கரவாதிகளை அடக்கினோம் என்று வீரக்கதை பேசமாட்டார்கள். நாளைக்கே இவர்களின் பொருளாதாரநிலை நிலை மாறிவிட்டால் பழையபடி வேதாளம் முருங்கை மரத்திற்தான் என்பதையே இது காட்டுகிறது! இதை வைத்துத்தானே இதுவரை ஆட்சி செய்தவர்கள். அதையே வைத்து இந்த இக்கட்டான சூழ்நிலையை கடக்க முயற்சிக்கிறார்கள்.
  1 point
 18. அருமை சுவியர் .... என்றும் தீராது மனிதனின் அதிகார பசி ஆக்கிரமிப்பு பசி ஆத்மீக பசி புகழ் பசி கெளரவ பசி இவை இருக்கும் வரை கொலை களம் நிரந்தரம்
  1 point
 19. இதை விட சிறப்பான படம் பல யாழ்களத்தில் முன்னரே பலதடவை ஓடி இருக்க இதை போய் ஏன் இப்போ சிலாகிக்கிறீர்கள் ஜி. இதே யாழ் களத்தில், 1. தலைவர் என்னை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பினார் 2. நான் இப்போதும் வன்னியில் வேலை திட்டம் செய்கிறேன் 3. எனக்கு கருத்து களத்தில் மூக்குடைந்தால் - மாவீரரை கொச்சை படுத்தாதீர்கள் என்ற கூக்குரல் 4. இறுதி போரின் பின் தப்பி வந்த போராளி மீது சந்தேக வசவு 5. சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட போராளி மனைவி மீது பாலியல் வசவு 6. சம்பந்தமே இல்லா திரிகளில் - எமக்கு பிரபாகரன் என்றொரு தலைவர் இருந்தார் என்ற பில்டப்பு 7. நாங்கள் 80 இல் இருந்து உழைத்து போராட்டத்தை கட்டி எழுப்பினோம் என்ற வெத்து ஜம்பம். இப்படி வகை வகையான மகா நடிகர்களை யாழ் களத்தில் அல்லும் பகலும் நிஜத்தில் கண்டதை விட இந்த படத்தில் பெரிதாக ஏதும் இல்லை ஜி. பிகு 1. படக்குழுவிற்கு வாழ்துக்கள். மாறன் மாமா பல அண்ணைமாரை, மாமாக்களை மனதில் கொண்டு வந்தார். அந்த தயங்கும் நடிப்பு அற்புதமானது. 2. அனைவருக்கும் வணக்கம் மற்றும் நன்றி வணக்கம். இதற்கு பதில் எழுதி தயவு செய்து யாரும் மினக்கெட வேண்டாம். இது மதகுக்குள் வைத்த கண்ணி வெடி. வெடித்த பின் நீங்கள் இறங்கி நிண்டு பற்றைக்குள் சுடுவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை.
  1 point
 20. ரஷ்ய உக்ரைன் போர் சாம்பிள் தான் ஒரிஜினல் போர் சீன தைவான் தான் மேற்கு உலகு என்ன செய்யும் என்பதை இப்போ நூல் விட்டு பார்க்கிறார்கள் ரஸ்யாவிற்கு பொருளாதார தடை விதித்தது போல எழுந்த மாத்திரத்தில் சீனாவுடன் முண்ட முடியாது . சீனவிடம்தான் ரர் மாற்றியல் கையிருப்பில் உண்டு தைவான் போரும் தொடங்கினால் மேற்குக்கு ரேர் (rare Material) மாற்றியலும் இல்லை சிப்பும் (chip) இல்லை. இப்போதே அமெரிக்க ஜேர்மன் வாகன உற்பத்திகள் சிப் தட்டுபாடடால் தள்ளாடுகிறது இதில் இன்னொரு சோதனையும் செய்து அவர்களுக்கு வெற்றி ஆகி இருக்கிறது அதுதான் ஆப்ரிக்க தெற்காசிய நாடுகள் மேற்குக்கு எதிராக அல்லது ஆதரவு இல்லாத வாக்கு செலுத்தி இருக்கிறார்கள் ஈரான் ரஷ்ய வெனிசுவேலா நைஜீரியா எரிபொருள் கையிருப்பு அண்ணளவாக 50% ஆகும் சீனா அழகாக புள்ளிவைத்து வருகிறது கோலம் போடும்போதுதான் இந்த வெங்காயங்களுக்கு போர் மூலம் அழிவுதான் மிஞ்சும் என்பது புரியும்
  1 point
 21. சுவி இதை வாசிக்கும் போது ஏனோ 10 வயது சிறுமி பசியால் எடுத்து சாப்பிட்டு அடி,உதை,வெட்டு வாங்கியது தான் நினைவுக்கு வருகிறது.
  1 point
 22. தயவு செய்து இதை பதிவத்துக்கு மன்னித்து கொள்ளுங்கள் நீங்கள் கூறும் அதே குற்றத்தையே நீங்களும் இன்னும் சிலரும் செய்கிறீர்கள் மேற்குலகின் குள்ள நரித்தனத்தை கூற வந்தவர்களுக்கு .... ரஷ்ய ஆதரவாளர்கள் படடம் ஏன் சூடுகிறீர்கள்? இது கருத்து வறட்ச்சி இல்லையா? சிலர் அதுக்கும் கீழே இறங்கி தனிமனித தாக்குதலாக கூட எழுதுகிறார்களே? நீங்களும் சுட்டி காட்டி இருந்தீர்கள் (நன்றி) மேலோட்ட்மாக இங்கு வாசிக்கும்போது யாரும் ரஷ்ய படை எடுப்பை ஆதரிக்கவில்லை ஆனால் இந்த மேற்கு உலகின் குள்ள நரித்தனத்தைத்தான் எதிர்க்கிறார்கள் இந்த போரில் அழிவது உக்கரைன் அழிக்கப்படுவது ரஷிய + மேற்குலகால் இதில் யார் லாபம் பெறுகிறார்கள் ? என்ற அரசியல் கண்ணோட்டம் உங்களிடம் இல்லாததை எண்ணி கொஞ்சம் மன சஞ்சலம் இன்று உதவி எனும் பேரில் மேற்கு நாடுகள் அள்ளிக்கொடுத்து உக்ரைன் இராணுவம் ஏவும் ஏவுகணைகள் அனைத்தும் இன்னமும் 2-3 வருடங்களில் காலாவதியாக இருக்கும் அமெரிக்க ரைத்தான் (Raytheon) லொக்கி மார்ட்டின் Lockee Martin) போயின்( Boeing) மற்றும் பிரிடிஷ் பி எ யி (BAE) தயாரிப்புகள் ஆகும். இவைகள் அனைத்தும் அமெரிக்க பிரித்தானிய குடிகளின் வரிப்பணத்தில் அவர்களிடம் கொள்வனவு செய்து காலாவதியாக இருந்த இவற்றை பல மில்லியன் டாலர்கள் லாபமும் போனஸும் அவர்களுக்கு கொடுத்து வாங்கி அயல் நாடான ரஸ்யாவிடம் பகையை வளர்க்க உக்கரைன் புகைவிட்டுக்கொண்டு இருக்கிறது ஜெர்மனி பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் 35% மேலான இயறகை வாயு மற்றும் எரிபொருளை ரஸ்யாவிடம் இருந்தே பெறுகிறார்கள் .... ஒத்து ஊதிய பலனுக்கு இனி சொந்த நாட்டு மக்களுக்கு விலை உயர்வையும் வரியை உயர்த்துவதை தவிர வேறு வழி இல்லை என்றாலும் வரும் டிசம்பர் மாத குளிர்காலம் தொடங்கும்போது பற்றாக்குறையை தீர்க்க இதுவரை எந்த தீர்வும் இல்லை. இப்போது இலங்கையை பரிசக்கிக்கும் ஐரோப்பிய வாழ் தமிழர்கள் அதே போன்றதொரு நிலைக்குள் சிக்க குறைந்த பட்ஷம் 35% சாத்தியம் உண்டு. இல்லையேல் இவர்கள் மீண்டும் ரஸ்யாவிடமே கையேந்த போகிறார்கள் அப்போ இந்த போர்க்குற்ற பைல்கள் அலுமாரிக்குள் வைத்து இறுக்க பூட்டிடப்படும் . அகதிகள் ஆகிய உக்ரைனியர்கள் நாடு நாடாக அலைவார்கள் இப்போ பூ கொடுத்து அழைப்பவர்கள் அவர்கள் பசிக்காக திருடியும் வருமானம் தேடி குறைந்த ஊதியத்திற்கு சமரசம் செய்து வேலைகளை பெறும்போது தங்கள் வேலைகளை திருடுகிறார்கள் நாட்டை சீரழிகிறார்கள் என்று குமுறுவார்கள். அழிந்துபோன உக்ரைனை கட்டி தருவதாக கூறி (இலங்கைக்கு சீனா வந்ததை கசப்புடன் கடன் வலையில் சிக்க வைக்கிறார்கள்) என்று முதலை கண்ணீர் விட்டவர்கள் கிளம்புவார்கள் அதே ஐ எம் எப் கடன் திட்டத்துடன் மாறாக ரஸ்யா உக்ரைனை கைப்பற்றினாலும் ... அழிந்த உக்ரைனின் அழிவுகள் அழிவுகள்தான் ஐநாவில் யாராலும் வாய்திறக்க முடியாது காரணம் புட்டின் பேசுவதில் நியாயம் இருக்கும் குள்ளநரிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் வார்த்தை பிரயோகம் இருக்கும். படையெடுப்புக்கு முதல்நாள் இரவு புடின் பைடனுடன் ஒன்றரை மணி நேரம் பேசினார் அவர் தவறாக பேசியதை (அவர் தப்பானவராக இருந்தால்) நாட்டு மக்களுக்கு போட்டு காட்டலாமே ? முடியாது. ரஷிய செய்தி நிறுவனங்களை இருட்டடிப்பு செய்வதை தவிர மேற்குற்கு இப்போ வேறு வழி இல்லை ......அதைத்தான் செவ்வனே செய்கிறார்கள். ஒவ்வாரு 10 வருடத்துக்கு ஒருமுறை இரு பெரிய நாடுகளுக்கான போர் ஆயுத தயாரிப்பாளர்களுக்கு வேண்டும் இல்லையேல் பெரும் நஷடம் கொண்டு பல ஆயுதங்கள் காலாவதியாகிப்போகும் ஒன்றில் நண்பராக்கி பெரும்தொகையை விற்பார்கள் ( 80 களில் சதாம் இப்படித்தான் மாட்டினார் என்றால் இப்போ சவூதி அரேபியா தைவான்) இல்லையென்றால் ஜனநாயகத்தை கொண்டுவர அமெரிக்க தனது பக்கவாக்கியங்களுடன் (ஆதரவு நாடுகள்) தானே எங்காவது இறங்கும் அல்லது இப்படி வடிவேலுவை மாட்டி விடுவதுபோல உக்கிரைன் பாகிஸ்தான் போன்ற நாடுகளை இழுத்து விடுவார்கள். விளையாட்டு விளையாடாக ஒருபுறம் இருக்க தற்போதைய விலைவாசியை சமாளிக்க ராய்தான் லொக்கி மார்டின் பி ஏ ஈ கம்பெனிகளின் பங்குகளை வாங்கி கொள்ளுங்கள் இப்போதே 6-10% லாபம் போர் தொடங்கிய நாளில் இருந்து வந்துள்ளது https://stockcharts.com/c-sc/sc?s=RTX&p=D&b=5&g=0&i=0&r=1647709143901
  1 point
 23. நுண்செயலியை பற்றி.. நுண்செயலி(Micro Processor) என்பது ஒருவகை 'எலக்ட்ரானிக் சர்க்யூட்' ஆகும், இது எலக்ட்ரானிக் சாதனம் செயல்பட வேண்டிய சக்தியை செயலாக்குகிறது. இது கட்டளைகளையும், நிரல்களையும் சரியான முறையில் செயல்படுத்துகிறது. ஒரு கணினியின் மத்திய செயல்முறை அலகு (CPU) ஒரு நுண்செயலியின் எடுத்துக்காட்டு. இந்த எலக்ட்ரானிக் கூறு, ஒரு கணினியின் மதர்போர்டின் ஒரு பகுதியாகும். இது ஆயிரக்கணக்கான மற்றும் சில நேரங்களில் மில்லியன் கணக்கான டிரான்சிஸ்டர்களுடன் ஒருங்கிணைந்த சுற்று (Integrated Circuit) என்று வகைப்படுத்தப்படுகிறது. ஒரு சாதனத்தில் அதன் செயல்பாட்டின் முக்கியத்துவத்துடன், சில நேரங்களில் மனிதர்களின் மூளை மற்றும் இதயத்துடன் ஒப்பிடும்போது, "சிறியது" என்பதைக் குறிக்கும் அதன் ஆங்கில அர்த்தத்திற்கு இது மைக்ரோ என்று அழைக்கப்படுகிறது. நுண்செயலிகளை அவற்றின் உள் மற்றும் வெளிப்புற வேகத்தால் வேறுபடுத்தி அறியலாம். இது வினாடிக்கு செயலாக்கப்பட்ட பிட்(Bits)களையும், நினைவக அணுகல் திறன் (Bus Speed) மற்றும் கணணி மட்டத்தில் செயலாக்கக்கூடிய வழிமுறைகள் மற்றும் நிரல்களின் திறனையும் தீர்மானிக்கிறது. நுண்செயலிகளின் வகைகளும் உற்பத்தியாளரால் வேறுபடுகின்றன. நுண்செயலியை வடிவமைத்து, உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் பெரும்பாலான நிறுவனங்கள் இன்டெல் (intel), ஏ.எம்.டி(AMD) மற்றும் குவால்காம்(Qualcomm). ஒவ்வொரு வகை நுண்செயலியும் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தையும், உள் தரவின் நினைவக அணுகல் அகலத்தையும் கொண்டுள்ளது. இவை Mhz என்று கடிகார வேகம் போல அளவிடப்படுபவை.
  1 point
 24. கணணியின் உட்புற "மதர்போர்டு" (MotherBoard) "மதர்போர்டு" என்பது கணணியின் அடித்தளம்(Foundation) போன்றது. நமது வீட்டை கட்ட திட்டமிடும்போது என்னென்ன அறைகள், எத்தனை தளங்கள், பின்னாளில் வீட்டை விரிவாக்கம்(Extension) செய்ய எப்படி இப்பொழுதே அஸ்திவாரம் போடுவது என சிந்தித்து கட்டுவதுபோல தான் கணணியின் மதர்போர்டும். இதனை வாங்கும்போதே சிறந்த போர்டை தேர்ந்தெடுப்பது மிக அவசியம். ஏனெனில் இந்த போர்டு மீது இணைக்கும் மற்ற உபகரணங்கள்(Additional cards) நாம் விரும்பும் வேகத்தில், வசதியில் செயல்பட இந்த போர்டு வடிவமைப்பை சரிபார்த்து வாங்க வேண்டும். எனது கையில் இருப்பதுதான், கணணியின் மூளை என சொல்லப்படும் நுண்செயலி (Micro Processor) இது 15 வருடங்களுக்கு முன் சந்தைக்கு வெளிவந்த "இன்டெல் கோர்-2 (Intel Core 2)" என்ற வகையை சார்ந்தது. கணணியில் பிரித்தெடுத்த Intel Processor நுண்செயலி - மேற்புறமும், அடிப்புறமும். நுண்செயலி மதர்போர்டில் உட்காரும் இடம்.
  1 point
 25. முதலில் என்னிடமுள்ள டெல்(Dell Optiplex 860) கணணியை பிரித்து அதன் உட்பாகங்களை படம் எடுத்து இணைக்கிறேன்..((இதுவும் 14 வருட பழமையான கணணிதான்). (அடுத்து வரும் திரிகளில் நானே உதிரி பாகங்களை வாங்கி பொருத்திய கணணியை விளக்குகிறேன்.) கணணியின் முன்பக்க, பின்பக்க தோற்றங்கள்.
  1 point
 26. நல்லதொரு வயலும் வயல் சூழ்ந்த இடத்தில் இருக்கின்றது இந்த கோவில், கேணி கட்டில் அமர்ந்திருந்தால் நல்ல காற்றுடன் மன அமைதி கிட்டும், இப்ப புத்தரும் வருவதால் இன்னும் மன அமைதி கூடும் அது காக்கா எச்சத்தில் முளைத்தது
  1 point
 27. கணிப்பொறியின் முக்கிய பகுதி இதயமாக செயல்படும் இந்த நுண்செயலி (Micro Processor) என்றால் என்ன..? நுண்செயலி (Micro Processor) அல்லது முத்துச் சிப்பி என்பது ஒரு கணினியின் மைய செயல் அலகின் (CPU-Central Processing Unit) பெரும்பாலான அல்லது அனைத்து செயல்பாடுகளையும் ஓர் ஒற்றை ஒருங்கிணைந்த சுற்றில் (IC -Integrated Circuit அல்லது மைக்ரோ சிப்) தன்னகத்தே கொண்டதாகும். மைக்ரோ சிப் முதல் நுண்செயலி 1970 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டு அதை மின்கணிப்பான்களில் பயன்படுத்தினர். அதில் 4 பிட் (Bit) வார்த்தைகளில் இரட்டைக் குறியீட்டு முறையில் குறியீடு செய்யப்பட்ட தசம(BCD) எண்கணிதம் பயன்படுத்தப்பட்டது. டெர்மினல்கள்(Terminals), அச்சுப்பொறிகள், பல்வேறு வகையான தானியங்கு முறைமைகள் போன்ற 4 பிட் மற்றும் 8 பிட் நுண்செயலிகளின் பிற பல உட்பொதிக்கப்பட்ட பயன்பாடுகள் விரைவில் அதைத் தொடர்ந்து உருவாயின. 16 பிட் அணுகலம்சம் கொண்ட செலவு குறைந்த 8-பிட் நுண்செயலிகள் 1970களின் மத்தியில் மைக்ரோ கணினிகள் உருவாவதற்கும் வழிவகுத்தன. கணினி செயலிகள் சில எண்ணிக்கை முதல் சில நூறுகள் வரையிலான டிரான்சிஸ்டர்களுக்கு சமமான சிறிய மற்றும் நடுத்தர அளவு கொண்ட IC களைக் கொண்டே நீண்டகாலமாக கட்டமைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. மொத்த CPU அலகையும் ஒரு சிப்பில் ஒருங்கிணைத்ததால், செயலாக்கத் திறனின் செலவு வெகுவாகக் குறைக்கப்பட்டது. எளிய அமைப்பில் இருந்த தொடக்க காலத்திலிருந்து நுண்செயலிகளின் திறனில் ஏற்பட்ட அதீத அதிகரிப்பானது, மிகச் சிறிய உட்பொதிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கையடக்க சாதனங்களில் இருந்து மிகப் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் வரையிலான அனைத்திலும் ஒன்று அல்லது அதற்கதிகமான நுண்செயலிகள் செயல் அலகுகளாக அமைந்து புரட்சி செய்ததால், பிற வகை கணினிகள் அநேகமாக வழக்கழிந்துபோக வழிவகுத்தது. 1970களின் தொடக்கத்திலிருந்து, நுண்செயலிகளின் திறனில் ஏற்பட்ட அதிகரிப்பானது மூரி விதியைப் பின்பற்றியே அமைந்துள்ளதாக தெரிகிறது, குறைந்தபட்ச செலவிலான உபகரணச் செலவைப் பொறுத்து, ஓர் ஒருங்கிணைந்த சுற்றின் சிக்கலான தன்மையானது ஒவ்வொரு ஆண்டும் இரட்டிப்பாகிறது என அவ்விதி கூறுகிறது. மூலம்: விக்கிப் பீடியா
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.