Jump to content

Leaderboard

  1. ராசவன்னியன்

    ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      7331


  2. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      43268


  3. Maruthankerny

    Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      10574


  4. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      29178


Popular Content

Showing content with the highest reputation on 03/20/22 in Posts

  1. கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது. ஒரு பெண்ணிற்கு பல ஆடவர்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதாரர்கள் ஒரு பெண்ணுடன் வாழ்வார்கள். பிறக்கும் குழந்தைக்கு தாயை மட்டுமே உறுதியாக தெரியும். சகோதரர் இருவரையும் அப்பா என்றே குழந்தை அழைக்கும். இது கண்டி இராச்சிய வீழ்ச்சியோடு ஆங்கிலேர் இயற்றிய சட்டத்தினாலும், இவ்வாறு வாழ்பவர்களை சிங்கள குடிகள் பிற்காலத்தில் கேலிக்கு உட்படுத்தியதாலும் வழக்கொழிந்து போனது. சமீப காலத்தில் இதை தழுவி பாடலாக youtube ல் வெளியீடப்பட்டது.
    4 points
  2. அதை யார் இங்கு யாழ் களத்தில் நியாய படுத்துகிறார்கள்? இப்போ அது அநியாயம் என்று விளக்கு பிடிக்கும் மேற்கு இதைத்தானே இவ்வளவு காலமும் செய்ததே என்றுதான் கூறுகிறார்கள் இவர்கள் செய்யும்போது அது அநியாயம் என்று தெரியவில்லையா?
    4 points
  3. அது ஒன்றுமில்லை சிறி.. "ஒரு 'ஏ' ஜோக் சொன்னால், ஒனக்கு இன்னைக்கு ராகிங் கிடையாது.." என்றார்கள், சீனியர்கள். நான் ஏதும் தெரியாமல் தடுமாறி முழிக்க, "நன்றியுள்ள பிராணிகள் ஏன் தெருவில்.....?" என கேட்டார்கள். 🤔 நான் காரணம் தெரியாமல் மேலும் முழிக்க, "டோப்பு, அது தருமர் விட்ட சாபத்தால் இப்படி நடக்கிறது..!" என சொல்லி சிரித்துவிட்டு, டி.ராஜேந்தர் பாணியில், அடுக்கு மொழியில் தருமர் விட்ட சாப வரிகளை சொன்னார்கள் பாருங்கள், சிரித்துவிட்டேன். அப்பொழுது வயசு அப்படி..! 😛 மேலே காணொளியில் வரும் சால்வைக்கு பதில், இங்கே கதையில் அறையின் வாசலுக்கு வெளியே செருப்பு தான் அடையாளம். பெரும்பாலும் கழட்டி வைத்த செருப்பை நன்றியுள்ள பிராணிகள் கவ்விக்கொண்டு ஆங்காங்கே ஓடிவிடும்தானே? இம்மாதிரிதான் ஒருநாள் தருமர் உள்ளிருக்க, செருப்பை பிராணி கவ்விக்கொண்டு வெளியே ஓடிவிட, அது தெரியாமல் தம்பி நகுலன் தவறி நுழைந்துவிட, கடுங்கோபத்தில் "பிடி சாபம்.." என தருமர், அந்த நன்றியுள்ள பிராணிகளை திட்டி சபித்துவிட்டாராம்..! அந்த சாப வரிகளை, எப்படி இங்கே எழுதுவது..? 🤭 🤫🤗
    2 points
  4. இரை. தினையளவு இரைதேடி சிற்றெறும்புக் கூட்டம் புற்றுவிட்டு நீங்கி பொழுதெல்லாம் அலையும். குடைபோல் வலைபின்னி வலைக்குள் காத்திருக்கும் பறந்துவந்து சிக்கும் பல்லுயிர்க்காய் எட்டுக்கால் சிலந்தியும். அதிகாலை வேளை மொட்டவிழ்ந்த மலர்தேடி மதுவுண்டு செல்ல மணம் முகர்ந்து அலையும் மாமரத்துத் தேனீக்கள். உடும்பொடு பாம்பும் இரைபார்த்து ஊர்ந்து வரும் பாம்பு மெலிந்தால் உடும்புக்கு இரையாகும் உடும்பு தளர்ந்தால் பாம்பு பசியாறும். வானில் உலவும் பருந்து வீட்டு முற்றம் சேர்ந்து தாயை விட்டு விலகிய குஞ்சை கிள்ளியெடுத்து தன்குஞ்சு பசிபோக்கும். தன்னுயிர் காக்க வெறித்தோடும் கலைமானை தன்பசி தீர்க்க விரட்டிப் பிடிக்கும் வேங்கை கூட்டமாய் வரும் செந்நாய்கள் சேர்ந்தே வேங்கையை விரட்டி இரையை எடுக்கும். கிலோக்கணக்காய் இலையுண்ணும் யானைகளும் கிலோமீட்டர்கள் நடந்து அலைந்து திரியும் அவை சென்ற பாதையெல்லாம் மரங்கள் முறிந்திருக்க பறவைகள் ஓலமிடும். பறவைக்கும் இரையாகும் விலங்குக்கும் இரையாகும் மனிதர்க்கும் இரையாகும் தமக்கும் தாமே இரையாகும் மீன்கள், எல்லாமே பசியால் புசிக்கும் இரைகளன்றோ அதனால் கொல்லுகின்றன ஒன்றையொன்று. பசித்தாலும் பசிக்கும் ஆனாலும் புசிக்கவும் போவதில்லை அதனாலென்ன வெட்டிக் கொல்லுகின்றார் சுட்டுக் கொல்லுகின்றார் குண்டுகளும் கொட்டுகின்றார் கேடுகெட்ட மாந்தர் இவரே......! யாழ் 24 அகவைக்காக, ஆக்கம் சுவி......!
    2 points
  5. கலிபோர்னியா, நேவாடா, அரிசோனா, கொலராடோ,யூட்டா, டெக்சாஸ், போன்ற பெரும் பிரதேசங்கள், ஸ்பெயின்இன் ஆளுகையின் கீழ், மெக்ஸிக்கோவுடன் இருந்தது. பிறகு அமெரிக்க-மெக்ஸிகோ யுத்தத்தின் முடிவில், உடன்படிக்கையின் படி வெற்றி பெற்ற அமெரிக்காவிடம் வந்தது. இதற்கு ஈடாக மெக்ஸிகோ வுக்கு பணம் கொடுக்கப்பட்டது. 1700 களில் ஸ்பானிஷ் குடியேற்றங்கள் திட்டமிடப்பட்டு, மிக அதிகமாக நடைபெற்றது, இங்குள்ள native இந்தியர்களுக்கு மதமும் பரப்பப்பட்டது, பிறகுதான் ஆங்கிலேயர்களும் மற்றைய ஐரோப்பியர்களும், தங்கத்துக்காக வந்தார்கள். அதனால்தான் இங்குள்ள இடங்களின் பெயர்கள் பெரும்பாலும் ஸ்பானிஷ் மொழியில் இருக்கும். Native இந்தியர்களுக்கு சொந்தமான இடங்களுக்காக ஸ்பானியர்களும் ஆங்கிலேயர்களும் அடிப்பட்டுக்கொண்டார்கள் இன்று ஓக்லண்ட் மியூசியம் பார்க்க போயிருந்தேன். இங்கே @நீர்வேலியான் எழுதியது அங்கு படமாக விபரமாக இருந்தது. ஆரம்பத்தில் ஏறத்தாள அரைவாசி அமெரிக்கா கியூபா உட்பட மெக்சிக்கோ வசமே இருந்துள்ளது. 1848இல்த் தான் விடுதலையாகியுள்ளது.
    2 points
  6. இவ்வருட 'துபை எக்ஸ்போ 2020-இளையராஜா கலந்துகொண்டு இசைக் கச்சேரி செய்யவிருக்கிறார்' என சென்ற வாரம் அறிந்தவுடன் எனக்கு இருப்பு கொள்ளவில்லை.😉 சுமார் 12 வருடங்களுக்கு முன் ஏ.ஆர்.ரகுமான் இசைக் கச்சேரியை துபையில் பார்த்த இனிய அனுபவத்தால், இம்முறை இசைஞானி கச்சேரி என்பதால் '80களில் வந்த இனிய பாடல்களை நேரில் கேட்கலாம்' என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.😎 சென்ற வாரமே 'எக்ஸ்போ-2020' தளத்திற்கு சென்று கச்சேரி நடக்கப்போகும் இடத்தை பார்வையிட்டு வந்துவிட்டேன். மிக அருமையான எற்பாடுகள்..! ஜூப்ளி பார்க் இன்று அலுவலக திட்டப்பணிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு பிற்பகல் 2 மணிக்கே சென்றுவிட்டேன்.. பல நாடுகளின் காட்சிதளங்களை(Pavilions) பார்வையிட்டுவிட்டு மாலை 5 மணிக்கு இளையராஜா கச்சேரி நடைபெறப்போகும் ஜூப்ளி பார்க்கிற்கு வந்து பார்த்தால் அப்பொழுதே பலர் கூடிவிட்டனர். இரவு 9 மணிக்கு நடைபெறப்போகும் நிகழ்ச்சிக்கு மாலை 5 மணிக்கே ரசிகர்கள் கூட்டமா..? வேறு வழியின்றி அங்கே, அப்பொழுதே அமர்ந்துவிட்டேன்.. 4 மணிநேர காத்திருப்பிற்கு பின், இளையராஜா மேடையில் கலைஞர்களுடன் தோன்றினார்..! அரங்கமே இசை ஒலியாலும், கரகோசத்தாலும், திரையில் ஒளி வெள்ளத்தாலும் அதிர்ந்தது.. சும்மா சொல்லக்கூடாது.. மேடையின் இசை அமைப்பு, ஒலி சாதனங்களின் துல்லியம் மிக அற்புதம்..ஒவ்வொரு 'ட்ரம் பீட்'களும் நம் நெஞ்சை தாக்கி அதிர வைத்தன. இளமை இதோ இதோ.. ராக்கம்மா கையைத் தட்டு.. மடை திறந்து.. தண்ணித் தொட்டி தேடி வந்த.. ஆத்தா ஆத்தோரமா.. பொதுவாக எம்மனசு தங்கம்.. மேலே குறிப்பிட்ட பாடல்களுக்கு ரசிகர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். இளையராஜா குழுவினர் மிக அற்புதமாக பாடினர்..ஒலியால் இசையால் அக்களமே நனைந்தது.. பலநாட்டு ரசிகர்களும் ஆரவாரித்து ரசித்தனர்.. முடிவில் மேடையின் ஒலி, ஒளியமைப்பை பலரும் பாராட்டினர்.. சில பிறமொழி பாடல்களை தவிர அனைத்துமே அருமை. 3 மணிநேரம் போனதே தெரியவில்லை. இனிய இரவாக அமைந்து, இசையில் நனைந்து, அதிகாலை வீடு வந்து சேர்ந்தேன்..! படங்கள் உதவி: என்னுடைய ஐபோன் 13. 😍
    1 point
  7. மற்றவனின் சொத்துக்களை களவெடுத்து திண்டு ஏப்பம் விடுற இனம்தான் ஆங்கிலேய இனம். களவெடுத்து தின்னுறது எண்டது அதுகளின்ரை ரத்தத்திலை ஊறினது.ஆசியாவை பிடிச்சுதுகள் களவெடுத்துகள்.ஆபிரிக்காவை பிடிச்சுதுகள் அங்கையும் களவெடுத்துகள்.வட அமெரிக்காவுக்கு போச்சுதுகள். அங்கை களவெடுக்காமல் அங்கை வாழ்ந்த செவ்விந்திய இனத்தையே அழிச்சுதுகள்.இது தங்கடை நாடு எண்டுதுகள்...அவுஸ்ரேலியாவுக்கு போச்சுதுகள் அங்கையும் அதே வேலையை செய்துகள்.அங்கை இருந்த மூதாதையரை அழிச்சு ஒடுக்கி அதையும் தங்கடை நாடு எண்டுதுகள். இன்னொரு இனத்தை அழிச்சு சூரியன் அஸ்தமிக்காத இராச்சியம் எண்டுதுகள்.களவெடுத்த கோஹினூர் வைரத்தை கிழவி இப்பவும் தலையிலை வைச்சுக்கொண்டு ரோசம் மானமில்லாமல் திரியுது.கேட்டால் பரிசாய் தந்தவையாம். இவ்வளவு *** (சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்) வேலையளை செய்த ஆங்கில உலகத்துக்கு வக்காளத்து வாங்குது ஒரு கூட்டம்.
    1 point
  8. குமாரசாமி அண்ணே.... காணொளியின், 3 வது நிமிடத்தில், அறை வாசலில்... உள்ள, மான் கொம்பில்... 2 சால்வை தொங்குகிறது. இதன் அர்த்தம் என்ன?
    1 point
  9. இதை வாசித்து... அழுவதா, சிரிப்பதா... என்று தெரியவில்லை. 😢 🤣 உங்களுக்கு... எப்படி, இருக்கு? 🧐
    1 point
  10. நுண்செயலிகளின் வகைகள்: பொதுவாக நுண்செயலிகள் இயங்கும் வேகத்தை, "ஜிகா ஹெர்ட்ஸ்" (Ghz) என்று கடிகார அளவீட்டு வேகத்தில் குறிப்பிடுவார்கள்.நுண்செயலிகளின் உள்ளீட்டு வடிவமைப்பும் பலவித ஆராய்ச்சி முன்னேற்றங்களின் பயனாக காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வருகிறது. இவற்றை தலைமுறை மாற்றம் எனவும் குறிப்பிடுவது உண்டு. உதாரணமாக, முதல் தலைமுறை நுண்செயலிகள்(First Generation Processors) 1971ம் ஆண்டில் ஆரம்பித்து இதுவரை 50 வருடங்களில் 12வது தலைமுறை நுண்செயலிகள்(12th Generation Processors) சந்தைக்கு வந்துவிட்டன. "பழையன கழிதலும், புதியன புகுதலும்.." போன்று இப்பொழுது 10 வது தலைமுறைக்கு முன்பிருந்த நுண்செயலிகளைக்கொண்ட கணணிகளை சந்தையில் யாரும் வாங்குவதில்லை. அதேபோல நுண்செயலிகள் உள்ளீட்டு கட்டளைகளை நிறைவேற்றும் செயல்முறை(Internal processing power) வடிவமைப்பும் 4பிட் (4Bit) வகையில் ஆரம்பித்து 4, 8, 16, 32 Bit என ஒவ்வொருவகையாக பரிணாம வளர்ச்சியடைந்து இப்பொழுது பயனாளர்களின் பொது சந்தையில் 64பிட் (64Bit) நுண்செயலிகள் வரை வெளிவந்துவிட்டன. இவ்வகை பிட்(Bits)களைக்கொண்ட நுண்செயலிகளை கையாள, கணணியின் இயங்குதளமும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டுமே..? ஆகையால் கணணிகளின் இயங்குதளமும்(Operating System) அவ்வாறே மாற்றம்பெற்று இப்பொழுது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் (Microsoft Windows) இயங்குதளமும் 64பிட் வகையில் கிடைக்கின்றன. இப்பொழுது ஒரு சந்தேகம் வரலாம், 64பிட்(Bit) நுண்செயலிகளைக் கொண்ட கணணியில் 32பிட்(Bit) இயங்குதளத்தை(Operating System) நிறுவ இயலுமா..? அது செயல்படுமா..? எனக் கேட்டால், நிச்சயம் செயல்படும், ஆனால் இது 'யானை பலத்தை பசுவின் பலமாக குறைத்து பயன்படுத்துவது' போன்றது. இன்னொரு முக்கிய விசயம், 32பிட் (Bit) நுண்செயலிகளைக்கொண்ட கணணியில் 64பிட்(Bit) இயங்குதளத்தை(Operating System) நிறுவ முடியாது. நுண்செயலி பயனாளர்கள் சந்தையில் இன்டெல்(Intel) நுண்செயலிகளைக்கொண்ட கணணிகளே மிக அதிக பயனாளர்களை கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆகையால இனிவரும் திரிகளில் இவ்வகை நுண்செயலிகளை பற்றியே பார்ப்போம்..! கீழேயுள்ள படம் இன்டெல்(Intel) நுண்செயலிகளின் சில வகைகளை விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள்.. உங்களில் எத்தனை பேர் இம்மாதிரி தொழிற்நுட்ப விடயங்களை தீர விசாரித்து கணணிகளை வாங்குவீர்கள்..? அல்லது கடைக்காரர் சொல்வதை அப்படியே நம்பி வாங்கிவிடுவீர்களா..? 🤔 இத்திரிகளின் முடிவில், 'எம்மாதிரி சிறந்த கணணிகளை ஒவ்வொரு பட்ஜெட்களுக்குள் முக்கிய அம்சங்களை கருத்தில்கொண்டு ஒப்பீடு செய்து வாங்குவது..?' என சொல்கிறேன்.. அதற்கு முன்னால் நான் சொல்லிவரும் விடயங்கள், உங்களுக்கு புரிகிறதா..? என சொன்னால் நல்லது.😇 இல்லையெனில், நான்பாட்டுக்கு "குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதை"யாக எழுதி இத்திரி முடிந்துவிடும்..! 😛
    1 point
  11. நோ........முட்களின் ஊடே ரோஜாபோல் போர் தன்பாட்டுக்கு நடக்கட்டும், நீங்கள் தொடருங்கள் மாஸ்டர் பலன் தானாக கொட்டும்......! 😁
    1 point
  12. அருமை சுவியர் .... என்றும் தீராது மனிதனின் அதிகார பசி ஆக்கிரமிப்பு பசி ஆத்மீக பசி புகழ் பசி கெளரவ பசி இவை இருக்கும் வரை கொலை களம் நிரந்தரம்
    1 point
  13. ரஷ்ய உக்ரைன் போர் சாம்பிள் தான் ஒரிஜினல் போர் சீன தைவான் தான் மேற்கு உலகு என்ன செய்யும் என்பதை இப்போ நூல் விட்டு பார்க்கிறார்கள் ரஸ்யாவிற்கு பொருளாதார தடை விதித்தது போல எழுந்த மாத்திரத்தில் சீனாவுடன் முண்ட முடியாது . சீனவிடம்தான் ரர் மாற்றியல் கையிருப்பில் உண்டு தைவான் போரும் தொடங்கினால் மேற்குக்கு ரேர் (rare Material) மாற்றியலும் இல்லை சிப்பும் (chip) இல்லை. இப்போதே அமெரிக்க ஜேர்மன் வாகன உற்பத்திகள் சிப் தட்டுபாடடால் தள்ளாடுகிறது இதில் இன்னொரு சோதனையும் செய்து அவர்களுக்கு வெற்றி ஆகி இருக்கிறது அதுதான் ஆப்ரிக்க தெற்காசிய நாடுகள் மேற்குக்கு எதிராக அல்லது ஆதரவு இல்லாத வாக்கு செலுத்தி இருக்கிறார்கள் ஈரான் ரஷ்ய வெனிசுவேலா நைஜீரியா எரிபொருள் கையிருப்பு அண்ணளவாக 50% ஆகும் சீனா அழகாக புள்ளிவைத்து வருகிறது கோலம் போடும்போதுதான் இந்த வெங்காயங்களுக்கு போர் மூலம் அழிவுதான் மிஞ்சும் என்பது புரியும்
    1 point
  14. சுவி இதை வாசிக்கும் போது ஏனோ 10 வயது சிறுமி பசியால் எடுத்து சாப்பிட்டு அடி,உதை,வெட்டு வாங்கியது தான் நினைவுக்கு வருகிறது.
    1 point
  15. தயவு செய்து இதை பதிவத்துக்கு மன்னித்து கொள்ளுங்கள் நீங்கள் கூறும் அதே குற்றத்தையே நீங்களும் இன்னும் சிலரும் செய்கிறீர்கள் மேற்குலகின் குள்ள நரித்தனத்தை கூற வந்தவர்களுக்கு .... ரஷ்ய ஆதரவாளர்கள் படடம் ஏன் சூடுகிறீர்கள்? இது கருத்து வறட்ச்சி இல்லையா? சிலர் அதுக்கும் கீழே இறங்கி தனிமனித தாக்குதலாக கூட எழுதுகிறார்களே? நீங்களும் சுட்டி காட்டி இருந்தீர்கள் (நன்றி) மேலோட்ட்மாக இங்கு வாசிக்கும்போது யாரும் ரஷ்ய படை எடுப்பை ஆதரிக்கவில்லை ஆனால் இந்த மேற்கு உலகின் குள்ள நரித்தனத்தைத்தான் எதிர்க்கிறார்கள் இந்த போரில் அழிவது உக்கரைன் அழிக்கப்படுவது ரஷிய + மேற்குலகால் இதில் யார் லாபம் பெறுகிறார்கள் ? என்ற அரசியல் கண்ணோட்டம் உங்களிடம் இல்லாததை எண்ணி கொஞ்சம் மன சஞ்சலம் இன்று உதவி எனும் பேரில் மேற்கு நாடுகள் அள்ளிக்கொடுத்து உக்ரைன் இராணுவம் ஏவும் ஏவுகணைகள் அனைத்தும் இன்னமும் 2-3 வருடங்களில் காலாவதியாக இருக்கும் அமெரிக்க ரைத்தான் (Raytheon) லொக்கி மார்ட்டின் Lockee Martin) போயின்( Boeing) மற்றும் பிரிடிஷ் பி எ யி (BAE) தயாரிப்புகள் ஆகும். இவைகள் அனைத்தும் அமெரிக்க பிரித்தானிய குடிகளின் வரிப்பணத்தில் அவர்களிடம் கொள்வனவு செய்து காலாவதியாக இருந்த இவற்றை பல மில்லியன் டாலர்கள் லாபமும் போனஸும் அவர்களுக்கு கொடுத்து வாங்கி அயல் நாடான ரஸ்யாவிடம் பகையை வளர்க்க உக்கரைன் புகைவிட்டுக்கொண்டு இருக்கிறது ஜெர்மனி பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் 35% மேலான இயறகை வாயு மற்றும் எரிபொருளை ரஸ்யாவிடம் இருந்தே பெறுகிறார்கள் .... ஒத்து ஊதிய பலனுக்கு இனி சொந்த நாட்டு மக்களுக்கு விலை உயர்வையும் வரியை உயர்த்துவதை தவிர வேறு வழி இல்லை என்றாலும் வரும் டிசம்பர் மாத குளிர்காலம் தொடங்கும்போது பற்றாக்குறையை தீர்க்க இதுவரை எந்த தீர்வும் இல்லை. இப்போது இலங்கையை பரிசக்கிக்கும் ஐரோப்பிய வாழ் தமிழர்கள் அதே போன்றதொரு நிலைக்குள் சிக்க குறைந்த பட்ஷம் 35% சாத்தியம் உண்டு. இல்லையேல் இவர்கள் மீண்டும் ரஸ்யாவிடமே கையேந்த போகிறார்கள் அப்போ இந்த போர்க்குற்ற பைல்கள் அலுமாரிக்குள் வைத்து இறுக்க பூட்டிடப்படும் . அகதிகள் ஆகிய உக்ரைனியர்கள் நாடு நாடாக அலைவார்கள் இப்போ பூ கொடுத்து அழைப்பவர்கள் அவர்கள் பசிக்காக திருடியும் வருமானம் தேடி குறைந்த ஊதியத்திற்கு சமரசம் செய்து வேலைகளை பெறும்போது தங்கள் வேலைகளை திருடுகிறார்கள் நாட்டை சீரழிகிறார்கள் என்று குமுறுவார்கள். அழிந்துபோன உக்ரைனை கட்டி தருவதாக கூறி (இலங்கைக்கு சீனா வந்ததை கசப்புடன் கடன் வலையில் சிக்க வைக்கிறார்கள்) என்று முதலை கண்ணீர் விட்டவர்கள் கிளம்புவார்கள் அதே ஐ எம் எப் கடன் திட்டத்துடன் மாறாக ரஸ்யா உக்ரைனை கைப்பற்றினாலும் ... அழிந்த உக்ரைனின் அழிவுகள் அழிவுகள்தான் ஐநாவில் யாராலும் வாய்திறக்க முடியாது காரணம் புட்டின் பேசுவதில் நியாயம் இருக்கும் குள்ளநரிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் வார்த்தை பிரயோகம் இருக்கும். படையெடுப்புக்கு முதல்நாள் இரவு புடின் பைடனுடன் ஒன்றரை மணி நேரம் பேசினார் அவர் தவறாக பேசியதை (அவர் தப்பானவராக இருந்தால்) நாட்டு மக்களுக்கு போட்டு காட்டலாமே ? முடியாது. ரஷிய செய்தி நிறுவனங்களை இருட்டடிப்பு செய்வதை தவிர மேற்குற்கு இப்போ வேறு வழி இல்லை ......அதைத்தான் செவ்வனே செய்கிறார்கள். ஒவ்வாரு 10 வருடத்துக்கு ஒருமுறை இரு பெரிய நாடுகளுக்கான போர் ஆயுத தயாரிப்பாளர்களுக்கு வேண்டும் இல்லையேல் பெரும் நஷடம் கொண்டு பல ஆயுதங்கள் காலாவதியாகிப்போகும் ஒன்றில் நண்பராக்கி பெரும்தொகையை விற்பார்கள் ( 80 களில் சதாம் இப்படித்தான் மாட்டினார் என்றால் இப்போ சவூதி அரேபியா தைவான்) இல்லையென்றால் ஜனநாயகத்தை கொண்டுவர அமெரிக்க தனது பக்கவாக்கியங்களுடன் (ஆதரவு நாடுகள்) தானே எங்காவது இறங்கும் அல்லது இப்படி வடிவேலுவை மாட்டி விடுவதுபோல உக்கிரைன் பாகிஸ்தான் போன்ற நாடுகளை இழுத்து விடுவார்கள். விளையாட்டு விளையாடாக ஒருபுறம் இருக்க தற்போதைய விலைவாசியை சமாளிக்க ராய்தான் லொக்கி மார்டின் பி ஏ ஈ கம்பெனிகளின் பங்குகளை வாங்கி கொள்ளுங்கள் இப்போதே 6-10% லாபம் போர் தொடங்கிய நாளில் இருந்து வந்துள்ளது https://stockcharts.com/c-sc/sc?s=RTX&p=D&b=5&g=0&i=0&r=1647709143901
    1 point
  16. நுண்செயலியை பற்றி.. நுண்செயலி(Micro Processor) என்பது ஒருவகை 'எலக்ட்ரானிக் சர்க்யூட்' ஆகும், இது எலக்ட்ரானிக் சாதனம் செயல்பட வேண்டிய சக்தியை செயலாக்குகிறது. இது கட்டளைகளையும், நிரல்களையும் சரியான முறையில் செயல்படுத்துகிறது. ஒரு கணினியின் மத்திய செயல்முறை அலகு (CPU) ஒரு நுண்செயலியின் எடுத்துக்காட்டு. இந்த எலக்ட்ரானிக் கூறு, ஒரு கணினியின் மதர்போர்டின் ஒரு பகுதியாகும். இது ஆயிரக்கணக்கான மற்றும் சில நேரங்களில் மில்லியன் கணக்கான டிரான்சிஸ்டர்களுடன் ஒருங்கிணைந்த சுற்று (Integrated Circuit) என்று வகைப்படுத்தப்படுகிறது. ஒரு சாதனத்தில் அதன் செயல்பாட்டின் முக்கியத்துவத்துடன், சில நேரங்களில் மனிதர்களின் மூளை மற்றும் இதயத்துடன் ஒப்பிடும்போது, "சிறியது" என்பதைக் குறிக்கும் அதன் ஆங்கில அர்த்தத்திற்கு இது மைக்ரோ என்று அழைக்கப்படுகிறது. நுண்செயலிகளை அவற்றின் உள் மற்றும் வெளிப்புற வேகத்தால் வேறுபடுத்தி அறியலாம். இது வினாடிக்கு செயலாக்கப்பட்ட பிட்(Bits)களையும், நினைவக அணுகல் திறன் (Bus Speed) மற்றும் கணணி மட்டத்தில் செயலாக்கக்கூடிய வழிமுறைகள் மற்றும் நிரல்களின் திறனையும் தீர்மானிக்கிறது. நுண்செயலிகளின் வகைகளும் உற்பத்தியாளரால் வேறுபடுகின்றன. நுண்செயலியை வடிவமைத்து, உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் பெரும்பாலான நிறுவனங்கள் இன்டெல் (intel), ஏ.எம்.டி(AMD) மற்றும் குவால்காம்(Qualcomm). ஒவ்வொரு வகை நுண்செயலியும் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தையும், உள் தரவின் நினைவக அணுகல் அகலத்தையும் கொண்டுள்ளது. இவை Mhz என்று கடிகார வேகம் போல அளவிடப்படுபவை.
    1 point
  17. கணணியின் உட்புற "மதர்போர்டு" (MotherBoard) "மதர்போர்டு" என்பது கணணியின் அடித்தளம்(Foundation) போன்றது. நமது வீட்டை கட்ட திட்டமிடும்போது என்னென்ன அறைகள், எத்தனை தளங்கள், பின்னாளில் வீட்டை விரிவாக்கம்(Extension) செய்ய எப்படி இப்பொழுதே அஸ்திவாரம் போடுவது என சிந்தித்து கட்டுவதுபோல தான் கணணியின் மதர்போர்டும். இதனை வாங்கும்போதே சிறந்த போர்டை தேர்ந்தெடுப்பது மிக அவசியம். ஏனெனில் இந்த போர்டு மீது இணைக்கும் மற்ற உபகரணங்கள்(Additional cards) நாம் விரும்பும் வேகத்தில், வசதியில் செயல்பட இந்த போர்டு வடிவமைப்பை சரிபார்த்து வாங்க வேண்டும். எனது கையில் இருப்பதுதான், கணணியின் மூளை என சொல்லப்படும் நுண்செயலி (Micro Processor) இது 15 வருடங்களுக்கு முன் சந்தைக்கு வெளிவந்த "இன்டெல் கோர்-2 (Intel Core 2)" என்ற வகையை சார்ந்தது. கணணியில் பிரித்தெடுத்த Intel Processor நுண்செயலி - மேற்புறமும், அடிப்புறமும். நுண்செயலி மதர்போர்டில் உட்காரும் இடம்.
    1 point
  18. முதலில் என்னிடமுள்ள டெல்(Dell Optiplex 860) கணணியை பிரித்து அதன் உட்பாகங்களை படம் எடுத்து இணைக்கிறேன்..((இதுவும் 14 வருட பழமையான கணணிதான்). (அடுத்து வரும் திரிகளில் நானே உதிரி பாகங்களை வாங்கி பொருத்திய கணணியை விளக்குகிறேன்.) கணணியின் முன்பக்க, பின்பக்க தோற்றங்கள்.
    1 point
  19. கணிப்பொறியின் முக்கிய பகுதி இதயமாக செயல்படும் இந்த நுண்செயலி (Micro Processor) என்றால் என்ன..? நுண்செயலி (Micro Processor) அல்லது முத்துச் சிப்பி என்பது ஒரு கணினியின் மைய செயல் அலகின் (CPU-Central Processing Unit) பெரும்பாலான அல்லது அனைத்து செயல்பாடுகளையும் ஓர் ஒற்றை ஒருங்கிணைந்த சுற்றில் (IC -Integrated Circuit அல்லது மைக்ரோ சிப்) தன்னகத்தே கொண்டதாகும். மைக்ரோ சிப் முதல் நுண்செயலி 1970 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டு அதை மின்கணிப்பான்களில் பயன்படுத்தினர். அதில் 4 பிட் (Bit) வார்த்தைகளில் இரட்டைக் குறியீட்டு முறையில் குறியீடு செய்யப்பட்ட தசம(BCD) எண்கணிதம் பயன்படுத்தப்பட்டது. டெர்மினல்கள்(Terminals), அச்சுப்பொறிகள், பல்வேறு வகையான தானியங்கு முறைமைகள் போன்ற 4 பிட் மற்றும் 8 பிட் நுண்செயலிகளின் பிற பல உட்பொதிக்கப்பட்ட பயன்பாடுகள் விரைவில் அதைத் தொடர்ந்து உருவாயின. 16 பிட் அணுகலம்சம் கொண்ட செலவு குறைந்த 8-பிட் நுண்செயலிகள் 1970களின் மத்தியில் மைக்ரோ கணினிகள் உருவாவதற்கும் வழிவகுத்தன. கணினி செயலிகள் சில எண்ணிக்கை முதல் சில நூறுகள் வரையிலான டிரான்சிஸ்டர்களுக்கு சமமான சிறிய மற்றும் நடுத்தர அளவு கொண்ட IC களைக் கொண்டே நீண்டகாலமாக கட்டமைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. மொத்த CPU அலகையும் ஒரு சிப்பில் ஒருங்கிணைத்ததால், செயலாக்கத் திறனின் செலவு வெகுவாகக் குறைக்கப்பட்டது. எளிய அமைப்பில் இருந்த தொடக்க காலத்திலிருந்து நுண்செயலிகளின் திறனில் ஏற்பட்ட அதீத அதிகரிப்பானது, மிகச் சிறிய உட்பொதிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கையடக்க சாதனங்களில் இருந்து மிகப் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் வரையிலான அனைத்திலும் ஒன்று அல்லது அதற்கதிகமான நுண்செயலிகள் செயல் அலகுகளாக அமைந்து புரட்சி செய்ததால், பிற வகை கணினிகள் அநேகமாக வழக்கழிந்துபோக வழிவகுத்தது. 1970களின் தொடக்கத்திலிருந்து, நுண்செயலிகளின் திறனில் ஏற்பட்ட அதிகரிப்பானது மூரி விதியைப் பின்பற்றியே அமைந்துள்ளதாக தெரிகிறது, குறைந்தபட்ச செலவிலான உபகரணச் செலவைப் பொறுத்து, ஓர் ஒருங்கிணைந்த சுற்றின் சிக்கலான தன்மையானது ஒவ்வொரு ஆண்டும் இரட்டிப்பாகிறது என அவ்விதி கூறுகிறது. மூலம்: விக்கிப் பீடியா
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.