Jump to content

Leaderboard

  1. அன்புத்தம்பி

    அன்புத்தம்பி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      5453


  2. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      76765


  3. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      43245


  4. colomban

    colomban

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      3246


Popular Content

Showing content with the highest reputation on 03/30/22 in all areas

  1. 1989 ஆண்டு, எனக்கு அப்பொழுது 17 வயது நான் சாதரணதரம் எடுத்து விட்டு இருந்த காலம். ஒரு மருந்தாளராக வரும் ஆர்வம் என்னிடமிருந்தது. மேலும் குடும்பத்தின் வறுமை நிமித்தமாக கொழும்பில் ஒரு பிரதான வீதியில் அமைந்துள்ள அந்த தனியார் கிளினிக்கில் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த சிறிய கிளினிக்கில் என்னுடன் சேர்த்து நாங்கள் நான்கு பேர் வேலை செய்தோம். இரண்டு நர்ஸ், ஒர் டாக்டர். ஒரு நர்ஸ் நடிகை சரிதா போல் இருப்பர். மற்றவர் இளமைகாலங்கள் பட நடிகை சசிக‌லா போல் இருப்பார். காலை 8 மணிக்கு திறக்கும் இந்த சிறிய க்ளினிக் மதியம் 1 மணிவரை பின்பு 3 மணிமுதல் இரவு 9 மணிவரை. இப்பொழுது நான் செய்யும் தொழில் கணனியில் முன் உட்கார்ந்து வேலை செய்வது அது ஒரு இயந்திரம் மனித உணர்வுகளை வெளிப்ப்டுத்தாது. மனிதர்களை தொட்டு வேலை செய்யும் போது கிடக்கும் திருப்தி அலதியானது. காலபோக்கில் இங்கு நான் வேலை செய்து பழகியதில் ஒரு சிற‌ந்த நான் மருந்து கட்டுபவராக மாறினேன். பல்வேறு காயங்களை கண்டுளேன். சில வெட்டுக்காயங்களாக இருக்கும், சில எரிகாயம் இதற்கு நெட் போன்ற ஒரு களிம்பை வைத்து திறந்து காற்றுப்பட வேண்டும். சிலர் அடிபட்டு வீக்கத்துடன் வருவார்கள், சிலர் விளையடும் போது காயம் ஏற்பட்டு வருவார்கள். சிலர் விபத்தில் அடிபட்டு தோல் உரிந்து வருவார்கள், சிலரோ கை / கால் சுளுக்க்கி / மூட்டு விலகி வருவார்கள் இன்னும் சிலர் கற‌ல் பிடித்த தகரம் வெட்டி / ஆணி குத்தி இரத்தத்துடன் வருவார்கள். இவர்களுக்கு டெட்னஸ் ஊசி அடிக்கப்படும். இவர்களுடன் அன்பாக பேசிக்கொண்டே வலி தெரியாமல் நான் மருந்து போடுவேன். கத்திரி கோலால் பஞ்சை பிடித்து ஸ்பிரிட்டில் முக்கி எடுத்து இலேசாக துடைப்பேன் சீழ் வெண்ணிறத்தில் பொங்கி வரும், வலியாலும் / வேதனையினாலும் துடிப்பார்கள். பின்பு புண்ணிற்க்கு ஏற்ப களிம்பு அல்லது பவுடர் போட்டுவிட்டு,பிளாஸ்டர் அல்லது பன்டேஞ் கட்டப்படும். ஆண் பெண் சிறுவர்கள் என பலருக்கு நான் மருந்திட்டுள்ளேன். விசேடமாக நீரிழிவு நோயளிகளுக்கு புண்கள் ஆறாது. ஒருவித தூர் நாற்றம் அடிக்கும். பல்லை கடித்து கொண்டு பொறுமையாக போடுவேன் . 15 வயது மீன் விற்கும் சிறுமியும் என்னிடம் வந்து மருந்து போடுவாள். மீன் நாற்றம் இவள் கூடவே வரும். இவள் வந்தால் மீனம்மா வருகின்றாள் என பட்டப்பெயரால் அழைப்போம். நர்சும் உதோ உன் ஆள் வந்து விட்டள் போய் போய் களிம்பை தடவி மருந்தை கட்டு என கூறி சிரிப்பார்கள். அதே நேரத்தில் பக்கத்தில் உள்ள மினி தியெட்டரில் இருந்த்து மீனம்மா..மீனம்மா கண்கள் மீனம்மா, தேனம்மா தேனம்மா என பாடல் ஒடும் எனக்கோ மிகவும் எரிச்சலாக இருக்கும். ஒரு நாள் வியாழக்கிழமை மதியம் 6:30 அளவில். பக்கத்தில் இருந்த கத்தோலிக்க தேவாலய ஒலிப்பெருக்கியில் திருப்பலி சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. "அண்டவர் உங்களோடு இருப்பராக என பாதர் சொல்ல உமது ஆன்மாவோடும் இருப்பாரக என சனம் பதிலுரைத்தது". அப்பொழுது அவர் உள்வந்தார் ஒர் 27 அல்லது 28 வயதிருக்கும். கருத்த நிறம், மெலிந்த தேகம். போதைவஸ்துவிற்கு அடிமையான ஒருவருரின் கண்கள் போல் காணப்பட்ட்டது. டாக்ட‌ரிடம் போய்வந்த பிறகு, மருந்து கட்ட என்னிடம் வந்தார். புறங்கை பக்கம், காலில் காயங்கள் இருந்தன. காயம் சிறிது வித்தியாசமாக காணப்பட்டது. ஆறாமல் நீண்டகாலமாக‌ இருக்கின்றது. நான் பேச்சை கொடுத்தவாரே காயங்களை டெட்டோலினால் துடைத்தேன். முகத்தில் எந்த வித சலனமும் இல்லை. குத்திட்ட‌ பார்வை. இவனுக்கு வலிக்கவேயில்ல்லையா.. பெயரும் சொல்கின்றார் இல்லை.. எந்த ஊர் என்றும் சொல்கின்றான் இல்லை. இப்படி போதை வஸ்துவுக்கு அடிமைகியுள்ளானே என நினத்த்துக்கொண்டேன். வராத்தில் இரண்டு முறை வருவார். வருமுன் அவரை குளித்து விட்டு, காயத்தை கழுவி சுத்தப்படுத்தி விட்டு வரச்சொன்னேன். சில வார்ங்களின் பின் அவருடைய ஒரளவு குணமடைய தொடங்கியது. அனாலும் இவர் ஏன் சகஜாமாக பேசாமாட்டேன் என்கின்றார் என தெரியவில்லை. சில வாரங்கள் இப்படி ஓடியது. கடைசி நாள் நான் அவரது காயத்தை கழுவிவிட்டு, இப்பொழுது காயம் ஆறிவிட்டது இனி மருந்து போட தேவையில்லை இதுவே கடைசி நாள் என்றேன். உங்களை பற்றி எதுவுமே சொல்லவில்லையே என கேட்டு சிரித்தேன். கூர்ந்து பார்த்தார் என்கைகளை பற்றிக்கொண்டார். கண்ணீல் இருந்து கண்ணீர் ஆறாக வழிந்தது, ஆழ அரம்பித்துவிட்டார். தம்பீ நான் யாழ்பாணத்தில் வீட்டில் இருக்கயில் ஆமி எங்கள் குடும்பத்தை சித்திரவதை செய்தது. எனது இரண்டு அக்காமர்களை ஆமி என் கண் முன்னால் கதற‌ கதற‌ அடித்து, துன்புறுத்தி வன்புனர்வு செய்தது. எங்கள் குடும்பத்தை கடுமையாக சித்திரவதை செய்தார்கள். அவர்களில் சில தமிழர்களும் இருந்தார்கள். என்னையும் கடுமையாக சித்திரவதை செய்தார்கள். சேர்டை திறந்து உடலில் பல்வேறு பாகங்களை காட்டினார். உடல் நிறைய தழும்புகள் காணப்பட்டன. அதை பார்த்து நான் அதிர்ந்து போய் விட்டேன். பலவீனமான அவரது உடல் நடுங்கியது. அவரது கைகளை பிடித்து ஆறுதல் படுத்தினேன். (இக்காலப்பகுதியில் இந்திய ராணுவம் இலங்கையில் களமிரக்கப்ட்டிருந்தது) மேலும் அவர் கூறினார் "நான் இங்குதான் அருகிளுள்ள லொட்சில் தங்கியுள்ளேன், ஒருவாறு நான் தப்பி வந்துவிட்டேன். வெளிநாடு போவதற்காக இங்கு வந்துள்ளேன். இன்னும் சில நாட்களில் நாட்டை விட்டு போய்விடுவேன் என்றார்". என்கையில் சில ரூபாய் நோட்டுக்களை வைத்து அழுத்தினார். அப்போது வேண்டாம் என மறுக்கவில்லை ஏற்றுக்கொண்டேன். அந்த வறுமையான காலப்பகுதில் அது எனக்கு டியுஸன் பீஸ் கட்ட தேவைப்ப்ட்டது. ட்ரெஸ்ஸிங் ரூம் திரை போட்டு மறைக்கப்ப்ட்டிருந்தபடியால் இருட்டில் எங்கள் உரையாடலை யாரும் கவனிக்கவில்லை. அவரை ஆசுவசப்ப்டுத்தி தன்னம்பிக்கையூட்ட்டினேன். இப்பொழுது உற்சாகத்துடன் எழுந்தார் ட்ரெஸ்ஸிங் ரூம் திரையை தூக்கினேன் அறையினுள் வெளிச்சம் வந்தது. என மனதிலும் ஓர் வெளிச்சம் பரவியது. கொழும்பன் ‍ அனுபவம்-1
    8 points
  2. எந்த இடத்திலும் பொதுமக்கள் கொல்லப்பட்டால் அதைத்தவறு என்று சொல்லுவதில் ஓர் பழையும் இல்லை. இதைத்தவிர இந்த இடத்தில் மேற்குலம் ஒன்று சேர meriupol massacre என்று வர்ணிக்கும் போது அதை முள்ளிவாய்க்காலுடன் தோடர்புபரத்தி மேற்குலக ஆதரவை எடுக்க வேண்டும். நான் பல மேற்குலக நண்பர்களோடு கதைக்கும் போது இத்த உதாரணங்களை சொல்லி videoஅவை அனுப்பும் போது தான் அவர்களுக்கு இதுபற்றிய விளக்கம் வந்தது. அது மட்டுமல்ல இரஸ்ஸியா தான் இலங்கையை ஐநா போர் குற்றத்திலிருந்து காப்பாற்றுகின்றது. அது போதும் எனக்கு யுக்கிரேனை ஆதரிப்பதற்கு. ரஞ்சித் நல்ல ஆக்கம்👌
    4 points
  3. அதெல்லாம் முடியாது.. கருத்து எல்லாம் எழுதாம இருக்கமுடியாது.. நாலுபேர் வந்து சொல்லுவினமாம் நாங்கள் கருத்து எழுதாமல் இருக்க யாழ் என்ன அந்த நாலுபேர் வீட்டு அப்பன் ஆத்தா சொத்தா..? நிர்வாகம் அடிச்சுக்கலைக்கும் வரை நாங்கள் கருத்து எழுதிக்கொண்டேதான் இருப்பம்.. கப்பித்தன் அப்படி எல்லாம் அவசரப்பட்டு கருத்து எழுதமாட்டன் எண்டு வார்த்தையை விடாதேங்கோ.. அப்புரம் இவர்கள் உருட்டுற உருட்டை எல்லாம் வாசகர்களுக்கு மறுத்து எழுதுறது ஆராம்.. அதமாரி நாம உருட்டரப்போ மற்றவர்களும் எழுதோனும்.. அப்பதான் கருத்துக்களம் உசிரோட இருக்கும்.. சரியெண்டா சரியெண்டு சொல்லி பாராட்டுவம் தவறு எண்டால் தவறை சுட்டி காட்டி எழுதுவம்.. நாலுபேர் நாலுகருத்து எழுதி விவாதிக்காட்டி ரஞ்சித்தின்ர திரி ஒரே ஆமாப்பாட்டில சப்பெண்டு போயிடும்.. ஒருத்தனும் வாசிக்க வரான்.. இந்த ஆமாம் சாமியளை பக்கத்தில வச்சிருந்தா எப்பவும் வச்சிருக்கிறவருக்கு ஆபத்துதான்.. அதெல்லாம் முடியாது எழுதாமல் இருக்க..
    2 points
  4. நான் எழுதி முடிக்கும்வரையாவது உங்களின் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் தூற்றுதல்களையும் சற்று ஒதுக்கிவைய்யுங்கள். ஏனென்றால், உங்களின் குறுக்கு விசாரணைகளுக்குப் பதிலளிக்க முற்படுவதால் நான் எழுத நினைப்பது நீண்டு செல்கிறது. உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி!
    2 points
  5. இது ஒருவருடைய சுய ஆக்கம், அதை முழுமையாக எழுத விடாமல்; எதோ மற்றையவர்கள் ஒன்றும் அறியாத உலக விடயங்களாக இவர்களாக கருதிக்கொண்டு... சிரியா முதல் சமாறா வரை நடந்த யுத்தங்களின் படங்கள், பாவித்த ஆயுதங்கள் என்று இந்த திரியில் குப்பை கொட்டுவது அநாகரீகமாகவே தோன்றுகிறது. இதை எப்படி கையாளலாம், ரஞ்சித் தனது ஆக்கத்தை எழுதி முடிய, அந்த கட்டுரை குறித்த ஒரு பார்வை, விமர்சனமாக நீங்கள் ஒரு திரியை திறக்கலாம். அப்போது ரஞ்சித் பயன்படுத்திய தலைப்பில் இருந்து தரவுகள் வரை பல கேள்விகள் கேட்கலாம், கண்டனம் தெரிவிக்கலாம். அதுவரையிலும் அவசர உடுக்கை அடித்து உரு ஏறாமல், மற்றையவர்களுக்கும் உரு ஏற்றாமல் பொறுமை காக்கலாம். முள்ளிவாய்க்கால் அவலத்தை பொழுதனிக்கும் மனதிலும் சுமந்து , அதன் வலியையும், கொடூரத்தையும் பிறரிடம் செய்தியாக காவித்திரியும் பல நல்லுள்ளங்களையும் இந்த ஒரு உலக நடப்பு பற்றிய அவர்களின் பார்வை காரணமாய் எதோ தேசத்துரோகம் செய்தவர்கள் போல ஒரு விம்பத்தையும் காட்டுகிறார்கள்... 😥
    2 points
  6. மரியோபோல் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் இல்லை காரணம் முள்ளிவாய்க்கால் உலகநாடுகளாலும் அனைத்துலக நிறுவனங்களாலும் இலங்கைத்தீவின் தமிழ் இனத்தைக் கைவிடப்பட்டு அனைத்துத் தப்பும் வழிகளும் மறிக்கப்பட்டு நாம் இப்போது தீர்வுபெற்றுத்தா என எந்த நாடுகளின் காலகளைக் கழுவுறோமோ அதே நாடுகளது ஆதரவுக்கரம் மற்றும் இனாமாகவோ கடனாகவோ நவீன ஆயுதங்கள் கொடுப்பனவுடன் நடாத்தப்படும் உக்ரைன் ரஸ்யா யுத்தத்துடனும் அதனால் ஏற்படும் மனித அவலங்களுடனும் ஒப்பிடமுடியாது. எனினும் மனித அவலம் எங்கு நடப்பினும் அதற்காக எதிர்ப்புக் குரல் கொடுப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சார்பாகக் கருத்துக்கூறுவதும் ஆதரிப்பதும் நியாயமானது. ஆனால் ரஸ்யா எந்தவித நிபந்தனையுமின்றி தமிழர் அழிப்பிற்கு உதவியது உக்ரைனும் அதே போலவே தவிர உக்ரைனை ஆதரிக்கும் நாடுகள் அனைத்துமே தமிழர் அழிப்புக்குத் துணைபோனது இவைகளை நான் மனதில் நிற்கும்போது நான் யார்பக்கம் நிற்கவேண்டும் ? யாராவது யாழ்கள நியாயவாஙள் கூறுங்களேன் எனுனும் யுத்தம் கொடியது அதிகாரவர்க்கத்தின் அகோரப்பசிக்கு சாதாரண குஞ்சுகுருமான் உட்பட சிறுகச் சிறுகத்தேடிய தேட்டங்கள் வாழ்விடங்கள் அனைத்தையும் விட்டு அகன்று அகதியாக வேறிடம் செல்வது கொடூரத்திலும் கொடூரம். நான் வாழும் நாட்டில் பேரூர்ந்துச் சாரதியாக வேலைசெய்யும் இலங்கையிலிருந்து அகதியாகவந்து இப்போது தன்னை இந்த நாட்டில் நிலைநிறுத்திய ஒருவர் உக்ரேன் கடவுச்சீட்டுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம் என இந்த அரசாங்கம் அறிவித்தவுடன் எல்லாரும் பஸ்ஸில வந்த் ஏறத்தொடங்கிட்டுதுகள் எனச்சொல்லும்போது தான் யார் எனும் அறுவுகூட இல்லாது வாழும் ஜந்துகள்போல வாழும் இவர்கள்போல் வாழ என்னால் முடியாது. எனது மனம் உக்ரேனில் வாடும் அனைவருக்குமாகப் பிரார்த்திக்கிறது.
    2 points
  7. நீங்கள் உளமார செய்யும் கடமைக்காக உங்களைப் போற்றுகின்றேன் கொழும்பான்.நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.......! அந்த அன்பருக்கு ஏற்பட்டதுபோல் ஒரு அனுபவம் அல்லது அதைவிட அதிகமாக என்றும் சொல்லலாம். எல்லாம் எழுத முடிவதில்லை. அதே இந்தியன் ஆமி காலத்தில் ஒருவருக்கு நடந்தது தெரியும்.....அதுதான் எனக்கு உந்த இராணுவங்களையோ அன்றி அவங்கள் நாட்டில் ஏற்படும் பேரழிவுகளையோ பார்க்கும்போது மனம் மரத்து விடுகிறது.....!
    1 point
  8. 🙏 சந்தையில் கிட்டும் கணிப்பொறியின் இதயமான முத்து சிப்பி(Micro Processor) பெரும்பாலும் அமெரிக்காவிலுள்ள இன்டெல்(Intel) என்ற நிறுவனத்தால் வடிவமைத்து உற்பத்தி செய்து, இன்றுவரை பல வகை திறன் கொண்ட சிப்பிகள் (ப்ராசசர்) சந்தைப்படுத்தபடுகின்றன. சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் முதல் இவற்றை தொழில்வாரியாக பயன்படுத்த ஆரம்பித்து இன்றுவரை பல முத்து சிப்பிகளை கண்டுள்ளேன். அதில் முக்கியமானது இன்டெல் பென்டியம்(Intel Pentium) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட ப்ராசசர் மிக முதன்மையாக அதிக திறன் கொண்டது. அந்த வகை சிப்பியைக் கொண்டு நான் வடிமைத்த கணிப்பொறியை பற்றிய கட்டுரையை உங்களுக்கு சிறிய தொகுப்பாக இங்கே எழுதலாமென உள்ளேன்..🌹
    1 point
  9. 1988 மணலாற்றுக் காட்டில் வீரச்சாவடைந்த இரு போராளிகளின் வித்துடல்கள் புனித மரியாதையோடு விதைக்கத் அணியப்படுத்தப்படுவதை காண்க:
    1 point
  10. எங்கோ நடந்து செல்லும் போராளிகள் காலம்: அறியில்லை
    1 point
  11. வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது. கள்ளச்சாவி போட்டாவது......! வீதியைப் பெரிதாக்க வேலியை வெட்டுகிறார்கள் வேலிக்கு மேலால் வாசமில்லா வண்ணம் கொண்ட போகன்வில்லா மனமில்லை ஆனால் மயக்கும் அழகு தரையில் விழுந்த கொடியில் சிலிர்த்து நிற்கும் பெரிய முட்கள் பாக்கியமும் பர்வதமும் வேடிக்கை பார்க்க, வருகின்றாள் செல்லாத்தை கொடிய முட்கள் விலத்தி என்ன செல்லாத்தை எங்க இங்கால ஒண்ணுமில்லை சும்மா வந்தேன் உன்னிடம் ஒன்று கேட்பேன் கோவிக்காமல் உத்தரம் கூறு வாசமில்லா மலர் கொய்த வனிதாவும் வியப்புடன் திரும்பிப் பார்க்கிறாள் சொல்லனை என்ன விசயம் நான் கோவிக்கேல்லை, நீ சொல்லு என்ர மகன் வசந்தனுக்கு - உன்ர பிள்ளை வனிதாவைக் கேட்கிறன் நீ சம்மதித்தால் நன்றியோடிருப்பேன் பாக்கியம் திடுக்கிட்டு யோசிக்க பர்வதம் குறுக்கிட்டு சொல்கிறாள் ஊரெல்லாம் திருடுகிறான் உன் மகன் உதவாக்கரையென்று உலகுக்கே தெரியும் கள்ளச்சாவி போடும் நல்ல குடிகாரன் அவனுக்காகப் பெண்கேட்டு இங்கு என்ன துணிவில் வந்தாயம்மா பர்வதத்தைத் தடுத்த பாக்கியமும் பெண் இருந்தால் கேட்பது வழமை அவளையும் ஒருக்கால் கேட்பமென்று என்ன பிள்ளை வனிதா, மாமி சொன்னதெல்லாம் கேட்டனியெல்லோ உனக்கிது சம்மதமோ தயங்காமல் சொல்லு செல்லாத்தை மாமியும் காத்திருக்கிறா எனக்கும் முப்பத்தைஞ்சாச்சு அவவுக்கும் தெரியும் இதுதான் சமயமென்று அம்மாவும் தவிக்குது இனியொரு வரனும் வராமலும் போகலாம் நிலத்தை காலால் சுரண்டி "ம்" என்று சொல்லத்தான் ஆசை, ஆனாலும் வெட்கம் கெட்ட வெட்கமும் என்னை விட்டுப் போட்டுது உனக்கு விருப்பம் எண்டால் எனக்கும் சம்மதம் திருடன் என்றாலும் இருக்கட்டுமே நான் திருத்தப் பார்ப்பேன் குடிகாரன் ஆனாலும் என்ன அவரைக் குறைக்கச் சொல்லுவேன் பெண்பித்தன் ஆனாலும் பார்க்கலாம் என் முந்தானையில் முடிஞ்சுடுவேன் வருவது வரட்டும் வாழ்ந்து பாப்போம் அம்மா தாயே கருமாரி திரிசூலி ஆட்டுக்கும் மாட்டுக்கும் அமாவாசை பறுவமுண்டு அதிஸ்டக் கட்டை எனக்கு அது வந்து போவதுண்டு கருத்தக்கிடா வெட்டி கருத்தாய் பொங்கலிடுவேன் கன்னி கழியவேண்டும் கவலையெல்லாம் தீரவேண்டும் கன்னியாய் இருந்து வீணே என் காலம் கழியாமல் கள்ளத் திறப்பு போட்டாவது கருவறை திறக்கட்டும்.....! யாழ் 24 அகவைக்காக ஆக்கம் சுவி .....!
    1 point
  12. வார இறுதிநாட்களில் அநேகமாக இங்கிலிசு பிரேக் பாஸ்ட் சாப்பிடுவது அடியேனின் வழமை.அதற்காக நீங்கள் நினைக்க கூடாது அடியேன் ஆங்கிலபட்டதாரி என்று ..முட்டை பொறியள்,சொசெஜ்,பேக்கன், பாணை டொஸ்ட் பண்ணி தக்காளி சோசுடன் சாப்பிடுவது வழமை.. முட்டையையும்,சொசெஜ்யையும் தாயார் பண்ணி கோப்பையில் வைத்து விட்டு பேக்கனை போட்டேன் சட்டி நல்லா சூடா இருந்திருக்க வேணும் அத்துடன் சட்டியில் எண்ணையும் இருக்கவில்லை ,புகையும் கறுகிய மணம் வீட்டினுள் பரவ, தொலைகாட்சியில் பக்தி சணலில் பக்திபரவசத்துடன் எதோ பார்த்து கொண்டிருந்த சம்சாரம் "என்னப்பா செய்யிறீங்கள் கறுகி மணக்குது" "பேக்கன் பொரிச்சனான் அது கொஞ்சம் எரிஞ்சு போய்விட்டது ,உமக்கும் பேக்கன் பொரிக்கவா" "ஐயோ கடவுளே இன்றைக்கு நல்லூர் தேர் , ஆகஸ்ட் மாதமென்றால் நல்லூர் கலகலப்பாக இருந்த காலம் அது.நல்லூரானுக்கு கொடியேற்றிவிட்டார்கள் என்றால் யாழ்ப்பாணமே கலகலப்பாகி விடும் .ஊர்களில் உள்ள சைக்கிள்களில் முக்கால்வாசி இரவுபகலாக நல்லூரானின்ட பக்த போடிகளை தாங்கியபடி ஓடிக்கொண்டே இருக்கும்.இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகளும் கிழங்கு அடுக்கிய கணக்கில் சனத்தை ஏற்றிகொண்டு ஓடித்திரியும்.எங்களை போன்ற பெடியள் பக்தி பரவசத்தில் வேஸ்டியுடன் முருகனை காணும் ஆவலுடன் சைக்கிளில் செல்வோம்.கோவிலுக்கு செல்வது என்றால் வீட்டில் இலகுவில் அனுமதி கிடைத்து விடும், அப்பாவும் கவனமாக பாவிக்கும் தனது சைக்கிளையும் தந்து விடுவார். கோவிலுக்கு அருகாமையில் செல்ல செல்ல நடந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிடும் .முருகனின் தரிசனத்திற்கு வெளிக்கிட்ட எங்களுக்கு வீதிகளில் தரிசனம் கிடைக்க தொடங்கிவிடும் .சைக்கிள் தரிப்பிடத்திற்க்கு ஒரு ரூபா கொடுக்க வேண்டும் அது பெரிய காசு...5 ரூபா கொண்டு போவது என்பது பெரிய விடயம். சைக்கிளை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு தரிசனத்திற்கு உள்ளே சென்று விடுவோம்.முருகனின் தரிசனத்தை விட எங்களுக்கு விரும்பிய அழகு தரிசனத்தை தேடி அலைந்து திரிவோம்.அநேகமாக விரக்தியடைந்து வெளியே வருவோம் .காரணம் முருகனும் எங்களை கண்டு கொள்வதில்லை ..நாங்கள் தரிசனம் தேடி சென்ற பெண்களும் கண்டு கொள்வதில்லை.கடலை ஆச்சி மட்டும் எங்களை தனது வருமானத்திற்காக வாங்கோ வாங்கோ என கூவி அழைப்பார் .சைக்கிள் பார்க் காசை தவிர மிகுதி பணத்திற்கு கச்சான் சோளப்பொறியல் மற்றும் குச்சி ஐஸ்கிறீம் வாங்கி சாப்பிட்டபடியே வீடு சென்று விடுவோம். நாங்கள் கடலை வாங்க வெளி வீதி வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது கொஞ்சம் எஙகளைவிட அலங்காரம் அதிகம் போட்ட ஆண்களும் பெண்களும் நடுத்தர வயது த‌ம்பதியினர் வீதிகளில் வலம் வந்து கொண்டிருப்பார்கள் . மச்சான் ஆட்களை தெரியுதே என நண்பர்கள் கேட்பார்கள் தெரியவில்லை மச்சான் என்று சொன்னால் ,என்னடா மச்சான் உவையள் கொழும்பில் வேலை செய்கின்ற கோஸ்டிகள் திருவிழாவுக்கு வந்திருக்கினம். பார்க்க தெரியுது பசையுள்ள கோஸ்டிகள் என்று என‌ சொல்லி விட்டு "நாங்களும் இப்படி வருவோமல்ல" என அடுத்த பில்டப்பை போடுவோம். இந்த வழமை நாங்கள் தொழில் மற்றும் உயர்கல்வி தேடி செல்லும் வரை தொடர்ந்தது. ஒரு நாள்திருவிழா முடிந்து வீடு வந்த பொழுது அம்மா சொன்னார் "தம்பி உனக்கு தபால் வந்திருக்கு எதோ வேலைக்கு நேர்முக பரீட்சைக்கு கூப்பிடிருக்கிறாங்கள் போல தெரியுது, நீ ஒவ்வோரு நாளும் போய் கும்பிட்ட அந்த நல்லூரான் கைவிட மாட்டான்" "ஒம் அம்மா" அம்மாவுக்கு தெரியுமோ நாங்கள் என்னத்துக்கு முருகனிட்ட போனோம் என்று, இல்லை நான் தான் சொல்ல முடியுமோ விசயத்தை... இரண்டு நாளில் கொழும்புக்கு செல்ல வேண்டியிருந்தது எனது மாமா கொழும்பில் வாழ்ந்த காரணத்தால் பெரிய பிரச்சனைகள் இருக்கவில்லை .இரவு நேர (மெயில்) தபால் வண்டியில் செல்வதற்கு நண்பர்கள் கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு சைக்கிளில் அழைத்து சென்றார்கள். நல்லூரானின் தேர் திருவிழா முடிந்த கையுடன் கொழும்புக்கு பயணமானேன்.கோண்டாவில் புயையிரத நிலையத்தில் பிலாப்பழசீமேந்து பைகளுடனும் முருங்கைகாய் கட்டுகளுடனும் சனம் முண்டியடித்து கொண்டு நின்றது .அப்ப தான் புரிந்தது கொழும்பில் பணிபுரியும் இளைஞர்கள் ,குடுமபத்தினர் நல்லூரானை தரிசித்து விட்டு மீண்டும் கொழும்புக்கு செல்வதறகு நிற்கின்ரனர் என்பது.அதை பார்த்தவுடன் எனக்கு வேலை கிடைத்தால் நானும் இப்படி வந்து போகலாம என்று நம்ம மனசு கற்பனையில் மிதக்க தொடங்கி விட்டது பல கற்பனைகளில் அதுவும் கடந்து போனது கொழும்பில் முருகன் எனக்கு வேலை தரவில்லை ..ஆனால் ஒவ்வொரு வருட உறசவத்திற்க்கும் தன‌து பக்தர்களை தாங்கி வரும் வேலைய யாழ்தேவிக்கு கொடுத்துகொண்டிருந்தான். நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மக்கள் வெளியேற யாழ்தேவி,மெயில் வண்டி போகுவரத்து துண்டிக்கப்பட கொழும்பு பக்தர்கள் வருவது தடைப்பட, யாழ் பக்தர்களை எம்பெருமான் அலங்கார கந்தன் வெளிக்கிடுங்கோடா வெளிநாட்டுக்கு என ஆணையிட அந்த ஆணையை நிறைவேற்ற யாழ்தேவியை பிடித்து கொழும்பு வந்து சேர்ந்தவர்களில் நானும் ஒருத்தன், வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் இருக்கும் பொழுது கதிர்காமம் போகும் வாய்ப்பு ஏற்பட்டது.பூசாரி பூட்டிய திரைக்கு பின்னால் வாயையும் மூக்கையும் கட்டி பூஜை செய்து விட்டு எங்களுக்கு தீபத்தை தொட்டு வழிபட நீட்டிக்கொண்டு வந்தார். "என்ன மச்சான் ஐயர் பூணுலை மறைக்க , சேர்ட்டும் அணிந்து கொண்டு வாரார் " "இவர் ஐயர் இல்லை இவரை கபராலை என்று சொல்லுறவையள், பரம்பரை பரம்பரையாக அவையள் இப்படித்தான் செய்யிறவையள் " " கேள்வி பட்டனான் இப்ப தான் பார்க்கிறேன்" " ஏன் செல்வசந்நிதியிலும் இப்படித்தானே" " அங்க நான் போகவில்லை" "சனம் சன்னதியிலிருந்து இங்க நடந்து வாரவர்கள்" "முருகா வெளிநாட்டுக்கு போக உதவி செய் என்று தமிழிலும் ,தெரிந்த சிங்களத்திலயும் விண்ணப்பத்தை போட்டு விட்டு வந்தேன்" முருகா நீ தமிழனா சிங்களவனா என்ற கேள்வியை எழுப்பியவாறு பஸில் கொழும்பு திரும்பிகொண்டிருந்தோம் . "டேய் வெளிநாட்டுக்கு போகவேணும் என்று விண்ணப்பம் போடுறாய் எந்த நாட்டுக்கு என்று கேட்டியா? ஒழுங்கா அப்பிளிகேஷன் போடத் தெரியாது இதில நான் சிங்களவனா தமிழனா என்ற கேள்வி..பே...." தெகிவள பயின்டா.... சத்தம் கேட்டு திடுகெட்டு எழுந்து பஸிலிருந்து இறங்கினேன். வெளிநாட்டிலயே வேலை செய்யும் வாய்ப்புக்கள் கிடைத்தது. தமிழர்களில் பலர் வெளிநாடுகளில் தங்கள் அரைவாசிகாலத்தை கழிகின்றனர் அந்த வகையில் எனக்கும் அந்த சந்தர்ப்பம் கிடைத்து. சிங்கள முருகன் கொடுத்ததோ தமிழ் முருகன் கொடுத்தானோ என்ற பிரச்சனை இல்லை காரணம் நமக்கு இப்ப‌ அவுஸ் முருகன் இருக்கிறான் . நல்லூரானின்ட தேர் காலத்தில் மச்சம் சாப்பிட்டு விட்டேன் என்ற பயத்தில் அடுத்த நாள் காலையில் குளித்து வெளிக்கிட்டு நம்ம சிட்னி முருகனிட்ட போனேன் . கோவிலில் கந்தர் நின்றார்.மூக்கு வாய்க்கு ஒழுங்காக கச்சை கட்டியிருக்கினமோ என்று பார்த்து ஆட்களை எண்ணி உள்ளே அனுப்பி கொண்டிருந்தார். என்னை கண்டவுடன். " இப்ப நல்லூரானிட்ட நின்று இருக்க வேணும் இந்த கொரானா கோதாரி எல்லாத்தையும் கெடுத்து விட்டது" "அதுதான் இன்றைக்கு நானும் கோவிலுக்கு வந்தனான்" " என்ன நீ மச்சம் சாப்பிட்டு போட்டியாம் நல்லுரானின்ட திருவிழா காலத்தில்" முருகன் மறந்தாலும் இந்த சுற்றியிருக்கிற சனம் விடாது போட்டு கொடுத்துவிடுவாங்கள் முருகனிட்ட என்று புறுபுறுத்த வாறு "மறந்து போய் சாப்பிட்டு விட்டேன் ,எஸ்கியூஸ் மீ மூருகா" என்றேன்...... கண்ணை திறந்தேன் ஐயர் வாயை கட்டியிருநந்தார் மாஸ்க் என்ற போர்வையில் தீபத்தை நீட்டினார் தொட்டு கும்பிட்டுவிட்டு முருகா தொண்டைமானாறு சன்னிதியிலிருந்து சிட்னி வரை மெளன‌மாக இருந்து உன்னுள் என்னை தேடு என்று சொல்லுறாய் போல.....என்று நானும் மெளனமாக வீடு திரும்பினேன்.
    1 point
  13. நான் கிட்டத்தட்ட 130 அரங்குகளுக்கு சென்றுள்ளேன். இளையராஜா, ரகுமான், ஸ்ரேயா கோஷல், போன்றவர்களின் இசை நிகழ்ச்சிக்கும் போயுள்ளேன். நான் அபு தாபியில் வாழ்ந்தாலும், பெரும்பாலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் நான் Expo 2020 க்கு போகிறனான். நாளை இரவும் மூடுவிழாவிற்கு போற திட்டம் இருக்குது. இனி வாழ்க்கையில் இப்படி ஒரு நிகழ்ச்சியை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாது.
    1 point
  14. வணக்கம் நியானி முதலில் உங்கள் இந்த வேண்டுகோளுக்கு நன்றி. அடுத்து இதுவரை எழுதியர்கள் ஒருவரின் திரிக்குள்ளும் உங்களின் ஊக்கங்கள் எதையும் காணவில்லையே ஏன்? உங்களது இச்செயல் எமது அரசியல்வாதிகளையே நினைவுக்கு கொண்டுவருகிறது. நன்றி.
    1 point
  15. Album : Kezvaanam Sivakkum Singer : S.P. Balasubrahmanyam, S.P. Sailaja Lyricist : G.K. Murthy Music Director : M.S.Viswanathan Star Cast : Sivaji Ganesan, Saritha
    1 point
  16. ஊரிலை எல்லாம் நுளம்பு ஆக்கினையளுக்கு சட்டியிலை கரி எரிச்சு வேப்பம் இலை புகை அடிக்கிற ஞாபகம் இருக்கோ?😁 மூட்டைப்பூச்சி தொல்லை எண்டால் நல்ல வெய்யில் எறிக்கேக்கை மெத்தையளை வெய்யில்லை காயப்போடுங்கோ. நல்ல நிவாரணம் இருக்கு.....😄 ஓ....உங்கை வெளியிலை ஒண்டையும் வைக்கேலாது என்ன அவ்வளவுக்கு கள்ளர் தொல்லை....இது வேற பெரிய றபிள்
    1 point
  17. போராளிகளோடு தமிழீழ தேசியத் தலைவர் 1988 மணலாற்றுக் காட்டில் 'லெப். கேணல் கிறேசியுடன்' லெப். கேணல்களான கிறேசி மற்றும் ஜோய் ஆகியோருடன் | குறிப்பு: ஜோய் அண்ணா உந்துகணை மற்றும் பிலிறுந்திகளுக்கு (propellers) நீர்காப்பிட்டுள்ளார்.
    1 point
  18. மேற்கு ஜேர்மனியர்களே பெரிதாக அந்தப்பக்கம் போக விரும்புவதில்லை.நான் பல முறை போயிருக்கின்றேன். சில நேரம் உலக அதிசயத்தை பார்ப்பது போல் பார்ப்பார்கள். இரவு நேரத்தில் அப்படியான இடங்களுக்கு போவதை தவிர்ப்பது நல்லது. நான் இருக்கும் இடத்திலிருந்து கிழக்கு ஜேர்மனி எல்லை அதிக தூரமில்லை. புட்டின் இராணுவ அதிகாரியாக வேலை செய்த இடமும் அதிக தூரமில்லை. ஒருமுறை சென்று அந்த இடத்தை பார்த்திருக்கின்றேன்.😁
    1 point
  19. நீங்கள் சொல்வது சரிதான்.இருந்தாலும் நூறு வீதமான மக்கள் அப்படியில்லை. சில நேரங்களில் அவர்களுக்கு ஒரு மனத்தாக்கம் வரும் போது சிரித்துக்கொண்டே சாதிப்பார்கள். இது பெரிய நகரங்களில் எடுபடாது. ஜெர்மனியர்களின் சரியான நாசி குணங்களை அறிய கிழக்கு ஜேர்மனியின் குக்கிராம பக்கங்கள் போனால் பார்க்கலாம்.
    1 point
  20. இது உண்மை. American deep State பற்றிய கேந்திர சிந்தனைவியலாளர்களின் சிந்தனை போக்கும் ஏறத்தாழ இது போன்றது John Mearsheimar இந்த வீடியோ வீடியோகளை youtube இல் பார்க்கலாம். இது அண்மைக்கால வீடியோ: https://www.youtube.com/watch?v=8mCzbiF5TmQ இந்த யுத்தத்துக்கு, இன்னொரு மறைமுக, முக்கிய காரணம், பூமி வெப்பம் அடைதல் (global warming). காரணம், ஆர்டிக் உருகுகிறது, ஆர்டிக் சர்வதேச கப்பல் ப்பதையாக மாற தொடங்கிவிட்டது, ஆர்டிக் இல் உள்ள பெருமளவு வளங்கலாய் எப்படி பகிர்வது என்பதில் போட்டி. அனால், ரஷ்யா ஐ பொறுத்தவரையில், எந்தவொரு மனித பிரசன்னமும் தாக்கு பிடிக்க முடியயாத, நீண்ட வட எல்லை, மற்றவர்களுக்கு, முக்கியமாக மேற்கின் ஆயுத பல பிரசனத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. ரஷ்யா வுக்கு இது அதனது இருப்புக்கு கேந்திர தன்மையான அச்சுறத்தலும், ஆபத்தும். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட போது, நேட்டோ கொடுத்த வாக்குறுதியான, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் பால்டிக் நாடுகளுக்கு நேட்டோ பரவாது, என்பதை கடைபிடித்து இருந்தால், ரஷ்யா இவ்வளவு தீவிரவமாக இருந்திருக்காது. சொறி சிங்களம் இறைமையை கொண்டுள்ள அரசு கொண்டுள்ளதாயினும், மனித உரிமை சபையில் உப்புச் சாப்பிலா தீர்மானத்தை கொண்டுவருவதத்திற்கு, மேற்கு நாடுகள் ஹிந்தியை எதிர்க்க கூடாது என்ற நிலையில், ரஷ்யா அதன் இருப்புக்கு வரும் கேந்திர அச்சறுத்தலை வாளாது பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
    1 point
  21. இங்கே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டுமென ஊர் ஊராக மக்களிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு, அங்கே எதிர்க்காமல் நழுவிய கூட்டமைப்பினர் இதுதான் இவர்களின் இரட்டைவேடம். Eelapriyan Balan
    1 point
  22. காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு பூப் போலே பெண்ணிருக்கு புரிந்து கொண்டால் உறவிருக்கு (2) பஞ்சவர்ணக் கிளியிருக்கு பழுத்து வந்த பழமிருக்கு நெஞ்சினிலே நினைவிருக்கு நெருங்கி வந்தால் சுகமிருக்கு (2)
    1 point
  23. தஞ்சாவூர் ஸ்ரைல் - தேங்கா பூ பக்கோடா..👌
    1 point
  24. ஒரு சிலதை திருப்பியும் அசை போடவேண்டிக் கிடக்கு.....😁
    1 point
  25. கணணியின் உட்புற "மதர்போர்டு" (MotherBoard) "மதர்போர்டு" என்பது கணணியின் அடித்தளம்(Foundation) போன்றது. நமது வீட்டை கட்ட திட்டமிடும்போது என்னென்ன அறைகள், எத்தனை தளங்கள், பின்னாளில் வீட்டை விரிவாக்கம்(Extension) செய்ய எப்படி இப்பொழுதே அஸ்திவாரம் போடுவது என சிந்தித்து கட்டுவதுபோல தான் கணணியின் மதர்போர்டும். இதனை வாங்கும்போதே சிறந்த போர்டை தேர்ந்தெடுப்பது மிக அவசியம். ஏனெனில் இந்த போர்டு மீது இணைக்கும் மற்ற உபகரணங்கள்(Additional cards) நாம் விரும்பும் வேகத்தில், வசதியில் செயல்பட இந்த போர்டு வடிவமைப்பை சரிபார்த்து வாங்க வேண்டும். எனது கையில் இருப்பதுதான், கணணியின் மூளை என சொல்லப்படும் நுண்செயலி (Micro Processor) இது 15 வருடங்களுக்கு முன் சந்தைக்கு வெளிவந்த "இன்டெல் கோர்-2 (Intel Core 2)" என்ற வகையை சார்ந்தது. கணணியில் பிரித்தெடுத்த Intel Processor நுண்செயலி - மேற்புறமும், அடிப்புறமும். நுண்செயலி மதர்போர்டில் உட்காரும் இடம்.
    1 point
  26. படம்:உருவங்கள் மாறலாம்(1983) இசை : SV ரமணன் ☺️.😊
    1 point
  27. கணிப்பொறியின் முக்கிய பகுதி இதயமாக செயல்படும் இந்த நுண்செயலி (Micro Processor) என்றால் என்ன..? நுண்செயலி (Micro Processor) அல்லது முத்துச் சிப்பி என்பது ஒரு கணினியின் மைய செயல் அலகின் (CPU-Central Processing Unit) பெரும்பாலான அல்லது அனைத்து செயல்பாடுகளையும் ஓர் ஒற்றை ஒருங்கிணைந்த சுற்றில் (IC -Integrated Circuit அல்லது மைக்ரோ சிப்) தன்னகத்தே கொண்டதாகும். மைக்ரோ சிப் முதல் நுண்செயலி 1970 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டு அதை மின்கணிப்பான்களில் பயன்படுத்தினர். அதில் 4 பிட் (Bit) வார்த்தைகளில் இரட்டைக் குறியீட்டு முறையில் குறியீடு செய்யப்பட்ட தசம(BCD) எண்கணிதம் பயன்படுத்தப்பட்டது. டெர்மினல்கள்(Terminals), அச்சுப்பொறிகள், பல்வேறு வகையான தானியங்கு முறைமைகள் போன்ற 4 பிட் மற்றும் 8 பிட் நுண்செயலிகளின் பிற பல உட்பொதிக்கப்பட்ட பயன்பாடுகள் விரைவில் அதைத் தொடர்ந்து உருவாயின. 16 பிட் அணுகலம்சம் கொண்ட செலவு குறைந்த 8-பிட் நுண்செயலிகள் 1970களின் மத்தியில் மைக்ரோ கணினிகள் உருவாவதற்கும் வழிவகுத்தன. கணினி செயலிகள் சில எண்ணிக்கை முதல் சில நூறுகள் வரையிலான டிரான்சிஸ்டர்களுக்கு சமமான சிறிய மற்றும் நடுத்தர அளவு கொண்ட IC களைக் கொண்டே நீண்டகாலமாக கட்டமைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. மொத்த CPU அலகையும் ஒரு சிப்பில் ஒருங்கிணைத்ததால், செயலாக்கத் திறனின் செலவு வெகுவாகக் குறைக்கப்பட்டது. எளிய அமைப்பில் இருந்த தொடக்க காலத்திலிருந்து நுண்செயலிகளின் திறனில் ஏற்பட்ட அதீத அதிகரிப்பானது, மிகச் சிறிய உட்பொதிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கையடக்க சாதனங்களில் இருந்து மிகப் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் வரையிலான அனைத்திலும் ஒன்று அல்லது அதற்கதிகமான நுண்செயலிகள் செயல் அலகுகளாக அமைந்து புரட்சி செய்ததால், பிற வகை கணினிகள் அநேகமாக வழக்கழிந்துபோக வழிவகுத்தது. 1970களின் தொடக்கத்திலிருந்து, நுண்செயலிகளின் திறனில் ஏற்பட்ட அதிகரிப்பானது மூரி விதியைப் பின்பற்றியே அமைந்துள்ளதாக தெரிகிறது, குறைந்தபட்ச செலவிலான உபகரணச் செலவைப் பொறுத்து, ஓர் ஒருங்கிணைந்த சுற்றின் சிக்கலான தன்மையானது ஒவ்வொரு ஆண்டும் இரட்டிப்பாகிறது என அவ்விதி கூறுகிறது. மூலம்: விக்கிப் பீடியா
    1 point
  28. படம் : உணர்ச்சிகள்(1976) இசை : ஷ்யாம் பாடியோர் : SPB & ஜானகி
    1 point
  29. படம் : பறக்கும் பாவை குரல் : சுசீலா பாடல் : கண்ணதாசன் இசை : எம்.எஸ்.வி.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.