Jump to content

Leaderboard

  1. ரஞ்சித்

    ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      13

    • Posts

      8269


  2. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      11

    • Posts

      28966


  3. வாலி

    வாலி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      11

    • Posts

      4298


  4. Paanch

    Paanch

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      7

    • Posts

      7510


Popular Content

Showing content with the highest reputation on 04/10/22 in all areas

  1. சிங்கள பௌத்த பேரினவாதம் ஒருபோதும் திருந்தப்போவது இல்லை. அது என்றுமே திருந்தாது. அது திட்டமிடப்பட்டு நன்கு வடிவமைக்கப்பட்டதொன்று. தமிழ் இளைஞர்களின் குருதியில் மண் நனையட்டும் தமிழ் பெண்களை மனபங்கப் படுத்துங்கள் என்று கோட்டா சிங்கள ராணுவத்துக்கு அனுமதி வழங்கியபோது, எந்தவொரு சிங்கள புத்திசீவிகளோ மக்களோ அதை கண்டிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. புலிகளின் வீழ்ச்சியில் மகிழ்ந்த சிங்களவர், இலட்சக்கணக்கான அப்பாவி தமிழ் உயிர்கள் அடையாளம் எதுவுமே இல்லாமல் அழிக்கப்பட்டபோது கண்டுகொள்ளவே இல்லை. வயிற்றுப் பசிக்கு போதிய ஆகாரம் கிடைத்தவுடன் சிங்களம் தன் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும்.
    9 points
  2. இந்த யூ டியூப் காணொளிகளூக்கு அப்பால், செய்திகளில் தொடர்ச்சியாகக் காண்பிக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்ட நிகழ்வுகளையும் நான் பார்ப்பதுண்டு. அதன்படி, தற்போது கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி குறித்து பல சிங்களச் செய்தி நிறுவனங்களும், தனிப்பட்டவர்களும் பல காணொளிகளை வெளியிட்டு வருகிறார்கள். அவ்வாறானதொரு நீண்ட காணொளியொன்றினை இன்று பார்த்துக்கொண்டிருந்தேன். பல முன்னணி நடிகர்கள், கல்விமான்கள், பல்கலைக்கழக மாணவர்கள் அரச - தனியார் ஊழியர்கள் என்று மிகப்பெரும் மக்கள் கூட்டமொன்று கோத்தாபாயவுக்கு எதிராக, "கோத்தா - வீட்டுக்குப் போ", "கோத்தா - ஒரு விசரன்", "எங்களுக்கு காஸ் இல்லை, பெட்ரொல் இல்லை, பாணில்லை", "நீ தவாறான சந்ததியுடன் விளையாடுகிறாய்", "எங்களுக்கு கோத்தா வேண்டாம்" என்று கோஷமிட்டவாறு, இன்னும் பல பதாதைகளைத் தாங்கியவாறும் பவனி வருகிறார்கள். நான் இந்த கூட்டத்திடையேயும், இந்த பல்லாயிரக்கணக்கான பதாதைகளிலும் தேடிய விடயம் ஒன்றுதான், அதாவாது ஒருவராவது எமக்கு நடந்த அநியாயத்திற்காக நீதி கேட்கிறார்களா என்பதுதான் . இந்த லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தில் இருவர் மட்டுமே இந்த பதாதைகளைத் தாங்கியிருந்தனர். அதில் ஒரு பதாகை, "2009 இல் வடக்கிலிருந்து நீ கடத்திச் சென்ற எமது உறவுகள் எங்கே கோத்தா" . இரண்டாவது, "போர்க்குற்றவாளிகளை நீதியின் முன்னால் நிறுத்து" எனும் முகவரியில்லாத கோரிக்கை. இவை இரண்டையும் தவிர எமக்கு நடந்த மிகப்பெரும் அழிவுபற்றி வேறு எதையுமே நான் காணவில்லை. இதே காணொளியில் பல பிரபலங்கள் சில நிமிடங்களாவது பேசினார்கள். அதில் ஒருவர், இவர் தனியார் தொலைக்காட்சியொன்றின் அரசியல் விமர்சகர் போலத் தெரிந்தது. அவர் பின்வருமாறு கூறுகிறார், "இங்கே கோத்தாவின் அரசுக்கு எதிராக பல லட்சம் மக்கள் இன, மத, கட்சி பேதமின்றி கலந்துகொண்டிருக்கிறார்கள். எமக்குள் சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் என்று வேறுபாடில்லை. நாம் அனைவரும் சிறிலங்காவின் பிள்ளைகள். இந்த நாட்டில் பிறந்தவர்கள். எம்மைக் காக்க ராணுவத்தினரும் பொலீஸாரும் இங்கே கூடியிருக்கிறார்கள். ஆகவே நாம் அவர்களை மரியாதையுடன் நடத்துவது அவசியம்.எக்காரணம் கொண்டும் நாம் அவர்களைத் தாக்கக் கூடாது. இந்த நாட்டைப் பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றி எம்மிடம் கொடுத்த உத்தமர்கள் அவர்கள்தான், ஆகவே அவர்களை நாம் மரியாதையுடன் நடத்துவோம். இவர்களும் தமது சீருடைகளைக் களைந்துவிட்டு எம்முடன் சேரும் நாள் தொலைவில் இல்லை" என்று பேசிக்கொண்டுபோனார். இவர் பேசும் போது எனது மனதில் தோன்றியது ஒன்றுதான். 2009 இல், இதேபோன்றதொரு கடற்கரையில் இதேயளவு மக்கள் கூட்டத்தை வெறும் ஒறுகிலோமீட்டர் சதுர பரப்பளவு மட்டுமே கொண்ட ஒரு இடத்தில் அடைத்து, வானிலிருந்தும், பல்குழல் எறிகணைச் செலுத்திகளிலிருந்தும், கடலில் வலம்வந்த பீரங்கிக் கப்பல்களிலிருந்தும், 50,000 ராணுவத்தினரின் கையிலிருந்த துப்பாக்கிகளிலிருந்தும் உயிர்குடிக்க ஏவப்பட்ட குண்டுகளால் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை இதே ராணுவம் தானே கொன்றுகுவித்தது? அந்த ராணுவத்தைத்தானே இவர் உத்தமர்கள் என்றும், நாட்டை மீட்ட காவலர்கள் என்றும் போற்றுகிறார் ? அப்படியானால், இவர்கள் இபோது கூறும் "நாம் அனைவரும் சிறிலங்காவின் புதல்வர்கள், எமக்குள் இன மட்ட பேதமில்லை. நாம் அனைவரும் ஒரு நாட்டின் பிள்ளைகள்" என்கிற வெற்றுக் கோஷங்கள் எல்லாம் தமக்கு இன்று ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து தம்மை மீட்க எமது உதவியையும் கோருகிறார்கள் என்பதுதானே? ஒரு கதைக்கு, நாளையோ மறுதினமோ கோத்தாவும் மகிந்தவும் தாம் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தையெல்லாம் கொண்டுவந்து நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நிமிர்த்தினால் இந்த "இனமத பேதமில்லை" கோஷமும், "ஒரு நாட்டின் பிள்ளைகள் கோஷமும்" என்னவாகும்? இன்று தமது நண்பர்களாகத் தெரியும் தமிழர்களும் முஸ்லீம்களும் நாளை என்னாவார்கள்? ஆகவே இதெல்லாம் "ஆறு கடக்கும்வரை அண்ணனும் தம்பியும், கடந்தபின் நீ யாரோ , நான் யாரோ" என்பதுதானே? அல்லது, இன்றிருக்கும் பொருளாதார இக்கட்டு நிலை ஏற்பட்டிருக்கவேயில்லையென்றால், ஒரு பொதுப் பேரணியில் தமிழர் சார்பாகப் பேசவோ அல்லது ஒரு பதாகையையாவது ஏந்தவோ எவரும் துணிந்திருப்பார்களா? இந்தப்ப் போராட்டங்களின் போது, இதேவகையான மனோநிலையே பெரும்பாலும் சிங்களவர்களிடம் காணப்படுகிறது. கோத்தாவின் மீதான எதிர்ப்பேயன்றி, தமிழர் சார்பான மனமாற்றத்தையோ அல்லது தமிழர்களுக்கெதிரான இனவழிப்பைக் ஏற்றுக்கொண்டு கண்டிக்கும் மனோநிலை இவர்கள் எவரிடமும் காணவில்லை. எல்லோருமே 2009 இல் இனவழிப்பு என்று ஒன்று நடக்கவேயில்லை என்பதுபோல பாசாங்கு செய்கிறார்கள். அதேவேளை எல்லோருமே தவறாது கூறும் விடயமான "கோத்தா ஒரு சிறந்த போர் வீரன், ராணூவத்தினர் இந்த நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டுக் கொடுத்தார்கள்" எனும் கருத்து, அப்போரோடு கொன்றழிக்கப்பட்ட இன்னும் ஒன்றரை லட்சம் அப்பாவிகள் குறித்து பேசுவதை முற்றாகவே விலக்கி வருகிறது. இவர்கள் மனம் மாறப்போவதில்லை.
    9 points
  3. மனதுக்குள் இரண்டு ஓநாய்கள் மனதுக்குள் இரண்டு ஓநாய்கள் வாழ்க்கையைப் பற்றி ஓரு சிறுவனுக்கு விளக்கிக் கொண்டிருந்தார் குரு. "நம் மனதுக்குள் இரண்டு ஓநாய்கள் இருக்கிறது தெரியுமா?" என்றார்." அப்படியா?" "ஆமாம், ஒரு ஓநாய் நல்ல ஓநாய். அன்பு, பாசம், இரக்கம், சந்தோசம், உற்சாகம் இதுதான் அந்த ஓநாய்க்குத் தெரியும். இன்னொன்று மோசமானது. பொறாமை, கோபம், ஆத்திரம், ஆக்ரோசம், அகங்காரம் இதெல்லாம்தான் அதற்குத் தெரியும்" சிறுவனுக்கு சுவாரசியமாய் இருந்தது. "இந்த ரெண்டு ஓநாய்களுக்கும் எப்பொதும் மனசுக்குள்ள சண்டை நடந்துக்கிட்டே இருக்கும். கெட்ட ஓநாய் நல்ல ஓநாயுடன் மோதிக்கிட்டே இருக்கும்." "அப்படியா, எது வெல்லும்?" சிறுவன் ஆர்வமாய் கேட்டான். "எந்த ஓநாய்க்கு நீ சின்ன வயதிலிருந்து உணவு கொடுத்து வளர்த்துட்டு வர்றியோ, அது பலசாலியாகி மற்றதை வென்றுவிடும். " நீ வளர்கிறதுலதான் எல்லாம் இருக்கு."
    5 points
  4. @ரஞ்சித், உங்களுக்கு சிங்கள மொழி தெரிந்திருக்கின்றது! என்னைப் போன்ற பலருக்கு சிங்கள மொழியும் தெரியாது. சிங்கள நண்பர்களும், அறிமுகங்களில் கதைப்பவர்களும் கிடையாது. அதனால் இப்படியான அவர்களின் சிந்தனைகளை அறியும் வழியுமில்லை. ஆனால் அவர்கள் இனவாதிகளாக தொடர்ந்தும் இருக்கின்றார்கள் என்பதே அவர்களுடன் என்னைப்போன்ற தமிழர்கள் ஒருங்கிணையமுடியாது என்பதைக் காட்டுகின்றது! மேலே நீங்கள் சொன்னதுபோல சிங்கள மக்களில் பெரும்பான்மையோருக்கு (கோத்தாவுக்கு வாக்குப்ப்போட்ட 69 இலட்சம், சஜித்துக்கு வாக்குப்ப்போட்ட பெரும்பகுதி சிங்களவர்களும் அவர்களின் பரம்பரையினருக்கும்) தமிழர்கள், முஸ்லிம்கள் ஒரு பொருட்டே அல்ல. மின்சாரமும், எரிவாயுவும், கிடைக்கும் வருமானத்தில் மத்தியதர, உயர்தர வாழ்வைப் பேணுவதும்தான் முக்கியம். இதற்கு உடனடித் தீர்வு எதுவும் கிடையாது. அந்நிய செலவாணியை உள்நாட்டுக்குள் கொண்டுவந்தால் பிரச்சினைகள் தீராது. புலம்பெயர் மக்களிடம் இருக்கும் பணத்தை அவர்களுக்கு கொடுப்பதே முட்டாள்தனம். இந்தவேளையில் தமது சொந்தங்களும், உறவுகளும் நாளாந்த வாழ்வைக் கொண்டு நடாத்த தேவையான பண உதவியைச் செய்தால் மட்டும் போதுமானது. சிறிலங்கா பொருளாதாரம் இன்னமும் கீழே போய் சிங்கள மக்களின் சேமிப்பு எல்லாம் கரைந்தால்தான் அவர்களுக்கு இந்தப் பொருளாதாரப் பிரச்சினையின் அடிப்படையே இனப்பிரச்சினைதான் என்று உறைக்கவேண்டும். அடிப்படைப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு இல்லாமல் தங்கள் பொருளாதாரப் பிரச்சினைகள் மாறாது என்பதை சிங்களவர்கள் உணர்ந்து, சிறிலங்கா என்பது பல தேசிய இனங்கள் வாழும் தீவு என்பதை ஏற்று, தேசிய இனங்கள் சுய நிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய அரசியல் தீர்வை அவர்களாகவே கோரவேண்டும். அந்நிலை இப்போதைக்கு வரும் என நம்பிக்கையில்லை.
    4 points
  5. @ரஞ்சித் இதை நீங்கள் எழுதுவது நல்லதொரு விடயம் ஏனெனில் சில தமிழ் மக்களிடம் “எங்கட சிங்கள siblings உதவ வேண்டும்” என்ற ரீதியில் வரும் கருத்துக்களை என்னுடைய நட்புவட்டத்தில் பதிந்திருந்தார்கள்..ஆனால் அவர்களின் அடிப்படை மனநிலை மாறவே இல்லை என்பதைதான் இந்த YouTubeகாரர்களும் உறுதிப்படுத்துகிறார்கள்! ஆனால் இன்னொரு விதமாக பார்க்கும் பொழுது வடக்கு கிழக்கு, மலையக தமிழர்கள் பாதிக்கப்படுவது கவலையாக உள்ளது. புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் நிபந்தனைகளுடன் உதவலாம், அது சாத்தியமா?
    3 points
  6. போனமாதம் பேச்சுவார்த்தையிவ் மேசையை அடித்துடைத்ததை மறந்திட்டீங்க போல.
    3 points
  7. ரஞ்சித் அவர்களே, இதை வாசித்தாவது சிங்களவர் திருந்திட்டார்கள்; அவர்களுக்கு உதவ வேண்டும் என்று அவனது சிறீலங்காவைக் காப்பாற்ற நினைக்கும் சில வெளிநாட்டுவாழ் தமிழர்களுக்கு அவங்கள் இன்னும் அதே பேரினவாத மனநிலையில்தான் இருக்கிறாங்கள் என்ற உண்மை விளங்க வேண்டும். ஆகையால் இதை இப்படியே நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
    2 points
  8. இது பிபிசி இல் வந்த செய்தி என்பதால் பொய். ரஷ்யா உண்மைச் செய்தியை வெளியிடுமடடும் அமைதி காப்போம்!
    2 points
  9. யுத்தம் தொடர்பாக இந்த அனைவருமே ஒரேவகையான பார்வையினைத்தான் கொன்டிருக்கிறார்கள் என்பது அவர்களின் விமர்சனங்களிலிருந்து மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அதாவது, கோத்தபாய செய்த யுத்தம் சரியானது. அவரால் நன்றாக யுத்தம் செய்யமுடியும். ஆனால், அவரால் அரசியல் அவ்வாறு செய்யமுடியாது என்பதே அவர்களின் அனைவரினதும் பொதுவான விமர்சனம். உதாரணத்திற்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடக பொறுப்பாளராகக் கடமையாற்றிய, பொலொன்னறுவயைச் சேர்ந்த பாரத தென்னாக்கோன் என்பவர், கோத்தாவுக்கெதிரான தனிப்பட்ட பகையினைக் கொண்டிருக்கிறார். இதனாலேயே, கோத்தாபய ஆட்சிக்கு வந்தவுடன் உயிர் அச்சம் காரணமாக பிரான்ஸின் பரீசுக்கு அடைக்கலம் தேடி வந்து வாழ்ந்துவருகிரார். அவரின் காணொளிகளைத் தொடர்ச்சியாக நான் பார்த்து வருகிறேன். அவரின் மிக அண்மைய காணொளி ஒன்றில் அவர் பிவருமாறு கூறுகிறார், "கோத்தா பிரபாகரன் போன்றவர்களுடன் யுத்தம் செய்வதில் கெட்டிக்காரர். அவரால் பிரபாகரனுடனான யுத்தத்தினை எப்படி வெற்றிகொள்ளமுடியும் என்பது நன்றாகவே தெரிந்திருந்தது. அவர், அந்தன்யுத்தத்தினை திறம்படவே செய்துமுடித்தார் என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரால் காந்தீய முறையில் நடக்கும் போராட்டங்களைக் கையாள்வதில் திறமையில்லை. பிரபாகரனின் துப்பாக்கிகளுக்குப் பதில்சொல்லத் தெரிந்த கோத்தாவுக்கு காந்தியின் வழியில் மக்கள் போராடும்போது பதில் சொல்லத் தெரியவில்லை. ஆகவேதான் அவர் முழிக்கிறார்"....என்று கூறுகிறார். இன்னோரிடத்தில், "பரந்தனிலோ, கிளிநொச்சியிலோ யுத்தத் தாங்கிகளையும், ஆயிரக்கணக்கான ராணுவத்தினரையும் குவித்துச் சண்டை செய்வதுபோல, கொழும்பில் மக்கள் வாழும் பகுதிகளில் உங்களின் ராணுவ வாகனங்களையும், ராணுவத்தினரையும் குவித்து வைத்திருப்பது ஏன்?" என்று கேள்வியெழுப்புகிறார். மேலும் பாராளுமன்ற தெருக்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை மிரட்டும் வகையில் இலக்கத்தகடுகளில்லாத உந்துருளிகளில் துப்பாக்கிகளை ஏந்தியவாறும், முகமூடிகளை அணிந்தும் கறுப்புச் சீருடைகளில் வலம் வந்த ராணுவத்தின் கொலைப்படைபற்றிக் கூறும்போது, "இது ஒன்றும் வடக்குக் கிழக்கு இல்லை என்பதை கோத்தாவோ அல்லது இவர்களை இங்கே அனுப்பிவைத்தவர்களோ நினைவில் வைத்திருப்பது நல்லது, இது மக்கள் வாழும் ஒரு நகர்ப்பகுதி, இங்கே இந்த வெருட்டல்கள் எல்லாம் வேண்டாம்" என்று கூறுகிறார். அப்படியானால், வடக்குக் கிழக்கில் நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்யுங்கள், அது எங்களுக்குப் பிரச்சினையில்லை என்பதுதானே இவர் கூறவரும் விடயம்? ஆகவே இவரைப் பொறுத்தவரை, யுத்தம் நடைபெற்றது பிழையில்லை, அதனைக் கோத்தா நடத்திய விதமும் பிழையில்லை, அதேபோல பரந்தனிலும், கிளிநொச்சியிலும் தாங்கிகளைக் கொண்டுயுத்தம் செய்ததும் பிழையில்லை, ஏனென்றால் அங்கு மக்கள் வசிக்கவில்லை, வசித்ததெல்லாம் புலிப் பயங்கரவாதிகளே என்று அவர் கூறுகிறார். சரி, இவர்தான் இப்படியென்றால், இன்னொருவர் இருக்கிறார். அவரது பெயர் சேபால் அமரசிங்க. மக்கள் விடுதலை முன்னணி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே இவரது விருப்பம்.அதனால் கோத்தாவையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் கடுமையாகச் சாடி விமர்சித்து வருகிறார். அவர் அடிக்கடி கூறும் ஒரு விடயம் தான், "இப்போது கொழும்பில் குண்டுகள் வெடிப்பதில்லை. யுத்தத்தினை நாம் வெற்றிகரமாக முடித்ததனால், நிம்மதியாக வாழ்கிறோம். பிரபாகரனிடமிருந்து மீட்ட நாட்டை இன்று ராஜபக்ஷேக்கள் தின்று தீர்க்கிறார்கள்" என்பதே அவரின் புலம்பல். அடுத்தவர் சுதத் எனப்படும் அவுஸ்த்திரேலியாவில் தற்போது வசிக்கும் ஒரு பாடகர். அவுஸ்த்திரேலியாவின் பேர்த் நகரில் வாழும் இவர் ஒரு மிகப்பெரும் சிங்கள பெளத்த இனவாதி. 2019 இல் கோத்தா ஆட்சிக்கு வரும் முயற்சியில் மிகக்கடுமையாக உழைத்தவர். தன்னையொத்த சுமார் 150 சிங்களப் பாடகர்களைக் கொண்டு கோத்தாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கென்று சிங்கள பெளத்த தேசியத்தை முன்னிறுத்தி எழுச்சிமிக்க பல பாடல்களைப் பாடி வெளியிட்டவர். கோத்தாவின் பிரச்சார மேடைகளில் தமிழர்களையும், அவர்களின் அரசியலையும் மிகக் கேவலமாக விமர்சித்து, "பயங்கரவாதிகள், பறத் தமிழ் சுமந்திரன், எமது நாட்டைக் கூறுபோட நினைக்கிறார்கள்" என்று பலமுறை கர்ஜித்தவர். ஆனால் இன்று, கோத்தாவுடனான இவரது உறவு கசத்துவிட்டது இவருக்கு. அதனால், மீண்டும் கோத்தாவை வீட்டிற்கு அனுப்புவேன் என்று கூறிக்கொண்டு சூறாவளிச் சுற்றுப்பயணங்களை அவுஸ்த்திரேலியாவிலும், இலங்கையிலும் செய்துவருகிறார். ஆனால், இந்த பிரச்சாரத்தில் மிகவும் கவனமாக கோத்தாவை மட்டுமே குற்றவாளியாக்கும் இவர், ராணுவ தளபதியாகவிருந்த சரத்தையோ அல்லது சவேந்திர சில்வா உட்பட்ட ஏனைய பல போர்க்குற்ரவாளிகளையோ மிகவும் மரியாதையுடனே அழைக்கிறார். புலிப்பயங்கரவாதம் என்றும், இது சிங்கள பெளத்த நாடென்றும் அடிக்கடி கூறும் இவர் கூட, யுத்தம் நடந்த விதத்தையும், அதனைச் செய்த ராணுவத்தினரையும் வெகுவாக ஆதரிப்பதுடன், கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் மக்கள் பற்றி ஒரு வார்த்தைதன்னும் பேசியதில்லை.
    2 points
  10. நல்லதொரு கட்டுரை பிரபா சிதம்பரநாதன், எனது புரிதலில் இந்த கட்டுரையில் கூறப்பட்ட விடயங்கள். 1.இலங்கை IMF கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் 6 மாதங்கள் வரை எடுக்கும் என கூறுகிறார்கள். 2.அதற்கு தேவையான காலாவகாசத்தினை (6 மாதங்கள்) அங்க இங்கை என்று கடன் வாங்கி சமாளிக்கவேண்டும். 3.அரசு செலவுகளை குறைத்து, பாதீட்டில் நிகர வருமானம் ஏற்படுத்த வேண்டும். 4.முக்கிய பிரச்சினைகளை அடையாளங்கண்டு அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் ( அத்தியாவசியங்களை நிரல்படுத்தல்) 5.உள்நாட்டுக்கடன் மற்றும் வெளிநாட்டு கடனை மீள ஒழுங்குபடுத்தும்போடு உள்நாட்டு வங்கிகள பாதிப்படையலாம் அதனால் பொருளாதர பாதிப்பு. இவற்றை கலாநிதி குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார் ( இவர் மத்திய வங்கி ஆளுநராக இருந்த போதே இலங்கை முதல் முதலாக பாதீட்டில் நிகர வருமானம் ஈட்டியிருந்தது) சில விடயங்களை தவற விட்டிருக்கலாம். கலாநிதி வீரக்கோன் இவரது கருத்திற்கு (மறைமுகமாக) எதிரான நிலப்பாடுடன் காணப்படுகின்றார் ஆனாலும் இலங்கையின் உற்தியற்ற நிலையில் இருவர் கருத்தும் ஒத்துப்போகிறது. இலங்கயரசின் செலவீடு தொடர்பார்க கூறப்படும்போது ஆட்சி பீடமேறிய இந்த அரசு வருமான வரி குறைப்பு ஏற்படுத்தினமையால் வங்கித்துறையில் அரசின் கடன் களுக்கு செலுத்தப்பட்டதால் வங்கித்துறை நெருக்கடியில் உள்ளது, அரசின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாவிட்டால் மத்திய வங்கியால் பணச்சந்தை மற்றும் அன்னிய செலாவணியில் எந்த ஆக்க பூர்வமான மாற்றத்தினையும் ஏற்படுத்த முடியாது என கூறுகிறார், ஆனால் குமாரசாமி அரசின் அண்மைய கொள்கை மாற்றத்தால் ஒரு நம்பிக்கை ஒளி தெரிவதாகக்கூறியுள்ளார். கடன் களை மீழ ஒழுங்குபடுத்தும்போது சில வேளைகளில் அரசு, கடந்தாரர்களின் சட்ட நடவடிக்கைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என கூறுகிறார். அத்துடன் கடஙளை ஒழுங்குபடுத்துதல் இலகுவானதல்ல என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் ( எனது புரிதலின் படி) இறுதியாக ஈக்குவடோர் மற்றும் ஆர்ஜென்ரீனா இரண்டு நாடுகளும் கடனை மீள ஒழுங்கு படுத்தினபின்ன்பும் அவர்களுக்கு தேவையான அன்னிய செலாவணி திரவத்தன்மை கிடைக்கவில்லை (அதாவது இந்த முயற்சிகளால் எந்த பலனும் இல்லை என கூறுகிறாரோ? சரியாக புரிந்து கொள்ள்முடியவில்லை) எனது புரிதலின்படி இலங்கை ஐ ம் எப் இலிருந்து கடன் பெறுவது கூட கடினமாகவே இருக்கும் ஏனெனில் 1. இலங்கை கடன், எல்லை மீறிய கடன் 2.வெளிநாட்டுக்கடனை ஒழுங்குபடுத்துவதில் உள்ள சிரமம் (நடைமுறை சிக்கல்) ஆனால் இலங்கை, காலாநிதி வீரக்கோன் (கலாநிதி வீரக்கோன் இலங்கை அடிப்ப்டை பொருளாதார உறுதித்தன்மைதான் அத்தியாவசியம் என குறிப்பிட்டுள்ளார்) கூறுவதுபோல் இலங்கை அடிப்படை பொருளாதார உறுதிதன்மை பெறாவிடில் ஐ எம் எப் கடனால் கூட இலங்கையைக்காப்பாற்றமுடியாது (எனது புரிதலின்படி), அடிப்படை பொருளாதார உறுதித்தன்மயற்ற ஒரு நிலை காணப்படுகின்றபோது ஐ எம் எப் கடன் பெறுவது என்பது கடினமாகவே இருக்கும் என நினைக்கிறேன்.
    2 points
  11. தகவல் தொழிற்நுட்பம் அதிவேகத்தில் முன்னேறியவுடன் பல விடயங்களை உடனுக்குடன் நேரலையாக கையடக்க கருவிகளில் பார்த்து அறியக்கூடியதாக உள்ளது. முன்பெல்லாம் எமக்கு ஈழத்து கலைஞர்கள் யாரென்றே தெரியாது. இலங்கை வானொலியில், அல்லது தமிழ் நாட்டில் வரும் ஊடக துணுக்குகளில் மட்டுமே அறியக்கூடியதாக இருந்த ஈழத்து கலைஞர்களின் முகம், தற்பொழுது பலரும் பார்த்து அறியக்கூடியதாக உள்ளது. அவ்வகையில் முன்பு காட்பெர்டில்(Hot Bird) வந்துகொண்டிருந்த "படலைக்கு படலை" காணொளியை சில வருடங்களுக்கு முன் பார்த்து வந்தேன். அத்தொடரில் கவர்ந்த கலைஞர்களான 'சிறீதரன் மாணிக்கம்' மற்றும் 'பாஸ்கி' ஆகியோரின் இயல்பான ஈழத்து தமிழில் நகைச்சுவை ரொம்ப பிடிக்கும். அந்த கலைஞரின் நேர்முக பேட்டியை இன்று ரசித்து பார்த்தேன். ஒவ்வொரு கலைஞரின் பின்புலத்திலும் சோகம் உண்டு போலும்..! வளர்க வளமுடன்..🌹
    2 points
  12. BUSINESS Sri Lanka needs ‘bridge financing’ to last next six months, says Indrajit Coomaraswamy Published 5 days ago on 2022/04/4 by Sanath Nanayakkare Sri Lanka needs to take steps on getting to a framework programme with the IMF, restructure its external debt and bring some bridge financing to last for next six months until negotiations with the IMF on external debt is completed,”former central bank governor Dr. Indrajit Coomaraswamy said recently, at a forum hosted by CT CLSA. “IMF won’t be able to transact with Sri Lanka until we fix the unsustainable situation in the country,” he said. Dr. Coomaraswamy highlighted the fact that IMF may include fiscal consolidation in a programme of debt restructuring for Sri Lanka. CT CLSA, a leading capital market service provider that offers investment banking, stockbroking and wealth management services , conducted the forum on the timely topic ‘ The IMF and the Order of Priorities for Reforms.” Elaborating on the topic, he said, “In fact, we have a solvency problem on our external debt. Trying to treat it as a cash flow problem and addresing it with short-term measures may create a bigger problem. However, we are beginning to see light at the end of the tunnel due to the policy measures taken by the government recently. Now having approached the IMF, and the government considering some external debt restructuring; we are shifting to the right path, but this is going to be tough.” “Interest rates are about to rise. As per previous levels where inflation was high, 91-day treasury bill yield was 16%, SLFR was 12% and SDFR was 10.5%. According to former deputy governor of the central bank, Dr. W. A. Wijewardena, the interest rates are expected to double from the current levels.” Responding to a question on the upward movement of the exchange rate, he said, “I think we could have taken measures to reduce the imbalance between demand and supply of foreign exchange before letting the exchange rate float.” Referring to domestic debt, Dr. Coomaraswamy said,”We should not suggest or ever take into consideration to restructure our domestic debt. If we restructure the domestic debt, it will lead to serious undermining of the stability of the financial system. Such a situation may not help Sri Lanka in meeting its commitments with external creditors.” “In fact, the crisis was two years in the making from the time the government cut taxes after the presidential election The country’s banking system is highly exposed to sovereign debt because in recent years, the banking system provided for bridging the budget deficit of the country. And therefore, if there is any restructuring of domestic debt, the impact of such a move could spill over to the balance sheets of the banks and would likely create a crisis in the financial sector. And some of the banks would be affected in the event of external debt restructuring. However, this effect could be managed through regulatory programmes of the central bank. The only way to solve this problem on a sustainable basis is to create a primary surplus in the budget,” he emphasised. “All creditors of Sri Lanka would seek equality of treatment, and therefore, multilateral debt; namely, World Bank, ADB and the little bit of IMF debt should not be restructured. If it were to be restructured, those institutions could stop their operations in Sri Lanka, and even their financing in the pipeline may not be disbursed.” “Bilateral debt, mainly OECD which is West + Japan are part of the Paris Club. As China and India are not part of the Paris Club, one of the possibilities for us is to see whether we are eligible for B20 framework earmarked for low-income countries. [B20 proposes to consider the issue of public debt management within the international financial architecture reform]. Dr. Dushni Weerakoon, the Executive Director of the Institute of Policy Studies of Sri Lanka (IPS) was also a panelist at the CT CLSA forum. When she was asked how Sri Lanka should put the reforms in a particular order to be implemented, she said,”We no longer can afford sequential reforms. What is most critical for Sri Lanka in terms of its economic outlook is to gain some sense of macro stability as a first priority.” “We are currently witnessing a clear shift in policy. We have to work on several fronts simultaneously with well-coordinated action on three fronts; namely, monetary policy front, exchange rate front and fiscal front. We have entered a monetary policy tightening cycle. The moves of the central bank led to a market-driven exchange rate. But the fiscal side is missing. As long as this is neglected the progress made on monetary and exchange rate fronts will not bring stability. This will put pressure on other two fronts.” “There is slowness on fiscal adjustment maybe because it’s difficult to do it. Fiscal adjustment will require to raise taxes on the revenue side, and the spending side will require to freeze expenditures. Clear communication of these reforms to the general public is important as these changes should not create more social unrest. The way to do this could be that greater sacrifices would have to be made by those who have greater ability to pay taxes. The richer segment of the Sri Lankan population may have to bear a larger burden of the tax adjustments”. “On the expenditure side, government spending may have to be frozen and public sector wages and salaries may also have to undergo changes. In such a context, there will be the need to try as much as possible to provide social safety nets for needy segments. It could be provided by implementing a cash transfer programme to reduce the potential social unrest.” “The other reforms include State Owned Enterprise (SOE) reforms, labor market reforms and banking sector reforms,” she said. When asked about the possible scenario of debt restructuring with debt to equity swaps, she said,” The possible cost of that is; you will face a prolonged negotiating process with the threat of legal action on the country. Unlike in the past, now our creditor landscape is huge. Our creditors are mostly based in the U.S., and then we have bilateral debt providers such as China and India. we will have to bring all these stakeholders to a common ground and ensure equality of treatment.” “Another risk is that we need to know that the bonds issued by Sri Lanka has clauses where the majority of the bond holders can buy the minority. If not, there could be a hold off problem where we may have to face legal consequences.” “The recent debt restructuring of Ecuador and Argentina only had restructuring of interest rate adjustments and maturity extensions and did not receive a haircut,” she pointed out. Sri Lanka for the first time in 63 years achieved a Rs. 21.9 billion surplus in the primary balance of the fiscal account during the first 10 months of 2017. The country recorded a primary surplus of 0.6 percent of GDP in 2018, the second year running. Dr. Indrajit Coomaraswamy was the governor of the central bank at that time. https://island.lk/sri-lanka-needs-bridge-financing-to-last-next-six-months-says-indrajit-coomaraswamy/
    1 point
  13. ராஜபக்ஷக்களுக்கெதிரான சிங்களவரின் ஆர்ப்பாட்டங்கள் தமிழர் தொடர்பான அவர்களின் மனமாற்றத்தினைக் காட்டுகின்றனவா ? இலங்கையில் ஏற்பட்டிருக்கும் மிகவும் அசெளகரியமான, வாழ்வாதாரத்தினை முற்றாகப் பாதித்திருக்கும் நிலை இலங்கை முழுதும் உள்ள சிங்கள மக்களை வீதிக்கு இறக்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரமும், அடிப்படை வசதிகளும் அதளபாதாளத்திற்குச் சென்றுகொண்டிருப்பதும், ஆனால் இதுபற்றிய பிரக்ஞை ஏதுமின்றி ஆளும் ராகபக்ஷ குடும்பம் தனது அதிகாரத்தைத் தக்கவைப்பதிலும், நாட்டின் மீதான தமது குடும்பத்தின் பிடியினைத் தக்கவைப்பதிலும் தனது முழுக் கவனத்தையும் வளங்களையும் குவித்துவருவது சாதாரன அடிமட்ட சிங்கள மக்கள் முதல் நடுத்டர மற்றும் மேற்தட்டு வர்க்க மக்கள்வரை பலரையும் சினங்கொள்ள வைத்திருக்கிறது. இதனால் நாள்தோறும் அரசுக்கெதிரான போராட்டங்களில் கலந்துகொள்ளும் சிங்கள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதுடன், எந்த அரசியல்க் கட்சிகளினதும் பின்புலமோ, ஆதர்வோ இன்றியே இவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் இன்றுவரை பல செய்தி ஊடகங்களும், தனி நபர் விமர்சகர்களால் நடத்தப்பட்டு வரும் யூடியூப் ஊடான விமர்சனங்களையும் நான் தொடர்ச்சியாகப் பார்த்து வருகிறேன். அரசுக்கெதிரான இந்த விமர்சனங்களை முன்வைப்போர் ஒன்றில் நேரடியாகவே கோத்தாபயவுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டினை எடுத்தோர் அல்லது கோத்தாவின் அதிதீவிர சிங்கள பெளத்த நிலைப்பாட்டினை ஆதரித்து அவரை பதவியில் அமர்த்தி அழகுபார்த்துவிட்டு, சீ சீ இந்தப்ப்ழம் புளிக்கிறது என்று இன்று கோத்தாவை எதிர்ப்போர் அல்லது, இவர்கள் இருவருமே இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிஉஅ எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவானவர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவை எல்லாவற்றிலும் ஒரு விடயம் மிகவும் ஆணித்தரமாக குறிப்பிடப்பட்டும், அதுகுறித்து தமக்கிடையே எந்த கருத்துவேறுபாடும் இல்லாமலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது. அதுதான் வடக்குக்கிழக்கில் நடந்த யுத்தமும், அதனை கோத்தாபய தலைமையில் ராணுவம் நடத்திய விதமும்.
    1 point
  14. இம்ரான் கானுக்கும் தோல்வி புதிதல்ல.....எத்தனை மாட்ச் தோத்திருக்கிறார்.....! 😂
    1 point
  15. பெண்கள் அணியும் ஆடைகளுக்கு இலங்கையில் சவால் வந்ததா? சவுதி அரேபியா, அப்கானிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளில் தானே பெண்கள் அணியும் ஆடைகளுக்கு தடை உள்ளது.
    1 point
  16. சிரிலங்காவில ஒங்கலுக்கு என்ன சுதந்திரம் இல்ல? தமிழ் ஏரியாவோ இல்ல சிங்கல ஏரியாவோ எங்கையெண்டாலும் சௌக்கியமாய் தானே இருக்கீங்க...
    1 point
  17. உனக்குமட்டுமா?உலகம். ********************** எமக்கு கிடைத்தது ஒரு பூமி-இங்கு பிறப்போர் அனைவற்க்கும் சமநீதி பிறப்பும்,இறப்பும் எம்மிடமில்லை-நீ பெரியவன் என்பது யாருக்குத் தெரியும். உலகில் பிறந்தது எத்தனைகோடி-எனி உலகுக்கு வருவது எத்தனை கோடி உலகு எனக்கு கீழென நினைத்தவன் ஒருவன் கூட உயிரோடு இல்லை தெரிந்தும்,தெரிந்தும் செய்யும் பிழைகளை தேசம் ஒருபோதும் வாழ்த்துவதில்லை. வாழும் போது பணக்காரன்,ஏழை வாழ்வு முடிவில் பெட்டிக்குள் சமமே காலையும் மாலையும் சூரிய,சந்திரன் காணாமல் போனால் உன்னிலை என்ன வாழும் வயசோ நூறாண்டு காலம் வையகம் உனதென போர்கள் செய்கிறாய். காலைச் சூரியன் உதிக்காவிட்டால் கறண்டால் வெளிச்சம் கொடுக்கவா முடியும். அன்பும் பாசமும் ஆளட்டும் உலகை அனைத்து உயிர்களும் ஒருதாய் பிள்ளை நெஞ்சக் கறள்களை நீக்கியெறிவோம் நின்மதியான நல் வாழ்வினைப் பெறுவோம். -பசுவூர்க்கோபி.
    1 point
  18. விடாதையுங்க..எங்களுக்கும் கோட்டாதான் வேணும்....எதுக்கும் ஒருக்கா ..கால்பேஸ் பக்கம் போங்கோ...அங்கை சில சனம் இரவிரவா சாப்பிட்டு விரதத்தயும் பிடித்து...காரியத்தையும் சாதிக்கினம்....நீங்கள் கிட்டப்போனால் சரியாகிவிடும்.. சில வேளை உங்களோடையும் சேருவினம்..😁
    1 point
  19. BBCக்கு (நமது ஆட்கள் சிலருக்கும்) உக்ரேன் போர் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிவது துரதிர்ஷ்டம். ரஸ்ய தரப்பு செய்திகளை தடைசெய்திருப்பதால் நீங்கள் அமைதி காப்பதில் அர்த்தமில்லை. அப்படியே நம்ப வேண்டியதுதான். வேறு தெரிவு உங்களுக்கு இல்லை.
    1 point
  20. வணக்கம், கிசெ துரையை வயதில் பெரியவர் என்று மரியாதை செய்கிறீர்கள். நல்ல விடயம். திருவாளர் துரை அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதன் நோக்கம் புரியவில்லை. யாழ்.கொம்மில் ஆங்கிலத்திலும் எழுதுகிறீர்கள், தமிழிலும் எழுதுகிறீர்கள் அதற்குள் படிக்கவில்லை பாமர மக்கள் என்று மன்னிப்பும் கேட்கிறீர்கள். அவரது ஆக்கங்களை கவனித்ததில் 1) துரையவர்கள் என்ன சொல்கிறார் என்பதும், அந்தத் தகவல் எங்கேயிருந்து பெற்றார் என்பதும் கூறவேண்டியது அவரது கடமை. (தனது சொந்தச் சரக்கு போல கூறக்கூடாது அல்லவா ?) 2) சொல்லப்படுகின்ற விடயங்களின் உண்மைத்தன்மை Mகவும் முக்கியம். 3) அத்துடன் அவர் பக்கச்சார்பான தகவல்களை உங்களைப்போன்ற பாமர மக்களுக்கு கூறுகிறார். (அது பாவமில்லையா ? 😉 ) 4) அவரது ஆக்கங்கள் செய்தி என்பதற்குள்ளோ, ஆய்வு என்பதற்குள்ளோ அல்லது செய்தித் திறனாய்வு என்பதாகவோ எந்த வரையறைக்குள்ளும் வரவில்லை. யாழ்ப்பாணத்தில் காச்சப்படும் கூழ் போன்று கூழுமில்லை, கஞ்சியுமில்லை ரகம். (அதற்குள் கடலுணவும் இருக்கும், மரக்கறியும் இருக்கும், சோறும் கலந்திருக்கும்) அவரது ஆக்கங்கள் உங்களைப்போன்ற பாமர மக்களை பாமர மாக்களாகவே வைத்திருக்கும்) (எனக்கென்னமோ நீங்கள்தான் கிசெ துரையோ என்று சந்தேகமாக இருக்கிறது. 😆)
    1 point
  21. அருமையான கவிதை கோபி ஆனால் யார் கேட்கிறார்கள்.......! 👍
    1 point
  22. *அற்புத வாழ்க்கை...* அப்பன் உயிர்துளி கொடுத்து... அம்மை உயிரை சுமந்து... தொப்புள் கொடி உயிர் வளர்ந்து... பத்து மாதம் கருவறை இருட்டில் மூச்சுபயிற்சி கண்டு... பூமியின் வெளிச்சத்தில் வந்து விழும் குழந்தை... வித்தியாசமான உருவம் கொண்டு வேற்றுமையான எண்ணம் கொண்டு... மனிதாபிமான குணம் கொண்டு... ஆண்டவன் விருப்பபடி நிறம் கொண்டு... வளர்ந்து வாழ்ந்து... நல்லதும் கண்டு கெட்டதும் கண்டு... சுகமும் கண்டு அவமானமும் கண்டு... ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித்தியாசமான அனுபவம் கண்டு... இது தான் உலகம் இது தான் வாழ்க்கை... இது தான் பாதை இது தான் பயணம் என்று... தெளிவதற்குள்ளே விதி சதி செய்து இயற்கை மாற்றம் கொண்டு... உடலை வளர்த்து அறிவை வளர்த்து... நட்பை வளர்த்து எதிர்ப்பை வளர்த்து... கோழையை எதிர்த்து வீரத்தை வளர்த்து... படிப்பு கண்டோம் தினமும் பிடித்த உணவு உண்டோம்... வேலை கொண்டோம் உழைப்பு கொண்டோம்... பணம் கண்டோம் திமிர் கொண்டோம்... ஆணவம் கொண்டோம்... அறியாமை கொண்டோம்... ஏளனம் கொண்டோம் எளிமை துறந்தோம்... பழைய நிலை மறந்து பணம் கண்டு புது வாழ்க்கை வாழ்ந்தோம்... பணம் கண்டு பாசம் என்ற வேசம் கொண்டோம்... மனைவி மக்கள் கண்டோம்... பேரப்பிள்ளை கண்டு பேரின்பம் கண்டோம்... *ஒருநாள் அப்பன் உயிர்துளி வெளுத்து சாயம் போக...* *அம்மை கொடுத்த உயிர் போக...* உணவு உண்டு வளர்ந்த உடல் மட்டும்... *அனாதையாய் இடுகாட்டில் நெருப்பின் வாயில்போக...* பெத்தவளும் வர தயாராக இல்லை... பெத்தவனும் வர தயாராக இல்லை... உள்ளத்தாலும் உடலாலும் இணைந்து வாழ்ந்த கட்டிய மனைவியும் வர தயாராக இல்லை... பெத்த சீர்மிகு பிள்ளையும் வர தயாராக இல்லை... பேரின்பம் அடைந்த ஆயிரம் முத்தம் நீ கொடுத்த பேரப்பிள்ளையும் உடன் வர தயாராக இல்லை... *உன்னுடைய உயிர் போனால் சகலமும் போனது...* உடல் நெருப்போடு போனது... பணம் வீட்டோடு நின்றது... பாசம் சுடுகாட்டோடு போனது... கடைசி வரை யார் வருவார் என்று அறியும் ஆற்றல் எவன் அறிவான் அகிலத்தில்... அனுபவத்தோடு சேர்ந்த கர்மவினையும் பாவமும் புண்ணியமும் கடைசி வரை வந்து சேர்ந்தது... ஆத்மா மட்டுமே ஆண்டவனை அடைந்தது... சுடுகாட்டு வெந்தணலில் ஒரு கை பிடி சாம்பல் மட்டுமே மிஞ்சியது... அறுபது வருடம் இல்லை நூறு வருட வாழ்விற்கு மிச்சம் இவ்வுளவுதான் வாழ்க்கையில்... இப்பூவுலகில் எதுவும் உடன் வர முடியாது என்று தெளிந்த நமக்குள்... எதற்கு இந்த கேவலமான வஞ்சம் வக்கிரம் பொறாமை ஏளனம் வரம்பு மீறி பேச்சு தகுதி மீறி ஆசை... பொறுமையோடும் எளிமையோடும் நல்ல எண்ணத்தோடும் வாழ்ந்தால்... போகும் பாதை கடைசியில் மோட்சத்திற்கு வழி வகுக்கும்... நாம் வாழும் காலத்தில் *போட்டி இன்றி* *பொறாமை இன்றி* *காமம் இன்றி* *குரோதம் காட்டாமல்* *களவு செய்யாமல்* *பேராசை கொள்ளாமல்* *அடுத்தவரின் குடியை கெடுக்காமல்* வாழ கற்றுக்கொள்ளுங்கள்... பிறரின் தவறை மன்னித்து பழகுங்கள்... தன்னிடம் ஆயிரம் கறைகள் ஆயிரம் குறைகள் அவற்றை நீக்க முயற்சியுங்கள்... பிறரை பழிக்காதீர்கள்... *நல்ல வண்ணம் வாழலாம்.* *வாழ்வில் வளம் பெறலாம்.*
    1 point
  23. சிலரை அதிசிறந்த மேதாவிகள், புத்திசாலிகள் என்று மக்கள் புகழப் புகழ அவர்களுக்கு புத்தி அறளைபெயர்ந்து விடுகிறது. உதாரணம்: இலங்கையில் யீ.எல்.பீரிசு. தமிழ்நாட்டிலும் ஒருவர் இருந்தார்.🤫
    1 point
  24. பல தமிழ் பெற்றோருக்கு மருத்துவம் மட்டுமே படிப்பாக தெரிகிறது அதுக்கென்ன படிப்பது நல்லதுதான் என்ன தான் இருந்தாலும் சும்மாவா மருத்துவ படிப்பும் ஆழமா அறிவோட படித்தால் தானே அங்கும் நுழைய முடியும் எத்தனை தமிழன் மருத்துவர் என்று எங்களுக்கு பெருமை தானே ஆனால் மருத்துவம் மட்டும் படித்தால் போதுமா கழுவவும் துடைக்கவும் தேடவும் தெரியவும் ஆடவும் பாடவும் அறிவோடு எழுதவும் அரசியல் பொருளியல் உளவியல் உயிரியல் சட்டம் சமூகவியல் சர்வதேச அரசியல் தத்துவம் என்றும் இலக்கியம் கலை கவிஞன் என்று எழுதவும் பேசவும் உந்தன் உரிமையை வெல்லவும் புவியியல் அரசியல் பூகோளத்திற்காய் என்றும் எத்தனை பேர் தேவை ஆதலால் இந்தப் படிப்புகளும் சும்மாவா புலம் பெயர்ந்து வந்தாலும் பிள்ளையின் படிப்புக்காகவும் உறவுகளின் பசிக்காகவும் உரிமைக் குரலுக்காகவும் விடிய விடிய வியர்வை சிந்தி குளிரிலும் பனியிலும் கொடுத்தானே வாழ்வை அவன் கூட சும்மாவா வந்தாலும் வந்தான் அகதியாய் வந்தாலும் ஆழமாய் புதைத்தாலும் அந்த விதை போலவே சட்டென்று முளைத்து பட்டென்று நிமிர டக்கென்று தெரியுதே என்று ஐயோ ஐரோப்பியருக்கும் அதிசயம் தானம் ஆதலால் அனைத்தையும் படிபோம் ஆயுதம் செய்வோம் அறிவைத் தேடுவோம். பா.உதயன் ✍️
    1 point
  25. சாப்பாட்டுக்கே வழியில்லை...பீஸ்ட்டுக்கு செலவு செய்யும் இலங்கைவாசிகள்.? சென்னை : இலங்கையில் மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில், பீஸ்ட் படம் பார்க்க அந்நாட்டு மக்கள் அடித்துக் கொண்டு பணம் செலவு செய்வது பார்ப்பவர்களை ஆச்சரியப்படவும், குழப்பமடையவும் வைத்துள்ளது. விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பீஸ்ட் படத்திற்கான டிக்கெட் புக்கிங் இரண்டு நாட்களுக்கு முன் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 படங்கள் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் எந்த படம் அதிக வசூலை குவிக்கும் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது. பீஸ்ட் டேஃபர்ஸ்ட் ஷோ பீஸ்ட் படம் தமிழகத்தில் மட்டும் 800 தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவிற்கான டிக்கெட்கள், டிக்கெட் புக்கிங் துவங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விட்டன. இதற்கு முன் மாஸ்டர் படத்திற்கும் இரண்டு நிமிடங்களில் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவிற்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்தன. அங்கேயும் ஹவுஸ்ஃபுல்லா? கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் பீஸ்ட் படத்தை பார்ப்பதற்கு ஃபர்ஸ்ட் ஷோவிற்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்து ஹவுஸ்ஃபுல் ஆகி உள்ளதாம். சாப்பாட்டிற்கே வழியில்லை என மக்கள் திண்டாடுவதாக கூறுகிறார்கள், பீஸ்ட் படத்திற்கு மட்டும் செலவு செய்ய இவர்களுக்கு எப்படி பணம் வந்தது என பலரும் கேட்டு வருகிறார்கள். பணம் எங்கிருந்து வருது? எங்கு பார்த்தாலும் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிடுகிறார். அத்தியாவசிய பொருட்களை வாங்கக் கூட மக்கள் பல மணி நேரம் காத்து கிடக்கிறார்கள். அடுத்த வாரம் முதல் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு என இந்தியா போன்ற நாடுகளிடம் இலங்கை உதவி கேட்டு வருவதாக செய்திகளில் கூறப்படுகிறது. அதே இலங்கையில் பீஸ்ட் படத்திற்கு வாரி இறைக்க மக்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது. என்ன கொடுமை சார் இது ? பீஸ்ட் படம் பல படங்களின் காப்பி, படத்தில் கதையே இல்லை என ரிலீசிற்கு முன்பே பலவிதமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. குவைத்தில் வன்முறையை தூண்டும் காட்சி இருப்பதாக சொல்லி பீஸ்ட் ரிலீசிற்கு அந்த நாடு தடை விதித்துள்ளது. அப்படி இருந்தும் இந்தியாவை விட இலங்கையில் பீஸ்ட் படத்தை பார்க்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். சாப்பாட்டை விடவா பீஸ்ட் முக்கியம். என்ன கொடுமை சார் இது என பலர் நொந்து கொண்டிருக்கிறார்கள். அட நம்ம ஊரில் தான் சினிமா பைத்தியங்கள், வெறியர்கள் இருக்கிறார்கள் என்றால், இலங்கைகாரர்கள் நம்ம ஆளுங்களையே மிஞ்சி விட்டார்களே. https://tamil.filmibeat.com/news/apart-from-economic-crisis-beast-fdfs-had-housefull-in-srilanka-094364.html டிஸ்கி பொழுது போக்கிற்கு செலவு செய்யபடாதா.? என்னப்பா தட்ஸ் தமிழ் உங்கட நியாயம்.? 😢
    1 point
  26. சில நேரங்களில்: சில விடையங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் போவதும் நன்றே...
    1 point
  27. தாங்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாக அவதானிக்கிறோம் என்று பகிரங்கமாக அறிவிக்கினை! வழமையாக பக்கத்திலிருந்து கேட்கும் இந்த குரல், இவர்களுக்கு வந்திருக்கும் ஆபத்தில் உதவுவதில் படு பிஸி! பில் நீட்டும் பொழுது மூச்சு நின்றுவிடும் சிங்கத்துக்கு! இந்தச் சிங்கம் கதிரையில் இருக்கும்போதே எல்லாவற்றையும் வழித்து துடைத்து எடுத்து விட வேண்டும் என்பதே அவரின் ஆசை, ஆனால் ஆசையில் மண் விழுந்திடும் போலுள்ளதே!
    1 point
  28. அப்பிடியேண்டால் எங்கடை தமிழ்சிறி ஒரு இராணுவ/அரசியல் அஷ்டவதானி
    1 point
  29. ஐயர்மாரே இப்ப உன்ரை பிள்ளை டாக்குத்தராய் வரவேணும் இஞ்சினியராய் வரவேணும் எண்டு அர்ச்சனை செய்து தீபாராதனை காட்ட வெளிக்கிட்டினம்.😂 அளவுக்கு மீறின வரட்டு கௌரவத்துக்கு பிள்ளை டாக்குத்தராய் வரவேணும் இஞ்சினியராய் வரவேணும் எக்கவுண்டனாய் வரவேணுமெண்டு ......பிள்ளையளுக்கும் ஆசையை ஊட்டி சொந்த நாட்டிலை படிச்சு முன்னேறேலாத மொக்கு பிள்ளையளை மலிஞ்ச பஞ்சப்பரதேசி நாடுகளுக்கு அனுப்பி சொதப்பல் படிப்பு படிக்க வைச்சு டாக்குத்தர் பட்டத்தோடை கூட்டிக்கொண்டு வருவினம்.😁 பிறகு மிச்சக்கதை சொல்ல வேணுமே???🤣 உதயன் கவிதை அருமை...👍
    1 point
  30. அன்பும் பாசமும் ஆளட்டும் உலகை அனைத்து உயிர்களும் ஒருதாய் பிள்ளை இப்படி மனிதம் வாழ்ந்தால் என் இந்த தொல்லை. அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
    1 point
  31. இண்டைக்கொரு பேப்பர் கட்டிங் பாத்தன்.....சம்பந்தம் சொன்னது உண்மையாய் இருக்குமோ?
    1 point
  32. எவ்வெள்ளவுக்கு எவ்வளவு கோட்டா பிடிவாதமாக நிற்கிறாரரோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. ஆனால் தமிழ்த்தலைமைகள் பாலம் போடப் போகிறோம் பெருளாதாரத்தை நிமிர்த்தப் போகிறோம் என்று வெறுமனே சொல்லக் கூடாது. கோத்தா பதவி விலகுவதாயின் உடனடியாகவே அரசியலமைப்புமாற்றம் ஒன்று வரும். அதில் தமிழர்தரப்பு ஒற்றையாட்சி அரசியலமைப்பைுநிராகரித்து சமஷஸ்டிமுறையிலான அரசியலமைப்மைக் கோர வேண்டும்.. இலங்கையின் இன்றைய நிலைக்கு ஒற்றையாட்சி அரசியலமைப்பும் அதனால் ஏற்பட்ட போருமே காரணம் என்பதை சிங்களத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் ஒரே குரலில் கூறவேண்டும்.அதற்கு அனைத்து அரசியல்கட்சிகளும் இணைந்து ஒரு அரசிலபைபுக் குழுவை ஒருவாக்க வேண்டும். சிறிலங்காவில் இரசியல் (ஸ்தரத்தன்மை) உறுதியான ஆட்சி அமைய வேண்'டுமானால் தமிழ்களுக்கு சமஷஸ்டி முறையிலான தீர்வே பொருத்தமாக இருக்கும் என்று உறுதியாகக் கூற வேண்டும். அதை விட்டு முதலில் பொருளாதாரத்தை நிமிர்த்துவோம் பின்னர் அரசியல் தீர்வு பற்றிப் பேசுவோம் என்று மோட்டுத்தனமாகச் செயற்படக் கூடாது . இது காலம் தந்த சந்தர்பம். அதைச் சரியான முறையில் தமிழத் தரப்பு பயன் படுத்த வேண்டும்.
    1 point
  33. பெற்றோர்களின் அறியாமையை சுட்டும் சிறப்பான கவிதை.....! 👍 யாழ் அகவை 24ல் பதியலாமே உதயகுமார்......!
    1 point
  34. மருத்துவம் ஒரு சேவை - இதனை விரும்பி, உணர்ந்து படிக்கவேண்டும், பெற்றோருக்காக தேர்ந்தெடுத்துவிட்டு ஏனோதானோ என மருத்துவராய் வேலை பார்ப்பது பிழையான ஒன்று. இவர்களால் உண்மையாக மருத்துவாய் சேவை செய்ய விரும்பும் ஒரு பிள்ளைக்கான வாயப்பு வீணடிக்கப்படுகிறது. எப்பொழுது உணர்வார்களோ தெரியவில்லை. இப்பொழுது உளவியல் துறை மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவருகிறது.. எத்தனையோ விதமான மன அழுத்தங்களுடன் தீர்வு செய்ய தெரியாமல் தற்கொலையை நாடுகிறார்கள்.. ஆனால் மனநல ஆலோசகராக, மனநல வைத்தியராக எங்களில் விரல் விட்டு எண்ணலாம்.. மொழி விளங்காமல், ஆலோசனைக்கு போகமுடியாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்.. வரலாறு, தொல் பொருளாராட்சி - இதன் அருமை தெரிந்தாலும் வேலைவாயப்புக்கள் குறைவு அரசியல்? பொருளியல்??? Forensic anthropologist - அப்படி ஒன்று இருக்கிறதா என பார்க்கிறார்கள்.. எத்தனை தரம் விளங்கப்படுத்தினாலும் ஏளனமே மிச்சம் கவிதைக்கு நன்றி
    1 point
  35. பெற்றோர்களுக்கான ஆக்கபூர்வமான கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..👍
    1 point
  36. யுக்ரேன்: “மின்சாரத்தை இழந்திருந்தால், அது பேரழிவாக இருந்திருக்கும்” – ரஷ்ய கட்டுப்பாட்டில் செர்னோபில் எப்படியிருந்தது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, பொறியாளர் வலேரி செமனோவ் வடக்கு யுக்ரேனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையம், படையெடுப்பின் முதல் நாளிலேயே ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்டது. தற்போது மீண்டும் யுக்ரேன் கட்டுப்பாட்டிற்கே வந்துள்ளது. பிபிசியின் யோகிதா லிமாயே ரஷ்ய படைகள் வெளியேறிய பிறகு அணுமின் நிலையத்தின் உள்ளே சென்ற முதல் செய்தியாளர்களில் ஒருவர். பிப்ரவரி 24-ஆம் தேதி பிற்பகலில், ரஷ்ய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் செர்னோபிலை சுற்றி வளைத்து, பெலாரஷ்ய எல்லையிலிருந்து யுக்ரேனுக்குள் சுமார் 16 கி.மீ தொலைவில் ரஷ்ய படைகள் நுழைந்திருந்தன. அணுமின் நிலையத்தைப் பாதுகாத்த சுமார் 170 யுக்ரேனிய தேசிய காவல்படையினர், ஆலையின் அடித்தளத்தில் சிறைபிடிக்கப்பட்டனர். பின்னர் ரஷ்ய வீரர்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருக்கின்றனவா என்று வளாகத்தைச் சோதனையிட்டனர். நேட்டோ என்றால் என்ன? யுக்ரேன் - ரஷ்யா போரில் அதன் பங்கு என்ன? லூகஷென்கோ: புதினின் நண்பர், 'ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி' - யார் இவர்? யுக்ரேன் Vs ரஷ்யா: இந்தப் போர் முடிவதற்கான 5 வழிகள் என்னென்ன? பூட்டப்பட்ட அறைகள்; வெட்டப்பட்ட கதவுகள் பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டார்கள். அடுத்த இரண்டு நாட்களில், ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனமான ரோசோடோமின் குழுக்கள் வரவழைக்கப்பட்டன. செர்னோபில் ஊழியர்கள் ஆலையின் பராமரிப்பை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைத்தனர். இது செயல்பாட்டில் இருக்கும் அனல்மின் நிலையம் அல்ல. ஆனால், உலகின் மிக மோசமான அணுசக்தி பேரழிவு நடந்துள்ள இந்த இடத்தில் கதிரியக்க கழிவுகள் சேமிக்கப்படுகின்றன. 1986-ஆம் ஆண்டில் நடந்த விபத்திற்குப் பிறகு சுத்தம் செய்வதற்கு மேலும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும் பில்லியன் கணக்கான டாலர்கள் செலவிடப்பட்டுள்ளன. அங்கு நிலைமை சரியாகக் கண்காணிக்கப்படாவிட்டால், அணுசக்தி பொருட்கள் வெளியேறும் அபாயம் உள்ளது. "இந்தக் கட்டமைப்பு எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ரோசோடோம் குழுவைச் சேர்ந்தவர்கள் விரும்பினார்கள். அனைத்து நடைமுறைகள், ஆவணங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய தகவல்களைப் பெற விரும்பினார்கள். தொடர்ச்சியான கேள்விகள், சில நேரங்களில் வலுக்கட்டாயமாக கேட்கப்பட்டதால் நான் அச்சப்பட்டேன்," என்று அணுமின் நிலையத்தின் கதிர்வீச்சு மேற்பார்வையாளர் ஒலெக்ஸாண்டர் லொபாடா கூறினார். படக்குறிப்பு, அணுமின் நிலையத்தின் கதிர்வீச்சு மேற்பார்வையாளர் ஒலெக்ஸாண்டர் லொபாடா அணு மின் நிலையத்தின் பிரதான கட்டடத்தின் மேல் தளத்தில், அந்தக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்தக்கூடிய முக்கிய அறைகள் உள்ளன. அவை நீண்ட, குறுகிய பாதையின் இருபுறமும் அமைந்துள்ளன. சில அறைகள் பூட்டப்பட்டிருந்தன. ரஷ்யர்களுக்கு சாவி கிடைக்காததால், அறைகளில் பூட்டு பதிக்கப்பட்டிருந்த கதவின் பகுதியை வெட்டினார்கள். "நாங்கள் தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது. மேலும், அவர்களை புண்படுத்தாமல் இருக்க கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டியிருந்தது. இதனால், அவர்கள் எங்கள் பணியாளர்களை அந்தக் கட்டமைப்பை நிர்வகிக்க அனுமதித்தார்கள்," என்று பொறியாளர் வலேரி செமனோவ் கூறினார். அணு மின் நிலையத்தின் மின்சாரம் மூன்று நாட்களுக்கு துண்டிக்கப்பட்டபோது, ஜெனரேட்டரை இயக்குவதற்கு எரிபொருளைக் கண்டுபிடிக்கத் துடித்ததாகவும் ரஷ்யர்களிடம் இருந்து சிலவற்றைத் திருடுவதற்குக் கூட முயன்றதாகவும் வலேரி கூறினார். "மின்சாரத்தை இழந்திருந்தால், அது பேரழிவாக இருந்திருக்கும்" என்று ஒலெக்ஸாண்டர் விளக்கினார். "கதிரியக்க பொருட்கள் வெளியேறியிருக்கலாம். நான் என் உயிருக்குப் பயப்படவில்லை. ஆலையைக் கண்காணிக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்று தான் பயந்தேன். அது மனித குலத்திற்கே சோகத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்குமே என்று அஞ்சினேன்," என்கிறார் வலேரி. படக்குறிப்பு, ரெட் ஃபாரெஸ்ட் அணுசக்தி ஆபத்து "ரெட் ஃபாரெஸ்ட்" என்றழைக்கப்படும் ஆலைக்குப் பின்புறம் இருக்கும் பகுதி, பூமியில் மிகவும் அதிக கதிரியக்கமுள்ள இடங்களில் ஒன்றாகும். யுக்ரேன் ராணுவத்தால் வெளியிடப்பட்ட ட்ரோன் காட்சிகள் ரஷ்ய வீரர்கள் அகழிகளைத் தோண்டுவது, அங்கேயே தங்கியிருப்பது போன்றவற்றைக் காட்டுகிறது. இதை அணுமின் நிலைய அதிகாரிகளும் பிபிசியிடம் உறுதி செய்தார்கள். அணுசக்தி பாதுகாப்பு பற்றி ராணுவ வீரர்களுக்கு எவ்வளவு குறைவாகத் தெரிந்துள்ளது என்பதற்கு இது சான்றாக விளங்குகிறது. பிரதான கட்டடத்தின் அடித்தளத்தில், தங்குமிட பாணியிலான அறைகள் முற்றிலுமாகச் சூறையாடப்பட்டுள்ளன. தரையில் விரிப்புகள், மெத்தைகள், உடைகள், காலணிகள் மற்றும் யுக்ரேனிய தேசிய காவல்படையினரின் பிற தனிப்பட்ட உடைமைகள் உள்ளன. செர்னோபில் அதிகாரிகள், "ரஷ்ய வீரர்கள் வெளியேறும்போது தங்களால் முடிந்ததைக் கொள்ளையடித்தார்கள். மேலும், அவர்கள் சிறைபிடிக்கப்பட்ட தேசிய காவல் படையினரையும் உடன் அழைத்துச் சென்றனர். படக்குறிப்பு, யுக்ரேரைனின் முன்னாள் அதிபர் பெட்ரோ பொரோஷென்கோ (இடதுபுறம்), செர்னோபிலுக்கான அணுகல் மீண்டும் திறக்கப்பட்ட உடனேயே தளத்தைப் பார்வையிட்டார். "அணுமின் நிலையத்தை எங்களால் பாதுகாப்பாக வைத்திருக்க முடிந்தது. ஆனால், அவர்கள் எங்களுடைய 169 வீரர்களை உடன் கொண்டு சென்றது வருத்தமளிக்கிறது," என்று வலேரி கூறினார். அவர்கள் எங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிபடுத்தப்படவில்லை. ஆனால், அவர்கள் ரஷ்யாவில் இருப்பதாக செர்னோபில் ஊழியர்கள் நம்புகிறார்கள். யுக்ரேனின் முன்னாள் அதிபர் பெட்ரோ பொரோஷென்கோ, ஆலையின் பணியாளர்களுக்கான உணவு மற்றும் பிற பொருட்களுடன் வெள்ளிக்கிழமை செர்னோபிலுக்குச் சென்றார். அவர், "நாளை ரஷ்ய படைகள் இங்கு வர முடியாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோமா என்றால், இல்லை என்பதே பதில். புதின் முற்றிலும் கணிக்க முடியாதவர். மேலும், அணுசக்தி ஆபத்தை எல்லைகளுக்குள் வரையறுத்துவிட முடியாது. அது கிழக்கு ஐரோப்பா, மத்திய ஐரோப்பா மற்றும் கிரேட் பிரிட்டனைக் கூட அடையலாம்," என்று எச்சரிக்கை விடுத்தார். https://www.bbc.com/tamil/global-61048717
    1 point
  37. ஆனால் அவருக்கு ஏழு மூளை, ஒரு மூளையை பாவித்தே ஒரு நாட்டை அழித்துள்ளார், இன்னும் ஆறு நாடுகளை அழிக்கும் வல்லமை உள்ளது
    1 point
  38. இவர் அரசியல் செய்வதே ஆட்சியில் உள்ளோருக்குச் சார்பாகக் கடிதம் எழுதவும் பேசவும் தானே? தமிழ் மக்களுக்கும் இவரது அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?
    1 point
  39. பாகிஸ்தான் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் முட்டாக்குப் போட்டவயை அரிதட்டு வைச்சு தேடினாலும் ஒரு 5 இல்ல 6 தான் தேறும்...
    1 point
  40. இப்படி சொல்வதால் உங்களிற்கு மகிழ்ச்சி என்றால் சந்தோஷமே 😜
    1 point
  41. கொழும்பிம் புறந‌கர் பகுதியான ராகமையில் மிகவும் அமைதியான மனதிற்கு ரம்மியாமான சூழலில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. இது ஒரு பிரபலமான பஸிலிக்கா (பேராலயம்). ஆழகிய சிற்ப வேலைப்பாடுகளை கொண்டது, வீட்டுக்கு அருகாமையில் என்பதால் அடிக்கடி அந்த தேவாலயத்திற்கு வருவேன். தனிமையில் சில மணித்தியாலங்கள் செலவிடுவேன். பல ஏக்கர் ரப்பர் தோட்டங்களுக்கு மத்தியில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. இன்றுமப்படியே ஒரு அழகிய மாலை பொழுது லெந்து காலப்குதியின் 4வது ஞாயிற்றுக்கிழமை. தேவாலயத்தில் பாடல்கள் முடிந்து 1ம், 2ம் வாசகங்கள் வாசிக்கப்பட்ட பின் பாதர் தனது பிரசங்கத்ததை துவங்கினார். ஒருவருக்கு இரண்டு குமார்கள் இருந்தார்கள். இதில் இளையவன் தனக்குறிய ஆஸ்தியின் பாகத்தை பிரித்து எடுத்து கொண்டு தூரதேசம் சென்று பரஸ்திரியின் சகவாசத்தால் எல்லாவற்றையும் இழந்து போனான். அபொழுது அந்நாட்டில் கடும் பஞ்சம் உண்டாகியது அவன் அந்நாட்டில் உள்ள ஒரு பிரசையிடம் பன்றி மேய்க்கும் வேலை கிடைத்து அதை செய்துகொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவனால் பசி தாங்க முடியவில்லை. பசியில், பன்றிகள் திங்கும் தவிட்டால் தன் பசியை தீர்க்க் முயன்றான். முடியவில்லை. மனம் திருந்தி, நான் என் தகப்பனிடம் செல்வேன் அவரிடம் ஒரு வேலைக்காரனாகவாவது இருப்பேன் என நினத்துகொண்டு உடனடியாக தகப்பனிம் திரும்பி செல்கின்றான். தூரத்தில் இவன் வரும்போது தகப்பன் இவனை கண்டு ஓடோடி வந்து கட்டித்தழுவி என் மகனே வருமையா என அழைத்து சென்று குளிக்க வைத்து நல்ல உடை உடுத்த்தி ஆடொன்றை அடித்து விருந்து வைத்த்து புசித்து களிப்புடன் கொண்டாடி மகிழ்கின்ரார்கள். அப்பொழுது வெயிலில் வேலை செய்து நாள் பூராகஷ்டப்பட்டு களைத்துபோய் வரும் மூத்த மகன் தூரத்தில் தன் வீட்டில் நடக்கும் களியாட்ட சத்தத்தினை கேட்கின்றான். யாரது, என்ன நடக்கின்றது என ஒரு வேலையாளிடம் வினவுகின்றான். அவன் இதோ உம் தம்பி நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்பி வந்துள்ளார் அவருக்காக உன் தகப்பன் இந்த விருந்தை ஏற்பாடு செய்துள்ளார் என்றார். கோபமுற்ற மூத்த மகன் வெளியில் இருந்து தந்தையை கூப்பிடுகின்றான். என்ன காரியம் செய்தீர், விலைமகளிருடன் சொத்தை அழித்தொழித்த இந்த உம்முடைய இளைய மகனுக்காவா இந்த ஆட்டம் ஆடுகின்ரீர். இவ்வளவு காலம் உமக்கு கீழ் அடிமைபோல் வேலை செய்த எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியை நண்பர்களுடன் சந்தோசமா அடித்து சமைத்து சாப்பிட தந்துள்ளீர்களா? நான் இன்றிலிருந்து இந்த வீட்டிட்குள் வரமாட்டேன் என்கின்றான். கதை கேட்ட எனக்கும் ஆத்திராமக வந்தது. சீ என்ன தகப்பன் இவன் இவ்வளவு அனியாயமாக தன் மூத்த மகனை நடத்துகின்றாரே. இது சரியால்ல. தொடர்ந்து கேட்க மனமில்லை படியில் இருந்து எழுந்து வீட்டிட்கு நடக்க தொடங்கினேன். ******************************************************************************************************* தெற்கு லண்டன். 2009 பெப்ரவரி மாத்த்தில் ஒரு நாள். வேலை முடிந்து வரும்போது இரவு 7 மணி இருக்கும் குளிரில் வந்தபடியால் களைப்பில் கட்டிலில் சிறிது நேரம் சாய்ந்திருந்தேன். கதவு தட்டப்பட்டது. கதவை திறந்தேன் பக்கத்து அறை நண்பன் சிவாவுடன் ஒருவர் இருந்தார். ஒரு 40 வயது மதிக்கலாம் கட்டை தடித்த உருவம், மானிறம் குளித்து பல நாட்கள் ஆன ஒரு தோற்றம். பற்கள் காவி பிடித்து இருந்தது. கண்கள் சிவந்து இருந்தது. வலிமைமிக்க உடலமைபு ஒர் குளப்படிகாரர் போலவே தெரிந்தார். சிவா அவரை என்னிடம் அறிமுகப்படடுத்தினார். இலங்கையில் கிழக்கு மாகாணம் என்றார். என்னிடம் நன்றாக கதைத்தார். கொழும்பில் தனக்கு பல சிங்கள நண்பர்கள் இருப்பதாக கூறினார். அன்றிலிருந்து அவர் எங்கள் நண்பரானார். நன்றாக கதைப்பார். அதிகம் குடிப்பார் நன்கு ருசியாக‌ சமைப்பார். ஓய்வு நேரங்களில் தமிழ்படங்கள் பார்ப்போம். 5 நாள் வேலைக்கு போனான் அஅடுத்துவரும் 7 நாட்களுக்கு வேலைக்கு போக மாட்டார். குடித்து விட்டு வீட்டில் இருப்பார். இந்தியாவில் இருக்கும் தனது மனைவியுடன் அடிக்கடி போனில் கதைப்பார். அவருக்கு ஒரு நிரந்தரமான தொழில், வீடு இல்லாதபடியால் அவரால் மனைவியை தன்னிடம் அழைத்துக்கொள்ள முடியவில்லை. பல சந்தர்ப்பங்களில் தனிமையில் கதைத்த்து கொண்டிருப்பார். ஏதோ ஒன்றை குறித்து கவலைப்படுபவர் போல இருந்தார். ஒருநாள் அவரின் அறை கதவு மூடியிருந்தது. யாரோ விசும்பி அழும் சத்தம் கேட்டது. பின்னர் யாருடனோ விவாதிப்பது போல் சத்தம் கேட்டது. ஒன்றும் புரியவில்லை. அவரது அறையக் கடந்து என்னுடய அறைக்கு சென்றேன். பின்பொரு நாள் கழிவறைக்கு நான் சென்றபோதும் அது உள்ளாள் மூடப்பட்டிருந்தது. யாரொ விசும்பியழும் சத்தம் கேட்டது. நான் "இதை ஏன் செய்தேனோ தெரியவில்லை ...... தெரியவில்லை" என்னை மன்னியுங்கள்" என யாரோ கூறுவது தெளிவாக கேட்டது. ஒருநாள் நாட்டு அரசியலை பற்றி பேச்சு திரும்பியது. திடீரென அவருக்கு கோபம் வந்தது. இந்த.....மக்களால் தானே நான் இதை செய்யவேண்டி வந்தது. இப்பொழுது நாட்டுக்கும் போக முடியாதுள்ளது என்றார். மேசையில் ஓங்கி குத்தினார். அப்பொழுது நான் அறிந்து கொண்டேன் இவர் பலசாலியான மூர்க்கதனம் மிக்க‌ ஒரு மனிதன் என. காலப்போக்கில் ஒவ்வொருவரும் பிரிந்து போய் விட்டோம். 2018 மார்ச் மாதம் கொழும்பு. அது ஒரு பெரிய வியாழக்கிழமை நாள். கணனி முன் உட்கர்ந்து இணையத்தை தட்டினேன். பிரபலமான அந்த தமிழ் இணயத்தளத்தை பார்வையிட்டவாறு இருந்த என் கண்ணில் அந்த மரண அறிவித்தல் கண்ணில்பட்டது. எங்கேயோ கண்ட முகம் சிறிது மாறி இருந்தது. ஆம் அதே முகம் அவரேதன் எனக்கு அடுத்த அறையில் இருந்தவர்தான். எனக்கு கொஞ்சம் சோகமாகவும் கவலையாகவும் இருந்தது. என்னுடன் அன்பாக‌ ஒன்றாக இருந்து சமைத்து சாப்பிட்டவர் அல்லவா இவர். கடைசியில் இத்தனை காலத்திற்கு பின்னர் இப்படி மரண அறிவித்தலில் இவரை காண்பேன் என நினைக்கவில்லை. என்னவேன்று இறந்தார் என தெரியவில்லை. சரி இவரது பெயரை கூகுல் செய்து பார்ப்போம் என கொபி பெஸ்ட் செய்து தேடினேர். அது அனேமேதய தமிழ் தளம் திடிரேன பொப்அப் செய்து ஸ்க்ரீனில் வந்தது. வீட்டினுள் அன்று நான் மட்டு தனியே இருந்தேன். ஒரே நிசப்தம் ஒரு மெல்லிய காற்று என்னை ஸ்பரித்து சென்றது. தலையங்கத்தை வாசித்தேன் லண்டனின் வாழ்ந்து வந்த ஒரு கொடூரன் மரணம். அதில் இவருடைய படம் போடப்பட்டு இருந்தது. இவர் செய்த பல குற்றச்செயல்கள் பட்டியல் இடப்பட்டிருந்தது. அதில் ஒன்று இவர் ஒரு கர்ப்பிணி பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது. எனக்கு உடலெல்லாம் ஆடத்தொட‌ங்கிவிட்டது அட இவருடனா இறைச்சிகறி வைத்து சாப்பிட்டோம் / ஒன்றாக படம் பார்த்தோமே / இரத்தக்கறை படிந்த கைகளல்லவா.. உடலெல்லாம் பற்றி எறிவது போல் இருந்தது. இப்படியும் குரூரர்கள் இருக்கின்ரார்களா என மனம் பதைபதைத்தது. வீட்டை உடனடியாக மூடி விட்டு தேவாலயத்தை நோக்கி ஓடினேன். ஆலயத்தில் நிறைய கூட்டம் இருந்தது. பாதர் அன்று நீண்டதொரு பந்தியை வாசித்த்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் யூதாசை பற்றி பின்வறுமாறு வாசித்தார்: அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியத்திடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். பூசை முடிந்து எல்லோரும் சென்றபின் அதே மெல்லிய காற்று என்னை ஸ்பரித்தது. பாதர் வெளியே வந்து நின்றார். பாதரிடம் கேட்டேன் யூதாஸ் நல்லவானா? கெட்டவனா? நிச்சயமாக அவன் கெட்டவன். காட்டிகொடுத்த‌வன் அல்லவாவா? ஆம் அவன் தன் பாவங்களுக்காக மனஸ்தாபபட்டனும் கூட‌ என்றேன். நிச்சயமாக அவன் பாவி நரகத்தில் இருப்பான் என்றார். அவர் சொல்லி முடிக்க‌வும் அந்த பேரலயத்தின் கடிகாராம் டாங்.. டாங் என ஆறு முறை மணியடித்தது பாதர் என்னை கடந்து சென்று விட்டார். மழைதூர ஆரம்பிக்கின்றது. மெதுவாக வீட்டை நோக்கி நடக்கின்றேன். இப்பொழுது அந்த மெல்லிய ஸ்பரிசம் இல்லை. காற்று வேகமாக அடித்தது. ம‌ரங்கள் விர்ர்...விர்ர்.. என வேகமாக அசைந்தன‌ அதன் மத்தியில் யாரோ விசிந்து..விசிந்து அழும் அழுகை சத்தம் என் காதில் ரீங்காரமிட்டபடி இருந்தது. கொழும்பான் அனுபவம் - 2
    1 point
  42. நல்ல பாடத்தைத் தரும் சிறப்பான கதை......பாராட்டுக்கள் கொழும்பான்......! 👍 இந்தக் கதைக்குமுன் இருக்கும் இரண்டு கதைகளையும் கொஞ்சம் பார்க்கவேணும்.......! சிறிது முன்ன பின்ன இருக்கலாம் விடயம்தான் முக்கியம்.....! 1 - ஒரு மூதாட்டியின் பணப் பையில் இருந்து ஒரு காசு தவறி விழுந்து காணாமல் போய் விடுகின்றது.....அவள் எல்லா இடத்திலும் தரையைப் பெருக்கித் தேடுகிறாள், கிடைக்கவில்லை. பின் விளக்கைக் கொண்டு கட்டில், அலுமாரிக்கு கீழ் தேடி அதை கண்டு எடுத்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்து விடுகிறாள்......! 2 - ஒரு இடையனின் மந்தையில் இருந்து ஒரு ஆடு மேயும்போது வழிதவறி காட்டுக்குள் போய் விட்டது. அந்த இடையனும் மற்ற ஆடுகளை விட்டு விட்டு இந்த ஒரு ஆட்டைத் தேடிக் கொண்டு காட்டுக்குள் போகிறான்.நெடுந்தூரம் சென்றும் காணவில்லை. உடனே அவன் குரல் கொடுத்துக் கொண்டே அதைத் தேடுகின்றான். சிறிது நேரத்தில் தன் எஜமானனின் குரல் அந்த வழிதவறிய ஆட்டுக்குக் கேட்க அதுவும் குரல் வந்த திசைநோக்கி குரல் கொடுக்கின்றது. இப்படியே குரலின்மூலம் ஆடும் அவனும் ஒன்று சேர்ந்து சந்தோசமாக வீடு திரும்புகின்றனர்......! 3 - அடுத்ததாக நீங்கள் சொன்ன கதை......! கவனிக்கப்பட வேண்டியவை : காசு குரல் கொடுக்காது, தானாக திரும்பியும் வராது....அப்படியானவர்களை இறைவன் தானே சென்று தேடிபி பிடித்து அருளுகின்றான்......! வழித்தவறும் ஆடுகள் பட்டிக்கு திரும்புவது சிரமம். அப்படியானவர்களை இறைவனும் அழைக்கிறான், அவர்களும் தங்கள் முயற்சியின் மூலமாகவும் இறைவனை வந்தடைகிறார்கள்.....! மனிதனுக்கு இது அவசியமில்லை..... தப்பான வழியில் சென்றவன் தானாகத்தான் திருந்தி வரவேண்டும். அப்படி வருபவனை இறைவன் மனமுவந்து இரு கரம் நீட்டி ஏற்றுக் கொள்கின்றான்.......! யூதாஸைப் பொறுத்தவரை முதல் இரவு விருந்தின் போது நீ என்னைக் காட்டிக் கொடுப்பாய் என்று அவனிடம் ஏசுநாதர் சொல்கிறார், அப்படியே மற்றுமொரு சிஷ்யரிடம் "கோழி கூவும் முன் மும்முறை என்னை மறுதலிப்பாய்" என்றும் சொல்லியிருக்கிறார்..... அவர் விரும்பியிருந்தால் அங்கிருந்து தப்பியிருக்கலாம். அதுமட்டுமன்றி தனக்கு கிடைக்கப்போகும் தண்டனையின் கொடூரமும் அவருக்கு தெரிந்திருக்கின்றது.....அதனால்தான் அவர் தேவனிடமும் எனக்கு இது தேவைதானா என்னை நான் இந்த தண்டனைக்கு ஒப்பு குடுக்க வேண்டுமா என்றும் கேட்டு பிரார்த்தனை செய்கின்றார்.....அப்பவும் அவர் தப்பி சென்றிருக்க முடியும்.....ஆனால் விதியின் வசம் தன்னை ஒப்புக்கொடுத்து தண்டனையை தானே ஏற்றுக்கொள்கின்றார்.........அதனால் யூதாஸ் கெட்டவரல்ல, ஏனைய அப்போஸ்தலர்களை விட யுதாசின் மரணம்தான் மிகவும் பரிதாபகரமானது.......! 💐 நன்றி கொழும்பான்.இது நிறைய நினைவுகளை மீட்டி விட்டது.......! 😁
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.