Jump to content

Leaderboard

  1. பகிடி

    பகிடி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      17

    • Posts

      353


  2. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      15

    • Posts

      43054


  3. Kavi arunasalam

    Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      11

    • Posts

      1641


  4. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      28966


Popular Content

Showing content with the highest reputation on 04/27/22 in all areas

  1. நான் யாழ் தளத்தை பல ஆண்டுகளாக அறிவேன் என்றாலும் இப்பொழுது தான் உறுப்பினர் ஆக இணைந்து கொண்டேன். நான் உக்ரைனில் 2006 புரட்டாசி மாசம் மருத்துவம் படிக்க போனேன்.2014 - 2015 அளவில் இலங்கைக்கு திரும்பினேன். இலங்கையில் சில வருடம் வேலை செய்து விட்டு இப்பொழுது கனடாவில் Alberta வில் வசிக்கிறேன். Canadian emergency Ambulance service இல் வேலை செய்கிறேன். படிக்க போன இடம் luhansk ( லூகான்ஸ்க்,டன்பாஸ் இல் உள்ள Donesk (டோனேஸ்க் ) க்கு அடுத்த பெரிய province. போன புதிதில் நான்கு இலங்கை மாணவர்கள் தான்போனோம். அப்பொழுது நாங்கள் தான் ஒரே இலங்கை மாணவர்கள். கொஞ்சம் தமிழ் நாட்டு மாணவர்களும் இருந்ந்தார்கள்.லீவு கிடைக்கும் பொழுது பல வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா இலங்கை போய் விடுவார்கள். நான் டிக்கெட் செலவு கூட என்பதால் ukraine க்குள் சுத்துவது வழக்கம். அப்படி போன இடங்களில் ஒன்று தான் மரிப்புல். இது தவிர கிரீமியா கீவ் கார்க்கிவ்,liviv, zaporizhzhia போன்ற இடங்களில் ஓரிரு மாதங்கள் ஆவது இருந்து இருப்பேன். டன்பாஸ் பிறதேசத்தில் இருப்பவர்களில் 90 வீதம் பேர் ரஷியன் தாய் மொழி ஆக கொண்டவர்கள். பலர் சுரங்க தொழிலாளிகள். ரஷ்யாவுடன் குடும்பம் பிணைப்புகள் அதிகம் கொண்டவர்கள். நானே சில தடவைகள் ரஷ்யாவுக்குள் போனேன் என்று தெரியாமலே உள்ளுக்குள் போய் இருக்கின்றேன் இவர்களுடன். குணம் என்று வரும் பொழுது மிகவும் பொதுவாக நல்ல மனிதர்கள் தான். நான் இளம் வயது ஆட்களை வைத்து அந்த சமூகத்தை மதிப்பிடக்கூடாது என்று நம்புகிறேன். ஆகவே 60 கடந்தவர்கள் என்று பார்த்தால் ஓரளவுக்கு நல்லவர்கள் தான் அவர்கள். என்றாலும் எல்லோரையும் அப்படி சொல்ல ஏலாது. கம்யூனிஸ்ட் சித்தாதத்தில் பற்று கொண்டவர்கள். வெளியே சொல்லிக்கொண்டு இருக்க மாட்டினம் ஆனால் உள் மனது அது தான். நான் கூட பழகியது பாட்டிகள் தாத்தாக்களுடன் தான். சில வருடங்கள் அவர்கள் வீட்டில் வாடகைக்கு வாழ்ந்தும் இருக்கின்றேன். Danbaas உண்மையில் ukraine க்கான பிரதேசம் தான். ஆனாலும் சோவியத் காலத்தில் ஸ்டாலின் சைபிரியாவுக்கு நாடு கடத்திய கிரிமினல்களில் ஓரளவுக்கு குறைவான பிழைகள் செய்தோரை இங்கே டன்பாசில் குடியெற்றி அங்குள்ள சுரங்க வேலைக்கு பயன்படுத்திக்கொண்டார். அவர்களின் பரம்பரை தான் இப்போது அங்கே இருப்போர். வெள்ளை இன வெறி உண்டு. அதுவும் எல்லோரும் அப்படி என்று ஒரேஅடியாக சொல்ல முடியாத அளவுக்கு நல்ல மனிதர்களின் ஞாபகங்கள் வந்து போகின்றது. இரவில் வெளியே நம்பிக்கையோடு சுற்ற முடியாது நன்கு ரஷியன் தெரியாவிட்டால். நான் பல முறை மாட்டி இருக்கின்றேன். குடிகாரர் குடித்து விட்டு காசுக்கு வெளிநாட்டு ஆக்களை அடித்து காசு வாங்குவது வளமை.. அப்படி அடிக்கும் பொழுதே அங்குள்ள இன்னொருவர் காப்பாற்றியும் விடுவார். நான் ஒருமுறை இரவு கடைக்கு போய் சாமான் வாங்கி வெளியே வரும் பொழுது சைக்கிள் செயின் கொண்டு அடிக்க ஒருவர் வந்து இருந்த காசை கொடுத்து தப்பிய சம்பவம் ஞாபகம். எல்லோருக்கும் ஒரு வீடு அங்கு உண்டு. குவர்த்திரா ( அப்பார்ட்மெண்ட் ) என்று சொல்வோம். ஏற்கனவே சொன்னது போல வாயோதிப்பர்கள் பழக இனிமையானவர்கள். அவர்களிடமும் வெள்ளை இன வெறி, உடைந்து போன சோவியத் பற்றிய கனவுகள், ரஷியன் மொழி மீதான தீரா தாகம், conservetive மனநிலை, மனிதாபிமானம், கடவுள் பக்தி, வெளியே காட்டாத அமெரிக்க வெறுப்புணர்வு, இந்தியா மீது பாசம்,உழைப்பு, சுற்றதாருடன் மனித பன்புடன் பழகுவது, இயலுமான வரை மற்றவர்களுக்கு உதவி, சிக்கனம், உபசரிப்பு என்று எல்லாம் கலந்த சாதாரண மனிதர்கள் அவர்கள். இவர்கள் கிழக்கு உக்ரைனியர்கள்.mariupol zaporizhzhia, கார்கிவ் போன்ற இடங்களில் வாழ்வோரும் இப்படி பட்டவர்கள் தான் என்றாலும் கார்கிவ் மேற்கத்தேய நாகரிக மோகம் கொஞ்சம் அதிகம் கொண்ட பகுதி. மேற்கு ukraine இல் உள்ள மக்கள் அப்படியே வேறு ஒரு மக்கள் கூட்டம். ரஷியன் தெரிந்தாலும் விடாப்பிடியாக பேச வேண்டாம் என்று இருக்கும் மக்கள் அவர்கள். ஒப்பீட்டளவில் மிகவும் நாகரிகம் ஆன மக்கள். ஒரு காலத்தில் யூதர்கள் சோவியட் ரஷ்யா உடன் சேர்ந்து இவர்களை அடக்கிபலரை படுகொலை செய்தது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கு இவர்கள் பின்னர் ஜெர்மனிஉடன் சேர்ந்து யூதர்களை படுகொலை செய்ததும் உண்மை. கம்யூனிஸ்ட் சித்தாந்தம், Soviet ரஷ்யா இந்த இரண்டும் இவர்களை முன்னேற விடாமல் இறுக்க பிடித்திருக்கிறது என்று மனதார உணருகின்றர்கள்.யூத வெறுப்புணர்வு ஓரளவு உண்டு என்பது உண்மை என்றாலும் எல்லோரிடமும் சமமாக இழையோடி இல்லை. இவர்களில் பலருக்கு poland ருமேனியா, அஸ்திரியா நாடுகளோடு குடும்ப பிணைப்பு உண்டு. கிழக்கு மக்கள் ரஷியன் ஆர்த்தோடோக்ஸ் என்றால் இவர்ககளில் பலர் கத்தோலிக்கார்கள். யாழ்ப்பாண மொழியில் சொல்வது என்றால் புழுத்த கத்தோலிக்கர்கள். இங்கே குடி போதையில் அடிப்பவன் இல்லை. எங்களை கறுப்பு குரங்கே என்று கூவி நக்கல் அடிப்பவர்களும் இல்லை.சுதந்திர நாட்டுக்கான தணியாத தாகம் கொண்டவர்கள். இங்கே liviv என்று ஒரு இடம் உண்டு அழகான இடம். ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை என்று இப்போது நினைத்து வருந்துகிறேன் கிவ் இது இன்னொரு அற்புதம். இங்குள்ள டேனிப்பர் ஆற்றின் கரையோரங்களில் நடந்து திரிந்த நாட்கள் பசுமையான நினைவுகள். மிகவும் ஆழத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள் எந்த குண்டு வெடிப்பிலும் இருந்தும் உங்களை பாதுக்காக்கும். இங்கே உள்ளவர்கள் அனைவரும் நன்கு ரஷியன் பேசுவார்கள், ரஷியன் தான் இங்கேயும் பெரும்பாலும் பேசப்படும் மொழியும், எனினும் கம்யூனிஸ்ட் சித்தாதம் மீது எந்த ஈடுபாடும் இல்லை. (கொழும்பு தமிழர்க்கு தமிழ் பாசம் போல😄.) ரஷியன் தான் இவர்களின் தாய் மொழி எனினும் பெரிய பற்று என்று ஒன்றும் இல்லை. Ukraineனை நேசிப்பவர்கள் என்பதை விட கீவை நேசிப்பவர்கள். எப்படி யாவது யூரோப் இல் இணைந்து விட்டால் தமது செல்வ செழிப்புக்கு நல்லது என்று கருத்துப்பவர்கள். கிரிமியா இது வரலாற்று முக்கியத்துவம் உள்ள குடா நாடு. Turkey யும் ரஷ்யாவும் பிரித்தானியாவும் சண்டை போட்டு களைத்துபோன இடம். இங்கே கருங்கடலில் குளித்து தான் நான் நீந்தவே பழகினேன். இரண்டாவது உலகப்போர் நிறுத்தபடவும் சர்வதேச சங்கம் ஐக்கிய நாடுகள் சங்கமாக மாறவும் கையெழுத்து போடப்பட்ட இடம். இங்கே உள்ளவர்கள் கொஞ்சம் பழுப்பு தோல் கொண்டவர்கள். ரஷியன் போல் அவித்த றால் போல் இருக்க மாட்டினம். அரேபிய, ஒஸ்மானிய, யூத, ரஷிய, உக்கரைன் கலப்பு மக்கள் தான் இங்கு அதிகம். நல்ல திராட்சை ரசத்துக்கு பெயர் போன இடம்.பல மேற்கு நாட்டவர்கள் summer ஹாலிடேக்கு வந்து போகும் இடம். 2014 இல் மைதான் ( தமிழில் மைதானம் ) புரட்சிக்கு பின் அப்போதைய அதிபர் விக்டர் யானுக்கோவிச் பதவியில் இருந்து அகற்றப் பட்ட பின் கிரீமியா ரஷ்யாவால் சண்டை இன்றி பிடிக்கப்பட்டது. பின்னர் நான் இருந்த luhansk மற்றும் donesk இல் ரஷ்ய சார்பு ஆட்களால் பிரச்னை ஏற்படுத்தப்பட்டு அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன்,நிர்வாக அலகுகள் கைப்பற்றபட்டது. அங்குள்ள வேலை இல்லாத ரவுடிகளுக்கு ரஷ்யா பணம் ஆயுதம் கொடுத்து தான் இது நடந்தது. அப்பொழுது நான் அங்க தான் இருந்தேன். படிப்பு முடிந்து பட்டமளிப்பும் முடிந்தது விட்டது ஆனால் இன்னும் கையில் எல்லாம் செர்டிபிகேட் documents வரவில்லை என்பதால் கொஞ்ச நாள் கஷ்டத்திலும் அங்கு நாங்கள் இருந்தோம். பின்னர் குண்டு சத்தம் கேட்க நான் கார்கிவ் போய் விட்டேன். வரமால் அங்கு மாட்டிய ஆபிரிக்க மாணவர்களை இந்த ரவுடிகள் பிடித்து அமெரிக்கன் army uniform போட்டு அங்குள்ள டிவி களில் அமெரிக்க ராணுவம் இங்கு வந்து விட்டது என்றும் தாம் அவர்களை பிடித்து விட்டோம் என்றும் சனங்களுக்கு பேய்க்காட்டினர்கள்.அங்கு ( கார்கிவ் )கிட்டதட்ட ஒரு வருடம் இருந்து பின்னனர் lugansk வந்தேன் என்னுடைய documents எடுக்க வரும் பொழுது முகமாலை ஆனையிறவு வழியில் வருவதை விட செக்கிங் அதிகம். luhansk railway station இல் வைத்து என்னை ரஷியன் பிரிவினைவாதிகள் பிடித்து கிழே ஒரு இடத்துக்கு கொண்டு போய் இரண்டு மணி நேரம் ஆவது விசாரித்து இருக்கிற காசை பிடுங்கி விட்டு அனுப்பி விட்டார்கள். நான் இவர்கள் காசு வாங்கமல் விட மாட்டார்கள் என்று ஏற்கனவே தெரியும் என்பதால் வேறு பணம் ஒழித்து வைத்து இருந்தேன். விட்டுக்கு போனால் தண்ணி இல்லை, மின்சாரம் இல்லை, பெரிய விற்பனை நிலையன்கள், சந்தை, நகரம் என்று எல்லாம் சுக்கு நூறாய் கிடந்தது. ஒரு கிழமை சமாளித்து விட்டு எல்லா documents ம் எடுத்துக்கொண்டு இலங்கைக்கு வந்து விட்டேன். இவை வெகு சுருக்கமான தகவல்கள் மட்டுமே.. அனுப்பவ படிப்பினைகள் இவைதான் 1) ஒரு நாட்டுக்கு போனால் உங்கள் மொழி பேசுபவர்கள், உங்கள் நாட்டவர்கள் உடன் மட்டுமே தொடர்பில் இருக்காதீர்கள். நான் கார்கிவ் போன பொழுது கையில் உடனடியாக பணம் இல்லை. தங்கியது எல்லாம் அங்குள்ள எனது உக்கீரைன் நண்பர் வீட்டில். 2) நன்கு அந்த நாட்டின் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். கடையில் போய் பால் வெங்காயம் வாங்கும் அளவில் தான் இன்று பலரின் மொழியறிவு . 3) பிரச்சனைக்கு உள்ளான இடங்களில் பிரச்னை மீண்டும் வரும். அது தீர்ந்து விட்டதாக தோன்றும். அந்த மாயத்துக்குள் உட்பட்டு விடாதீர்கள்.luhansk இல் இருந்த பொழுது போர் எல்லாம் வரவே வராது என்று தான் 99 வீதம் பேர் சொன்னார்கள். சொன்னவர்களில் பலர் இன்று உயிரோடு இல்லை. 4)கொஞ்சம் நிலைமை சரி இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு ஓட தயங்க வேண்டாம். நாங்கள் சவாகச்சேரியில் இருந்து வவுனியா 1991 இல் வந்தோம்.. ஆகவே எந்த பெரிய சண்டையிலும் சிக்கவில்லை. Luhansk திரும்பிய பொழுது ஒரு தெரிந்த குடும்பம் நான் இலங்கை போவதாக சொன்ன பொழுது இரவு சாப்பிட்டுக்கு அழைத்தார்கள். அவர்கள் முன்று மாசம் உருளைக்கிழங்கு, உள்ளி இந்த இரண்டும் மட்டுமே உண்டு வாழ்ந்து இருக்கிறார்கள்.அவர்கள் இலக்குவாக வேறு ஒரு இடத்துக்கு போய் இருக்கலாம். 4) எப்பொழுதும் எங்கு வாழ்ந்தாலும் அவசரம் என்று வெளியில் ஓட வேண்டி வரலாம். ஒரு bag இல் ஒரு மூன்று நாளைக்கு தேவையான உணவு, இதர அவசிய பொருட்கள், மற்றும் உங்கள் டாக்குமெண்ட்ஸ் அதில் வைத்துக்கொள்ளுங்கள்.
    9 points
  2. நான் யாழ் தளத்தை பல ஆண்டுகளாக அறிவேன் என்றாலும் இப்பொழுது தான் உறுப்பினர் ஆக இணைந்து கொண்டேன். நான் உக்ரைனில் 2006 புரட்டாசி மாசம் மருத்துவம் படிக்க போனேன்.2014 - 2015 அளவில் இலங்கைக்கு திரும்பினேன். இலங்கையில் சில வருடம் வேலை செய்து விட்டு இப்பொழுது கனடாவில் Alberta வில் வசிக்கிறேன். Canadian emergency Ambulance service இல் வேலை செய்கிறேன். படிக்க போன இடம் luhansk ( லூகான்ஸ்க்,டன்பாஸ் இல் உள்ள Donesk (டோனேஸ்க் ) க்கு அடுத்த பெரிய province. போன புதிதில் நான்கு இலங்கை மாணவர்கள் தான்போனோம். அப்பொழுது நாங்கள் தான் ஒரே இலங்கை மாணவர்கள். கொஞ்சம் தமிழ் நாட்டு மாணவர்களும் இருந்ந்தார்கள்.லீவு கிடைக்கும் பொழுது பல வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா இலங்கை போய் விடுவார்கள். நான் டிக்கெட் செலவு கூட என்பதால் ukraine க்குள் சுத்துவது வழக்கம். அப்படி போன இடங்களில் ஒன்று தான் மரிப்புல். இது தவிர கிரீமியா கீவ் கார்க்கிவ்,liviv, zaporizhzhia போன்ற இடங்களில் ஓரிரு மாதங்கள் ஆவது இருந்து இருப்பேன். டன்பாஸ் பிறதேசத்தில் இருப்பவர்களில் 90 வீதம் பேர் ரஷியன் தாய் மொழி ஆக கொண்டவர்கள். பலர் சுரங்க தொழிலாளிகள். ரஷ்யாவுடன் குடும்பம் பிணைப்புகள் அதிகம் கொண்டவர்கள். நானே சில தடவைகள் ரஷ்யாவுக்குள் போனேன் என்று தெரியாமலே உள்ளுக்குள் போய் இருக்கின்றேன் இவர்களுடன். குணம் என்று வரும் பொழுது மிகவும் பொதுவாக நல்ல மனிதர்கள் தான். நான் இளம் வயது ஆட்களை வைத்து அந்த சமூகத்தை மதிப்பிடக்கூடாது என்று நம்புகிறேன். ஆகவே 60 கடந்தவர்கள் என்று பார்த்தால் ஓரளவுக்கு நல்லவர்கள் தான் அவர்கள். என்றாலும் எல்லோரையும் அப்படி சொல்ல ஏலாது. கம்யூனிஸ்ட் சித்தாதத்தில் பற்று கொண்டவர்கள். வெளியே சொல்லிக்கொண்டு இருக்க மாட்டினம் ஆனால் உள் மனது அது தான். நான் கூட பழகியது பாட்டிகள் தாத்தாக்களுடன் தான். சில வருடங்கள் அவர்கள் வீட்டில் வாடகைக்கு வாழ்ந்தும் இருக்கின்றேன். Danbaas உண்மையில் ukraine க்கான பிரதேசம் தான். ஆனாலும் சோவியத் காலத்தில் ஸ்டாலின் சைபிரியாவுக்கு நாடு கடத்திய கிரிமினல்களில் ஓரளவுக்கு குறைவான பிழைகள் செய்தோரை இங்கே டன்பாசில் குடியெற்றி அங்குள்ள சுரங்க வேலைக்கு பயன்படுத்திக்கொண்டார். அவர்களின் பரம்பரை தான் இப்போது அங்கே இருப்போர். வெள்ளை இன வெறி உண்டு. அதுவும் எல்லோரும் அப்படி என்று ஒரேஅடியாக சொல்ல முடியாத அளவுக்கு நல்ல மனிதர்களின் ஞாபகங்கள் வந்து போகின்றது. இரவில் வெளியே நம்பிக்கையோடு சுற்ற முடியாது நன்கு ரஷியன் தெரியாவிட்டால். நான் பல முறை மாட்டி இருக்கின்றேன். குடிகாரர் குடித்து விட்டு காசுக்கு வெளிநாட்டு ஆக்களை அடித்து காசு வாங்குவது வளமை.. அப்படி அடிக்கும் பொழுதே அங்குள்ள இன்னொருவர் காப்பாற்றியும் விடுவார். நான் ஒருமுறை இரவு கடைக்கு போய் சாமான் வாங்கி வெளியே வரும் பொழுது சைக்கிள் செயின் கொண்டு அடிக்க ஒருவர் வந்து இருந்த காசை கொடுத்து தப்பிய சம்பவம் ஞாபகம். எல்லோருக்கும் ஒரு வீடு அங்கு உண்டு. குவர்த்திரா ( அப்பார்ட்மெண்ட் ) என்று சொல்வோம். ஏற்கனவே சொன்னது போல வாயோதிப்பர்கள் பழக இனிமையானவர்கள். அவர்களிடமும் வெள்ளை இன வெறி, உடைந்து போன சோவியத் பற்றிய கனவுகள், ரஷியன் மொழி மீதான தீரா தாகம், conservetive மனநிலை, மனிதாபிமானம், கடவுள் பக்தி, வெளியே காட்டாத அமெரிக்க வெறுப்புணர்வு, இந்தியா மீது பாசம்,உழைப்பு, சுற்றதாருடன் மனித பன்புடன் பழகுவது, இயலுமான வரை மற்றவர்களுக்கு உதவி, சிக்கனம், உபசரிப்பு என்று எல்லாம் கலந்த சாதாரண மனிதர்கள் அவர்கள். இவர்கள் கிழக்கு உக்ரைனியர்கள்.mariupol zaporizhzhia, கார்கிவ் போன்ற இடங்களில் வாழ்வோரும் இப்படி பட்டவர்கள் தான் என்றாலும் கார்கிவ் மேற்கத்தேய நாகரிக மோகம் கொஞ்சம் அதிகம் கொண்ட பகுதி. மேற்கு ukraine இல் உள்ள மக்கள் அப்படியே வேறு ஒரு மக்கள் கூட்டம். ரஷியன் தெரிந்தாலும் விடாப்பிடியாக பேச வேண்டாம் என்று இருக்கும் மக்கள் அவர்கள். ஒப்பீட்டளவில் மிகவும் நாகரிகம் ஆன மக்கள். ஒரு காலத்தில் யூதர்கள் சோவியட் ரஷ்யா உடன் சேர்ந்து இவர்களை அடக்கிபலரை படுகொலை செய்தது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கு இவர்கள் பின்னர் ஜெர்மனிஉடன் சேர்ந்து யூதர்களை படுகொலை செய்ததும் உண்மை. கம்யூனிஸ்ட் சித்தாந்தம், Soviet ரஷ்யா இந்த இரண்டும் இவர்களை முன்னேற விடாமல் இறுக்க பிடித்திருக்கிறது என்று மனதார உணருகின்றர்கள்.யூத வெறுப்புணர்வு ஓரளவு உண்டு என்பது உண்மை என்றாலும் எல்லோரிடமும் சமமாக இழையோடி இல்லை. இவர்களில் பலருக்கு poland ருமேனியா, அஸ்திரியா நாடுகளோடு குடும்ப பிணைப்பு உண்டு. கிழக்கு மக்கள் ரஷியன் ஆர்த்தோடோக்ஸ் என்றால் இவர்ககளில் பலர் கத்தோலிக்கார்கள். யாழ்ப்பாண மொழியில் சொல்வது என்றால் புழுத்த கத்தோலிக்கர்கள். இங்கே குடி போதையில் அடிப்பவன் இல்லை. எங்களை கறுப்பு குரங்கே என்று கூவி நக்கல் அடிப்பவர்களும் இல்லை.சுதந்திர நாட்டுக்கான தணியாத தாகம் கொண்டவர்கள். இங்கே liviv என்று ஒரு இடம் உண்டு அழகான இடம். ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை என்று இப்போது நினைத்து வருந்துகிறேன் கிவ் இது இன்னொரு அற்புதம். இங்குள்ள டேனிப்பர் ஆற்றின் கரையோரங்களில் நடந்து திரிந்த நாட்கள் பசுமையான நினைவுகள். மிகவும் ஆழத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள் எந்த குண்டு வெடிப்பிலும் இருந்தும் உங்களை பாதுக்காக்கும். இங்கே உள்ளவர்கள் அனைவரும் நன்கு ரஷியன் பேசுவார்கள், ரஷியன் தான் இங்கேயும் பெரும்பாலும் பேசப்படும் மொழியும், எனினும் கம்யூனிஸ்ட் சித்தாதம் மீது எந்த ஈடுபாடும் இல்லை. (கொழும்பு தமிழர்க்கு தமிழ் பாசம் போல.) ரஷியன் தான் இவர்களின் தாய் மொழி எனினும் பெரிய பற்று என்று ஒன்றும் இல்லை. Ukraineனை நேசிப்பவர்கள் என்பதை விட கீவை நேசிப்பவர்கள். எப்படி யாவது யூரோப் இல் இணைந்து விட்டால் தமது செல்வ செழிப்புக்கு நல்லது என்று கருத்துப்பவர்கள். கிரிமியா இது வரலாற்று முக்கியத்துவம் உள்ள குடா நாடு. Turkey யும் ரஷ்யாவும் பிரித்தானியாவும் சண்டை போட்டு களைத்துபோன இடம். இங்கே கருங்கடலில் குளித்து தான் நான் நீந்தவே பழகினேன். இரண்டாவது உலகப்போர் நிறுத்தபடவும் சர்வதேச சங்கம் ஐக்கிய நாடுகள் சங்கமாக மாறவும் கையெழுத்து போடப்பட்ட இடம். இங்கே உள்ளவர்கள் கொஞ்சம் பழுப்பு தோல் கொண்டவர்கள். ரஷியன் போல் அவித்த றால் போல் இருக்க மாட்டினம். அரேபிய, ஒஸ்மானிய, யூத, ரஷிய, உக்கரைன் கலப்பு மக்கள் தான் இங்கு அதிகம். நல்ல திராட்சை ரசத்துக்கு பெயர் போன இடம்.பல மேற்கு நாட்டவர்கள் summer ஹாலிடேக்கு வந்து போகும் இடம். 2014 இல் மைதான் ( தமிழில் மைதானம் ) புரட்சிக்கு பின் அப்போதைய அதிபர் விக்டர் யானுக்கோவிச் பதவியில் இருந்து அகற்றப் பட்ட பின் கிரீமியா ரஷ்யாவால் சண்டை இன்றி பிடிக்கப்பட்டது. பின்னர் நான் இருந்த luhansk மற்றும் donesk இல் ரஷ்ய சார்பு ஆட்களால் பிரச்னை ஏற்படுத்தப்பட்டு அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன்,நிர்வாக அலகுகள் கைப்பற்றபட்டது. அங்குள்ள வேலை இல்லாத ரவுடிகளுக்கு ரஷ்யா பணம் ஆயுதம் கொடுத்து தான் இது நடந்தது. அப்பொழுது நான் அங்க தான் இருந்தேன். படிப்பு முடிந்து பட்டமளிப்பும் முடிந்தது விட்டது ஆனால் இன்னும் கையில் எல்லாம் செர்டிபிகேட் documents வரவில்லை என்பதால் கொஞ்ச நாள் கஷ்டத்திலும் அங்கு நாங்கள் இருந்தோம். பின்னர் குண்டு சத்தம் கேட்க நான் கார்கிவ் போய் விட்டேன். வரமால் அங்கு மாட்டிய ஆபிரிக்க மாணவர்களை இந்த ரவுடிகள் பிடித்து அமெரிக்கன் army uniform போட்டு அங்குள்ள டிவி களில் அமெரிக்க ராணுவம் இங்கு வந்து விட்டது என்றும் தாம் அவர்களை பிடித்து விட்டோம் என்றும் சனங்களுக்கு பேய்க்காட்டினர்கள்.அங்கு ( கார்கிவ் )கிட்டதட்ட ஒரு வருடம் இருந்து பின்னனர் lugansk வந்தேன் என்னுடைய documents எடுக்க வரும் பொழுது முகமாலை ஆனையிறவு வழியில் வருவதை விட செக்கிங் அதிகம். luhansk railway station இல் வைத்து என்னை ரஷியன் பிரிவினைவாதிகள் பிடித்து கிழே ஒரு இடத்துக்கு கொண்டு போய் இரண்டு மணி நேரம் ஆவது விசாரித்து இருக்கிற காசை பிடுங்கி விட்டு அனுப்பி விட்டார்கள். நான் இவர்கள் காசு வாங்கமல் விட மாட்டார்கள் என்று ஏற்கனவே தெரியும் என்பதால் வேறு பணம் ஒழித்து வைத்து இருந்தேன். விட்டுக்கு போனால் தண்ணி இல்லை, மின்சாரம் இல்லை, பெரிய விற்பனை நிலையன்கள், சந்தை, நகரம் என்று எல்லாம் சுக்கு நூறாய் கிடந்தது. ஒரு கிழமை சமாளித்து விட்டு எல்லா documents ம் எடுத்துக்கொண்டு இலங்கைக்கு வந்து விட்டேன். இவை வெகு சுருக்கமான தகவல்கள் மட்டுமே.. அனுப்பவ படிப்பினைகள் இவைதான் 1) ஒரு நாட்டுக்கு போனால் உங்கள் மொழி பேசுபவர்கள், உங்கள் நாட்டவர்கள் உடன் மட்டுமே தொடர்பில் இருக்காதீர்கள். நான் கார்கிவ் போன பொழுது கையில் உடனடியாக பணம் இல்லை. தங்கியது எல்லாம் அங்குள்ள எனது உக்கீரைன் நண்பர் வீட்டில். 2) நன்கு அந்த நாட்டின் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். கடையில் போய் பால் வெங்காயம் வாங்கும் அளவில் தான் இன்று பலரின் மொழியறிவு . 3) பிரச்சனைக்கு உள்ளான இடங்களில் பிரச்னை மீண்டும் வரும். அது தீர்ந்து விட்டதாக தோன்றும். அந்த மாயத்துக்குள் உட்பட்டு விடாதீர்கள்.luhansk இல் இருந்த பொழுது போர் எல்லாம் வரவே வராது என்று தான் 99 வீதம் பேர் சொன்னார்கள். சொன்னவர்களில் பலர் இன்று உயிரோடு இல்லை. 4)கொஞ்சம் நிலைமை சரி இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு ஓட தயங்க வேண்டாம். நாங்கள் சவாகச்சேரியில் இருந்து வவுனியா 1991 இல் வந்தோம்.. ஆகவே எந்த பெரிய சண்டையிலும் சிக்கவில்லை. Luhansk திரும்பிய பொழுது ஒரு தெரிந்த குடும்பம் நான் இலங்கை போவதாக சொன்ன பொழுது இரவு சாப்பிட்டுக்கு அழைத்தார்கள். அவர்கள் முன்று மாசம் உருளைக்கிழங்கு, உள்ளி இந்த இரண்டும் மட்டுமே உண்டு வாழ்ந்து இருக்கிறார்கள்.அவர்கள் இலக்குவாக வேறு ஒரு இடத்துக்கு போய் இருக்கலாம். 4) எப்பொழுதும் எங்கு வாழ்ந்தாலும் அவசரம் என்று வெளியில் ஓட வேண்டி வரலாம். ஒரு bag இல் ஒரு மூன்று நாளைக்கு தேவையான உணவு, இதர அவசிய பொருட்கள், மற்றும் உங்கள் டாக்குமெண்ட்ஸ் அதில் வைத்துக்கொள்ளுங்கள்.
    7 points
  3. எழுதும்போதே நினைத்தேன் யாராவது எழுதுவார்கள் என்று சகோ பாம்பின் கால் பாம்பறியும்?🤣 (அத்தோட அப்படியே இந்தியாவோட இணைவதற்கு ராசவன்னியரோட @ராசவன்னியன்பேச்சுவார்த்தை தொடங்கியாச்சு)😝
    3 points
  4. கமாட்சி நாயுடு காரு.... செல்வநாயகமும் உங்காளா, இல்லையா? 😂
    3 points
  5. என் பிள்ளையின் திருமணம் இப்போதெல்லாம் பிள்ளைகளை மணவறை வரை கொண்டு வருவதென்பது பெற்றோருக்கு மிகக் கடினமானதொரு செயலாகி வருகிறது. அந்த வகையில் எனது மூத்த மகனுக்கு அத்தருணம் கைகூடி வந்தவேளை.... எந்த நிலை வந்த போதும் பெற்றோர் கேட்டதை செய்து முடித்த பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றுவதை தவிர வேறேன்ன பேறு வேண்டும் எமக்கு. வருக மருமகளே வாழ்க மணமக்கள் வாழ்க வளமுடன் ❤️ இப்படி திரிந்தவர்... இப்ப .....
    2 points
  6. நான் அமெரிக்காவில் இறங்கி ஒரு ஆள் அரவமில்லாத, தண்ணியில்லா காட்டுக்கு படிக்க வந்த போது, அங்கு எங்கடை தமிழ் பேராசிரியர் ஒருவர் இருந்தவர், அவர் எங்களுக்கு படிப்பிக்கவில்லை, மிகவும் அந்நியோன்னியமாக பழகுவார், அவர் அடிக்கடி சொல்லுவார்: தம்பி உங்களை மாதிரி ஆட்கள் இங்க வாறாதை விட்டுட்டு, யாராவது புங்குடுதீவாங்கள் இருந்தால் அவங்களை கூட்டிக்கொண்டு வாங்கோ, அப்பதான் நாங்களும் இங்கை எழும்பலாம். அவருக்கு பிசினஸ்இல் ஆர்வம் அதிகம். எங்களோடு பேராதனையில் புங்குடுதீவார்கள் படிப்பதில்லையா என்று அடிக்கடி கேட்பார். நான் அதுவரை காரைநகர்தான் பிசினஸ் இல் பெரிய ஆட்கள் என்று நினைத்திருந்தேன். ஆள், அரவமில்லாத பாலைவனத்தில்கூட புங்குடுதீவார் பேமஸ்ஆக இருக்கிறார்கள்
    2 points
  7. எல்லாம் நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது ஓணாண்டியார் .......ராஜா சார் பாலாவின் அமெரிக்க புரோகிராமில பிரச்சினை பட்டதில் இருந்து சுருதி பேதமாகி விட்டது .......! எப்படி கண்ணதாசன் விஸ்வநாதன் சௌந்தரராஜன் கூட்டணியோ அதுபோல் ராஜா வைரமுத்து பாலா வின் கூட்டனியும் இருந்து காலத்தால் மறக்க முடியாத பாடல்களைத் தந்தார்கள்......! அந்தப் பிரச்சனைக்குப் பின் பலரும் அவரை சாதி சொல்லி வசைபாட அவரும் அப்பப்ப டென்ஷனாகிறார்..... கூட்டணி வேறு உடைந்து விட்டது. வேறொன்றுமில்லை......! 🤔
    2 points
  8. குழந்தைகள் மீது பாலியல் வன்முறை செய்கின்றவர்களுக்கும், ஒரு நாட்டுக்குள் போதைப் பொருளை கடத்துகின்றவர்களுக்கும் மரண தண்டனை கொடுத்து அதை நிறைவேற்றுவதில் எந்த தவறும் இல்லை. இத் தவறை நானோ அல்லது நாளைக்கு என் பிள்ளைகளோ செய்தாலும் இதுவே என் நிலைப்பாடு.
    2 points
  9. நீங்கள் பிழையாக விளங்கி கொண்டீர்கள் அண்ணா. @விசுகு அண்ணா பேச்சுவார்த்தை என சொன்னது இந்தியாவை புங்குடுதீவு மக்கள் குடியரசின் ஒரு மாநிலமாக ஏற்பது பற்றிய பேச்சுவார்த்தை. யூதா நீயும் புகையிலை வித்தனியா🤣. (பகிடி).
    1 point
  10. யாழ்ப்பாணத்தாரிட்ட இருக்கிற நண்டுக்குணம் புங்குடுதீவாரிட்ட இல்லை.நீங்கள் சொன்னது நடக்க நூறுவீதம் சாத்தியம் இருக்கு...😁
    1 point
  11. தமிழ் சிறி, அவர் மனநோயாளி அல்ல. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது IQ Level 69 ஆக உள்ளது என்று கண்டறிந்தனர். இந்த 69 உள்ளவர்களை intellectual disability உள்ளவர்கள் என்று வகைப்படுத்துவர். சில நாடுகள் இவ்வாறு intellectual disability உள்ளவர்களை மரண தண்டனைக்குட்படுத்தாதவாறு சட்டம் இயற்றியுள்ளனர். ஆனால் சிங்கபூரில் இச் சட்டம் இல்லை. இவர் தன் தொடையில் சிறு பையை ஒட்டி, அதனுள் போதப் பொருளை வைத்து கடத்தியிருக்கின்றார். அதை அவர் நீதிமன்றில் ஒத்தும் கொண்டுள்ளார். தான் வறுமை காரணமாக மேலதிகமாக வருமானம் பெறுவதற்காக அவ்வாறு நடந்து கொண்டாதாக கூறியுள்ளார். போதைப் பொருளால் ஏற்படும் தீங்கை நன்கு அறிந்தவராக, அவ்வாறான ஒன்றை களவாகத்தான் கொண்டு வர வேண்டும் என்ற புரிதலுடன் உள்ளவராக இருக்கும் ஒருவரை intellectual disability என்று ஒத்துக் கொள்ள முடியாது என்று சிங்கபூரின் அனைத்து நீதிமன்றங்களும் சொல்லிவிட்டன. அவர்கள் சொன்னதில் எனக்கு முழு உடன்பாடு உள்ளது. கடத்தல் காரர்கள், கொலைகாரர்கள் தாம் தப்ப எடுக்கும் கடைசி ஆயுதம், தாம் மனநிலை சரியில்லாமல் செய்து விட்டோம் என்று நிரூபிக்க முனைவதுதான்.
    1 point
  12. பலிக்க கடவது 🤪 புங்குடுதீவு தீவார் எங்கேயோ போயாச்சு. நீங்கள் இன்னும் புகையிலைக்குள்ள?? கந்தன் கோவணத்தை இழந்த பாதிப்பு இன்னும் உங்களுக்கு போகலை போல??🤪 லா சப்பலில் 300 கடைகள் இருந்தால் 150 எங்கட தான்.👍
    1 point
  13. ஆரம்பகால AR ரகுமானின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தற்போது அவரது பாடல்களில் இரைச்சலும் டும் டும் குத்துக்களும் அதிகமாகஅது மனதிலிருந்து தூர விலகுகிறது. தற்போதும் இளையராஜாவின் பாடல்களை விரும்பிக் கேட்பேன. ஆனால் அவரின் ஆணவமும் அகங்காரமும் நிறைந்த பேச்சுக்கள் அவரை சற்று தள்ளியே வைத்திருக்கிறதது. வித்தகச் செருக்கு என்று அவரைக் கடந்துபோக முடியவில்லை.
    1 point
  14. இபிடியும் ஒண்டு புழங்குது 😂 இப்பிடியும் ஒண்டு புழங்குது 😂
    1 point
  15. அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாள் ...........! 😍
    1 point
  16. கணித ஆசான் நல்லையா மாஸ்ரரிடம் இலவசமாக படித்திருக்கின்றேன். நான் இந்த நிலையில் இருப்பதிற்கு இவரும் ஒருவர்🙏🙏🙏 ஆசிரியருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
    1 point
  17. சார்க்காசமா🤣. கன்னியாஸ்திரிக்கு ஆர்கசம் தெரிந்தாலும் தெரிந்திருக்கும் பெரும்ஸ்சுக்கு சார்கசம் விளங்காது. அவர் உண்மையிலேயே உங்களுக்கு பாலா அண்ணையை தெரியாது என்றே நம்புகிறார். இனி பாலா அண்ணை வந்து சொன்னாலும் மாறா மாட்டார்🤣.
    1 point
  18. வீட்டுத்தோட்டம் செய்ய இயற்கையான பசளை சிறந்தது. கத்தரிக்காயிலை புழு கூடுகட்டினாலும் அந்த கத்தரிக்காய் சுத்தமானது சுகாதாரமானது. 😁 தோட்டம் செய்யிறதும் கொஞ்சம் மரியாதை இல்லாத தொழில் கண்டியளோ 😂
    1 point
  19. உலகிலேயே மிகவும் வித்தியாசமான விலங்கு இராசதுரை தேசிய கல்லூரி, திருச்சிராப்பள்ளி: என்னைப் பொறுத்தவரை மனிதன் தான் வித்தியாசமான விலங்கு. டார்வினின் கூற்றுப்படி, மனிதர்களும் விலங்குகள் தான். மனிதன் எந்தவொரு சிறப்புச் செயலாலும் உருவாக்கப்படவில்லை. அனைத்து உயிரினங்களும் எவ்வாறு இந்த உலகில் தோன்றியதோ அதே போல பொருட்களிலிருந்து இயற்கையான செயல்முறைகளால் தோன்றிய மனிதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மனிதன் இயற்கையை விட உயர்ந்துவிட்டதாக நினைக்கிறான் . மனிதர்கள் ஏதோ ஒரு வகையில் இயற்கைக்கு அப்பாற்பட்டவர்கள் போல தங்களை நினைத்து கொள்கிறார்கள். எல்லா விலங்குகளும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழும் பொழுது மனிதன் மட்டுமே இயற்கையிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக அல்லது உயிர்வாழ்வதற்காக கற்கருவிகள், நெருப்பு, சக்கரம், விவசாயம், விலங்குகள் வளர்ப்பு என்று செய்து தேவைக்கு மிகுதியானதை வியாபாரம் செய்து, வியாபாரம் செய்ய பணத்தை கண்டுபிடித்து, தமது இருப்பை உறுதி செய்ய மற்றவர்களுடன் அது (தனி மனிதர்களானாலும் சரி மற்றும் நாடுகளானாலும் சரி) சண்டை செய்வது என்று அழிவை நோக்கி வேகமாக பயணிக்கிறான். எனவே மனிதர்களே என்னைப் பொறுத்தவரை வித்தியாசமான விலங்கு.
    1 point
  20. வீட்டுக் கடன் (mortgage) என்பது மற்றும் அந்த கருது, நடைமுறை என்பதின், இரத்தம் சிந்தாத புரட்சிக்கான முதல் அடித்தளம் UK இல் ஆரம்பிக்கிறது, அனால் உலகளாவிய போக்குடன். https://www.outoken.org/ இதன் AMA ஐ வந்தவுடன் இணைக்கிறேன்.
    1 point
  21. இந்தப் படத்திற்கும் நாட்டு நடப்புக்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ?!🤔
    1 point
  22. நானும் இதே மாதிரிதான் யோசித்தேன், வடக்கு கிழக்கில் சிங்களவர்களை குடியேற்றி எம்மை இரண்டாம் தர பிரசைகள் ஆக்கியது போல நடந்துள்ளது. எந்த நாடாக இருக்கட்டும், பெரும்பான்மை இனங்களுக்கு பக்கத்தில் உள்ள சிறுபான்மை இனங்களுக்கு எப்பவுமே சிக்கல்தான்
    1 point
  23. எதுக்கு? சுரண்டியதை பதுக்கவா? பெற்ற கடனில் அமைச்சர்களை விலைக்கு வாங்கவா? அமைச்சர்கள் விற்பனைக்கு இல்லையாம்.
    1 point
  24. காமாட்சி நாயுடு சொன்னது பொய்யா? fact check எங்கு செய்யணும்? இங்கு தெலுங்கனே தமிழ் இனத்தை அழித்த ராஜபக்சேவை தெலுங்கன் என்று கூறுமளவுக்கு தமிழ் எதிர்ப்பு தெலுங்கர்களிடம் எவ்வளவு ஊறியிருக்கு என்பதை வாசகர்கள் அறியட்டும் .
    1 point
  25. உக்ரைனில் இருந்த 7 வருடங்களில் குறைந்தது முன்று தடவை மரியோப்புல் போயுள்ளேன். ஒவ்வொரு தடைவையும் இரண்டு கிழமைகள் அங்கு தங்குவேன். அழகான அசோவ் மோரே ( கடற்கரை ) றால் அவித்து விற்கும் ரஷ்யன் பாட்டிகள், சுவையான சவர்மா என்று மறக்க முடியாத நாட்கள் அவை. இப்பொழுது இந்த அழிவு நடந்த இடங்களை பார்க்கும் பொழுது எனக்கு அங்குள்ள பலரின் ஞாபகங்கள் வந்து போகின்றது.
    1 point
  26. நற்சிந்தனையான பேச்சு.........அரசுப்பள்ளி மாணவர்களுக்கு.......! 👍 நன்றி ஐயா .........!
    1 point
  27. எதிர்கால பொறியியலாளர் ......வாழ்த்துக்கள்........! 🌹
    1 point
  28. எப்படி எப்படி உங்களுக்கு இந்த நன்றி விசுவாசம் பொங்கி வழியுது? அப்படி பார்க்கப்போனால்....... சிறிலங்கா இனவாத அரசு உங்களுக்கெல்லாம் இறுதிவரைக்கும் இலவச கல்வி இலவச மருத்துவம் இலவச கூப்பன் உணவுகள் வரியில்லா வாழ்க்கை என வளர்த்து ஆளாக்கி விட்டதல்லவா? அதற்கு ஏதாவது நன்றிக்கடன் அல்லது விசுவாசமாக இருக்கின்றீர்களா? நீங்கள் மானாட மயிலாட அபிமானிதானே? 🤣
    1 point
  29. பல தமிழ் பெற்றோருக்கு மருத்துவம் மட்டுமே படிப்பாக தெரிகிறது அதுக்கென்ன படிப்பது நல்லதுதான் என்ன தான் இருந்தாலும் சும்மாவா மருத்துவ படிப்பும் ஆழமா அறிவோட படித்தால் தானே அங்கும் நுழைய முடியும் எத்தனை தமிழன் மருத்துவர் என்று எங்களுக்கு பெருமை தானே ஆனால் மருத்துவம் மட்டும் படித்தால் போதுமா கழுவவும் துடைக்கவும் தேடவும் தெரியவும் ஆடவும் பாடவும் அறிவோடு எழுதவும் அரசியல் பொருளியல் உளவியல் உயிரியல் சட்டம் சமூகவியல் சர்வதேச அரசியல் தத்துவம் என்றும் இலக்கியம் கலை கவிஞன் என்று எழுதவும் பேசவும் உந்தன் உரிமையை வெல்லவும் புவியியல் அரசியல் பூகோளத்திற்காய் என்றும் எத்தனை பேர் தேவை ஆதலால் இந்தப் படிப்புகளும் சும்மாவா புலம் பெயர்ந்து வந்தாலும் பிள்ளையின் படிப்புக்காகவும் உறவுகளின் பசிக்காகவும் உரிமைக் குரலுக்காகவும் விடிய விடிய வியர்வை சிந்தி குளிரிலும் பனியிலும் கொடுத்தானே வாழ்வை அவன் கூட சும்மாவா வந்தாலும் வந்தான் அகதியாய் வந்தாலும் ஆழமாய் புதைத்தாலும் அந்த விதை போலவே சட்டென்று முளைத்து பட்டென்று நிமிர டக்கென்று தெரியுதே என்று ஐயோ ஐரோப்பியருக்கும் அதிசயம் தானம் ஆதலால் அனைத்தையும் படிபோம் ஆயுதம் செய்வோம் அறிவைத் தேடுவோம். பா.உதயன் ✍️
    1 point
  30. மற்றதெல்லாம் விடுமன்.. இதெல்லாம் நாட்டுல ஒரு பெரிய மனுசன் குடும்பம் செய்யுற வேலையா..? 😢
    1 point
  31. மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐
    1 point
  32. மணமக்களுக்கு வாழ்த்துகள் மணமகன் இடது கை பழக்கம் உள்ளவர் போல் தெரிகின்றது.
    1 point
  33. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்..💐 வாழிய பல்லாண்டு..!
    1 point
  34. உடலுக்கும் மண்ணுக்கும் கேடு விளைவிக்கும் பிளாஸ்ரிக் பொருட்கள் வேண்டாமே. பனையோலை குட்டானில் பிரியாணி.
    1 point
  35. என்னைப்பொறுத்தவரைக்கும் இதெல்லாம் ரூமச். வீட்டுக்கு இரண்டு கார்,அஞ்சு ஸ்கூட்டி எல்லாம் ஆர் வாங்கச்சொன்னது? ஏன் முந்தினைய மாதிரி சைக்கிள் ஓடலாம் தானே? ஐரோப்பாவிலை சைக்கிள் ஓடுறதுக்கெண்டே ரோட்டு போடுறாங்கள். .இவையளுக்கு என்னடாவெண்டால் பெற்றோல் விலை கூடிப்போச்சுதாம்...நீங்களெல்லாம் பள்ளிக்கூடத்திலை பிள்ளையளுக்கு என்னத்தை சொல்லிக்குடுக்கப்போறியளோ ஆருக்குத்தெரியும். எங்கடையளுக்கு கொழுப்பு கூடிப்போச்சு போராட்டம் நடத்துறதெண்டால் மனித உரிமைகளுக்காக போராட்டம் நடத்துங்கள்.
    1 point
  36. பொது இடங்களில்... முகக்கவசம் அணிவது, கட்டாயமில்லை! இலங்கையில் இன்று முதல் (18.04.22) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளின் போது அணிவதை தவிர, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என புதிய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண அறிவித்துள்ளார். https://athavannews.com/2022/1277194
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.