Jump to content

Leaderboard

  1. நிலாமதி

    நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      11007


  2. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      76774


  3. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      29177


  4. அன்புத்தம்பி

    அன்புத்தம்பி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      5453


Popular Content

Showing content with the highest reputation on 05/08/22 in all areas

  1. அன்னைக்கு ஒரு தினம் தன்னை ஈய்ந்தவளுக்கு தரணியில் உயர்ந்தவளுக்கு ஈடு இணை இல்லா இல்லத்து அரசிக்கு அவளை வாழ்த்த ஒரு தினம்.அன்னையர் தினமாம் இல்லை அன்னையை மறந்தவருக்கான தினம் பரபரப்பான உலகில் அவளை வாழ்த்த ஒரு தினம். இரத்தத்தை பாலாக்கி , நோய் கண்டால் கண்விழித்து தன் பசி மறந்து என் பசி போக்கியவள் தாயாய் தாரமாய் சகோதாரியாய் அன்போடு அறுசுவையும் தந்திடுவாள். குடும்ப நிர்வாகி, அன்பால் அதிகாரம் செய்தவள் இன்பத்திலும் துன்பத்திலும் தோழி,அன்னையாய் நல் ஆசானாய் அகரம் கற்றுத் தந்தவள் ஈன்ற பொழுதிலும் தன் மகவைச் சான்றோன் எனக் கேட்டு மகிழ்ந்தவள். தந்தைக்கு தோளோடு துணை நின்றவள் ஈடு இணை இல்லாதவள் தெய்வமாய் நின்றவள். அழகானவள் ,அன்பானவள் அப்பாவை அடையாளம் காட்டியவள். மறக்க முடியாதவள் , மன்னிக்க தெரிந்தவள். மனம் கோணாத மகாலடசுமித் தாயே மண்ணுலகில் எனக்கு தினமும் அன்னையர் தினம் யாழ் கள அன்னையருக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்.
    6 points
  2. கோத்தா நபர் ஒருவரை கடத்தி முதலைக்கு இரையாக்கினார் என்று அள்ளிவிட்டு மாடுபட்டவர் கண்டியளோ!
    2 points
  3. இலங்கை எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி இன, மத பேதமின்றி அனைவரையும் தாக்கியிருக்கிறது. சுனாமிக்குப் பின்னர் இன, மத பேதம் கடந்து இலங்கை வாழ் இனங்கள் எதிர்கொள்ளும் பேரிடர் இது. போர், கலவரங்கள், போன்றவற்றை இத்தீவு இடர்களாக எதிர்கொண்ட போதிலும் அவை தமிழர்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தின. இம்முறை ஏற்பட்டிருக்குப் இப்பொருளாதாரப் பேரிடரானது அனைத்துத் தரப்பினரையும் மிக மோசமாகத் தாக்கியிருக்கின்றது. இதிலிருந்து மீ்ள்வதற்கே பல ஆண்டுகள் எடுக்கலாம் என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள். இந்தப் பொருளாதாரப் பேரிடரை, சிங்களவர்கள் தாமாகவே தேடிக்கொண்டனர். அதவாது ராஜபக்சவினர் குறித்து 2009ஆம் ஆண்டிலிருந்தே தமிழர்கள் எச்சரித்து வந்திருக்கின்றனர். தமிழர் – முஸ்லிம்கள் மீதான இனவாதத்தை வளர்த்து, அதன் விளைவாக எழும் வன்முறைகளை அரசியல் முதலீடாகப் பயன்படுத்துவதில்தான் ராஜபக்சவினரின் அரசியல் உள்ளது என வலியுறுத்தியுள்ளனர். இனவாத முதலீட்டில் இலங்கை வாழ் சமூகங்கள் அடிபட்டுக்கொண்டிருக்க ராஜபக்சவினர் தம் குடும்பத்தும், ஏழேழு தலைமுறைக்குமான சொத்துப்பத்துக்களை இந்நாட்டிலிருந்து திருடிச்செல்வர் என்பதும் தமிழர் தரப்பிலிருந்து கூறப்பட்ட தீர்க்கதரிசனமாகும். “கெடுகுடி சொற்கேளாது” என்ற கணக்கில் செயற்பட்ட சிங்களவர்கள் 2019ஆம் ஆண்டில் மீளவும் ராஜபக்சவினருக்கு செங்கம்பளம் விரித்தனர். முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சிதைப்பது, வடக்கு, கிழக்கில் எஞ்சியிருக்கும் தமிழர்களது வாழிடங்களை ஆக்கிரமிப்பது, பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கலை துரிதப்படுத்துவது, தனித்த சிங்கள அரசை அமைப்பது போன்ற நோக்கங்களை முன்வைத்தே இத்தகைய வரவேற்பை ராஜபக்சவினருக்கு வழங்கினர். ராஜபக்சவினர் கடன்பெற்று நடத்திய போரினால் ஏற்பட்டுள்ள பூகோள அரசியல் நெருக்கடி குறித்தோ, அவர்கள் செய்த ஊழல்கள் குறித்தோ சிங்களவர்கள் அக்கறைப்படவில்லை. தம் இனத்தை முதன்மைப்படுத்தி ஏனைய இனங்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் அமானுஸ்யம் பொருந்தியதொரு அரசன் தேவை என்ற கணக்கில் கோட்டபாய ராஜபக்சவை சிங்கள மக்கள் தெரிவுசெய்தனர். 69 லட்சம் தனி சிங்கள வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்ட கோட்டபாய ராஜபக்ச, தன்னைத் தனிப் பெரும்பான்மையினருக்கான ஜனாதிபதி எனவும், அவர்களது கோரிக்கைகளுக்கு முன்னுரிமையளிப்பதே தன் சேவை எனவும் வரித்துக்கொண்டார். தன் வாக்காளர்களை சுவாரஸ்யப்படுத்தும் பல்வேறு கேலிக்கைகளிலும் ஈடுபட்டார். நாட்டு மக்களே திக்குமுக்காடிப் போகுமளவிற்குப் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார். ஆனால் அவரால் தான் நினைத்ததைப்போல நாட்டைக்கொண்டு செல்ல முடியவில்லை. 2006 ஆம் ஆண்டிலிருந்து தமிழர்களுக்கு எதிராக செய்த பழிகள் அத்தனையும் வினைப்பயனாக வந்துநின்றது. “கொடிய பயங்கரவாதத்தையே வெற்றிகொண்ட எமக்கு கொரோனாவை ஒழிப்பதெல்லாம் ஒரு விடயமே அல்ல” என்ற அதிகார மமதையோடு வைரஸோடு பொருதினர். சர்வதேச சுகாதார தாபனம், உலக வங்கி, நியூசிலாந்து மாதிரியான நாடுகள் விடுத்த முன்னெச்சரிக்கை குறித்து கவனமெடுக்கவில்லை. இராணுவத்தின் புஜபலத்தைக் கொண்டு கொரோனாவைக் கட்டுப்படுத்தத் தீவிரம் காட்டினர். மக்களைக் கொரோனாவின் பக்கம் திருப்பிவிட்டுத் தம் வழமையான அரசியலை முன்னெடுத்தனர் ராஜபக்சவினர். போர் நடத்திய காலம் தொட்டு வாங்கி கடன்களையும், வீங்கிப்பெருத்த வட்டியையும் கட்டுவதற்கு சீனாவிடம், இந்தியாவிடம் கடனுக்கு மேல் கடன் வாங்கினர். வாங்கிய கடனுக்குப் பதிலீடாக இலங்கையின் நாலாதிசைகளும், வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டன. மக்களின் கருத்தின்றியே கொழும்பு துறைமுக நகரச் சட்டமூலத்தை பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றிக்கொடுத்தனர். வடக்கில் வளமிகு இடங்களை இந்தியாவுக்குத் தாரைவார்த்தனர். கொள்ளையடிப்புக்குப் பேர்போனவர்களைக் கொண்டு நாட்டை நிர்வகித்தனர். உலகம் எச்சரித்ததைப் போலவே இதன் விளைவு மிகமோசமானதாக மாறியது. தவறான நிர்வாக நடத்தைகளும், ஊழல் மிகுந்த பொருளாதார கொள்கைகளும், கொமிசன் அடிப்பதற்கான துரித அபிவிருத்திப் பணிகளும் இதற்கு வழிவகுத்த காரணிகள். மறுபுறத்தில் கடன் பொறி இறுகத் தொடங்கியது. கடனை வாரிவாரி வழங்கிய நாடுகள் கட்டளை போடத்தொடங்கின. தனிச் சிங்கள ராச்சியத்தைக் கட்டமைக்க வந்த அரசரோ, எந்த நூலுக்கு எப்படி ஆடுவது என்பதைத் தெரியாதளவுக்கு குழம்பிப்போனார். உட்புற- வெளிப்புற அழுத்தங்களால் நிலைதடுமாறிப்போனார். எரிவாயு, எரிபொருள், பால்மா, மருந்துகள் என அத்தியாவசியப் பொருட்கள் அனைத்திற்கும் தட்டுப்பாடு தலைவிரித்தாடத் தொடங்கியது. ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஒரு சொப்பிங் பை அளவிற்கே பொருட்கள் வாங்குமளவிற்கு பணப் பெறுமதியிழப்பு ஏற்பட்டது. அரசு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் காலம் போய், மக்களிடம் அரசு நிவாரணம் கேட்கும் காலமும் வந்தது. இந்நிலையில்தான், இவையெதையும் தாங்கிக்கொள்ளாத, நகரவாசிகளாக சிங்கள மேற்தட்டுவர்க்கத்தினர் வீதிக்கு வந்திருக்கின்றனர். எவ்வகையிலும் ஜனநாயக விழுமியங்களை மீறாது ராஜபக்சவினருக்கு எதிரான கோசங்களை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். ராஜபக்சவினர் நாட்டை சீரழித்துவிட்டனர், பொருளாதார அழிவை ஏற்படுத்திவிட்டனர், சீனாவுக்கும், இந்தியாவுக்கும் நாட்டை விற்றுவிட்டனர், குடும்பமாக இணைந்து ஊழல்செய்து நாட்டை சூறையாடிவிட்டனர் எனவே இவர்கள் பதவியை விட்டு விலகவேண்டும் என்கிற கோசங்களை முன்வைத்துப் போராடுகின்றனர். 2019ஆம் ஆண்டு வரைக்கும் இத்தகைய குற்றங்களில் ராஜபக்சவினர் ஈடுபடவில்லை போலவும், அதற்குப் பின்னரே இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் போலவும் இந்தச் கோசங்களை முன்வைக்கும் போராட்டக்காரர்கள், 2005 ஆம் ஆண்டிலிருந்தே ராஜபக்சவினரின் தீவிர பக்தர்கள் என்பதை மறந்துவிடுகின்றனர். உண்மையில் இன்று இலங்கை எதிர்கொண்டிருக்கும் பொருளாதார இடரின் விதை “ஹெல்பிங் அம்பாந்தோட்டை” யில் இடப்பட்டது. தமிழர்களைக் கொத்துக்கொத்தாகக் கொல்வதற்கு உலக நாடுகளிடம் கோடிகோடியாய் கடன்பெற்றபோது இடப்பட்டது. போரின் பின்னர் நாட்டை துரித அபிவிருத்தி செய்கிறோம் என்றபோது இடப்பட்டது. அதுவே இப்போது வளர்ந்து பெருவிரூட்சமாகி நிற்கிறது. அவ்வாறு கடன் வாங்கியபோது, வாங்கிய கடனில் கொள்ளையடித்தபோது பாற்சோறு உண்டு களித்த தரப்பினர் இன்று தமக்குப் பிரச்சினையென்றபோதுதான் விழித்திருக்கின்றனர். ராஜபக்சவினருக்கு எதிராகக் குரல் எழுப்புகின்றனர். இந்தப் போராட்டங்களில் தமிழர்களை ஈடுபடுமாறு கோருவதும் அபத்தமிக்கது. ராஜபக்சவினரின் அத்தனை முகங்களையும் தமிழர்கள் நேரில் பார்த்திருக்கின்றனர். “இப்போது எங்கள் கைகள் மட்டும்தான் கட்டப்பட்டிருக்கிறது, கண்களல்ல” என சமாதானம் பேசிய ராஜபக்சவினரின் படைகளையும் கடந்திருக்கின்றனர். இந்த அனுபவங்களிலிருந்து பெற்ற பாடத்தின் விளைவைத்தான் தமிழர்கள் 2009 ஆம் ஆண்டிலிருந்தே ராஜபக்சக்களின் ஆதரவாளர்களுக்கு புகட்டிவருகின்றனர். அப்போதெல்லாம் அந்தப் பாடங்களைப் புரிந்துகொள்ளாத தரப்பினர், இன்று திடீர் ஞானம் பெற்றவர்களாக வீதிக்கு வந்திருப்பதும், அதற்குத் தமிழர்களின் ஆதரவு கோருவதும் விந்தையானது. ராஜபக்சவினரின் அத்தனை அட்டூழியங்களுக்கு எதிராகவும் தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கின்றனர். நிலஅபகரிப்பு, வழிபாட்டிட அபகரிப்பு, பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல், காணாலாக்கப்படுதல், அரசியல் கைதிகளாக சிறையில் தடுத்துவைத்திருத்தல், ஊழல் எனப் பல்வேறு விடயங்களுக்கு எதிராகவும் தமிழர்கள் குரல்கொடுத்துவருகின்றனர். அப்போராட்டங்களின்போது அவர்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் எண்ணிக்கையிலடங்காதது. அந்நேரங்களில் எல்லாம் சுற்றுலா வந்தாவது, ஒரு ஆதரவுக் கரத்தைக் கொடுத்துவிட்டு செல்லாத தரப்பொன்று எந்த எண்ணத்தின் அடிப்படையில் தமிழர்களின் ஆதரவைக் கோருகின்றது என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை. இந்தப் போராட்டங்களில் சில இடங்களில் அரசியலமைப்பு மாற்றம் கோருவதையும் அவதானிக்கமுடிகின்றது. அதவாது ராஜபக்சக்கள் போன்ற இனவாதிகளது அரசியல் வரவிற்கும், இருப்பிற்கும் இலங்கையில் உருவாக்கிவைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பே காரணம். அதில் ஏனைய இனங்களையும் மதிக்கக்கூடிய, அவர்தம் உரிமையை சமநிலைப்படுத்தக்கூடிய புதிய முறைமைகள் உள்ளடக்கி, இலங்கையின் அரசியலுக்குப் புதிய இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் எனவும் கோரப்படுகின்றது. இவ்விடயம் இதயச்சுத்தியுடன் முன்வைக்கப்படுமாயின், கூட்டு சிங்கள மனோநிலையின் அடிப்டையில் கருத்துருவாக்கமாக நிகழுமாயின் அது வரவேற்கத்தக்கதே. ஆனால் இலங்கையின் அரசியலானது மையம் கொள்ளும் இடமாக பௌத்த மகாசங்கங்களே காணப்படுகின்றன. இவை காலாகாலமாக பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை முன்னிலைப்படுத்திய அரசாட்சியையே விரும்புகின்றன. அச்சங்கத்தாரின் விருப்பமின்றி இலங்கை அரசியலில் எத்தகைய மாற்றமும் நிகழாது. இப்போது கூட ராஜபக்சவினர் என்னசெய்யவேண்டும் என்பதை பௌத்த மகாசங்கத்தினரே தீர்மானிக்கின்றனர். ராஜபக்சவினரும் தமக்கு வாக்களித்த மக்களை விட சங்கத்தினருடன் பேசுவதையே விரும்புகின்றனர். இந்நிலையில் பௌத்த சங்கங்கங்களிடம் அனுமதி பெறாத அரசியலமைப்பு முறைமை மாற்றம் எவ்வகையில் சாத்தியப்படும்? எனவே ராஜபக்சவினரை அரசியல் அரங்கிலிருந்து அகற்றுவதற்கான போராட்டமானது, கோரும் – முன்வைக்கும் விடயங்களில் பல்வேறு தெளிவின்மைகள் காணப்படுகின்றன. வெறுமனே அரசியல் அரங்கிலிருந்து ராஜபக்சவினரை அகற்றுவதன் மாத்திரம் இலங்கை எதிர்கொண்டிருக்கும் பொருளாதார – அரசியல் இடர்களுக்குத் தீர்வுகாணமுடியாது. ஒருவர் செய்யும் தவறுக்கு அவரை இடமாற்றிவிட்டால் போதும், அதுவே உச்ச தண்டனை என்கிற மனநிலையின் அடிப்படையில்தான் இலங்கையில் நடக்கும் குற்றங்களுக்கான தண்டனைகள் அணுகப்படுகின்றன. ஆனால் குற்றவாளிகளுக்கு இருக்கும் பொறுப்புக்கூறல் கட்டாயப்படுத்தப்படுவதில்லை. அது நிகழாதவரைக்கும் இலங்கையில் அரசியலமைப்பு முறைமையில் மாற்றம் நிகழவும் வாய்ப்பில்லை. எனவேதான் இதனைத் தெளிவாக விளங்கிக்கொண்ட தமிழர்கள் “கோ கோட்டா கமவிற்கு” செல்லாதிருக்கின்றனர். https://tamilwin.com/article/why-tamils-do-not-go-to-gottagogama-1651668552
    1 point
  4. நானும் ஆண்டு 7 இல் இருந்து பாடசாலைக் கால.. தேசிய சேமிப்பு வங்கியில் வைப்பில் வைச்சுக்கிட்டே வந்த பணத்தை எனக்கே தெரியாமல்.. இலங்கை மக்களுக்கென்று எடுத்திட்டாங்கள். அப்படியும் நடக்குது. றோலாவது வேண்டிச் சாப்பிட்டிருக்கலாம்.. இலங்கை மக்களுக்கு கொடுத்தால் பறுவாயில்லை.. அரசியல் வியாதிகள் பொக்கட்டுக்குள் போடக் கொடுப்பதிலும்.. நண்பர்களோடு சேர்ந்து.. றோல் வேண்டிச் சாப்பிடுவது எவ்வளவோ மேல்.
    1 point
  5. கிந்தியன் மட்டும் அல்ல நம்மிடையே புரையோடிப்போன நான் படித்தவன் மேல் தட்டு வர்க்கம் எனும் கும்பல் இந்தக்கும்பல் சிங்களவனுக்கு கிந்தியனுக்கு பிரிட்டிஷ் காரனுக்கு அடிமை சேவகம் பண்ணுவதே அவர்களின் தொழில் உதாரணம் நிறைய இருக்கு சொந்த இனம் தாய் பிச்சை எடுக்கையில் தம்மை அடிமையாக்கியவர்களுக்கு சண்டைக்கு பிளேன் வாங்கி கொடுப்பினம் பிட்டிஷ்க்காரனுக்கு உலக யுத்த நேரம் பணம் சேகரித்து பிளேன் வாங்கி கொடுப்பினம் அதை வேறு பெருமையாக சொல்லி திரிவினம் தாலிக்கொடியில் பிரிட்டிஸ் ராணியின் தலையை போட்டு ரசிப்பினம் .
    1 point
  6. அன்னையர் தின வாழ்த்துக்கள். அருமையான... அன்னையர் தின கவிதைக்கு, நன்றி நிலாமதி அக்கா.
    1 point
  7. அனைத்து அன்னையர்களுக்கும் இனிய அன்னையர் தின நல் வாழத்துக்கள்🙏
    1 point
  8. அன்னையர் தின வாழ்த்துக்கள். கவிதைக்கு நன்றி ,அக்கா.
    1 point
  9. தன்னையே கொடையாய் தரும் அன்னைக்குத் தரமான ஒரு கவிதை......! 🌹
    1 point
  10. அந்தக்காலத்தில்... எம். ஜீ. ஆர்., சிவாஜி... நடித்த, ஏட்டிக்குப் போட்டியான படங்கள்.
    1 point
  11. ராணுவதிற்கு இன்னும் வயிறு காயல போல கிடக்கு .. அது சரி.! அங்க இங்க வாங்குற பிச்சையில முதல் "படி" ராணுவத்திற்கு தானே..👌
    1 point
  12. நாங்கள் மறக்க நினைத்தாலும் அவர்கள் நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கிறார்களே! அதை கழட்டி அம்மணமாய் அனுப்பும் பலம் நம்மிடம் மட்டுமே, அதை யாருக்கும் விட்டுக்கொடோம்!
    1 point
  13. அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை. தாய்மார் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
    1 point
  14. "மக்களால் தெரிவு செய்ய பட்டேன்" என்பவர் மக்களின் தேவைகளை உணராதவர், மக்கள் கேவலமாக எதிர்க்கும்போது , பதவி துறப்பது தானே நியாயம். நாட்டில் நியாயம் மரித்து வெகு காலமாச்சு
    1 point
  15. சஜித் ஏற்காவிட்டால் மைத்திரி stand by ஆக உள்ளார்.
    1 point
  16. இன்னும் ஓரிரு நிமிடங்களில் நேரடி நிகழ்ச்சி தொடங்குகின்றது. நேரமுள்ளவர்கள் இணைந்திருங்கள்.
    1 point
  17. ஒவ்வொன்றும் முத்து முத்தான கார்ட்டூன்கள் .......! 👍 நன்றி கவி அருணாசலம்.......! 🌹
    1 point
  18. யார் பெரியவர் ? மரத்தின் மேலிருந்து தொங்கும் கூட்டைக் கட்டி, எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்ள, அதற்கு கீழாக வாசலை வைத்து... தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் அமரவும் இடத்தை ஒதுக்கிக் கட்டியுள்ள தூக்கணாங் குருவி எறும்பினும் சிறிய தொட்டால் நசியக்கூடியது, ஆயினும்.. ஆளுயுர புற்றுக் கட்டி, அதனுள் அடுக்கடுக்காக தங்களுக்கான வீட்டைக் கட்டும் கரையான், தன் உணவான... திரவத்தை கீழே சிந்தாமல் அந்தரத்திலே நிற்கச் செய்யும் தேனி, தன் உணவு தன்னைத் தேடி வந்து, தன் வலைக்குள்ளே விழச் செய்யும் சிலந்தி.. என ஒவ்வொன்றுக்கும், ஒரு திறனை இயற்கை வழங்கியிருக்க... பெரியவர் என யாரும் செருக்கு கொள்ளத் தேவையில்லை. வெண்பா வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான் தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும் வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண் எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது. ஔவை படித்ததில் பிடித்தது.
    1 point
  19. உண்மை. இலங்கைக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது.அங்கே கஷ்டப்பட்டு உழைப்பவன் வழக்கம் போல கஷ்டப்படுகின்றான். ஆனால் இந்த கொழும்பில் குஷியாக வாழ்ந்து கீரைக்கு விலை பேசுபவன் தான் காருக்கு பெட்ரோல் இல்லாமல் காலி முகத்திடலில் நிற்கின்றான். இலங்கைக்கு எதற்கு அங்கர் பாலாமா? நான் வளர்ந்த காலத்தில் பொன்னம்மா கண்ணம்மா என்று இரு பசு மாடுகள் தான் எங்களுக்கு பாலும் தயிரும் கடும்பும் கொடுத்தன. ஆனால் இன்று அங்கு வாழும் சொகுசு பேர்வழிகளுக்கு மாடு வளர்த்து பால் கறக்க வெட்கம், ஆனால் ஸ்கூட்டி எடுத்து முறுக்கிக்கொண்டு போறதில அவ்வளவு குஷி.. கிழமைக்கு ஒருக்கா facebook இல் எங்கேயாவது போய் சாப்பிட்டு குடிக்கும் போட்டோ, இடியப்பம் புழிய தெரியாது ஆனால் நல்லா இத்தாலியன் பீட்சா சாப்பிட்டு ஏப்பம் விட தெரியும். எவனுக்கும் வயல் செய்யவோ அல்லது ஒரு புது முயற்சி செய்யவோ அறிவில்லை, அதற்கான முயற்சியும் இல்லை. ஒழுங்காய் படிப்பதும் இல்லை. Facebook,instragram இது தான் இதுகளின் வாழ்க்கை. இவர்களை இன்னும் ஒரு ஐந்து வருசத்துக்கு இப்படியே தொண்டை தண்ணீர் வற்ற கத்த விடவேணும். ஆஸ்பத்தியில் அத்தியாவாசிய மருந்து பொருட்களை மட்டும் குறைவில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.தாய் தந்தையர், போரால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் தவிர வேறு இவருக்கு இரக்கம் பார்க்கக் கூடாது.. இவர்களை கஷ்டப்பட வைப்பது தான் இவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு.
    1 point
  20. கவி அருணாசலம் உங்கள் கருத்துப்படங்கள் அத்தனையும் நியாயமான காடசிகள். பாராட்டுக்கள். தெய்வம் நின்று கொல்லும்.
    1 point
  21. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சுவி அண்ணா
    1 point
  22. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சுவி அண்ணா
    1 point
  23. கூட்டுக் குடும்பம்.......! 😂
    1 point
  24. விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மார்சல் பற்றி உலகம் அறியாத முகம் ?
    1 point
  25. ஒரு காலத்தில், இந்த மாதத்தில் உங்கள் கொழும்பு விழாக்கோலம் பூண்டிருந்தது. உங்களிடம்... உச்ச பட்ச பூரிப்பு, இருந்தது. நாங்கள் கூனி, குறுகி நின்றோம். ஒப்பற்ற தலைவனை இழந்துவிட்ட எங்கள் நெஞ்சுவலிக்கு கூட உங்களிடம் மருந்திருக்கவில்லை. எங்கள் நெஞ்சுமீதேறி கொண்டாடினீர்கள்.விசும்பலை கூட எம்மால் வெளிக்காட்ட முடியாதிருந்தது. எங்கள் தலைவனை நினைந்து பெருமை கொண்டோம். ஆயினும் எங்கள் வாழ்வியலை நினைத்து கவலை கொண்டோம். வேதனை மேல் வேதனை தந்தீர்கள். ஆயினும் எங்கள் தலைவன் மகோன்னதமானவர். " நீங்கள் முன்னால போங்கோ,நான் பின்னால வாறன்" என்று சொல்லியனுப்பியதற்கிணங்க, எங்கள் ஜீவ நாடிகளின் பின்னால் அவரும் சென்று விட்டார். தன் குடும்பத்தையும் மொத்தமாக அழைத்துச்சென்றுவிட்டார். உங்கள் களிப்புகளில் கவலையுண்டு வாழ்ந்த எங்களுக்கு... அவர் நல்ல சேதி தந்து விட்டதாய் நாம் இப்போது உணர்கிறோம்.# அவரை பூசிக்கிறோம். அவர் மகோன்னதமானவர். தனக்கென எதையுமே சேர்த்துவைக்காதவர். எதிரியே போற்றும் புகழ் மிக்கவர். உங்கள் தலைவர்களை போல... அவர் எங்களை மட மாந்தர்களாக பார்க்கவில்லை. தாகமுடைய தனியான வர்க்கமாக கண்டார். அந்த இலட்சியத்தினூடே மாண்டுபோனார். அவருக்கு நீங்கள் இட்ட பெயர், தீவிரவாதி.... கொலைஞன்... ஆனால் நாங்கள் இட்ட பெயர் " இறைவன்". உங்கள் தலைவர்களுக்கு நீங்கள் இட்ட பெயர், கப்புட்டா....... கொறா....... மைனா......, காலக்கண்ணி...... நாங்கள் அவரை, பூஜை அறையில் வைத்திருக்கிறோம்.... நீங்கள் உங்கள் தலைவனுக்கு, உள்ளாடைகளை கண்பிக்கிறீர்கள்... நன்றி Jaganeethan Jegan Kulanthaivel
    0 points
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.