Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      11

    • Posts

      76755


  2. புரட்சிகர தமிழ்தேசியன்

    புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      15883


  3. Kadancha

    Kadancha

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      2339


  4. Kavi arunasalam

    Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      1735


Popular Content

Showing content with the highest reputation on 05/15/22 in all areas

  1. இது தமிழர்களை சிண்டுமுடிக்கும் பிபிசியின் திருவிளையாடல். தந்தை வாசுதேவன் நம்பூதிரி. நம்பூதிரிகள் என்பவர்கள் கேரள தேசத்து பிராமணர்கள். நாயர் குலம் என்று சொல்லப்படுகிறது. அக்காலதில் நம்பூதிரிகள் நாயர் குலப்பெண்களை மணமுடிக்கும் வழக்கம் இருந்திருக்கின்றது. இங்கே எங்கே தேவசகாயம் தமிழரானார்?
    3 points
  2. என்னதான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனை அது இது என்று உலகமகா வல்லரசுகள் பல மில்லியன்கள், பில்லியன்கள் செலவுசெய்து கண்டுபிடித்தாலும், ஒரு தீப்பந்தத்தை ஒரு சதமும் செலவின்றி, அதுவும் சிறிலங்காவின் வடமாகாணத்திலிருந்து கொழும்புக்கு குறிதவறாமல் பாயவைக்கும் தொழில் நுட்பத் திறன் வடமாகாணத்தவனுக்கு மட்டுமே உண்டு. 😋
    2 points
  3. இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும். 1578 இல் தமிழில் முதலில் அச்சில் வந்த நூலான தம்பிரான் வணக்கம் எனும் கிறிஸ்தவ கோட்பாடுகள் பற்றிய (போத்துகேய மொழி) நூலும் கொல்லத்திலேயே வெளியிடப்பட்டது. போத்துகேய மொழியில் நூலின் தலைப்பு Doctrina Christam en Lingua Malauar Tamul முதலில், 1554 இல் Lisbon இல் தமிழ் அச்சில் வெளியிடப்பட்டது, அனால் அது ஐரோப்பிய அச்சு பதிப்பு 1577 / 78 இல், ,அதாவது அப்போதைய போத்துகேய இந்திய அச்சில், மலையாளத்த தமிழில் Goa பதிக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அனால் வெளியிடப்பட்டது கொல்லத்தில். இதுவே மிகவும் உரிய சான்று, அப்போதைய கேரளத்தில் இருந்த மொழி மலையாளத் தமிழ் (பேச்சு மொழி மலையாளம்மா) என்பதற்கு.
    2 points
  4. வட மாகாணத்தில் உள்ளவர்கள் ஏன்? அந்த அமைச்சரின் வீட்டுக்கு தீ வைக்கிறார்கள். சிங்களப் பகுதிக்கு... தமிழர்கள் சென்று தீ வைப்பது சாத்தியமானதா? தமிழருக்கு, ஆயிரம் பிரச்சினை இருக்க... இதற்குள் தமிழரை இழுத்து விடுவதில், எல்லாரும் குறியாக இருக்கிறார்கள். 😮 முதலில்... காலிமுகத்திடலுக்கு, தமிழரை போகக் சொன்ன... சுமந்திரனை, கட்டி வைத்து... வெளுக்க வேண்டும். 😡
    2 points
  5. நீங்கள் பகிடியாக சொன்னது உண்மை. இதை இங்கே பலமுறை பதிந்து விட்டேன். இப்பொது உள்ள மலையாளம் என்பது 1700 கள் பிற்பகுதி மற்றும் 1800 ஆரம்பத்தில் நம்பூதிரிகளின் தூண்டுதலால், பிரித்தானியர் வலுக்கட்டாயமாக திணித்தது. அதற்கு முதல் கேரளத்தில் இருந்த மொழி மலையாளத் தமிழ், அதை மலையாளம்மா என்று கேரளத்தின் உள்ளே வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் (1700 கள் பிற்பகுதி மற்றும் 1800 ஆரம்பத்தில்), பிரித்தானியர் (இப்போதைய) கன்னட பிரதேசத்தில் திலகரி எழுத்தை தடை செய்து இருந்தாலும், அதே திலகரி எழுத்தை இப்போதைய மலையாள எழுத்து மொழியினுள் புகுத்தி மலையாளத் தமிழ் எழுத்து வடிவத்தில் தமிழை அகற்றினர். மலையாளத் தமிழில் இருந்த அரச பதிவுகள் எரிக்கப்பட்டன. அனால், வாய் மொழி மலையாளத் தமிழை (மலையாளம்மாவை) நீக்க முடியவில்லை பிரித்தானியரால். அனால், திலகரி எழுத்து மையல மொழி சொல் உச்சரிப்பும், பழைய மலையாளத்து தமிழ் உச்சரியுப்பும், காலவோட்டத்தில் கலந்து உருவாகி இருப்பது இப்போது உள்ள மலையாள பேச்சு மொழி. இதனால் தான், இப்போதும் பேச்சு மலையாளம், தமிழருக்கு பெரும்பாலும் புரிவதற்கு காரணம்.
    2 points
  6. யார்? இந்த 'வருணகுலத்தான்' இராஜராஜ சோழன் காலம்முதல் வளர்ச்சியடைந்துவந்த வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் போத்துக் கேயர் காலத்தில் முழுஅழிவினுக்குள்ளாகியது. 1619 யூன் 5 ந்திகதி யாழ்ப்பாணத்தின் இறுதிமன்னனான சங்கிலி குமாரன் போத்துக்கீசரால் கைப்பற்றப்பட்டு கோவா விற்கு கொண்டுசெல்லப்பட்டான். அத்துடன் யாழ்ப்பாண தமிழரசரின் ஆட்சி முடிவுக்குவந்தது. 1505இல் கொழும் பில் (அன்றைய கோட்டைஇராச்சியம்) கரையொதுங்கிய போத்துக்கீச தளபதியான DoLorenzo de Almieida இலங்கை யில் முதன்முதல் காலடிவைத்த போத்துக்கீசனாவான். இந் நிகழ்ச்சியை தொடர்ந்து இலங்கையின் கரையோரப் பகுதிகள் பலவும் போத் துக்கீசரின் ஆட்சியில் கீழ்வந்த ன. எனினும் 1519இல் யாழ்ப்பாணத்தில் ஆட்சிக்கு வந்த சங்கிலியன் எனப்படும் 7ம் செகராசசேகரன் 1561 வரை போத்துக்கீசரின் ஆணையை ஏற்கமறுத்துவந்தான். அத்துடன் இவர்களிற்கு எதிரான பலதாக்குதல்களை கடலிலும் தரையிலும் நடத்திவந்தான். (இவனுடைய தாயார் மங்காத்தா வல்வெட்டித்துறை மணல்குடியை சேர்ந்தவரும் அன்றையஅரசனான பரராசசேகர னின் மனைவியரில் ஒருத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது) குறிப்பாக 1544 டிசம்பரில் மன்னாரில் இவன் நடத்திய தாக்குதல் மிகப்புகழ்பெற்றது. இத்தாக்குதலில் போத் துக்கீச படை களுடன் மக்களை மதமாற்றத்திற்குள்ளாக் கிவந்த பிரான்சிஸ் எனும் மதகுருவும் மதம்மாறிய பலரும் கொல்லப்பட்டனர். இக்காலத்தில் சங்கிலியனின் மாற்றாந்தாயின் மகனான பரநிருபசிங்கன் போத்துக் கீசருடன் இணைந்து சங்கிலி யனுக்கு எதிராக இயங்கிவந்தமை குறிப்பிடத்தக்கது. இவன் யாழ்ப்பாண அரசுரிமையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் போத்துக்கீசரின் உதவியை நாடியதுடன் தன்னை கத்தோலிக்கசமயத்திற்கும் மாற்றிக் கொண்டி ருந்தான். அரசுரிமையை எதிர்பார்த்திருந்த இவனுடைய மகனான இளஞ்சிங்கனும் மேற்படி தாக்குதலில் சங்கிலியனின் படைகளால் கொல்லப்பட்டான். போத்துக்கீசஏகாதிபத்தியத்திற்கு எதிரான சங்கிலிய னின் இத்தாக்குதல் பின்னாட் களில் மதவெறிகொண்ட வனாக சிலரால் வர்ணிக்கப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து புனிதசவேரியர் என்ற மதகுருவான பிரான் சிஸ் போத்துக்கீச அரசுக்கு 20.01.1545 இல் எழுதிய கடித த்தில் தமக்கு அடங்காத சங்கிலியை யாழ்ப்பாண அர சில் இருந்து விரைவில் அகற்றுமாறும் அவ்வாறு அகற்றி னால் யாழ்ப்பாணத்தில் பெரும் ஆன்மீக அறுவடை(கிறிஸ்தவ மதமாற்றம்) காத்திருப்பதாக வேண்டுகோள் விடுத்திருந் தார். அந்நிய ஏகாதிபத்தி யத்திற்கு எதிரான சங்கிலியனின் இப்போர்க்கால நடவ டிக்கையினை தொடர்ந்து மேலும் பதினேழு ஆண்டுகள் யாழ்ப்பா ணம் தமிழரின் முழுமை யான கட்டுப்பாட்டிலிருந்தது. இக் காலத்தில் மன்னார் முல்லைத்தீவு உட்பட வன்னியின் பலபகுதிகளும் யாழ்ப் பாண அரசின் கீழிருந்து வந்தன. போத்துக்கீசரின் இத்தகைய பலத்த எதிர்ப்புகளைமீறி 1561 வரை சங்கிலியனது முழுமை யான கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் விளங்கி வந்தமை குறிப்பி டத்தக்கது. இறுதியாக போத்துக்கேயரின் கடுமையான எதிர்ப்பா லும் உள்ளி ருந்து கொல்லும் தொடர்ச்சியான துரோகத் தினாலும் நாற்பத்திஇரண்டு வருடங்கள் அரசாண்ட சங்கிலியன் என்ற 7ம் செகராச செகரன் 1561 இல் வன்னிக்கு தப்பிச் செல்ல யாழ்ப் பாணம் போத்துக் கீசரின் மேலாண்மைக்குட்பட்டது. மேற்படி சங்கிலியனைப்பற்றி ஆராய்ந்த 'இலங்கையில் தமிழர் ஒருமுழுமையான வரலாறு' நூலின் ஆசிரியரான கலாநிதி முருகர் குணசிங்கம் யாழ்ப்பாண மன்னன் முதலாவதுசங்கிலி போத்துக் கீசரையும் அவர்கள் மதத் தையும் தமிழ்ப்பிரதேசத்தில் நிலைகொள்ளாமல் தடுத்துநிறுத்துவதற்கு தன்னாலான முயற்சிகளை எல்லாம் மனவுறுதியோடு செய்தான். ஆனால் அவனுடைய மரணத் திற்குப்பின்னர் சங்கிலி போல் துணிவும் தேசப்பற்றும் மதப்பற்றுமுள்ள மன்னன் போத்துக்கீசர் அட்சிக்காலத்தில் தமிழ்தேசத்திற்கு கிடைக்காமற் போய்விட்டதை காணமுடிகின்றது. என தனதுநூலின் 184 ம்பக்கத்தில் கூறுவது இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது. யாழ்ப்பாணத்தில் சங்கிலியனுக்கு பின்வந்த சிலஅர சர்க ளும் அந்நியரான போத்துக் கீசரின் மேலாண் மையை ஏற்றுக்கொண்ட போதும் இறுதியாக 1616 இல் ஆட்சி க்கு வந்த சங்கிலிகுமாரன் சிலகாலத்திலேயே போத்துக் கீசருக்கு மாறாக செயற்படத் தொடங்கி னான். அத்துடன் அவர்களின் எதிரியான தஞ்சாவூரின் இரகுநாத நாயக்க மன்னனுடன் நட்புக்கொண்டான். இதனால் வெகுண்டெ ழுந்த போத்துக்கீசர் சங்கிலி குமா ரன் மீது போர்தொடுத் தனர். இவர்களுக்கு யாழ்ப்பா ணத்தில் இருந்த பல முதலி மார்களின் ஆதரவும் கிடைத்திருந்தது. குறிப்பாக கத்தோ லிக்கமதத்திற்கு மாறியிருந்த மீகாப்பிள்ளையின் மகனான சின்ன மீகாப்பிள்ளை என்பவன் டொம் லூயிஸ்( Domlouis) முதலி என்ற பெயருடன் ஏனைய முதலிகளு டன் இணைந்து 1618இல் சங்கிலிகுமாரனது ஆட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக கிளர்ச்சிசெய்து வந்தான். இக் காலத்தில் தஞ்சாவூர் நாயக்கரிடமிருந்து உதவிபெற்ற சங்கிலிகுமா ரன் இக்கிளர்ச்சியை முறியடித்தான். வருணகுலத்தான் எனும் கரையார்தலைவனின் கீழ் போராடிய அரசனின் படைகள் வெற்றிபெற்றன. இக்காலத்தில் தேவிக்கோட்டை யிலிருந்த தஞ்சாவூர் அரசனான இரகுநாதநாயக்கனே தனதுபடைகளுடன் யாழ்ப்பாணம் வந்ததாக 'தஞ்சாவூர்நாயக்கர் வரலாறு' நூலின் 161ம் பக்கத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. தோல்வியடைந்த டொம்லூயிஸ் முதலி மன்னாருக்கு போத்துக்கீசரிடம் தப்பியோடினான். இவ்வாறு தனது ஆட்சிக்காலம் முழுமையும் எதிர்ப் போராட்டத்துடன் வாழ்ந்த சங்கிலிகுமாரன் இறுதியாக பருத்தித்துறையிலிருந்து இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முயன்றான். இவ்வேளையில் 1619 யூன் 5ந்திகதி கடல் மீது இவன் கைது செய்யப்பட்டான். பின்பு கோவாவிற்கு கொண்டுசெல்லப்பட்ட சங்கிலிகுமாரன் சிரச்சேதம் செய் யப்பட்டு கொல்லப்பட்டான். பிலிப் டி ஒலிவேரா யாழ்ப்பாணத்தின் அதிகாரமிக்க தளபதியாக போத் துக்கேய அரசினால் நியமிக் கப்பட்டான். இதனால் சங்கிலி குமாரனை அகற்றிவிட்டு ஆட்சியுரிமையை பெற்று விடலாம் என போத்துக்கீசருடன் இணைந்து செயற்பட்ட டொம்லுயிஸ் எதிர்பார்த்த அதிகாரம் கிடைக்கா மையினால் தஞ்சாவூர் படைகளுடன் இணைந்தமையும் குறிப்பிடத்தக்கது. மேற்படி சங்கிலிகுமாரன் கைதுசெய்யப்பட்டதும் போத் துக்கேயரின் நேரடிஆட்சிக்குள் யாழ்ப்பாணம் வந்தது. இந்நிலையில் ஆரம்பம்முதலே அந்நியரான போத்துக் கீசரை எதிர்த்துவந்தவனும் கரையோரத் தளபதியுமான வருணகுலத்தான் அவர்களுக்கு அடங்காது அவர்களை தொடர்ச்சியாக தாக்கிவந்தான். தஞ்சாவூர்நாயக்கரின் உதவியுடன் கரந்தடி முறை யிலான இத்தாக்குதல்களை நடத்திவந்த இவனை 'கரையாரத்தலைவன்' என சுவாமி ஞானப்பிரகாசர் தனது 'யாழ்ப்பாண வைபவ விமர் சனம் ' நூலில் பக்கம்160 இல் குறிப்பிடுகின்றார். கரையாளர் களின் படைகளுக்கு வருணகுலத்தானும் தஞ்சாவூர் படைகளுக்கு கெம நாயக்கன் என்பவரும் தலைமை தாங்கினர் என தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு நூலின் 164ம் பக்கத்து குறிப்பு கவனிக்கத்தக்கது. வல்வெட்டித்துறை சமூகத்தை சேர்ந்த இவ்வீரனை மூல நூலான Conquest of Ceylon என்னும் நூலை எழுதிய Fernando De Oueyroz ( குவரேஸ்பாதிரியார்) அறிமுகப் படுத்தும் விதமே அலாதியானது. Kinglet Of the careaz called VarnaGullata a Great Enemy of the Portuguese. (Page 468) அத்துடன் மீண்டும் அவனைப்பற்றி கூறவரும் அவர் Kinglet Of the careaz With the men Tanjour by night hid themselves in the house of the Fising Pepole.(Page633) 05.06.1619 இல் போத்துக்கீசரின் நேரடிஆட்சிக்குள் யாழ்ப்பாணம் உட்பட்டிருந்த இந்நிலையில் 1620 இன் தபசு காலம் (இது யேசு உயிர்த்தெழுந்த ஞாயிறுக்கு (ஈஸ்டர் ஞாயிறு) முன்வரும் நாற்பது நாட்களாகும்) என கூறப் படும் நாட்களொன்றில் வருணகுலத்தா னின் முதலாவது அதிரடித்தாக்குதல் ஆரம்பமா யிற் று. பலம் கூடிய எதிரி யை பலம்குறைந்தவர்கள் திடீரெனத் தாக்கும் இத்தாக்குதல் முறையின கரந் தடித்தாக்குதல் எனவும்வர்ணிப்பர். இவ்வகையில் இத்தகைய தாக்கு தலை எம்மண்ணில் முதன்முதல் நடத்திய வரலாற்று வீரன் வருணகுலத்தான் என்பது போத்துக்கீசவரலாறு எமக்குத்தரும் அரிய செய்தியா கும். யாழ் பண்ணைத் துறையில் அமைந்திருந்த மாதாகோவிலுக்குள் பதுங்கி யிருந்த போத்துக் கீசரின் மேல் இத்தாக்குதல் நடத்தப் பட்டது. யாழ்ப் பாணத்தை கைப்பற்றிய போத்துக்கீசர் அங்கிருந்த பல கோவில்களையே தமது உறைவிடமாக்கியிருந் தமை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. எனினும் ஆலயத்தின் பின்புறமாக நுழைந்து போத்துககீச ருடன் இணைந்து போராடிய எம்மவர்களின் செயலி னால் பலம் பெற்ற போத்துக்கேயர் அத்தாக்குலை முறியடித்தி ருந்தனர். மனம் தளராத வருணகுலத் தானினால் மீண்டும் அடுத்த நாள் நல்லூரில் தங்கியிருந்த போத்துக் கீசரின் புகழ்பெற்ற தளபதியான பிலிப் டி ஒலிவேரா வின் மீது மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட்டது. நவீன துப்பாக்கிகள் சகிதம் போராடிய போத்துக் கீசர் மீண் டும் வெற்றி பெற்றனர். தொடர்ந்த நாட்க ளொன்றில் தஞ்சாவூர் படைகளுடன் வந்த வருண குலத்தான பூநகரியில் ஈழவூர் என்னும் இடத்தில் ஏற்பட்ட மோத லிலும் வெற்றிகரமாக தப்பிக் கொண்டான். இன்று சர்ச்சைக்குள்ளாகும் ஈழம் என்னும் பெயர்கொணட பிரதேசம் போத்துக் கீசர் இலங்கைக்கு வந்தகாலத் தில் இருந்ததனை குவரேஸ் பாதிரியாரின் 634 ம் பக்கக் குறிப்பு ஆதாரமாக தருகின் றது. மீண்டும் 1620 நவம்பர் மாதம் ஆயிரம் தஞ்சாவூர் படைக ளுடன்வந்த வருண குலத்தான் தெண்டைமானாற்றில் தரைஇறங்கினான். நல்லூர் வரை முன்னேறிச் சென்று போராடியபோதிலும் இம்முறையும் இவனுக்கு தோல்வியே கிடைத்தது. எனினும் பிலிப் டி ஒலிவேராவை காயப்படுத்திய வருண குலத்தான் மீண்டும் அடுத்த தாக்குதலுக்கு தயாராகினான். போத்துக்கீசருக்கு எதிரான இத்தகைய கெரில்லாத் தாக்குதல்களை தனது சமூகத் தின் உதவியுடனும் கடல் கடந்துவந்த தஞ்சைப்படைகளின் துணையுட னும் தொட ர்ச்சியாக வருணகுலத்தான் மேற் கொண் டு வந்தான். மேற்படி அதிரடித்தாக்குதல்களை தலைமையேற்று நடத்தி வந்த அவன் இறுதியாக 2 February 1621 இல் தோற் கடிக்கப்பட்டான். நாகபட்டி னத்திலிருந்து புதிதாக வந்து ஓய்வெடுத்துக்கொண் டிருந்த உதவிப்படைகளுடன் வல்வெட்டித்துறை குளக்கரையில் அமைந்திரு ந்த பனந்தோப்பில் பதுங்கியிருந்த வருணகுலத்தானையும் அவன் படை களையும் எதிர்பாராமல் போத்துக்கீசப் படைகள் முற்றுகயிட்டுதாக்கின. எதிரியின் இம்முற்றுகையை முறிய டிக்க போராடிய அவ்வேளையில் தனது சொந்த மண்ணில் இம்மாவீரன் வீரமரணமடைந் தான். மடைந்தான். நள்ளிரவில் நடந்த இத்தாக்குதலில் பருத்தித்துறை க்கு மேற்கேயிருந்த குளக்கரையில் மூன்று மணித்தி யாலத்தில் எண்ணூறு போர்வீரர்களும் வருண குலத்தானும் அழிக்கப்பட்டதாக குவரேஸ் பாதியார் 643ம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார். முள்ளிவாய்க் காலுக்கு முன்பாக 2009 ஏப்ரல் ஆரம்ப நாட்களில் நடந்த ஆனந்தபுரம் தாக்குதலுக்கு இணையான தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதலை Antonio de Mota Galuao எனும் போத்துக்கீசதளபதி நடத்தியதாகவும் இவன் கட்டளை அதிகாரி பிலிப் டி ஒலிவேராவின் மருமகன் எனவும் மேலும் பல தகவல்களை அவர் தருகின்றார். இதனைத்தமிழரின் கடைசிக்கலகம்என வர்ணிக்கும் யாழ்ப்பாண வைபவகௌமுதி அதன் 67ம்பக்கத்தில் பின்வருமாறு தொடர்கின்றது. தஞ்சாவூர் நாயக்கன் யாழ்ப்பாணத்தை ஜெயிக்க இன்னுமொரு கடைசிப் பிரயத்தனஞ் செய்வானாயினான். அவனனுப்பிய சேனை பருத்தித்துறையில் இறங்கவிருக்கிறதென கேள்வியுற்ற ஒலி வேரா தெமற்றே என்பவனோடு ஒருபறங்கியர்சேனையை அங்கனுப்பினான். ஆயின் தஞ்சாவூர்ச்சேனை வல்லுவெட்டித்துறை கரையிலிறங்கி ஓர்குளக்கரையிலுள்ள பனந் தோப் பில் பாளையமிட்டிருக்கிறதென அறிந்து தெமொற் றா அங்கு இரகசியமாக சென்று பதிவிருந்து மூன்றாம் சாமமாகும்போது போர்ப்பறை அறைந்து கூக்குரலிடத் தமிழர் திகிலடிபட்டு குதிரைகளில் ஏறிப்போவோரும் திசைதப்பி அலைவோருமாய்க கலைவுற பறங்கியர் பின்தொடர்ந்து சிரங்கொய் தனர். விழுத்தப்பட்டவர்களுள் யாழ்ப் பாண சிங்காசனம் வகிக்கும் நோக்கமாய் வந்திருந்த சேனநாயகமும்(தளபதி) ஒருவனாவன். என வருணகுலத்தானின் வீரமரணத்தை கூறுகின்றது. 05.06.1619 முதல் 02.02.1621 இல்தான் மரணமடையும் வரை போத்துக்கீசரின் படைகளுக்கெதிராக ஆறு தடவைகள் இவன்தாக்குதலை மேற் கொண்டதாக முன்கூறிய Conquest of Ceylon நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது. நவீன துப்பாக்கிகள் மற்றும் வெடி மருந்துகள் கொண்ட பீரங்கிகளுடன் தற்துணிச்சலை மட்டும் துணையாகக் கொண்ட வருணகுலத்தானின் தொடர்ச்சியான இப்போராட்டமானது என்றும் மெச் சத்தக்கது. தமிழரின் இறுதிப்போரென வரலாற்றா சிரியர்களால் வர்ணிக்கப்படும் இப்போராட்டமானது The battle between the Portuguese and Tamils at valvedditurai. Which ends in the defeat of the latter என Johan H Martyn எழுதிய Norts of Jaffna நூலில் 3ம் பக்கத்தில் குறிக்கப்பட்டுள்ளது. மேற்படி இறுதிப்போர் நிகழ்ந்தஇடம் வல்வெட்டித் துறையில் அமைந்திருந்த புட்கரணிக் குளக்கரை யாகும். புட்கரணி' என்பது தாமரை அல்லது தாம ரைக்குளம் எனத்தமிழில் பொருள்தருவதால் அதற்கு அண்மையில் அமைந்திருந்த பிள்ளையார் கோவில் காரணப்பெயர்கொண்டு புட்கரணிப்பிள்ளையார் என அழைக்கப்பட்டு வந்துள்ளது. எனினும் புட்கரணி என்பது புட்டணி என பின்நாட்களில் திரிபடைந்துள் ளமை இன்று கவனிக்கத்தக்கது. முன்பு புட்கரணிக் குளம் என அப்பகுதியெங்கும் பரந்திருந்த இக்குளம் தூர்ந்தகாலத்தில் அதற்கிணையான தீர்ந்த எனும் பொருள்தரும் 'தீரு' என்னும் சொல்லடையானது குளம் என பொருள் தரும் 'வில்' என்பதனுடன் இணைந்து குளம் அமைந்திருந்த அப்பகுதி தீருவில் என இன்று அழைக்கப்படுகின்றது. இதேபோல் ஒரேபொருள்தரும் வில் = குளம் என்பன இணைந்து அப்பகுதியின் எச்சமாயிருக்கும் குளம் 'தீருவில்க் குளம்' எனவும் அழைக்கப்படுகின்றது. வருணகுலத்தானின் தோற்றத்தை வர்ணிக்கும் ஆசிரி யர் Then an aracheset (தளபதி) before him on a sheet a large head, half bald, With a long and beautiful beard, which was turning grey, saying ‘This is the head of the Captain-General என கூறு கின் றார். இத்தகைய முன்புறம் சவரம் செய்யப்பட்டு நீண்டகூந்தலுடன் அழகான தாடியுடனும் காணப்பட்ட அவனுடைய பெரிய தலை வெட்டப்பட்டு மரக்கிளை யொன்றில் குத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. அத் துடன் அவனுடன்வந்த மேலும் 800 போர்வீரர்களும் அவ் விறுதியுத்தத்தில் மாண்டுபோயினர். பிலிப் டீ ஒலிவே ராவை புகழ்ந்துரைக்கும் 'யாழ் திருச்சபை வரலாறு' எனும் நூலின் 47 ம்பக்கத்தில் அதன்ஆசிரியர் 'போத் துக்கேய அதிகாரிகளில் குறிப்பி டத் தக்கவர் 1921ம் ஆண்டு வல்வெட்டித்துறையில் யாழ்ப்பாணஅரசன் தோற்கடிக் கப்பட்டபின் யாழ்ப்பாண ஆளுநரான பிலிப் டீ ஒலிவேராவும் அவர்காட்டிய ஆன்மீக வாஞ்சையுமா கும் எனக் கூறுமிடத்து யாழ்ப்பாண அரசன் தோற்கடிக் கப்பட்ட இடமென வல்வெட்டித் துறையை மீண்டும்அவர் சுட்டிக்காட்டுகின்றார். இங்கு யாழ்ப்பாண அரசனென வருணகுலத்தானை குறிப்பிடும் மேற்படி நூலின் ஆசிரி யர் 'சுவாமி J.E..ஜெயசீலன' மகாவம்சத்தில் துட்டகை முனுவின் புகழைக் கூறவந்த மகாநாமா அவனது எதிரி யான ஈழாளனை குறிப்பிடுவதுபோல் பிலிப் டி ஒலி வேரா வின் புகழைக்கூறவந்து அவனது எதிரியான வருண குலத்தானை குறிப்பிட்டுள்ளமை கவனிக்கப் படவே ண்டும். போத்துக்கேயரின் இலங்கை வரலாற்றை எழுதிய குவரேஸ் பாதிரியாரும் வருணகுலத்தானை Kinglet Of the careaz கரையார்களின் தலைவன் அல்லது மன்னன் என்றே குறிப்பிட்டிருப்பது இங்கு கூர்ந்து நோக்கத்தக்கது. வருணகுலத்தான் வீரமரணமடைந்ததும் அதுவரை யாழ் பண்ணைத்துறையில் வசித்துவந்த பிலிப் டி ஒலி வேரா தலைநகரான நல்லூருக்கு தனது இருப்பி டத்தை மாற்றிக் கொண்டான். இக்காலத்தில் தலை நகரான நல்லூரில் அமைந்திருந்த கந்தசாமி கோவில் உட்பட யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த பலகோவில் களும் போத்துக்கேயரால் இடித்தழிக்கப்பட்டன. மக்களின் விருப்பத்திற்கு மாறாக கோவில்கள் இடிக் கப்பட்டதாக மேற்படி குவரேஸ் பாதிரியார் தனதுநூ லின் 642ம் பக்கத் தில் கூறி யிருக்கின்றார். இதுபோல வே இறுதிப்போர் நடந்த வல் வெட்டித் துறையில் அமைந்திருந்த வருணகுலத்தான் வணங்கியதாக நம்பப்படும் பழமைவாய்ந்த முத்துமாரியம்மன் கோவிலும் போத்துக் கேய தளபதியான பிலிப் டி ஒலிவேராவினால் இக்காலத்தில் அழிக்கப்பட்டது. (1617 முதல் 1688 வரை தனது வாழ்கைக்காலமாக கொண்ட Fernao de Queyroz எனும் கத்தோலிக்க பாதிரி யார் The Temporal and Conquest of Ceylon எனும் நூலை எழுதியிருந்தார். போத்துக்கீசமொழியில் எழுதப்பட்ட இந்நூல் அவர் மறைவிற்குப்பின் 1689இல் போத்துக் கீசரின் தலைநகரான லிஸ்பனில் வெளி யிடப் பட்டது. போத்துக்கீசர்கால இலங்கையைப் பற்றிய குறிப்பாக அன்றைய யாழ்ப்பாணஅரசு மற்றும் மக்கள்பற்றிய பலவிபரங்கள் இந்நூலில் அடங்கி யிருந்தன. 1930 SG.Perera என்பவரால் இந்நூல் ஆங்கில மொழி க்கு மாற்றப்பட்டது. எனினும் நானூறு வருடங்களிற்கு முன் நடந்த சம்பவங்களும் முன்னூற்றைம்பது வருட ங் களிற்கு முந்திய அகராதியில் தேடமுடியாத மொழி ப் பாவனையும் கொண்ட இந்நூலை ஆதாரமாகக் கொண்டு யாழ்ப்பாண வைபவகௌமுதி, யாழ் திருச் சபை வரலாறு, Nortes of Jaffna மற்நும் சுவாமி ஞானப் பிரகாசர் எழுதிய யாழ்ப்பாண வைபவ விமர்சனம் History of Jaffna under Portugses எனும் நூல்களில் வல் வெட் டித்துறையில் நடந்த போத்துக் கீசருடனான இறுதிப் போர் மற்றும் அதன் நாயகனான வருண குலத்தான் பற்றிய பலவிபரங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. எனினும் மேற்படி வெள்ளையின ஐரோப்பி யரின் ஆக்கரமிப் புக்கு எதிராக போராடிய வருண குலத்தானின் வீர சாகசத்தைதையும் ஏன் அவனின் பெயரையும்கூட பின்வந்த யாழ்ப்பாண சரித்திர ஆசிரியர்கள் பலரும் ஏனோ குறிப்பிடாமல் விட்டுச்சென்றுள்ளனர். எனினும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட Nayaks of Tanjore நூல் மற்றும் தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு போன்றநூல்களிலும் இதுபற்றிய பல விபரஙகளை காணலாம்.) விரைவில் வெளிவரஇருக்கும் 'வல்வெட்டித்துறை மாரியம்மன் வரலாறும் வழிபாடும்' மற்றும் 'வல் வெட்டித்துறையின் போராட்டவாழ்வு' போன்ற நூல் களிலும் எங்கள் மண்ணின் மைந்தனான வருண குலத்தான் பற்றிய மேலும் பலவிபரங்களுக்கு காத்திருங்கள் !.......... நவீனதுப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கொண்ட பீரங்கிகளுடன் தற்துணிச்சலை மட்டும் துணையாகக் கொண்ட வருணகுலத்தானின் இடை விடாத போராட்டமானது என்றும் மெச்சத்தக்கது. வீரர்கள் வீழ்ந்துபடு வதில்லை என்பதற்கு வருண குலத்தானே மாபெரும் சாட்சியம் ஆம் அதனால்தான் நூனூறுவருடங்கள் கடந்தும் அவன் வரலாற்றை இன்னும் நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம். வருணகுலத்தானின் வர லாற்றை எனக்குமுதலில் கூறிய சட்டத்தரணி சோமசுந்தரம் காண்டீபனுக்கு(சிவனருள்சுந்தரம்) 'வல்வெட்டித்துறை வரலாற்றின்' நன்றிகள் என்றென்றும் உண்டு. நன்றி - வர்ணகுலத்தான் ( பொன் . சிவா)
    2 points
  7. கொள்ளை அடிப்பது எனது நோக்கமல்ல ஆனாலும் எதிர்காலத்தில் அடிக்க வேண்டி இருக்கும் ☹️
    2 points
  8. கப்பலைக் காட்டியாச்சு ...இனி காலி முகத்திடல் அமைதியாகுமா ? இன்னும் இன்னும் இலங்கை மக்களின் தலைமுறைகள் கடனும் , கடனுக்கு வட்டியும் கட்டிட தலையெழுத்து தீர்மானிக்க படுகிறது . கடன் வாங்கி சாப்பாடு கொடுத்தால் எவன் குனிஞ்சு வளைஞ்சு வேலை செய்ய போகிறான்?.
    2 points
  9. ஆரப்பா உந்த சிந்தனை சிற்பி.?
    2 points
  10. சிங்கள இனவெறி - உண்மை நிலை ஆஸ்திரேலியா , மெல்போர்ன் நகரில் ராஜபக்சேக்களுக்கு எதிராக சிங்களவர் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள், முள்ளிவாய்க்கால் குறித்து கொடுத்த துண்டு பிரசுரமொன்றை, கிழித்து எறிந்தார் ஒரு இனவெறியன். அந்த ஒரு கணத்திலேயே, தமிழ், சிங்கள ஒற்றுமையும் கிழித்து வீசப்பட்டது. இதுதான் சிங்களம்.
    1 point
  11. 1 point
  12. சிங்களவர்கள் தமக்குள் அடிபட்டுக் கொண்டாலும்.. தமிழனை எதிர்க்கனும் என்றால்.. வேற்றுமை மறந்து ஒன்றாகி விடுவார்கள். ஆனால்.. தமிழர்கள் அப்படியல்ல.. அதற்குள்ளும் கன்னை பிரிச்சு சிங்களவனுக்கு வக்காளத்து வாங்குபவர்கள் இருப்பார்கள். தமிழனை தமிழன் எதிர்ப்பவர்களும் இருப்பார்கள். அதனால் தான் 1.8 கோடி சிங்களவனுக்கு ஒரு நாடிருக்குது.. 9 கோடி தமிழனுக்கு ஒரு நாடில்லை.
    1 point
  13. அவர் விக்கினேஸ்வரன். விளக்கம் கொடுத்து உள்ளார் அதாவது அவரது நான்கு நிபந்தனைகளையும் எற்றுக்கொண்டு நிறுவு செய்தல் மட்டுமே ஆதரவு உண்டு என்று அந்த நிபத்தனைகள் நிறைவேறும் ஆயின் பூரண சுயாட்சி கிடைக்கும் 😄😄 நிறைவு
    1 point
  14. தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு.. தலைக்கு மேல் /* நான் தூக்கி கொஞ்சிய /* என் தங்க மகன்/* என் தலைக்கு மேல் /* வளர்ந்து நிற்கிறான் /* ஒரு பயம் எனக்கு /* எப்போதாவது ஒருநாள் /* என் விசயத்தில் தலையிடாதே /* என்று சொல்லிவிடுவானோ என்று /* மகனே மறந்தும்/* அப்படி சொல்லிவிடாதே /* மரணித்து போய்விடுவேன் /* சின்ன வயதில்/* நீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய் /* நான் சலிக்காமல் பதில் சொல்வேன் /* என் வயதான காலத்தில்/* நானும் உன்னிடம் குழந்தை போல்/* வினா எழுப்பக்கூடும் /* கத்தாதே வாயை மூடு /* என்று சொல்லிவிடாதே /* வலி தாங்க முடியாத பாவி நான் /* வீடெல்லாம் நீ இறைத்து வைத்த /* சோற்றுப் பருக்கையை /* என் விரல்களால் கூட்டி அள்ளுவேன் என் முதிர் வயதில் /* என் வாய்க்கொண்டு செல்லும்/* உணவு தட்டி தரையில் விழக்கூடும் /* தவறியும் என்னை திட்டாதே /* தாங்க முடியாது என்னால் /* என் சிறுநீர் பை /* பலம் இழந்திருக்கக்கூடும் /* சில இடங்களில் /* சிறுநீர் சிந்தியிருக்க கூடும் /* இச்.......சீ என்று முகம் சுழிக்காதே /* என் முந்தானையில் /* உன் சிறுநீர் வாசம் /* இன்னும் மறையவேயில்லை/* மயானம் நடந்து போக/* திராணி இருக்கும்போதே/* நான் இறந்துவிடவேண்டும் /* மறந்தும் முதியோர் இல்லத்தில் /* என்னை மூழ்கடித்துவிடாதே /* ஒரு வருடம் /* உனக்கு ரத்ததானம் செய்தவள் நான் என் ரத்தத்தை/* பாலாக்கி பருக செய்தவள் நான்/* பரதேசியாய் என்னை பரிதவிக்க விட்டுவிடாதே /* நான் இறப்பதற்குள் /* ஒரு முறையாவது /* உன் மடியில் என்னை உறங்க வை /* என் உயிர் பிரியும் நேரம் /* நீ என் பக்கத்தில் இரு /* கரம் கூப்பி கேட்கிறேன் / ***_இதை நான் எழுதுவது ஏன் தெரியுமா ? இதை படித்து என் எண்ணம் அறிவாய் / என்னை அறிவாய்/ என்னை நேசிப்பாய் / என்ற நம்பிக்கையில் அல்ல* ஒவ்வொரு தாயின்/* உணர்வும் இதுதான்_ /*** என்பதை நீ உணர வேண்டும் /* பெண்மையை நீ மதிக்க வேண்டும்/* இதை படித்து நீ அழுவாய் /* என்று எனக்குத் தெரியும் /* அழாதே பெண்மையை மதி /* அதுபோதும் நன்றி மகனே/ முகநூலில் இருந்து..
    1 point
  15. எல்லாருக்கும் அடிக்கிறான்கள் நம்ம சுத்துமாத்துவை விட்டு விடுறாங்கள் .
    1 point
  16. இதே நிலைமைகள் தமிழர் பிரதேசத்தில் இதே இராணுவத்தால் நிகழ்த்தப்படும்போது ஏன் கேள்வி கேட்கவில்லை? சட்டங்கள் ஏமாந்து போனாலும் போகும் ஆனால் தர்மம் கூட இருந்து பழிவாங்கும்.
    1 point
  17. தேவசகாயம்: வத்திக்கான் தேவாலய விழாவில் ஒலித்த 'தமிழ்த்தாய் வாழ்த்து' 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் (இன்றைய (மே 15) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.) 1700களில் பிறந்த தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தேவசகாயத்துக்கு, வத்திகான் தேவாலயத்தில் புனிதர் பட்டம் வழங்கும் விழாவின் போது தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா இன்று ரோம் நகரில் நடைபெறவுள்ளது. முன்னதாக, செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற கலாசார நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மனோ தங்கராஜ் , செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அருட்சகோதரிகளின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், "தமிழக மண்ணிற்கு பெருமை சேர்க்கும் விதமாக நடைபெறும் இந்த நிகழ்வில் தமிழக மக்கள் சார்பில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. அன்பு தான் எல்லாம் என்றிருக்கும் இந்த உலகில் அன்பைப் பரிமாறி கொள்ளத்தான் அன்பு மூலம் உங்களுக்கு நன்றி சொல்ல தான் முதல்-அமைச்சர் எங்களை இங்கு அனுப்பினார்" என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-61454182
    1 point
  18. தேரு வந்தது போலிருந்தது நீ வந்த போது.......! 💞
    1 point
  19. காலிமுகத்திடல் போராட்டத்துடன்… சிங்களவனும், தமிழனும் ஒன்று சேர்ந்து விடுவார்களோ…. என்ற பயத்தில், பிரித்தாளும் சூழ்ச்சியாக….. விடுதலைப் புலிகளை இழுத்து விட்டு குளிர்காயப் பார்த்திருக்கு முட்டாள் இந்தியா.
    1 point
  20. ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்கும் மேற்குலக ஊடகங்களை கண் வெட்டாமல் பார்த்தால் நல்லது கெட்டது தெரியாமலே போய் விடும். 😁
    1 point
  21. 1 point
  22. Why Gotabaya Rajapaksa must go & Mahinda may flee to Africa : Sri Lanka MP Sumanthiran ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமித்துள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் குழப்பங்கள் குறித்து ThePrint இன் சிரேஷ்ட ஆலோசனை ஆசிரியர் ஜோதி மல்ஹோத்ரா M. A. சுமந்திரனிடம் பேசியிருந்தார். ராஜபக்சக்களின் எதிர்காலம் என்ன, மக்களின் போராட்டங்களுக்கு மத்தியில் மஹிந்த நாட்டை விட்டு வெளியேறுவாரா, எதிர்கட்சிகளின் முன்னெடுப்புத் திட்டம் என்ன என்ற பல விடயங்கள் குறித்து கலந்துரையாடி இருந்தார்.
    1 point
  23. தமிழர் நிலைப்பாட்டில்.... இந்தியா, உடம்பு முழுக்க, விஷத்தை வைத்துக் கொண்டு இருந்தால்... நேர காலம் தெரியாமல்... இப்படி, லூசுத்தனமான செய்திகளை பரப்பி, அவமானப் பட வேண்டி வரும். எங்களின்... தமிழ் அரசியல் வாதிகளும், இந்தியாவின், சீலைத் தலைப்பில்... தொங்குவதை நிறுத்தி, ஆக்க பூர்வமான வேலைகளை செய்ய வேண்டும்.
    1 point
  24. முகத்தில அடிச்ச மறுப்பு. இதோட இந்தியா பொத்திக்கொண்டு இருக்க பழகிக்கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் மூக்குடைபடுவதே இதன் வாடிக்கையாச்சு.
    1 point
  25. காத்திருந்தவனை... நேற்று வந்தவன் கொண்டு போகப் போறான் என்று இந்தியாவுக்கு.. வயித்தெரிச்சல் வந்து விட்டது. அதுதான்.... கீழிறங்கி அசிங்கமான வேலைகள் பார்க்க வெளிக்கிட்டிருக்கு. 😡
    1 point
  26. எதிர்வரும் காலங்களில், குறைந்தபட்சம் நாட்டின் பொருளாதார நெருக்கடி தீரும் வரையாவது மேற்கு நாடுகளின் பாரிய பொருளாதார உதவியில் இலங்கை தங்கியிருக்கபோவது உறுதி. இந்த உதவிகளை சர்வதேசம் வழங்கும் சமகாலத்தில் நாட்டை அரசியல் பொருளாதார இஸ்திரத்தன்மைக்கு இட்டுச் செல்லும் சில உத்தரவாதங்களை பெறுவது மட்டுமன்றி பொருளாதார நெருக்கடியிலிருந்து சீக்கிரம் மீள்வதற்கான புதிய அரசியல் பாதையொன்றையும் இலங்கைக்கு முன்மொழிந்து அந்த முன்மொழிவில் இலங்கை விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் இனப்பிரச்சனைக்குரிய நிரந்தர தீர்வுகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளடக்கப்படும். ரணிலை பிரதமராகியதன் மூலம் மேற்குலகத்தை நோக்கிய கதவை கோத்தா திறந்துவிட்டிரூக்கிறார். தமிழர் இனப்பிரச்சினைக்குரிய தீர்வு (அல்லது அப்படி ஒரு மாயை) தனது கையில் தான் உள்ளது என்று இந்தியா இன்றுவரை நம்பிக்கொண்டிருக்க, கிணறு வெட்ட புறப்பட அங்கிருந்து பூதம் கிளம்பிவிடுமோ என்ற பயமும் இப்போது இந்தியாவை பற்றிகொண்டுவிட்டது. பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதைபோல இலங்கையின் இனப்பிரச்சினைக்குரிய தீர்வுக் கோரிக்கை அல்லது நிர்ப்பந்தங்கள் எதுவும் மேற்குலகிலிருந்து வரவிருக்கும் பொருளாதார உதவிகளுடன் சேர்ந்தே வந்துவிடாமல் தடுக்க வேண்டுமாயின் புலிகள் மீள்கட்டமைப்பு, பயங்கரவாத தாக்குதல் போன்ற புரளிகளை கையிலெடுத்து கிலி பரப்ப வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு மட்டுமல்ல இலங்கைக்கும் நிச்சயம் தேவை. இந்த திட்டங்களை செயற்படுத்த 2019 ஆண்டில் நடத்தப்பட்டது போன்ற தொடர் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு அவற்றைப் புலிகளின் தலையில் போடும் வாய்ப்புகளும் உள்ளது.
    1 point
  27. தென் இந்திய மொழிகளில்... மலையாளம் கடைசியாக தோன்றிய மொழி. 1712´ம் ஆண்டளவில், தேவசகாயம் பிறந்து இருந்தால், அவர் தமிழராக இருக்கலாம் தானே. 😁
    1 point
  28. அப்படியானால் இலங்கையில் கொஞ்ச நாளில் புலிகள் பெயரில் குண்டுதாக்குதல் ஒன்று நடைபெற்று அப்பாவி சிங்கள மக்கள் சிலர் / பலர் பலி கொடுக்கப்பட்டு சில ராணுவத்தினரோ அல்லது ஏதேனும் அரச இலக்குகளோ பாதிப்படைய செய்யப்படலாம்.பழி, இல்லாத விடுதலைப் புலிகள் மேல் போடப்படலாம். அதனால் சிங்கள மக்களின் கோபம் தமிழர் மேல் திருப்பி விடப்பட்டலாம் விளைவாக கோத்தா அண்ட் கோ காப்பாற்றப்படலாம். திரைகதை இயக்கம் : Raw
    1 point
  29. புலிகள் இல்லை என்பதை அவர்கள் நம்பவில்லை......என்னெனில் புலிகள் தான் தமிழர்கள்.....தமிழர்கள் தான் புலிகள்....என்று கோத்தா வரைவிலக்கிணம். சொல்லிக் கொடுத்து உள்ளார் ஆகவே ஒரு தமிழன் இருத்தாலும......புலி இருக்கிறது என்று கருத இடமுள்ளது எனவே… கிழிக்கவேமாட்டார்கள். 🤣
    1 point
  30. நீங்களும் விடுறதாய் இல்லை. ரஸ்ஸியாவினால் உக்ரேனில் ஏற்படுத்தப்படும் அழிவும், ரஸ்ஸியாவுக்கு ஏற்பட்டுவரும் ஆள், தளபாட இழப்பும் பரம ரகசியமல்ல. இங்கே சிலர் அதனை பொய்யென்று நிறுவ தலைகீழாய் முயன்றாலும், அதுவே உண்மையென்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே நீங்கள் அவ்வளவாகச் சிரமப்படத் தேவையில்லையென்பதே எனது தாழ்மையான கருத்து!
    1 point
  31. ஜனநாயக மேற்குலக நாடுகளின் பக்கம் சேரவிரும்பும் உக்ரைனை ஆக்கிரமிக்க வெறிகொண்டு போர் செய்கின்ற ரஷ்யாவின் அநீதியோடு நீங்கள் சொல்கின்ற நாசிட்டுகளுக்கும் திருட்டு நேட்டோ நாடுகள் தான் எங்களுக்கு கல்வி, வேலைவாய்பு தந்து வாழ்கையில் நல்ல நிலைக்கு வர உதவியவை. இந்த நாடுகளில் இருந்து தான் இலங்கைக்கு உறவினர்கள் தெரிந்தவர்களுக்கு பணம் அனுப்பி உதவிகள் செய்ய முடிகின்றது. இலங்கையில் தமிழர்கள் ஒரளவுக்காவது பாதுகாப்பாக இருக்கவும் இந்த நாடுகளே தலையிடுகின்றன. ஆகவே நாம் நாசிட்டு திருட்டு நேட்டோ நாடுகளுக்காக தாளமும் போடுவோம் தேவாரமும் பாடுவோம். ஆனால் இந்த நாடுகளில் வளமான வாழ்க்கையை அனுபவிக்கும் இலங்கை தமிழர்கள் சிலர் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிற்கின்ற ரஷ்யாவுக்காக தேவாரம் பாடுவது தான் விளங்கவில்லை.
    1 point
  32. விடுதலைபுலிகளின் எந்த தாக்குதலையையும் எதிர்வு கூறாத இந்தியா இல்லாத புலிகள் தாக்க போகின்றார்கள் என்றால் அவர்களின் புலனாய்வை பாருங்களன்
    1 point
  33. முள்ளிவாய்க்கால்... நினைவேந்தல் நிகழ்வில், தமிழக பா.ஐ.க. தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள்... ஈகைச்சுடர் ஏற்றுகின்றார். நன்றி அண்ணாமலை இந்தியாவின்... எந்த பிரதான கட்சித் தலைவர்களுக்கும், வராத துணிவு.
    1 point
  34. முள்ளிவாய்க்கால்... நினைவு தினத்தன்று, தாக்குதலை நிகழ்த்த.. முன்னாள் போராளிகள் திட்டம். -இந்து நாளிதழ்.- பிராமண பத்திரிகைகளுக்கு... எப்போதும், தமிழனை சீண்டிக் கொண்டே இருக்க வேண்டும். 😡
    1 point
  35. டோனர் கெபாப்... இப்படித்தான் தயாரிக்கிறார்களா....
    1 point
  36. 1. ஓடுற எலி வாலை புடிச்சா "கிங்கு". தூங்குற புலி வாலை புடிச்சா "சங்கு". 2.மேல இருந்து கீழ விழுந்தா அது "அருவி". கீழே இருந்து மேலே போனா அது "குருவி". 3. மின்னலை பார்த்தா...கண்ணு போய்டும். பார்க்கலேன்னா...மின்னல் போய்டும். 4. ‘சிற்பி’ உளிய அடிச்சா அது "கலை". சிற்பியை உளியால அடிச்சா அது "கொலை". 5. இருமல் வந்தா இரும முடியும். ஆனால் காய்ச்சல் வந்தா காய்ச்ச முடியுமா? 6. டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனால் அது சினிமா தியேட்டர். உள்ள போயிட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர். 7. விஸ்கி குடிச்சா நாம நாலு பேருக்கு முன்னாடி ஆடலாம். அதுவே அதிகமா குடிச்சா நம்ம முன்னாடி நாலு பேரு ஆடுவாங்க. 8. நீங்க எவ்வளவுதான் பெரிய பருப்பா இருந்தாலும்... உங்களை வெச்சு சாம்பார் செய்ய முடியாது 9. டீ மாஸ்டர் எவ்வளவு தான் 'லைட்' டீ போட்டாலும் அதுல இருந்து கொஞ்சம் கூட வெளிச்சம் வராது. 10. எட்டு செகண்டுல 1140 பெயர் சொல்ல முடியுமா? நான் சொல்லுவேன்.. கண் 1000 100 ஜஹான் 10 டுல்கர் 9 தாரா 7 மலை 6 முகம் 5 சலி 3 ஷா கூட்டி கழிச்சு பாருங்க, கணக்கு சரியா வரும். 11. முட்டையிடாத பறவை? ஆண் பறவை! 12. கோழி ஏன் முட்டை போடுது? ஏன்னா அதுக்கு 1, 2, 3 போடத் தெரியாது. 13. ஊசி குத்தினா ஏன் ரத்தம் வருது? தன்னை குத்தினது யாருன்னு பார்க்க வருது . 14. என்னதான் ஊருக்கே கேக்குற மாதிரி நீங்க குறட்டை விட்டாலும் அதை உங்க காதால கேட்க முடியாது!
    1 point
  37. (மேற்கத்திய ஊடகமாம் Channel 4 ) வில் முள்ளிவாய்க்கால் அழிவுகள் பற்றி ஆதாரத்தோடு வெளியிட்டபோது 'கலம் மக்ரே' இன்னும் சில ஊடகவியலாளர்களை இப்படித்தான் இலங்கை அரசாங்கம் வெள்ளைப்புலிகள், பொய்யாக கோர்க்கப்பட்ட, சோடிக்கப்பட்ட செய்தி என்று பிரச்சாரம் செய்தது.. எனக்கு என்னவோ தெரியலை இதுவும் ஞாபகத்தில் வந்து தொலைக்குது.
    1 point
  38. கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்........! 😍
    1 point
  39. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    1 point
  40. பதமாக போளி செய்து சாப்பிடலாம்.......! 👍
    1 point
  41. படம் : சொர்க்கம் நரகம்(1977) இசை : சங்கர் - கணேஷ் வரிகள் : கண்ணதாசன் பாடியோர் : TMS & சுசீலா
    1 point
  42. படம் : வீட்டு மாப்பிள்ளை(1973) இசை :KV மகாதேவன் பாடியோர்: AM ராஜா & ஜிக்கி பழச நேசிக்குறவங்க SLBC ய வேணாம்னு சொல்ல மாட்டாங்க.👌
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.