Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      12

    • Posts

      76734


  2. valavan

    valavan

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      11

    • Posts

      1258


  3. பெருமாள்

    பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      14446


  4. சரவிபி ரோசிசந்திரா

    சரவிபி ரோசிசந்திரா

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      9

    • Posts

      41


Popular Content

Showing content with the highest reputation on 05/16/22 in all areas

  1. இந்த வருசம் மட்டும் ஆரியகுளம் பகுதியில் வெசாக் கூடு அமைக்கும் பணியினை யாழ்மக்களே ஒருதடவை மேற்கொள்ளலாம், தமது தேசம் முழுவதும் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதும் தமிழர்கள்மீதும் அவர்கள் பக்க நியாயங்கள்மீதும் ஏதோ கொஞ்சம் காரணங்கள் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்றும் காலிமுகதிடலில் கூடிய சிங்களர்கள் ஓரளவு அனுதாபத்துடன் பார்க்க தொடங்கியிருக்கிறார்கள். பிரபாகரன் செய்தது எல்லாம் ஒட்டுமொத்த தவறல்ல என்று உணரவும் தொடங்கியிருக்கிறார்கள். புலிகள் மே 18ல் தாக்குதல் நடத்த போகிறார்கள் என்று ஒரு செய்தி வந்தபோது, யாழ்பக்கம் போய் பாருங்கள் யாழ் இளைஞர்கள் எவ்வளவு கஷ்டபடுகிறார்கள், வேண்டுமென்றே புலி பூச்சாண்டி காட்டி எங்களை ஏமாற்றாதீர்கள் என்று சமூக வலைதளங்களீல் சிங்களவர்கள் சிரிப்பாகவும் சீரியசாகவும் பேச தொடங்கிவிட்டார்கள் என்று செய்தி ஊடகங்கள் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன. கீழே வரும் இந்த காணொலியில் 5:43 லிருந்து சிங்களவர்களின் கருத்துக்கள் பற்றி செய்தி விளக்குகிறது .... தமக்கு ஒரு பிரச்சனை வந்தால் தமிழர்மீது கரிசனை காட்டுவது ஒரு நடிப்பாக இருந்தால், எமக்கு கிடைக்கும் ஒரு சந்தர்ப்பத்தை நாம் உங்களுக்கு எதிர்கள் அல்ல என்று வெசாக் கூடுகளை தமிழர் பகுதியில் இந்த வருசம் மட்டும் தமிழர்களே கட்டி நடிக்கலாம் அதில் தப்பு எதுவுமே இல்லை. தமிழ்கட்சிகள்மீது என்றைக்கும் எம்மில் பலருக்கு உள்ளதுபோல் நம்பிக்கை இருந்ததில்லை ஆனாலும் அவர்கள் செய்த செயலில் ஒன்று மட்டும் ஈர்த்தது, தமிழகத்திலிருந்து உணவுபொருட்கள் இலங்கை தமிழருக்கு மட்டுமே அனுப்புவதாக இருந்தால் அது எமக்கு வேண்டாம் ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்காகவும் அனுப்புவதாயிருந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று சொன்னது வரலாற்று காய் நகர்த்தல். நாம் உங்களுக்கு எதிரிகள் இல்லை என்று பலதடவை நிரூபித்திருக்கிறோம், இன்று ஒருதுளி அளவாவது எமக்கு தமிழர்கள் எதிரி அல்ல, ஆட்சிட்யாளர்கள் மட்டுமே என்று அவர்கள் உணரும் சூழலில் இதுவரைகாலமும் எம்மை எதிரியாகவே பார்த்த அந்த பேரினத்தை அவமானபடுத்தவாவது வெசாக்கூட்டை தமிழர்கள் ஏற்றலாம் தப்பில்லை. இனம் என்ற ரீதியில் பல கொள்கைகள் கோட்பாடுகள் காய்நகர்த்தல்கள் இருந்தாலும், தனிமனிதன் என்ற ரீதியில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கும் அல்லவா, அந்த வகையில் எந்த கால கட்டத்திலும் இலங்கை தமிழரை சரிசமாக அரியணையேற்றவோ அணைத்து செல்லவோ சிங்கள சமூகம் அனுமதிக்காது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எப்போதுமே உண்டு. இன்று தமக்கு வலிக்குது என்றால் அவர்களுக்கும் அப்படித்தானே வலிச்சிருக்கும் என்று மெலிதாய் உணர்கிறார்கள், நாளை தமது பிரச்சனை தீர்ந்துவிட்டால் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று எகத்தாளமாக சிரிப்பார்கள், இதுவே எமது முப்பாட்டன் காலத்திலிருந்து சிங்கள தேசத்தில் உணர்ந்த பாடம். மற்றும்படி நாமும் ராஜதந்திர அரசியல் செய்வோம்.
    10 points
  2. எழுதியவை எல்லாம் கவிதையா? என எண்ணிய வேளையில் என்னிடம் பேசியது என் எழுதுகோல் உள்ளத்தில் உறையும் உணர்வை ஊற்றாய் உரைப்பது கவிதையா? நெஞ்சத்தில் நெருடும் நினைவுகளை நிரல்படக் கோர்ப்பது கவிதையா? வலிகளுக்கு அருமருந்தாய் மனதை வருடுவது கவிதையா? வரலாற்றின் பழம்பெரும் உண்மையை அழியாமல் வடிவமைப்பது கவிதையா? இயற்கையின் கொடையை இனிமையாய் இயம்புவது கவிதையா? காதலின் கவிரசத்தைக் காய்ச்சி பருகுவது கவிதையா? எது கவிதை? என்னுள் ஆயிரம் கேள்விகள் உதயம் கவிதை ஆயிரம் எழுதுபவர் பலராம் கவிதையாய் வாழ்பவர் வெகுசிலராம் விதையை விதைத்திடும் கவிதை விடைபெறா உலகின் நடைப்பாதை எது கவிதை? எழுதும் அனைத்தும் கவிதையல்ல இதை ஆராய்ந்து உணர்ந்தால் தவறுமல்ல காட்சியின் வழியே ஓவியம் பேசும் கவிதையின் வழியே மானுடம் பேசும் கற்பனைக் கவிதைக்கு அழகு என்றாலும் கற்பனையே கவிதை அல்லவே விழுமியம் தானே நம் பண்பாடு விழித்தெழுவோம் புத்துணர்வோடு கவிதையை ஆய்வோம் நடுநிலையோடு விமர்சனம் தானே வெற்றியின் வெளிப்பாடு சரவிபி ரோசிசந்திரா
    7 points
  3. என்னுடைய கருத்தையும் பதிவிடுகிறேன்: ஒட்டு மொத்தமாக "சிங்கள இனத்தவரை" நம்பி அவர்கள் மூலம் தமிழர் எமக்கு தேனும், பாலும் ஓடும்.. ஒழுகும் என்று எந்த ஒரு தமிழனும் எப்போதும் நினைக்கும் நிலையில் இல்லை. ஆனாலும் சில யதார்த்தங்களும் உண்டு. இன்றும் கூட சில மூத்த சிங்கள பத்திரிகையாளர்கள், சமூக செயட்பாட்டாளர்கள், மாணவர்கள் என்று பல தரப்பில் இருந்து தமிழர்களின் உரிமை பறிப்பு, அவர்களின் அழிவுகள் குறித்த ஆழமான பார்வையும், அதற்கான நீதிக்கான செயல்பாடுகளும் இன்றுவரை இருக்கத்தான் செய்கின்றன. இந்த மெல்போர்ன் நிகழ்ச்சிகூட எமக்கு ஒருவகையில் சாதகம் தான். இதன்மூலம் மீண்டும் பெரும்பாலான சிங்கள மக்களின் நிலைப்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய கருத்துக்கள், நியாயங்கள் பக்கம் பக்கமாக இங்கே எழுதுவதைவிட சொல்லப்பட வேண்டிய இடத்தில் சொல்லப்பட்டால் வெண்டும். மேலே உள்ள மெல்போர்ன் தொடர்பான செய்தியில் உள்ள பின்னூட்டங்களையும் பாருங்கள், அதில் கருத்திடும் சிங்களவர்கள் அந்த செயலை எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் பாருங்கள். என்னை பொறுத்தவரை இதுகூட தேவைதான். கடமையை செய்... பலனை எதிர்பாராதே.
    7 points
  4. இவ்வளவு காலம் பேசிப் பேசி என்னத்தை கண்டோம்.? தங்கள் தேவைக்கு மட்டும் தேடுவார்கள். பேசிப் பேசி கால நீடிப்பு த்தான். காகித ஒப்பந்தங்கள் மட்டுமே. பின் "பழைய குருடி கதவை திறடி " கதை தான். வீரமும் விவேகமும் துணிச்சலும் உள்ள ஒரு தலைவனை ..தேடுகிறோம்....
    6 points
  5. நான் இதைச் சொல்லவந்தேன், தாங்கள் ஏற்கனவே கூறிவிட்டீர்கள். இந்த நிகழ்ச்சிக்குச் சென்ற இளையோர் தமிழின உணர்வாளர்களே (22 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணே தலைவி; ஏதிலிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் ஆஸ். வாழ் தமிழ்ப்பெண்). அவர்களின் அமைப்பின் நிகராளி கோத்தா மாமாவிற்கு எதிரான போராட்டத்தில் தமிழர் சார்பில் பங்கெடுக்க அழைக்கப்பட்டதின் காரணமே அவர்கள் அங்கு சென்றனர். சென்று தமிழினப்படுகொலை பம்லெட்களை அப்போராட்டத்தில் வழங்கினர். இனவாதமும் வெடித்தது; சிங்கள பெரும்பான்மையின் இனவாத முகம் மீண்டொருமுறை சிரித்தது. --------------- சிங்களவர் எப்போதும் இந்த இனவாத மனநிலையில் தான் இருக்கின்றார்கள்; அது இடத்திற்கும் சூழ்நிலைக்கும் தக்காற்போல மாறும். அவர்கள் அதிலிருந்து ஒருபோதும் மீளப்போவதில்லை. துவிட்டரில் கருத்திட்டுள்ள சிங்களவர் (தமிழ் இனப்படுகொலையை ஓமென்ற ஐயா தவிர்த்து) அனைவரும் தங்கள் இனமோர் 'இனவாத இனம்' என்ற சிந்தனை மீண்டும் வெளிப்பட்டுள்ளது/ தெரியவந்துள்ளது என்ற அச்சத்தாலே அங்கு நொண்டிச்சாட்டுக்கள் கூறியுள்ளனரே ஒழிய இவர்களும் அவ்விடத்தில் இருந்திருந்தால் இதுதான் அவர்களின் கருத்தாகவும் இருந்திருக்கும் என்று உறுதியாக நம்பிக்கூறுகிறேன். அவர்கள் இதைக் கண்டித்ததின் காரணம், தற்சமயம் அவர்கட்கு தமிழனின் கை தேவைப்படுவதால்தான். இல்லையேல் இன்று தமிழ்கார்டியனை வசை பாடியிருப்பர்.
    5 points
  6. கொழும்பிலை தான்... சோத்துக்கும், பாணுக்கும் பஞ்சம். அதனால் தான் கொழும்பில்... தமிழருடன் முரண்படாமல் நிற்கிறார்கள். அவுஸ்திலேயாவில்... பஞ்சம் இல்லை. அதுதான்... சிங்களவனுக்கு, இனத் துவேஷம், கொப்பளித்துக் கொண்டு வருகின்றது. சிங்களவனின் புத்தி... நாய் வாலைப் போன்றது, அதை நிமிர்த்த சான்ஸே... இல்லை. 🐕
    5 points
  7. 1000 தடவை சொல்லியும் நம்மவர் சிலர் விட்டில் பூச்சி போல் சிங்களவனுக்கு முன்னாள் போய் அவனின் செருப்பை கிளீன் பண்ண லைனில் நிற்பது வழமையானது . என்று புத்த பிக்குகள் இனவாதம் கதைக்கும் போது கலைத்து கலைத்து அடிபோட வெளிக்கிடுகிறார்களோ அன்று ஓரளவுக்கு நம்பலாம் . அந்த குண்டன் சத்தமிட்டு கிழித்தபின் மற்றவர்கள் துண்டை வாங்காமல் அமைதியாகி நிக்கினம் இதுதான் சிங்களம் .
    5 points
  8. சிங்களவர்கள் தமக்குள் அடிபட்டுக் கொண்டாலும்.. தமிழனை எதிர்க்கனும் என்றால்.. வேற்றுமை மறந்து ஒன்றாகி விடுவார்கள். ஆனால்.. தமிழர்கள் அப்படியல்ல.. அதற்குள்ளும் கன்னை பிரிச்சு சிங்களவனுக்கு வக்காளத்து வாங்குபவர்கள் இருப்பார்கள். தமிழனை தமிழன் எதிர்ப்பவர்களும் இருப்பார்கள். அதனால் தான் 1.8 கோடி சிங்களவனுக்கு ஒரு நாடிருக்குது.. 9 கோடி தமிழனுக்கு ஒரு நாடில்லை.
    3 points
  9. ஆகாயத்தில் இருந்த நிலவு ஆடிப்பாட வந்ததாம் ஆடிப்பாடி முடித்தப் பின்னே அசந்து போனதாம் வீதியெல்லாம் புகைக்காற்று திணறி மேலே சென்றதாம் மேகமெல்லாம் அனல்காற்று தொப்பென்று கீழே விழுந்ததாம் மயக்கம் தெளிய நட்சத்திரம் தண்ணீர் கொண்டு வந்ததாம் மதி கொஞ்சம் மதி தெளிந்து விண்ணிற்கு சென்றதாம் புகை நமக்கு பகையென்று மறக்கின்றோம் தானே புகையிலையாலே தினந்தோறும் இறக்கின்றறோம் வீணே நற்பழக்கம் வேண்டும் உடல்நலம் பேணவே நம்பிக்கை பரிசளிக்கும் மகிழ்வுடன் வாழவே சரவிபி ரோசிசந்திரா
    2 points
  10. புரியவில்லையா .......இது வீட்டுக்குள்ளேயே வீட்டுக்காரர்களுடன் கண்னை பிரித்து கரம்போர்ட் விளையாடுவது போல.........! 🤔
    2 points
  11. இந்த முறை வெசாக் பந்தல் கட்ட இடம் கொடுத்தால் அடுத்த வருடம் ? பின்வரும் வருடங்கள் ? ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதையாகாதா ? எங்கள் அனுபவங்கள் அப்படி ! ☹️
    2 points
  12. இதுக்கெல்லாம் மச்சம் இருக்கோணும்,யோகம் பாவம் வேலை செய்யோணும்....முப்பத்தி முக்கோடி தேவர்களின்ரை பார்வை ஒரே பார்வையாக இருக்கோணும்...😂
    2 points
  13. சிங்கள இனவெறி - உண்மை நிலை ஆஸ்திரேலியா , மெல்போர்ன் நகரில் ராஜபக்சேக்களுக்கு எதிராக சிங்களவர் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள், முள்ளிவாய்க்கால் குறித்து கொடுத்த துண்டு பிரசுரமொன்றை, கிழித்து எறிந்தார் ஒரு இனவெறியன். அந்த ஒரு கணத்திலேயே, தமிழ், சிங்கள ஒற்றுமையும் கிழித்து வீசப்பட்டது. இதுதான் சிங்களம்.
    1 point
  14. https://www.facebook.com/photo/?fbid=10159991441351950&set=a.10151018148611950 இலங்கையை ஆள யார்வேண்டும்? அற்பனாய், குடும்பத்துள்ள அனைவரும்சேர நாட்டை விற்பனை செய்திடாத வீரனாயொருவன் வேண்டும் இனமுரண்பாடு தன்னை என்றுமே அணுகவொட்டா குணமுடையோனாய் கொள்கைக் குன்றென ஒருவன்வேண்டும் புத்தனின் மார்க்கம்தன்னைப் புனிதமாய்யேற்று அந்தச் சத்திய வழியிலேகும் தருமனாயொருவன் வேண்டும். இத்தனை தகுதியோடும் இலங்கையில் யாருமுண்டா? அத்தனைபேரும் சொத்தை, ஆளவே தகுதியில்லார். நல்லியல்பிழந்தோர் கெட்ட நடத்தையர் போலிவேசப் புல்லியர், பொய்யர்நாட்டின் புகழினைக் கெடுத்த தீயோர் இல்லையே ஒளியெமக்கென் றிருண்டதோர் காலம்கண்டு சொல்லிட மக்கள்தங்கள் சொகுசுக்காய் வாழ்ந்தகீழோர் வெறிபிடித்தலைந்த கூட்டம் வேற்றின மக்கள்தன்னை நெறிபிறழ்ந்துயிர் பறித்த நீசர்கள் சுயநலத்தர் அறிவிலாதுரக்க “அப்பே ஆண்டுவ” எனக்குரைத்த சொறியர்கள் இனபேதத்தால் தூய்மையைக் கெடுத்தகூட்டம் பேரினவாதரென்னும் பேயர்கள், பிடிவா தத்தால் ஓரினம் மட்டுமாள உரிமைகள் மற்றோர்க்கில்லாக் காரியம் பலவும் செய்து கல்வியை மறுத்துத்தீய போரினாலடக்கிப் புத்தன் புகழினைக் கெடுத்த கூட்டம் போனநற் பெயரையிந்தப் புவியினில் மீட்டாலன்றி ஆனநல்லுதவி சேர்ந்தும் ஆவது ஒன்றுமில்லை. ஈனர்;தம் குணத்தால்வேற்று இனத்தரை மதியாராகில் ஊனமுற் றிலங்கையிந்த உலகினில் தோற்றுப்போகும் ஆனதனாலே இந்த அவனியின் ஆசிவேண்டில் போனது போக இன்று பொருமிடும் மாற்றினத்தோர் தானினியுதவி யென்று தமிழரின் உரிமைபோற்றி மாநில ஆட்சிதன்னை வழங்கலே நன்மை சேர்க்கும்.
    1 point
  15. புரூஸ்லீ எனும் ஒப்பற்ற கலைஞனின் இறுதி பயண காணொலி பதிவு இது காப்புரிமை காரணமாக எப்போது வேண்டுமானாலும் இந்த இணைப்பு நீக்க படும் என்கிறார்கள்.. உண்மை பொய் தெரியாது அதுக்கு முதல்...பாக்காதவர்கள் மட்டும் பாத்துவிடலாமே... 6:54 ல் அவர் முகம் தெரிகிறது .
    1 point
  16. இங்கு சிங்களவர்களை குறை சொல்ல முடியாது, இது இயற்கை, பல ஆயிரமாண்டிற்கு முன்பு மனிதன் காடுக்ளில் திரிந்த போது கூட்டமாக தனது பாதுகாப்பினை கருதி வாழ்ந்துள்ளான், இந்த கூட்ட மனப்பான்மை அந்த கூட்டத்தின் முடிவெடுப்பவர்க்ளின் தவறுகளை கண்ணை மூடிக்கொண்டு தனது தவறாகவே நினைத்து நியாப்படுத்துகின்ற நிலைப்பாடுதான். காலம் மாறினாலும் மனிதனது கற்கால தற்காப்பு பொறிமுறை மாறாது, தானாகவே கற்காலம் போலவே செயல்படுகிறது. தமிழர்கள் எவ்வாறு தம்மை விட சிறுபான்மையாக உள்ள இனத்துடன் செயற்படுகிறார்கள்? முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் காத்தான் குடி படுகொலைகளை பற்றிய துண்டு பிரசுரம் வினியோகிப்பட்டால் எவ்வாறு தமிழர்கள் எதிர்வினையாற்றுவார்கள்? என்ற கேள்வியினை எமக்கு நாமே கேட்டுக்கொண்டால், இனவாதத்திற்கு எமக்கும், சிங்களவர்களுக்குமிடையே உள்ள இடைவெளி புரியும். இந்த கருத்து யாரையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டதல்ல, அவ்வாறு யாராவது புண்பட்டிருந்தால், மன்னிக்கவும். எமது பார்வையிலும் மாற்றம் வேண்டும். நாங்கள் தமிழர்கள் ஒரு முன் மாதிரியான இனமாக இருக்கவேண்டும்.
    1 point
  17. சிங்களவர் மனம் என்றும் மாறாது, தமிழர் காயம் என்றும் ஆறாது என்பதை இவர்களின் இனவெறியை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. சிங்களத்தின் கள்ள முகத்தை அங்கே கிழித்து காட்டியவர்களுக்கு எனது பாராட்டுக்கள். கூட்டம் கலைந்தபின் சென்று கொடுப்பதால் யாருக்கு என்ன தெரிந்துவிடப்போகிறது? இனிமேல் இவனின் முகத்தை காணும் யாவரும் இவனது இன வெறியை காண உதவியுள்ளது.
    1 point
  18. தேசியகீதம், தமிழில் பாடும் கிளுகிளுப்புகளால், தமிழர் எடுபடாமல் அமைதியாக இருந்ததுக்கு சான்று இந்த கண்ணாடியின் மனஓட்டம் தான். வயிற்றுப்பாட்டுக்கு வசதி இல்லை, பசி வந்தவுடன் தமிழர் மனிதராக கொழும்பில் தெரிந்த அதேவேளை, வசதி வந்தவுடன் சிங்களம் எப்படி நடக்கும் என்பதற்கு, மெல்போனில், வசதியாக வாழும் இந்த சிங்களவர் உதாரணமாக இருக்கிறார். சிங்களத்தை நம்ப ஒரு காரணமும் இல்லை.
    1 point
  19. மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில், ஆர்மேனியாவின் முன்னாள் அரசுத் தலைவரான ஆர்மென் சர்கிசியன் (Armen Sarkissian) அவர்கள் எட்டாவது முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை வழங்க இருக்கின்றார். பல்வேறு ஆளுமைகளை கொண்ட இவரது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையானது, மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளாகிய புதன்கிழமை, செவ்வாய்க்கிழமை New York 2:00 PM / UK : 7:00 PM / EU : 8:00 PM நேரத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சியிலும், Facebook: @mediatgte -- இதர உலகத்தமிழ் ஊடகங்கள் வழியாகவும் காணலாம். ஒவ்வொரு ஆண்டின் உலகின் முக்கிய பிரமுகர்களை அழைத்து முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இம்முறை எட்டாவது அரங்கினை தொட்டுநிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை வழங்கும் அரசியல் பிரமுகரான ஆர்மென் சர்கிசியன் அவர்கள், (2018-2022) காலப்பகுதியில் ஆர்மேனியாவின் 4வது அரசுத் தலைவராக இருந்துள்ளார். (1996-1997) காலப்பகுதியில் ஆர்மேனியாவின் பிரதமராகவும் பொறுப்பு வகித்த இவர், (1998-2018) காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்தில் நாட்டின் நீண்ட காலம் பணியாற்றிய தூதராகவும் இருந்துள்ளார். (1995-1996) காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆர்மேனியாவின் தலைவராக இருந்துள்ளதோடு, மேற்குலகில் தொடங்கிய முதல் ஆர்மேனிய தூதரகத்தினை லண்டனில் தொடங்கியவர் என்பதோடு, பெல்ஜியம, நெதர்லாந்து, லக்செம்பர்க் மற்றும் வற்றிக்கான் ஆகிய நாடுகளுக்கு ஆர்மேனியாவின் மூத்த தூதராக விளங்கியுள்ளார். Video: Sri Lanka’s Killing Fields: https://youtu.be/r3yPzyM0KMU
    1 point
  20. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செய்கின்ற, உருப்படியான வேலை இதுதான்.
    1 point
  21. நாதம் அதில் இருக்கும் "Read 132 replies" இணைப்பை சொடுக்க ட்விட்டர் கணக்கு இல்லாதவர்களும் அதில் பதிந்துள்ள பின்னூட்டங்களை வாசிக்கலாம்.
    1 point
  22. வீரமும் விவேகமும் துணிச்சலும் உள்ள ஒரு தலைவனை ..தேடுகிறோம்.... இப்ப விவேகம் மட்டும் இருந்தாலே போதும் அடுத்த கட்டத்துக்கு மிகச்சுலபமாக நகர்த்தமுடியும்?? ஆனால் இதற்குள் சுயநலம் வராமல் இருக்கணும்??? அது தான் மிக மிக குறைச்சல் இவர்களிடம்??
    1 point
  23. அப்பிடீன்னா பனங்கொட்டை தாட்டா எத்தன வாரத்தில கள்ளு குடிக்கலாம் சார்?
    1 point
  24. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    1 point
  25. ஓரளவுக்கு அனுதாபத்துடன் சிங்களவர்கள் பார்க்கிறார்களா சுத்த நடிப்பு அவர்கள் அக்கினி கீல நடவடிக்கையின்போது வாங்கிய அடியில் எப்படியெல்லம் நடித்தார்கள் .
    1 point
  26. வணக்கம்... சரவிபி ரோசிசந்திரா, 🙏 உங்களை அன்புடன்... யாழ்.களத்திற்கு வர வேற்கின்றோம். நல்ல...கவிதையுடன் களத்தில் அறிமுகமாகி உள்ளீர்கள், தொடர்ந்து எழுதுங்கள்.
    1 point
  27. கருணாநிதி போட்டிருந்த சால்வையும், சங்கி நிறம் தான்... இப்போ... அ.தி.மு.க. வை விட, தி.மு.க. தான்... பா.ஜ. க.வுக்கு, முரட்டு முட்டு... கொடுக்கிறது. நம்ம சிவாஜியர் மாட்டு மூத்திரம் குடிக்காதவரை.. அரசியல் செய்து பாக்கட்டும். 🤣
    1 point
  28. கொஞ்ச பொறுங்க ராணுவத்துக்கு கொஞ்ச நாளில் சம்பளம் கிடைக்குதா என்று பார்த்து சொல்லுங்க .
    1 point
  29. முன்னேறிய ராஜஸ்தான் லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது அந்த அணி. ஆட்டத்தில் முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அடுத்து லக்னௌ 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களே எட்டியது. முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராஜஸ்தானில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 41 ரன்கள் சோ்த்தாா். கேப்டன் சஞ்சு சாம்சன் 32, தேவ்தத் படிக்கல் 39 ரன்கள் அடிக்க, ஜோஸ் பட்லா் 2, ரியான் பராக் 19, ஜேம்ஸ் நீஷம் 14 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். ஓவா்கள் முடிவில் ரவிச்சந்திரன் அஸ்வின் 10, டிரென்ட் போல்ட் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்ௌ பௌலிங்கில் ரவி பிஷ்னோய் 2, அவேஷ் கான், ஜேசன் ஹோல்டா், ஆயுஷ் பதோனி ஆகியோா் தலா 1 விக்கெட் சரித்தனா். பின்னா் லக்னௌ இன்னிங்ஸில் தீபக் ஹூடா 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 59 ரன்கள் விளாசினாா். கிருணால் பாண்டியா 25, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 27 ரன்கள் சோ்க்க, டி காக் 7, கேப்டன் ராகுல் 10, ஆயுஷ் பதோனி 0, ஜேசன் ஹோல்டா் 1, துஷ்மந்தா சமீரா 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் மோசின் கான் 9, அவேஷ் கான் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் தரப்பில் டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஆபெட் மெக்காய் ஆகியோா் தலா 2, யுஜவேந்திர சஹல், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா். https://www.dinamani.com/sports/ipl/2022/may/16/முன்னேறிய-ராஜஸ்தான்-3845170.html
    1 point
  30. May 11, 1973. 49 ஆண்டுகள் கழிந்து 50 வது ஆண்டில் இப்போது.. காலத்தால் அழியா மிக சிறந்த பொழுது போக்கு சித்திரம். இது போல படங்கள் இனி எப்போதும் வரப் போவதில்லை. MSV பார்த்து பார்த்து இசையை இழைத்து செய்த அற்புத காவியம். எல்லா பாடகர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து பாட வைத்திருந்தார். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் எனும் படங்களில் இதுவும் ஒன்றாகும்.
    1 point
  31. காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா காசேதான் கடவுளப்பா
    1 point
  32. தரைக்கரும்புலிகளின் படிமங்கள் ~2003 'இவர்கள் பெண்கரும்புலிகள் ஆவர்'
    1 point
  33. 1 point
  34. சஹா அதிரடி: மீண்டும் சென்னையை வென்றது குஜராத் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் போட்டியின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ருதுராஜ் கான்வே இணை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் கான்வே 5 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி 17 பந்துகளில் 21 ரன்களை சேர்த்தார். சாய் கிஷோர் வீசிய பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய என். ஜெகதீசன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ருதுராஜ் அரை சதம் கடந்து 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜெகதீசன் அதிரடியாக ஆட மறுமுனையில் களமிறங்கிய ஷிவம் துபே (0), தோனி (7) ஆகியோர் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர். ஜெகதிசன் 33 பந்துகளில் 39 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்களை சேர்த்தது. குஜராத் இதனைத் தொடர்ந்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் விர்திமான் சஹா, ஷுப்மான் கில் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக ஆடிய கில், மதீஷா வீசிய பந்தில் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த மேத்தீவ் வாடே 15 பந்துகளில் 20 ரன்களைச் சேர்த்தார். எனினும் மொயின் அலி வீசிய பந்தில் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்த சஹா, அரை சதம் கடந்து ரன்களைக் குவித்தார். அவர் 57 பந்துகளில் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் 19.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை எடுத்து குஜராத் அணி வெற்றி பெற்றது. https://www.dinamani.com/sports/ipl/2022/may/15/chennai-super-kings-vs-gujarat-titans-won-by-7-wickets-3844959.html
    1 point
  35. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    1 point
  36. டோனர் கெபாப்... இப்படித்தான் தயாரிக்கிறார்களா....
    1 point
  37. இதுவரை அழிந்து போனது காணாது என்று இப்படியான கோமாளிகள் உசுப்பேத்தல்கள் இன்னும் வடகிழக்கு தமிழரின் நிலையை மோசமாக்கும் நாங்கள் அழியும்போது அமைதியாக மானாட மயிலாட போட்டு ரசித்த கூட்டங்களை முதலில் தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள் .
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.