Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      12

    • Posts

      76734


  2. Kavi arunasalam

    Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      1735


  3. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      43243


  4. valavan

    valavan

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      1258


Popular Content

Showing content with the highest reputation on 05/17/22 in all areas

  1. இலங்கையில் இன்று தமிழர் நாம் படும் அவஸ்த்தைக்கு நம் முன்னோர்களே காரணம் என்பேன். மலையகத் தமிழரை அன்று திருப்பி அனுப்புவதை நாம் எல்லோரும் சேர்ந்து எதிர்த்து இருந்தால் இன்று இலங்கை சனத்தொகையில் 40 வீதம் தமிழர் இருந்திருப்போம். ஒரு நாள் மலையகத் தமிழரை நாடற்றவர்கள் ஆக்கி கப்பலில் இந்தியாவுக்கு அனுப்பும் வீடியோ ஒன்று பார்த்தேன். ஒரு வயசு போன அம்மா தேம்பித் தேம்பி அழுறா.. அந்தக் கண்ணீர் வலிமிகுந்தது..தலைமுறை தாண்டியும் காவு வாங்கும் சக்தி கொண்டது. எத்தனை வீட்டு வேலை செய்த மலையக பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் அன்று இறந்து இருப்பார்கள்? இறந்த மகளின் உடலை வாங்க வர பணமில்லாமல் வாழ்ந்து செத்த பெற்றோரின் கண்ணீற்கு என்னை விடை? இது சம்பந்தமாக ஓரளவுக்கேனும் நாம் யோசிப்பதில்லை, மனம் கசப்பதும் இல்லை.இலகுவாக வேறு ஒருவர் தவறு என்று கடந்து போய் விடுகின்றோம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். காலம் எங்களுக்கு அதிகாரத்தையும் அந்தஸ்தையும் கொடுத்தபொழுது, அதை எங்கள் சமூகத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களை நசுக்க பயன்படுத்தினோமேயன்றி அவர்களை தூக்கி விட என்றும் நாங்கள் நினைத்ததில்லை. இவ்வளவத்தையும் செய்து விட்டு இப்பொழுது குத்துதே குடையுதே என்றால்..
    6 points
  2. நான் பார்க்கவில்லை. ஆனால், இப்ப, தமிழகத்தில், யூடூப்பில் பல அரைகுறை வித்துவான்கள் வந்து, தவில் வாசிக்கிற கொடுமையை காணலாம். 45 நிமிச இன்டெர்வியூவுக்கு, 1000 வாங்கிக்கொண்டு இவர்கள் பண்ணுகிற அலம்பறைக் கொடுமை தாங்க முடியாது.... அரசியலில் சவுக்கும்.... சினிமாவில் பயில்வான் ரங்கநாதனும் அடிக்கும் லூட்டி.... சும்மா கிறுக்குத்தனம்.. இன்னும் பலர், தாங்களே சேனல் தொடங்கி, அரைகுறை அறிவுடன், உலகத்தலைவர்களுக்கு அட்வைஸ் மழை வேறு பொழிவார்கள்.
    4 points
  3. கீதா குப்புசாமி: உருவமோ நிறமோ உங்களின் அடையாளம் அல்ல - தொழில் முனைவோராக உயர்ந்த 'உயர மாற்றுத் திறனாளி' ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, உயரம் குறைவுதான்; ஆனால் சாதிக்க அது ஒரு தடையல்ல பவானி தேவபுரத்தைச் சேர்ந்தவர் கீதா குப்புசாமி. உயரம் குறைவாக இருக்கும் 31 வயது மாற்றுத்திறனாளி. உயரம் குறைவாக இருப்பதால் சமூகத்தில் பல்வேறு கேலி, கிண்டல்களை சந்தித்த இவர் இன்று மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு வேலை கொடுக்கும் தொழில் முனைவோராக உயர்ந்திருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து... உங்களை பற்றி சொல்லுங்கள்? என் பெயர் கீதா குப்புசாமி. சொந்த ஊர் ஈரோடு. பி.காம் மற்றும் Diploma In (Co-op) படித்து முடித்திருக்கிறேன். அப்பா மார்க்கெட்டில் வியாபாரம் செய்பவர். அம்மா ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் சமையல் பணியில் உள்ளார். உடன் பிறந்தவர்கள் ஒரு தம்பி, ஒரு தங்கை. தம்பியும் என்னை போலவே உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி. தங்கைக்கு திருமணம் முடிந்து வேறு ஊரில் இருக்கிறார். நான் இப்போது ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூர் அமராவதி நகரில் அரசு இ சேவை மையம் நடத்தி வருவதுடன், புதிதாக கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை தொடங்கியிருக்கிறேன். உயரம் குறைவு என்பதால் சமூகத்தில் என்ன அழுத்தம் இருந்தது? சிறுவயதில் இருந்தே உயரம் குறைவு பிரச்னையால் பாதிக்கப்பட்டேன். 2 அடி உயரம் தான் இருக்கிறாய், உன்னால் என்ன செய்து விட முடியும் என்று நினைப்பார்கள். உயரம் குறைவு தான் என்றாலும் எனக்கு கனவுகள் பெரிதாக இருக்கின்றன. பல்வேறு சிரமங்களுக்கு இடையில் அரசு பள்ளியில் பள்ளிப்படிப்பும், தனியார் கல்லூரியில் கல்லூரி படிப்பையும் கஷ்டப்பட்டு முடித்தேன். படித்து முடித்த பிறகு வேலைக்கு செல்ல முடிவெடுத்தேன். நிறைய இடங்களில் உயரத்தை காட்டி வேலையை நிராகரித்தார்கள். பிறகு அம்மா வேலை பார்க்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலேயே கணக்காளர் பணியில் சேர்ந்தேன். உங்களின் பொருளாதாரம் குடும்பத்திற்கு எவ்வளவு உதவியாக இருக்கிறது? மிகவும் உதவியாக இருக்கிறது. எங்கள் 3 பேரையும் படிக்க வைக்க அப்பா மிகவும் சிரமப்பட்டார். நான் படித்து முடித்து வேலைக்கு சேர்ந்ததும் என்னுடைய வருமானம் என் குடும்பத்திற்கு பேருதவியாக இருந்தது. என் தங்கையின் திருமணத்தையும் என்னால் நடத்தி வைக்க முடிந்தது. "என் பெற்றோரே சூப்பர் ஹீரோக்கள்" - செரிப்ரல் பால்சியுடன் பாலிவுட்டில் ஜொலிக்கும் 'சூர்யா காசிபட்லா' ஸ்ரீகாந்த் பொல்லா: கண் பார்வை இழந்தாலும் ரூ. 480 கோடி மதிப்பு நிறுவனத்தின் சிஇஓ - யார் இவர்? உயரம் குறைந்திருந்தாலும் மன உறுதியால் கின்னஸில் இடம்பிடித்த இளைஞர் இப்போது தொழில்முனைவோராக இருக்கும் தருணம் எப்படி இருக்கிறது? மகிழ்ச்சியாக இருக்கிறது. தொழில்முனைவோர் ஆக வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நான் கனவு. தினமும் செல்லும் வேலையை விட்டு விட்டு முதலில் நான் அரசு இ சேவை மையத்தை நடத்த தொடங்கினேன். என்னை போன்று பல மாற்றுத்திறனாளிகள் வேலை இல்லாமல் சிரமப்படுவதை பார்த்தேன். பிறகு இப்போது தோழியுடன் இணைந்து சிறிய அளவில் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். இங்கு 5 பேர் வேலை பார்க்கிறார்கள். இவர்கள் 5 பேருமே மாற்றுத்திறனாளிகள் தான். ஏன் மாற்றுத் திறனாளிகளை மட்டும் வேலைக்கு தேர்வு செய்திருக்கிறீர்கள்? ஏனென்றால் நானும் மாற்றுத்திறனாளி தானே. என்னுடைய கடின சூழல்களை நான் தன்னந்தனியாவே கடந்து வந்திருக்கிறேன். சிறிய வயதில் என்னை வெளியே அனுப்பமாட்டார்கள். ஆனால் தொடர்ந்து போராடி வெளியே வந்திருக்கிறேன். இவர்களும் கஷ்டப்படக் கூடாது என்று வேலைக்கு தேர்வு செய்திருக்கிறேன். என்னிடம் வேலை பார்ப்பவர்களில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய், கால் சரியாக நடக்க வராமல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆகியோர் இருக்கிறார்கள். இந்த சமூகம் அவர்களிடத்தில் உள்ள குறையை பார்க்கிறது. நான் அவர்களின் திறமையை மட்டும் பார்க்கிறேன். உங்களுடைய கனவு என்ன ? என்னை போன்று ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுக்கும் தொழில்முனைவோராக உயர வேண்டும். மாற்றுத்திறனாளி நலனுக்கு பல்வேறு புதிய முயற்சிகளை எடுக்க வேண்டும். அது தான் என்னுடைய கனவு. இன்றைய தலைமுறைக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? உங்களுடைய உருவமோ நிறமோ உங்களின் அடையாளம் அல்ல.. திறமை மட்டுமே உங்களின் அடையாளம். உங்களுடைய கனவுகளை யாருக்கும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள். கனவுகளை வெல்ல ஒவ்வொரு நாளும் உங்களுடைய உழைப்பை கொடுங்கள். கேலிகளையும் கிண்டல்களையும் உங்களுக்கான உரமாக வைத்துக்கொண்டு முயற்சியும் பயிற்சியும் தொடர்ந்து மேற்கொண்டால் ஒரு நாள் நிச்சயம் உங்களுடைய கனவு நனவாகும். https://www.bbc.com/tamil/india-61434627
    3 points
  4. மகிந்த ஊத்தி கொடுத்த சாராயம் நல்லா வேலை செய்யுது போல் உள்ளது .
    3 points
  5. புரூஸ்லீ எனும் ஒப்பற்ற கலைஞனின் இறுதி பயண காணொலி பதிவு இது காப்புரிமை காரணமாக எப்போது வேண்டுமானாலும் இந்த இணைப்பு நீக்க படும் என்கிறார்கள்.. உண்மை பொய் தெரியாது அதுக்கு முதல்...பாக்காதவர்கள் மட்டும் பாத்துவிடலாமே... 6:54 ல் அவர் முகம் தெரிகிறது .
    3 points
  6. இங்கு சிங்களவர்களை குறை சொல்ல முடியாது, இது இயற்கை, பல ஆயிரமாண்டிற்கு முன்பு மனிதன் காடுக்ளில் திரிந்த போது கூட்டமாக தனது பாதுகாப்பினை கருதி வாழ்ந்துள்ளான், இந்த கூட்ட மனப்பான்மை அந்த கூட்டத்தின் முடிவெடுப்பவர்க்ளின் தவறுகளை கண்ணை மூடிக்கொண்டு தனது தவறாகவே நினைத்து நியாப்படுத்துகின்ற நிலைப்பாடுதான். காலம் மாறினாலும் மனிதனது கற்கால தற்காப்பு பொறிமுறை மாறாது, தானாகவே கற்காலம் போலவே செயல்படுகிறது. தமிழர்கள் எவ்வாறு தம்மை விட சிறுபான்மையாக உள்ள இனத்துடன் செயற்படுகிறார்கள்? முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் காத்தான் குடி படுகொலைகளை பற்றிய துண்டு பிரசுரம் வினியோகிப்பட்டால் எவ்வாறு தமிழர்கள் எதிர்வினையாற்றுவார்கள்? என்ற கேள்வியினை எமக்கு நாமே கேட்டுக்கொண்டால், இனவாதத்திற்கு எமக்கும், சிங்களவர்களுக்குமிடையே உள்ள இடைவெளி புரியும். இந்த கருத்து யாரையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டதல்ல, அவ்வாறு யாராவது புண்பட்டிருந்தால், மன்னிக்கவும். எமது பார்வையிலும் மாற்றம் வேண்டும். நாங்கள் தமிழர்கள் ஒரு முன் மாதிரியான இனமாக இருக்கவேண்டும்.
    3 points
  7. இந்த வருசம் மட்டும் ஆரியகுளம் பகுதியில் வெசாக் கூடு அமைக்கும் பணியினை யாழ்மக்களே ஒருதடவை மேற்கொள்ளலாம், தமது தேசம் முழுவதும் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதும் தமிழர்கள்மீதும் அவர்கள் பக்க நியாயங்கள்மீதும் ஏதோ கொஞ்சம் காரணங்கள் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்றும் காலிமுகதிடலில் கூடிய சிங்களர்கள் ஓரளவு அனுதாபத்துடன் பார்க்க தொடங்கியிருக்கிறார்கள். பிரபாகரன் செய்தது எல்லாம் ஒட்டுமொத்த தவறல்ல என்று உணரவும் தொடங்கியிருக்கிறார்கள். புலிகள் மே 18ல் தாக்குதல் நடத்த போகிறார்கள் என்று ஒரு செய்தி வந்தபோது, யாழ்பக்கம் போய் பாருங்கள் யாழ் இளைஞர்கள் எவ்வளவு கஷ்டபடுகிறார்கள், வேண்டுமென்றே புலி பூச்சாண்டி காட்டி எங்களை ஏமாற்றாதீர்கள் என்று சமூக வலைதளங்களீல் சிங்களவர்கள் சிரிப்பாகவும் சீரியசாகவும் பேச தொடங்கிவிட்டார்கள் என்று செய்தி ஊடகங்கள் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன. கீழே வரும் இந்த காணொலியில் 5:43 லிருந்து சிங்களவர்களின் கருத்துக்கள் பற்றி செய்தி விளக்குகிறது .... தமக்கு ஒரு பிரச்சனை வந்தால் தமிழர்மீது கரிசனை காட்டுவது ஒரு நடிப்பாக இருந்தால், எமக்கு கிடைக்கும் ஒரு சந்தர்ப்பத்தை நாம் உங்களுக்கு எதிர்கள் அல்ல என்று வெசாக் கூடுகளை தமிழர் பகுதியில் இந்த வருசம் மட்டும் தமிழர்களே கட்டி நடிக்கலாம் அதில் தப்பு எதுவுமே இல்லை. தமிழ்கட்சிகள்மீது என்றைக்கும் எம்மில் பலருக்கு உள்ளதுபோல் நம்பிக்கை இருந்ததில்லை ஆனாலும் அவர்கள் செய்த செயலில் ஒன்று மட்டும் ஈர்த்தது, தமிழகத்திலிருந்து உணவுபொருட்கள் இலங்கை தமிழருக்கு மட்டுமே அனுப்புவதாக இருந்தால் அது எமக்கு வேண்டாம் ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்காகவும் அனுப்புவதாயிருந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று சொன்னது வரலாற்று காய் நகர்த்தல். நாம் உங்களுக்கு எதிரிகள் இல்லை என்று பலதடவை நிரூபித்திருக்கிறோம், இன்று ஒருதுளி அளவாவது எமக்கு தமிழர்கள் எதிரி அல்ல, ஆட்சிட்யாளர்கள் மட்டுமே என்று அவர்கள் உணரும் சூழலில் இதுவரைகாலமும் எம்மை எதிரியாகவே பார்த்த அந்த பேரினத்தை அவமானபடுத்தவாவது வெசாக்கூட்டை தமிழர்கள் ஏற்றலாம் தப்பில்லை. இனம் என்ற ரீதியில் பல கொள்கைகள் கோட்பாடுகள் காய்நகர்த்தல்கள் இருந்தாலும், தனிமனிதன் என்ற ரீதியில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கும் அல்லவா, அந்த வகையில் எந்த கால கட்டத்திலும் இலங்கை தமிழரை சரிசமாக அரியணையேற்றவோ அணைத்து செல்லவோ சிங்கள சமூகம் அனுமதிக்காது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எப்போதுமே உண்டு. இன்று தமக்கு வலிக்குது என்றால் அவர்களுக்கும் அப்படித்தானே வலிச்சிருக்கும் என்று மெலிதாய் உணர்கிறார்கள், நாளை தமது பிரச்சனை தீர்ந்துவிட்டால் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று எகத்தாளமாக சிரிப்பார்கள், இதுவே எமது முப்பாட்டன் காலத்திலிருந்து சிங்கள தேசத்தில் உணர்ந்த பாடம். மற்றும்படி நாமும் ராஜதந்திர அரசியல் செய்வோம்.
    3 points
  8. மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள்- யேர்மனி Posted on May 16, 2022 by சமர்வீரன் 180 0 Video Player 00:14 மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள்- யேர்மனி – குறியீடு (kuriyeedu.com)
    2 points
  9. புதுக்குடியிருப்பை சென்றடைந்த தமிழினப்படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி ! முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி பவனி புதுக்குடியிருப்பு நகரை சென்றடைந்துள்ளது. முன்னதாக இன்று காலை கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமான ஊர்தி பரந்தன் முல்லைத்தீவு வீதி வழியாக சென்று புதுக்குடியிருப்பு நகரை அடைந்து அங்கிருந்து 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை உச்சம் பெற்ற புதுமாத்தளன் ,அம்பலவன் பொக்கணை , இரட்டைவாய்க்கால் சென்று அங்கிருந்து தற்போது கேப்பாபுலவு ஊடாக முள்ளியவளை சென்று முல்லைத்தீவு நகரை அடையவுள்ளது . https://www.virakesari.lk/article/127666
    2 points
  10. புதிய பிரதமர் முதலில்... லிஸ்ட்டிலை இல்லை. நீங்கள் நினைவு படுத்திய பின்... சேர்த்துக் கொண்டேன். 😂
    2 points
  11. விலங்குகளை அவமானப் படுத்தக் கூடாது......அவை கொள்ளையடிப்பதில்லை, ஊழல் புரிவதில்லை, தனது வாரிசுகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதில்லை.......உணவுகளை கண்டும் காணாமல் எடுத்து சென்றிருக்கலாம், ஆனால் அது களவு அல்ல.....! 😁
    2 points
  12. தமிழர் இனவாதம் கொண்டு யாரையும் அழிக்கவில்லை, தம்மை அழிக்க வந்தவர்களிடம் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்ததே ஒழிய தாமாக போய் யாரையும் தாக்கி அழித்து சம்பாதிக்கவில்லை, அடிமைப்படுத்தவும் இல்லை யானறிய.
    2 points
  13. சருகு ஆமையை கட்டிலில் படுக்க வைத்தாலும் அது சருகைத்தான் தேடிப்போகுமாம்.😁
    2 points
  14. தமிழர் எப்போதும் விட்டுக்கொடுத்தே ஒட்டாண்டியாகியிருக்கிறான். அவர்கள் நயமாகவும், பயமுறுத்தியும் பறித்துக்கொண்டே இருக்கிறார்கள். எமது மண்ணில் எம் மக்களை நினைவு கூர எமக்கு அனுமதி மறுப்பு ஆனால் எமது மண்ணில் இல்லாத ஒரு நிகழ்வை கொண்டாடும்படி திணிக்க ஆளுநனுக்கு என்ன உரிமை இருக்கிறது? இந்த மண்ணின் மக்களின் விடுதலைக்காக உழைத்தாரா? எதையும் இழந்தாரா? அல்லது தாக்கப்படாரா? இதே மண்ணில் கடந்த ஆண்டு மாவீரர் நாளை அனுசரிப்பதற்க்கு நீதிமன்றங்கள் தடை விதித்து, மக்களை போலீசார் விரட்டும் போது இங்கே தானே இருந்தார் இந்த ஆளுநன். ஏன் நிஞாயத்துக்காக, நல்லிணக்கத்துக்காக வாய் திறக்கவில்லை? எம்மை அழித்த இராணுவம் கட்டளையிட, அந்த கட்டளையின் தலைவனின் முகவர் இந்த ஆளுநன் எச்சரித்தால் நாங்கள் செய்வது பயமேயொழிய நல்லிணக்கமாகாது. தேவையில்லாமல் தனது வரம்பை மீறி மூக்கை நுழைப்பதை அனுமதிக்க முடியாது. நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்று இவரின் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். நாம் எமது உறவுகளின் அழிப்பை எண்ணி அழுது புலம்பிக்கொண்டிருக்கும்போது, இவர்களின் கேளிக்கையில் கலந்து கொள்ளும்படி வற்புறுத்துவது எந்த வகையில் நிஞாயம்? உண்மையில் சிங்கள மக்கள் எங்களை புரிந்து கொண்டிருந்தால் அவர்கள் வந்து எம்மை இந்த நேரத்தில் ஆறுதல் படுத்தியிருக்க வேண்டும். இருந்தாலும், அவர்களிடம் எமது கருத்தை எடுத்துச் செல்வோம், அவர்கள் எப்படி தங்கள் கருத்துக்களை பிரதி பலிக்கிறார்கள் என்பதை பொறுத்து அவர்களுடன் நல்லிணக்கம் செய்வோம். அதைவிட்டு இன்று இந்த எச்சரிக்கையை நல்லிணக்கம் என்று கருதுவோமானால் இந்த திணிப்பு நிரந்தர சட்டமாகும். சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அந்த மக்களால் துரத்தியடிக்கப்பட்டார்கள் ஆனால் அதன் முகவர் அதன் அதிகாரத் திமிரை எங்களிடம் காட்டுகிறது, இதுவும் அகற்றப்பட வேண்டும். நீதிமன்றங்கள் போனவருடம் எமக்கு தடை போட்டதுபோல் இவரின் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அன்றேல் இன்னும் நிக்கிறா அம்மணி அவரின் காதில் போட்டுவிட வேண்டும். தென்பகுதியின் எதிர்ப்பை இங்கு மாற்றி விட்டு குளிர் காயும் இழிபுத்தி. கள்ள புத்தமும் இலங்கையில் இருந்து கழுவப்படவேண்டும், உண்மையான தர்ம வழியான புத்தம் தழைக்க வேண்டும்.
    2 points
  15. நான் இதைச் சொல்லவந்தேன், தாங்கள் ஏற்கனவே கூறிவிட்டீர்கள். இந்த நிகழ்ச்சிக்குச் சென்ற இளையோர் தமிழின உணர்வாளர்களே (22 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணே தலைவி; ஏதிலிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் ஆஸ். வாழ் தமிழ்ப்பெண்). அவர்களின் அமைப்பின் நிகராளி கோத்தா மாமாவிற்கு எதிரான போராட்டத்தில் தமிழர் சார்பில் பங்கெடுக்க அழைக்கப்பட்டதின் காரணமே அவர்கள் அங்கு சென்றனர். சென்று தமிழினப்படுகொலை பம்லெட்களை அப்போராட்டத்தில் வழங்கினர். இனவாதமும் வெடித்தது; சிங்கள பெரும்பான்மையின் இனவாத முகம் மீண்டொருமுறை சிரித்தது. --------------- சிங்களவர் எப்போதும் இந்த இனவாத மனநிலையில் தான் இருக்கின்றார்கள்; அது இடத்திற்கும் சூழ்நிலைக்கும் தக்காற்போல மாறும். அவர்கள் அதிலிருந்து ஒருபோதும் மீளப்போவதில்லை. துவிட்டரில் கருத்திட்டுள்ள சிங்களவர் (தமிழ் இனப்படுகொலையை ஓமென்ற ஐயா தவிர்த்து) அனைவரும் தங்கள் இனமோர் 'இனவாத இனம்' என்ற சிந்தனை மீண்டும் வெளிப்பட்டுள்ளது/ தெரியவந்துள்ளது என்ற அச்சத்தாலே அங்கு நொண்டிச்சாட்டுக்கள் கூறியுள்ளனரே ஒழிய இவர்களும் அவ்விடத்தில் இருந்திருந்தால் இதுதான் அவர்களின் கருத்தாகவும் இருந்திருக்கும் என்று உறுதியாக நம்பிக்கூறுகிறேன். அவர்கள் இதைக் கண்டித்ததின் காரணம், தற்சமயம் அவர்கட்கு தமிழனின் கை தேவைப்படுவதால்தான். இல்லையேல் இன்று தமிழ்கார்டியனை வசை பாடியிருப்பர்.
    2 points
  16. என்னுடைய கருத்தையும் பதிவிடுகிறேன்: ஒட்டு மொத்தமாக "சிங்கள இனத்தவரை" நம்பி அவர்கள் மூலம் தமிழர் எமக்கு தேனும், பாலும் ஓடும்.. ஒழுகும் என்று எந்த ஒரு தமிழனும் எப்போதும் நினைக்கும் நிலையில் இல்லை. ஆனாலும் சில யதார்த்தங்களும் உண்டு. இன்றும் கூட சில மூத்த சிங்கள பத்திரிகையாளர்கள், சமூக செயட்பாட்டாளர்கள், மாணவர்கள் என்று பல தரப்பில் இருந்து தமிழர்களின் உரிமை பறிப்பு, அவர்களின் அழிவுகள் குறித்த ஆழமான பார்வையும், அதற்கான நீதிக்கான செயல்பாடுகளும் இன்றுவரை இருக்கத்தான் செய்கின்றன. இந்த மெல்போர்ன் நிகழ்ச்சிகூட எமக்கு ஒருவகையில் சாதகம் தான். இதன்மூலம் மீண்டும் பெரும்பாலான சிங்கள மக்களின் நிலைப்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய கருத்துக்கள், நியாயங்கள் பக்கம் பக்கமாக இங்கே எழுதுவதைவிட சொல்லப்பட வேண்டிய இடத்தில் சொல்லப்பட்டால் வெண்டும். மேலே உள்ள மெல்போர்ன் தொடர்பான செய்தியில் உள்ள பின்னூட்டங்களையும் பாருங்கள், அதில் கருத்திடும் சிங்களவர்கள் அந்த செயலை எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் பாருங்கள். என்னை பொறுத்தவரை இதுகூட தேவைதான். கடமையை செய்... பலனை எதிர்பாராதே.
    2 points
  17. இந்த முறை வெசாக் பந்தல் கட்ட இடம் கொடுத்தால் அடுத்த வருடம் ? பின்வரும் வருடங்கள் ? ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதையாகாதா ? எங்கள் அனுபவங்கள் அப்படி ! ☹️
    2 points
  18. ரஸ்ஸியாவும் அதன் ஆதரவு நாடுகளும் தமிழரிற்கு நல்ல விடிவொன்றை தருவினம்தானே … அப்படியென்றால் சரி… oh wait… அது யாருங்கோ சொரிலங்காவை ஐநாவில் பாதுகாப்பது என்று அறிஞ்சு சொல்லுவிங்களா?
    2 points
  19. யார் எதை சொல்வது என்ற விவஸ்தை இல்லாமலே போய் விட்டது. 🤣
    1 point
  20. சாகும் வரைக்கும் உந்த வேடத்திலையே நடிச்சு துலைச்சிருக்கலாம்...ஒரு இனம் மேம்பட்டிருக்கும். 😂
    1 point
  21. ஈழத்தமிழர் கேட்டது சம உரிமை. தன்னின சுதந்திரம். வேறொன்றுமில்லை.ஈழத்தமிழர்கள் இனக்கலவரம் செய்யவில்லை.தனித்தமிழ் என்றும் கூறவில்லை. சிங்கள மக்களுடன் சேர்ந்தே வாழ விரும்பினார்கள். பக்கா இனவாதம் என்றால் முஸ்லீம் மக்களிடம் மட்டுமே உள்ளது. அவர்களுக்கு என்ன பிரச்சனை என இதுவரைக்கும் நானறியவில்லை.
    1 point
  22. உண்மை நொச்சி... தமிழீழத்திற்குள் வசிப்பவர்களால்தான் முடியாது, வெளிநாட்டில் உள்ளவர்கள் சும்மாயேனும் ஏதேனும் கதைக்கக் கூடியவற்றை/தாம் அறிந்தவற்றை கதைக்கலாம். ஆனால் அவர்களோ வெளிநாடு சென்றவுடன்/அங்கு பிறந்தவுடன் எல்லாம் முடிந்துவிட்டது, நாம் ஓம்பலாக(safe) வாழ்கிறோம், அது காணும் என்ற நினைப்பில் வாழ்கிறார்கள். உயர் வயதுடையோர், தாந்தாம் அறிந்த தளங்களில் எம்வரலாற்றை முன்னெடுக்கவேண்டும். ஆனால் அவர்கள் எல்லாம் உறக்கத்தில், எழுப்புவதோ கடினம்! இளையோரில் பெரும்பாலானோர் வரலாறே தெரியாமல் வாழ்ந்துவரும் நிலையில் (ஒரு தலைமுறையே அவ்வாறு உருவாகிவிட்டது, அப்ப அவையின் அடுத்த தலைமுறை எப்படியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்), எமது மண்ணிற்கே சொந்தமில்லாத ஏன் அதன் வாசம்கூட அறியாதவங்கள் எமது வரலாற்றைத் திரித்து, அதில் எமக்கே அறிவுரை என்றபெயரில் வேறு பறையிறாங்கள், இரு இந்தியர்! தமிழீழத்தவர் எவ்வளவு இழிநிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பது கண்கூடு! நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலுக்கூட மிதிக்கும்! (சும்மா கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில்கூட இவற்றைச் செய்ய இயலாதா?) தாய்மண்ணை நாய் தின்றால்கூட நமக்கேது கவலை? இல்லை? நாம் தான் ஓம்பலாக வெளிநாடு வந்துவிட்டோமே? இனியென்ன தாய்மண்ணாவது நாய்மண்ணாவது! எவன் எக்கேடு கெட்டால் எமக்கேது கவலை?
    1 point
  23. தமிழினத்தின் சாபக்கேடா? அல்லது தமிழீழவர்கள் அரசறிவியல், குமுகாயவியல், ஊடகவியல் துறைசார்ந்து கால்பதிக்காதமையின் விளைவே இவை. அதனால் அந்தத் துறைகளில் உள்ள எமது மண்ணின் வாசத்தைக் கூட அறியாதவனெல்லாம் இப்படிப் பேசும் நிலை.
    1 point
  24. என்னங்க..... நானே, பின்னால வலியெடுக்க முட்டையிட்டு... நானே... முட்டையை அடையும் காத்து, குஞ்சும் பொரிக்க வேணுமா......!!!?? நீங்க, கொஞ்ச நேரம் இருங்க.......😂
    1 point
  25. நீங்கள் சிங்கமாயிருந்தாலும் நரியின் குகைக்குள் செல்லும் போது நரியின் உதவி தேவை, இது சாதாரண பாமரனுக்கே தெரிந்த விடயம். அவர் எந்த கொள்கை எடுத்தாரோ, தருணம் வரும்போது அந்த கொள்கையை வைத்தே நீங்களும் அடிக்கலாம், ஒற்றுமையாக இருந்தால்!
    1 point
  26. ஓடி விளையாடு பாப்பா ஓயாமல் படித்துவிடு பாப்பா கூடி விளையாடு பாப்பா குறைக்கூறலாகாது பாப்பா அகிலத்தில் உயர்ந்தது அன்பு அனைவருக்கும் வேண்டும் நற்பண்பு அன்னைக்கு இணையில்லை எதுவும் ஆசானுக்கு தெய்வமும் பணியும் பசிக்கு உணவிடல் தர்மம் பாவத்தால் தொடரும் கர்மம் பாதகத்தைக் களைத்திடு நீயும் பாருக்குள் செழித்திடும் நேயம் ஆதியில் இல்லையடி சாதி அறவாழ்விற்கு வேண்டுமடி நீதி மெய்க்கு துணையாகும் உயிரும் மெய்ஞானத்திற்கு துணயாகி உயரும் பஞ்சப்பூதத்தின் தனித்துவம் செந்தீ பாரதத்தின் அமரத்துவம் பாரதி பெண்ணுரிமைக்கு வித்திட்டான் மகாகவி பெண்கல்விக்கு அவனே இறைவி அறியாமை அகற்றிடு பாப்பா ஆக்கமாய் உழைத்திடு பாப்பா ஆணவம் நிலைக்காது பாப்பா ஆன்றோர்வாக்கு பொய்க்காது பாப்பா சரவிபி ரோசிசந்திரா
    1 point
  27. எந்த நிக்ழ்விலும் யாரும் துண்டு பிரசுரம் கொடுக்கலாம், அதில் தவ்றில்லை. கூற வந்த விடயம் என்னவென்றால் சிங்களவர்களைப்போலவே தமிழர்களுக்கும் இனவாதமுண்டு, இஸ்லாமியர்களிடமும் உண்டு. அனைவரும் தவறு செய்தவர்கள்தான், ஆனால் அனைவரும் தவறுகளை ஏற்றுகொள்ள முன்வருவதில்லை.
    1 point
  28. இலங்கை நெருக்கடியும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும்: மே 18-இல் தாக்குதல் நடத்தத் திட்டமா? - கள நிலவரம் என்ன? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி, பெரிய அளவிலான போராட்டங்கள் என இலங்கை ஒரு திசையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இறுதிப் போர் படுகொலைகளுக்கு பழிவாங்கும் விதமாக தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக வெளியான செய்தி வேறொரு பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. ஆனால் இந்தச் செய்திக்கு மையப்புள்ளியாகக் கருதப்படும் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகள் எவ்வித பரபரப்பும் இல்லாமல் அமைதியாகக் காணப்படுகின்றன. இங்கு இப்போது கஞ்சி வாரம் அனுசரிக்கப்படுகிறது. உப்பு, நீர், அரிசி ஆகியவற்றை மட்டும் கலந்து கொதிக்க வைத்த கஞ்சியை விநியோகிக்கும் நிகழ்வு முல்லைத்தீவைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக நடந்து கொண்டிருக்கிறது. இதை முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் என்கிறார்கள். கஞ்சி வாரத்தின் பின்னணி, இலங்கை இறுதி யுத்தத்தின் வலி மிகுந்த பல கதைகளைக் கொண்டிருப்பதை, இந்த நிகழ்வுகளில் பங்கேற்றோரிடம் பேசும்போது கேட்க முடிகிறது. உயர் பாதுகாப்பில் மஹிந்த ராஜபக்ஷ: என்ன நடக்கிறது திருகோணமலையில்? - கள நிலவரம் இலங்கை மக்கள் வீதிக்கு வந்து போராடுவது ஏன்? - முழுமையான விளக்கம் "சிங்கள, முஸ்லிம் மக்களை இப்போதுதான் புரிந்து கொள்கிறோம்" - இலங்கையில் ஒரு போராட்டக் குரல் "2009-ஆம் ஆண்டு இறுதி நாள்களில் மருந்துகள் இல்லை, மருத்துவர்கள் இல்லை, உணவுப் பொருள்கள் இல்லை. ஒரு வீட்டில் 100 கிராம் அரிசி கிடைத்தாலே அதை கஞ்சியாகக் காய்ச்சி 10 பேர் வரை குடிக்கும் நிலை இருந்தது. இந்த நிலையை மறக்கக்கூடாது என்பதற்காகத்தான் அதே போன்ற கஞ்சியைக் காய்ச்சி விநியோகிக்கும் இந்த நிகழ்வை தொடர்ந்து நடத்துகிறோம்," என்கிறார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தைச் சேர்ந்த மரியசுரேஷ் ஈஸ்வரி. முல்லைத் தீவுக்கு பிபிசி தமிழ் குழு சென்ற போது, முள்ளியவிளையில் கஞ்சி காய்ச்சி விநியோகிக்கும் நிகழ்வில் பங்கேற்றோரிடம் பேசியது. "போரில் எத்தனையோ பேர் உடல் உறுப்புகளை இழந்திருக்கிறார்கள். பலர் கடத்தப்பட்டு காணாமல் போய் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். காயப்பட்ட பலர் மருத்துவ வசதி இல்லாமல் ரத்தம் சிந்தித்தான் இறந்து போனார்கள். நாங்கள் காலில் விழுந்தோம். கையேந்திக் கும்பிட்டோம். ஆனால், யாரும் காப்பாற்றவில்லை," என்று போரின் கடைசி நாள்களை நினைவுகூர்ந்தார் ஈஸ்வரி. படக்குறிப்பு, ஈஸ்வரி "ஒரு பகுதி மக்கள் குண்டுகளால் இறந்து கொண்டிருந்தபோது, இன்னொரு புறம் மக்கள் பட்டினியால் இறந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதை அரசு தடுத்தது" என்கிறார், வட மாகாணத்தில் விவசாய அமைச்சராகப் பணியாற்றிய கந்தையா சிவநேசன். பொருளாதார நெருக்கடியிலும், அரசியல் குழப்பத்திலும் இலங்கை சிக்கியிருக்கும் நிலையில் இறுதிப் போர் படுகொலைகளின் நினைவேந்தல் நிகழ்வு மே 18-ஆம் தேதி அனுசரிக்கப்பட இருக்கிறது. இதற்கு முந்தைய ஒரு வாரத்துக்குத்தான் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்படுகிறது. கொழும்பில் நடப்பதைப் போன்ற அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஏதும் இங்கு இல்லை. கொழும்பிலும் பல்வேறு பிற நகரங்களிலும் நீண்ட வரிசையில் பெட்ரோலுக்காக வாகனங்கள் காத்திருப்பதைப் போன்ற காட்சியையும் இங்கு காண இயலவில்லை. அப்படியானால் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பெரிய பாதிப்பு இல்லையா என்ற கேள்வி எழக்கூடும். "முல்லைத் தீவு மாவட்டம் விவசாயத்தையும் மீன் பிடித்தலையும் நம்பியிருக்கிறது. உரம் இல்லாததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எரிபொருள் இல்லாமல் படகுகள் மீன்பிடிக்கச் செல்ல முடியவில்லை. ஆனால், இது வளமான மாவட்டம் என்பதால் வீடுகளிலேயே காய்கறிகள் போன்றவை விளைவிக்கப்படுகின்றன. அதனால் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் அதிகமாக உணரப்படவில்லை" என்கிறார், சிவநேசன். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, கந்தையா சிவநேசன் முள்ளியவிளையில் நடந்த நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கஞ்சி காய்ச்சி விநியோகித்தனர். வாகனங்கள், பேருந்துகளில் செல்வோர் என அனைவருக்கும் விநியோகிக்கப்படுகிறது. இத்தகைய கஞ்சி காய்ச்சி வழங்கும் நிகழ்வுக்கு காவல்துறையின் அனுமதி இல்லை. அதே நேரத்தில், இந்த நிகழ்வுகளை காவல்துறையினர் தடுப்பதும் இல்லை என்று இதை ஏற்பாடு செய்தவர்கள் கூறுகிறார்கள். முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலைச் சுற்றியுள்ள பல சாலைகளில் குறைந்தது 10 இடங்களில் ராணுவத்தின் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு வரும் வழியில் பல ராணுவ முகாம்களும், கூடவே சாலைத் தடுப்புகளும் காணப்படுகின்றன. பல இடங்களில் அடையாள அட்டையைக் காட்டிய பிறகே பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. முல்லைத் தீவில் இருந்து முள்ளிவாய்க்காலுக்குச் செல்லும் வழியில் இருக்கும் குறுகிய பாலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. வழக்கமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடக்கும் இடத்தில் ஒரு சிலரைத் தவிர, பெரிய கூட்டம் ஏதுமில்லை. ஆனால் சுற்றிலும் காவலர்களும் ராணுவ வீரர்களும் என சுமார் 50 பேர் வரை கண்காணிப்பில் இருக்கிறார்கள். படக்குறிப்பு, முள்ளிவாய்க்கால் நினைவிடம் "போரில் சொந்தங்களை இழந்த தெற்குப் பகுதி மக்களுக்கு அவர்களது உறவுகளை எந்தத் தடையும் இல்லாமல் நினைவுகூர முடிகிறது. அதேபோன்ற உரிமை எங்களுக்கும் வேண்டும்" என்கிறார் நிகழ்வில் பங்கேற்ற ஆறுமுகம் ஜோன்சன். https://www.bbc.com/tamil/sri-lanka-61468526
    1 point
  29. முள்ளி நினைவேந்தலில் காத்தான்குடி பிரசுரம் விநியோகிப்பது பற்றி எமது உண்மையான அபிப்பிராயங்கள் என்ன ?? சிந்தனையை தூண்டும் ஒரு பகுதி ...... பிரசுரம் தர வரும் போது முசுலிம் ஊர்காவலினர் அரங்கேற்றிய காட்டுமிராண்டித்ததனங்கள் பற்றிய விபரங்களையும் கூடவே கொண்டு வந்து விநியோகித்தால் , இரண்டு பிரசுரங்களையும் ஒன்றாகக் பெற்றுக்கொள்ளுதல் கொளகை அடிப்படையில் எனக்கு சம்மதமே ....
    1 point
  30. 70,80 களின் கனவு நாயகன் என்றால் புரூஸ்லி தான். கள்ள வீடியோ காலங்களில் காடு கரம்பைக்குள்ளும் புரூஸ்லியின் படங்கள் வெட்டி ஆடியது. Enter The Dragon.
    1 point
  31. "வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல" இப்பொது எல்லோருக்கும் " இவர்கள்" தேவைப்படுகிறார்கள்.
    1 point
  32. அங்கு அலைந்து திரிந்து அல்லல் பட்டு இங்கு வந்த எல்லோரிடமும் இதுபோன்ற ஒரு கதை மூளைக்குள் முட்டி மோதிக் கொண்டே இருக்கின்றது........! 😢 நன்றி கிருபன்......!
    1 point
  33. கொழும்பிலை தான்... சோத்துக்கும், பாணுக்கும் பஞ்சம். அதனால் தான் கொழும்பில்... தமிழருடன் முரண்படாமல் நிற்கிறார்கள். அவுஸ்திலேயாவில்... பஞ்சம் இல்லை. அதுதான்... சிங்களவனுக்கு, இனத் துவேஷம், கொப்பளித்துக் கொண்டு வருகின்றது. சிங்களவனின் புத்தி... நாய் வாலைப் போன்றது, அதை நிமிர்த்த சான்ஸே... இல்லை. 🐕
    1 point
  34. இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும். 1578 இல் தமிழில் முதலில் அச்சில் வந்த நூலான தம்பிரான் வணக்கம் எனும் கிறிஸ்தவ கோட்பாடுகள் பற்றிய (போத்துகேய மொழி) நூலும் கொல்லத்திலேயே வெளியிடப்பட்டது. போத்துகேய மொழியில் நூலின் தலைப்பு Doctrina Christam en Lingua Malauar Tamul முதலில், 1554 இல் Lisbon இல் தமிழ் அச்சில் வெளியிடப்பட்டது, அனால் அது ஐரோப்பிய அச்சு பதிப்பு 1577 / 78 இல், ,அதாவது அப்போதைய போத்துகேய இந்திய அச்சில், மலையாளத்த தமிழில் Goa பதிக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அனால் வெளியிடப்பட்டது கொல்லத்தில். இதுவே மிகவும் உரிய சான்று, அப்போதைய கேரளத்தில் இருந்த மொழி மலையாளத் தமிழ் (பேச்சு மொழி மலையாளம்மா) என்பதற்கு.
    1 point
  35. இந்தத் திரி உக்கிரேன் பற்றியது என்பதால் அதைப் பற்றி உரையாடுவதுதான் தேவையானது. மற்றைய விடயங்களை அந்த செய்திகளின் கீழே உரையாடுவதுதான் வழமை. ஆனாலும் ஆட்டுக்குள் மாட்டை விட வேண்டிய தேவை வருவதையும் புரிந்துகொள்ள முடிகின்றது. வாய்வாளர் அரூஸ் விடும் புரூஸ்களை வாசிக்க விரும்பின் இணைப்பைத் தரலாம்😃
    1 point
  36. கூர்ந்து கவனித்தால் மே 17க்கு முன்னரும் அடுத்து மாவீரர் தினத்திற்கு முன்னரும் இவ்வாறான அறிக்கைக்களை வெளியிடுவதை கொள்கையாக வைத்துள்ளனர்..சிரித்துவிட்டு செல்வதே சிறப்பு.😊 டிஸ்கி உண்மையில் கோட்டா-ரணில் புத்திசாலிகள் என்றால் உந்த அறிக்கையை சாட்டி "தீவிரவாத தடுப்பு நடவடிக்கை" ,"புலனாய்வு மேம்படுத்தல்" என்று தனி -தனியே ஒரு அமொன்ற் கிந்தியனிடம் கடன் அல்லாமல் இலவசமாக கறக்க வேண்டும்.👍 செய்வார்களா.👌ரெல் மீ..
    1 point
  37. முள்ளிவாய்க்கால்... நினைவு தினத்தன்று, தாக்குதலை நிகழ்த்த.. முன்னாள் போராளிகள் திட்டம். -இந்து நாளிதழ்.- பிராமண பத்திரிகைகளுக்கு... எப்போதும், தமிழனை சீண்டிக் கொண்டே இருக்க வேண்டும். 😡
    1 point
  38. டோனர் கெபாப்... இப்படித்தான் தயாரிக்கிறார்களா....
    1 point
  39. கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்........! 😍
    1 point
  40. என் பிள்ளையின் திருமணம் இப்போதெல்லாம் பிள்ளைகளை மணவறை வரை கொண்டு வருவதென்பது பெற்றோருக்கு மிகக் கடினமானதொரு செயலாகி வருகிறது. அந்த வகையில் எனது மூத்த மகனுக்கு அத்தருணம் கைகூடி வந்தவேளை.... எந்த நிலை வந்த போதும் பெற்றோர் கேட்டதை செய்து முடித்த பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றுவதை தவிர வேறேன்ன பேறு வேண்டும் எமக்கு. வருக மருமகளே வாழ்க மணமக்கள் வாழ்க வளமுடன் ❤️ இப்படி திரிந்தவர்... இப்ப .....
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.