Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      76585


  2. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      43059


  3. Nathamuni

    Nathamuni

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      13647


  4. goshan_che

    goshan_che

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      14517


Popular Content

Showing content with the highest reputation on 06/27/22 in all areas

  1. தன்னார்வமான பிள்ளைகளுக்கு கண்டிப்பாக கற்பிப்பது கடமை. ஆனால் எனது பிள்ளைகளுக்கு பாடசாலை பரீடசை, இதர வகுப்புகள் எல்லாம் இருக்கிறது என்று விதிவிலக்கு ஆனால் ஊரார் பிள்ளைகள் தமிழுக்கு முக்கியம் கொடுக்க வேண்டும், மற்றைய செயற்பாடுகளை போன்று தமிழுக்கும் நேரம் ஒதுக்கவேண்டும் என்று நிர்பந்திப்பது அல்லது பெற்றோரை கடிவது எப்படி சரியாகும். தமிழ் மேல் ஆர்வம், தமிழ் தொடர்பான செயற்பாடுகள், தமிழ் கற்பித்தல் மட்டுமே அல்ல. இதர தமிழார்வ செயற்பாடுகளில் ஈடுபடும் ஒரு பெற்றோரின் பிள்ளைகளுக்கு அந்த ஆர்வம் இல்லை என்றால் அதில் தவறேதும் இல்லை என்பது எனது கருத்து. கற்பிப்பது மட்டும் தான் சற்று இடிக்கும் விடையம். அதுவும் இங்கு வியாபாரமாக ஒரு பரீடசைக்கு 50-100 டாலர் வாங்கி சான்றிதழ் கொடுப்பதில் எப்படி தமிழ் வளர்கிறது என்பது எனக்கு புரியவில்லை. பிள்ளைகளுக்கு அர்த்தமே தெரியாத சொற்பிரயோகங்களை மனபபடமாக்கி ஒப்புவிப்பதற்கு 100$ எதற்கென்றே விருப்பமில்லாமல் எமக்காக கடமைக்கு போய் வந்த பிள்ளைகளை மேற்கொண்டு போக கட்டாயப்படுத்தாமல் விட்டுவிட்டோம். பல இடங்களில் (நிறுவங்கள்) தமிழ் கற்பிப்பது ஒரு பெரிய வியாபாரம்.
    2 points
  2. இந்த மாத ஆரம்பத்தில் இக்கருத்து எழுதப்படும்போது, இலங்கையிலுள்ள மக்களைப்போல இரணிலின் பிரதமர் பதிவியேற்பு தொடர்பான அதீத நம்பிக்கை எனக்கும் ஏற்பட்டிருந்தது என்பதற்கு சாட்சியான பதிவு . இப்போதுள்ள நிலமைகளை பார்க்கும் போது ஐ எம் எப் இலங்கைக்கு தாமதிக்காமல் உதவ முன்வர வேண்டும், ஏற்கனவே முதலீட்டாளர்கள் இலங்கை மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள் (இந்த மாதம் 22 ஆம் திகதி இலங்கை மீது வழக்கு தொடுத்துள்ளார்கள்). https://bondevalue.com/news/sri-lanka-to-default-on-dollar-bonds/#:~:text=Its %241bn 5.875% dollar,and resignations of government officials. இது தொடர்பாக இலங்கை வங்குரோத்தானால் என்ன ஆகும் என முன்பொரு திரியில் குறிப்பிட்டதாக நினைவில் உள்ளது, அதில் முதலீட்டாளர்கள் தமது கடனுக்காக சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் அதனை விட மோசம் நாடுகளிடம் வாங்கிய கடன். முதலாவது பிரச்சினை தொடங்கிவிட்டது (முதலீட்டாளர்கள்), சில உண்மையாக இலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகளான மத்திய கிழக்கு நாடுகள் முக்கியமாக ஜப்பான் கூட தற்போது இலங்கை இப்போது பெறும் கடனை திருப்ப செலுத்தாது என கணித்துள்ளமையால் இலங்கையிடமிருந்து சொத்துகளை பிணையாக கோரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. உலக நாடுகள் இலங்கை மீது நம்பிக்கை இழந்துவிட்ட நிலையினை இது காட்டுகிறது. பொதுவாக இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கே முண்டு கொடுக்கும் வல்லரசுகள், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிக்கிடையில் ஏற்படும் இந்த முதலீட்டாளர்களின் சட்ட சிக்கலை தமது செல்வாக்கின் அடிப்படையில் தீர்க்க வருவார்களா? அல்லது நிலமை மோசமாக மோசமாக இலங்கயினை இலகுவாக கட்டுப்படுத்தலாம் என விட்டு பிடிப்பார்களா? கடனை மீழ ஒழுங்குபடுத்தாவிட்டால் இலங்கையினால் நிகர பாதீட்டினை ஏற்படுத்த முடியாது, முதலீட்டாளர்களை இலங்கை எவ்வாறாயினும் தனது செல்வாக்கினை பயன்படுத்தி கட்டுப்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் ஐ எம் எப் உதவி வர மாதங்களாகும் என்றார்கள் இபோது வருடங்களாகும் என சொல்கிறார்கள். நிகர பாதீட்டினை ஏற்படுத்தாவிட்டால் ஐ எம் எப் கடன் கொடுக்காது என கருதுகிறேன் ஆனால் இலங்கை தற்காலிகமாக ஒரு நிகர பாதீட்டை ஐ எம் எப் இற்காக சமர்ப்பித்துவிட்டு கடன் கிடைத்த பின் பற்றாக்குறை பாதீட்டினை (அவசரகால) சமர்ப்பிக்கலாம் என கருதுகிறேன், எனது கருத்து தவறாக இருக்கலாம்.
    2 points
  3. நடிகர் M R ராதா சொன்னது நினைவுக்கு வருகிறது. 25 வருசமா பொய் பேசிய வக்கீல், நீதிபதி ஆகிய பின்னர், உண்மையை தேடுவார் என்று நம்ம முடியுமா என்ன? வக்கீல்கள், அவர்களது வாடிக்கையாளர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப வைக்க அதே சட்டம் அனுமதி அளிக்கும் வகையில் வேலை செய்கிறார்கள். அவ்வளவுதான். 🤗 *** விசயம் ஆசிரியர், கணக்கு சொல்லிக் கொடுத்தாரா இல்லையா என்பது தான். இல்லை என்றால்,என்ன செய்தார் என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். இங்க என்னப்பா, வக்கீல், என்ன செய்யிறார் எண்டு தாவியாச்சு எண்டு சொல்லுங்கோ... 😁
    2 points
  4. கோர்ட்டுக்கு தெரிந்தே பொய் சொல்ல கூடாது அல்லது கோர்ட்டை தவறாக வழிநடத்த கூடாது என்பதுதான் வக்கீல்களுக்கான அடிப்படை தொழில் சார் நிபந்தனை. (Duty to not lie to or mislead the courts). இதை ஒவ்வொரு சட்ட நடைமுறை கோவையும் (procedure rules) உம் வலியுறுதும். பார் கவுன்சில் போன்றைவையும் ethics code இல் வலியுறுத்தும். ஒருவர் மீது கொலை குற்றம் சாட்டபட்டுள்ளது என வைப்போம். அவரின் வக்கீல் அவரை நீ கொலை செய்தாயா இல்லையா என கேட்க மாட்டார். மாறாக நீ குற்றத்தை ஏற்கிறாயா இல்லையா? என்றே கேட்பார்கள். ஏற்கவில்லை என்றால் / ஏன் ஏற்கவில்லை? என்பதை அவர் சார்பாக வக்கீல் எடுத்துரைப்பார். இப்படி கதைக்கும் போது ஏதோ ஒரு சந்தர்பத்தில் நான் கொலை செய்தேன் - ஆனால் அப்படி இல்லை என வாயாடுங்கள் என குற்றவாளி கேட்டால் - அத்தோடு வக்கீல் வழக்கில் இருந்து விலக வேண்டும். இல்லை என்றால் - இது வெளியே வந்தால் - தொழில் உரிமம் இரத்தாகும். இது மிக சுருக்கமாக.
    2 points
  5. இங்கே அனேக தொழில்கள் தர்மத்தின் படி நடைபெறுகிறதா என்பது சந்தேகமே. வரி ஏய்ப்பு செய்வோர், வரிகள் தொடர்பான அறிவு/அனுபவம் இல்லாதவர்களை ஏய்க்கும் கணக்காளர்கள், கிட்னி களவெடுக்கும் வைத்தியர்கள், பாடசாலையில் ஒழுங்காக படிப்பு சொல்லிக்கொடுக்காமல் தனது தனியார் வகுப்பிற்கு வரச்சொல்லும் ஆசிரியர்கள், தொழிநுட்ப அறிவை வைத்து அப்பாவி மனிதர்களை ஏமாற்றும் IT வல்லுனர்கள், .. என எடுத்துக்காட்டுகள் அதிகம். ஆனால் வக்கீல்களின் நிலையை தனித்து குறை கூறுவது சரியென படவில்லை. வக்கீல்களும் அவர்களுடைய தொழில் தர்மத்திற்கு ஏற்ப கட்டுப்பட்டே தொழில் புரிகிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவருக்காக வாதடுவதை தவிர கோர்ட்டிற்கு வெளியே வந்து தனிப்பட்ட ரீதியில் அந்த நபரை ஆதரிக்கப் போவதில்லை. இன்னொரு வழக்கு வரும் பொழுது நிரபராதிக்காகவும் வாதாடுவார்கள். Legal Aid போன்ற வசதிகள் அனேக நாடுகளில் உள்ளது. அதில் பல சட்ட வல்லுனர்கள், அரசின் உத்தரவுப்படி வக்கீல் வசதி இல்லாத குற்றம் சாட்டப்பட்டவருக்காகவும் வாதாடுவார்கள், நிரபராதிக்காகவும் வாதாடுவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கே பிரச்சனை, இந்த மாதிரி சீர்கேடுகள் அதிகரித்து வருவதை எப்படி தடுப்பது என்பதே!. எமது கலாச்சாரத்தில் ஊறி இருக்கும் “மற்றவர்கள் என்ன சொல்வார்களே”எனப் பயந்து இந்த மாதிரி செயல்களை மறைப்பதையும், வெளியே கொண்டு வராமல் இருப்பதையும் குறைக்கவேண்டும். சரியான வழிகாட்டல்களை வழங்கவேண்டும். முக்கியமாக வீட்டிலிருந்தே மாற்றங்கள் வரவேண்டும்.
    2 points
  6. 01 ஆம் ஆண்டு நிறைவு விழா காகித விழா 02 ஆம் ஆண்டு நிறைவு விழா பருத்தி விழா 03 ஆம் ஆண்டு நிறைவு விழா தோல் விழா 04 ஆம் ஆண்டு நிறைவு விழா பூபாள விழா 05 ஆம் ஆண்டு நிறைவு விழா மர விழா 06 ஆம் ஆண்டு நிறைவு விழா சர்க்கரை கற்கண்டு / இரும்பு விழா 07 ஆம் ஆண்டு நிறைவு விழா கம்பளி / செம்பு விழா 08 ஆம் ஆண்டு நிறைவு விழா வெண்கல விழா 09 ஆம் ஆண்டு நிறைவு விழா மண்கலச விழா 10 ஆம் ஆண்டு நிறைவு விழா தகர விழா 11 ஆம் ஆண்டு நிறைவு விழா எஃகு விழா 12 ஆம் ஆண்டு நிறைவு விழா லினன் விழா 13 ஆம் ஆண்டு நிறைவு விழா பின்னல் விழா 14 ஆம் ஆண்டு நிறைவு விழா தந்த விழா 15 ஆம் ஆண்டு நிறைவு விழா படிக விழா 20 ஆம் ஆண்டு நிறைவு விழா பீங்கான் விழா 25 ஆம் ஆண்டு நிறைவு விழா வெள்ளி விழா 30 ஆம் ஆண்டு நிறைவு விழா முத்து விழா 40 ஆம் ஆண்டு நிறைவு விழா மாணிக்க விழா 50 ஆம் ஆண்டு நிறைவு விழா பொன் விழா 60 ஆம் ஆண்டு நிறைவு விழா வைர விழா / மணி விழா 75 ஆம் ஆண்டு நிறைவு விழா பவள விழா 100 ஆம் ஆண்டு நிறைவு விழா நூற்றாண்டு விழா
    1 point
  7. தமிழ் அரசியல் கைதிகளின் மரணங்கள்?? அவர்களின் வழக்குகள் தண்டனைகள் எத்தகையன?
    1 point
  8. உதுதானே இஞ்சை ஜேர்மனியிலை கார் மோட்டருக்குள்ளை உள்ளட்டு வயர்களை கடிச்சு நாசமறுக்கிறது? Marder.
    1 point
  9. ஆனால் பாருங்கோ….. தமிழ் நாட்டு “டாஸ்மார்க்” சரக்கு நம்பிக்கையானது. உடனை உயிர் போற அளவுக்கு, அவ்வளவு பாதகம் இல்லை. சத்து டானிக் மாதிரி…. உற்சாகம் தருமாம்.
    1 point
  10. அட இவரே ஆள்! எங்கடை ஊரிலை மரநாய் கோழியளை புடிச்சுக்கொண்டு போட்டுது எண்டுவினம். ஆனால் இதுவரைக்கும் மரநாயை கண்ணாலை கண்டதில்லை 😁
    1 point
  11. என்ன இருந்தாலும்... கடைசியில, புட்டினிட்டைத்தான் போக வேணும். 😂 அவர்தான்... உலகத்தின் நம்பிக்கை நட்சத்திரம். 🤣
    1 point
  12. நிச்சயமாக. இந்த துறையில் ஏனைய துறைகளை விட ஊழல் வாய்ப்புகள் அதிகம் என்பது உண்மையே. உதாரணமாக, புங்குடுயீவு மாணவி வழக்கில் சுவிஸ் குமாருக்கு ஆஜாரானதி தப்பேதும் இல்லை. ஆனால் பின்னர் சட்டத்துக்கு மாறாக தப்பவைக்க, சாட்சிகளை கலைக்க முயன்அயே தப்பு. ஆனால் வக்கீல் மட்டும் அன்றி ஏனைய துறைசார் பொலிஸ், நிர்வாக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கூட சம்பந்தமாயினர். வக்கீல்கள் சேவை செத்வோர் அல்ல. அதுவும் ஒரு தொழில். அவர்கள் நல்லவர்கள் என நான் வாதாடவில்லை. ஆனால் குற்றம்சாட்ட பட்டவஎஉக்கு ஆஜராவதே கூடாது என்பது ஏற்புடையது அல்ல.
    1 point
  13. அதற்கு மேலயும் ஆகலாம் நூணா சாத்தியமே இல்ல 4000கோடி ரூபா மீண்டும் அச்சிடப்பட்டதாக செய்தி சொல்லுது.
    1 point
  14. அபாயகரமான கட்டத்தை நோக்கிச் செல்கிறது இலங்கையின் பொருளாதாரம் புதிய மேலாளர்கள் போதுமான மனிதாபிமான உதவிகளை உருவாக்குவதற்கும் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும் தவறினால் , நாடு குழப்பமாகவும் அராஜகமாகவும் மாறும். மக்களின் சகிப்புத்தன்மைக்கும் எல்லை உண்டு. முல்லைத்தீவில் எரிபொருளைப் பெறுவதற்காகக் காத்திருக்கும் தமிழ்க் கூட்டத்தைக் கலைப்பதற்காக இராணுவத்தினர் வானத்தை நோக்கிச் சுட்டதை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெற்கில் பொலிஸார் பொறுப்பேற்கும் போது வடக்கில் இராணுவம் ஏன்? ஏன் இந்தப் பாகுபாடு? நெருக்கடியை தவறாக சித்திரித்து அதை ஓர் இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு திரைக்குப் பின்னால் ஏதாவது தீய மற்றும் கொடூரமான செயற்பாடுகள் உள்ளனவா? கலாநிதி அமீர் அலி எதிர்மறையான பொருளாதார வளர்ச்சி மற்றும் நுகர்வோருக்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான பற்றாக்குறையுடன், கண்டறிப்படாததும் அபாயகரமானதுமான பகுதிக்குள் இலங்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடி இப்போது மனிதாபிமான நெருக்கடியாக மாறியுள்ளது. விநியோகத் தட்டுப்பாடு தளர்த்தப்படாவிட்டால் மற்றும் நுகர்வோர் வரிசைகள் குறைக்கப்படாவிட்டால் நிலைமை விரைவில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான நெருக்கடியாக உருவாகலாம். இரண்டு மடங்கு பின்னடைவான விளைவுகளை நாடு எதிர்கொள்கிறது. உள்நாட்டில் சுயமாக ஏற்படுத்திக்கொள்ளும் பேரழிவு, தொழில் துறை பொருளாதாரங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பணவீக்க எதிர்ப்பு நடவடிக்கைகளால் எழும் பாதகமான சந்தை எதிர்வினையுடன் ஒத்துப்போகிறது. முதன்முதலில் பேரழிவைக் கொண்டு வந்த ஒரு பிரபலமற்ற ஆனால் எதேச்சதிகார ஜனாதிபதியான கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய ஒரு தேவைப்பாட்டை திருப்திப்படுத்தும் பிரதமரின் தலைமையில் மாற்றியமைக்கப்பட்ட மேலாளர்கள் குழுவுக்கு குறைந்தபட்சம் கூறுவது ஒரு கனவாக இருக்கும். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரின் பதவிக்காலம் குறித்த மோதல் வெளிப்படுவதால், இரு தலைவர்களுக்கிடையிலான தொழில் ரீதியான உறவுகள் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனில் நடந்த போரினால் ஏற்பட்ட பொருளாதார நடவடிக்கைகளில் விநியோக இடையூறுகளும் மந்த நிலையும் தொழில்மயமான உலகில் பணவீக்கத்தின் தீமை மற்றும் அதன் அவலட்ச ணமான தலையை உயர்த்த இடமளித்ததுடன் பணவீக்கத்துக்கு எதிரான போராட்டம் வட்டி வீதங்களை உயர்த்துவதற்கான வழக்கமான பாதையை எடுத்துள்ளது. 1994 க்குப் பிறகு முதல் முறையாக அமெரிக்கா அதை 0.75% உயர்த்தியது, அவு ஸ்திரேலியாவும் அதையே செய்தது, பிரிட்டன் 1.75% மாக உயர்த்தியது மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எதிர்வரும் நாட்களில் 50 அடிப்படைப் புள்ளிகள் உயரும் என்று யோசனை செய்து வருகிறது. இந்த அதிகரிப்புகள் பொருட்களின் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இலங்கை போன்ற இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்துக்கு இது இறக்குமதி பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு மற்றும் ரூபாவின் பெறுமதி மேலும் குறைவடைதல் வாழ்க்கைச் செலவை உச்சகட்டமாக அதிகரிக்கச் செய்யும் உணவு, எரிபொருள், மருந்து மற்றும் ஏனைய தேவைகளில் பற்றாக்குறையுடன் ஏற்கனவே உயிர் வாழப் போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு இது மிகவும் வேதனையான வாழ்க்கையை ஏற்படுத்தும். நல்ல நிலைக்கு வருவதற்கு முன் விட யங்கள் மோசமாகி விடும் என்ற ரணில் விக்கிரமசிங்கவின் எச்சரிக்கை ஒப்புவமையற்ற தீவிரத்தன்மையை உணரவைக்கப் போகிறது. கடன் மறுசீரமைப்புடன் கூடிய ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் சர்வதேச நாணய நிதிய ஸ்திரப்படுத்தல் பொதி மற்றும் அதன் விபரங்கள் இன்னும் தாமதமாகி உள்ளன. நடைமுறைக்கு வர ஒரு வருடம் இல்லையென்றால் குறைந்தது மாதங்களாவது ஆகும். அப்படியிருந்தும், குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் ஏழைகளுக்கு உடனடி நிவாரணத்துக்கான தாராளமான ஏற்பாடுகளுடன் அந்தப் பொதி வராத வரை, பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை வசதியாக இருக்காது. சர்வதேச நாணய நிதியத்தின் தீர்வு நீண்ட காலத்துக்கு சிறப்பாக செயற்படுகிறது மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் உடனடி பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது. சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்கள் செயற் பாட்டுக்கு வருவதற்கு முன் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து நிதி திரட்டுவது விரைவுபடுத்தப்பட வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கை மத்திய வங்கியின் தலைவரும் ஏற்கனவே நாணய நிதிய ஆலோசகர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சில நிதி மற்றும் பண நடவடிக்கைகளை அறிமுகப் படுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கைகள், பரும்படியாக்க பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கு அவசியமானவை என்றாலும், அவை நுகர்வோரின் பொருளாதார வலியை கணிசமாக அதிகரிக்கும். இந்தச் மறுசீரமைப்புகள் தற்போது குடும்பங்களை முடக்கும் விநியோகத் தட்டுப்பாட்டைக் குறைக்கப் போவதில்லை. எனவே, அடுத்த பன்னிரண்டு மாதங்களில், உலகில் எங்கிருந்தும் உணவு, எரிபொருள், மருந்து மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் மூலம் நாட்டுக்கு நேரடி மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது. குறிப்பிட்ட வட்டத்துக்கு வெளியே சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. அத்தகைய உதவி இல்லாவிட்டால், ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லற்கே கருத்துப்படி, இலங்கை “முழு நிலையில் மனிதாபிமான அவசரநிலை”யில் இருக்கும். பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் இது போன்ற மோசமான சூழ்நிலையை ஒருபோதும் எதிர்கொள்ளாத ஒரு தீவுக்கு எத்தகைய அதிர்ஷ்டங்கள் அல்லது துரதிர்ஷ்டங்கள் வருகின்றன . இந்தப் பேரிடருக்கு உடனடிக் காரணமான பொருளாதார மேலாளர்கள் இப்போதும் ஆட்சியில் இருப்பதுதான் வேடிக்கை. இதுவரை இந்தியாவும், குறைந்தளவில் சீனாவும் மட்டுமே கைகொடுக்க முன் வந்துள்ளன. உதவி செய்ய அவர்கள் தயாராக இருப்பதற்கான காரணம் பரோபகாரத்திலும் பார்க்க புவிசார் அரசியலின் எல்லை வீச்சுக்குள் விழுகிறது. ஜப்பானும் உதவுவதாக உறுதியளித்துள்ளது. அவசர கால உணவுத் திட்டத்துக்கு 50 மில்லியன் டொலர்களை வழங்க அவுஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. எவ்வாறாயினும், ஒரு சிலரைத் தவிர, மற்றவர்களிடமிருந்து உதவிகள் அவ்வளவு எளிதாகவும் தாராளமாகவும் கிடைக்காது. இது இலங்கையின் வெளியுறவுக் கொள்கை சரியான பாதையில் அமைக்கப்பட்டுள்ளதா என்று சிந்திக்க வைக்கிறது. எரிபொருள் நெருக்கடியானது பொருளாதாரத்தின் கிட்டத்தட்ட அனைத்து துறைகளின் இயல்பான செயல்பாட்டை சீர்குலைத்துள்ள நிலையில் ஒபெக் (அரபு பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு) நாடுகளுடன் இலங்கை தனது மிகவும் நட்புறவைப் பேணியிருந்தால் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்று ஒருவர் ஆச்சரியப்படுகிறார். சில காலங்களுக்கு முன்பு, ஜே.ஆர். ஜனாதிபதியாக இருந்த தருணத்தில் இதே போன்ற நெருக்கடி ஏற்பட்டபோது, அவர் உடனடியாக தனது வெளியுறவு அமைச்சர் ஹமீதை லிபியாவுக்கு அனுப்பினார், மேலும் கடாபி தனது விருந்தினரை வெறுங்கையுடன் திருப்பி அனுப்பவில்லை. ஜே.ஆருக்கு முன்னர், சிறிமாவோவின் இடதுசாரிக் கூட்டணி அரசாங்கத்தின் போது அந்நியச் செலாவணி நெருக்கடி ஏற்பட்டபோது, அவரது கல்வி அமைச்சர் மஹ்மூத் தான் மத்திய கிழக்கு நாடுகளுக்கு உதவியைப் பெற அனுப்பப்பட்டார். இது அந்த நெருக்கடியை தற்காலிகமாக குறைக்க உதவியது. இன்றும், இலங்கையின் மேலதிகமாக இருக்கும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவது மத்திய கிழக்கு நாடுகள் தான். அந்த உழைப்பில் இருந்து உழைத்து சம்பாதித்த டொலர்கள்தான் திறைசேரியின் கஜானாவை குறைந்த பட்சம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு நிரப்புகிறது. எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் இவ்வேளையில் புதிய பொருளாதார முகாமையாளர்கள் மத்திய கிழக்கிற்கான முஸ்லிம் பிரதிநிதிகள் குழுவைப் பற்றி ஏன் சிந்திக்கவில்லை? உண்மையைச் சொல்வதென்றால், தற்போதைய வெளிவிவகார அமைச்சர் உலகின் அந்தப் பகுதிக்கு அனுப்பப்படுவதற்கு சரியான ஆள் அல்ல, அவர் ஒரு முஸ்லிம் இல்லை என்பதற்காக அல்ல, மாறாக அவரின் உணர்திறன் இல்லாமை மற்றும் ஜி.ஆரின் தலைமைத்துவத்தின் கீழ் உள்ளூர் முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இணங்குவதால். முஸ்லிம் உலகத்துடன் சிறப்பாக இல்லை . 2020 இல் ஜெனிவாவில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்துக்கு முன்னதாக இலங்கைக்கு எதிரான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தீர்மானம் அரபு நாடுகளுடன் உறவு சீர் செய்யப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை எச்சரித்திருக்க வேண்டும். இது முஸ்லிம்கள் அல்லது இஸ்லாத்தின் குறுகிய நலன்களுக்காக கடந்த காலத்தை மீண்டும் எழுப்புவதற்காக அல்ல, மாறாக அவசர காலத்தில் அந்தப் பிராந்தியத்தின் கலாசார நுணுக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அரபு மத்திய கிழக்கு நாடுகளுடனான இலங்கையின் உறவுகளை மீளச் சிந்திப்பதற்கு எரிபொருள் நெருக்கடி ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. ஒரு பழைய தமிழ் பாடல் வரி உள்ளது: ஆடுகிற மாட்டை ஆடி கறக்கணும், பாடுகிற மாட்டை பாடிக் கறக்கணும்… அணிசேரா அமைப்பிலிருந்து ராஜபக்ஷ ஆட்சி விலகி இருப்பதும், இந்தியா, மேற்கு நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளின் இழப்பில் சீனாவின் பக்கம் சாய்வதும் தற்போது விலை உயர்ந்தது என்பது நிரூபணமாகியுள்ளது. இந்தியா நெருங்கி வருகிறது என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் அது மறைமுகமான நோக்கங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவை விஞ்ச சீனாவும் தொடர்ந்து உதவி செய்யும். ஆயினும்கூட, இலங்கையின் வெளியுறவுக் கொள்கை ஆட்சிக்கு புதிய ஏற்பாடு தேவை. குறிப்பாக கடந்த மூன்று வருடங்களில் அரபு-இலங்கை உறவுகளில் கணிசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு தீவிரமான பரிகாரம் தேவை. அதற்கு அவர்கள் பணியமர்த்தப்பட்ட பகுதியின் மொழியில் சரளமாகத் தெரிந்திருக்கக்கூடிய உயர் தகுதி வாய்ந்த மற்றும் தொழில் முறை இராஜதந்திரிகளின் குழு தேவைப்படுகிறது. நாட்டில் தற்போது ஆங்கிலம் தவிர எத்தனை வெளிநாட்டு மொழி பேசும் தூதர்கள் உள்ளனர்? முழு வெளியுறவுக் கொள்கைத் துறையிலும் ஒரு மறுசீரமைப்பு தேவை. அரசியலையோ, சித்தாந்தத்தையோ பொருளாதாரத்துடன் கலப்பதற்கான நேரம் இதுவல்ல. உடனடியாக, மக்கள் மற்றும் குறிப்பாக பிள்ளைகளின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளது. யுனிசெப் பேச்சாளரின் கூற்றுப்படி, தெற்காசியாவிலேயே பிள்ளைகள் ஊட்டச்சத்தின்மையில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தச் சிறுவர்கள் நாட்டின் எதிர்கால சொத்து. புதிய மேலாளர்கள் போதுமான மனிதாபிமான உதவிகளை உருவாக்குவதற்கும் , பற்றாக்குறையைக் குறைப்பதற்கும் தவறினால் , நாடு குழப்பமாகவும் அராஜகமாகவும் மாறும். மக்களின் சகிப்புத்தன்மைக்கும் எல்லை உண்டு. முல்லைத்தீவில் எரிபொருளைப் பெறுவதற்காகக் காத்திருக்கும் தமிழ்க் கூட்டத்தைக் கலைப்பதற்காக இராணுவத்தினர் வானத்தை நோக்கிச் சுட்டதை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெற்கில் பொலிஸார் பொறுப்பேற்கும் போது வடக்கில் இராணுவம் ஏன்? ஏன் இந்தப் பாகுபாடு? நெருக்கடியை தவறாக சித்திரித்து அதை ஓர் இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு திரைக்குப் பின்னால் ஏதாவது தீய மற்றும் கொடூரமான செயற்பாடுகள் உள்ளனவா? சில காலத்துக்கு முன்னர், நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.செயலாள ர் நாயகத்தை சந்தித்தபோது , புலம்பெயர்ந்த தமிழ் உறுப்பினர்களை சந்தித்து தமிழர் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதாக ஜி.ஆர். உறுதியளித்தார். அது நடக்கவே இல்லை. அண்மையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாட்டுக்கு எந்த ஒரு பயனாளியிடமிருந்தும் உதவி தேவைப்படும் வேளையில், புலம்பெயர் தமிழர்களிடம் பொருளாதார அல்லது நிதி உதவியைப் பெற இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை என்று தனது ஏமாற்றத்தை சுவிட்சர்லாந்திலிருந்து வெளிப்படுத்தியிருந்தார் . ஆட்சியாளர்கள் தரப்பில் ஏன் இந்தக் குறுகிய மனப்பான்மை? இலங்கை வங்கியின் 14ஆவது ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு குழுநிலை கலந்துரையாடலில் , தற்போதைய பேரழிவின் தோற்றத்தை சுருக்கமாகக் கூறிய துடன்,சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பு சீர்திருத்தங்களின் வெற்றியில் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். அரசாங்கங்களால் உருவாக்கப்பட்ட அதிகப்படியான தேவை திறைசேரியின் கஜானாவுக்கு வடிகாலை ஏற்படுத்தியது என்ற கசப்பான உண்மையை அவர் சுட்டிக்காட்டினார். பொருளாதார மேம்பாடு என்ற பெயரில் வெள்ளை யானைகளை உருவாக்கி பராமரிக்கும் திட்டங்களால் அந்தக் கோரிக்கை உருவாக்கப்பட்டது – ஆளுநர் இராஜதந்திர ரீதியில் குறிப்பிடுவதைத் தவிர்த்தார். ராஜபக்ஷ ஆட்சி இந்த வீண் விரயத்துக்கு பெயர் போனது. இப்போதும் கூட, பட்ஜெட் செலவின சம்பளத்தில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை உட்கொள்ளும் 300,000 இராணுவத்தை பராமரிப்பதில் என்ன பயன்? இந்தத் தேவையற்ற ஊதாரித்தனத்துக்கு மக்கள் தங்கள் குறைந்தபட்ச வசதியைப் புறக்கணிப்பதன் மூலம் விலை செலுத்து கிறார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மூழ்கும் கப்பலை நிலைநிறுத்துவதற்கு காலத்தை எடுக்கும். உடனடி கவலை என்னவென்றால், குடும்பங்களின் அன்றாடத் துன்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அதனால்தான் வழமைக்கு மாறாக சிந்திக்க வேண்டும். கொழும்பு டெலிகிராப் https://thinakkural.lk/article/186398
    1 point
  15. ஒரு ராசாவுக்கு மனைவி மேலே சந்தேகம்... இருந்தாலும், போர்க்களம் போகவேண்டும். பக்கத்து நாட்டு மன்னன் படையெடுத்து வந்துவிட்டான், என்ன செய்வது. யோசித்தான் மன்னன்... அரண்மனையில் வயதானவர்... முன்னாள் மந்திரி... அவரை அழைத்தார் மன்னன்... அந்தப்புரம் சாவியை கொடுத்தார்.... உள்ளே அரசியார் இருக்கிறார்.... தேவையான பொருட்கள் எல்லாம் இருக்கின்றன.... அவசியம் என்றால் மட்டுமே திறக்க வேண்டும். கவனம் இருக்கட்டும். நான் போர்க்களம் போய் வருகிறேன். கிளம்பி விட்டான் மன்னன்.... 'வெற்றி வேல், வீர வேல்' என்று கத்தியபடி படையுடன் கிளம்பிவிட்டான். ஒரு காத தூரம் கூட போயிருக்க மாட்டார்கள். தூரத்தில், புழுதி கிளப்பிக்கொண்டு குதிரை ஒன்று வருகிறது. வந்தவர் வயதான அமைச்சர். மேல் முச்சு, கீழ் மூச்சு வாங்க கத்தினார்..... மன்னா.... 'பிழையான சாவியை கொடுத்து விட்டு, நீ பாட்டுக்கு கிளம்பி வந்து விட்டாயே'.... 😡 🤬
    1 point
  16. எங்கை கடற்கரைக்கு போனனிங்களோ.கொடுத்து வைத்தவரயா நீங்கள்.😆
    1 point
  17. 1 point
  18. கோத்தா பதவிக்கு வந்தபின்னர், தூக்குத்தண்டனைக்கு காத்திருந்த பலர் ஜனாதிபதி மன்னிப்பினை பெற்று தூக்கில் இருந்து தப்பியது மட்டுமல்ல, சிறைக்கு வெளியேயும் வந்தனர். 7 வயது சிறுமி உள்பட 8 பேரை கழுத்தினை ஆடு அறுப்பது போல சீவி கொலை செய்த, சார்ஜெண்ட் ரத்னாயக்கா வெளியே வந்து, தனது 9 வயது மகளை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தார். அதுபோல வெளியே வந்த இன்னும் ஒருவரான துமிந்த சில்வா, அமைதியாக போக விடாமல், தனது மமதையினை காட்டும் கோத்தாவின் முட்டாள் தனத்தினால், வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார். நீதித்துறைக்கு, நடுவிரல், தூக்கி காட்டும் ஒரு அபத்தமாகவே தெரிந்தது அந்த நியமனம். மேலும், அரசசேவையில் உள்ள பலருக்கும் அது ஒரு கரப்பான் பூச்சி, படுக்கை அறைக்குள் நுழைந்தது போன்ற ஒரு உணர்வையும் கொடுத்திருந்தது. இந்நிலையில், மரண தண்டனை பெற்று, சிறையில் இருந்தவாறே எம்பியாக ஜெயித்திருந்த, இன்னும் ஒருவரோ, மேன்முறையீடு செய்த போது, சட்ட மா அதிபர் அலுவலகம், வழக்கினை வேண்டுமென்றே சொதப்ப, அவரும் நீதி மன்றால் விடுவிக்கப்பட்டார். துமிந்த மன்னிப்பு, தொடர்பில், கோத்தா முறையான வழிமுறைகளை பின்பற்றி இருக்க வில்லை என்ற ரீதியில் உச்ச நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில், அவரது மன்னிப்பு ரத்து செய்யப்பட்டு, அவர் மீண்டும் சிறை சென்றுள்ளார். இலங்கையில் வழக்கம் போன்றே, சிறை செல்லும் நிலை வந்தால், அரசியல் வாதிகளுக்கு, திடீர் சுகயீனம் வந்துவிடும். அவ்வகையில், துமிந்த, ஸ்ரீ ஜெயவர்தனபுர ஆஸ்பத்திரியில் படுத்து விட்டார். இதனிடையே, மைத்திரி வழங்கிய இரு மன்னிப்பு தொடர்பில் இப்போது சர்ச்சை எழுந்துள்ளது. ஒன்று ஞான சார தேரர். அடுத்தவர், ஒரு பெரும் பணக்கார குடும்ப வாரிசு. இவர் சிறையில் இருக்கும் போதே, உயர் கல்வி படித்து, மாஸ்டர் டிகிரி எடுத்து இருந்தார். தனது பெண் நண்பியை மாடியில் இருந்து தள்ளி விழுத்தி, கொலைக்கு காரணமாக இருந்தார் என்று மரண தண்டனை விதிக்கப்பட்டவர். இவரது மன்னிப்பு தொடர்பில், தம்மை வந்து எம்பி இரத்தின தேரர் சந்தித்தார் என்றும், முதலில் அதனை பொருட்படுத்தவில்லை என்றாலும், பின்னர் அவரது தாய், தந்தையுடன் வந்து சந்தித்த போதே, தான் அது குறித்து, கவனிக்க முடிவு செய்ததாகவும் மைத்திரி சொல்கிறார். அதே மைத்திரி, இரத்தின தேரர், பல கோடிக்கணக்கான பணத்தினை, அந்த தாய், தந்தையிடம் வாங்கித்தான் தன்னிடம் அழைத்து வந்தார் என்று, இப்பொது தெரிந்து கொண்டுள்ளதாக, டிவி நிகழ்வு ஒன்றில் கூறி உள்ளார். ஆனால், இரத்தின தேரர் சும்மா இருப்பாரோ? தாய், தந்தையினரை சந்தித்த பின்னர் தான் அவர்கள், மைத்திரியின் தூரத்து உறவினர் என்பதை, மைத்திரி தெரிந்து கொண்டார் என்றும் அதனாலேயே, அவர் மன்னிக்கும் முடிவை எடுத்திருப்பார் என்று தான் நம்புவதாகவும் சொல்லி விட்டார். ஆக... காசுக்கு.... மன்னிப்பு விலைப்பட்டிருக்கிறது என்பது நியம் தான். துமிந்த ஒரு தூள் வியாபாரி. அந்த வகையில், கோத்தாவுக்கு பல பண உதவிகளை, ஆரம்பத்தில் செய்திருந்ததால், ஆரம்பத்தில், அவர் மேலே நடவடிக்கை இருக்கவில்லை. ஹிருணிக்காவின் அயராத, உயிருக்கு பயம் இருந்த நிலையில் செய்த முயல்வுகளால் அவருக்கு தண்டனை கிடைத்த பின்னர், கோத்தர் ஜனாதிபதி ஆகி மன்னிப்பு வழங்கி இருந்தார். ஆனாலும், தண்டனை விதித்த நீதிபதியின் கருத்து, சிறைத்துறையின் கருத்து கேட்டு தான் மன்னிப்பு கொடுக்க வேண்டும் என்பது சட்டம். அட, ஒரு போன் கோலில் அது ஒழுங்கா வந்திருக்கும். அதெல்லாம் தேவையில்லை என்று, கோத்தா மமதையில் நினைத்தது, இன்று ஆப்பாக வந்துள்ளது. இன்று உள்ள நாட்டு நிலையில், கோத்தா மீண்டும் அதில் கவனம் செலுத்தும் நிலை இல்லை என்பதால், வீடமைப்பு அதிகார சபை தலைவர்.... இனி உள்ள தான். source: colombotelegraph
    1 point
  19. நீங்கள் உடனே கண்ணூறு கழித்து விட்டு தொடர்ந்திருக்க வேண்டும்........! 😂
    1 point
  20. முந்தியெல்லாம் நான் பழகிற ஏரியா எல்லாம் குமாரசாமி எண்டால் அந்தமாதிரி உறைப்புக்கறி வேணும் எண்டொரு வரலாறு இருந்தது. ஆர்ரை கண் பட்டுதோ கடவுளுக்குத்தான் தெரியும்...ஓக்கம டமேச்ஜ் 😂
    1 point
  21. கவிதைக்கு... நன்றி, நிலாமதி அக்கா. 🙂 முதல் தடை... மனிசியிடமிருந்து வரும். 😂
    1 point
  22. எத்தினை கரண்டி... தூள் போட்டு சாப்பிட்டாலும், வயித்து பிரச்சினை இதுவரை வரவில்லை. ப்ளீஸ்... நாவூறு படுத்தி போடாதீங்க. 😂 🤣 😜
    1 point
  23. ந்ன்றி கோசான். நான் சொல்ல விரும்பிய விடயம், நாங்கள் கனவுலகில் வாழ முடியாது. நிஜ உலகில் வாழ்வதற்கு உண்மை தெரிய வேண்டும். அப்போதுதான் தெளிவான / சரியான முடிவுகள் எடுக்க முடியும். இல்லையென்றால் இன்னும் பல முள்ளிவாய்க்காக்கள்தான் பரிசாகக் கிடைக்கும்.
    1 point
  24. வட்டு கோட்டை, இரத்த பொட்டு எல்லாம் முடிச்சு, ஆயுத போராட்டத்தை ஆரபித்து வைத்த பிந்தான் டெல்லியில் வைத்து இப்படி கூறப்பட்டது. வரலாறு முக்கியம்.
    1 point
  25. மிக தெளிவான பார்வை. எனது அனுபவத்தில் ஜனநாயலம் மேம்பட்ட (ஒப்பீட்டளவில்) என்ன நாம் கருதும் நாடுகளில் எல்லாம் சாதாரண குடிகளுக்கே இந்த புரிதல் இருக்கிறது. சின்ன பிள்ளைகளை பாலியல் வன் கொடுமை செய்தோருக்கு ஆதரவாக வாதாடும் வக்கீல்கள்களை அதிகம் யாரும் விமர்சிப்பது இல்லை. ஆனால் - வெளிநாடுகளில் வந்து பல படிப்பு படித்த பின்னும் கூட ஆசிய, ஆபிரிக்க மனங்களில் இந்த விடயம் ஏறாது. ஆனால் வெளிநாட்டில் படிக்கும் அடுத்த தலைமுறை வக்கீல்களை இப்படி விமர்சிப்பதை நான் காணவில்லை. ஆகவேதான் ஆரம்பதிலேயே சொன்னேன். இந்த மாதிரியான சிந்தனை, புரிதல் இன்மை - கிட்டதட்ட ஒரு கலாச்சார நம்பிக்கை. வெள்ளை பெண்தான் அழகு, கறுத்த பெண் அழகில்லை என்பதை போல. நமது ஊரில் கறுப்பி என ஒதுக்கி வைக்கும் பெண்ணை வெள்ளையின ஆண் ebony goddess என கொண்டாடுவது போலத்தான் இதுவும். பிகு முதல் பதிவில் எழுதியது போல யாழில் வந்த எதிர்வினைகள் எதிர்பார்த்ததுதான்.
    1 point
  26. ஆஹா .....ரூக்பீ வீரர்களின் ரௌத்திரத்தை கண்டோம்.......சூப்பர் ........! 💪 😂 நன்றி சகோதரி.......!
    1 point
  27. நாங்கள் kings தான் பாவிப்பது.......உங்களின் சிபாரிசில் அடுத்தமுறை கடைக்கு செல்லும்போது எடுத்துப் பாவித்துப் பார்க்கிறேன்......! 😁
    1 point
  28. UK பொருளாதாரத்தில் மட்டுமே இணைந்தது. ஆனால்நனைய ஒன்றியம் என்று உருவாக்குவது, ஒரு அரசால் மட்டும் முடியாது. அப்படி என்றால், இதில் கிந்தியவும் அந்த ஒன்றியத்துக்கு உடன்பட வேண்டும். இது மற்றொரு காரணம் peg, ஏனெனில், குறுகிய காலத்தில் செய்யமுடியும், வெறு எந்த அரசின் உடன்பாடும் தேவை இல்லை. எவ்வாறாயினும், கிந்தியா - சொறி சிங்களம் என்ற அளவு வேறுபாட்டில் முன்பு சொன்ன அபாயங்கள் உள்ளது, கிந் யா நாயத்தை கொண்டுவந்தால். அனால், பொதுவாக, சொறி சிங்களம் எந்த test ஐ வைத்தாலும், இப்போதைய நிலையில் அத்தை வேறு எவரும் பொருட்படுத்த மாட்டார்கள். எல்லோரும், சொறி சிங்களம் கிந்தியாவுடன் இணைந்து விட்டது என்ற நிலையையே எடுப்பதத்திற்கு வாய்ப்புகள் கூட. அது உண்மையும் கூட, கிமந்திய மத் தியவங்கி, மற்றும் பொருளாதார கொள்கைகள் , சிங்களத்தின் பொருளாதாரம் மட்டும் அல்ல, பாதுகாப்பு போன்றதையும் ஹிந்தியை மறைமுகமாக கட்டுப்படுத்தக் கூடிய நிலை உருவாகும் (ஏனெனில், பண விநியோகம் சிங்களத்தின் கைகளில் இருக்காது என்பதால்). உ.ம். ஆக பாதீட்டை 5% ஆக உயர்த்துவதற்கு, ஹிந்தியை மத்திய வங்கியின் அனுமதி தேவை, ஏனெனில் ஹிந்தியை மத்திய வங்கியே பண விநியோகம், வழங்குதலை மேற்றுக்கொள்ளும் ஆகையால். பாதீட்டை உயர்த்துவது என்பதின் அர்த்தம், பண விநியோகம், வழங்குதலை 5% ஆக உயர்த்துவது. இப்படை பல பிரச்சனைகள் இருக்கிறது. சரி பின்பு ஹிந்தியை நாணயத்தை விடுவது என்றாலும் பிரச்னை, ஏனெனில், அந்த நிலையில் சொறி சிங்களத்தின் பொருளாதாரத்தை பெரிய அளவில் தீர்மானிப்பது ஹிந்தியை பொருளாதாரம். சொறி சிங்களம் எவ்வ்ளவு காலம் ஹிந்தியை நாணத்தில் இருக்கிறதோ, அதற்கும் அதிகமாக கிந்தியாவுக்குள் இழுக்கப்படவதற்கே வாய்ப்புகள் கூட. இதாய் போன்ற பிரச்சனைகளே, peg ஐ அரசுகள் நாடுவதத்திற்கு காரணம், இலகுவாக கழற்றி விட்டு விடலாம், பொருளாதாரத்தை தாக்கினாலும். இதை eu இலும் காணலாம், UK, EU பொருளாதாரத்தில் எல்லாவற்றையும் இணைத்தது, நாணயத்தை வைத்து கொண்டது. பின்பு இணைந்த நாடுகளில், பெரியவை, வரலாற்றில் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட போன்ற நாடுகள், அவற்றின் நாணயத்தை, பாதுகாப்பு துறையை தக்க வைத்து கொண்டன. இது ஒருவிதத்தில் EU இன் வருங்கால போக்கை அவை முற்றாக நம்புவதற்கு பின்னடிக்கினறன என்பது.
    1 point
  29. என்னத்தப் பெரிசா எடுத்துப்புட்டோம் எண்டு இந்த மாதிரி காட்டுக்கத்துக் கத்திறியள்.... ரணில் கோஸ்டி பாங்கை கொள்ளை அடிச்சுது.... இது முன்னமே தெரிஞ்சு தான், எதுக்கும் பாதுகாப்பா இருக்கட்டுமன் எண்டு.... தங்கம், வெள்ளிய வெளில எடுத்து..... ஒளிச்சு வைச்சிருக்கிறம். நா.... நாட்.... நாட்டுப்பிரச்சனை, அதுதான் காசுப்பிரச்சணை தீர்ந்தப் பிறகு.... கொண்டாந்து இருந்த இடத்தில வைப்பம்.... ஒருத்தரையும் நம்ப ஏலாது பாருங்க..... எப்படி நசிஞ்சு, நெலிஞ்சு.... ரணில்.... உள்ள வந்திட்டார் எண்டு பார்த்தியள் தானே... அதால.... சும்மா..... அப்பாவியளா..... கத்தாதீங்க... 🤑
    1 point
  30. போலிக்கு கவர்ச்சி அதிகம், மக்கள் கவர்ச்சியைத்தான் விரும்புகிறார்கள். சாயம் வெளுக்கும்போது தெருவுக்கு வந்து என்ன பலன்? எல்லாம் இழந்தபின்!
    1 point
  31. யாரோட போயிருப்பார்?? தெரிஞ்சா சொல்லுங்க ஏனெனில் அதுக்கு அப்புறம் கல்யாண ஆசையே விட்டு போய்ச்சு மாமாவுக்கு 😂
    1 point
  32. என் பதிவை படித்து பாராட்டுப் புள்ளிகள் அளித்த Somebody களுக்கு என் மனமார்ந்த நன்றி நானும் கொழும்புக்கு மேற்படிப்புக்கு போனேனடி வெளி நாட்டில் இருந்து அல்ல. படடணத்திலிருந்து ( கொழும்பு ) வன்னிக்கு( கிராமத்துவாழ்க்கை ) வாழப் போறேன்.
    1 point
  33. எங்க வீட்டு ராமாயணம்(1987) ☺️..😊
    1 point
  34. எதிரியுடன் போராடி முடிந்து நாம் எமக்குள் இருக்கும் விஷங்களுக்கெதிராகப் போராடவேண்டி இருக்கிறது .
    1 point
  35. கால சூழலும் எம் கைகளில் இருக்கும் தொழில்நுட்பம் கருவிகள்தான் சம்பிரதாயம் சடங்குகளை நிர்ணயிக்கிறது என்று நான் எண்ணுகிறேன். பத்து பன்னிரண்டு வயதில் யாழில் ஒரு கிறிஸ்தவரின் இறுதி கிரிகையில் பாண்ட் இசை குழுவினர் முன்னுக்கு வாசித்து கொண்டு போவதை முதல் முதலில் பார்த்த போது என்னால் நம்ப முடியவில்லை பணக்கார வர்க்க ... பாட்டாளி வர்க்க சிந்தனைகள் ஏன் என்று தெரியவில்லை சிறுவயதிலேயே எனுக்குள் தோன்றிவிட்டது. ஆதலால் பணக்கார வர்க்கம் மீதான ஒரு வெறுப்பு எனக்குள் இருந்துகொண்டே இருந்தது அதன் விளைவோ என்னவோ தெரியவில்லை. அதை பார்த்த நாளில் இருந்து எனக்குள் ஒரு பெரும் கோபம் இருந்துகொண்டே இருந்தது பணம் இருந்தால் எண்ண வேண்டுமானலும் செய்துவிட்டு போங்கள் அதற்காக இப்படி செத்தவீட்டிலா இசை கச்சேரி வைத்து ஆடடம் போடுவீர்கள்? என்று ஒரே ஆதங்கமாக இருந்தது ஒரு மனிதன் இறந்து கிடக்கிறான் உங்களுக்கு கவலை இல்லாது போனால் கூட ... சிறு மரியாதை கூட வேண்டாமா? போன்ற எண்ணங்களே வந்து வந்து போய்க்கொண்டு இருந்தது. பின்பு புலிகளின் தளபதிகள் விக்ரர் ராதா திலீபன் போன்றவர்களின் பூதவுடலை எமது ஊருக்கு கொண்டுவந்த போது மீண்டும் அதே பாண்ட் இசையை முழக்கி கொண்டு வந்தார்கள் அப்போதுதான் இந்த பேண்ட் இசை வேறு .... இசை கச்சேரி வேறு என்று புரிய தொடங்கினேன் பின்பு யாழில் இதை அடிக்கடி பார்க்க நேர்ந்தது எனக்கும் பழகிவிட்டது ... முதன் முதலில் எனக்கு வந்த கோபம் என் அறியாமையால் வந்தது எங்களுடைய செத்தவீட்டு சடங்குகளும் தேவையின் காரணமாகவே உருவாக்கி இருக்கும் சாம்பல்.... எட்டு எல்லாம் மூன்று நாலு நாள் சீரான உணவு இன்றி இருந்த எமக்கு ஒரு ஊட்ட சத்து தருவதுபோலவும் எமது சிந்தனையை மாற்றும் நிகழ்வாகவுமே பார்த்து இருக்கிறேன் இளவயதில் யாராவது விபத்தில் இறந்தால் அந்த கவலை மீள முடியாததாக இருக்கும் .... பின்பு இந்த சாம்பல் எட்டு அதுகள் வரும்போது சமையல் பொருட்கள் கொள்வனவு போன்ற நிகழ்வுகளில் கொஞ்சம் கொஞ்சமாக சிந்தனைகள் திசை திரும்பி மீண்டும் வாழ்க்கை துளிர்விட தொடங்கும் இங்கு வெளிநாட்டில் தூர தேசத்தில் இருந்து பலரும் பயணிக்கலாம் அதனால் ஒரு உணவு முறைமை இருக்கு என்று எண்ணுகிறேன் சைவ முறைமையை ஆழமாக பார்த்தால் (இறைவனடி சேர்ந்தார்) இறைவனிடம் அனுப்பும் நிகழ்வுகள்தான் அவைகள். ஆதலால்தான் அவர்கள் இறைவனுக்கு (சிவனுக்கு) சமமாகவே வைக்கப்பட்டு பந்தம் பிடித்து தேவாரம் எல்லாம் பாடி அனுப்புகிறோம். இறுதி நிகழ்வு என்பது (இளவயது விபத்து தவிர்த்து) அவருடைய இந்த ஜென்ம வாழவை கொண்டாடுவதுதான். அதனால்தான் அதுக்காக என்றாலும் ஒரு நாலு பேருக்கு நல்லவர்களா இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அவர்களுடைய இந்த ஜென்ம வாழ்வு பூரணம் அடைவதால் அதை கொண்டாடுவது தவறாக எனக்கு படவில்லை ( இளவயதில் இறந்தவர்கள் பூரணம் பெறாதவர்கள் மீண்டும் அவர்கள் பிறந்து இந்த ஜென்மத்தை முழுமை செய்ய வாய்ப்பிருக்கிறது என்ற நமிபிக்கை இருப்பதால்தான் அவர்களுக்கு நாம் துவசம் அந்திரேட்டி ஓன்றும் செய்வதில்லை) இன்னும் சில வருடங்களில் 2-3 நாள் பாட்டு கோஸ்ட்டி சின்னமேளம் அது இது என்று களை கட்டும் என்றுதான் எண்ணுகிறேன் அதுபற்றி பெரிதாக அலட்டி கொள்ள எதுவும் இல்லை என்றே நம்புகிறேன் அன்னை தெரசா போல எமது வாழ்வு இல்லை சக்கை நிரப்பிய படகில் ஏறி பயணித்த பெண் கரும்புலிகளின் மனதில் அப்போது என்ன என்ன எண்ணங்கள் வந்திருக்கும்? நாம் எல்லோரும் அதற்கு நேர் எதிரான வாழ்வே வாழ்கிறோம் எல்லோராலும் தியாகங்கள் ஈடாவதில்லை அவரவருக்கு விளங்கியதன் படி வாழவை வாழ்கிறோம் எப்படியோ இன்னொருவரை துன்புறுத்தாது இன்னொருவர் தன மகிழ்ச்சிக்காக செய்வதில் நாம் ஏன் தலையிட வேண்டும்? எல்லாவற்றையும் கொண்டாட பழகி கொள்வோம்
    1 point
  36. இங்கு காவல்துறையில் தமிழர்கள் குறிப்பாய் பெண்கள் வேலை செய்கிறார்கள் ...கலைஞ்ன் முயற்சித்தது விமானப் படையில் சேருவதற்கு என்று நினைக்கிறேன்
    1 point
  37. ரஞ்சித் உங்கள் கருத்து சரி ....ஆனால் , பிரபாவின் கேள்விக்கு உங்கள் பதில் பொருந்தாது......தமிழ் படிக்க விரும்புகின்ற பிள்ளைகளுக்கு நீங்கள் படிப்பிக்கின்றதில்லைலோயோ அல்லது அவர்களை உற்சாகப்படுத்துவதில்லோ தவறில்லை ...ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தமிழை படிக்க ஊக்கம் கொடுக்காமல் அடுத்தவர் பிள்ளைகளை தமிழ் படிக்க கூப்பிடுவதும், அவர்களை கட்டாயப்படுத்துவது தவறு ...இதனை வணங்காமுடி தெளிவாய் சொல்லி உள்ளார். பிள்ளைகள் தமிழை படிக்க மாட்டோம் என்று சொன்னால் கட்டாயப்படுத்த கூடாது என்று சொல்கின்ற நீங்கள் அதே பிள்ளைகள் 10 வகுப்போடு படிப்பை நிப்பாட்ட போறோம் என்று சொன்னால் விடுவீர்களா ?....அதென்ன ஆங்கில நாடுகளில் இருக்கும் பிள்ளைகளுக்கு மட்டும் தமிழ் படிக்க கசக்குது ?....என்னை பொறுத்த வரை பெற்றோரில் தான் பிழை சொல்வேன் .
    1 point
  38. நன்றி உங்கள் பதிவிற்கு பிரபா , சில வருடங்களுக்கு முன்னர் சிட்னியில் உள்ள தமிழ்ப் பாடசாலை ஒன்றில் தன்னார்வத் தொண்டனாக பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. நண்பர்கள் ஊடாக இந்த வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டேன். நேரடியாகத் தமிழ்க் கற்பித்தலில் ஈடுபடவில்லையாயினும் கூட, அது தொடர்பான செயற்பாடுகளுக்கு என்னாலான உதவிகளைச் செய்ய வாய்ப்புக் கிடைத்ததையிட்டு மகிழ்ந்தேன். ஆரம்பத்தில் எனது பிள்ளைகளும் என்னுடன் பாடசாலைக்கு வந்தனர். ஆர்வத்துடன் கல்விசார் செயற்பாடுகளிலும், கலை கலாசார நிகழ்வுகளிலும் பங்குகொண்டனர். காலம் செல்லச் செல்ல, ஆங்கில மூலக் கல்விக்கும், பிரதான பாடசாலையின் செயற்பாடுகளுக்கும் எனது பிள்ளைகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கவே, தமிழ்க் கற்றலில் அவர்களுக்கிருந்த ஆர்வம் குறைவடையத் தொடங்கியது. பெற்றோரில் ஒருவனான எனது ஆர்வம் மட்டுமே பிள்ளைகள் தமிழினைத் தொடர்ந்து படிக்கப் போதுமானதாக இருக்காது என்பதனை நான் புரிந்துகொண்ட நேரமும் அதுதான். சில வருடங்களில் எனது இளைய மகளும் தனது தமிழ்ப் பாடசாலையுடனான தொடர்பினை பிரதான பாடசாலையில் பரீட்சையொன்றினைக் காட்டி கத்திரித்துக்கொள்ள நானும் விலகவேண்டியதாயிற்று. அதன் பின்னர் பலர் என்னிடம் கேட்ட ஒரு கேள்விதான், தமிழ்ப் பள்ளிக்கூட அதிபராக இருந்தீர்கள், ஆனால் உங்களின் பிள்ளைகளைத் தொடர்ச்சியாக பாடசாலைக்கு அழைத்துவரமுடியாமல்ப் போய்விட்டதே? என்பதுதான். வருத்தமாக இருந்தது. ஆனால், உண்மையும் அதுதானே? பாடசாலைக்குப் பிள்ளைகளின் வரவுபற்றியும், அவர்கள் தொடர்ந்தும் தமிழினைக் கற்பதன் அவசியம்பற்றியும் அடிக்கடி பேசும் என்னால் எனது சொந்தப் பிள்ளைகளையே பாடசாலைக்குத் தொடர்ந்து அழைத்துவரமுடியாமற் போனதையிட்டு வருந்தினேன். ஆனால்,தமிழினை எமக்குப் பின்னர், அமது அடுத்த சந்ததிக்கு கொடுக்கவிரும்பும் என்னைப்போன்ற பலருக்கு இருக்கும் வருத்தம்தான் அது. ஆனால், எனது பிள்ளைகளுக்கு தொடர்ந்தும் தமிழினைக் கற்கும் ஆர்வம் இல்லாமற்போனதனால், நான் மற்றையவர்களின் பிள்ளைகளுக்குத் தமிழினைக் கற்றுக்கொடுப்பது ஒன்றும் தவறில்லையே? எனது பிள்ளைகள் மூலமாக தமிழ் அடுத்த சந்ததிக்குக் கடத்தப்பட முடியாமற்போனாலும் கூட, தமிழினைக் கற்க ஆர்வத்துடன் இருக்கும் மற்றைய பிள்ளைகளூடாகவாவது தமிழினை நாம் கொண்டுசெல்வதில் தவறிருக்க முடியாது அல்லவா? எனது பிள்ளைகள் தமிழினைக் கற்பதை நிறுத்தியதையிட்டு நான் கவலைப்படுவதுண்டு. ஆனால், அவர்களால் முடியாவிட்டாலும், தமிழினை நேசிக்கும் இன்னும் பல பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது நாம் தமிழினைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதுதான் எனது நிலைப்பாடு. நீண்ட 4 வருடங்களுக்குப் பின்னர் மிக அண்மையில் மீண்டும் தமிழ்ப் பாடசாலைக்கு என்னை சில உதவிகள் கேட்டு அழைத்திருந்தார்கள். பேச்சுப்போட்டிகளில் நடுவர்களில் ஒருவராகக் கடமையாற்றவும், பிள்ளைகளை தமிழில் உரையாட வைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட செவ்வி செயற்பாட்டு ஒன்றிற்காகவு அழைத்திருந்தார்கள். மகிழ்வுடன் சென்று உதவிவிட்டு வந்தேன். அப்பிள்ளைகளுக்கு தமிழில் இருக்கும் ஆர்வத்தையும், அவர்களும் பேசும் விடயங்களையும் பார்த்தும், கேட்டும் மகிழ்ந்தேன். அவர்கள் மூலம் தமிழ் மேலும் கொண்டுசெல்லப்படும் என்பதையும் உணர்ந்தேன். எனது பிள்ளைகளால் தமிழினைக் கற்கமுடியவில்லை என்கிற ஏக்கம் அப்போது சுத்தமாக போயிருந்தது. எனது பிள்ளைகள் கற்கிறார்களோ இல்லையோ, கற்கவிரும்பும் அனைத்துப் பிள்ளைகளுக்காகவும் என்னால் முடிந்ததைச் செய்வேன் என்று எண்ணியிருக்கிறேன். நோக்கம் எனது தாய்மொழி அழிந்துவிடக்கூடாது என்பதுதான். அதை எப்படிச் செய்தால் என்ன, விளைவு ஒன்றுதான்.
    1 point
  39. ■ நாவடக்கம் யாதெனில்......... முடி வெட்ட எவ்வளவு..? சவரம் பண்ண எவ்வளவு..? என்றார் குருக்கள்.. அவரும் .. முடிவெட்ட எழுபது ரூபாய்.. சவரம் பண்ண ஐம்பது ரூபாய் சாமி ! என்று பணிவுடன் கூறினார்.. குருக்கள் சிரித்தபடியே, அப்படின்னா..! என் தலையை சவரம் பண்ணு என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார் குருக்கள்.. வயதில் பெரியவர் என்பதால், நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. வேலையை ஆரம்பித்தார் நாவிதர்.. நாவிதர் கோபப்படுவார் என்று எதிர்பார்த்திருந்த குருக்களுக்கு.. சற்று ஏமாற்றந்தான்.. பின்னர், குருக்கள் அடுத்த கணையைத் தொடுத்தார்.. ஏன்டாப்பா.. உன் வேலையோ..! முடி வெட்டுறது.. உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே.. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம.. உன்னை நாக்கோட சம்மந்தப்படுத்தி "நாவிதன்னு" சொல்றாங்க..? இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார் குருக்கள்.. ஆனால், நாவிதர் முகத்திலோ புன்னகை.. நல்ல சந்தேகங்க சாமி.. நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத்தட்டாம இருக்க, "நாவால" இதமா நாலு வார்த்தை பேசுறதனால தான்..! நாங்க நாவிதர்கள்.. எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா சாமி..? இந்த அழகான பதில் குருக்களை மேலும் கடுப்பேற்றியது.. அடுத்த முயற்சியைத் துவங்கினார்.. இதென்னப்பா, கத்தரிக்கோல்னு சொல்றீங்க.. கத்தரி மட்டுந்தானே இருக்கு.. கோல் எங்கே போச்சு..? இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிடமிருந்து.. சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க.. என்று சொல்லி நிறுத்திக் கொண்டார் நாவிதர்.. இதிலும் குருக்களுக்கு ஏமாற்றம்.. அடுத்து கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்.. எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குறீயே..! ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..? இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது.. அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம்.. இதைத்தானே குருக்களும் எதிர்பார்த்தார்.. கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்.. இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்.. குருக்களின் "பிரியமான மீசையைத்" தொட்டுக் காட்டிக் கேட்டார்.. சாமிக்கு இந்த மீசை வேணுங்களா..? குருக்கள் உடனே, ஆமாம் என்றார்.. கண்ணிமைக்கும் நேரத்தில் குருக்களின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து.. மீசை வேணுமுன்னிங்களே சாமி..! இந்தாங்க.. என்றார். பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய் கையில்.. அதிர்ச்சியில் உறைந்து போனார் குருக்கள்.. நாவிதரோ, அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்.. அவரது "அடர்த்தியான புருவத்தில்" கை வைத்தபடிக்கேட்டார், சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா..? இப்போது குருக்கள் சுதாரித்தார்.. _வேணும்னு சொன்னா..! வெட்டிக் கையில குடுத்துடுவான்_ என்ற பயத்தில், உடனே சொன்னார்.. இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்.. என்றார் குருக்கள்.. நாவிதர் உடனே குருக்களின் புருவங்களையும் வழித் தெடுத்தார்.. சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல..? அதைக் குப்பைல போட்டுடுறேன்.. சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது.. என்றபடி கண்ணாடியை குருக்களின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்.. நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்.. முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல்.. அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது.. கண்கள் கலங்க, குனிந்த தலை நிமிராமல், ஐம்பது ரூபாயை அவர் கையில் கொடுத்து விட்டு.. விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் குருக்கள். நம்முடைய அறிவும் - ஆற்றலும் - திறமையும் - அதிகாரமும் - அந்தஸ்தும் - பொருளும் - மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர.. மட்டம் தட்ட அல்ல.. இதை உணராதவர்கள் - இப்படித்தான் அவமானப்பட நேரும் ... முகநூலிருந்து......
    1 point
  40. பங்கு சந்தையில் தாக்குபிடிக்க முக்கிய விடயமாக உளவியலை புரிந்து வைத்திருக்கவேண்டியது முக்கியம் என்பார்கள், ஆரம்பத்தில் சக மனிதர்களை புரிந்து கொள்வதுதான் கடினமான விடயம் என நினைத்ததுண்டு, பின்னர் பங்கு வர்த்தகத்திலீடுபட ஆரம்பித்த பின்னரே என்னைபற்றியே என்னால் இதுவரை காலமும் புரிந்து கொள்ளவில்லை என எண்ணத்தூண்டும். எமது சிந்தனையில் கடுமையாக உழத்தால்தான் பணம் வரும் என நினைப்போம் இலகுவாக வரும் பணத்தினை தவறான கண்ணோட்டத்திலேயே பார்ப்போம். அதனால் அதனை எப்படியாவது திரும்பவும் இழந்து விடுவோம், கட்டு கோப்பாக சிறிது சிறிதாக அனைத்து trading Rules ஐயும் பின்பற்றி கட்டியெழுப்பும் கணக்கினை கண்மூடித்தனமாக ஒரு நாளிலே இழந்து விடுவோம். trading இல் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காது அதன் process மட்டும் முக்கியத்துவம் கொடுக்க சொல்வார்கள், ஆனால் நடைமுறயில் பணத்தின் வருகையும் இழப்புமே பெரும்பாலும் என்னை ஒவ்வொரு வர்த்தகத்தினையும் தூண்டி தவறான முடிவுகளை எடுக்க வைத்துள்ளது. உதாரணமாக சொந்த பணத்தில் இழப்பு ஏற்பட்டால் அதனை குறுகிய காலத்தில் மீட்டு விட பெரிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு இன்னும் பாதகமான நிலையினை அடைதல். சாதாரணமாக வர்த்தகத்தில் ஆண்டிற்கு மொத்த முதலீட்டில் 10 இலிருந்து 20 வீதம் வரையான இலாபம் யதார்த்தமானது அதனையே எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் முதலிடுவார்கள், ஆனால் பங்கு வர்த்தகத்தில் மட்டும் 5000 முதலினை ஒரு வருடத்திற்குள் 100000 ஆக வேண்டும் என எதிர்பார்ப்போம். ஆனால் நீங்கள் மிக தெளிவாகவே ஆரம்பத்தில் செயற்படுவது போல் உள்ளது உங்களது வர்த்தகங்களை பார்க்கும் போது, என்னை பொறுத்தவரை அவசரப்பட்டு பின்வாங்க தேவையில்லை என கருதுகிறேன். இழப்புகள் ஏற்படும் பொழுது உங்களது Risk இனை பல மடங்காக குறையுங்கள் என துறைசார் நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.
    1 point
  41. "அற்பனுக்கு பவிசு ( வாழ்வு ) வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பார்". எனும் பழமொழி எனோ நினைவில் வந்து போகிறது . இன சனம் யாழ் களம் வாசித்தால் மன்னிக்கவும்.
    1 point
  42. அவரது இறுதி ஊர்வல வீடியோ வாட்ஸப்பில் வந்தது.. பார்த்தேன். வெள்ளைப் புறாக்கள் பெட்டிக்குள் எச்சம் போட்டனவா என்ற கேள்விதான் குடைச்சலாக இருந்தது
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.