Jump to content

Leaderboard

  1. P.S.பிரபா

    P.S.பிரபா

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      12

    • Posts

      1756


  2. ரஞ்சித்

    ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      11

    • Posts

      8355


  3. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      43245


  4. goshan_che

    goshan_che

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      14914


Popular Content

Showing content with the highest reputation on 07/03/22 in all areas

  1. 'தடம்' அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஓர் அரசு சாரா நிறுவனமாகும். இவர்கள் இங்கு வாழும் தமிழ் சமூகத்தின் மன ஆரோக்கியம் சம்பந்தமான வழிகாட்டல்களை வழங்க தயாராக உள்ளனர். தடம் என்ற பெயரை அவர்கள் தேர்ந்தெடுத்தமைக்கு காரணத்தை பின்வருமாறு கூறுகிறார்கள்👇🏽 “நம் ஒவ்வொருவரின் தடமும் வேறுபட்டவை. நாம் தனித்தோ அல்லது நமது குடும்பங்கள், நண்பர்களுடன் இணைந்தோ நமது தடங்களை பதித்திருக்கலாம். எந்த வகையை நாம் தேர்ந்து எடுத்திருந்தாலும் நமது வாழ்வின் பயணங்கள் நீண்டவைகளாவும், நெளிவு சுளிவுகள் நிறைந்தும், பல சவால்கள் உடையனவாகவும், மிகவும் கடினமாகவும் இருந்திருக்கலாம்.” அவர்களின் நோக்கம்👇🏽 //'தடம்' மனநலம் பற்றிய கலந்துரையாடல்களை இயல்பாக்கி உதவிகள் தேடும் வழிமுறைகளை சுலபமாக்கி உதவி தேவைப்படுவோர்க்கு உதவிகள் செய்து ஓர் சிறந்த மாற்றத்தை எங்கள் சமூகத்தில் ஏற்படுத்துதை நோக்கமாக கொண்டுள்ளது.// இந்த தடத்தில் உங்களோடு, உங்களுக்கு உதவியாக பயணிப்பவர்களில் அனேகர் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த தமிழ் இளைஞர் யுவதிகள். அவர்களுக்கு எங்களுடைய சமூகத்தைப் பற்றி எங்களது வேர்களைப் பற்றி தெரிந்துள்ளமை குறிப்பிடதக்கது. நான் இதனை இங்கே இணைத்தமைக்கு காரணம், இன்று எங்களது சமுதாயம் அதிலும் பாடசாலை மாணவர்கள் எதிர் கொள்ளும் மனவள நெருக்கடிகளில் இருந்து வெளியேற, மன நலனை பாதுகாக்க உதவும் என்ற நோக்கத்தில் மட்டுமே ஆகும்.. இவர்களது கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றியிருந்தேன், அவர்களுக்கு எங்களது சமூகத்தைப் பற்றி நன்கு தெரிந்துள்ளார்கள் என்பதையும் விளங்கிக்கொண்டேன். இவர்கள் Facebook, Instagram போன்றவற்றிலும் இருப்பதால் இவர்களைப் பற்றி மேலும் அறிய உதவும்.. இவர்களது தளத்தில் நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் உளவளம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், வழிகாட்டல்கள், கட்டுரைகள் என பல தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உண்டு. வாசித்து பயன் பெறவும். https://thadam.com.au/ நன்றி..
    5 points
  2. ஓய்வூதியம் - சுப. சோமசுந்தரம் திருநெல்வேலி மாவட்டம் காரியாண்டி என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி தாத்தா தமது தொண்ணூறு வயதிலும் பனையேறும் தொழில் செய்து தம்மையும் தமது மனைவியையும் காப்பாற்றிக் கொள்கிறார் எனும் தகவல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. அவர் போற்றுதலுக்குரியவர்; போற்றப்பட்டார் என்பது சரிதான். காட்சித் திரையில் இதனைக் கண்ட ஒவ்வொருவரும், "நம்மிடையே வாழ்வையே சாகசமாக ஏற்று இப்படி ஒருவர் வாழ்கிறார் !" என்று பெருமிதத்தில் நெஞ்சு விம்மியது வரை கூட சரிதான். "நம்மிடையே அரைசாண் வயிற்றுக்காக ஒருவரை தள்ளாத வயதிலும் அல்லல்பட வைத்தோமே !" என்னும் குற்ற உணர்வு இச்சமுகத்தில் எவருக்கேனும் ஏற்படவில்லை எனில் அது சரிதானா? ஆரம்பக் காலத்தில் இருந்தே சோம்பேறித்தனமாய்ப் பிச்சை எடுத்து வாழ்பவர்கள் முதுமையில் அல்லலுறுவதை நாம் பேச வரவில்லை. தமது பன்னிரெண்டு வயது முதல் (அன்று குழந்தைத் தொழிலாளராய்) தொண்ணூறு வயது வரை பனையேறும் உழைப்பாளிக்கு இச்சமூகம் பனையின் உச்சியிலேயே சமாதி கட்டி விடுமோ ! சமூக வலைத்தளங்களின் மூலமாக இவர் பற்றிய செய்தி அரசின் கவனத்தை ஈர்த்ததால் துரைப்பாண்டி தாத்தாவிற்கும் அவரது துணைவியார் வேலம்மாள் பாட்டிக்கும் முதியோர் ஓய்வூதியம் கிடைக்க வழி செய்யப்பட்டது ஓரளவு ஆறுதல் செய்தி. சமூகத்தில் வெளிச்சத்திற்கு வராத துரைப்பாண்டியர் எத்தனை பேரோ ? வாழ்வில் பெரும்பகுதி விவசாயத் தொழிலாளர்களாகவும், கட்டுமானப் பணியாளர்களாகவும், தனியார் கடை ஊழியர்களாகவும், இன்ன பிற தொழிலாளர்களாகவும் இச்சமூகத்தில் களமாடியோர் முதுமையில் எப்படி வாழ்வார்கள் என்று இச்சமூகமோ அரசுகளோ பெரிய அளவில் நினைத்துப் பார்த்ததுண்டா ? சிறிய அளவில் அவர்கள் நினைக்கப்படுகிறார்கள் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். "பணியாளர் வருங்கால வைப்பு நிதியகம்" (Employees Provident Fund Organization - EPFO) என்ற அரசின் அமைப்பிற்கு பணியாளரும் பணி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளரும் மாதந்தோறும் பங்களிப்புச் செய்து வரும் பட்சத்தில், இருபது வருடங்களுக்குப் பிறகு சேர்ந்த தொகையுடன் மாதந்தோறும் ஒரு சிறிய ஓய்வூதியம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது கால அளவிற்கு ஏற்ப வளரும் தன்மையுள்ள ஓய்வூதியம் அல்ல. இன்று மாதம் ரூபாய் ஐயாயிரம் என்று நிர்ணயிக்கப்படும் ஓய்வூதியம் பத்து வருடங்களுக்குப் பிறகும் ரூபாய் ஐயாயிரம் என்று இருப்பது எவ்வகையில் நியாயம் ? மேலும், பணிக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தரத்தில் பழகியவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் ஓரளவு அத்தரத்தில் வாழ வகை செய்வதே சரியான ஓய்வூதியமாய் அமையும். பசியினால் வாடுவது மட்டும் வறுமையன்று; வாழ்க்கைத் தரம் அதல பாதாளத்திற்கு செல்வதும் வறுமைதான். நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த நோக்கில்தான் ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் EPFO தரும் ஓய்வூதியமோ ஒன்றுமில்லாததற்கு ஏதோ பரவாயில்லை (Something is better than nothing) என்ற வகையிலேயே உள்ளது. இந்நிலையை மாற்றி வாழ்வில் பெரும்பகுதி பணியாற்றியவர்களை எவரிடமும் கையேந்தாமல் வாழ வைப்பது எங்ஙனம் என்று சிந்தித்துச் செயலாற்றுவதே ஒரு சோஷலிச ஜனநாயகமாக இருக்க முடியும். அதை விடுத்து அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கிற நியாயமான ஓய்வூதியத்தையும் நிறுத்துவது சமூகத்தின், அரசுகளின் அராஜகப் போக்கு என்று தான் சொல்ல வேண்டும். எல்லோருக்கும் விடியலைத் தருவது தானே சமத்துவம் ? வெளிச்சத்தில் உள்ளோருக்கும் விளக்கை அணை என்பதுவா சமத்துவம் ? எல்லோரையும் ஏற்றி விடு என்றால், அதற்கு மாறாக படியில் ஏறியவர்களையும் இறக்கி விடு என்பதுவா சோஷலிசம் ? "பணத்திற்கு எங்கே போவது ?" என்று யாரோ ஒரு அரசியல்வாதி முதலாளியைப் போல் கர்ஜிக்கும் செய்தி வரும் அதே பக்கத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கிய பல ஆயிரம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட செய்தியும் வருகிறது. "அரசு வருவாயில் பெரும்பகுதி ஊழியர்களின் சம்பளத்திற்கும் ஓய்வூதியத்திற்குமே செல்கிறது" என்று நம்பத் தகுந்த பொய்யினைச் சொல்லும் நிதி அமைச்சரே சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை எந்த எதிர்ப்புமில்லாமல் (!) உயர்த்திக் கொள்கிறார். எத்தனை முறை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஒவ்வொரு முறையும் தனித்தனியே அன்னாருக்கு ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படுகிறது. ஓய்வூதியத்தின் நோக்கமே ஒருவர் முதுமையில் கௌரவமாக வாழ வழி செய்வதுதானே ? அப்புறம் அதில் என்ன கௌரவம் ஒரு தரம், கௌரவம் இரண்டு தரம் என்று ஏலம் எல்லாம் ? இந்த முதலாளித்துவப் பார்வையில், பலம் குறைந்த பொதுவுடமைக் கட்சிகளைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கு அல்ல. இது ஏதோ பாசிச அணுகுமுறை கொண்ட தற்காலத்து பாஜக அரசினால் கொண்டுவரப்பட்டது என்று சொல்வதற்கில்லை. பொருளாதார மேதை என்று பெரிதும் கொண்டாடப்படும் மனமோகன் சிங் சார்ந்த காங்கிரஸ் அரசின் கைங்கரியம் என்று தான் சொல்ல வேண்டும். முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஏதோ பேட்டியில், மனிதர்களின் வாழ்நாள் கூடிவிட்டதை பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் (ஓய்வூதியத்தை இல்லாமல் செய்வதற்குப் பெயர் 'புதிய ஓய்வூதியத் திட்டம்') கைவிடுவதற்கான ஒரு காரணமாகச் சொன்ன நினைவு. மனிதருக்கு நாகரிகமான ஒரு காரணம் அன்று கிடைக்கவில்லையோ, என்னவோ ! பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாய் இரு தேர்தல்களில் வாக்குறுதி தந்த ஜெயலலிதா இரண்டாவது ஆட்சி காலம் முடியும் தறுவாயில் அதனைப் பரிசீலிக்கக் குழு ஒன்றை அமைத்தார். திட்டத்தை நிறுத்தும் போது இல்லாத பரிசீலனைக் குழு மீண்டும் அமல்படுத்துவதற்கு மட்டும் ஏன் ? ஒரு அடிமை அரசின் முதல்வராயிருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு வாய்ப்பே இல்லை என்று எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் வெகு சாதாரணமாகப் பேசியது மனதை விட்டு அகல்வதாய் இல்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்காத திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் மீண்டும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் சேர்த்ததும், பின்னர் ஆட்சி அமைந்ததும் தனது நிதியமைச்சரை அதற்கு எதிராகப் பேச வைத்து வேடிக்கை பார்த்ததும் கயமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. மாநில வருவாயில் பெரும் பகுதி அரசு ஊழியர்களின் ஊதியத்திற்கே செல்கிறது என்பது எந்த போதி மரத்தின் கீழ் தோன்றிய ஞானோதயம் ? தேர்தல் வாக்குறுதியின் போது அப்போதி மரம் கண்ணில் தென்படவே இல்லையா ? ப.சிதம்பரமும் பழனிவேல் தியாகராஜனும் சொல்லும் போது அவர்களையும் மீறி ஒரு பண்ணையார்த்தனம் வெளிப்படுவதை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல இயலவில்லை. வளர்ச்சித் திட்டங்கள் பற்றி வாய்ப்பு கிழியப் பேசும் இன்றைய அரசியலாளர்க்கு தனிமனித வாழ்வு மேம்பாடு வளர்ச்சித் திட்டமாய்த் தோன்றாதது விந்தையானது. ஓய்வூதியத்திற்கு எதிராக முதலாளித்துவ ஜனநாயக அரசியல்வாதிகள் தான் நிற்கிறார்கள் என்றில்லை. "லஞ்ச ஊழலில் திளைக்கும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ஒரு கேடா ?" எனக் கேட்கும் வெகுசனத்திற்கும் குறைவில்லை. அத்தகையோர்க்கு நாம் கூற விரும்புவது, "மனித வரலாறு தெரிந்த நாள் முதல் தனி மனிதர்கள் பெரும்பாலும் பேராசை பெற்றவர்களாகவும், நினைத்தவற்றை அடைய சிறிய பெரிய தீவினை புரிபவர்களாகவுமே வாழ்ந்து வருகிறார்கள். இதனைக் கூறுவதால் நாம் லஞ்ச லாவண்யங்களை நியாயப்படுத்த எண்ணவில்லை. தீவினைக்கான வழிகளை அடைக்க முயல்வதே சமூகத்தில் நீதி நெறியை நிலை நாட்டுமே தவிர, ஒவ்வொரு மனிதனும் நியாய உணர்வுடன் செயல்படுவான் என்று எதிர்பார்ப்பது இருட்டறையில் இல்லாத கருப்புப் பூனையைத் தேடுவது. வலுக்கட்டாயமாக நல்வழி கைகூடுமா எனில் கைகூடும் என்றே தோன்றுகிறது. உதாரணமாக, அக்காலத்தில் கடவுச்சீட்டு (Passport) வாங்கியதற்கும் இக்காலத்தில் பெறுவதற்கும் எவ்வளவு வேறுபாடு ? சல்லிக்காசு யாருக்கும் தராமல் கால விரயமுமின்றி இன்று எவ்வாறு கைகூடியது ? மனிதர்கள் ஒட்டுமொத்தமாகத் திடீரென்று திருந்திட வாய்ப்பே இல்லையே !அங்கு அதனை நடைமுறைப்படுத்திய தானியங்கி (automation) முறையை ஒவ்வொரு துறையிலும் நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்களுக்கு ஒழுக்க உறுதிப்பாடு (moral conviction) வேண்டும். அப்படிச் செய்தால் தம் வருமானமும் போய்விடுமே என்றெண்ணும் ஆட்சியாளர்களால் நல்ல ஊழியர்களையும் குடிமக்களையும் உருவாக்க இயலாது. எனவே ஊதியம், ஓய்வூதியம் பற்றிப் பேசும்போது மட்டும் பெரும்பாலும் 'தீவினைக்கான வாய்ப்பின்மை ஒழுக்கசீலர்'க்கு நன்னெறியும் நேர்வழியும் கண்ணில் தெரிவது ஒரு வேடிக்கையான வாடிக்கை. இருப்பினும் நாம் கூறியது போல் நடைமுறைகளைச் செப்பனிடுவது மூலமாகவும், ஊழல் குற்றங்களுக்கான தண்டனையைக் கடுமையாக்குவது மூலமாகவும் அரசு இயந்திரத்தைச் சீர் செய்வது ஊதியம், ஓய்வூதியம் இவற்றிற்கு அப்பாற்பட்டு நமக்கான சமூகக் கடமை. இறுதியாக தனிப்பட்ட முறையில் ஒன்றிரண்டு வார்த்தைகள். வாழ்க்கையில் பணம்தான் எல்லாம் என்றில்லை. ஆனால் பணம் இல்லாமல் எதுவும் இல்லை - குறிப்பாக முதுமைக் காலத்தில். சாகப் போகிறவனிடம் உன் கடைசி விருப்பம் என்னவென்று கேட்பார்களே ! கேட்காமலேயே நான் சொல்கிறேன் : பழைய ஓய்வூதியத் திட்டத்தினால் எனக்குக் கிடைத்த அமைதியான வாழ்க்கை உலகில் வயதான ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும். ஓய்வூதியரான என் தந்தையாரின் மறைவுக்குப் பின் குடும்ப ஓய்வூதியரான என் தாய்க்குக் கிடைத்த நிம்மதியும் பெருமிதமும் இவ்வுலகில் ஒவ்வொரு தாய்க்கும் கிடைக்க வேண்டும். தாங்கிப் பிடிக்கப் பிள்ளைகள் நாங்கள் இருந்தாலும், தம் கணவர் ஊழியம் செய்த அரசினால் எனது தாயார் இவ்வுலகில் பிள்ளைகளைக் கூட எதிர்பார்க்கும் நிலையில் இல்லை; இக்கர்வம் தரும் நிவாரணத்தை எந்த மருந்தும் தருவதில்லை என்பது என் தாய் வெளிப்படையாய்ச் சொல்லாமல் உணர்வால் தரும் செய்தி. அரசு ஊழியரோ தனியார் ஊழியரோ "யாம் பெற்ற அமைதியினை வாழ்விலும் சாவிலும் பெறுக !" என்பதே செல்லாக் காசு எனத் தெரிந்தும் நான் எழுத விரும்பும் உயில்.
    3 points
  3. முகத்தை சவரம் செய்ய சலூன் அல்லது பிளேடு கிடைக்காமல் குஷ்டம் வந்தது போல 'ட்ரிம்' செய்த தாடியுடன் அல்லது பரட்டை தலையில் 'கோடு போட்டு' திரிப்பவர்களை கண்டால் காத தூரம் விலகி நடப்பதுண்டு. அதில் இக்கால புள்ளீங்களும் அடக்கம்..! இவ்வகை 'புள்ளீங்களுக்கு' செமத்தியாக 'வச்சு செய்த' சிதம்பரம் நகர காவல் துறையினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்..! 😛
    3 points
  4. ஆசான் 1988..... இதுதான் அந்த ஆண்டு. சரியாக இருக்கும். என் வாழ்நாளில் நான் சந்தித்த இன்னொரு ஆளுமையின் கதை இது. யாழ்ப்பாணத்து நரக வாழ்விலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டு மட்டக்களப்பிற்கு வந்து சேர்ந்திருந்த ஆரம்ப நாட்கள். புதிய இடம், புதிய மனிதர்கள், இவை எல்லாவற்றிற்கும் புதியவனாக நான் என்று என்னை நான் நிலைபெறச்செய்ய பகீரதப் பிரயத்தனம் செய்திகொண்டிருந்த நாட்கள் அவை. சித்தியின் தயவில் அநாதைகள் விடுதியில் சேர்க்கப்பட்டு, மறுநாளே மிக்கேல் கல்லூரி வாசலில் கட்டைக் காற்சட்டை அணிந்துகொண்டு கமலா டீச்சரின் வரவிற்காக காத்திருந்த அந்தக் காலை இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. விசாலமான பாடசாலை, இரைச்சலான மாணவர் கூட்டம், உயர்ந்த இரும்புக் கதவுகளுக்குப் பின்னால் தெரிந்த நீண்ட விறாந்தை, அதன் இருமருங்கிலும் அமைக்கப்பட்டிருந்த வகுப்பறைகள். இடைக்கிடையே அந்த அலுவலக வாசலுக்கு வந்துபோன சில ஆசிரியர்கள், சில மாணவர்கள் என்று அனைத்தையும் அவதானித்துக்கொண்டு சித்தியுடன் காத்திருந்தேன். கமலா டீச்சரும் வந்தார். ஏற்கனவே எனது சித்தியுடன் அவருக்கு இருந்த பரீட்சயத்தை அவரின் முகத்தில் இருந்த புன்னகை கூறியது. "வாங்கோ சிஸ்ட்டர், இவரைத்தான் சேர்க்கப் போறீங்களோ?" என்று கேட்டுக்கொண்டு தனது அதிபர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். ஏற்கனவே பேசி வைத்திருப்பார்கள் போலிருக்கிறது, சில நிமிட சம்பிரதாயங்களுக்குப் பின்னர் என்னை வகுப்பறை ஒன்றிற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். அன்று காலை சித்தி என்னை அப்பாடசாலையின் வாசலில் விட்டுச் சென்றபோது தனிமையை சட்டென்று உணர்ந்தேன். மட்டக்களப்பில் எனக்கு ஆதரவாக இருப்பார் என்று நம்பிவந்த சித்தியும் அன்று காலை என்னிடம் இருந்து விடைபெற்றுச் சென்றுவிட மனதில் பயம் பற்றிக்கொண்டுவிட்டது. சிலநிமிடங்கள் அவர் சென்ற திருகோணமலை வீதியை பார்த்துக்கொண்டே நின்றேன்."அட, அவசரப்பட்டு விட்டோமோ? பேசாமல் அப்பா எனும் மிருகத்துடனேயே , நரக வாழ்வென்றாலும் , யாழ்ப்பாணத்திலேயே இருந்திருக்கலாமோ? என்று ஒரு கணம் நினைத்துப் பார்த்தேன். சீ சீ, அந்த ஆளுடன் இருக்கக் கூடாதென்றுதானே இங்கு வந்தேன், இப்போது அதை நினைத்துப் பார்ப்பதில் அர்த்தமில்லை என்று மனதிற்குச் சமாதானம் கூறிவிட்டு, அந்த வகுப்பில் எனக்கு வழங்கப்பட்டிருந்த கதிரையில் (எல்லாம் கடைசி வரிசை தான்) வந்து அமைதியாக அமர்ந்துகொண்டேன். அன்றைய முதலாம் பாட நிறைவில் நான் யார், எங்கிருந்து வந்தேன், இதற்கு முன்னர் எங்கே இருந்தேன் என்று அறிந்துகொள்ள முன்னாலிருந்த சில மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம். வகுப்பு இடைவேளையில் வந்து பேசத் தொடங்கினார்கள். "எங்கே இருந்தடா வாறாய்? உன்ர பெயர் என்ன? இதற்கு முதல் எங்க படித்தாய்?" இப்படியான சம்பிரதாயக் கேள்விகள். "ரஞ்சித், யாழ்ப்பாணத்திலிருந்து வந்தேன்" என்று அமைதியாகக் கூறினேன். "ஓ, யாழ்ப்பாணமோ, எந்த ஊரடா?" என்று ஒருவன் கேட்டான். அவனும் யாழ்ப்பாணமாக இருக்கலாம். எனது ஊரை அறியும் ஆவல் அவனது கேள்வியில் தொனித்தது. "கோண்டாவில்" என்றேன். அவன் மெய்யழகன். மட்டக்களப்பில் நெடுங்காலம் வாழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீமகாகக் கொண்ட ஒருவன். மதனழகன் என்று அவனுக்கொரு சகோதரன், அதே வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். இவர்களைப்போன்றே சுகந்த் ராமலிங்கம், கிருபாகரன், பிரபாகரன் என்று யாழ்ப்பாணத்துப் பூர்வீக தமிழர்கள். இடையிடையே வந்து விசாரித்துவிட்டுச் சென்றார்கள். இவர்கள் எல்லோருமே முன்வரிசை மாணவர்கள். படிப்பில் சிறந்தவர்கள். ஆசிரியர்கள் அனைவரினதும் பிரபல்யங்கள். ஒரு சிலர் மட்டுநகரில் இயங்கிவந்த பிரபல வியாபார நிறுவனங்களின் உரிமையாளர்களின் பிள்ளைகள்.
    2 points
  5. 🤣 போன் ஸ்கிரீன் ஒ படுத்து விட்டது ஆக்டோபர் வரை வெயிட்டிங்.
    2 points
  6. உண்மைதான். பேரின்பராஜா சேர் போன்றவர்கள் இருப்பது போல சின்னையா போன்றவர்களும் இருக்கிறார்கள். மாணவர்களின் கல்வியில் உண்மையாகவே அக்கறையுள்ளவர்கள் தம்மால் முடிந்தளவிற்கு அவர்களைக் கற்பிப்பார்கள். ஏனையோரைப் பொறுத்தவரை, கற்பித்தல் என்பது வருவாய்க்கான தொழில் மட்டும் தான். உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி ! உங்கள் கருத்திற்கு நன்றி கிருபன், பேரின்பராஜா சேர் எம்மை விட்டுச் சென்றது மிகுந்த துயரினைத் தந்திருந்தது. அதற்குக் காரணம் அவர் எப்போதும் எம்முடன் இருப்பார் என்கிற அசட்டுத் தைரியமும், அவரின் பணி ஒவ்வொரு பாடசாலையாகச் சென்று கற்பிப்பதே என்னும் புரிதலும் இல்லாமல் இருந்ததும் தான். அவரால் பயனடைந்த பலநூறு மாணவர்களில் நானும் ஒருவன் என்பது பெருமைதான்.
    2 points
  7. பலரும் பேச விரும்பாத தலைப்பைத் தொடங்கியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பரவாயில்லை, உங்கள் துணிச்சலைப் பாராட்டவே வேண்டும். உங்கள் தலைப்பிற்கு என்னால் முடிந்த சிறு உதவி. தாயகத்தில் இருக்கும்வரை சிறுவர்களின் அல்லது இளவயதினரின் உளவியல் பிரச்சினைகள் குறித்து எம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்? அல்லது எத்தனைபேர் இதுகுறித்து உதவிகள் கோரியிருக்கிறோம்? "விசர்" என்று நாம் பொதுப்படையாக விளிக்கும் சொல்லுக்கு அப்பால், இதற்கான தேவை குறித்தோ, அல்லது இதன் உண்மையான அர்த்தம் குறித்தோ சிந்தித்திருக்கிறோமா? இல்லையே? அப்படியான பின்புலத்திலிருந்து இன்று புலம்பெயர்ந்திருக்கும் எமது சந்ததி, அதே மனோநிலையில் இருக்கும் என்பது முற்றிலும் சாத்தியமே. மிக அண்மைக் காலம்வரை, அவுஸ்த்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்த தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தகமை மூலமே குடிபெயர்ந்திருக்கிறார்கள்( இப்படிச் சொல்வதால், இங்கே இருக்கும் அனைவருமே அப்படி வந்தவர்கள் என்றோ அல்லது வேறு வழிகளில் வந்தோர் தகமையற்றவர்கள் என்றோ நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல). இப்படி வந்தவர்கள் தமது பிள்ளைகள் ஒரு வைத்தியராகவோ அல்லது ஒரு கணக்காளராகவோ வரவேண்டும் என்பதில் மிகவும் குறியாக இருக்கிறார்கள். இவ்வேலைகளால் தம்மையொத்த காலத்தில் இங்கே குடியேறிய ஏனைய "படித்த" தமிழர்கள் மத்தியில் தமக்குக் கிடைக்கும் அந்தஸ்த்து மற்றும் இவ்வேலைகள் மூலம் தமது பிள்ளைகள் ஈட்டப்போகும் பெருமளவு வருமானம் ஆகிய இரண்டையும் குறியாக வைத்தே எப்படியாவது தமது பிள்ளைகள் இவற்றுள் ஒன்றிற்காவது செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். வெளிப்படையாகப் பார்த்தால், எந்தவொரு அக்கறையுள்ள பெற்றோரும் தமது பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக எடுக்கும் முயற்சிகள் என்று இவற்றைப் பார்க்கும்போது தோன்றும். ஆனால், அங்கேதான் பிரச்சினையும் இருக்கிறது. சிட்னியில் குறைந்தது மூன்று முறையாவது பிள்ளைகள் தமது கல்விகற்கும் காலத்தில் கடுமையான பரீட்சைகளுக்கு தயாராவதில் தமது பள்ளிப்பருவத்தை கழிக்கிறார்கள். நான்காம் வகுப்பில் நடக்கும் ஒப்பர்சுனிட்டி பரீட்சை, 6 ஆம் வகுப்பில் நடக்கு செலெக்டிவ் பரீட்சை மற்றும் 12 ஆம் ஆண்டில் நடக்கும் பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சை . இவை மூன்றுமே மாணவர்கள் மேல் மிகக் கடுமையான கற்றல்ப் பழுவையும், உடல் உள ரீதியான சுமையினை ஏற்றிவிடுகின்றன. இவற்றுள் முதலிரு பரீட்சைகளும் இந்நாட்டில் இயல்பாகவே கெட்டித்தனம் உள்ள பிள்ளைகளை இனம்கண்டு அவர்களுக்கான சிறப்புப் பாடநெறியினை பெற்றுக்கொடுப்பதற்காக என்று அரசாங்கம் சில பாடசாலைகளை நடத்திவரும் வேளையில், தமது பிள்ளைகளை கட்டாயப்படுத்தி, அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட வகையில் கடுமையாக உழைக்கப் பண்ணி எப்படியாவது இப்பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளையும் சேர்ப்பதில் எம்மில் பல பெற்றோர்கள் வெற்றியும் கண்டுவிடுகின்றனர். இவ்விசேட வகுப்புகள் அனுமதிக்கப்படும் பிள்ளைகள் பாடசாலையிலும், தனியார் வகுப்புகளிலும் கொடுக்கப்படும் சிறப்புப் பாடங்கள் மற்றும் அவற்றுக்கான பயிற்சிகளில் தமது விருப்பத்திற்கு மாறாக ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தப்படுவதோடு, பெற்றோர், பாடசாலை ஆகிய இரு தரப்பினரிடமிருந்தும் மிகக் கடுமையான அழுத்தங்களையும், சுமையினையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகி விடுகிறது. பணம் கட்டி ஓடவிடும் குதிரைகள் போல் இக் கல்விப் பந்தயத்தில் ஓடவிடப்படும் பிள்ளைகளில் ஒரு சிலர் இலக்கினை அடைந்தபோதும், பலர் பாதிவழியில் சோர்வடைந்து, மன உளைச்சலாலும், விரக்தியினாலும் கடுமையான பாதிப்புக்களை சந்திக்கின்றனர். வைத்தியர் , கணக்காளர் ஆகிய துறைகள் தவிர்ந்த ஏனைய துறைகளை ஏறெடுத்துக் கூடப் பார்க்க மறுக்கும் பெற்றோர், தமது பிள்ளைகளைத் தாம் கட்டாயப்படுத்தி இவற்றுள் ஒன்றில் அமுக்கிவிடுவதை தாம் தமது பிள்ளைக்குச் செய்யும் ஒரு நற்காரியமாகவே பார்க்கத் தலைப்படுகின்றனர். இதனால், இந்த நோக்கினை அடைவதற்கு எந்த எல்லைவரைக்கும் சென்றுவர பெரும்பாலான பெற்றோர் ஆயத்தமாகவே இருக்கின்றனர். அந்த இலக்கினை அடைவதற்கு பிள்ளைகள் கூறும் காரணங்கள, சங்கடங்கள் குறித்த முறைப்பாடுகள் இவர்களைப்பொறுத்தவரையில் முட்டுக்கட்டைகளாக இருப்பதால், அவற்றை முற்றாக உதாசீனம் செய்வதோடு, தமது பிள்ளைகள் மீதான அழுத்தத்தினை இன்னொரு மடங்கு அதிகரிக்கவும் இதன்போது இவர்கள் தவறுவதில்லை. ஈற்றில் வீட்டிலும் பாடசாலையிலும் தனது பிரச்சினைகள் குறித்து எவரும் அக்கறைப்படாத நிலையில் பிள்ளை ஒன்றில் தவறான நட்பு வட்டத்தில் சிக்கிக் கொள்கிறது அல்லது தன வாழ்வினை முடித்துக்கொள்ள எத்தனிக்கிறது. இவற்றுக்குப் பல உதாரணங்கள் எமது ஈழத் தமிழ்ச் சமூகத்திலேயே இங்கு இருக்கின்றன. ஈற்றில், ஏதோ ஒருவகையில் பிள்ளையின் மனநிலை புரிந்தோர் பெற்றோரைக் கட்டாயப்படுத்தி மனோதத்துவ நிபுணர்களை அணுக வைக்கும்போது, தவறு எங்கே இருக்கின்றது என்பதை இலகுவாகக் கண்டுகொள்ள முடிந்துவிடுகிறது. ஆனால், அந்தக் கட்டத்தில் பிள்ளையின் மனதில் மாற்றமுடியாத காயமோ அல்லது நிலையான தக்கமோ ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்பதில் ஐய்யமில்லை. தமது பிள்ளைகள் எதிர்காலத்தில் செல்வச் செழிப்புடனும், அந்தஸ்த்துடனும் வாழவேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக பிள்ளைகளை கட்டாயப்படுத்தி, இயலாத பந்தயத்தில் ஓடவிடும் பெற்றோர் இன்னமும் எம்மில் இருக்கின்றனர். தமது பிள்ளை தாம் விரும்பும் துறைக்குச் செல்வதை உறுதிப்படுத்த எந்த எல்லைவரைக்கும் செல்லத் தயாராக இருப்பவர்கள் இவர்கள். இதனை அடைவதற்காக பிள்ளை எந்தவிதமான உளவியல் ரீதியான தாக்கத்திற்கு உட்பட்டாலும் கூட, அதனை விலையாகக் கொடுத்து இலக்கை அடைவதில் இவர்களுக்குப் பிரச்சினை இருக்கப்போவதில்லை. இப்படியான பெற்றோருக்கு இவ்வகையான விளக்கங்கள் நிச்சயம் தேவை. ஆனால், அவர்களை இந்த புரிதலுக்கு எப்படி வரப்பண்ணப்போகிறோம் என்பதே சவால்தான்.
    2 points
  8. அவசியமான கட்டுரை ஐயா. ஓய்வூதியத்தை நிறுத்த முயற்சிப்து அராஜகம். இந்தியா போன்ற நாடுகளில் அரச ஊழியர்கள் லங்சம் வாங்கி அநீதி செய்வார்கள் என்று அறிந்துள்ளேன். அவர்கள் செய்யும் இலஞ்ச ஊழல் குற்றங்களுக்கு அவர்கள் தண்டிக்கபட வேண்டுமே தவிர ஓய்வூதியத்திற்கு எதிராக வெகுசனங்கள் செயல்படுவது தவறு. முதலாளித்துவ ஜனநாயகமாக மேற்கு நாடுகளில் ஓய்வூதிய திட்டம் நல்ல முறையில் செயல்படுத்தபடுகின்றது.
    1 point
  9. ஆடைகள் மாற்றும் இடம் என்று வந்திருக்கணும் என்று நினைக்கிறேன் 😀
    1 point
  10. மிகவும் நல்லது. நான் உங்களை குறைநினைக்கவில்லை.
    1 point
  11. இணைப்பிற்கு நன்றி பிரபா ...நான் வீடியோ இன்னும் பார்க்கவில்லை ...எனது கருத்தை ஆறுதலாய் எழுதுகிறேன்
    1 point
  12. கப்பித்தான் நீங்கள் பிழையான ஒரு ஆளிடம் உரையாடுகிறீர்கள், நான் படித்த ஆளெல்லாம் கிடையாது. நீங்கள் ஏதோ சொல்ல முயல்கிறீர்கள் மன்னிக்கவும் எனக்கு புரியவில்லை. வெளிநாட்டிற்கு வந்த ஆரம்பத்தில் எனக்கு ஆங்கிலம் சுத்தமாக வராது (இப்ப கொஞ்சமா வரும் அவ்வளவுதான்). நான் ஒரு வீட்டில் இன்னும் இரண்டு நண்பர்களுடன் தங்கியிருந்தேன், அதில் ஒருவர் ஆங்கிலம் சரளமாகப்பேசுவார் மற்றவர் என்னை போல ஆங்கிலம் அவ்வளவாக வராது. ஆங்கிலம் சரளாமாகப்பேசுபவர்தான் எங்களுக்கு மொழி பெயர்ப்பாளர். என்னைப்போல ஆங்கில சரியாக பேசமுடியாதவர்தான் எங்களை எல்லாம்விட வயதில் மூத்தவர், அவர் வைப்பதுதான் சட்டம். அவர் வைத்த ஒரு சட்டம் வீட்டிற்கு வரும் தொலைபேசியினை பதிலழிக்கும் போது ஆங்கிலத்தில் பதிலழிக்கவேண்டும் என்று. அவர் தனது சட்டத்தினை அவரே நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார், ஆங்கிலத்தில் தொலைபேசியில் பதிலழித்தல். அவர் ஆங்கிலம், மறுமுனையில் இருப்பவர்களுக்கு புரிவது " காலை வணக்கம் நான் ...... பேசுகிறேன், அவ்வளவுதான் அதற்கு பின் அவர் பேசுவது எதுவுமே புரியாது. அவர் அவ்வாறு பேசுவதற்கு காரணம் அவருக்கு மற்றவர்கள் ஆங்கிலத்தில் பேசும் போது ஆங்கிலம் புரிவதில்லை, அதனால் புரியாமல் பேசினால்தான் ஆங்கிலம் என நினைத்துவிட்டார். நான் இப்போது அந்த அண்ணாவின் நிலையில் உள்ளேன், நான் உங்களை எனது அறியாமைக்காக தவறாக சொல்லவில்லை, எனது நிலமையினை உங்களுக்கு புரியவைக்கிறேன்.
    1 point
  13. @விளங்க நினைப்பவன், உங்களது கருத்துக்களுக்கு நன்றி.. நீங்கள் எழுதியிருந்தீர்கள் ஊருக்குதான் உபதேசம் ஆனால் எங்களுக்கு இல்லை என ஒரு விஷயத்தை கூறலாம் என நினைக்கிறேன், தமிழ் மொழி தனியே வீட்டில் பேசுவதால் மட்டும் வளரப்போவதில்லை. கிருபன் அதனைப்பற்றி கூறியுள்ளார். அதனால் மேலும் விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை என நம்புகிறேன். நீங்களும் அதனை ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். பெற்றோரையும் நான் குறை கூற மாட்டேன்.. ஏனெனில் கட்டாயப்படுத்தி ஒன்றை திணிக்க முடியாது என்பதையும் இங்கே ஒத்துக்கொண்டுள்ளனர். அதே போல நான் குறிப்பிடும் தமிழ் ஆர்வலர்கள் இன்னொருவரிடம் போய் எதையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை. தமிழில் உள்ள பற்று காரணமாக வேறு வழிகளில் சமூகத்திற்கு உதவுகிறார்கள் அதற்குள் கற்பித்தலும் ஒரு வழி, அவ்வளவுதான்.. இந்த பதிவில் உங்களது பல கருத்துக்களை கவனித்துவிட்டே இதைக்கூற விரும்பினேன். குறை நினைக்க வேண்டாம் ———————————————— @தமிழ் சிறிஅண்ணா, @Paanchஅங்கிள், @Eppothum Thamizhanஅண்ணா மற்றும் @ரதி உங்கள் அனைவரது கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..
    1 point
  14. சிங்களவரும், முஸ்லீம்களும்... நாட்டுக்கு கிடைத்த சாபத்தை, தங்களின் வசதிக்கு ஏற்ற மாதிரி... சொல்கிறார்கள். ஆனால்... நாட்டில் 70 வருடமாக, புரையோடிப் போன இன வெறி, அதனால் ஏற்பட்ட யுத்த செலவுகள், ஒன்றரை லட்சம் தமிழ்மக்களை கொன்ற சாபத்தை.. வசதியாக, மறைத்து விடுகிறார்கள்.
    1 point
  15. சுப.சோமசுந்தரம் அவர்களே…. சமூக நலன் சார்ந்த… அருமையான கட்டுரைக்கு நன்றி. இதனை…. அரசியல்வாதிகள், அதிகாரிகள் வாசித்து விளிம்பு நிலையில் வாழ்கின்ற மூத்த குடி மக்களின், இறுதிக் கால வாழ்வை… நிம்மதியாக கழிக்க உதவ வேண்டும்.
    1 point
  16. ஐரோப்பா மற்றும் தென்னமெரிக்காவில் இருக்கும் பிச்சைக்கார நாடுகளில் கூட இந்த நிலைமை இல்லை. வெள்ளையனே வெளியேறு என்று விட்டு இன்றும் 80 வருடங்களுக்கு முந்திய நிலையிலேயே உள்ளார்கள். வானுயர்ந்த கட்டிடங்களும் மேம்பாலங்களை வைத்து நாடு முன்னேறி விட்டது என கருதுகின்றார்ளோ தெரியவில்லை.😁
    1 point
  17. எங்களது அவுஸ்ரேலிய தமிழ் சமூகத்தைப் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளீர்கள்.. அது மட்டுமல்ல இங்கே உங்களது கருத்தினை பகிர்ந்தமைக்கும் நன்றிகள். நீங்கள் கூறியபடி பெற்றோருக்கு விளங்க வைப்பது ஒரு சவால்தான். அதனால்தான் இந்த தடம் உறுப்பினர்கள கூட பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பிழையென ஒரு போதும் கூறவில்லை, ஆனால் அவர்கள் கூற வருவது பெற்றோரது அனுகுமுறை, இளையோரின் எதிர்பார்ப்பினை விளங்கிக் கொள்ளல், பிரச்சனைகள் வருமிடத்து எப்படி உதவிகளை நாடி ஆரோக்கியமான சமூதாயத்தை உருவாக்க முயல்வதே.. இல்லை.. அதனால்தான் அங்கே உருவாகிக்கொண்டிருக்கும் பல உளவள சம்பந்தமான பிரச்சனைகளை இலகுவில் விட்டுவிட முடியாது என நம்புகிறேன். அவர்களுக்கும் ஏதோவொரு வகையில் இந்த மாதிரியான உதவிகள் கிடைக்கவேண்டும் என விரும்புவதாலேயே தடம் பற்றி இங்கே பதிந்துள்ளேன்.
    1 point
  18. துணிச்சலா??? எனது தந்தை அடிக்கடி கூறுவார் “பிள்ளை நீயொரு பயந்தாங்கொள்ளி, உன்னை நினைத்துதான் எனக்கு கவலை என்று” நீங்கள் என்னவென்றால் நான் துணிச்சல் உடையவள் என்கிறீர்கள்.. நல்ல பகிடிதான்
    1 point
  19. புதிதாக வீடு கட்ட தொடங்குபவர்கள் நீங்கள் கூறியபடி பல பிரச்சனைகளை எதிர்வுகொள்கிறார்கள். ஆனாலும் எத்தனை வீதமாக குறைந்துள்ளது என்ற தரவை நான் கவனிக்கவில்லை. விலை அதிகரித்துள்ளது அது மட்டுமல்ல கட்டட துறையிலும் வீழ்ச்சி உள்ளது. இங்கே நான் இணைத்துள்ள செய்தி இணைப்புகளில் கூட வீட்டின் பெறுமதி குறைந்து வருகிறது எனவும் இன்னொரு வட்டி வீத உயர்வையும் கூறியுள்ளார்கள்.. பார்ப்போம்.. https://amp.smh.com.au/property/news/home-values-drop-as-interest-rates-costs-of-living-squeeze-buyers-20220630-p5axxh.html https://7news.com.au/politics/borrowers-set-for-another-big-rate-rise-c-7387520.amp உங்களைப்போல ஆழமாக விஷயங்களை அறிவதில்லை, ஆனாலும் அடிப்படை அறிவு கொஞ்சம் உள்ளது. அவ்வளவுதான். மற்றப்படி இவற்றை வாசிப்பது ஒரு ஆர்வத்தினால் மட்டுமே.
    1 point
  20. உண்மைதான். தம்பி இயக்கத்தில் இணைவதற்கு அப்பாவும் ஒரு காரணம். ஆனால், அவனுக்கு வேறு காரணங்களும் இருந்தன என்றே நினைக்கிறேன். 1986 இல் இயக்கத்தில் இணைவதற்கு நண்பன் ஒருவனுடன் முயன்றேன். ஆனால், வீட்டில் பயம் காரணமாக அது கைகூடவில்லை. அதுமட்டுமில்லாமல், அப்போது எனக்கு வயது வெறும் 13 தான். புலிகளும் சேர்த்திருக்க மாட்டார்கள். அதற்குப்பின் இயக்கத்தில் இணைவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கவில்லை.
    1 point
  21. பொறிமுறை.. பொறிமுறை.. அறிவுரை, ஆலோசனை சொல்கின்ற நேரம் எலி பொறி தயார் செய்திருந்தாலோ .. அட சோள பொறி வறுத்து ஏற்றுமதி செய்திருந்தால் கூட பாதி கஷ்டம் தீர்ந்து இருக்கும்.. 👍
    1 point
  22. நான் நினைக்கவில்லை, பிள்ளைகள் பிறந்து 3 - 4 மாதங்களிலேயே தனியறைக்குள் விடுவது ஒரு காரணம் என்று. அதிலும் எங்களது சமூகத்தில் இதற்கான சாத்தியங்கள் குறைவு என்றே நினைக்கின்றேன். தரவுகளும் என்னிடம் இல்லை. சரி அப்படி பிறந்து 3 - 4 மாதங்களிலேயே தனியறைக்குள் விட்டாலும் கூட வளரும் பெற்றோர் பிள்ளைகளின் உறவு, இவர்களுக்கிடையேயான தொடர்பாடல் நெருக்கம், பிள்ளைகளின் தன்மைக்கு ஏற்ப, அவர்களின் செயல்திறனிற்கு ஏற்ப வழி நடத்துவது போன்றனவும் தாக்கம் செலுத்தும் என நம்புகிறேன்.
    1 point
  23. பல வருடங்களாக மூடப்பட்டிருந்த யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறந்து இயங்க வைப்பதில் பல நடைமுறை சிக்கல்களுக்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்படலாம். JAF என்ற குறியீட்டுடன் சர்வதேச விமான நிலையமாக அழைக்கப்படுவதால் அதற்கென சில கெடுபிடிகள் உண்டு. உதாரணமாக பயணிகளுக்கான குடிவரவு குடியகல்வு கண்காணிப்பு, அவர்களுக்கு வேண்டிய இதர வசதிகள், பயணிகள் பாதுகாப்பு என்பனவற்றுடன் விமான நிலைய தொழில்நுட்ப பணியாளர்கள், விமானங்களுக்கு 4-5 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்புக்கு உத்தரவாதம் என்பனவும் அடங்கும். இருப்பினும் சிறிய தொலைவுகளுக்கு பறக்கும் விமானங்கள் தாம் செல்லும் இடங்களில் எரிபொருளை நிரப்புவதை தவிர்க்க வேண்டுமாயின் (உதாரணமாக எரிபொருள் தட்டுப்பாடு, விநியோக தடங்கல், வேலை நிறுத்தம், அதிக விலை காரணமாக) புறப்படும் இடத்திலிருந்தே மேலதிக எரிபொருளை ஏற்றிக்கொண்டு(fuel tankering) புறப்படவேண்டும். இதன் காரணமாக விமானங்கள் மேலதிக எடையுடன் பறந்து செல்லும்போது வழமையிலும் பார்க்க அதிகமான எரிபொருளை பயணத்தின்போது பயன்படுத்தவேண்டி ஏற்படும். நிர்வாக செலவீனத்தில் 25-40% வரை எரிபொருளுக்கே செலவாகின்றது என கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் fuel tankering செய்வதால் இச்செலவு மேலும் அதிகரிக்கும். தேவையில்லாத பாரத்தை ஏற்றிக்கொண்டு புறப்படும் விமானம் அதிக சுமை காரணமாக இன்னும் அதிக எரிபொருளை எரித்து வளிமண்டலத்தை அசுத்தம் செய்ய காரணமாக அமையும். இதனால் ஏற்படும் மேலதிக CO2 வெளியேற்றம் பல தொன் நிறைக்கு செல்ல வாய்ப்புண்டு. சர்வதேச விமான கம்பனிகள் கடந்த காலங்களில் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தமது விமானங்களில் தேவையற்ற மேலதிக சுமைகளை அனுமதிப்பதில்லை. இந்த விதிகளை மீறும் கம்பனிகள் சர்வதேச மட்டத்தில் மதிப்பை இழக்க நேரிடலாம்.
    1 point
  24. எனது இலக்கு உக்ரேன் என்கிற உரோமம் கிடையாது ரசியா என்கின்ற மலை??🤣 அந்த நாள்???🤣
    1 point
  25. நன்றி அங்கிள்.. கடந்த சில மாதங்களாக பதின்ம வயதினரின் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. பதின்ம வயதினருக்கு ஏற்படும் சில சிக்கல்களை பெற்றோரிடம் வந்து கூறுவதில்லை, அதற்கான சூழலையும் பெற்றோர்கள் கொடுப்பதில்லை (விதிவிலக்கான பெற்றோரும் உள்ளனர்). இந்த பிள்ளைகள் போக்கிடம் தெரியாமல் தவறான நட்புடன் சேரல் இல்லாவிடில் முழுமையாக ஒதுங்குதல் போன்ற நிலைகளை அவதானிக்க முடிகிறது. அதனால்தான் இதனை இணைத்தேன். எங்களது சமூகத்தில் மனவள சம்பந்தமான பிரச்சனைகளை வெளியே கதைக்க இன்னமும் தயங்குகிறார்கள். இது சம்பந்தமான வேலைகளில் ஈடுபடுவோரை சுட்டிகாட்டி அந்த psychologistற்கு தான் பிரச்சனை, இந்த பிரச்சனைகளை பெரிது படுத்த தேவையில்லை, வெளியே சொன்னால் அவமானம் என blackmail செய்வது etc என ஏதாவது காரணங்களை கூறி தட்டிக் கழித்து விடுவார்கள். பிறகு ஏதாவது நடந்த பின் வேதனைப்படுவார்கள். இந்த நிலை மாறவேண்டும். எங்களுக்கு இருக்கும் வசதிகளை நாங்கள் பயன்படுத்தவேண்டும். அவ்வளவுதான்
    1 point
  26. கபிதன் உங்களுக்கு யாழ் கள உறுப்பினர்களை தாக்கமால் ......கருத்துகளைத் தாக்கி கருத்து எழுதத்தெரியாத? அல்லது உங்களிடம் தலையங்கத்துக்கு கீழ் செல்லப்பட்ட விடயத்துக்கு கருத்துகள் இல்லையா? இந்த சண்டையை பார்த்தால் யானை எலியை தாக்குவது போலுள்ளது ...யானை போக முடியாத இடமெல்லாம் எலி போகும்… என்பதையும் யானைக்கு இல்லாத திறமைகள் எலியிடம் உண்டியென்பதையும் யானை விரைவில் புரிந்து கொள்ளும் காலம் வரும் உக்ரேன் மேற்குநாடுகளிடமிருந்தும் ..அமெரிக்காவிலிருந்தும். ஆயுதங்களைப்பெறறுக்கொள்கிறது. ஏன் வேண்டாம் என்று கூறவில்லை......? ரஷ்யா சரியாக நடத்திருந்தால். உக்ரேன் ஒருபோதும் மற்ற நாடுகளிடமிருந்து ஆயுதங்களை பெற்றிருக்காது. இது ரஷ்யாவின் முதலாவது தோல்வி சும்மா இருந்த சுவீடனும் பின்லாந்தும நோட்டோவில் சேர்க்கப்பட்டது இரண்டாவது தோல்வி எதிர்காலத்தில் எரிவாயு எரிபொருள் விற்பனைக்கு வடிக்கையாளர்களைஇழந்தது மூன்றாவது தோலவி .....அதுவும் ஜேர்மனி யை இழப்பது பாரிய தோல்வி..... இனி தொடர்ந்தும் ரஷ்யாவுக்கு தோல்வி தான் இது என்னுடைய உறுதியான கருத்துகள் மாறாக மேற்க்குயான பரப்புரை இல்லை. 🤣
    1 point
  27. நல்லதொரு பதிவு. இணைப்புக்கு நன்றி சகோதரி.
    1 point
  28. 1. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தேசவழமை சட்டத்தால் ஏற்படும் பிரச்சனை , 2. மற்றது சாதி அடிப்படையில் வாங்குவதை தடுப்பது (முக்கியமாக ) தேசவழமை சட்டத்தை எடுத்தாலும், 2 கட்டாயம் இருக்கும். இதை சொத்துக்கள் விற்கும் முறையை (அதாவது குறிப்பிட்ட காலத்துக்கு பகிரங்கமாக அறிவித்தலில் இருக்க வேண்டும்) சட்ட அடிப்படியில் மாற்ற வேண்டும் (swiss model மிகவும் வெளிப்டையானதும், விலையை அளவுக்கு அதிகமாக உயர்த்தி விலைப்படுவதை தடுக்க முடியாது, விற்க வருமாயின் உண்மையான விற்கவேண்டிய தேவை உள்ளவர்களே விற்க முனைவதை மிக நேர்த்தியாக உறுதிப்படுத்த முனைவது சுவிஸ் model). அதனால், இப்போதைய நிலையில் (அல்லது எப்போதும்) தேச வழமை சட்டத்தை சட்டத்தை நீக்கி 2 ஐ நிவர்த்தி செய்ய முடியாது. 1 க்கு சிறப்பு சட்டம் தேவை, தேச வழமை இருப்பது (என்னை பொறுத்தவரையில்) 1க்கு இன்னும் பாதுகாப்பு இப்போதைய நிலையில். 1இல் தற்செயலாக பிள்ளைகளோ அல்லது உறவுகளோ நோய்வாய்ப்பட்டு, வசதி இல்லாமல் இருந்தால், உரியவருக்கு போய் சேரும் என்றால் தாமதிப்பதில் disproportionate ஆக எவரையும் பாதிக்காது. 14 வருடங்கள் சொத்துக்களை உரிமையா கோராமல் இருப்பது மிக நீண்ட காலம் அல்ல, அதுவும் காணாமல் போன நிலையில். மற்றது, காணாமல் போனவர்கள் பிரச்னை தீர்க்கப்படவில்லை. 1 விடயத்தில், எப்போதும் சொத்துக்களை ஆறுதலாக, நிதானமாக அணுகுவதே நல்லது. உரியவருக்கு சேரும் வாய்ப்புகள் மிக அதிகமாகும். நீங்கள் இதை சொல்லத்தான் தெரிகிறது, உரிமை கோரப்படாத அரச நில சொத்துக்களை அல்லாத சொத்துக்களை (சிங்களவருக்கு ) எடுப்பதற்கும் வசதியாக இருக்கும் நோக்கில் மாற்றப்படுகிறதோ என்றும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.
    1 point
  29. எனக்கும் இப்ப கொஞ்ச காலமாக நன்றாக பழகியவருடன் மனம்விட்டு பேசிக் கொண்டிருப்பேன். ஆனாலும் அவரது பெயர் ஞாபகத்துக்கு வராது. முதலில் கொஞ்சம் வெட்கமாகவும் கஸ்டமாகவும் இருந்தது. எனக்கும் அப்படித் தான் என்று பலர் சொன்னபின் கொஞ்சம் ஆறுதலாக உள்ளது. உங்களில் யாருக்காவது இந்தப் பிரச்சனை?
    1 point
  30. 4 அல்லது 5 மாதங்களுக்கு முன்னர், இலங்கை பணம் வலு இழந்தால் இந்திய பணம் பயன்படுத்தப்பட சாத்திய கூறு அதிகமுள்ளது என நான் கூறியபோது, ரதி, நீங்கள் கேட்டிருந்தீர்கள் அது எப்படி சாத்தியம் என. இரு வேறுபட்ட நாணயமாற்று விகிதத்தில் அது சாத்தியமா என்பதான கேள்வி என நினைக்கிறேன். வெறுமனே ஒரு சிம்பாவே காணொளி ஒன்றினை பதிலாக போட்டுவிட்டேன், மன்னிக்கவும், ஆனால் உண்மையில் வேறு நாட்டு பணத்தினை மற்ற நாட்டில் பதீலீடாகப்பாவிக்கும்போது மேலே கூறுவது போல் பிரச்சினைகள் இருக்குமா என்பது அப்போதும் தெரியாது, இப்போதும் தெரியாது. ஒரு நாட்டின் முகப்பெறுமதி நாணயத்தினை ( Fiat currency) பாதுகாப்பது, குறித்த நாட்டின் அரசினால் உருவாக்கப்படவோ அல்லது அந்த நாட்டின் சட்டம் மூலம் பாதுகாக்கப்படுவதில்லை, அதனை மக்களே அதற்கான அங்கீகாரத்தினை அந்த பணத்தின் மீது வைக்கும் நம்பிக்கையால் உருவாக்குகிறார்கள். இதனை நான் கூறவில்லை, பொருளாதார நிபுணர் கார்ல் மேக்னர் கூறுகிறார். அது ஒரு உண்மையும் கூட உதாரணமாக சிம்பாவேயில் பல ஆண்டுகளுக்கு முன் சிம்பாவே அரசினால் வெளியிடப்பட்ட சிம்பாவே 100 டொலருக்கு சட்ட அங்கீகாரம் கூட இருக்கலாம் ஆனால் இப்போது அதற்கு பழய மதிப்பினை பெறமுடியாத ஒரு அரச குப்பை. பணத்தின் முக்கிய தொழில்பாடு பர்மாற்று ஊடகமாகத்திகழ்வது (Medium). ஒரு நாட்டில் அதன் எல்லைக்குள்ளேயே, அதிலும் குறிப்பாக அரச வளாகத்திற்குள்ளேயே அந்த நாட்டின் பணத்திற்கு மேலாக சிகரட் பரிமாற்று ஊடகமாகத்திகழ்கிறது, அது சிறைசாலைக்குள். வங்கி காசோலைகள் கூட முகப்பெறுமதி மட்டும் கொண்டவை, அதற்கு அரசினால் உருவாக்கப்பட வேண்டும் என்றோ அல்லது சட்ட அங்கீகாரமும் தேவையில்லை அதனை பயன்படுத்தும் மக்கள் அங்கீகரித்தால் போதும். இதனை Fiduciary money என்பார்கள் அதே போல இந்திய நாணயமும் பயன்படுத்தலாம் எனும் அபிப்பிராயத்திலே இருந்தமையால் அதனை ஆளமாக நோக்கவில்லை. கோசான் ஒரு சுவாரசியமான ஒரு கருத்தை தொடங்கியிருந்தார், அதற்கு பதிலழித்த கடஞ்சாவின் பதில் எனக்கு முதற்தடவையாக இன்னொரு பரிணாமம் இருப்பது தெரிகிறது, ஆனால் அது தொடர்பாக இணையத்தில் எதுவும் இல்லாத்தனாலேயே அதனை விளக்கமாக கூறுமாறு கேட்டேன்.
    1 point
  31. ஒரு நிருபர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் கேட்டார்: உங்கள் அம்மா ஏன் இன்னும் உங்களுடன் வாழ்கிறார்? ஏன் அவளுக்கு வீடு கட்டக்கூடாது? கிறிஸ்டியானோ ரொனால்டோ: என் அம்மா எனக்காக தன் உயிரை தியாகம் செய்து என்னை வளர்த்தார். நான் இரவில் சாப்பிடுவதற்காக அவள் பசியுடன் தூங்கினாள். எங்களிடம் பணம் இல்லை. அவள் வாரத்தில் 7 நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் என் முதல் கால்பந்து உபகரணங்களை வாங்க கிளீனராக வேலை செய்தாள். நான் ஒரு வீரராக முடியும், என் முழுமையான வெற்றி அவளுக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. நான் வாழும் வரை, அவள் எப்போதும் என் பக்கத்தில் இருப்பாள், அவளுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் தருவேன்.அவளுக்கான அடைக்கலம் மற்றும் என் மிகப் பெரிய பரிசு நான். பணம் மக்களை செல்வந்தர்களாக மாற்றாது உண்மையில் சிலர் மிகவும் ஏழ்மையானவர்கள். அவர்களிடம் இருப்பது பணம் மட்டுமே. வாழ்வில் பரிசுகள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி செலுத்துவதில் உண்மையான செல்வம் காணப்படுகிறது.
    1 point
  32. ஒல்லாந்தர் காலத்தில் இருந்த சட்டங்கள் இன்று அவசியமற்றவை. பொதுவான சட்டங்களே போதுமானவை. https://ta.wikipedia.org/wiki/தேசவழமைச்_சட்டம் : தேச வழமைச் சட்டத்தின்படி சொத்துடைமைகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை முதுசம், சீதனம், தேடிய தேட்டம் ஆகியனவாகும். முதுசொம் என்பது கணவர் வழிவந்த மரபுரிமைச் சொத்தாகும். சீதனம் என்பது மனைவியின் தாய் வழி வந்த மரபுரிமைச் சொத்தாகும். தேடிய தேட்டம் என்பது கணவனும் மனைவியும் தங்கள் மண வாழ்வின் போது தேடிக் கொண்ட சொத்துக்களாகும். ஒரு குடும்பத்தின் புதல்வியர் தாயின் சீதனச் சொத்தையும், புதல்வர் தந்தையின் முதுசொச் சொத்தையும் அடைவர். தேடிய தேட்டமானது புதல்வரிடையேயும் புதல்வியரிடையேயும் சரி சமமாகப் பிரிக்கப்படுகின்றது. இவ்விதம் பரம்பரைச் சொத்தானது கணவனுடனும் மனைவியுடனும் தனித்தனியாக பேணப்படுகிறது. ஒரு விதவை மறுமணம் செய்யுமிடத்து அவருடைய சீதனச் சொத்தானது அவருடைய இருமண புதல்வியருக்கும் பங்கிடப்படுகின்றது. மனைவியை இழந்தவர் மறுமணம் செய்யுமிடத்து அவருடைய இறந்த மனைவியின் சீதனச் சொத்துக்களை அம்மனைவியின் பெண்பிள்ளைகளுக்கும், தனது முதுச சொத்துக்களில் பாதியை அம்மனைவியின் ஆண் பிள்ளைகளுக்கும், தேடிய தேட்டத்தில் பாதியை அம்மனைவியின் எல்லாப் பிள்ளைகளுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்தல் அவசியமாகிறது.
    1 point
  33. றஞ்சித் இப்போது தான் முழுமையாக வாசித்து முடித்தேன். சிறிய வயதில் குடும்ப சூழலால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்.அதனால்த் தான் உங்கள் தம்பியும் இயக்கத்தில் சேர்ந்திருக்கிறார் என எண்ணுகிறேன். தம்பியைத் தொடர்ந்து உங்களுக்கும் அப்படி ஒரு எண்ணம் எழவில்லையா? தொடர்ந்தும் யாழில் இருந்திருந்தால் குழப்பம் வந்திருக்கலாம். இப்போது கூட உங்களை எண்ண மிகவும் சந்தோசமாக உள்ளது. சிறிய வயதில் சந்தோசம் மட்டுமே அனுபவிக்க வேண்டிய வயதில் மிகவும் ஏக்கம் நிறைந்த சோகமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறீர்கள். இத்தனை துன்பத்திலும் கடவுள் மாதிரி ஒரு ஆசிரியர் வந்தது பெரியதொரு திரும்பு முனையே. நீங்கள் சிறுவயதில் பட்ட துன்பங்களுக்காக இன்று நல்லதொரு நிலையில் இடத்தில் இருக்கிறீர்கள்.மிகவும் சந்தோசமாக உள்ளது. முன்வாங்கு மாணவர் செல்வாக்குள்ள மாணவர் என்று சகல பள்ளிகளிலும் இருப்பார்கள் போல தோன்றுகின்றது. கடைசியாக வேடிக்கை என்னவென்றால் உங்கள் நண்பர்களை அடையாளம் புரிந்து தற்போது என்னென்ன செய்கிறார்கள் என்று @ரதிஎழுதியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
    1 point
  34. ஆசிரியர்கள் என்கிற வகையில் என்னை அதிகம் பாதித்தவர் பேரின்பராஜா சேர். அடுத்ததாக நான் அதிகம் மதிப்பு வைத்திருப்பவர் பிரேம்நாத் மாஸ்ட்டர். அவர்பற்றியும் முன்னர் ஒருமுறை எழுதியிருக்கிறேன். இவர்களின் பாதிப்பும், அவர்களுடனான் எனது நினைவுகளும் என்றுமே மறக்கமுடியாதவை. உங்களின் ஆதரவிற்கு நன்றி சுவி. எனது எழுத்து நடை எப்போதுமே ஒரே மாதிரியேதான் இருக்கிறது. இதனை மாற்ற என்னால் முடியவில்லை. சிலருக்கு இதனைப் படிக்கும்போது "ஒரே மாதிரி எழுதுகிறான்" என்கிற சலிப்பும் உருவாகலாம். அடுத்ததாக, எனது அனுபவக் குறிப்புகளில் சில வெறும் அனுபவங்கள் மட்டும்தான். பெரிதாக எதுவுமே இருப்பதில்லை. ஆனாலும், அனுபவத்தினை இங்கு பலருடன் பகிரும்போது ஒரு ஆத்ம திருப்தி ஏற்படுகிறது. அதனால் எழுதுகிறேன். அத்துடன், எனது அனுபவங்களில் யாழில் இருக்கும் ஒருசிலராவது வந்துபோவார்கள், குறைந்தது நான் எழுதும் விடயங்கள் பற்றி அறிந்திருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கும் எனது அனுபவக் குறிப்பு ஒரு நினைவு மீட்டலாக மாறியிருக்கிறது. மிக்க நன்றி சிறி, நான் எழுதுவதை படிக்கும் ஒரு சிலரில் நீங்களும் ஒருவர். உங்களின் ஆதரவுக்கு எனது நன்றிகள். உங்களின் கருத்தைப் படித்து மிகவும் மகிழ்ந்தேன். எனது எழுத்து உங்களையும் எனது அனுபவப் பகிர்வில் ஒருவனாக உணரவைத்தது என்பது மனநிறைவைத் தந்தது. மிக்க நன்றி ! மிக்க நன்றி சுவைப்பிரியன். நீங்களும் மட்டக்களப்பில் வாழ்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சிலவேளை நான் குறிப்பிடும் ஆசிரியர்கள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும். எனக்குத் தெரியும் அண்ணா. நான் எழுதும் எல்லாக் கட்டுரைகளிலும் நீங்கள தவறாது வந்து கருத்துப் பகிர்ந்திருக்கிறீர்கள். தொடர்ச்சியாக உற்சாகமூட்டி ஆதரவளித்திருக்கிறீர்கள். வழமைபோல, இன்றும் உங்களின் அயராத ஆதரவிற்கு நன்றியண்ணா! நன்றி குமாரசாமியண்ணை. உங்களுடன் இக்களத்தில் பலவிடங்களில் முரண்பட்டு எழுதியிருக்கிறேன். அப்படியிருந்தும் நீங்கள் தொடர்ந்தும் எனது அனுபவக் குறிப்புக்களில் ஆதரவு தந்துவருகிறீர்கள். மிக்க நன்றியண்ணா! நீங்கள் கூறுவது மெத்தச்சரி. பேரின்பராஜா சேர் வந்திருக்காவிட்டால் நிச்சயம் எனது வாழ்வு மாறிப்போயிருக்கும். ஆம், நான் அதிஷ்ட்டசாலிதான். கமலா டீச்சருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். பாடசாலையில் படித்த காலத்திலும், பலகலைக் கழக அனுமதிக்குக் காத்திருந்த காலத்திலும் அவர் எனக்கு உதவியிருக்கிறார். கண்டிப்பானவர், ஆனால் உதவும் மனம் கொண்டவர். அவர் மரணித்த செய்தி கேள்விப்பட்டேன். அவரது மூத்த மகன், பிலிப் இங்குதான் இருக்கிறார். பலமுறை அவரைக் கண்டு பேசியிருக்கிறேன். தேவநம்பி என்று இன்னொரு மகனும் அந்தக் காலத்தில் எமக்கு ஒரு வகுப்பு மேலே படித்தார். இப்போது பொறியியலாளராக இருக்கிறார் என்று நினைக்கிறேன். எமது வகுப்பில் படித்த பல மாணவர்கள் பலகலைக் கழகம் சென்றார்கள். மதனும், சுகந்தும் வைத்தியர்களானார்கள். ராதா, கிரிந்தி, மெளலி ஆகியோர் பொறியியிலாளர்களானார்கள். மெய்யழகன் பட்டப்படிப்பு முடித்ததாகக் கேள்விப்பட்டேன். பிரபா தொழிநுட்ப அதிகாரியாகவும் ஏனையவர்கள் நல்ல துறைகளில் தொழில்புரிவதாகவும் அறிந்தேன். ஆம், அந்த வகுப்புக் கொஞ்சம் பிரபலம் தான். எனது நண்பர்களையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் ரதி. உலகம் சின்னதுதான். உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி !
    1 point
  35. எனது வாழ்க்கையில் என்னை மிகவும் பாதித்த, தாக்கத்தினை உண்டாக்கிய மனிதர்கள் பற்றிப் பேசவேண்டும் என்று விரும்பினேன். அதனால், அவ்வப்போது இவர்கள் பற்றி எழுதிவருகிறேன். இதன்மூலம் எனது சிறுவயது நினைவுகளை இரைமீட்டிப் பார்க்கவும் என்னால் முடிகிறது. பேரின்பராஜா சேர் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர். இடையிடையே கல்வித்திணைக்களத்தின் மூலம் வெவ்வேறு பாடசாலைகளுக்குச் சென்று கஷ்ட்டப்படும் மாணவர்களுக்கு கணிதத்தினைக் கற்பிப்பதில் தேர்ச்சி பெற்றவர். கணிதத்தின்மீது எனக்கு விருப்பினை உருவாக்கியவர் அவர்தான். அவரன்றி இன்று ஒரு பொறியியலாளனாக நான் வந்திருக்கச் சாத்தியமில்லை என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். ஆகவேதான் அவர்பற்றிப் பேசுவேண்டும் என்று விரும்பினேன். இதே காலத்தில் இன்னும் பல ஆசிரியர்களும் எனக்குக் கற்பித்தார்கள். அகஸ்டின் டீச்சர் மூலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் நாடகம் ஒன்றிலும் பங்குகொள்ளும் அனுபவம் கிடைத்தது. நத்தார் கால ஒளிவிழா நிகழ்வுகளில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை அரங்கேற்ற அவர் பட்ட பாடும், எம்மைப் பயிற்றுவிப்பதில் அவர் காட்டிய ஈடுபாடும் மெச்சத்தக்கது. தனது சொந்தப் பிள்ளைகள் போலவே அவர் எம்மை நடத்தினார். சுயநலமின்றி பிள்ளைகளை வழிநடத்தி, தம்மால் முடிந்தளவு முன்னேற்றப் பாடுபடும் இவர்கள் போன்ற ஆசிரியர்களிடம் கற்றது எனது பாக்கியமே. அதேபோல கோமதி டீச்சர். பாடசாலையில் எனது வகுப்பிற்கு வர்த்தகமும் கணக்கியலும் அவர் கற்றுத்தருவதில்லை. ஆனால், நான் ஒருமுறை அவரிடம் கணக்கியலில் உதவி கோரியிருந்தேன். எனக்கு பாடசாலையில் அவர் படிப்பிக்காதபோதும், மாலை நேரங்களில் இன்னும் ஒரு நண்பனுடன் அவரின் வீட்டிற்கு அழைத்துக் கற்றுத்தந்தார். டியூஷன் பணத்தை வாங்க மறுத்து சில மாதங்களாவது எமக்குச் சொல்லித் தந்தார். ஆங்கிலம் கற்றுத்தந்த சேவியர் டீச்சர். சொந்தப் பிள்ளைகளுடன் பேசுவது போல மிகவும் அன்பாகவும், இயல்பாகவும் எல்லோருடனும் பேசும், பழகும் அவர் வகுப்பிற்கு வந்தாலே கலகலப்பாகிவிடுவோம். மாணவர்கள் மேல் அவர் வைத்திருந்த நேசம் உண்மையானது. அதே போல தமிழ் கற்றுத்தந்த மணியம் (பெயர் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்) மாஸ்ட்டர். வகுப்பில் இறுதிவாங்கில் இருக்கும் ஒருவனால் விவரணக் கட்டுரையும் எழுதமுடியும் என்று முழு வகுப்பிற்கும் சொல்லிக் காட்டியவர் அவர். மாலை நேரக் காட்சியை வர்ணித்து எழுதுங்கள் என்று கூறியபோது, நான் எழுதிக்கொடுத்த கட்டுரையினை, சுகந்தை அழைத்து, "இதை முன்னுக்கு வந்து நின்று சத்தமாக வாசி" என்று அவர் கூறவும், சுகந்தும் அதனைப் படித்து முடித்தான். வாசித்து முடித்தவுடன், "ஆர் இதை எழுதியது? " என்று கேட்கவும், நான் கையை உயர்த்திக் காட்டினேன். அன்றிலிருந்து வகுப்பில் தமிழ்க் கட்டுரை எழுதுவதென்றால், என்னிடம் மாணவர்கள் வருவதும் நடந்தது. இவர்கள் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் எனது வாழ்க்கையை தீர்மானித்திருக்கிறார்கள்.இவர்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
    1 point
  36. வித்தியாசமான சமையல்களை... சுவையாக செய்து காட்டும், உங்கள் அம்மாவிற்கு நன்றி.
    1 point
  37. இவர்களைத் தவிரவும், இன்னும் சில மாணவர்கள் அங்கே இருந்தார்கள். குறிப்பாக எனதருகில் அமைதியாக இருந்த ஆரைப்பத்தைச் சிவலிங்கம், ஜெயந்தன் என்கிற மட்டக்களப்புப் பூர்வீக மாணவர்கள். எளிமையானவர்கள். பழகுவதற்கு இனிமையானவர்கள். என்றோ சந்தித்ததுபோன்று என்று சொல்வார்களே, அதுபோலத்தான் அவர்களின் நட்பும். சட்டென்று மனதில் ஒட்டிக்கொண்டார்கள். மிக இயல்பாகவே மச்சான் என்று விழித்துப் பேசிய சிவலிங்கம். அவ்வயதிலும் அழகழகாகக் கவிதை எழுதுவான். இடைக்கிடை எழுதியவற்றை என்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புவான். கவிதை என்றால் என்னவென்று எனக்குத் தெரியாத பருவத்தில் கவிதைபற்றி விபரிக்கும் அவனை வியப்புடன் பார்த்திருப்பேன். அவனது தந்தை மட்டக்களப்பு அரச நிர்வாகத்தில் அதியுயர் பதவியில் இருந்தார் என்று அவன் கூறிய ஞாபகம், ஆனால் அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் மிக எளிமையாக இருந்தான். என்னுடன் அடிக்கடி, "வாடா, கைச்சண்டை போட்டுப் பாப்போம்" என்று அழைப்பான். விடுதியில் வெறும் பாணும், சொதியும் தினமும் சாப்பிடும் எனக்கும் வீட்டில், ஓரளவு தரமான உணவை உட்கொண்டு வரும் அவனுக்கும் இடையே நடக்கும் கைச்சண்டையினைப் பார்க்க சிறு கூட்டமே கூடிவிடும். பலமானவன், அவனுடன் தோற்றாலும் வெட்கப்படவில்லை. யாரிடம் தோற்றுப்போனோம், சிவலிங்கத்திடம் தானே? என்று மனது ஆசுவாசப்பட்டுக்கொள்ளும். அதேபோல ஜெயந்தன். குருக்கள் மடத்தைச் சேர்ந்தவன். அறிவாளி. மிகவும் எளிமையானவன். பண்பானவன். உதட்டில் எப்போதுமிருக்கும் சிறு புன்னகையுடன் பேசும் அவனைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். எனது சிறுபராயம் தொடர்பாக அவன் அடிக்கடி கேட்டுக்கொள்வான். தந்தையை சிறுபராயத்தில் இழந்த அவனை, ஆசிரியராக இருந்த தாயார் வளர்த்துவந்தார். அடிக்கடி பாடசாலைக்கு வந்து அவனுக்கு தேவையானவற்றைச் செய்து, அன்புடன் அரவணைத்துச் செல்லும் அவன் தாயாரைப் பார்த்திருக்கிறேன். எனக்கும் இப்படியொரு தாய் இருந்தாள் என்கிற ஞாபகமும், கூடவே ஏக்கமும் வந்துபோகும். கொடுத்துவைத்தவன் என்று நினைத்துக்கொள்வேன். ஜெயந்தனின் முகத்தில் இருக்கும் மகிழ்வினை நானும் அவ்வப்போது பகிர்ந்துகொள்வேன். சரி, தேவையானளவிற்கு எனது மிகச் சிறுத்த நண்பர் வட்டம் பற்றிய அறிமுகத்தைச் செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன். இனிக் கதைக்குச் செல்லலாம். நான் அந்த வகுப்பில் சேர்ந்த சில நாட்களில் அவதானித்த ஒரு விடயம் தான், வகுப்பிற்கு வரும் ஆசிரியர்கள் தமக்குப் பிடித்த மாணவர்களுக்காக மட்டுமே பாடம் நடத்துவார்கள் என்பது. குறிப்பாக முன்வரிசையில் இருக்கும் "பிரபல்யமான" மாணவர்களுக்குக் கற்பித்தலுடன் தமது பணி முடிந்துவிட்டதாக நினைக்கும் ஆசிரியர்கள். எனக்குக் கற்பித்த ஆசிரியர்கள் பற்றி விமர்சிப்பது எனது நோக்கமல்ல, ஆனால் நான் கூறும் கதையில் இவர்களின் வரவும் தவிர்க்கமுடியாதமையினால், அவர்கள் பற்றியும் தொட்டுவிட்டுச் செல்கிறேன். முதலாவது சின்னையா டீச்சர். மிகவும் அழகானவர். மிகவும் பண்பானவர். மட்டக்களப்பு உயர்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். கோவிந்தன் வீதியில் அவரது வீடு அமைந்திருந்தது. பிள்ளைகள் இருக்கவில்லை. அவர் பேசும்போது வசீகரம் இருக்கும். சில மாணவர்களுக்கு அவர் வகுப்பறைக்கு வருகிறார் என்றாலே பரவசம் பற்றிக்கொள்ளும். சிவப்பு, மென்சிவப்பு, செம்மஞ்சள் நிறங்களில் புடவை அணிவார். அவரது மாநிறத்திற்கு அவை இன்னும் அழகைக் கூட்டிக்கொண்டிருக்கும். அவர் எமக்குப் படிப்பித்த "பல பாடங்களில்" கணிதமும் ஒன்று. ஆனால் எனக்கு எதுவுமே ஏறவில்லை. காரணிப்படுத்துங்கள், ஒருங்கமை சமன்பாடுகளைத் தீருங்கள், கோணங்களைக் கண்டுபிடியுங்கள், நூற்றுவீதம் கண்டுபிடியுங்கள் என்று அவர் கூறிக்கொண்டே செல்ல மண்டை விறைத்து நின்றுவிடும். பாடம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மனது வகுப்பறையை விட்டு தனியே எழுந்து சென்றுவிடும். சிவலிங்கத்துடன் தனகத் தொடங்குவேன். அவனும் என்னைப்போலத்தான், ஏதாவது சொல்லிச் சிரிக்கவைத்துக்கொண்டிருப்பான். சின்னையா டீச்சர் எமது பக்கம் ஒருபோதுமே வரப்போவதில்லை என்கிற தைரியமே எம்மை வேறு வேலை பார்க்கச் செய்துவிடும். நாம் கற்கிறோமா, அல்லது வேறு ஏதாவது செய்கிறோமா, தான் கற்பிக்கும் விடயம் வகுப்பில் உள்ள அனைவருக்கும் புரிகிறதா என்கிற சின்னக் கேள்வியோ, தேவையோ கூட இன்றி அவர் பாடம் நடத்திக்கொண்டிருப்பார். முன் வரிசையில் இருந்த மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வேலையுடன் அவரது கடமையும் முடிந்துவிடும் என்று நினைத்திருந்தாரோ என்னவோ, மற்றைய மாணவர்களை அவர் அதிகம் கஷ்ட்டப்படுத்தவில்லை. ஒருமுறை நாம் இருக்கும் கடைசி வாங்கிற்கு வந்தார். நானும் சிவலிங்கமும் வேறு கதை பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்திருக்க வேண்டும், " எங்கே, இன்று நீங்கள் செய்த கணக்கைக் காட்டுங்கள் பார்க்கலாம் ?" என்று கேட்டார். கொப்பியில் கணக்கை எழுதியதைத் தவிர பதிலளிக்கும் எண்ணமே இல்லாமல் விளையாடிக்கொண்டிருந்த எங்கள் இருவரையும் அவர் பார்த்த பார்வையிலேயே கூணிக் குருகிப் போய்விட்டேன். அதுவும், பாடசாலையின் மிகவும் பிரபலமான (அழகுக்காகத்தான்) சின்னையா டீச்சர் உங்களை ஒரு ஜந்துவைப் பார்ப்பதுபோலப் பார்த்தால் வேறு எப்படியிருக்கும்? அதுவும், வகுப்பில் ரஞ்சித் என்கிற பெயரில் ஒருவன் இருக்கிறான் என்று அறியமுன்னமே அவருக்கு நான் அறிமுகமாகிய விதம் மனதை நன்றாகப் பாதித்து விட்டிருந்தது.
    1 point
  38. உண்மைதான் vasee… எனது உறவினர்கள் பலர் Europeல் இருக்கிறார்கள் அவர்கள் கூறும் விடயங்களையும் இங்கே எங்களவர்கள் சகதமிழர்களை நடத்தும் விதத்தையும் பார்த்திருக்கிறேன்.. இங்கே உள்ளவர்களுக்கு மட்டும் ஏன் இந்த எண்ணங்கள் என்பது விளங்குவதில்லை.. கல்வி என்பது மனிதர்களின் பண்பை வளர்க்க உதவ வேண்டும் ஆனால் இ்ங்கே அதை காண்பது அரிது.. இது எனது தனிப்பட்ட எண்ணம்.. அனுபவத்தினால் உணர்ந்தது.. எனது நண்பர்கள் Canadaவிற்கு student visaவிலும் skilled visa விலும் போய்விட்டார்கள்.. போகும் பொழுது கூறிய காரணங்கள் நீங்கள் மேலே எழுதியவையே.. இ்ங்கே உள்ள தமிழர்களில் பெரும்பலானவர்கள் வித்தியாசமானவர்கள்
    1 point
  39. உண்மைதான் உயிரை பணயம் வைக்குமளவிற்கு அவுஸ்ரேலியா ஒரு சொர்க்கமல்ல ( எனது தனிப்பட்ட கருத்து). படகில் வருபவர்களின் விண்ணப்பங்களை எவ்வாறு அவுஸ்ரேலிய அரசு எடுத்து கொள்கிறது என தெரியவில்லை ஆனால் கடுமையான கொள்கையை கடைப்பிடிக்க சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் சட்ட ரீதியாக வேறு வடிவங்களில் வருவது சிறந்த முடிவு என நினக்கிறேன், அண்மையில் எமது குடும்ப நண்பர் ஒருவரது சகோதரி ஒருவர் பார்வையாளர் அனுமதியில் வந்து, மாணவ அனுமதி எடுத்துள்ளார். காலப்போக்கில் அதனூடாக வதிவிட அனுமதி பெற்றுவிடலாம் என நம்பிக்கையிலுள்ளார்கள். இது எந்தளவிற்கு சாத்தியமாகும் எனத்தெரியவில்லை? அத்துடன் இங்குள்ள பல வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழர்கள் புதிதாக வருபவர்கள் மீது வெறுப்புடன் காணப்படுகிறார்கள், நான் அவுஸ்ரேலியாவிற்கு வந்த ஆரம்பத்தில் என்னுடன் கதைத்த, பல வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழர் ஒருவர், கடைசியாக சொன்னார், அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழாக்கள் மற்ற நாட்டில் உள்ள எங்கடை ஆக்கள் போல் இல்லை, ஏனெண்டால் இங்கை இதுக்கு முந்தி இருந்த ஆக்கள் எல்லாம் படித்த ஆக்கள் எண்டு சொன்னார் (எனது கல்வி விபரங்கள் அனைத்தும் ஏற்கனவே கேட்டு விட்டார்). அவர் என்னைதான் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என தெரிந்தாலும், தெரியாதபோல கடந்துவிட்டேன். இன்னொருவர் இங்கு தமிழர்கள் செறிவாக வாழும் பகுதியில் தெருக்களில் நிகழும் வழிப்பறிகளுக்கு புதிதாக வருபவர்களை குறை சொல்லுவார் (அதற்கு எந்த ஆதாரமுமில்லாமலேயே). அத்துடன் புதிதாக வருபவர்களை அடிமட்ட (அடிப்படை கூலியின் அளவினை விட மிக குறைவான கூலி) சம்பளத்தில் எம்மவர்கள் வேலை வாங்கும் நிலை காணப்படுகிறது, அவர்களுக்கும் சட்ட ரீதியாக வேலை செய்வதில் பிரச்சினை இருக்கலாம். இன்னும் சிலர் முகத்திற்கு நேராகவே சொல்வார்கள் " நீங்கள் எல்லாம் இலங்கையில ஒரு பிரச்சினையில்லாவிட்டால் இங்கை உங்களால் வந்திருக்கவே முடியாது என்று, (அவர்கள் மாணவ அனுமதியில் வந்து பின்னர் அகதியாக அனுமதி பெற்றவர்கள் என்பது எமக்கு தெரியாது என நினைத்து கொள்வார்கள்).
    1 point
  40. அதனால் என்ன பீட்ஸா, பர்கர் வாங்கி சாப்பிடவும்.........! 😂
    1 point
  41. தம்பி விசுகு அவர்களே! இதுக்கு என்ன சொல்லப்போறீங்க...!!⬇️⬇️ சிறித்தம்பிக்கு இப்படி நடந்திராவிட்டால், எனக்குமுதலே இந்தச் செய்தியை அவர் படித்தறிந்து, யாழ்களத்தில் ஒரு பட்டாளத்தையே அழைத்துச்செல்லப் பாய்ந்து வந்து எழுதியிருப்பார்.😋
    1 point
  42. சே.......இப்படி ஒரு வேண்டுதல் வைப்பதற்கு அன்று கொரோனாவும் இல்லை, எனக்கும் அவ்வளவாய் அறிவும் இல்லை......! 😢 முருகன் வேற இந்த விடயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி.....பையனின் வேண்டுதலை நிறைவேற்றினாலும் நிறைவேற்றி விடுவார்.......! 😂
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.