Jump to content

Leaderboard

  1. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      43246


  2. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      76773


  3. ஏராளன்

    ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      18776


  4. Maruthankerny

    Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      10574


Popular Content

Showing content with the highest reputation on 09/26/22 in all areas

  1. இச்செய்தியை சற்று தாமதமாகத்தான் பார்த்தேன். தாமதமானாலும் நானும் ஒரு ஆசிரியன் என்ற முறையில் என் கருத்தினைப் பதிவு செய்வது பொறுப்பாகக் கருதுகிறேன். ஆசிரியர் பொறுப்பு என்பது உலகில் அனைத்திலும் தலைசிறந்த ஒன்று. வெற்றி, தோல்வி, மேடு, பள்ளம் அனைத்தையும் சமநிலையுடன் பார்க்கும் பக்குவத்தைப் பிஞ்சு உள்ளங்களில் விதைக்கும் கடமை ஏற்றவர் ஆசிரியர். நடைமுறை உலகில் திறமைக்கும் அதன் பயனாகிய அங்கீகாரத்திற்கும் தெளிவான சமன்பாடு இருந்தேயாக வேண்டும் என்பதில்லை. கற்றலும் கற்ற வழி நிற்றலுமே நமக்கான உரிமையும் பெருமையும். துறைத்தலைவர் என்பது கூடுதல் பொறுப்பு. அவ்வளவே. அப்பொறுப்பினைக் கொடுத்தால் பணி செய்வோம். இல்லையென்றால் மாணவர்க்கும் மக்கள் சமூகத்துக்கும் ஆற்ற வேண்டிய பணிக்கு இன்னும் நேரம் அதிகம் கிடைத்துள்ளது எனக் கொள்வோம். இவற்றையெல்லாம் மற்றவர்க்கு எடுத்துச் சொல்லும் நிலையிலுள்ள ஆசிரியர் ஏதோ கூடுதல் பொறுப்பு கிடைக்காத விரக்தியில் தற்கொலை வரை போவது சிறுபிள்ளைத்தனமாகவே தோன்றுகிறது. பணி ஓய்வு பெற்ற பின் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கையில், "இதற்காகவா அன்றைக்கு நேரத்தையும் நிம்மதியையும் இழந்து தவித்தோம்?" என்று அவரே வெட்கப்படப் போகும் நிகழ்வு இது. ஆசிரியர் பதவியே கிடைத்து விட்டது. வேறு என்ன வேண்டும் உலகில் ? எல்லோருக்குமா கிடைத்தது ? பெரியதொரு உலகிற்குச் சொந்தக்காரர் தம்மைச் சிறு கூட்டுக்குள் அடைக்க ஏங்குவது வேடிக்கையும் வேதனையும்.
    4 points
  2. ராசமாணிக்கம் சாணக்கியன் 1990 இல் பிறந்தவர். கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்விகற்றவர். பட்டிருப்புத் தொகுதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக, ஒருங்கிணைப்பாளராக தனது அரசியல்ப் பயணத்தைத் தொடங்கியவர். ராஜபக்ஷேக்களுடன் மிகவும் நெருக்கமானவர் என்று பரவலாக நம்பப்படும் இவர், கிழக்கில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துவரும் சிங்கள இனவாதப் பிக்குவான சுமனரத்னே தேரோவுடன் மிகவும் நெருக்கமானவர். பிள்ளையானின் கொலைக்குழுவின் ஆலோசகராகவும், நெருங்கிய ஆதரவாளராகவும் 2015 வரை செயலாற்றியவர். பிள்ளையானின் கட்சியூடாக 2015 இல் பாராளுமன்ற தேர்தலில் பங்குபற்றித் தோல்வியடைந்த நிலையிலேயே 2020 இல் தமிழரசுக் கட்சி சார்பாக தேர்தலில் நின்று வெற்றிபெற்றவர். கிழக்கில் தமிழரின் இருப்பிற்கு மிகவும் அச்சுருத்தல்களை உருவாக்கிய்வர்களில் இவர் முதன்மையானவர். சிங்களவர்களுடனான நெருக்கமும், சிங்கள பெளத்தர்களுடனான இவரது குடும்ப உறவும் இவரை இயல்பாகவே சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிங்களத் - தமிழ்த் தலைவராக காண்பிக்கிறது. இவர் பற்றி மிகவும் அவதானமாக இருப்பது அவசியம்.
    4 points
  3. அது போன மாசம் இப்ப கிரைண்டரில் அடிச்சு பருக்கோணும் (வாயை அசைகிறது கூட பெரிய வேலையா நினைக்கிறார்கள்)
    3 points
  4. மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நேரம் செய்யிற வேலையா இது?!
    3 points
  5. உயர் பாதுகாப்பு வலயம்.
    2 points
  6. இவர்கள் பதவிக்காக, சம்பள உயர்வுக்காக அதற்கும் மேலாக சுயகௌரவத்துக்காக எதையும் செய்யக்கூடியவர்கள். அத்துடன் பழிவாங்கும் எண்ணமும் இருந்ததால்தான் பல்கலை கழக வளாகத்தில் முயற்சித்து இருக்கிறார். எதைப்பற்றியும் எவரைபற்றியும் சிந்தனை இல்லாதவர்கள்.
    2 points
  7. ஆரோ சொல்லி வைச்சு எழும்பேலாத அளவுக்கு மரண அடி அடிச்சிருக்கிறாங்கள்.
    2 points
  8. எனக்கு என்னமோ நாம் தான் பாவம் பாவம் என்று எண்ணி அவர்களை சோம்பேறி ஆக்குகிறோமோ என்று உறுத்துதலாக இருக்கு
    2 points
  9. சில காலங்கள் முன்பு வரை ஒரு நாள் கோழிக் குஞ்சுகளும் அடை வைக்ககூடிய முடடைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டது.இறச்சிக் கோழிகளின் தாய் தகப்பன் கோழிகள் டமட்டும் தான் இறக்குமதி செய்யப்பட்டது.மற்றது கோழித்தீவனம் விலை ஏற்றம் மற்றும் தட்டுப்பாடும் ஒரு காரனம் கோழி சம்பந்தமான பொருட்களின் விலை எற்றத்துக்கு காரனம்.கால் நடைத் தீவனத்தின் முக்கிய முலப்பொருள் சோழம்.அதை உற்ப்பத்தி செய்ய வேண்டும்.இப்பதான் அரசு நித்திரையால் எழும்பியிருக்கு.
    2 points
  10. கந்தையா பச்சைத் தண்ணி என்று யாரோ பறைஞ்சார்கள், மனதில என்று நினைக்கிறன்!
    2 points
  11. நாங்கள் இருந்த இடத்திலேயே நிற்கின்றோம். அவர்கள் முன்னேறிவிட்டார்கள்.
    2 points
  12. இது இப்போது தான் தெரியுமா? ....நான் எனது சொந்த அனுபவங்களை சொல்லுகிறேன் . கேளுங்கள் 2021.இல் வறுமையை ஒழிப்போம். என்ற ஒரு அமைப்பு என்னை தொடர்பு கொண்டு முல்லைத்தீவு கோப்புலவில் ஒரு ஏழை பையனுக்கு சைக்கிள் வேண்ட 25 ஆயிரம் ரூபாய் உதவி செய்ய முடியுமா என்று கேட்டார்கள் அத்துடன் ஒரு கணணி உம் வேண்டித் தரலாம் எவ்வளவு முடியும் என்று சொல்லும் படி கேட்டேன் நல்ல கணணி க்கு 70 ஆயிரம் வேண்டும் என்றார்கள் சரி தரலாமென்று ஒரு இலட்சத்து ஐந்து ஆயிரம் அனுப்பினேன் அவர்கள் முதல் அனுப்பிய பையனின் படமும் கணணி கொடுத்த பின் கணணி...சைக்கிள்..உடன் நின்ற பையனும் வெவ்வேறு நபர்கள் எவனாவது பயன் படுத்தினால் சரி என்று விட்டுட்டேன் 😛 மேலும் அவர்கள் உதவியை எதிரபார்த்தார்கள் நான் கடன் என்றால் தரலாம். சும்மா தர முடியாது என்றேன் கோழி பண்ணை அமைக்க உதவும்படி கேட்டார் சரி பத்து இலட்சம் கடனாகக் தர முடியும் என்றேன் ஆறு மாதத்துக்குள் செலவு கூட சீமெந்து விலையேற்றம் என்று மொத்தம் பதின்நான்கு இலட்சம் அனுப்பியுள்ளேன்“ இதே காரணம் சொல்லி சுவிஸ் அறக்கட்டளை இலும் பணம் வேண்டியவர்கள் ஆரம்பத்தில் படம் அனுப்பினார் பிறகு அனுப்பவில்லை கோழி பண்ணையும் தொடங்கவில்லை மாறாக வீடு கட்டியுள்ளார்கள் அதாவது உடம்பை முறித்துக் உழைக்க விருப்பமில்லை இதற்கு என்ன செய்யலாம் சொல்லுங்கள் பார்ப்போம் 🤣 மொத்தம் ஆறு ஆயிரம் யூரோ அனுப்பியுள்ளேன்“ அவருக்கு சரிதா என்று பெயர் வங்கி கணக்கு பிரசான்ன நவரத்தினம் என்ற பெயரில் உண்டு நான் அவருக்கு சொன்னேன் இன்று அந்த ஆறு ஆயிரம் யூரோ 21 இலட்சம் ரூபாய் வரும் என்று அவர் சொன்னார் இப்ப அதை பற்றி யோசித்து என்ன பலன் இதுகளைப் பற்றி கவலை படுவது சுத்த வெஸ்ட் ஒரு நாலு ஐந்து போத்தல்கள் மட்டின் விரான்டியை குடித்து விட்டு குப்பிறப் படுத்துக்கிடக்கலாம் 😂🤣
    2 points
  13. அதை நிர்ணயிப்பது எதிர்காலம், இவர் எதை வைத்து இப்படிச் சொல்கிறார்? இவர் என்ன தீர்க்கதரிசியா? இதே ரணிலோட த. தே. கூட்டமைப்பு கடந்த காலங்களில் செயற்பட்ட விதத்தை, அனுபவத்தை வைத்தா? சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட இவர் முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரனைப்பற்றி இப்படி அறிக்கை விடுவது இது முதற்தடவையல்ல, தங்களது அரசியல் வியாபாரத்திற்கு அவர் ஒரு முட்டுக்கட்டை என பயப்படுகிறார்!
    2 points
  14. யாழ் பல்கலையைத் த்தோண்டினால் விடயம் பிண நாற்றம் அடிக்கும். 🤣
    2 points
  15. உப்பிடியான நட்டு களண்ட மரமண்டையளிட்டை பிள்ளையளை படிக்க விடக்கூடாது.😡
    2 points
  16. எங்களின் படித்த சமூகம் ஏன் இப்படியான கோழைத்தனமான முடிவுகளை எடுக்கிறார்கள். ?சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் அல்லவா!!!
    2 points
  17. துறைத்தலைவர் பதவி கோரி யாழ்.பல்கலை பேராசிரியர் உயிர் மாய்க்க முயற்சி August 16, 2022 தனக்கு துறைத்தலைவர் பதவி தரக் கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் உயிரை மாய்க்க முயன்றுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ் பல்கலைக்கழக துறையின் ஒன்றின் தலைவராக இருந்த பேராசியர் தனது மேல் படிப்போன்றிக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி இருந்தார். அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டது. அதனால் , அவரது துறைத்தலைவர் பதவி மற்றுமொரு பேராசிரியருக்கு வழங்கப்பட இருந்தது. அந்நிலையில் துறைத்தலைவராக இருந்த பேராசியர் தனது தனிப்பட்ட காரணத்தால் வெளிநாடு சென்று கற்கும் முடிவை இடை நிறுத்தி தனது துறைத்தலைவர் பதவியில் நீடித்தார். அதனால் புதிதாக துறைத்தலைவராக நியமனம் பெறவிருந்த பேராசியர் ஏமாற்றத்திற்கு உள்ளானார். அதன் காரணமாக கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருந்த பேராசிரியர் , நேற்றைய தினம் திங்கட்கிழமை தனக்கு நெருக்கமானவர்களிடம் தனக்கு துறைத்தலைவர் பதவி கிடைக்காவிடின் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் தீக்குளித்து உயிரை மாய்ப்பேன் என கூறியுள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த குறித்த பேராசியர் துணைவேந்தர் முன்னிலையில் தனது உடம்பில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அதனை அவதானித்த துணைவேந்தர் விரைந்து செயற்பட்டு , அவரை தடுத்து நிறுத்தி , சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். இதேவேளை பகிடிவதை புரிந்தவர்கள் எனும் சந்தேகத்தில் தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்ட 18 மாணவர்களின் படங்களை விரிவுரையில் பேராசிரியர் ஒருவர் காண்பித்து , ” இவர்கள் தான் பல்கலைக்கழக மாபியாக்கள் ” என கூறியமையால் மனஉளைச்சலுக்கு உள்ளான மாணவன் ஒருவன் நேற்றைய தினம் திங்கட்கிழமை தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டு தெல்லிப்பளை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அத்துடன் மற்றுமொரு பல்கலை கழக மாணவி ஒருவர் யாழ்.புறநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் உயிரை மாய்க்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்.பல்கலைக்கழக பேராசியர், மாணவர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் யாழ்.பல்கலை சமூக மட்டத்தில் அதிருப்தியும் விசனமும் எழுந்துள்ளது. https://globaltamilnews.net/2022/179750/
    1 point
  18. சரியாக சொன்னீர்கள். நானும் சின்னவயதிலை வெருட்டலுக்கு பொலிடோல் குடிச்சு சாகப்போறன் எண்டுட்டு பூவரசம் மரத்திலை ஏறி ஒளிச்சு மூண்டு மணித்தியால கணக்கிலை இருந்தனான். ஒருத்தரும் தேடவுமில்லை.....சத்தம் போடவுமில்லை 🙃
    1 point
  19. நொங்கு எடுப்பவை எல்லோரும்..நல்லா வெட்டி குட்டித்தூக்கமும்..போடுவினம்....அரசியல்,அரசியல் சம்பந்தமாகக் கதைத்தால் மட்டும்...புலம்பெயர் சமூகம்...என்று வேறுபாடுகாட்டி..ஒதுக்கிவைப்பினம்...அதுவும் தீட்டுபட்ட இனமாகவே எடுப்பினம்....புலம் பெயர் காசு இல்லாவிட்டால் ...கோயில் திருவிழாவும் இல்லை... மோட்டச்சயிக்கிளுமில்லை...அங்கிருந்துவரும் சிலரின் கருத்தை கேட்கும்போது விசர்தான் வரும்..அவையின் எண்ணம் இங்கு கக்கூசு எடுத்துத்தான் பிழைப்பு நடத்துகினம் என்று...அது ஒரு காலம்தான்...ஆனால் இனி வரும்காலம் ..மிகப்படி௹த ஒரு புலம் பெயர் தமிழர் பரம் பரை உலகிற்கே முன்னோடியகத் திகழும் என்பதை ...விரைவில் இலங்கைத் தமிழினம்..உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை....நெஞ்சில் உள்ள பொறமைத்தீயை கொட்டவென்றே..ஒருசில எழுத்து வெருளிகள் உள்ளார்கள்... இவையில் ..சிலர் ஒட்டு அரசியல் விரும்பிகளே...
    1 point
  20. பின் கதவால் வந்தவர்கள் தான் இப்போ ஆட்சி அதிகாரம் பண்ணுகிறார்கள். எந்த ஒரு கட்சியிலும் நீண்டகால தொண்டனாக இருந்து வந்தவனுக்கே தேர்தலில் போட்டியிட அனுமதிக்கிறார்கள். சுமந்திரனும் சாணக்கியனும் மட்டும் கட்சிக்காக உழைக்காமல் எப்படி தேர்தலில் போட்டியிட அனுமதித்தார்கள்? ஓருவேளை மகிந்த தரப்புத் தான் இவர்களுக்கு இடம் கொடுக்க சொல்லி சொன்னார்களோ?
    1 point
  21. கருத்து படங்கள் நிறைய கதைகள் சொல்லுது. இணைப்புக்கு நன்றி சிறி.
    1 point
  22. பொன்னியின் செல்வன் - எது கதை? எது வரலாறு? mannar mannan speech | payitru | ponniyin selvan | #PS1
    1 point
  23. இனிமேல்.. இந்த ரசிகர்கள் மேல், துப்பாக்கி சூடு நடத்தி, பாதிப் பேரை… மேலே, நரகத்துக்கு அனுப்ப வேண்டும். 😂 இதுகள்… அறிவு கெட்ட… முண்டங்கள். 🤣
    1 point
  24. அக்கா, இவர்கள் இருவரையும் நன்கறிவேன். உண்மையில் இதுதான் நடந்தது.👇 "உது இரெண்டு பேருக்குமிடையிலான போட்டியால் வந்த வினை ஒருவர் வரணியைச் சேர்ந்தவர், மற்றையவர் வரணியில் பெண்ணெடுத்தவர். இருவரும் ஒரே கல்வியாண்டைச் சேர்ந்தவர்கள் (same batch 1990) இவர்கள் இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட ரீதியிலான போட்டி பொறாமையின் விழைவுதான் இந்த தற்கொலை முயற்சி." யாழ் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளுக்கும் இந்தத் தற்கொலை முயற்சிக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. இதனை என்னால் உறுதியாகக் கூற முடியும்.
    1 point
  25. இவைகள் அடிப்பட... சனம் வெறுத்து, டக்ளசுக்கு வாக்குகளை அள்ளிப் போட்டு விடுவார்கள். தங்களுடைய தலையிலேயே.. மண் அள்ளிப் போடுகிறார்கள்.
    1 point
  26. ஆசிரியர்கள், மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேணும். வெளியில் சொல்லாவிட்டாலும் அவர்கள் எம்மை ஒரு வழிகாட்டியாகவே பார்க்கிறார்கள். வேலைக்கு போகும்போது தனிப்பட்ட பிரச்சனைகளை ஒரு கரையில் வைத்துவிட்டு எம்மை நம்பி வரும் மாணவர்களை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ள வேணும்.
    1 point
  27. இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி எப்போது கிடைக்கும் - கடன் வழங்கிய நாடுகளுடனான சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது என்ன? By RAJEEBAN 26 SEP, 2022 | 12:14 PM இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி கிடைப்பதற்கு மூன்று நான்கு மாதங்களாகலாம் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு நிதி வழங்கிய நாடுகளுடனான சந்திப்பின்போது இலங்கை அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு நிதி உதவி வழங்கிய நாடுகளிடமிருந்து நிதி தொடர்பான உத்தரவாதங்கள் இன்னமும் கிடைக்காததால் சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று குழு இலங்கைக்கு நிதி உதவியை வழங்குவதற்கான அனுமதியை வழங்க முடியாத நிலையில் உள்ளது இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி கிடைப்பதற்கு மூன்று நான்கு மாதங்களாகும் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியின் அளவு பல்வகை தன்மை, சர்வதேச நாணயநிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை செய்து கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகள், இலங்கைக்கு எதிர்காலத்தில் நிதி உதவி கிடைப்பதற்கான அவசியமான கடன்பேண்தகு நிலைமை குறித்து கடன் வழங்கிய நாடுகளிற்கு தெரியப்படுத்துவதற்காக இலங்கை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கடன் வழங்கிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்தனர், இலங்கையை பிரதிநிதித்துவம் செய்த மத்திய வங்கி ஆளுநரும் திறைசேரி செயலாளரும் இலங்கை சமர்ப்பித்துள்ள திட்டத்திற்கு சர்வதேச நாணயநிதியத்தின் பணிப்பாளர் சபை டிசம்பர் - 2023 ஜனவரிக்குள் அனுமதி வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் நவம்பருக்குள் பொது மற்றும் தனியார் கடன்கொடுப்பனவாளர்களிடமிருந்து நிதி உத்தரவாதத்தை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டனர். குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கடன் வழங்கியவர்களுடன் கொள்கை ரீதியில் உடன்பாடு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை பேச்சுவார்த்தைகள் அடுத்த வருடத்தின் இரண்டாவது காலாhண்டு வரை தொடரும் அதன் பின்னரே மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட்ட கடன் ஒப்பந்தங்கள் சட்டபூர்வமாக செயல்படுத்தப்படும். https://www.virakesari.lk/article/136436
    1 point
  28. வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் தடியடி... நடந்தது என்ன? எங்களுக்கே இந்த நிலையா? விஜய் ரசிகர்கள் குமுறல் .. சென்னை: விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை எண்ணூர் பகுதியில் நடைபெற்று வரும் வாரிசு படப்பிடிப்பில் விஜய் நடித்து வருகிறார். இந்நிலையில், வாரிசு படப்பிடிப்பில் விஜய் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வாரிசு விஜய் ஹீரோவாக நடிக்க வம்ஷி பைடிபள்ளி இயக்கும் வாரிசு அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, எஸ்ஜே சூர்யா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் வாரிசு இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னை எண்ணூர் பகுதியில் தொடங்கி பிஸியாக நடைபெற்று வருகிறது. விஜய் ரசிகர்கள் மீது தடியடி எண்ணூர் பகுதியில் நடைபெறும் வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ரசிகர் மன்ற நிர்வாகியின் அழைப்பின் பேரில் விஜய் ரசிகர்கள் சென்றுள்ளனர். அவர்கள் பாதுகாப்புக்காக அங்கு சென்றதாக சொல்லப்படுகிறது. ஆனால், விஜய் ரசிகர்களை சூட்டிங் ஸ்பாட் உள்ளே அனுமதிக்காத பவுன்சர்கள், அவர்கள் மீது தாக்குதலும் நடத்தியதாகவும் தெரிகிறது. அதோடு அங்கு சென்ற 500க்கும் மேற்பட்ட ரசிகர்களை, போலீஸாரை வைத்து விரட்டி அடிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீஸாருடன் கடும் வாக்குவாதம்.. இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். படங்கள் வெளியாகும் போது பேனர் வைத்து உயிரையே விட்ட ரசிகர்களைப் பார்த்து விஜய் கை கூட அசைக்கவில்லை என்றும் அவர்கள் குமுறி வருகின்றனர். அதில் சிலர் ரசிகர்மன்ற நிர்வாகியான தங்களை உள்ளே அனுமதிக்காவிட்டால் போராட்டம் நடக்கும் எனவும் எச்சரித்துளனர். மேலும், ரஜினி, சூர்யா உட்பட மற்ற நடிகர்கள் இங்கு படப்பிடிப்புக்கு வந்தால் ரசிகர்களை உள்ளே அனுமதிப்பதாகவும், விஜய் மட்டும் தங்களை உள்ளே விடவில்லை எனவும் கூறியுள்ளனர். ரசிகர்களுக்கு இது அவசியம் தானா? விஜய் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து வாரிசு படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அதேநேரம், படப்பிடிப்புத் தளங்களில் பாதுகாப்பிற்காக ரசிகர்கள் செல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது. உச்ச நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்போதெல்லாம் பாதுகாப்பு பணிகளுக்காக பவுன்சர்கள் வருகின்றனர். அவர்களையும் மீறி தேவையென்றால் போலீஸார் பாதுகாப்பு கொடுக்கின்றனர். இப்படி இருக்கும் போது ரசிகர் மன்ற நிர்வாகியின் பேச்சைக் கேட்டுவிட்டு ரசிகர்கள் அங்கு செல்வதும், இப்படி தடியடி நடப்பதும் தேவையில்லாதது என்றே சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளன. https://tamil.filmibeat.com/news/vijay-fans-are-attacked-on-the-varisu-shooting-spot-100853.html டிஸ்கி நமக்குள்ள ஒரே வருத்தம் மண்டை பிளந்து தக்காளி சட்னி வெளியல வர ஆரும் "கபால மோட்சம்" அடையவில்லையே என்பதுதான்..😢..😢
    1 point
  29. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்ற சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் இந்தியா வெற்றி By DIGITAL DESK 5 26 SEP, 2022 | 09:29 AM (என்.வீ.ஏ.) நடப்பு இருபது 20 உலக சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஹைதராபாத் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (25) இரவு கடைசிக் கட்டம்வரை விறுவிறுப்பை ஏற்படுத்திய 3ஆவதும் தீர்மானம் மிக்கதுமான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் இந்தியா வெற்றிபெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா கைப்பற்றி சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் தொடர்ந்தும் முதல் நிலை அணி என்பதை உறுதி செய்தது. மேலும் தனது சொந்த மண்ணில் இந்தியா ஈட்டிய 10 தொடர்சசியான தொடர் வெற்றி இதுவாகும். சூரியகுமார் யாதவ், விராத் கோஹ்லி ஆகிய இருவரும் குவித்த அதிரடி அரைச் சதங்கள், ஹார்திக் பாண்டியாவின் அதிரடி என்பன இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தன. அவுஸ்திரேலியா நிர்ணயித்த 187 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 19.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஆரம்ப வீரர் கே. எல். ராகுல் முதலாவது ஓவரிலேயே ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். 4ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 30 ஓட்டங்களாக இருந்தபோது அணித் தலைவர் ரோஹித் ஷர்மா 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இந்தியா பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. ஆனால், அடுத்து களம் புகுந்த சூட்டோடு அதிரடியை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 5 சிக்ஸ்கள், 5 பவுண்டறிகளுடன் 69 ஓட்டங்களைக் குவித்தார். 3 ஆவது விக்கெட்டில் விராத் கோஹ்லியுடன் 68 பந்துகளில் 104 பெறுமதிமிக்க ஓட்டங்களை சூரியகுமார் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினார். அவர் ஆட்டமிழந்த பின்னர் களம் புகுந்த ஹார்திக் பாண்டியாவுடன் 4ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்த விராத் கோஹ்லி வெற்றிக்கு மேலும் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது ஆட்டமிழந்தார். 48 பந்துகளை எதிர்கொண்ட விராத் கோஹ்லி 4 சிக்ஸ்கள், 3 பவுண்ட்றிகளுடன் 63 ஓட்டங்களைக் குவித்தார். ஹார்திக் பாண்டியா 16 பந்துகளில் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். தினேஷ் கார்த்திக் ஒரு பந்தை எதிர்கொண்டு ஒரு ஓட்டத்தைப் பெற்றார். அவுஸ்திரேலிய பந்துவீச்சில் டெனியில் சாம்ஸ் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்தியாவினால் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களைக் குவித்தது. இந்த மொத்த எண்ணிக்கையில் நால்வர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் குவித்தனர். எனினும் ஆரம்ப வீரர் கெமரன் க்றீன், மத்திய வரிசை வீரர் டிம் டேவிட் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் பெற்றதன் பலனாக அவுஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கை 185 ஓட்டங்களைக் கட ந்தது. கெமரன் க்றீன், ஆரொன் பின்ச் ஆகிய இருவரும் 21 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், பின்ச் 7 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார். 18 ஓட்டங்கள் கழித்து கெமரன் க்றீன் ஆட்டம் இழந்தார். அவர் 21 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களைக் குவித்தார். ஸ்டீவன் ஸ்மித் (9), க்ளென் மெக்ஸ்வெல் (6) ஆகிய இருவரும் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழக்க மொத்த எண்ணிக்கை 84 ஓட்டங்களாக இருந்தது. எனினும் ஜொஸ் இங்லிஸ் (24), டிம் டேவிட் ஆகிய இருவரும் 31 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்த முயற்சித்தனர். இங்லிஸ், மெத்யூ வேட் (1) ஆகிய இருவரும் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தல் ஆட்டமிழக்க அவஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கை 6 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்களாக இருந்தது. எவ்வாறாயினும் டிம் டேவிட், டெனியல் சாம்ஸ் ஆகிய இருவரும் 34 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரெலியாவின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் செர்த்தனர். டிம் டேவிட் 27 பந்தகளில் 4 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 54 ஓட்டங்களைக் குவித்தார். டெனியல் சாம்ஸ் 20 பந்துகளில் 28 ஓட்டங்களைப் பெற்றார். இந்தியா சார்பாக மீண்டும் திறமையாக பந்துவீசிய அக்சார் பட்டேல் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/136421
    1 point
  30. அங்கு பலர் கோழி வளர்ப்பில் ஈடுபடுகின்றார்கள். நான் அறிந்த விடயம் தட்டுப்பாடு காரணமாக தவிடு/கோழி தீவனம் வாங்கி போடுவது அவர்களுக்கு கட்டுபடியாகவில்லை. இதனால் கோழிகள் முட்டை இடுவது இல்லை/குறைவு என சொன்னார்கள். மற்றைய பிரச்சனை இவற்றை பீடிக்கும் நோய்கள் காரணமாக இறப்பு/இழப்பு ஏற்படுவது.
    1 point
  31. மனசில பச்சைத்தண்ணியாய் இருந்த மனிதரை இப்படி காசில பச்சைத்தண்ணியாய் மாத்திப்போட்டாங்களே படுபாவியள் யாரோ? நல்லா வீட்டில வாங்கிக்கட்டியிருப்பார் கந்தையர்! இதுவும் ஒருவகைல ஏமாற்றி பணம் பறிப்பு.
    1 point
  32. அந்தச் சம்பவம் நடந்த பிறகுதான்… கந்தையர் பச்சைத் தண்ணியாய் மாறினவர். 😁
    1 point
  33. ஊரில் ஒரு வசனம் சொல்வார்கள். கொடுத்தவன் கொடுக்கா விட்டால் வெட்டுப்பகை குத்துப்பகை வருமென.......
    1 point
  34. நான் ஒரு வரியில் புதுக்கதை சொல்கிறேன் கேளுங்கள்.😄 சில தினங்களுக்கு முன் ஊரிலிருந்து ஒரு உறவு தொலைபேசி எடுத்தது. தான் ஒரு கோயிலுக்கு நேர்த்தி வைச்சு தூக்குகாவடி எடுத்து அன்னதானமும் குடுக்கப்போறனாம். ஒரு ஆயிரம் ஈரோ அனுப்பட்டாம். 🙃 கவனிக்க⇉ கேட்டது ரூபாயிலை இல்லை ஈரோவில 😎
    1 point
  35. நான் தான் உங்களின் நெருங்கிய நண்பன் என்று இந்தியா அடிக்கடி. நினைவு படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
    1 point
  36. சாமிக்காக... முடி எடுத்தால், அது மொட்டை. அந்தச் சாமியே... நம்ம, முடியை எடுத்துட்டா... அது சொட்டை. 🤣
    1 point
  37. ஆதிக்கவாதிகளுக்கு உண்மையும்/நீதி நியாயங்களும் எப்போதுமே கசப்பவை.
    1 point
  38. மன்னிக்கவும் இதனை மறுக்கும் நபர்களுள் நானும் ஒருவர். உலகமெல்லாம் தனது கூட்டாளிகளுடன் போய்கூட, கட்டத்துரை (அமெரிக்கா) செமையாக வாங்கி திரும்பி ஒடி வந்த வரலாறுகள் உள்ளது, அப்படி கள நிலவரம் இருக்கும் போது ஒரு தனிநாடாக இருந்து கொண்டு எவ்வாறு இரஸ்சியாவினால் உலகை வெல்ல முடியும்?
    1 point
  39. சிங்களம் எமக்கெதிராக… கேவலமான வேலைகள் செய்யும் என்றாலும், எங்கடை ஆட்களும்… குழுவாக சேர்ந்து, தண்ணி அடித்தால்… அவர்களும் கேவலமாக நடக்கக் கூடியவர்கள். (சம்பவம் நடந்த இடம்… கசோறினா பீச். பெண்… பிகினியில் நின்ற வெள்ளைக்காரி.)
    1 point
  40. புட்டினிட்ட இருக்கிற அணு ஆயுதத்தை விட குஞ்சன் கடையில விக்கிற சம்பியன் சீனவெடி திறம்!😂
    1 point
  41. 1 point
  42. பெருமாள் அண்ணா, இந்த ஓசி விசுகோத்து படிப்பை வைத்துத்தான் பலர் இன்று பொருளாதார ரீதியில் ஏதோ சமாளித்து வாழ்கிறார்கள். எல்லோராலும் தந்திரமாகவும், அரசியல்வாதிகளுக்கு கும்பிடு போட்டும் வாழத் தெரியாது.. இதுவே லண்டன், அவுஸ் போன்ற நாடுகள் என்றால் கூட பரவாயில்லை ஏதோ அரசு social money/Centrelink allowance கொடுக்கும் மிகுதியை பகுதி நேர வேலை பார்த்து படித்து முடிக்கலாம். பல்கலை கழகத்திற்கு HECS எடுத்து படித்து பின்பு சம்பளத்தில் கழிக்கலாம். ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் இந்த இலவசப் படிப்பும் இல்லை என்றால் எங்கட பல பிள்ளைகள் பள்ளிக்கூட வாசலையோ, பல்கலைகழகத்திற்குள்ளோ போயிருந்திருக்க மாட்டார்கள். இன்றும் வறிய, நடுத்தர வருமான குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் இந்த மகாபொல கொடுப்பனவு மட்டும் வைத்து படிப்பை தொடர முடியாது. அவர்களுக்கு தொலைநோக்கும் சமூக நலனில் அக்கறையுள்ள விரிவுரையாளர்கள் சிலர் கொடைவள்ளல்கள்(உள்நாடு, வெளிநாடு), அறக்கட்டளைகளின் உதவிகளை பெற உதவி செய்கிறார்கள். உங்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்கும் ஆனாலும் ஏதோவொரு கோபத்தில் ஒசி விசுக்கோத்து படிப்பு என்று கூறிவிட்டீர்கள்!!
    1 point
  43. யாழ்.பல்கலை பேராசிரியர் பதவிக்காக... தீக்குளித்து, உயிர் மாய்க்க முயற்சி! யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனக்கு துறைத்தலைவர் பதவி தரக் கோரி உயிரை மாய்க்க முயன்றுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ் பல்கலைக்கழக துறையின் ஒன்றின் தலைவராக இருந்த பேராசியர் தனது மேல் படிப்போன்றிக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி இருந்தார். அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டது. அதனால் , அவரது துறைத்தலைவர் பதவி மற்றுமொரு பேராசிரியருக்கு வழங்கப்பட இருந்தது. அந்நிலையில் துறைத்தலைவராக இருந்த பேராசியர் தனது தனிப்பட்ட காரணத்தால் வெளிநாடு சென்று கற்கும் முடிவை இடை நிறுத்தி தனது துறைத்தலைவர் பதவியில் நீடித்தார். அதனால் புதிதாக துறைத்தலைவராக நியமனம் பெறவிருந்த பேராசியர் ஏமாற்றத்திற்கு உள்ளானார். அதன் காரணமாக கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருந்த பேராசிரியர் , நேற்றைய தினம் திங்கட்கிழமை தனக்கு நெருக்கமானவர்களிடம் தனக்கு துறைத்தலைவர் பதவி கிடைக்காவிடின் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் தீக்குளித்து உயிரை மாய்ப்பேன் என கூறியுள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த குறித்த பேராசியர் துணைவேந்தர் முன்னிலையில் தனது உடம்பில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அதனை அவதானித்த துணைவேந்தர் விரைந்து செயற்பட்டு , அவரை தடுத்து நிறுத்தி , சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். இதேவேளை பகிடிவதை புரிந்தவர்கள் எனும் சந்தேகத்தில் தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்ட 18 மாணவர்களின் படங்களை விரிவுரையில் பேராசிரியர் ஒருவர் காண்பித்து , ” இவர்கள் தான் பல்கலைக்கழக மாபியாக்கள் ” என கூறியமையால் மனஉளைச்சலுக்கு உள்ளான மாணவன் ஒருவன் நேற்றைய தினம் திங்கட்கிழமை தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டு தெல்லிப்பளை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அத்துடன் மற்றுமொரு பல்கலை கழக மாணவி ஒருவர் யாழ்.புறநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் உயிரை மாய்க்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்.பல்கலைக்கழக பேராசியர், மாணவர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் யாழ்.பல்கலை சமூக மட்டத்தில் அதிருப்தியும் விசனமும் எழுந்துள்ளது. https://athavannews.com/2022/1295003
    1 point
  44. தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் குழப்பங்களுடன் அஞ்சலி நிகழ்வு By DIGITAL DESK 5 26 SEP, 2022 | 03:06 PM ( எம்.நியூட்டன்) தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் குழப்பங்களுடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது குழப்பத்தில் ஒருவர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையால் அனுமதிக்கப்பட்டுள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியான தமிழ்தேசிய மக்கள் முன்னணி எல்லை மீறி முன்னாள் போராளிகள் , மாவீரர் குடும்பத்தினர் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , அரசியல் கைதிகளின் உறவினர்கள் , யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் , சக கட்சியினர் என அனைத்து தரப்புகளுடனும் வலிந்து முரண்பாடுகளை ஏற்படுத்தி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டனர். அவர்கள் அவ்வாறு அநாகரிகமான முறையில் நடந்து கொண்டிருந்த போது, அவர்களை கட்டுப்படுத்தாது, அருகில் இருந்த கொட்டகைக்குள் இருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தமை அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி இருந்தது. தியாக தீபத்தின் நினைவேந்தல் நாளின் தொடக்க நாளுக்கு முந்தைய நாளான 14ஆம் திகதி இரவு அகில இலங்கை தமிழ் காங்கிரசினர் நினைவிடத்தினை மறைத்தவாறு பந்தல் அமைத்த போது அங்கிருந்தவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் என்ற போது அவர்களுடன் முரண்பட்டார்கள். தொடக்க நாளான மறுநாள் , தியாக தீபத்தின் நினைவிடத்தில் வைக்கப்பட்டு இருந்த படத்தினை மறைத்தவாறு காங்கிரசினர் கொடி கம்பங்களை நாட்டினார்கள். அவ்வாறு படங்களை மறைக்குமாறு கொடி கம்பங்களை நட வேண்டாம் என்ற போதும் முரண்பட்டுக்கொண்டார்கள். இறுதி நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நேற்று முன்தினம் செய்ய முற்பட்ட போது முரண்பட்டனர் இதேவேளை , தியாக தீபத்தின் நினைவிடத்தை. காலை முதல் காங்கிரசினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். நினைவிடத்தை சுற்றி மஞ்சள் உடுப்புக்களுடன் நின்று , அஞ்சலி செலுத்த வருபவர்களை மாத்திரம் அனுமதித்து மற்றைய கட்சிகள், அமைப்புக்களை சார்ந்தவர்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தியாக தீபம் உயிரிழந்த 10.48 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்படுவதாக இருந்த போது , தாமே அவற்றை முன்னிருந்து ஏற்ற வேண்டும் எனும் போட்டியில், தள்ளு முள்ளுக்களுக்கு மத்தியில் 3 நிமிடங்கள் முந்தி 10.45 மணியளவில் தீபத்தினை ஏற்றினார்கள். கைதடி பகுதியில் இருந்து இரு இளைஞர்கள் தூக்கு காவடி எடுத்து தியாக தீபத்தின் நினைவிடத்தினை 10.40 மணியளவில் வந்தடைந்தனர். அவ்வாறு வந்தவர்கள் நினைவிடத்தின் முன்பாக காவடியை இறக்க முற்பட்ட போது காங்கிரசினர் அனுமதிக்காது முரண்பாடுகளை வளர்த்தனர். தாம் நினைவிடம் முன்பாக தீபம் ஏற்ற போகிறோம். என அவ்விடத்தினை சுற்றி கைகளை கோர்த்தவாறு நின்றனர். அதன் போது காவடியுடன் வந்தவர்கள் காவடியை இறக்கிய பின்னர் தீபம் ஏற்றுங்கள் , தீபம் ஏற்றுவதற்கு 08 நிமிடங்கள் இருக்கின்றன தானே என கேட்ட போது , அவ்வாறு அனுமதிக்க முடியாது என முரண்பட்டுக்கொண்டனர். அதனால் அப்பகுதியில் தர்க்கம் ஏற்பட்ட போது, அந்த அமளிக்குள் அவசரப்பட்டு , மூன்று நிமிடங்களுக்கு முன்னரே தீபம் ஏற்றினார்கள். அமளிக்குள் சுடர் ஏற்றிய பின்னரே ஒலிபெருக்கியில் இரு நிமிட அக வணக்கம் செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. அதன் போதும் அவ்விடத்தில் அமைதியின்மை காணப்பட்டமையால் , வேலன் சுவாமிகள் அமைதி காக்குமாறு கூறிய போது ,காங்கிரசினர் தகாத வார்த்தைகளால் அவரை பேசினார்கள். தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது மலர் அஞ்சலி செலுத்த வருவோருக்கு இடையூறாக அவ்விடத்தில் தாமே மலர் அஞ்சலி செலுத்த தடைகளை ஏற்படுத்தும் விதமாக நினைவிடத்தில் குழுமி நின்றனர். மலரஞ்சலி செலுத்தியவர்கள் கீழே இறங்கி மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்குமாறு கோரிய போது முரண்பட்டு கொண்டனர். காலை 10.40 மணியளவில் நினைவிடத்திற்கு வந்த காவடியை 11.15 மணி தாண்டியும் இறக்க விடாது தடுத்து வைத்திருந்த நிலையில் தடைகளை மீறி முன்னாள் போராளிகள் காவடியை இறக்க முற்பட்ட போது தர்க்கம் ஏற்பட்டது. அவற்றையும் மீறி முன்னாள் போராளிகள் காவடியை நினைவிடத்தின் முன்பாக இறங்கினார்கள். காவடியை இறக்க தடை ஏற்படுத்தும் விதமாக பிரதான தீபத்தினை காங்கிரசினர் நினைவிடத்தின் முன்பாக வைத்திருந்தனர். காவடி இறக்க ஏதுவாக அதனை சற்று தள்ளி வைக்குமாறு கூறிய போது ஏற்பட்ட தள்ளு முள்ளில் , தீபத்தின் சுடு எண்ணெய் பட்டு ஒருவர் காயங்களுக்கு உள்ளானார். அவரை அங்கிருந்தவர்கள் அம்பியுலன்ஸ் வண்டியில் ஏற்றி யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறாக நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பை சேர்ந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் நடந்து கொண்ட அநாகரிக செயற்பாடு அப்பகுதியில் நின்ற மக்கள் மத்தியில் கடுமையான விசனத்தை ஏற்படுத்தி இருந்தது. தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் குழப்பங்களுடன் அஞ்சலி நிகழ்வு | Virakesari.lk
    0 points
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.