Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 09/29/22 in all areas
-
1 point
-
இலங்கை சனாதிபதியே அதியுயரதிகாரம் கொண்டவரென்ற சட்டப்பாதுகாப்பு இருந்தாலும், தனியே நின்று எவளவு காலத்துக்குக் கத்தியைச் சுழற்ற முடியும்? ஆகவே இறங்கவேண்டியே வரும். அதற்குமுன் தனது கட்சியைப் பலப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால், சஜித்தோடு போனவர்களை உள்ளிழுக்காது கட்சிபலமடைய வாய்ப்புண்டா? தேர்தலுக்கான அழுத்தங்கள் கூடும்போது, எதிர்க்கட்சிகளும், மொட்டுக் கட்சியின் அதிருப்திக் குழுக்கள், மற்றும் ஏனைய கட்சிகள் வீதிக்கிறங்கினால் ரணிலால் சமாளிக்க முடியுமா?1 point
-
இதையெல்லாம் பார்க்க திலீபன் அண்ணா இல்லை என்பது மட்டுமே மகிழ்வான விடயம். மக்கள் பிரச்சனைக்கு அகிம்சைவழி தீர்வுகாண எந்தவித முன்னேடுப்புகளும் செய்யாத அரசியல்கட்சிகள்/தலைவர்கள், தங்களை பிரபலப்படுத்த அடிபடுவது தமிழ் சமுதாயத்தின் தற்போதைய வெற்றிடத்தை அப்பட்டமாக காட்டிநிற்கிறது. மக்கள் புரட்சி வெடிக்கட்டும். சுதந்திர தமிழீழம் மலரட்டும் - லெப்.கேணல் திலீபன்1 point
-
முன்னது பால் லிட்டர் 40 ரூபாய்.. ஏதாவது ஆசுபத்திரிக்கு கொடுக்கலாம்..😢 பின்னது பீர் .. போத்தல் 160 ரூபாய்.. குடித்து போட்டு எங்காவது கவுண்டு கிடக்காமல்..😢1 point
-
பாராளுமன்றைக் கலைக்க மகிந்த தரப்பு ஒருபோதும் சம்மதிக்காது.எப்போதும் இல்லாதளவு உறுப்பினர்கள் புதிதாக வந்தவர்கள்.இனி ஒரு தேர்தல் வந்தால் இப்படி வெற்றியடையவும் முடியாது. அத்தோடு இலங்கைச் சட்டப்படி 5 வருடம் பதவியை பூர்த்தி செய்யவில்லை என்றால் ஓய்வூதியமும் கிடைக்காதென்றே எண்ணுகிறேன். பாராளுமன்றைக் கலைத்தாலும் ஜனாதிபதி பதவியிலேயே இருப்பார். எனவே பாராளுமன்றை கலைக்க முதலே ரணிலுக்கு ஆப்பு வைப்பார்கள்.1 point
-
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஐநாவின் முயற்சிகளிற்கு பைடன் நிர்வாகம் ஆதரவளிக்கவேண்டும் - காங்கிரஸ் உறுப்பினர்கள் வேண்டுகோள் By RAJEEBAN 29 SEP, 2022 | 01:06 PM இலங்கையின் உள்நாட்டு மோதலின் போது யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம்சாட்டப்படும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவரது குடும்பத்தினர் உட்பட அனைவரையும் விசாரணை செய்து பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனிபிளிங்கென் ஆதரவளிக்கவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜா கிருஸ்ணமூர்த்தி ஹாங்ஜோன்சன் உட்பட 8 காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர் குற்றவாளிகளை பொறுப்புக்கூறச்செய்தல் இலங்கையின் உள்நாட்டு யுத்ததின் மனித குலத்திற்கு எதிரான குற்றம் யுத்த குற்றங்கள் ஆகியவற்றிற்காக சர்வதேச நீதி பொறிமுறையை உருவாக்குவது குறித்து அமெரிக்கா தொடர்ந்து ம் அர்ப்பணிப்புடன் விளங்கவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் குறிப்பிட்ட கடிதத்தில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தனது 77 அமர்விற்காக கூடுகின்ற இந்த தருணத்தில் இலங்கையின் உள்நாட்டு மோதலின் போது யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம்சாட்டப்படும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவரது குடும்பத்தினர்உட்பட அனைவரையும் விசாரணை செய்து பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு ஆதரவளிக்குமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆiணாயாளருடன்இணைந்து செயற்படுமாறும் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம். இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் துஸ்பிரயோகங்களிற்கு காரணமானவர்கள் எனகுற்றம்சாட்டப்படுபவர்களை பொறுப்புக்கூறச்செய்வதற்கு தடைகள் உட்பட இராஜதந்திர சாதனங்களை பயன்படுத்தவேண்டும் எனவும் நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன். தசாப்தகாலயுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களால்பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி மற்றும் பரிகாரம் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் மாத்திரம் இலங்கை தற்போதைய பொருளாதார அரசியல் நெருக்கடிக்கு முழுமையான தீர்வை காணமுடியும். 2009 இல் முடிவடைந்த இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் புலிகளிற்கும் எதிரான 27 வருட கால போரில்ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்;டனர் காணாமல்போயினர் என்பதை நீங்கள் அறிவீர்கள். 13 வருடங்களிற்கு பின்னர் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் நீதிக்காக காத்திருக்கின்றனர் என சமீபத்தைய செப்டம்பர் 22 - ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தெரிவிக்கின்றது. 2020 ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சுட்டிக்காட்டியது போல கடந்த கால குற்றங்களிற்கு தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிப்பதற்கு இலங்கை இன்னமும் தீர்வை காணவில்லை என்றஅடிப்படை பிரச்சினை இன்னமும் நீடிக்கின்றது இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் உள்ளனர்இஅனைத்து சமூகத்தினரும் கடந்த கால மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறாது என்ற உறுதியற்று காணப்படுகின்றனர் என குறிப்பிட்டிருந்தார். இலங்கையின் கடந்த கால யுத்த குற்றங்களிற்கு பொறுப்புக்கூறலிற்கான வேண்டுகோளை விடுப்பதில் அமெரிக்கா முக்கியமான நாடாக காணப்படுகின்றதுஇ2015 இல் இலங்கை இணை அனுசரணை வழங்கிய தீர்மானமொன்றை மனித உரிமை பேரவை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா முன்னிலையில் காணப்பட்டது. 2021 இல் யுத்த குற்ற ஆதாரங்களை சேகரிப்பது நீதியை கண்டறிவது குறித்து ஆலோசனை வழங்குவது ஆகியவற்றை கோரிய தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஏற்றுக்கொள்வதில் அமெரிக்கா முக்கிய பங்களிப்பை வழங்கியது. எனினும் 2019 இல் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இலங்கையின் உறுதிமொழிகளில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பின்வாங்கினார். அவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் இலங்கை அரசாங்கம் உறுதியான நிலைமாற்று நீதி செயற்பாட்டை முன்வைக்கவில்லை. குற்றவாளிகளை பொறுப்புக்கூறச்செய்தல் இலங்கையின் உள்நாட்டு யுத்ததின் மனித குலத்திற்கு எதிரான குற்றம் யுத்த குற்றங்கள் ஆகியவற்றிற்காக சர்வதேச நீதி பொறிமுறையை உருவாக்குவது குறித்து அமெரிக்கா அர்ப்பணிப்புடன் விளங்கவேண்டும். இலங்கையின் மூன்று அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதித்தமைக்காக நான் உங்களை பாராட்டுகின்றேன்.என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஐநாவின் முயற்சிகளிற்கு பைடன் நிர்வாகம் ஆதரவளிக்கவேண்டும் - காங்கிரஸ் உறுப்பினர்கள் வேண்டுகோள் | Virakesari.lk1 point
-
அதற்கு முன்பாக சனாதிபதிமீது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தால் இவர் சனாதிபதியே இல்லையென்றாகிவிடும். எல்லா அரசியற் கள்வர்களும் ஒத்து ஓடுகிறார்கள். ஒருவேளை கலைத்துத் தேர்தலை வைத்தாலும் எந்தவொரு முன்னணி அரசியற்கட்சிகளாலும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறக்கூடிய வாய்ப்பில்லை. தேர்தலில் தொங்கு நாடாளுமன்றமே சாத்தியம் அல்லது குட்டிக்கட்சிகளின் கூட்டணியாட்சியும் சாத்தியமாகலாம். எது அமைந்தாலும் தற்போதைய நிலையைவிட இன்னும் குழப்பம் நிறைந்ததாகவே இருக்கும். ஒரு தேர்தலைச் சந்திக்கும் மனோநிலை மக்களுக்கு இருக்கிறதா? போராட்டக்களம் சுழியமாகி உறைநிலைக்குச் சென்றுவிட்டது. போராட்டத் தலைமைகளை சிறையில் அடைத்தாயிற்று. அச்சுறுத்தும் செயற்பாடுகளை அரசு தொடர்கிறது. மக்கள் சலப்படைந்தநிலை என பெரியதொரு ஆர்வமான தேர்தலாக இருக்காதென்றே நம்புகின்றேன். தமிழரது நிலை சிங்களத் தரப்பைவிட மிகவும் மோசமானதாக அமையலாம். அதனையே சிங்கள-இந்திய சக்திகள் செயற்படுத்தி வருகின்றன. அதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக "தியாக தீபம் திலீபனின் நினைவு நாள்' எப்படிக் குழப்பியடிக்கப்பட்டது என்று எல்லோரும் அறிந்ததே. இவற்றை ஆய்வுக்குட்படுத்தி தமிழ் மக்களும், அறிவார்ந்த தரப்புகள், பல்கலைக் கழக குமுகம் என்பன இப்போதே அணைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரு மேசைக்கு கொண்டுவரும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அப்படி உடன்படாதவிடத்து புதிய இளையதலைமுறை துணிவோடு களமிறங்கி தலைமைதாங்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். தேர்தலூடாக அமையும் பலமற்ற நாடாளுமன்றோடு, சாதுரியமாக அரசியல் செய்வதற்குத் தமிழரிடையே பெரும்பான்மைப் பலத்துடனான அரசியல் தலைமையின் அவசியத்தைத் தமிழர்கள் இலக்கு வைப்பதும், அதனைச் சாத்தியமாக்கவுமான கருத்தியலை வளர்த்தெடுத்தலும் இன்றைய சூழலாகவுள்ளதை நாம் மறுத்துவிடமுடியாதென நம்புகின்றேன். கடன்வேண்டும் பொருண்மியமுறைமையிலான எந்தவொரு அரசும் தொடர் இனவாத பிடிமானத்தில் நின்றுபிடிக்கப் போவதில்லை. கனிந்துவரவுள்ள அகப்-புறச் சூழலைத் தமிழினம் அறிவார்ந்த நோக்கில் சிந்திந்து முடிவெடுத்தால் தமிழரது அரசியல் இலக்கை கணிசமாக நகர்த்த முடியும். நன்றி1 point
-
உக்ரைனின் 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைக்க முன்னெடுத்த வாக்கெடுப்பில் ரஷ்யா வெற்றி! போரில் உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஸபோரிஸியா ஆகிய 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைக்க முன்னெடுத்த வாக்கெடுப்பில், ரஷ்யா வெற்றிபெற்றுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து, உக்ரைனின் லுஹான்ஸ்க், கெர்சன் பகுதிகளை இணைத்துக் கொள்ளுமாறு ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அந்தப் பிராந்தியங்களின் தலைவர்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்தப் பகுதிகளில் நடத்தப்பட்ட மேற்கத்திய நாடுகளால் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட பொதுவாக்கெடுப்பில் ரஷ்யாவுடன் இணைய பெரும்பாலான பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த அழைப்பை பிராந்தியத் தலைவர்கள் விடுத்துள்ளனர். பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்ட மற்ற இரு ரஷ்ய ஆக்கிரமிப்பு உக்ரைன் பிரதேசங்களின் தலைவர்களும் இதே போன்ற கோரிக்கையை விரைவில் விடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 நாட்கள் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், கிழக்கு லுஹான்ஸ்க் பகுதியில் 98.42 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைப்புக்கு ஆதரவாக வாக்களித்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஸபோரிஸியாவில் 93.11 சதவீதமும், தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சனில் 87.05 சதவீதமும், டோனெட்ஸ்க்கில் 99.23 சதவீதமும், ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த 4 பிராந்தியங்களையும் ரஷ்யாவுடன் இணைத்து கொள்வது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை புடின் இன்ற வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://athavannews.com/2022/13018001 point
-
படத்தில் வசனங்கள் பழையபாணியில் இல்லாமல் தற்காலப் பாணியில் இருந்ததல்தான் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று மணிரத்தினம் கருதியதாகவும் அவ்வாறே வசனங்கள் அமைந்திருப்பதாகவும் பேட்டிகள் மூலம் அறிய வருகிறது. இது எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்பது படம் பாரக்கம் போதுதான் தெரிய வரும்.பாகுபலியில் வசனங்கள் பழைய கால வரலாற்றுப்படங்களின் பாணியிலேயே அமைந்திருந்தன.அது வெற்றியும் அடைந்திருந்தது. நந்தினி கதாபாத்திரத்திற்கு ஜஸ்வரியாராய் எவ்வாறு பொருந்ர்வார் என்பதில் தெளிவில்லை. வெறும் அழகுப் பொம்மையாக மட்டும்வருவரா அல்லது இன்னொரு நீலாம்பரியாக அதகளம் பண்ணக்கூடிய மொழிவளம் இருக்கிறதா என்பதில் தெளிவில்லை. கடந்த கால மணிரத்தினத்தி; படங்களில் வரலாறுகளை இருட்டடிப்புப் செய்தது போல இந்தப்பட்திலும் நடக்குமா என்பதைப் பெறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எப்படி இருந்த போதிலும் இந்தப்படம் வெளியாவது தெற்காசியாவையே கட்டியாண்ட சோழ சாம்ராஜ்யத்தையும் தமிழர்களின் வரலாற்றையும் ஓரளவுக்காவது காட்டும் என நம்புவோம். வந்தியத் தேவனுக்கு கார்த்தியும் குந்தவையாக திரிசாவும் பெரிய சின்ன பழவேட்டையர்களாக சரத்தும் பார்த்திபனும் நல்ல தெரிவாகவே படுகிறது. படத்தைப்பார்த்தபின் தான் மிகுதியைப்பற்றித் தெரிய வரும்.அநேகமாக எங்கள் வயதுக்காரர்களில் பொன்னியின் செல்வன் வாசிக்காதவர்கள் மிக அரிதாகலவ இருப்பார்கள். இளந்தலைமுறையினருக்கு கதையில் குழப்பங்கள் இல்லாமல் கதை சொல்லப்படுகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.இன்றைய தொழல்நுட்பம் கெ கொடுக்கும் என்றே நம்புவோம்.1 point
-
1 point
-
தியாக தீபத்தின் இறுதி நாள் நிகழ்வில் நடந்தது என்ன?1 point
-
குஜராத்திகள் மிகவும் திறமைசாலிகள் வர்த்தகங்களை செயற்பட வைப்பதில் அவர்கள் ஒரு கூட்டாக இயங்குவார்கள், உதாரணமாக 1.5 மில்லியனில் ஒரு வர்த்தகத்தினை வாங்க இருப்பதாயின் அவர்களிடம் அந்தளவிற்கு பணம் இருக்காது, நண்பர்கள் தெரிந்தவர்கள் என கூட்டாகநிதியினை திரட்டுவார்கள் (Pooled fund). வேலைப்பழுவினை சமமாக பிரித்து கொள்வார்கள், ஆனால் அவர்கள் அதே நேரம் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே இதனை செய்வதால், அவர்களால் முதலீட்டிற்கு சரியான சுவாசிப்பதற்கு உரிய கால அளவை அவர்களால் வழங்க முடியும். இதுவே எம்ம்வர்களானால் ஒருவரே எப்படி மற்றவர்களின் காசினை சுருட்டி கொண்டு ஓடலாம் என கணக்கு பார்ப்பார்கள், அல்லது எவ்வாறு மற்றவர்களை சுரண்டலாம் என பார்ப்பார்கள் அதற்கு நல்ல உதாரணம் சீட்டு நடத்துதல்.1 point
-
இந்த முறை நம்ம புலம்பெயர் தமிழர் கூடியதொகை போனவர்...போனது மட்டுமில்லைநல்ல பார்ட்டிகளும் வைத்தவை..அதுவும் தண்ணிப்பார்ட்ய் அமோகம்...இதனை முகப்புத்தக படங்களில் பதிவிட்டு இன்னும் சந்தோசம் கொண்டாடினவை...அப்ப இப்பவும் 22 மில்லியன் நட்டமென்றால்....இனி வருகிற வருசம் ...புலம்பெயர்தமிழர் அனைவரும் போய் ரணில் அரசை லாபத்தில் ஓட வைக்கவும்..🙃1 point
-
ஒரு கண்டத்தை நாடு என்று சொல்லிக்கொண்டு பராமரிக்க முடியாமல் திணறுவதை போலவே எனக்கு தோன்றுது ஒருபக்கம் சைனா தீவுகளை வாங்கி அட்டகாசம் மறுபக்கம் குஜராத்திகளின் அட்டகாசம் . இனிவரும் காலங்களில் பெற்றோல் க்கு பதிலாக மின்சார வண்டிகளின் பற்றரிகளின் முக்கிய மூலபொருளான லித்தியம் உலகிலே 9௦ வீதமான் இருப்பு அவுசில்தான் நல்ல காலநிலை நாட்டை நாசமாக்க போகினம் போல் உள்ளது .1 point
-
இந்த கொரோனாவால் வெளிநாட்டு குடிமகன்கள் போகவில்லை இதனால் விற்பனையில் வீழ்ச்சி ஏற்ப்படுள்ளது. ......போயிருந்தா 22 மில்லியன் லாபம் வந்திருக்கும் 🤣1 point
-
சிரிப்பு தாங்க முடியவில்லை, நுணா. 😁 ஒரு…. ஹா… ஹா… 😂 போட்டு விடுவம் என்றால், கைவசம் இப்போ இல்லையாம். 🤣1 point
-
1 point
-
1 point
-
ibc,dan,thinakural,veerakesarari,lankasri உடபட உனைத்து ஊடகங்களும் தமிழ்த்தேசி முன்னனி மீது கூசாமல் பழியைப் போட்டன. அனைத்தும் இந்தியாவின் தாளத்திற்கு ஆடும் கூட்டங்கள். தமிழ்த்தேசிய மக்கள முன்னனி இந்தியாவுடன் அனுசரித்துப் டபோகாத காரணத்தாலேயே அதன் மீது சேறு பூசும் வேலைகளில் இந்தியாவின் அனுசரணையோடு இந்தத்தரகர்கள் வேலை செய்கிறார்கள்.1 point
-
இந்திய அரசு எப்பொழுதும் எமக்கு கழுத்து அறுத்துக்கொண்டே இருக்கும். அவர்களுக்கு மிண்டு கொடுப்பவர்களை தமிழ் மக்கள் இனம் கண்டு ஒதுக்க வேண்டும்.1 point
-
தமிழ் தேசியக் கூட்டுமைப்புக் கடைசிமட்டும் போகாது. புலத்திலிருந்து அப்படி முயற்சியைச் செய்தாலென்ன?1 point
-
https://www.facebook.com/sachithananthan/posts/pfbid02aYAQQgKbazc2uQKgoCbTddgojCFMxCBFkyxKLGygtoPJRL4dzhi9m4vvq77nEZqEl எவ்வளவுதான் ஊடகங்களை கைகளுக்குள் போட்டு பொயப் பிரசாரம் செய்தாலும் குழப்பங்களுக்குப் பின்'னால் இந';தியா இருப்பது தெளிவாகியுள்ளது.இதற்குத் துணைபோன அனைத்து ஊடகங்களும் தமிழின நலனுக்கு எதிரான ஊடாக விபச்சாரிகளே என்பது புலனாகிறது.தமிழர்களை மதவாதம் ஒருபோதும் கட்டுப்படுத்தாது. மறவன்புலவு க. சச்சிதானந்தன்சைவத் தமிழன் திலீபன். புரட்டாதி வளர்பிறை மூன்றாம் நாள் (சதுர்த்திக்கு முதல் நாள்) திலீபன் இறந்தார் (1987 செஃப் 26). 5000 ஆண்டுகளுக்கு மேலான இராவணன் இறந்த காலத்துக்கும் முந்தைய வழக்கம் ஈமக் கடன்களை நிலா காட்டும் திதியில் ஆற்றுவது. இந்த வழக்கத்தைப் பொதுவெளியில் மாற்றியோர் கடந்த 400 ஆண்டுகளாகத் தமிழர்களை அடிமை கொண்ட கத்தோலிக்க கிறித்தவ மேலைத் தேயத்தார். இந்த ஆண்டு புரட்டாதி வளர்பிறை மூன்றாம் நாள் நாளை புதன்கிழமை (28.09.22). நாளை புதன்கிழமையே திலீபனின் நினைவு நாள் தியாகச் சுடரின் ஈகை நாள் அறவழி அண்ணலின் ஈமக் கடன் நாள். அடிமை கொண்ட அந்நிய மரபினரான பாதிரிகளின் வழிகாட்டலில் மண்ணின் மைந்தன் மரபுகளின் விளைச்சல் சைவத்தமிழன் தியாகச் சுடர் திலீபனின் நினைவு நாளைச் சைவ மரபிலிருந்து மாற்றவே முடியாது. சைவத் தமிழ் மரபைக் காக்கவே புத்த கிறிஸ்தவ முகமதிய மேலாதிக்கத்திலிருந்து காக்கவே தனது முன்னோர் தனக்கு காட்டிய மரபுகளைக் காப்பாற்ற திலீபன் தன் உயிரையே ஈந்தார். சைவத்தமிழனுக்கு சைவ மரபே நினைவு நாள் வழிகாட்டி.1 point
-
1 point
-
1 point
-
இது ஒரு ஆரோக்கியமான சுயாதீனமான உலக ஒழுங்கு ஒன்றிற்கான தருணம் உருவாகி வருகின்றது என்பதற்கு எடுத்துகாட்டு. இதுவரை காலமும் சாதாரண தனிமனித உரிமைகளூக்காக போராடும் சாமானியர்களை ஆதிக்க கரங்கள் கொண்டு அடக்கப்படும் நிலையில், இந்த புதிய உலக ஒழுங்கு அனைத்து விடயங்களையும் சமநிலைபடுத்தும். ஜூலியன் அசாஞ்ச் விடுதலைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். பல நியாயமான போராட்டங்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணைகொண்டு காலில் போட்டு நசிக்கிய நிலமை இனி மாறும், பல தேசிய இனங்களின் உரிமைகள் பெறப்படுவதற்கு ஏற்ற கீரைக்கடைக்கு எதிர்கடை வேணும் என்ற நிலை உருவாவது மிகவும் சந்தோசமான விடயம். இனி எமது பிரச்சினைக்கும் பன்முகம் கொண்ட தீர்வு அணுகுமுறை உருவாக உள்ளது.1 point
-
1 point
-
இவைகள் அடிப்பட... சனம் வெறுத்து, டக்ளசுக்கு வாக்குகளை அள்ளிப் போட்டு விடுவார்கள். தங்களுடைய தலையிலேயே.. மண் அள்ளிப் போடுகிறார்கள்.1 point
-
1 point
-
Former Nagaland Home Minister and George Fernandez Party Chief General Secretary paid homage at Dilipan Memorial in Eelam. For the first time, North Indian party celebrities have visited Eelam and expressed their support to Tamils.0 points